ஸ்ரீ நப்பின்னை பிராட்டி பரமான அருளிச் செயல்கள்
நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே
நான் எத்தனையும் இலாதாய் நப்பின்னை கானில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல் தனி வித்தினை -என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட மன்னனை
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன் ஆடி அமுது செய்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் –பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை யொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ வொட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டு ஒளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்த தன்றியும் உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
—————————
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திரு வேங்கட மா மலை மேய கோனே என் மணம் குடி கொண்டு இருந்தாயே
பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன காரணத்தால் வெந்திறல் ஏழும் வென்ற வேந்தன்
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன்துணை
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு என்தானும் இரக்கம் இல்லாதவனுக்கு உறையும் இடமாவது –நீர்மலையே
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில மகள் மற்றைத் திரு மகளோடும் வருவான் சித்ர கூடத்துள்ளானே
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து –நின்மலன்
பின்னை தன காதலன் தன பெரும் தோள் நலம் பேணினாள்
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா
சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன கோயில்
வாராரும் முளை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்துவன் தாளார்ந்த காரார் திண் விடை யடர்த்து வதுவையாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
வன்தாள் சேத தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை –நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
அண்டர் கோன் என்னானை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்
அம்பொனாருலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
விடை ஏழ் வென்று மென் தோள் யாய்ச்சிக்கு அன்பனாய்
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
ஆயிரம் பேருடையவாளன் பின்னைக்கும் மணவாளன்
வியமுடை விடையினம் உடை தரமடமகள் குயமிடை தடவரை அகலமதுடையவர்
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு –பரமன் பரஞ்சோதி
வடிப்பவள வாய்ப்பின்னை தோளிக்கா வலலேற்று எருது இறுத்து கோப்பின்னும் ஆனான் குறிப்பு
ஏழ் விடை அற்றச் செற்றனை
ஏறின பெருத்த எருத்தம் கோடு ஒசியப் பெண்ணசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாயர் ஏறு
ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ பீடுடை முன்னை யமரர் முழு முதலானே
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீ இக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்
இன வேறுகள் செற்றேனும் யானே என்னும்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் –அதுவிதுவுது என்னலாவன வல்ல உன் செய்கை நைவிக்கும்
கெண்டை ஒன கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல மாயக் கோலப்பிரான் தன் செய்கை
நினைந்து மணம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் என்ன மாயம் கொலோ
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை யாவியே என்னும் நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிலல் தனக்கே
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா
—————————————-
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி பரமான அருளிச் செயல்கள்
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற
நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறியாழியும் காசும் கொண்டு விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலையதே
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே
ஓன்று நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற வணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே
—————————————-
ஸ்ரீ சத்ய பாமா பிராட்டி பரமான அருளிச் செயல்கள்-
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து
நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்
என்னாதான் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள் தன நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதான் வண்மையைப் பாடிப் பற எம்பிரான் வண்மையைப் பாடிப் பற
—————————————————————————————
பதினாறாயிரம் தேவிமார் பரமான அருளிச் செயல்கள்
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புனர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டப் பிடிகள் பகடுரிஞ்சிச் சென்று மாலை வாய்த் தட்டித் திளைக்கும் தென் திரு மாலிரும் சோலையே
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எரிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை –மாலிரும் சோலையதே
பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாண் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே
பதினாறாமாயிறவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
புக்காடரவம் பிடித்தாட்டும் புனிதீர் இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்
எக்கே இதுவென் இதுவென் இதுவென்னொ –
—————————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply