ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே
திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே
திருக கோட்டியூர் கரும் தடா முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ
வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே
மது சூதனை மார்பில் தங்கவிட்டு வைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருளற
கங்கை கங்கை யன்ன வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே
உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன்
உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேன்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
என் மனம் தன்னுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்
உனக்கு இடமாயிருக்க என்னை யுனக்கு உரித்தாக்கினையே
வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
————
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும் மாமன் மகளே
குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
கோல விளக்கே கோடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாமுடையோம்
——————————-
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பெறு எனக்கு அருள் கண்டாய்
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதி கொண்டரவில் நடித்தாய்
வைகுந்தன் எனபது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன்
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்
—————————————–
தேனார் பூஞ்சோலைத் திரு வேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே
தென்னவென வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காயத் தோன்றி
————————
தோன்று சோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே
நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வெண்ணை அஞ்சல் என்ன வேண்டுமே
கடல் கிடந்த நின்னல்லால் ஓர் கண்ணிலேன் எம்மண்ணலே
ஐயிலாய ஆக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து உயக் கொள் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே –
—————————————–
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் –
சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த வெந்தை கழலினை பணிமின் நீரே
கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே
போதரே என்று சொல்லிப் புந்தியுட் புகுந்து தன்பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே
மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக யுணர்ந்து ஆம்பரிசரிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே
——————-
அளியன் என்று அருளி யுன்னடியார்க்கு யாட்படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே –
———————————-
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு வாரமார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே
——————————————-
கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய வியம்புகேன் ஒன தமிழ் சடகோபன் அருளையே
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
————————————-
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம் நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே
உலகுக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி சிந்தா மணியே
திரு வேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு
எல்லாம் வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
எம்பெருமான் அருள் என்ன சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன்
தேர் முன் நின்றானைத் திருவல்லிக் கேணி கண்டேனே –
அன்னமும் மீனும் அமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள் செய்து –அட்ட புயகரத்தேன் என்றாரே
தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற காவடியின் கற்பகமே போலே
நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
நெடுமால் தன தாராய நறும் துளவம் பெரும் தகையேற்கு அருளானே –திருவாலி வயல் வாழும் கூர்வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே
ஒ மண் அளந்த தாளாளா தண் குடைந்தை நகராளா வரை எடுத்த தோளாளா என் தனக்கு ஓர் துணை யாளனாகாயே
மாதவன் தன துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாலி புகுவர் கொலோ
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்று இலள் தன் துணையாய என் தன் தனிமைக்கும் இரங்கிற்று இலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ
தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா போயின பூம் கொடியாள் புனலாலி புகுவர் என்று —
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் –
அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து –வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் –அரி மேய விண்ணகரம்
பேரணிந்த உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை —-நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
தூம்புடைத் பனைக்கை வேழம் துயர் கெடுத்து அருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை –நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை உருவவோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசு அளித்தாய் –
–நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே –
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து
அருளினானே–நாங்கை காவளம் தண் பாடியாய் களை கண் நீயே
எந்தாய் இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே
குடிகுடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவணைத் துயின்ற ஆழியான்
அமர்ந்துறை கோயில் –வெள்ளியங்குடி யதுவே
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் –புள்ளம் பூதங்குடி தானே
நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள் புரியே —-வெள்ளறை நின்றானே
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று இவை
பயந்தவனே எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே
எனக்கு அருள் புரியே –திரு வெள்ளறை நின்றானே
ஐவர்கட்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே
நின்னடிமையை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவர்க்கு இன்னருள் சுரந்து –நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து —நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று
-அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும் அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
ஏதலார் முன்னே இன்னருள் அவற்குச் செய்து உன் மக்கள் மற்றிவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து
உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து
அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்றவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன்
அறிந்து உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்தம்மானே
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை நக்கரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்துகந்த சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே
தம்பியொடு தாம் ஒருவர் தன துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம்
இனிது மேவு நகர் தான் –நந்தி புர விண்ணகரம்
நீ பணித்த அருள் என்னும் ஒள வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே -பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகலொட்டேன் அந்தோ என்னாருயிரே அரசே அருள் எனக்குநந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பியோ
தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
ஒரு தேரை ஐவர்க்காய் சென்று இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் –அழுந்தூரே
என்னைம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி பொன்னம் கலைகள் மெலிவெய்தப் போன புனிதர் ஊர் போலும் –அழுந்தூரே
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டருளும்
குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போரேற்றை
பன்னு கலை நாள் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின் -அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
திருவுருவம் பன்றியாகி இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம்மீசன் காண்மின்
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தராவியை –சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை –சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே
பேராயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் –கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ
நந்தன் முதலை நிலமங்கை நல துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
ஆழியான் நமக்கு அருளிய அருளோடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும் துணையில்லை
முனி தன வேள்வியை கல்விச் சிலையால் காத்தானூர் கண்ணபுரம் தொழுதுமே
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் –கண்ணபுரம் தொழுதுமே
கரு மா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை திரு மா மகளால் அருள் மாரி –கலி கன்றி மங்கை வேந்தன்
பேரருளாளர் கொல் யான் அறியேன் –அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா –புல்லாணி கை தொழுதேன்
பாம்பின் அணையான் அருள் தந்தவா –புல்லாணி கை தொழுதேன்
ஆதியுமானான் அருள் தந்தவா –புல்லாணி கை தொழுதேன்
பேரருளாளன் பெருமை பேசி –குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் —குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் –திருக் கோட்டியூரானே
பெற்றத்தலைவன் எங்கோமான் பேரருளாளன் மதலாய்
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால்
கரை சேர் பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெரும் தோள் நெடுமாலைப் பேர் பாடி யாட
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வாராதலால்
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே
மற்று எமக்கு சரண் இல்லை என்ன அரணாவான் என்னும் அருளால் –மீன மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் அரசே
சிலை மலி செஞ்சரங்கள் செலயுத்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே
அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை யாளும் அரசே
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே
ஆ ஆ வென்று தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின்
அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட கொண்டல் கை மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே
வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே
மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல் என்றும் வினையாயின சாரகில்லாவே
——————
நிதியினை பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார் கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேமே
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளியீர் உம்மை யல்லால் எழுமையும் துணையிலோமே
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே –
————————————-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் –துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே
இன்றே சென்று திருக் கண்ண புரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று அன்னமாய் முனிவரோடு
அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே –
———————————————–
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி
பழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர்
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –
———————————–
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என் பாக்கியத்தால் இனி
பொருந்திய நின் பாதங்களை ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும் ஏதங்கள் எல்லாம் எமக்கு
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து ஓதுவதே நாவினால் ஒத்து
வென்று அடல் ஆழி கொண்ட அறிவனே இன்பக் கடல் ஆழி நீ யருளிக் காண்
வேம்பின் பொருள் நீர்மையாயினும் பொன்னாளி பாடென்று அருள் நீர்மை தந்த அருள்
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் யானே தவமுடையேன் யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது
ஆதிக் கண் நின்ற அறிவன் அடி இணையே ஓதிப் பணிவது உறும்
உறும் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் நற்பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்
உறும் கண்டாய் ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் சாத்தி யுரைத்தல் தவம்
தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன கை
யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர் பெய்தனைத்துப் பேர் மொழிந்து பின்
பயின்றார் தம் மெய்த்தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான் எத்தவத்தால் காண்பன் கொல் இன்று
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம்
—————————–\
ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால்
தாவிய நின் எஞ்சா வினை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
பைம்பொன் முடியான் அடியிணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி
அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து
விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூய்க்கை தொழுதால் அக்காவே தீ வினைகள் ஆய்ந்து
ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப் போது நங்கட்கு அரண்
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ வரை மார்பன் தான் முயங்கும்
காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல் திரு –
—————————-
நன்றாக நானுன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இல்லை
இல்லை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈரைந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியான் அன்றே உவந்து எம்மைக் காப்பாய் நீ
நீயே தவத் தேவ தேவனும்
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரை திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு
பை தெளிந்த பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு வேம்பும் கறியாகுமேன்று
இனி யறிந்தேன் ஈசற்கும் நான் முகற்கும் தெய்வம் இனி யறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி யறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்
———-
வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால் உயளிடம் பெற்றுய்ந்தம்
நீண்ட வண்டத்து உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தொரையில்லா அழறலர் தாமரைக் கண்ணன்
இனி யுன் திருவருளால் அன்றிக் காபரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
புவனியெல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
ஞானப் பிரானை யாழ்லாலில்லை நான் கண்ட நல்லதுவே
—————————-
யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்
தானோர் இருள்ளன்ன மா மேனி இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து
ஓன்று உண்டு செங்கண் மால் யானுரைப்பது உன்னடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் –
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ துயரை எனநினைந்து போக்குவர் இப்போது
இப்போதும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்
—————————————————–
அழுந்தூர் எழும் சுடரை –மூழிக் களத்து விளக்கினை
——————————
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
அருளாத நீரருளி அவராவிதுவராமுன் அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி யருள் ஆழி வண்டே –
அருளாத திருமாலார்க்கு என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
மிக்க ஞானச் சுடர் விளக்காயத் துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே
வேர் முதல் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கைதா காலக் கழிவு செய்யலே
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும் ஏழ்ச்சிக் கேடின்றி எங்கனும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப் பெற்றேன் என்நெஞ்சம் பெற்றது நீடுயிரே
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே
வேங்கடதுறைவார்க்கு நமவென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மான்
விழுமிய வமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ
புரைப்பிலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே
மன்னப்படும் மறை வாணனை வண் துவராபதி பதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதிச் செழும் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே யடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர் எம்மா பாவி யர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கை தலை பூசலிட்டே மெய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி யங்கை யுளதே
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் வறிவரிதே
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட என் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே
தொல் அருள் நல வினையால் சொலக் கூடும் கொல் தோழிமீர் காள் தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்ல வாழ நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே
என் கண்கட்குத் திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின் தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே
திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே
புகர் கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே
அடியடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே
இன் தமிழ் பாடிய வீசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ
என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே
வானுயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கரு மாணிக்க நாள் நல் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன கருத்தை யுற வீற்று இருந்தான் கண்டு கொண்டே
பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன் திருவருள் செய்தே
தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக்கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப்பத்தால் அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த யுள
திருவருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே
திருப் புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே
வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரனே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் சதிரே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே
திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே
தென் காட்கரை அப்பன் சிறிய வென்னாருயிர் உண்ட திருவருளே
திருவருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து உருவமும் உயிரும் உடனே உண்டான்
திருமாலே நாவாய் யுறைகின்ற நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய்
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே
காள மேகத்தை யன்றி மற்று ஒன்றிலம் கதியே
இலம் கதி மற்று –திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே எண்ணின வாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே
தென்னன் திருமாலிரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய் நன்கு என்னுடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிரும் சோலை நாங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே
அடி பரவ அருளை ஈந்த வம்மானே
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ
———————————–
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே
கூட்டும் விதி என்று கூடும் கொலோ
கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே
மா மலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே
தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் என்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே –
——————————————-
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து
பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து
இந்த உபதேச இரத்தின மாலை தன்னை சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார்
எந்தை எதிராசரின் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம்
மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை
உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன்
—————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –