திருப்பாவை — கறவைகள் பின் சென்று – வியாக்யானம் .தொகுப்பு –

 

முதல் பாட்டில் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று-சங்கரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்களை-இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது –
அதில் இப்பாட்டாலே –
நாட்டார் இசைகைக்காக -நோன்பு -என்று ஒரு வ்யாஜத்தை இட்டு புகுந்தோம் இத்தனை –எங்களுக்கு உத்தேச்யம் அது அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யமே -என்று-தங்களுக்கு உத்தேச்யமான புருஷார்த்த சித்திக்கு –தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் -பிராப்தியையும் -முன்னிட்டு –
நீயே உபாயமாக வேணும் -என்று அபேஷித்து-இதுக்கு ஷாமணம் பண்ணிக் கொண்டு-பிராப்ய பிரார்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
மேலில் பாட்டாலே -பிராப்ய பிரார்தனம் பண்ணா நின்றதாகில்–இங்குப் பண்ணுகிறது என் என்னில்-பிராபகம் பிராப்ய சாபேஷம் ஆகையாலே சொல்லுகிறார்கள் –
முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன–பிராப்ய பிராபகங்கள் இரண்டையும்–மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக
இப்பாட்டில்--பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

கறவைகள் –
அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –

பின் சென்று –
நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி —இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை –
எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் —பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –

கானம் சேர்ந்து –
தம் தாமுடைய வ்ருத்திகளாலே ஒரு நன்மைக்கு உடலாம் மனுஷ்யர் திரியும் நாட்டிலே வர்த்தித்திலோம்-
புல் உள்ள காட்டிலே வர்த்தித்தோம் இத்தனை –
இருப்பாலே நன்மையை விளைவிக்கும் தேசத்திலே வர்த்தித்திலோம்—காட்டிலே வர்த்தித்தோம் -என்றுமாம் –

சேர்ந்தோம் –
ஊரில் கால் பொருந்தாத படி இ றே காட்டில் பொருந்தின படி –

உண்போம் –
வைச்யருக்கு -கோ ரஷணம் தர்மம் ஆனால் -தத் அனுரூபமாக காட்டிலே வர்த்திக்கையும்-வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி தர்ம ஹேது ஆகிறது என்ன –
காட்டில் வர்த்தித்தாலும் -வீத ராகராய் -வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி–சரீரத்தை ஒறுத்து அவ்வருகே ஒரு பலத்துக்காக வர்த்தித்தோம் அல்லோம் –
கேவலம் சரீர போஷண பரராய் வர்த்தித்தோம் இத்தனை –
இத்தால் –
வ்ருத்தியில் குறை சொல்லிற்று-இது இறே உன்னைப் பெறுகைக்கு நாங்கள் அனுஷ்டித்த கர்ம யோகம்-என்கிறார்கள் –

கறவைகள் -இத்யாதி –
ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து–சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி —தேக போஷண ஏக பரராய்
இருந்தோம்–இது இ றே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –

அறிவொன்றும் இல்லாத –
இப்போது இல்லை யாகில் விடுங்கோள்–விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த-ஞானம் தான் உண்டோ -என்னில்
அதுவும் இல்லை –

ஒன்றும் –
பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை —தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை –
பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே —இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் –
அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்
ஆக
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை —ந தர்மோஷ்டமி ந பக்திமான்–நோன்ற நோன்பிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி —இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை
அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –
ஞானமும் ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –

ஆய்க்குலத்து –
அறிவு உண்டு என்று சங்கிக்க ஒண்ணாத குலம் —கீழ் சொன்ன உபாய ஹானி தோஷம் ஆகாதே குணமாம் படியான ஜன்மம் –
எங்கள் ஜன்மத்தைக் கண்டு வைத்து அறிவு உண்டு என்று சொல்லுகிற நீ அறிவு கேடன் -இத்தனை –
இத்தால் –ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –

அகவாயில் நிழல் -கண்ணனை இவர்கள் அனுபவிக்க ஆசை
நாட்டாருக்காக–அணி ஆய்ச்சியார் சிந்தையுள் குழகனே–குழகன் குழைஞ்சு பேசுவான்–எடுத்தார் எடுத்தார் இடைகளில் செல்வான்
இவர்கள் நெஞ்சில் கலக்குமவன்–உள்ளுவார் உள்ளத்தில் நினைவு அறிவான்–மேலுக்கு சங்கங்கள் கேட்டீர்கள்
மேல் சொல்லுமவையும்–நீங்கள் நின்ற நிலை அறிய வேண்டும்–பேறு உங்களான பின்பு நீங்களும் சிறிது எத்தனிக்க வேண்டும்
இன்று ரொக்கம் நாளை கடன்–credit card இன்று கடன் நாளை ரொக்கம்–மேலையார் செய்வனகள் அனுஷ்டானம் வந்தது நமக்கு
ரசானுபவம் பூர்வ பஷம் இது

ஸ்ரீ பாஷ்யம் -கேட்டவர்–பூர்வ பஷம் விவரமாக சொல்லி -கேட்டு —மகா பூர்வ பஷம் 25 பக்கங்கள்
இப்படி சொன்னால் அது தவறு–மகா சித்தாந்தம்–கேட்க்காமல் –
வைகுண்ட ஏகாதசி–பகல் பத்து -காளிங்க நர்த்தனம் -காட்டி -மாற்றி சொல்லி -live
எங்களைக் கண்டால் சாதனம் இருக்கா கேட்கும்படியாக உள்ளதா–கேவலம் தயா விஷயம்–நீ எங்கள் கார்யம் செய்து அருள வேண்டும்
உபாய சூன்யம்–போற்றி யாம் வந்தோம்–உன் திருக் கண்கள் விழியாவோ
பிராப்ய ருசி சொல்லி--பிராப்யம் பெற ஆகிஞ்சன்யம்–ந கிஞ்சன அஸ்தி இதி அகிஞ்சன -ஒன்றும் இல்லாமை
அவன் உபாய பாவமும் சொல்லி–நாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளு என்றார்கள்
அகவாயில் சாதனா அம்சம் உண்டு ஆராய்ந்து –சரமம் பார்க்காமல் என்ன கொண்டு வந்தோம் ஆராய்வார் போலே
அகவாயில் சாதனம் உண்டு ஆராய இழிந்தான்-இருந்தால் போ கை கழிய விட ஆராய்ந்தான்
metal detector வைத்து ஆராய்ந்தாலும் ஒன்றும் இல்லை-நின் அருளே புரிந்து இருந்தோம் என்று இருந்தோம்
எடுத்துக் கழிக்கவும் ஒன்றும் இல்லை –சிசுபாலன் -வாய் கொண்டு வைய முடியாமல் –கிருஷ்ண நாமம் -சொன்னான் சாதனம்
ரகுவர -சாதர்ச காகாசுரன் -பிரணதயித்து தயாளு சரண் இருந்ததே-சைத்யன் -சேதி பாலன் சிசுபாலன் -ஜெயந்த்திரன் சிந்து கோன்
சகுனி காந்தாரம்-லவலேசமும் இல்லை ஆளவந்தார்
அவர்களே கிட்டிய பின்பு-துஷ்டர்கள் இன்று வரை அங்கு-சர்வ தரமான்-கண்ணன் ரோஷம் உடையவன்
தடவி பார்த்து தள்ளுவான் உபாயம் ஓன்று கூட இருக்க கூடாதே
இரங்கு -அருள் -பிரதிபந்தமாக கிடப்பான–சர்வஞ்ஞன் அறிய யாதாம்ய உள்ளபடி–சித்தோ உபாயம்
கைம்முதல் இல்லை -கறவைகள் –உண்போம்–யோக்யதை இல்லை -தாழ்ந்தவர்கள் ஆய்க்குலம்
குணபூர்த்தி குறை ஒன்றும் இல்லா–உன்னோடு உறவு சம்பந்த ஞானம்–பூர்வ அபராத ஷாபனம்–இறைவா நீ தாராய் பறை
அதிகார அங்கங்கள் ஆறும்–ஆநுகூல்ய சங்கல்பம் ஆறும்--நோற்ற நோன்பு இலேன்
ந தர்ம நிஷ்டோச்மி–நிகர்ஷம்-ராவணோ நாம துர்வ்ருத-பேர் மாதரம் -கொண்டு ஒன்றும் இல்லாமல் -அழ வைக்கிறவன் உண்மையாக ராவணன்
நியாம்யன் திருத்த ஒண்ணாத படி தண்ணியன்-தூஷிதமான உதரம் -அந்த வயிற்றில் பிறந்து-தீய கந்தம் -வாசனை
துஷ்ட தனம் மிக்கு அவன் என்னைக் கொண்டு நடத்த அநீதிகள்
விவிதம் பீஷயதி விபீஷணன் லோகம் பயப்படும்படி–தூர்த்த விஷயத்தில் பிரகாசம்–எப்பாவம் பல இவையே
நிந்தித்த கர்ம பூயச்திதை ஆளவந்தார்–லோகத்தில் நிந்தித்த கர்மங்கள் என்னால் செய்யப்படாதது ஒன்றுமே இல்லையே
குணம் பூர்த்தி–நம்பி–மாயனே எங்கள்-உன் அடியேன் புகல் ஒன்றும் இல்லா அடியேன்-சீறி அருளாதே
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-அபசார –நானாவித -அசெஷதாக ஷமஸ்வ பொறுத்துக் கொள்
சன்மம் களையாய்
இறைவா நீ தாராய்
உன் அடி சேர் வண்ணம் அருளாய் அபேஷித்து–பிராப்ய சித்திக்கு நீயே
கார்ய நிர்ணய வேளை ஆகையாலும்–சர்வேஸ்வரன் சந்நிதி ஆகையாலும்
பலம் கிடைக்க உண்மை சொல்ல வேண்டியதாலும்–பிஷக் முன்பு வ்யாதியச்தன் சொல்லுவது போலே –
வைத்தியன் வக்கீல் ஆடிட்டர் இடம் உண்மை சொல்ல வேண்டும்
அபத்யங்கள் சொல்லி
வியாதி நிமித்தம் பரிகாரமும் -பிஷக் -மருந்து -பத்தியம் -புஜிக்கும் அமிர்தம் ஆறும் இவனே -இங்கே
பதித்து இல்லாமல்
வேட்கை நோய் -வியாதி சம்சாரம் பிரிந்த நிதானம் ஆதி காரணம் நோய் நாடி நோய் முதல் நாடி -இவனே
மாலே மணி வண்ணா மருத்துவனாய் நின்ற–ஆயர் கொழுந்து மருந்தாய்–பேஷஷும் தானே
எங்கள் அமுது கிருஷ்ணன்--மருந்தும் பொருளும் அமுதமும் தானே–வியாதி ரஹீதர் அமிர்தம்
உபாசனம் மருந்து போலே நினைக்க–பிரபன்னர் அமிர்தம்
நோய்கள் அறுக்கும் மருந்து–அங்கு உள்ளார் போக மகிழ்ச்சிக்கு மருந்தே -ஆனந்தம் விருத்தி பண்ணும் மருந்து
பசிக்கு மருந்து–இரண்டு வகை-பசியே இல்லை -உண்டாக்க-எத்தை உண்டாலும் பசி போக வில்லை-
அதுக்கும் பசிக்கு மருந்து அடக்க-பிரவ்ருத்தி-அடக்கவும் கிளப்பவும் மருந்து-நோய் இல்லாதான் ஒருவன் தான் தான் மருந்து என்று அறியான் –
தேனில் இனிய பிரானே அருமருந்து ஆவது அரியாய் –பிரபலமான இருப்பதொரு ஔஷதம்-உன்னால் அல்லாது செல்லாதது
சிறு வார்த்தை பொறுத்து அருள-உபசார புத்தியால் செய்யும் அபசாரம் சமஸ்த ஷமை புருஷோத்தமா-தேவபெருமாள் -ஆலவட்டம் செய்ய-உபசாரம் செய்யாமல் வீசி -விளக்கு அணைய-மாலைகள் விழ-அபத்திய சஹ ஔஷதம்-அபத்தியம் எல்லாம் போக்கடிக்கும் மருந்து இவனே –
அறியாத பிள்ளைகளோம்
இப்போதே நீராட்டு-உடம்பு சரி இல்லை குளிக்க முடியாதே-மருந்து சாப்பிடு நாளை குளிக்கலாம் சொல்வார் நல்ல மருத்துவர்
ஆசுகார்யா ஔஷதம் சீக்கிரம் வேளை-அப்பொழுதே குளித்து உண்ணப் பண்ணும்-இப்பொழுதே எம்மை நீராட்டு
கண் அழிவு அற்ற பிராபகம் நிச்சயம்-பிராபக ச்வீகாரம் -வேறு ஒன்றையும் பற்றாமல் -நினைவு கூட இல்லாமல் மகா விசுவாச பூர்வகமாக

ஆனால் விடும் அத்தனையோ -என்ன –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் –
பேற்றுக்கு உடலான புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ வென்ன —அங்கன் சொல்லலாமோ எங்களை –
புண்யத்துக்கு சோறிட்டு வளர்கிறவர்கள் அன்றோ —சாஷாத் தர்மமான உன்னை -ராமோ தர்ம விக்ரவான் –
பிறவி பெறும் தனை –
நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்
அவர்களைப் போலேயோ நாங்கள்–ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே–எங்களோடு சஜாதீயனாய் வந்து
அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –
புண்ணியம் யாம் உடையோம் —புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –
நாமுடையோம்
சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில்–இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான
ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் —நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ –

அறிவொன்றும் இல்லை–புண்ணியம் யாம் உடையோம்–என்பதாய்க் கொண்டு வ்யாஹத பாஷணம் பண்ணா நின்றி கோள்-என்ன
கண்டிலையோ —இது தானே அன்றே அறிவு கேடு–ஆனால் விடும் அத்தனையோ -என்ன
கறைவைகள் இத்யாதி –
இவ்வளவும் தங்கள் உடைய–ஆகிஞ்சன்யத்தையும்–அநந்ய கதித்வத்தையும்–உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும்
சொன்னார்கள் ஆய்த்து –
ஒன்றும் இல்லை–அறிவு இல்லை –அறிவு ஓன்று இல்லை–அறிவு ஒன்றும் இல்லை-என்கிறார்கள் –

அதீத வேத சாங்க -அத்யயனம் பண்ணி -அடுத்து–அர்த்த ஞானம் பிறந்து —விகித கர்மங்கள் அனுஷ்டித்து
பாப ஷயம் பிறந்து–ஜிதேந்த்ரியனாய் இதர விஷய பிரத்யாகாராம் -மனச் அடக்கி
ஆத்மாவை நினைக்கும்படி–ஆத்மயோகம் கைவந்து–அந்தர்யாமி அளவும் சென்று–ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனுசந்தித்து
சரவணம் அர்ச்சனம் த்யானம் பண்ணி–பிறந்த ஸூ க்ருதத்தாலே -உன்னை பெரும் அந்த யோகம்
எங்களை பார்த்தால் பசுக்கள் வசிஷ்டர் பராசாராதிகள்–எங்கள் இளிம்பு கண்டு பசுக்கள் சிரிக்கும்–அவர்கள் வழி காட்ட பின்னே திரிவோம்
காடுகள் தண்டகாரண்யம் நைமிசாரண்யம் பிருந்தாவனம் உண்டே —விசேஷணம் இல்லாமல் கானம்
வேடர் காடு–அடி இடுவார் காலை பிடுங்கி எடுக்கும் முள் உள்ள இடம்–ரிஷிகள் காட்டுக்கு ஊன் வாட உண்ணாது -தாம் வாட தவ செய்கை
நாங்கள் கானம் சேர்ந்து உண்போம்–அவர்கள் உண்ணுவதை விட்டார்கள்
தர்மம் ஏறிடுவாயே–உண்போம் -அருகில் இருந்தார் கையில் கொடுக்காமல்
கானம் சேர்ந்து உண்போம்–யஞ்ஞம் நிவேதனம் ஆனது போலே–பார்க்கும் முன்பே உண்போம்
பின் சென்று உண்போம்--கிழக்கு பார்க்க மாட்டோம்–உண்போம்
பசுக்கள் அசை இடாது இருக்கிலும் உண்போம்–ஜாதி நிமித்த ஆஸ்ரித தோஷ துஷ்டம்
நாம் காலி பின்னே–காடு வாழ் சாதி ஆகப் பெற்றோம்–வேர்த்து -பசித்து–ஆடி அமுது செய் குளியாதே–மந்தரம் பூஜை விலக்கி கோவர்த்தனம்
உங்களுக்கு ஏச்சு கொலோ
விதுரர் -பூர்வ ஜன்மம் மாண்டவ்யர் ரிஷி-
ஞானம் பிரசங்கத்தில் -பேச்சே இல்லை
அறிவு இல்லை–அறிவு ஓன்று இல்லை–அறிவு ஒன்றும் இல்லை–உன் பக்கலில் உண்டான -பக்தி ரூபாபன்ன ஞானம்
சமதமாதி முமுஷு–அறிவு இல்லை -கர்ம யோகம் இல்லை–அறிவு ஓன்று இல்லை -ஞான யோகம் அறிவு இல்லை
தனித்து உபாயமாக இருக்கும்–அறிவு இல்லை என்பதும் அறிவின் கார்யம்–இதுவே சாதனம்–ஒன்றிலும் அறிவு இல்லை என்கிறார்கள்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி–உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ
சர்வ நிரபேஷன் -என்கை
எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ–உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –
எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப்பள்ளத்துக்கு அம்மேடு நிரப்பப் போராதோ —இப்பாதளத்துக்கு அப்பர்வதம் நேர் என்கை –
எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து
இத்தால்
உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று -சர்வ நிரபேஷன் அன்றோ நீ என்று கருத்து –

இடைக்குலத்தில் பிறக்கை புண்ணியம்–உபாயமும் சுக்ருதமும் நீயே–நீக்கி முகக்கவோ நீ பிறந்தது
சாத்விகர் கொல்ல–ஆய்க்குலம் அத்தனையும் உஜ்ஜீவிக்க–வீடுய்ய தோன்றி –
ததி பாண்டன் -தயிர் -சட்டி பானை பதினெட்டு நாடன் பெரும் கூட்டம்–உன் தன்னை–சூரிகள் -குற்றேவல் செய்யும்
எப்படிப்பட்ட உன்னை -உன்னை சொல்லாமல் உன் தன்னை —எங்கள் பின்னால் வந்தாய்
தடம் கடல் சேர்ந்த உன்னை கானம் சேர்ந்த குலத்தில் -ஆய்க்குலம்
அனஸ்னன் சாப்பிடாத -புஜிக்காத உன்னை – உண்ணும் குலத்தில்பிறக்கப் பெற்றோம்
திவ்ய ஞானம் உள்ளார் பெரும் உன்னை -அறிவு ஒன்றும் இல்லாத–இமையோர் தம் குல முதல் ஆயர் தம் குலம்
வெம் கதிரோன் குலத்தில் காட்டில் பகல் விளக்கு–ஆயர் குலத்துக்கு அணி விளக்கு விசேஷம்
பிறவி–ஆவிர்பவித்த யாதவ குலம்–நந்தன் பெற்ற ஆனாயன்–புண்யானாம் தக்க புண்யம் வேண்டும் இ றே
பறை தரும் புண்ணியம் இ றே தன்னை–பிறக்கைக்கு ஹேது தருவதற்கும் ஹேது
வேண்டி வந்து பிறந்ததும் தேவர் இரக்க —தேவர்கள் இரக்க வந்து பிறந்தான் -வேண்டி வேண்டிய படியால்
வேண்டி இரக்க -இரண்டு சப்தம்–தானாக வேண்டி ஆசைப்பட்டு —பிரார்த்தித்து வியாஜ்யம் -வந்து
இச்சா க்ருஹீதா -வேண்டி —கிருபையே பிறக்கைக்கும் அருளுவதருக்கும்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ யசோதைக்கு–யாமுடையோம்–பெற்று உடையாள் ஆனால் அவள்
இருந்த ஊரில் இருந்த மானிடர்கள் எத்தவம் செய்தார்களோ–உங்கள் தவப்பலமாக பெற்றீர்கள்
எங்கள் புண்ணியம் ஒன்றாய் ஏக வசனம்–நாட்டில் புண்ணியங்கள் பல பிரதிபந்தகங்கள்–எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்

கோவிந்தா –
நீங்கள் என்னைப் பூர்ணனாக பேசின படியால்–வேண்டி இருந்தோமாகில் செய்தல் -இல்லையாகில் தவிர்த்தல் அன்றோ -என்ன
நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –
எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து–எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ-நாங்கள் அபேஷிக்கிறது –
இத்தால்
சௌலப்யம் சொல்லுகிறது

குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று–ஓன்று உண்டாகில் அன்றோ-என் பூர்த்தியும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவது என்ன
அதுவோ –
பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது–பூரணன்–பிரபல கர்மத்தால் தகிக்க முடியாது சர்வேஸ்வரன் சர்வ சக்தன்
நிரபேஷனன் பூரணன் -பிரபல பாபங்களை போக்குவேன்–சர்வ தரமான் -வார்த்தை பொய்யாகாதே
ராஜாக்கள் போக மேடும் பள்ளமும் சமமாக்கி -தேர் குலுங்காமல்–ராஜாதி ராஜன் சர்வேச்வரன் –
கடலை தூர்த்து வானர சேனையை நடை இட்டால் போலே–நீ எங்கள் அனுக்ரகம் செய்து
குறைவில்லாமை எங்கள் மேல் இட்டு–அறிவு ஒன்றும் இல்லாத -குறை ஒன்றும் இல்லாத சேர்த்து
பாழும் தாறு நிரப்ப பௌஷ்கல்யம் பூர்த்தி உண்டே–குறைவு இல்லாமை அறிவில்லாமையை அபேஷித்து
நாரணனே நீ நான் இன்றி இலேன்–பயன் இருவருக்குமே -அமுதனார்
நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்
அமுதனார் -நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் –
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிரை ஒன்றும் இலேன்–உன்னுடைய அருளுக்கும் -என்னை விட தாழ்ந்தவன் இல்லையே
பயன் இருவருக்கும் ஆனபின்பு--மா முனிகள் ஆர்த்தி பிரபந்தம் –எனைப் போல் பிழை செய்வார் உண்டோ
உனைப் போலே பொறுப்பார் உண்டோ–மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ —ஒன்றும் இல்லை -ஸ்வரூப
கோவிந்தா -உனக்கு ஞானம் இருந்தால் சூரிகள் நடுவில் இராயோ–அவனுடைய அஞ்ஞானமே நமக்கு பற்றாசு –
அவன் தன்னை பார்த்தால் பேறு கிட்டாது–நாம் நம்ம பார்த்தால் கிட்ட முடியாதே–இருவரும் மாற்றி பார்க்க வேண்டும்
ஆஸ்ரித தோஷங்களை அறியாமை -உண்டே –அவிஞ்ஞாதா -தெரியாதவன் இதனால்–உண்டு நமக்கு -என்று உள்ளம் தளரேல்
தொண்டர் செய்யும் பல்லாயிரம் பிழைகள் பார்த்திருந்தும்–காணும் கண் இல்லாதவன்
காண் கண் -கண்டும் அவற்றைக் கொள்ளாமல் கண்டுக்காதே இருப்பான் பொருள் படுத்தாமல்
பராதீனம் -யதா தோஷம் -இதி தாதா பாதா -பட்டர் -தனி ஸ்லோஹம் -கூரத் ஆழ்வான் —சர்வஞ்ஞன் குறை -பக்தர் தோஷம்
ச்வதந்த்ரன் சொல்கிறது வேதாந்தம் பராதீனன் தான் வேதம் சொன்னது தப்பு –
அயர்வறும் அமரர்கள் அதிபதி உன்னை நீ அறிந்தே ஆகில் பசுக்கள் பின்னே போவாயோ
அவன் தன்னை அறிந்தாலும்–நம்மை அறிந்தாலும்–பேற்றுக்கு விரகு இல்லை–ச்வாதந்த்ரம் மறந்து நம் அபராதம் மறந்தால் தான் பேறு கிட்டும்
என்னை பார்த்தால் நரகம் போராது -நானாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன்–அவனை பார்த்தால் பரமபதம் போராது –

கோவிந்தா சப்த அர்த்தம்–குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா–பரத்வம் இல்லை–தாழ நின்ற இடத்தில்
சாம்ய பன்னருக்கும் -நித்யர் -அவர்களில் சிறிய முக்தர் -ஒத்தர் முக்தப்ராயர் —குறை இருந்து -இருந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
பொருந்திக் கிடக்கிறவன்–குறையால் இழக்க வேண்டி -உன்னுடைய பூர்த்தியில் குறை உண்டாகில் அன்றோ
கன்றுகள் மேய்த்து காலிப்பின்னே மேய்த்து–வாத்சல்யதிகள் -கோவர்த்தன விருத்தாந்தம் – சக்தி உணர்ந்த ஞானம் –
ஞான சக்திகள் குறை இல்லாமல்–கோவிந்தா -மாம் ஏகம்—நிறைவாளன் சாதனம் எதிர்பார்க்கலாமா –
பிரமேய சாரம்–உள்ளபடி உணர்வில் -உண்டு நமக்கு உள்ள விரகு இல்லை –
ஓன்று என்று–கொள்ளக் குறை இல்லாதவருக்கு –என்ன கூறுவது –
இல்லை இருவருக்கும் -என்று இறையை வென்று இருப்பார் இல்லை —இல்லை குறை-உனக்கு-இல்லை -உடைமை -எங்களுக்கு
மறை சொல்லும் -கூறினார் இல்லா மறை –
வீடு வாங்க ஆசை -ஒருவர் -விற்க ஒருவர் -ஆசை —பணம் சேர்த்து -வீடு இல்லை குறை இவருக்கு–வீடு இருக்கு பணம் இல்லை அவருக்கு
குறையை நிரப்ப —எதிர்பார்த்தால் குறை -நிரபேஷன் –தகப்பனார் ஒன்றும் எதிர்பார்க்காமல் சம்பந்தம் -உன் தன்னோடு உறவு
பிரதி எதிர்பார்க்காத பூரணன் பிராப்தி–மாம் ஏகம் -என்றவன் பாசுரம்–கழல் சலங்கை உபாய வேஷம் கோவிந்தா
கையும் உழவு கோலும் -சாரத்திய வேஷம் மாம்–உனக்கு கையாளாய்–கடை ஆவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறு
கற்று தூசி கோமள கேச வேஷம்–உபாய வேஷம்,சௌலப்ய கோவிந்தா–உங்கள் பேற்றுக்கு உடலாக நிரபேஷன்
குறைவாளர் ஒருவருக்கு நிறைவாளர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன
ஸ்வதந்த்ரம்
நீங்கள் சொன்னது -கொடுக்க -இழவுக்கு உடலோம்–நாம் அல்லோம் கை விட உடல்–நிரபேஷன் நிரந்குச ச்வதந்த்ரன்
முடிந்தால் முடியாது சொல்லிப் பார்–பூர்த்தி வேண்டுமானால் குறைத்து கொள்ளலாம்–பந்துத்வம்
குடல் துவக்கு உண்டாகில் ச்வாதந்த்ரம் கட்ட முடியுமோ–குட நீரோடு போகுமே உறவு–கட ஸ்ரார்த்தம் -தீட்டு வராதே

உறவேல் ஒழிக்க ஒழியாது–ஏல் -நல நாளால் ஆல் சப்தம் -உறவோ என்றால் —உறவை ஒழிக்க ஒழியாதே–பிரகாரத்தை ஒழிய பிரகாரி உண்டோ
ஸ்திதி உண்டோ -பிரகாரம் நம் போல்வார் -பிரகாரி -நன்றாக நான் -நான் இல்லை என்றால் நீ இல்லையே-நாரம் -இருந்தால் நாராயணன்
நடுவில் வந்த–இடையனாய் வந்த உறவை சொன்னோம்–ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் சொல்ல வில்லை
இடைக்குலத்தில் நாங்கள் –இடையிலே வந்த உறவு–இடைத்தனத்தில்–அறிவு இல்லாதவர் மறக்கலாம்
மறந்தேன் உன்னை முன்னம்–அறிவில்லாதார் இட்டீடு தொழில் கை போர்த்து
நீ மைத்துனன் நம்பி–நாங்கள் மாமிமார் மக்கள்–மைத்துனன் —சிசுபாலனும் மைத்துனன் தான்–அத்தை பிள்ளை
கோவிந்தத்வம் பழிப்பு சொன்னவன்–கோவிந்த அபிஷேகம் செய்த அன்று–காலில் குனிந்த இந்த்ரன் -அவனுக்கு பல கார்யம் செய்தாய்
தாழ்ந்த தஞ்சனயர்காகி கோவிந்தா–பால பிராயத்தே–குன்று எடுத்த–தூதத்வ சாரதி செய்த–யுக்தார்தமாக
அர்ஜுனன் -பூபாரம் நிரசனம் -அப்புறம் விட்டு–இங்கு ஒழிக்க ஒண்ணாதே–நாங்கள் பரதந்த்ரர்கள் ஸ்திரீகள்

உன் தன்னோடு உறவு –
நீ எங்களுக்கு உறவு அன்றோ –எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -என்ன

அது கொண்டோ
ஆனால் ஒரு குட நீரோடு போகிறது -என்ன —உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –
உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது —எங்களாலும் விட ஒண்ணாது –
இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது -இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது –
சம்பந்த ஞான ரூபம் ஆகையாலே இதுக்கு விஸ்மிருதி இங்கே வரக் கூடாதோ என்ன
இப்படி சொல்லுகிறது என்ன உரப்பு -என்ன –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -என்ற-பிரமாணத்தைக் கொண்டு -என்ன –
அவர்கள் உங்களைப் பெற்றவர்கள் அன்றோ என்ன –ஆனால் நீ எங்கள் கையிலே தந்த மூலப் பிரமாணத்தில் முதல் எழுத்தைப்
பார்த்துக் கொள்ளாய் -என்கிறார்கள் –
அதாவது
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி —நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே
நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்-
தயா பூர்ணனான உன்னோடு–தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –

அறியாத -இத்யாதி
கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –
அறியாத
அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –
பிள்ளைகள்
பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –
அன்பு –
பிரேமத்தாலே வந்த அஞ்ஞானம் –
இந்த ஹேதுக்களால் வந்த அறியாத் தனம் பொறுக்க வேணும் –
ப்ரேமாந்தரைக் குற்றம் கொள்ளுகையாவது —ஒரு படுக்கையிலே இருந்து -கால் தாக்கிற்று கை தாக்கிற்று -என்கை இ றே-
அறியாத -ஞானம் இல்லை–பிள்ளைகள் -பருவம்–அன்பினால் சிநேகத்தால்–தெரியாமல் -அஞ்ஞர் செய்தது பொறுக்க வேண்டும்
பாலர் செய்ததை–ச்நேகிகள் செய்ததை பொறுக்க வேண்டும்–பிரேமத்தால் வந்த இருட்சியால்–எங்களால் அறிவு கேட்டோம்
பிறவியாலே அறிவு–யாதுவும் ஒன்றும் இல்லாத பிள்ளைகள்–உன்னாலே அறிவு கேட்டோம்–அழகு மயக்க
அறிவு இழந்தனர் ஆய்ப்பாடி ஆயர் இடையரை பண்ணினது–ஒத்த பருவத்தினர்–பித்தர் சொல்லிற்றும்–பேதையர் சொல்லிற்றும்
பத்தர் சொல்லிற்றும்–பன்னப் பெருவரோ பிரசித்தம் -கம்பர்–குற்றம் சொல்வது ஒரு படுக்கையில் இருந்து கை பட்டது
உன் தன்னை–கோவிந்த பட்டாபிஷேகம்–அபராதம் மன்னித்தாய்–அனவதானம் அன்பு விளைக்கைக்கு நிமித்தம் ஆனதே
நாமம் உடை நாரண நம்பி–அந்தபுரத்தில் நாட்டுக்கு கடவன்–காதில் கடிப்பிட்டு கலிங்கம் எதுக்கு இது என்
பிரணயி அல்லன்–உபய விபூதிக்கும் -முடி சூட்டிய--பசுக்களை மேய்த்தான் முடி சூட்டி கோவிந்தன் -விசேஷம்
நாராயணன் அனுவாகம்–கோவிந்தா நெஞ்சு உடையார்க்கு சொல்வதை–கோவிந்த தாமோதர மாதவேதி
சஹாச்ர த்வாதச அஷரங்கள் எட்டு எழுத்து சிறுக்க–மூன்று எழுத்து கண்டதும்-பராங்கதி கண்டு கொண்டான்-முழுகி மூக்கை புதைப்பாருக்கு

அழைததோம் பல தடவை சொல்லி–பேய் பெண்ணே -அழைத்தோம் இவற்றையும் சீறி அருளாதே
சர்வமும் சமஸ்த–த்ரிவித அபசாரம் உபலஷணம்–மனம் மொழி வாய் பகவத் பாகவத அசஹ்யா அபாசரம்
புகுதருவான் நின்றவற்றில் -புத்தி பூர்வகமாக–உபசார புத்தி செய்ததும் அபசாரம்–சுலபனை பரன் சொல்லி அபசாரம்
தண்ணி யரை விநியோகம் கொள்ளும் -வெந்நீர்–பேற்றுக்கு பிரயோஜனம்–ஒன்றும் இல்லாமை இருக்க–சீறி அருளாதே
செய்தது எல்லாம் செய்து சீறி அருளாதே சொல்லும் உறவு உண்டே நமக்கு–இத்தலையில் ஆராயில் சீர வேண்டியது தான்
நப்பின்னை பிராட்டி முன்னிட்டவர்கள் பூர்வ விருத்தம் ஆராய கூடாதே
விஸ்வரூபம் -அர்ஜுனன் -அசத்காரம் பொறுத்து அருள வேண்டும்–பெரியவனை கண்ணா இடையா -மன்னித்து விடு சொன்னான்
கை கால் போட்டு கூட படுத்து தோழன் சாரதி சொன்னேன் பிராயச்சித்தம்–கோபிகள் சௌலப்யம் கண்டவாறே பரதவ புத்திக்கு
பக்தியில் தலை நின்றாலும்–கிட்டினவர் சொல்லும் வார்த்தை இது
பல போக்தாக்கள் நீங்கள்–நம்மாலே பேறு–உங்கள் தலையில் ஓன்று வேண்டாவோ–நாட்டாருக்கு சொல்ல ஆலம்பனம் வேண்டாவோ
சர்வ முக்தி பிரசங்கம்

உன் தன்னை -இத்யாதி
கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு-முதல் திருநாமம்-சொல்லுகை குற்றம் இ றே
நாராயணன் -என்றார்கள் கீழ் —நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்தே மேன்மை சொல்லுகை குற்றம் இ றே –

இறைவா –
தன கை கால் தப்புச் செய்தது என்று
பொடிய -விரகு -உண்டோ —உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –

இறைவா –
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –
ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே —நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –

நீ தாராய் பறை –
விலக்காமை பார்த்து இருக்கும் நீ–எங்கள் அபேஷிதம் செய்யாய் –

அறியாமையாலும்–பால்யத்தாலும்–பிரேமத்தாலும்–உன்னை சிறு பேராலே அழைத்தோமே யாகிலும்
சர்வஞ்ஞானாய்–சர்வ ஸ்மாத் பரனாய்–பிரேம பரவசனான
நீ
சீறி அருளாது ஒழிய வேணும் -இறைவா—வானோர் இறையை நினைத்தன்று —ஆய்க்குலமாக வந்து தோன்றின நம் இறை –

இறைவா–நீ தர விலக்குவார் இல்லை–நிரந்குச ச்வாதந்த்ரன்–உன் ஸ்வரூபம் உணராய்
அழிக்க ஒண்ணாத சேஷித்வம்–அறியாமல் சேஷத்வம் அழியலாம்–பேற்றுக்கு அத்வேஷம் ஒன்றே வேண்டுவது
பேற்றுக்கு கனத்துக்கு கீழ் சொன்னவை எல்லாம் அத்வேஷம் தானே–ஆய்க்குலமாய் வந்த நம் இறை
வானோர் இறை சொல்ல வில்லை–இறைவா–கோவிந்தா–உன்னை பார்த்தாலும்–எங்களை பார்த்தாலும் கை விட முடியாதே
தேவர் எல்லையில் வர்த்திக்கும் எங்களுக்கு குறை இல்லையே--குடல் துவக்கால்–ராஜா பிரஜை ரஷிப்பது

ஈஸ்வரத்தால்–வஸ்து வேண்டுமானால் அருளுவாய்–ரஷிகிறது–சீராமைக்கு ‘–செய்த குற்றம் நற்றமாக கொள்
சாது பரித்ராண்ம்–கோபி ஜனம்–ஆராய்ந்து கொடு என்றான் அருகில் உள்ளாரை பிராட்டி இடம் சொல்ல
நீ தாராய்–அவள் தருவது தந்தாள்
நீ தாராய்
புருஷகாரம் செய்து அருளினாள்–உபாய நிஷ்டை அவள் கிருபை
உபாயமாக வரிக்கை–அஸ்துதே அவள் செய்தால்–மோஷயிஷ்யாமி நீ சொல்ல வேண்டாவோ
சுலபன்–சுவாமி நீ தாராய்–ருசியை சாதனம் ஆக்காமல்–ருசி பொது எல்லா பலன்களுக்கும்
சைதன்ய கார்யம்–பதறி துடித்தோம்–உபாயம் இல்லை–சித்த ஸ்வரூபன் உன்னையே பார்த்து
எங்களை பார்க்கிலும் தீன தசை–எங்களையும் உன்னையும் உறவு
உன்னை பாராமல் எங்களை பார்த்தாயகில் இழக்கிறோம்–எங்களுக்கு விருத்த ஞான ஜன்மங்கள் வந்த
குலையாத சம்பந்தம் உண்டு என்றோம்–எங்கள் தப்புக்கு அனுபவித்தோம்
இனி உன்னை இழவாமல் உன் கார்யம் செய்யப் பாராய்–விதி நிர்மிதம் கிருபா ஆத்மா
தத் -தோஷ பூயிஷ்டன் உன்னை விட்டால் நாதன் இல்லை–இப்படி பட்ட பாவி இல்லை
பரித்யாஜ்ய விகிதங்களில் அன்வயம் இல்லை–தர்மங்களே இல்லையே–கர்த்ருத்வ மமதா புத்தி அன்வயமே இல்லை
மாம் சரணம் விரஜ -நீ வந்து பற்றி–ச்வீகாரம் விகிதுபாயம் எதிர் பார்க்காமல் கை புகுந்தாய்
ஞான சக்தி பூர்ணம்–பிராப்தியும் உண்டு–சமஸ்த விரோதிகளையும் போக்குவேன்
மாசுச சொல்லி–ஆகிஞ்சன்யம் அயோக்யதை உபாய பூர்த்தி பிராப்தி சொல்லி–கிருஷ்ணனை பற்றி -பேறு –

ராமோ விக்ராகவான் தர்ம மாரீசன் வார்த்தை–கிருஷ்ணன் தர்மம் சனாதனம்–செய்த வேள்வியர் வையத்தேவராய் -ஸ்ரீ வர மங்கல நகர் –
விதுகிருஷ்ணோ-வித்து தாது அடைய அறிய இரண்டும் –
குறை இல்லாத–குறை ஓன்று இல்லாத–குறை ஒன்றும் இல்லாத–மூன்றும் -அறிந்து -மூன்று நிறைவுகளும் அறிந்து கொள்ள வேண்டும் –
புருஷகார பலத்தால் ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் கல்யாண குணங்கள்
நாராயணா மூன்று தடவை ரகஸ்ய த்ரயம்
பூர்வ கண்டம் நாராயண அர்த்தம் —வாத்சல்யம் சௌசீல்யம் ஞான சக்திகள் -வத்சம் கன்று குட்டி
அன்று அதனை ஈன்று உகந்த ஆ –
தோஷங்களை காணா கண் இட்டு இருப்பது மேல் -அதர்சனம் தோ ஷங்களையே குணங்களாக கொண்டு
தோஷம் இருந்தவனை அங்கீ கரி த்தால் தான் ஏற்றம்–திருவடி சுக்ரீவன் வார்த்தை -இரண்டிலும் பாதி கொண்ட பெருமாள் –
ஒன்பது சம்பந்தம் -உறவு ஒழிக்க ஒழியாதே –பிதா ரஷக சேஷி பார்த்தா ரமாபதி ஸ்வாமி போக்தா –
குடிநீர் வழிக்கக் காணாதே -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாதே -சமஸ்த சமஷ்வ -சரணாகதி கத்யம் -கூரத் ஆழ்வான் -பட்டோலை கொண்டார் —அர்ஜுனன் பரத்வம் -சாஷாத்கரித்து ஷாந்தி
உன் தன்னை சிறு பேர் அழைத்து -சீறி அருளாதே–நாராயணன் சொல்லி உன் மனத்தை புண் படுத்தி –
ஆயர் புத்தரன் அல்லன் அரும் தெய்வம்–அஹம் வோ பாந்தவ ஜாத-தேவத்த்வமும் நிந்தையானவனுக்கு-
மேல் பாட்டில் கோவிந்தா என்போம்–சீற்றமே அருள்
ஆசார்யர் நிக்ரகதோடு அனுக்ரகதோடு இரண்டும் உபாதேயம் இரண்டும் கிருபை–பறை தாராய் -தொடர்ந்து வரும் பல்லவி –

நின்னையே மகனாய் பெற பெறுவேன் எழு பிறப்பும் நெடும் தோள் வேந்தே -தசரதன்–ஆபாச தர்மம் பற்றி இழந்தவன்
சாஷாத் தர்மத்தை குடப்பால் இட்டு வளர்க்கப் பெற்றோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் பட்டர் -சேர்த்து பரிபூர்ணன் -ஸ்லோகம் –

-பறை தரு மாலை -சாற்றி அருளுகிறாள்
இறைவா நீ தாராய் பறை–நாராயணனே நமக்கே பறை தருவான்–கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பறை கொண்டு
நோற்று —நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -கும்பகர்ண நிஹந்தாவான சக்கரவர்த்தி திருமகன் –
–மாலே –சாலப் பெரும் பறையே -வாத்திய விசேஷம்-அன்று இவ்வுலகம் அளந்தாய் -பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்
இன்று இப்பறை கொள்வான் வந்தோம் –குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -இதுவே அபேஷிதம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு-வள்ளல் மால் இரும் சோலை மணாளர் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –
இற்றைப் பறை கொள்வான் அன்று -இன்று மட்டும் இல்லை யாவதாத்மபாவி கைங்கர்யமே அபேஷிதம்
இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்
இரங்கு -அருள் -அபேஷித்தோம்-பேற்றுக்கு கைம்முதல் -நல கருமம் ஒன்றும் இல்லை-மேலும் செய்ய யோக்யதையும் இல்லை
தங்கள் உடைய அபகர்ஷத்தை அனுசந்தித்து –மூல ஸூ க்ருதமான ஈஸ்வரன் உடைய குண பூர்த்தியையும் அனுசந்தித்து
சம்பந்தத்தை உணர்ந்து-பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணி-உபாய பூதனான ஈஸ்வரன் பக்கல் உபேயத்தை அபேஷிக்கை
இந்த ஆறும் அதிகார அங்கங்கள் -இவை கூறப் படுகின்றன
எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு-கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்-அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –
பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்-சொல் திரியினும் பொருள் திரியா வினைத்தொகை–நன்னூல் ஸூ த்தரம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: