– -திவ்யாயுதங்கள்-பற்றிய அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள் —

திருப்பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு -1-
தீயில் பொழிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே யொற்றுண்டு நின்று குடிகுடியாட் செய்கின்றோம் –7-

பெரியாழ்வார் திருமொழி-

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து -1-7-6-
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கை களாலே வந்து அச்சோவச்சோ -1-8-2-
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்ச வச்ச சங்கம் இடத்தானே அச்சோவச்சோ –1-8-7-
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி போய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் –2-1-1-
திண்ணார் வெண் சங்குடை யாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் –2-3-9-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே !-பெரிய ஆழ்வார் திரு மொழி -3-3-5
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை யிராமனை–4-1-2-
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் –4-1-7-
உரக மெல்;லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்–4-4-4-
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் –4-7-5-
சாமிடத்து என்னைக் குறிக் கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே-4-10-2-
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே –5-1-2-
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே   -5-2-9-

திருப்பாவை
பாழி யம் தோளுடை பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னிவலம் புரி போலே நின்று அதிர்ந்து -4
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ -6
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன -பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே  -26

-நாச்சியார் திருமொழி-

ஊனிடை யாழி சங்குத் தமர்க்கென்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5-
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான் -5-2-
குயிலே குறிக் கொண்டு இது நீ கேள் சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன் வலை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் -5-9-
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத -6-6-
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே –7-1-
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனனுடலில் வளர்ந்து போய் ஊழியான் தீய அசுரர் நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே — 7-2
கோலப் பெரும் சங்கே -7-3
வளம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே-7-4-
மது சூதன் வாயமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே –7-5-
செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வளம் புரியே –7-6-
வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே –7-7-
உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண்படையார் உன்மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே –7-8-
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே –7-9-
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும் வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர் பிரான் –7-10-
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –7-9-
வேத முதல்வர் வளம் கையில் மெல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது –10-2-
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்-11-1-
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே –14-8-

இரு கரையர்களாக இருப்பார்கள் உனக்கு ஒப்பார்களோ-
-குற்றத்தையும் குணத்தையும் கணக்கு இட்டு செய்யும் அவர்கள் உனக்கு ஒப்பார்களோ  மாட்டார்கள் இறே–
கர்ம அனு குணமாக சிருஷ்டிக்கும் அவன் இறே அவன் 
கருதும் இடம் பொருது சக்கரம் -பாஞ்ச சன்யம் திரு ஆபரணம் மட்டும் இல்லை-

பெருமாள் திருமொழி –

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலை யாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கத்திக் கருடன் என்னும் வென்றிக் கடும் பரவையிவை யனைத்தும் புறம் சூழ் காப்ப –1-8-
அங்கையாழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் –3-9-

திரு வாய் மொழி
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் -1-4-5-
பொருமா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ-1-10-1-
அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள-2-5-1-
மழுங்காத வைநநுதிய சக்கர நல வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே–3-1-9-
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே –3-4-3
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை -3-7-2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை –3-7-6-
திசைப்பின்ற்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க –4-6-2-
அப்பனே அடல் ஆழியானே ஆழ கடலைக் கடைந்த துப்பனே –4-7-5
வரி வளையால்  குறைவில்லா பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – 4 -8-8-
ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் –4-10-11
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -5-1-1-
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர் –5-1-7-
தேவர் கோலத்தோடும் திருச் சக்கரம் சங்கினோடும் ஆவா என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே -5-1-9-
யாம் மடலூர்ந்தும் எம்மாழி யங்கைப் பிரானுடை தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் –5-3-10-
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால் –5-4-3-
மன்னின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் -5-4-6-
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்–5-4-8-
சந்கிநோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –5-5-1-
வென்றி வில்லும் தண்டு வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே -5-5-3-
வளைவாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா -5-8-8-
கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகளைக் கூப்பிச் சொல்லீர் -6-1-1-
திரு வண் வண்டூர் உறையும் கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு இறங்கி நீர் தொழுது பணியீர் -6-1-3-
திரு வண் வண்டூர் உறையும் ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு மாற்றம் கொண்டு அருளீர் –6-1-6-
திரு வண் வண்டூர் கரு வண்ணம் செய்யவாய் செய்ய கண் செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே –6-1-7-
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் –6-2-10-
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் -6-5-1-
கோலச் செந்தாமரைக் கண்னற்கு என் கொங்கலரேலக் குழலி இழந்தது சங்கே –6-6-1-
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு –என் மங்கை இழந்தது மாமை நிறமே –6-6-2-
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே-6-6-3-
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே –6-9-1-
திரு நேமி வலவா தெய்வக் கோமானே –திரு வேங்கடத்தானே –உன்னடி சேர் வண்ணம் அருளாயே –6-10-2-\
அசுரர் வாணாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா –திரு வேங்கடத்தானே —
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே –6-10-4-
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே -7-1-2-
அடல் ஆழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானேயோ –7-1-5-
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் –7-2-1-
வட்ட நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் –7-2-4-
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் என்னும் -7-2-6-
வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக் கேளீர் –7-3-1-
சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –7-3-3-
ஆழி எழச் சங்கும் வில்லும் எழ வாழி எழத் தண்டும் வாளும் எழ –7-4-1-
புக்க வரியுருவை அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை –7-6-11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் –7-8-3-
ஆர்வனோ ஆழி யங்கை எம்பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் –7-9-8
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே -8-2-4-
ஆழி வலவனை ஆதரிப்பும் –8-2-5-
என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு —
குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர்ப்பாதம் அடைந்ததுவே –8-2-10-
கரணப் பல்படை பற்றறவோடும் கனல் ஆழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே–8-3-2-
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை -8-3-3-
அணியார் ஆழியும் சங்கமும் எந்துமவர் காண்மின் –என் மனம் சூழ வருவாரே –8-3-6-
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே -8-3-7-
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் –உன்னை எங்கே காண்கேனே–8-5-9-
செருக்கடுத்து அன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –8-6-2-
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –8-8-1-
எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்பச் செழுங்கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்-8-9-3-
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான் –8-10-6-
அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்–8-10-9-
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான் -8-10-10-
திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-
திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -9-4-1-
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -10-4-3-
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் –10-4-8-
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –10-6-1-
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது -10-6-8-

இராமானுச நூற்றந்தாதி –

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கை யாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே –33-
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப –36
கோக்குல மன்னரை மூவெழுகால் ஒரு கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் –56
மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே–64
செய்த தலைச் சங்கம் செழுமுத்தமீனும் திருவரங்கர் கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண் முகப்பே மொய்த்தலைத்து
உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே மொய்த்தலைக்கும் வந்து இராமானுச என்னை முற்றும் நின்றே –75
என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே –93

—————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: