திருவாய் மொழி -ஈடு மகா பிரவேசம் –இரண்டாவது –ஸ்ரீ யபதி – த்வயமே — வாக்யார்த்தம் -/மூன்றாம் ஸ்ரீ யபதி -ஸ்ரீ பரத ஆழ்வான் நிலையுடன் ஒப்பு நான்கு பிரபந்தங்களும் —

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே -2-6-8–ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற இவரை
இவ்வர்த்த பஞ்சகத்தையும் விசத தமமாக அறிய வல்லராம் படி முதல் அடியிலே நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –

நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே த்வய விவரணம் பண்ணுகிறார் –
இதில் முதலிட்டு மூன்று பத்தாலே-உத்தரார்த்தத்தை விவரிக்கிறார்
மேலிட்டு மூன்று பத்தாலே பூர்வார்த்தத்தை விவரிக்கிறார் –
மேலிட்டு மூன்று பத்தாலே உபாய உபேய யோகியான குணங்களையும்
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும்
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்தார்
மேலில் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியைச் சொல்லி தலைக் கட்டுகிறார் –

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு அருத்தியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் -திருவுடையடிகள் -1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து -தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –

இரண்டாம் பத்தால் -இந்த கைங்கர்யத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தையும் கழித்து –
ஒளிக் கொண்ட சோதி மயமாய் -2-3-10- இக் கைங்கர்யத்துக்கு தேசிகரான அடியார்கள் குழாங்களை
உடன் கூடுவது என்று கொலோ -என்று தாமும் பிரார்த்தித்து
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -2-8-4- என்று பிறருக்கும் உபதேசிக்கையாலே
இவருக்கு பரமபதத்திலே நோக்காய் இருந்தது என்று ஈஸ்வரன் பரமபதத்தைக் கொடுக்கப் புக –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்று எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-என்று உனக்கேயாய் இருக்கும் இருப்பே
எனக்கு வேண்டுவது என்று இப் புருஷார்த்தத்தை ஓட வைத்தார் –

மூன்றாம் பத்தால் -இவருக்கு கைங்கர்யத்தில் உண்டான ருசியையும் த்வரையும் கண்ட ஈஸ்வரன்
கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான திருமலையிலே நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1- என்று பாரித்து
பாரித்த படியே பாகவத சேஷத்வ பர்யந்தமாக வாசிக அடிமை செய்து தலைக் கட்டுகிறார்

நான்காம் பத்தால் -இப் புருஷார்த்தத்துக்கு உபாயம் -திரு நாரணன் தாள் -4-1-1- என்றும் –
குடி மன்னு மின் ஸ்வர்க்கம் -4-1-10-என்றும்
எல்லாம் விட்ட இறுகல் இறப்பு -4-1-10-என்றும்
ஐம்கருவி கண்ட வின்பம் தெரிய அளவில்லா சிற்றின்பம் -4-9-10- என்று தாமும் அனுசந்தித்தார்

ஐஞ்சாம் பத்தால் இந்த இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10-என்று
தன திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார் –

அவன் தந்த உபாயத்தை கடகரை முன்னிட்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
அலர்மேல் மங்கை உறை மார்பா –உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ச்வீகரித்தார் -ஆறாம் பத்தால் –

ஏழாம் பத்தால் -இப்படி சித்த உபாய ச்வீகாரம் பண்ணியிருக்கச் செய்தேயும் சடக்கென பலியாமையாலே
விஷண்ணராய்-கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் –7-1-2-என்று தொடங்கி-உபாய உபேய யோகியான
குணங்களைச் சொல்லிக் கூப்பிட -கூராழி –வெண் சங்கு ஏந்தி —வாராய் -6-9-1-என்று இவர் ஆசைப் பட்ட படியே
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி வந்து -7-3-1–இது மானஸ அனுபவ மாத்ரமாய் -சம்ச்லேஷம் கிடையாமையாலே
விச்லேஷித்த படியை -பாமரு -7-6—ஏழை -7-7–திருவாய்மொழிகளில் -அருளிச் செய்தார்

எட்டாம் பத்தால் -கீழ்ப் பிறந்த சம்ச்லேஷம் பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அல்லாமையாலே –
உமருகந்துகந்த உருவம் நின்றுருவமாகி உந்தனக்கு அன்பரானார் அவருந்தமர்ந்த செய்கை உன் மாயை -8-1-4- என்று
இப்படி ஆஸ்ரித அதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகளை உடையவன் நமக்கு தன்னைக் காட்டி மறைக்கைக்கு அடி
ஆத்மாத்மீயங்களில் ஏதேனும் நசை யுண்டாக வேணும் -என்று அதிசங்கை பண்ணி
அவற்றில் நசை அற்ற படியை -8-2–அருளிச் செய்தார்

ஒன்பதாம் பத்தில் -நீர் என்றிய அதிசங்கை பண்ணிப் படுகிறீர் -ஒராரியமாய் -பாசுரம் -இப்படி -என்று
தன்னுடைய நிருபாதிக பந்தத்தையும் காட்டி –
நான் நாராயணன் -சர்வ சக்தி யுக்தன் -உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து தலைக் கட்டுகிறோம் -என்று
அருளிச் செய்ய –சீலம் எல்லையிலான் -9-3-11-என்று அவருடைய சீல குணங்களிலே ஆழம் கால் பட்டார் –

பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டிக் கொடுத்து -10-9-
இவர் பிரார்த்தித்த படியே என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10–என்று
இவர் திருவாயாலே அருளிச் செய்யும்படி பேற்றைப் பண்ணிக் கொடுத்த படியை அருளிச் செய்கிறார்

————–

மூன்றாம் ஸ்ரீ யபதி -ஸ்ரீ பரத ஆழ்வான் நிலையுடன் ஒப்பு நான்கு பிரபந்தங்களும் –
பக்தி யோகத்தின் மேன்மையும் கூறும் பிரபந்தம் திருவாய் மொழி என்கிறார் –

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -2-6-8–என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடிமை யடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன் -2-6-8–என்று தம் திரு வாயாலே
அருளிச் செய்யலாம் படி -முதல் அடியிலேயே விசேஷ கடாஷத்தைப் பண்ணி அருளினான் –
முதல் தன்னிலே சித் ஸ்வரூபம் ஆதல் -அசித் ஸ்வரூபம் ஆதல் -ஈஸ்வர ஸ்வரூபம் ஆதல் அறியாதே இருக்கிற இவருக்கு
அசித் அம்சம் த்யாஜ்யம் என்னும் இடத்தையும்
சேதனன் உபாதேயம் என்னும் இடத்தையும்
தான் உபாதேய தமன் என்னும் இடத்தையும்
அவன் தானே காட்டிக் கொடுக்கக் கண்டு -அவனோட்டை அனுபவத்துக்கு இத்தேஹ சம்பந்தம் விரோதியாய் இருக்கையாலே
த்வத் அனுபவ விரோதியான இத்தேக சம்பந்தத்தை அறுத்து தந்து அருள வேண்டும் -என்று அர்த்தித்தார் -திரு விருத்தத்தில்
சம்சார சம்பந்தம் அற்று ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்கக் கடவ
தம்முடைய மேன்மையையும் -நீர்மையையும் -வடிவு அழகையும் பரப்பற ஏழு பாட்டாலே அனுபவிக்க லாம்படி
இங்கேயே இருக்கச் செய்தே ஒரு தசா வைசயத்தைப் பண்ணிக் காட்ட -அவ வழகை அனுபவித்தார் திரு வாசிரியத்தில் –
இப்படி அனுபவித்த விஷயத்தில் விஷய அநுரூபமான ஆசை கரை புரண்ட படியைச் சொன்னார் பெரிய திருவந்தாதியில்
ஆமத்தை அறுத்து -பசியை மிகுத்து -சோறிடுவாரைப் போல
தமக்கு ருசியைப் பிறப்பித்த படியையும்
அந்த ருசி தான் -பர பக்தி பர ஞான பரம பக்தி களாய்க் கொண்டு பக்வமான படியையும்
பின்பு பிரகிருதி சம்பந்தமும் அற்று பேற்றோடு தலைக் கட்டின படியையும் சொல்லுகிறது திருவாய் மொழியிலே –

கைங்கர்ய மநோரதம் பண்ணிக் கொண்டு வரக் கொள்ள –
கைகேயி -ராஜன் -என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரத ஆழ்வான் பட்ட பாடு போல இருக்கிறதாயிற்று-திரு விருத்தத்தில் நிலை –
அவன் திருச் சித்திர கூடத்திலே பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் என்று கேட்டு ஏபிச்ச சசிவைஸ் ஸார்த்தம் – என்கிறபடியே
என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்க மாட்டாதவர் இத்தனை பேர் ஆறாமை கண்டால் மீளாது ஒழிவரோ –
சிரஸா யாசிதோ மயா-என் அபிமதம் தன தலையாலே இரந்து செய்யக் கடவ அவர் நான் என் தலையாலே மறுப்பரோ
ப்ராதா -நான் தம் பின் பிறந்தவன் அல்லேனோ –
சிஷ்யச்ய -பின் பிறந்தவன் என்று கூறு கொள்ள இருக்கிறேனோ –
மந்திர சம்பந்தமும் தம்மோடே அன்றோ -தாச்யச்ய -சிஷ்யனாய் க்ரய விக்ரய அர்ஹன் அன்றிக்கே இருக்கிறேனோ
பிரசாதம் கர்த்தும் அர்ஹதி ஆனபின்பு -என் பக்கல் பிரசாதத்தைப் பண்ணி அருளீரோ -என்று
மநோ ரதித்துக் கொண்டு போகிற போதை தரிப்பு போல திருவாசிரியத்தில் நிலை
ஸ்ரீ நந்தி கிராமத்தில் ராமா கமன காங்ஷயா -என்கிறபடியே பதினாலு ஆண்டும் ஆசை வளர்த்துக் கொண்டு
இருந்தார் போல இருக்கிறது பெரிய திருவந்தாதியில்
மீண்டு எழுந்து அருளி –திரு அபிஷேகம் பண்ணி யருளி அவனும் ஸ்வரூப அநு ரூபமான பேறு பெற்றால் போல இருக்கிறது
-இவருக்கு திருவாய் மொழியில் பேறு –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விச்தரங்களாலே செய்தார்கள் இ றே

———-

ஈடு மஹா பிரவேசம் சம்பூர்ணம் –

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: