சாத்விக அஹங்காரம்–அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள்–

எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம்
எங்கள் குழாம் புகுந்து கூடும் மனமுடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
-அபிமான துங்கன் செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
———————————————–
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை

—————————————————————————–
———————————
அபிமான பங்கமாய்-வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
———-
அவரைப் பிராயம் தொடக்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்

——————————–

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்

——-

துளவத் தொண்டராய தொல்சீர்த் தொண்டர் அடிப்பொடி சொல் இளைய புன் கவிதை யேலும் எம்பிராற்கு இனியவாறே

—–

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்
திரு வயிற்று உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் என் அமுதினை

——–

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே

————————————————————–

எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
எம் கார் வண்ணனை விண்ணோர் பரவும் பொழில் வேங்கட வேதியனை
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
என் நெஞ்சம் என்பாய் –வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே
நின் தாள் நயந்து இருந்த -இவளை -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
என்தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே
திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே –
காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை –ஆலி நாடன் அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம் கொங்கு மலர்
குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முகத் தமிழ் மாலை
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னாருயிரே –
என் பயலை நோய் உரையாயே
என்னுடைய கனவளையும் கவர்வானோ
காவியங்கண்ணி எண்ணில் கடிமா மலர்ப் பாவை ஒப்பாள் –
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் ஏழ் அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே
பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –
அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
உன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே
என்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல ஒட்டேன்
தென் அழுதையில் மன்னி நின்ற தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே
என் நெஞ்சிடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின் –அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே
சிறு புலியூர் சல சயனத்துள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே
வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டல் என்று –கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே
என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி எந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் –அச்சோ ஒருவர் அழகியவா
வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை யாளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே
காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்து தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து போது மறுத்துப் புறமே வந்து
நின்றீர் ஏதுக்கு இதுவென் இதுவென் இது வென்னோ

—————————

புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து கரும்பினின் சாறு போலப் பருகினேற்கு இனியவாறே
அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே

————————————————————

எந்தை தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே
என் நலனும் என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு –புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

————————————————————

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க நாமே யறிகிற்போம் நல நெஞ்சே பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீள் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்காவார் ஆர் ஒருவரே எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால்

——————————————————–

நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்
என் நெஞ்சமேயான் என் சென்னியான் –உலகேத்தும் ஆழியான் அத்தியூரான் –
மாலே நெடியானே கண்ணனே –என் தன அளவன்றால் யானுடைய அன்பு

———————————————–

திருக் கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான் சென்று

———————————————————————

யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் நாரணனே நீ என்னை அன்றி இலை
அழல் உமிழும் பூங்கார ரவணையான் பொன் மேனி யாம் காண வல்லமே யல்லமே மா மலராள் வார் சடையான் வல்லரே யல்லரே
எனக்காவார் ஆர் ஒருவரே எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால் புனக்காயா வண்ணனே
உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு விருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கரு விருந்த நாள் முதலாக் காப்பு
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –

—————————————————————
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம்
கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

——————————————————–

ஒரு ஆலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே –

———————————————————————-

முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி –நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
என்னின் மிகு புகழார் யாவரே
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளே அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்
———————————————————–

நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான்
நீராய் உருகும் என்னாவி
மற்று எனக்கு இங்கு ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனைக் காரார் திரு மேனி காணும் அளவும் போய் –ஊராது ஒழியேன் நான்

——————————————————————

திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்பா நோக்கினேன்
தன்னருளும் ஆக்கமும் தாராநெல் தன்னை நான் தன்னடியார் முன்பும் தாரணி முழுதாளும் –அறிவிப்பன்
உலகு அறிய ஊர்வன் நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல்

—————–
துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்
என் விடு தூதாய் சென்றக்கால்
மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
என் இசைவினை என் சொல்லி யான் விடுகேனோ
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான்
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே
கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
என் அருகிலானே –
-ஒழிவிலன் என்னோடு உடனே
-என் நெஞ்சினுளானே
–என்னுடைத் தோளிணையானே
என்னுடைய நாவினுளானே
என் கண்ணினுளானே
என் நெற்றி உளானே
எனது உச்சி உளானே
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே
மறப்பற என்னுளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியை
என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாழ முடி சங்கு ஆழி நூல் ஆரமுள –
என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும் அமுதாய வானேறே
முடியாதது என் எனக்கேல் இனி முழு வேழ் உலகும் உண்டான் உகந்து வந்து அடியேனுள் புகுந்தான்
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கின
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு எழு பிறப்பும் மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா –
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன்
தேவாதி தேவபெருமான் என் தீர்த்தனே
யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வ ண் குருகூர் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே
என் கண்ணா என் பரஞ்சுடரே
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய யாவியே என்னும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்
என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான்முகனை
ஆம் வண்ணம் இன்னது ஓன்று என்று அறிய வரிய வரியை ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை
என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்
இருத்தும் வியந்து என்னைத் தன பொன்னடிக் கீழ்
அவன் என்னுள் இருள் தானற வீற்று இருந்தான்
என்னுடைய பந்தும் கழலும் –
என் நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு தானேயாகி நிறைந்தானே
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற்கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
உற்றேன் உகந்து பணி செய்து உணபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ

——————————————–
இராமானுசன் தன பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ் வினியே
என் தன சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே

—————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: