திருப்பாவை — புள்ளும் சிலம்பின காண் — வியாக்யானம் .தொகுப்பு –

அவதாரிகை –
முதல் பாட்டில் -பகவத் சம்ச்லேஷமே பிராப்யம் –அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த–பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று
சாத்ய ஸ்வரூபத்தையும்–சாதன ஸ்வரூபத்தையும்–அதிகாரி ஸ்வரூபத்தையும் –சாதித்து —
இரண்டாம் பாட்டில் –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈச்வரனே என்று இருக்கும்–இச்சாதிகாரிகளுக்கு–சம்பாவிதமாய் குர்வத்ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்–காலஷேபத்துக்காகவும்–ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று
மூன்றாம் பாட்டில் –
பகவத் அனுபவ சஹாகாரிகள் பக்கல் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே–அவர்களுக்கு யாவை யாவை சில அபேஷிதங்கள்–அந்த சம்ருதிகள் அடைய அபேஷிக்கக் கடவது -என்றது-

நாலாம் பாட்டில்–தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்–இப்படி அநந்ய பிரயோஜனராய்–பகவத் ஏக பிரவணராய்–பகவத் அனுபவ-உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு–அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று
ஐஞ்சாம் பாட்டில்–இப்படியே பகவத் அனுபவத்தில் இழிந்தவருக்கு வரும் அனுபவ விரோதிகளை–அவ் வநுபவம் தானே நிரோதிக்கும் என்னும் இடம் சொல்லிற்று
ஆக–இப்படி கீழ் ஐஞ்சு பாட்டாலே —பிராப்யமான கிருஷ்ண அனுபவத்துக்கு–ஏகாந்தமான உபகரணங்களைச் சொல்லி
அநந்தரம் –
மேல் பத்து பாட்டாலே–அந்த உபகரணங்களைக் கொண்டு–அனுபவிக்குமவர்களை எழுப்புகிறது-

ஏழு மலை / ஏழாட் காலம் / ஏழு ஏழு –எந்தை தந்தை –
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –/முமுஷுவாக்க பல படிகளில் முதல் இது வன்றோ –ஆச்சார்ய அனுக்ரஹம் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -இறுதி நிலை –
யதிர்ச்சா ஸூ ஹ்ருதம் -நன்மை என்று பேர் இடலாவது -ப்ராசங்கிகம்/ விஷ்ணோ கடாக்ஷம் மூன்றாவது /அத்வேஷம் -நான்காவது / ஆபி முக்கியம் -ஐந்தாவது /சாது சமாகாமம் -ஆறாவது -/ஆச்சார்ய பிராப்தி ஏழாவது —ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -மார்க்க சீர்ஷம் இது வன்றோ –புருஷகாரம் -அவளுக்கும் ஏழு -படிகள் -பிரகாரங்கள் —1-ஸமஸ்த ஜெகதாம் மாதா -/2- மது கைடபாரீ வக்ஷஸ்த்தல -ஸ்ரீ நிவாஸா -/ 3-வஷோ  விஹாரிணீ -அகலகில்லேன் இறையும்-ஸ்ரீ மன் நாராயாணா -நித்ய யோகம் / 4-மநோ ஹர–இவள் நினைவின் படியே செயல்கள் /5- அபிமத அனுரூப / 6-திவ்ய மூர்த்தி -/ ஓடம் ஏத்தி கூலி கொள்வாரைப் போலே -/ 7-ஸ்ரீ ஸ்வாமி நீ -ஆஸ்ரித  ஜன பிரிய தான சீலே -பெரு வீடு அருளுவான் – வேங்கடேச தயிதா –என் கடன்களை வேக வைக்கவே இங்கே அவன் எழுந்து அருளி இருக்க -அதற்காக கீழே எழுந்து அருளி

தம்தாமுக்கே அவ்வனுபவத்துக்கு பிரதான உபகரணமான ப்ரேமமும்-கர்தவ்யதயா உக்தமான உபகரணங்களும்-அனுபாவ்யனான கிருஷ்ணனும்–அதுக்கு ஏகாந்தமான காலமும்–ஊரிலே கோப வ்ருத்தர் உடைய இசைவும் உண்டான பின்பு
தனித்தனியே அனுபவிக்க அமைந்து இருக்க–ஒருவரை ஒருவர் எழுப்ப வேண்டுகிறது என் என்னில்
பெருக்காற்றில் இழிவாருக்கு துணை தேட்டமாம் போலே–காலாலும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்றும் –
உயிர் காத்து ஆட செய்யுமின் -என்றும்–ஆழியொடு பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்றும்
இழிந்தாரை குமிழி நீரூட்டக் கடவதான விஷயத்தில் இழிகிறவர்கள் ஆகையாலே–துணை தேட்டமாய் ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று–சொல்லுகிறபடியே பர அவஸ்தையிலே புருஷோத்தமனை அனுபவிக்கும் போதும்
விஸ்ருங்கல ஜ்ஞான பலங்களை உடையரான நித்ய சூரிகளுக்கும் துணை தேட்டமாய் இருக்க -இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல் -என்று–அந்த நித்ய சூரிகளுக்கும் அனுபவிக்க ஒண்ணாத படி–மேன்மைக்கும்–நீர்மைக்கும்
அழகுக்கும்–நிரவதிக ஆகாரமான கிருஷ்ணனை அனுபவிக்கும் இடத்தில்
அதுக்கு மேலே நிரதிசய போக்யமான அவ்விஷயத்தை தனியே–அனுபவிக்க மாட்டாத--பிரக்ருதிகள் ஆகையாலும் எழுப்புகிறார்கள் –
அதுக்கு மேலே
இவ்வஸ்துவை அனுபவிக்கைக்கு ருசி உடையராய் இருக்குமவர்கள் இழக்க ஒண்ணாது என்னும் நினைவாலும் எழுப்புகிறார்கள் –
அதுக்கு மேலே
பகவத் விஷயத்தை அனுபவிக்கும் போது ததீயரை முன்னிட்டு அல்லது–அனுபவிக்க மாட்டாதவர்கள் ஆகையாலும் எழுப்பு கிறார்கள் –
விஷயம் தனியே அனுபவிக்க அரியது ஆகையாலும்–இவர்கள் தனி அனுபவிக்கும் பிரக்ருதிகள் அல்லாமையாலும் –ருசி உடையார் இழக்கை நெடும் தட்டு என்று இருக்கையாலும் —ததீயரை ஒழிய அனுபவிக்க மாட்டாமையாலும் ‘-முந்துற உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்பத் தட்டில்லை —எல்லாருக்கும் ஒக்க கிருஷ்ண அனுபவத்தில் கௌதுகம்-அவிசிஷ்டமாய் இருக்கையாலும்–சிலர் எழுப்ப சிலர் உறங்குகை கௌதுகத்துக்கு குறை யன்றோ என்னில்-
அனுபாவ்யமான கிருஷ்ண குணங்கள்–நஞ்சுண்டாரைப் போலே சிலரை மயங்கப் பண்ணுகையாலும்-சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே துடிக்கப் பண்ணுகையாலும்–அவர்கள் கௌதுகத்துக்கு குறை இல்லாமையாலே
சிலரை சிலர் எழுப்பத் தட்டில்லை —இதில்
அனுபோக்தாக்களை குறித்து திருப் பள்ளி எழுச்சி–துணைத்தேட்டம்
இழிந்தாரை குமிழ் நீரூட்ட வல்ல ஆழியான் என்னும் ஆழ மோழையிலே இழியுமவர்கள்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் —செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்–இன் கனி தனி யருந்தான்-
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து
கண்ணபிரானது திவ்ய சேஷடிதங்களும் கல்யாண குணங்களும் நெஞ்சுப்டாரைப் போலே மயங்கப் பண்ணுமே
இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்கப் பண்ணும்–அவாவில் குறை இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்க வில்லை
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற-

இப்பாட்டுக்கு வாக்யார்த்தம்–பகவத் விஷயத்தில் புதியவள் ஆகையாலே இந் நோன்பின் சுவடு அறியாதாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

வியாக்யானம் –
புள்ளும் சிலம்பின காண் –
இப்பெண்கள் –போதோடே வாசலில் சென்று உணர்த்தக் கடவதாக சங்கல்பித்து
போது விடியச் செய்தே கிடந்தது உறங்குவதே -என்று சிஷ்டகர்ஹை பண்ணினவாறே –
போது விடிய வேண்டாவோ எழுந்திருக்க -என்ன —போது விடிந்தது எழுந்திராய் -என்ன –
விடிந்தமைக்கு அடையாளம் என்ன என்று கேட்க —நாங்கள் உணர்ந்து வந்தது போதாதோ என்ன –
உறங்கினார் உணரில் அன்றோ விடிந்தமைக்கு அடையாளம் ஆவது —உண்டோ கண்கள் துஞ்சுதல் -என்கிறபடியே
உங்களுக்கு உறக்கம் உண்டோ–உங்கள் உணர்த்தி விடிந்தமைக்கு அடையாளம் அன்று
வேறு அடையாளம் உண்டோ -என்ன —-புள்ளும் சிலம்பின காண் —
போது விடிந்தது–பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன
அது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன–ஏன் அல்லாவோ என்ன —ஓம் அல்லவீ என்ன —ஆவது என் என்ன –
நீங்கள் அவற்றை உறங்க ஒட்டாதே கிளப்பின வாறே கிளம்பிற்றன–அல்லது விடிந்தமைக்கு அடையாளமோ -என்ன –
இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-
பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை சூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-
நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ —காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்–மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல்-மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது -வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் -என்று கிடந்தாள் -இப்போது இவள் புள் என்கிறது -சேர்ப்பாரை -யில் சொல்லுகிறபடியே ஞான அனுஷ்டங்களாலேபகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை –
ஆகையால்–சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் —பகவத்குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்
தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக–சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –
9/10/11/12 –15 -விடிந்தமைக்கு அடையாளம் இல்லாத பாசுரங்கள்
6/7/8/13/14-விடிந்தமைக்கு-அடையாளம் உள்ள பாசுரங்கள்

பஷி நாதம் கேட்டு முமுஷு ஆகிறோம் மோஷம் அடைகிறோம் பிள்ளை திரு நறையூர் அரையர்ஆசார்ய உபதேசம் பஷி நாதம் –
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் -மேல் கட்டி விதானம் -நீ உருகி நீர் சொரிய கூடாதே சேர்த்தி பார்த்த ஹர்ஷத்தால் –

அபசூத்ராதி கரணம் ஸ்ரீ பாஷ்யம்
ஞானஸ்ருதி ரைக்குவர் கதை – ப்ரஹ்ம ஞானம் பெற -உனக்கு நான் சொல்ல முடியுமா -நான்காவது வரணம் -அடியேன் இடம் ஒன்றும் இல்லை -வந்ததும் சொல்வேன்
ஷத்ரிய ராஜா -சூத்திரன் சோகம் உடையவர் சூத்ரர்-பஷி நாதம் கொடுத்த நீதி –
கடல் கரையில் பஷி புண் படுத்தி பெருமாளை -கதை –குரங்கு மனிசன் புலி கதை புறா கதை விபீஷணன் கட்டம்-விறகிடை வெந்தீ மூட்டி-வேதத்தின் விழுமியதன்றோ கம்பர் பாசுரம் –

கிளி சோழன் -கைங்கர்யம் காவேரி விரஜா சொல்லி –கிளி கைங்கர்யம்

புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
அது கிடக் கிடாய் -இதுவும் உன் செவிப் பட்டது இல்லையோ —புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு -அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்–அவனுடைய இல் -என்னுதல்-
புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் —அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் -என்னுதல் –
திருப் பள்ளி எழுச்சியில் சங்கத் த்வனி கேட்டிலையோ —கிருஷ்ணன் திரு வவதரித்து திரு வாய்ப்பாடியிலே இருந்ததே குடியாக-அவன் அழகிலே பக்த பாவராய்ச் செல்லுகிற காலத்திலே–கொண்டாடுகைக்கு ஒரு திரு முற்றம் உண்டோ என்னில் –
சக்கரவர்த்தி திருமகன் திருவவதாரம் பண்ணி–இருந்ததே குடியாக அவன் அழகிலே ஈடுபட்டு செல்லா நிற்க –
சஹா பத்ன்யா விசாலாட்ஷி நாராயண -என்று–அவர் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே-கிருஷ்ணனையும் கும்பிடு கொள்கைக்கு ஒரு திரு முற்றம் உண்டு

புள்ளரையன் –
பெரிய திருவடியை நிரூபகமாக உடையவன் —ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இ றே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே–பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –திரு அயோத்யை போலே திரு ஆய்ப்பாடியிலும் கோயில் உண்டே–புள்ளரையன் -பெரிய திருவடி-கண்ணபிரான் என்றுமாம் -பெரியதிருவடி இட்டே அவனை நிரூபிக்க

வெள்ளை விளி சங்கு –
சங்கு வெளுத்து இருக்குமது விடிந்தமைக்கு அடையாளமோ–இது வ்யர்த்த விசேஷணம்

விளி சங்கு –
சாமங்கள் தோறும் முறை உடையோரை அழைக்கிறார்கள் ஆகில்–போது விடிய வேணுமோ -அங்கன் அல்ல

பேரரவம் –
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ —ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வநியிலும் இது அதிகமாக வன்றோ த்வநிக்கிறது -நீயும் உணருகைக்கு போரும் துவனி–இவர்கள் சங்கின் வெளுப்பு சொல்லுவான் என் என்னில் –சங்கத் த்வனி வழியே ஊதும் போதை முக முத்ரையும்–சங்கின் வெளுப்பும் உத்தேச்யம் ஆகையாலே
விளி சங்கு -அழைக்கை –கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் -என்னக் கடவது இ றே–கையாலே அழைக்கை என்றபடி-சத்வ உத்தரமான காலத்தில் அடிமை செய்ய வாருங்கோள்–என்று அழைக்கிறபடி-

கேட்டிலையோ –
இது கேட்க பாக்கியம் இன்றிக்கே ஒழிவதே –

புள்ளுக்கு -பெரிய திருவடிக்கு–அரையன் -அரையனான எம்பெருமானுக்கு ப்ரதிபாதகத்வேன–கோயிலான திரு மந்த்ரத்தில்
உகாரத்தை மத்யத்திலே–உடைத்தாகையாலே பரி சுத்தமாய் —அகில ஆத்மவர்க்கத்துக்கும் பகவத் கைங்கர்ய உபாய உக்தமாய்-பகவத் சம்பந்த ஜ்ஞாபகமாய் —தஷிணாவர்த்த சங்க துல்யமான பிரணவத்தின்–மகா த்வநியைக் கேட்டிலையோ

இவர்கள் இப்படிச் சொல்ல பின்பு நிருத்தரையாய் கிடந்தாள் —பிள்ளாய் எழுந்திராய்
பகவத் விஷயத்தில் புதியை இ றே–பாகவத சம்ச்லேஷத்தில் இனிமை அறியாய் இ றே
அனுபாவ்யங்களில் காஷ்டா பூமியான பாகவத சம்ச்லேஷ ரசம் பிறக்கும் அளவும்–பகவத் விஷயத்தில் அவஹாகிக்கப் பெற்றிலையே-நாங்கள் உன்னைக் காண ஆசைப்பட்டவோபாதி–நீயும் எங்களைக் காண ஆசைப்பட வேண்டாவோ —அறிந்து இருக்கிற உங்களை எழுப்பினார் ஆர் என்ன –
ஈட்டம் கண்டிட கூடுமேல் -அது காணும் கண் பயன்–மேலே–உடன் கூடுவது–மேலே–பேராளன் பேரோதும் பிரியாமல் இருக்க-படிப் படி பூர்வர் வார்த்தை–உன்னுடைய வடிவை நாங்கள் கண்டு எங்கள் வடிவை நீ கண்டு அனுபவிக்க–நாங்கள் சொன்னதை மறித்து உன் பால்ய அறியாமை–திருவாய்ப்பாடியில் பட்டர் -சிந்தயந்தி -கோபி -சிந்தித்து கொண்டே இருந்ததே திரு நாமம் —அவள் தான் புதியவள் கிருஷ்ண சம்ச்லேஷத்தில் –வரிந்து போக முடிய வில்லை–நின்றவள் இடம் அவ்வளவு ப்ரீத்தி–மற்றவர் இருப்பதை கண்டாள் இ றே–ஆரம்ப தசை-
கண் தெரியாத அன்பு —ப்ரேமாந்தா -பிரேமத்தால் குருடு -காவல் கிடந்தாரை காணாமைக்கு உடல் ஆகுமே-அது தானே வழி போக உடல் ஆயிற்று–விரஹ அக்னிக்கு -என்ன செய்ய முடியுமா–உசாத் துணை–எங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி -வர வேண்டாமா –

முற்பட த்வயத்தை கேட்டு -இதிகாச புராணங்களையும் வரி அடைவே கற்று
பர பஷ நிரசயத்துக்கு நியாய மீமாம்சை-பொழுது போக்கும் அருளிச் செயலிலே -நம்பிள்ளை -பற்றி பெரியவாச்சான் பிள்ளை
பிள்ளைகள் நம் சம்ரதாயம் பலர்
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் -அறுத்த கூரத் ஆழ்வான்-வித்யா தன அபிஜன மதங்கள்-வாசா மகோசரா மகா குணா தேசிகாக்ரா அகில நைச்ய பாத்ரம் கூரத் ஆழ்வான்
பிள்ளாய் -நைச்ச்யம் பாவிக்கும்
வண்டுகளோ வம்மின் –நீர் பூ -நிலப்பூ -மரத்தில் ஒண் பூ -மூன்று வகை -உண்டு களித்து உய்ய வல்லீருக்கு –
நீர் பூ -திருப்பாற் கடல் சம்ஹிதை ஸ்ரீ -பாஞ்சராத்ரம் அவதரித்த பகவத் சாஸ்திரம் –
நிலப்பூ -ஸ்ரீ ராமாயணம் புராணம் பூ லோகத்தில் சஞ்சரித்த
மரத்தில் ஒண் பூ– உச்சாணி கிளை கர்ம காண்டம் வேதம்

பேய் முலை இத்யாதி –
பேய் முலை நஞ்சுண்டு —பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து–இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி —பேய் இத்யாதி -பேய் உண்டு -பிரகிருதி–முலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்–நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்–உண்டு -அனுபவித்து -அதாவது–பிரகிருதி சம்பந்த நிபந்தமாய்–சேதனருக்கு வரும் அஹங்கார மமாகாரங்களைப் போக்கி -என்றபடி –

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி –
பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்–தாயே ரஷையாக வைத்த சகடம் —அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து-

கலக்கழிய காலோச்சி
சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி —முலை வரவு தாழ்ந்தது என்று–மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது -இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது–பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-
அவள் பயப்படும் படி–கடுக எழுந்து இருக்க–துக்க நிவர்த்தகர் என்று அல்லாதார் நினைக்க–பெரியாழ்வார் சம்பந்திகள் வயிறு பிடிப்பார்கள் –
அச்சம் கெட திருவடி திண் கழல்–திருவடி அவனை ரஷித்து கொடுக்க–சேஷ பூதன் சேஷிக்கும் ரஷகமான திருவடிகள்–
திருக்கால் ஆண்ட பெருமான்–ஆண்ட -அழகான பிரயோகம் —ராமாவதாரம் இளைய பெருமாள் போலே திருக் கால்-

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை –
இவ் அபாய பிரசங்கம் இல்லாத இடத்தில்-பரிவனான திரு அநந்த ஆழ்வான் மேலே சாயப் பெற்றதே -என்று ஹ்ருஷ்டைகள் ஆகிறார்கள் –
விரோதி இல்லாத அங்கும் பரிவு கொண்டு திரு அநந்த ஆழ்வான்—ஆங்கு ஆராவாரம் கேட்டு —நீர் உறுத்தாமல் -பஞ்ச சயனம்-வெள்ளம்-சௌகுமார்யத்துக்கு சேர குளிர்ச்சி உண்டான படி –அரவில் –அந் நீர் உறுத்தாமைக்கு படுத்த படுக்கை –மென்மை குளிர்த்தி நாற்றங்கள் -பிரக்ருதியான திரு வநந்த ஆழ்வான் மேலே -இவன் மூச்சு பட்டு மது கைடபர்கள் பொடி பட்டுப் போகையாலே பயப்படவும் வேண்டா -என்கை –
வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் -என்னக் கடவது இ றே  -துயில் ‘
ஜகத் ரஷண சிந்தனை —பனிக் கடலில் பள்ளிக் கோளைப் பலகை விட்டு ஓடி வந்து–என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -என்று
ஓர் ஆஸ்ரிதனுடைய ஹிருதயத்தை கணிசித்துக் கிடக்குமவன் என்னவுமாம்

அமர்ந்த –
பிராட்டிமார் திரு முலைத் தடத்தால் நெருக்கினாலும் உணராமை –

வித்தினை –
திருவவதாரத்துக்கு நாற்றங்கால்–பிறந்த பிறவிகள் போராமை திரியப் பிறக்கைக்கு அடி இட்ட படி —

உள்ளத்துக் கொண்டு –
அரவத்தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்–அகம்படி வந்து புகுந்து -என்கிறபடியே
திருப் பாற் கடலோடும் திரு வநந்த ஆழ்வானோடும் நாய்ச்சிமாரோடும் கூட தங்கள் நெஞ்சிலே கொண்டு –

முனிவர்களும் யோகிகளும் –
யோக அப்யாசம் பண்ணுகிறவர்களும்–மனன சிலரும் —அவர்கள் ஆகிறார்கள் —வ்ருத்தி நிஷ்டரும்–குண நிஷ்டரும் –
இங்கு உறங்குகிறவர்களையும் எழுப்பு கிறவர்களையும் போலே இருக்கிறவர்கள் –
ஸ்ரீ பரத ஆழ்வானும் இளைய பெருமாளும் போலே–பரமபதத்திலும் -வைகுந்த்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியாய் இ றே இருப்பது
திரு வாய்ப்பாடியிலே முனிவர்களும் யோகிகளும் உண்டோ என்னில்–கிருஷ்ணன் வந்து திருவவதரித்த பின்பு இடையர் உடைய-பசு நிரைக் கொட்டில்களிலே வந்து அவர்கள் படுகாடு கிடப்பார்கள்-பாண்டவர்கள் வர்த்திக்கிற பனிக் கொட்டில்களிலும் இடைச்சேரியிலும் கிருஷ்ணன் படுகாடு கிடக்குமா போலே

மெள்ள எழுந்து –
கர்ப்பிணிகள் பிரஜைகளுக்கு நோவு வாராமே எழுந்து இருக்குமா போலே–வளையம் அலையாமே என்று இ றே எழுந்து இருப்பது -அரி என்ற –
அரி என்கை யாவது–பகவத் அனுபவ விரோதிகளை போக்கி அருள வேணும் -என்கை
பின்னை இவர்களுக்கு பாபம் ஆவது -கிருஷ்ணனுக்கு அசுரர்களால் வரும் தீங்கு–அத்தை அவன் தானே போக்கி தந்து அருள வேணும் என்று-மங்களா சாசனம் பண்ணுகை என்றுமாம்–அவனாலே பயம் கெட்டால் பின்பு அத்தலைக்கு பயப்பட்டு–திருப் பல்லாண்டு பாடும் இத்தனை இ றே-
பகவத் சம்பந்த ஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு இழவு பேறுகள் தன்னளவிலே யாய் இருக்கும்-சம்பந்த ஜ்ஞானம் பிறந்த பின்பு இழவு பேறுகள் அவன் அளவிலே யாய் இருக்கக் கடவது இ றே

பேரரவம் –
பஞ்ச லஷம் குடியிலும்–இந்த த்வநியாயே இருக்கை
எல்லாரும் ப்ரபுத்தரான காலம் ஆகையாலே ஒருவர் சொல்லும் அளவன்றிக்கே எல்லாரும் சொல்லுகை –

உள்ளம் புகுந்து குளிர்ந்து –
படுக்கைக்கு கீழே வெள்ளம் கோத்தாப் போலே–திருநாமம் செவி வழியே புகுந்து வவ்வலிட்டது-அவன் அவர்கள் நெஞ்சிலே புகுந்து ஆனந்திப்பித்தாப் போலே–கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்து கிடக்கிற நெஞ்சு–பதம் செய்யும்படி
இவர்கள் உடைய த்வனியும் எங்கள் நெஞ்சிலே புகுந்து எங்களை–ஆனந்திப்பதது–ஆகையால் எழுந்து இரு என்கிறார்கள் —

வானமாமலை ஜீயர் ஸ்வா பதேசம் அருளி
வாக்ய குரு பரம்பரை -10 -அஸ்மத் குருப்யோ —பிள்ளாய் -வெறும் தரையில் ஞானம் உண்டாக்கும் அஸ்மத்-குருப்யோ -பஞ்ச சம்ஸ்காரம் அர்த்தங்கள் சாதித்தவர்கள் -எல்லாரையும்–ஆழ்வார் பதின்மர்
காஞ்சி ஸ்வாமிகள் -வேற–புள்ளரையன் கோயில் பிரணவம்–பேரரவம் பாகவத சேஷத்வம்–சங்கம் த்வனி இதில் மட்டுமே பெரியாழ்வார் –
பிள்ளாய் -மங்களா சாசன பரர்-
பேய்ச்சி முலை -நாள்கலோர் நாள் ஐந்து திங்கள் அளவில் தளர்ந்தும் சகடத்தை சாடிப் போய் திருக்கால் ஆண்ட பெருமான்
விஷ்ணு சித்தர் -உள்ளத்து கொண்டு —அமளியினோடும் அரவிந்த பாவையும் தானும்
பெரியாழ்வார்
அறிவில் குறைந்தவர் அஞ்சி ஞான விபாகம் முதிர்ந்த கார்யம் -அஞ்ஞானம்–தோட்டம் கைங்கர்யம் புள்ளும் சிலம்பின
புள்ளரையன் வேதாத்மா வேண்டிய வேதங்கள் ஓதி கருட அம்சம்
சங்கு -பாண்டியன் கொண்டாட -பட்டர்பிரான் –
பூதனை–நாள்களை நாலைந்து திங்கள் அளவில் சகடம் இரண்டையும் சேர்ந்து அனுபவித்து-உள்ளத்து கொண்டவர் -அரவத்தஅமளி–மனக்கடலில் வாழ வல்ல-
-முனிவர் யோகி இரண்டும் இவருக்கு பொருந்தும்–பாமாலை முனிவர்–பூ மாலை கைங்கர்ய நிஷ்டர்–கோபுரம் கட்டினார் -எல்லாம் செய்தவர்–
மெல்ல எழுந்து -பாண்டிய ராஜ சபைக்கு எனக்கு -பொட்டு தழும்பு காட்டி வெல்லவோ–நான் பார்த்து கொள்கிறேன் –
அம்மான் ஆழிப் பிரான் அவன் யார் நாம்–ஹரி என்றார் வேதம்–வேண்டிய ஓதங்கள் வேதான் அசேஷான்–உள்ளம் புகுந்து குளிர்ந்ததே

சேர்ப்பார்களை பஷிகள் ஆக்கி ஜ்ஞான கர்மாக்களை சிறகு என்று–சிலம்பின–வர்ணாஸ்ரம நித்ய கர்மங்களை அனுஷ்டிக்க எழுந்து புறப்படமை
புள்ளரையன்–பெரிய திருவடிக்கு அரையனான எம்பெருமானுக்கு கோயில் திரு மந்த்ரம்-சங்கு வலம்புரியோடு ஒத்த பிரணவத்தை–வெள்ளை பாவனத்வம்–விளி -பகவத் விஷய ஜ்ஞாபகத்வம்

பிராட்டி பரிகரம்-ஆசார்யர் -ஆசார்யர் பரிகரம் -பாகவதர்கள் –ஸூய அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு-ஆசார்ய அபிமானமே உத்தாராகம் இத்தை ஒழிய கதி இல்லை -ஆசார்ய சம்பந்தம் அவசியம் -இரண்டும் அமையாதோ நடுவில் பெரும் குடி என்-கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் போது சுள்ளிக் கால் போலே ஆசார்யர் அன்வயத்துக்கு -பாகவதர்கள் இதுவும் வேணும் –
மால் தேடும் ஓடும் மனம் கோல் தேடி ஓடும் கொழுந்தே –நீர்ப்பூ ஷீராப்தி நிலப்பூ -விபவம் மரத்தில் ஒண் பூ -பரத்வம் அனுபவிக்கும் -வண்டுகள்
-ஆசார்யர் -சிஷ்யர் பெறாத பொழுது குமிறிக் கொண்டு இருப்பாராம் -புள்ளும் சிலம்பின -வெள்ளை விளி சங்கின் பேரரவம் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்கையாலே இதிலே பாகவத் சேஷத்வமும் அனுசந்தேயம் -வேதம் கருடன் சந்நிதியில் ஆரம்பித்து முடிப்பார்கள் -புள்ளரையன் -பிள்ளாய் -பால்யர் போலே துடித்து கற்க ஆசைப்பட வேண்டும் -பாலாயாம் சுக போதாயாம் -க்ரஹண தாரணம் போஷணம் -சிறுவர்களுக்கு திறல் உள்ளவர் -நம்பிள்ளை -பிள்ளை உலகாசிரியர் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -விசேஷ அர்த்தம் -தேற்றத்து பிரிவிலை ஏகாரம் இரண்டும் உண்டே-பேய் முலை-உலகியல் சம்பந்தம் பிரகிருதி வேஷம் நன்மை போலே பிரமிக்கும் படி -நஞ்சு அஹங்கார மமகாரங்கள் தூண்டி மாயும் படி செய்யும் கள்ளச் சகடம் –கமன சாதனம் –அர்ச்சிராதி கதி  கதி -நல்ல சகடம் -கர்ப்ப கதி -யாம்ய கதி -தூமாதி கதி ஸ்வர்க்கம் -இவை கள்ளச் சகடம் -இவற்றைத் தொலைத்து -காலோச்சி ஆசார்யர் திருவடிகளே சரணம் -திருக்காலாண்ட பெருமானே ஆளுவது உபயோகப்படுத்துதல் –துயில் அமர்ந்த வித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்து மூல பீஜம் ஆசார்யர் –ஹரி ஹரிக்கிறவர் -பாவங்களைப் போக்கும் ஆசார்யர் –

-புள்ளும் சிலம்பின காண் -புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு -பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே –எம்பெருமானாரும் -துத்தோ தந்வத் தவள மதுரம் சுத்த சத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதித ராமாயம் பணீந்த்ரவதாரம் -என்றபடி பால் போன்ற நிறத்தவர் –
இந்த சங்கு வாழ்ந்த இடம் புள்ளரையன் கோயில் -பூ மருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனர் அரங்கமே -திருவரங்கத்திலே வாழ்ந்து அருளியவர் –
கருதிமிடம் பொருது -அருளிச் செயலின் படியே -காசீ விப்லொஷதி நாநா -கார்ய விசேஷங்களுக்காக பாஹ்ய சஞ்சாரங்கள் செய்து கொண்டே இருக்கும்
அப்படி அன்றிக்கே திருச் சங்கம் -உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே -என்னும் படியே இருக்கும்
ஸ்வாமியும் அப்படியே யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரெங்கே ஸூக மாஸ்வ- என்றபடி -கோயில் சங்கு எம்பெருமானாருக்கு மிகப் பொருந்தும்-

குளிர்மாலை–சாத்தி அருளுகிறாள்
உள்ளம் புகுந்து குளிர்ந்து –முனிவர்கள் யோகிகள் சொல்லும் ஹரி என்ற பேரவம் -உள்ளே புகுந்து-அந்தியம் போதில் அரியை அழித்தவனை-அரி -ஹரி –ஹரிர் ஹரதி பாபானி சிம்ஹம் –ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகள் மூன்றும் -அழித்து அருளுபவன்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: