திருப்பாவை — எல்லே இளம் கிளியே – — வியாக்யானம் .தொகுப்பு –

அவதாரிகை-
எல்லாருடைய திரட்சியையும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாட்டில் பாகவத கோஷ்டியைக் காண ஆசைப்பட்டு இருப்பாரை எழுப்பு கிறார்கள்

உக்தி-பிரதி உக்தி- ஸ்பஷடமாக இந்த பாசுரம் – முக்த கண்டம் -வெளிப்படையாக சொல்லுகிறது –திருப்பாவை ஆகிறது இப்பாட்டு ஆகிறது -நானே தான் ஆயிடுக-
இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை என்று வாதல் செய்யாமல் இருக்கிறது என்று இசைந்து அனுஷ்டானம் பர்யந்தம் -காட்ட
தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-
சிற்றம் சிறு காலை பகவத் விஷயம் இது பாகவத விஷயம்-நடு நாயகமான பாசுரம் –இறுதி பாசுரம் தானான தன்மை சொல்லி -நிகமம்ரத்ன ஹாரம் –
எட்டு வரி -எல்லோர் எம்பாவாய் விட்டு –பாசுரத்திலும் நட்ட நடுவில் நானே தான் ஆயிடுக –
மகா பாரதம் -சரம ச்லோகத்துக்காக -கீதை -அர்ஜுனன் யுத்தம் -எதனால் செய்ய –
விபீஷண மித்ர பாவேன அதுக்காகா ஸ்ரீ ராமாயணம் மேம்பொருள் போக விட்டு சொல்ல திருமாலை மேலில் பாட்டில் பாகவத வைபவம்
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனை பாட -என்று
அசல் அகத்து பெண்பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு இவள் அந்த பாசுரத்தை தன மிடற்றிலே இட்டு பாட-எழுப்புகிறவர்கள் -அந்த த்வனி வழியே கேட்டுச் சென்று இவள் பேச்சின் இனிமையாலே – எல்லே இளங்கிளியே -என்கிறார்கள் –
அது தானும் இவர்களுக்கு அத்யந்தம் ஆகர்ஷகமாய் இருக்கையாலே அவரை கொண்டாடுவதற்கு முன்பே –எல்லே-என்று ஆச்சர்யப் படுகிறார்கள் –

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது – கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை – பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை
இவ்விடத்தில் பருவம் எனபது அபிநிவேசத்தை அவற்றுக்கு அபிநிவேச பூர்வகமாக வார்த்தை சொல்ல வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இ றே –
பசுமைக்கும் பேச்சுக்கும் ஒப்பு பருவத்துக்கு ஒப்பு ஆகாதே – ஆஹலாதகரத்வம் -ஆகர்ஷணத்வம் – மனோஹரத்வம் தாமரை –
பிராட்டிமார் பருவத்துக்கு ஒப்பு ஆக மாட்டாதே
இவர்கள் கிளி தாம் இளம் கிளி மென் கிளி போலே மிக மிழற்றும் கிளி மொழியாள்
இளம் கிளி– கிளி போன்றவளே இல்லை முற்று உவமை –தாவி வையம் கொண்ட தாமரைகட்கே -போல

எல்லே –என்னே –சம்போதனம் ஆகவுமாம் – எல்லே ஏடி சாழலே
ஹலா -ஹஞ்சே -ஹண்டே சமஸ்க்ருதம் – ஏலே -திரு நெல்வேலி -பாஷை -அடே சப்தம்
எல்லே என்று பேச்சின் இனிமையாலே ஆச்சர்யப் படுகிறார்கள் –

யின்னம் உறங்குதியோ –
இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க – இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் –
கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே உன் கடாஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும் உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க உறங்கக் கடவையோ -என்றுமாம் –
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன
உத்தேச்யம் உன் வீட்டு  வாசலில் பழி கிடக்க கிருஷ்ணன் உதறி இங்கே வர வேண்டாமோ
வையம் மன்னி வீற்றி இருந்து மண்ணும் விண்ணும் ஆழ்வார் ஸ்ரீ வைஷ்ணன் பாகவத கோஷ்டி மிக உத்தேச்யம்
தனித் தனியே அனைவரையும் காண பெறுதல் பேர் சொல்லப் பெறுதல்
விரல் தொட்டு எண்ணப் பெறுதல் ஸ்பர்ச சுகம் அனுபவிக்கப் பெறுதல்
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் ஆகையாலே எண்ணி முடிக்கும் அளவும் அவளை பிரியாதே காணப் பெறுதல் முதலிய பல பேறுகளை பெறுதல்
பிரத்யஷம் கிடக்க அனுமானம் கொள்ளவோ–இது சித்தம் பாகவதர் கைப்பட்டு கிடக்க
ஆனை வந்து போன பின்பு காலடி -ஆனை வந்து போனதே -அனுமானத்தால் நையாகிகனை கிண்டல் பண்ணி அனுமானம் கட்டி அழுவான்

மாணிக்க வாசகர் திருவாசகம் 4 பாசுரம் இதை ஒட்டி –
ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுவோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உண்ணெக்கு நின்று உருக யா மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையிற்று யிலேலோரேம்பாவாய் –

சில்லென்று அழையேன்மின் –
தன் அனுசந்தானத்துக்கு இவர்கள் அழைக்கிறது விக்நம் ஆகையாலே சிலுகிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –
இவர்கள் வார்த்தை அசஹ்யமோ -என்னில் – திருவாய்மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அசஹ்யமாம் போலே –

நங்கைமீர் போதர்கின்றேன் –
நாங்களும் எங்கள் சொல்லும் பொறாதபடி உன் பூர்த்தி இருந்த படி என் -என்ன சிவிட்கென்ன கூசி – நங்கைமீர் போதர்கின்றேன் —
நம் பாசுரத்தை மிடற்றிலே வைத்துப் பாடுகிற இவ் வனுபவதிற்கு விரோதம் பண்ணலாகாதே என்று எழுப்பாதே இருக்க வேண்டி இருக்க
அது பொறாதே எழுப்புகிற நீங்கள் அன்றோ பூரணை கள் –
நீங்கள் வாய் திறவாது இருக்க வல்லிகோள் ஆகில் நான் புறப்படுகிறேன் -என்ன

வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும் –
நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம் நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
நீர் கட்டு வார்த்தை சொல்ல சமர்த்தர் –
சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம் பண்டே அறியோமோ -என்றுமாம் —

வல்லீர்கள் நீங்களே
இன்னம் உறங்குதியோ என்றும் – வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன
உன் வாசலில் வந்து எழுப்ப சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன
அது என் குற்றம் அன்று -அதுவும் உங்கள் குற்றமே நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள் நம் வார்த்தை அசஹ்யமாம் படி இ றே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –
உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு விரோதியைப் பண்ணி
அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன –
அது கிடக்க ஸ்வரூபம் இருப்பதால்

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் – இல்லை செய்யாதே இசைகை இ றே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –
பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இ றே ஸ்ரீ பரத ஆழ்வான்
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
இல்லாத குற்றத்தை உண்டு என்றாலும்இல்லை செய்யாதே உண்டு என்று இசைந்து -உத்தமன் இருக்கிற குற்றம் மத்யமன்
மத்பாபமே -நிமித்தம் வனபிரேவசம் – மந்தரை கைகேயி தசரதர் ராமர் -யாருமே இல்லை – பிள்ளையாக பிறந்ததே காரணம் –
கௌரவியர்-குணம் அபதானதுக்காக நிர்பந்தம் பண்ணி – அதி ரமணீயமான – தோஷ துஷ்டியான நான்
குற்றம் இசைந்த பின்பு செய்ய வேண்டியது என்ன
பட்டர் -குரட்டு மணியக்காரர் -ஏலம் விட்டு ஸ்ரீ ரெங்கம் -50 லஷம் கொடுத்து மாலை -வரும் -1000 rs விற்பார் ரசிது போட்டி வசூல் பண்ணி கொள்கிறார்
பட்டரை குறை சொல்ல -நம்முடைய தோஷம் -விண்ணப்பித்தது என்ன கைம்மாறு செய்வேன் சால்வை போதினாராம்
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் கொக்கை –பொறை சிரிப்பு கிருபை உபகார ஸ்ம்ருதி இருக்க வேண்டும்

ஒல்லை நீ போதாய் –
எங்களுக்கு ஒரு ஷணமும் உன்னை ஒழியச் செல்லாமையாலே எங்கள் திரளிலே சடக்கென புகுந்து கொடு நில்லாய் –
சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே -என்று அவர்களுக்கும் இத் திரள் இ றே பிராப்யம் –வைகுந்தம் புகுவார் போலே
இப்படி பழியை தம் மேலே ஏறிட்டுக் கொண்ட இவரை சடக்கென இக் கோஷ்டியிலே பிரவேசியாய் -என்கிறார்கள்
ஸ்ரீ ரெங்கம் அத்யாபகர் -சாது கோஷ்டி–

யுனக்கென்ன வேறுடையை-
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய தனியே ஸ்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே உனக்கு வேறு சில உண்டோ –
வைஷ்ணவ விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும் பாகவத விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –
நீ ஒருவருக்கு விரோதி அல்லை நீ புக்குத் திருவடி தொழு -என்ற ஆழ்வான் வார்த்தையை நினைப்பது
உனக்கு என்ன வேறுடையாய் –
உன் படுக்கையில் கிடக்கிற கிருஷ்ணனை இட்டு வைத்து நீ கடுகப் போராய் –இட்டு வைத்து -ஒதுக்கி வைத்து –
அஞ்சு லஷம் குடியில் பெண்களுக்கு உள்ளது ஒழிய உனக்கு வேறே சில உண்டோ –
உன் ஸ்வயம்பாகம் இன்னம் தவிர்ந்திலையோ எங்கள் பெரும் பானை கண்ட பின்பும்
புருஷார்த்தமான இக் கோஷ்டிக்கு புறம்பாய் இருக்கைக்கு மேற்பட்ட அனர்த்தம் உண்டோ
விஷயங்களை விட்டு புறம்பாக இருக்கலாம்
ஈஸ்வரனை விட்டும் புறம்பாய் இருக்கலாம்
ஆத்மாவை விட்டும் புறம்பாய் இருக்கலாம்
அடியார்களை விட்டும் புறம்பாய் இறுக்கக் கடவையோ
அரை ஷணம் வைஷ்ணவ கோஷ்டியை பிரிய நின்று வரும் மத்யஸ்த்யம் எனக்கு என் செய்ய என்கிற ஸூப்ரஹ்மணய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது
கங்கை கொண்ட சோழ புரத்தில் அமைச்சர் -புரோஹிதராகவும் இருந்தவர்
உத்தேச்யமான நம்பெருமாள் திருப்புன்னை கீழ் எழுந்து அருளி இருக்க அங்கு சென்று தண்டன் இடாது எம்பெருமானார் திருவடி இணைகளையே
போற்றித் தண்டன் இடுகிறார்களே-சந்நியாசியான இவரும் அங்கீ கரிக்க லாமோ
எம்பெருமானார் -தாம் அரங்கன் திருவடி நிலை என்று உணர்த்த உணர்ந்தார்

எல்லாரும் போந்தாரோ –
எனக்கு உங்களை ஒழிய சுகம் உண்டோ உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்பட இருந்தேன் – எல்லாரும் போந்தாரோ -என்ன –

போந்தார் –
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன
ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –

போந்து எண்ணிக் கோள் –
புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்- மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் –
நாம் எல்லாம் கூடினால் செய்வது என் என்ன –

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தைக் கொன்று -நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
எதிரிட்ட கம்சாதிகளை அனாயேசேன நசிப்பித்து அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை-
சுபாகு மாரீசன் -தொலைக்காமல் விட்ட -இராவணனை திருத்துவானோ நப்பாசை அகம்பனன் விட்டு மிச்சம் வைத்து அனர்த்தம்
கண்ணன் அப்படி இல்லை கச்ச என்று விடாதே கஞ்சன் மயிரை பிடித்து மதிப்பு அறுத்து குஞ்சி பிடித்து மாற்றாரை மாற்று அழிக்க வல்லான்

மாயனைப் –
தன் கையில் அவர்கள் படுமத்தனை பெண்கள் கையில் படுமவனை –

வல் ஆனை கொன்றானை –
அங்கே குவலயா பீடத்தை கொன்றாப் போலே நம்முடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தைப் போக்கினவனே-

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை —
சாணூர முஷ்டிகாதிகளை நிரசித்தாப் போலே நம்மை தம்மோடு சேர ஒட்டாத இடையர் உடைய சங்கல்பத்தை போக்கினவனே –எதிரிகளை தான் தோற்பிக்குமா போலே நம் கையிலே தோற்ற ஆச்சர்ய பூதனை –

பாட –
நமக்கு அவன் தோற்கும் தோல்விக்கு தோற்றுப் பாட – நம்முடைய தோல்வியும் அவனுடைய வெற்றியையும் பாடி –
தடம் பொங்கத்தம் தோற்றவர்கள் பாடி வாயினால் பாடி அவதார விஷயங்கள் பாடி கேசவனை பாடி -விரோதி நிவர்தகம்
முகில் வண்ணன்பாடி -வடிவு அழகு பாடி சங்கோடுசக்கரம் ஏந்திய தடக் கையன் பாடி -திவ்ய ஆயுதம் சேர்த்தி அழகை பாடி
வெறும் கையுடன் மல்லரை வென்ற படி பேச்சும் உத்தேச்யம் எல்லே -இளம் கிளியே -பாகவதர்

ஸ்வ யத்னத்தால் கடக்க அரிதாய் பிராயச்சித்த விநாச்யமுமாய் இன்றிக்கே இருக்கிற அஹங்கார நிவர்தகனாய்
மற்றும் உள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகனாய் ஆஸ்ரித பரதந்த்ரனைப் பாட ஒல்லை நீ போதாய் – இத் அந்வயம்-
வேறோர் பாடல் மாலை–சாற்றி அருளுகிறாள்
முந்தியது பங்கயக் கண்ணானைப் பாடல் மாலை இது மாயனைப் பாடல் மாலை
வெண்ணெய் திரண்டதனை வேறோர் கலத்திட்டு -திருமங்கை ஆழ்வார் -அதனால் வேறொரு பாடல் மாலை இதற்குப் பெயர் பொருந்துமே
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை பாடும் மாலை
எல்லையில் ஞானத்தன் ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களையும் செய் எல்லையிலா மாயன் கண்ணன்
கண்ணன் முடித்தது ஒரு யானை ஆச்சார்யர்கள் முடித்ததோ பல யானைகள்
வாரி சுருக்கி மதக் களிற்று ஐந்தினையும் சேரி திரியாமல் –பொய்கையார் -47-ஜிதேந்த்ரியர்கள்
கலியும் கெடும்
தீயவன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடியும் நேமிப்பிரான் தமர் போந்தார்
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவான போல் தடம்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் –
பொலிக பொலிக –
அண்ணல் ராமானுசன் தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினரே
இரும்பைப் பொன்னாகுவது போலே நித்ய சம்சாரிகளையும் வெள்ளுயிர் ஆக்கி நித்ய சூரி பரிஷத்தில் வைக்கும் ஆச்சார்யர்கள் மாயம் –
கலியன் அருளிச் செய்யும் வேறொரு பாடல் மாலை அசாதாராணம் –
நல்லீர் அறிவீர் தீயோர் அறிவீர் என்னை அறியீரே
வாழ்ந்தே போம் இந்தளூரிரே

உனக்கு என்ன வேறுடையை -எம்பெருமானார் தர்சனம் என்றே
மாற்றாரை மாற்றழிக்க பாஷண்ட –தற்கச் சமணரும் –சாறுவாக மதம் நீறு செய்த –
நாவுடையாய் -நாத முனிகள்

எல்லே -இளம் கிளியே -கிளி மொழியாள் ஸ்ரீ மதே சடகோபாயா நம -வானமா மலை ஜீயர் காட்டி அருளி –

மென் கிளி போலே மிக மிழற்றும் என் பேதையே திரு மங்கை ஆறங்கம் கூற அவதரித்தார்
அடி சுவட்டில் பேசிற்றே பேசின் கடைக்குட்டி இளம் கிளி-
திரு வெஃகாவில் மடக்கிளி -வருவதை -திரு தேசிகர் திருவவதாரம் -ஸூ சிப்பித்தாரே
பிஷை-பார்வதி ஸ்ரீ மகா லஷ்மி -வாமனன் தாண்டவன் -கூத்தாடி எங்கே மன்யே பிருந்தாவனம் -இன்று கூத்தாடி –
மன்னில் மரக்கால் கூத்தாடினான் காணேடி – மடியில் மான் குட்டி இங்கே பன்றி எங்கே போனது பரார்த்தம் கறவை எருது பார்த்தாயா
இடையனை போய் கேளு என்றாளாம சல்லாபம் சம்பாஷணம் கவி வைத்து – எல்லே நீசாம் -அண்டே மத்யம் -ஹந்தே சகி -ஹலா -சாகுந்தல நாடகம் –
அது போலே
காடுறைந்த பொன்னடி –மலர் கண்டாய் சாழலே எல்லே -ஏடி -சாழலே –
நீசமான சரித்ரம் ஏடி -மலர் கண்டாய் சாழலே -சம்வாதம்
கடுமையாக பேச கற்றவர் – வாழ்ந்தே போம் –
வேம்பேயாக வளர்த்தாளே
குறும்பு செய்வானோர் மகனை
அவன் மார்பில் எறிந்து அழலை தீருவேனே -கொங்கை தன்னை கிழங்கோடு -வல்லீர்கள் நீங்களே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை – நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய்
ஆழ்வார் தனி வழி மடல் பண்ணி அருளி –
சொல்லிவிடுவேன் –
அதில் நின்றும் வாராது ஒழிவது உண்டோ
12 -மதுரகவி ஆண்டாள்
நல் செல்வன் தங்காய்
நல் செல்வன் -நம் ஆழ்வார் -தம் கை மதுரகவி ஆழ்வார்
எம்பெருமானார் -கணித்து -தங்காய் -பிள்ளான் –
எல்லாரும் போந்தாரோ எண்ணிக் கொள் –
வீரத்தில் ஈடுபட்ட ஆனைகளை அடக்கி ஆடல்மா குதிரை யானை வாகனம் கடமா களிறு -யானை வல்லான்
மாற்றாரை விரோதிகளை பொடி படுத்தி
மாயன் -ஆசார்யம் –புத்த விகாரம் தங்கம் நாகை ஈயத்தால் ஆகாதோ மாயப் பொன் வேணுமோ – வைதிகம் ஆக்கி -அவைதிகமான த்ரவ்யம்
நீர் மேல் நடப்பான் -நால்வர் ஆச்சர்யமான கார்யங்கள்
யந்த்ரம் -சில்பி வீட்டில் சென்று -கைங்கர்யம் செய்து –
திருட முடியாதே
கத்தி கழுத்தை அறுக்கும்
ரகசியம் என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது
கண்ணனும் ஆச்சர்யமான ஈடுபாடு-
எல்லாரும் போந்தார் -குண அனுபவம் ருசி உள்ளார் எண்ணிக் கொள் -எண்ணாத மானிடத்தை எண்ணாத பொய்கை ஆழ்வார் தொடங்கி-

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-பொன்னானாய் –புகழானாய் — என்னானாய் — உலகம் ஏத்தும் தென்னானாய் -வட வானாய் -குடபாலனாய் -குண பாலானாய்- இமையோர்க்கும் என்றும் முன்னானாய் –என்று அருளிச் செய்தவர் அன்றோ
போதருகின்றேன் -திரு மங்கை ஆழ்வார் கிளி -சொன்னத்தை சொல்லுமாம் கிளிப்பிள்ளை
கிளி பூவை ஒரே ஜாதி -பொன் உலகு ஆளீரோ -தீ வினையேன் வளர்க்க -கன்மின்கள் -யாம் கற்பியாத மாற்றம் உனக்கு என்ன வேறு உடையை –
மடலூரில் -சர்வ ரஷகனை பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழிவேன் யாம் மடலூர்த்தும் நம் ஆழ்வார் –
கலங்கின திரு உள்ளம் உடைய நம் ஆழ்வார் முதல் ஸ்லோகம் யதிராஜ விம்சதி
பிரசன்னம் சத்வித்யார் திரு உள்ளம் வால்மீகி பிரேம விலாசாயா ஸ்ரீ மாதவாங்கிரி நித்ய சேவா -ஞான விபாகத்தால் வந்த அஞ்ஞானம் அடிக் களைஞ்சு பெரும்
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் பேற்றுக்கு த்வரிக்கையும் உனக்கு என்ன வேறு உடையை
அறிந்த சொல்லில் -நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை –
சீதை பிராட்டி பரத ஆழ்வானை போலே அன்றோ நீர் என்னை எண்ணி நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் ஈதே அறியீர்
வாசி வல்லீர் வாழ்ந்த போம் –உம்முடைய உடம்பு உனக்கு அன்று பக்தாநாம் – ந தே ரூபம் நசா ஆகார ந ஆயுதம் ந ஆபரணம் ஜிதந்தே –
உம் உடம்பை நீரே அனுபவித்து கொள்ளும்
சதுஷ்கவி சித்ரா கவி -வேடிக்கை
மதுர கவி பத்தராவி பெருமாள் பெரும் புறக் கடல் கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -கவியின் பொருள் தானே
விஸ்தார கவி
ஆசு கவி உடனே அருளும் வல்லமை
251 பெரிய திருமொழி பகல் பத்து ஏழாம் நாள் தூ விரிய மலர் உழுக்கி -திருவாலி திருநகர் எம்பெருமான்
பாட்டு கேட்கவும் பெருமாள் முன்னும் பின்னும் சேவிக்க அபேஷை-என்றார் வரம் தரும் பெருமாள் அரையர் -தாளத்துடன் சிகை உடன் பாட
ஏவரி வெஞ்சிலையானுக்கு என் நிலை உரையாயே பசலை நோய் உரையாயே –குறிப்பறிந்து கூறாயே
தானாக நினையாமல் தன் நினைந்து நலிவேற்கு – மீனாய கொடிநெடுவேள் வலி செய்ய மெலிவேனோ -என்னும் அளவும் வந்தவாறே
காம சரங்கள் -உதவிற்றாகிலும் பட்ட புண் -ஆற்ற வரலாகாதோ வித்தராக அருளினார்
ஒ மண் அளந்த தாளாலா -அடுத்த பாசுரம் நம் பெருமாள் மண் அளந்து அருளின படி என் என்னில்
கதை -சொல்லுவர் மத்யானம் -வாமன திரு விக்ரமன் சேஷ்டிதம் தண் குடந்தை நகராளா -அப்புறம் சொல்லி பதிகம் முடிப்பார்கள் –
இந்த பாட்டில் மிகவும் ஈடுபட்டு – மூன்று பதிகங்கள் நடு பதிகம் வந்து என்அடியேன் -தூ விரிய -கள்வன் கொள்
நஞ்சீயர் -நோவு சாத்தி பெற்றி நம்பிள்ளை கூட ச சிஷ்யர்

எல்லே இளங்கிளியே என்கிறது –திரு மங்கை ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்தாம் அடியான் -என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக -ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் -பின்னை மணாளர் தம் திறத்தும் என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் -நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –
நீராடப் போதுவீர் -என்றத்தை -பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்றும் -சந்த மலர்க குழல் –பூம் கோதை –
-எங்கானும் -மானமுடைத்து-இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –
பண்டிவண் ஆயன் நங்காய் -என்று தொடங்கி -அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்
-மென் கிளி போல் மிக மிழற்றும் -என்கையாலும் -இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –
வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் -இப்பாட்டில் வல்லானை கொன்றானை என்கிற வித்தை ஆவரிவை செய்து அறிவார் -இத்யாதியாலும்
-கரி முனைந்த கைத்தலமும்-என்றும் அருளிச் செய்தார் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: