அன்னம் -ஹயக்ரீவ -மத்ஸ்ய –கூர்ம-அவதார பரமான அருளிச் செயல்கள் –

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா
ஆமையாய்க் கங்கையாய் ஆழ கடலாய் அவனியாய் அருவரைகளாய் நான் முகனாய் நான் மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனல் அரங்கமே

———————————————-

ஆமையாகி ஆழ கடல் துயின்ற ஆதி தேவ
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
அம்புலாவு மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு –அதன்றியும் கொம்பராவு நுண் மருங்குல்
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே
கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய் உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளல்

————————————

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் –புள்ளம் பூதங்குடி தானே
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று
இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்கு ஓர் ஆமையதாகிய ஆதி
நின்னடிமையை அருள் எனக்கு -திரு வெள்ளறை நின்றானே
முன் இவ் வேழ் உலகு உணர்வின்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே
எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே
ஏன மீனாமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி அண்டத்தப்பால் எழுந்து இனிது
விளையாடும் ஈசன் எந்தை இணையடிக் கீழ் இனிது இருப்பீர்
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை
முன் இவ் உலகு எழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை
எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்மின் –அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் –அணி அழுந்தூர் நின்ற கோவை
நீர் மலிகின்ற்றது ஓர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றது ஓர் சிங்க வுருவாகி –கண்ணபுரத்து எம்பெருமான்
ஆமையாகி அரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழி யாகி -முன் காமற்பயந்தான் கருதுமூர் -கண்ண புரம் நாம் தொழுதுமே
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனாயுருவில் ஆனாயன் அவனை அம்மா விளை வயலுள் கானார் புறவில் கண்ண புறத்து அடியேன் கண்டு கொண்டேனே
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவும் ஓர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே
மீனோடு ஆமை கேழல் அறி குரலாய் முன்னும் இராமனாய்த் தானே பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
கண்ண புரத்து அடியன் கலியன் ஒலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே
வாதை வந்தடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டுகளும் மீனுருவாகி –திருக் கண்ணன்குடியுள் நின்றானே
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
நிலையிடம் எங்குமின்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர் தலையிட மற்று எமக்கு ஓர் சரணில்லை என்ன -அரனாவான் என்னும் அருளாலே
அலை கடல் நீர் குழம்ப அகடாவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரையன்ன தன்மை யடலாமையான திருமால் நமக்கு ஓரரணே
முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடுமறியாது என்னிது வந்ததென்ன இமையோர் திசைப்ப எழில் வேதமின்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்த அது நம்மை யாளும் அரசே

———————

ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானானன் என்னில் தானாய சங்கே
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
சூதென்று களவும் சூதும் செய்யாதே வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே

————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: