திருவாய் மொழி -ஈடு மகா பிரவேசம் –முதல் ஸ்ரீ யபதி -அர்த்த பஞ்சகமே திருவாய் மொழி வாக்யார்த்தம் –

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்

——-

ஸ்ரீ நம்பிள்ளை தனியன்

வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்-

ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா சதா
யத் பிரசாத ப்ரபாவேன சர்வ சித்திர பூந்மம

———–

ஒரு படி -ஒரு கிரந்தம் -32 எழுத்துக்கள் -உயிர் எழுத்துக்களும் உயிர் மெய் எழுத்துக்களும் சேர்ந்து
ஆறாயிரப்படி -திருக் குருகைப் பிரான் பிள்ளான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அளவு
ஒன்பதாயிரப்படி – நஞ்சீயர் -ஸ்ரீ பாஷ்யம் அளவு -நம்பூர் வரத ராஜர் பட்டோலை பண்ணி -காவேரி வெள்ளத்தில் தொலைத்து -வருந்தி
ஸ்ரீ ரெங்க நாதன் கனவில் தோன்றி உமது ஆசார்யாராய் நினைத்து நீரே பட்டோலை பண்ணும் -நான் உன் நினைவில் இருந்து அருளுவேன் என்று அருளி
அத்தைக் கண்ட நஞ்சீயர் மகிழ்ந்து ஆலிங்கனம் செய்து நம்பிள்ளை என்ற திரு நாமம் சூட்டி மகிழ்ந்தார்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -பன்னீராயிரப்படி -ஸ்ரீமத் பாகவதம் அளவு
பெரியவாச்சான் பிள்ளை -நம்பிள்ளை கட்டளை பேரில் இருபத்து நாலாயிரப்படி -ஸ்ரீ ராமாயணம் அளவு
நம்பிள்ளை -கால ஷேபம் குறிப்புக்களை வைத்து வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஈடு -முப்பத்தாறாயிரப்படி -ஸ்ருதப் பிரகாசிகை அளவு

—————

ஸ்ரீயபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான -சர்வேஸ்வரன் –
மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -2-6-8-என்கிறபடியே -ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து வெள்ளம் யான் மூழ்கினன்-2-6-8–என்று முதலிலே தம் திரு வாயாலே சொல்ல
வல்லராம்படியாக முதல் அடியிலே விசேஷ கடாஷம் பண்ணி அருளினான்
பிருந்தாவனம் பகவத் கிருஷ்ணே நாக்லிஷ்ட கர்மணா ஸூபேன மநஸா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -என்கிறபடியே
ஸ்ரீ பிருந்தா வனத்தை உத்பன்ன நவசஷ்பாட்யம் -என்னும்படி கடாஷித்தால் போலே தத்தவங்களை விசதமாக அறிய வல்லராம்படி கடாஷித்தான் –

இதர தர்சனங்களில் தத்தவங்களை பதினாறு என்பார் -ஆறு என்பாராய் பஹூ பிரகாரங்களாலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள் –
எங்கனே என்னில்- -லோகாயாதிகன் -ப்ருதிவ்யாதி பூதங்கள் நாலி னுடைய -மண் நெருப்பு காற்று அக்னி -கூட்டரவில் சைதன்யம்
என்று ஒரு தர்மம் பிறக்கும் -அதுக்கு உண்டான ஸூ க துக்கங்களே ஸ்வர்க்க நரகங்கள் -அவற்றினுடைய பிரிவிலே சைதன்யம் நசிக்கும் –
அவ்வருகு ஒன்றும் இல்லை -எனபது அவனுடைய சித்தாந்தம் –
ஆர்ஹதன் -என்னும் ஜைனன்–கார்ய காரண ரூபத்தாலே ஜகத் நித்ய அநித்யமும்-பின்ன அபின்னமும் -சத்ய அசத்தியமுமாய் இருக்கும் –
ஆத்மாக்கள் கர்ம அநு ரூபமான சரீரங்களுடைய பரிணாமத்தையே தனக்குப் பரிணாமாகக் கொண்டு இருக்கும் –
சம்சாரம் அநாதி -மல தாராணாதிகளாலும்-ஆத்ம ஜ்ஞானத்தாலும் -பிரகிருதி விநிர் முக்தராய்
ஊர்த்த்வ கதியை ப்ராபியா நிற்கை மோஷம் ஆகிறது -என்றான்

பௌத்த மதங்களில் வைத்துக் கொண்டு வைபாஷிகன் -பரமாணு சங்காதமாய்-ப்ரத்யஷ சித்தமாய் இருக்கும் ஜகத்து -(அந்த ஞானமே ஆத்மா -)
தத் விஷய ஜ்ஞானமும் ஷணிகம் வேறோர் ஆத்மா வில்லை -இதில் ஸ்திரத்வ புத்தி சம்சாரம் -ஷணிக புத்தி மோஷம் என்றான் –
சௌத்ராந்திகனுக்கு சித்தாந்தம் அதுவேயாய் இருக்கச் செய்தே -அநுமான சித்தம் ஜகத்து -என்றான் –அதுவே அவனுக்கு விசேஷம் –
யோகாசாரன் -ஜ்ஞாத்ரு ஜ்ஞேயங்கள் ப்ரமம் -ஜ்ஞானமே யுள்ளது -அதுவும் ஷணிகம் என்று இருக்கை மோஷம் -என்றான் –
மாத்யமிகன் -பிரமாணமும் பிரமேயமும் பிரமாதாவும் இவை யுண்டு என்று அறிகை ப்ரமம் –சூன்யத்தால் சூன்யம் என்று அறிகை மோஷம் என்றான்

நையாயிக வைசேஷிகர்கள் -ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாணுக்கள் -ஆநும நிகேச்வரன் நிமித்த காரணம் –
சம்சாரம் அநாதி -ஈஸ்வர உபாஸ்தியாலே ஸூக துக்க ஜ்ஞானங்கள் நசிக்கை மோஷம் என்றார்கள்
பாஸூபதன்-பரமாணுக்கள் உபாதான காரணம் -ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் -சம்சாரம் அநாதி –
ஆகம உக்தமான கர்ம அனுஷ்டானத்தாலே பசுபதி சாரூப்யத்தைப் பெறுகை மோஷம் -என்றான்
சாங்க்ய யோகிகள் -பிரகிருதியே ஸ்வ தந்த்ரமாய்க் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது -அந்த பிரகிருதியோடு
ஆத்மாவுக்கு உண்டான அநாதி சம்பந்தம் சம்சாரம் –பிரகிருதி புருஷ விவேகம் மோஷம் -என்றார்கள் –
பாட்ட ப்ரபாகரர்கள் –நித்யராய் அநேகராய் சர்வகதராய் அநாதி கர்மத்தாலே சம்சரிக்கிறார்கள் ஆத்மாக்கள் —
ஜகத்து பிரவாஹ ரூபேண நித்யம் -கர்ம அபூர்வமே ஆத்ம ப்ராப்தி ரூப மோஷ ஹேது -ஈஸ்வர சத்பாவம் இல்லை -என்றார்கள்
மாயாவதி -நிர்விசேஷ ( சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதங்கள் இல்லாமல் )சின் மாத்ரமே மாயா சபளமாய்க் கொண்டு –
( மாயையால் கலந்து )சம்சாரம் -தத் த்வமஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானத்தாலே அந்த ப்ரமம் போகை மோஷம் என்றான் –
பாஸ்கரீயன்-அந்த ப்ரஹ்மம் தானே -சத்ய உபாதி ( தேஹம் இந்த்ரியம் )மிஸ்ரமாய்க் கொண்டு பிரமிக்கை சம்சாரம் –
வர்ணாஸ்ரம தர்ம உபேதமாய்-வாக்ய ஜன்ய ஜ்ஞான பூர்வகமாய் யுள்ள உபாசன ஆத்மக ஜ்ஞானத்தாலேஉபாதி நசிக்கை மோஷம் என்றான்
யாதவ பிரகாசன் -அந்த ப்ரஹ்மம் தானே சத்யமான சித் அசித் ஈச்வராத்மகமாய்க் கொண்டு பிரமிக்கிறது –
அதுக்கு உண்டான பேத ஜ்ஞானம் சம்சாரம் -ஜ்ஞான கர்ம சமுச்சயித்தினாலே பேத ஜ்ஞானம் போகை மோஷம் -என்றான் –
ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கிற வைதிக சித்தாந்தத்தில் காட்டில் ப்ரஹ்மத்தை கதி பய சக்தி
விசிஷ்டமாகக் கொண்டான் இத்தனை -அதுவே அவனுக்கு விசேஷம் –

நம் தர்சனத்துக்கு தத்வங்கள் மூன்று -அவையாவன -சித்தும் அசித்தும் ஈச்வரனுமாய் -பிரகார பிரகாரி ஐக்யத்தாலே ஓன்று என்னலாய்-
ஸ்வரூப பேதத்தாலே பல என்னலாய் இருக்கும் –
அசித் ஆகிறது -குண த்ரயாத்மகமாய் -நித்யமாய் -விபுவாய் -சத்த பரிணாமியாய் -ஹேயதயா ஜ்ஞாதவ்யமாய் இருக்கும் –
இப்படி இருக்கிற அசித்திலே போக்யதா புத்தி பண்ணி -சம்சாரத்தை த்ருடமாக்கிக் கொள்ள வேணும் என்று
இருக்கிறவனுக்கும் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும் –
இது த்யாஜ்யம் என்னும் பிரபத்தி யுண்டாய் இத்தைக் கழித்துக் கொள்ள வேணும் என்று இருக்கும் அவனுக்கும் சர்வேஸ்வரனை
ஆஸ்ரயிக்க வேணும் –சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது –என்றும்
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே–ஸ்ரீ கீதை -7-14-என்றும் சொல்லுகிறபடியே
நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது -என்னையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ள வேணும் -என்றான் இ றே
அது தன்னையே இவரும்-பொல்லா வாக்கையின் புணர் வினை அறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சி –3-2-3-என்றார் இ றே
ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறது இல்லை -சர்வ சக்தி கர்ம அநு குணமாக பிணைத்த பிணையை
அவனையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ளும் இத்தனை காண்-என்று திரு நறையூர் அரையர் வார்த்தை –
சேதனன் நித்யமாய் -அணுவாய் -ஜ்ஞானானந்த லஷணனாய்-ஜ்ஞான குணகனாய்-ஏக ரூபனாய் -பகவத் சேஷ பூதனாய் இருக்கும் –
இப்படி இருக்கிற ஆத்மாவினுடைய வை லஷண்யத்தை அனுசந்தித்து -ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை 7-29-என்கிறபடியே
ஆத்ம அனுபவம் அமையும் என்று இருக்குமவனுக்கும் -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் -அந்திம ஸ்ம்ருதியும் வேணும் –
ஆத்ம அனுபவத்தை நெகிழ்ந்து சர்வேஸ்வரனுடைய குணாநுபவம்பண்ண வேணும் என்று இருக்குமவனுக்கும் அவன் தன்னையே உபாயமாகப் பற்ற வேணும் –

இவற்றில் ஒன்றை அறியிலும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே
சர்வேஸ்வரன் அளவிலே பர்யவசித்து அன்று நில்லாது –
ஜ்ஞானமாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது -பகவத் வ்யதிரிக்த விஷயங்களைப் பற்றிப் பிறக்கும் ஜ்ஞானம் எல்லாம் அஜ்ஞ்ஞான கல்பம்
தத்வ ஜ்ஞான மஜ்ஞானம நோன்யதுக்தம்-தத கர்ம யன்ன பந்தாய ச வித்யா யா விமுக்த்யே ஆயாசாயாபரம் கர்ம
வித்யான்யா சில்ப நை புணம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
என்கிறபடியே -பகவத் விஷயத்தை ஒழியக் கற்றவை எல்லாம் செருப்புக் குத்த கற்றவோபாதி –
இப்படி இருக்கிற சித் அசித் ஈச்வரர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியக் கடவார் ஒருவரும் இல்லை
-இவற்றை உள்ளபடி அறிவாரில் தலைவர் யாயிற்று இவ்வாழ்வார் –

இவருக்கு ஒப்புச் சொல்வார் -சம்சாரிகளிலும் இல்லை -நித்ய ஸூரிகளிலும் இல்லை -தம்படி தாமும் அறியார் –
சம்சாரிகளும் அறியார்கள் -சர்வேஸ்வரனும் அறியான் –
ஒரு சாதனத்தை அனுஷ்டித்து இந்த நன்மை நமக்கு வரும் என்று இருக்கிற வந்தது அல்லாமையாலே தாமும் அறியார்
இவரைப் போலே இருப்பாரை சம்சாரத்தில் காணாமையாலே சம்சாரிகளும் அறியார்கள்
தன குணங்கள் புறம்பு ஒரு வியக்தியிலே இப்படி பலிக்கக் காணாமையாலே சர்வேஸ்வரனும் அறியான் –
சம்சாரிகளில் வ்யாவர்த்தனோபாதி நித்ய ஸூ ரிகளிலும் வ்யாவ்ருத்தர் –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் -திரு விருத்தம் -75–என்று உபய விபூதியிலும் அடங்காது இருப்பார்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79-என்னும்படி யாயிற்று இவர் நிலை –
பகவத் அனுபவத்துக்கு பாங்கான தேசத்திலே இருந்து அனுபவிக்கிறவர்களைப் போல் அன்றே
அவ்வனுபவத்துக்கு மேட்டு நிலமானசம்சாரத்திலே இருந்து அனுபவிக்கிறவர்கள் –
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பக்தா ஜனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்கிறபடியே கலி காலத்திலே பகவத் ருசி ஒருவருக்கும் பிறக்கிறது இல்லை
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிதாம் ஷண பங்குர தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -ஸ்ரீ மத பாகவதம்
என்கிறபடியே முதல் தன்னிலே மனுஷ்ய சரீரம் கிடையாது -பெற்றாலும் சர்வேஸ்வரனே பிராப்யன் என்று
அவனைப் பெறுகைக்கு அநு ரூபமாய் இருப்பதொரு உபாயத்தை பரிஹரிக்க வேணும் என்னும் ருசி ஒருவருக்கும் பிறவாது
இது உண்டாகிலும் உண்டாம் பாகவத சேஷத்வம் உண்டாகாது என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே
மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூகச்சித்யததி சித்தயே-யததாமபி சித்தா நாம் கச்சின்மாம் வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -7-3-
என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான் இ றே

இப்படி இருக்கிற சம்சாரத்தில் ஆழ்வார் வந்து அவதீர்ணரான இது சேதனர் பண்ணின ஸூ க்ருத பலமாயிற்று –
ததோகில ஜகத் பத்ம போதா யாச்யுதபாநுநா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்கிறபடியே சர்வேஸ்வரன் வந்து
அவதரித்தால் போலே யாயிற்று -ஆழ்வார் வந்து அவதரித்தபடி –
ஆதித்யன் பாஹ்யமான அந்தகாரத்தைப் போக்கும் -இவன் ஆந்தரமான அந்தகாரத்தை போக்கிக் கொண்டாயிற்று இருப்பது
அப்படியே இவரும் -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -6-7-2–என்றும்
மரங்களும் இரங்கும் வகை -6-5-9–என்றும்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் படியாகவும் -1-5-11-
கேட்டாரார் வானவர்கள் -10-6-11–என்றும்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தானைத் தான் பாடி தென்னா தென்னா என்னும் என் அம்மான் -10-7-5–என்னும்படி
தம்முடைய நன்மை எங்கும் உண்டான எல்லார்க்கும் உண்டாம் படி பண்ணிக் கொண்டாயிற்று இருப்பது –
ஹஸிதம் பாஷிதம் சைவ கதிர்யா யாச்ச சேஷ்டிதம் தத் தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ர பஸ்யதி-என்கிறபடியே
பிரம்மாவின் பிரசாதத்தாலே ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வத்தையும் சாஷாத் கரித்தால் போலே இவரும்
பகவத் பிரசாதத்தாலே சாஷாத் க்ருதமான பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையராய் இருப்பர் –

ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-ஐஸ்வர்யம் -ஆத்மலாபம் -ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம்
-நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்கள்
ஜ்ஞாநியானவன் எனக்கு தாரகன் -என்று சர்வேஸ்வரன் அருளிச் செய்த ஜ்ஞாநிகளுக்கு அக்ரேசராய் இருப்பவர்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்று பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு அணைய
திருத் தொட்டில் இடாத போது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போலே இவரும் பருவம் நிரம்புவதற்கு முன்பே
பகவத் குணைக தாரகராய் இருப்பர் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -2-3-3-என்றும்
முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –திரு விருத்தம் -60-என்றும்
சொல்லுகிறபடியே– ந ச சீதா த்வயா ஹீ நா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்ருதௌ -என்று
உம்மை ஒழிந்த வன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால்
ஜலாதுத்ருதமான மத்ஸ்யம் நீர் நசை யாரும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை
உம்முடைய திரு உள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது -என்றார் இ றே –
அத்தலையிலே நினைவாலே இ றே இத்தலை ஜீவிப்பது -எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -நான் முகன் -திரு -38-
என்கிறபடியே அவன் நினைவு இல்லாத வன்று இவையும் இல்லை இ றே -அப்படியே இவரும் நின்னலால் இலேன் காண் -2-3-7- என்று இருப்பார் ஒருவர்

ந தேவ லோகாக்ரமணம் நா மரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமயே ந த்வயாவி நா -என்று
வானவர்நாடு என்கிற பரம பதம் ஆத்ம லாபம் லோகாநாம் ஐஸ்வர்யம் -இவை இத்தனையும்
உமக்குப் புறம்பாய் வரும் அன்று வேண்டேன் என்ற இளைய பெருமாளைப் போலே -இவரும்
திருவோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல வீடு பெறினும் கொள்வது என்னுமோ –திருவாசிரியம் -2-என்றும்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -2-9-1-என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –6-9-9-என்றும்
இதர புருஷார்த்த பரஸ்தாவத்திலே வெருவும் ஸ்வ பாவருமாய் இருப்பர்
அஹம் தவான் மகா ராஜே பித்ருத்வம் நோபா லஷயே ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதா ச மம ராகவ -என்று
பெருமாளையே எல்லா உறவுமாகப் பற்றின இளைய பெருமாளைப் போலே இவரும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே -5-1-8-என்று பகவத் ஐகாந்த்ய சீமையாய் இருப்பர்
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச்ச தே பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரி சாநுஷூ ரம்ச்யதே-என்று
இளைய பெருமாள் சர்வ வித கைங்கர்யங்களையும் செய்து அல்லது தரியாதாப் போலே இவரும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று
எல்லா அடிமைகளையும் செய்து அல்லது தரியாத தன்மையராய் இருப்பர் –
விஸ்தரணோதமநோ யோகம் விபூதிஞ்ச ஜனார்த்தன ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமாநோ நராதிப –ஸ்ரீ கீதை-10-18–என்றும்
சொல்லுகிற அர்ஜுன தசராதிகளைப் போலே
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் -2-5-4–என்கிறபடி மேன்மேல்
எனப் பெருகி வருகிற ஆராத காதலை யுடையராய் இருப்பர்

தர்மாத்மா சத்ய சௌசாதி குணா நாமா க்ரஸ் ததா உபமாநம சேஷாணாம் சாது நாம் யஸ் சதா அபவத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று
ஸ்ரீ பிரகலாத ஆழ்வானை சாதுக்களுக்கு எல்லாம் உபமானமா பூமியாகச் சொல்லுகிறாப் போலே
எல்லாருக்கும் தம்முடைய ஒரோ வகைகளாலே உபமான பூமியாய் இருப்பர்
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போலே
இவரும் பகவத் குணங்களிலே தோற்று உயர்வற உயர்நலம் உடையவன் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே-என்றார்
இப்படி பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசத -விசத தர -விசத தமமாக -அனுபவித்து
அது உள்ளடங்காமை வழிந்து புறப்பட்ட சொல்லாயிற்று இப்பிரபந்தங்கள்-
விசதம் -பரபக்தி –விசத தரம் -பர ஜ்ஞானம் –விசத தமம் –பரம பக்தி –
இங்கனே யாகில் -இப்பிரபந்தங்களுக்கு பாட்டும் -சங்க்யையும் -பாட்டுக்கு நாலடி யாகையும்-அஷரங்கள் சமமாகையும் –
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பாவினம் -என்றால் போலே சொல்லுகிற பிரபந்த லஷணங்கள் சேர விழுந்தபடி எங்கனே என்னில் —
சோக வேகத்தாலே பிறந்த மா நிஷாத -இத்யாதி ஸ்லோகமானது-மச்சந்தா தேவ -என்கிற ஸ்லோகத்தின் படியே
அத்திக்காயில் அறுமான் -கொசு -போலே -பகவத் விபூதியில் ஏக தேச ஸ்தானனான பிரம்மாவின் பிரசாதத்தாலே
சர்வ லஷணோபேதம் ஆனால் போலே
பகவத் பிரசாதம் அடியாகப் பிறந்த இப்பிரபந்தங்களுக்கு இவற்றில் கூடாதது இல்லை
இவை என்ன கோடியிலே அடைக்கப் பட்ட பிரபந்தங்கள் –
இவை பிறந்தபடி எங்கனே –
இவற்றுக்கு மூலம் என் –
ஒன்றை மூலமாகச் சொன்னால் அது மூலம் என்று அறியும் படி எங்கனே
இவை பிரமாணம் என்று அறிவது எத்தாலே
இவற்றுக்கு பிரதிபாத்யர் யார்
இப்பிரபந்தங்கள் கற்கைக்கு அதிகாரிகள் யார்
இவற்றுக்கு போக்தாக்கள் யார்
இவை எதுக்காகப் பண்ணப் பட்டன
என்று சில அவ்யுத்பன்னர் கேட்க –
இவை புருஷார்த்த ப்ரகாசகமான பிரபந்தங்களில் பிரதான பிரபந்தங்கள் –
பகவத் குண அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ பலாத்காரம் சொல்லுவிக்கப் பிறந்தன –
பகவத் பிரசாத லப்தமான திவ்ய சஷூர் மூலமாகப் பிறந்தன வென்னும் இடம் ஸ்வர வசன வ்யக்திகளாலே அறியலாம் –
வேதாந்த வித்துக்களான சர்வ சிஷ்டர்களும் பரிக்ரஹிக்கையாலும் -சம்சாரத்தில் உத்வேகம் பிறந்தாருக்கும் ஜ்ஞாதவ்யமான வேதார்த்தங்களை இப்பிரபந்தங்களிலே காண்கையாலும்-இவை உத்க்ருஷ்ட தமமான பிரபந்தம் என்று அறியலாம்
எல்லாருக்கும் பரம பிராப்ய பூதனான ஸ்ரீ யபதி இப்பிரபந்தங்களுக்கு பிரதி பாத்யன்-
சம்சாரத்தில் ருசி யற்று -எம்பெருமான் திருவடிகளிலே எப்பேர் பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று இருக்குமவன் இவை கற்கைக்கு அதிகாரி
முமுஷூக்களும் -முக்தரும் -நித்தியரும் -எம்பெருமான் தானும் இவற்றுக்கு போக்தாக்கள்
பகவத் கைங்கர்யம் ஆகிற நிரதிசய புருஷார்த்தம் இன்னபடிப் பட்டு இருக்கும் என்று அறிவிக்கைக்காகப் பிறந்த பிரபந்தங்கள் இவை –
என்று சிரோ பாசித சத் வ்ருத்தராய் இருப்பார்கள் பரிஹரித்தார்கள் –

நிஷித்த பாஷை யாகையாலும் –இப்பிரபந்தங்களை வேதத்தில் அநதிகாரிகள் அப்யசிக்கக் காண்கையாலும்-
கலி காலத்தில் ஜ்ஞானத்துக்கு அடைவில்லாத சதுரத்த வர்ணத்திலே பிறந்தார் ஒருவராலே நிர்மிதங்கள் ஆகையாலும் –
தேசாந்தரங்களில் இன்றிக்கே ப்ராதேசிகங்கள் ஆகையாலும்
அவைதிகர் பரிக்ரஹிக்கையாலும்
ஸ்ருதி ஸ்ம்ருதி விருத்தமான காம புருஷார்த்தத்தை பல இடங்களிலே பேசுகையாலும்
ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே புருஷார்த்ததயா சொல்லப் படுகிற ஐஸ்வர்ய கைவல்யங்களைக் காற்கடைக் கொள்ளுகையாலும்
இப் பிரபந்தங்கள் பிரமாணம் ஆக மாட்டா என்று வைதிக கோஷ்டியில் பழக்கம் இல்லாதார் சில அறிவு கேடர் வந்து பிரத்யவஸ்தானம் பண்ண

மாத்ச்ய புராணத்திலே பாஷாந்தரத்தாலே பாடா நின்றுள்ள கைசிகாதிகளை தன நாட்டின் நின்றும் போக விட்ட ராஜாவைக் குறித்து
ஹரி கீர்த்திதம் வினைவாந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம பாஷாகா நம் காதவ்யம் தஸ்மாத் பாவம் த்வயா கருத்தும் -என்ற
யம வசனத்தின் படியே பாஷா நிஷேதம் பகவத் வ்யதிரிக்த விஷயங்களிலே யாகையாலும் -அங்கன் அன்றியே
பாஷா மாத்ர அவதியாகவிதி நிஷதங்களை அங்கீகரிக்கில் சமஸ்க்ருத பாஷையான பாஹ்ய சாஸ்த்ராதிகளை அப்யசிக்க வேண்டுகையாலும்
ஆழ்வார் தம்முடைய கிருபாதிசயத்தாலே வேதத்தில் அநாதிகாரிகளான ஸ்திரீ சூத்ராதிகளும் இழவாத படி வேதார்த்தை திராவிட பாஷையாக
அருளிச் செய்கையாலும் எதிர் சூழல் புக்கு அநேக ஜன்மங்கள் எம்பெருமான் தானே தொடர்ந்து விஷயீ கரிக்கைக்கு அடியான பாக்யத்தை யுடையராய்
நிரந்தர பகவத் கடாஷ பாத்ர பூதருமாய் -தத்வ ஹிதங்களிலே நிபுணராய்-அவற்றினுடைய உபதேசத்திலும் பிரவ்ருத்தராய்
விதுர சபர்யாதிகளிலே விலஷணரான ஆழ்வார் பக்கலிலே இப்பிரபந்தங்கள் பிறக்கை யாலும் -இப்பாஷை நடையாடி சிஷ்ட பிரசுரமான
தேசங்கள் எங்கும் உண்டாய் பாஷாந்தரங்களிலே பிறந்து வி லஷணராய் உள்ளாறும் இவற்றின் வைலஷண்யத்தைக் கேட்டு இவற்றை அப்யசிக்கைக்கு ஈடான
இப்பாஷை நடையாடும் தேசத்திலே பிறக்கப் பெற்றிலோமே என்று இருக்கையாலும் -இவற்றின் நன்மையைக் கண்டு வேதார்த்த ஜ்ஞானத்துக்கு
அடைவில்லாத அவைதிகரும் கூட பரிக்ரஹிக்கை ச்லாக்யாத ஹேது வாகையாலும் -வேதனம் என்றும் -உபாசனம் என்றும்
உபநிஷத்துக்களில் சொல்லுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகையாலும் -ஐஸ்வர்ய கைவல்யங்களை தூஷித்தது அல்ப
அச்த்ரத்வாதி தோஷத்தாலே யாகையாலும் ப்ரதிபாத்யனான எம்பெருமானுடைய மகாத்ம்யத்தாலும் -எம்பெருமானை ஸூ ஸ் பஷ்டமாக
பிரதிபாதிக்கையாலும் -பக்திக்கு உத்பாதகங்கள் ஆகையாலும் உத்பன்னையான பக்திக்கு வர்த்தகங்கள் ஆகையாலும் -ஸ்ரவணாதிகளிலே
அப்போதே நிரதிசய ப்ரீத்தி ஜனகங்கள் ஆகையாலும் இவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு வேதத்தில் பல இடங்களில் சாஷியாகச்
சொல்லுகையாலும் -ப்ரஹ்ம காரண வாதத்தாலும் ப்ரஹ்ம ஜ்ஞானான் மோஷத்தைச் சொல்லுகையாலும் புருஷார்த்த விஷயமான பிரபந்தங்கள்
எல்லா வற்றிலும் இப் பிரபந்தங்களை த்ருடதர பிரமாணங்களாக உப பாதித்து வைதிக கோஷ்டியில் அபியுக்தர் ஆனவர்கள் பரிஹரித்தார்கள்

பகவத் பிரசாதத்தாலே அவனை அனுபவித்து பரி பூரணராய் இருக்கிற இவருக்கு எம்பெருமானை பிரிகையும்
-பிரிவாலே நோவு பட்டுக் கூப்பிடுகையும் கூடின படி எங்கனே என்னில்
ஒரோ குணத்தை அனுபவித்தால் அநு பூத குணங்களில் உண்டான ப்ரியத்வ பிரகர்ஷம் -ஷூத்ர விஷயங்களிலே
வைராக்யத்தைப் பிறப்பித்து குணாந்தரங்களிலே ச்ப்ருஹையைப் பிறப்பிக்கும்
பரமாத்மாநி யோ ரக்தோ விரக்தோ பரமாத்மநி-என்றும் –
-மாற் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு –மூன்றாம் திருவந்தாதி -14–என்றும் சொல்லுகிறபடியே
-பின்னை அக்குணங்களிலே க்ரம ப்ராப்தி பற்றாது -யாதொருபோது ஆசை மிக்கது -அப்போது ஆசைப் பட்ட பொருள் கிடையாமையாலும்
-பகவத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்த ஸ்மரணாதி களிலுமாக பகவத் விஷயத்தில் அனுபவித்த அம்சத்தையும் இழந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -3-2-1–என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் –
போர வைத்தாய் புறமே -5-1-5–என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9–என்றும் கூப்பிடா நிற்பார் –
அவனை அனுபவிக்கப் புக்கால் -அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே -2-3-6–என்றும்
பருகிக் களித்தேன் -2-3-9–என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை -10-8-7–என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் -5-2-2–என்றும் –
எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா -2-6-7–என்றும் –
தாமும் நம்முடைய சம்பந்தி சம்பந்திக்களுமாய் கூடக் களிப்பர்
இப்படி பஹூ குணனான எம்பெருமான் பக்கலிலே நிரதிசய பக்திமான்களாய்-தத் சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராய்
அவனை அல்லது அறியாதபடியாய்-பகவத் அனுபவ ஸூ கம மிக்க போது இதர பதார்த்தங்களும் எல்லாம்
நம்மைப் போலவே எம்பெருமானைப் பெற்று ஸூகிக்கின்றனவாகவும்-
விச்லேஷம் என்று ஒரு வகை உண்டு என்றும் அறியாத லோக யாத்ரையோடு ஒக்க மறந்து
விஸ்லேஷ வியசனம் மிக்கால்-சம்ச்லேஷ ரசம் உண்டு என்றும் அறியாத இதர பதார்த்தங்களும் எல்லாம்
நம்மைப் போலவே எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு –
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-2-1-1-இத்யாதியாலே அவற்றுக்குமாக தாமும் நோவு படா நிற்பார் –
இவருக்கு பிரிய அப்ரியங்கள் ஒரு காலும் முடியாதே பர்யாயேண உண்டாய் இருக்கையாலே இவருக்கு
சிந்தயந்தி படி நித்யமாகச் செல்லுகையாலே இவரை தீர்க்க சிந்தயந்தி என்றாயிற்று நம் முதலிகள் அருளிச் செய்வது –
ஆனால் சேதனர்க்கு ஸ்திரீ அன்ன பாநாதிகளே தாரக போஷக போக்யங்களாகச் செல்லா நிற்க -இவரை பகவத் குண ஏக தாரகர்
என்னக் கூடுமோ என்னில் -திரு அயோத்யையிலும் -கோசல ஜன பதத்திலும் உள்ள ஸ்தாவர ஜங்கமங்கள் அடைய
ராக குண ஏக தாரகங்களாய் இருக்கும் படியை அனுசந்தித்து இதுவும் கூடும் என்று கொள்வது
இப்படி இருக்கிற இவருக்கு எம்பெருமானோடு சம்ச்லேஷமாவது ப்ரத்யஷ சாமாநா காரமான ஜ்ஞான சாஷாத்காரம் –
விச்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பண்ணி அது பெறாமையாலே மானஸ அனுபவத்துக்கு வந்த கலக்கம் –
சர்வஜ்ஞனாய் -சர்வ சக்தனாய் சர்வ நியந்தாவாய் நிரவதிக கிருபாவானாய் இருந்த எம்பெருமான் இவருடைய அனுபவத்தை
முடிய நடத்தாதே -இவ்வனுபவத்தை விச்சேதித்தத்துக்கு பிரயோஜனம் என் என்னில் -இவருக்கு அனுபூத குணங்கள்
சாத்மிக்கைக்காகவும் –மேன்மேல் என திருஷ்ணை பிறக்கைக்காகவும்–எம்பெருமான் பக்கலிலே பிறந்த ஆசை முதிர்ந்து
-நினைந்தபடி பெறா விட்டவாறே சோக மோஹங்கள் பிறக்கும் -இப்படியுள்ள கலவியாலும் பிரிவாலும் ஆழ்வாருக்கு
வந்த தசை அந்யாபதேச பேச்சைப் பேசுவிக்கும்-

இப்பிரபந்தங்களில் -ஸூக்திகள் பிராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூப பிரதிபாதன பரமாய் இருக்கும் -சில
-ஸ்வரூபம் -உயர்வற- திண்ணன் வீடு -அணைவது-ஒன்றும் தேவும் –
ப்ராப்தாவான பிரத்யகாத்ம விஷயமாய் இருக்கும் சில — –பயிலும் சுடர் ஒளி-ஏறாளும் இறையோன் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை –
-ப்ராத்யுபாயத்தைச் சொல்லும் சிலநோற்ற நோன்பு -ஆராவமுது –மானேய் நோக்கு -பிறந்தவாறும் –
பலன் சொல்லும் திருவாய்மொழிகள் -எம்மா வீடு -ஒழிவில் காலம் எல்லாம் -நெடுமாற்கு அடிமை -வேய் மரு தோள் இணை –
இதற்குத் தடைகள் -வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -ஒரு நாயகமாய் -கொண்ட பெண்டிர் –
அவசிஷ்டமானவை- இவற்றுக்கு உபபாதகங்களாய் இருக்கும் –இவற்றில் உத்தேச்யம் பலம் –
ததார்த்தமாக மற்றுள்ள திருவாய் மொழிகளும் -நாலர்த்தமும் சொல்லுகிறது –
அர்த்த பஞ்சகத்தில் உத்தேச்ய பலம் கைங்கர்யமே -அதன் பொருட்டே மற்ற நான்கும் கூறப்படுகின்றன
இவற்றில் பிரதம பிரபந்தமான திரு விருத்தத்தில் -த்வத் அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் எம்பெருமானை அர்த்திக்கிறார்
திருவாசிரியத்தில் -நிவ்ருத்த சம்சாரருக்கு போக்யமான தன்னுடைய வடிவு அழகை-கலம்பகன் மாலையைப்
பணியாக எடுத்துக் காட்டுமா போலே -காட்டிக் கொடுக்க கண்டு அனுபவித்தார் பூரணமாக –
பெரிய திருவந்தாதியில் நிரதிசய போக்யனான-எம்பெருமானை அனுபவிக்கையாலே தத் அநு குணமாக
திருஷ்ணை பிறந்து த்ருஷ்ண அநு குணமாக பேசியும் நினைத்தும் தரிக்கிறார் –

திருவாய்மொழி யிலே –
இவருடைய த்ருஷ்ண அநு குணமாக -ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
தனக்குத் தகுதியான திவ்ய தேஹத்தை உடையானுமாய் -திவ்ய பூஷண பூஷிதனுமாய் -சங்க சகராதி திவ்யாயுதரனுமாய் –
பரமவ்யோமத்திலே -ஆனந்தமயமான திவ்ய ஆஸ்தான ரத்ன மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் தானுமாய்
திவ்ய சிம்ஹாசனத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளி –அஸ்தானே பய சங்கிகளான அயர்வறும் அமரர்களாலே
அநவரத பரிசர்யமான சரண நளினனாய்க் கொண்டு -அங்கு அங்கனே செல்லா நிற்க –ஸ்வ சங்கல்பாயத்த -ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி
நிவ்ருத்திகமான ஸ்வ இதர சமஸ்தத்தையும் தனக்கு சரீரதயா சேஷமாக உடையனாய்
அந்தராத்மதயா-சேதன அசேதனங்களை வியாபித்து —தத் கத தோஷைரசம்ச்ப்ருஷ்டனாய்
நாராயணாதி நாமங்களை தனக்கு வாசகமாய் உடையனாய் –ஏவம்விதனாக-உளன் சுடர் மிகு சுருதியுள்-1-1-7- -என்கிறபடியே உபநிஷத் சித்தனுமாய்
இப்படி விசாஜாதீயனுமாய் இருந்து வைத்து -ஆஸ்ரித வாத்சல்யத்தாலே -தேவ மனுஷ்யாதி சஜாதீயனாய் வந்து தன்னுடைய
பரம கிருபையாலே திருவவதாரம் பண்ணும் ஸ்வபாவனுமாய்
தன்னுடைய ஆதாரங்களிலும் உதவப் பெறாத கர்ப்ப நிர்பாக்கியரும் இழக்க வேண்டாதபடி சர்வ அபராத சஹனாய்
பத்ர புஷ்பாதிகளாலே ஸ்வ ஆராதனாய்க் கொண்டு ஆஸ்ரிதற்கு அத்யந்த பரதந்த்ரனாய்
அவர்களுடைய இச்சா அநு குணமான போஜன சயநாதிகளை உடையனுமாய்
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தானே ஆஸ்ரித ஸூலபத்வார்த்தமாக கோயில்களிலே வந்து நின்று அருளியும்
இப்படியுள்ள சர்வேச்வரத்துக்கும் ஆஸ்ரித அநுக்ரஹத்துக்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான எம்பெருமான்
தன்னை நிர் ஹேதுகமாகக் காட்டி அருளக் கண்டு அனுபவித்து -தம்முடைய பிரகிருதி சம்பந்தம் ஆகிற பிரதிபந்தகம் அற்று
எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார் -இனி சொல்ல வேண்டுமவை எல்லாம் -அவ்வவ திருவாய் மொழிகள் தோறும் சொல்லக் கண்டு கொள்வது –

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான எம்பெருமானைப் பேசி -ஏவம் விதனானவன்
திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கடலைத் திரளக் கண்டான் ஒருவன் அதிலுண்டான முத்து மாணிக்காதிகளையும் தனித் தனியே காணுமா போலே
முதல் திருவாய் மொழியிலே திரள அனுபவிக்கப்பட்ட எம்பெருமானுடைய குணங்களை ஒரோ வகைகளிலே
ஒரோ திருவாய் மொழியாகச் செல்லுகிறது இரண்டாம் திருவாய்மொழி தொடங்கி மேல் எல்லாம் –

இப்படிச் செய்தார் இவரே அல்லர் -பாரத ராமாயணாதிகளைப் பண்ணின வ்யாசாதிகளும்
சங்ஷேப விஸ்தரங்களாலே தங்கள் பிரபந்தங்களை ப்ரபந்தீ கரித்தார்கள் –

பர ஸ்வரூபம் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தாலும் கல்யாணைகதா நத்வத்தாலும் -ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணமாய்-
விபுத்வாத் தேசத பரிச்சேத ரஹிதமாய்–நித்யத்வாத் காலத பரிச்சேத ரஹிதமாய் –சர்வமும் தனக்கு பிரகாரமாய்
தான் பிரகாரியுமாய் -தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இல்லாமையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய் –
ஜ்ஞானா நந்த மயமாய் -ஜ்ஞான பல ஐஸ்வர்ய சீலாத்ய அனந்த கல்யாண குண கண மஹோததியாய் –
ஸ்ரீ யபதியாய் -ஸ்வ இதர சமஸ்தத்தையும் வியாபிக்கும் இடத்தில் அப்ராக்ருதமாய் -ஸூத்த சத்வ மயமாய் –
ஸ்வ அசாதாரணமாய் -புஷ்ப ஹாச ஸூ குமாரமுமாய் –புண்ய கந்த வாஸிதா நந்ததி கந்தராளமாய்-சர்வ அபாஸ்ரயமாய் இருந்துள்ள
திவ்ய விக்ரஹம் போலே வியாபித்து தரித்து நியமித்து –இப்படி சர்வ பிரகாரத்தாலும் ரஷகமாய்க் கொண்டு சேஷியாய் இருக்கும் –

பிரகிருதி ஸ்வரூபம் -மஹதாதி விகாரங்களை யுடையதாய் -நித்தியமாய் -த்ரிகுணத்மிகையாய் -சுக்ல கிருஷ்ண ரக்த வர்ணையாய்-
அநேக பிரஜைகளுக்கு பிரஜநந பூதையாய் -எம்பெருமானுக்கு சரீரதயா சேஷமாய் -சேதனர் கர்ம அநு குணமாக இச்சிக்க
இந்த இச்ச அநு குணமாக -பகவத் சங்கல்ப்பத்தாலே சதுர் விம்சதி தத்வமாய்க் கொண்டு விகரிக்கக் கடவதாய்
இப்படி எம்பெருமானுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாய் இருக்கும் –

ஆத்ம ஸ்வரூபம் -அணு பரிமாணமாய் -தேஜோ த்ரவ்யமாய் -ஜ்ஞாதாவாய் –ஜ்ஞாநானந்த குணகமாய் –
நித்யமாகையாலே -கால பரிச்சேத ரஹிதமாய் -ஜ்ஞான த்ரவ்யம் ஆகையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய் –
அப்ருதக் சித்த்யர்ஹ-ப்ருதங் நிர்தேசாநர்ஹ-அனந்யார்ஹ சேஷமுமாய் -பரசேஷதைகரஸமுமாய்-அத்யந்த பரதந்த்ரமுமாய்
இருக்கும் எம்பெருமானுக்கு -இத்தை-தத்வ த்ரயம் – உள்ளபடி அறிவாரில் தலைவர் ஆயிற்று இவர் –

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி —
உணர் முழு நலம் –மிகு நரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்
சர்வாதிகத்வமும் -சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் உபய விபூதி நாதத்வமும் இ றே-நாராயண சப்தார்த்தம்
இதனுடைய சேஷம் இ றே ஒன்றும் தேவும் –4-10-திண்ணன் வீடும் -2-2-

அனந்தரத் திருவாய் மொழியிலே –இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
-வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும்
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –
இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி
இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் இருக்கும் படி என் என்னில்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே —2-9-4-என்று தொடங்கி
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –3-3-1-என்றும்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -4-8-2-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -8-5-7- -என்றும் -இப்படிகளாலே அடிமையே புருஷார்த்தம் என்னும் இடத்தை நிர்ணயித்து
இது சாஸ்திர விஹிதம் என்று செய்யும் அளவு அல்ல
ஸ்வரூப பிராப்தம் என்று செய்யும் அளவல்ல -ராக பிராப்தம் -என்று சொல்லுகைக்காக
அடியிலே உயர்வற உயர்நலம் உடையவன் -1-1-1-என்று கொண்டு பிராப்யமான குணங்களைச் சொல்லி
சுவையன் திருவின் மணாளன் -1-9-1–என்றும்
தூய அமுதைப் பருகிப் பருகி -1-7-3–என்றும் குண விசிஷ்ட வஸ்துவினுடைய போக்யதையும் சொல்லி
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -2-5-4-என்றும்
ஆராவமுதம் –5-8-1-என்றும்
ஆராவமுதம் ஆனாயே -10-10-5–என்றும் இந்த போகத்தினுடைய நித்ய அபூர்வதையைச் சொல்லி
உகந்து பணி செய்து உணபாதம் பெற்றேன் –10-8-10-என்று குண அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே
புருஷார்த்தம் என்னும் இடத்தைச் சொல்லி –இது தான் யாவதாத்மபாவியான புருஷார்த்தம் என்கைக்காக
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –10-8-10-என்று தலைக் கட்டுகையாலே
பகவத் குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே -புருஷார்த்தம் என்று அருளிச் செய்தார்

இப்புருஷார்த்ததுக்கு இடைச் சுவரான விரோதி வேஷத்தை இரண்டாம் திருவாய் மொழியிலே -வீடுமின் முற்றவும் -1-2-என்று கட்டடங்க சொல்லி
அது தன்னையே மேல் மூன்று திருவாய் மொழியாலே விஸ்தரித்து அருளிச் செய்தார் -அவை எவை என்னில்
அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்றார் -சொன்னால் விரோதத்திலே –3-9-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்றார் ஒரு நாயகத்திலே -4-1-
சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்றார் கொண்ட பெண்டிரிலே -9-1-
சாஸ்திர சித்தமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் புருஷார்த்தமாகத் தட்டு என் என்னில் -பரம புருஷார்த்த லஷண மோஷத்திலே அதிகரித்தவனுக்கு
ஐம்கருவி கண்ட இன்பம்-4-9-10- ஆகையாலும் -தெரிவரிதாய் -4-9-10-அளவிரந்ததே யாகிலும் பகவத் அனுபவத்தைப் பற்ற சிற்றின்பம் ஆகையாலும் முமுஷூவுக்கு இவை த்யாஜ்யம் என்றார் -ஆக த்யாஜ்ய வேஷத்தை அருளிச் செய்கிறார் –

த்யாகப் பிரகாரம் இருக்கும் படி எங்கனே என்னில் -த்யாஜ்யம் என்றால் விடும் அத்தனை அன்றோ -த்யாகப் பிரகாரம்
இருக்கும் படி அறிய வேணுமோ என்னில் -வேணும் –
விஷயங்களில் நின்றும் தான் கடக்க வர்த்திக்கவோ -அன்றியே விஷயங்களை நசிப்பித்து வர்த்திக்கவோ என்றால் -இரண்டும் ஒண்ணாது –
கடக்க வர்த்திக்க என்று நினைத்தால் லீலா விபூதிக்கு அவ்வருகே போக வேணும்
நசிப்பித்து வர்த்திக்கவோ என்றால் பகவத் விபூதியை அழிக்கையாய் விடும்
இரண்டும் ஒழிய விஷய சந்நிதியில் நின்றும் நிர்மானுஷ்யமான காட்டிலே வர்த்தித்தாலோ என்னில்
சர்வத்தையும் விட்டுக் காட்டிலே இருந்த ஆதிபரதனுக்கு மானின் பக்கலிலே சங்கம் உண்டாய் ஜ்ஞான பிரசம்சம் பிறந்தது
சௌபரி நீருக்கு உள்ளே முழுகிக் கிடக்கச் செய்தே அங்கே சில மத்ஸ்ய சஞ்சாரத்தைக் கண்டு விஷய பிரவணன் ஆனான்
ஆகையாலே த்யாக பிரகாரம் இவை யல்ல -ஆனால் ஏது ஆவது என்னில்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -இறை சேர்மின் -1-2-3–என்று
தேஹத்தில் ஆத்ம புத்தியையும் -தேக அநு பந்திகளான பதார்த்தங்களில் மமதா புத்தியையும் தவிருகை த்யாக பிரகாரம் என்று
பிறருக்கு உபதேசித்தார் –யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -2-9-9—என்று தாமும் அனுசந்தித்தார்
நிவ்ருத்த ராகச்ய க்ருஹம் தபோவனம் -என்று நிவ்ருத்த ராகனாய் இருக்குமவனுக்கு தான் இருந்த தேசமே தபஸ் ஸூ க்கு
ஏகாந்த ஸ்தலம் என்றதாயிற்று -இப்படி எங்கே கண்டோம் என்னில் -ஸ்ரீ ஜனக ராஜன் பக்கலிலும் ஸ்ரீ குலசேகரப் பெருமாள் பக்கலிலும்
கண்டு கொள்வது –ஆகையாலே புத்தி த்யாகமே த்யாகம் என்றபடி –

இவ் விரோதி நிவ்ருத்திக்கும் புருஷார்த்த சித்திக்கும் உபாயம் ஏது என்னில்
தரை வர்ணிக அதிகாரமான பக்தி -அகிஞ்சன அதிகாரமான பிரபத்தி யும் என்று இரண்டும் இ றே வேதாந்த சித்தமான உபாயம்
இதில் பிரபத்தியே உபாயம் என்று நமக்கு சித்தாந்தம் என்னும் ஆகாரம் தோற்ற உபாய வேஷத்தை அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பிலேன் –5-7-1-என்று தொடங்கி
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10–என்றும்
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட –5-8-11-என்றும்
நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் -5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு –5-10-11-என்றும் சொல்லிக் கொண்டு போந்து
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -10-10-3-என்று தலைக் கட்டுகையாலே திருவடிகளே உபாயம் என்று அருளிச் செய்தார்

இத்தை பிறருக்கு உபதேசிக்கிற விடத்திலும் -திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -4-1-1-என்றார்
ஆறு எனக்கு நின் பாதமே -5-7-10-என்றும் –
கழல்கள் அவையே -5-8-11–என்றும்
சரணே சரண் –5-10-11-என்று அவதரிக்கையாலே உபாய பூர்த்தியை அருளிச் செய்தார்
இவ்வுபாயத்துக்கு அதிகாரிகள் யாவார் யார் என்னில் -மயர்வற மதி நலம் அருளினான் -என்ற இடத்திலே
எனக்கு அருளினான் என்கைக்கு தம்மைக் காணாமையாலே ஆகிஞ்சன்யத்தையே புரச்கரித்து
உபாய நிர்ணய வேளையிலே -நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -5-7-1-என்று தரை வர்ணிக அதிகாரமான
உபாயாந்தரங்க ளிலே அநந்வய முகத்தாலே ஆகிஞ்சன்யத்தைப் பேசி
ஆசரயண வேளையில் -புகல் ஒன்று இல்லா அடியேன் -6-10-10-என்று சொல்லி
போக வேளையில் தமக்கு உண்டானது அடங்க பகவத் பிரசாத லப்த லப்தம் என்கைக்காக –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –3-3-4-என்று கரும் தரையைப் பேசி -ஒப்பிலாத தீவினைஎனை உய்யக் கொண்டு –7-9-4-என்று
சாபராத ஜந்துக்களுக்கும் புகுரலாம் என்று தோற்றுகையாலே-சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று –

அதிகாரியைப் பெற்றாலும் -உபாயம் சித்தமானாலும் -ச்வீகாரம் இல்லாத போது ஜீவிக்கை யாகாமையாலே அந்த ச்வீகார வேஷத்தை
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -5-8-11- என்றும் –
இதனுடைய சாங்க அனுஷ்டான வேளையிலே -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் –6-10-10-என்று அருளிச் செய்தார் –
இந்த ச்வீகார சித்தி தானும் அவனாலே என்னும் இடத்தை -நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10-
அதுவும் அவனது இன்னருளே – 8-8-3–என்றும் அருளிச் செய்தார் –
இந்த ச்வீகர்த்தாவினுடைய அத்யவசாய வேஷத்தை -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –5-8-8-என்றும்
நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11–என்றும்
இவ்வுபாயத்தை பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில் -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -என்று உபாய சௌகர்யத்தை அருளிச் செய்து
இது தன்னை சபிரகாரமாக அருளிச் செய்கிற இடத்தில் –இது பக்த்யங்கம் அன்று -ஸ்வதந்திர உபாயம் -என்கைக்காக
சரணமாகும் -9-10-5–என்று தொடங்கி-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –9-10-5-என்று பிராப்தி பர்யந்தமாக
முடிய நடத்தும் -என்று அருளிச் செய்தார்
இவ்வுபாய அத்யவசாயம் பண்ணி இருக்குமவனுக்கு கால ஷேப பிரகாரம் இருக்கும் படி என் என்னில்
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் –9-4-9-என்று திருவாய்மொழி தானே கால ஷேப பிரகாரம் என்று அருளிச் செய்தார்

இப்படி உபாயத்தை சுவீகரித்து -இதுவே போது போக்காக திரியும் அதிகாரிக்கு பல வேஷம் இருக்கும் படி என் என்னில்
ஜிதேந்த்ரியத்வம் -பிரதமமாய் -கைங்கர்ய சித்தி சரமமாய் இருக்கும் இத்தனையும் உபாய பலம் என்னும் இடத்தை அருளிச் செய்தார் –
பிரதமத்திலே இழியும் போது ஜிதேந்த்ரியனாய் கொண்டு இழிய வேண்டும் உபாசகனுக்கு –
ஜிதேந்த்ரியத்வமும் உபாயபலம் இவ்வதிகாரிக்கு எங்கனே என்னில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் –2-7-7-என்றும் -ஜிதேந்த்ரியத்வம் அவனாலே என்னும் இடத்தைச் சொல்லி
ஜிதந்த்ரியன் ஆனவாறே பகவத் அனுபவத்துக்கு உபகரணமான பக்த்யாதிகள் தனக்குத் தானே உண்டாகிறதோ என்னில் –
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தையும் தானே தந்தான் என்கையாலே
பக்தியுத்பத்தியும் அவனாலே என்னும் இடம் சொல்லி நின்றது –
ஆனால் உத்பன்னையான பக்திக்கு வர்த்தகர் ஆர் என்னில் -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –5-3-4-என்று அவனே வர்த்தகன் என்னும் இடம் சொல்லி
வ்ருத்திக்கு எல்லை ஏது என்னில் -அதனில் பெரிய அவா -10-10-10-என்று தத்வ த்ரயங்களையும் விளாக்குலை கொள்ளும் படி பெருகின படியைச் சொல்லி
என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10-என்று தம் திரு வாயாலே அருளிச் செய்கையாலே
சரீர சம்பந்தத்தை அறுத்து -தேச விசேஷத்தில் கொண்டு போய் சம்ச்லேஷித்து தலைக் கட்டினான் என்றது ஆயிற்று –

ஆக –இவ்வைந்து அர்த்தமுமே திருவாய் மொழியாலே பிரதிபாதிக்கிறது -அல்லாதவை ஆநு ஷங்கிக சித்தமாய் வந்தது இத்தனை -எங்கனே என்னில்
பரதத்வம் ஸ்ரீ மன் நாராயணன் -என்றும்
அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் -என்றும்
குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -என்றும் –
அஹங்கார மமகாரங்கள் தத் விரோதி என்றும்
தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய சித்திக்கும் சர்வ ஸூ லபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும்
ஜிதேந்த்ரியம் தொடக்கமாக கைங்கர்ய பர்யந்தமாக உபாய பலம் -என்றும் -சொல்லி நின்றது

ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் –ப்ராப்துச்ச பிரத்யகாத்மன -ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி
ச வதந்தி சகலா வேதாஸ் ஹேதிஹாச புராணகா முனயச்ய மஹாத்மாநோ வேத வேதார்த்த வேதின —ஹாரித சம்ஹிதை -என்று
சகல வேத தாத்பர்யம் இவ்வர்த்த பஞ்சகம் என்னும் இடத்தை பெரிய வங்கி புரத்து நம்பி திருவாய் மொழிக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்தார் –

—————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: