அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகள் —

எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே –பெரியாழ்வார் திருமொழி –1-5-10-
முன்னை அமரர் முதல் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட மன்னனை -2-5-1-
அமரர் பெருமானை ஆயர் தம் கண்ணனை –2-5-3-

————————–

என்னுடைய வின்னமுதே இராகவனே –தாலேலோ பெருமாள் திருமொழி -8-1-
எங்கள் குலத்தின் இன்னமுதே இராகவனே தாலேலோ –பெருமாள் திருமொழி-8-3-
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே -பெருமாள் திருமொழி-10-1-

—————————

தன் அடியார்க்கு இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே -பெரிய திருமொழி -2-2-8-
அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் -பெரிய திருமொழி -3-5-2-
அனைத்து உலகும் உடையான் –என்னை யாளுடையான்- பெரிய திருமொழி-5-1-1-
தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே -பெரிய திருமொழி -5-6-8-
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் உன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-
அரங்கமாளி என்னாளி விண்ணாளி –பெரிய திருமொழி 7-3-4-
சிறுபுலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்த்துள்ளும் உறைவாரை உள்ளீரே —பெரிய திருமொழி -7-9-1-
அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை —சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-4-
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான் –பெரிய திருமொழி -8-4-3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை -தக்கானை –8-9-4

————————

பேரகத்தாய் பேராது என் நெஞ்சினுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே –திரு நெடும் தாண்டகம் -8

———————

நண்ணித் திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானை –இரண்டாம் திருவந்தாதி -90
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை -இரண்டாம் திருவந்தாதி -98

———————————————

திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே –மூன்றாம் திருவந்தாதி –20-
திரு மா மணி வண்ணன் செங்கன் மால் எங்கள் பெருமான் -அடி சேரப் பெற்று –மூன்றாம் திருவந்தாதி -59-

—————————

நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -நான் முகன் திருவந்தாதி -14
அவன் என்னை யாளி அரங்கத்து அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் -நான் முகன் திருவந்தாதி -30-

—————————————–

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே அருளாய் -திரு விருத்தம் -80-

——————————————-

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் காண்பரிய நுண்புடையீர் நும்மை நுமக்கு -பெரிய திருவந்தாதி -8-

—————————————

வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும் தாயோன் தம்மான் என்னம்மான் –திருவாய்மொழி -1-5-9-
ஒண் சுடர்க் கற்றையை அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை -என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –திருவாய்மொழி -1-7-4-
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரானே —திருவாய்மொழி-1-8-10-
அவையுள் தனி முதல்வன் கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் – திருவாய்மொழி-1-9-1-
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடையம்மான் -திருவாய்மொழி–1-9-2-
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ -திருவாய்மொழி -2-2-10
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா-திருவாய்மொழி-2-6-1-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –எம்பிரானை –திருவாய்மொழி-2-6-3-
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் –எந்தை –திருவாய்மொழி-2-7-2-
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை -திருவாய்மொழி–3-5-11-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கரு மாணிக்கம் எனதாருயிர் –திருவாய்மொழி-3-6-10-
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய் போதனை –எந்தை பிரான் தன்னை –திருவாய்மொழி–3-7-3-
அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை –திருவாய்மொழி-4-5-5-
என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே –திருவாய்மொழி-7-1-8-
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற செய்குந்தன் தன்னை –திருவாய்மொழி-7-9-7
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடைய கருமா மேனியன் –திருவாய்மொழி-8-3-9-
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா –திருவாய்மொழி–8-5-1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா -திருவாய்மொழி—8-5-6-

——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: