அமுதம் -அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள் —

எந் தொண்டை வாய்ச் சிங்கம் வா வென்று எடுத்துக் கொண்டு அந் தொண்டை வாயமுது ஆதரித்து ஆய்ச்சியர் தந்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

வங்க முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே

நீல நிறத்தழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ

தன்னைப் பெற்றேற்குத் தன வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்

பொன்னி நெய்யொடு பாலமுதுண்டு

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன்

ஆராவின்னமுதுண்ணத் தருவன் நான்

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால் என்னிளம் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்

ஆடியமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு நம்பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போலே உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்

————————————————–

சீதை வாயமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் சிதையேல் என்று

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே

பதினாராமாயிறவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஓன்று நூராயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்

எழிலுடைய அம்மனைமீர் என் அரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ வழகர் எம்மானார் என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே

ஆராவமுதம் அனையான் தன அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே

—————————————————

அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே –சீராமா தாலேலோ

எம்பெருமான் தன சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே

——————————-

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விழாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே எந்தன் ஆருயிர் அனைய வெந்தாய் பாவியேன் உன்னை யல்லால் பாவியேன் பாவியேனே

———————–

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –

—————————————-

ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா

வெந்திறல் களிறும் வேலைவாயமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கு அருளி
எமக்கும் ஈந்தருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்

உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திரு மார்பில் தந்தான்
சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்ராமம் அடை நெஞ்சே

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய் சீரார்
திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே

ஆதியை அமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணி கண்டேனே

பெண்ணுருவாகி அஞ்சுவை யமுதம் அன்று அளித்தானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே

பாராயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட சீரானை எம்மானை —
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே

அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தனை —
கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே

பெண்ணாகி இன்னமுதம் வஞ்சித்தானை –கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே

வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் –கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செலும் கடல் அமுதினில் பிறந்த அவளும்
நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்

தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை

வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை

குறை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குலவியுறை கோயில் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்

வஞ்சனையால் வந்தவள் தன உயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு
வலி மிக்க கஞ்சனது உயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய்

ஆய்ச்சி மறைய வைத்த நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம் –புள்ளம் பூதங்குடி தானே

பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்கு ஓர் ஆமையதாகிய ஆதி –
நின்னடிமையை அருள் எனக்கு –திருவெள்ளறை நின்றானே

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை யதன்மேய அஞ்சனம் புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை

அங்கண் ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த எந்தை –தென் திருப்பேர் எங்கள் மால்

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்து யாய்ச்சி ஓச்சி கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்

உலகேழும் ஒழியாமை முன நாள் மெய்யினள்வே அமுது செய்ய வல ஐயனவன் மேவு நகர் –நந்தி புர விண்ணகரம்

விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு

வலம் மறுக வளை மருப்பை பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமாள் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே உனது அடியே சரணாமே

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையைப் அமுதம் பொதியின் சுவையை கரும்பினை
கனியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே

வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை —
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைத் தடம் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதத்தினைப் பைந்துழாய் மாலை ஆலியில்
கண்டு மகிழ்ந்து போய் ஞான முன்னியைக் காண்டும் நாங்கூரிலே

துளக்கமில் சுடரை அவுணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய் அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே

வானை ஆரமுதம் தந்த வள்ளலை தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டியருளும் அமரர் தம் கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே

நித்திலத் தொத்தை நெடும் கடல் அமுதனை

நீள் நாகம் சுற்றி நெடுவரையிட்டு ஆழ்கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான்

தூயானைத் தூய மறையானை தென்னாலி மேயானை மேவாள் உயிருண்டு அமுதுண்ட வாயானை

————————————————————

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை
அரங்கம் மேய அந்தணனை
அந்தணர் தம் சிந்தையானை விளக்கு ஒளியை மரகதத்தைத் திருத் தண் காவில் வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே

——————————————————-

அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நல்மாலை ஏத்தி நவின்று

—————————–

மருந்தும் பொருளும் அமுதமும் தானே

———————————————–

அன்பாவாய் ஆராமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்

————————————————

தீவினைக்கு அரு நஞ்சை நல்வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை —
எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே

——————————

நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு

———————————————-

தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி
அதினின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே —

————————————-

மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெருமலையை —

திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை

——————————————————–

மாயோம் தீய வலவலைப் பெரு மா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன்

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடராழி நெடுமால் அமுதிலும் ஆற்ற வினியன் நிமிர் திரை நீள் கடலானே

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே

அமரர் முழு முதல் ஆகியவாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே

ஆராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவே செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீள் முடி நாண் பின்னும் இழை பலவே

சொல்லீர் என்னாமனை என்னாவி யாவிதனை எல்லையில் சீர் என் கரு மாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறற்கரிய வீடுமாய் அல்லி மலர் விரை யொத்து ஆணல்லன் பெண்ணல்லன்

வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே

மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்த் துளக்கற் றமுத்தமாய் எங்கும் பக்க நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே

கொந்தார் தண் அம் துழா யினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னி மற்று எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும்
என் அக்காரக் கனியே உன்னை யானே

சோதியாகி எல்லா வுலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ வேதியர் முழு வேதத்தமுதத்தை தீதில் சீர்த் திரு வேங்கடத்தானையே

அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை யடிசில் என்கோ

கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை

கனியைக் கரும்பின் இன்சாற்றைக் கட்டியைத் தேனை யமுதை முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையினாரே

எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய வமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே

பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு அருமை ஒளிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை

ஆவியே ஆராமுதே என்னை யாளுடை தூவி யம் புள்ளுடையாய் சுடர் நேமியாய்

தேனை யமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப யானும் எம்பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே

வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே

என் பொல்லா மணியே தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல தானே வெம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்

கண்ணபிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஒரு உடம்பிலிட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால் புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே

சென்னி நீள் முடியாதியாய உலப்பில் அணி கலத்தன் கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே

ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரியேறே

வாராவருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய் ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்

தண் திருவல்ல வாழ கன்னலம் கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை
என்னலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்

குமுறும் ஓசை விழ ஒலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை
நீர் உமக்கு ஆசை இன்றி யகற்றினீர்

மாய வம்மானே என்னம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திரு வேங்கடத்தானே

அடியேன் மேவி யமர்கின்ற வமுதே இமையோர் அதிபதியே கொடியா வடு புள்ளுடையானே

செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே சிந்தா மணிகள்
பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே

இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே அமுதே அப்பனே என்னை யாள்வானே

கன்னலே அமுதே கார்முகில் வண்ணனே

அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை யாருயிரேயோ

கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே
சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா

தேனை நன்பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகாண்ட வம்மானை

கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய் வடிவிணையில்லா மலர் மகள் மற்றை நிலமகள்
பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே

கண்டு கொண்டு என் கண்ணினை யாரக் களித்து பண்டை வல்வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் அண்டத் தமரர் பெருமான் அடியேனே

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை யந்தோ யெனதென்பதென் யான் என்பதென்
தீர இரும்புண்ட நீரது போலே என்னாருயிரை
ஆரப் பருக எனக்கே ஆராவமுதானாயே

எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என்னன்பேயோ

—————————————-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்
அறிதற நின்ற இராமானுசன் எனக்காரமுதே

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என் தன மா நிதியே

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றறவோடும் படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க ட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுதுணர்ந்த
அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்து இப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே

கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று
உண்டு கொண்டேன் இன்னம் உற்றனவோதிலு லப்பில்லையே

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: