திருப்பாவை –ஏற்ற கலங்கள் — வியாக்யானம் .தொகுப்பு –

அவதாரிகை –

நப்பின்னைப் பிராட்டி —போகத்தில் வந்தால் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூடி கிருஷ்ணனை அர்த்திக்க–வாருங்கோள் என்ன – அவன் குணங்களிலே தோற்றார்–தோற்றபடி சொல்லி
எழுப்புகிறார்கள் –
த்வயத்தில் பூர்வ வாக்யார்த்தம் குத்து விளக்கு–உத்தர வாக்யார்த்தம் ஏற்ற கலங்கள்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

வியாக்யானம் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப –
ஏற்ற கலங்கள் எல்லாம் எதிரே பொங்கி வழியும்படி –கலமிடாதார் தாழ்வே –
இட்ட கலங்கள் எல்லாம் நிறையும் –ஏலாத கலங்கள் நிறையாது ஒழிகிறது பாலின் குறை அன்றே –
ஏற்ற கலங்கள் –
பெருமை சிறுமை இல்லை –கடலை மடுக்கிலும் நிறைக்கும் அத்தனை –இவையும் கிருஷ்ணன் படியாய் இருக்கை –
அர்த்தியாதார் குற்றமத்தனை போக்கி-அவன் பக்கல் குறை இல்லை –ச்வீகாரமே அமையும் இ றே அவனுக்கு –
உபதேச பாத்திர பூதரான சிஷ்யர்கள் -ஆச்சார்ய உபதேசத்தாலே பரி பூரண ஞானரான சிஷ்யர்களுக்கு –
ஆச்சார்யனுக்கும் உக்துபதேசம் பண்ணும்படி – ஞானமானது பொங்கி வழியும்படியாக

மாற்றாதே பால் சொரியும் –
முலைக் கடுப்பாலே-கலம் இடுவார் இல்லை என்னா-அது தவிராது –
மாறாமல் –பால் போலே போக்யமான -ஞானத்தை உபதேசியா நிற்குமவர்களாய்-
அர்த்த விசேஷங்கள் வர்ஷித்து-மாற்றாதே இடைவிடாமல்
ஊற்று மாறாமல் பால் சொரியும்
அர்ஜுனன் -பூய ஏவ மகா பாஹோ ச்ருணு வாக்கியம் சந்தோஷத்துடன் நாரதர் சொல்லி
மைத்ரேயர் இதம் தே ச்ருணு-நல்ல அர்த்தம் இழக்க ஒண்ணாது என்று
மாற்றாதே -அர்த்தம் மாற்றாமல்
பிறர் சொல்லி–முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னும் ஓர்ந்து அத்தை பேசுதல்
பிரமாணம் மாற்றாமல்–ஏமாற்றாமல் -சிஷ்யர்களை

வள்ளல் –
சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை இன்றிக்கே-தன்  கார்யம் செய்ததாக உபகரிக்கை –
கிருஷ்ணனைப் போலே-பெண்ணுக்கும் பேதைக்கும் அணைக்கலாம் படி பவ்யமாய் இருக்கை -என்றுமாம்
சிஷ்ய விதேயர்களுமாய் –
வீடுமுன் முற்றவும் அர்தியாது இருக்கச் செய்தே–அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே இது கொண்டே மதுரகவி
ஆயிரம் இன் தமிழ் பாடின வண் சடகோபர் வண்மை மிக்க–அருள் மாரி நமரும் உரைமின்

பெரும் பசுக்கள் –
கிருஷ்ணன் ஸ்பர்சத்தால் வளருகையாலே-ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை -17/18 நந்தகோபன் அற நெறியும் தோள் வலியும் பேசி
இதில் கறவை செல்வ சிறப்பு-பசுக்கள் -பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள்
பகவத் குண அனுபவத்தாலே பரிபுஷ்டரான சிஷ்யர்களை –

ஆற்றப் படைத்தான் –
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி-வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர் –
அதாவது-தொகை இன்றிக்கே இருக்கை

படைத்தான் மகனே –
அவர்க்கு ஆர்ஜித்து வந்தது -இவன் பிறந்து படைத்த சம்பத்து
இத்தால்
ஸ்ரீ நந்த கோபர் சம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம் -நீர் தாழ வந்து -நீர்மை நீரின் தன்மை சௌலப்யம்
இடையனுக்கு மகனாய் பிறந்ததே சௌலப்யம்-நந்த கோபன் மகனே
பரமபதம் போலேயும்–நாரயணத்வம் போலேயும்–தான் தோன்றி அன்றே இது –
அசந்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த- ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –

அறிவுறாய்-
சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இ றே உள்ளுச் செல்லுகிறது –
கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி–கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான
உபாய அந்ய பரதையாலே-எழுப்புகிறார்கள் ஆகவுமாம் –
நீ ப்ரபோதத்தை அடைய வேணும் –
சம்பந்தத்தால் தான் கிடைக்கும் சாதனையால் இல்லை–உணர்த்தி உண்டால் போதும் பலம் நிச்சயம் அறிவுற்றாலே போதும்
அறிவியாது பொழுது தான் இழவும் துக்கமும்

ஊற்றமுடையாய் –
த்ருட பிரமாண சித்தனாகை – –ஆஸ்ரித பஷபாதம் உடையவனே –

பெரியாய் –
எதோ வாசோ நிவர்த்தந்தே என்று
அந்த பிரமாணங்களுக்கும் தன்னுடைய அவதி-காண ஒண்ணாதாய் இருக்கை -அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிகளை உடையவனே –

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே-எல்லாரும் காணலாம்படி-
ஹஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து –-சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –

சுடரே –
சம்சாரிகளைப் போலே பிறக்க பிறக்க கறை ஏறுகை அன்றிக்கே-சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை
நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இ றே –

ஊற்றமுடையாய் –
ஆஸ்ரிதர் விஷயத்தில்-பண்ணின பிரதிஞ்ஞையை-மகாராஜர் உள்ளிட்டாரும் விட வேணும் என்னிலும்
விடாதே முடிய நின்று தலைக் கட்டுகை –

பெரியாய் –
1-அந்த பிரதிஞ்ஞை-சம்ரஷணத்து அளவு அன்றியே இருக்கும் பலம் என்றுமாம் –
பெரியாய் –
2-ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று 3-தன் பேறாய் இருக்கை என்றுமாம் –
4-தன் பெருமைக்கு ஈடாக ரஷிக்குமவன் -என்றுமாம்

உலகினில் தோற்றமாய் நின்ற –
கீழ் சொன்ன ஆஸ்ரித பஷபாதம் லோகத்தில் பிரசித்தம் ஆம்படி இருக்கை
அதாவது –
சிசுபால துரியோதனாதிகளுக்கும் பாண்டவர் பக்கல் பஷபாதம் தோற்ற இருக்கை –
சுடரே –
லோகத்தில் தோற்றின பின்பு நிறம் பெற்ற படி –
இந்த லோகத்தில் சஷூர் விஷயமாம் படி அவதரித்தவனாய் சிரகாலம் இருந்து தேஷிஷ்டனானவனே-
ஆஸ்ரித பஷபாதம் லோகத்திலே பிரசித்தமாம்படி நின்று தேஷிஷ்டனானவனே–என்றுமாம் –
தோற்றமாய் நின்ற சுடர்--ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தால் வந்த ஔஜ்வல்யம்
இன்னார் தூதன் என நின்றான் –சொல்லிய பின்பு நின்றான் நிலை–தரித்து நின்றான்
அவதாரம் எடுப்பதில் நின்றும் நின்றான் -ஆசைப்பட்டது பெற்றதால்–ஐவர்க்கு அருள் செய்த –-பரஞ்சுடர்

துயில் எழாய் –
இப்போது உணராமையாலே-அந்த குணமும் மழுங்க இ றே புகுகிறது –
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும்–ரஷணம் பிரசக்தமாய் இருக்க
ரஷண சிந்தை பண்ணக் கடவதோ –என்று தாத்பர்யம்

மாற்றார் உனக்கு வலி தொலைந்து-உன் வாசல் கண்ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே-
சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று-போக்கடி இல்லாமையாலே-உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே –
மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே -என்றுமாம் –
மாற்றார் -என்று சத்ருக்கள்
நாராயணன் ஆகையாலே-சம்பந்தம் எல்லாரோடும் ஒத்து இருக்க-இவனுக்கு சத்ருக்கள் உண்டோ -என்னில்
ஆஸ்ரித விரோதிகள் இவனுக்கு சத்ருக்கள் –
இத்தால் –
அம்புக்கு தோற்று உன் எதிரிகள் வருமா போலே-உன் குணங்களுக்கு தோற்று வந்தோம் -என்கை –
அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம் –குணஜிதர்க்கு அதுக்கும் விரகு இல்லை இ றே-
பிரமஹாஸ்தரம் விட வேண்டும்படி-பிராட்டி பக்கலில் அபராதத்தைப் பண்ணி-ஓர் இடத்திலும் புகலற்று
பெருமாள் திருவடிகளிலே விழுந்த காகம் போலே -இருக்கை
அம்பு பட்டாரோபாதி குணஜிதர் -என்றது இ றே –

போற்றி
போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –

யாம் வந்தோம் –
அவர் தன்னைப் பேணாதே-உன்னைப் பேணினாப் போலே
நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல்-ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே –வந்தோம்
நசை முடிய ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இ றே –
உன்னுடைய சௌந்தர்ய சௌசீல்யாதி குணங்கள் பிடித்து இழுக்க வந்தோம்

யாம் வந்தோம் –
சத்ருக்கள் துரபிமானத்தாலே ந நமேயம் என்று இருக்குமா போலே
ஸ்வரூப ஞானத்தாலே -தத் சத்ருசம் -என்று இருக்கும் நாங்கள்-ஆற்றாமை இருக்க ஒட்டாமையாலே வந்தோம் –
பெரியாழ்வாரை போலே யும் வந்தோம்–அல்லாதாரைப் போலேயும்-சத்ருக்களைப் போலேயும் – வந்தோம்-நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்–நீ பெறினும் பேறு இழக்கிலும் இழ -என்றபடி-

புகழ்ந்து –
எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –

லௌகிக சத்ருக்களடைய உன்னுடைய மிடுக்குக்கு தங்கள் வலி மாண்டு உன் திருவாசலிலே பழைய ராஜ்யத்தைக் கொடுத்து
நீ போ என்றாலும் முன்புத்தை எளிவரவை நினைத்து பொறுக்க மாட்டாதே உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமா போலே –
நாங்களும்
உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று–தேகாத்ம அபிமானத்தையும்–ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும்
அந்ய சேஷத்வத்தையும்–ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும்–பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும்
உபாயாந்தர–உபேயாந்தரங்களையும் விட்டு
இவற்றை நீ கொடுத்தாலும்
பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று–உன் திருவாசலிலே வந்து –
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
நீயே சமஸ்தவித பிராப்யங்களும் பிராபகங்களும் என்று-உன் திருவடிகளை ஸ்துதித்து-மங்களா சாசனம் பண்ணி வந்து ஆஸ்ரயித்தோம் –

புகழ் மாலை-சாற்றி அருளுகிறாள்
போற்றி யாம் வந்து புகழ்ந்து
வலி மாண்டு அநந்ய கதித்வம் தோன்ற உன் திரு வாசலிலே படுகாடு கிடந்தது போற்றிப் புகழுமா போலே
உன் பாலே போன்ற சீரிலே பழுத்து ஒளிந்து புகழ் உரைகளை –
ஆச்சார்யபரம் -குரும் பிரகாசயேத் தீமான் –
வாதம் செய்து வலிமாண்டு அடி பணிந்தவர் எம்பெருமானார் இடத்தில் -யாதவபிரகாசர் யஞ்ஞமூர்த்தி போல்வார்
பட்டர் இடம் தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி -நஞ்சீயர் ஆகி அடி பணிந்தார்
துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் போல்வார் நம்பிள்ளை இடம்

எற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே

எம்பெருமானார் -சிஷ்யர் தேடி -நீ விட்டாலும் நான் உம்மை விடேன் -ஊற்றம்–பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பெரியாய்–உபகார வஸ்து கௌரவத்தால்–என் அப்பனிலோ -பெரியாய்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்–வாதம் வென்ற ஆசார்யர்
திருநாராயணபுரம் காட்டும் பாசுரம்
எம்பெருமானார் -12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் 700 சன்யாசிகள்–மகன் எதிராஜசம்பத்குமார்
பெரியாய் -ராமன் கண்ணன் இருவராலும் ஆராதிக்கப் பட்ட–வெளிப்படுத்தி திருமண் தேடும் பொழுது
சுடர் குன்றின் மேல் இட்ட விளக்கு–எதிசைல தீபம்
அடி பணியுமா போலே துலுக்க பெண் —பெரிய பிராட்டியார் தான் சம்ப்ரதாயம்

நவ ஒன்பது புதியது -இரண்டு அர்த்தம் இன்றி ஆர்ஜவம் கோணல் புத்தி இல்லாமல்
சோழ சக்கரவர்த்தி இல்லை -மாறும் பார்ப்போம் -பூ மண்டலம் முழுவதும் ஆளாமல்
முப்பத்து மூவர் ஆளவந்தார் பிரகரணம்
ஏற்ற கலங்கள் -நிறைய ஆசார்யர் பரமான பாசுரம்
இத்துடன் பகவானை எழுப்பும்
அம்பர் ஊடருத்து உம்பர் கோமானே எழுப்பி -சௌலப்யம் சொல்லி
மலர்மார்பா எழுந்திராய் -ராசிக்யம் சொல்லி
கப்பம் தவிர்க்கும் கலியே -பரத்வம் சொல்லி எழுப்புகிறார்கள் மூன்று தடவை –
தேவத்வமும் நிந்தை ஆனவனுக்கு ஒளி வரும் -ஜன்மம் -அவதரித்து ஒளி மிக்கு
எத்திறம் உரலோனோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே மூன்று கண்டம் ஆழ்வார்
பிறந்தவாறும் -நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ –
மகனே அறிவுறாய் என்கிறாள் -இதில் நான்காவது தடவை
அவன் உகக்கும் என்று
ராமன் கிருஷ்ணன் அஹம் பாந்தவோ-
உயர் எழுத்து கன்றுக் குட்டிகள்
மெய் எழுத்து பசுக்கள்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி -மீதளிப்ப -உக்தி சாதுர்யம்
தகுதியான சிஷ்யர்கள் சத் பாத்ரம் -ஏற்ற கலங்கள்

மாற்றாதே பால் சொரியும் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -ஸ்திரமான
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்டாய் கிடாம்பி ஆச்சான் -எம்பெருமானார் – -4-8-2-
ஊற்றம் உடையாய் -திட பிரமாணத்தால் சித்திக்கப்படுபவன்
இல்லை என்பவன் வார்த்தை கொண்டு இருக்கிறவன் என்று
இங்கே இல்லை இப் பொழுது இல்லை இருந்தே தீர வேண்டும்
மலடி பிள்ளை -மலடியும் உண்டு பிள்ளையும் உண்டு சம்பந்தம் தான் இல்லை –
ஒரே பதம் சொல்லி இல்லை சொல்லு –
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவங்கள்

பெரியாய் -ரிணம்-செய்தது எல்லாம் செய்தாலும்
உலகினில் தோற்றமாய் சுடரே –
நின்ற சுடரே -பிரித்து வியாக்யானம்
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லதே பேரென் என்று –
மாற்றார் -அடி பணியுமா போலே பிரபத்தி பண்ணுகிறார்கள் –
யாதவ பிரகாசர் -எம்பெருமானார் –
அவரே அடி பணியும் படி -வலி தொலைந்து உன் வாசல் கண் வந்து அடி பணியுமா போலே –

பால் சொரியும் திருமலை அருவி போலே
மாற்றாதே தான் சொல்லி மாற்றாமல்
முன்னோர் சொன்ன வழி மாறாமல்
ஏமாற்றாதே –
வள்ளல் உதாரர் -இருப்பது அனைத்தையும் வழங்கி
பெரும் பசுக்கள் –
ஆற்ற படைத்தான் –
மகனே மகான் சுவாமி போலே
அத்யவாசாயம் ஈடுபாடு 87 திரு நஷத்ரம் அன்றும் உபன்யாசம் செய்து அருளி —பெரியாய் –

வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் – ஸ்வாமி சிஷ்ய ஏகாந்தி நாம் த்வாதசபிஸ் சஹஸ்ரை
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா அனைவரும் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
சிஷ்யாதிச்சேத் பராஜ்யம் -விஞ்சி இங்கே செய்யவோ -இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ -ஆழ்வான்
பால் சொரியும் -அர்த்த விசேஷங்கள் ஆற்ற படைத்தான் –அபரிமிதமாக மாற்றார் வலி தொலைந்து –யாதவ பிரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: