அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ரஷணம் பற்றிய அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே யருள் செய் எம்பிரானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே
பாசங்கள் கழற்றி எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே
ஏதங்கள் ஆயின வெல்லாம் இறங்கல் விடுவித்து என்னுள்ளே பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வான் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே
மறு பிறவிதவிரத் திருத்தி உன் கோயில் கடைப் புகப் பெய் திருமால் இரும் சோலை எந்தாய்
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே

———————————————————

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் –

————————————————————————

பழுதின்றி பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழ

——————————————————————————
அச்சம் தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால் அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே

———————————————————–
மின்னிறத் தெயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
—————————————————————————–
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –
பழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்

———————————————————————–

இருள் திரிந்து நோக்கினேன் நோக்கி நினைந்தேன் ஒண் கமலம் ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து

————————————————————–

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திரு மாலே –
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால்

——————————————————————-

உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும்
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு
என் நெஞ்சமே யான் இருள் நீக்கி எம்பிரான்
ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணப் பரனே உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்
என்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை
ஆன்றேன் கடல் நாடும் மண்ணாடும் மேலை இட நாடு காண வினி

——————————————————————–

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய் பிறந்தாய்
தீ வினைக்கு அரு நஞ்சை நல வினைக்கு இன்னமுதினை பூவினை மேவிய தேவி மணாளனை –எஞ்ஞான்று தலைப் பெய்வனே –

—————————————————————————-

அழகும் அறிவோமே வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு

——————————————————-

செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடரவமளியில்
அறி துயில் அமர்ந்த பரம நின்னடி பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே

———————————————————–

பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம் –திருவேங்கடம் அடை நெஞ்சே
மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன இன்னருள் செய்யும் தலைவன் மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே
இலங்கை மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமமே
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை உருவவோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடியரசு
அளித்தாய் –நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே
பண்டை நம் வினை கெட வென்று அடி மேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று –விண்ணகர் மேயவனே
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன் \
ஆர்வச் செற்றமவை தம்மை மனத்து அகற்றி வெறுத்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
பிறவாமை பெற்றது நின் திறத்தேனா தன்மையால் திரு விண்ணகரானே
புண்ணியனே உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகரானே
ஆங்கு வென் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை ஆங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி
எம்பிரானை -உம்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை யாப்புண்ட-தீங்கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே
அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்ற ஓர் தோற்றத் தொன் நெறியை
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை பிழைத்து குடி போந்து உன் அடிக் கீழ் வந்து புகுந்தேன் —
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
தந்தை காலில் விலங்கு அர வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன சிந்தை போயிற்று
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்னபுரத் துறை யம்மானே

————————————————————————

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே

—————————————————————————————

கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
மகரம் சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை யாளும் கொண்டு –புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

————————————————————————

வினையேன் வினை தீர் மருந்தானாய் –விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சார்ந்த விருவல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் ஆர்ந்த ஞானச் சுடராகி –நெடுமாலே
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் அறவணை ஆழிப் படை அந்தணனை
மயர்வற வென் மனத்தே மன்னினான் தன்னை உயர் வினையே தரும் ஒன சுடர்க் கற்றையை
அழிப்போடு அளிப்பவன் தானே
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அமுதாய வானேற செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத் திரு வெள்ளம் யான் மூழ்கினன்
என்னுள் புகுந்து இருந்து தீ தவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே
தொன் மா வல்வினைத் தொடர்களை முதலரித்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக்குடந்தை ஊரா
செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே
நீள் ஆலிலை மீது சேர் குழவி வினையேன் வினை தீர் மருந்தே
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை யளித்து உய்யச் செய்து
ஓர் ஐவர்க்காய் தேசம் அறிய சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல்வார்த்தை
பெரும் துன்பம் வேர் அற நீக்கித் தன தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி
ஒப்பிலாத் தீ வினையேனை உய்யக் கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை சீர் பெற இன்கவி சொன்ன திறத்துக்கே
அமரர்தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடைய ஆர் உயிரேயோ
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே
தெருளும் மருளும் மாய்த்து தன திருத்து செம் பொற் கழல் அடிக் கீழ் அருளி இருத்தும் அம்மானாம்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய் –தென் திரு நாவாய் என் தேவே
திரு மோகூர் நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும் –காள மேகத்தை யன்றி மற்று ஒன்றிலம் கதியே
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே
பழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நல்கினமே
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
——————————————————

மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த
இராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
காண்டலுமே தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன்
மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுச
என் தன மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே

———————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: