ஸ்ரீ பாஷ்யம்— –1-1-3- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

சாஸ்திர யோநித்வாதிகரணம் -1-1-3-

ஸாஸ்த்ர யோநித்வாத் – சூத் 1-1-3.

அவதாரிகை:
ராமாயணம், பகவத் கீதை போன்ற பவித்ரமான புத்தகங்களை தரையில் வைக்காமல்
வியாச பீடம் என்று சொல்லப் படுகிற உயரமான பலகையிலோ, மணையிலோ வைப்பது போல ,
உபன்யாசகர் ஸ்ரோதாவினுடைய புத்தி கிரகிக்கும் அளவாக விஷயத்தை சங்கிரஹித்துச் சொல்வது அவதாரிகையாகும்.

முதல் சூத்ரத்தால் வேதாந்த வாக்கியங்களைக் கொண்டு பிரஹ்மத்தை அறியலாம் என்பதும்
குறிப்பாக எந்த வாக்யத்தால் பிரஹ்ம ஞானம் ஏற்படும் என்பதற்கு 2 வது சூத்ரதால்
”யாதோ இமாநி பூதாநி . . . .” என்கிற காரண வாக்கியம் காட்டப்பட்டது.

பிரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்கிற கிரமத்தில் , பிரத்யக்ஷத்தால் பிரஹ்மத்தை அறிய முடியாத போது ,
அனுமானப் பிரமாணத்தை விட்டு சப்த பிரமாணம் வரை ஏன் செல்ல வேண்டும் என்கிற கேள்வி வர,
புழக்கடை மூலிகை இருக்க, பர்வதத்தை நாடவாருண்டோ? அதுபோல சுலபமான அனுமான பிராமணத்தை விட்டு
கஷ்டமான வேதாந்த வாக்கியங்களைத் தேடி ஏன் பிரஹ்ம ஞானத்தைப் பெறவேண்டும் என்பது கேள்வி. பதிலாக வருவது 3 வது சூத்ரம்.

சூத்ரம்:
ஸாஸ்த்ரயோநித்வாத் = ஸாத்ரம் யோநிஹி யஸ்ய ஸக என்பது பஹூரீஹி ஸமஸ்த பதம் (single compound word).
பஹூரீஹி உ.ம். பீதாம்பர: = பீதம் + அம்பரம் யஸ்ய ஸக
சித்ர குஹோ = வேறு வேறு வர்ணங்கள் கொண்ட பசுமாடுகளை உடையவன்.
வாக்கியார்த்தம் :
சாஸ்திரைவ பிரஹ்மத்யைவ போதயத் ஏவ = சாஸ்திரம் ஒன்றினாலேயே ஆறியப் படுமவன்.
வேதைச்ச ஸர்வை : அஹமேவ வேத்ய : என்பது கிருஷ்ண கீதை .
வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேசவாத் பரம்

முதல் நான்கும் -சேர்ந்து முன்னுரை -பீடிகா -போலே
சாஸ்திரமே பிரமாணம் -அதீந்த்ர்யம்
ஜகத் ஜென்மாதி காரணம் -அவதாரிகை –
ஸூத்ரம் அவதாரிகை -பீடிகா -உப ஆசனம் அருகே வர -உதவும்
அதிகரண சங்கதி ஸூத்ர சங்கதி
அவாந்தர சங்கதி -பிரம்மா ஞானம் வேதாந்த வாக்கியம் கொண்டே –
தேன் வேண்டியவன் -இங்கேயே இருக்க மலைக்கு போவது எதற்காக –
அனுமானம் பிரமாணம் எளியது -சப்தம் வேதம் சர்வாதிகாரம் இல்லையே -வேதாந்த பிரதிபாத்யம் –
ஜகத் காரணம் -அறிந்து -அனுமானத்தாலே சித்தம் -இருக்க வேதம் சாஸ்திரம் போக வேண்டுமா –
அவாந்தர சங்கதி -சப்த விசேஷ ரூப–வேதாந்தம் சப்தத்தில் விசேஷம் –

அத்யந்த அதீந்திரயம்–சாஸ்திரம் ஒன்றாலே -சாஸ்திரம் என்றாலே வேதாந்தம் –
சாஸ்திரம் ஏவைக ப்ரஹ்மம்- வேதைக சர்வம் அஹம் ஏவ -ஏவகாரம் எங்கும் கூட்டி அர்த்தம்
பல ஜ்யோதிஷம் தர்ம சாஸ்திரம் தர்க்க சாஸ்திரம் வ்யாகரண சாஸ்திரம் -மீமாம்ச சாஸ்திரம்
குமாரில பட்டர் –பிரவ்ருத்தி நிவ்ருத்தி நித்யம் உபாயம் -அநித்தியமாகவும் இருக்கலாம் பும்ஸாம் வேதம் உபதேசிக்கும் தத் சாஸ்திரம் –
அஹரக சந்த்யா -உபாசீயா தினம் சந்தா வந்தனம் செய் -போன்றவை
சாசனம் விதிக்கும் -காக்கவும் செய்யும் -சாசனம் பட்டும் இல்லை -வேதத்யயனம் செய்பவனை -ரஷிக்கவும் செய்யும் –
குரு-அந்தகாரம் -கு சப்தம் -ரு சப்தம் அதன் விரோதி -பரஞ்சோதி ஸ்வரூபம் காட்டி அருளுவதால் –
ஆசார்யனால் பகவல் லாபம் பகவானால் ஆசார்ய லாபம்-
வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி -வேதமே பிரதானமான சாஸ்திரம் -யாருடைய சாசனம் -சூரியன் உதிப்பதும் -சாசனம் அடியாக –
சிருஷ்டி நியமம் -சாஸ்திரம் நாம சிருஷ்டி நியமம் என்பர் –
ப்ரத்யஷம் ஐந்து ஞான இந்த்ரியங்கள் மனச் மூலம் அறிவது -மானச பிரத்யஷம்
அனுமானம் பர்வதத்தில் புகை நெருப்பு –கருப்பு மேகம் மழை-பக்ஷம் சாத்தியம் ஹேது திரிஷ்டாந்தம்
சாபத போகம்
உபய லிங்கம் -ஸ்வரூப நிரூபிக தர்மம் நிரூபித்த ஸ்வரூப விசேஷணம் இரண்டு உண்டே
கோத்வம்-பசு மட்டுமே -அசாதாராண லஷணம்-
ப்ரஹ்ம வஸ்து -ஜகத் காரணத்வம்-ஸ்வரூப நிரூபித தர்மம் -உபய லிங்கம் -நிரூபித ஸ்வரூப விசேஷணம்
ப்ருகு வல்லி-யதோ வாயோ இமானி பூதானி -பிரத்யஷமாக காட்டி இந்த அனைத்தையும் -ஆனந்த வல்லி ப்ரஹ்ம வித்து ஆப்நோதி –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்று காட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -தோஷங்கள் இல்லை என்று காட்டி இரண்டுக்கும் சம்பந்தம்
சத்வித்யா சாந்தோக்யம் -ஔதார்யம் -சரளா -அஜ்ஞ்ஞானிக்கு சுகம் ஆராத்ய -சுகதரம் ஆராதனை யும் எளியது –
அரை குறை ஞானிக்கு ப்ரஹ்மாவே வந்தாலும் தெளிவிக்க முடியாது ஸூ பாஷிதம் –
ஜகத் ரூபமாக பரிமாணம் –
ப்ரஹ்ம சப்தமே காட்டுவதால் பூர்வ பிரதிபன்னாகாரம் இல்லை
இருவர் கோவிந்தனை பற்றி பேச கோவிந்தனை அறியாதவன் கேட்க புரியாமல் விழிப்பான்
அது போலே இல்லை வ்யக்தி பற்றி அதுவே காட்டிக் கொடுக்கும் –
ப்ரஹ்மம் மட்டுமே சத்யம் மற்றவை மித்யா என்றது மற்றவை அவனை சார்ந்து இருப்பதால் –
ப்ரஹ்மம் மட்டுமே independant சத்யம் –
சரீராத்மா பாவம் -உபாதானம் -ஜகத் அசித்தும் சித்தும் ஜீவாத்மா நித்யம் நித்யம் அநி த்யானானாம்
ஸ்வரூபம் ஸ்வ பாவம் -எப்படி உண்டாகும் -நித்தியமான வஸ்துவாக இருந்தால்
காட்டுத் தீ -பொறி -அக்னி ரூபம் அஷரம் சப்த வாச்யன் -சத் வஸ்துக்கள் உண்டாகி லயம் அடைந்து -அத்வைதம் இல்லை ஐக்யம் இல்லை –
பிரஜாயந்தே -ஜீவாத்மாவுக்கும் உத்பத்தி உண்டே –
மூல பிரகிருதி -ப்ரஹ்மம் இடம் இருக்க ஞானம் இல்லாமல் -தோஷம் எப்படி வரும் –
காரணத்திலோ இல்லாதது கார்யத்தில் வராதே உபாதான காரணம் –

2-2- தர்க்க பாதம் -இத்தை விசாரிக்கும் -த்ருஷ்யதேது -விலஷண வஸ்து -தர்க்க அப்ரதிஷ்டானம் என்பதும் தர்க்கம் என்பர்
சில அளவு தர்க்கம் கார்யம் பண்ணும் அதற்கு தர்க்கம் அவசியம் வேண்டும் –
விதி -வைதம் -வேத -தாது -சாஸ்திரம் –
அநு மானம் -அநு -பிறகு மானம் ஞானம் -பிரத்யஷம் அப்புறம் தான் அநு மானம் -inferance
பக்ஷ தர்மதா ஞானம் -பர்வதம் பஷம்-
சாத்யம்-வன்கி–நெருப்பு -ஹேது பூமக -புகை -புகை ஞானம் கொண்டு நெருப்பு -அனுமானம் –
வ்யாப்தி ஸ்மரணம் ஏக சம்பந்தி ஞானம் -அபர சம்பந்தி ஸ்மாரகம்
யானை யானைப்பாகன் -தனியாக வந்தால் -இன்னொன்று எங்கே கேட்போம்
நியத சாதர்யம் –சேர்ந்தே இருப்பவை –எதிர்பதம் -ஆகஸ்மிக சாதர்யம் தார் செயலாக சேர்த்தி –
பரமார்த்தா -வ்யாப்தி ஸ்மரணம் வந்ததும் சாத்யம் பலிக்கும் நியத சம்பந்தம் சாதர்யம் நினைவுக்ஜ்கு வர -இப்படி மூன்று வழிகள்-
பிரமாணம் யோக்யம் பிரமேயம் -யாருக்கு பிரமாதா
பிரா -யதார்த்தம் -பிரமிதி -ஞான திரிபுடி –
இந்த்ரியார்த்த சந்நிதிகர்தம் பிரத்யஷம் பிரமாணம் பிரமிதி இரண்டும் ஒன்றே இங்கே
ஆப்த்ய வாக்கியம் சப்தம் சாபத ஞானம் போதகம் -தர்க்க சாஸ்திரம் புரிந்து கொள்ள வேண்டும் -சாஸ்திர யோநித்வாத் அறிய
ஸ்வார்த்த அனுமானம் பரார்த்த அனுமானம் -இரண்டு வகை -ஸ்வ பாவம் கேள்வி கேட்க முடியாது -யானை யானைப் பாகன் -சம்பந்தம் அறிந்து –
தனியாக வந்தால் கேட்ப்போம் -புகை நெருப்பு -போலே நியதம் -வ்யாப்தி ஸ்மரணம் -நியத சாதர்யம் -அனுமதி உத்பத்தி பிரக்ரியை –
வாசஸ்பதி மிஸ்ரர் சங்கரர் வாத கதை -ச்தோத்ரியன்-கிளி -வினயம் -தொனி-ஸ்வ தஸ் பிரமாணம் பரகஸ் பிரமாணம் கிளிகளே வாதம் பண்ண –
பாமதி -மனைவி -சங்கர பாஷ்யம் பெயரும் பாமதி பெயரில் -தர்க்க சாஸ்திரம் பிராவண்யம் கொண்டவர்கள் –
யானை பார்த்து -பிளிறு சப்தம் கேட்டா அனுமானிக்க வேண்டும்
பிரத்யஷமாக -தெரிந்தும் அனுமானம் பார்ப்பார்களோ வாசஸ்பதி வசனம் அவி விரோதம் –
அவிநா பாபம் -நெருப்பு இல்லாமல் புகை இருக்காது
அன்வய வ்யாப்தி வ்யதிரேக வ்யாப்தி -நெருப்பு இல்லாமல் புகை இருக்காது -நெருப்பு இருந்தால் புகழ் இருக்கும் –
இரண்டும் இருந்தால் நிச்சயம் அனுமானத்தில் தோஷம் இருக்காது
அன்வய வ்யதிரேக –திருஷ்டாந்தம்
சித்தாந்தம் விருத்தம் இல்லாத அனுமானம் ஒத்துக் கொள்கிறோம்
பஞ்சாவவயம் வாக்ய பிரயோக -பரார்த்தானுமானம் –
பிரதிஜ்ஞ்க்ன –மலையில் தீ இருக்க வேண்டும்
ஹேது -மலையில் புகை
உதாரணம் சமையல் அறையில்
உபநய -மலையிலும் புகை உள்ளது
நிகமனம் -அதனால் மலையில் நெருப்பு இறந்தே ஆக வேண்டும் –
இந்த ஐந்தும் -மற்றவருக்கும் அனுபவம் உண்டாக்க –பஞ்ச அவயவ வாக்கியம் –
பௌத்தர்உதாரணம் உபநய இரண்டும் ஓதும் என்பர்
மீமாம்சம் பிரதிக்பா ஹேது நியமனம் மூன்றும் போதும் –
எப்படி கேள்வி -வந்த பின்பு –சில மீமாம்சகர் -உதாரணம் சொல்லி –
வாதம் –ஜல்பம் -விதண்டா -மூன்று விதம் -வாதி பிரதிவாதி மத்தியஸ்தர் -சந்நிதியில் -சமயபந்தம் -நிக்ரஹ ஸ்தானம் –
வித்ராண்யம் வாதி வேதான்ப்த தேசிகர் மத்யச்தகர் அஷோப்ய முனி -பிரதி வாதி கௌதம மகரிஷி நியாய சாஸ்திரம்
எல்லாம் அநு மான ரூபம் -அநு மான ஆகாரம் -புரிந்து கொள்ள வேண்டும் -ஒவ் ஓன்று அதிகரணத்துக்கும் உண்டே

வேத வசன விரோதம் -எந்த பிரகரணத்தில் சொல்லிற்று என்று விசாரித்து அமன்வயப்படுத்த வேண்டும்
ரகுவம்சம் -கார்த்தவீர்யார்ஜுனன் -பல புராணங்களில் -அடி நுனி நடு மேல் அறிந்து –
ஹேத்வாபாச – -தோஷங்கள் -சௌயபிசாரம்-மலையில் குளம் இருக்க -பாத ஹேத்வாபாசம்-
ஸ்வரூப சித்தி ஆபாசம் -தர்க்க சாஸ்திரம் -தத்வ சிந்தாமணி –
தத்வ நிர்ணயம் அறிய இந்த ஹேது தோஷங்கள் அறிய வேண்டும் –
விஜய பிரயோகத்துக்கும் அறிய வேண்டும் -வாதம் ஜல்பம் விதண்டா வாத முறைகள்
gas stove heated metal -ஹேத்வாபாசம் -நெருப்பு புகை இல்லாமல் இருக்கலாம் –
every day is not sunday every sunday is day
இடி சப்தம் கேட்டு -மேகம் மழை பொழியும் சொல்வது அனுமானம்
துணி -நூல் நெசவாளி -சாமான்ய அனுமானம்
விசேஷ அனுமானம் –
குண்டு தேவதத்தன் பகலில் உண்பதை பார்க்க வில்லை என்றால் இரவில் உண்பான் என்று அனுமானிக்கிறோம் –
-அர்த்தாபத்தி பிரமாணம் -என்பர் மீமாம்சகர் -நாம் இதுவும் ஒரு வகை அனுமானம் -என்போம்
பீஜா -விதை போட்டு நீர் விட்டு -வளருவது நம் கையில் இல்லை சங்கல்பம் இருந்தால் வரும்
ஈஸ்வரன் -சிருஷ்டி கர்த்தா -அஸ்மாதாதி அகர்க்கத்த கர்த்தும் -by detection பர ப்ரஹ்மம் -இதர சஜாதீயன் -அனுமானிக்கிறோம்
அஹம் அஸ்மா அமிர்தோ பவதி மிருத்யு பதம் இல்லை
யதாத்ம்ய அதிகரம -தாத்பர்யம் -ஜீவ பர யாதாம்ய ஞானம் இருந்தபடியே உணர்வது
ஆத்மா -பல அர்த்தங்கள் உண்டே அமர கோசத்தில்
அன்வய வ்யாப்தி இல்லை எதிரேக வ்யாப்தி உண்டு தேவதத்தன் இரவில் உண்பதில் -ஈஸ்வர பாதக அனுமானம் –
பூமி அங்குரம் ஆதி -ஈஸ்வர கர்த்ருத்வம் அது போலே -அஸ்மாதாதிகள் பண்ண வில்லை என்பதால் -அன்வய த்ருஷ்டாந்தம்ம் காட்ட முடியாது
ஆதி -சப்தம் எல்லாம் பஷத்தில் அடங்கும் -அன்வய வ்யாப்தி காட்ட முடியாது -வ்யதிரேக வ்யாப்தி மட்டும் காட்ட முடியும்
குட்டித்வம் சாது -எங்க அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லச் சொன்னார் -நல்ல பாம்பு குட்டி விஷம் மிக்கது –
குட்டித்வம் என்றாலே சாதுத்வம் இல்லை -பாம்பு குட்டி பின்னத்வம் -இரண்டும் சொல்லி ஹேது –
பிரத்யஷம் பரோக்தம் -எதிர்மறை -அபரோக்த ஞானம் அறிந்தவன் தான் கர்த்தா –
கர்த்தும் இச்சாவும் இருக்க வேண்டும் -உத்யுக்தனாகவும் இருக்க வேண்டும்
பிரயோகம் -ஞானம் இச்சா கருதி -ஞான இச்சா பிரத்யந்கங்கள் மூன்றும் இருக்க வேண்டும் –
கார்யோபதானம் -கார்யம் செய்ய மூலப் பொருள் -அபரோக்த ஞானம் -இச்சா -பிரயத்னம் –
சேர்ந்தால் தான் பொருள் உண்டாகும் -கர்த்ருத்வம்
ஜகத் கர்த்தா ஈஸ்வரன் -நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -தன்னைத் தானே ஜகத் ரூபமாக ஆக்கிக் கொள்கிறான் –
அபரோக்த ஞானம் உண்டு -பஹூச்யாம் ப்ரஜா யே ய -இச்சையும் யுண்டு
தர்க்க சாஸ்திரம் -உபாதான காரணம் பரமாணுக்கள் என்பர் -COSMOOLOGY –
பரமாணு -நித்ய வஸ்து அதற்கு கர்த்தா வேண்டாம் -ஜனன மரணம் இல்லாதது –
ச வித்யா யா விமுக்த்யா -மோஷ ஹேது ஒன்றே வித்யை ஆகும் —
கர்ம யோக -தபஸ் தீர்த்த தான கீரத்த யஜ்ஞாதி-ஆளவந்தார் -யஜ தேவ பூஜாயாம் – பஞ்ச மகா யஜ்ஞங்கள் ஆதி -இடவை போன்ற
ஞான யோகம் இத ச்வாந்தம் மனசை கட்டுப்படுத்தி -பரிசுத்தாத்மா -பக்தி ரூபாபன்ன ஞானம்
பக்தி யோகம் -ஒன்றே மார்க்கம் -பரை ஏகாந்த பிரீத்யா த்யானாதி — தைல தாராவதி அவிச்சின்ன -ஆதி சப்தம் –
சாஸ்திர சரவணம் அத்யயனம் மனனம் சிந்தனம் -பரஸ்பரம் போதயந்த -ரம்யதாம் –
மந்தனம் -வெண்ணெய் கடைந்து –free will pre detretmined –
கர்ம அனுகுன்மமாக -பிரதம பிரவ்ருத்தி -உணர்ந்தே அனுபவிக்கிறோம்
ஈஸ்வர அனுமானம் -பார்த்து வருகிறோம் –உத்பத்தி விநாசம் பூமியில் செடிகள் -கர்த்தா உண்டு-
கார்யம் -கர்த்ரு -ஜன்யம் -கார்யத்வாத் -கார்யத்வம் ஹேது வைத்து சாத்தியம் –
வ்யாப்தி ஞானம் –அஸ்தித்வம் சித்தம் -ஹேத்வாபாசம் முன்பே பார்த்தோம் –சப்ரதிபட்ஷம் -ஒரு விதமான ஹேத்வாபாசம் –
வாதி பிரதிபாதி வாதங்கள் கேட்டு -நெருப்பு மலை மேல் புகை இருப்பதால் -ஒருவன் சொல்லி -இருக்கவே முடியாது –
பாறைகளே இருப்பதால் -எதிர்வாதம் —
இரண்டுமே சரியாக இருக்க வாய்ப்பு உண்டே -குளம் நெருப்பு நித்ய தோஷம் -அநித்திய தோஷம் –

சரீரம் கொண்டே குயவன் பானை செய்கிறான் -மீமாம்சகர் சொல்ல –
சுய சரீரம் பிரேரனனம் பண்ண சரீரம் வேண்டாமே -பதில் -அஹம் ஆத்மா தான் கர்த்தா -செயல் செய்கிறதே -கட படாதிகளை -போலே இல்லை –
மத்தியஸ்தர் இரண்டையும் கேட்டு -மீமாம்சகர் வாதம் தோற்றது என்ற முடிவே -சொல்ல வேண்டும் -தார்க்கிகர் வாதம் வெல்லும்

ஆளவந்தார் -எம்மை ஆள வந்தீரோ -அக்கி ஆழ்வான்-ஆஸ்தான வித்வான் —
ஜல்ப கதை வாதம் -ராஜ பத்னி பதி வரதா -ந பதி வரதா நிரூபிக்க வேண்டும் –
ராஜா தார்மிகா – ந தார்மிகன் -என்று நிரூபிக்க வேண்டும் -தவ மாதா ந வந்தா -வந்தா மலடி என்று நிரூபிக்க வேண்டும் –
விஜிகீத்வா பிரசனம் வெற்றி கொள்ள கேட்ட கேள்விகள் -சோம பிரதம -கந்தர்வ திரிதிய அக்னி -அப்புறம் மனுஷ்ய -பதி –
ராஜா -விஷ்ணு போலே -காலமும் மாற்ற முடியும் -சபிரதிபட்ஷம் -சாத்தியத்தை நேராக எதிர்த்து –

அப்ரயோஜக சங்கை இருவர் மேலும் -கொண்டு –ஹேது -இருப்பதால் சாத்தியம் இருக்க வேண்டுமா –
புகை -இருந்தால் நெருப்பு இருக்க வேணுமா –
அநு கூல தர்க்கம் -வ்யாப்யா ஆரோபக வ்யாபக ரூபக தர்க்கம் –
விஷம் புஞ்சவா சத்ரு க்ருஹி ந புஞ்சவா -சப்த பிரமாணம் தர்க்கம் -தந்தை பிள்ளையை விஷம் உன்ன சொல்ல மாட்டாரே -என்பதால் –
சர்ப்பம் கயிறு –நகராமல் இருப்பதால் -பிரதிஷ பிரமாணம் -தர்க்கம் கொண்டு முடிவு –
தர்க்கம் சுதந்த பிரமாணம் இல்லை அனைத்துக்கும் உபயுக்தமாக இருப்பது –
ஆர்ஷம் தர்மம் உபதேசம் -ரிஷிகள் -வேத சாஸ்திர அவிவிரோதமாக இருந்து தர்க்கம் கொண்டு –
மனு நீதி -சத் தர்க்கமாக இருக்க வேண்டும் -பௌத்தர்கள் துஷ் தர்க்கம் குத்ருஷ்டிகள் —
தர்க்கம் கொஞ்சம் தடைகளும் உண்டு -பரமாத்மா வஸ்து லாஜிக் தாண்டி –பூர்ணஸ்ய –பூர்ணம் -கழித்தாலும் பூர்ணம் –
பிரதானமான ஸ்தானம் தர்க்கத்துக்கு -அங்க பஞ்சகங்கள் தேசிகன் -தர்க்க சாஸ்திரம் ஆயுர் வேதம் போன்ற பல இடங்களில் உபயோகம் உண்டு
சரீரம் மூலம் கார்யங்கள் செய்கிறோம் –சரீரம் கொண்டே கர்த்தா -அங்குரம் sprout -சரீரம் கொண்டா பரமாத்மா செய்கிறான் மீமாம்சகர் வாதம் -கர்த்தா இல்லை –
அப்ரயோஜக சங்கை -இருவர் மேலும் -கர்த்தா இருக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தம் -கர்த்தரு ஜன்யத்ம் இல்லை என்றால் கார்யம் இருக்காதே -பதில்
தண்ட சக்கர மண் நீர் இருந்தும் குயவன் முழித்து இருந்தால் தான் பானை வரும் –
புஸ்தகம் கால் முளைத்து போகுமா -கர்த்தா இருந்து தான் ஆக வேண்டும் –
கர்த்தாவால் பண்ணப் பட்டது சரீரம் கொண்டே
அனுமாமனத்தால் ஈஸ்வரன் அஸ்தி என்று நிரூபணம்
அனுமானத்தாலே சித்திக்கும் -ஜென்மாதி அதிகரணம் வேதாந்த வேத்தியம் -அது அயுக்தம்-
அனுமானத்தாலே சித்திக்கும் -வேதாந்த சாஸ்த்ஹ்ரம் வேண்டியது இல்லை என்றால் -சாஸ்திர யோநித்வாத் –
பிரத்யஷம் அனுமானம் இரண்டும் பௌத்தர்கள் கொள்வார்கள் –அவர்களுக்கும் ஈஸ்வரன் அஸ்தி என்று காட்ட இது —
கிமர்த்தம் பர்வதம் -மது இங்கேயே இருக்க மலைக்கு போவான் எதற்கு -புழக்கடையிலே இருக்க –
புல்லிங்கம் -பரமாத்மா போன்ற சப்தங்கள்
ப்ரஹ்ம நபுசிங்க லிங்கம் பரமாத்மாவாசி –
பிரம்மா புல்லிங்கம் சதுர முகன்
புருஷ சப்தம் பரமாத்மா ஒன்றையே குறிக்கும் புருஷோத்தமன் புருசு நகரம் -எங்கும் வசிப்பவன்
பரமாத்மா வஸ்து சங்கல்பம் பண்ணிற்று சொல்லும் -விசாரம் பண்ண நிறைய விஷயம் -லிங்க நியமம் இல்லை சமஸ்க்ருதம்
பேரி ஸ்திரீலிங்கம் துந்துபி புல்லிங்கம்
பார்யா களத்ரம் தாரா -ஸ்திரீலிங்கம் நபுச லிங்கம் மூன்றும் ப்ரத்யயம் பொறுத்து லிங்கம் வஸ்துவை கொண்டு இல்லை
சீதா ராமா தாராகா -நித்ய பஹூ வசனம் -தாரகா சொல்லக் கூடாது -ஆத்மவான் -ராமனுக்கு சொல்லி –
ஒத்த சமதர்ம சாரிணி -பரமாத்மா சாஷாத்காரம் எற்பட்டவள்-
களத்ரம் -நகுபும்சத்வ லிங்கம் -அசித் போலே –
கௌசிகம் -விஸ்வாமித்ரர் -விச்வச்ய மித்ரர் -விச்வமித்ரர் ஆக வேண்டும் -ரிஷிக்கு தீர்க்கம் சேர்த்து -விஸ்வாமித்ரர் –
காயத்ரி மந்த்ரம் கொடுத்து அளித்தவர் ப்ரஹ்மம் காயத்ரி கொடுத்து அளித்த பெருமை –

சாஸ்திரம் -ப்ரஹ்மத்தை காட்டும் வேதமே சாஸ்திரம்
அத்யந்த அதீந்த்ரத்யேன-ப்ரஹ்மம் -ஞான மனச் இந்த்ரியன்களால் கிரஹிக்க முடியாத
அவிஷயதயா ப்ரஹ்மம்
சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் -உப லஷணம் தர்க்க சாஸ்திரம் போல்வன –
எதோ வா இமானி பூதானி போன்ற ஸ்ருதி வாக்யங்களால் தான் அறிய முடியும்
பூர்வ பஷம்–ஆஷேபம் –ப்ரமாணாந்திர வேத்தியம் உண்டே -அப்ராப்தே சாஸ்திரம் -அர்த்தவதி –பிரயோஜனம் –
வேறே எந்த பிரமானத்தாலும் கிடைக்காமல் இருக்கும் -பிரயோஜனமாகவும் இருக்கும் –
அப்ராப்தம் -அர்த்தவதிம் இரண்டும் உண்டே சாஸ்திர வசனத்துக்கு –
ஸ்நாத்வா புஞ்சீத ஸ்நானம் பண்ணி போஜனம் -புங்க்தே ரஷிப்பவன்-இரண்டு அர்த்தம் புந்தீதே-
சாப்பிடச் சொல்ல வில்லை -ஸ்நானம் பண்ணியே -சாப்பிடுவது ராகதையா பிராப்தம் -பிபாசா தாகம் தீர்க்க -பசி போக்கக –
ஸ்நாத் ஏவ புஞ்சீத -ஸ்நான விதி போஜன விதி இல்லை -அபார கர்மங்கள் தான் குளிக்காமல் உண்ணலாம் –
சாசனாது சாஸ்திரம் –பிரமாணாந்தர வேத்தியம் -ஒரு வாதம்
அடுத்து -கிம் -கேள்வி கேட்டு அடுத்த பூர்வ பஷி
சுத பிரகாசரர் வியாக்யானம் -சுதர்சன ஸூரி என்பவர் -காலஷேபம் இவருக்காக ஆசார்யர் தாமதமாக –
குருப்யோ அர்த்தோ-ஆசார்யர் உபயோகித்த சப்தத்தையே உபயோகித்து -அருளினார்
ராமானுஜர் காலத்துக்கு நெருங்கியவர் -2/3 தலைமுறைகள் பின்பே -ஆந்தரங்க அபிப்ராயம் அறிந்தவர் –
தர்க்க பூயிஷ்டமான அதிகரணங்கள்-
நனு -அத -ஆஷேபம் –
கேள்வி கேட்டவர் யார் -சுத பிரகாசர் வியாக்யானம் கொண்டே அறிய முடியும்
தஸ்மின் பூர்வ பஷே –மீமாம்சகர் -சித்தாந்தி எகதேசர் -பூர்வ மீமாம்சகர் பூர்வ பஷி -தான் நமக்கு -உத்தர மீமாம்சகர் நாம் –
கர்மம் மீமாம்சகர் -ப்ரஹ்ம மீமாம்சகர் —
ஈஸ்வர அனுமான -நிராசேன– ஏக தேசம் எனபது எதனால் என்று காட்டி அருளுகிறார் –
ஆஸ்திக தர்சகர் –நியாய தர்சனம் -சாங்க்ய யோக தர்சனம் கபிலர் பதாஞ்சலி -பூர்வ உத்தர மீமாம்சகர் –
சார்வாக பௌத்தர் ஜைனர் நாஸ்திக தர்சனம் –
பரமாதமான ஸ்வாகா பர ப்ரஹ்மமமே ஸ்வாகா நாராயணா ஸ்வாக சொல்ல வில்லை
மீமாம்சகர் கர்மங்களே பலன் கொடுக்கும் அபூர்வம் கல்பனை செய்து பகவானை ஒத்துக் கொள்ளாமல்
சாங்க்ய யோக மார்க்கமும் அப்படியே -பான்ஜாக்னி தபஸ் செய்து பலன் பெறுவார்கள்
வேத பிராமாண்யம் ஒத்துக் கொள்வதால் தான் இவர்கள் ஏக தேசிகள்-இதனால் நாம் வேதம் மேல் கொண்ட பெருமை விளங்கும் –
ஈஸ்வரன் ஒத்துக் கொள்ள வில்லை இருந்தாலும் அனுமானம் ஒத்துக் கொள்ளாமல் வேத சாஸ்திரம் ஒத்துக் கொள்வதால் -ஏக தேசிகள்
சுத ப்ரதீபிகா சுருக்கமாக அருளி உள்ளார்
ரெங்க ராமானுஜர் வியாக்யானம்
ஸ்ரீ பாஷ்ய தர்ப்பணம் உத்தம சுவாமிகள் வியாக்யானம் –
இந்த்ரிய சம்பவம் பாஹ்ய இந்த்ரியாணி -ந பிராமாண்யம்
எந்த பிரமாணங்களாலும் அறிய முடியாது என்பர் மீமாம்சிகர் -ஞானம் போதகம் இந்த மூன்றாலும் தான் வர வேண்டும் –
பிரத்யஷம் -லௌகிக அலௌகிக-இரண்டு வகை –இந்த்ரியங்கள் -அஹம் அஹம் சுக துக்க அனுபவம் உண்டே -மனஸ்-
ப்ரஹ்மம் ரூபம் வண்ணம் இல்லை -பாஹ்ய பிரத்யஷ விஷயம் ஆக மாட்டான் -மானஸ பிரத்யஷம் —
ஸுய ஆத்மா ஸுய மேவ ப்ரத்யஷம் -ஆந்தர ப்ரத்யஷம் முடியாதே –
இந்த இரண்டும் லௌகிக பிரத்யஷம்
அலௌகிக பிரத்யஷம் -யோகி பிரத்யஷம் –தர்க்க சாஸ்த்ரத்தில் இத்தை அலௌகிக பிரத்யஷம் என்பர்
பாவனா பிரகர்ஷ-சாஷாத்காரம் பெற்றவர்கள் கொஞ்சமே -சிலர் க்யாதி லாப பூஜைகளுக்காக சாஷாத்காரம் ஆனது போலே நடிப்பார்கள்
யோகி பிரத்யஷம் இப்படி பல வகைகள் உண்டே -மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ ஆயிரத்தில் ஒருவருக்கே முயற்சி –
செய்ய அதில் ஆயிரத்தில் ஒருவருக்கே – சித்திக்கும் –
அப்படியே புரிபவர்கள் பூரணமாக அறிந்தவர்கள் அதிலும் சிலர் அம்சம் பகுதி மட்டுமே அறிபவர் மீதி உள்ளவர்
குருவி ஓட்ட பிரம்மாஸ்திரம் வேண்டுமா -பூர்வ பஷ வாதங்களை மதித்து பகவத் ராமானுஜர் வலிமையாக
அவற்றை மதித்து வித்வத் சதஸ் போலே தனக்கு சமமாக கருதி அருளிச் செய்கிறார்
நயன விஷயதா -கண்ணுக்கு கிட்டாமல் -அவனே வ்யூஹம் விபவம் அர்ச்சாவதாரம் வந்து தன்னைக் காட்டி அருளுகிறான் –
ஆலோக்யம் சரீரத்தில் போலே புத்தியிலும் சோம்பல் வரும்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் இரண்டு கோஷ்டியிலும் நம் ஆழ்வார் மட்டுமே
திருமுடி திருவடி சம்பந்தம் ஸ்வாமி க்கு மட்டுமே -நாஸ்திகர் களையும் ஆஸ்திகர்களாக்கி-
ஆசிநோதி சாஸ்த்ராணி புரியும்படி சொல்லி அருளி -ஆசார்யே ஸ்தாபயாதி-ஆசாரம் பஞ்ச இந்த்ரேண-தேகச்ய சுத்தி –
புத்திக்கு மனசுக்கு சுத்தி –புத்தி வேற மனஸ் வேற –
அந்தர் இந்த்ரியம் மனஸ் -சுக துக்கம் அனுபவம் –
இந்த்ரியம் -மனஸ் -புத்தி -ஆத்மா கட உபநிஷத் –பர மேலே மேலே கூட்டி -த்ரவ்ய தேச
தேரோட்டி -ஆத்மா சரீரம் தேர் -சரீரிக்கு -யஜமானன் ரதி –
புத்தி சாரதி -போலே மனஸ் ப்ரக்ரஹம் -கடிவாளம் -இந்த்ரியங்கள் குதிரைகள் –
போக்தா -ஜீவாத்மா -இந்த்ரியங்கள் ஐவர் வலி வலி இழுக்க -மனஸ் பின் செல்ல –
ஆசி நோதி சாஸ்த்ராணி தர்ம சாஸ்திரம் ஸ்ம்ருதிகள் உபநிஷத்கள் -ஆசார ஸ்தாபயாதி -சுத்தி ஏற்படுத்தி –
முதல் அடி சுத்தி தானே -நாக்கு ஆசாரம் அலம்புவது இல்லை –
த்ரவ்யங்கள் சுத்தம் -தேச சுத்தி -கிரியைகள் சுத்தி —
ஸ்வயம் ஆசரதே -தானே அனுஷ்டித்து காட்டி –
பரம பிரேம ரூப பக்தர் ஸ்வாமி -உக்தி வாதம் பண்ணவும் அறிந்தவர் -சேர்த்தி அபூர்வம் -அனைவர்களையும் புரிய வைக்கும் சாமர்த்தியம் சுவாமிக்கு மட்டுமே
அனுமானத்தாலும் கிரஹிக்க முடியாது என்பவர் மீமாம்சகர் -நெருப்பு தீ அறிந்தவன் தான் அனுமானிக்க முடியும்
ப்ரஹ்மத்தை அறியாதவன் அனுமானிக்க முடியாது -ஜன்மம் இருந்தால் மறைவான் ஆவான் பொது விதி இதற்கும் உள்படாதவன் ப்ரஹ்மம் –
அனுமானத்தாலும் முடியாது -என்பர் பூர்வ பஷி -ஜீவாத்மா மட்டுமே கொள்ளலாம் என்றும் சொல்வர் -அவனே சிருஷ்டி கர்த்தா என்றும் கொள்ளலாம் என்பர்
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்வு நம் ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் –
மனஸ் புத்தி -வாசி அறிவது கஷ்டம் -psycolagikal -மற்றவர் உபதேசம் கொண்டே அறியமுடியும் –
ஸூ ஷ்மமான விஷயம் -அசிந்த்யம் -பூர்த்தியாக புரிந்து கொள்ள முடியாது
கங்கா நதி -தெரியுமா -தீர்த்தம் ஆடி உள்ளோம் –உத்பத்தி வரும் வழிகள்-நம் அளவுக்கு புரிந்து கொள்வது போலே
ப்ரஹ்மமும் அப்படியே –
சிந்தனை -தீர்மானம் -சாரதி கடிவாளம் இழித்து பண்ணுவது போலே மனசை புத்தி கட்டுப்படுத்த முடியும் –
இரண்டு தோஷங்கள் -அலபஜ்ஞ்ஞன் கர்மபரவசன் -கர்த்தா என்றால் -லோகம் படைத்தவன் –உதாரணம் திருஷ்டாந்தம் –
அது போன்ற -யோக அர்த்தம் ரூடி அர்த்தம்
பங்கஜம் -கமலம் -யோகரூடி அர்த்தம் -யோகிக்க ரூடம் ஒரே அர்த்தம் -பங்கஜாதி பதங்கள் –
அங்குரம் -ஊர்த்த்வம் – நியாய சாஸ்திர கர்த்தா கௌசிக மகரிஷி
ஆபால கோபாலம் -குழந்தை முதல் மாடு மேய்ப்பவன் வரை ஆபண்டித பாலகன் புரியும் படி –
திருஷ்டாந்தம் -திருஷ்ட அந்தகம் -குயவன் போலே ப்ரஹ்மா என்றால்
அனுபபத்தி -அவாப்த சமஸ்த காமன் ப்ரஹ்மம் -ஜீவனத்துக்கு பண்ணும் குயவன் -சத்ய சங்கல்பன் சத்ய காமன் இல்லையே –
ஜகத் கார்யமே இல்லை என்பாரும் உண்டு -பூ பூதரம் மலைகள் -கார்யம் என்பாரும் உண்டு ச அவயவாத் -என்பதால்
அநித்தியம் -உத்பத்தி விநாசகங்கள் உண்டு
திருஷ்டாந்தம் அனைத்தையும் கொள்ளக் கூடாது –
சில அம்சங்கள் தான் உக்தம் திருஷ்டாந்தத்தில் -சந்திர இவ முகம் -உபமானம் உபமேயம் –பாவங்கள் –
ஏத உக்தம் பவதி -ஸ்வாமி அடிக்கடி அருளிச் செய்வார் -தொகுத்து அருளிச் செய்வார் –
கார்ய உபாதான காரணம் -உத்பத்திக்கு உண்டான ஞானம் போதும் -சத்ய நாராயண பூஜை பூனை கட்டிய கதை —
கடம் படம் பண்ணும் ஞானம் மட்டுமே போதும் –
சர்வதா சாம்யம் வேண்டாம் -அனுமானம் சித்திக்கும் –
இதுக்கும் சித்தாந்தம் மேலே வரும் பூர்வபஷா உக்திகளையும் இவ்வளவு விவரமாக அருளிச் செய்து ஸ்வாமி சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
சாஸ்திர யோநித்வாத் –
பாவக -கருத்து ஞானம் -அர்த்தம் இல்லை கடச்ய பாவக –தஸ்ய பாவகா சாஸ்திர யோநித்வம்
தவா -வார்த்தை விவரணம் -அசாதாராண தர்மம் -கோத்வம் கோவுக்கு போலே
சாஸ்தரத்துக்கு காரணம் -எத்தை கொண்டு பரமாத்வாவை அறியலாமோ -சாஸ்திர சாரமே ப்ரஹ்மம் வேத சாரமே ப்ரஹ்மம் –
-அறிய காரணம் -அறிதல் -வார்த்தை இல்லாத பொழுது பிரமாணங்கள் இவ்வளவு விஸ்தாரமாக அருளிச் செய்ய என்ன காரணம் –
சத தூஷணி -தேசிகன் -அருளிச் செய்து -அதிகார வாதம் -வைதண்டிகர்கள் -அதிகாரம் இல்லை -வாதம் ஜல்பம் விதண்டா
தத்வம் புரிந்து கொள்ள ஆசை வேண்டுமே தத்தவ புபு ஸூ க்கள் -தத்வம் -வஸ்துவை ததஸ்த சத்பாவம் -இல்லாததை இல்லை என்று புரியவும் -ஆசை
reality -அறிய ஆசை உள்ளவர்களே அதிகாரிகள் -மத்தியஸ்தர் உண்டு -விதண்டா -சு பஷம் இல்லாமல் எதிர்த்து கண்டனம் செய்பவர் -quacks
-கண்டன கண்டன கிரந்தம் வித்யாரணயர்-அத்வைத காவ்யம் இல்லை -32 வருஷம் தான் சங்கரர் இருந்ததுக்கு இதில் உண்டு ஆதாரம் இல்லாமல் –
எல்லாரும் சொல்லி சொல்லி இதையே நம்பும்படி ஆயிற்று -தார்கிகர் வாதம் பூர்வ பஷமாக இறுதியில் நிற்கிறது –
ஈஸ்வர -சர்வேஸ்வர -பரப்ரஹ்மம் -அனுமானம் -உபாதான நிமித்த காரணம் -கர்த்தாவுக்கு சரீரம் வண்ணம் வேண்டும் -இரண்டு அனுபபத்திகள் –
விசித்திர அவயவ சந்நிவேசம் -புண்ய பாப பரவச ஷேத்ரஜ்ஞ்ஞன் பண்ண முடியாது -பரிமித ஞானம் சக்திகள் கொண்டதாலும் –
நிகில புவன நிர்மாண அசிந்த்ய அபரிமித ஞானம் சக்தி ஐஸ்வர்யம் கொண்டவனே -அசரீரியாய் இருப்பவனே கர்த்தாவாக இருக்க முடியும்
சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்ருத்வம் செய்து -அனந்த விஸ்தார விசித்திர பிரபஞ்ச புருஷ விசேஷ ஈஸ்வரன் -செய்ததை அனுமானத்தாலே நிரூபிக்கிறார்கள் -பூர்வபஷிகள் –
கிஞ்ச -கிம் -ச -தூஷணான்தரம்-மண் குயவன் உபாதான நிமித்த ஒன்றாக இல்லை -சஹகாரியும் உண்டு –பகவானே இரண்டும் என்பதும் ஒரு அனுபபத்தில் என்பர்
தத் ஆத்மானம் ஸ்வயம் -தன்னைத் தானே ஜகமாக ஆக்கிக் கொள்கிறான் சித்தாந்தம் -அபிபின்ன நிமித்த உபாதேய காரணத்வம்
மேலே சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்-ஏவம் பிராப்ய ப்ரூமகா –
யதோக்த லஷணம் ப்ரஹ்ம -ஈஸ்வர சப்தம் இல்லை ஸூ ஷ்மமான விஷயம் -சு கம்பீரா அவிச்தாரா ஸ்ரீ ஸூ க்திகள்-
அனுமானம் சொல்லும் பொழுது ஈஸ்வர -சித்தாந்தம் ஸ்தாபிக்க ப்ரஹ்ம –
சாஸ்த்ரைக பிரமாணம் -குடம் குயவன் ஒப்புமை கொஞ்சம் அம்சம் தான் பொருந்தும்
பாதரயணர் குரு ஜைமினி சிஷ்யர் இருவரும் இரண்டு பெயர் ஸ்ரீ சூக்திகளை மேற்கோள் காட்டுவார்கள் –மீமாம்ச சித்தாந்தம் அப்படியே ஜைமினி அருளிச் செய்வதால் –
யஜ்ஞ்க்ன பிரக்ரியையில் பரமாத்மா ஸ்வாகா சொல்ல வில்லை -பர ப்ரஹ்மம் அவசியம் இல்லை -குமாரில பட்டர் -ஈச்வரன் நிராகரணம் பண்ண வில்லை –
நியாயம் நீதி -இரண்டு பதங்களும் -நீயதே தாது -விலஷணமான அர்த்த சித்தி நியாயம் -நீதி -வேறே –
வேதம் ஈஸ்வரன் -அந்யோந்ய ஆஸ்ரயம் ஓன்று சித்தித்தால் மற்று ஓன்று சித்திக்கும் -பௌத்தர் வேதம் அப்ரமாணிகம் என்பர் மீமாம்சகர் அவர்களை வாதம் செய்து வெல்ல
நியாய குசுமாஞ்சலி கிரந்தம் -அஸ்தி ஈஸ்வரன் -அதற்கு மேலே மேலே வேதாந்தம் வந்து -படிப்படியாக -உயர வேண்டும் -தர்க்கம் மட்டும் இல்லாமல் சாஸ்திரம் கொண்டே
நியாய சாஸ்திரம் ஒத்துக் கொள்கிறோம்

ப்ரூமக உத்தம புருஷ பஹூ வசனம் -சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார் –சாஸ்திரம் ஒன்றே பிரமாணம் -வேதாந்த சித்தாந்தம் –
பூ பூமாதி –கர்த்ரு ஜன்யத்வம் அஸ்மதாதி விலஷண ஈஸ்வர கர்த்ரு -அனுமான ஆகாரம் -கடபடாதி -திருஷ்டாந்தம்
பூ பூமி பூதரம் -பர்வதங்கள் போல்வன -ஏக கர்த்ரு ஜன்மமா அநேக கர்த்ரு ஜன்யமா -கேள்வி -விவசாரம் தோஷம் ஏற்படும் –
தேவதத்வ பிராமணன் மனுஷ்யத்வாத் -உதாரணம் யத்ர யத்ர மனுஷ்யத்வம் தத்ர தத்ர பிராமணத்வம் —
அர்ஜுனன் பீமா சேனன் ஷத்ரியன்-உண்டே -மனுஷ்யத்வம் எல்லாம் பிராமணன் இல்லை வ்யபிசார தோஷம் –
சாத்தியம் இல்லாமல் உள்ள இடத்திலும் ஹேது இருப்பதால்
அனுமானம் தப்பாகுமே -அதே போலே தோஷம் இங்கும் உண்டே -அநேகாந்த்யம் வேறு பெயரில் இத்தையே சொல்லுவார்கள் –
ஏக கர்த்ரு ஜன்யத்வம் என்று கொண்டு –க்ருஹம் பலரால் செய்யப்பட்டது -கார்யத்வம் ஹேது உண்டு
ஏக கர்த்ரு ஜன்யத்வம் இல்லையே –சாத்தியம் இல்லா இடத்தில் ஹேது உள்ளதே -வ்யபிசார தோஷ துஷ்டம் –
பூர்வமே இல்லாத பொது உத்தரம் சொல்லியவை எல்லாம் தோஷமே
இன்னும் பல தோஷங்கள் தர்க்க பூயிஷ்டமாக அருளிச் செய்கிறார் –
புத்தி அந்த அளவு கொண்டவனால் சிருஷ்டி செய்யப் பட்டது என்று சொன்னால் சித்த சாதனா தோஷம் வரும் –
த்வம் மூர்க்கா -சித்த சாதனம் தோஷா கதை -வேதாந்திகள் ஒத்துக் கொண்ட கார்யத்வம் புத்திமான் -சித்த சாதனம் தோஷம் -வருமே –
விகல்பம் தோஷம் –
ப்ரஹ்ம யஜ்ஞம் -நமோ ப்ரஹ்மணே வரும் -பூர்வ பாகம் ப்ரஹ்ம சப்தம் -வேதம் குறிக்கும்
ப்ரஹ்மசாரி -வேத அத்யயனம் பண்ணக் கூடியவன் -சம்ஹிதை -வேத யஜ்ஞம் குறிக்கும் –
அஸ்மாதாதி விலஷண புருஷன் பர ப்ரஹ்மம் –

முக்தாத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை -பிரயோஜனம் இல்லையே -அதனால் சிருஷ்டிக்க மாட்டான் -ஜகத் வியாபாரம் வர்ஜனம்
முக்தாத்மா சரீரம் எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறான் –ஈஸ்வரன் அகர்த்தா சரீரம் இல்லை என்பதால் -பூர்வ பஷி -தர்க்கி –
ஆர்ஷம் தர்ம உபதேசம் -ரிஷிகள் -வேத சாஸ்திரம் அவிரோத -விரோதம் இல்லாத தர்க்கம் கொண்டு –ஸ்தாபிப்பார்கள் –
மனு -தர்க்க ரூபம் -ஒத்துக் கொள்ளப்பட்டதே-
பஞ்சமி விபக்தி -சாஸ்திர யோநித்வாத் –
வேத சாஸ்திர விரோத தர்க்கம் -குதர்க்கம் -பௌத்தர்கள் வாதம்
சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்மம் அறிவோம் -சமஸ்த வஸ்து விஜாதீயம் -வி லஷணமானது–
அகில ஹேய ப்ரத்ய நீக ஸ்வரூபம் பர ப்ரஹ்மம் பிரதிபாதிக்கும்

அவாப்த சமஸ்த காமன் -கர்ம வச்யன் இல்லை -இதர சமஸ்த வஸ்து விலஷணன் –
பிரயோஜனம் லீலைக்காக பின்னால் வரும் –
ஒரே வஸ்து நிமித்த உபாதான காரணம் ஆக முடியாது பூர்வ பஷி –பிரபஞ்சம் உதாரணங்கள் பர ப்ரஹ்மத்துக்கு ஒவ்வாதே
தனக்காக பண்ணுகிறான் என்றால் அவாப்த சமஸ்த காமத்வம் தோஷம் வரும் –
குடம் படம் சோறு குலுக்கை தேவதத்தன் கொண்டே பலவற்றையும் சாதிப்பார்கள் –
1-அத்யாயம் 4 பாதம் கடைசி அதிகரணம் -விரிவாக காட்டி அருளுவார் –
2-அத்யாயம் 3பாதம் முதல் அதிகரணம் -அங்கும் விரிவாக காட்டுவார் –
அங்கே சொல்வோம் என்று இங்கே காட்டி-ஜென்மாதி -காட்டிய பர ப்ரஹ்மம் –பிரமாணாந்தர அகோசரம் –என்று –
சித்தாந்தம் நிகமிக்கிறார் –

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: