ஸ்ரீ கோயில் கந்தாடை வாதூல தேசிக குல அண்ணன் குமார வேங்கடாசார்யா ஸ்வாமி-அண்ணாவிலப்பன் ஸ்வாமிகள் -சஷ்டி யப்த பூர்த்தி -1972-மலர்

தர்க்கா பிரதிஷ்டா நாத்–ஸ்ரீ ப்ரஹ்ம -ஸூதரம் –
மிது நாயநிகர் -விசிஷாட்த்வைதிகள்
ஸ்ரீ வைஷ்ணவன் -ஸ்ரீ பகவத் அனுபவ ப்ரீதிகாரித்த கைங்கர்யம் பரம புருஷார்த்தம் –
த்வயோ பாவ -த்விதா –த்திதைவ த்வைதம் -நத்வைதம் அத்வைதம் –விசிஷ்டம்ச விசிஷ்டம்ச விசிஷ்டே –விசிஷ்டம்ச தத் அத்வைதம் ச விசிஷ்டாத்வைதம் -விக்ரஹம்
விசேஷணங்களுக்கு பேதமும் விசிஷ்டங்களுக்கு பேதமும் பொருள்
மிதுனம் அயனம் -வ்யுத்புத்தி பண்ணி -ஸ்ரீ உடன் கூடிய நாராயணனே ப்ராப்யம் -மிது நாயநிகர் விசிஷ்டாத்வைதிகள்
சதேவசோம் ஏதமக்ர ஆஸீத்
ஏகே ரஹவை நாராயண ஆஸீத்
ந ப்ரஹ்மா நேசான
-காரணந்து திய
யா ப்ருதிவ்யாம் திஷ்டன்
தத் தவம் அஸி
சத்ரி குண்டலி தேவதத்த -குடை குண்டலம் உடைய தேவதத்தன் போலே
விசேஷணங்களுக்கு பேதம் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு அபேதம்
ஹரே அநுபாவ நந்தஸ்து-அவனைக் கிட்டி கைங்கர்யம் பெற்று அவன் முகோல்லாசத்தை அனுபவிப்பதே பரம புருஷார்த்தம்

—————————————————————————————————–

சர்வ சாகாப்ரத்யய ந்யாயம்-சர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயம் -சாமான்ய விசேஷ ந்யாயம் -சாக பசு ந்யாயம் –
காரண வாக்யங்கள் நிர்குண பரங்கள் அத்வைதிகள்-
வேதம் -வேயதீதி வேத -வ்யுத்புத்தி -ஸ்வார்த்த பிரகாசம் -ஆஸ்திகருக்கு-
ய ஆத்மன பரோவேதய தம் விஷ்ணும் வேத யந்தியத் தத்வேதா நாம் ஹி வேதத்வம் யஸ்தம் வேத சவேதவித் -பிரமாணம்
சாஸ்திரம் விட உபதேசமே எளியது -சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புத்தேச்சலா காரணம் -உபதேசாத்தரிம் புத்வா விரமேத் சர்வ கர்ம ஸூ –கற்றலில் கேட்டல் நன்று நிவ்ருத்தி தர்மமே சிறந்தது -அல்லன நீக்கி நல்லன ஆக்குமவன் -சித்த உபாயமானவன் –
சர்வ கர்மங்கள் -சாஸ்திர அப்யாசாதி கர்மங்கள் -உபயுக்ததமான சாராம்சத்தைக் கடுக சரவணம் பண்ணி கிருஷி பண்ணாதே உண்ண விரகுஉடையவன் கிருஷி சிந்தையை விடுமா போலே
விரிவு கற்கைக்கு ஈடான சாஸ்திர அப்யாசாதி கர்மங்களில் உபரதனாய்க் கடுக்க மோஷ உபாயத்தில் மூல ப்ராப்தம் -தேசிகன் திருவாக்கு
இதனாலே சாஸ்திர ஞானம் -ஸ்வயம் ஆர்ஜிதம் -திரு மந்தரத்தால் பிறக்கும் ஞானம் பித்ருக்க தனம் -பிள்ளை லோகாசார்யார்
ஸ்வ ஜ்ஞானம் பிராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூப்பி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யன்ன கிஞ்சன –ஸ்வரூப உபாய உபய ஞானங்கள் -மூன்றையும் ரகஸ்ய த்ரயம் காட்டும்
தானோருருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -பஹூச்யாம் –சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த காரணம்
ஸூ ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் –உபாதான காரணம்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டன் -சஹ காரி காரணம் -ஆதி சப்தம் காலத்தையும் குறிக்கும்
மனஸ் ஏவ ஜகத் சிருஷ்டி –எல்லையில் ஞானத்தன் ஞானம் அகத்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனை –ஞானத்தை சாதனமாகக் கொண்டு சிருஷ்டி
உப சம்ஹாரதர்ச நாதி கரணம் –சத்ய சங்கல்பம் பரிகரமாகும் என்பதை வலியுறுத்தவே -சுருதி பிரகாசிகை
பயோம்புவச் சேத தத்ராபி -ஸூ தரம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம சவ்ருஷ மாசீத் -சுருதி பிரமம் சஹகாரி காரணம்

—————————————————————————————————————————————–

மேகம் பருகின சமுத்திராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய் திருந்தினவாறே சர்வதா சர்வ உப ஜீவ்யமாமே -நாயனார்
பரத்வம் -வேதம் -சுகாதிகள்முதல் ஆழ்வார்கள் பரத்வத்திலே ஊன்றி இருப்பார்கள்
ஷீராப்தி வ்யூஹம் -பாஞ்சராத்ரம்
ஹார்த்தம் அந்தர்யாமி -ஸ்ம்ருதிகள் -சனகாதிகள் -திரு மழிசைப் பிரான் -அந்தர்யாத்மதையிலே ஊன்றி இருப்பார்கள்
விபவம் -இதிஹாச புராணங்கள் -வால்மீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்திலும் பராசராதிகளும் நம்மாழ்வாரும் கிருஷ்ணாவதாரத்திலும் ஊன்றி இருப்பார்கள்
அர்ச்சை -திவ்ய பிரபந்தங்கள்
அதவா வேத வேத்ய நியாயத்தாலே பரதவ பர முது வேதம் வியூக வியாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் -நாயனார்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –செய்ய தாமரைக் கண்ணனாம் -திருவாய்மொழி -அர்ச்சாவதார சௌலப்யம்
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே
சௌலப்யத்தை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து அனந்தரம் தன் துறையான கிருஷ்ணாவதாரத்திலே போய் நாம் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறுவது என்றோ
என்னும் அனவாப்தியோடே தலைக் கட்டுகிறார் –அருமையும் எளிமையும் பாரார்கள் இ றே-ஒரோ விஷயங்களிலே ப்ராவணராய் இருப்பார் –
பரத்வத்துக்கு உத்கர்ஷம் உண்டாய் போவாரும் பலர் உண்டாய் இருக்கச் செய்தேயும் பாவே நான்யாத்ரா கச்சதி என்றான் இ றே திருவடி –
அப்படியே கிருஷ்ணாவதாரத்தில் காட்டில் அர்ச்சாவதாரத்துக்கு நீர்மை மிக்கு இருந்ததே யாகிலும் இவர் எத்திறம் என்று ஆழம் கால் பட்டது கிருஷ்ணாவதாரத்திலே ஆயிற்று
ஸ்வரூபக்ருத தாஸ்யம் -குண க்ருத தாஸ்யம் -கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தான் ஆகிலும்
கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே துடி கொல் இடைமடத் தோழீ அன்னை என் செய்யுமே -5-3-4-
அச்சேத்யோயம்-அதாஹ்யோயம்-அக்லேத்ய -அசோஷ்ய ஏவச வெட்டவோ எரிக்கவோ நனைக்கவோ உலர்த்தவோ முடியாது
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் என் ஆவி ஈரும் -9-9-5-
வேம் எமதுயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என் தோள்கள் வாட -10-3-7-
காரியம் நல்லநகல் அவை கானில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் -6-7-9-
வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் ஆய அறியாதவற்றோடு அணைந்து அழுத மாறன் –
அச்சேத்யோயம்- என்னுமது ஈரும் வேம் ஈ ரியாய் உலர்த்த என்னப்பட –காற்றும் கழியும் கட்டி அழக கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே –நாயனார்

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே

ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-மாறன்
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் நம் இராமானுசன்
இராமானுசன் பொற் பாதுகையாம் நம் முதலியாண்டான்-

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அண்ணாவிலப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: