ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –9- -பால சேஷ்டிதங்கள–வேய்ங் குழலூதல் —- அருளிச் செயல்கள் —

மூத்தவை காண முது மணல் குன்றேறி கூத்து வந்தாடிக் குழலால் இசை பாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் குழலூதி கன்றுகள் மேய்த்துத் தன தோழரோடு கலந்து உடன் வருவான்
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு
குழல் தாழ விட்டு தீங்குழல் வாய் மடுத்தூதி யூதி அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளைஅழகு
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கா- ள் இதோர் அற்புதம் கேளீர் -தூ வலம்புரியுடைய திருமால் தூய வாயில்
குழலோசை வழியே கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப வுடலுளவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து
கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி ஒல்கி யோட அரிக்கணோட நின்றனரே –
கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வாநிலம்படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க்கண்கள் பனிப்ப தேனளவு செறி
கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே –
கரும் சிறுக்கன் குழலூதின போது மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம்படியில் வாய் திறப்பின்றி ஆடல்பாடலவை மாறினார் தாமே
மதுசூதனன் வாயில் குழலினோசை செவியைப் பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம்
வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே
நம்பராமன் இந்நாள் குழலூதக் கேட்டவர்கள் இடருட்டன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத
வலையால் சுருக்குண்டு நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே
நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறையப் புகுந்தீண்டி
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே –
சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறு வெயர்ப்புருவம் கூடலிப்பக் கோவிந்தன் குழலூதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவியாட்டகில்லாவே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழலோசை வழியே மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டுபாடும் துலுங்காப் புடை பெயரா எழுது சித்திரங்கள் போலே நின்றனவே
ஆயர்பெருமான் அவன் ஒருவன் குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும்
வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்
முழைஞ்சு ளினூடு குமிழ்த்து கொழித்து இழிந்த வமுதப் புனல் தன்னை
அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினைப் பாடிப்பற -ஆ நிரை மேய்த்தானைப் பாடிப்பற

என்னரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ வழகர் எம்மானார்
நெடுமாலூதி வருகின்ற குழலின் தொளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –

கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலினி தூதி வந்தாய் எங்களுக்கே யொரு நாள் வந்தூத உன் குழலின் இன்னிசை போதராதே –

—————————————————————–

இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்

——————————————-

கேயத் தீங்குழ லூதிற்றும் நிறை மேய்த்ததும் –
-மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன செய் கோல தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழியிசைகள் கொண்டு ஓன்று நோக்கி பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சற வறப்பாடும் பாட்டை

————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: