திருப்பல்லாண்டு –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -அருளிச் செயலில் அமுத விருந்து –

பரக்க பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்-ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காகா சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்

ஜிதம் -என்று அவனாலே  தன் அபிமானம் போனபடியை இசைந்து அத்தலையில்  வெற்றிக்கு மேல்-எழுத்து இடுபவன் வ்யவஹாரம்

நம –என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்

தோற்றோம் -என்கிறது  அத்  தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்

பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே  அத் தலையில் ச்ம்ரத்தியே நித்யமாக செல்ல வேணும்-என்று இருக்குமவன் வ்யவஹாரம்

ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய-பயம் சாமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இ றே

அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்

ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்து-

சௌகுமார்யம் பய ஹேதுவாகிறது -சௌலப்யம் பய ஹேது

நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞானான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது

சேஷ பூதன் சேஷி வடிவைக் கண்டால்திருவடிகள் -என்று இ றே வ்யவஹரிப்பது
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு -வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இ றே

திருக்காப்புகுறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்பண்ணின ரஷை என்கை

ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில் –தமக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்க்ர்ஷ அபக்ர்ஷத்தாலே
பாசுரம் இல்லாமையாலே குறைந்து கிடக்கிறது –

தொலை வில்லி மங்கலம் தொழும் -தோற்றோம் மட நெஞ்சமே -போற்றி என்றே
கைகள் ஆரத் தொழுது சொன் மாலைகள் -இத்யாதியால் ஸ்வரூபம் சொல்லிற்று
அந்தி தொழும் சொல் -என்று பலம் சொல்லிற்று –
அடிக்கீழ் -பாத பற்ப்பு தலை சேர்த்து -அடி போற்றி -அடி விடாத சம்ப்ரதாயம்
ஸ்ரீ
ஸ்ரீ ராமானுஜாய நம
போன்று மங்களாரத்தமாக அருளிய பாசுரம் -கிரியை இன்றி –
பாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் பிரகாசமாய் நாயக பாசுரம் போலே இது என்னவுமாம்-

ஞான தசை பிரேம தசை தட்டு மாறி கிடக்கும்
பிரணவ அர்த்தம் அறிந்த ஞான தசை-
சௌந்தர்யம் சொவ்குமார்யம் அறிந்து-பிரேமம்-அன்பு-தசை -காப்பாற்ற படும் பொருள்-
பகவத் ஸ்மிர்த்தி-அல்லாதாருக்கு சத்தாஸ் ச்மர்திகள் –இருப்பு- தர்சன அனுபவம்

————————————————————————–

கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா சாசனம் பண்ணினார்-இதில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்

அது போலே மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்-
அத்தலைக்கு பரிகைக்கு  தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத்தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இ றே

ஆனால் என்னோடும் என்னாதே அடியோமோடும் -என்பான் என் என்னில் -முறை அறியுமவர் ஆகையாலே -அடியோம் -என்றார் கர்மோபாதிகமாக வந்த வவஸ்தைகள்  எல்லாம் மறைந்தாலும்-மறையாத ஸ்வாபம் தாஸ்யம்என்று இருக்குமவர் இ றே இவர் –

தான் தனியராய் நின்று மங்களா சாசனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும்
சேஷத்வம் அவிசிஷ்டம் ஆகையாலும்பஹூ வசனத்துக்கு கருத்து

வடிவாய்
வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது

வடிவாய்
ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்

ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண
புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்

பிரதிகூலர் மண் உண்ணும்படியும்
அனுகூலர் வாழும்படியாய் இ றே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி
என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்

அப் பாஞ்ச சன்னியமும் –
முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து
சொல்கிறார் -அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார்

இவ்விரண்டு பாட்டும் -திருமந்த்ரார்தமாய் இருக்கிறது
அடியோமோடும் -என்கிற இடத்தில் ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று
முதல் பாட்டில் பல்லாண்டு -என்ற பிரதம பதத்தால் நமஸ் சப்தார்தம் சொல்லிற்று
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று அப்பாட்டில் விக்ரஹ யோகத்தையும் –
சௌர்ய வீர்யாதி குண யோகத்தையும் -இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும்
சொல்லுகையால நாராயண பதார்த்தம் சொல்லிற்று –
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்கையாலே சதுர்த்தியில் பிரார்த்திகிற அர்த்தத்தை-சொல்லிற்று –

அதில் எம்பெருமானுக்கு இதில் அடியார்களுக்கு
பொலிக பொலிக பொலிக -திரு வாய் மொழி திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர் கண்டு
பல்லாண்டு பாடினார் அருளினார் ஆழ்வார் அது போல் இதுவும்
நம்பிள்ளை நம் ஜீயர் இடம் பெருமாளுக்கு பல்லாண்டு ஆழ்வார் பாட வில்லையா என்று
கேட்க திரு வாய் மொழி -4 -5 வீற்று இருந்த ஏழ் உலகம்- தாளைத்தை கொடுத்து பெற்று கொண்டான்-என்றாராம் –
அன்று யுத்தத்தில் வந்த பிரபாததுக்கு இன்று அப் பாஞ்ச சந்யதுக்கு
கதே ஜலே சேது பந்தம் -போன அவதாரம் பல்லாண்டு பாடுவது இவருக்கும் இவர் மகளுக்கும்
இந்த இரண்டு பாசுரங்களும் திரு மந்திர அர்த்தம் சொல்ல வந்தவை
வேதம் வேதாந்தம் வேதாந்த சாரம் -ரகஸ்ய த்ரயங்களும்
வேத சார தமம்-நாராயண அனுவாகம்-வியாபக மந்த்ரம் –
அவ்யாபகங்களில் வியாபகம் மூன்றும் ஸ்ரேஷ்டம் -26 சூத்திரம்-முமுஷுபடி-
எண்ணிலும் வரும்–எண்ணி கொண்டே -சட்டி பானை உடன் பெருமாளை-26 சொன்னதும் அவன் வருவான்-தத்வம்-24 அசித் 25 ஆத்மா 26 பரமாத்மா சாஸ்திரம்
26 -1 -26 வாய்ப்பாடு ஸ்வாமி சாதிப்பார்
சொரூபமும் சொரூப அனுரூபமான பிராப்யமும் -சேஷத்வம் பார தந்த்ர்யம் கைங்கர்யம்
பிரணவம் சேஷத்வம்
நம பாரதந்த்ர்யம்
நாராயண கைங்கர்யம்
அம்மானை விட்டு அம்மானை ஆசை பட்டாதால் இலங்கை சிறை வாசம்–வேறு பிரயோஜனம் கேட்டு-
இதிலும் அதிலும் ஆசை கொண்டு-இரு கரையர் –
பட்டு-இதில் அகப்பட்டு கொண்டு -சூதனாய் கள்வனாய் -வலையுள் பட்டு போல்
மாதரார் கயல் கண் என்னும் வலை யுள் அகப்பட்டு -பித்து பிடித்தவன் –
மீன் வலையில் சிக்கி கொள்வது போல்
மணி வலை -கண் மணி -பந்தகம்-சொரூபம் விரோதி

————————————————————————–

-ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வா பம் இருந்தபடி என் -என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –
பட்டு -எனபது
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்-பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்-தேட்டமாய் இ றே இருப்பது
ஏழ் ஆள் காலும் பழிப்பிலோம் -என்கிறார்
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படி காலைச் சொல்லுகிறது

தசபூர்வாந்த சாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ்வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது
அக்காலத்தில் மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –
————————————————————————–
ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்-அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணா பேதரை இ றே இவர் அழைக்கிறது –

தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இ றே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இ றே புருஷார்த்தம் ஆவது –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்-வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத்திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப்பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்

பாடும் மனம் உடையீர் -நினைத்த அளவு மட்டும் இன்று அன்புடன் பாடி
ஈடு பாடு உடன்-ப்ரீதிக்கு போக்கு வீடாக பத்தர் உள்ளீர் -பிரேமை உடன் பாட
வந்து -திரு பல்லாண்டு பாட
கூடு மனம் உடையீர் முதலில் சொல்லி பாடும் மனம் உடையீர்
விருத்தி விசேஷம் கூட -கைங்கர்யம் செய்ய -கிரியை இரண்டாக்கி கூடியும் பாடியும்
கூட்டத்தோடு சேர்ந்து பாடி
————————————————————————–
இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் -தன் பக்கலிலே ந்யச்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே-என்று அவன் குளிர நோக்கும் –
பல்லாயிரத்தாண்டு என்மினே
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு ச்ம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————–
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த
தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டாக
சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து
புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் -ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்
கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்
————————————————————————–
ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல் -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்
பல்லாண்டு கூறுதுமே –
அத்தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்-
————————————————————-
கையடைக்காயும்
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போகய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இ றே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இ றே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
கழுத்துக்கு பூனோடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இ றே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்

ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநீ -என்கிறபடியே இந்த்ரன்
வரக் காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி -பிராட்டிக்கு கொடுக்கிற போது
அத்தை வாங்குகிறவள் -பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக் கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷி தஜ்ஞா ஸ் து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் ஆகையாலே
அவனுக்கு கொடுக்கலாகாதோ -என்று அருளினார் -ஸூ ப கே -அடியார் ஏற்றம் அறிந்து
கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உள்ளது உனக்கே யன்றோ என்ன –
உம்முடைய திரு உள்ளத்தால் அன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி விண்ணப்பம்
செய்ய -நான் முற்பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கல் ஆகாதோ-
மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு

அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் -பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் -கூறுவன் -என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்
————————————————————————–
திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய்
இருக்கும் என்கை -அவன் தானும் சிலர் –சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்-ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இ றே
இத் தொண்டர்களோம்
இப்படிப்பட்ட அடியார்கள் இ றே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இ றே  நாங்கள்
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை
பரபாகரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்
தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யம் காட்டி புகுந்தார்கள்

————————————————————————–
எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்
பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது –முத்துப்பட்ட -என்கிறாப் போலே
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லிற்று
————————————————————————–
அன் நாள் அமைந்து இருக்க என் நாள் சொல்வது வகுத்து சேஷி பக்கலில்
மங்களாசாசனம் பண்ண அனுக்ரகம் செய்த நாளே நல்ல நாள்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நல்  நாள்
அக்ரூரர் கண்ணனை கூப்பிட அனுப்பிய நாளே நல்ல நாள்- கம்சன் சோறு உண்டு வளர்ந்த
எனக்கு வாய்த நாள் –
ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு
எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இ றே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்
————————————————————————–
அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இ றே
தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை வழக்கு அல்ல
ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல –
தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல –
பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல –
அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல –
பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்ககை வழக்கு அல்ல –
இனி –வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இ றே இவர் இருப்பது
அணி கோட்டியூர் கோன்
இவை -ஒன்றும் இன்றிக்கே -அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு –
திருமாலே
இவ்வாதம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்
இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்
இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலெ பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்

முன்பு அர்த்த விதுரமாக -ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்
தீ வகை என்று இருக்கிறார்கள் -இது தான் சர்வார்த்த சாத்தலாம் இ றே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இ றே
நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இ றே -அத்தை இ றே இவர்களும் சொல்லுகிறது
பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இ றே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது –
பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –
உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்
ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –
எங்கனே சொல்லினும் இன்பம் பயக்குமே
முன்பு மமேதம் என்று இருந்தவர் மங்கள சாசனாம் பண்ண யோக்யதை கிட்ட இது ஒன்றே போதும்
இசைவு ஒன்றே வேண்டும் -போதுமினே போதுவீர் இச்சையே போதும்
பல் வகையாலும் பவித்ரனே -பல விதத்திலும் சுத்தன்
பிரயோஜனான்தரம் -அதுக்கு அடிக்கடி நீர் நுமது வேர் முதல் மாய்த்து
-சேஷத்வம் -தேவாந்தர பஜனம் போக்கி வெள்ளுயிர் ஆக்க வல்ல அர்த்தம்
அன்றிக்கே
சொரூபம் ரூபம் குணம் விபூதி -பார்த்தாலும் நினைத்தாலும் -பவித்ரம் கிட்டுமே
இதுவும் பல் வகையாலும் பவித்ரன்
ரூப ஸ்ரீயை பார்த்த வாறே -போக்குமே
உன்னை -சர்வேஸ்வரன்
கூறுவனே -ஆழ்வாரே மூன்று வகையால்- பாடினார் என்ற அர்த்தம் -மூவர் முகத்தாலும் தானே அருளுகிறார்
ஏக வசனம்-முன்பு ஊருக்கு ஒருவன் போலவும் கொள்ளலாம் -கோஷ்டிக்கு ஒருவர் போலவும் கொள்ளலாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா –
நானும் உனக்கு பழ அடியேன்-சொல்லும் படி மாற்றினார்
எங்கேயோ திரிந்த கஷ்டம் மனசில் படாமல் வைப்பான்
அன்று ஈந்த கன்று -மேல் வைக்கும்
அக் குற்றம் -அவ இயல்பே ஆள் கொள்ளும்
திரு மந்த்ரம் அர்த்தம் முடித்து
அல்வழக்கு பலவும் தள்ளி
தேக ஆத்மா விவாகம் -முதலில்
ச்வாதந்த்ரம் எண்ணம் முடித்து
தேவதந்த்ரம் பஜனம் தள்ளி
உபயான்தரம் சம்பந்தம் தள்ளி
அவன் ஒருவனே போக்கியம் பந்து பிராபோயம்
தன் உகப்புக்கு இன்றி -அவன் உகப்புக்கு
பிரார்தன யாம் சதுர்த்தி முதலில்
இந்த ஆய அவனுக்கு
பல்லாண்டு பாடும்நல் வழக்கு ஒன்றே கொண்டு
————————————————————————–
நிகமத்தில் –
இப்பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே
மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே
யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப்பிரபந்தத்தின்
வைபவத்தை அருளிச் செய்கிறார் -பகவத் பிரசாதத்தால் வருவர் என்று நம்பி அழைத்தார்
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் இந்த பிர பந்தம் சொல்லி மங்களா சாசானம் செய்ய பலன் அருளுகிறார் இதில்
உலகு அளந்து பொழுது திரு அடி ஆண்டு- குசை தாங்கி பிடித்து ஆண்டான் -அது போல் வில்லாண்டான்
சார்ங்கம் உதைத்த சர மழை-மதம் பிடித்த யானை ஆளுவது போல் சார்ங்கம் என்பதே பிரசித்தி
வான் உயரம் வரை இருக்கும் -வில்லை பிடித்து –
இத்தால் -உப்கிரம உபசமகாரம் -ஆரம்பம் முடிவு இரண்டிலும் காட்டும்
மல்லாண்ட திண தோள் மணி வண்ணா -முதல் பாசுரம்-கொன்றவன் எம்பெருமான்-
இங்கு விரோதி போக்கி பரமேட்டி பவித்ரன்-மாவாய் பிளந்து விரோதி நிரசன சீலன்
ஐஸ் வர்யார்த்தி விரோதி போக்கி அதே குணம்
மணி வண்ணா -கருட பச்சைக்கும் உப லஷணம்
பர மேட்டி -இரண்டாம் பாசுரத்தில் உபய விபூதி சொன்னது போல்
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே  ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இ றே

கால் வாங்க ஒண்ணாத அழகில் தோற்று – சூழ்ந்து சூழ்ந்து
சுழி ஆறு பட -மங்களா சாசனத்தில் மூட்டும்
பவித்ரனை -பர மேட்டியை –உரைப்பார் நமோ நமோ -பல்லாண்டு ஏத்துவர் என்று அன்வயம்

சூழ்ந்து இருந்து பாடுவது
பவித்ரன் அவன்
பரமேட்டி வைகுண்ட நாதன்
நீண்ட சார்ங்கம் பற்றி- விரும்பி பாடிய சொல்
இன்று கிடைத்த நாள் நல்லது
நமோ நாராயணா சொல்லி அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்த பெறுவார்
இங்கு நித்யம் இல்லை
அங்கு நித்யம்
சூழ்ந்து இருந்து ஏத்தி கைங்கர்யம் பண்ண பெறுவோம்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: