Archive for July, 2015

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –5—பால சேஷ்டிதங்கள—கடம்பை ஏறிக் காளிய நர்த்தன விருத்தாந்தம் – அருளிச் செயல்கள் —

July 24, 2015

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
காய நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்
காளியன் என்னும் தீப் பப்பூடுகள் அடங்க வுழக்கி கானகம் படியுலாவிக் கரும் சிறுக்கன்
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் –தூ மணி வண்ணன் –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தம் ஏறி இருத்தி –
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிறுத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் –
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டெனில் அருளே
பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

——————————————————————————————————————————————————————-

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்த தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த வெயிற்று அழல் நாகத்த்கு உச்சியில் நின்றதுவாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்து உள்ளானே –
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் தடம் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
தலைக்கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு
அதன் உச்சி தன மேல் அடி வைத்த அம்மான் இடம் –நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில் –வண் புருடோத்தமமே
பூம் குருந்து ஒசித்து –எந்தை நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
படவர வுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –நான்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய்-
கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் –திரு வெள்ளி யம் குடியதுவே
பாய்ந்தான் காளியன் மேல் -நறையூர் நின்ற நம்பியே
பூம் குருந்து ஒசித்து –அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் –திருக் கோட்டியூரானே-
பூம் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி
அச்சம் தினைத்தினை இல்லை இப்பிள்ளைக்கு -ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான்
இன்று போய் பச்சிலைப் பூம் கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
பூம் குருந்து ஒசித்து -இவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே –

———————————————————————————————————————————————————————————

உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததுவும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவு நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன்
தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே

——————————————————————————————————————————————————————-

பூம் குருந்தம் சாய்த்தனவும் காற்கொடு பற்றியான் கை –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன் –
பூம் குருந்தம் சாய்த்து –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
அரவாட்டி –கோ பின்னுமானான் குறிப்பு
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான் –

—————————————————————————————————————————————————————————-

குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்தம் ஏறி இருத்தி –
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால்
கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
காய நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்
காளியன் என்னும் தீப் பப்பூடுகள் அடங்க வுழக்கி கானகம் படியுலாவிக் கரும் சிறுக்கன்
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் –தூ மணி வண்ணன் –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
குருந்தம் ஓன்று ஒசித்தானொடும் சென்று கூடியாடி விழாச் செய்து
பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்த தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த வெயிற்று அழல் நாகத்த்கு உச்சியில் நின்றதுவாட திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடத்து உள்ளானே –
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத் தடம் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான் நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
தலைக்கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு
அதன் உச்சி தன மேல் அடி வைத்த அம்மான் இடம் –நாங்கூர் –மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே
பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில் –வண் புருடோத்தமமே
பூம் குருந்து ஒசித்து –எந்தை நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
படவர வுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –நான்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய்-
கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து அவன் தன் படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் –திரு வெள்ளி யம் குடியதுவே
பாய்ந்தான் காளியன் மேல் -நறையூர் நின்ற நம்பியே
பூம் குருந்து ஒசித்து –அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் –திருக் கோட்டியூரானே-
பூம் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி

பூம் குருந்தம் சாய்த்தனவும் காற்கொடு பற்றியான் கை –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மற்குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன் –
பூம் குருந்தம் சாய்த்து –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
அரவாட்டி –கோ பின்னுமானான் குறிப்பு
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து சீரார் திருவடியால் பாய்ந்தான் –

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிறுத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் –
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
அச்சம் தினைத்தினை இல்லை இப்பிள்ளைக்கு -ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான்
இன்று போய் பச்சிலைப் பூம் கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிரவாய் நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
பூம் குருந்து ஒசித்து -இவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே –

உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததுவும் உட்பட மற்றும் பல அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி இரவு நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன்
தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே

காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி யுண்டெனில் அருளே

————————————————————————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் —

July 23, 2015

ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹன் ஆராத்ய தெய்வம் எல்லா ஆச்சார்யர்களும்
ஆராதனத்தால் கிட்டுவது –
பிரயோஜனாந்தரர்கள் இல்லை
தன்னாலே கிட்டும்

உபய லிங்க விசிஷ்டன் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக தானாக -அழிகியான் தானே அரியுருவன் -நாரசிம்ஹ வஹுபு ஸ்ரீ மான் –கைங்கர்ய ஸ்ரீ மான் போலே நாரசிம்ஹ உருவத்தாலே ஸ்ரீ மான் –
ச மயா போதித்தா ஸ்ரீ மான் -என்னால் எழுப்பப்பட்டவன் தூக்கம் என்னும் ஸ்ரீ மத்வம் உடையவனை –பையத் துயின்ற பரமன் -துயிலும் பொழுதே பரமன் போலே
கிடந்த நாள் கிடத்தி நீ எத்தனை நாள் கிடத்தி உன் திரு உடம்பு அசைய
வாக்மி ஸ்ரீ மான் -வாக் சாமர்த்யம் ஸ்ரீ மத்வம் -கிளர் ஒளியால் குறைவில்லா கிளருகின்ற ஒளி உதய சூர்யன் போலே ஒளி கூடி அரி உருவாய் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒழிய ஹிரண்யன் தேஜஸ் குறைய –அகல் மார்வம் கிழித்து உகந்த –
சங்கு சக்கரம் உள்ளது போன்ற ஆழ்வார் அருளி -கனல் ஆழி வலக்கை -இதனால் தான் சங்கு சக்கரம்
மாரி–முழங்கிப் புறப்பட்டு -பூவைப் பூ வண்ணா -தேஜஸ் -மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு சீரிய சிங்கம் அறிவுற்று தீ விளித்து
வேரி மயிர் பொங்க – –எப்பாடும் பேர்ந்து -முன் கால்களை தள்ளி பின் கால்களையும் தள்ளி –சோம்பல் விட உதறி மூரி நிமிர்ந்து -கீழும் மேலும் -அசைந்து -நரசிம்ஹன் திருக்கரங்களில் –
பூவைப் பூ வண்ண -புஷ்பம் போலே –சேராதவற்றை சேர்த்து அருளி -நீ -நடுவில் -அருளி –சிங்கத்தின் தேஜஸ் புஷ்பத்தின் மார்த்வம் நடுவில் சொல் வைக்க –
இரண்டுக்கும் இருப்பிடம் நீ –
புஷ்பம் போலே சூடிக் கொள்ளவும் முகந்து அனுபவிக்கவும் ஆபத்தில் ரஷிக்க சிங்க உருவம் –அகடிதகட நா சாமர்த்தியம் -கோப பிரசாதங்கள் -இரண்டையும் காட்டி அருளி

கடக ஸ்ருதிகள் கொண்டு ஒருங்க விட்டார் பேத அபேத ஸ்ருதிகளை -ஸ்ரீ பாஷ்யத்தில்
இதி சர்வம் சமஞ்சம் முரண் பாடு இல்லாமல் ஒருங்க விடப்பட்டன –
அஜாயமானாக பஹூதா விஜாயதே – பிறக்காதவன் பல தடவை பிறக்கிறான்
பிறப்பில் பல் பிறவி பெருமான் –எண்ணிறந்த திருவவதாரங்கள் –
-கர்மாதீனம் இல்லை இச்சா கிருபையால் -அருமையால் திருவவதாரங்கள்

போக்தா போக்யம் ப்ரேரிதா-மூவர் உண்டு -பேத ஸ்ருதி-ஷரம் பிரதானாம் –அம்ருதம் ஷராத்மணா ஈஸ்வரம்
நேக நாநாதவம் கிஞ்சின இஹ நாநா ந அஸ்தி —எல்லாமே ஓன்று என்று சொல்லும் அபேத ஸ்ருதி –
ஸ்வேத கேது சதேவ -ஏக மேவ ஆஸீத் –த்விதீயம் –ஒன்றாகவே இருந்தது
தத்வமஸி ச்வேதகேது நீயே ப்ரஹ்மம் –ப்ரஹ்மம் தவிர்ந்த நான் அல்ல -இவைகள் அபேத ஸ்ருதிகள்
வேதம் சொல்பவை எல்லாம் சத்யம் –
சேர்க்க -கடக ஸ்ருதிகள் -மூன்றாவது வகை –
யஸ்ய ஆத்மா சரீரம் –பிருத்வி சரீரம் –
அந்த பிரவிஷ்டா பரமாத்மா –
சேதன அசேதனங்கள் சரீரம்
சரீரம் போலே விட்டுப் பிரியாமல் சேதன அசேதனங்கள் இருக்கும் -பின்னிப் பிணைந்து -சரீராத்மா பாவம் விளக்கி அருளினார் –
ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாத ஒன்றுமே இல்லையே –
மயில் தோகை மயில் போலே ஜகமும் ப்ரஹ்மமும்-
கடல் அலை -கடல் -போலே ஜகமும் ப்ரஹ்மமும் –
சிலந்தி பூச்சி நூல் -போலே
அசத் -அந்தராத்மாவாக கொள்ளாத பொருள்கள் இல்லை –
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -நம் ஆழ்வார் ஜகத்தை சரீரமாகக் கொண்டு ப்ரஹ்மம்-தத் த்வம் அஸி –ஐத ஆத்ம்யம் இதம் சர்வம் –கரந்த பாலுள் நெய்யே போல் –
உரை குத்தி தயிர் மோர் வெண்ணெய் நெய் நான்கு வேலை
த்ரஷ்டவ்யோ கேட்டு மனனம் த்யானம் அநவரத நித்யாசந்தனம் நான்கு வேலைகள்
எங்கும் உளன் கண்ணன் –சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —
நின்றனர் நின்றிலர் -எல்லாம் அவனது ஆதீனம் ஆகுமே -என்பர் -எங்கும் உளன் -வ்யாபகத்வம் -இங்கு உள்ளான் அந்தர்யாமித்வம்
உருவும் அருவுமானான் இதி சர்வம் சமஞ்சயம் –
தத் த்வம் -இரண்டு ப்ரஹ்மமும் ஓன்று -சேதன அசேதனம் அந்தராத்மாவும் ஸ்வேதா கேது உனக்குள்ளே உள்ள அந்தராத்மாவும் ஒரே ப்ரஹ்மமே
சாமா பத்தி -ஆனந்தத்தில் சாம்யம் –
அவன் கைங்கர்யம் பெற்று நாம் கைங்கர்யம் செய்து ஆனந்தம் –இந்த ஆனந்தத்தில் தான் சாம்யம்

உபநிஷத் என்னும் அமுதக் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தால் போலே பராசரர் திருக் குமாரர் பாராசர்யர் வேத வியாசர் -அருளிச் செய்த ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்-
பூர்வாச்சார்யர் ஸூ ரஷிதாம் -காத்து வர
தூரஸ்திதாம் பஹூ மதி –
நடு முற்றத்துக்கு கொண்டு வந்து அனைவரும் பருகும் படி ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்

ஸ்ரீ பாஷ்யம்-சரஸ்வதி தேவி கிடாம்பி ஆச்சான் கட்டியதும் -ஸ்ரீ பாஷ்யகாரர் என்ற திரு நாமமும் கொடுத்து -சாரதா தேவி -என்னும் சரஸ்வதி தேவி அருளி –
சுதர்சன சூரி திருக் குமாரர் சுதபிரகாசர் தான் விசிஷ்டாத்வைதம் பெயர் கொடுத்தார்
ஸ்ரீ பாஷ்யகாரர் திருமலையில் பிரசித்தம் உடையவருக்கு –
உபய வேதாந்தாந்தம் கொண்டு ஒருங்க விட்டு அருளினார்
வருத்தும் புற இருள் -மாற்ற –மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் செந்தமிழ் தன்னையும் கூட்டி –
அன்று எரித்த திரு விளக்கை தன் இதயத்துள் இருத்தும் ராமானுசன் -பொய்கை ஆழ்வார் திருவடி சம்பந்தம் ராமானுஜருக்கு –
இரண்டு கண் போலே – ஒரே வஸ்துவை பார்ப்பது போலே –
உபய வேதாந்தம் கொண்டு ஒரே ப்ரஹ்மம் பார்த்து இரட்டை மாட்டு வண்டி ஒரு லஷ்யம் நோக்கி கூட்டிச் செல்வது போலே –

கலி மிக்க –வலி மிக்க சீயம் இராமானுசன் -சாஸ்திர விரோதம் பேசுவாரை வாதங்களை தவிடு பொடியாக்கி –
தோற்றாரையும் தனது அடியவராக்கி கொண்டு அருளி –
பகவான் சொத்து வீணாக்கக் கூடாதே சௌஹார்த்தம் -ஆர்த்த்ரா நனைந்து இருக்கும் தன்மை –
உஞ்ச விருத்தி மாதுகரம் அருளிச் செயல் அனுசந்தானம் செய்து கொண்டே -உப்பு புளி காரம் இல்லாமல் சுத்த அன்னம் ஒன்றே உட்கொண்டு
உந்து மத களிற்றன் அத்துழாய் விருத்தாந்தம்
ஆழ்வார் கிருபை தான் தேஜஸ் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -இராமானுச முனி வேழம்
–உலகம் ஏத்தும் தென்னானாய் -மத்த மாதங்கம் பெருமிதம் தோன்ற நடை உண்டே
ஞானம் பக்தி இரண்டும் சேர்ந்த கலப்பே ஸ்ரீ ராமானுஜர்
ஞானம் முதிர்ந்து பக்தி -சங்கரர் ஞான யோகம் ராமானுஜர் பக்தி யோகம் தப்பாக சிலர் சொல்வார்கள்
பக்தி ஞானம் முதிர்ந்து சிநேக பூர்வகமாக -அறிவு -ஸ்மரணம் த்யானம் நித்யாசானம் அன்பு பக்தி –
ஆழ்வார்கள் –
வேதாந்தி வரட்டுத் தனம் -கல்லணை மேல் –கண் துயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே தசரதன் புலம்பல் –
காதல் -மென்மை- பார்த்து –மங்களா சாசனம் -பொங்கும் பரிவால் -பெரியாழ்வார் -திண்ணிய தோளைக் காட்ட மேலும் பயம் அதிகரிக்க –
ப்ரேமம் மிக்கு நாயகி பாவங்களில் ஆழ்வார்கள் –
கேவல வாக்யார்த்த ஜன்யமான ஞானத்தால் முக்தி அல்ல –விதுரச்ய மகா மதி -பழத்தை கீழே போட்டு கண்ணன் உண்ண தோலைக் கொடுக்கும் கலக்கம்
திருப்பாவை ஜீயர் –ஆழம் கால் பட்டு பக்தி ததும்பிய திருப்பாவை – மூழ்கி –
நாச்சியார் திருமொழி -நாறு நறும் பொழில் –திருமால் இரும் சோலை –அண்ணா –அபிமானிக்கப் பட்டவர் திருமலையில் திருமஞ்சனம்
வேதாந்தம் மறைத்து -மரம் இரண்டு பறவைகள் -சரீரம் பரமாத்மா ஜீவாத்மா -நூறு தடா -கொடுத்து -அபகத பாப்மாதி அஷ்ட குணங்கள் அறிந்து இருந்தும் –
விஸ்வாசம் இருந்து -செய்து அருளி –பாசுரம் அன்று பெற்றோம் போனகம் இன்று பெற்றோம் அழகர் மகிழ்ந்து -கபோலம் பருத்து -வெண்ணெய் பால் உண்டு —
யசோதை முகவாய் தொட்டு யசோதை கேட்டு -பதில் சொல்லமால் வெண்ணெய் வாயில் இருப்பதால் கபோலம் முகவாய் பருத்து இருக்கும் –
-வாரீர் –கோயில் அண்ணரே வாரும் கோதாக்ராஜர்-பட்டம் பெற்றார் –
பெரிய பெருமாள் திரு முகம் ஜூரம் -நாவல் பழம் தத்த்யோன்னம் சேர்த்து அமுது செய்த -முதலியாண்டான் -கருட வாகன பண்டிதர் -கஷாயம் காய்ச்சி சரிப்படுத்தினார் –
பஞ்ச காலம் யோகம் -ப்ரஹ்ம த்யானம் –பிடித்தேன் –-மடித்தேன் -மனை வாழ்க்கையுள் நிற்கும் மாயையை -பாசுரம் –நடை அழகை சேவிக்கும் சிஷ்யர் -பற்பம் எனத் திகழ்-எம்பார் –
வேர் முதலாய் வித்தாய் -கொண்டு ஸ்ரீ பாஷ்யகாரர் முக்காரணங்கள்-
விச்வச்ய விஸ்வத காரணம் அச்யுத -ஸ்ரீ கூரத் ஆழ்வான்-த்ரிவித காரணங்களும் –நீயே
சரீராத்மா பாவம் கொண்டு அவிகாராயா விகாராயா-நிர்வகிக்கலாம்
நீராய் நிலனாய்-சாமானாதிகரணம் -தேவரீர் நீராய் உள்ளீர் சொல்லாமல் ப்ரஹ்மமே நீர் -சேதனாசேதனங்கள் அவ்வளவு இரண்டற ஒட்டிக் கொண்டு இருப்பதால் -சரீரவத் –
நீலம் மண்ணால் செய்யப்பட வாயும் வயிறுமாய் வேலைப்பாடுகள் கூடிய குடம் போலே
நீராய் நிலனாய்–பண்புகள் உடன் கூடிய ப்ரஹ்மம் –
இதி சர்வம் சமஞ்சயம்-உபாதான காரணம் -அவிகாராயா நிர்விகாராய இரண்டையும் சேர்த்து
திருமாலை ஆண்டான் -ஆளவந்தார் திருக்குமாரர் -திருவாய்மொழி அர்த்தங்கள் சாதிக்க -விஸ்வாமித்ரர் சிருஷ்டி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -க்யாதி லாப பூஜா அபேஷை இல்லாமல்
எக்காலத்து எந்தை யாய் என்னுள் மன்னில் -மற்று யாதொன்றும் வேண்டேன் -மிக்கானை –அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போவேனே சக்கரைப் பழம் -அபூத உவமை
சக்கரை விதை தேனை நீராக பாய்ச்சி மரம் -அதில் பழுத்த பழம் –
எக்காலத்து -எந்தையாய் என்னுள் மன்னில் -ஒரு நிமிஷம் வந்து ஹிருதயத்தில் வந்தால் -பின்பு தொந்தரவு செய்ய மாட்டேன் -திருமாலை ஆண்டான்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பவர் -ஒரு நிமிஷம் திருப்தி அடைய மாட்டார்
மற்று -யாதொன்றும் வேண்டேன் -இது தவிர வேறு கேட்க மாட்டேன் -மற்று என்பதை எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன் -மாற்றி –
ஊனில் வாழ் உயிரே எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தேன் -தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -இதற்கும் -விஸ்வாமித்ரர் சிருஷ்டி –
தேனும் தேனும் கலந்தால் ஒரு ரசம்
ஏக ரசம் இல்லை –பஞ்ச ரசம் -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -எல்லாம் இருப்பதால்
திருக் கோஷ்டியூர் நம்பி -இத்தை ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு இருக்கிறேன் –
சாந்தீபன் வசிசிஷ்டர் போலே அறிந்ததை மீண்டும் கேட்டு அருளுகிறான் -ஆசார்யர் சிஷ்யர் பந்தத்தி பாதுகாக்க –

—————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –4—பால சேஷ்டிதங்கள—– மா மருதம் இறுத்த விருத்தாந்தம் அருளிச் செயல்கள் —

July 23, 2015

பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த விப்பிள்ளை குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே –
ஒருங்கு ஒத்த விணை மருதம் உன்னிய வந்தவரை
மாய மருதும் இறுத்தவன் -காயா மலர் வண்ணன்
கள்ளச் சகடு மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே
பொய்ம்மாய மருதாண வசுரரைப் பொன்று வித்தின்று நீ வந்தாய் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா வுன்னை யறிந்து கொண்டேன் –
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்று –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிளம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் வுடைய விட்டோசை கேட்டான்
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்
மருப்பு ஒசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத் தலத்தே ஏறிக் குடி கொண்டு

————————————————————————————————————————————————————

எண்டிசை யோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு திண் திரல் பாட வருவான்
மருதிற நடந்து —
இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
மருதம் சாய்த்த மாலதிடம் —புள்ளம் பூதம் குடி தானே
இணை மலி மருதினொடு எருதிற இகல் செய்து —
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே –
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து –

——————————————————————————————————————————————————————-

பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான்
வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே –
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
மருதிடை போய் முதல் சாய்த்து –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
மருதிடை போயினாய்–என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –

——————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
நீ யன்றே மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து –
பகடுந்தி கீளா மருதிடை போய் –மாதுகந்த மார்வ ர்
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய்–உகந்தான் பண்டு –

———————————————————————————————————————————————–

ஒருங்கு ஒத்த விணை மருதம் உன்னிய விப்பிள்ளை குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே
மாய மருதும் இறுத்தவன் -காயா மலர் வண்ணன் –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –
கள்ளச் சகடு மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன் -இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிளம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் வுடைய விட்டோசை கேட்டான்
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்
-மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து -மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே
புணர் மருதினூடு போய்ப் –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
நீ யன்றே மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து –
பகடுந்தி கீளா மருதிடை போய் –மாதுகந்த மார்வ ர்
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய்–உகந்தான் பண்டு –

மருதிடை போய் முதல் சாய்த்து –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
மருதிடை போயினாய்–என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –

பொய்ம்மாய மருதாண வசுரரைப் பொன்று வித்தின்று நீ வந்தாய் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா வுன்னை யறிந்து கொண்டேன் –
பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான்
வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே –
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத் தலத்தே ஏறிக் குடி கொண்டு வெண் சங்கே
மருப்பு ஒசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி –

—————————————————————————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பள்ளி எழுச்சி-திவ்யார்த்த தீபிகா -ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள்

July 22, 2015

திருமாலை ஆண்டான் தனியன்–

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
மத்வா
ப்ராபோதீகீம்
ஸூ க்திமாலாம்
அக்ருததம் பகவந்தம் பக்தாங்க்ரிரேணும் ஈடே

யார் ஒரு ஆழ்வார் பர வா ஸூ தேவ மூர்த்தியான பெரிய பெருமாளை
ராஜோபசார யோக்யராக நினைத்து திருப்பள்ளி யுணர்த்துமதான திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தாரோ -அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை துதிக்கின்றேன் –

————————————————————————–

திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டுதிணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி வுணர்த்தும் பிரான்
தொண்டர் அடி பொடி
வுதித்த ஊர்-
மா மறையோர் மன்னிய சீர்
மண்டங்குடி
தொன் நகரம்
என்பர்-

வண்டுகளானவை நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற காலணிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் -கண் வளர்ந்து அருளுகிற
பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவராய்-பரம உபகாரகராய்
தொண்டர் அடிப் பொடி என்னும் திரு நாமம் உடையவரான ஆழ்வார் திருவவதரித்த தேசமாவது
சிறந்த வைதிகர்கள் பொருந்தி வாழ்வதற்கு இடமான சீர்மையை யுடைய திரு மண்டங்குடி என்கிற அநாதியான நகரமாகும்
என்று பெரியோர் கூறுவர்-

————————————————————————–

பொழுது விடிந்தமைக்குள்ள அடையாளங்களையும்
திருப்பள்ளி யெழுந்திருக்க வேண்டிய காரணங்களையுங்கூறி உணர்த்துகின்றார்.

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——–1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்தம்மா!–கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்-கன் இருள் அகன்றது-
அம்காலை பொழுதாய்–மா மலர் எல்லாம்-விரிந்து மது ஒழுகின-
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர்
இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில்
எங்கும் அலை கடல் போன்று உளது
பள்ளி எழுந்து அருளாயே—-

திருவரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ஸ்வாமியே –
ஸூர்யனானவன் கிழக்குத் திக்கிலே -உதய கிரியின் கொடு முடியிலே வந்து கூடினான்
இரவில் அடர்ந்து இருந்த இருளானது நீங்கி ஒழிந்தது –
அழகிய காலைப் பொழுது வர -சிறந்த புஷ்பங்கள் எல்லாம் விகாசம் அடைய -தேன் வெள்ளம் இடா நின்றன –
தேவர்களும் ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் முற்கோலி வந்து திரண்டு
திருக் கண் நோக்கான தெற்கு திக்கிலே நிறைந்து நின்றார்கள்
இவர்களோடு கூட வந்த இவர்களது வாகனமாகிய பெரிய ஆண் யானைத் திரள்களும்
பெண் யானைத் திரள்களும் பேரி வாத்தியங்களும் சப்திக்கும் போது
எத்திசையும் அலை எறியா நின்ற சமுத்திர கோஷத்தை ஒத்து இருந்தது –
ஆதலால் திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

மஹாராஜன் பள்ளி கொண்டிரா நின்றால் அவனை உணர்த்துகைக்குச் சிற்றஞ்சிறுகாலையில்
ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப் போலே ஸூர்ய பகவான் தன் கிரணங்கள் எல்லாவற்றோடும்
கீழ்த் திசையில் உதயகிரியினுச்சியில் வந்து அணையா நின்றான்;
உடனே, செறிந்துகிடந்த இருள் சிதறிப் போயின:

இருள் நீங்கினவாறே “சிற்றஞ்சிறுகாலை” என்னும்படியான அழகிய ப்ரஹ்ம முஹூர்த்தம் ஆக,
தாமரை முதலிய மலர்களெல்லாம் விகஸித்துக் தேனொழுகா நின்றன;

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும்
தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத் தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே
வந்து திரண்டு “எம்பெருமான் திருப்பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்”
என்னுமாசையாலே திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பேடைகளும்
வாத்ய கோஷங்களும் இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளராநின்றது.

உபய விபூதி நாதரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி இவர்களுக்கு முகங்கொடுத்தருளி
அடிமை கொண்டருள வேணுமென்பது கருத்து.

குணக்கு + திசை – குணதிசை
திசையோடு திசைப்பெயர் சேர உயிர் மெய்யும் ககரவொற்றும் நீங்கிற்று,
சிகரம் – பரிவாரம் என்ற வடசொல் திரிபு.
கனவிருள்-ஸிந என்ற வடசொல் கனவெனத் திரிந்தது.
ஆய் = ஆக என்னும் எச்சத்திரிபு.
மது – வடசொல் திரிபு
“மது விருந் தொழுகின” என்னும் அத்யாபக பாடம் வ்யாக்யாநத்துக்குச் சேராது.
களிறு + ஈட்டம் – களிற்றீட்டம் முரசு – ஹ ரஜ என்ற வடசொல் திரிபு.

————————————————————————–

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே———–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

குண திசை மாருதம்-கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி இதுவோ கூர்ந்தது
மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி எழுந்தன
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி-
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

கீழ் காற்றானது செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லைச் செடியில் யுண்டான
அழகிய மலர்களை அணைந்து கொண்டு -இதோ -வீசுகின்றது –
புஷ்ப சயனத்திலே உறங்குகின்ற ஹம்சங்கள் ஆனவை -மழை போலே சொரிகிற பனியாலே நனைந்த
தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் விட்டு எழுந்தன –
தனது காலை விழுங்கின முதலையினுடைய பாழி போன்ற பெரிய வாயில் உள்ள வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற-
அம் முதலையினுடைய பல் விஷத்திற்கு மிகவும் நோவு பட்ட கஜேந்திர ஆழ்வானுடைய பெரிய துக்கத்தைப்
போக்கி அருளின அரங்கத்தம்மா -திருப் -பள்ளி எழுந்து அருளாய் –

ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,
கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை
உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

கஜேந்திராழ்வானை அன்று கொடிய ஆபத்தில் நின்றும் விடுத்துக் காத்தருளினாற்போலே
இன்று அடியோங்களைக் காத்தருள்வதற்காக தேவரீர் திருப்பள்ளி விட்டெழுந்தருள வேணுமென்கிறது.

[விழுங்கிய இத்யாதி.]
முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கூர்ந்தது= கூர்தல்…
மிகுதல், அதிகமாதல்.
மாருதம் – வடசொல்
பள்ளி கொண்டன்னம்” என்ற சிலர் பாடத்தில்,
பள்ளி கொண்ட + அன்னம் எனப் பிரித்து, தொகுத்தல் விகாரமாகக் கொள்க.
ஈன் பனி – உண்டான பனி என்னுதல், பெய்கிற பனி என்னுதல்.
பிலம்-ஸூனாம். புரை – உவமவுருபு.
பேழ்-பெருமை.
விடம்-விஷம்.
அருந்துயர்-மற்றொருவராலும் போக்க அரிதான துயர்.

————————————————————————–

முதற்பாட்டில்,
கதிரவன் கீழ்த் திசையில் உதய கிரி சிகரத்திலே வந்து சேர்ந்தான் என்றது.
இப் பாட்டில்
நேராக உதித்துத் தனது தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான் என்கிறது.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-3

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன-துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி படர் ஒளி பனி மதி இவன் பசுத்தனன்
பாய் இருள் அகன்றது-
வைகறை மாருதம் இது -பைம் பொழில் கமுகின் மடல் இடை கீறி வண் பாளைகள் நாற கூர்ந்தது-
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

கண்ட விடம் எங்கும் ஸூர்ய கிரணங்கள் ஆனவை பரவி விட்டன —
ஆகாசத்தில் நெருங்கிய நஷத்ரங்களினுடைய மிக்க தேஜஸ்சானது குறைவு பட்டதுமன்றி
மிக்க ஒளியை யுடைய இக் குளிர்ந்த சந்திரனும் ஒளி மழுங்கினான்
பரந்த இருட்டானது நீங்கிற்று —

இந்த விடியில் காற்றானது பசுமை தங்கிய சோலைகளில் உள்ள பாக்கு மரங்களினுடையம் மடலைக் கீற –
அத்தாலே
அழகிய பாளைகள் ஆனவை பரிமளிக்க –
அப் பரிமளத்தை முகந்து கொண்டு வீசா நின்றது –

பெருத்த மிடுக்கை யுடைத்தாய் தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள திரு வாழி ஆழ்வானை
அழகிய பெரிய திருக் கையிலே யுடைய அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய் –

கண் பார்வை புகுமிடமெங்கும் ஸூர்ய கிரணங்கள் பரவிவிட்டன;
நக்ஷத்திரங்கள் ப்ரகாசம் குன்றிப் போய் விட்டது;
நக்ஷத்ராதிபதியான சந்திரனும் வைவர்ணிய மடைந்தான்; [பகல் விளக்குப் போலாயினன் என்றபடி.]

பாக்குச் சோலைகளில் மடல்விரிந்த பாளையின் பரிமளத்தை முகந்து கொண்டு
விடியற் காற்றானது மிகுதியாக வீசாநின்றது;

கையுந் திருவாழியுமான தேவரீருடைய அழகை நாங்கள் கண்டு களிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருளவேணு மென்கிறது.

“பனி மதி, படரொளி பசுத்தனன்” என்றும் அந்வயிக்கலாம்.

வியாக்கியாந ஸ்ரீஸூக்தி –
“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

பாயிருள் =பாய்தல் – வியாபித்தல்.
பசுமை + பொழில்-பைம் பொழில்;
“ஈறு போதல் இடை யுகரம் இய்யாதல், ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்,
தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய் திரிதல், இனமிகலினையவும் பண்பிற்கியல்பே” என்பது நன்னூல்.
“வண் பானைகள்” என்றவிடத்து, பாளைக்கும் வண்மையாவது ஒளதார்யம்–
தன் பக்கலுள்ள மணத்தைக் கொடுக்கை என்றும் கொள்ளலாம்.
வைகறை -விடியற்காலம்.

————————————————————————–

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்–ஈட்டிய இசை திசை பரந்தன-
வயலுள் சுரும்பினம் இரிந்தன
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–

உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை மேய்கைக்கு கட்டவிழ்ந்து விடுகிற இடையர் -ஊதுகிற
புல்லாங்குழலின் நாதமும்
எருதுகளின் கழுத்தில் கட்டி உள்ள மணிகளினுடைய ஓசையும்
ஆகிய இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது –

கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரத்திக் கொண்டு கிளம்பின –

ராஷச வர்க்கத்தை உருவழித்த அழகிய சார்ங்கத்தை யுடைய தேவாதி தேவனே
விச்வாமித்ர மகார்ஷியினுடைய யாகத்தை நிறைவேற்றுவித்து அவபிரத ஸ்நானம் செய்வித்து அருளின
விரோதிகளை ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய் அயோத்தியா புரியை ஆளுகையாலே
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய்-

இளங்கன்றாயிருக்கச் செய்தேயும் ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்றுகளை
மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும்,
சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும்
இவ் விரண்டும் விரவிய த்வநியானது எத் திசையும் பரவி விட்டது.

சோலைக்குள் மாத்திர மன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான
தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு சிதறின;

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!
இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறது.

[இரிந்தன சுரும்பினம்.]
பொழுது விடிந்து பூக்கள் அலர்ந்த பிறகு வண்டுகள் வந்து படிந்து தேனைப் பருகி விட்டு
ஆர்த்துக் கொண்டு கிளம்பி விட்டன- என்றும்,
நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே
ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்
இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றும் கருத்துரைக்கலாம்.

இரிதல்- சாய்தல், ஓடுதல்.

“வேள்வியுங் காத்து” என்பது சிலர் பாடம்.
அவபிரதம்-அவப்ருதமென்னும் வடசொல் திரிபு; யஞ்ஞபாகாதிகளின் முடிவில் செய்யும் ஸ்நாநம்
அயோத்தி – அயோத்யா

————————————————————————–

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே
பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே——-5-

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

பூம் பொழில்களின் வாய் புட்களும் புலம்பின -கங்குல போயிற்று -புலரி புகுந்தது
குண திசை கனை கடல் அரவம் கலந்தது-
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த– அம் அலங்கல் தொடையல் கொண்டு -அமரர்கள்-அடி இணை பணிவான் புகுந்தார்
ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே-

பூத்து இரா நின்றுள்ள சோலைகளில் உள்ள பறைவைகளும் உணர்ந்து ஆரவாரம் செய்யா நின்றன –
இரவானது கழிந்தது -ப்ராத காலமானது வந்தது –
கீழ்த் திசையிலே கோஷம் செய்கிற கடலினுடைய ஓசையானது வியாபித்தது –
தேனைப் பருகிக் களிக்கின்ற வண்டுகளானவை சப்தியா நிற்கிற பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட
அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்கள் –
தேவரீருடைய திருவடி இணைகளிலே பணி மாறுகைக்காக வந்து நின்றனர் –
ஆகையால் சர்வ ஸ்வாமின் -லங்கேஸ்வரனான விபீஷண ஆழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமான் –
அஸ்மத் ஸ்வாமியே -திருப்பள்ளி எழுந்து அருளாயே-

வயலுள் வண்டுகள் உணர்ந்தது பகவத் ப்ரவணர் உணர்ந்ததொக்கும் என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
உறங்குகைக்கே அதிக ஸாமக்ரியுள்ள ஸம்ஸாரிகள் உணர்வதன்றோ அருமை.

பொழில்களின் வாய்=வாய்-ஏழனுருபு.
அரவம் என்ற வடசொல் விகாரம்.

————————————————————————–

 

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——-6-

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

மணி நெடும் தேரோடும் இரவியர் -இறையவர் பதினொரும் விடையரும்
மருவிய மயிலினன் அரு முகன் – மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு -தேரும்- பாடலும் -ஆடலும் -குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய கோயில் நின் முன் -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

விலஷணமான -பெரிதான தேரோடு கூட பன்னிரண்டு ஆதித்யர்களும் –
ஜகத்துக்கு நிர்வாஹகர்களான ஏகாதச ருத்ரர்களும்
பொருந்திய மயில் வாகனத்தை யுடைய ஸூப்ரஹ்மண்யனும்
மருத் கணங்களான ஒன்பதின்மரும்
அஷ்ட வசுக்களும் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு வந்து நெருங்கி நிற்க –
இவர்களுடைய வாகனமான குதிரைகள் பூண்ட ரதங்களும் பாட்டும் கூத்துமாய்
தேவ சேனா சமூகங்கள் வந்து புகுந்து நெருங்கி இருக்கிற திரளானது பெரிய மலை போன்ற கோயிலிலே
தேவரீர் திருக் கண் நோக்கத்திலே நிற்கின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

த்வாதசாதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள, தேவஸேநாபதியான ஷண்முகன், மருத்துக்களாகிற தேவதைகள்,
அஷ்டவஸுக்கள் மற்றும் சொல்லிச் சொல்லாத தேவதைகளெல்லாம்
பரிகாஸமேதராய், தேவாரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் முதற் கடாக் ஷவீக்ஷணத்தை விரும்பி
“நான் முற்பட நான் முற்பட” என்று திரண்டு வந்து நின்றார்கள்;
திருப் பள்ளி யுணர்ந்தருளிக் கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

————————————————————————–

 

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-இந்திரன் தானும் ஆனையும் வந்து
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்-அரும் தவ முனிவரும் மருதரும் இயக்கரும்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க-திரு வடி தொழுவான்-
மயங்கினர்-அந்தரம் பாரிடம் இல்லை மற்று -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

எமக்கு ஸ்வாமி யான தேவரீருடைய திருக் கோயிலின் வாசலிலே
தேவேந்த்ரனும் -அவனது வாகனமான ஐராவத யானையும் வந்து இருப்பதுமன்றி
அண்டத்துக்குள் இரா நின்ற தேவர்களும் இவர்களுடைய பரிவாரங்களும்
மகா தபச்விகளுமான சநகாதி மகார்ஷிகளும் –
மருத் கணங்களும் யஷர்களும் கந்தர்வர் நெருக்கவும் வித்யாதரர்கள் தள்ளவும்
தேவரீருடைய திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர் –
ஆகாசமும் பூமியும் அவகாசம் அற்று இரா நின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

அந்தரம் என்றும், அண்டம் என்றும், ஆகாசம் என்றும், தேவலோகத்துக்குப் பேர்.
முனிவரும் மருதரும் இயக்கரும் திருவடி தொழுவான் மயங்கினர் என்று அந்வயம்.
சுந்தரர்- அழகுபொருந்தியவர் என்றபடி.
விச்சாதரர்- விஸயாயா என்ற வடசொல் திரிபு.
நூக்குதல்- தள்ளுதல்.
இயக்கர்-யக்ஷ என்ற வடசொல் திரிபு.

முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும்
அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

————————————————————————–

 

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——8-

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வழங்க-வம்பவிழ் வானவர் வாயுறை மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா–எம்பெருமான் ஏற்ப்பன வாயின
படி மெய்க்கலம் காண்டற்கு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர்-
இரவியும் துலங்கு ஒளி பரப்பி தோன்றினன்-
இருள் அம்பர தலத்தில் நின்று போய் அகல்கின்றது -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-

தேவரீருக்கு சமர்ப்பித்தர்காக -பரிமளம் மிக்க அறுகம் புல்லும்
சிறந்த சங்க நிதி பத்ம நிதிகளும் -கையிலே யுடையராய்க் கொண்டு தேவர்களும் –
காம தேனுவும் ஒளி பொருந்திய கண்ணாடி முதலாக ஸ்வாமியான தேவரீர் கண்டு அருளுகைக்கு
தகுதியாய் உள்ளவையான உப கரணங்கள் எல்லாவற்றையும் கொண்டு
மக ரிஷிகளும் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள் –
இதுவும் அன்றி ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

“வம்பவிழ்” என்பதை வானவர்க்கே அடைமொழியாக்கி,
நித்ய யெளவநத்தை யுடைய தேவ ஜாதிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
படிமைக்கலம்- திருவாராதந உபகரணம்.
நிதி, கபிலா, தும்புரு நாரதர், ரவி, அம்பரதலம் -வட சொற்கள்.

————————————————————————–

 

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி–யாழ் குழல் -திசை-முழவமோடு இசை கெழுமி–கீதங்கள் பாடினர்
கின்னரர் கெருடர்கள்–கந்தருவர் அவர் –மாதவர் வானவர் சாரணர் இயக்கர்–சித்தரும் – திருவடி தொழுவான்-
கங்குலுகள் எல்லாம் மயங்கினர்-ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள–அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

குற்றமற்ற சிறு பறையும் –
ஒற்றைத் தந்தியையும் யுடைய வாத்தியமும்
மத்தளமும் வீணையும் புல்லாங்குழலுமாய்
திக்குகள் எல்லாம் இவற்றினுடைய முழக்கத்தோடு
இசைமாட்டிப் பாட்டுப் பாடக் கடவரான கின்னர்களும் கருடர்களும் கந்தர்வர்களும் இதோ மற்றுள்ளவர்களும்
மகரிஷிகளும் தேவர்களும் சாரணர்களும் யஷர்களும் சித்தர்களும்
தேவரீருடைய திருவடிகளில் வணங்குகைக்காக இரவெல்லாம் நெருக்கத்தில் வருந்தி மோஹம் உற்றனர்-
ஆகையாலே அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருளுகைக்காக -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

வாத்தியங்களுக்குக் குற்றமில்லாமையாவது-நாதம் நன்கு உண்டாகும்படி அமைதியாயிருக்கை.
எக்கம்-தாள மென்றுங்கூறுவர்.
முழவம்- ‘பெரு வாயன்’ என்றொரு வாத்ய விசேஷமுண்டு; அதனைச் சொல்லிற்றாகவுமாம்;
அப்போது- யாழ் குழல் முழவங்களிலுண்டான நாதமானது திசைகள் தோறும் வியாபிக்கும் படி
கிந்நராதிகள் கீதங்களைப் பாடாநின்றனர்;
கெந்தரும் இவர்-கெந்தர்வர்களும் இதோ அருகே வந்திரா நின்றார்கள் எனப்பொருள் கொள்க.
சாரணர்-தேவ ஜாதியிலே உலாவித் திரியுவர்கள்.

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

கீதம் –ஹீதம்
‘கந்தருவர்’ என்பது மோனையின்பம் நோக்கிக் “கெந்தருவர்” என்றாயிற்று.
நாளோலக்கம் – பிராத: காலத்திலே சீரிய சிங்காசனத்திலே பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து
எல்லாரையும் குளிரக் கடாக்ஷிக்கும் ஸதஸ்ஸு.

————————————————————————–

 

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——–10

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

புனல் – சூழ் அரங்கா!–கடி மலர் கமலங்கள் மலர்ந்தன–கதிரவன் கனை கடல் முளைத்தனன்-
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி–துகில் உடுத்து ஏறினர்-
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——

திருக் காவேரித் தீர்த்தத்தாலே சூழப் பட்ட திருவரங்கத்திலே திருக் கண் வளர்ந்து அருளுமவனே –
பரிமளமுடைய தாமரைப் பூக்களானவை நன்றாக மலர்ந்து விட்டன –
தாமரையை மலர்த்த வல்ல சூரியனானவன் கோஷம் செய்கையையே இயல்பாக வுடைய கடலிலே
உதய கிரியிலே வந்து தோன்றினான்
உடுக்கை போன்ற ஸூஷ்மமான இடையை யுடைய மாதர் தமது சுருண்ட மயிர் முடியை நீர்ப் பசை அறப் பிழிந்து உதறிவிட்டு
தம் தம் ஆடைகளை உடுத்திக் கொண்டு கரை ஏறி விட்டார்கள் –
ஒழுங்காகத் தொடுக்கப் பெற்ற திருத் துழாய் மாலையும் பூக்குடலையும் விளங்கா நிற்கப் பெற்ற தோளை யுடைய
தொண்டர் அடிப் பொடி -என்ற பெயரை யுடைய தாசனை –
கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்ரம் -என்று திரு உள்ளம் பற்றி அங்கீ கரித்து அருளி
தேவரீருடைய நித்ய கிங்கரரர்களான பாகவதர்களுக்கு ஆளாக்க வேணும் –
அதற்காக திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்
“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

கதிரவன் கடலில் முளைத்தான் என்பதும் மலையினுச்சியில் முளைத்தான் என்பதும் உபலக்ஷணமெனப்படும்;

[துடியிடையார் இத்யாதி]
“கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் …. அணியரங்கன்” என்கிற ஸமாதியாலே சொல்லுகிறபடி.
ஆயர்மாதர் விடியற் காலத்திலே எழுந்து
கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடபோருகையில் நீயும் அவர்கள் பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு, அரவேரிடையார் இரப்ப
“மங்கை நல்லீர்! வந்து கொண்மின்” என்று மரமேறியிருக்க,
“தோழியும் நானுந் தொழுதோம்” என்பது,
“கோலங்கரிய பிரானே! குருந்திடைக்கூறை பணியாய்” என்பது ஆக
இப்படி நிகழும் ரஸாநுபங்களை நீ இழந்தாயாகிறாயே;
அவ்வாய்ச்சிகள் நீராடித் தலை துடைத்துத் துகிலுடுத்துக் கரையேறி விட்டார்களே என்கிறது.

[கூடையும் பொலிந்து தோன்றிய தோள்.]
“ஆழியுஞ்சங்கு முடைய நங்களடிகள் என்று எம்பெருமானுக்கு லக்ஷணமாகத் திரு வாழி திருசங்கு
அமைந்தாற்போலே
ஆழ்வார்க்கு லக்ஷணமாகப் பூக்குடலை அமைந்தபடி என்று
வந வாஸத்திலே மண் வெட்டியும் கூடையுமிறே இளைய பெருமாளுக்கு நிரூபமாகச் சொல்லிற்று.

[உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்.]
எம்பெருமானளவிலே நிற்பதோடு
ஸம்ஸாரத்திலே மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலத்தில் கால்தாழ்ந்து நிற்பதோடு ஒரு வாசியில்லை;
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

[பள்ளி யெழுந்தருளாய்.]
தேவரீர் பள்ளிக் கொண்டிருப்பது ஸம்ஸாரிகளைப் போலே சோர்வு சோம்பலாலன்றே;
‘எவனைப் பிடிக்கலாம்? எவனை திருத்தலாம்?” என்று யோகு செய்யுமுறக்க மித்தனையன்றோ?
அந்த யோக நித்திரைக்கு பலன் கை புகுந்த பின்பும் உறங்கக் கடவதோ?
உணர்ந்தருளலா காதோ?’ என்கிறார்.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

 

 

ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் —

July 22, 2015

ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்
புரா அபி நவம் நவீனம் புராணம் -பழையதையும் புதியதாயும்-ஆராவமுதன் –as usuval unusuval -புடவை விளம்பரம் –
என்றும் புதிதாதாக இருப்பதே -அவனைப் பற்றியதால் –
18 புராணங்கள் -வேத வியாசர் -அருளியவை
இதிகாசம் இப்படி நடந்தவை –
ஆப்தர் வாக்கியம் -சொல்ல வந்த விஷயம் நல்லவை -உயர்ந்தவை -வித்தி நாராயணம் பிறப்பும் –
நமோ வ்யாசாய விஷ்ணு -பிரித்து பகுத்து கொடுப்பவர் வியாசர் -த்வாபர யுகம் –
வாசம் –பிரம்மா -வசிஷ்டர் -சக்தி -பராசரர் வியாசர் -சுகச்சார்யர் பரம்பரை –
தெப்பக்கட்டை -போலே புராணங்கள் சம்சாரம் தாண்ட –
சத்வ புராணங்கள் 6 -தெளிந்த சிந்தனை –
முக்குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினிலே ஒன்றி நின்று —
பிரம்மா சொல்லி வியாசர் எழுதி வைத்தார்
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ வராஹ புராணம் ஸ்ரீ கருட புராணம்
புராணம் -ஐந்து லஷணங்கள் –இரண்டு விதம் -சர்க்கம் பிரதி சர்க்கம் -படைக்கப் பட்டத்து சர்க்கம் –
வாழும் முறைகளும் – அடைய வேண்டிய இடமும் வழிகளும் சொல்லும் -கடைசி குறிக்கோள் காட்டும் –
புராண ரத்னம் -பாகவத புராணம் -சுகர் பரிஷித்துக்கு -அதை விட சிறந்த புராண ரத்னம் –
பதக்கம் போலே -ஐந்து லஷணங்களும் நிறைந்தது
சர்க்கம் -படைக்கப் பட்ட விதம் -குறிக்கோள் சொல்லி -லோகோ பின்ன ருசி –நாம் யார் அறிய
பிரளயம் -பிரதி சர்க்கம் –
யார் ஆண்டார்கள் -வம்சம் -சாந்த சூர்யா வம்சம்
மன்வந்தரம் -மனு தர்மம் -மனுக்கள் யார் -என்ன தர்மம்
வம்சாந்த கிளைக் கதைகள் –மைத்ரேயர் சீடர் பராசரர் ஆசார்யன் கேள்விக்கு பதில் சொல்லும் முறையில்
அனைத்தையும் நமக்கு சொல்லிக் கொடுக்க –
தத்வார்த்தங்கள் நடுவில் –
கூர்ந்து கவனித்து அர்த்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும் –
27000 நரம்புகள் கட்டுப்பாடில் வரும் பத்மாசனத்தில் –
ந சேது ந கங்கா -ந காசி ந கா ந புஷ்கரம் இதன் கோடியில் ஒரு பங்குக்குக்கு நிகர் இல்லை ஞானத்தால் தான் மோஷம்
அழைத்து வாழ்வித்தார் கூடல் அழகர் ஆஹ்வாக ஹஸ்தம் -அறிய ஸ்தல புராணம் அறிய வேண்டுமே
கதிர் உதாராக தஸ்மை நாம முனிவராய -ஆளவந்தார்
ஐந்து விஷயங்களும் உள்ளவை -அர்த்த பஞ்சகம் நிறைந்தவை – சாரம் -திரண்ட பொருள் -ராமாயணம் விபீஷன சரணாகதி
வேதேஷூ பௌருஷம்-தர்ம சாஸ்த்றேஷூ மாணவம் மனு சாஸ்திரம் -பாராதே பகவத் கீதசி புராணங்களில் விஷ்ணு புராணம்
பராசரம் முனிவராம் கருத -ஞானம் அனுஷ்டானம் நிறைந்த மைத்ரேய பிரபத்திய –
மைத்ரேய பரிபப் ப்ரச்ச ப்ரநிபத்திய அபிவாதயே அருகில் நின்று கேட்க
வேண்டும் -முன்னால் சமம் -பின்னால் கடாஷம் கிட்டாது –
பரிஷை பண்ண கேட்க கூடாது –
மைத்ரேயர் கேட்ட முதல் கேள்வி -எத்தால் ஆக்கப் பட்டு இருக்கிறது இந்த ஜகத் -என்மயம் –
எதன் இடத்தில் உருவாக்கி லயம் அடைகிறது -நேற்று இன்று நாளை எங்கே -சமுத்ரம் பர்வதம் தேவர் மனுஷ்யர் வேறுபாடுகள் எதனால்
ஆஸ்ரமம் வேறுபாட்டுக்கு காரணம்
சக்தி -விஸ்வாமித்ரர் தூண்ட – கொல்லப்பட -பராசரர் வேவ்ல்வி ஏற்படுத்து ராஷசர் அளிக்க முற்பட
விஸ்வாமித்ரர் -வசிசிஷ்டர் புலஸ்தர் வந்து –
குலத்தை அழிப்பது கூடாது உனக்கு அதிகாரம் இல்லை ஒத்துக் கொண்டு யாகம் நிறுத்தி –
வரம் வழங்கி ப்ரஹ்மம் பற்றி அறிந்து உலகுக்கு சொல்ல -அதனால் நீ கேட்கிறாய் நான் சொல்லப் போகிறேன்
கீதை சொன்னது அருஜுனனுக்கு -சரண் பண்ணினேன் சொல்ல வில்லை சரம ஸ்லோகம் கேட்டதும் -அவன் வியாஜ்யம்
கேட்ட நம் ஆசார்யர்கள் பண்ணி நமக்கும் காட்டி அருள –
விஷ்ணுஸ் உத்போதம் -ஜகத் அவன் இடம் லயம் -ஸ்திதி சம்சசைய கர்த்தா அவனே உலகம் வியாபித்து பரந்து உள்ளான்
நம் ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் பதில் போலே -செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் ஜீவாத்மாவிடம் அறிவு கொஞ்சம் பிறந்தால் திருவடி
வழியாக திருவடியை அடைந்து
திருவடிக்கே கைங்கர்யம் செய்து இருக்கும்
அத்தைப் போலே எது எது எது கேள்வி அது அது அது-பதில் இங்கே

மண் குயவன் -சக்கரம் போலே -உபாதான நிமித்த சஹகாரி காரணமும் அவனே -பஞ்சு நெசவாளி தறி போலே –
படைத்தவனும் அவன் நானும் அவன் -அவன் இடமே சென்று சேருவோம் –
ஒன்றே என்னில் ஒன்றேயாம் பல வென்று உரைக்கில் பலவேயாம்
கூடி இருக்கும் பரம் பொருள் ஒன்றே
சேர்ந்து இருக்கும் நம் போல்வார் பலர் -ஆண் மயில் தோகை பெண் மயில் பார்த்து ஆடுவது போலே -சிருஷ்டி –
சுருக்கிக் கொண்டத்யு போலே லயம் –
தோகை மயில் உடன் சேர்ந்தே இருக்கும் -சிலந்து பூச்சி –
தன்னுள்ளே திரித்து எழும் -துள்ளல் ஓசை -தரங்கம் -போல் திரு மழிசை ஆழ்வார் -அலை -கடல் உதாரணம்
வேர் முதலாய் வித்தாய் –
அவிகாராய சுத்தாயா நித்யாய பரமாத்மனே ததைக ரூப ரூபாயா விஷ்ணவே —
ஆறு வித வேறுபாடுகள் இல்லாத -ஷட்பாக விபாகம் -அஸ்தி -ஜாயதே -பரிணமதே வர்த்ததே தேய்கிறது அழிகிறது –
மூல பிரகிருதி -மகான் -அஹங்காரம் -சாத்விக அஹங்காரம் -புலன்கள் உருவாகும் -11 -கர்ம இந்த்ரிய மனஸ்-ராஜச -தாமச அஹங்காரம்
பஞ்ச பூதங்கள் பூத சூஷ்மம் -தன்மாத்ரைகள் -முன்னிலை -இந்த பத்தையும் -சப்த ஸ்பர்ச ரூப கந்தங்கள்
மண் -வாசனை –
ஆகாயம் -சப்தம் -நீர் -ரசம் -=அக்னி -உருவம் -காற்று -ஸ்பர்சம் தொடு உணர்ச்சி -பஞ்சீ கரணம் —
இதனால் ஆகாயம் நீலமாகத் தெரியும் -கலப்படம் –
அத்வாரக சிருஷ்டி -பிரளயம் கூட பாப புண்யங்கள் அழியாது –
அண்டகடான்கள் பல பல -சங்கல்ப சக்தியால் இவை அனைத்தையும் -பஹூச்யாம் பிரஜாயேய
அவன படைக்கிறான் படைக்கப்படுகிறான்
காலம் பற்றி கேள்வி அடுத்து
6 அம்சம் உண்டு -முதல் வம்சம் படைப்பு பற்றி –
அலகிலா விளையாட்டுடையவன் –
விஷ்ணு சித்தீயம் எங்கள் ஆழ்வான்-நடதூர் அம்மாள் சதாசார்யன் -இவர் திரு வெள்ளறை-ஸ்ரீ பாஷ்யம்
திரு வெள்ளறை சோழியன் தினவு கெடச் சொல்லுவான் -நான் செத்து வா –
அஹங்காரம் அழிந்த பின்பு தான் சொன்னது புரியும்

முதல் அம்சம் –ஸ்ருஷ்ட்டி –20-அத்தியாயங்கள் இறுதியில் அஸ்திர பூஷண -6000-ஸ்லோகங்கள்
பூகோளம் காலம் -இரண்டாம் அம்சம் – ஆத்மா பரமாத்மா ரிபு கதை சொல்லி முடிக்கிறார்
மூமற்றாம் அம்சம் வேதங்களை வெளிப்படுத்தியவை வியாசர் பிரித்தது -ஆராதனை முறை –
நாலாம் அம்சம் -சூர்யா வம்சம் ராமாவதாரம் -சந்த்ர வம்சம் கிருஷ்ண
ஐந்தாம் அம்சம் கண்ணன்
ஆறாவது அம்சம் கலியுக -காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் சொல்லி முடித்து -பலம் சொல்லி முடிக்கிறார்

3-21 minutes காஷ்டை -15 நிமிஷம் ஒரு காஷ்டை நிமிஷம் கண் இமைக்கும் நேரம் -30 காஷ்டம் ஒரு கலை
30 கலை ஒரு முஹூர்த்தம் -30 முஹூர்த்தம் ஒரு பகல் –
12000 தேவர் ஆண்டுகள் சதுர்யுகம் -சந்திகளும் சேர்ந்து –
யுக சந்தி-4000 400 400 4800/300 300 300 0/2000 200 200 /1000 ன்100 100 /1000 சதுர யுகம் பிரம்மாவின் பகல் –
14 மனுக்கள் -71 சதுர யுகம் ஒரு மனுக்கு –
6000 ஸ்லோகங்கள்
ப்ரஹ்ம பாவனை சனகன் சனத் குமாரர்கள்
கர்ம பாவனை
உபய பாவனை -இரண்டும் –
சவாயம்புவ மனு -சதைரூபை -முதலில் படைத்து வம்சங்கள் பெருக -ஆரம்பிக்கும்
குழந்தைகளுக்கு இடம் -கேட்டு -ஹிரண்யாஷன் பூமியை சுருட்டி கடலில் ஒளிக்க
மூக்கில் இருந்து பன்றி -மகா வராக அவதாரம் –
பட்டர் அருளிச் செய்த வராக அவதார பெருமை பிரசித்தம் –
மேரு கண கண குழம்பு கல் போலே மகா வராஹா – பெரும் கேழ லார் –
சிலம்பினைடை -நில மடந்தை தனை இடர்ந்து எடுத்த கோமான் நீல மலையில் சந்தரன் போலே கோரைப் பற்கள் –
மானமிலாப் பன்றியாம் –
மதம் வேறே கொள்கை வேறே –
சங்கரர் -அத்வைதி அந்த பர ப்ரஹ்மம் நாராயணன் என்பர்
சைவர் சிவன் பர ப்ரஹ்மம் என்றாலும் கைலாசம் உமை உண்டு என்பதால் அத்வைதிகள் இல்லை –
ஒருவன் மன்னன் கதை -பூ பறித்து ஒன்றுக்கு மேல் என்னாத சங்கரர்
ஜகத்துக்கு பதியாணவனே உனக்கு இரண்டாவது இல்லை
அவனைப் போலே இரண்டாவது இல்லை -விசிஷ்டாத்வைதம் –
அவனைத் தவிர இரண்டாவது இல்லை அத்வைதம் –
மகா வராஹம் இடர்ந்து எடுத்தும் பூமி பிராட்டி நடுங்க -ஆண்டாள் திருவவதரித்து –
வாயினால் பாடி கைகளால் தூ மலர் தூவித் தொழுது மனத்தினால் சிந்திக்க எளிதான வழியை உபதேசித்து அருளினார் –
ஸ்தாவர சிருஷ்டி மரம் -புதர் கொடி புல் பூண்டு -தமோ குணம் மிக்கு சிருஷ்டித்து
விலங்குகள் -இரட்டை குழம்பு 9 -மாடு ஆடு ஒற்றை குழம்பு -6 -ஐந்து நகம் -கொண்ட -இனங்கள் –
மேல் நோக்கி போகும் தேவர்
மனுஷ்யர் -தேவ திரியக் ஸ்தாவர ஜங்கமங்கள்-ஆத்மா எல்லாவற்றிலும் உண்டு -பிரம்மா உள்ளும் உண்டே –
கர்மாதீனம் -தர்ம பூத ஞானம் அளவு கொண்டே தேவாதி –
இன்றைக்கு நான் இருக்கும் நிலை இறைவன் எனக்கு கொடுக்கும் பரிசு
நாளைக்கு நான் அவனுக்கு செய்து கட்ட வேண்டிய நிலை நாம் அவனுக்கு கொடுக்கும் பரிசு
உதங்க பிரசனத்துக்கு உத்தரம் இல்லை –தண்ணீர் பாய்ச்ச -உரம் போட -பொது காரணங்கள் விதியின் படி தான் செடி முளைக்கும் –
தண்ணீர்ப் உரம் அவன் அருள் விதை போலே கர்மா -இரண்டும் வேண்டும் -அவனால் தான் நம் செயல்கள் -நம்மாலே செய்வது – விதை போலே –
குழைந்தை அடி பட்டு அடி பட்டு நடை பழகுவது போலே -கண் வட்டத்துக்கு உள்ளே ஒரு ஸ்வா தந்த்ரம் கொடுக்கும் தாய் போலே –
வைஷம்யம் இல்லாதவன்
தமோ குணம் உடலில் அசுரர்கள் -துடை மூலம் -பிரம்மா படைக்க -அதனால் தான் இவர்களுக்கு பலம் இரவில் –
சத்வ குணம் மேல் பகுதி -தேவர் பகல் –
பித்ருக்கள் -சாயம் காலம் வெலை –மத்யானம் தான் ஆரம்பிக்க வேண்டும் ஸ்ரார்த்தம்
மனுஷ்யர்களுக்கு பிரம்ம முஹூர்த்தம் பலம் -உஷத் காலம் அருணோதயம் –
அசுர ராசாச கலாசாரம் -இரவில் வேளை-அறிவை வளர்க்கும் விடியல் காலம் பொழுது இழந்து -இராக் கூத்து –
அசுரர்கள் ராஷசர்கள் கந்தர்வர்கள் –
சாதுர் வர்ண்யம் -பிரித்தான் -முகம் -பிராமணர் -தோள்கள் ஷத்ரியன்- துடைகள் வைச்யம்-
திருவடிகள் சூத்திரன் -சோகம் உடையவன் சூத்ரம் -அர்த்தம் –
வேதம் சொல்லி கற்க முகம் -அத்தாலே ஜீவனம் -வாயில் இருந்து தோன்றி
நாட்டை காக்க தோள் பலம்
வைச்யம் கிருஷி கோ ரஷகம் வியாபாரம் -தொடை
பிராமணன் -ப்ரஹ்மம் அறியாமல் சோகம் -சூத்திரன்
ஞானம் ஏற்பட பிராமணன் ஆகிறான் –
ஓடி ஓடி உழவு தொழிலை பார்த்து உணவு கொடுக்க சூத்திரன் –திருவடி வியாபாரம் உண்டே இவனுக்கு –
குணா கர்ம வியாபகம் -தொழில் மூலம் –
உயர்வு தாழ்வுகளுக்கு காரணம் இல்லை -மோஷம் பெற அனைவருக்கும் அதிகாரம் –
ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் சொல்லுவோம்
பணிப்பூவும் ஆலவட்டமும் -குரும்பருத்த நம்பி -பனிப்பூ திருகச்சை நம்பி ஆலவட்டம் —
முனி வாகனர் -கோயில் திருமலை பெருமாள் கோயில் -போக புஷ்ப தாக மாண்டபம்
உத்க்ருஷ்டமாக பிரமித்த –சக்கரத்து அண்ணலுக்கு உள் கலந்த ஆள் –
தேவர் -மனுஷ்யர் -யாக யஜ்ஞம் ஹவிஸ் கொடுத்து மழை செல்வம் கொடுப்பார்கள் -பரஸ்பரம் பாவயந்த –
த்ரேதா யுகம் -ஆரம்பித்ததும் —
சித்தி நிறைந்தது குறைய –தேவைகள் பெருகி-பற்றுதலின்மை வளர வேண்டும் –
ருத்ரன் -பேர் என்ன அழ -சம்ஹாரம் அழ வைப்பான் என்பதால் -8 பேர் -அர்த்த நாரி -ஏகா தச ருத்ரர் -ஆண் பாகம் பிரிய –
4 வித பிரளயம் -நை மித்திக –மூன்று லோகங்கள் ஒரு பகல் முடிந்தால் -பிராக்ருத பிரளயம் -பிரம்மா காலம் முடிந்து –
ஆத்யந்திக பிரளயம் -மோஷம் பெற்று திரும்பாமல் – -நித்ய -பிரளயம் -பிறப்பு இறப்புக்கள் நித்யம்
தேவ அசுரர் சண்டை இந்த்ரன் துர்வாசர் சாபம் அலைகடல் கடைந்த -ஸ்ரீ மகா லஷ்மி வைபவம் அடுத்த அம்சம் –
மொத்தம் 6 அம்சங்கள் –
ஆஸ்ரம பிரிவுகள் -வர்ண பிரிவுகள் -த்விஜன் -பிராமணன் -அறிவு ஜன்மம் உபநயனம் பின்பு
கோபம் பட்ட பொழுது நெற்றில் இருந்து ருத்ரன் பிறக்க -சுவாயம்பு மனு பிரியவரதன் உத்தான பாதர் இரண்டு பிள்ளைகள் –
ருத்ரம் பவம் ஈசானாம் 8 திரு நாமங்கள் -சூர்ய ஜலம் பூமி நெருப்பு வாய் ஆகாயம் சோமன் -8 இடங்கள் –
சுவர்ச்சலா –தீஸா ரோகினி 8 மனைவிகள் ருத்ர கணங்கள் -ருத்ரன் -சதி -தஷ பிரஜாபதி பெண் -ஹிமவான் பெண் உமா பார்வதி
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப -பாத்ரம் தான் குறை -அது போலே கொட்டி அர்த்தம் சாதிப்பார்கள் ஆச்சார்யர்கள்
கடல் கடைந்தது எதற்காக -கேள்வி -நித்யம் -அநபாயினி-அகலகில்லேன் இறையும்-மகா லஷ்மி வைபவம் சொல்லுகிறார் பராசரர் –
அடக்குவார் இல்லாத செருக்கு ஸ்வா தந்த்ரம் கொண்டவன் -பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் செய்வன ஆராய்ச்சிக்கு உட்படாதே –
பாரத தேசம்-கர்ம பூமி –உலகம் ஏத்தும் தென்னானாய் -வடவானாய் –
ப்ருகு பெண் -மகா லஷ்மி -அலைகடல் -கடைந்த வ்ருத்தாந்தம் –
பஸ்யதாம் சர்வ தேவானாம் -வஷச்தலம் -பெண்களுக்கு பெண்கள் கோஷ்டியில் வெட்கம் இல்லை –
பட்டர் -பரம புருஷன் ஒருவனே புருஷோத்தமன் –
திரு மந்த்ரம் மங்கள சூத்ரம் -மோகினி திருக் கோலம் -த்ரைலோக்யம் -விட்டு விலகாமல் இருக்க
இந்த்ரன் பிரார்த்திக்க -பலன் சொல்லி நிகமிக்கிறார்
-லஷ்மி தேவி நித்யம் வசித்து செல்வம் -கைங்கர்ய செல்வம் வர்ர்த்திக்க அருளுவாள்
தேவத்வே தவி மனுஷ்யதே மனுஷ்யி
பிரியம் வரதன் -உத்தான பாதன் –இரண்டு புத்ரர்கள்
சுருச்சி சுனிதி இரண்டு மனைவிகள்உத்தான பாதனுக்கு –
உத்தமன் -துருவன் -சுருச்சி மாற்றாம் தாய் -கோபிக்க
எம்பெருமான் இடம் ஸ்தோத்ரம் பண்ண சொல்ல –
தகப்பன் மடி கிடைக்க வழி-அவன் மடியே கிட்டும் அவனை தபஸ் பண்ணி சப்த ரிஷிகளும் வரவேற்று –
அவமானம் குழந்தைக்கு எதற்கு -உயர்ந்த பதவி
மரீசி ஒரு ரிஷி கோவிந்தன் நாம சேவி -பஜ கோவிந்தம் -சேவி-
ஒரு ரிஷி ஒரு திரு நாமம் சொலி –
நஹி நஹி ரஷிதி துக்ரும் கரணே தமர் சிவன் கையில் உடுக்கை -சங்கரர் –
பக்தி ஒன்றாலே மோஷம் ஞானத்தால் அல்லை –
ஸ்ரீ ராம -தத் துல்யம் –
ஜனார்த்தன் –
அங்கிரஸ் -அச்யுதன்
புலஸ்தர் வசிஷ்டர்
பல திரு நாமங்களை சொல்லி
எந்த மந்த்ரம் சொல்லி சாஷாத்காரம் –
த்யானம் சொல்லும் முறை வசிஷ்டர்
புலன்களை திருப்பி -எம்பெருமான் இடம் செலுத்தி –பாலம் அமைத்து -திருவடிகளை கண் முன்னாள் நிறுத்தி –
காயம்-முதுகு – சிரச் கலுத்த்கு நேர் கோட்டில்
ஆசனம் -முக்கியம் -கீழும் மேலும் நில்லாமல் –தர்ப்பம் மான் தோள் பட்டுத் துணி -கண்ணை பாதி திறந்து –
மூக்கு நுனியை பார்த்து -உன்னுடைய -தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி
மனச் வாய் கை ஒருங்கி மகாத்மனா –
ஓம் நமோ நாராயாண
ஓம் நமோ பகவதே வாசுதேவாயா -12 -மது வனத்தில் இருந்து தபம் செய்தான்
ஓம் நமோ விஷ்ணவே

மூன்று நாள் /விட்டு சாப்பிட்டு -அடுத்த நாதம் -6 / 9 /12 சாப்பிட்டு பட்டினி ஒரு மாசம் -6 மாசம் தபம் இருந்தான்
பொய்த்தாய் உருவாக்கி தேவர்கள் கலைக்கப் பார்க்க -தங்கள் பதவிக்கு ஆபத்த்கு –
நேந்த்ரந்த்வம் -இந்திர பதவிக்கோ சூர்ய பதவிக்கோ பண்ண வில்லை -எந்த பதவிக்கும் இல்லை என்னை செவிப்பதே பலன் -கருட வாகனன் –
நேரில் வந்தாலும் கண்ணா திறக்க வில்லை -உள்ளே உள்ளே உருவம் மறைக்க -கண் முளித்த்கு அத்தையே கண்டு அழுதான் –
ஸ்தோத்ரம் பண்ண கற்றுக் கொள்ளாமல் தபஸ் பண்ணினேன் –
சங்கத்தாழ்வான் -வித்யைக்கு அபிமான தேவதை -ப்ருஹத்வாத் -ப்ரஹ்மம் -தான் பெரியதாய் திருவடிகளை பற்றினால்
தனக்கு நிகராக ஆக்குபவனே ப்ரஹ்மம் -அபகத பாப்மாதிகள் -பாபங்கள் தீண்டாது
விஜர மூப்பு இல்லை -காலமே ஓடாதே -3-விமிர்த்யு மரணம் இல்லை விசோக -விஜிகித்சக அபிபாசய -சத்யகாமன் சத்ய சங்கல்பன் –
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே
மிஸ்ர சம்பு காவ்யம் செய்யுள் கத்யம் பத்யம் கலந்து -கிரிசானு விச்வாசு -சம்வாதம் -கெட்டதே -நல்லதே -இருவரும் –
சுக்ரீவன் குரங்குகளை அனுப்பி -திருவேங்கடம் போக வேண்டாம் –
துருவ பதவி அருளி -சப்த ரிஷி மண்டலத்துக்கு மேலே -நஷத்திர மண்டலம் சுற்றி வரும் –
நிகமத்தில் பாடினால் கேட்டால் -சர்வ பாபா விநிர் முக்த ஸ்வர்க்க பேற்றை பெறுவார் தீர்க்க ஆயுஸ் –
அடுத்து ஸ்ரீ நரசிம்கன் -விருத்தாந்தம் –

காப்பான் –உயிர் காப்பான் –உயிர்கள் காப்பான் –பல நாள் -உகந்து -கோலத் திரு மா மகளுடன் -கூட்டி கூட்டி அருளிச் செய்கிறார் நம் ஆழ்வார்
துருவன் -சந்ததி –அங்கன் ராஜா -சுனிதா -பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு –பிள்ளை -வேனன்-முத்கை கடைந்து பிரித்யு பிறந்தான் —
கிம் அர்த்தம் -கடைய முடியுமா -இறந்த உடலைக் கடைந்து பிள்ளை பிறக்குமா கேள்வி –
மிருத்யு தேவதை பெண் சுனிதா -நாடு அராஜகம் -ஆக -உடலை மத்தை நாட்டி கடைய -ராஜகுமாரன் ரிஷிகள் சக்தியால் –
கருத்த குள்ள வடிவுடன் வர -நிஷாதார் -வேடர் குலம்
வைனன்-பிருத்யு மகா ராஜர் -நல்ல பிள்ளை -\
மூலிகை செடி செல்வம் மறைக்க -பூமி தேவி மறைத்து வைத்ததை அறிந்து –
சார்ங்கம் -கொண்டு விரட்ட -பசு மாடு உருவம் -நின்று திரும்பி பேச –ஸ்திரீ வதம் பசபம் வரும் –
ஒருத்தியைக் கொன்றால் நல்லது நடக்கும் என்றால் –
எங்கு இருந்து நெல்லையும் பாலையும் யார் கொடுப்பார் சாமர்த்தியமாக பேச -மக்கள் வைக்க இடமே இருக்காது
ஆதாரம் வேண்டாமா –
சென்கிஒல் ஆட்சி புரிவேன் ஆத்மா சக்தியால் தரிப்பேன் -இது போன்ற அரசனை தேடினேன் –
பசு பால் போலே எல்லா செல்வமும் தருவேன் கறந்து எடுத்தான்
பிருத்வி -பூமி பெயர் -காரணம் -கறக்கப் பட்ட படியால்
பல சுருதி -சொல்லி நிகமிக்கிறார் செல்வம் பெறுவார் -துர் சொப்பணம் வராது –
காச்யபர் திதி -பிள்ளைகள் தைத்யர் அசுரர்கள் -ஹிரண்ய கசிபு -கதை மேலே –
கயாது மனைவி பிரகலாதன் பிள்ளை -கருவிலே திரு வுடையவன் -நாரத்ர் கண்ணன் கதைகளை கேட்டு
உன்னாலே படைக்கப் பட்டதால் அழிக்க கூடாது வரம் பெற்றதும் பிரம்மா மூச்சு விட்டார் -வரத்தினில் -கரத்தை வைத்து –
ஹிரண்ய வதைப்படலம் யுத்த காண்டம் -விபீஷணன் உபதேசத்தில் கம்பர் வைத்தார் -கால சோதிதன் -வால்மீகி –
கண்டா கர்ணன் காதில் மணி கட்டி நல்ல வார்த்தை கேட்க கூடாது என்று
அறிஜ்ஞரில் அறிஜ்ஞன் மறையவரிலும் தூயவன் பிரகலாதன் -கம்பர்
சத்யம் ஞானம் அனந்தன் -தேச கால அவஸ்தைகளில் பரிச்சேதம் இல்லாதவன் அளத்தற்கு அரியவன்
கரந்தசில்ம் இடம் தோறும் –கரந்து எங்கும் பரந்துளன் -பரவையுள் நீர் தோறும் பரந்துளன் –
நம் போலே ஒரு இடம் விட்டு வேறு இடம் போக முடியாதவன்
எதோ விச்வம் -பரமேச்வரம் -பிரகலாதன் சொல்ல –ஆயிர நாமம் ஒள்ளியவாகப் போக –
ஓன்று 1000 தனது பிள்ளை சொல்வதால் -ஆழ்வார் -குழந்தை
சொன்னது நாராயண நாமம் 1000 சமம் –
குழியில் இந்தனம் அடுக்கி குன்று போலே கொட்டி -கம்பர் -ஸ்தோத்ரம் பண்ண –
ஹரியும் செந்தீயைத் தழுவி -அச்சுதன் என்று மெய் வேவாள்
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் என்னும் -திருக்குறள் பிறந்ந்ததே நம் ஆழ்வார் பாசுரம் கொண்டே ஔ வையார் -சொல்லுவார்
சேமம் குருகையோ செய்ய திருப் பாற்கடலோ நாமம் பராங்குசமோ நாராயனமோ தாமம் வகுளமோ துழாயோ தோள்கள் இரண்டோ நான்கோ –
உலக விஷயம் தெளிந்து பகவத் விஷயத்தில் கலங்கி ஆழ்வார்கள் –
ஓடும் நாகப் பின்னே ஓடி -தெளிந்து தமிழன் சொல்ல போம் இளம் நாகம் -கன்று குட்டி போலே நின்று இருந்தால்
கட்டிக் கொண்டு இருப்பார் கன்றுக் குட்டி போலே
சரவணம் –அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஆத்மா நிவேதனம் நவ வித பக்திகள் உபதேசித்தான் துக்கம் போக்க –
பத்துடை அடியவர்க்கு எளியவன் ஸூலப ஆராதனன் –
எழுவார் விடை கொள்வார் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் ஈன் துழாயான் திருவடிகளை –
எண்ணிலும் வருவான் -நினைக்க வேண்டா எண்ணிக்கை 26 -சொன்னாலுமே வருவானே பித்தன் –சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
பூசும் சாந்து என் நெஞ்சமே -வான் பட்டாடையும் அக்தே -தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே –
இல்லாததை தேடி கொடுக்க வேண்டுமே அவனை மகிழ்விக்க -அவனிடத்தில் பக்தி நம்மிடம் தானே
ஊரும் நாடும் உலகமும் தன்னை போலே பேரும் தாரும் பிதற்ற ஆக்கினான் பிரகலாதன் –
விதுரர் கலங்கி தோலைக் கொடுக்க —கலங்கி -கலக்கம் கலங்கின பக்தி தான் பசி தீர்க்கும் மடி தடவாத சோறு —
பூரி ஜகன்னாதன் ஒரு பூ சுமக்க முடியாமல் –
மரணம் எனக்கு இல்லை என்பதால் உனக்கும் மரணம் இல்லை போலும் என்றான் ஹிரண்யன் -இத்தையும் தனது தலையில் கொண்டான்
எங்கு உளன் -என்ன -தும் அஸ்தி ஆகாயம் காணிலும் உளன் தூணிலும் உளன்
ஓம் நமோ வாசுதேவாயா -உருண்டு வரும் பொழுது நெஞ்சை கட்டிக் பிடித்துக் கொண்டு கண்ணனுக்கு என்ன ஆகுமோ –
இங்கு இல்லையா என்று தூண் புடைப்ப -தெள்ளிய சிங்கமதாகிய தேவை -திரு வல்லிக் கேணி கண்டேனே
பிளந்து தூணும் -யாரடா புறப்பட்டது செங்கண் சீயம் -கம்பர் -அத்யத்புத ரூபம் –
நரசிம்ஹ ஜெயந்தி அந்தியம்போது மாலை தான் கொண்டாடுவார்கள் சாயம் சந்த்யாவில் தோன்றி உகிர்த்தலைத்தை ஊன்றி-வரம் பொய்ப்பிக்காமல் –
சிங்கம் யானை போலே -ஹிரண்யன் சொல்ல -இதனால் தான் சிங்கத்தலை முடிவு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பெருமான் சீர்மை
உளம் தொட்டு – -துழாவி -மன்னிக்க காத்து இருந்தான் -இரத்தத்தில் பிம்பம் பார்த்து சீறி -கலக்கம் –
இனி உனது குளத்து உதித்தவரைக் கொல்லென் மகா பலி பாணாசுரன் பிறந்தார்கள்
வரம் கேட்டு கை நீட்டாத வரம் கொடு –
நாங்கள் கொள்வான் அன்று நீ கொள்ளாமல் போகாது
நின் கண் அன்பு மாறாமை வேண்டும் என்பு இல்லாமல் இழி பிறப்பில் பிறந்தாலும்
அதர பூஷண-சொல்லி முதல் அம்சம் முடிக்கிறார் –
கௌஸ்துபம் -ஜீவாத்மா
மறு பிரகிருதி –
கேட்டவர் பாபம் கழிந்து கார்த்திகை புஷ்கரம் 12 வருஷம் ஸ்நானம் செய்த பலன்
தீபம் வருஷம் -பிரிந்த கதைகள் மேலே
பிரிய வ்ரதன் வம்சம் இனி சொல்ல —பத்து பிள்ளைகள் ஆக்நித்திரன் -மூத்த பிள்ளை –
மூன்று பேர் சொத்தில் பங்கு வேண்டாம் -மண்டலம் ஏழு பிரிவு சப்த தீபங்கள் –
யோஜனை 8 மைல் –ஜம்பூத்தீவம் நடுவில் 1லஷம் யோஜனைகள்
உப்புக் கடல் யோஜனை
மேரு அடி சிறித்து-மேல் பக்கம் 32000 யோஜனை அடிப்பக்கம் 16000 யோஜனை
தெற்குப் பக்கம் நாம் உள்ளோம் – ஆணி போலே நான்கு மலைகள் –
14 லோகங்கள் -50 கோடி யோஜனை பருத்து
ஜம்பூதீபம் 0ன்பதாக பிரித்து -பாரத வர்ஷம் பரதனுக்கு -நாபி -பிள்ளை –அவர் பிள்ளை –ரிஷப தேவர் -அவர் பிள்ளை —
ஜடபரதர் பிள்ளை -பாரத வர்ஷம் ஒரு பாகம் பாரத கண்டம் –
அலக நந்தா தெற்கு நோக்கி வரும் கங்கை -சீதை சஷூ பத்ரு மூன்றும் -நான்கும் மேரு மலையில் பட்டு நாளா பக்கமும் ஓடும் –
கர்ம பூமி -பாரத கண்டம் -பராசரர் –காயந்தி தேவா -தேவர்கள் புகழ்ந்து பாட -1958-மா சே துங் –
பாரத தேசம் பற்றி -அடுத்த ஜன்மம் பிறந்து மோஷம் போக வேண்டும் -சொன்னார் –
பிராயச்சித்தம் -செய்து முடியாது கண்ணன் திரு நாம சங்கீர்த்தனம் ஒன்றாலே முடியும் நரக பயம் தப்ப –
இரண்டாம் அம்சம் -நிகமிக்கிறார் சூர்யன் பாதை சொல்லி அப்புறம் ஜடபரதர் வியாக்யானம் உடன் –
3/4 அம்சம் சிறியவை 5 அம்சம் கண்ணன் விருத்தாந்தம்
பிறப்பில் பல் பிறவி பெருமான் -அஜாயமானோ பஹூவிதா ஜாயதே -கர்மாதீனம் இல்லை -இச்சாதீனம்
-சன்மம் பல பல செய்து -அஜகன் -பிறப்பில்லாதவன் -ஸ்தம்பத்தில் இருந்து -பிதாமகி -தூண் பிரம்மாவுக்கு பாட்டி ஆனதே பட்டர் –
விஜிதாத்மா -விதேயாத்மா -அவிதேயாத்மா யாருக்கும் கட்டுப்படாதவன் -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -பிரணத பாரதந்த்ர்யம்

நர சிம்ஹம் ராகவ சிம்ஹம் யாதவ சிம்ஹம் ரெங்கே ந்திர சிம்ஹம் –உபாச்மஹே –
பட்டர் பாகவத் அபசாரம் பொறாமை –காட்டிக் கொடுத்து அருளினார்கள் –
இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை –நாடு -ஆழ்வார் போலே -ஜடபரதர் மானையே நினைத்து உயிர் விட
சரணா கதனுக்கு பக்தி கைங்கர்யம் வர்த்திக்க செய்யவே -அத்தை கொண்டு அடைபவன் உபாசகன் –
மானாக பிறந்து சில காலம் மட்டுமே இருந்து -மீண்டும் பக்தனாக -பிறந்தார் –
நீர் யார் எங்கு இருந்து வந்தீர் எதற்காக வந்தீர் -ஜடபரதர் -ஒரே பதில் யாரைக் கேட்டாலும் –
வாத்மா -அனைவருக்கும் பொது கர்ப்பம் தொலைக்க -வந்தோம்
-பல்லக்கில் உட்கார்ந்து தீர்க்கிறாய் தூக்கி தீர்க்கிறேன் -ராஜா பயந்து -ஞானம் பெற்றேன் -ஆத்மவித்யை உபதேசிக்கிறார்
விசிஷ்ட வேஷம் -நித்க்ருஷ்ட வேஷம் -ஆத்மா ஒரே ஜாதி இறை அடியான் -சேஷத்வமே ஸ்வரூபம்
காலி தாச கும்ப தாச -அநாமிகா -மோதிர விரல் அங்குஷ்ட கட்டை விரல் -அநாமிகா பேர் இல்லாத –
நிகர் இல்லையே தாசன் -தேர்ந்து எடுத்த ஸ்வாமி உகக்கும்
கஸ்தூரி திலகே -கோபால சூடா மணி த்யான ஸ்லோகம் –
வந்தே ப்ருந்தாவனந்த சரம் -வல்லபி ஜன வல்லபம் ஜெயந்தி -சம்பவம் தாமே -ஸ்ரீ ஜெயந்தி என்றாலே ஸ்ரீ கிருஷ்ணன் -திருவவதாரம்
-பூமியில் உள்ளாருக்கு சந்தோஷம் கொடுத்து அருளுபவன் -கண் -ஞானம் -காவலன் –
நம் கண்ணன் அல்லது கண் அல்ல -கர்காச்சார்யர் பெயர் வைத்தார்
ஹரி ஓம் அறியோம் -திராவிட வேதம் திருப்பல்லாண்டு ஓம் போலே
ஸ்ரீ ராமன் பற்றி சுருக்கமாக சொல்லி வால்மீகி ஸ்ரெய் ராமாயணம் பார்த்துக்கொள்ள சொல்லி
-தசம ஸ்கந்தம் -சுகர் -5 அம்சம் பராசரர் ஸ்ரீ கிருஷ்ணன் விருத்தாந்தம் விரிவாக சொல்லுகிறார்கள் –
ஆழ்வார்களும் பால்ய கண்ணன் -மேல் பண்ணி பண்ணி அருளிச் செய்து இருக்கிறார்கள் -பக்தி வளர்க்க கிருஷ்ணாவதாரம் –
திருமகளார் தனிக் கேள்வன் -திருக் கோவலூர் தர்சனம் ஆரம்பம் திருக் கோஷ்டியூர் ஸ்ரீ கிருஷ்ணன் திருவதார காரணம் –
திருக் கூடலூர் திருப்பல்லாண்டு –
கற்புடைய மடக்கண்ணி காவல் பூண்ட -ஷேத்ரம் -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம் -பத்ரா காளி மடக்கன்னி –
அச்யுத பானு -வெங்கதிரோன் குலத்தினில் தோன்றும் விளக்கு ராமன் -ஸ்ரீ ராம திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றிய அணி விளக்கு இவன் –
அத்தத்தின் பாத்தா நாள் வந்து தோன்றிய அச்சுதன் -ஹஸ்தம் -ரோகிணி-பொங்கும் பரிவால் -ஒருபக்கம் எண்ணி ரோஹிணி வரும் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தா -மற்று ஒருத்தி சொல்ல வில்லை –
இந்த ஒருத்தி பெற்ற இன்பம் கண்டவள் அந்த ஒருத்தி வளர்ந்த இன்பம் கண்டவள்
கோ புச்சம் பசு வால் சுற்றி -கொழு மோர் -ஐம்படை தாலி -ரஷிக்க ஜகத் ரஷகன் —
விஷத்துக்கு விஷம் முறிக்க பேய் முலை நஞ்சுண்டு –வெள்ளத்ர்தரவில் துயில் அமர்ந்த வித்து -இவன் –
அகாரத்தையும் கட்டி ஆகாராதையும் கட்டுவிப்பாள் யசோதை
திருவடி அவனையும் ரஷிக்குமே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்
வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் வாரி விழுங்கி -பல நாள் திருட்டுகள் உண்டே
கச்வம் பால்;எ -நீ யார் -பலானுஜா -தம்பி -கிம் கதே -மன் மந்திரா சங்கையா –
நவநீத பாத்ரத்தில் கன்று குட்டி இருக்க பார்த்தேன் -இல்லை என்று காற்றில் கடியநாய் ஓடி –
கலவேழ் வெண்ணெய் தொடு உண்ட -மெத்த திரு வயிறு ஆர உண்டான் –
மோர் குடம் ஆண்கள் வயசான பெண்கள் போலே -ரஷிக்க தைர்யம் -கணவன் ரஷிப்பான் என்ற தைர்யம் இல்லாமல் கண்ணனே ரஷகன் –
ஏரார் இடை நோவ –திருமடல் -ஏரார் இடை நோவ நாடகம் போல காட்டி அருளுகிறார் —
விஷப்பால் -பொத்த உரல் கண்ணி நுண் சிறுத் தாம்பு இவனுக்கே என்று இருப்பது –
சாமக் கோழி -கோழி கூவும் என்னுமால் -அழுகையும் -அஞ்சு நோக்கும் தொழுத கையும் –
அனைத்து இடைபென்கள் 5 லஷம் ஒரு சேர பார்க்க முடிந்ததால் தொழுதான்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உகப்பான் -விலக்காமை ஒன்றே வேண்டும்

காமரு சீர் அவுணன் -வாமனன் திரிவிக்ரமன் சேவிக்கப் பெற்றதால் -கோவிந்தா பட்டாபிஷேகம் கோவர்த்தன வ்ருத்தாந்தம் –
பாதுகா பட்டாபிஷேகம் பரத ஆழ்வான் செய்தது
அஹம் வோ பாந்தவ ஜாதக –
புல்லாம் குழல் ஆசார்யன் மூலம் வரும் உபதேசம் தத்வ தர்சி வசனத்துக்கு ஏற்றம் –
அமிர்த கானம் காது வழியாக பருக – செவி ஆட்டகில்லா -பசுக்கள் -மான் கணங்கள்
-சிந்தயந்தி -மாதவன் வாங்கலையோ கோவிந்தன் வாங்கலயோ கண்ணன் -பால் தயிர் மோர் நினைவு இல்லாமல்
பூதனை முதல் கேசி வரை துரங்கம் வாய் பிளந்தான் –அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை -அஜா களத்தரம் -தீஷை -சிங்கம் –
அக்ரூரர் -மகிழ்ந்து புறப்பட -பாரிப்பு –
நல்விடிவு பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –நும்மை தொழுதோம் -இம்மைக்கு இன்பம் பெற்றோம் -அர்ச்சக பராதீனம்
-சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -சிந்தனைக்கு இனியாய்
அக்ரூரர் க்ரூர ஹிருதயா -யமுனை நதியில் சந்த்யா வந்தனம் பண்ண தண்ணீருக்குள் கண்ணன் –
எங்கும் உளன் கண்ணன் புரிந்து கொண்டார் -சக்ராயுத பூஷணம் -ஸ்தோத்ரம்
மதுரை மண்ணை மிதித்து மகிழ்ந்தான் கண்ணன் வீதியார நடந்து வர -வண்ணான் – –
மாலா காரார் –கூனி -கயல் வேல் மான் விழி கொண்டு பார்க்க -சந்தனம் பூசிய திரு மார்பில் பதிய –
மால்ய உபஜீவனம் -சுருள் நாறாத பூ -குப்ஜா -கூனி -தனுர் யாகம் -விர் பெரும் விழவில் -வார் கெடா வருவி -யானை -பாகன் -வீழ செற்றவன் தன்னை
முஷ்டிக சாநூரர் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் -சாந்தணி தோள் சதுரன் மலை -ஆனை காத்து ஆனை கொன்று மாயம் என்ன மாயமே –
கவளமால் யானை கொன்ற கண்ணன் -காஞ்சனை துஞ்ச வதம் செய்து கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமால்
தேவகி வாசுதேவன் -அத்தனை இன்பமும் காட்டி அருள -நெடுமால்
பரிஷித் -கரிக்கட்டை -சத்யம் -நாம் அனுபவிகிக்க இவ்வளவும் காட்டி அருள -ஆசார்ய க்ரம்ம் காட்டி அருள சாந்தீபன் -64 நாள் 64 ஆய கலைகளையும் கற்று
ஜராசந்தன் -காலயவனன் -முசுகுந்தன் -கதை –
த்வாரகை -நிர்மாணம் -த்வாபர யுகம் -கடல் சூழ்ந்த -16108 பெண்கள் தேவிமார் பார்த்து இருக்க பாஞ்ச ஜன்யம் தனியாக உண்கிறாய் சங்கத் ஆழ்வான்
9 பெண் 1 பிள்ளை ஒவ் ஒருவருக்கும் பகு குடும்பி -பாணன் உஷை -விருத்தாந்தம்

யது குலம்-முடிக்க -உலக்கை -கட்டி விஸ்வாமித்ரர் -உலக்கை கொழுந்து பிறந்து குலத்தை அழிக்க சாபம்
பொடி பொடி யாக்கில் கடலில் கலக்க —
மரம் பூண் -அலை இரும்புத் துகள் -கோரைப்புல் -துண்டு மீன் முழுங்க -வேடன் வாங்க –
இரும்புத் துண்டு -வேடன் அம்பு நுனி யில் வைக்க -பிரபாச தீர்த்தம் –

தன்னுடைச் சோதிக்கு போக காரணம் -ரிஷி சாபம் மெய்ப்பிக்க -யாதவர் கோரை புல்களை பிடிங்கி அடித்து அழிந்தார்கள்

தாருகன் தேரோட்டி -ருக்மிணி கூட்டி வரச் சொல்லி -தன்னுடை சோதிக்கு -சூட்டு நன் மாலைகள் —
அடலாயர் தம் கொம்பினுக்கே அனைத்தும் மாயம் –
5 அம்சம்
அடுத்து 6 அம்சம் -கலி படுத்தும் பாடு -வர்ணாஸ்ரம ஆஸ்ரமம் குலைந்து விவாகம் குலம் பார்க்காமல் பலவான் வென்று -தர்மம் குறைந்து
வீடு கட்ட கடன் -உழைத்து த்யானம் இல்லாமல் -கங்கை கரையில் -மூன்று முழுக்கு -சூதரர் மிகவும் உயர்ந்தவர் வியாசர் சொன்னது –
திருநாம சங்கீர்த்தனம் -பெண்கள் சிறந்தவர்கள் அடுத்து -என்றார் -கலி உயர்ந்தது என்றார் –
கலி -10 ஆண்டுகள் -1 ஆண்டு -1 மாசம் -1 நாள் நான்கு யுகம் -ருக்மிணி திருக் கல்யாணம் –குண்டினி புரம் ராஜா -பீஷ்மகன் -ருக்மி -சிசுபாலன் –
விதர்ப தேச்ம் -ருக்மிணி சந்தேசம் -7 ஸ்லோகங்கள் -குல தேவி யாத்ரை -பாஞ்ச ஜன்யம் ஒலி கொண்டு -கூட்டிக் கொள்ள வேண்டும் –
தேரில் -கண்ணாலம் கொதித்து கண்ணி –திண்ணாந்து — இருக்கவே -ஆங்கு அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் பேணும் ஊர் அரங்கமே –
ருக்மி மொட்டை அடித்து -விட்டு விட -ராசாச விவாகம் த்வாபரையில் திரு மனம் -செங்கண் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று விளங்கும் –
ருக்மிணி பிராண நாதாயா பார்த்த சாரதியாய மங்களம்
அல்லிக் கமலக் கண்ணன் -நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே

————————————————————————————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –3—பால சேஷ்டிதங்கள—-சகடா ஸூர சாடியருளிய வைபவம் – அருளிச் செயல்கள் —

July 21, 2015

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
சேப்பூண்ட சாடு சிதறி
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து –
பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே -நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை -உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
சாடு சாடு பாதனே

——————————————————————————————————————

பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப் பாலகனாய் ஆலிலையில் பள்ளியின்ப மேய்ந்தானை –
நற்சகடம் இறுத்து அருளும் தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
உருள் -சகடும் உடையச் செற்ற –நெடியோன்
திரிகால் சகடம் சினம் அழித்—தானூர் கண்ணபுரம்
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்பபுவது அஞ்சுவனே –
கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் –இதுவென் இதுவென்

———————————————————————————————————————-
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் –என்னை நிறை கொண்டான்
சகடம் பாய்ந்து –தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ
பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் –என் நெஞ்சை உருக்கும் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
=தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே
———————————————————————————————————————
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ..வீங்கோத வண்ணர் விரல் —
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –காவலனே
வலி சகடம் செற்றாய் –
தாளால் சகடம் உதைத்து —அங்கோர் மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம் காதல் பெரிது
அடிச் சகடம் சாடி –கோப் பின்னுமானான் குறிப்பு –

————————————————————————————————————————————

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்-கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
கடிய சகடம் உதைத்து –சேப்பூண்ட சாடு சிதறி -சாடு சாடு பாதனே
நற்சகடம் இறுத்து அருளும் தேவனவன்-உருள் -சகடும் உடையச் செற்ற –நெடியோன்
திரிகால் சகடம் சினம் அழித்தானூர் கண்ணபுரம்-கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ..வீங்கோத வண்ணர் விரல் –
அடிச் சகடம் சாடி –கோப் பின்னுமானான் குறிப்பு
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –காவலனே வலி சகடம் செற்றாய்
=தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர் உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர் –இதுவென் இதுவென்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்பபுவது அஞ்சுவனே –

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்
பிள்ளை யரசே -நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை -உள்ளவாறு ஒன்றும் அறியேன் –
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் –என்னை நிறை கொண்டான்
சகடம் பாய்ந்து –தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ
பேர்ந்து ஓர் சாடு இறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் –என் நெஞ்சை உருக்கும் –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
தாளால் சகடம் உதைத்து —அங்கோர் மாதுகந்த மார்வற்கு பெண்ணகலம் காதல் பெரிது

———————————————————————————————————————————————————————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –2—பால சேஷ்டிதங்கள—-பூதனா சம்ஹாரம் – அருளிச் செயல்கள் —

July 19, 2015

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே
பேய் முலை உண்டானே சப்பாணி
பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் –
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே –
பேயின் முலை யுண்ட பிள்ளையிவன் முன்னம்
பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் –
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை
பேய் முலை நஞ்சுண்டு
தாய் முலைப் பாலிலமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் எச நின்றாய்
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வறண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை யந்தோ சுவைத்து நீ யருள் செய்து வளர்ந்தாய்
கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐயபாலமுது செய்து ஆடகக் கை மாதர்வாய் அமுதுண்டது என் கொலோ –
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன் அல்லையே
————————————————————————————————————————————————————–
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் –
வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையோடு உயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனைக்
பேய்த்தாயை முலை யுண்ட பிள்ளை தன்னைப்
பஞ்சிச் சிறு கூழைஉருவாகிய மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசிதுவென்றால்
இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
பண்ணேர் மொழி யாய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் –
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள வுயிருண்டு
வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு –
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை கண்டீர் –
வஞ்ச மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
பேய்ச்சி முலையுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன்
கலையுடுத்த வகல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிருண்டவன் வாழிடம் என்பாரால்-
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் -மாலாய்
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிருண்டு –
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சாப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி
மண் சேர முலை யுண்ட மா முதலாய் வானவர் தம் கோவே என்று –
வஞ்சனைப் பேய் முலையோடு உயிர் வாய் மடுத்த்துண்டானை
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
பேய்முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை -மாயனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்ததுண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை -நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார் –
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாயவளாவி வாங்கி முலையுண்ட நம்பீ
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
பேய்ச்சி முலை யுண்ட பிள்ளாய்
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே
நள்ளிருள் வந்த பூதனை மாள –
அங்கோர் தாயுருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
—————————————————-

மாயோம் தீய வலவலைப் பெரு மா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தனித்தலைவன்
ஒக்கலை வைத்து முலைப்பால் உன் என்று தந்திட வாங்கி செக்கஞ்செக வன்றவள் பால் உயிர் செக வுண்ட பெருமான் –
மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –
பேய் முலையுண்டு –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ-
வஞ்சப் பெண்ணை சாவப் பாலுண்டதும் –தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் -உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி
முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
முலை உண்ட செங்கண் அவன்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உன் என்று அளாவி உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலையோ பண்பால் ஆனமையால் அன்று –
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி யுனக்கு இரங்கி -நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து
——————————————————————————————–

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியான்
பேய் முலை யுண்டு யுகந்தான் பண்டு
நலமே வலித்து கொல் நஞ்சூட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை யுண்டான் மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு –
பேய் முலை நஞ்சுண்டு–கோப் பின்னுமானான்
தீப்பால பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –

——————————————————————————————————————————————————————————————

வஞ்சனையால் வந்த-பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த விப்பிள்ளை
அஞ்சன வண்ணன் – கொங்கை நஞ்சுண்ட கோயின்மை
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரான்
வானவர் தாம் மகிழ வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவன்
பேய்ப்பால்முலையுண்ட பித்தன் -கேசவ நம்பீ-மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயன்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் -வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் –
பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லான்
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய ஆதி தேவன் அல்லையே
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான் –
பேய்ச்சி முலையுண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன்
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார் –
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே
வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான்-தீப்பால பேய்த்தாய் உயிர் காலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலையோடு உயிர் செக வுண்ட நாதன் -தானவர் கூற்று -பேய் முலை நஞ்சுண்டு–கோப் பின்னுமானான்
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர உன் என்று அளாவி உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும் அலையோ பண்பால் ஆனமையால் அன்று
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய வெம்மாயோன் காண்மின்
பேய்முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை -மாயனை –
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்ததுண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை -நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பி
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சாப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி
கலையுடுத்த வகல்குல் வன் பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிருண்டவன் –
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் -மாலாய்
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிருண்டு –
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டுகந்த பிள்ளை
பண்ணேர் மொழி யாய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான்
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள வுயிருண்டு

கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐயபாலமுது செய்து ஆடகக் கை மாதர்வாய் அமுதுண்டது என் கொலோ
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாயிடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்

முகில் வண்ணா நின்னுருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
நலமே வலித்து கொல் நஞ்சூட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை யுண்டான் மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து
தாய் முலைப் பாலிலமுதிருக்கத் தவழ்ந்து தளர் நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியான்

அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி யுனக்கு இரங்கி -நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து

உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு –
வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு –

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –
பேய் முலையுண்டு –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ யாமுருகின்றது தோழீ-
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் -உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி
வஞ்சப் பெண்ணை சாவப் பாலுண்டதும் –தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே –

——————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –1–திரு அவதார அருளிச் செயல்கள் —

July 16, 2015

திரு அவதார அருளிச் செயல்கள் –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி -பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில்
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் –
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
உருவுடையாய் யுலகேழும் உண்டாக வந்து பிறந்தாய் திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் –
மக்கள் அருவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிரும் சோலை எந்தாய் –
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –மன்னு வடமதுரை மைந்தனே -ஆற்றப் படைத்தான் மகனே
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருளில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போதந்தாய்
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி –
நந்த கோபன் என்னும் கொடிய கடிய திருமாலால் வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வேற்ற வெறிதே பெற்ற தாய் –
மாலாய்ப் பிறந்த நம்பியை –
நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே
ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தி-
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ தீ வினைகள் போயகல வடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் வேழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த –
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்துறை கோயில் –
மாற்று அரசர் மணி முடியும் திரளும் தேசும் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளயுமுடன்கள்ள வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணர் –
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை -நன்நறையூர் நின்ற நம்பியை –
தந்தை காலில் பெரு விலங்கு-தாள விழ நள்ளிருட்கண் வந்த வெந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்
நந்தன் முதலை நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான் கந்தம் கமழ்
காயா வண்ணன் கதிர் முடி மேல் கொந்து நறும் துழாய் கொண்டூதாய் கோல் தும்பி
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன சிந்தை சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெரும் அளவிருன்தேனை –
நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உன்னை என்னம்மம் சேமம் உண்ணாயே
பெற்றத் தலைவன் எங்கோமான் பேரருளாளன் முதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா –
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்ச போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
மணமகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற முதலை அண்ணல் –
நந்தன் முதலைக்கு இங்கு என் கடவோம்
ஈடும் வலியும் உடைய இந் நம்பி பிறந்த ஏழு திங்களில்

அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும் நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்
கையில் கனி எண்ணக் கண்ணனைக் காட்டித் தரிலும் –

————————————————————————————————————-

திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ
தீ வினைகள் போயகல வடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் வேழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த
-இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன்
-மணமகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்-
கந்தம் கமழ் காயா வண்ணன்

தீ வினைக்கு அரு நஞ்சாய் நல் வினைக்கு இன்னமுதாய் பூவினை மேவிய தேவி மணாளன்
நாராயணன் என்னை யாளியாய் நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நிற்கும்
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான்
தாமரைக் கண்ணன் விண்ணோர் பரவும் தலைமகன் -தாமோதரன் தனி முதல்வன் ஞாலம் உண்டவன்
வண்ண மா மணிச் சோதி அமரர் தலைமகன் – நெடுமால் -மாயன் -கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணல் அச்சுதன் அனந்தன்
செய்ய தாமரைக் கண்ணன் உலகு ஏழும் உண்டவன்-மூவராகிய மூர்த்தி-முதல் மூவர்க்கும் முதல்வன்
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரம கண்ணன் ஆழிப் பிரான்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் வல்வினை தீர்க்கும் எங்கும் உள்ள கண்ணன்
அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன்-

நிறம் கரியான் – நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் – கறங்கிய சக்கரக் கையவன்
விண் மீதிருப்பான் மலை மேல் நிற்பான் கடல் சேர்ப்பான் மண் மீது உழல்வான் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவான்
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவான்
என்னுடைய கோவலன் என் பொல்லாக் கரு மாணிக்கம் -என் திரு மார்பன்
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –

பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் –
வேண்டித் தேவர் இரக்க-மக்கள் அருவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து -ஒருத்தி மகனாய்
தந்தை காலில் பெரு விலங்கு-தாள விழ நள்ளிருட்கண் வந்த வெந்தை பெருமானார் -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் -திருவுடையாள் மணவாளான் -மன்னு வடமதுரை மைந்தன்
ஈடும் வலியும் உடைய இந் நம்பி உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருந்து -உருவுடையானாய் யுலகேழும் உண்டாகவந்து பிறந்து-
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதன் வெண் புரி நூலv விண்ணோர் பரவ நின்ற நாதன் ஞாலம் விளங்கும் நாதன் ஞாலம் தத்தும் பாதன்பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதன்
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதம் பூவினன் மேவிய தேவி மணாளன்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் -மாலாய்ப் பிறந்த நம்பி-
மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை-ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல்
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயலிடத்து -சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தி-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்காய் -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனாய்
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –நந்தன் முதலை யாய் -அண்ணலாய் -நந்தன் பெறப் பெற்ற நம்பீயாய் நான் உகந்து உண்ணும் அமுதாய் -எந்தை பெருமானாய்
பெற்றத் தலைவனாய் எங்கோமானாய் பேரருளாளனாய் முதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவாய் தோன்றிய தொல் புகழாளானாய்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனாய் அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறாய்
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே என்னும்படி
அமரர் முழு முதலாகிய வாதியாய் அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியாய் தூய அமுதாய் அல்லிக் கமலக் கண்ணன்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான் கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனாய் அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறாய் அத்தாலே அடியனேன் பெரிய வம்மானாய்
மாயக் கூத்தனாய் வாமனனாய் கொண்டால் வண்ணானாய் குடக் கூத்தனாய் வினையேன் கண்ணனாய்
பிறந்த மாயான்–வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி–
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் காட்டி கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கையில் கனி எண்ணக் கண்ணா கதையும் பொருளும் நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –

—————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-2- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

July 14, 2015

ஜென்மாதி அதிகரணம்  –
சங்கதி -7 வகைகள் உண்டு-நிரூபிதக
1. சாஸ்திர சங்கதி. பொதுவாக சாஸ்திரம் பிரமாண-பிரமேயங்களை பற்றியது.
மீமாம்ஸா சாஸ்திரமான வேதாந்த சாஸ்திரத்துக்கு விஷயம் ஜீவாத்ம-பரமாத்மா வாகும்.
ஶ்ரீபாஷ்யத்துக்கு ஸ்வாமி சுவாமி எம்பெருமானாரே சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்று பெயர் கொடுத்துள்ளளதால்
இது ஆத்மா விஷயமான சாஸ்திரம். சரீரே பவ :சரீரக : ஜீவாத்மாவைக் குறிக்கும். சாரீரஹ ஏவ சாரீரக : இரண்டும் ஒன்றே.
சாரீகஸ்ய ஜீவஸ்ய மீமாம்ஸா என்றால் ஆத்ம விசாரமான சாஸ்திரம் இது என்பது பொருள். மீமாம்ஸா = விசாரம்.
காவ்யம் ராமாயாணம் சீதாயா சரிதம் போலே-பூர்வ உத்தர மீமாம்ச -உக்தி பிரதானம் -தர்க்க சாஸ்திரம்
சுருதி பிரதானம்  -வேதார்த்த சாஸ்திரம்-சாஸ்திரங்கள் உடன்பாடு உண்டே

2. காண்ட சங்கதி. ஸம்ஹிதா , பிராம்மண, ஆரண்யகம் போன்ற வேத பாகம் பூர்வ காண்டத்தில் அடங்கும்.
இவை கர்ம விசாரமானவை. வேதாந்த பாகம் உத்தர காண்டமாகும். இவை இரண்டுக்கும் கர்ம காண்டம் – ஞான காண்டம் என்று பெயர்.
காண்ட சங்கதி என்றால் வேதார்த்த விசாரம் கர்மகாண்டத்தில், வேதாந்தார்த்த விசாரம் ஞான காண்டத்தில் என்பதாகும்.

3. த்விக சங்கதி . நான்கு பாகங்கள் கொண்ட சரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்தியாயங்கள் சித்த த்விகம்.
கடைசீ இரண்டும் சாத்ய த்விகம் ஆகும்.
சித்தத்விகம் ஜகத் காரண விஷயமான பரமாத்மாவைப் பற்றியது.
சாத்ய த்விகம் அவனை அடைய உபகாரணமாய் இருக்கிற உபாஸனாதி உபாயங்களைப் பற்றியது.
இவை இரண்டுக்குமான தொடர்பு த்விக சங்கதி.

4. அத்யாய சங்கதி. முதல் அத்யாயம் சமன்வயா அத்யாயம் . எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் பரமாத்மாதான் ஜகத் காரணம்
என்று நிரூபிபதை சொல்ல வந்தது.

5-பாத சங்கதி -ஒவ்வொரு அத்யாயத்திலும் 4 பாதங்கள். முதல் அத்யாயம் முதல் பாதத்துக்கு அவியோக விவச்சேத பாதம் என்று பெயர்.
இப்படியாக அடுத்தடுத்த பாதங்களின் காரண காரிய சம்பந்தத்தைச் சொல்வது பாத சங்கதி

6-பேடிகா சங்கதி -folder போல் -முதல் நான்கும் சாஸ்த்ராரம்ப அதிகரணங்கள்-முதல் 4 சூத்திரங்கள் ஒரு பேட்டிகா.
மற்றவை ஒரு பேட்டிகா. முதல் பேட்டிகா சாஸ்திர ஆரம்ப ஸமர்த்தன ரூபமானது. ஆக அது ஒரு விபாகம்.
இப்படி விபாக ரீதியாக விவரிப்பது பேட்டிகா சங்கதி.

7-அதிகரண சங்கதி -அவாந்தர-சங்கதி-கீழ்-மேல் அதிகாரங்களுக்கான விஷய தாரை அதிகரண சங்கதி.

அதிகரண நாமகரணம் -ஜென்மாதி -தர்க்க மீமாம்ச வியாகரண நியாய சாஸ்திரம்

அவாந்தர சங்கதி உதாஹரணம் -சொல்வார்கள்
தர்க்க சாஸ்திரம் படித்து ப்வ்ய்யாகரன் சாஸ்திரம் -அலங்கார சாஸ்திரம் மீமாம்ச சாஸ்திரம் படித்த சிஷ்யர்கள் ஒரு குருவிடம்
தர்க்க சாஸ்திரம் சிஷ்யர் இடம் விசேஷ அபிமானம்
அவேச்சேதகம்-புகை உள்ள இடம் தீ –
பட்டச்ய கத்யாம் சரகத்ய  வித்யா -குருவின் நடுவில் ஓணான் போகுமா -வாக்கியம் அலங்காரம் பார்த்து
காய்ந்து போன மரத்தில் பாம்பு உள்ளது

ஜந்மாஸ்ய யதஹ தத் பிரஹ்ம- (1-1-2)

பிரஹ்மம் விசார்ய யோக்கியமான வஸ்து என்று முதல் சூத்திரத்தால் சொன்ன பிறகு
அடுத்து அந்த பிரஹ்மம் எது என்ற கேள்வி எழுகிறது. இப்படி நடுவிலே கேட்கப்படுகிற கேள்விக்கு பதிலாக இரண்டாவது சூத்திரம் அவதரிக்கிறது.
இந்த இடைப்பட்ட கேள்வியே இரண்டு சூத்திரத்துக்குமான அவாந்தர சங்கதி யாகும்.

ஜந்மாஸ்ய யத : தத் பிரஹ்ம .

ஜன்ம + ஆதி = ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம். படைத்துக்கு காத்து கரத்தல் . பஹு ரீஹி ஸமாஸம் .
1. அதக்குண பஹு ரீஹி ஸமாஸம் (உ.ம்.) சித்ரகுஹு 2. தத்குண பஹு ரீஹி ஸமாஸம். (உ.ம். லம்ப கர்ண:)

ஜன்மாதி தத்குண பஹு ரீஹி ஸமாஸம்.

எப்படிப் பட்ட புருஷனாலே, ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம் பிரவர்திக்கின்றனவோ தத் பிரஹ்ம .

ஜென்மாதி -ஆதி சப்தம் -சிருஷ்டி ஸ்திதி பிரளயங்கள் -சமஸ்த பதம் -பஹூ விகுதி சமாகம்
பீதாம்பரம் -பீதம் அம்பரம் யஸ்ய சகா –
ஜன்ம ஆதி யஸ்ய சகா –
அஸ்ய ஜகத் -ஜகத்தை விவரிக்க இரண்டு விசேஷணங்கள் சொல்லி மீமாம்ச -யஞ்ஞம் சொல்லும் சூத்ரம் இது என்பர்
ப்ரஹ்மாசாரி -வேத அத்யயனம் பண்ணுபவன்  -நேரான அர்த்தம்
சம்ஹித கிரந்தம்
ப்ரஹ்ம சப்தம் -வேதம் சொல்லும்
சம்ஹிதா வாக்கியங்களையும் ஸ்வாமி பிரமாணங்களாக காட்டு அருளுவார்
சங்கரர் உபநிஷத் மட்டுமே காட்டுவார் –

வித்யா ஸ்தானம்
புராண தர்க்க மீமாம்ச இத்யாதிகள்
புராணங்கள் அப்ரமாணங்கள் இல்லை-சாத்விக ராஷச தாமஸ புராணங்கள் உண்டே
இதிகாசத்தில் புராண கதைகள் உண்டே
இதிகாசம் –
புராணம் –
சப்த சமுத்ரங்கள் -எம்பார் ஸ்வாமி காட்டி
ஜம்போத்தீபே -சங்கல்பம்
ஸ்தல புராணங்கள் உண்டே –
பாகவதம் பிரமாணமாக நிறைய பூர்வர்கள் காட்ட வில்லை
வியாசர் பராசரர் பெயர் வர ஆளவந்தார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் புராண ரத்னம் –

ஷேத்ரஞ்ஞன் -சரீர சரீரி பாவம் –
கடத்வம் -பொதுவானது –
ஜீவாத்மா -பலவுண்டு -ஸ்வ பாவங்கள் மாறும் -எதனால் மாறுபாடும் புரியாது –
வைசித்ரியம் பார்க்கிறோம் -அசிந்த்யம்-பகவத் சங்கல்ப அதீநத்தால் –
கர்ம அநு குணமாக -பலன் -பிரசித்தம் -பகவான் தான் பல ப்ரதன் -கர்ம இல்லை
அநுப பபத்தி வரும் –
சர்வ கர்ம -பார்த்து -அதற்கு அநு குணமாக –

எந்த கர்மாவுக்கு எந்த சமயத்தில் பலனை அனுபவிக்கப் பண்ணுவது எம்பெருமானது சங்கல்பம் அடியாகவே தானே –
கர்மா -அவயகதம் -என்றும் பெயர் -ஸ்தம்ப சதுர்முக பிரம்மா வரை ஷேத்ரஞ்ஞன் –
சர்வேஸ்வர நிகிலே ஹேய ப்ரத்ய நீக்க கல்யாணைகக குணங்கள் கொண்டவன்
சத்யசங்கல்பன் –ஞானாதி -சர்வஜ்ஞ்ஞன் -சர்வ சக்தன் –பரம காருணிகா–
நிர்ஹேதுக தயா -பரஸ்மாத் பரம் -8 விசேஷனங்கள் யஸ்மாத் பிரம்மாதி -நியத தேக கால பல போக பிரயோக –
விசேஷனங்கள் மீண்டும் மீண்டும் காட்டி அருளி -நிர்விசேஷ வாதம் நிறைந்து இருந்த காலம் –
ஈஸ்வரனுக்கு 8 விசேஷணங்களை சொல்லி இருக்கிறார் ஸ்வாமி ராமானுஜர்.
1. ஸர்வேஸ்வராத்
2. நிகில ஹேய பிரத்யநீக ஸ்வரூபாத்
3. சத்ய சங்கல்பாத்
4. ஞான ஆனந்த கல்யாணகுணகணாத்
5. ஸர்வஜ்ஞாத்
6. ஸர்வ சக்தேஹே
7. பரமகாருணிகாத்
8. பரஸ்மாத் பும்ஸா–இத்தனைக்கும் இடம் கொடுப்பது, நமக்கு அவன் வகுத்த சேஷியாகையாலே என்பதை
இந்த விசேஷணங்கள் மூலமாக காட்டுகிறார் பகவத் ராமானுஜர்.

அதிகரண அம்சங்களான
விஷயம், சம்ஸயம், பூர்வ பக்ஷம், சித்தாந்தம், ஆக்ஷேபம், சமாதானம் என்கிற வரிசையில்
இந்த ஜந்மாதஸ்ய அதிகரணத்தில் விஷய வாக்கியம் உண்டா ? என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கு அவசியம் இல்லை,
என்பதற்கான காரணம் முதல் 4 அதிகரணங்களும் சாஸ்திர ஆரம்பக ரூபமான அதிகரணங்களாக இருக்கிறபடியாலே என்று கொள்ள வேண்டும்.

முதல் 4 அதிகரணங்களின் உத்தேஸ்யம்
ஜிக்ஞாசாதிகரணம் வித்பத்தி அபாவத்தைப் பரிகரிக்கிறது.
ஜன்மாதஸ்யாதிகாரணத்தில் பிரதிபத்தி துஸ்சக -அ.து. ஞான துஷ்கர தோஷத்தை பரிகரிக்கிறது.

பிரதிபத்தி துஸ்சகமாவது – பகவானை பாஹ்ய பிரத்யக்ஷத்தால் (ரூப-ரச-கந்த-சக்ஷுர்-ஷோத்ர இந்திரியங்களால்) கிரஹிக்க முடியாது .
மானஸ பிரத்யக்ஷத்தாலும் பரமாத்மாவை கிரஹிக்க முடியாது.
காரணம் என்னுடைய ஆத்மாவை என்னுடிய மனசால் கிரஹிக்கலாமே யொழிய இன்னொருவருடைய ஆத்மாவை என்னுடைய மனஸால் கிரஹிக்க இயலாது.
ஆத்மாவைக் காட்டிலும் பரமாத்மா வேறுபட்டவனாகையாலே , என்னுடைய ஆத்மாவாய்க் கொண்டு பரமாத்மாவை கிரஹிக்க முடியாது.

பரமாத்மாவை அனுமானத்தாலும் சாதிக்க முடியாது. காரணம் புகையும் நெருப்புக்குமான சம்பந்தத்தை பாக சாலையில் அடிக்கடி
பார்த்துண்டாகையால் (வியாப்தி க்ஞானம் இருக்கிற படியால்) பர்வதோ, வஹ்னி மாந் , தூமத்வாத் என்கிற அனுமிதி ஏற்படுகிறது.
பரமாத்ம பிரத்யக்ஷம் இல்லாதபோது அவனைப் பற்றிய வியாப்தி கிரஹணம் ஏற்படாது.
ஆகையால் அனுமான பிரமாணத்தாலும் பரமாத்மாவை கிரகிக்க முடியாது.

சப்த பிரமாணம் (அ) சாப்த போதம் கொண்டு பிரஹ்மத்தை அறியாலாமோ என்னில் ,
வஸ்துவுக்கும், சப்தத்துக்குமான சம்பந்த ஞானம் – சக்தி கிரஹம் ஏற்படாதவரை அந்த இரண்டையும் சேர்த்து புரிந்து கொள்ள முடியாது.
உதாரணத்துக்கு Greek (or) Latin பாஷையில் ஏதாவது சொன்னால், அந்த சப்தம் எதை குறிக்கிறது என்று நமக்கு புரிவதில்லை.
வாச்ய-வாச பாவம் இல்லாத போது சக்தி கிரஹம் ஏற்படுவது இல்லை .

ஆக பிரத்யக்ஷத்தாலும், அனுமானத்தாலும், சப்தத்தாலும் பரமாத்ம ஞானத்தை சம்பாதிக்க முடியாதபோது,
பிரஹ்மத்தைப் பற்றிய சாஸ்திர ஆரம்பணம் அவசியமில்லை என்பது இங்கு ஆக்ஷேபம்.

லக்ஷணாதயா பிரஹ்மம் பிரதிபாத்யம் . கார்யத்தைக் கொண்டு காரண வஸ்துவை புரிந்து கொள்வது.
ஸ்ருஷ்டிதமான ஜகத்தைக் கொண்டு ஸ்ரஷ்டாவான பிராஹ்மத்தை ஆரியப் போகும் என்பது சமாதானம்.

அடுத்த கேள்வி – ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணத்வம் பிரஹ்மத்துக்கு விசேஷணமா? உபலக்ஷணமா? என்பது.

இதி ஸூத்ராத்ரகா -உத்தர பஷம் ஆஷேபம் சமாதானம் -சம்ப்ரதாயம் –
பிரத்யஷத்தால் அறிய முடியாதே -சஷூர் -பாஹ்ய பிரத்யஷம் -ரூபம் பிரதானம் -ஆந்திர ப்ரத்யஷம் –
அஹம் கச்சாமி -என்னுடைய வாத்மாவை தான் அறிய முடியும் -மானஸ பிரத்யஷம் –
அனுமானம் ஊகித்து-மற்றவ்வர் ஆத்மா இருப்பதை அறிவோம் -பிரவ்ருத்திகளை வைத்து –
சப்த பிரமாணம் -சப்தம் -வஸ்து -க்ரஹணம் சம்பந்த ஞானம் -வேண்டுமே -பத பதார்த்தங்கள் –
கடம் கஜம் சப்தங்கள் தொட்டு அறிவோம் -பர ப்ரஹ்மா அப்படி அறிய முடியாதே பிரதிபத்தி ஞானம் கிட்டாதே –
வாக்ய வாச்ய பாவம் –
லஷணத்தால் புரிந்து கொள்ள முடியும்
எதோ வாசோ நிவர்த்தந்தே -ஜகத் சிருஷ்டி ஸ்திதி பிரளயம் உண்டே -இந்த லஷணத்தால் அறிவோம் –
விசேஷணங்கள் என்றும் உப லஷணம் என்றும் -கொள்ளலாம்

லஷணம் மூலம் அறிய இந்த அதிகரணம் -சிருஷ்டி ஸ்திதி பிரளய காரணம் அவன் –
இதில் அனுபபத்தி உண்டா -இதம் ஜகத் -பிரத்யஷம் –
விஷய வாக்கியம் -ப்ருகு வருணன் -கதையாக சொல்லி –
தைத்ரியம் ப்ருகு வல்லி -சிஷா வல்லி முதல் – ஆனந்த வல்லி அடுத்து -ப்ருகு வல்லி மூன்றும் –
பர ப்ரஹ்மம் அறிய -வருணன் பிள்ளை ப்ருகுவுக்கு சொலி
இமானி பூதானி -ஜாயந்தே -ஜீவநதி –லயதி-தபஸ் மூலம் அறிய முயலுவாய் -தபோ ப்ரஹ்மேதி தப்ஸ் தான் ப்ரஹ்மம் என்கிறார் அடுத்து
கரணம் வஸ்து இரண்டும் ஒன்றாக இருக்குமோ

பிருஹுர்வை வாருணி – வருணம் பிதரம் உபஸஸார அதீஹி பகவோ பிரஹ்மேதி என்று தொடங்கி
ஏதோவா இமாநி பூதாநி ஜாயந்தே , ஏந ஜாதாநி ஜீவந்தி , யத் பிரயம் அப்விஸந்தி தத் விஜிக்ஞாசஸ்வா என்பதான வாக்கியம்
அதில் சொல்லப்பட்ட அஸ்ய பரிதிருஸ்யமான ஜகத : யாரால் ஸ்ருஷ்டிக்கப் பட்டு காத்து லயம் அடைகிறதோ
அந்த காரண வஸ்துவே பிரஹ்மம் என்று பதில் கூறுமுகமாக அமைந்தது தான்
சூத்ரம் 1 – 1 – 2 க்கு விஷய வாக்கியம்.–ஸீக்ஷ வல்லி , ஆனந்த வல்லி வரிசையில் உள்ள பிருஹு வல்லியில்

பிருஹு என்கிற பிள்ளை தன்னுடைய பிதாவாகிய வருணனைப் பார்த்து தனக்கு ”பிருஹ்மத்தைப் ” பற்றி சொல்லு என்று கேட்க
ஏதோவா இமாநி பூதாநி ஜாயந்தே , ஏந ஜாதாநி ஜீவந்தி , யத் பிரயம்தி அபிஸந் விஸந்தி , தத் பிரஹ்மேதி –
தபஸா பிரஹ்ம விஜிக்ஞாசஸ்வா என்று சொல்லி தபோ பிரஹ்மேதி ஸதபோ தப்பியதா , ஸதபத் தப்த்வா என்பதாக
அந்த பிரஹ்மத்தை வெளி இந்திரியங்களால் தெரிந்தது கொள்ளமுடியா தாகையால் , தபஸ் மூலமாக தெரிந்து கொள்ள முயற்சிப்பாய் என்று உபதேசித்தார்.
அன்னம் , பிராணம் , மனஸ் , விக்ஞானம் என்று அடுத்தடுத்து தியானத்துக்கு விஷயமாக்கி,
முடிவில் ஆனந்தம் பிரஹ்மே திவ்ய க்ஞாநாத் என்கிற தெளிவு பிறக்கிறது பிள்ளைக்கு.

மேலும் தபசே பிரஹ்மம் என்றதன் பொருள் ஸூக்ஷ்மமானது .பொதுவாக சாதனம் சாத்தியமாகாது .
பிரஹ்மத்தை அறிய சாதனமான தபஸ் , அதுவும் பிரஹ்மம் என்று கூறுவது எப்படி பொருந்தும் ?
பிரஹ்மத்தை அடைய பிரஹ்மமே உபாயோபேயம் என்பதை ஸூக்ஷ்மமாக தெரிவிப்பதாகும் .

பிரஹ்மா வா அரே திர்ஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாசி தவ்ய : என்ற இடத்தில்
ஸ்துத்தவ்ய என்றில்லாமல் நிதித்யாசி தவ்ய : என்றதை நோக்க வேண்டும்.

திரஷ்டும் இச்சதி திதிருஷ்டா என்றாகும். படிதும் இச்சதி பிடதிசதி என்றாகும், கர்த்தும் இச்சதி சிகீர்ஷதி என்றாகும்.
In Sanskrit compound words can be made single word in this way. அதுபோல த்யாதும் இச்சதி என்பது நிதித்யாஸதி என்றாகும்.
பார்த்தல், கேட்டல், நினைத்தல் என்பது நம் புலன்களைக் கொண்டு செய்ய முடிவது போலே தியானம் என்பது நம்மளவில் கூடுவதில்லை.
அதற்கு முயற்சிக்கத்தான் முடியும். என்பதை உணர்த்தவே
தியாதும் என்பதோடு +இச்சதி என்பதாக ”சந்நந்த ” பிரத்யயம் சேர்த்து நிதிதித்யாஸனமாக படிக்கப் பட்டுள்ளது.

இப்படி பிரஹ்மத்துக்கு லக்ஷணங்களைச் சொன்னால் கூட அந்த பிரஹ்மத்தை தெரிந்து கொள்ள முடியாது என்று சந்தேகம் சொல்ல
விசேஷண – விசேஷ்யங்கள் விளக்கப்படுகின்றன மேல்.

ரக்தம் + கமலம் = ரக்தகமலம். ரக்தம் விசேஷணம். கமலம் = விசேஷ்யம்.-விசேஷணஸ்ய இதர வியாவர்த்தகம்.

பசூணாம் ஸமஜ :
மனுஷ்யாணாம் ஸமாஜ :

கண்டோ, முண்ட, பூர்ண ஸ்ருங்க : கௌ : என்பது ஒருபசு மாட்டைக் குறிக்காது. காரணம்
கொம்புள்ள, கொம்பு இல்லாத, கொம்பு மொட்டையான தன்மை ஒரே சமயத்தில் ஒரு பசுவினிடத்தில் இருக்க சாத்தியமில்லை.
எனவே அது பசூணாம் ஸமஜ : (கூட்டம்)

அதுபோல, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணத்வமாகிற விசேஷணங்கள் ஒரு பிரஹ்மத்தினடத்தில் இருக்க முடியாதே என்பது ஆக்ஷேபம்.

1. ரக்தம் 2. குருத்வவது 3. ஏகம் புஸ்தகம் என்று பல விசேஷணங்கள் புத்தகமான ஒருவஸ்துவில் சாத்தியம் தானே?
என்பது அவாந்தர பிரச்சனம் (எதிர் கேள்வி).

ஆனால் புத்தகம் (= விசேஷ்யம் ) கண்ணுக்கு விஷயமாய் , தன் முன்னால் பார்க்கக் கூடிய வஸ்துவாய் இருக்கிற பக்ஷத்தில்
இப்படி பல விசேஷண முள்ள ஒருபொருளை புரிந்து கொள்ள முடியும்.
அதற்கு விசேஷ்யம் பிராமண கோச்சாரமாய் இருக்க வேண்டுமே என்பது பிரதிவாதி ஆக்ஷேபம்.
அப்படிச் சொல்லப்பட்ட விசேஷணங்கள் விருத்த விசேஷணங்களாகவும் இருக்கக் கூடாது.
உ.ம். ஸ்யாம: ஸ்வேத: பீனோ தேவதத: என்பதில் ஸ்யாம: ஸ்வேத: என்பது பரஸ்பர விருத்த லக்ஷ்ணம்.
கருப்பானவன் என்றால் வெளுப்பானவன் என்பது பொருந்தா தாகையாலே.

இங்கு கேள்வி என்னவென்றால், பிரஹ்மத்தைப் பற்றி நாம் முன்னமே அறிந்த பாடில்லை .
அதற்கு மற்ற வஸ்துக்களை போல் மூர்த்தத்தோடு கூடியதா? அமூர்த்தமா? என்றும் தெரியாத படியால் ,
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய விசேஷணங்களால் மூன்று பிரஹ்மங்கள் ஸித்திக்குமே என்பது இன்னொரு ஆக்ஷேபம்.
அதுவா , பிரஹ்மத்துக்கு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரகத்வம் விசேஷணதயா பிரஹ்ம த்ரித்வம் சம்பவிக்கும் என்பது எதிர் வாதம் .

உபலக்ஷணம் என்றால் தர்மியிடத்தில் சில தர்மங்கள் ஒருசமயம் இருந்து வேறு சமயத்தில் இல்லாமல் போவது .

சததம் வித்யமானம் விசேஷணம். கமலத்துக்கு ரக்த வர்ணம் அபிருதத் விசேஷணம்.

கதாசிது அவித்யமானம் – கதாசிது வித்யமானம் உபலக்ஷணம். காகம் இருந்த வீடு அவனுடையது உ.ம்.

பூர்வ பிரதிபன்ன ஆகாரம் இல்லாதபோது – If we do not know the object previously –
உபலக்ஷண தர்மமாகவும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரகத்வம் பிரஹ்மத்திட்டத்தில் அந்வயிக்காது என்பது இன்னொரு ஆக்ஷேபம்.

இரண்டு வகையாலும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரகத்வம் பிரஹ்மத்துக்கு லக்ஷணம் ஆகமுடியாது என்பதே- 2 வது சூத்திரத்துக்கான பூ. பக்ஷ.

தரஷ்டவ்யா -பார்த்து -ஸ்ரோதவ்ய -ஸ்தோத்ரம் பண்ணி -மனனம் பண்ணி த்யானம் பண்ணி நிதித்யாசிதவ்ய –
த்வய பிரத்யயம் எங்கும் -த்யாதவ்ய சொல்லாமல் சன் பிரத்யயம் சேர்த்து அருளி
சன் பிரத்யயம்-கர்த்தும் இச்சதி -பண்ண விரும்புகிறான் -த்யானம் எனபது நம் கையில் இல்லை
தைல தாராவது அவிச்சின்னமாக -ஸ்ம்ருதி பண்ண வேண்டும் –
முயலும் செய்கையே நம்மது -அதனால் தான் சன் பிரத்யயம் -த்யானம் செய்வதும் அறிவதும் அவனது நிர்ஹேதுக கிருபை அடியாகவே –
லஷணம் சொல்லி புரிய வைக்கிறார் இந்த அதிகரணத்தால்-தபஸ் பண்ணியே அறிய முடியும் -தபோ ப்ரஹ்மேதி என்று மேலே சொல்லி –
தபஸ் பண்ணினான் தபஸ் பண்ணின பின்பு -அன்னம் ப்ரஹ்மம் அறிந்து -லஷணம் அன்வயிக்கிறதே –
வருணன் இடம் சொல்ல -மேலே ஆழ்ந்த தபஸ் பண்ணச் சொல்லி -பிராணன் -அன்னம் விட உயர்ந்ததாக அறிந்து –
மனஸ்-விஜ்ஞானம் -அடுத்து அடுத்து -அறிந்து கொண்டு -ஆனந்தோ ப்ரஹ்மேதி
ஸ்வயம் பிரகாசமான வஸ்து அறிந்த பின்பு மீண்டும் வருணன் இடம் போக வில்லை –
ஏவம் வேதம் ப்ரஹ்மம் ப்ரதிஷ்டிதா -ஒருவன் புரிந்து கொண்டு பகவத் ப்ரேரிதனாய் கொண்டு மற்றவருக்கும் சொல்லி –
விஷய வாக்கியம் இத்தை எடுத்து அருளி -ஸ்ரீ பாஷ்யகாரர் –
சம்சயம் -பூர்வ பஷம் -கிம் பிராப்தம் -லஷணம் கொண்டு புரிந்து கொள்ள முடியாது
சிவந்த தாமரைப் பூ விசேஷணம்-வ்யாவ்ருத்தி காட்ட -இதர பேதம் காட்ட –
அநேக விசேஷணங்கள் இருந்தால் அநேக விசேஷ்யங்கள் இருக்க வேண்டுமே -சங்கை -மூன்று வஸ்துவா
கண்ட முண்ட பூர்ண -ஸ்ருங்க கோ சமூகம் -சமஜ -சமாஜக மனுஷ்ய பசுக்கள் –
சமாஜமா சமஜமா-கேள்வி உண்டு -ஒரு கொம்பு மட்டும் /கொம்பே இல்லாத /பூர்ணம் கொம்பு –

கண்டோ, முண்டோ, பூர்ண ஸ்ருங்க : கௌ: என்ற விருத்த விசேஷணங்ளும் கால பேதத்தால் ஒரு வாஸ்துவில் இருக்க வாய்ப்பு உண்டு.
முதலில் மொட்டை கொம்போடு கூடியதாய் இருந்து, பிறகு அது பாதி வளர்ந்து,
முடிவில் பூர்ணமாக வளர்ந்த கொம்போடு கூடியதாக அதே மாடு இருக்க தடையில்லை யாகையால்,
பிரஹ்மத்திட்டத்தில் ஸ்ருஷ்டி காலம், ஸ்திதி காலம், பிரளயகாலம் என்று வேறு வேறு சமயத்தில் நடைபெறுகிற படியால்
கால பேதேன ஏ தேஷாம் விரோதம் நாஸ்தி.
ஆக இந்த ஜகத் ஜன்மாதி காரணம் பிரஹ்மத்திட்டத்தில் இருக்க , ”பிரஹ்ம த்ரிப்த்வ ” நியதி இல்லை.

விகாராஸ்பதமான வஸ்துவுக்கு அநித்திய பிரசங்கம் வருமே என்று பௌத்தர்கள் ஆக்ஷேபிக்க

ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காரணத்வ பிரயுக்தமாக வருகிற ஸ்வரூப விகாராதி தோஷங்கள் பிரஹ்மத்திடத்தில் கிடையாது ,
ஏனென்றால் சோதக வாக்கியங்களாக அடுத்து சொல்லப் படுகிற ”சத்யம், க்ஞானம், அனந்தம் பிரஹ்ம ” என்கிற
லக்ஷணங்களாலே இந்த பொளத்த ஆபாதித அநித்ய தோஷம் மறுக்கப்படுகிறது .

பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப விகார வாதம் போலே அன்று விசிஷ்டாத்வைதத்தில் சொல்லப்பட்ட பிரஹ்ம விகாரம்.
சிதசித் வஸ்துக்கள் பிரஹ்மத்துக்கு சரீர மாகக் கொண்டு, அந்த சரீர விகாரம் தான் அவனுக்கு உண்டு தவிர ஸ்வரூப விகாரம் கிடையாது.

சுண்டு விரல் – அபுருஷன் – அசேதனம்.
மோதிர விரல் – புருஷன் – சம்சாரி சேதனன்
நடு விரல் – உத்புருஷன் – முக்தாத்மா
ஆள்காட்டி விரல் – உத்தம புருஷன் -; நித்யர்கள்
பெரு விரல் – அந்யத் புருஷ- பரமாத்மா.

ஸகலேதர வியாவர்த்தம் பிரஹ்ம பிரத்யக்ஷம் ஸக்யம் – சேதநாசேதன விலக்ஷணன் பிரஹ்ம என்பது இதன் பொருள்.
ஸ்ருஷ்டி ஸ்திதி லய காரணன் என்பதனால் அவனிடத்தில் எந்தவித தோஷமும் அவனிடத்தில் தட்டாது என்பதே
”சத்யம், க்ஞானம், அனந்தம் பிரஹ்ம ” என்கிற லக்ஷணத்தின் விளக்கம்.

சயாம யுவ சிவந்த கண்கள் சம பரிமாணம் தேவ தத்தன் -அநேக விசேஷணங்கள் இருக்கலாம்
விசேஷயம் முன்பே தெரிந்து இருந்தோமானால் -பிரமாணாந்தரங்கள் மூலம் அறிந்து -விரோதங்கள் இல்லாத விசேஷணங்கள் இருந்தால் –
ப்ரஹ்மம் மூன்றா -விசேஷணம் ஆக கொள்ள முடியாது -அதனுடைய தர்மம் இல்லை -முதல் ஆஷேபம்
உப லஷணம்-தர்மங்கள் தரமி இடம் எப்பொழுதும் இருந்தால் –
வித்யமானம் சதா சாது விசேஷணம் -கமலம் -சிகப்பு -எப்பொழுதும் இருக்கும்
அவித்யமானம் சாது வ்யாவ்ருத்தும் கதா –
நேற்று பஷி இருந்த பூமியே தேவ தத்தன் பூமி போலே -கேதாரம் பூமி
சிருஷ்டி காரனத்வம் ஒரு சமயம் இப்பொழுது ஸ்திதி பின்பு பிரளயம்
பூர்வ பிரதிபன்னாகாரம் இருக்க வேண்டுமே உன்ன லஷணம் என்றால்
ப்ரஹ்ம வஸ்து தெரிந்து இருந்தால் தான் உப லஷணம் -பறவை பூமி முன்பே தெரிந்து இருக்க வேண்டுமே –
இதிலும் ஆஷேபம் உண்டே
புராணம் -சிருஷ்டிக்கு சதுர்முகன்
வேதாந்தம் ப்ரஹ்மமே மூன்றுக்கும்
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அனிருத்தன்
சாத்விக புராணம்
புராணங்கள் அபிரமாணிகம் என்று சொல்ல முடியாதே
இடைச் செருகல்களும் உண்டு என்பர்
சூரியன் த்ரஷ்டா -one eighth ஆக்கி -சுதர்சனம் கொடுத்தான் என்பார் –
இதிகாசங்கள் பிரதானம் -அதிலும் இடைச் செருகல் என்பர் -சப்த தீபங்கள் சப்த சமுத்ரங்கள் -கண்டம் என்று தப்பாக சொல்லி –
தர்க்க சாஸ்திரம் வாதங்களும் உண்டே
லஷ்மி ஷீரா சமுத்திர -ஆதி தம்பதி -ஜகன் மித்யா -சத்யம் -புராணம் ஸ்வரூபம் அந்தரங்கம் அறிவது கஷ்டம்
ஸ்தல புராணம் -செல்லப்பிள்ளை வஷ்டத்சலம் கடைந்து -எடுத்து வந்தவர் என்பர்
அந்தரங்கர் மட்டுமே அறிவார் ஜகத்துக்கு உபாதானம் ப்ரஹ்மமே

பாகவதம் நிறைய இடங்களில் பூர்வர்கள் பிரமாணமாக காட்ட வில்லை ஸ்ரீ விஷ்ணு புராணம் நிறைய இடங்களில்
சுவாமி தேசிகன் பாகவத் காட்டி உள்ளார் -சிலர் பாகவதம் பின்பு –
வியாசர் கர்த்தா இல்லை என்பர் சிலர் வியாசர் -ப்ராசரர் பெயரை வைக்க ஆளவந்தார் இச்சயித்தார்
புராண லஷணம் சிருஷ்டி மன்வந்தரம் -பெரிய விஷயம் -கடல் போன்ற ஆழம் –
சாத்விக புராணங்கள் எதி தர்மங்கள் -நமக்கு இல்லை
விசேஷணம் உப லஷணம் இரண்டாகவும் கொள்ளலாம் -இது – சோதக லஷணம் -தோஷங்கள் வாராது -காரணமாக இருந்தாலும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -காட்டி சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
சைவம் வைஷ்ணவம் போலே பிரம உபாசனம் இல்லை
தாமச ராஜச குணங்கள் கொண்டு வந்த புராணங்கள்
குண த்ரய விபாக யோகம் -ஸ்ரீ கீதை -பௌதிக வஸ்துகள்-அப்ராக்ருதம் சத்வ வஸ்துகள்

ப்ரஹ்ம பஹூத்வம் அவர்ஜ நீயம் –
மேல் சித்தாந்தம்
உப லஷணம் -பிரசித்தி -ததைவ -ஏகமேவ அத்விதீயம் -யாக சத் சப்த வாச்யம் –
பஹூச்யாம் பிரஜாத்யேயே-நிமித்த உபாதான காரணத்வம்-
பந்தி வாசிக்கத் தெரிந்து -சகாரம் துவர்த்தம் –உபலஷனம் விசேஷணம் இரண்டாகவும் கொள்ளலாம் –
வஸ்து ஞானம் முன்னமே தெரிய வேண்டும் -கேதாரம் பஷி தேவதத்தன் உதாரணம் பார்த்தோம்
ராம -ரூட் ரமயதீதி ராம ரமயந்தே யோகின –கர்ஷதி ஆகர்ஷதி கிருஷ்ணன் -ஆகர்ஷிப்பவன் -ப்ரஹ்மம் இது போலே -ஹனுமந்தராயர் கதை –
வியாகரணம் -தாது பிரத்யயம் புஸ்தகம் -அவ்யுக்த சப்தம்
நாராயண வ்யுத்பத்தி உண்டே -பண்டித பாஷணம்- ப்ரஹ்மம் சப்தத்தாலே தெரியும் –
எது தன்னை ஜகத் ரூபமாக அமைத்துக் கொள்கிறதோ அதுவே சிருஷ்டி ஸ்திதி லயம் காரணம்
ப்ருகு தாது பிரத்யயம் கொண்டே அறியலாம்
கால பேதென ஜன்மாதீன ந விரோதம் -என்று விசேஷணம் என்றும் கொள்ளலாம் –

பரஸ்பர விரோத விசேஷங்கள்
சிகப்பு வெள்ளை புஷ்பம்
சிகப்பு மிருதுவான புஷ்பம் -இருட்டு வெளிச்சம் –
ராம சுக்ரீவம் யோ ஐக்யம்-அபிப்ப்ராயத்தில் ஐக்யம் –
கால பேதத்தால் விரோதம் நாஸ்தி -சிருஷ்டி ஸ்திதி சம்காரம் மூன்றும் நடந்து கொண்டே இருக்கும்
இதுக்கு ஆஷேபம் -ஜகத் ரூபமாக மாறினால் -தோஷம் தட்டுமே –
பரிணாமம் உண்டா ப்ரஹ்ம வஸ்துவுக்கு -விகாரம் என்றால் அநித்தியம் தானே
சமன்வயாதிகரணம் சாஸ்திர யோநித்வாதிகரணம் அடுத்து வரும் -ஸ்வரூபம் ஸ்வ பாவம் விகாரம் –
உபாதானம் -கடம் மண் -என்று கொண்டால் இது போன்ற கேள்விகள் வரும்
குகையில் சூஷ்ம வஸ்து -யாரோ ஒருவன் தான் அறிவான் -பரமாத்மா வுடன் சர்வான் காமான் சக –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம சோதக லஷணம்
காரண வாக்கியம் -சத்ய பதம் -நிருபாதிக -=சேதன வ்யாவர்ய்த்தம்
ஞானம் பதம் -சங்கு சீதா ஞானம் வந்து விலகும் முக்தர் வ்யாவ்ருத்தம்
அநந்தம் பதம் நித்ய வ்ய்வாருத்தம் -சம்சார பந்த லேசமும் இல்லாதவர் -அனந்தகருட விஸ்வக்சே னாதிகள்
அப்ருஷன் பிரகிருதி -புருஷன் -பக்த முக்த நித்ய -அங்குஷ்ட மாத்திர -உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் -ஐந்து விரல்கள்
பின்டா அண்டம் -பிரபஞ்சம் சம்பந்தம் –
சகல இதர விலஷணன் சர்வேஸ்வரன் என்பதை காட்டும் சத்யம் ஞானம் அநந்தம் -ப்ரஹ்ம
பின்ன பிரவ்ருத்த சாமான்யாதிகரண்யம் வேற -இதற்கு சம்பந்தம் இல்லை

காரணம் கார்யம் -மிருத்பிண்டம் -மண் குடம் -ஜகத் தோஷங்கள் எங்கே இருந்து வந்தன -ப்ரஹ்மத்தில் இருந்து இருக்க வேண்டும் –
பரமாத்மா ஸ்வரூபத்தில், அம்சத்தில் பரிமாணம் உண்டா -ஸ்வரூப பரிமாண வாதிகள் -சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்மம் –
ந முக்ய பரிமாணம் -சித் அசித் மட்டுமே -அனுபபத்திகள் ஏற்படும் -அம்சியில் இல்லை அம்சத்தில் தான் என்றாலும் சில அனுபபத்திகள் உண்டே
உத்தம புருஷன் -சகல இதர வைலஷண்யம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம சோதக லஷணம் -விசஜாதீயன் –
காரண வாக்கியம் எதோ வாசோ நிவர்த்தந்தி -தாஜ்ஜலா தாஜ்ஜ்யம் தல்லம் த்தனம் -சாந்தோக்யம் –

தத் ஜலாநிதி சாந்த உபாஸீத (சாந்தோக்கியம்) தஜ்ஜம் தல்லம் ததனம் என்று விபாகம் பண்ணினால்
தஜ்ஜம் = தஸ்மாது ஜாயதே இதி தஜ்ஜம்
தல்லம் = தஸ்மாது லீயதே இதி தல்லம்
ததனம் = தஸ்மாது ஸ்தித்வம்
என்பதான காரண வஸ்துவே உபாசனத்துக்கு விஷயம். காரணந்து த்யேய: என்பதும் காண்க.

அப்படிப்பட்ட பிரஹ்மம் சாகலேதர வியாவர்த்தகம். சத்யம், க்ஞானம், அனந்தம் பிரஹ்ம என்றும் சொல்லப்படுகிறது.

தாபத்ரய சஞ்சீவினி -சம்பூர்ணமாக மீண்டும் வராமல் ஏகாந்த ஆத்யநதிக துக்க நிவ்ருத்தி மோஷம் –
நேதி நேதி மார்க்கம் இல்லாத -இது தான் பர ப்ரஹ்மம் –இது தான்
அசத்யா வ்யாவ்ருத்தம் அஜ்ஞ்ஞானம் பரிச்சேத்யாதி வ்யாவ்ருத்தம் அத்வைதிகள் –
சத்தியவாதி தான் -அசத்யவாதி இல்லை -என்றும் அறியலாம் நிருபாதிக சத்ய வாச்யன் -நாமாதி அர்ஹம் -சேதனசேனங்கள்

சத்யம் -எதிர்பதம் மித்யா பாம்பு கயிறு –ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்றா சொல்லுகிறோம் நாமும் -கேள்வி வரும் பரிகாரம் எது –
சேதனாசேதனங்கள் வ்யாவ்ருத்தி சத்யம் என்றால் —
ஞானம் பூத பவிஷ்ய எக்காலங்களிலும் அசங்குசிதமாகாத ஞானம்
தர்ம பூத ஞானம் -விபு வாக்கும் பிரகாசம் -மழுங்காத ஞானாம் -முக்தர்கள் வ்யாவ்ருத்தி –
அனந்த தேச கால வஸ்து பரிச்சேதம் இல்லாத -ஸ்வரூபம் -ச குண-நித்யர் வ்யாவ்ருத்திகள் -அனந்த கருட விஷ்வக் சேநாதிகள்-
சாலோக்யம் சாரூப்யம் சாயுஜ்யம் -நான்கு விதங்கள் உண்டே
அபக்த பாப்மாதிகள் -சமா அதிக தரித்திரன் -அவன் ஒருவனே –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –
அன்யோன்ய ஆஸ்ரய தோஷம் -ஜகத் ஜன்மாதிகரணம் புரிய சத்யம் ஞானம் அநந்தம் புரிய வேண்டும்
ப்ரஹ்ம பதமே காட்டிக் கொடுக்கும் இவற்றை -க்ரமமாக காட்டி அருளுகிறார்
லஷண வாக்யங்கள் -விலஷண vasthu காரண வஸ்து லஷணம் மூலம் புரிந்து கொள்ளலாம் -சித்தாந்த சம்ப்ரதாயம் நிகமிக்கிறார்

ஸ்வரூப லஷணம் -சந்தரன் குழைந்தைக்கு காட்டி -ததஸ்த லஷணம் -கொஞ்ச காலம் தான் இருக்கும் ஒரே அளவு அறிய –
உபாதி காட்டாமல் ஸ்வரூபம் விளக்கி –
குண குணி பாவம் ஒத்துக் கொள்ளாத அத்வைதிகள் –
யதோவாயந்தி ததஸ்த லஷணம் போலே என்பர் ஜகமே மித்யா என்பதால் இப்படி அருளுவார் –
ஜன்மாதி என்ற ஸூத்ரம் -ஜகத் காரணம் -என்பதால் அத்வைதி வாதம் பொருந்தாது –
ஈஷாதாதிகரணம் ப்ரஹ்ம வஸ்து பார்த்தது -குண குணி பாவம் உண்டு நிர்விசெஷம் பொருந்தாது
தர்க்கமும் பொருந்தாது –
நதிக்கரை நதியின் அம்சமா -ததாஸ்த லஷணம் அத்வைதி இப்படியும் சொல்லி -நமது சம்ப்ரதாயத்துக்கு அருகில் இங்கே சொல்வார்கள் –

சப்த பிரயோகம் வந்ப்தாலே அத்வைதி வாதம் போகும் வாயைத் திறக்காமல் இருந்தால் தான் அத்வைதி வாதம் நிலை நிற்கும்
ப்ரஹ்ம உபாசனம் எதற்கு நாமே ப்ரஹ்மம் என்றால்
ப்ரஹ்மம் சத்யம் வாக்கியம் சத்தியமா -வேறே வஸ்து உண்டே ஆகும் அந்த வாக்யமே மிதியை யாகுமே விவகாரம் –
பாரமார்த்திகம் என்று மழுப்புவார்கள் –
அனுஷ்டானம் அத்வைதிகள் நம் போலே ஆராதனம் போல செய்து அவர்கள் வாதத்தை முறிப்பார்கள் –

நநு, அத என்று தொடங்கி இதி சேத் , ந ” என்பதாக முடிகிற பங்திகள் பூர்வ பக்ஷ விஷயமானது .
அத்ர அபிதீயதே என்ற தொடங்கி சொல்லப்பட்டவை சித்தாந்த விஷயமாகும்.
பூர்வ பக்ஷ கண்டனம் செய்யும்போது கூட பிராமணிகா ந பகுமன்யதே என்பதாக பகவத் ராமாநுஜர் கூறுகிற சைலி போற்றத்தக்கது.
கிரியான்வய பதத்தால் அல்லது சப்தத்துக்கும்-அர்தத்துக்குமான சம்பந்தம் கிடையாது என்கிற வாதம் சிலவிடங்களில்
பொருந்தக் காணலாம் ஒழிய எல்லாவிடங்களிலும் அதுவே நியதியாகாது.

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பள்ளி எழுச்சி அவதாரிகை –ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களின் சாரம் –

July 13, 2015

பெரிய பெருமாள் நிர்ஹேதுகமாக தன்னுடைய அழகைக் காட்டி -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை போதரே என்று சொல்லி
புந்தியுள் புகுந்து தன பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றபடியே
அநாதி மாயயா ஸூ ப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே -என்றபடியே அநாதி காலம் அஜ்ஞான வலையிலே உறங்கி
தனது ஸ்வரூபத்தையோ உபாயத்தையோ புருஷார்த்தத்தையோ அறியாமல் -தேகத்தையே ஆத்மா என்று நினைந்து விஷயாந்தரங்களில் ஈடுபட்டு –
தன்னைச் சேர்தவர்களையும் இந்நிலைக்கே ஆளாக்கி இருக்க -விஷயாந்தர ஈடுபாட்டை மாற்றி -உண்மையான ஸ்வரூபத்தை உணர்த்தி தன் பால் ஈடுபடச் செய்து –
ஆழ்வார் மூலமாக பெரிய பெருமாள் உபாய உபேயங்களை உலகோர்க்கு
ஐம்புலன் அகத்தடக்கி காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி -என்றபடி –உணர்த்தி பின்பு கவலை அற்று கண் வளர்ந்தார்
அப்படி கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை எழுப்ப இந்த திவ்ய பிரபந்தத்தை ஆழ்வார் அருளிச் செய்து அவரிடம் அடிமை செய்ய முற்படுகிறார் –

அப்படி உபாய உபேயங்கள் அவனே என்று நிச்சயித்து -பிறகு அவனை எழுப்புவதுவும் -அவனது அழகைப் பாடுவதும் -அவனுக்கு திருமாலை சமர்ப்பித்தல் போன்ற
கைங்கர்யங்களைச் செய்யவும் இச்சித்து அவற்றைச் செய்வதே பொருத்தமாகும் –
இத்தையே ஆண்டாளும் மாரி மலை முழைஞ்சில் -திருப்பாசுரத்தில் அனுசந்தித்தாள்
நம்மாழ்வாரும் நெடுமாற்கு அடிமையில் சரம புருஷார்த்தம் சொல்லி -கொண்ட பெண்டிர் –உலகோருக்கு வழியை உபதேசித்து –கிடந்த நாள் கிடந்தாய் -பாசுரத்தில் எம்பெருமானை திருப்பள்ளி எழுப்பி அடிமை செய்ய முற்பட்டார் –
விச்வாமித்ர முனிவரும் கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே என்று பெருமாளை துயில் எழச் செய்தார் –
அதைப் போலவே இவ் வாழ்வாரும் அவன் பள்ளி உணரும் பெரும் அழகைக் கண்டு அடிமை செய்ய ஆசைப்பட்டு இப்பிரபந்தம் அருளிச் செய்கிறார் –
அப்படி உகப்பான கைங்கர்யத்தை பெரிய பெருமாள் திருவடிகளிலே பிரார்த்திக்கச் சென்ற அளவிலே கை நீட்டி அணைத்தல் குசலம் விசாரித்தல்
திருமாலை சுவீகரித்துக் கொண்டு சாத்தி கொள்ளுதல் முதலானவற்றை செய்யாமல் பள்ளி கொண்டு இருந்தார் பெரிய பெருமாள் –
பெரிய பெருமாளுக்கு ஆதரம் ஆழ்வார் இடம் இல்லையா என்றால் இல்லையே மிகவும் பிரியமானவர் –
ஆதலால் பிறவி வேண்டேன் -என்றும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் -என்றும்
இச்சுவை பெறினும் வேண்டேன் -காவலில் புலனை வைத்து -குளித்து மூன்று அனலை ஓம்பும் -உன்னருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் –என்றும்
ஆழ்வார் அருளிச் செய்ததைக் கேட்டு மகிழ்ந்து -ஆத்மானம் வா ஸூ தேவாக்யம் சிந்தயத் -என்றபடி நினைத்தும் –
நாக மிசைத் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான் -என்றபடி இவரைப் போலே உலகோர் எல்லாரையும்
தம்மிடம் மட்டுமே ஆழம் கால் படச் செய்யும் சிந்தனையிலே பள்ளி கொண்டு அருளியதால் இவரைக் கவனிக்க வில்லை-

இவர் விஷயாந்தரங்களில் திரிய -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு-இருந்த போது பெரிய பெருமாள் உறங்காமல் இருக்க
இவர் பெருமாள் இடமே ஈடுபாடு கொண்ட பின் -அடியோர்க்கு அகலலாமே -கவலை அற்று மார்பில் கைவைத்து உறங்கலானார் –
ஆழ்வார் எம்பிரானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே வேகம் கொண்டவராய் -எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -என்று
விஸ்வாமித்ரர் -உத்திஷ்ட நரசார்தூல -சீதா பிராட்டி -ச மயா போதித ஸ்ரீ மான் –ஆண்டாள் -உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் -போலே
அவரை-அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே என்று துயில் எழுப்பி
ஆண்டாள் போல -உனக்கே நாம் ஆட்செய்வோம் -கைங்கர்ய எல்லையான ததீய சேஷத்வம் வரை
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியேனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்று பிரார்த்திக்கிறார்
கைங்கர்யத்தில் உண்மைப் பொருளை அறிந்தவர் ஆகையால் –ஆம்பரிசு அறிந்து கொண்டு -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஷ்ச தே-என்றும் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்றும் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
க்ரியதாமிதி மாம் வத -என்றும் -எனக்கே ஆட்செய்-முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-என்றும் பொழுது விடிந்தமைக்கு அறிகுறிகளைச் சொல்லி அவனை துயில் எழுப்புகிறார்

திருமாலையைக்  காட்டிலும் திருப்பள்ளி எழுச்சிக்கு ஏற்றம் -காலம் காலமாக உறங்கிக் கிடந்த இவரை திருமாலையில் பெரிய பெருமாள் எழுப்ப –
அப்படி எழுந்த இவர் தம்மிடம் உள்ள பெரிய அன்பினால் உறங்கும் பெரிய பெருமாளை இதில் பள்ளி உணர்த்துகிறார் –
தனது வாக்கால் செய்த கைங்கர்யத்தை இனிமையாக பெரிய பெருமாள் கொண்டதை -புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே –என்று கொண்டான்
உடலால் செய்யும் கைங்கர்யத்தை துளவத்  தொண்டாய தொல் சீர்த் தொண்டர் அடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி -என்று கொண்டான் –
அதில் எம்பிரானுக்கு இனிதான கைங்கர்யத்தைப் பெற்றார் -இதில் அவன் அடியார் உகந்த கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறார் -அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்று அருள்கிறார் –
இவரை அடைய எம்பெருமான் முயன்றதை அதில் அருளினார்
அம்முயற்சி பலித்தத்தை இதில் அருள்கிறார் –
தன்னை கடாஷிக்கும் படி -எளியதோர் அருளும் என்றே என் திறத்து -என்றாரே அதில்
மற்றவரை கடாஷிக்கும் படி -அவர்க்கு நாளோலக்கம் அருள -என்று பிரார்த்திக்கிறார் இதில் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்