ஸ்ரீ நரசிம்ஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் —

திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தண்டு என்று பாடுதுமே

——————————-

கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

கோளரியின் இன்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூருகிரால் குடைவாய்
மீள வவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர் பதி மிக்கு-

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் அமையும் ஆனவனே -ஆயர்கள் நாயகனே –

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான்

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் –ஏதம் ஒன்றுமிலாத வண் கையினார்கள் வாழ திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே

கொம்பினார் பொழில்வாய்க் குயிலனம் கோவிந்தன் குணம் பாடும் சீர் -செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் –எம்பிரான் தன சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே

வல்லெயிற்றுக் கேழலுமாய் வாள் எயிற்றுச் சீயமுமாய் எல்லையில்லாத்
தரணியையும் அவுணனையும் இடந்தானூர் –மதிள் அரங்கம் என்பதுவே

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாயலரத் தெழித்தான் கோயில் –தண் அரங்கமே

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய்
கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில் –புனல் அரங்கமே

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய் உம்பர் கோன் உலகேழும் அளந்தாய்

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் –இங்குப்புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் –பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே –

——————————————————————–

யசோதை இளம் சிங்கம் –நந்தகோபன் குமரன் –சிங்க குமரன்
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து-
-வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

———————————————

குண்டு நீருறை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் உன்னைக் கண்டுமாலுரு வோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல் –

———————————————

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்-ஊன் நிறத் துகிர்த்தலம் அழுத்தினாய்-உலாயசீர்
நால் திறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த பற்ப நாபன் அல்லையே —

சிங்கமாய தேவ தேவ

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் யேயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய்

—————————————————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப் பிரான் அரங்கத்தமலன் –

——————-

மறம் கொள் ஆளரி யுருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பணி தர
இருந்த நலிமயத்துள் –பிருதி சென்றடை நெஞ்சே

பொன்னிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனதுடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து
அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் –வதரியாச்சிராமத்துள்ளானே

தூய அரியுருவில்–காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே

ஏனோர் அஞ் வெஞ்சமத்துள் அரியாய் பரிய இரணியனை ஊனாரகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இரு சுடராய் வானாய்த்
தீயாய் மாருதமாய்
மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானே -தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்ச் செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றமே

அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளன் இடம் –சிங்க வேள் குன்றமே

ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே

மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் போன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம் —-சிங்க வேள் குன்றமே

எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுரு வென்று இருந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே

முளைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே

நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம் –சிங்க வேள் குன்றமே

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான் அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிடம்– சிங்க வேள் குன்றமே

செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை -இரும் தமிழ் நூல் புலவன் -செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே

தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய கோணாகணையாய் குறிக் கொள் எனை நீயே

பள்ளியில் ஓதி வந்ததன் சிறுவன் வாயில் ஓராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக் கேணி கண்டேனே

அவுணர்க்கு என்தானும் இரக்கம் இலாதவனுக்கு உறையுமிடமாவது –நீர் மலையே

தாங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து –இடம் நீர் மலையே

அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –கண்டு கொண்டேன் கடல் மல்லைத் தல சயனத்தே

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய்

எரியன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா அரி யுருவாம் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரானது இடம் –பரமேச்சுர விண்ணகர மதுவே

பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ அங்கவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைங்கண் இரண்டு எரிகான்ற நீண்ட எயிற்றோடு பேழ்வாய் சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே

சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை

ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்

ஓடாத வளரியின் உருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம் –நாங்கூர் தன்னுள் –திருத் தேவனார் தொகையே

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெஞ்சினத்து அரி பரி கீறிய அப்பன்
வந்துறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமே

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா வாற்றலும் ஆய எந்தை –நாங்கூர்த் திரு மணி கூடத்தானே

அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் –திரு வெள்ளியங்குடி யதுவே

தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை –யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே

எங்கனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் -பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்திழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது அங்கனே ஒக்க அரி யுருவாளன் அரங்க மா நகர் அமர்ந்தானே

முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாளுகிரால் போழ் பட ஈர்ந்த புனிதனூர்–நறையூரே

பைங்கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி -அங்கை வாள் உகிர் நுதியால்
அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே

அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தாற்கு விருந்தாவீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே

ஓடா அரியாய் இரணியனை ஊனிடந்த சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை நாள் தோறும் நாடி நறையூரில் கண்டேனே

ஓடா வளரியின் உருவாய் மருவி ஏன் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா –நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பியோ

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானை
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து –அண்டா நின்னடி யன்றி மற்று அறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனதாகம் கீண்டு –எம் மாயோன் –அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே

பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்துண்டு உமிழ்ந்த பரமன் தன்னை

ஆமையாகி அரியாகி அன்னமாகி –முன் காமற் பயந்தான் கருதுமூர் கணபுரம் நாம் தொழுதுமே

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம்
வெஞ்சமத்து பிளந்து வளைந்த உகிரானைப் — கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானே பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை

வாள் அவுணன் பூநாகம் கீண்டதுவும் ஈண்டு நினைத்து இருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் அத்தனையும் காணேன் நான் கண்ணபுரத் துறை யம்மானே

பரிய இரணியனது ஆகம் அணி யுகரால் அரி யுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திருமாலிரும் சோலை நின்ற நங்கள் பிரானை இன்று நணுகும் கொல் என் நன்னுதலே

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்டிட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால்

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று –முனிந்த பெருமை கொலோ
கரும் கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே

அங்கு ஓர் ஆளரி யாய் அவுணனை பங்கமா இரு கூறு செய்தவன்

தளையவிழ் கோதை மாலை இருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ
வளை யுகிராளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒருகிரால்
பிள வெழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே

கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த ஓடா அடலரியை உம்பரார் கோமானை
தோடார் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமே

————————————————

பூங்கோதயாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்

புரியொருகை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலதியை
யல்லால் மற்று எண்ணத் தான் ஆமோ இமை

முரணவலி தொலைதற்காம் என்றே முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண் நிரந்த வள்ளுகிரால்
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை

எளிதில் இரண்டடியும் காண்பதற்கு என்னுள்ளம் தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே களியில் பொருந்தாதவனைப்
பொரலுற்று அரியா இருந்தான் திரு நாமம் எண்

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உரத்தினால் ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஒரரியாய் நீ இடந்த தூன்

வயிரழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறிலக வாய் மடித்தது என் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையா நின் சேவடிமேல் ஈட ழியச் செற்று

——————————-

கொண்டது உலகம் குறளுருவாய் க கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிலர் வைத்தது
உண்டதுவும்
தான் கடந்த வேழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள் வான் கடந்தான் செய்த வழக்கு

உற்று வணங்கித் தொழுமின் உலகு எழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே

———————————-

இவையவன் கோயில் இரணியனதாகம் அவை செய்தரி யுருவமானான் -செவி தெரியா நாகத்தான் நால் வேதத்து உள்ளான்
நறவேற்றான் பாகத்தான் பாற் கடலுளான்-

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம் தெரியுகிரால் கீண்டான் சினம்

செற்றதுவும் சேரா விரணியனை சென்று எற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய்
முற்றல் முரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பொழித்தாய் மூரிச் சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து மங்க விரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த திருமால்
திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து

———————————————————-

தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் வகிர்த்த வளை யுகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ யுயர்த்தி உள் பாங்கி நீ யே அரு நான்கும் ஆனாய் அறி

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை
வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியான் அன்றே –
உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த மீப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ

இவையா பில வாய் திறந்து எரிகான்ற இவையா எரி வட்டக் கண்கள் இவையா எரி பொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு

அழகியான் தானே அரியுருவான் தானே பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்
தானேழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீனாய் உயிர் அளிக்கும் வித்து

—————————————————–

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் ஒன்றும் ஓவா வாற்றான் என் நெஞ்சகலான் அன்று அங்கை
வன்புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான் அன்புடையான் அன்றே யவன்

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே தழீ இக்கொண்டு போரவுணன் தன்னை கழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால்

————————————————–

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல்கட்டி செங்குருதி சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி ஆரா வெழுந்தான் அரியுருவாய்

———————–

தன்னுடைய தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே
வல்லாளன் மன்னு மணிக் குஞ்சி பற்றி வர வீர்த்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை

அன்னத்தை மீனை அரியை அருமறையை

கோட்டியூர் அன்ன வுருவின் அரியை

வேளுக்கை ஆளரியை

—————————————————–

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாணுதலே

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையா வென்று இரணியன் துண் புடைப்ப அங்கு
அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளி இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன் மணி நீல வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவிலமே

அரி ஏறே என்னம் பொற் சுடரே —

போழ்து மெலிந்த புன்செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழது பிளந்த சிங்கம் ஒத்ததால்
அப்பன் ஆழ துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே

செல்ல வுணர்ந்தவர் செல்வன் தன சீரன்றிக் கற்பரோ -எல்லையிலாத பெரும் தவத்தால் பல செய்ம்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் இரணியனாகத்தை மல்லரி யுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை மாக வைகுந்தம் காண்பதற்கு
என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே

என்நெஞ்சத்துள் இருந்து இங்கு இருந்த தமிழ் நூலிவை மொழிந்து வன்னெஞ்சுத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்காப்படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

பிரியாது ஆட்சி என்று பிறப்பு அறுத்து ஆள அறக் கொண்டான் -அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினனே

———————-

பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட
நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டு வந்து என்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே

வளர்ந்த வெங்கோபம் அடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமானுசன் என் தன மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே

————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: