-ஸ்வாமி எம்பெருமானார் அருளிய சரணா கதி கத்யத்தில் -திருக்கல்யாண குண அனுபவம் -1—ஏரார் குணமும் -எழில் உருவும் – 43 பட்டம் -ஸ்ரீ அழகிய சிங்கர் -அருள் உரை சுருக்கம்

-ஸ்வாமி எம்பெருமானார் நம்மை உஜ்ஜீவிக்கிப்ப அருளிச் செய்த கத்ய த்ரயம் -பற்றிய பிராசீன ஸ்லோகம்

தத கதாசித் ச ஹி ரங்க நாயிகா
ஸ்ரீ ரெங்க நாதா வபி பால்கு நோத்தரே
முதாபி ஷிக்தௌ ச ததா ப்ரபத்ய தௌ
கத்யத்ரயம் சாப்யவதத் யதீஸ்வர

ஸ்வாமி அருளிச் செய்த நவ ரத்ன கிரந்தங்களும் -நான்கு வகைப் படுத்தி ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்லோகம் -ஆகர்ஷணாதி நிகமாந்த சரஸ்வதி நாம்வேதாந்த சங்க்ரஹம் -நிகமாந்த சரச்வதீகளை -சகல வேத வாக்யங்களையும் சமன்வயப்படுத்தி அருளி
யதிராஜ முநேர் வசாம்சி நிகமாந்த சரஸ்வதி நாம் ஆகர்ஷணாதி-என்று காட்டி அருளினார் முதலில்
அடுத்து -பாஹ்ய குத்ருஷ்டிகள் கலக்கத்தைத் தீர்க்க –யதிராஜ முநேர் வசாம்சி உச்சாட நாதி பஹி ரத்ன ரூப ப்லாவதாம் -ஸ்ரீ பாஷ்யம் சாரம் தீபம் போன்றவை
அடுத்து யதிராஜ முநேர் வசாம்சி பத்த்யாநி கோர பவ சஜ்ஞ்வர பீடிதாநாம்—கத்ய த்ரயம் -தாபத்ரயம் போக்கி அருள –
இறுதியில் – –யதிராஜ முநேர் வசாம்சி ஹ்ருத்யாநி பாந்தி -நித்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் -பரமை காந்திகளுக்கு ஹிருதயம் போலே இனிக்கும் –

ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதி நாம்
உச்சாட நாதி பஹி ரத்ன ரூப ப்லவ நாம்
பத்த்யாநி கோர பவ சஞ்ச்வர பீடிதா நாம்
ஹ்ருத்யாநி பாந்தி யதிராஜ முநேர் வசாம்சி

ஸ்வா பாவிக அநவதிக அதிசய
-ஜ்ஞான -பல -ஐஸ்வர்ய -வீர்ய -சக்தி -தேஜ –
சௌசீல்ய -வாத்சல்ய -மார்தவ -ஆர்ஜவ -சௌஹார்த்த-சாம்ய -காருண்ய -மாதுர்ய -காம்பீர்ய -ஔதார்ய -சாதுர்ய –ஸ்தைர்ய-
-தைர்ய -சௌர்ய -பராக்கிரம –
சத்ய காம -சத்ய சங்கல்ப
க்ருதித்வ -க்டுதஜ்ஞதாத்–
அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ-
என்று திரளாக அனுபவிக்கிறார் –

ஜ்ஞானம் -சர்வ சாஷாத்காரம் –ஸ்வா பாவிக –
பலம் -அநாயாசமாக எல்லா வற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றல் –
ஐஸ்வர்யம் -தடையின்றி விருப்பபடி ப்ரஹ்மாதிகளையும் உட்பட யாவரையும் நியமித்தல்
வீர்யம் -காரணமாகவும் -தாங்கியும் -நியமித்தாலும் -விகாரம் இல்லாமல் இருத்தல் -சக்தி -நிர்வஹிக்கும் தன்மை –உபாதான மூல காரணமாய் இருத்தல்
தேஜஸ் -சஹாகாரி காரணமாக எத்தையும் கொள்ளாமல் -அஸ்வாதீன சஹகார்ய ந அபேஷத்வம்-தேஜஸ் து -அந்ய அநதீநதா
சஹ கார்ய ந பேஷா மே சர்வ கார்ய விதௌ ஹி யா
தேஜ ஷஷ்ட குணம் ப்ராஹூ தமிமம் தத்தவ வேதின
தேஜஸ் -பராபி பவந சாமர்த்தியம் -என்னவுமாம் –
ந தத்ர ஸூ ர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோசயம் அக்னி –ஸ்வாமி அருளிய ஷட் குணங்களின் க்ரமம் –அவன் அனைத்தையும் அறிபவன் -தரிப்பவன் -நியமிப்பவன் –
இப்படி எல்லாம் இருந்தும் விகாரம் இல்லாமல் -சத்தைக்கு ஹேதுவாகவும்-சஹகார ஹேது இல்லாமல் இருப்பவன் –
சரணாகதி கத்யத்தில் முன்னம் அருளிய 25 குணங்களில் இந்த ஆறும் வேர் போன்றவை –
ஆஸ்ரயித்தவர்களுக்கும் ஆஸ்ரயிக்காமல் உள்ளாருக்கும் பொதுவானவை –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தல்லாத் தன்மை தேவ பிரான் -அறியும் -7-10-10- சர்வஜ்ஞன் அல்லவா
சர்வஜ்ஞத்வம் ஆவது -யோவேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ச்வத-ஸ்ரீ தேசிகன் ரகஸ்ய த்ரய சாரம் –

மேலே அருளிய ஷட் குணங்கள் அனுக்ரஹத்துக்கும் நிக்ரஹத்துக்கும் பொதுவானவை
மேலே –12 குணங்கள் பக்த ரஷணத்துக்கு -மட்டுமே -பயன்படுபவை அவை –
சௌசீல்ய -வாத்சல்ய -மார்தவ -ஆர்ஜவ -சௌஹார்த்த-சாம்ய -காருண்ய -மாதுர்ய -காம்பீர்ய -ஔதார்ய -சாதுர்ய –ஸ்தைர்ய-என்பவை
இவை இசைவித்து தன்னுடன் இருத்திக் கொள்ளவும் -தீ மனம் கெடுத்து -மருவித் தொழும் மனம் தந்து –
தன் பால் ஆதரம் பெருக வைத்து அருளி பின்னர் ரஷிக்கவும்-இவை –

இதில்–1- சௌசீல்யம் –சோபனம் சீலம் -ஸூ சோபனம் சீலம் யஸ்ய பாவ -அழகிய சீலம் -என்றவாறு –
சீலம் -ஹி நாம -மஹதோ மத்தைஸ் சஹ நீர் அந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வ பாவத்வம் –ஆஸ்ரிதர்களுடைய அச்சைத்தைப் போக்கியும் -தன்னை சர்வேஸ்வரன் என்று எண்ணாதே இருக்கையும்
-கண்டு பற்றுகைக்கு -அஞ்சேல் என்கிற அபய ஹஸ்தம்
ஞானாதி பரத்வத்தால் வந்த மஹத்வம் திரு உள்ளத்திலே இன்றிக்கே ஒழிகை
பவான் நாராயணோ தேவ -என்றால் -ஆத்மா நம் மானுஷம் மத்யே -என்று அருளிச் செய்பவன்-
தான் சர்வாதிகனாய் வைத்து -தண்ணியரான-நிஷாத -வானர -கோபாலாதிகள் உடன் நிரந்தர சம்ச்லேஷம் பண்ணுகை-
இது அம்மான் ஆழிப்பிரான்-அவன் எவ்விடத்தான் -யான் யார் -என்று அகலாதே
சாரத்ய-தூத்யாதி பர்யந்தமாக அபேஷிக்கும் படி விச்வச நீயதைக்கு உறுப்பாகும் –
சௌசீல்யம் சாபி வாத்சல்யம் ஸ்ரேஷ்டௌ பகவதோ குனௌ
ஆஸ்ரிதா நாம் சங்க்ரஹாய கல்பேதே இதி நிச்சிதம்
அந்யோஸ் சிந்தநே நைவம் நிர்பீகா ஆஸ்திகா ஜநா
ஆஸ்ரயேரன் ஹரிம் நூநமிதி தௌ வர்ணிதா விஹ-
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது –-சொற்கள் வந்து ஏன் மனத்தே இருந்திட ஆழி வண்ணா நின்னடி வந்து அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
எம்மாபாவியர்க்கும் விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர்
குஹேந சஹி தோ ராம சீதயா லஷ்மணேந ச -குகனுடன் சேர்ந்த பிறகுதான் இவர்களுடன் சேர்ந்த பலன் கிட்டிற்றாம்-

2–வாத்சல்யம் -இதுவும் சரணாகதர்களை சம்பாதிக்கும் சேமிக்கும் குணங்களில் பிரதாந்யம்-அவிஜ்ஞாதா – தோஷங்களை அறியாதவன்
சஹஸ்ராம்ஸூ -ஆஸ்ரித தோஷங்களில் கருத்து நோக்கு தாத்பர்யம் இல்லாதவன் -தோஷங்களைக் கண்டும் உபேஷிப்பான்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதி – அபாய பிரதானத்தில் பெருமாள் காட்டி அருளினார்
விதிதஸ் ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-பிராட்டி உபதேசித்து அருளினாள்
தோஷேஷூ குணத்தவ புத்தி வாத்சல்யம் -ஸ்ரீ ஸ்ருத பிரகாசிகாசார்யர் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை –
இது ஷமாவின் முதிர்ந்த நிலை என்பதால் எம்பெருமானார் ஷமா என்பதை தனியாக எடுத்து அருளிச் செய்ய வில்லை
அபிசேத் ஸூ துராசாரா பஜதே மாம் அநந்ய பாக்
சாது ரேவ ச மந்தவ்ய சமயக் வ்யவசிதோ ஹி ச -ஸ்ரீ கீதை -9-30-என்று அருளிச் செய்தான் –

– மார்த்வம் –ஆர்ஜவம் –சௌஹார்த்வம்-
3–மார்த்வம் சாப்யார்ஜவம் ச ததா சௌஹார்த்தம் இத்யபி
இமே குணோ பகவதி ப்ரபித் ஸூ நாம் பயாபஹா
அதஸ்தே பஹூதாஹ் யத்ர வர்ணிதா சித்தரக்தயே
நாநா வ்யாக்யாஸ் சமா லோச்ய சாஸ்திர தர்சித வர்த்மமநா –
மார்த்வம் -ஆஸ்ரித விச்லேஷம் சஹியாமை -ஆஸ்ரித விரஹ அஷமதயா ஸூ பிரவேசத்வம்
ந மே ஸ்நானம் பஹூ மதம் வஸ்த்ராண்ய ஆபராணிநிச
தம் வி நா கேகயீபுத்ரம் பரதம் தர்ம சாரிணம் -இது தான் மார்த்வம்
ச அபராதேஷூ சாசன உன்முகஸ்யாபி சாம ப்ரதா நத்வம் வா -அபராதம் செய்தவர்களை கண்டிக்க முற்படும் போதும் மிருதுவான சொற்களையே கூறுவதும் மார்த்வம்

4–ஆர்ஜவம் –மநோ வாக் காயம் ஏக ரூபமாய் -ஆஸ்ரித சம்ச்லேஷ விச்லேஷத்தில் இருக்கை-அதாவது ஆஸ்ரிதற்கு தன்னை நியமித்துக் கொடுக்கை –
மநோ வாக் காயா நாம் -மிதஸ் சம்வாதித்வம் -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-நிச்சயித்து ஆஸ்ரயிக்க உதவும் குணம் –

5–சௌஹார்த்தம் -தன்னையும் நோக்காமல் ஆஸ்ரிதற்கு சர்வவித அபீஷ்டங்களையும் அளிப்பவன் -ஹிதைஷித்வம் –
-ஸூ சோபனம் ஹ்ருதயம் யஸ்ய ச ஸூ ஹ்ருத் –சர்வ பூத ஸூ ஹ்ருத் –
போக்தாராம் யஜ்ஞ் தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் ஞாத்வா மாம் சாந்திம்ருச்சதி -ஸ்ரீ கீதை -5-29-
ஸூ ஹ்ருத ஆராத நாய ஹி சர்வே பிரயதந்தே –பிறர் நன்மையை விரும்புவனை ஆராதிக்க முற்படுவது பிரசித்தம் -என்று
எம்பெருமானார் அருளிச் செய்கிறார்
பகதத்தன் அஸ்தரம் இடத்தில் இருந்து அர்ஜுனனை காத்து ஆஸ்ரிதற்கு விசேஷித்து நன்மை செய்பவன் -காட்டி அருளினான்
பாண்டவர்கள் கார்யத்துக்காக தன்னைப் போக்கி -அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூடத் திரியச் செய்தேயும்
அவர்கள் பட்ட விசனம் எல்லாம் படுகிறார் காணும் இவரும்
வைகல் பூங்கழிவாய் -6- -1 வியாக்யானம் -பாண்டவர்கள் வனவாசத்தில் தனிமையில் முகம் காட்டியும்
திரௌபதியை மீட்டுக் கொண்டு போகிற போது அவர்கள் தங்கும் பணிக் கொட்டிலிலே சென்று முகம் காட்டி கதறியும்
துணையையும் பசுதத்தன் விட்ட சக்தியை அர்ஜுனனைத் தள்ளி தனது மார்பிலே ஏற்றும் புகலாயும் போந்தபடி –

6– சாம்யம்
பிறப்பு ஒழுக்கம் குணம் ஆராயாமல் தாழ்ந்தவர்களும் தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி நின்றபடி
ஆஸ்ரயித்த பின்பு சமமாக பாவித்து -வியாசர் பீஷ்மர் துரோணர் விதுரர் -தாரதம்யதீரஹிதத்வம் –
குகன் -சபரி -சபர்யா பூஜித சமயக் ராமோ தசரதாத்மஜ-பரத்வாஜர் பூஜையும் சபரி பூஜையும் சமயக் பூஜை –
கண்ணன் மாலாகாரர் -ஆராதனையும் ஏற்று அருளினான்
பிரசாத பரமௌ நாதௌ மம கேஹம் உபா கதௌ
தந்யோ அஹம் அர்ச்சயிஷ்யா மீத்யாஹ மால்ய உப ஜீவன —
ஜாதி குண வ்ருத்தாதி நிம்நோதத்வ அநாதரேண சர்வை ஆஸ்ரய ணீ யத்வம் -சமத்வம்
சமோஹம் சர்வ பூதேஷு -ஸ்ரீ கீதை -9-29–சமாதமா -105 திருநாமம் –
-சரணமாகும் தான தாள் அடைந்தார் கட்கு எல்லாம் -9-10-5–ஆஸ்ரயிப்பவர்களுக்குள் பஷபாதம் இல்லாதவன்
அன்பனாகும் தான தாள் அடைந்தார்கட்கு எல்லாம் -9-10-6-//மெய்யனாகும் விரும்பித் தொழுவார்கட்கு எல்லாம் -9-10-7-
அநந்ய பிரயோஜனர்கட்கு எல்லாம் —
அணியனாகும் தான தாள் அடைந்தார்கட்கு எல்லாம் –கிம் கார்யம் சீதாயா மம -என்பவன் அன்றோ

7-காருண்யம் -ஸ்வார்த்த அநபேஷா பர துக்க அசஹிஷ்ணு தா
அநுதிஷ்ட ஸ்வ பிரயோஜனாந்தரா பர துக்க நிராகரண இச்சா-தானும் துக்கித்து தந்நலம் கருதாமல் போக்கி அருளுதல்
ஞான சக்தியாதி குணங்கள் அனுக்ரஹத்துக்கும் நிக்ரஹத்துக்கும் -ஆனால் காருண்யம் அனுக்ரஹம் மாத்ரத்துக்கே –
சம்சார தாப த்ரயத்தால் வருந்தும் நமக்கு சரணாகதி அடையும் மனத்தை ஏற்படுத்தி தனது தாள் இணைக் கீழ் இருத்துபவன் அன்றோ பரம காருணிகன்

8- மாதுர்யம் -ஹந்தும் ப்ரவர்த்தாவபி ரசாவஹத்வம் -பீஷ்மர் அனுபவிக்கும் மாதுர்யம் -ஆயுதம் எடேன் தனது
சபதத்தையும் பொய்யாக்கி ஆஸ்ரிதர் வார்த்தை மெய்ப்பித்த இனியவன்
ஏஹ்யேஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர நமோ அஸ்து தே தேவவரா பிரமேய
பிரசஹ்ய மாம் பாதய லோக நாத ரதோத்தமாத் சர்வ சரண்ய சங்க்யே-
கண்ணா உனது அழகைக் காட்டி வெல்லலாம் -அம்பைக் காட்டி வெல்ல முடியாது -மதுராதிபதே அகிலம் மதுரம்
-கொல்ல வருபவனை இனியன் என்கிறார் பீஷ்மர்
ஹஸ்தினா புரம் கண்ணன் வந்ததும் அனைவரும் -பக்த பகைவர் பாகுபாடு இல்லாமல் மகிழ்ந்தனர்
அசூர்யமிவ ஸூ ர்யேண நிவாதமிவ வாயு நா -கிருஷ்ணேந சமுபேதேந ஜக்ருஷே பாரதம் புரம் –
சர்வ ரச வஸ்து அன்றோ -மாதுர்யம் -ஷீரவத் உபாய பாவே அபி ஸ்வா துத்வம் –உபாய நிலையிலே பரமபோக்யன் –
பால் மருந்துக்கும் பின்பு இனிமைக்கும் போலே
த்வேஷவதாம் ஜிகாம்சிதா நாம்பி திருஷ்டி சித்த அபஹாரித்வேன ரசாவஹத்வம் வா —
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் -சக்ராயுதம் ஏந்திய மதுரமான அழகில் ஈடுபட்டு
அந்திம ஸ்ம்ருதி யாலே திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -7-5-3
திரு நாமங்களைச் சொல்லி த்வம்-பிரணவம் நமஸ் சேர்த்து – த்வம்கரிக்கவும் –
கையும் திருவாழியுமான அழகை அந்திம தசையிலே ஸ்மரிக்கவும் கூடும் இ றே
யேன சிசுபாலச்ய தாத்ரு ஸீ சரம அவஸ்தா -தேசிகன்
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச —
அநந்ய மனசாம் மச்சித்தா மத்கதபிரானா இத்யாத்யுக்த அவஸ்தா ச
அவனது வாக்கும் மதுரம் திருமேனியும் மதுரம் -களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே பிரவஹிக்கும்

9–காம்பீர்யம் –
காம்பீர்யம் ஆஸ்ரித விஷயே ஏவம் அநேன சிகீர்ஷிதம் -இதி பரிச்சேத்தும் அசக்யத்வம் தீயமான கௌரவ சம்ப்ரதா ந லாகவா ந பேஷத்வம் வா
ஆஸ்ரிதர்களுக்கு அவன் செய்ய நினைத்து இருப்பது யாராலும் பரிச்சேதிக்க ஒண்ணாமல் -தனது கொடையின் சீர்மையையும்
கொள்பவரின் தண்மையையும் பாராமல் –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –நிரபேஷருக்கு -அடியார்க்கு -அநந்ய பிரயோஜனருக்கு
பாண்டவர்கள் முடி சூடின அன்றும் -த்ரௌபதி குழல் முடித்த பின்பும் பர்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க –
அவர்களை ரஷகர் என்று நினையாதே தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளம் தளிசு பட்டு இருக்குமா போலே
அந்த அநு கூல்யம் உடையாருக்கு என் செய்வன் என்றே இருப்பவன் –
பெருமாளும் திருவடியை –மயா காலம் இமம் பிராப்ய தஸ் தஸ் தஸ்ய மஹாத்மன -என்றார் -மஹதி ஆத்மா யஸ்ய ச -காமாத்மா அல்லவே –
திருமேனி ஆலிங்கனம் ஒன்றாலேயே கொஞ்சம் ஈடு படுத்தி அருளினார் –
கபீர கபீராத்மா -சஹச்ர நாமம் -தன தன்மை தனக்கும் அறிவரிய பிரான் –
அனுக்ரஹம் செய்யும் அவனது கருத்தின் ஆழத்தை அறிய முடியாது -வள்ளன்மையை அறிய முடியாமை –ஆஸ்ரிதர் தோஷங்களை
அறிந்து வைத்தும் -பிறர் அறியாதபடி ஆழமானவன் -பக்தர்கள் தண்மையை அறிந்து வைத்தும் பிறர் அறியாதபடி ஆழம் உடையவன் –

10-ஔதார்யம் -கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணி வண்ணன் தன்னை கவி சொல்ல வம்மினோ -3-9-5-
நீங்கள் யாவை யாவை எந்த எந்த ஏற்றங்களை இட்டுக் கவி பாடினாலும் அவற்றை சுவீகரிக்கும் இடத்தில் ஒரு குறையும் உடையவன் அல்லன் –
அபேஷித்தார் தாழ்வாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் தர மாட்டாமையாலே இழக்க வேண்டாம்
-எல்லா தேசங்களிலும் எல்லா காலங்களிலும் யாவர்க்கும் யாவற்றையும் கொடுத்தும் கொடுத்தோம் என்கிற எண்ணம் இல்லாமல் பரிபூர்ணன் -கோதில் வள்ளல்
மணி வண்ணன் -திரு மேனி அழகே எனக்கு போதும் -என் கோதில் வள்ளல்
இதம் இயத் தத்தம் மயா இதி அஸ்மரண சீலத்வம் –ருணம் ப்ரவர்த்தமிவ -ஆஸ்ரிதர் அபேஷிதங்களை தானே இரந்து கொடுக்கை –
தன்னிடம் யாசிப்பவர்களையும் உதாரர் என்பவன் –

11-சாதுர்யம் -ஆஸ்ரித தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கை
ஆஸ்ரிதருடைய அதிசங்கையை போக்கி அருளுகை-பாத அங்குஷ்டேந சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்
சுக்ரீவனைக் கொண்டே விபீஷணனுக்கு எங்கள் அனைவர் மேல் காட்டும் விசேஷ அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று சொல்ல வைத்த சாதுர்யம்
-சுமுகன் கருடாழ்வார் -நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் –நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து
அருள் செய்தது அறிந்து — நின் திருவடி அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -5-8-4-
தன்னை பஷிக்க வந்த திருவடியை எதிரிடவும் செய்யாதே வேறோர் இடத்திலும் போவதும் செய்யாதே தன்னைச் சரணம் புக்கான் -ஸூ முகன் –
நம்மைச் சரணம் புகுந்த இவன் நம் கீழே கிடக்கிறான் என்று இருக்கை அன்றிக்கே பெரிய திருவடி கையிலே
காட்டிக் கொடுத்து அவனை இட்டிட்டு இ றே ரஷித்தது
தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக துணுக என்கை போகாது இ றே
தானே ரஷிக்க வல்லனாய் இருக்க நம் கையிலே காட்டித் தருவதே என்று ஸூ முகனைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது
இனி இருவருக்கும் ரஷ்ய ரஷக பாவம் இ றே உள்ளது -பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே-

12-ஸ்தைர்யம்- ந த்யஜேயம் கதஞ்சன -உறுதி வாய்ந்த ஆஸ்ரிதர்களை விடாத திரு உள்ளக் கருத்து –
-பரத்யூஹ சதைரபி -நூற்றுக் கணக்கான இடையூறுகள் வந்தாலும் —
அந்தரங்கர்கள் மூலம் வந்தாலும் -செல்வா விபீடணற்கு வேறாய நல்லானை -பெரிய திருமொழி -5-8-5-
ஸ்திர-திருநாமம் -அம்ருத்யு -சர்வத்ருக் சிம்ஹ -தொடங்கி-ஸூ ராரிஹா -வரை ஸ்ரீ நரசிம்ஹ பரமான திரு நாமங்கள் -அதில் ஸ்திர
தத் சந்தானே தத் அபசார துர்விசால் யத்வாத் ஸ்திர -நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் மொழி – 10-6-6-
திருவாட்டாறு எம்பெருமான் காட்டி அருளிய கல்யாண குணம்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன –

இப்படி 12 கல்யாண குணங்கள் ஆஸ்ரித ரஷணத்துக்கு பயன்படும் கல்யாண குணங்கள் -இஷ்ட பிராப்திக்கு உறுபபானவை-
மேலே அநிஷ்ட நிவ்ருத்திக்கு –தைர்யம் -சாரயம் பராக்கிரமம் -எதிரிகள் தன்னை நோக்கி வந்தாலும் பயம் அற்று இருக்கை –

19-தைர்யம்–ஸ்தைர்யத்துக்கு அடியான நெஞ்சின் திண்மை –
என்று கொண்டு இத்தையும் முன்பு அருளிய 12 குணங்களுடன் சேர்த்தி இஷ்ட பிராப்தி –
ஆஸ்ரித ரஷணம் பரமான குணம் என்பர் பெரியவாச்சான் பிள்ளை –
கபோல ஜானக்யா கரிகல பதந்தத்யுதி முஷி -ஸ்மரஸ்மேரம் கண்டோடுமரபுகலம் வக்த்ரகமலம்
முஹூ பஸ்யன் ஸ்ருண்வன் ரஜநிசர சேநாகலகலம்-ஜடா சூடக்ரந்திம் த்ருடயதி -ரசயதி =ரகூணாம் பரிப்ருட -ஸ்ரீ ஹனுமத் நாடகம்
கர தூஷணர்களை வென்று கலங்காமல் சடையை தூக்கிக் கட்டிக் கொண்டு இருக்க ஸ்ரீ சீதா பிராட்டியின் கபோலமே கண்ணாடி யாகக் கொண்டான் –
தைர்யம் விளக்க இந்த ஸ்லோகம் காட்டி அருளுவார் -ஸ்த்ரையத்துக்கு அடியான நெஞ்சின் திண்மையே தைர்யம்
அப்யஹம் ஜீவிதம் ஜக்யாம் -என்று பெருமாள் பிரதிஜ்ஞ்ஞையை விட மாட்டேன் என்று அருளினார்
தனது பிரதிஜ்ஞ்ஞையை குலைத்தாகிலும் ஆஸ்ரிதர் பிரதிஜ்ஞ்ஞையை குலையாமல் ஸ்ரீ கிருஷ்ணன் ஆயுதம் எடுத்து -இதுவும் தைர்யம்
இக்கரையிலே விபீஷண பட்டாபிஷேகம் செய்து அருளியதும் தைர்யம்

20-சௌர்யம்-ஸ்வ க்ருஹே இவ பரபல பிரவேச -சாமர்த்தியம்

21-பராக்கிரமம் -அப்படி நுழைந்து பகைவர்களை அழிக்கும் சாமர்த்தியம் -ப்ரஹர்த்தா ச சின்னம் பின்னம்
பத்ம நாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன் -திருவாய் மொழி -2-7-11-வ்யாக்யானத்தில் சௌர்யம் -வீர்யம் பராக்கிரமம் -மூன்றையுமே
பூர்வ ஷண ஸ்ம்ருதி ரஹிதம் சத்ரு சேநாயாம்அத்யாசன்னாயாம் அபி அபீருத்வம் சௌர்யம் –
சத்ரு சேநாயாம் ஸ்வ சேநாயாம் இவ பிரவேஷ்டேருத்வம் –வீர்யம்
ஸ்வம் அஷதத்வேன பர சம்ஹர்த்ருத்வம் -பராக்கிரமம்
சௌர்யம் தேஜோ த்ருதி -ஸ்ரீ கீதை -யுத்தோ நிர்பய பிரவேச சாமர்த்தியம் –
மகா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்
சம்ச்ப்ருசன் ஆசனம் சௌரே விதுராஸ் ச மஹா மதி –
வார்கடா வருவி யானை -பாசுரம் -காட்டி அருளி மகா மதிகள் அச்சம் கெட்டார்கள்
வீர்யம் -யாவற்றையும் தாங்கியும் -நியமித்தும் நிற்கும் போதும் புருவத்தில் கூட வியர்வை தோன்றாதபடி
இருத்தலாகிற அநாயாசம் வீர்யம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

22/23-சத்ய காமத்வம் -சத்ய சங்கல்பம்
இது முதல் பெற்று அனுபவிக்கக் கூடிய குணங்கள் -நித்தியமான மாறுபடாத ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய கைங்கர
காமத்தையே அளிப்பவன் அவன் என்று இத்தையும்
லீலா விபூதியை அளிக்கும் அவனது சங்கல்பத்தையே சத்ய சங்கல்பம்-எனபது கூறும்
சத்ய காமத்வ -நித்ய விபூதியை பெற்று இருக்கும் குணம் –
அவனுடைய காமம் சங்கல்பம் இரண்டுமே நித்தியமே –ஆஸ்ரயித்தவர்களை ரஷிக்க வேண்டும் என்ற அவனது ஆசையும்
அதற்காக சங்கல்பித்து தேவ மனுஷ்யாதி என்நின்ற யோநிகளிலும் திருவவதரித்தது அவனது சங்கல்பம் அடியாகவே
எண் குணத்தோன் -அபஹத பாப்மாதி -நித்தியமான போக்யங்களை யுடையவனாயும்  நினைத்தத்தை முடிக்க வல்லவனாயும்-என்பதே வியாக்யானம்

24-க்ருதித்வம் -ஆஸ்ரிதர் அபேஷிதம் பெற்றதால் அந்த லாபம் தன்னதாய் இருக்கை -தான் புருஷார்த்தம் பெற்றதாகவே கொள்பவன்
அபிஷிச்ய ச லங்கா யாம் ராஷ சேந்தரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர ப்ரமுமோத ஹ –
ததா ராம -இப்பொழுது தான் ராமன் அழகன் ஆனான் -ததா விஜ்வர -கவலை அற்றவனாக ஆனான் –ததா பிரமுமோத -மகிழ்ந்தான் –ததா க்ருதக்ருத்வ-எல்லாம் செய்தவனாக ஆனான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் செய்ய வேண்டியவற்றை தானே செய்ய வேண்டும் என்று இருப்பவன் –
முன்பு சொன்னது ஆஸ்ரிதர் கார்யங்களை நிறைவேற்றி வைப்பதில் நோக்கு
இவர்கள் கர்தவ்யங்களை அடையத் தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கை-க்ருதம் அஸ்ய -அஸ்தீதி-க்ருதீ-தஸ்ய பாவ க்ருதித்வம் -என்று விக்ரஹம்
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோஹம்-அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதாம் –
எம்பெருமான் அருளிய உபகார பரம்பரைகள் பல வுண்டே –
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயா -ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற -அத்தாயாய் தந்தையாய்
அறியாதன அறிவித்து அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -திருவாய் மொழி -2-3-2-
ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷூ லோகேஷூ கிஞ்சன
நானவாப்தம் -அவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி -ஸ்ரீ கீதை -3-22-விஹித கர்மாக்கள் இல்லாதவன் -இருந்தும்
ஆசார்யம் குறையாத வாசுதேவ புத்ரனாக இருப்பதே – க்ருதித்வம்

25-க்ருதஜ்ஞதா-க்ருதம் ஏவ ஜாநாதி -செய்ததை மட்டும் அறிபவன் -செய்யப் போவதை அறிய மாட்டான் -செய்த நன்றியை அறிபவன் என்றுமாம்
ஆஸ்ரயித்தவர்கள் ஆஸ்ரயித்த பின்பும் செய்யும் தோஷங்களை அறியாதவன் என்றுமாம்
ஆஸ்ரிதர்கள் செய்த குற்றத்தையும் தான் செய்த நன்மையையும் நினையாதவன் –
சரணம் என்று சொல்லிய நன்மை ஒன்றையே கொண்டு -கோவிந்தா -என்றவளுக்கு எல்லாம் செய்து அருளினாலும்
-கடனாளி போலே சென்றவன்
தம் து மே ப்ரதாரம் த்ரஷ்டும் பரதம் தவரேத மன –
மாம் நிவர்த்தயிதும் யோ அசௌ சித்ர கூடம் உபாகத
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா-ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த அபகாரத்தையே நினைத்து இருக்கை –
த்வதங்க்ரிம் உத்திச்ய கதாபி கே நசித்-யதா ததா வாபி சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி –
ததைவ முஷ்ணாத்யஸூப அந்ய சேஷாத-ஸூபாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -அஞ்சலி ஒன்றையே கொண்டு
ரஷித்து-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -செய்து அருளுபவன் -என்பதையே காட்டும் -க்ருதஜ்ஞ்தை -என்கிற மஹா குணம்

————————————

இனி எம்பெருமானார் விளிச் சொற்கள் மூலம் அருளும் குணங்கள் –

1-அர்த்தி கல்பகன் –யாசிப்பர்வர்களுக்கு கல்பகம் போன்றவன் -என்று மட்டும் அல்லன் -தானே அர்த்தியாய் -நீங்கள் வேண்டியவற்றை எல்லாம் தருவேன் –
தனது தலையாலே இரந்து கொடுக்கும் அவனுக்கு இரந்தாருக்கு கொடாது ஒழிக்கப் போகுமோ
என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -நாரும் நரம்புமாய் இருக்கை அன்றிக்கே –
அபார சௌந்தர்ய மஹோததே -கரையற்ற அழகுக் கடல் அன்றோ நீ -பரம போக்யன்
பற்ப நாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற் பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-
என்னை ஆக்கி -அர்த்திகளை யாசிப்பவர்களை உண்டாக்கி
என்னைக் கொண்டு -அங்கீ கரித்து
எனக்கே -பொதுவாக இல்லாமல் –
தன்னைத் தந்த கற்பகம் -வேண்டிய பலன்களையும் அருளி தன்னையும் கொடுத்தருளி
என் அமுதம் -போக்யமாயும்
தனது அரண்மனைக்கு வந்த யாசகர்களை நெருங்கி கொண்டாடினாரே பெருமாள்
யஸ்ய அர்த்தி நா கல்பகா -தன்னிடம் யாசகம் பெற்றார்களும் கற்பகம் போலே –
யாசகம் பெற்று செல்பவர்களை உதாராஸ் சர்வ எவைதே
மேலும் உயர்ந்த புருஷார்த்தம் பெற வேண்டிய ஆசையை சாஸ்திர முகேன தூண்டி அருளுகிறான்
ஔதார்யம் முதலில் பொதுவாக சொல்லி இங்கே விவரித்து சொல்வதால் புநருக்தி தோஷம் இல்லை

2-ஆபத் சகன் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் -த்ரௌபதி -காகாஸூரன் -ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவடைக்க ப்ரணத இதி தயாளு -தமேவ சரணம் கத -தமேவ சரணம் கத –
ஆபதி சகிவத் ரஷக-விக்ரஹம்
கச்சா அநு ஜாநாமி-இன்று போய் நாளை வா என்றாரே பெருமாளும்

—————————————————————————————————————————————–

கோபம் குரோதம் -என்ற பெரும் குணம் –
ததோ ராமோ மஹா தேஜா ராவணேந க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவகசார்தூலம் கோபச்ய வசம் ஏயிவான்-
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –
க்ரோதம் ஆஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷசாம்
துஷ்ப்ரேஷஸ் சோ அபவத் கருத்த யுகாந்தாக்னி ரிவஜ்வலன்
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைக்கு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப
கொடியவை விலங்கின் இன்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து
உன் அடியனேனும் வந்து உன் அடியினை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -பெரிய திருமொழி -5-8-3-
ஆஸ்ரயிப்பார்க்கு உறுப்பான குணங்கள் இ றே சௌசீல்யாதி குணங்கள் -விரோதி நிரசனத்துக்கு பரிகாரம் இ றே சீற்றம்

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச எயிறில வாய் மடித்தது என் நீ பொறி யுகிரால் பூவடியை
ஈடழித்த பொன்னாழிக் கையா நின் சேவடி மேலீடழியச் செற்று -முதல் திரு -93-
முந்திய பாசுரத்தில் ஆஸ்ரிதர் வாத்சல்யம் அருளி அடுத்து இத்தை அருளிச் செய்கிறார் –
சரணா கதர்களுக்கு தஞ்சமான -ரஷகமான தனமாவது ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனனைப் பண்ணப் பற்ற சீற்றம்
இவனைக் கொண்டு வேறு பிரயோஜனம் பெறாதவர்களுக்கு இவன் நின்ற நிலையே உத்தேச்யம் –
கொண்ட சீற்றம் -தனம் நிதி உண்டு என்னுமா போலே
எதேனுமாக இவன் செய்கை நைவிக்கையாலும் –சீரிய சிங்கமும் -அறிவுற்று –என்பதும் –தீ விழித்து -என்பதும்
-இவையா இவையா என்று போக்கியம்
அது இது உது என்னலாவன உன் செய்கை நைவிக்கும் என்பவர்கள்
இவையா பிலவாய் திறந்து எரிகான்ற -இவையா எரி வட்டக் கண்கள் –இவையா எரி பொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: