ஸ்வாமி எம்பெருமானார் அருளிய சரணா கதி கத்யத்தில் -திருக்கல்யாண குண அனுபவம் -2—ஏரார் குணமும் -எழில் உருவும் – 43 பட்டம் -ஸ்ரீ அழகிய சிங்கர் -அருள் உரை சுருக்கம்

ஸூ பாச்ராயம் -எம்பெருமான் எழில் திருமேனி –ஸூ பம் –ஆஸ்ரயம்-சுபங்களுக்கு இருப்பிடம் எனபது அல்ல -சுபமாயும் ஆஸ்ரமாயும்
பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் சங்கல்ப நாமயம்
தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம்யஹம் முகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-17-4-
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்ட அபஹாரிணாம்
ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்ய மாநோ நராதிப
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத் அத்யத்புதம் -ஆளவந்தார்
ஈஸ்வரன் தனக்கும் போக்யதமமான நித்ய விக்ரஹ அனுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கை ஆழ்வார்
தம்மை ஈஸ்வர விஷயத்தில் தேஹாத்மா அபிமானியாக அருளிச் செய்வர்
மாணிக்கத்தினால் செய்த குப்பி தன்னுள் இருக்கும் பொருளைக் காட்டுவது போலே தியாத்மா ஸ்வரூபத்தை திருமேனியே காட்டித் தரும்
ஆராவமுதம் அங்கு எய்தி அதினின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே அது நிற்க -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
திருமேனி த்யானத்தினால் இந்த்ரிய ஜெயம் –அதனால் சாஷாத்காரம் -ஸ்ரீ கீதை –மாம் என்று தொட்டுக் காட்டின திருமேனி –
மாம் ஏகம்-சரணம் வ்ரஜ –விக்ரஹத்தோடு கூடியவனே இலக்கு –அஹம் -மாம் –திவ்ய மங்கள விக்ரஹ விசேஷம் காட்டப் படுகின்றன –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ அஹம் த்வா மோஷயிஷ்யாமி -என்று தொட்டுக் காட்டின திருமேனியும்
-திருமஞ்சனக் கட்டியத்தில் இன்றும் ஸ்ரீ பார்த்த சாரதிக்கு சாதிக்கிறார்கள் –
இவை -வாத்சயாதிகள் எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்
வைத்த அஞ்சேல் என்ற திருக்கையும் -கவித்த திருமுடியும் திரு முகமும் திரு முறுவலும் திரு ஆசன பத்மத்திலே
அழுத்தின திருவடிகளுமாய நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்-
கையில் உழவு கோலும் -பிடித்த சிறுவாய்க் கயிறும் -சேநாதூளி தூச ரிதமான திருக் குழலும் –
தேருக்கு கீழே நாட்டின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்திய வேஷத்தை -மாம் என்று காட்டுகிறான்

அரூபி ஹி ஜ நார்த்தனா – ந தே ரூபம் ந சாகாரா –
ச ஏஷாஸ் அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு ஹிரண்ய கேச –
ஆ பிரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண –
சர்வே நிமேஷா ஜக்ஞிரே வித்யுத புருஷாததி
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்யவர்த்தீ
நாராயணஸ் சரசி ஜாசன சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரிடீ
ஹாரீ ஹிரண்மயவபு திருத்த சங்க சக்ர
கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –8-8-1-

நம் ஆழ்வார்கள் வடிவு அழகுக்கு அவ்வருகு ஸ்வரூப குணங்களில் இழிய மாட்டார்கள் -அவன் தன்னோடு பிராட்டிமாரோடு
சேஷ பூதரோடு வாசி இல்லை —எல்லாருக்கும் அபிமதமாய் இருக்குமாயிற்று திரு மேனி
ஸ்வரூப குணங்களும் உபாஸ்யம்-
இச்சாக்ருஹீத அபிமத உரு தேஹ-அவனுக்கும் அபிமதம்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே -பிராட்டிக்கும் அபிமதம்
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே –பெரிய திருமொழி -2-2-9-
மணி வண்ணா -பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி –
வ்யாமோஹம் இன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவஸா பிரதிபெதிரே -துரு யோதான் சபையில் கேசவன் திரு முடி ஒன்றாலேயே ஈர்க்கப் பட்டனர்
இளைய பெருமாள் ஸ்ரீ குஹப் பெருமாளை அதி சங்கை பண்ண -இருவரையும் அதி சங்கை பண்ணி
ஸ்ரீ குஹப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இ றே-
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது –
சதா பச்யந்தி பண்ணினாரோபாதி சக்றுத் தர்சனம் பண்ணினாரையும் ப்ரேமாந்தராய் பய சங்கை யாலே
அநு கூலரையும் அதி சங்கை பண்ணி பரிந்து நோக்கும் படிப்
பண்ண வற்றாய் இ றே பகவத் விக்ரஹ சௌந்தர்யம் இருப்பது
ஆங்கு ஆரவாரம் கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் – 10
வைரப்பெட்டி திறந்து வைரம் பார்ப்பது போலே ஆழ்வார் திரு உள்ளத்துக்குள்ளே கண்கள் சிவந்து –
-திருவவயவ திரு வாயுத திரு ஆபரண சோபைகள் தெரியுமே –

பர ரூபமாவது -நித்தியமாய் -ஏக ரூபமாய் -நித்யருக்கும் முக்தருக்கும் போக்யமாய் – குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு –
ஆதியம் சோதி உரு -வானுயர் இன்பம் மன்னி வீற்று இருந்த ரூபம் -ஆவரண ஜலம் போலே -விரஜா நதி தீர்த்தம் அங்கே –
வ்யூஹம் -திருப் பார் கடல் -சங்கர்ஷணாதிகள் -கேசவாதிகள் -திரு உருவம் -ஸ்வேத தீப வாசிகள் -சனகாதிகள் -பாற் கடல் போலே வ்யூஹம்
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் -அஷ்டாங்கயோக ஸ்வரூப ஸுவ யத்னத்தாலே காண வெண்டும்படியாய் இருக்கும்
விபவம் -விபூதியில் உள்ளாரோடு சஜாதீயம் -அக்காலம் அத்தேசம் இருந்தவர்களுக்கு மட்டுமே -பெருக்காறு போலே -அனுபநீயம்
-மண் மீது உழல்வாய் —ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பாச்யாத்யனானவனுக்கு துர்லபமாயும்
இவை போல் அன்றிக்கே விடாய் கெடப் பருகலாம் படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலே ஆயத்து
இவனுக்கு தேச கால கரண விப்ரக்ருஷ்டம் இடைவெளி இன்றிக்கே
கோயில்களிலும் கிருஹங்களிலும் என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற பின்னானார் வணங்கும்
சோதி யான அர்ச்சாவதாரம் -மடுக்கள் -பன்மை –பல இடங்களிலும் சந்நிதி பண்ணி நிற்கிற படியை நினைத்து அன்றே அருளிற்று –
பெருக்காற்று நீரே தானே மடுக்களில் தங்கி இருக்கும் -அனைத்து குணங்களும் இங்கே உண்டு
தமர் உகந்தது எவ்வுருவம் -அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் மற்று அப்பேர்-
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீர் கடல் வண்ணனே —
ஸ்வயம் வ்யக்த -ஆர்ஷ வைஷ்ணவ திவ்ய மானுஷ ஸ்தானங்களிலே சர்வ சஹிஷ்ணுவாய்
அர்ச்சக பாரதந்த்ர்யத்துக்கு எல்லை நிலமாய் சேஷ சேஷி பாவச பளமாய் இருக்கும் ரூபம்
தத்வ த்ரயத்தில் –விக்ரஹம் தான் -ஸ்வரூப -குணங்களில் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் -ஸ்வ அனுரூபமாய்
-நித்தியமாய் -சுத்த சத்வாத்மகமாய் -சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே
இருக்கிற பொன்னுருவான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் -நிரவதிக தேஜோ ரூபமாய் சௌகுமார்யாதி
கல்யாண குண நிதியாய் -யோகித் த்யேயமாய்-சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய் -அநந்த அவதார கந்தமாய்-சர்வ ரஷகமாய் -சர்வ அபாஸ்ரயமாய் –
அஸ்த்ர பூஷித பூஷணமாய் இருக்கும் வஸ்து –

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்பார்களே
சக்ருத் த்வத் ஆகார விலோக நாசய த்ருணீக்ருதா நுத்தம புக்தி முத்திபி மஹாத்மபி-ஆளவந்தார் –
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதார் அத்தோள்
தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –
கம்பீர புண்ய மதுரம் மம தீர் பவந்தம் க்ரீஷ்மே தடாகமிவ சீதம் அநு பிரவிஷ்டா -தேசிகன்
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து -புருடன் மணிவரமாக -\
சஹச்ர நாமம் -ஸூ ஷேனன் -அத அந்யத் -ரஹச்யம் –ஸூ சேனா யஸ்ய -ஸூ ஷேண-திருமேனியே அவனது சேனை போன்றது
அத அந்யத் ரஹச்யம்-சோபனா சுத்த சத்வ மயீ-பத்த முக்த நித்ய விஜய உபகரணத்வாத் சேநேவ-பஞ்ச உபநிஷத் காய அச்யேதி ஸூஷேண
பரவாசுதேவன் நிறம் கருமையே –
பார் உருவி நீர் எரி கால் விசும்புமாகிப்
பல் வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
இமையவர் தம்திரு உரு வேறு என்னும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
ஓன்று மா கடல் உருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம் -2-
மா கடல் முகில் இரண்டையும் சொல்லி -இரண்டின் ஸ்வ பாவங்களும் உண்டே அவனுக்கு
யதா பாண்டாவிகம் -யதா இந்திர கோப -யதா மஹா ரஜ நம் வாச -யதா சக்ருத் வித்யுக்தம் -உப நிஷத்
வெண் கம்பளம் -பட்டுப் பூச்சி -கு ஸூ ம்பப்பூவின் சாயை கொண்ட ஆடை -ரோஸ் நிறம் -மின்னலின் பொன் நிறம்
-திரு வவதாரங்களில் அவன் ஏறிட்டுக் கொள்ளும்
மா கடலில் நின்றும் முகில் தோன்றி எங்கும் பரவுமா போலே பர வா ஸூ தேவனாகவும் –
-பரந்த கடலில் பள்ளி கொண்டு இருப்பவன் முகில் வண்ண விஷ்ணு மூர்த்தியாகவும்
தோன்றி வானத்தில் நிலைத்து வியன் மூ வுலகுக்கும் அமுதம் அளிக்கின்றவன் ஆகிறான் –
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
திறேதைக் கண் வலை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பேரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தொரு உரு வென்று உணரலாகாது
ஊழி தோர் ஊழி நின்று ஏத்தலல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யாரொருவர் காண்கிற்பாரே –-திரு நெடும் தாண்டகம் -3
ஸ்வரூபத்தைக் காற்கடைக் கொண்டு -அலஷ்யம் செய்து பற்ற வேண்டும் படி இ றே வடிவின் போக்யதை இருப்பது
திருவடிவில் கரு நெடுமால் —கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை -கருமையே ஸ்வ பாவிகம் –
கருத யுகத்தில் வெண்மை -த்ரேதா யுகத்தில் -சிவப்பும் -த்வாபர யுகத்தில் -திரு மழிசை ஆழ்வார் பாசுரம் —
சிவப்பும் நீலமும் இன்றி பாசியின் பசும் புறம் போலே வெளுத்த பச்சை – கலி யுகத்தில் கருப்பாயும் இருக்கும் –
சத்வம் ரஜஸ் தமஸ் -முக் குணங்கள் -கருத யுகம் சத்வம் நிறைந்து -அதனால் அவர்கள் -ருசி அனுகுணமாக வெண்மை –
த்ரேதா யுகம் -ரஜஸ் குணம் நிறைந்து -அதனால் சிகப்பாயும் –
த்வாபர ரஜஸ் தமஸ் கலந்ததால் -சிவப்பும் நீளமும் கலந்த நிறம்
உபநிஷத் -அஜாம் ஏகாம் லோகித ஸூ க்ல கிருஷ்ணாம் -ரஜஸ் சத்வம் தமஸ் -க்ரமத்தில்-சிவப்பு வெளுப்பு -கருப்பு -என்றது –
இதே முறையில் திருமங்கை ஆழ்வார் முதலில் த்ரேதா யுகத்தை எடுத்து அருளுகிறார்
க்ருத யுகத்தை -பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -வளை யுருவாய் -சங்க நிறம் வெண்மை -என்று அருளிச் செய்கிறார்
நால் தோள் அமுதம் -அமுதினில் வரும் பெண்ணமுது -தேவர்களுக்கு உப்புச் சாறு கிடைத்த காலம் அன்றோ
தேவதைகளுக்கும் தனக்கும் எனக்கும் கடலிலே அமுதத்தை உண்டாக்கின காலம் –
தேவதைகள் பந்தகமான அம்ருதத்தைக் கொண்டு போக -எம்பெருமான் பெரிய பிராட்டியாரை சுவீகரிக்க -ஆழ்வாருக்கு அமுது நால் தோள் அமுதே
பெரிய திரு நாளில் ஆதரம் உடையார் பங்குனி மாசத்துக்கு பின்பு செய்வதை பெரிய திரு நாளுக்கு பின்பு செய்கிறோம் என்னுமா போலே –
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வஸ் ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா-ஸ்ரீ விஷ்ணு புராணம்
கலியுகத்தில் தன பக்கல் அபிமுகராய் ஒரு வர்ண விசேஷத்திலே ஆசை பண்ணுவார் இல்லாமையாலே ஸ்வாபாவிகமான வடிவு
தன்னைக் கொண்டு இருக்கும்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன் வண்ணன் -கரு நிறமும் சிவந்த கண்களையே எனக்கு காட்டி அருளினான் என்கிறார் திரு மங்கை ஆழ்வார்
நீல தோயாத மதயஸ்தா -என்று காணாமல் வேதங்கள் கூற நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் -திரு விருத்தம்
அவனிடம் நெருங்காமல் விமுகனாய் இருக்கும் எனக்குக் காட்டி அருளினது போலே இல்லையே இவர்களுக்கு
நை சர்கிகமான இயற்கையான விரக்தியையும் பிரேமத்தையும் கொண்டவர் அன்றோ அவர்கள்
நை சர்க்கிகமான பகவத் வைமுக்யத்தையும் அவிஷய ப்ராவண்யத்தையும் உடைய நான் அவ்வாறு இவ்வாறாகக் கண்ட காட்சியை
வேதங்கள் தான் கண்டதோ ஆழ்வார்கள் கண்டார்களோ
கார் வண்ணம் திரு மேனி -13/இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ட பெரு வாயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -25-
மின்னிலங்கு திரு வுருவு -22 என்பர் மேலும்
சக்கரத் ஆழ்வான் உடைய பொன் நிறம் முழுவதும் பரவி மின்னிலங்கு திரு வுருவம் ஆயிற்று என்பர்
காள மேகத்தை அருண க்ரணத்தாலே வழிய வட்டினால் போலே திரு வாழி ஆழ்வான் உடைய தேஜஸ் திரு மேனி எங்கும்
பரவி இருக்கையாலே சொல்லுகிறது –
நீல தோயத மதயஸ்தா -ஆதித்ய வர்ணன் -வித்யுத் வர்ணன் -ததா ச பகவத் விக்ரஹ பாலாதபா நுலிப்த மரகத கிட்டி நிபோ விபாதி -போலே
மரகத பச்சைக் கல் மேலே பால சூர்யா சிவந்த வர்ணம் பட்டது போல என்று உதாரணம் காட்டும் வேதாந்த சஙகக்ரஹ உரை வாக்கியம்
ஸ்ரீ கோதா ஸ்துதியில் -தூர்வாதள ப்ரதிமயா தேஹ காந்த்யா-கோரோச னாருசி ரயா ச ருசேந்திராயா —
ஆஸீத் அனுஜ்ஜித சிகாவல கண்ட சோபம் -மாங்கல்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் -என்று
ஸ்ரீ பெரிய பிராட்டியுடைய ஸூ வர்ண வர்ணமும் ஸ்ரீ கோதா தேவியின் பச்சை நேரமும் எம்பெருமான் மெல் பட்டு
மயில் கழுத்து போலே காட்சி அளிக்கிறது என்கிறார் ஸ்ரீ தேசிகன்

ஊழி முதல்வன் உருவம் போல் -ஆண்டாள்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1- யன்பர் நம்மாழ்வாரும் –
யுகம் தோறும் மாறுவதை -முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்
வண்ணம் என்னும் கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டும் இந்தளூரீரே
அடியவர்கள் உகந்தத்தை நாம் செய்யவே அடியவர்கள் நம்மை உகப்பார்கள் என்பதால் –அவனது ஸ்வா பாவிக வண்ணத்தை
காட்டி அருள உரிமையுடன் பிரார்த்திக்கிறார்
இவனுடைய அசாதாரண விக்ரஹம் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கும் -என்று சாஸ்த்ரங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில்லே கேட்டுப் போந்த வடிவு தான் இருக்கும்படி இது காண் -என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ்வடிவைக் காட்டி அருள வேண்டும்
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் -நீர்மை பொற்ப்புடை தடத்து வண்டு விண்டுலாம் –
நீல நீர்மை என்றிவை நிறைந்த காலம் நான்குமாய் மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே -திருச் சந்த விருத்தம் -44
நீர்மை -சுவை நிறம் -சர்வ ரச வஸ்து அன்றோ -நிறம் மணம் ரசம் இவை திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு இல்லையே -திவ்ய விக்ரஹத்துக்கு மட்டுமே
வளையுருவாய் திரிந்தான் -சங்கம் வண்ணம் அன்ன மேனி -என்கிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -இவ்வெழுப்புக்கு
ஆஸ்ரயம் சர்வ ரச என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக-
செம்பொன் நீர்மை -ருக்மாபம் -சுட்டுரைத்த நன்பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
நீலம் -கருமை -நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் –பகவத் அனுக்ரஹத்தையும் அதிசயித்து இருப்பதே அநாதி கால துர்வாசனை –
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த வ்யூஹம் -வெவேறு வர்ணங்கள் -இவற்றினுடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய ஸத்தா நாதி பேதங்களும்
துரவத ரங்க ளுமாய்-குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்
சொன்னாலும் புத்தி பண்ணவும் அரிதாய் -அவதார ரகஸ்யங்கள் ஆகையாலே குஹ்ய முமே இருக்கும் –

——————————————————————————————–

ஸ்வ அபிமத -அநு ரூப -ஏக ரூப-அசிந்த்ய -திவ்ய -அத்புத -\நித்ய -நிரவத்ய -நிரதிசய -ஔஜ்வல்ய –
சௌந்தர்ய –
சௌகந்த்ய-
சௌகுமார்ய-
லாவண்ய-
யௌவனாத் –
அநந்த குண நிதி திவ்ய ரூப —
ஸ்ரீ கதய த்ரயத்திலும் ஸ்ரீ கீதா பாஷ்யத்திலும் -இதே ஸ்ரீ ஸூக்திகள்
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும்-மேனி யம்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் -இவர் ஆர் கொல் என்ன -அட்ட புயகரத்தேன் என்றாரே -பெரிய திருமொழி -2-8-7-

அத்புத -சர்வதா சர்வை சர்வதா அனுபவேபி அபூர்வவத் அதி விஸ்மய நீயத்வம் -அத்புதத்வம் –
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்-அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதமே -2-5-4-
நைகமாய -முக்த சிஸூ ரூப -அபரிமித ஜகந்தி கரண-நிராலம்பன -ஏகோதக -வடதளசய நாத்ய -அநந்த -அதர்க்க்யாஆச்சர்யோ நைக மாய -ஸ்ரீ பட்டர்
பாலனதனதுருவாய் யெழ் உலகுண்டு ஆலிலையின் -மேலன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ -விண்ணதோ -மண்ணதோ -சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் -முதல் திரு -69-
————-
நித்யம் நித்யாக்ருதிதரம் -அவதார திருமேனிகள் அநித்யமானாலும் சத்யம் அப்ராக்ருதம் –
ஸ்வரூபம் போலே அநாதி நிதமாய் திவ்ய மேனியும் பர வா ஸூ தேவனுக்கு நித்தியமாய் இருக்கும்
நிரவத்யம் -தோஷம் இல்லாமல் –
யோகம் செய்பவர்களால் அறிய முடியாத தோஷம் ஸ்வரூபத்துக்கு உண்டே -திவ்ய திருமேனிக்கு இல்லையே
நித்ய நிரவத்ய -ஒன்றாகக் கொண்டு எப்பொழுதும் தோஷம் அற்று இருக்கை -என்றுமாம் -அதாவது என்றும் ஒக்க ஸ்வா ர்த்தமாய் இராது ஒழிகை
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ச ஆயுதா நி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே —
வாசி வல்லீர் இந்தளூரீரே வாழ்ந்தே போம் -நீரே -உம்முடைய உடம்பு ஆசைப் பட்டாருக்காக ம் கொண்டது என்று இருந்தோம்
-அங்கன் அன்றாகில் நீரே கட்டிக் கொண்டு அழும் –
நிரதிசய ஔஜ்வல்யம் -எல்லா தேஜஸ் களையும் அகப்படுத்திக் கொண்டு இருக்கும் ஔஜ்வல்யம்
பானௌ க்ருஹீத்வா விதுரம் சாத்யகிம் ச மஹா பலம்
ஜ்யோதீம் ஷ்யாதித்யவத் ராஜன் குரூன் பிரசாதயன் ஸ்ரியா
என்று ஸ்ரீ கண்ணபிரான் தேஜஸ்
ந தத்ர சூர்யோ பாதி ந சந்திர தாரகம் நே மா வித்யுதோ பாந்தி குதோசயம் அக்னி
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி
ஜ்யோதீம்ஷ்யர் கேந்து நஷத்ர ஜ்வல நாதீன்யா நுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய ஜ்வலந்தம் தம் நமாம் யஹம் –
நந்தாத கொழும் சுடரே
ஒண் சுடர்க் கற்றை
ஆதியம்சோதி
திவி சூர்ய சஹச்ரச்ய பவேத் யுகபதுத்திதா
யதி பாஸ் சத்ருசீ சா ஸ்யாத் பாசஸ் தஸ்ய மகாத்மான -ஸ்ரீ கீதை -11-12
நிரவதிக தேஜோ ரூபமாகையாவது -நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக சஜாதீய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
ஏக சஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோத சரீர தேஜஸ் சைக் காட்டிலும் ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோ அதிசயம் போலே
இவை சாவதிக தேஜசாம் படி தான் நிரவதிக தேஜசை வடிவாக உடைத்தாய் இருக்கை -மா முனிகள்
தத்வ த்ரய வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –கத்யோத -மின்மினிப் பூச்சி

தாஸாம் ஆவிரபூத் சௌரி ஸ்மயமாந முகாம்புஜ
பீதாம் பரதர ச்ரக்வீ சாஷான் மன்மத மன்மத –ஸ்ரீ ஸூ க ப்ரஹ்மம் –என்று சௌந்தர்யம் -அவயவ சோபை –லாவண்யம் -சமுதாய சோபை
தென்திருப்பேரையில் சௌந்தர்ய அனுபவம் –செங்கனி வாயின் திறத்ததாயும்-செஞ்சுடர் நீள்முடித் தாழ்ந்ததாயும் -சங்கோடு சக்கரம் கண்டுகந்தும் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் திங்களும் நாளும் விழா அறாத தென் திருப் பேரையில் வீற்று இருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழி நாணும் நிறைவும் இழந்ததுவே-7-3-3-நிறைவு -மடப்பம் -தயக்கம் –
தாய்மார் தோழி மார்கள் என்னை இழந்தார்கள் -நான் என்னையே இழந்தேன் -நெஞ்சு நாணும் நிறையும் இழந்தது –
அம்ருத மதநத்தில் தான் எட்டு வடிவு கொண்டால் போலே காணும் இதுவும் -ஆழ்வார் மனமும் -விஷய அதீனமாக பல வடிவு கொள்ளுகிறபடி
அவனுடைய ஐஸ்வர்யம் அடைய -முழுக்க -இதுக்கு -உண்டாகக் கடவது இ றே –
மந்திர பர்வம் -தேவ -அசூர -ஸ்ரீ கூர்மம் -நிலைத்து நிற்க மலையின் மேல் கொண்ட வடிவு
-தேவ அசுரர்களால் முடியாத போது தனித்து நின்று கடைந்த வடிவு –
அமுதினில் வரும் பெண்ணமுதம் கொள்ள வடிவு -அமுதம் கொடுக்க மோகினி வடிவு
சென்று சேர்வாருக்கு உசாத் துணை யறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் –

சௌகுமார்யம் -திரு வண் பரிசார அனுபவம் நம் ஆழ்வாருக்கு -புஷ்ப ஹாசம் -மிருதுவான தன்மை
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உள் ஒளி காட்டுகின்றீர்
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கோல் வடிவும் கனி வாயும் தே நீர்க் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலை தன மேல் தண் கார் நீல முகில் போலே தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே –8-5-4-
ஸூ குமாரௌ மஹா பலௌ -என்கிறாள் ஸூர்ப்பணகையும்
நாய்ச்சிமாரையும் உறைக்கப் பார்க்கப் போறாத படி புஷ்ப ஹாச ஸூ குமாரமாய் இருக்கை –
தாமரைப் பூ மகரந்த தூள் விழுந்தாலும் நெருப்பு போல் துடிக்கும் பெரிய பிராட்டியும் கூசிப் பிடிக்கும் மெல்லடி
-என்ன துணிச்சலுடன் இரண்டு தாமரையும் தாங்கி இருக்கிறாள் -பட்டர்
அர்ச்சாவதார திருமேனி சௌகுமார்யம் -ஆசார்யர்கள் அனுபவம் ஆலவட்ட கைங்கர்யம் –
ஸ்ரமமனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச்சேரியிலே
தணியா வெந்நோய் தீர்க்க -பிறவி தீர்க்க -திரு நீல மணியார் மேனியோடு திருவவதரித்து அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் இவர் காண்மின் –
புஷ்பம் போன்ற திவ்ய ஆயுதங்களும் மலை போலே ஏந்தி உள்ளானே
நிரதிசய ஸூகஸ்பர்ச -அல்லாத ஆபரணங்கள் அழகுக்கு உறுப்பாகையாலே-போகத்தில் வந்தால் கழற்ற வேண்டி வரும்
எம்பெருமானது திவ்ய ஆபரணங்களோ-என்னில் பிராட்டிமாரோடே கலவியிலும் கழற்ற வேண்டாதபடி ஸ்ரக் சந்த நாதிகளோபாதி அநு கூலமாய் இருக்கும்
திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணங்கள் என்பதால் நிரதிசய ஸூ க ஸ்பர்சம் இங்கே தனியாக எடுத்து அருளிச் செய்ய வில்லை
இருந்தாலும் -அவனது திருமேனி சௌகுமார்யம் அனுசந்தித்து நம்மாழ்வார்
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம் -அணியார் ஆழியும் சங்கும் ஏந்துமவர் காண்மின் –
-தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் –மலை எடுத்து சுமப்பவர் போலே பொங்கும் பரிவால் ஆழ்வார் அருளுகிறார் –

லாவண்யம் -சமுதாய சோபை -லவணம் போலே எங்கும் ஒக்க வியாபித்து நின்று ரசத்தை தரவற்றாய் இருக்கை
அஹிர்புத்த்ய சம்ஹிதை -பூயிஷ்டம் தேச ஏவாஸ்த்பி பஹூலாபி ம்ருதூக்ருதம் சஷூர் ஆனந்த ஜனனம் லாவண்யம் இதி கத்யதே –
சோபயன் தண்ட காரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா -மங்களானி-லாவண்யம் கண்ட ரிஷிகள் பல்லாண்டு பாடினார்கள் –
நம்மாழ்வார் திருக் குறுங்குடி நம்பி இடம் லாவண்யம் அனுபவித்தார்
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் –நம்பி -பரி பூரணன் -நாமும் நம் ராமானுஜனை உடையோம் –
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் -5-5-11-வாமன ஷேத்ரம் இதனால் வைஷ்ணவ வாமன ஷேத்ரம் ஆனதே
குறுங்குடி –விபவ லாவண்யம்
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காண கொடாள்-சிறந்த கீர்த்தி திருக் குறுங்குடி நம்பியை
நான் கண்ட பின் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட
பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே –
ஹித வசனம் கேட்கைக்கு உள் அவகாசம் இல்லாதபடி நிறைந்து நின்றான் -வெறும் புரத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே
திருவாழியும் இருக்க என்னை மீட்கப் போமோ -வடிவு அழகு எல்லாம் ஒரு தட்டும் கையும் திருவாழியுமான அழகும்
ஒரு தட்டுமாய் இருக்க பலிக்கு அஞ்சி மீளப் போமோ –
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே -5-5-1-

யௌவனம் –யுவா குமார -நித்ய யௌவனம் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: