மலையை எடுத்து மகிழ்ந்து கன்மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
தடம் பெரும் தோளினால் வானவர்கோன் விட வந்த மழை தடுத்து ஆநிரை காத்தானால்
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்
கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –
மாரிப் புகை புணர்த்த பொறு மா கடல் வண்ணன் பொறுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட மழை வந்து எழு நாள் பெய்து மாத தடுப்ப
மதுசூதனன் எடுத்து மறித்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
அம்மைத் தடம் கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆணிரையும் அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப
இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
அடிவாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
ஏனத்துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
செப்பாடுடைய திருமாலவன் தன செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
நாராயணன் முன் முகம் காத்த மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
தாமோதரன் தாங்கு தடவரை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணி வண்ணன் மலை –கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே –
மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன்
குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி –
கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்- பறித்திட்டவன் மார்வில் எறிந்து என்னழலைத் தீர்வேனே
குன்றினால் குடை கவித்ததும் –
-வென்று சேர் பிள்ளை நல்வினையாட்டம் அனைத்திலும் அங்கு என்னுள்ளம் குளிர –காணுமாறு இனி உண்டு எனில் அருளே –
வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே —
அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து –
———————————————————
கன்றி மாரி பொழிந்திடக் கடிந்து ஆநிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன்
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய் மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து
ஆயர் எந்தம்மோடு இனவா நிறை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திரு வல்லிக் கேணி கண்டேனே
மஞ்சுயர் மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் —-திரு வயிந்திர புரமே
மழை மா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் –திருச் சித்ர கூடம்
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் –சித்ர கூடத்து உள்ளானே
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் குலவும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை –திரு மணிக் கூடத்தானே
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே –
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமாள்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோ நாராயணமே
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடும் காற் குன்றம் குடை யொன்று ஏந்தி நிறையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே —
குன்றால் மாரி தடுத்தவனை —
விறல் வரைத் தோள் புடை பெயர வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே
குன்றால் மாரி பழுதாக்கி
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை மயலுற வரை குடை எடுவிய நெடியவர்
ஆ நிரைக்கு அழிவென்று மா மழை நின்று காத்து
உகந்தான் நில மா மகட்கு இனியான் –திருக் கோட்டியூரானே
ஆயர் அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை கொலோ –முன்கை வளை கவர்ந்தாயே
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்
குன்றம் எடுத்து மழை தடுத்து –மால் என்னை மால் செய்தான் –
குன்றம் எடுத்து ஆ நிரை காய்ந்தவன் தன்னை
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய் என்றும் –
குன்று எடுத்த தோளினானை –அடி நாயேன் நினைந்திட்டேனே —
———————————
மலையால் குடை கவித்து –கார்க்கோடு பற்றியான் கை
வரை குடை தோள் காம்பாக ஆ நிரை காத்து ஆயர் நிரை விடை யேழ் செற்றவாறு என்னே –
குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா –
குன்றம் குடையாக ஆ காத்த கோ –
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான்
குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்த்தி
மால் வரியைக் கிளர்ந்து மரிதரக் கீண்டு எடுத்தான்
குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
ஆராலே கன்மாரி காத்தது தான்
—————————————————-
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
பெரு மலை எடுத்தான் பீடுறை கோயில் –மாலிரும் சோலை திருமலை
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன் சென்று சேர் திரு வேங்கடமா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னை தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி –
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே –
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இனவா நிரை காத்தேனும் யானே என்னும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் –எண்ணும் தோறும் என்னெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றதே
குன்றம் ஓன்று ஏந்தியதும் –மாய வினைகளையே அலற்றி இரவும் நன்பகலும் தவிர்கிலம் என்ன குறை வெனக்கே
குன்று ஏந்திக் கோ நிரை காத்தவன் என்னும் –திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திரு மகட்கே –
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை வாய் நிறை நீர் பிளிரச் சொரிய இன ஆ நிரை பாடி அங்கே யொடுங்க அப்பன் தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே –
குன்றம் எடுத்த பிரான் அடியரொடும் ஒன்றி நின்ற சடகோபன்
காத்த எங்கூத்தாவோ மலை ஏந்திக் கல்மாரி தன்னை பூத் த்ண் துழாய் முடியாய் –உன்னை எனக்குத் தலைப் பெய்வனே
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
பாழியம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் –
————————————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply