அருளிச் செயல்களில் அரு சுவை பாசுரங்கள் –

1-நம்முடை நாயகனே -2-நான் மறையின் பொருளே 3-நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒரு கால் தம்மனை யானவனே –
4தரணி தலைமுழுதும் தாரகையின் உலகும் தடவியதன் புறமும் விம்ம வளர்ந்தவனே -5/6- வேழமும் யேழ் விடையும்
விரவியவேலைதனுள் சென்று வருமவனே

1- கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிரக் கற்றவர் தெற்றி வரப் 2-பெற்ற எனக்கு அருளி -3மன்னு குறுங்குடியாய்
-4- வெள்ளறையாய் -5-மதிள் சூழ் சோலை மலைக்கு அரசே 6-கண்ணபுரத்தமுதே

1- செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கின் கிணியும் -2-அரையில் தங்கிய பொன் வடமும்
-3–தாள நன் மாதுளையின் பூவோடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
5/6-மங்கள வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக எங்கள் குடிக்கு அரசே

1–ஆமையாய்க் -2–கங்கையாய் -3-ஆழ கடலாய் -4-அவனியாய் -5-அரு வரை களாய் -4-நான் முகனாய்
-5-நான் மறையாய் -6-வேள்வியாத் தக்கணையாய் தானுமானான்

1-செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற -2- தேவர்கள் நாயகனே -3- எம்மானே
-4-எஞ்சலில் என்னுடைய இன்னமுதே –5-ஏழுலகும் உடையாய் -6- என்னப்பா

1-வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -2-கண்ணனே -3-கரி கோள் விடுத்தானே
4-காரணா -5-களிறட்ட பிரானே -6- எண்ணுவார் இடரைக் களைவானே -6-ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே

1- நம்பனே – நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே –2-நரசிங்கமதானாய் –3-உம்பர் கோன் உலகம் எழும் அளந்தாய்–4-ஊழி யாயினாய்
-ஆழி முன்னேந்தி கம்பமா கரி கோள் விடுத்தானே -5- காரணா – கடலைக் கடைந்தானே -6-எம்பிரான் -என்னை யாளுடைத் தேனே –

—————–

1- மாயனை –2- மன்னு வடமதுரை மைந்தனை –3- தூய பேரு நீர் யமுனைத் துறைவனை –4- ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -5- தாயைக் குடல் விளக்கம் செய்த -6- தாமோதரனை தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்

1-அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -2-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -3-பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி –
4-கன்று குடையா வெறிந்தாய் கழல் போற்றி -5-குன்று குடையா வேடுத்தாய் குணம் போற்றி -6- வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி –

——————

1-என்னரங்கத்தின் இன்னமுதர் -2- குழல் அழகர் -3-வாய் அழகர் -4-கண் அழகர் -5- கொப்பூழில் எழு கமலப் பூ வழகர்-6-எம்மானார் –

—————————

1- மாவினை வாய் பிளந்து உகந்த மாலை -2- வேலை வண்ணனை –3- என் கண்ணனை -4-வன் குன்றம் ஏந்தி
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை -5-அமரர்கள் தம் தலைவனை -5- அம் தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியை –
6-பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை நாவுற வழுத்தி எந்தன் கைகள் கொய்ம்மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே

——————-

1-ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி -2- நன்மை சேர் போக மூர்த்தி -3- புண்ணியத்தின் மூர்த்தி
4- எண்ணில் மூர்த்தியாய் 5- நாக மூர்த்தி சயனமாய் நலம் கடல் கிடந்து -6-மேல் ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே

1- புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –2- அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து 3- புட் கொடிப் பிடித்த பின்னரும் –
4- புள்ளை யூர்தி யாதலால் அதன் கொல் -5- மின் கொள் நேமியாய் -6- புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே

1-விண் கடந்த சோதியாய் -2- விளங்கு ஞான மூர்த்தியாய் -3- பண் கடந்த தேசமேவு –4-பாவ நாச நாதனே –
5-எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்–6-மண் கடந்த வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே

1-/ படைத்த பாரிடந்து –2-அது உண்டு உமிழ்ந்து -3- பௌவ நீர் படைத்து அடைத்து –4-/5-அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
6– மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புக படைக்கலம் விடுத்த பலபடைத் தடக்கை மாயனே

1- காலநேமி காலனே –2- கணக்கிலாத கீர்த்தியாய் 3- ஞாலம் ஏழும் உண்டு –4- பண்டு ஓர் பாலனாய பண்பனே
5-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர -6- நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே

1-ஆதியாதி யாதி நீ -ஓராண்ட மாதி யாதலால் -2-சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
3-வேதமாகி -4- வேள்வியாகி -5- விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி -6- ஆயனாய மாயம் என்ன மாயமே –

1- அம்புலாவு மீனுமாகி -2- ஆமையாகி -3- ஆழியார் தம்பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு அதன்றியும்
4-கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் 5- எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ -6- எம்மீசனே

1- காய்த்த நீள் விளங்கனி யுதிர்ந்து -2- எதிர்ந்த பூங்குருந்து சாய்த்து –3- மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
4-ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு -பின் பேய்ச்சி பாலை யுண்டு–5- பண்டு ஓர் ஏனமாய 6-வாமனா –

1-கடம கலந்த வன் கரி மருப்பு ஒசித்து -2-ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
4-குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண -5-தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப -6- கால நேமி காலனே

1- ஆனை காத்து 2- ஓர் ஆனை கொன்று –3-அதன்றி ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தி-4- யானை யுண்டி –
5- அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து -6- மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே

1- வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து –2-உருத்தமா கஞ்சனைக் கடிந்து 3- மண்ணளந்து கொண்ட காலனே
4- வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய் -5– அஞ்சனத்த வண்ணனாய -6-ஆதிதேவன் அல்லையே

1-நிற்பதும் ஓர் வெற்பகத்து -2-இருப்பும் விண்–3- கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள் நானிலாத முன்னெலாம்
4/5/6/- அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே

1/2-கடைந்து பாற்கடல் கிடந்து–3-கால நேமியைக் கடிந்து -3- உடைந்த வாலி தன தனக்கு உதவ வந்து இராமனாய் –
4-மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து –5-வேங்கடம்
அடைந்த -6- மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ

1- ஊனில் மேய ஆவி நீ -2-உறக்கமோடு உணர்ச்சி நீ –3-ஆனில் மேய விந்தும் நீ -4- அவற்றுள் நின்ற தூய்மை நீ –
5- வானினொடு மண்ணும் நீ வளம் கடற்பயனும் நீ –
6- யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே

1/2- அத்தனாகி யன்னையாகி -3- ஆளும் எம்பிரானுமாய்
4- ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை யாடகொள்வான்
5/6- முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே

————————————

1- பச்சை மா மலை போல் மேனி –2-பவள வாய் –3- கமலச் செங்கண்-4-அச்சுதா -5- அமரர் ஏறே -6- ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே —

பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட 1-மாயனார் திரு நன் மார்பும் -2-மரகத வுருவும் -3-தோளும்
–4-தூய தாமரைக் கண்களும் -5-துவர் இதழ்ப் பவள வாயும் -6-ஆய சீர் முடியும் அடியரோர்க்கு அகலலாமே

1-தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் –2-சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே –
3- ஆவியே -4– அமுதே -5- எந்தன் ஆருயிர் அனைய வேந்தே -6- பாவியேன் உன்னை யல்லால் பாவியேன் பாவியேனே

————————————

1-அமலன் -2-ஆதி -3-பிரான் -4- அடியார்க்கு என்னை யாட்படுத்த விமலன் –5-விண்ணவர் கோன் -6- விரையார் பொழில் வேங்கடவன்
1- நிமலன் -2- நின்மலன் -3- நீதி வானவன் -4- நீள் மதிள் அரங்கத்தம்மான் -5-.6-திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

1-ஆல மா மரத்தினிலை மேல் ஒரு பாலகனாய் -2- ஞாலம் ஏழும் உண்டான் –3- அரங்கத்து அரவின் அணையான்
4-கோல மா மணி யாரமும் –5- முத்துத் தாமமும் –6- முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே

1- கொண்டல் வண்ணனைக் -2-கோவலனாய் -3-வெண்ணெய் யுண்ட வாயன் -4- என்னுள்ளம் கவர்ந்தானை
5-அண்டர்கோன் -6-அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –

————————————–

1-எம்பிரான் –2- எந்தை -3- என்னுடைச் சுற்றம் –4- எனக்கரசு –5- என்னுடை வாணாள் —
6 அம்பினால் அரக்கர் வெருக் கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல் –தஞ்சை மா மணிக் கோயில்

1- வேதத்தை -2- வேதத்தின் சுவைப் பயனை –3- விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை —
4- நந்தனார் களிற்றைக் -5- குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை –6-அமுதை என்னை ஆளுடை யப்பனை
ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே

1-பாராயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை -2- படுகடலில் அமுதத்தைப் -3- பரிவாய் கீண்ட சீரானை -எம்மானைத் –
4- தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை -5-போரானைக் கொம்பொசித்த போர் ஏற்றினை –
6- புனர் மருதம் இற நடந்த பொற் குன்றினை காரானை இடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே

1- எந்தை -2- என் வணங்கப் படுவானை -3- கணங்கள் ஏத்தும் நீண்டவத்தைக் கரு முகிலை –4-எம்மான் தன்னை —
5-நின்ற வஊர் நித்திலத்தைத் –6-தொத்தார் சோலை காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தானை கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே

1- உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை –2-அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனைக் –
3- கன்று மேய்த்து விளையாட வல்லானை -4- வரை மீ கானில் தடம் பருகு கரு முகிலைத் –5- தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை –
6- வையம் காக்கும் கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே

1- பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப் -2- பிணை மருப்பில் கரும் களிற்றை -3- பிணை மான் நோக்கின் ஆய்த்தாயர்
தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை -4- அந்தணர் தம் அமுதத்தை -5-குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
6- கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை -எம்மானைக் கண்டு கொண்டேன்

1- பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப் -2-பாலகனாய் ஆலிலையில் பள்ளியின்ப மேய்ந்தானை –3- இலங்கு ஒளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத் தோள் அம்மான் தன்னை -4- தோய்ந்தானை நிலமகள் தோள் -5-தூதில் சென்று அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த
மல்லர் மங்கக் காய்ந்தானை –6 எம்மானைக் கண்டு கொண்டேன்

1- கிடந்தானைத் தடம் கடலுள் பணங்கள் மேவிக்–2- கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே படர்ந்தானை -3- படு மத்த களிற்றின் கொம்பு பறித்தானை-
4- பாரிடத்தை எயிறு கீற இடந்தானை வளை மருப்பின் ஏனமாகி -5-இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை
-6-எம்மானைக் கண்டு கொண்டேன்

1- பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்தானைப் -2- பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -3- தண்ணார்ந்த வார் புனல் சூழ்
மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை -4- பணங்கள் மேவி எண்ணானை -5-எண்ணிறந்த புகழினானை
-6-இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்

1-ஓதி ஆயிரம் நாமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் – வேதியா -2- அரையா -உரையாய் ஒரு மாற்றம் -3- எந்தாய் –
-4- நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து –5- மற்றவர்க்கு ஆதியாய் இருந்தாய் -6- அணி யாலி யம்மானே

1- நந்தா விளக்கே -2- அளத்தற்கு அரியாய் -3- நர நாரணனே -4- கரு மா முகில் போல் எந்தாய் -5- எமக்கே அருளாய் என
நின்று இமையோர் பரவும் இடம் ——–6- மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே

1- சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே –2- மருவினிய மைந்தா –3- அந்தணாலி மாலே –4- சோலை மழ களிறே –
5-நந்தா விளக்கின் சுடரே –6- நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே

1- தீ எம்பெருமான் –2- நீர் எம்பெருமான் –3- திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றாள் அடியோம் காநோமால்
4-தாய் எம்பெருமான் -5- தந்தை தந்தை யாவீர் -6- அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -நீர் இந்தளூரீரே

1-கைம்மான மழ களிற்றைக் -2- கடல் கிடந்த கருமணியை -3-மைம்மான மரகதத்தை -4- மறையுரைத்த திருமாலை –
5-எம்மானை – எமக்கு என்றும் இனியானை –6- பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே

1- பேரானைக் –2- குறுங்குடி எம்பெருமானை –3- திருத் தண்காலூரானைக் –4-கரம்பனூர் உத்தமனை
-5- முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை ஏழு இவ்வுலகேழு உண்டும் ஆராது என்று இருந்தானைக் –6- கண்டது தென்னரங்கத்தே

1- சிந்தனையைத் -2- தவ நெறியைத் –3- திருமாலை –4- பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை
5- வரி வண்டார் கொந்தணைந்த பொழில் கோவல் உலகளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை –6- யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே

1-சொல்லாய் திரு மார்வா –2- உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ –3- மல்லா –
4- குடமாடி –5- மது சூதனே –6- உலகில் சொல்லா நல்லிசையாய் திரு விண்ணகரானே

1- கிடந்த நம்பி குடந்தை மேவிக் -2- கேழலாய் உலகை இடந்த நம்பி –3- எங்கள் நம்பி -4- எறிஞர் அரண் அழிய
கடந்த நம்பி கடியார் இலங்கை–5- உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே

1-திருவுக்கும் திருவாகிய செல்வா -2-தெய்வத்துக்கு அரசே –3- செய்ய கண்ணா -4- உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே –
5- உலகுண்ட ஒருவா –6- திரு மார்பா –அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

1-பந்தார் மேல் விரல் நல வளைத் தோழி பாவை பூ மகள் தன்னோடும் உடனே வந்தாய் – என் மனத்தே மன்னி நின்றாய்–
-2- மால் வண்ணா -3- மழை போல் ஒளி வண்ணா –4-சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே-
-5- நெடுமாலே -அந்தோ நின்னடியன்றி மற்று அறியேன் -6–அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

1-பரனே -பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர்தாம் பணிந்து ஏத்தும் வரனே -2-மாதவனே -3–மதுசூதா -மற்றோர் நின்னலால் இலேன் காண்
4- நரனே –நாரணனே –5-திரு நறையூர் நம்பி எம்பெருமான் –6 உம்பராளும் அரனே ஆதி வராகம் முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

1- புனிதா –2- புட்கொடியாய் –3- நெடுமாலே –4- தீவாய் நாகணையில் துயில்வானே –5- திருமாலே இனிச் செய்வது
ஓன்று அறியேன் -ஆ ஆ என்று அடியேற்கு இறை இரங்காய் –6- அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

1- கருமா முகில் உருவா –2- கனலுருவா –3- புனலுருவா –4- பெருமாள் வரை யுருவா –4- பிறவுருவா -5-நினதுருவா –
6- திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சல சயனத்து அருமா கடல் அமுதே உனது அடியே சரணாமே

1-பெரும் புறக்கடலை –2- அடல் ஏற்றினை –3- பெண்ணை ஆணை –4- எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை —
4-முத்தின் திரள் கோவையைப் -5-பத்தராவியை –நித்திலத் தொத்தினை -6-அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

1-மைந்நிறக் கடல் வண்ணனை -மாலை -3-ஆலிலைப் பள்ளி கொள் மாயனை -4-நென்னலைப் பகலை இற்றை நாளினை
நாளையாய் வரும் திங்கள் ஆண்டினை —5-கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் –6-கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

1- எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை –2- வாசவர் குழலாள் மலை மங்கை தன பங்கனை -பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் –
3-பனி மா மதியம் தவழ மங்குலைச் சுடரை -4-வடமா மலையுச்சியை -5- நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை பகலைச் சென்று நாடிக் -6-கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

1-பேய் முலை நஞ்சுண்ட பிள்ளையைத் –2- தெள்ளியார் வணங்கப்படும் தேவனை –3- மாயனை -மதிள் கோவலிடை கழி மைந்தனை அன்றி
-4-அந்தணர் சிந்தையுள் ஈசனை -இலங்கும் சுடர்ச் சோதியை -5- எந்தையை -எனக்கு எய்ப்பினில் வைப்பினை -6- காசினை மணியைச் சென்று நாடிக் -6-கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

1- ஏற்றினை –2-இமயத்துள் எம்மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை –3-ஆற்றலை அண்டத்தப்புறத் துய்த்திடும் ஐயனைக் –
4-கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினை –5-குரு மா மணிக் குன்றினை நின்ற ஊர் நின்ற நித்திலத் தொத்தினை
6-காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே

1–துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் –2-சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினைத் –3–திருமங்கை மணாளனைத் தேவனைத்
–4-திகழும் பவளத்தொளி யொப்பனை –5-யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை –6–யந்தணர் கற்பினைக் கழுநீர் மலரும் வயல்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே 

1–திருத்தனைத் –2-திசை நான்முகன் தந்தையைத் –3-தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை–4- விளங்கும் சுடர்ச் சோதியை –
-5-விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை –6-யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனைக் களிவண்டு
அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே

1–வெஞ்சினக் களிற்றை –2–விளங்காய் வீழக்   கன்று வீசிய வீசனை–3- பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் –
-4-தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை –5–அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக் –
-6–கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே

1–பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் 2–பாலுள் நெய்யினை –3-மாலுருவாய்   நின்ற விண்ணினை 4–விளங்கும்
சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை 5–மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை–
6- மறையோர் தங்கள் கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —

1-வாமனன்-2- கற்கி-3- மதுசூதனன் -4-மாதவன்–5-தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
6–காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –

1–ஆமையாகி –2-யரியாகி–3- அன்னமாகி -4-அந்தணர் தம் ஓமமாகி–5- ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து 6-முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–

1–மீனோடு ஆமை கேழல் –2-அரி –3–குறளாய் –4–முன்னும் ராமனாய்த் தானாய் பின்னும் ராமனாய்த்–5– தாமோதரனாய்க் –
-6-கற்கியும் ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –

1-மூவரில் முன் முதல்வன் –2-முழங்கார் கடலுள் கிடந்து பூ வள்ருந்தி தன்னுள்  புவனம் படைத்து –3-உண்டு –உமிழ்ந்த–
-4-தேவர்கள் நாயகனைத் –5-திரு மால் இருஞ்சோலை   நின்ற கோவலர் –6-கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ-

1–பொன்னை–2- மா மணியை –3–யணி யார்ந்ததோர்மின்னை –4-வேங்கடத் துச்சியில் கண்டு போய்
-5-என்னை யாளுடை யீசனை –6- யெம்பிரான் தன்னை  யாம் சென்று காண்டும் தண் காவிலே

1-வானை -2-யார் அமுதம் தந்த வள்ளலைத்–3- தேனை–4- நீள் வயல்  சேறையில் கண்டு போய்
4–ஆனை வாட்டி யருளும் –5–யமரர் தம் கோனை –6–யாம் குடந்தை சென்று காண்டுமே

1–பத்தராவியைப் –2–பான்மதியை –3-யணித் தொத்தை –4-மாலிருஞ்சோலை தொழுது போய்
5–முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச்–6- சென்று விண்ணகர் காண்டுமே –

————–

1–நிதியினைப் –2–பவளத் தூணை –3–நெறிமையால் நினைய வல்லார் கதியினைக் –4–கஞ்சன் மாளக் கண்டு –5-முன்
அண்டம் ஆளும் மதியினை–6– மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே

1–காற்றினைப்— புனலைத்—- தீயைக்–2- கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை–3– யிமயமேய எழில் மணித் திரளை –4-யின்ப
ஆற்றினை –5–யமுதம் தன்னை –6-யவுணன் ஆர் உயிரை உண்ட கூற்றினைக் குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூருமாறே –

1-மூவரின் முதல்வனாய யொருவனை –2-உலகம் கொண்ட கோவினைக் –3-குடந்தை மேய குரு மணித் திரளை–4- இன்பப்
பாவினைப் –5-பச்சைத் தேனைப் பைம்பொன்னை -6-யமரர்சென்னிப் பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –

1–இம்மையை –2-மறுமை தன்னை –3-எமக்கு வீடாகி நின்ற மெய்மையை –4-விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையைக் –5-கருமை தன்னைத் –6-திருமலை யொருமையானைத் தன்மையை நினைவார் என் தன் தலைமிசை மன்னுவாரே

1-சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர் -2- அரங்கம் –3- மெய்யம் –4- கச்சி –5- பேர் –6- மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே

———————————————–

1–நீரகத்தாய் –நெடு வரையின் உச்சி மேலாய்–2-நிலாத் திங்கள் துண்டத்தாய் –3-நிறைந்த கச்சி ஊரகத்தாய் –
-4-ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்–5- காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்-6- பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே –

1-வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய் –2-கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கயத்தாய்–3-பாற்கடலாய் பாரின் மேலாய் –4-பனி வரையின் உச்சியாய் –
-5-பவளவண்ணா எங்குற்றாய்–6- எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–

1–பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும் 2-தென்னானாய் –3-வடவானாய் –4-குடபாலனாய்–5-குணபால மதயானாய் இமையோர்க்கு
என்றும் முன்னானாய் –6-பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தனாய் முதலானாயே

1–கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்–2-காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்33-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
4–வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்-5-மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்–6-மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-

1-முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை-2-மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய்  நின்ற-3-அளப்பரிய ஆராமுதை யரங்கமேய
யந்தணனை 4-யந்தணர் தம் சிந்தையானை-5-விளக்கொளியை மரகதத்தைத் -6-திருத் தண் காவில் வெக்காவில் திருமாலைப்
பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –

1–கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்-2-கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்–3-மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
4-வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்-5-வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்-6-விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே

1-கார் வண்ணம் திரு மேனி -2-கண்ணும் வாயும்-3-கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்-3-பார்வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் ஏர் வண்ணம் என் பேதை என் சொல் கேளாள் -4–எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
6-நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே

1-வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப் -போராளன் –2-ஆயிரம் தோள் வாணன் மாளப்
-3-பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க பாராளன் -4-பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து -5-பாரளந்து பாரை யாண்ட
பேராளன் 6-பேரோதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –

1–மின்னிலங்கு திருவுருவும் –2-பெரிய தோளும் –3-கரி முனிந்த கைத்தலமும் –4-கையும் வாயும் தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே
5—தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே–6- புனலரங்க மூரென்று போயினாரே

—————

அரவம் அடல் வேசம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன்

——–

பயின்றது அரங்கம் –2- திருக்கோட்டி –3-பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே —
4- பன்னாள் பயின்றது அணி திகழும் சோலை –5- அணி நீர் மலையே –6- மணி திகழும் வண் தடக்கை மால்

தமருள்ளும் –1-தஞ்சை –2-தலையரங்கம்–3- தண்கால் தமருள்ளும் –4-தண் பொருப்பு வேலை
தமருள்ளும் –5-மா மல்லை –கோவல்–6– மதிள் குடந்தை என்பரே ஏவல்ல வெந்தைக்கிடம்

1–அத்தியூரான் –2-புள்ளையூர்வான் –3-அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்
–4-முத்தீ மறையாவான் –5–மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் –6-எங்கள் பிரான்

1-எங்கள் பெருமான் –2- இமையோர் தலைமகன் நீ –3- செங்கண் நெடுமால் –4- திரு மார்பா
4- பொங்கு பட மூக்கின் ஆயிரவாய்ப் பாம்பனை மேல் சேர்ந்தாய் –6- குடமூக்குக் கோயிலாகக் கொண்டு

1- மாலே –2- நெடியோனே –3- கண்ணனே –4- விண்ணவர்க்கு மேலா –5- வியன் துழாய்க் கண்ணியனே –
6-மேலால் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –

——-

1- திருக் கண்டேன் –2- பொன் மேனி கண்டேன் –3- திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –4- செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் –5-புரி சங்கம் கைக் கண்டேன் –6- என்னாழி வண்ணன் பால் இன்று

1- மனத்துள்ளான் –2- மா கடல் நீருள்ளான் –3- மலராள் தனத்துள்ளான் –4- தண் துழாய் மார்பன் –
5- சினத்துச் செரு நருகச் செற்று உகந்த –6- தேங்கோத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து

1–மருந்தும் –2- பொருளும் –3- அமுதமும் தானே –4- திருந்திய செங்கண் மால் ஆங்கே
பொருந்தியும் –4 நின்று உலகம் உண்டும்–5– உமிழ்ந்தும் -6- நீர் ஏற்றும் மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி

1- கண்ணும் கமலம் –2- கமலமே கைத்தலமும் –3- மண் அளந்த பாதமும் மற்றவையே —
எண்ணில் -4- கரு மா முகில் வண்ணன் –5- கார்க்கடல் நீர் வண்ணன் –6- திரு மா மணி வண்ணன் தேசு

1-நன்கோதும் நால் வேதத்துள்ளான்-2 –நற விரியும் பொங்கோத அருவிப் புனல் வண்ணன் –3-சங்கோதப்
பாற் கடலான் –4–பாம்பணையின் மேலான்–5- பயின்று உரைப்பார் -நூற் கடலான் –6-நுண்ணறிவினான்

1-சிறந்த வென் சிந்தையும் –2- செங்கண் அரவும் –3- நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் —
உறைந்ததும் –4-வேங்கடமும் –5-வெக்காவும் –6-வேளுக்கைப் பாடியுமே தாம் கடவார் தண் துழாயார்

1–கைய கனலாழி–2– கார்க்கடல் வாய் வெண் சங்கம்–3– வெய்ய கதை –4–சார்ங்கம்–5– வெஞ்சுடர் வாள்–
செய்ய படை –6-பரவை பாழி பனி நீருலகம் அடி யளந்த மாயரவர்க்கு

1-விண்ணகரம் -2- வெக்கா -3-விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம்–4- மா மாட வேளுக்கை
–5-மண்ணகத்த தென் குடந்தை –6-தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு

—————————————–

1-நீயே யுலகெல்லாம் –2- நின்னருளே நிற்பனவும் –3- நீயே தவத் தேவ தேவனும் –3- நீயே
ஏறி சுடரும் –4- மால் வரையும் –5- எண் திசையும் —6-அண்டத்து இரு சுடருமாயவிவை

1- அழகியான் தானே –2- அரியுருவான் தானே –3- பழகியான் தானே பணிமின் –4- குழவியாய்த் தானே
ஏழ் உலகுக்கும் 5- தன்மைக்கும் தன்மையனே –6- மீனாய் உயிர் அளிக்கும் வித்து

1- நாகத்தணைக் குடந்தை –2-வெக்கா –3-திரு வெவ்வுள் –4-நாகத்தணை யரங்கம் –5–பேரன்பில்–
6- நாகத் தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான்

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர் விரித்து உரைத்த வென்நாகத் துன்னை
-1- தெரித்து -2- எழுதி 3- வாசித்தும் -4- கேட்டும் -5- வணங்கி –6- வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது

போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ 1- பொன் மகரக் காதானை –2- ஆதிப் பெருமானை –3- நாதானை —
5- நல்லானை நாரணனை –6- நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் -2-இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை –3- இனி அறிந்தேன்
காரணன் நீ –4- கற்றவை நீ –5- கற்பவை நீ –6- நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்

————–

1-செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
2-பசும் சோதி மரகத குன்றம் கடலோன் கை மிசை கண் வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து
3-சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அரி துயில் அமர்ந்து 4-சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
5-தாமரை வுந்தி தனி பெரு நாயக -6-மூ வுலகு அளந்த சேவடியோயே –

1–மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது–2- ஓன்று விண் செலீ இ
3- நான் முகப்பு தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட நெறீ இ தாமரை காடு மலர்க் கண்ணொடு 4-கனி வாய் உடையதுமாய்-
-5- இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன –6-கற்பகக காவு பற்பல வன்ன முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே

———-

1-நின்றும்–2- இருந்தும்-3- கிடந்தும்-4- திரிதந்தும் ஒன்றும் ஒவாற்றான் –5-என் நெஞ்சு அகலான்
-6-அன்று அங்கை வன்புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான் அன்புடையான் அன்றே அவன்

1-பாருண்டான் –2-பாருமிழ்ந்தான் –3- பாரிடந்தான் –4- பாரளந்தான் -5- பாரிடம் முன் படைத்தான் என்பரால்
-5-கவையில் மனத்துயரவைதிருந்து வாழ்த்தார்க்கு உண்டோ மனத் துயரை மாய்க்கும் வகை –

————-

1–ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா –2- ஒத்தாய் எப்பொருட்கும் -4-உய்ரிராய் –4- என்னைப் பெற்ற அத்தாயாய்த் –
5– தந்தையாய் -6- அறியாதன வறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –

1-முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே -2- பன்னலார் பயிலும் பரனே -பவித்திரனே —
3- கன்னலே அமுதே –5- கார் முகிலே –6- என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே

1- திருவுடம்பு வான் சுடர் -2- செந்தாமரைக் கண் கை கமலம் -3- திருவிடமே மார்பம் –4- அயனிடமே கொப்பூழ்
5- ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ –6-ஒரு விடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே

என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் -2- மின்னும் சுடர் மலைக்குக் கண் –3- பாதம் –5- கை கமலம்
6–மன்னும் முழு வேழ் உலகும் வயிற்றினுள தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே

1–வைகுந்தா –2- மணி வண்ணனே –3- என் பொல்லாத் திருக் குறளா –4-என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே –
5- செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து -6- அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே

1- எந்தாய் –2- தண் திரு வேங்கடத்துள் நின்றாய் –3- இலங்கை செற்றாய் –4- மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா-
5- கொந்தார் தண் அம துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த -6- வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே

1- நாரணன் -2-முழுவேழ் உலகுக்கும் நாதன் -3- வேத மயன்–4- காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் -5- எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று 6- வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே

1-வாமனன் –2- என் மரகத வண்ணன் –3- தாமரைக் கண்ணினன் –4- காமனைப் பயந்தாய் –என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
5-தூ மனத் தனனாய்ப் பிறவித்துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -6- என் சிரீதரனே

1–கிடந்து இருந்து நின்று அளந்து –2-கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –3-தன்னுள் கரக்கும் –4-உமிழும்
5–தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பாரென்னும் மடந்தையை –6-மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே

1-புகழு நல்லொருவன் என்கோ -பொருவில் சீர்ப் பூமி என்கோ –3- திகழும் தண் பரவை என்கோ –4-தீ என்கோ வாயு வென்கோ
-5-திகழும் ஆகாசம் என்கோ –6-நீள் சுடர் இரண்டும் என்கோ இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே

1-பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ்வாயன் என்கோ –2- அங்கதிர் அடியன் என்கோ — அஞ்சன வண்ணன் என்கோ —
3- செங்கதிர் முடியன் என்கோ –4- திரு மறு மார்வன் என்கோ –5-சங்கு சக்கரத்தான் என்கோ –6-சாதி மாணிக்கத்தையே

1-சாதி மாணிக்கம் என்கோ–2- சாவி கொள் பொன் முத்தம் என்கோ –3- சாதி நல வயிரம் என்கோ –4- தவிவில் சீர் விளக்கம் என்கோ –
5-ஆதி யாம் சோதி என்கோ –ஆதி யாம் புருடன் என்கோ -6- ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே –

1- அச்சுதன் அமலன் என்கோ –2- அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் என்கோ –3- நலம் கடல் அமுதம் என்கோ –
4- அச்சுவைக் கட்டி என்கோ –அரு சுவை யடிசில் என்கோ -5- நெய்ச்சுவைத் தேறல் என்கோ -கனி என்கோ பால் என்கோ –

1- பால் என்கோ நான்கு வேதப் பயன் என்கோ சமய நீதி நூல் என்கோ –2- நுடங்கு கேள்வியிசை என்கோ -இவற்றுள் நல்ல மேல் என்கோ –
3- வினையின் மிக்க பயன் என்கோ -4- கண்ணன் என்கோ –மால் என்கோ –5- மாயன் என்கோ –6- வானவர் ஆதியையே –

1- வானவர் ஆதி என்கோ –2- வானவர் தெய்வம் என்கோ –3- வானவர் போகம் என்கோ –வானவர் முற்றும் என்கோ –
4-ஊனமில்செல்வம் என்கோ -5-ஊனமில் ஸ்வர்க்கம் என்கோ –6-ஊனமில் மோக்கம் என்கோ –ஒளி மணி வண்ணனையே

1- கண்ணனை –2- மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை –3-அச்சுதனை —4-அனந்தனை -5-அனந்தன் தன மேல்
நண்ணி நன்குறை கின்றானை -6- ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் யாவரும் தானே

1- முடியானே –2- மூவுலகும் தொழுது ஏத்தும் சீரடியானே –3- ஆழ கடலைக் கடைந்தாய் –4- புள்ளூர் கொடியானே –
5- கொண்டால் வண்ணா –6- அண்டத்து உம்பரில் நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே

1-ஏக மூர்த்தி –2-இரு மூர்த்தி –3- மூன்று மூர்த்தி –4- பல மூர்த்தி யாகி –5-ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் உருவாகி
-6-நாகமேறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே உன் ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவியல்லல் மாய்த்ததே

1- உண்டு உமிழ்ந்தும் –2-கடந்தும் இடந்தும்–3- கிடந்தும் நின்றும் –4–கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் –5–மணம் கூடியும்
-6-கண்ட வாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே

1- கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –2- கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் -3- கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
4- கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் -5- கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் -6- கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ
கடல் ஞாலத்தீற்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே

1-கற்கும் கல்விக்கு எல்லையிலேனே என்னும் –2- கற்கும் கல்வியாவேனும் யானே என்னும் –3- கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் —
4கர்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் -5- கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் -6-கற்கும் கல்வி நாதன் வந்தேறக் கொலோ –
கற்கும் கல்வியீர்க்கு இவை ஏன் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் கான்கின்றனவே –

1-காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் –2- காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் –3-காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்னும் –
4- காண்கின்ற இக்காற்று எல்லாம் யானே என்னும் -5- காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் -6- காண்கின்ற கடல் வண்ணர் ஏறக் கொலோ

1-செய்கின்ற குத்தி எல்லாம் யானே என்னும் -2- செய்கின்றனகளும் யானே என்னும் -3- செய்து முன் இறந்ததுவும் யானே என்னும்
4- செய்கைப் பயன் உன்பெனும் யானே என்னும் -5-செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் -6-செய்ய கமலக் கண்ணன் வந்து ஏறக் கொலோ

1-திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் –2-திறம்பாமல் மலை எடுத்தேனும் யானே என்னும் -3- திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே யானே என்னும்
4-திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே யானே என்னும்
5- திறம்பாமல் கடல் கடைந்தேனும் யானே என்னும் -6- திறம்பாத கடல் வண்ணர் ஏறக் கொலோ

1-இனவேய் மலை ஏந்தினேன் யானே என்னும் -2-இன வேறுகள் செற்றேனும் யானே என்னும் -3-இன வான் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
4- இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -5-இனவாயர் தலைவனும் யானே என்னும் -6- இனத்தேவர் தலைவன் வந்து ஏறக் கொலோ

1-உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் -2- உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் -3- உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும் –
4- உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் -5-உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் -6- உற்றார் இலி மாயன் வந்து ஏறக் கொலோ

1-உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் -2-உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் -3- உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
4- உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் –5-உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் -6- உரைக்கின்ற முகில் வண்ணன் வந்து ஏறக் கொலோ

1- கொடிய வினை யாதுமிலேனே என்னும் -2-கொடிய வினை யாவேனும் யானே என்னும் –3-கொடிய வினை செய்வேனும் யானே என்னும் –
4-கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் — 5-கொடியான் இலங்கை செற்றேனும் யானே என்னும் –6- கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ

1- கோலம் கொள் ச்வர்க்கமும் யானே என்னும் -2- கோலமில் நரகமும் யானே என்னும் -3-கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
4- கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் -5-கோலம் கொள் தனி முதல் யானே என்னும் -6-கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ

1-புள்ளின் வாய் பிளந்தாய் –2-மருதிடை போனாய் –3- எருது ஏழ் அடர்த்த –4-என் கள்ள மாயவனே –5- கரு மாணிக்கச் சுடரே –
6- தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீ வர மங்கையுள் இருந்த எந்தாய் -அருளாய் உய்யுமாறு எனக்கே

1- எம்மானே –2 என் வெள்ளை மூர்த்தி –3- என்னை யாள்வானே –4- எம்மா வுருவும் வேண்டுமாற்றால் ஆவாய் –5- எழில் ஏறே –
6- செம்மா கமலம் செழு நீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே

1- அரி ஏறே –2-என்னம் பொற் சுடரே –3- செங்கண் கரு முகிலே -4- ஏறியே –5- பவளக் குன்றே –6- நால் தோள் எந்தாய் உனதருளே
பிரியாவடிமை என்னைக் கொண்டே குடந்தைத் திருமாலே -தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-

1- என்னப்பன் –2- எனக்கு ஆருயிராய் –3-என்னைப் பெற்றவளாய் -3- பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் -4-என்னப்பனுமாய் –
5– மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த வப்பன் –6-தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே

1- விண் மீது இருப்பாய் –2- மலை மேல் நிற்பாய் -3- கடல் சேர்ப்பாய் –4- மண் மீது உழல்வாய் -5- இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீது இயன்ற புற வண்டத்தாய் -6- எனதாவி உள் மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ

1- வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா –2-மாய வம்மானே –3-எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே -4- இமையோர் அதிபதியே
5- தெண்ணல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திரு வேங்கடத்தானே -6- அண்ணலே உன்னடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே

1- அடியேன் மேவி யமர்கின்ற வமுதே –2- இமையோர் அதிபதியே –3- கொடியாவடு புள்ளுடையானே –4- கோலக் கனிவாய்ப் பெருமானே
5- செடியார் வினைகள் தீர் மருந்தே –6- திரு வேங்கடத்து எம்பெருமானே -நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே

1- வந்தாய் போலே வாராதே –2- வாராதே போல் வருவானே –3- செந்தாமரைக் கண் செங்கனி வாய் –4- நால் தோள் அமுதே –5-எனதுயிரே
6-சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே -அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே

1- அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பா –2- நிகரில் புகழாய் –4- உலகம் மூன்றுடையாய் –5- என்னை யாள்வானே-
-6-நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே

1- பண்ணுளாய் –2- கவி தன்னுளாய்–3- பத்தியினுள்ளாய்–4- பரமீசனே –5- வந்து எண் கண்ணுளாய்–6- நெஞ்சுளாய் -சொல்லுளாய் ஓன்று சொல்லாயே

1- வட்கிலள் இறையும் மணிவண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும்-2- உட்குடையசுரர் உயிர் எல்லாம் யுண்ட ஒருவனே என்னும் உள்ளுருகும் 3- கட்கிலீ-4- உன்னைக் காணுமாறு அருளாய் –5-காகுத்தா கண்ணனே என்னும் -6- திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே

1- மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் –2- மா மாயனே என்னும் –3- செய்ய வாய் மணியே என்னும்
4- தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் என்னும்-5– வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல் என்னும் –
-6- பை கொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற் பாலதுவே

1- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –2- பற்றிலார் பற்ற நின்றானே –3- கால சக்கரத்தாய் –4- கடல் இடம் கொண்ட கடல் வண்ணா –
கண்ணனே என்னும் 5– சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் – 6- என் தீர்த்தனே என்னும்
மா மழைக் கண் பனி மல்க விருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே

1- என் திருமகள் சேர் மார்வனே என்னும் –2- என்னுடைய யாவியே என்னும் -3- நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் –
4- அன்று உரு வேழும் தழுவி நீ கொண்ட -5-ஆய்மகள் அன்பனே என்னும் -6- தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிலள் தனக்கே

1- பெரியவப்பனைப் –2- பிரமன் அப்பனை –3- உருத்திரன் அப்பனை –4- முனிவர்க்கு உரிய அப்பனை –5- அமரர் அப்பனை
–6- உலகுக்கோர் தனி அப்பன் தன்னை

1- மாலரி –2- கேசவன் –3- நாரணன் –4- சீ மாதவன் –5- கோவிந்தன் –6- வைகுந்தன் என்று என்று ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு

1-திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி என்றும் —2-திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் –
3- திருச் செய்ய கமல உந்தியும் –4- செய்ய கமல மார்பும் -5- செய்ய உடையும் -6- திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தை உளானே –

1- தேனை –2- நன்பாலைக் –3- கன்னலை –4- யமுதைத் -4-திருந்து உலகுண்ட அம்மானை -5-வான நான்முகனை மலர்ந்த தண்
கொப்பூழ் மலர் மிசைப் படைத்த மாயோனை –6- கோனை

கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் 1- திரு மார்வு –2- வாய் –3- கண் –4- கை –
-5- உந்தி –6- காலுடை யாடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான்

1- சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –2-கார்மேக வண்ணன் –3- கமல நயனத்தன்
-4- நீர் வானம் மண் எரி காலாய் நின்ற –5- நேமியான் -6- பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே

1- தானேயாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானேயாய்-2- தானேயான் என்பானாகித் –3- தன்னைத் தானே துதித்து –
4- எனக்குத் தேனே –5- பாலே கன்னலே யமுதே –6- திரு மால் இரும் சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –

1- முனியே –2- நான் முகனே –3- முக்கண் அப்பா –4- என் பொல்லாக் கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
-5-என் கள்வா-6- தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே

——-

1- நின்ற வண் கீர்த்தியும்-2- நீள் புனலும்-3- நிறை வேங்கடப் பொற் குன்றமும் -4-வைகுண்ட நாடும் -5-குலவிய பாற் கடலும் உன் தனக்கு
எத்தனை இன்பம் தரும் 6- உன்னிணை மலர்த் தாள் என் தனக்கும் அது இராமானுச இவை ஈந்து அருளே

——

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: