திருப்பாவை — மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் – வியாக்யானம் .தொகுப்பு –

ஸ அபராதரைப் போலே சாந்த்வனம்-நல்ல வார்த்தை – பண்ணுமவன் ஆகையாலே–பெண்களை சாந்த்வனம்பண்ணி அருளினான் –
அவ்வளவிலே நாங்கள் வந்த கார்யத்தை கேட்டு அருள வேணும்-என்கிறார்கள் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை –தம் குற்றம் என்று நினைத்து -மதுர பாஷணங்களாலே-சந்தோஷிப்பித்தாப் போலே-
இப்பாட்டில்
பெண்காள் -என் செய்தி கோள் -என் பட்டி கோள்–பெண்களை எழுப்புவது–கோயில் காப்பான் முதலானாரை எழுப்புவது-நப்பின்னை பிராட்டியை எழுப்புவது–நம்மை எழுப்புவதாக–பஹு ஸ்ரமப் பட்டி கோளே-உங்களுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன —பேரோலக்கமாய்–சிம்ஹாசனத்தில் இருந்து–கேட்டருள வேணும் –
என்கிறார்கள் –

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

மாரி மலை முழஞ்சில்-
வர்ஷா காலம் ராஜாக்கள் படை வீடு விட்டு புறப்படதாப் போலே சிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது –
பெருமாள் வர்ஷா காலம் மால்யவானில் எழுந்தருளினாப் போலே – விஸ்லேஷித்தார் கூடும் காலமுமாய்
கூடி இருந்தார் போக ரசமும் அனுபவிக்கும் காலமுமாய் இருக்க -நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக் கடவமோ -என்கை –

மன்னிக் கிடந்து –
மிடுக்காலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டாமையாலே குவடு போலே பொருந்தி வீசுவில் விட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது இருக்கை –

மன்னிக் கிடந்து -உறங்கும் –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம்படி பொருந்திக் கிடக்கிற -என்னவுமாம் –
இங்கு
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்று நப்பின்னைப் பிராட்டிக்கு ஒரு ஆபரணம் என்னலாம் படி இ றே
முலையோடேபொருந்திக் கிடக்கிற படி –சிங்கம் மலைக்கு ஆபரணம்–கண்ணன் முலைக்கு ஆபரணம்
உறங்கும் –
சம்சாரிகள் உறக்கம் போலே தமோபிபூதியால் அன்றே இவன் உறக்கம் –
வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வரும் அளவும்ஆகையால் -அவ் உறக்கத்திற்கு ஸ்மா ரகமாய் இருக்கை –

சீரிய சிங்கம் –
உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படிவீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை -ஸ்மாரகமாய் இருக்கை –
இந்த யசோதை இளம் சிங்கம்–நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்கிறபடி
சீரிய சிங்கம் பிறக்கும் பொழுதே சிங்கம் பெயர் பெற்ற சீர்மை–சிற்றாயர் சிங்கம் யசோதை இளம் சிங்கம்

அறிவுற்றுத்
பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை – சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள் இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –

தீ விழித்து-
பிரதம கடாஷ சன்னி பாதத்திலே–பேடைக்கும் அருகு நிற்க ஒண்ணாது இருக்கை –
ஐஸ்வர் யமான தேஜஸ் முன் ஒருவர்க்கும் நிற்க ஒண்ணாது இருக்கை –

வேரி மயிர் பொங்க –
வேரி -பரிமளம்–ஜாதி உசிதமான கந்தம் -உளை மயிர் பொங்க -சிலும்ப ஸ்மா ரகமாய் இருக்கை –

எப்பாடும் பேர்ந்துதறி –
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே-நாலுபாடும் போருகிறபடி –
உதறி
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி –

மூரி நிமிர்ந்து –
உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி –

முழங்கிப் –
ஸ்வ வ்யதிரிக்த மிருகங்கள் முழுக் காயாக அவிந்து கிடக்கும் படி – பெண்காள் வந்தி கோளோ-வென்கை-

ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து–தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்–ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை
விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி–இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு
பிண்டாகாரமாய் நிமிர்ந்து–மகா சம்ப்ரமத்துடனே–மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே

மகாராஜர் -தாரை -பெருமாள் உடன் செய்த சமயம் பிரதிஞ்ஞை மறந்து–பெருமாளும் சீறி -சபாந்தமாக அழிக்க கடவோம்
கிஷ்கிந்தை நாண் ஒலி எழுப்ப–நின்ற திருவடியை பார்த்து போக்கடி–தீரக் கழிய அபராதம் செய்த உனக்கு ஒரு அஞ்சலி செய் என்ன
சாபராதன் நேர் கொடு நேர் போகாமல் தாரையை விட–தாரா -நீர் தாரை வைத்து கோபாக்னி அணைத்து
கிம் கோபம் மனுஷ்ய -கேட்க -மனுஷஎந்திர புத்ரா -சக்கரவர்த்தி பிள்ளையாய் இருந்து–உமக்கு கோபத்துக்கு போருவாருமுண்டா
பொறுப்பித்து கொள்ளும் காலம் வர்ஷா காலம்

கொண்ட சீற்றம் –ஆஸ்ரிதர் தஞ்சமாக–முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப கொடியவாய் விலங்கின் உயிர் கெட கொண்ட சீற்றம்
உன் செய்கை நைவிக்கும்

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்–சிம்ஹமோ நமக்குத் திருஷ்டாந்தம் என்ன

நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு திருஷ்டாந்தமாக ஒன்றைச் சொன்னோம் அத்தனை – வடிவு அழகையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ணப் போமோ –
பூவைப் பூவின் நிறம் உனக்கு திருஷ்டாந்தமாக வன்று இ றே சிம்ஹம் உனக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -என்னவுமாம் –

வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்
பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி –
சதுர்க்கதி இ றே–நடையிலே
ரிஷபத்தின் உடைய வீறும்
மத்த கஜத்தின் உடைய மதிப்பும்-வாரணம் பைய ஊர்வது போலே
புலியினுடைய சிவிட்கும்
சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்
தோற்றி இருக்கை
நமக்கு இவை எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –
நரசிம்ஹ -ராகவ –யாதவ -சிங்கம் எல்லாம் ரெங்கேந்திர சிங்கம் பக்கல் காணலாம் இ றே

உன் கோயில்-
நந்த கோபன் கோயில் என்றார் கீழே —வாசம் ஒன்றாய் இருவருக்கும் பொது
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷி சேஷ பிரதான்யம் உண்டே–பிரணவம் போலேயும் -ஹிருதய கமலம் போலேயும் உபய பிரதான்யம்
சப்தம் -ஜீவாத்மா–அர்த்தம் பரமாத்மா பிரதான்யம்
அர்ஜுன ரதம் போலே -ரதி சேனயோர் உபயோர் மத்யே -சாஷி பூதன் கலக்கம் அவனுக்கும் ஆசார்யன் சாரதி ஆளுந்து பார்த்தால் இவனுக்கு பிரதான்யம்
ஹிருதயகமலம் தாங்கும் -அந்தர்யாமி —திருவரங்கம் நம்மூர்–எம்பெருமான் கோயில்–என்றால் போலே

இங்கனே போந்தருளி –
படுக்கையில் வார்த்தையாய்ப் போகாமே-தனி மண்டபத்திலே வார்த்தை யாக வேணும் -கோப்புடைய –
சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை –உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்
தர்ம ஜ்ஞானாதிகளாலும்-அதர்ம அஜ்ஞானாதிகளாலும்-கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –
கோப்புடைய
தர்மம் அதர்மம் ஞானம் அஞ்ஞானம் வைராக்கியம் அவைராக்யம் ஐஸ்வர்யம் அனைச்வர்யம் எட்டுக்கால்கள்

சீரிய சிங்காசனத்து –
இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால்-அறுதியாய் இருக்கை –
கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும்–தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும்
பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும்-அமோகமாய் இருக்கை –
அணுவாகில் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான-சிம்ஹாசனம் என்றுமாம் -இருந்தால் சிங்காசனமாம்

இருந்து –
நடை அழகு போலே-இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –
கண்ணினைக் குளிரப் புது மல ராகாத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே
உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்-வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –
தண்ட காரன்யத்தில் ரிஷிகளின் உடைய துக்க நிவ்ருத்திக்கு-நாம் முற்பாடராக-பெற்றிலோமே என்று வெறுத்தாப் போலே
பெண்கள் நோவு பட பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று வெறுத்து –
அவர்களை அழைத்து-உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன-இங்கனே சொல்ல ஒண்ணாது
பேர் ஓலக்கமாய் இருந்து கேட்டருள வேணும் -என்கிறார்கள் –
நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் –என்று அநந்ய கதிகளாக சொல்லுவதே -என்று பொருது இலள்
அழகர் கிடாம்பி ஆச்சானை அருள் பாடிட்டு-ஓன்று சொல்லிக் காண் என்ன –
நம் இராமானுசனை உடையையாய் இருந்து வைத்து-அகதிம்-என்னப் பெறாய் -என்று அருளிச் செய்தார் –

ஆகையால் இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் –வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
இப்போது சொல்லாதே -அதுக்கு அடி என் என்னில் –அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –
அதாவது –
அவர்களோடு ஆர்த்தியையும் காட்டி திருவடிகளிலே சென்று விழ-இரங்குவர் காண் என்று நினைத்து வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
அவன் நினைத்து வந்ததுக்கு அங்கு அவசரம் இல்லாமையாலே-அனபியவ நீயர் ஆனார்
ஆனால் அவசரத்திலே சொல்லக் கடவோம் என்று இருந்தார்கள் -பரத ஆழ்வான்-நினைத்து வந்ததுக்கு சமயம் இல்லாமை
திருவடி நிலைகளைக் கொடுத்து விடும் ச்வதந்த்ரன் –

ஆராய்ந்து அருள் –
நீங்கள் என் பட்டி கோள்-என் செய்தி கோள் -என்கை
அதாவது
பெண்களை எழுப்புவது —வாசல் காப்பானை எழுப்புவது —ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது —நம்மை எழுப்புவதாய்-
ஐயரை எழுப்பி–ஆய்ச்சியை எழுப்பி–நம்மை எழுப்பி–அண்ணரை எழுப்பி–மீளவும் நம்மை எழுப்பி–போர வ்யசனப்பட்டி கோள் ஆகாதே -என்கை –
எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு–இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இ றே -உன்னுடைய திவ்ய அந்தப்புரத்தின் நின்றும்–திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு–எழுந்தருளி –
கோப்புடைய இத்யாதி –
ஏழு உலகும் தொழிலாக வகுப்புண்டதாய்–நினைப்பிட்ட கார்யம் தலைக் கட்டும் படியான சீர்மையை–உடைய சிம்ஹாசனத்திலே
எழுந்தருளி இருந்து உனக்கு அனன்யார்ஹ சேஷ பூதரான–நாங்கள் வந்த–கார்யத்தை விசாரித்து அருள வேணும்-

எங்கள் மநோ ரதம் ஓலக்கத்தில் பெரிய கோஷ்டியாக எழுந்து அருளி கேட்க வேண்டியது ஒழிய ரஹச்யமாக பிரார்த்திக்கக் கூடியது இல்லை -என்கிறார்கள்

பூவையும் காயவும் நீலமும் பூக்குகின்ற காவி மலர் எங்கும் காண் தோறும் பாவியேன் மெல்லாவி மிகவும் பூரிக்கும் –
அவையும் பிரான் உருவே என்று பெரிய திருவந்தாதி
திருமால் உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய்வது ஓன்று உரையீர் –
சயன அழகு ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -எத்தனை நாள் கிடைத்தாய்
இருந்த அழகு எம்பிரான் இருந்தமை காட்டினீர் தொலை வில்லி மங்கலம்
நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்யம் இளைய பெருமாள்
சிம்மம் -நடை -ரிஷபம் –கானகம் படி உலாவி உலாவி –தீம் குழல் ஊதின போது -வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்து –
நிலையார நின்றானை -திரு நறையூர் -நீள் கழலே அடை நெஞ்சே -இரண்டு தடவை செவிக்கு பாசுரம்
நிலையார -நின்றானை என்பதால்–நடை திருக் கோலம்
இரும் பொழில் சூழ் -நறையூர் திருவாலி குடந்தை கோவல் –நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -திரு நீர் மலையே –
நீராய் -நெஞ்சு அழிய மாலுக்கு ஏரார் விசும்பின் இருப்பு அரிதாய் -ஆராத காதல் –
மண்ணும் விண்ணும் மகிழ –மாய அம்மானே -நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே நண்ணி நான் கூத்தாட -6-9-2-
எம்பெருமானார் உகந்த பாசுரம்
ஐதிக்யம் –வடக்கு நின்றும் போர ஒருவன் -நடை அழகு காட்டி
துக்கம் கண்டவாறே நடை அழகை கண்டே வாறே –
ஆழி மழைக்கு அண்ணா லஷ்மி நாசதச்ய சிந்தோ முதலி ஆண்டான்
எம்பார் இந்த பாசுரத்துக்கு வேதோக்தம் ஸ்ரீ சைல சிந்தோ -மாயா கேசரி -நாதே -எதி சார்வ பௌமா நிர்பயக –

கோயில் திருமலை பெருமாள் கோயில் திருநாராயணபுரம்--நடை –வடை –கொடைகுடை -20 ஜான் குடை -வைர முடி
நடை அழகை பிரார்த்திக்கிறார்கள் இதில் கடாஷம் பெற்றதும்--தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் ராமானுசன் –
தேவ பெருமாள் -2 மாதம் நாலாயிரமும் -சேவை நித்ய அனுசந்தானம்–அருளிச் செயலில் மயக்கி அரங்கன் –
ஆழியான் அத்தி ஊரான் –நாகத்தின் மேல் துயில்வான் -எங்கள் பிரான்–இரண்டையும் பாடி அரையர் –
வேண்டியது எல்லாம் கொடுத்தோம்–நம் இராமானுசனை தந்து அருள வேணும்

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல்
பூவை பூ அண்ணா உன் கோயில் இங்கும் –

ஆராய்ச்சி மாலை–சாற்றி அருளுகிறாள்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
எட்டாம் பாட்டில் ஆராய்ந்து அருள் -தேவாதி தேவனை நான் சென்று சேவித்தால்
அவன் ஆராய்ந்து ஆவா வென்று அருளுவன் என்றது அங்கு
இங்கும் அருள வேணும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே -என்றும் –
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேன் -என்றும்
அரவணையே ஆயர் ஏறே துயில் எழாயே -என்றும்
திருப்பள்ளி உணர்த்த -புறப்பட்டு அருளும் அழகு -வீற்று இருக்கும் அழகு -பிரார்த்தித்துப் பெற்றார்கள் இதில்
பல்லாண்டு பாட வேண்டும் என்ற பிரார்த்தனை அடுத்த பாசுரத்தில் பெறுவார்
பர்வதாதிவ நிஷ்க்ர்ம்ய சிம்ஹோ கிரி குஹா சய-வால்மீகி –
உன் கோயிலில் நின்றும் இங்கனே போந்தருளி -ஆண்டாள் -நடை அழகை பார்க்க
தன்யா பஸ்யந்தி மே நாதம் சிம்ஹ விக்ராந்த காமிநம்-ஆசைப் பட்டு புலம்பின சீதை
அகரத பரயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா -முன் சென்று தன நடை அழகை பெருமாள் பார்க்கும்படி
யயௌ என்னாமல் ப்ரயௌ -என்றார் வால்மிமி
கானகம்பாடி உலாவி –ஆடல் பாடல் மறக்கும் படி அன்றோ கண்ணபிரான் நடை அழகு
எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தானைக் கண்டார் உளர் -பெரிய ஆழ்வார் –

வலிமிக்க சீயம் –
கோயில் நின்று இங்கனே போந்தருளி -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து திருக் காஞ்சி திருமலை திரு அரங்கம் திரு நாராயண புரம் திவ்ய தேசங்கள் தோறும்
சிங்கா சனம்
சீரிய சிங்கா சனம்
கோப்புடைய சீரிய சிங்கா சனம் -பேத அபேத கடக ஸ்ருதிகள் மூன்றும்-
ராமானுஜ சிம்மம்
வலி மிக்க சீயம் -கலி மிக்க செந்நெல் -ஒலி மிக பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து –
ராமானுச முனி வேழம் -மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதம் விண்டிட –
இன்று எத்தனை உத்தரீயம் பரிமாறிற்று -எந்தனை பாசுரம் இல்லை என்பார் கள் கூரத் ஆழ்வான்- பகவத் விஷயம் சாதிக்க
ஸ்ரீ ராமாயணம் குசலவர்கள் பெருமாள் முன்னே சாதித்து அருளியது போலே–மம ஐஸ்வர்யம் வேண்டும் என்று
அமுதனார் அருள கண்ணீர் பெருக ராமாநுஜார் கேட்டு —அவிவேகம் துக்க வர்ஷினி மாரி
மலை -பரத்வாஜர் மூன்று வேதம் மூன்று மலை —வேதாசலம் – வேதகிரி -வேதாரண்யம் –
முழைஞ்சு- குகை -யஞ்ஞன் -கேள்வி -எது வழி -தர்மர் பத்தி சொல்லி தம்பிகளை மீட்டு -வேதம் தர்ம சாஸ்திரம் புராணங்கள் -கொண்டு அர்த்தம் நிர்ணயிக்க முடியாதே –
குரு சிஷ்யர் விரோதம் இல்லாத அன்யோன்யம் ஏக கண்டமாக அருளிச் செய்து -ஆழ்வார்கள் –
மேலையார் செய்வனகள் வேண்டியன கேட்டீர்கள் -சூஷ்ம அர்த்தம் இது தானே
மன்னிக் கிடந்தது உறங்கும் சீரிய சிங்கம் ராமானுஜர்–அறிவுற்று ஆராய்ந்து -அவதார பிரயோஜனம்
தீ விளித்து -புத்திர் மதி -பிரஞ்ஞா தீமா புத்திமான் -சாஸ்த்ரங்களில் செலுத்தி
வேரி மயிர் -காஷாய சோபி சிகாயவேஷம்
எப்பாடும் பேர்ந்து உதறி
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்-

காஷண்ட -புத்த ஜைன மாயாவாதி –
தாடி பஞ்சகம் ஐந்தும் ஐவர் அருளி உதறின ஸ்லோகம்
சரவணபகள– ஜைனர் ஸ்தம்பத்தில் ஒரு பக்கம் உள்ளதாம்

பூவைப் பூ வண்ணா –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -பூவைப் பூ வண்ணா
மகரந்தம்
அடி பூ தெளி தேன் உண்ண
பல் கலையோர் தாம் மன்ன வந்த ராமானுசன் – சரணாராவிந்தம் –
மூரி நிமிர்ந்து சோம்பலை விட்டு
120 சம்வத்சரம் சந்த்யா வந்தனம்
போதருமா போலே இதுவே உபமானம் உபமேயம்
உன் கோயில் ஸ்ரீ பெரும் புதூர் -காஞ்சிபுரம் திருபுட்குளி விந்த்யாசலம் காஞ்சி திருமலை இங்கனே போந்து அருளி
சிங்காசனம்
சீரிய சிங்காசனம்
கோப்புடைய சீரிய சிங்காசனம்
பேத அபேத கடக சுருதி –
ஒன்றே ஒன்றால் ஒன்றேயாம் -பல வென்று உரைக்கில் பலவேயாம் -அந்தர்யாமித்வம் ஆத்மா சரீர-ஆராய்ந்து அருள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: