Archive for June, 2015

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் 2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் / அதிகாரம் -3-பிரதான ப்ரதி தந்திர அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 21, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
———————————————————————

ரஹஸ்ய த்ரயங்களின் உபயோக விசேஷம் –
மோக்ஷ -தத் உபாயங்களில் ச பதமே பிரமாணம் –
மற்றைய வியாபக மந்த்ரங்களை விடவும் சார தமமான உபநிஷத்துக்களை விடவும்
ரஹஸ்ய த்ரயமே பரம உபாதேயம்-

ஆச்சார்யர்களால் நன்கு போஷிக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டவை ரஹஸ்ய த்ரயம் -ஆச்சார்ய ருசி பரிஹ்ருஹீதம்-என்றவாறு
யதிவரானார் மடப்பள்ளி வந்த மணம்
பாற்கடலைக் கடைந்து எடுத்த அம்ருதம் போல் அன்றிக்கே இவை உபநிஷத் ஆகிற அம்ருத மயமான
கடலைக் கடைந்து எடுத்த அமுதம் அன்றோ -அபூத உவமை –

முதல் இரண்டும் ஒரு பிரகரணம்–சாஸ்த்ர ஆரம்பணீயம் என்று காட்டி
அடுத்த நான்கும் ஒரு பிரகரணம்- தத்வ நிரூபண பரங்கள்
அடுத்த ஆறும் ஒரு பிரகரணம் – அங்கங்கள் உடன் கூடிய உபாய விசேஷத்தை விவரிக்கும் -உபாய பரம்
அடுத்த பத்தும் புருஷார்த்த பரம்
இப்படி நான்கு பிரகரணங்கள் இந்த முதல் -22-அதிகாரங்களும் சேர்த்து அர்த்த அநு சாசன பாகம் ஆகும் –

அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –

ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —

(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)

இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)

அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —
பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –

(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)

அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–

அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத்சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –

(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)

(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)

அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –

——————————————————————–

அதிகாரம் -3-பிரதான ப்ரதி தந்திர அதிகாரம் –

பிரதிதந்தர சப்தார்த்தம் –
சரீர சரீரீ லக்ஷணம் –
ஆதேயத்வாதி நிரூபணம் –
ரஹஸ்ய த்ரயத்தில் இந்த அர்த்தங்கள் கிடைக்கும் பிரகாரம் –
திருமந்த்ரார்த்த அனுசந்தான அர்த்தம் -அப்புள்ளார் அருளிச் செய்த விரகு-
சேஷ சேஷி பாவ சம்பந்தத்திண் விசேஷமான தாசஸ்த்வ ஸ்வாமித்வ நிரூபணம் –
தத்வ ஹித புருஷார்த்தங்களை விசததமமாக விஸ்தாரமாக நிரூபிக்க ஆரம்பித்து -தத்வ பரமாக-பிரதானமான
சித்தாந்தத்துக்கு அசாதாரணமான சரீர ஆத்ம பாவத்தை நிரூபித்து அருளுகிறார் -என்று கீழோடே சங்கதி –

ஆதேயத்வ ப்ரப்ருதி நியமை ஆதிகர்த்து சரீரம்
சத்தா ஸ்தேம ப்ரயதன பலேஷூ ஏதத் ஆயத்த ஏதத்
விச்வம் பஸ்யன் இதி பகவத வ்யாபக ஆதர்சா த்ருஷ்டா
கம்பீராணாம் அக்ருத ககிராம் காஹதே சித்த வ்ருத்தம்-என்று

ஸர்வதா பிரபஞ்சம் ஆதேயமாயும் விதேயமாயும் சேஷ பூதமாயும் அவனுக்கு இருக்குமே –
எந்த வஸ்து தான் இருக்கும் அளவும் ஆதேயமாயும் விதேயமாயும் சேஷமாயும்-
அவனை விட்டுப் பிரியாததாயும்
அவனுடைய பிரயோஜனத்துக்காகவே இருக்குமோ அப்படிப்பட்ட வஸ்து அந்த சேதனனுக்கு சரீரம் -என்கிற லக்ஷணை உண்டே –
இவற்றின் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் ஸ்வரூபத்துக்கும் சங்கல்பத்துக்கும் அதீனம்-

ப்ரத்யக்ஷத்தில் ஸ்வ தந்திரமாக தோற்றும் இவை ரஹஸ்யத்ரயங்கள் மூலம் பார்க்கும் பொழுது அவனுக்கு சரீரம் என்பதை அறிகிறோம் –
சேதன அசேதன வஸ்துக்களை விபூதிகளோடு கூடிய ப்ரஹ்மத்தை அறியும் பொழுது ஸ்வரூப நிரூபகம் என்றும்
ஸூகத ஸ்வரூபத்தை அறியும் பொழுது நிரூபித ஸ்வரூப விசேஷணம் என்றும் சொல்லலாம் என்ற
திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் மேல் –

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும் விபூதிகள் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்று
அருளிச் செய்யப்பட்டுள்ளதை உண்டே –

இளைய பெருமாளுடைய விஸ்லேஷம் தரிக்காமல் பெருமாள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினாரே
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும்
உணர் முழு நலம் -என்றும் ஸூகத ஸ்வரூபத்தை சொல்லும் பொழுது விபூதிகள் இல்லாமல்
சொல்லப்படுகிறது நிரூபித ஸ்வரூப விசேஷணம் –

வ்யாபக மந்த்ரங்கள் மூலம் அனைத்தும் அவனது சரீரம் என்று அறிந்தவனே எல்லாம் அறிந்தவனாகிறான் –
ப்ரதி தந்த்ரமாவது –
மற்றுள்ள சித்தாந்திகள் ஒருவரும் இசையாதே தன்னுடைய சித்தாந்தத்துக்கே அசாதாராணமான அர்த்தம் –
இங்கு வேதாந்திகளான நம்முடைய தர்சனத்துக்கே அசாதாரணமுமாய் பிரதானமுமாயும் உள்ள அர்த்தம் ஏது என்னில்
சேதன அசேதனங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான சரீர ஆத்ம சம்பந்தாதிகள் —

இதில் ஈஸ்வரனுக்கு சரீரீரத்வம் ஆவது –
சேதன அசேதன த்ரவ்யங்களைப் பற்ற நியமேன தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியாயுமாய் இருக்கை
சேதன அசேதனங்களுக்கு-சரீரத்வமாவது
நியமேன ஈஸ்வரனைப் பற்ற தார்யமுமாய் -நியாம்யமுமாய் -சேஷமுமான த்ரவ்யமாய் இருக்கை –

சேதன அசேதனங்களைப் பற்ற தாரகனும் நியந்தாவுமாகை யாவது –
தன் ஸ்வரூபத்தாலும் சங்கல்ப்பத்தாலும் யதார்ஹே சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளுக்கு பிரயோஜகனாய் இருக்கை –
அது எங்கனே என்னில் –

ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவ்யவஹிதமாக ஸ்வரூபபேண ஆதாரமாய் இருக்கும் –
அவ்வோ த்ரவ்யங்களை ஆஸ்ரயித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வோ த்ரவ்யத்வாரா ஆதாரமாய் இருக்கும்
ஜீவர்களால் தரிக்கப் படுகிற சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று சிலர் சொல்லுவார்கள்
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டும் ஸ்வரூபத்தாலும் ஆதாரமாய் இருக்கும் என்று சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஈஸ்வர ஸ்வரூபத்தை அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள் –

சர்வ வஸ்துக்களுடையவும் சத்தை சங்கல்ப அதீநை யாகையாவது –
அநித்யங்கள் அநித்திய இச்சையாலே உத்பன்னங்களாயும்-
நித்யங்கள் நித்ய இச்சா சித்தங்களுமாய் இருக்கை –
இவ்வர்த்தத்தை
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் ஸ்லோகத்தால் அபியுக்தர் விவேகித்தார்கள் –
இத்தால் சர்வத்தினுடைய சத்தா அனுவ்ருத்தி ரூபையான ஸ்திதியும் ஈஸ்வர இச்சா அதீநையானபடியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்ப அதீநை என்று சொல்கிறது

குரு த்ரவ்யங்கள் சங்கல்ப்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்த்ரங்களில் சொல்லுமது
த்யைஸ்ஸ சந்த்ரார்க்க நஷத்ரம் கம் திசோ பூர்மஹோததி வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மன-என்கிறபடியே
கனத்த பொருள்களான சந்திர ஸூர்யர்கள் ஒவ்வொரு தேச விசேஷங்களிலே விழாதபடி நிறுத்துகையைப் பற்ற –
இப்படி இச்சாதீன சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளான வஸ்துக்களுக்கு பரமாத்ம ஸ்வரூபம் என் செய்கிறது என் என்னில்
பரமாத்மாவினுடைய இச்சை இவ் வஸ்துக்களைப் பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும் –
இப்படி சர்வ வஸ்துவும் ஈஸ்வர ஸ்வரூபாதீன ஆஸ்ரிதமுமாய் ஈஸ்வர இச்சா தீனமுமாய் இருக்கும் –

லோகத்திலும் சரீரம் சரீரி உடைய ஸ்வரூப ஆஸ்ரிதமுமாய் சங்கல்ப ஆஸ்ரிதமுமாய் இருக்கக் காணா நின்றோம்
ஜீவன் இருந்த காலம் இருந்து இவன் விட்ட போது அழிகையாலே ஸ்வரூப ஆஸ்ரிதம்
இவர் தம் சங்கல்பம் இல்லாத ஸூஷுப்தி அவஸ்தைகளிலே தெளிவது
ஜாகராதி தசைகளிலே சங்கல்ப்பத்தாலே விழாதபடி தாங்கும் போது சங்கல்ப ஆஸ்ரிதம் என்னக் கடவது
இதில் ஸ்வரூப ஆஸ்ரிதமாய் இருக்கிறபடியை ஆதேயத்வம் என்றும்
சங்கல்ப அதீனமாய் இருக்கிறபடியை நியாம்யத்வம் என்றும் சொல்லுகிறது –

சேஷன் சேஷி என்பதன் பொருள்
ஈஸ்வரன் சர்வ சேஷியாகையாவது
உபாதத்தே சத்தா ஸ்திதி நியமன ஆத்யை சித் அசிதௌ
ஸ்வம் உத்திச்ய ஸ்ரீ மான் இதி வததி வாகௌபவநிஷதீ
உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குனௌ
அதஸ்த்வாம் ஸ்ரீ ரெங்கேசயே சரண மவ்யாஜமபஜம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்- என்கிறபடியே
தன் பிரயோஜனத்துக்காகவே பாரார்த்யைக ஸ்வ பாவங்களான இவற்றை உபாதானம் பண்ணி இவற்றாலே அதிசயனாகை-

சேஷ சேஷி ஞானத்தினால் உண்டாகும் பயன் –
இந்த ஆதார ஆதேய பாவாதிகளால் இச் சேதனனுக்கு பலிப்பது என் என்னில்
ஆதார ஆதேய பாவத்தாலே அவனுடைய ஞான சக்தியாதிகளுக்கு போலே அப்ருதுக் சித்த ஸ்வரூப லாபமும்
சேஷ சேஷி பாவத்தாலே ஆத்மா அபிமான அனுகுண-புருஷார்த்த -வ்யவஸ்தையின் படி ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்த ருசியும்
சேஷ சேஷி பாவத்தாலும் நியந்த்ரு நியாமய பாவத்தாலும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்துக்கு அனுரூபமாய்
நிரபேஷமுமாய் இருந்துள்ள உபாய விசேஷத்தை அறிகையும் பலிக்கும்

ஆக
இவற்றால் இச் சேதனன்
அனந்யாதாரன்
அநந்ய பிரயோஜனன்
அநந்ய சரண்யன்
என்றதாயிற்று –

மேலே உள்ள கருத்துக்கள் ரகஸ்ய த்ரயத்தில் உள்ளன என்று காண்பித்தல் –
இவ்வர்த்தம் பிரதம ரகஸ்யத்தில் -கிடக்கிறபடி எங்கனே என்னில்
நாராயண சப்தத்தில் தத் புருஷ பஹூ வ்ரீஹி சமாச த்வயத்தால் உண்டான தாரகத்வ வ்யாபகத்வாதி களாலே
அநந்ய ஆதாரத்வாதி விசிஷ்ட ஸ்வரூப லாபமும்
பாரார்த்த்ய கர்ப்பமான கீழில் பத த்வயத்தாலே அநந்ய பிரயோஜனத்வமும் அநந்ய சரணத்வமும் பலிக்கும்

ப்ரபத்ய அனுஷ்டான பிரகாசகமான மந்திர ரத்னத்திலே
பூர்வ கண்டத்தாலே அநந்ய சரணத்வமும்
உத்தர கண்டத்தாலே அநந்ய பிரயோஜனத்வமும்
உபய பாகத்தாலும் அநந்ய ஆதாரத்வமும் பிரகாசிக்கிறது

இப்படி சப்தமாகவும் ஆர்த்தமாகவும் சரம ஸ்லோகத்தாலும் இவ்வகுப்பு கண்டு கொள்வது —

இப்படி சரம ஸ்லோகத்தாலே சித்த உபாய வசீகரண அர்த்தமாக விஹிதமான சாத்திய உபாய விஹிதத்தை
த்வயத்தாலே அனுஷ்டிக்கும் போதைக்கு
அனுசந்தேயங்களாக் கொண்டு அவஸ்ய அபேஷிதங்களான அர்த்தங்களை எல்லாம்
சிறிய கண்ணாடி பெரிய உருக்களைக் காட்டுமா போலே சுருங்கத் தெளிவிக்கும் திரு மந்த்ரம் –

அதில் பிரதம பதத்தில்
அர்த்தங்களை அர்ஜுன ரதத்திலும் -அக்ரத ப்ரயயௌ ராம -என்கிற ஸ்லோகத்திலும் கண்டு கொள்வது
த்வதீய பதத்தில் சப்தத்தாலும் அர்த்த ஸ்வ பாவத்தாலும் வரும் அர்த்தங்களை
ஸ்ரீ பரத ஆழ்வான் யுடையவும் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் யுடையவும் வ்ருத்தாந்தங்களிலே அறிவது
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இல்லாய் கண்டாய் என்னும் படி
இருக்கிற நாராயண சப்தார்த்தத்தை
கோசல ஜன பதத்தில் ஜந்துக்களையும் சக்கரவர்த்தி திரு மகனையும் உதாரணமாகக் கண்டு கொள்வது

பூர்வ பத த்வயத்தில் தோன்றின காஷ்டாப்ராப்த பாரார்த்த்ய பாரதந்த்ர்யங்கள் பேரணியாகத்
த்ருதீய பதத்தில் சதுர்த்தியில் கருத்திலே ப்ரார்த்த நீயமான சேஷி உகந்த கைங்கர்யத்தை
இளைய பெருமாளுடையவும் -இவருடைய அவதார விசேஷமான திருவடி நிலை ஆழ்வார் உடையவும்
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளில் தெளிவது

இது திருமந்திர அர்த்த அனுசந்தானத்துக்கு குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு
இதன் படியிலே த்வயத்திலும் சரம ஸ்லோகத்திலும் உள்ள அர்த்தங்கள் தெளிந்து கொள்வது –
இவற்றில் ஈஸ்வரனுக்கு பிரகாசித்த சேஷித்வம் சேதன அசேதன சாதாரண தர்மம் ஆகையாலே
சேதன ஏகாந்தமான ஸ்வாமித்வம் ஆகிற விசேஷத்திலே பர்யவசித்து அனுசந்திக்கப் பிராப்தம்
இப்படித் தன்னுடைய சேஷத்வமும் சாமான்யம் ஆகையாலே தாசத்வம் ஆகிற விசேஷத்திலே விஸ்ரமிப்பித்து அனுசந்திக்க வேணும்
இவற்றில் சாமான்யமான சேஷி சேஷ பாவம் பிரதம அஷரத்திலே சதுர்தியாலே பிரகாச்யம் –
இதன் விசேஷமான தாசத்வம் ஸ்வாமித்வங்கள் இருவரும் சேதனராயத் தோற்றுகையாலே அர்த்த சித்தம்
இப்படியே நாராயண சப்தத்திலும் சாமான்யமும் விசேஷமும் கண்டு கொள்வது
இதில் சாமான்ய சேஷத்வத்தாலே சேதனனுக்கு பிராப்தமான கிஞ்சித்காரம் தாசத்வம் ஆகிற விசேஷத்தாலே
கைங்கர்ய ரூபமான புருஷார்த்தம் ஆயிற்று –

இப்படி சேஷித்வத்தாலே வந்த ஈஸ்வரனுடைய அதிசய யோகமும்
ஸ்வாமித்வம் ஆகிற விசேஷத்திலே அவனுக்கு புருஷார்த்தமாய் பலிக்கிறது
சேதனருடைய ரஷணத்திலே ஈஸ்வரன் -பிராப்தனும் சக்தனுமாய் -தத் அதீன பிரவ்ருதியை ஒழிய
சேதனர் அப்ராப்தரும் அசக்தருமாய் இருக்கைக்கு நிபந்தனம் ஈஸ்வரனுடைய நிருபாதிக சேஷித்வமும் நிருபாதிக நியாம்யத்வமும்-
உடையவன் உடைமையை ரஷிக்கையும் சமர்த்தன் அசமர்த்தனை ரஷிக்கையும் பிராப்தம் இறே
ரஷிக்கும் போது கர்ம வச்யரை ஓர் உபாயத்திலே மூட்டி ரஷிக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வ சங்கல்ப நியதம் –

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்
துலை ஓன்று இல்லை என நின்ற துழாய் முடியன் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் என்று வேதியர் மெய்ப் பொருளே

யதி ஏதம் யதி சார்வ பௌம கதிதம் வித்யாத் அவித்யாதம
பிரத்யூஷம் பிரதிதந்த்ரம் அந்திமயுகே கச்சித் விபச்சித்தம
தத்ர ஏகத்ர ஞாடிதி உபைதம் விலயம் தத்தன்மத ஸ்தாபனா
ஹேவாக பிரதமான ஹைதுககதா கல்லோல கோலாஹல-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் –குரு பரம்பரா சார விஸ்தாரம் -அதிகாரம் 1–உபோத்காத அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 20, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

ரகஸ்ய த்ரய சாரம் -32-அத்தியாயங்கள்
குரு பரம்பரா சாரம்
அர்த்த அனுசார பாதம் -22-அத்தியாயங்கள் – உபோத்காதம் -தொடங்கி
ஸ்த்ரீகரண பாதம் –நான்கு அத்தியாயங்கள் –
பத வாக்ய யோஜனா பாதம் -திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் அடுத்த மூன்றும் –
நான்காவது பாதம் – சாம்ப்ரதாய அர்த்தங்கள் –
அடுத்த மூன்றும் -ஆச்சார்ய -சிஷ்ய -சரம அத்யாயம் தொகுத்து அருளுகிறார் –

—————————————————————-
ஸ்ரீ குரு பரம்பரா சாரம்

குருப்யஸ் தத் குருப்யச்ச நமோவாக மதீமகே
வ்ருணீமகே ச தத்ரா ஆத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ-

அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

பழையவர் மூவர் –
முனி மனன சீலர் பகவத் தியானமே கால ஷேபம் –பொய்கை- சரஸ் –
பூதத்தார் -பூ சத்தா -கர்ப்ப ஸ்ரீ மான் கருவரங்கத்துள் கிடந்தேன் கை தொழுதேன் -வேறே அடை மொழி வேண்டாமே –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் –பூதங்கள் -நித்ய ஸூரிகள்
பேயாழ்வார் -மாறுபாடு உள்ள ஸ்வாபம்-/மஹா யோகி –
நாட்டார் இயல் ஒழிந்து திரு நாரணனுக்கு ஆளாகி -திருக் கண்டேன் –திருவிலே ஆரம்பித்து முடித்தார்

தண்-பொருநலுக்கு-அடை மொழி -சம்சாரம் தாபம் இல்லாமல் -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆக்கி
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
விஷ்ணு சித்தர் -பெரியாழ்வார் – பட்டர் பிரான் –
இங்கு ஆண்டாளை தனியாக சொல்லாமல் -விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல்
அது காண்டுமே -அத்யந்த பரதந்த்ரை -என்ற உத்கர்ஷம் உண்டே –

துய்ய குலசேகரர்- பாகவத பிரதிபத்தி –ஆரம் கெட –குடப்பாம்பில் கை இட்ட –
நம் பாணனார் –அபிமானித்து -தேசிகன் -அசாதாரண சம்பந்தம் -முனி வாஹனர் -வேதாந்தச்சார்யார் -விருது பெற்ற
முனி வாகன போகம் -பழ மறையின் பொருள் -என்று நிரூபித்து அருளி –
பகவத் த்யான சோபனம் அமலனாதி பிரான் போல் திருவடி தொடங்கி- வர்ணாஸ்ரம தர்மங்களை மீறாமல் –
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தி அருள பிரார்த்தித்தார்
மழிசை வந்த சோதி -பெரும் புலியூர் அக்ர பூஜை காட்டி -பக்தி சாரர் -சக்கரத்தாழ்வார் அம்சம் என்பதாலும் சோதி –
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன்–மாயோனை வாள் வலியால் மந்த்ரம் கொண்டவர் –
திரு மந்த்ரம் இவர் பெற்றதும் மறை விளங்கிற்றே- வேல் ஏந்தி ரஷித்து-வையம் எல்லாம் மறை விளங்கிற்றே –

வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் -மங்கையர் கோன்
கலயாமி கலி துவம்சம் -கலி ஹன்-லோக திவாகரன் -வையம் எல்லாம் மறை விளங்க –
வேதம் வேத இதி–வித்வான் வித் தாது ஞானம் -மறை -வேதார்த்தம் மறைந்தே இருக்கும் –
அதுவே விளக்கும் மறைக்கும் ஆதரவும் அநாதாரமும் நம்மிடம் தானே – -ஆராவமுதன் -திராவிட வேதம் தர்சகன் –
இவருக்கு நிறைய அடைமொழி -திருமந்திரத்தில் ஊன்றி- வாள் வேல் ஏந்தும் -இரண்டையும் ஏந்தி மங்கையர் கோன்-
பரகாலன் –பிற சமயத்தாருக்கும் -பராத்பரனுக்கும் காலன்-
திருமந்த்ரசாரம் தனது அருளிச் செயல்களில் காட்ட-லோகம் எல்லாம் விளங்கும்படி -வாள் வலியால் மந்த்ரம் பெற்றார் –
ஆலி நாட்டு அரசு தெய்வ அரசன் இடம் இருந்து அரச மரத்தடியில் மந்த்ர அரசனான திரு மந்த்ரம் பெற்றார் அன்றோ –

என்று இவர்கள் -அநு வாதம் -ப்ரீதி காரணம் – பொய் நின்ற ஞானம் அநு வாதம் பீதியால் –
ப்ரீதி வழிந்து வந்த அருளிச் செயல்கள் -மகிழ்ந்து – ஆனந்த அனுபவம் மண்டி –மாலைகள் –தொடர்ச்சி சப்தங்கள் அர்த்தங்கள்
தமிழ் மாலை -சர்வாதிகாரம் -செய்ய -செம்மை-ஆர்ஜவம் – தெளிவு –
தெளிய ஓதி -சப்தங்கள் அர்த்தங்கள் அறிந்து -தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-

1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவு மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –

ஸ்ரீ ந்யாஸ விம்சதியிலும் இந்த பத்து அர்த்தங்களை ஆச்சார்யர் விஷயத்தில் -காட்டி அருளி
தொல் வழி -பாகவத பர்யந்த சேஷத்வ பாரதந்தர்யம்
ஸ்ரீ மதுர கவி திரு நாமமே ப்ரீதி அதிசயத்துக்கு த்ருஷ்டாந்தம் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் நிஷ்டை –

அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க -அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு –
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும் -துன்பு அற்ற -சம்சய விபர்யயம் இல்லாமல் –
நீக்கமில் அடியார் -அக்குளத்தில் மீன் -அடிமை தலை நின்ற –
கோதில் அடியார் -அநல சத்ருக்நன் -தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–

பாபிஷ்ட்ட ஷத்ர பந்துச்ச புண்டரீகச்ச புண்ய க்ருத்-ஆசார்யவத்த்யா முக்தௌ தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் -என்று
ஆசார்வத்தையே சர்வருக்கும் மோஷ காரணம் என்று அறுதியிட்டார்கள் –

மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால் தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது

முமுஷூவுக்கு ஆசார்ய வம்சம் பகவான் அளவும் செல்ல அனுசந்திக்க வேண்டும் என்று ஓதப்பட்டது —

தம் இமம் சர்வ சம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும்—மஹாபாரதம்–ஸபா பர்வம்–என்றும்
(எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும், முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,
தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் , பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-
ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் . வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )

மம அபி அகில லோகா நாம் குருர் நாராயணோ குரு –ஸ்ரீ விஷ்ணு புராணம் (5–1–14) -என்றும்
(எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன், எனக்கும் குரு-
தனக்கென்று எந்த ஆசார்யனும் இல்லாத பரமாசார்யன் –நாராயணன்-இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே)

த்வமே பந்துச்ச குரும் த்வமேவ -என்றும்
(நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி, ஸ்ரீ க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம்)

குருரசி கதிச்ச சி ஜகதாம்-ஸ்தோத்ர ரத்னம் (60 ) –
(பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் )

என்றும் சொல்லுகிறபடியே சர்வ லோகத்துக்கும் பரமாச்சார்யனான சர்வேஸ்வரன் –

1- ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும்-அவற்றுக்கு அபகாரம் பிறந்த போது மீட்டுக் கொடுத்தும் –
இவன் முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் –

2- இவன் புத்ரர்களான சனத் குமாராதிகளை ஸ்வபமாகத விஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா-(பாரதம்–சாந்தி பர்வம் )-
என்னும்படி பண்ணி அவர்கள் முகங்களாலே ஹித பிரவர்த்தனம் பண்ணுவித்தும்-

3-இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகரிஷிகளை இட்டும் அத்யாத்ம சம்ப்ரதாயம் குலையாத படி நடத்தியும் –

4-க்ருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோ ஹ்மன்யோ பூமிம் மைத்ரேய மகாபாரத க்ருத்வேத்-(விஷ்ணு புராணம் ) -என்றும்
(க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும் வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே ,
மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.)

மஹஷை கீர்த்தநாத் தஸ்ய பீஷ்ம ப்ராஜ்ஞலி அப்ரவீத்-(மஹாபாரதம் —ஆதிபர்வம் )
(மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும்போது, பீஷ்மர், கைகளைக் கூப்பியவண்ணம் பேசினார்.)

என்றும் சொல்லுகிறபடியே நிற்கிற வ்யாசாதிகளை அனுபிரவேசித்து மகா பாரத சரீராதிகளை ப்ரவர்த்திப்பித்தும்
(சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்மஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும், )

5-ஹம்ச மத்ஸ்ய ஹயக்ரீவ நர நாராயண கீதாச்சார்யாத்யவதாரங்களாலே தானே வெளி நின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை பிரகாசிப்பித்தும் –
(ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—– இவர்கள்,
தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்மயோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.பகவான் மிகவும் கருணையுடன்
ஹம்ஸரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவபர—சரீரஆத்மபாவ ரூபத்தை உபதேசித்தார். )

(மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும். உலகங்கள் யாவும் ,
கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,அப்போது,
அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்தபோது,
அவர், ஜலதர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து, அவராலேயே,
கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய்சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி,
ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து, வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்)

(ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது— ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில்
தங்கத்தூள்கள் ஒட்டுவதுபோல, மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளிகொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழிகாணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும்,அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித்தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் )
அபஹரித்துக்கொண்டு பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்து வைத்தனர். ப்ரஹ்மா பதறினான்;
நான்கு வேதங்களின் உதவி இல்லாமல், ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான்,
பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து, பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப,
இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது, ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு,
ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார். அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட,
பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.)

(நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார்
இவரால், தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க,
அப்ஸரஸ்களை அனுப்ப, நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல,
இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது-
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் )

6-தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரை இட்டு மூதலிப்பித்தும்

7- பாஞ்சராத்ரச்ய க்ருத்ச்னச்ய வக்தா நாராயண ஸ்வயம் -மஹாபாரதம்—சாந்தி பர்வம்– என்கிறபடியே
தான் அடியிலே அருளிச் செய்த பகவத் சாஸ்த்ரத்தை
ப்ராஹ்மனை ஷத்ரியை வைசம்யச் சூத்ரச்ச க்ருத லஷணை-
அர்ச்சநீயச்ச சேவ்யச்ச நித்ய யுக்தை ஸ்வ கர்ம ஸூ சாத்வதம்
விதி மஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய த்வாபரச்ய யுகச்யாந்தேன் ஆதௌ கலியுகச்ய ச –என்கிறபடியே
அவசரங்களிலே ஆவிஷ்கரித்தும்
(பகவான் நாராயணனே, பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.)

8- பூர்வோத் பன்னேஷூ பூதேஷு தேஷு தேஷு கலௌ பிரபு அனுப்ரவச்ய குருதே யத் சமீகித மச்யுத –விஷ்ணு தர்மம்-என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே
அபிநவனமாக ஒரு தசாதவதாரம் பண்ணி –
மேகங்கள் சமுத்திர ஜலத்தை வாங்கி சர்வ உப ஜீவ்யமான தண்ணீராக உமிழுமா போலே-
வேதார்த்தங்களில் வேண்டும் சார தமமாம் அம்சத்தை
சர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையிலே சங்க்ரகித்துக் காட்டியும் —

9- இப்படி தான் பிரவர்த்திப்பித்த சத்பதத்துக்கு பிரகடராயும் பிரசன்னராயும் இருந்துள்ள பாஷாண்டிகளால் உபரோதம் வாராமைக்காக
ஏ சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகன்
காருண்யாச் சாஸ்திர பாணினா ஏ-(ஜயாக்ய ஸம்ஹிதை என்றும் –

10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து என்றும் சொல்லுகிறபடியே
அகஸ்த்ய சேவிதமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்து அருளினான்-
(ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே )

இத்தைக் கணிசித்து –
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷூ சபூரிசா
தாம்ரபர்ணீ நதீ யத்ர கிருதமாலா பயகி தீ
காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகா நதீ –ஸ்ரீமத் பாகவதம்–என்று மகரிஷி அருளிச் செய்தான் –

தானே நேராக உபதேசம் -சில ஜீவர்களை அதிஷ்டானம் பண்ணி உபதேசம் -சிலரை நியமித்து உபதேசம் –
அனுக்ரஹ விசேஷத்தால் ஞான ப்ரதம் இப்படி நான்கு வகைகளில் –
ஆழ்வார்கள் ரூபேண நவ-புநர் – தசாவதாரம் ஸூசகம்–
பீதகவாடை -சங்கு சக்ராதிகளுக்கும் உப லக்ஷணம்
பிரம குருவாகி வந்து -ஆச்சார்யர்கள் ரூபேண தானே அவதாரம் ஸூசகம் —

———————————————–

இவ்வாச்சார்யர்களில் –
ஈஸ்வர முனிகள் திருக் குமாரர் நாதமுனிகள் -நியாய தத்வம் என்கிற சாஸ்திரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார் –
இவருக்கு ஸ்ரீ மதுர கவிகள் முதலாக சம்ப்ரதாய பரம்பரையிலும் -திருவாய் மொழி முகத்தாலும்
யோக தசையில் சாஷாத்க்ருதராயும் நம் ஆழ்வார் ஆச்சார்யர் ஆனார் –

நாதமுனிகள் திருக் குமாரர் -ஈஸ்வர பட்டாழ்வான் -அவர் திருக்குமாரர் ஆளவந்தார் –
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் ஆகம ப்ராமாண்யமும்-புருஷ நிர்ணயமும்
ஆத்ம சித்தி -ஈஸ்வர சித்தி -சம்வித் சித்தி என்கிற சித்தி த்ரயமும் -கீதார்த்த சங்க்ரஹமும் –
ஸ்தோத்ர ரத்னமும் -சதுஸ் ஸ்லோகியும் –ஆகிய எட்டும்

ஆளவந்தார் திருக் குமாரர் –சொட்டை நம்பி –அவர் திருக் குமாரர் -என்னாச்சான் -அவர் திருக் குமாரர்கள் நால்வர் –
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்–இவர் பிள்ளை தோழப்பர்-அவருக்கு திருக் குமாரத்திகள் இருவர் –

நாதமுனிகள் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த முதலிகள் –
உய்யக் கொண்டார் -குருகைக் காவல் அப்பன் -நம்பி கருணா கர தாசர் –ஏறு திருவுடையார்
திருக் கண்ண மங்கை யாண்டான் -வானமா தேவி யாண்டான் –உருப்பட்டு ராச்சான் பிள்ளை –சோகத்தூர் ஆழ்வான்-ஆகிய எண்மர்-

உய்யக் கொண்டார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள் –
மணக்கால் நம்பி -திரு வல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர் –
சேட்டலூர் செண்டலங்காரர்-ஸ்ரீ புண்டரீக தாசர் -உலகப் பெருமாள் நங்கை-ஆகிய ஐவர்

மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
ஆளவந்தார் -தெய்வத்துக்கு அரசு நம்பி –
கோமடத்து திரு விண்ணகர் அப்பன் -சிறுப் புள்ளூர் ஆவுடைய பிள்ளை-,ஆச்சி -ஆகிய ஐவர்-

ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
பெரிய நம்பி -திருக் கோட்டியூர் நம்பி -திருமாலை யாண்டான் –ஆளவந்தார் ஆழ்வார் —
திருமலை நம்பி -ஈசாண்டான் –தெய்வ வாரி யாண்டான் –சிறியாண்டான் –திரு மோகூர் அப்பன் –திரு மோகூர் நின்றான் –
தெய்வப் பெருமாள் -திருமங்கை யாளியார்-பிள்ளை திருமால் இரும் சோலை தாசர் –மாறனேர் நம்பி -ஆள்கொண்டி -என்ற பதினைவர் –

பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
எம்பெருமானார் -மலை குனிய நின்றார் -ஆர்ய ஸ்ரீ சடகோப தாசர் -அணி யரங்கத்து அமுதனார் –
திருவாய்க்குலமுடையான் பட்டர் -திருக் கச்சி நம்பி -என்ற அறுவர் –

எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ரகஸ்ய அர்த்தங்களைச் சிஷித்தார் –
திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே திருவாய் மொழி கேட்டார்
ஆளவந்தார் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே திருவாய் மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும் அருளிச் செய்யும் நல் வார்த்தைகளும் கேட்டு அருளினார் –
திருமலை நம்பி ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ மத் ராமாயணம் கேட்டு அருளினார்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் -ஸ்ரீ பாஷ்யமும் தீபமும் சாரமும் வேதார்த்த சங்க்ரஹமும்
ஸ்ரீ கீதா பாஷ்யமும் சிறிய கத்யமும் பெரிய கத்யமும்
வைகுண்ட கத்யமும் நித்யமும் ஆக ஒன்பதும்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த முதலிகளை தம் தம் சம்ப்ரதாயப் படிகளிலே அறிந்து கொள்வது –

————————————————————————————

ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்

குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேன கோபயேத் அப்ரகாச பிரகாசாப்யாம் ஷீயதே சம்பதாயுஷீ -சேஷ ஸம்ஹிதை–என்றார்கள்
குருவை ஒருவன் பிரகாசிப்பிக்கறதும் ஒருவன் பிரகாசிப்பியாது ஒழிகிறதும் குரு பக்தியில் தாரதாம்யத்தால் இறே-
பகவத் விஷயத்தில் போலே குரு விஷயத்திலும் பரையான பக்தியுடையவனுக்கு அபேஷி தார்த்தங்கள் எல்லாம்
பிரகாசிக்கும் என்னும் இடம்
கட ஜாபாலாதி ஸ்ருதிகளிலும் சஞ்ச்யாதி வ்ருத் தாந்தங்களிலும் பிரசித்தம் –
(தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம் போலப்
பாதுகாக்க வேண்டும். இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால்,
ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும். ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும்,
குருவிடம் அவன் வைத்துள்ள அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோஅதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும் ஆசார்ய பக்தி பரிவாஹத்தால்
ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது.
சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.)

இங்கன் அல்லாதார்க்கு இப்படி ஞான சம்பத்து உண்டாகாது என்னும் இடம்
சிஷ்யர்களுடைய ஞான தார தம்யத்தாலே கண்டு கொள்வது
மிகவும் குணாதிகரான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை பிரகாசிப்பியாதருக்கு நிஷ்டை குலையாது என்னும் இடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே பிரசித்தம் –
(ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து,
இவனுக்கு, உபதேசித்தார். ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை )

பெற்றது குணமாக உபதேசித்தால் சிஷ்ய பாவம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்டை குலையுமாம் படி என்னும் இடம் –
வருவது விசாரியாதே இந்தரனுக்கு உபதேசித்து தானும் ப்ரஹ்ம வித்யையை மறந்து
தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு சர்வேஸ்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படி இருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டு கொள்வது —

(ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால் அந்தத் தகுதியில்லா சிஷ்யன்
செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன. இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து,
ப்ரஹ்மாஅவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார். இதன் பலன் அவருக்கு,
பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின. பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார்.
பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.)

இப்படி அப்ரகாச பிரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும்
ஷீயதே சம்பதாயுஷீ என்கிற பலங்களை ஔசித்யத்தாலும் பிரமாண பிரசித்தியாலும்
க்ரமத்தாலே உதாகரித்தது இத்தனை
இரண்டிலும் இரண்டு அன்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை –
ஆகையால் சர்வ அவஸ்தைகளிலும் குரு பக்தியின் பரிவாகமாக குருவை பிரகாசிப்பிக்கவும்
மகா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலே இருக்கிற திரு மந்த்ரத்தின் உடைய சீர்மையும்
தன் நிஷ்டையும் குலையாமைக்காக
சிலவான பிரயோஜனன்களைப் பற்ற
சிஷ்ய குண பூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் பிராப்தம் –

இவ்விடத்தில் குரு சப்தம் பரம குருக்களுக்கும் உப லஷணம்-
சாமான்யமாகவுமாம் மந்திர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரஹஸ்யங்களுக்கும் பிரதர்சன பரம்
தான் இந்த ரஹஸ்யங்களை அனுசந்திக்கும் போது எல்லாம் ஆசார்ய பரம்பரையை அனுசந்திக்கவும் விதி பல ப்ராப்தம்
இவ் வாச்சார்யர்கள் உடைய அனுசந்தானம்
சம்பாஷ்ய புண்ய க்ருதோ மநஸா த்யாயேத்-கௌதம தர்ம ஸுத்ரம் என்கிறபடியே
பிரதிஷி சம்பாஷணத்துக்கு பிராயச் சித்தமுமாம் —

(ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம்
வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர் மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்;
சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு, ஆசார்யன் உபதேசிக்கலாகாது;
சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .
ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——- பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்து விட்டால்,
அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்கவேண்டும்.)

—————————————————————————————-

என்னுயிர் தந்து அளித்தவரை சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுததத் திரு மகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே —

ஏதே மக்யம் அபோட மன்மத சார உன்மாதாய நாதா தய
த்ரயந்த ப்ரதி நந்த நீய விவித உதந்தா கதந்த்ரம் இக
ஸ்ரத்தா தவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா
ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவே வைதேசிகா தேசிகா —

(வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் )

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ—
க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந —
ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||

(ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை, அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.
இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் , திசைகள் தோறும் உள்ள வெற்றித் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது.
அந்தத் தூண்களில் உள்ள கொடிகள், மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப் போலே
விரட்டித் தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல் மார்க்க தர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது )

ஆரண நூல் வழிச் செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரண மாயவா வாதக கதலிகண மாய்த்த பிரான்
ஏர் அணி கீர்த்தி இராமானுசன் முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே —

ஐதுகர்க்கு -ஹேது வாதம் பண்ணுவார்களுக்கு-கேவல யுக்தி வாதிகள் –
வாதக கதலி கணை -வாதங்களாகிற வாழைகளை
பண்டரு மாற்றம் பசும்தமிழ் –வேழம் அன்றோ –

நீள வந்து இன்று விதி வகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னம் வினைவுடம்பொன்றி விழுந்து உழலாது
ஆளவந்தார் என என்று அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தார் அடியோம் படியோம் இனியல் வழக்கே

நீள வந்து -சம்சாரம் அநாதி அன்றோ
சம்சார சுழற்சியில் இன்று விடுபட்டு பரம புருஷார்த்தம் பெற -நம்மை ஆள வந்தார் அன்றோ

காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவ நெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே —

குரு பரமபர அநு சந்தானம் -அந்தக் குருக்கள் இடம் பக்தி பூர்வகமாக இருக்க வேண்டும் —
அந்த குரு பக்தி தானே சம்சார தசையில் காம க்ரோதாதிகளினால் கலங்கிய மனுஷ்யருக்கு அசம்பாவிதம் ஆகையால் –
அந்த காம க்ரோதாதி நிவ்ருத்தமும் ஆச்சார்ய கடாக்ஷத்தினாலேயே உண்டாக வேண்டுமே -என்பதால் இந்தப் பிரார்த்தனை –

ஸ்ரீ யபதியின் தயையாகிய கங்கையை தலையிலே தரித்த ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் இடம் பரவும்படி செய்து
மன்மத பானத்தால் வந்த பீடைகளை நிவ்ருத்தி செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை –

பால் பித்த ரோகம் நிவ்ருத்தி செய்து பின்பு ஸ்வயம் போக்யமாகுமா போலே -இதர விஷய வைராக்யம் உண்டாக்கி –
பரம புருஷார்த்த ஆசை விளைந்து -குருவை ஆஸ்ரயித்து குரு பக்தியை வளர்த்து அருள
அவனுடைய கல்யாண குணங்களாகிற சரங்களே உபாயம் –
அஸங்க்யேய கல்யாண குணங்கள் அவனைப் போலவே நம் பூர்வர்களுக்கும் இருக்குமே

அடியவருக்கு -தாச பூதங்களான மேலை அகத்து ஆழ்வான் -கீழை அகத்து ஆழ்வான் இருவருக்கும்
தாளம் வழங்கி -தாள சாஸ்திரம் உபதேசித்து அருளி –
காளம்-வலம்புரி -அன்ன–இவருக்கும் அவனுக்கும் இவை அன்றோ சிஹ்னங்கள்–

கீழே சிந்தியோம் இனி தீ வினையே -பரி ஸூத்த மநோ விருத்தியும்
படியோம் இனி அல் வழக்கே –பரி ஸூத்தமான வாக் வியாபாரமும்
தொழுது எழுவோம் -என்று பரி ஸூத்தமான காயிக வியாபாரமும் இருந்தாலும்
ஒவ் ஒரு ஆச்சார்யர்கள் இடமும் இம்மூன்றும் சேர அனுசந்தேயம் –

(ஸ்ரீ உடையவருக்குப் பின்பு, வடகலை ஆசார்ய பரம்பரை
திருமடைப்பள்ளியாச்சான் ,கிடாம்பி ராமாநுஜப்பிள்ளான் ,
கிடாம்பி ரங்கராஜாசார்யர், அப்புள்ளார்,ஸ்வாமி தேசிகன் –
குருகேசர்,எங்களாழ்வான், நடாதூர் அம்மாள், கிடாம்பு அப்புள்ளார், ஸ்வாமி தேசிகன்)

—————————————————————————————

அதிகாரம்-1–உபோத்காத அதிகாரம்-

ஆபகவத்த பிரதிதாம் அனத்யாம் ஆசார்ய சந்ததிம்
மனசி மம யத்ப்ரசாதாத் வசதி ரஹஸ்ய த்ரயஸ்ய சார அயம் —

(தோஷங்கள் —அதாவது குற்றங்கள் எதுவுமே இல்லாததும் , மிகவும் ப்ராபல்யமானதும்,
பகவானே முதல் ஆசார்யனாக இருப்பதுமான , இந்தக் குரு பரம்பரையை நமஸ்கரிக்கிறேன் –அவர்களின் க்ருபையால்,
அடியேன் மனஸ்ஸில் மூன்று முக்ய ரஹஸ்யங்களின் ( திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் )
ஆழ்ந்த உட் கருத்துக்கள் எப்போதுமே நிலைத்து உள்ளன )

கர்மம் ப்ரஹ்ம ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகான்
வந்தே ஹஸ்தகிரி ஈசஸ்ய விதி சோதக கிங்கரான்–

(கர்மா விசாரம், ப்ரஹ்ம விசாரம் என்று இரண்டு பாகங்களை உடைய வேத சாஸ்த்ரங்களில் ,
ஹைதுகர்கள் —-அதாவது, எதற்கும் காரணம் கேட்பவர்கள்–ப்ரமாணங்களை நம்பாதவர்கள்—இவர்களைக் கண்டித்தவர்களும்,
ஸ்ரீ தேவாதிராஜனுடைய திருவீதிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் கைங்கர்யங்களைச் செய்பவர்களுமான ஆசார்யர்களை
நமஸ்கரிக்கிறேன். இவர் ஸ்ரீ -அப்புள்ளார் —ஸ்ரீ தேவப்பெருமாளை அடையும் வழியை–மார்க்கத்தைத் தூய்மை ஆக்கினார் )

ஆளும் அடைக்கலம் என்று என்னை அம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க இங்கே நமக்கு ஒரு விதி வாய்க்கின்றதே

மணிவர இவ சௌரே நித்ய ஹ்ருதய அபி ஜீவ
கலுஷமதி அவிந்தன் கிங்கரத்வ ஆதிராஜ்யம்
விதி பரிணதி பேதாத் வீஷித தேந காலே
குரு பரிஷித் உபஜ்ஞாம் ப்ராப்ய கோபாயதி ஸ்வம் –

(கௌஸ்துபமணி போன்ற ஜீவாத்மா ,எம்பெருமானுக்குப் பிரியமானவன். எம்பெருமானும் கௌஸ்துப மணிக்குப் பிரியமானவன்.
ஜீவன் , தனது அறியாமையால் புத்தி தடுமாறி எம்பெருமானுக் செய்யும் கைங்கர்யத்தை , ஒரு கால கட்டத்தில் கைவிடும்போது,
எம்பெருமானின் கடாக்ஷத்தால் , ஆசார்யர்களின் உபதேசங்கள் மூலமாக, தனது ஸ்வரூபம் பற்றிய உண்மை அறிவு, –
அதாவது–ஜீவன் எம்பெருமானின் அடிமை,ஜீவன் எம்பெருமானுக்காகவே இருக்கிறான்–என்கிற ஞானம் ஏற்படுகிறது.
இதனால், ஜீவாத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.)

ஜீவாத்மாவின் ”ஸ்வரூப ” யோக்யதை

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயனாய்க் கொண்டு –
ஹ்ருதயங்கமனாய் குமாரன் என்றும் புத்திரன் என்றும் சிஷ்யன் என்றும்
ப்ரேஷ்யன் என்றும் சேஷ பூதன் என்றும் தாஸ பூதன் என்றும் அவ்வோ சாஸ்த்ரங்களில்
பிரதிபன்னனாய் இருக்கும் ஜீவாத்மா –

இவன் தனக்கு வகுத்த சேஷியாய்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் –
உயர்வற உயர் நலம் உடையவனாய் –
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனாய்
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான சர்வேஸ்வரன் –

வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே லைங்க புராணம் -என்றும் –
(ஸமஸ்த உலகங்களுக்கும் எஜமானன் ஆக இருக்கிற பகவான் ,வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் விளங்குகிறான் )
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் சொல்லுகிறபடியே

(கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –4-9-10-)

பெரிய பிராட்டியாரோடு கூடத் தெளி விசும்பிலே
யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்திதா -ஸ்ரீ குணரத்னகோசம் -23 -என்கிறபடியே

(ஆஜ்ஞாநுக்ரஹ பீமகோமலபுரீபாலா பலம் பேஜுஷாம்
யாயோத்யேத்யபராஜிதேதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா |
பாவை ரத்புத போகபூமகஹநை : ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி :
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி !யுவயோ :தாம் ராஜதாநீம் விது : ||

ஆணையிடுவதும் , வாழ்த்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் த்வாரபாலகர்களை உடைய நகரம்—
எம்பெருமானை, -பக்தி-ப்ரபத்தி வழிகளில் ஆச்ரயித்தவர்களுக்கு, அடைய வேண்டிய பயன் ——–
யுத்தம் செய்து வெல்ல இயலாத நகரம்—— என்றும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத நகரம்——–
வேதங்களால் அறியப்பட்ட நகரம் ———ஸ்வர்காதிகளுக்கும் மேலே உள்ள நகரம் ——–என்றும் நிலைத்திருக்கும் நகரம் ——–
அத்புதமான பகவதனுபவம் நிறைந்த பொருட்களால் செழிப்பான நகரம்———– அத்தகைய நகரம்–வைகுண்டம் –பரமபதம் என்பது–
திவ்ய தம்பதியரான உங்கள் தலைநகர் என்று வேதவிற்பன்னர்கள் -ச்ருதி–ஸ்ம்ருதி –இதிஹாஸ –புராண–ஸ்ரீ பாஞ்சராத்ராதிகளிலும் ,
ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் புகழ்கிறார்கள் )

அயோத்யாதி சப்த வாசியான கலங்கா பெரு நகரிலே
சஹஸ்ர தூணாதி வாக்யங்களாலே ஒதப்படுகிற திரு மா மணி மண்டபத்திலே
கௌஷீ தகீ பிரம்மணாதிகளிலே ஒதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே

சென்றால் குடையாம் இருந்தால் சிங்கா சனமாம் -என்றும் –

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் —-என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு )

நிவாச சய்யா ஆசன -என்றும் சொல்லுகிறபடியே

நிவாஸசய்யாஸந பாதுகாம்சுக உபதாந வர்ஷாதப வாரணாதிபி : |
சரீர பேதைஸ்தவ சேஷதாம் கதை :யதோசிதம் சேஷஇதீரிதே ஜநை : || -(ஸ்தோத்ர ரத்னம் -40 )

சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசித சர்வ வித கைங்கர்யங்களையும்
சர்வ வித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே தனக்கு நிரூபகம் ஆகையாலே சேஷன் என்றே திரு நாமம்
ஆகும்படியான திரு வநந்த ஆழ்வான் ஆகிற திருப் பள்ளி மெத்தையிலே
வான் இளவரசாகக் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை சர்வ ஆத்மாக்களும் அனுபவித்து
க்ருதார்த்தராக வேணும் என்று சஹ்ருதனாய் இருக்கிற இருப்பு அடியாக
நித்ய அனுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்து அடியாரான நித்ய ஸூரிகளோடு ஒக்க
தானும் ஸ்வாமி கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து

அநாதி மாயையினால் ஸூ தப்தனாய் –
அநேக ஜன்ம சஹஸரீம் சம்சார பதவீம் வ்ரஜீன் மோஹ சரம பிரயாதோ அசௌ வாஸநா ரேணு
குண்டித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே
(அநேகமாயிரமாயிரம் ஜன்மமெடுத்து, ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, மோஹத்தில் மூழ்கி, ச்ரமத்தை அடைந்து,
தான் யாரென்றே அறியாதபடி, மயக்கத்தில், கர்மாக்களின் வாஸனையாகிற புழுதியில் அகப்பட்டு,
ஞானத்தை இழந்து ஜீவாத்மா உள்ளான்)
சம்சாரம் ஆகிற பாழிலே விழுந்து ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து தட்டித் தாவற்று அழுக்கு அடைந்து
ஒளி அழிந்த படியாலே தத்வ ஹித விஷயமாய் யதாவத் பிரகாச ரஹிதனாய் நிற்க

ஒரு ராஜா அந்தப்புரத்துடன் வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே சக்தனான அளவிலே
வார்த்தை அறிவதற்கு முன்பே வழி தப்பின ராஜகுமாரன் எடுத்தார் கைப் பிள்ளையாய்
ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர அவன் தனக்கு இல்லாத சபரத்வாதி ஜாதிகளை ஏறிட்டுக் கொண்டு
மாதா அபி ஏகா பிதா அபி ஏக மம தஸ்ய ச பஷிண
அஹம் முனிபி ஆ நீத ச ஆ நீத கவாசனை
அஹம் முனீ நாம் வசனம் ஸ்ருணோமி கவாசனானாம் ச வஸ ச்ருணோதி
ப்ரத்யஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டும் சம்சர்கஜா தோஷ குணா பவந்தி -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்கிறபடியே

(ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகத்தின் மூலமாக,
தாய் தகப்பனாக கிளிகளின் பெற்றோருக்குப் பிறந்த இரண்டு கிளிகள் பற்றிய சம்பவத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துரைக்கிறார்—
கிளி, ஒரு முனிபுங்கவரிடம் சொல்கிறது——-எனக்கும் இன்னொரு கிளிக்கும் தாயும் ஒருத்தி; தகப்பனும் ஒருவனே !
நான், ஆஸ்ரமவாசிகளான ரிஷிகளாலும், இன்னொரு கிளி பசுமாம்ஸம் தின்பவர்களாலும் வளர்க்கப்பட்டோம்.
நான், தினந்தோறும் முனிவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன்; அந்தக் கிளியோ மாட்டிறைச்சி உண்பவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறது.
நான் பேசும் பேச்சுக்களின் தன்மையையும், அந்தக்கிளி பேசும் பேச்சுக்களின் தன்மையையும் கேட்டு, இவற்றிலுள்ள வேறுபாட்டை
நீ தெரிந்துகொண்டு இருக்கலாம். இவற்றிலிருந்து, குணங்களும் குற்றங்களும் —- நல்ல பண்புகளும், தீய பண்புகளும் ,
சேர்க்கையால் ஏற்படுகின்றன என்று சொல்லிற்று)

வேடுவச் சேரியிலே கிளி போலே அவர்கள் பழக்கி வைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய்
அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே ஊணும் வ்ருத்தியும் தனக்கும் ஊணும் விருத்தியுமாய்
தனது பிறவிக்கு உரிய போகங்களில் ஆசார சம்ச்காராதிகளிலும் புதியது உண்ணாதே ராஜ போக விருத்தங்களான
ஜூ குப்சித விஷயங்களிலே தனக்குப் பேறும் இழவும் ஹர்ஷ சோகங்களுமாய்
ராஜ குமாரன் என்று தன்னடி அறிவார் சில ரிஷி ப்ராயர் உண்டானாலும் அவர்களுக்கு கிட்ட ஒண்ணாத அவஸ்தையை யுடையவனாய்
இப்படி பிராந்த சித்த சபரத்வாத்ய அவஸ்தை யோடு யாவஜ்ஜீவனம் நடக்கில் உத்தர ஜன்மங்களிலும்
ஒரு யோக்யதை பெற விரகு இல்லாதபடி தட்டுப் பட்டு நிற்குமா போலே

இவனும் தேஹாத்மா அபிமானாதிகளாலே தன்னுருக் கொடுத்து வேற்று உருக் கொண்டு நிற்க –
அந்த ராஜ குமாரனுடைய லஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார் சில தார்மிகர் ஒரு விரகாலே
இவனை மீட்கப் பெற்று அபிமானிக்க
இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தர அபிமானத்தை வழி விலக்கி திருஷ்ட அத்ருஷ்ட சம்ச்காராதிகளாலே
உத்தர உத்தர போக தத் உபாயங்களுக்கு யோக்யனாம்படி விரகு செய்து

(த்ருஷ்ட ஸம்ஸ்காரம்—-ஸ்நானம், வஸ்திரம் இவை-அத்ருஷ்ட ஸம்ஸ்காரம் — செளள , உபநயனங்கள் இவை
ஸாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்தல், வஸ்திரம் உடுத்தல், ,பிற ஆசாரங்களை அறியும்படி செய்தனர்)

இவனுக்கு ஸ்வ ஜாதி அனுரூபமான குண வ்ருத்தங்களை தங்கள் உபதேச அனுஷ்டானங்களாலே குடி புகுர விட்டு
இவனுக்கு அநேக தோஷ த்ருஷ்டங்களான சபராதி போகய சூத்திர விஷயங்களை அருவருப்பித்து
ராஜாதி போக்யங்களான அதிசய புருஷார்த்தங்களை ஆய்ந்து எடுக்க வல்ல அளவுடைமையை யுண்டாக்கி நிறுத்துமா போலே

இவ் வாத்மாவுக்கு சில தார்மிகர் பித்ராதி முகேன நொடித்து –
புமான் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப -சரீராக்ருதிபேதா அஸ்து பூயைத கர்மயோ நய -ஸ்ரீ விஷ்ணு புராண-என்கிறபடியே
(ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— ஒவ்வொருவருக்கும்
சரீர அமைப்பில் ஏற்பட்ட வேறுபாடானது,அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உண்டானவை—)
உரு வியந்த இந் நிலைமையை உணர்த்தி
அதுக்கு அனுரூபமான புருஷார்த்த தத் உபாயங்களிலே அன்வயிக்கலாம் படி விரகு செய்து
உடம்பு தின்றார் படி அன்றிக்கே ஒரு வெளிச் சிறப்புடையார்க்கு வரும் குண விருத்தங்களை யுண்டாக்கி
ஹேய உபாதேய விபாக ஷமனும் ஆக்கி நிறுத்தின அளவிலே –

இவனுடைய அடி யுடைமையையும் -சில தார்மிகர் அடியாக வந்த யோக்யதையும் -அளவுடைமையும் நேராகக் கண்டு
பரம காருணிகனான பரம சேஷியாலே ப்ரேரிதராய்த்
தாங்களும் காருணி கோத்தமராய் இருப்பார் சில தேசிகர்
ஈச்வரஸ்ய ச சௌஹார்த்தம் யத்ருச்சா ஸூ க்ருதம் ததா விஷ்ணோ கடாஷம் அத்வேஷம் ஆபிமுக்யம்
ச சாத்த்விகை சம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்தி ஹேதவ –என்கிறபடியே
(ஜீவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென்று ஈச்வரன் எண்ணுவது
ஜீவனுக்குத் தற்செயலாக வரும் புண்ய கர்ம பலன்
ஜீவனுக்கு எம்பெருமானின் கடாக்ஷம்
ஜீவனுக்கு, எம்பெருமானிடத்தில் இருந்த த்வேஷம் போவது
ஜீவனுக்கு, எம்பெருமானின் கல்யாணகுணங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்
ஜீவனுக்கு, ஸத்வ குணம் உள்ளவர்களுடன் ஸ்நேஹம் —
இந்த ஆறும், ஒருவனை, மிகவும் நல்ல ஆசார்யனிடம் சேர்த்துவிடும் )
நேர்பட்டு அந்த ராஜ குமாரனுக்கு சில ராஜ அந்தரங்கர் நேர்பட்டு பிறவியை உணர்த்தி
மேலுள்ள ஹித தமங்களையும் பிரிய தமங்களையும் தெரிவித்து
ஒரு விரகாலே ராஜாவுக்கும் ராஜ குமாரனுக்கும் பரஸ்பர சம்ச்லேஷ ஆகாங்ஷையை உத்தமிக்குமா போலே
இவனுக்கும்

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஜ்ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா சேஷா ஹி பரமாத்மன –என்றும்
(ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை—
அவன் , ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ஸ்வரூபமாக உடையவன். அவன் பகவானுக்கு அடிமை.
பகவானையே அண்டி இருக்கிறான்.அவனது கைங்கர்யத்துக்காகவே இருக்கிறான்.)

தாஸ பூத ஸ்வ தஸ் சர்வே ஹி ஆத்மன பரமாத்மன -என்றும்
(ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சிவன் சொல்கிறார் — எல்லா ஆத்மாக்களும், பரமாத்மாவுக்கு இயற்கையாகவே தாஸர்கள்.
ஆகையால், நானும் உனக்குத் தாஸன் என்று நினைத்து வணங்குகிறேன் )
-பிரமாணங்கள் சொல்லுகிறபடியே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு யாதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய
ஸ்ரீ யபதி நாராயணன் உடனே குடல் துவக்கத்தைத் தெளிவித்து

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே —

இவனுக்கு தத் ப்ராப்தி உபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே தங்களுக்கு
பொன்னுலகையையும் புவனியையும் ஆளுகையாக உகந்து -அதடியாக
அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கி சுரக்கும் தேசிகரைப் போலே இத் தேசிகர் இவ்வாத்மாவுக்கு
அஜ்ஞ்ஞான சம்சய விபர்யயங்கள் தீர வேண்டும் என்று மிகுந்து குறைவறச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு
தத்த்வேன யச் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ இத்யாதிகள் படியே
ஈஸ்வரனுடையவும் ஈசிதவ்யங்கள் யுடையவும் ஸ்வரூப ஸ்வ பாவ சம்பந்தங்களும்
இவற்றின் த்யாஜ்ய உபேதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும்
இவற்றின் கதி பிரகாரங்களும்
உக்த அனுக்தங்களான மோஷ விரோதிகளும் ஆகிற இவ் வர்த்தங்கள்
முமுஷூவான இவ்வாத்மாவுக்கு ஜ்ஞாதவ்யங்கள் –

(தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ போகாபவர்க தாதுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராணரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

ஜீவர்கள், அசேதனம் , ஈச்வரன் என்னும் தத்வத்ரயம் , அவற்றின் ஸ்வபாவங்கள் ( குணங்கள் ) , இவ்வுலக போகங்கள்,
மோக்ஷம் , மோக்ஷ சாதனங்கள்,ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம், இவைகளையெல்லாம் உள்ளபடி விளக்கி ,
எந்த உதார புருஷரான ஸ்ரீ பராசரர் , ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளினாரோ , அந்த ருஷிச்ரேஷ்டருக்கு நமஸ்காரம்)

இவ் வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய சப்த ராசியிலே சார தமமான ரஹஸ்யத்திலே
பிரதிதந்திர சார உத்தாரேண சங்க்ரஹிக்கப் படுகின்றன –

திருவுடன் வந்த செழு மணி போல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே –

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன்
என்று என்னுள் புகுந்து இருந்து -2-7-3-
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
மலரடி சூடும் -திருவடிகளின் போக்கிய அதிசயம் -திருவடிகளில் மலர்களை சூடும் பாக்யம் என்றுமாம் —
மற்ற கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்
நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று –
ஆச்சார்யர்களது உபதேசமும் அபிமானமும் மட்டுமே உஜ்ஜீவகார உபாயம்

கர்ம அவித்யாதி சக்ரே பிரதிபுருஷ மிஹா நாதி சித்ர ப்ரவாஹ
தத் தத் காலே விபக்திர் பவதி ஹி விவிதா சர்வ சித்தாந்த சித்தா
தல்லப்த ஸ்வாவாகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்ய மாண கதாசித்
முக்தைச்வர்ய அந்த சம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித் –

(ஸம்ஸாரத்தில் உழலும் ஒவ்வொரு ஜீவனும் , கர்மாக்கள், அறியாமை போன்ற வினைகளில் சிக்குண்டு ,
எத்தனையோ வருஷங்களாக, அல்லல்படுகிறான். பூர்வ கர்மாக்கள் பலன் கொடுக்கத் தொடங்கும்போது,
பகவானின் கருணை கிடைக்கிறது–இது மிக்க குறைவான ஜீவன்களுக்கே கிடைக்கிறது –இப்படிப் பெறும் கருணையால்,
இவன் பெருத்த ஐச்வர்யத்தை அடைகிறான் –இந்த ஐச்வர்யம் நித்யஸூரிகள் பெரும் ஐச்வர்யத்தைப் போன்றது)

அநாதி கர்ம சுழற்சியில் உழன்று இருக்க–ஸூஹ்ருதா பரிணாம காலத்தில் -சஹஜ காருண்யத்தால் விஷயீ கரிக்கப்படுகிறோம்
அத்யந்த தண்ணியரான நமக்கும்–ஆச்சார்ய கடாக்ஷம் பெற்று -ஹேய உபாதேய விவேக ஞானம் பெற்று –
மனசாலும் கூட எண்ண முடியாத நிரதிசய ஆனந்த யுக்த பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யம் அருளுகிறார்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சார்யர்களுக்கு -வண்டு / குருகு கொக்கு நாரை / ஹம்ஸ/ குயில் /கிளி / மயில்/ வள்ளல் பெரும் பசு /மேகம் –சாம்யம்- பல படிகளில் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்–

June 19, 2015

எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே —
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு கழித்து உழல்வீர்க்கு -நீர்ப்பூ தாமரை செங்கழு நீர் -ஷீராப்தி சாயி வ்யூஹம்
நிலப்பூ -மல்லிகை முல்லை -விபவவதாரங்கள் -மரத்தில் ஒண் பூ -சேணுயர் வானத்தில் இருக்கும் பரவா ஸூ தேவன் –
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும் குடக் கூத்தற்கு ஏன் தூதாய் நுங்கால் கள் ஏன் தலை மேல் கெழுமீரோ நுமரோடே –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம்கண்ணா யுன் கோலப் பாதம் —
பரம பாகவதர்கள் சபரிவாரராக வந்து தலை மீது திருவடிகளை வைக்கவே பிரார்த்திக்கிறார்
அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -ஆசார்யவத் ஆசார்ய புத்ரே ஆசார்ய தாரேஷூ ச வ்ருத்தி-நுமரோடே நும்கால்கள் ஏன் தலை மேல் கெழுமீரோ –
தக்க மரத்தின் தாழ்சினை ஏறித் தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே -சீரிய சிங்காசனத்து எழுந்து அருளி ஆசார்யன் சீரிய போக்யமான அர்த்தங்களை உபதேசிக்க தாழ நின்று கேட்கும் சிஷ்யர்களைப் போலே என்றது ஆயிற்று
தேசிகாஸ் தத்ர தூத –ஸ்ரீ தேசிகன் –
குயில் மயில் -நன்னலப் புள்ளினங்காள் –புள்ளினங்காள் புல்லாணி செப்புமினே –புள்ளும் சிலம்பின கான் -ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் —
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதி ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம —
ஏக க்ருதீ சகுந்தேஷூ யோந்யம் சக்ராத் ந யாசதே -தேவேந்த்ரனைத் தவிர எவரிடமும் பல்லைக் காட்டாத பஷி -வெண் பல் தவத்தவர் சாதக பஷி -பரமைகாந்திகள்
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -அவரவர்கள் அதிகா அனுகுணமாக லலிதமான அர்த்த விசேஷங்களை உபதேசிக்கும் குருக்களே

——————————————————————————————-

அறுகால சிறு வண்டே -விசேஷார்த்தம் –

1- வண்டு மதுவ்ரதம் -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை –எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே –தேனை நன்பாலை கன்னலை யமுதை —
தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி ஸ்திதே ரவிந்தே மகரந்த நிர்ப்பர மதுவ்ரதோ நே ஷூ ரகம் ஹாய் வீஷதே-ஸ்ரீ ஆளவந்தார்

2- வரி வண்டு தேதென வென்று இசை பாடும் -யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் –வண்டினங்கள் காமராக்கள் இசை பாடும் -எப்பொழுதும் முரல்வதே பணி-
மச்சித்தா -மத்கதப்ராணா-போதயந்த பரஸ்பரம் -கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –அநவரதம் எம்மானைச் சொல்லிப் பாடுவதையே போது போக்காகக் கொண்டவர்கள் –
யாழினிசை வேதத்தியல் திருவாய் மொழியைப் பாடிக் களிப்பவர்கள்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் -என்றும்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -என்றும் திரு நாமங்களையும் திருக் குனங்களையுமே பாடித் திரிவர் –

3- வண்டுக்கு சஞ்சரீகம் என்றும் பெயர் -மது உள்ள இடங்கள் எங்கும் பறந்து திரியும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்கிற உகந்து அருளின திருப்பதிகள் தோறும் மண்டி
எண்டிசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்தகரராமின் திரிந்து -என்று பூதத் ஆழ்வார் நியமித்த படியே
கொங்கும் குடைந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து -பதியே பரவித் தொழும் தொண்டர்களாய் இருப்பவர்கள் –

4-வண்டுகளுக்கு எங்கும் செல்லவும் தடை இல்லையே -கர்ப்ப க்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திரு முடி மேலும் தாராளமாக புகுந்து களிப்பதை காணா நிற்கிறோம்
அது போலே பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய -என்றும் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க -என்றும் இருக்க
அதிகார செல்வதுடன் தடை இன்றி உள்ளே புகுந்து ஒழிவில் காலம் எல்லாமுடனாய் இருந்து வழு விலா அடிமை செய்து கொண்டு இருப்பவர்கள்

———————————————————————————————–

கொக்கினங்காள் குருகினங்காள் –அஞ்சிறைய மட நாராய் –செங்கால மடநாராய் -கொக்கு குருகு நாரை சஜாதீயங்கள் –

1- ஆசறு தூவி வெள்ளைக் குருகே -ஆசறு என்றது -நிஷ் களங்கமான -வெள்ளை -சுத்த சத்வமயம் -தேக சுத்தியும் மானஸ சுத்தியும்
ய ஸ்மரேத் புண்டரீகாஷம் ச பாஹ்யாப் யந்தரச் சுசி –நீராடி சுத்த வஸ்த்ரம் எச்சல் தீட்டு படாத பாஹ்ய சுத்தியையும்
காம குரோத மோக லோப மத மாத்சர்யாதிகள் தீய குணங்கள் இல்லாத -நெஞ்சில் அழுக்கு இல்லாத ஆந்தர சுத்தியையும் -இரண்டிலும் குறை அற்றவர்களைச் சொல்லிற்று-

2-வாயும் திரை உகளும் கானல் மட நாராய் -உணவைத் திரட்டுவதால் உண்டான ஊக்கத்தால் -அலைகள் வந்து கிட்டி மேலே தாவிப் போகா நிற்கிற கடலிலே அசையாமல் இருக்கிற நாரையே —
கிரயோ வர்ஷ தாராபி ஹன்யமாநா ந விவ்யது அபி பூய மாநா வ்யசனை யதா அதோ ஷஜ சேதச -என்று எம்பெருமான் பக்கலிலே நெஞ்சை ஊன்ற வைத்து நிற்பதனால்
சம்சார கடல் அலைகளான தாபத் த்ரய வ்யசனங்கள் மேன்மேலும் வந்து நெருங்கா நின்றாலும் அவற்றுக்கு வருந்தாமல் இருப்பவர்கள்

3-வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்-என்றும் -காதல் மென்பெடையோடுடன் மேயும் கரு நாராய் -என்றும் சொல்லுவது
தங்களை பிரியில் தரியாத ப்ரேமம் உடைய சிஷ்யர்கள் உடன் கூடி மனத்துக்கு இனிய கால ஷேப கூடங்களில் பகவத் குண அனுபவம் பண்ணுபவர்கள்

4-செங்கால மட நாராய் –நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக -என்றது சரீரம் அர்த்தம் பிராணம் ச சத்குருப்யோ நிவேதயேத்-என்னும்
அடைவிலே ஆதாரத்தோடு சமர்ப்பித்த வற்றை அங்கீ கரிக்கும் தன்மை உடைய ஆசார்யர்கள் –

5-உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு –அல்ப உணவுகளை பொருள் படுத்தாமல் கனத்த உணவுகளையே கொள்ளும் கொக்கு போலே
அசாரமாயும் அல்ப சாரமுமாயும் உள்ள அர்த்தங்களைக் கொள்ளாதே சார -சாரதர -சாரதமங்களான-அர்த்தங்களையே கொள்ளுமவர்கள்

ஆக
உள்ளும் புறமும் ஒத்த சுத்தியை உடையவர்களாய் –
எம்பெருமான் பக்கலிலே நெஞ்சை ஊன்ற வைத்து சம்சார தாபங்களால் தடுமாறாத வர்களாய்-
தங்களைப் பிரியில் தரிக்க மாட்டாத பேரன்பு வாய்ந்த சிஷ்யர்களுடன் கூடி இருந்து பகவத் குண அனுபவம் பண்ணுபவர்களாய்-
க்ருதஜ்ஞர்களான சிஷ்யர்கள் ஆதாரத்தோடு அளித்த உடல் பொருள் உயிர் முதலானவற்றை ஏற்றுக் கொள்பவர்களாய் –
உயர்ந்த சாஸ்த்ரங்களிலே அவதானம் உடையவர்களாய் இருக்கும் மகான்களையே நாரை கொக்கு குருகு என்பர் –

—————————————————————————————————————————————————

ஹம்ஸ விசேஷார்த்தம் –

1-சாந்தோக்யம் -ஜா நஸ்ருதியின் உபாக்கியானம் -இரண்டு ரிஷிகள் ஹம்ஸ ரூபியாய் பறந்து போக -நிழல் படாமல் போக என்ன -இவர் என்ன ரைக்வர் போல ப்ரஹ்ம ஞானியோ என்ன -ரைக்வரைத் தேடி ப்ரஹ்ம ஞான உபதேசம் பெற்றான் –

2- ஹம்சோ யதா ஷீரமிவ அம்புமிச்ரம் -அது போலே இவர்களும் சாஸ்த்ரங்களில் சார அசாரங்களை பகுத்து அறியும் தன்மை விவஷிதம் –

3-அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த –அன்னமாய் நூல் பயந்தான் -சிஷ்யர்களை குறித்து சாஸ்த்ரங்களை உபதேசிக்கும் தன்மை விவஷிதம் –

4-ந பத்நாதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்த்த மாம் பஸி-சேற்று நிலத்தில் மனம் பொருந்தாது -மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார்
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே அழுந்தார் –

5-பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று நடையோடு இயலி –ஹம்சம் நடை பயிலும் பாச்சார்யர் அன்ன நடை அணங்கான பிராட்டி உடைய புருஷகாரத்தை அனுசரிப்பார் -தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷீ -ஸ்ரீ தேசிகன் –

6-அன்ன மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் வீற்று இருக்கும் –தாமரை இலையாக குடையாகக் கொண்டு வீற்று இருக்கும் –
அக்கமலத்து இலை போலும் திரு மேனி யடிகள் -பத்மபத்ர நிபாச்யமளமான அந்த திரு மேனியை சம்சார துக்க தாபம் தட்டாதபடி ஒதுங்க நிழலாய் உடையராய் இருப்பர்-வாஸூ தேவ தருச்சாய –

7-அன்னம் செந்நெல் ஒண் கவரி வீச வீற்று இருக்கும் -பரிபக்குவமான ஞானத்தை உடைய சிஷ்யர்கள் சாமரம் சமர்ப்பிக்க -கைங்கர்ய வ்ருத்திகளைச் செய்ய ஆசார்யர்கள் வீற்று இருப்பார்கள் –

8-சங்கமவை முரலச் செங்கமல மலரை ஏறி அன்னமலி பெடையொடும் அமரும் -சுத்த ஸ்வபாவர்கள்-சிஷ்யர்கள் -சங்கு -அன்னவர்களின் ஸ்துதி கோஷங்களை கீட்டுக் கொண்டு வீற்று இருக்கும் ஆசார்யர்கள் –

9-வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் நாடும்-வண்டுகளின் மிடற்று ஓசை பாட்டாகக் கொண்டு இருக்கும் ஹம்சம் –
வண்டுகள் தேனையே போக்யமாகக் கொண்டு இருப்பது போலே -உளம் கனிந்து இருக்கும் அடியவர்கள் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனாகிய
பகவத் விஷயத்தையே போக்யமாகக் கொண்டு இருக்கும் பாகவதர் இசையை கீர்த்தியைப் பாடும்படி எழுந்து அருளி இருப்பவர்கள் ஆச்சார்யர்கள் –

———————————————————————————-

குயில் விசேஷார்த்தங்கள்–

1-போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூங்குயில்காள்–புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே —
புன்நாகத் தல்லஜம் அஜஸ் ரச சஹச்ர கீதி சே கோத்த திவ்ய நிஜ சௌர பமாம நாம –
திருப்புன்னை கீழே ஒருவர் இருக்கும் இடத்திலே நம் முதலிகள் பத்துப் பேர் கூட நெருங்கிக் கொண்டு இருக்கச் செய்தே —
குயில் நின்றால் பொழில் சூழ் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடிக் களிக்குமவர்களையே குயில்கள் -என்கிறார் —

2–மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்தத் தீம் பலங்கனி தேனது-சாமான்ய சாஸ்த்ரங்களிலே வாய் வைத்து பின்பு அத்யாத்ம போக்ய விசேஷ சாஸ்த்ரங்களிலே போது போக்கும் பக்தர்களின் படி சொல்லிற்று —

3–குயில்களுக்கு பரப்ருதம் என்றும் பெயர் -காக்கையின் கூட்டிலே கொண்டு விடப்பட்டு அவற்றாலே போஷிக்கப் படும் என்றபடி -பரனான ஆச்சார்யனால் போஷிக்கப் பட்டு வளரும் குருகுல வாசிகள் -என்றபடி –

4-சில கால விசேஷங்களில் குயில் தனது மிடற்று ஓசை காட்டி வீறு பேரும் -ஆச்சார்யர்களும் கம்பீரமாக உபந்யசித்து மற்றைவர்களில் காட்டில் தங்கள் வைலஷண்யத்தை வெளிக் காட்டுவார்கள் –

5-பிக கூஜதி பஞ்சமம் –குயில் கூவும் இசையானது பஞ்சமம் ஆகும் -ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளும் ஐந்தாவது வேதமோ என்னலாம் படி இருக்கும் –
அல்லி மலர்ப் பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர் சொல்லுமவிடு ஸ்ருதியாம் -ஞான சாரப் பாடல்

6-குயிலே என் வேங்கடவன் வரக் கூவாய் –குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் -என் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே -மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே —
எம்பெருமானைக் கூவி வருவிக்க வல்லது குயில் -உக்தி மாத்ரத்தாலே எம்பெருமானை கைப் படுத்த வல்லவர்கள் ஆசார்யர்கள் –

———————————————————————————————————————————-

கிளி விசேஷார்த்தம் —

1- சுக பஞ்சர பந்தஸ்தே மதுராணாம் கிராம்பலம் -கிளி மதுரமான வாக்குப் படைத்ததனால் பந்தப்பட்டு இருக்கும் -ஆச்சார்யர்களும் தங்கள் மதுரமான வாக்குப் படைத்ததனால் சிஷ்யர் போல்வாரின் நிர்பந்தங்களுக்கு உள்ளாகி இருப்பர் –

2-சொன்னதைச் சொல்லுமாம் கிளிப் பிள்ளை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாம் அதனைப் பேசும் ஏக கண்டர்கள்

3- கிளி மேனி அழகில் மேம்பட்டது ஆசார்யர்கள் வடிவு அழகும் சிஷ்யர்களுக்கு உத்தேச்யம் -ஆசார்யன் சிஷ்யன் ஆருயிரைப் பேணுமவன் தேசாரும் சிஷ்யன் அவன் சீர் வடிவை –

4- கிளி வலையில் அகப்படும் -உன் தாமரைத் தடம் கண் வழிகளின் அகவலைப் படுப்பான் -என்றபடி எம்பெருமான் திருக் கடாஷ வலையிலே அகப்படுவார்கள் –

5-வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மட கிளியை கை கூப்பி வணங்கினாளே-கொண்டாட்டத்துக்கு கொள்கலமாய் இருக்கும் -ஆச்சார்யர்களும் உகந்து தொழும் படியான பெருமை படைத்த சிஷ்யர்கள் -நஞ்சீயர் நம்பிள்ளை போல்வார் –

6-இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை -நல்ல மது பதார்த்தங்கள் ஊட்டப் பட்ட கிளி -எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமம் —நமோ நாராயணமே-என்று பரம போக்யமான திருமந்தரம் போன்றவற்றை ஊட்டப் பெற்ற சிஷ்யர்கள் விவஷிதம் –

———————————————————————————————————————————

-இடையில் நான் வளர்த்த கிளிகாள் –மயில்காள் –என்றும் -புற்றர வல்குல் புன மயிலே -என்றும் சொல்லப்படும் மயில் விசேஷார்த்தங்கள்–

1- சந்தோஷ காலங்களில் தோகை விரித்து கூத்து ஆடும் -ஆச்சார்யர்களும் சிஷ்யர்கள் இடம் உகப்பு மிகுந்தவாறே மறைத்து வைத்து இருந்த ரகஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளுவார்கள் –

2–மயில் முகிலைக் கண்டவாறே துள்ளும் -ஆச்சார்யர்களும் முகில் வண்ணனுடைய பிரஸ்தாபம் வந்தவாறே
கார்முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் சசம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார்கள் –

3-மயிலின் நிழல் பட்டவாறே நச்சுப் பூச்சிகள் நலியும் -யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே ந தாத்ரா சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷதஸ் கரா -என்றபடி பசி பகை தீயன எல்லாம் பாறி ஒழியும் –

4-மயில் தன்னை நிர்பந்தித்தவர்களுக்கே இறகு தரும் -பெரும் பாலும் ஆசார்யர்கள் அனுவ்ருத்தி பிரசன்னாசார்யார்களே எம்பெருமானார் போல சிலரே க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர்கள் –

5-கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து -என்றும் -மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா -என்றும் மயிலின் ஏக தேசம் எம்பெருமான் திரு முடி மேல் ஏறி விளங்குவது போலே ஆச்சார்யர்களும் எம்பெருமான் திரு முடி மேல் ஏறித் திகழ்வார்கள் —

————————————————————————————————————————————————

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் -என்றும் -மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -என்றும் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்றும்
பசுக்களாகச் சொல்லப் படுபவர்கள் ஞானம் மிக்க ஆசார்யார்களே -அவற்றின் விசேஷ அர்த்தங்கள் —

1- கோ தானம் பண்ணும் போது கவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுர்தச-என்பர் -பதினான்கு வித்யைகளும் ஆசார்யர்கள் இடம் நிரம்பி இருக்கும் 0-

2- பரம பாவனம் பசி -பரம பவித்ரர்கள் ஆசார்யர்கள் –

3-பசுவின் மல மூத்ரங்களும் பரம உத்தேச்யம் -வம்புப் பேச்சுகளும் ஆசார்யர் திரு வாக்கில் -கலை இலங்கு மொழியாளர் -போலே சாஸ்திர அர்த்தங்களே ஆகும்

4-யதா யதா ஹி தர்மஸ்ய கலா நிர் பவதி பாரத -அப்யுத்தா நம் அதர்மஸ்ய ததா ஆத்மானம் ஸ்ருஜாம் யஹம் -கோ தானம் சிறந்தது என்பர் -ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் —

5-பசுக்கள் கிருஹங்களில் புழக் கடைகளில் -கடைசி ஸ்தானத்தில் வந்து நிற்கும் -அடியார் அடியார் அடியார் தம் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே —
தவப் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யச்ய ப்ருத்ய —

6- பசுக்கள் நான்கு முலைக் கண்களால் பால் சுரக்கும் -ஆசார்யர்கள் பாலே போன்ற சீரிய பொருளை -எம்பெருமான் கட்டளை –தம் ஹார்த்தமான அனுபவ பரீவாஹம் வேண்டுதல் —
சிஷ்யர்களின் பிரார்த்தனை -அது இல்லா விடிலும் அவர்கள் அனர்த்தம் கண்டு பொறாமை –இந்த நான்கு ஹெதுக்களும் நான்கு முலைக் கண்கள் —

7-பசுக்களுக்கு புல்-தண்ணீர் -தானியங்களின் பொட்டு-சாமான்ய சாஸ்திரங்கள் தானியங்கள் ஸ்தானம் —உபநிஷத் போன்றவை -புல்லின் ஸ்தானம் -அருளிச் செயல் ஓதுதல் தண்ணீர் ஸ்தானம்

8-உட்கொள்ளுவது -எதுவானாலும் வெளி வருவது அமிர்தமே -ஆச்சார்யர்களும் அமுத மென் மொழியார்கள் –

9-கன்று இல்லை என்னில் பசு சுரவாது -ஆசார்யர்களுக்கும் ச்ரோதாக்கள் இல்லை என்றால் சொல்லத் தோன்றாது —

10-மா நிதி கபிலை -என்கிறபடியே எம்பெருமான் நாடொறும் காலையில் விஸ்வரூபத்தில் பசுக்களை கண்டே யாக வேணும் –ஆழ்வார்கள் ஆசார்யர்கள் தானியங்களை நிச்சலுமே கேட்க வேண்டும்

11-ஆனின் மேய ஐந்தும் நீ -பஞ்ச கவ்யங்களை தந்து புனிதமாக்கும் பசு –பஞ்ச சம்ஸ்காரம் –அர்த்த பஞ்சகம் –பரத்வாதி பஞ்சகம் –போன்ற ஐந்து ஐந்தான வற்றை அளித்து புனிதர் ஆக்குவார்கள் ஆசார்யர்கள் —

12- ஏற்ற கலங்களை நிறைக்கும் பசுக்கள் -வாய்த்த சத்பாத்ரங்களான சச் சிஷ்யர்களை அமுதூட்டுவார்கள் ஆசார்யர்கள் –

13-பசுக்கள் ஏந்தி வைக்க யுரிய பாலையும் சுரக்கும் -முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவதும் உண்டு –ஆசார்யர்கள் ஸ்ருதிப் பிரகாசிகா –ஈடு–போன்ற ஸ்ரீ ஸூ க்தி அமுதங்களையும் -தார் காலத்துக்கு ஏற்ற செவிக்கினிய செஞ்சொல் களையும் பெய்து அருள்வார்கள் –

—————————————————————————————————-

போவான் வழிக் கொண்ட மேகங்களே –என்றும் -மேகங்களே உரையீர் -என்றும் -ஆச்சார்யர்களையும் எம்பெருமானைப் போலே மேகங்களாகச் சொல்வர் —

1-மேகம் கடல் நீரை முகந்து கொண்டு வர்ஷிக்கும் -சுருதி சாராத் –திராவிட வேத சாரம் -உபய வேதக் கடல்களில் உள்ள ரசப் பொருள்கள முகந்து கொண்டு வர்ஷிப்பார்கள் –

2-மேகம் உப்புத் தண்ணீரையும் தன் வாய்க் கொண்டு மதுரமாக்கி வர்ஷிப்பது போலே -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தின வாறே சர்வ சர்வோ உபய ஜீவ்யம் ஆகுமே –

3-மேகங்கள் உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து என்றபடியே உலகங்கள் எல்லாம் சென்று வேண்டிய இடத்தே பெய்யும் –
ஆச்சார்யர்களும் எண்டிசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து என்ற பூதத் ஆழ்வார் நியமனப்படியே சிஷ்யர்கள் உள்ள இடம் எங்கும் சஞ்சரித்து நல்ல அர்த்தங்களை பெய்து உபதேசிப்பார்கள்

4- மேகமானது பள்ளமான இடங்களிலே பெய்து அவற்றைப் பூரிக்கும் -இவர்களும் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று இருக்கும் பரம சாத்விகர்கள் இடத்தே அர்த்தங்களைத் தேக்கி வைப்பார்கள் —

5–மேகம் எப்போதும் பெய்யாது -சில கால விசேஷங்களில் பெய்யும் -ஆச்சார்யர்களும் தாபம் மிக்கவர்கள் வேண்டும் காலத்திலும் -முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவதைப் போலே தாங்கள் தரிக்கைக்காகவும் அர்த்தங்களை வர்ஷிப்பார்கள் –

6-மேகம் பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யா விடில் தீங்கு மலியும் -ஆச்சார்யர்களும் உபதேசிக்க வேண்டிய காலத்தில் உபதேசியா விடில்
தேஹாத்மா ப்ரமம்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா ப்ரமம் –அந்ய சேஷத்வ ப்ரமம் -ஸ்வ ரஷணே ஸ்வ அந்வயம்-ஆபாச பந்து சங்கம் -விஷய ப்ராவண்யம் முதலான தீங்குகள் மலியும் —

7-திங்கள் மும்மாரி பெய்து –மகம் வாழ்விக்கும் -ஆச்சார்யர்களும் ரகஸ்ய த்ரயம் –தத்வ த்ரயம் -ஸ்ரீ கீதை ஷட்க த்ரயம்-தத்வ ஹித புருஷார்த்தங்கள் -பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகள் -போன்ற மும் மாரிகளை பெய்து வாழ்விப்பார்கள் –

8–மேகம் எவ்வளவு வர்ஷித்தாலும் வர்ஷித்தோம் என்று இராமல் மேன்மேலும் வர்ஷிப்பதிலேயே ஊக்கம் கொண்டு இருக்கும் –
ஆச்சார்யர்களும் உபன்யாசங்களையும் உபதேசங்களையும் வழங்கி திருப்தி பெறாமல் மென்மேலும் குதுகூலத்துடன் வழங்கிக் கொண்டே இருப்பார்கள் –

9;; மேகம் தனது பேறாகவே வர்ஷிக்கும் -அநந்ய பிரயோஜனர்களாய் தங்கள் பேறாகவே பொழிவார்கள் –

10-மேகம் சில சமயங்களில் நாலு சிறு துளிகளைப் பெய்து போகும் -மற்றும் சில சமயங்களில்
கடல் வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்பட நீர் முகந்து ஏறி எங்கும் குடவாய்ப் பட நின்று மழை பொழியும் -தாழாதே சார்ங்கம் உத்தைத்த சர மழை போல் -என்கிறபடியே கனக்கப் பொழியும்
ஆச்சார்யர்களும் அப்படியே -செவி வழியே நாலு வார்த்தைகளை உபதேசிப்பதும் -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் போலே வாங்கக் குடம் நிறைய பொழிவதும் உண்டு –

11-மேகம் சில இடங்களில் சில காலங்களில் பெய்யும் நீர் முத்தாகி மேன்மை பெரும் -ஆசார்யர்கள் சில வ்யக்தி விசேஷங்களில் உபதேசிக்கும் அர்த்த விசேஷங்கள் முத்துப் போலே பிறருக்கும் அணி கலமாய் னிருந்து அனர்கமாய் இருக்கும் –

12-மேகம் பெய்த நீர் நதிகள் குளங்கள் ஏரிகள் கிணறுகள் சேர்ந்து அனைவருக்கும் உப ஜீவ்யமாயும் மற்றை இடங்களில் தேங்கினால் வாய் வைக்க ஒண்ணாதாயும் இருக்கும்
ஆசார்யர்கள் உபதேசமும் நல்ல ஞானத் துறைகளிலே சேர்ந்தால் உபதேச பரம்பரையில் வந்து உப ஜீவ்யமாகும் -அநாதிகாரிகள் பக்கலிலே தேங்கினால் அப்ரயோஜனமாய் ஒழியும் –

13- எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -பயிர்களால் ப்ரதீஷிகப் பட்டு அவற்றை வாழ்விக்கும்
நீர்காலத்து எறிக்கிலம் பழ விலை போல் வீழ்வேனை -என்கிறபடியே எறிக்கிலை போன்றவற்றை மாளச் செய்யும் –
ஆச்சார்யர்களும் அப்படியே -நாட்டில் நீசச் சமயங்கள் மாண்டன -நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது -தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது -என்பரே —

14–குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே -மேக விடு தூது -இராமானுசனையே ஆண்டாள் தூது விடுகிறாள்
1-மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் –மேலாப்பு மேல்கட்டு விதானம் -விசித்திர வர்ணங்கள் -கொண்டதாய் இருக்கும் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -ஸ்ருதிகள் நான்கும் -எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் -சகல சாஸ்திர விஜ்ஞானமே நாநா வித வர்ணம் –
சுதர்சன சகத்தில் சுதர்சன ஜ்வாலையே விதானம் என்பர் -அடையார் காமத் தலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும் படையோடு –இராமானுச முனி யாயின இந்நிலத்தே –என்றபடி -சேஷாவதாரத்வம் பிரசித்தம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீர் அரவணை -திரு மழிசைப் பிரான் –
2-மா முத்த நீர் சொரியும் நவ ரத்னங்களை சொரிந்த -ஸ்ரீ பாஷ்யம் –வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ கீதா பாஷ்யம் -நித்யம் என்கிற பகவத் ஆராதன பிரயோகம் -சரணாகதி கத்யம் -ஸ்ரீ ரெங்க கத்யம் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் -செமவைப்பான நிதிகள்
எம்பெருமானின் ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் சிஷ்யர் வர்க்கங்களுக்கு வர்ஷித்தவர் என்றுமாம் –
3-அளியத்த -மேகங்காள் -தயையுடைய-கிருபா மாத்ர பிரசன்னாசார்யர் இவர் என்றே பிரசித்தம் -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்குமே இவை உள்ளது என்பரே –
4- மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் -மின்னல் தோன்றப் பெறாத மேகம் பொழியாது -மின்னல் உள்ள போது கனத்த வர்ஷம் அணித்து என்று தோற்றுமே
எப்போதும் அர்த்தங்களை வர்ஷித்துக் கொண்டே இருக்கும் எம்பெருமானரையே இவ்வாறு சொல்லிற்று
ஆசை உடையோர்க்கு எல்லாம் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்
அன்றிக்கே ஆகத்து மின் எழுகின்ற யஜ்ஞ ஸூ த்ரம் விளங்கா நிற்கப் பெற்ற திருமார்பம் -இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே
மின் எழுகின்ற காஷாய சோபையைச் சொல்லிற்றாகவும்
5-வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் –வான் பரம பதம் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே —
அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ச்யதே –பரம பதத்தை தமக்கும் தம் அடியார்க்கும் உரித்தாகப் பெற்றுக் கொண்டு கிளர்ந்து எழுந்த எம்பெருமானாரே —
சோயம் ராமானுஜ முனி ரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத -என்றபடியுமாம் –
6-சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் -யாதவ பிரகாசரது சலம் கபடத்தைக் கொண்டு -யாத்ரை வழியில் தெரிந்து கொண்டு -கிளர்ந்து எழுந்த ஸ்வாமியே
தேவப் பெருமாளுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் தீர்த்தம் கொடுத்து விடாய் தீர்த்ததால் முகிலே
திருக் கோட்டியூர் நம்பி பக்கலிலே கபடமாக சொல்லி கோபுரத்தின் மேலே கிளர்ந்து எழுந்து வர்ஷித்த படியாகவுமாம்
7-சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் எம்பெருமான் சம்பந்தம் பெற்ற எம்பெருமானாரே —
மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் -நம் ஆழ்வார் சம்பந்தம் பெற்ற எம்பெருமானாரே என்றுமாம்
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் இராமானுசன் -பராங்குச பாத பக்தம் இராமானுஜம்
8-கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் -சம்சார மழை காலத்தில் தோன்றிய எம்பெருமானாரே –
9-மதயானை போல் எழுந்த –பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் —

————————————————————————————————————

ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

எம்பெருமானுக்கு-மணி/மேகம் /நீர்/ யானை/பொன் /தெய்வ வண்டு /நிதி/சிம்ஹம் –சாம்யம்- பல படிகளில் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்–

June 18, 2015

மணியை வானவர் கண்ணனை –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –
மாலே மணி வண்ணா –
சாம்யம் ரத்னத்துக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளில் –

1-உறங்காமை –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதா பஸ்யந்தி சூரய
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே-
2-தலைப்பில் முடிந்து ஆளலாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் பாய சீருடை
பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் –
3-மணி ரத்னம் மலையிலும் கடலில் இருக்குமே
ஒண் குறவர் மால் யானை பேர வெறிந்த பெரு மணியை -முதல் திருவந்தாதி
மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் –
4-செருக்கு பண்ணப் பண்ணும்
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மாறுளதோ இம் மண்ணின் மிசையே
எனக்கு என் இனி வேண்டுவதே
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-
5- தன்னை உடையாரை லோகம் எல்லாம் அனுவர்த்திக்கப் படும்படி பண்ணுபவன்-
6-இடைத் தரகர் கொண்டே ரத்னம் கொள்ளுவார்
வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமான்
திருப் பாதம் பணிந்து
விபீஷண ஆழ்வான் -நிவேதயமாம் ஷிப்ரம் விபீஷனம் உபஸ்திதம் –

7-ரத்னம் சில சில ஆச்ரயங்களில் அதிக மதிப்பு பெரும்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் சிறப்பு பெறுவான் எம்பெருமானும்-

8-ரத்னம் ஒளியை விட்டு இராது -எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான் -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ-
அநு ஜனர் அநு ரூபரூப சேஷ்டா –இந்திரா -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அனந்யா ஹி மா சீதா பாஸ்கரேண பிரபா யதா
ரத்னங்களில் ஒளி உத்பூதமாயும் அநுத்பூதமாயும் இருப்பது போலே ஸ்பஷ்டமாயும் மறைந்தும் பிராட்டி இருப்பாள்
வாமன

கிருஷ்ணாஜிநேந சம் வ்ருண்வன் வாமனோ வஷசி ச்ரியம்-என்ற மறைந்து இருந்தாள்

9- ரத்னம் ஒளியால் மேன்மை பெரும் -திருவில்லா தேவரை தேறேல்மின் தேவு -ச்ரத்தயா அதேவ தேவத்வம் அஸ்நுதே –
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா —

10-ரத்னம் தன்னை இழந்தவனை கதறி அழப் பண்ணும் -பரதனும் விலலாபா சபா மத்யே -கதறி அழுதான்
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடா வரைத் தோல் தயரதன் புலம்பிய புலம்பல் பிரசித்தம்
பழுதே பல பகலும் போயின -என்று அஞ்சி அழுதார்கள்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே தைவத் தேவகி புலம்பலும் பிரசித்தம்
உன்னைக் காண்பான் அலப்பாய் நான் ஆகாயத்தை நோக்கி அழுவேன் –

11-ரத்னம் அதமன் மத்யமன் உத்தமன் கையில் பட்டு -அல்ப விலை உள்ள விலை ஸ்வயம் போக்கியம் ஆகும்
இச்சுவை யான் பொய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வைகுண்ட வாசே அபி ந அபிலாஷா
எனக்கு தேனே பாலே கண்ணாலே அமுதே
அநுபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணுபவர்கள் வியாபாரிகள் போலே
சூத்திர பலார்த்திகள் செம்படவன் போல்வார்

12-சேற்றிலே ரத்னம் இருந்தால் மதிப்பு அறியாமல் இருப்பார்கள் -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே
அவஜா நந்தி மாம்மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் –
மகா ஞானிகளோ எத்திறம் உரலினோடே இணைந்து ஏங்கி இருந்த எளிவே -பிறந்தவாறும் வளர்ந்த வாறும் என்று மோஹித்து இருப்பார்கள் –

13 க்ருத்ரிமான கல்லும் ரத்னம் பேரில் இருந்தால் வாசி அறிய மாட்டாதார்கள்
தேவதாந்த்ரங்களும் பகவான் என்று போலியாக ராஜச தாமசர்கள் பிரமிக்க சாத்விகர்கள் அடுப்பில் இட்ட கல்லோபாதி நினைப்பார்கள்

——————————————————————————————————————-

முகில் வண்ணன் -மேக வண்ணன் -ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்

1- மேகம் பெய்ய வேண்டும் இடம் வரை சென்று பொழியும்
எம்பெருமானும் -வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து –
-மண் மீது உழல்வாய் -கிருபா ரசம் பொழிய -வாழ உலகினில் பெய்திடுவான் –

2-மேகம் மின்னுள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –

3- மேகம் தான் மொண்ட இடத்திலும் பெய்யும் வசிஷ்டாதிகளுக்கும் பெருமாள் உபதேசித்த்காது பிரசித்தம்

4- மேகம் பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும்
கோவிந்தேதி யதாக்ரந்தம் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி-

5-மேகம் இன்ன பொது பெய்யும் என்று அறுதி இட ஒண்ணாது -வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே -திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான் அபேஷா நிரபெஷமாக தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்

6-வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று -வளைப்புக்காக கார்யம் செய்பவன் அல்லன் -பெண்ணுலாம் சடையினானும்
பிரமனும் காண்பான் எண்ணிலா ஊழி ஊநிழி தவம் செய்தார் வெள்கி நிற்க விண்ணுளார் வியப்ப ன்று ஆணைக்கு அன்று அருளை ஈந்தவன்

7-மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றி பெய்யும் -அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -வசிசிஷ்டர் சண்டாளன் வாசி இல்லாமல் அனுக்ரஹ சீலன்
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாலி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -நிர்விசெஷமாக அனைவருக்கும் அருளை பொழிபவன் –

8-மேகம் கர்ஜித்துப் போகும் ஆடம்பரம் இன்றியும் பொழியும் -குசேலருக்கு அருள் மலை பொழிந்தான் –

9–விராட பார்வை கால ஷேபம் கேட்க மேகம் வந்து நிற்கும் -பகவத் விஷய கால ஷேபத்துக்கு இவனும் வந்து நிற்பான் –
மா முனிகள் கால ஷேப கோஷ்டியில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சாதித்துன் கொண்டு வந்தானே –

10-மேகம் சுக்திகளில் பெய்து முத்தாகும் -அடியாருக்கு இன்பமாரியாகிய எம்பெருமான் உடைய கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
இடத்தே ப்ரவஹித்து மிக்க பயன் விளைத்து முத்தன்ன அருளிச் செயல்களையும் ஸ்ரீ வசன பூஷணாதிகளையும் பயக்கும்

11-மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் -இத்யாதிப் படியே தூது விடப் பெரும் -இவனும் இன்னார் தூதன் என நின்றான் என்றும்
கோதை வேல் ஐவர் க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் -என்ற பாண்டவ தூதன் என்று அழியாப் பெயர் பெற்றான்

12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும் -எருக்கிலை போல்வன வீழ்ந்து ஒழியும்-இவனும் பரித்ராணாயா சாது நாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் -என்று சோதி வாய் திறந்து அருளினானே-கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தாயார் மகிழ ஒன்னார் தளர –

13-மேகமானது -எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் வேறு புகல் இல்லாமல் –
எம்பெருமானும் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் -என்று சாதக வ்ருத்திகளான அனன்ய கதிகளால் ப்ரதீஷிக்கப் பட்டிருப்பன் –

14-மேகமானது விருப்பம் இல்லா விடிலும் கண்ணீர் விட்டாலும் வாளா நிற்கும்-ஸ்ரீ பரத ஆழ்வான் -ஏபிச் ச சசிவைஸ் சார்த்தம் சிரஸா யாசிதோ மயா-ப்ராதுச் சிஷ்யஸ்ய
தாஸஸ்ய பிரசாதம் கர்த்துமர்ஹசி-என்று பலருடன் கண்ணநீர் சித்ரகூடத்தில் விட்டாலும்
ச காமம் அநவாப்யைவ-என்னும்படி மநோ ரதம் நிறைவேறப் பெறாமல் மீண்டு போம்படி ஆயிற்று-

15-மேகம் கடலில் படிந்து அங்கு நின்றும் எழுந்து தோன்றி வர்ஷித்து விட்டு மீண்டும் கடலில் புகும் -எம்பெருமானும் அவதார கந்தமான திருப் பாற் கடலிலே படிந்து
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்களில் கிருபா ரசத்தை பொழிந்து மீண்டும் அங்கே புகுவான்
பின் துரக்கும் காற்று இழிந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே -பெரிய திருவந்தாதி

16-மேகம் தான் தோன்றின வாறே மயில்களை சிறகு விரித்து ஆடப் பண்ணும் -கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துல்லாதார் தம்மால் கருமம் என் சொல்லீர்-என்றபடியே தத் பஷ பாதிகளை எழுந்தும் பறந்தும் துள்ளப் பண்ணும் –

——————————————————————————–

கடல் வண்ணன் -விசேஷார்த்தம்
அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோததயே -கடலை நோக்கி கடல் பள்ளி கொண்டது போலே
கருணை யம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி –
பிரதிஜலதிதோ வேலாசய்யாம் -பட்டர் –

1-நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்றிவர் -பெரிய திரு மொழி -2-8-5-
கடல் மைநாகம் போன்ற மலைகளை கொண்டது போலே இவனும் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திரு மால் -மலை போன்ற திருத் தோள்களை உடையவன்
நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவமணி குயின்ற தொடு யணி யணிந்த ககனவிலிடு நீலே வெற்பு ஒத்து இருந்தனை -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
கடல் சிறந்த நவ மணிகளை உடைத்தால் போலே இவனும் குரு மா மணிப்பூண் -கௌச்துப மணியையும் -செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் –கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கள ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் -உடையவன்
கடல் லஷ்மி பிரஸூதிக்ருஹம் ஆகையாலே பெரிய பிராட்டியாருக்கு உறைவிடம் -இவனும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்
கடல் சங்கு தங்குமிடம் இவனும் வெள்ளை சுரி சங்கு ஏந்துமவன் –

2- கடல் முன்னீர் -எல்லா வற்றுக்கும் முன்னே உண்டான நீர் -அப ஏவ சசர்ஜ ஆதௌ-நன்மைப் புனல் பண்ணி -இவனும் முனைவன் மூ வுலகாளி யப்பன் –

3- கடல் முந்நீர்-ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர் ஆகிய மூன்று வகை பட்ட நீரையும் உடைத்தாய் இருக்கும்
எம்பெருமானுக்கும் ஸ்வா பாவிக கருணை ரசமும் -பிறர் படும் துயரைக் கண்டு தோன்றும் அருள் நீறு பிராட்டியால் தூண்டுவிக்கப் பட்டு பொழியும் அருள் நீரும் உண்டே –

4-கடல் சிறு மீன் திமிங்கலம் கிளிஞ்சல் மணி மாணிக்கம் அதம உத்தம விபாகம் இல்லாமல் தன பக்கம் இடம் கொடுத்து இருப்பது போலே
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் -என்றும் ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -என்றும்
பச்யாமி தேவான் தவ தேவ தேஹ -என்கிறபடியே சர்வ அபாஸ்ரயமாய் இருப்பான் –

5-கடல் சாவா மருந்தான அமிர்தத்தை தேவர்களுக்கு அளித்தது -எம்பெருமானும் உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் -என்றும்
தன்னைப் பெற்றேற்குத் தன வாய் அமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் -என்றபடி பேரன்புடையாருக்கு சாவா மருந்தான தனது வாயமுதைத் தந்து அருள்வான் –

6-கடல் அளவிட முடியாத ஆழம் -இவனும் சமுத்திர இவ காம்பீர்ய -கொள்ள மாளா இன்ப வெள்ளம் ஆகையாலே இதில் இழிவார்க்கு உள் ஆழம் காண்பது அரிது –

7-கடல் தன பக்கல் உள்ளதை மேகத்துக்கு கொடுக்கவும் செய்யும் மேகம் பொழிவதை தன்னிடமும் பெற்றுக் கொள்ளும்
எம்பெருமானும் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் -என்றும் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்கிரபடுயே கொடுக்கவும் செய்வான்
கரோமி யத் யத் சகலம் பிரச்னை நாராயணா யேதி சமர்ப்பயாமி -கொடுப்பவற்றை கொள்ளவும் வல்லவன் தத் குருஷ்வ மதர்ப்பணம் -என்பன்-

8-கடலுக்கு மழை நீரால் அதிசயம் இல்லை முகிலுக்கு ஆத்மலாபம் -எம்பெருமானுக்கு எவ்வளவு சமர்ப்பித்தாலும் அது போலே நாம் க்ருதார்த்தர்கள் ஆவது தவிர புதிதாக அவனுக்கு செல்வா நிறைவு இல்லை

9-கடல் நீர் நம் போல்வார் வாயில் புக மாட்டாது -துவர்க்கும் -ஆசாந்த சிந்தோ கும்பீ ஸூ நோ -என்றபடி குறு முனிவனுக்கு உணவாயிற்று -எம்பெருமானும் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றின நஞ்சு -சுவை அறிந்தாற்கு அமுதிலும் ஆற்ற இனியன் –எனக்குத் தேனே பாலே கண்ணாலே அமுதே திரு மால் இரும் சோலை கோனேயாகி-என்னும்படி பரம போக்யன்-

10-கடல் அஞ்சினார்க்கு புகலிடம் இந்த்ரன் இடத்து அஞ்சின மைநாக கிரிக்கு புகலிடமாக இருந்ததே -இவனும் அஞ்சினேற்கு அஞ்சேல் என்று காவி போல் வண்ணர் வந்து
என் கண்ணின் உள்ளே தோன்றினாரே -ஆர்த்த த்ராணா பராயணஸ் ச பகவான் நாராயணோ மே கதி –

11-கடல் நீர் மா முகில் வாய் மூலம் வந்தால் அன்றி யாருக்கும் உபஜீவிக்க ஒண்ணாது -எம்பெருமானும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திரு வாய் மூலம் வந்தால் அன்றி உபஜீவிக்கலாகான்
லஷ்மீ நாதாக்ய சிந்தௌ சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நாதாத்ரௌ அப்ய ஷிஞ்சத் -என்றும்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யமாமே –

12-கடல் குளிர்ந்தே பெரும்பாலும் இருந்தாலும் ஒரு புறத்தில் பாடபாக்னி பொங்கி இருக்கும் -எம்பெருமானே தண்ணளி வே வடிவாய் இருந்தாலும்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறக்கும் –

13–கடல் சந்த்ரணைக் கண்டால் பொங்கி கிளரும் -எம்பெருமானும் ஞானிகளைக் கண்டால் தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் என்னும்படி சத சதமாகப் பணைப்பன் –

14- நாம் கடல் கரையிலே நின்றே அனுபவிக்க முடியும் -நிலவர்களே உட்புகுந்து ரத்னங்களை கொணர்வர் -நம்பிள்ளை போல்வாரே அவஹாகித்து வேதாந்த விழுப் பொருள் நிதிகளை வாரிக் கொணர்ந்து நமக்கு அளிக்க வல்லவர்கள் –

15-கடல் விஷத்தையும் தந்தது அமுதத்தையும் தந்தது இவனும் பயக்ருத் பய நாசன –நல்குரவும் செல்வமும் நரகமும் சுவர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் இருப்பவன் -பட்டர் -பல மோஷண யோஸ் த்வயைவ ஜந்து க்ரியதே ரங்க நிதே -என்பர்

16-கடல் எத்தனை தரம் பார்த்தாலும் திருப்தி பெறாமல் அபூர்வ தர்சனமாய் இருக்கும் இவனும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –

17-கடலுக்கு நதிகள் மூலம் வரவும் மேகம் மூலம் செலவும் உண்டு -அர்ச்சாவதார உண்டியலில் வரவும் உண்டு செலவும் உண்டு

18-திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவார் -நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே வேண்டும் செல்வம் -எம்பெருமான் வழியே போவார்க்கு மஹார்த்தங்கள் கிட்டும்-

19-வானர வீரர்கள் கடலைக் கடந்து விட்டாலும் உள் ஆழம் அறியாதார் -அழுந்தின மந்தர மலைக்கே தெரியும் -நாம் அவனை ஸ்துதி செய்தாலும் அறியோம் ஆழ்வார்கள் மட்டுமே அறிவார்
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆரறிவார் –ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் ஒரு பொருளை யான் அறிந்த வாறு -என்பர் திரு மழிசைப் பிரான் —

20-கடல் கலங்காது கலங்கினாலும் சீக்கிரம் தெளியும்
சீற்றம் கொள்ளான் கொண்டாலும் அருள் சீக்கிரம் சுரக்கும் -சுக்ரீவ மகாராஜர் சமுத்திர ராஜன் நரகாசுரன் போல்வார் இடம் கண்டோம்-

21- அபரிச்சேத்யமான கடலும் குறு முனிவன் கையில் ஆசமனத்துக்கு போதும்படி அடங்கி இருந்தது -வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ -பகவத் விஷயம் ஆழ்வார்களுக்கு பரிச்சேத்யம் ஆயிற்று
நண்ணா அசுரர் நலிவெய்த நல்லவமரர் பொலிவெய்த எண்ணாதன்கள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி -திருவாய் -10-7-5-
ஆனந்தம் ஒன்றையே பேசி மீண்டதே வேதம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விரிவாக பேச ஒரு கிரந்தம் வேண்டுமே என்று எண்ண
திருவாய் மொழி திரு வவதரித்த பின்னர் இன்னம் எம்பெருமானுக்கு ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் வேண்டுமே என்று எண்ணம் படி ஆனதாம் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
அனைத்தும் ஆழ்வார் திரு வாக்கிலே அடங்கி விட்டன என்றே கருத்தாகும் –

22–கடல் சம்பந்த ஞானம் இல்லாத புல்லை வெளியே தள்ளும் -மகரம் போன்றவற்றை அங்கனம் தள்ளாது -அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-5-

23–கடல் கடக்க அரிதாயினும் நாவாயால் எளிதில்கடக்கலாம்
பாதாம் போஜ வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -முகுந்த மாலை -பத்துடை அடியவக்கு எளியவன் –

24-கடல் அருகே இருந்தாலும் தாக விடாய் தீர்க்க வேறு நீர் நிலை தேட்டமாய் இருக்கும் -சாச்த்ரன்களால் எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும் அர்ச்சையில் இழிந்தால் அன்றி ஆர்த்த சாந்தி இல்லை இ றே-

25–எவ்வளவு கார்ய நிர்பந்தங்கள் இருந்தாலும் பெரிய செல்வந்தர்களும் சிறிய நேரமாவது கடல் கரை சாராது இரார்கள்
பல காரியங்களை சுருக்கிக் கொண்டு ஒரு நாழிகை பொழுது யாவது பகவத் ஆராதனத்தில் அந்வயியாது இரார்கள் –

கடலில் அலை ஓயாது -அலம் புரிந்த நெடும் தடக்கையும் ஓயாது
கடல் கோஷித்துக் கொண்டே இருக்கும் -இவனும் ஏதத் வ்ரதம் மம–மோஷயிஷ்யாமி மாசுச -நமே மோகம் வசே பவேத் -இத்யாதிகளை சாதித்துக் கொண்டே இருப்பான்
கடல் ஒரு நாளும் வற்றாது -எம்பெருமானுக்கு நாஸ்தித்வம் உண்டாகாது
கடல் ஏறுவதும் வடிவதுமாய் இருக்கும் -இவனும் சேவை சாதிப்பதும் மறைவதுமாய் இருப்பான்
இப்படி பலவும் உண்டே –

———————————————————————————————————————————-

நீர் வண்ணன் எம்பெருமான் -நீருக்கும் அவனுக்கும் சாம்யம் பல படிகளில்

1-நீர் பள்ளத்திலே பாயும் –மேட்டில் ஏற்றுவது ஸ்ரமம்-ஜாதி முதலியவற்றால் குறைந்தார் இடம் எளிதாக செல்வான்
உயர்ந்தவர் என்று மார்பு நெறித்து இருந்தால் அணுக விரும்பான்
பாண்டவ தூதனாக விதுரர் திருமாளிகை சென்றவன் ஞானத்தால் உயர்ந்த பீஷ்மாச்சார்யர் -குலத்தால் சிறந்த த்ரோனாச்சார்யர் செல்வத்தால் சிறந்த துரியோதனை பொருட்டாக மதியாமல்
முன்னமே துயின்று அருளிய முதுபயோததியோ பன்னகாதிபப் பாயலோ பச்சை ஆலிலையோ சொன்ன நால்வகைச் சுருதியோ கருதி நீ எய்தற்கு எண்ண மாதவம் செய்தது இச் சிறு குடில் என்றான் -வில்லிபுத்தூரார் பாரதம் –

2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாதே -லோகோ பின்னருசி யாக இருந்தாலும் நீர் அனைவருக்கும் வேண்டுமே -அது போலேயும் எம்பெருமானும்

3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை -சூடு வந்தேறி -தண்ணளி இயற்கை -நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறக்கலாம் –

4- நீர் சுட்டாலும் ஆற்றுவதற்கு நீரே வேண்டும் -அவன் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும் -தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை –

5- நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரித்தாய் இருக்கும் -ஆண்டாள் சூடிக் களைந்த மாலையால் விலங்கிட்டு வைத்து
புஜிக்க நின்றான் -பாண்டவர்கட்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போக விடப் பெற்றான் –

6-நீர் மற்ற பண்டங்களை சமைக்க பயன்படும் தானாக குடிக்கவும் பயன்படும் -இவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் உண்டு –
எம்பெருமானைக் கொண்டு வேறு பிரயோஜனம் பெற விரும்புவாரும் ஸ்வயம் பிரயோஜனமாய் அவனையே பெற விரும்புவாரும் உண்டே –

7-அன்னம் காய் கனி வேர் கிழங்கு பால் பின்ற பிரதி நிதிகளை சஹிக்கும் -நீருக்கு நீரே வேணும் -எம்பெருமானும் அப்படியே
ஒரு நாள் காண வாராயே-அடியேன் தொழ வந்து அருளே
என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்
நீரை ஒருவராலும் விட முடியாது கர்ம ஞான பக்தி பரபக்தி இவற்றில் எத்தை விட்டு எத்தைப் பற்றினாலும் ஒருபடியாலும் விடத் தகாதவன் –

8-சோறு உண்ணும் போதும் நீர் வேண்டும் நீர் வேறு ஒன்றையும் அபேஷியாது-உபாயாந்தரங்களுக்கும் அவனே வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –

9-கொள்ளும் பாத்ரங்களின் தாரதம்யமே அன்றி நீர் தானே குறைய நில்லாது -கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்வார் குறையே அத்தனை –அல்ப ஐஸ்வர்யகைவல்யம் பெற்று போவாரும் உண்டே -எழுவார் விடை கொள்வார் -இத்யாதி

10-நீர் ஐவகைப் பட்டு இருக்கும் -பூமிக்கு உள்ளே கிடக்கும் நீர் –ஆவரண ஜலம்–பாற் கடல் நீர் -பெருக்காற்று நீர் –தடாக நீர்
அந்தர்யாமி –பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அர்ச்சை -பெருகாற்றிலே தேங்கின மடுக்கள் போலே கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி –

11- நீரானது ச்வத பரிசுத்தம் ஆயினும் ஆஸ்ரய வசத்தால் த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும் -அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமானும்
த்யாஜ்யன் -கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள ஸ்ரீ யபதியே உபாதேயன் –

12-தோண்டத் தோண்ட சுரக்கும் நீர் -இவனும் கொள்ள மாளா இன்ப வெள்ளம் -பேசப் பேச வளர்ந்திடுவன் -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் இருப்பன்

13-நீர் பரார்தமாயே இருக்கும் -தனக்கு என்று பிரயோஜனம் இல்லாமல் -பக்தாநாம் -என்றபடி எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும் –

14-நீர் தானே பெய்ய வேணும் -ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது -எம்பெருமானும் அப்படியே –

15-நீர் கடலில் இருந்து காளமேகம் வழியாக வந்தால் அன்றி உபஜீவிக்க உரியது ஆகாது -இவனும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆச்சார்யர் மூலமாக
வந்தே உபஜீவ்யன் ஆகிறான் -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆகும் –

16–சிறியார் பெரியார் விபாகம் இன்றி ஒரே துறையிலே படிந்து குடைந்து ஆடலாம் -எம்பெருமானும் -நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் –

17- நீர் சிறிய த்வாரம் கிடைத்தாலும் உட்புகுந்து விடும் -எம்பெருமானுக்கும் சிறிய வ்யாஜ்யமே போதும் -திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -இத்யாதி –

18-தீர்த்த விசேஷங்களில் நீருக்கு மஹாத்ம்யம் அதிகம் -எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயில் திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்-

19-தாபம் மிக்கவர்கள் முகத்தில் எறேட்டுவது முதுகிலே கொட்டுவது உள்ளில் இழிச்சுவது படிந்து குடைந்து ஆடுவது போலே
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்குவர்கள் எம்பெருமானையும் –

20-நீர் வேண்டியவன் நுனி நாக்கு நனைக்கக் கிடைத்தால் போதும் என்பான் -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள்மண்ணும் விண்ணும் மகிழவே -என்பர் –

21–நீரில் சிறிய கல்லும் அமிழும் தெப்ப மரமும் மிதக்கும் – எம்பெருமான் பக்கலிலும் ப்ரஹ்மாவாய் இழந்து போவதும் இடைச்சியாய் பெற்று விடுதலும் செய்யக் கானா நின்றோம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -என்றும்
மருவு நின் திரு நெற்றியில் சுட்டி யசை தர மணி வாயிடை முத்தம் தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ள முள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-என்றும்
பகவத் குணங்களில் சிறு மா மனிதர் அமிழ்தலும் ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க் கரையிலே நிற்றலும் உண்டே –

22-துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை-போக சாதனமாயும் ஸ்வயம் போக்யமாயும் நீர் இருக்கும் -ப்ராபகனும் பிராப்யனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே —

——————————————————————————————————————————
யானை -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும் சோலை மழகளிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் பட்டர் –

1- யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் பொழுது எல்லாம்அபூர்வ வஸ்துவாகவே -பரமானந்தமாகவே -இருக்கும்–இவனும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு
ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -பண்டு இவரைக் கண்டது எவ் ஊரில் -என்றும் சொல்லப் பண்ணுவன்

2-ஆனை உடைய காலைப் பற்றியே ஏற வேண்டும் -இவன் திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பர் –

3- தன்னைக் கட்ட கையிற்றை தானே எடுத்துக் கொடுக்கும்-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியாகிய கயிற்றை அவனே தந்து அருள்வான் -மதி நலம் அருளினான் –

4-நீராட்டிய உடனே அழுக்கோடு சேரும் -சுத்த சத்வமயன் -பரம பவித்ரன் -இருந்தும் வாத்சல்யத்தாலே பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் உடைய நம் போல்வாருடன் சேர்வான் –

5-பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் -பிராட்டியின் புருஷகாரம் இன்றி இவனும் வசப்படான் –

6-பாகனுடைய அனுமதி இன்றி தனது பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
என்றபடி பாகவதர்களை முன்னிட்டு புகாதாராய் அங்கீ கரித்து அருளான் –

7-யானையின் பாஷை பாகனுக்கு தெரியும் -எம்பெருமான் பாஷை திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும் ஸ்ரீ காஞ்சி பூர்ண மிஸ்ரேண ப்ரீதா சர்வ அபி பாஷிணே-

8-யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்காய் இருக்கும் -இவனும்
கனி கண்ணன் போகின்றான் –காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -என்றும்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்றும் சொல்வாருக்கு சர்வாத்மநா விதேயன் இ றே–

9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் -இவன் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தால் பல கோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம் –

10-யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அந்தக் கருமுகிலை எம்மான் தன்னை –

11-யானை இறந்த பின்பும் உதவும் -இவனும் தீர்த்தம் பிரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாக தனது சரிதைகளை உணர்த்தி உதவுகிறான் –

12-யானைக்கு ஒரு கையே உள்ளது -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை இ றே

13-பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் யானை -இவனும் அர்ச்சக பரிசாரகர்களுக்கும் தன்னை நிர்வஹிக்கும் வித்வான்களுக்கும் ஜீவன உஜ்ஜீவன ப்ரதன்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

——————————————————————————————————————————-
பொன்னப்பன் மணியப்பன் –பொன்னை மா மணியை –பொன்னானாய் –பொருது வருகின்ற பொன்னே —

1- ஹேம்நா கேதோ ந தாஹேந சேதேந கஷணேந வா ஏத தேவ மஹத் துக்கம் யத் குஞ்ஜா சமதோல நம் -தீயிலிட்டோ உரை கல்லிலோ உளியை இட்டோ வெட்டினாலும்
ஹிம்சையால் வருந்தாமல் ஒளி விஞ்சி காட்டும் குந்துமணிக்கு ஒப்பாக நிறுத்திப் பார்த்தால் குன்றிப் போகும்
இன்னார் தூதன் என நின்றான் -பாண்டவ தூதன் என்றதாலே தரிப்பு உண்டாயிற்று
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அவதார பிரயோஜனம் பெற்றோம் என்று ஒளி விஞ்சி இருப்பான்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அதி சூத்திர வஸ்துக்களோடு ஒப்பிட்டால் துக்க ஹேது
ஒட்டுரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —

2–பொன்னானது மண்ணில் கலந்து இருந்தாலும் சேற்றில் அழுந்திக் கிடந்தாலும் உள்ளே மாசு ஏறப் பெறாது -எம்பெருமானும் ஹேய வச்துக்களோடு கூடி இருந்தாலும் மாசறு சோதியனே யாவான் –

3-பொன்னின் மதிப்பிக்கு ஒரு நாளும் குறை இல்லை -பொன் நகைகளுக்கு எந்நாளும் ஏற்றம் உண்டே -இவன் மதிப்பிக்கு என்றுமே கொத்தை இல்லை-

————————————————————————————————————————————————————-

ஆயர் ஏறு –ஆயர்கள் போர் ஏறு —

1-வ்ருஷபத்துக்கு சரணங்கள் நான்கு -கால் செய்கை -சிருஷ்டி சம்ரஷணம் சம்ஹாரம் மோஷ பிரதானம் –வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் -ஜகத் உத்பவ ஸ்திதி பிரணாச சம்சார விமோசன –ஆளவந்தார் –

2 வ்ருஷபம்-வ்ருஷபத்துக்கும் தர்மத்துக்கும் பெயர் -கிருஷ்ணம் தர்மம் சநாதனம் –ராமோ விக்ரஹவான் தர்ம –தர்ம சம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன் தானே சேரம தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது —

4- உணவுக்கு பிறர் கை பார்த்து இருக்கும் வ்ருஷம் -அர்ச்சையில் அப்படியே விபவத்திலும் வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனன் —

5- வ்ருஷபம் -மாடு -அறிவிலி-இவனும் அவிஜ்ஞாதா -பக்தர்கள் அபராதங்கள் பற்றி அறிவில்லாதவன் குற்றங்களில் கண் செலுத்த மாட்டான் கண் செலுத்தினாலும் நற்றமாகவே கொள்வான்

5-வ்ருஷபம் கறுவுதல் உண்டானால் முட்டித் தள்ளும் -சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் –

6-வ்ருஷபம் காசு கொடுத்து வாங்கி விட்டால் நம் வீட்டையே நாடி வரும் -பக்திக்ரீதோ ஜநார்த்தனா-நம்மையே நாடி நிற்பன் -எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே -கனிவார் வீட்டின்பமாய் இருப்பவன் —

7-வ்ருஷபம் பிறருக்கு உழைப்பதையே இயல்பாக கொண்டது -இவனும் தூது செல்வதும் தேர் பாகனாய் நிற்பதுவும் மனிசர்க்காய் நாட்டில் பிறந்து படாதன பட்டும்
ந தே ரூபம் ந சாகாரோ நா யுதானி ந்சாச்பதம் ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வா பிரகாசசே -என்றும்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவிகிம் –

8- வ்ருஷபம் பாரத்தை வஹிக்கும் -இவனும் பக்தர் யோக ஷேமங்களை வஹிப்பன் -யோக ஷேமம் வஹாமி அஹம் -ஸ்ரீ கீதை-

9-வ்ருஷபம் எத்தனை அடி பட்டாலும் லஷ்யம் பண்ணாது -இவன் அடிபட்டதும் மகாபாரதம் இ றே–ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி –தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்து அடிப்ப -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –

10-வ்ருஷபம் நிலம் உழ சாதனம் -இவனும் பக்தி உழவன்-தம் த்வாம் ஷேமக்ருஷீவலம் ஹலதரம் -பட்டர் -பக்தி யாகிற பயிருக்கு நெஞ்சு விளை நிலம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் –

11- வ்ருஷபம் நல்ல வழிகளில் நன்றாக ஓடும் -சேற்று நிலம் கண்டால் தளரும் -இவனும் நன்னெறி நின்றவர்கள் பக்கல் விரைந்து கார்யம் செய்வான்
மாய வான் சேற்று அள்ளலில் படிந்தவர்கள் இடம் தளரச் தோன்ற இருப்பன் —

———————————————————————————————————————————————–

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு /வண்டுகளோ வம்மின் /அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று அவனையும் ஆச்சார்யர்களையும் வண்டாகச் சொல்வர்

1-வண்டு சாரக்ராஹி -போதில் கமல வன்னெஞ்சம் -பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -படிந்து சாரத்தை கவர்ந்து களிப்பவன்-

2-வண்டுக்கு பத்ம அபி நிவேசம் உண்டு இவனுக்கும் பத்ம அபி நிவேசம் உண்டு-பத்மம் தாமரெஐ பத்மை பிராட்டி

3-சாகா சஞ்சாரம் உடையது வண்டு சாகை கிளை வேதம்

4-வண்டு செவிக்கு இன்பமாக பாடும் -இவனும் அப்படியே குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க —

5-வண்டின் ஜாதி வேட்டு வேளாண் குளவி தன்னிறம் ஆக்கும் -இவனும் பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டான்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்கட்கு தம்மையே ஒக்க அருள் செய்வான்

6-வண்டு சோலைகளிலே சுழலும்
இவனும் வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை –ஆராமம் சூழ்ந்த அரங்கம் முதலான திருப்பதிகளிலே அனுரக்தன் –

7-வண்டு மதுவைப் பருக தென்னா என்று முரலும் -தென்னா தென் வென்று வண்டு முரல் -தொண்டர்களின் அமுத வாக்கைப் பருகி -தென்னா என்று தெகுடாடுகிறான்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித் தென்னா வென்னும் என் அம்மான் திருமால் இரும் சோலை யானே —

——————————————————————————————————–

நிதியே திரு நீர்மலை நிலத் தொத்தே –நிதியினை பவளத் தூணை –வைத்த மா நிதியம் மது சூதனன் –அந்தர் ஹிதோ நிதி ரசி த்வம்–ஸ்ரீ கூரத் ஆழ்வான் மயானி கூடம் அநபாய மகா நிதிம் த்வாம் -ஸ்ரீ தேசிகன் –

1-நிதி கண்ணுக்கு புலப்படாதபடி மறைந்து இருக்கும் -இவனும் கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்கு தோற்றாதபடி மறைந்து நிற்கும் –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -கரந்து எங்கும் பரந்துளன் –கட்கிலி யாய் இருப்பன்

2-மறைந்து கிடக்கும் நிதி சில பாக்ய சாலிகளுக்கே புலப்படும் -யானே தவம் செய்தேன் –கோர மா தவம் செய்தனன் கொல்அறியேன் -லப்யோசி புண்ய புருஷை இதரைர் துராப -ஸ்ரீ கூரத் ஆழ்வான்

3-ஒரு வகை சித்த அஞ்சனம் அணிதவர்களுக்கு கண்ணுக்கு புலப்படுவான் -பக்த்யா சாஸ்தராத் வேதமி ஜனார்த்தனம் -சஞ்சயன் த்ருஸ்தராஷ்திரன் இடம் காட்டினான் –

4-நிதியானது தன்னைப் படைத்தவர்களை -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகர்கள் ஆக்கி ஆனந்த பரம காஷ்டையில் கொண்டு வைக்கும் –
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே —

5- நவ நிதி பிரசித்தம் -நவ ஒன்பது புதியது -எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப் பொழுதைக்கு அப்பொழுது எனக்கு ஆராவமுதமே -நவ நவமாகத் தோற்றுவன்

6-நிதி எவ்வளவு அனுபவிக்கப் பட்டாலும் கொள்ளக் கொள்ள மாலாததாய் அஷய்யமாய் இருக்கும் -இவனும் எத்தனை ஊழி காலம் அனுபவிக்கப் பட்டாலும் மேன்மேலும் பெருகிச் செல்வன் –

—————————————————————————————-

யசோதை இளம் சிங்கம் –சிற்றாயர் சிங்கமே –

1- சிம்ஹம் மிருகங்களில் ராஜா -பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –இவனே ராஜாதி ராஜன் –

2-காடுகளிலே திரியும் -ப்ருஹ தாரண்யகம் போன்ற உபநிஷத்துக்களில் உலாவுவான் –

3-சிம்ஹம் மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் –தென்னன் உயர் பொருப்பு தெய்வ வடமலை திருவத்தி மலை களிலே உகந்து வசிப்பான்
அணி மணி சேர் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -நீளா துங்கஸ் தனம் -இத்யாதி –

4- சிம்ஹம் ஒருவராலும் அடக்க முடியாதே இருக்கும் -தன்னைப் பழக்கிக் கொண்டு இருக்கும் சிலருக்கு சர்வாத்மநா விதேயமாய் இருக்கும்
இவனும் பிறர்களுக்கு அறிய வித்தகன் -பத்துடை அடியவர்களுக்கு எளியவன்
சேநேயோ உபயோர் மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத -அர்ஜுனன் நியமிக்கும் படி பவ்யனாய் இருப்பன் –

5-கம்பீர நடை நடக்கும் -கானகம் படி உலாவி உலாவி கரும் சிறுக்கன் –சிம்ஹ விக்ராந்த மாமினம் நடைச் சக்ரவர்த்து பிடிக்கலாம் படி நடை அழகு உடையவன் –
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்திர ப்ராதரி கச்சதி -ஸ்ரீ சுமுத்ரா தேவி இளைய பெருமாளை நடை அழகில் கண் வையாமல் கைங்கர்யம் செய அறிவுறுத்தினாள்-

6-சிம்ஹம் மத யானைகளை அவலீலை யாக தொலைத்து விடும் -இவனும் மது கைடப ஹிரண்ய ஹிரண்யாஷ ராவண கும்பகர்ண ஹம்ச சிசுபாலாதிகளை -மத யானைகளை கிள்ளிக் களைந்தவன் —

—————————————————————————————–
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பாஷ்யம்–4-4— நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-நான்காம் பாதம் –முக்தி பாதம் —

June 17, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
———————————————————————————————————————————-
அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் -முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் -ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
———————————————————————————————————————————–
அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-
——————————
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை
பூர்வ பஷி புதிதான ரூபம் என்பர் -துக்கத்தின் நீக்கம் என்பதே புருஷார்த்தம் ஆகாது என்பர் -முக்தி பெரும் ஜீவனுக்கு அதிக சுக அனுபவம் உண்டு என்பதை சாந்தோக்யம் -2-8–ச ஏகோ ப்ராஹ்மண ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய ச அகா மஹதச்ய-
அது மட்டுமே ப்ரஹ்மத்தின் ஆனந்தம் -வேதங்களில் வல்ல அந்தணன் போகங்களுக்கு ஏங்குவது இல்லை என்றும்
தைத்ரியம் -2-7-ரசம் ஹி ஏவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்றும் சொல்லிற்றே
சித்தாந்தம் -ஸ்வரூபத்தின் விளக்கமே -ஸ்வேன ரூபேண –ரூப பதத்துக்கு ஸ்வ விசேஷணம்-ஞானம் விரிவு பெற்ற நிலையே -ஸ்வரூப விளக்கம் என்றது –
———————————————————
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்புண் காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டது என்று உறுதி படக் கூறியது –

யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதான ஜென்மாதி காரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண -சர்வஞ்ஞா -ஸத்ய சங்கல்ப
-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதி -பரம காருணிக -நிரஸ்த சமாப்யதிக சம்பாவன பர ப்ரஹ்மா பிதாவ பரம புருஷோஸ் தீதி சப்தாத் வகம்யதே

——————————————————————————-

4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்யகாம சத்ய சங்கல்ப -என்றது
பரமாத்மாவை குறித்து அல்ல ஜீவாத்மாவைக் குறித்தே -என்று ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-3-18-உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூப வஸ்து -விளக்கத்திலே பார்த்தோம்
இதனையே சௌநக பகவான் –யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரஷாள நாத்மணே
தோஷப்ரஹாணான் ந ஜ்ஞான மாத்மந க்ரியதா ததா
யதோதபா ந காணாத் க்ரியதே ந ஜலாம்பராம்
ஸ்வேத நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத
ததா ஹேய குணத் வம்சாத் அவ போத தயோ குணா
பிரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மா நோ ஹி தே -என்று
வைரம் அழுக்கு நீக்கி புதிதான ஒளி வராதே
கிணறு வெட்டி நீரை விட வேண்டாமே
தாழ்வான குணங்கள் நீங்க இயல்பான ஆத்மா ஸ்வரூபம் வெளிப்படும்
எனவே பரமாத்மாவை அடைந்து புதிதான ஸ்வரூபம் அடையாமல் தன்னுடைய ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –

———————————————————————————————————————
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் –முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————–

4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது -அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்
தைத்ரியம் -ஸோ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -முக்தன் சர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் இருந்து அனைத்து குணங்களையும் அனுபவிக்கிறான் –
முண்டக -3-1-3-யதா பச்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரேசம் புருஷம் ப்ரஹ்ம யோ நிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று
பொன் போன்ற அழகிய திருமேனி கொண்டவனும் இந்த உலகின் காரணமானவனும் -அனைத்தையும் நியமிப்பவனும் -புருஷன் என்று அழைக்கப் படுபவனும்
எப்போதும் அனைத்துக்கும் காரணமாக உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை முக்தாத்மா எப்பொழுது காண்கிறானோ அப்போதே தனது புண்ய பாபங்களை விடுகிறான்
தோஷம் அற்றவனாக பாபங்கள் இல்லாத உள்ளிட்ட எட்டு குணங்கள் நிறையப் பெற்றவனாக மாறுகிறான் -ப்ரஹ்மத்துடன் ஒற்றுமை அடைகிறான் –
ஸ்ரீ கீதை -14-2- இதம் ஜ்ஞானம் அபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா-சர்க்கே அபி நோபஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -என்று
இப்படிப்பட்ட அறிவைப் பெற்றவர்கள் என்னை ஒத்த குணங்களை அடைகின்றார்கள் -அவர்கள் சிருஷ்டியின் போது தோன்றுவதும் இல்லை -பிரளயத்தின் போது துன்பம் அடைவதும் இல்லை
இதனால் முக்தன் தன்னைத் தனிப் பட்டவ்வனாகவே அனுபவிக்கிறான் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல -முக்தன் தன்னைத் தனிப் படாதனாகவே அனுபவிக்கிறான் -தனது ஆத்மாவை உள்ளபடி காண்கிறான் -ப்ரஹ்மத்துடன் ஜீவனுக்கு உள்ள ஒற்றுமை
சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸி–அந்த பரம் பொருள் நீயே -என்றும் –
ப்ருஹத் -2-5-19-அயம் ஆத்மா ப்ரஹ்ம -இந்த ஆத்மா ப்ரஹ்மம் -என்றும்
-சாந்தோக்யம் -6-8-7-ஜகத் ஆத்ம்யமிதம் சர்வம் -அனைத்தும் ஆத்மாவை பிராமமாகக் கொண்டது -என்றும் –
சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம -இவை அனைத்தும் ப்ரஹ்மம் -என்றும்
அவனது பிரகாரமாகவே -அவனை ஆத்மா என்றும் தன்னை சரீரமாகவும் உணர்கிறான் –
சதபத ப்ரஹ்மணம்-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநி அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மா நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்ருத -என்று
எந்த பரம் பொருள் ஜீவனின் உள்ளும் புறமும் பரவி உள்ளானோ -யார் இப்படி உள்ளதை ஜீவன் அறியாமல் உள்ளானோ
யாருக்கு இந்த ஜீவன் சரீரமோ -யார் ஜீவனின் உள்ளேபுகுந்து நியமிக்கிறானோ-அழிவு இல்லாத அந்தப் பரம் பொருளே உனக்கு அந்தர்யாமி -என்றது
தைத்ரிய ஆனந்த வல்லி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்று அனைவருக்கும் ஆத்மாவாக உள்ள பரம் பொருள் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறான் -என்றும்
இதையே ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-4-22-அவஸ்தி தேரிதி காசக்ருதஸ்ந -என்று முன்பே பார்த்தோம் –
ஆகவே முக்தி பெற்றவன் -அஹம் பிரஹ்மாஸ்மி–நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன் என்ற எண்ணத்துடன்
ப்ரஹ்மத்தை விட்டு அகலாமல் அனுபவிக்கிறான்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-4-8-சங்கல்பா தேவதத் ஸ்ருதே -என்றும்
2-1-2-அதிகம் து பேத நிர்த்தேசாத் -என்றும் -3-4-8-அதிகோப தேசாத்-என்றும் ஜிவனைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறு பட்டவனே -என்று பார்த்தோம் –
—————————————————————————————————-
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்-ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
——————————————————————————————————————————
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-

ப்ரஹ்மத்தின் குணங்களால் என்று உபன்யாசம் காணப் படுவதால் -இப்படியே ஜைமினி கருதுகிறார்
பாவங்கள் அற்ற தன்மை போன்றவை உண்டு என்று தஹர வித்யை சொல்லும்
சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப -என்று சொல்லிற்று
உபன்யாசாதிப்ய -ஆதி சப்தம் -உண்ணுதல் போன்ற செயல்களை சொல்லும்
இத்தையே சாந்தோக்யம் -2-12-3-ஜஷன் கிரீடன் ரமமாண -உண்ணுதல் விளையாடுதல் மகிழ்தல் -என்றது
இதனால் அறிவு மாத்ரம் உள்ள ஸ்வரூபம் அல்ல -இதுவே ஜைமினி கருத்தாகும் –
—————————————————————————————————————
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —

குணங்கள் இல்லாத ஞான மயமாக -மட்டுமே ஓதப்படுதளால் -ஔடுலொமி இப்படியே கருதுகிறார் -பிரத்யகாத்மா ஜ்ஞான மாத்திர ஸ்வரூபம்
ப்ருஹத் -4-5-13-ச யதா சைந்தவகதந அனந்தர அபாஹ்ய க்ருத்சன ரசகன ஏவ ஏவம் வா அரே அயம் ஆத்மா அந்தர -அபாஹ்ய க்ருத்சன ப்ரஜ்ஞாநகந ஏவ -என்று
உப்புக்கட்டி எவ்ப்படி உள்ளும் புறமும் நடுவிலும் உப்பாகவே உள்ளது போன்றே ஆத்மாவும் ஞான மயமாகவே உள்ளும் புறமும் நடுவிலும் -என்றும்
ப்ருஹத் -2-4-12-விஜ்ஞான கந ஏவ -என்று ஆத்மா முழுவதும் ஞான மயமாகவே உள்ளது என்றும் சொல்லிற்றே
அபஹதபாப்மா மூலம் மாற்றம் மூப்பு வருத்தம் பசி தாகம் போன்றவை இல்லை என்றே சொல்லப்பட்டது ஒழிய எட்டு தன்மைகள் உண்டு என்று கூறப்பட வில்லை –
எனவே ஞான மாத்ரமே என்பர் ஔடுலோமி-
—————————————————————————
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

ஞான மாத்ரம் என்பதை ஏற்றாலும் மற்ற தன்மைகள் உள்ளதாகக் கொள்வதில் முரண்பாடு இல்லை -இப்படியே பாதராயணர் எண்ணுகிறார் -இதுவே வாக்யத்தில் கூறப்பட்டதாலும் முன்னரே உள்ளதாலும் –
இரண்டு பிரமாணாங்களும் சமம் -ஞான மாத்ரமே வேறு ஏதும் இல்லை என்பதை உபநிஷத் வாக்கியம் ஏற்க வில்லை
விஜ்ஞான கந ஏவ என்பதில் -ஏவ எனபது ஆத்மாவின் முழு பாகமும் ஜட தொடர்பு இல்லாமல் தானாகவே பிரகாசிக்க வல்லது என்றும்
இந்த பிரகாசத்தின் சிறிய பாகம் கூட மற்றவற்றை சார்ந்தது இல்லை என்பதையே காட்டும் -ச யதா என்று ப்ருஹத் -4-5-13- இத்தையே காட்டுகிறது –
—————————————————————-
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் -தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
————————————————————————————————-
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –

சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-ச யதி பித்ருலோகே காமோபவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால் அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது
சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –
————————————————————————————–
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

சர்வேஸ்வரனைத் தவிர முக்தன் யாருக்கும் வசப் பட்டவன் அல்லன் -மற்றவருக்கு வசப்பட்டால் சத்ய சங்கல்பத்வம் தடைப்படும்
கர்ம வசப்பட்டவன் அல்லன் என்பதை சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி -கட்டுப் படாதவன் -என்றது –
———————————————————————————–
அதிகரணம் -5-அபாவாதி கரணம் -முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது —
——————————————————————————————-
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –

சரீரம் போன்றவை முக்தாத்மாவுக்கு இல்லை என்று பாதரி கூறுகிறார் -வேதங்களும் இப்படியே ஒதுகின்றன –
சாந்தோக்யம் -8-12-1-ந ஹ வை ஸ சரீரச்ய சத் ப்ரியாப்ரியயோ அபஹதிரஸ்தி அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரியே ச்ப்ருசத -என்று
ஒருவன் சரீரத்துடன் இருந்தால் இவ்வுலக இன்ப துன்பங்கள் அவனை விட்டு விலகவில்லை -சரீரம் இல்லாமல் உள்ளவனை மட்டுமே இவை அண்டுவதில்லை -என்றது
மேலும் சாந்தோக்யம் -8-12-3-அஸ்மாத் சரீராத் சமுத்தாயா பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –என்று
இந்த சரீரத்தை விட்டு வெளியேறி பரஞ்சோதி யான பரமாத்வை முக்தன் அடைந்து தனது ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் -என்றதால் சரீரம் முக்தனுக்கு இல்லை என்பர் பூர்வ பஷி

———————————————————————————–

4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –

முக்தாத்மாவுக்கு சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் உண்டு என்று ஜைமினி கருதுகிறார் -அவன் பலவிதமாக உள்ளதால்
சாந்தோக்யம் -7-26-2- ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா சப்ததா -என்பதால் –
கர்மம் அடியாக இல்லை -கர்மம் தொடர்பற்ற சரீரத்தை முக்தாத்மா எடுத்துக் கொள்கிறான் என்கிறார்

———————————————————————————-

4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –

முன்பு இரண்டு பூர்வ பஷ ஸூ த்ரங்களுக்கு சித்தாந்த ஸூ த்ரம் இது
அத -என்றது சங்கல்பாத் ஏவ -சங்கல்பம் காரணமாக மட்டும் என்கிறது
இரண்டு வாக்யங்களும் பொருந்த இருவிதமாகவும் உள்ளான் என்கிறார்
த்வா தசாஹம் -என்ற யாகத்தில் உள்ள விதி வாக்கியம் போலே
த்வாதசாஹம் ருத்திகாமா உபேயு-என்று செழிப்பை விரும்புவர்கள் த்வா தசாஹம் யாகத்தை இயற்ற வேண்டும் என்றும்
த்வா தசா ஹே ந பிரஜாகாமம் யாஜயேத்-குழந்தையை விரும்பும் ஒருவனுக்கு த்வா தசாஹம் யாகம் செய்விக்க வேண்டும் என்று
முதல் வாக்கியம் மூலம்பல எஜமானர்கள் செய்யும் யாக ரூபமும் -இரண்டாம் வாக்கியம் மூலம் ஒரு யஜமான் செய்யும் யாக ரூபமும் கூறப் பட்டது போலே –
———————————————————————————————————————————————–
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —

முக்தன் எப்போது சர்வேஸ்வரனை அனுபவிக்கத் தக்க சரீரம் தேவை என்று எண்ணுகிறானோ அப்போது அந்த சரீரம் முக்தனால் படைக்கப் படுகிறது என்ற விதி முறை இல்லை என்கிறார்
சரீரம் இல்லை என்றால் கனவு போன்று பொருந்தும் -பரமாத்மா மூலமாகப் படைக்கப் பட்ட சரீரம் போன்றவை மூலமாக பகவத் அனுபவம் கிட்டும்
ப்ருஹத் -4-3-10-அத ரதான் ரத யோகன் பத ஸ்ருஜதே -என்று கனவு நிலையில் தேர்கள் மற்றும் அவற்றில் பூட்டப் பட்ட குதிரைகள் அந்த தேர்கள் செல்லும் வழிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் என்று தொடங்கி
அத வேசாந்தான் புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா -என்று
குளங்கள் நதிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் -காரணம் அவனே படைக்கிறான் என்றது
மேலும் கட உபநிஷத் -2-2-8-ய ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருத முச்யதே தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சன -என்று
யார் ஒருத்தன் அனைத்தும் உறங்கிய நிலையில் உள்ள போது தான் விழித்த படி இருந்து சங்கல்பித்து சங்கல்பித்துப் படிக்கிறானோ அவனை அமிர்தம் என்றே கூறுகின்றனர் -அவனையே அனைவரும் அண்டி உள்ளனர் -என்றது
அது போன்று தனது விளையாட்டுக்காகப் படைக்கப் பட்ட பித்ரு லோகம் போன்றவை மூலம் முக்டாத்மா அனுபவித்த படி உள்ளான் என்கிறது –
——————————————————————————————————————————–
4-4-14-பாவே ஜாக்ரவத் –

சரீரம் உள்ள போது விழித்து இருக்கும் ஜீவன் போன்றே – பித்ரு லோகம் போன்றவற்றை அனுபவிப்பது விழித்து இருக்கும் ஜீவன் போலே என்றும் –
தனது சங்கல்பத்தாலும் லீலைகள் அடங்கிய பித்ரு லோகத்தை தாங்களே சிருஷ்டித்து அனுபவிப்பார்கள்
ஆகவே இரண்டும் பொருந்தும்

————————————————————————–

4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி

ஆத்மா அணு அளவே என்பதால் பல சாரீரங்கள் உள்ளதாக எண்ணுவது எப்படி -பூர்வ பஷி
விளக்கு போன்று ஆத்மா பரவி இருப்பதால் -வேதம் இப்படியே கூறுவதால்
தர்ம பூத ஞானம் மூலம் பல சரீரங்களிலும் பரவலாமே
முக்தி பெறாத நிலையில் கர்ம வசத்தால் பல சரீரங்களில் பரவ முடியாது -முக்தனுக்கு தடை இல்லையே
ச்வேதாச்வதர -5-9- வாலாக்ர சதபாகச்ய சததா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவ ச விஜ்ஞேய ச சா நந்த்யாய கல்பதே-என்றது ஜீவனின் அணுத்வம் பற்றி நெல்லின் நுனியை நோர்ராக வெட்டி அதில் ஒரு பாகத்தை நூறாக்கி -அந்த அளவு என்றது –
பூர்வ பஷி -பர ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் உள்ளும் புறமும் உள்ள விஷயங்களை அறியாத ஞான ஸூன்யனாக உள்ளான் என்பர்
ப்ருஹத் -4-3-21-ப்ராஜ்ஞேந ஆத்மநா ஸம்பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சஞ வேதநாந்தரம் -என்று ஸ்ருதி உள்ளதால்
முக்தன் பல சரீரங்களில் வியாபித்து எங்கனம் செயல் படுவான் என்பர் –

———————————————————————————–

4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

அந்த ஸ்ருதி வாக்கியம் உறக்க நிலை அல்லது மரண நிலை இரண்டில் ஒன்றை மட்டும் கூறுகிறது
ஸ்வாப்யய -என்றது ஆழ்ந்த உறக்கம் –சம்பத்தி -மரணம் -சாந்தோக்யம் -6-8-6-வாங்க மனஸூ சம்பத்த்யதே –என்று தொடங்கி –தேஜ பரஸ்யாம் தேவதா யாம் -என்று மரணகாலத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்று முடித்தது –இந்த நிலைகளில் ஞானம் என்பதே கூறப்பட்டது
முக்தனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவும் முக்தி அற்றவனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவு அற்று போவதும் உண்டே
சாந்தோக்யம் -8-11-1-நாஹ கல்வயம் சம்ப்ரத்யாத்மானம் ஜா நாதி அயமஹமச்மீதி நோ ஏவேமா நி பூதா நி வி நாசமே வாபீதோ பவதி நாஹம் அத்ர போக்யம் பஸ்யாமி-என்றும்
முக்தாத்மாவைக் குறித்து -8-12-5-6- ஸ வா ஏஷ திவ்யேந சஷூஷா மனசைதான் காமான் பஸ்யன் ரமதே ய ஏதே ப்ரஹ்ம லோகே -என்று மோஷ நிலையில் அனைத்தும் அறிந்த தன்மை சொல்லப் பட்டது –
சாந்தோக்யம் -7-26-2-சர்வம் ஹ பச்ய பச்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்று முக்தன் அறியும் நிலையம்
ப்ருஹத் -2-4-12- ஏதேப்ய பூதேப்ய சமுத்தாய தான்யேவா நுவி நச்யதி-ஞானச் சுருக்கம் அடைந்து எதனையும் காண்பதில்லை -என்றது –
———————————————————————————————————————————————————–
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன –
———————————————————————————————————————
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —

நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும் சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும் சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே
இன்னும் அநேக ஸ்ருதி வாக்யங்கள் -சாந்தோக்யம் -6-2-2/3-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐஷத பஹூச்யாம் பிரஜா யேயேதி தத் தேஜ அஸ்ருஜத-என்றும்
ப்ருஹத் -1-4-11-ப்ரஹ்ம வா இதம் ஏவம் ஏவ அக்ர ஆஸீத் தத் ஏகம் சன்ன வ்யபவத் தச்ச்ரேயோ ரூபமத்ய ஸ்ருஜத ஷத்ரம் யான்யேதானி தேவத்ரா ஷத்ராணீந்த்ரோ வருண சோமோ ருத்ர பர்ஜன்யோ யமோ ம்ருத்யு ரிசாந–என்றும்
ஐ தரேயம் -1-1/2–ஆத்ம வா இதம் ஏக ஏவ அத்ர ஆஸீத் நாந்யத் கிஞ்சன மிஷத் ச ஈஷத லோகாந்து ஸ்ருஜ இதி ச இமான் லோகா நஸ்ருஜத -என்றும்
மஹா நாராயண உபநிஷத் ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந நேமே த்யாவா ப்ருதிவீ ந நஷத்ராணீ ந ஆப ந அக்னீ ந சோம ந ஸூ ர்ய ச ஏகாகீ ந ரமதே தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய ஏகா கன்யா தசேந்த்ரியாணி -என்றும்
சதபத ப்ராஹ்மணம் -14-6-7-7-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர -என்றும் -14-7-7-30-ய ஆத்மநி திஷ்டன் -என்றும் பரம் பொருளுக்கே என்றது –

——————————————————————————————————————————————————————-

2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே

முக்தனுக்கு நான்முகன் போன்றவர்களின் உலக போகங்களும் கூறப்பட்டதே என்பதால் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உண்டு எனப்பார் பூர்வ பஷி
அப்படி அல்ல –
சாந்தோக்யம் -7-25-2-ஸ ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்று எங்கும் சஞ்சரிக்கலாம் என்றும்
தைத்ரியம் -3-10-5-இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன் -என்று விரும்பிய லோகங்களில் விரும்பிய உருவம் எடுக்கலாம் என்றதே என்பர்
அப்படி அல்ல கர்ம தொடர்பு நீங்கியதால் தடைபடாத ஞானம் கொண்ட முக்தனுக்கு அனைத்து செல்வங்களும் அனுபவிக்கக் கிட்டும் என்பதே கருத்து
ஜகத் வியாபாரம் போன்றவை இல்லாமல் இருத்தலே இவனது ஐஸ்வர்யம் என்றும் ஜகத் வியாபாரம் இல்லை என்றும் தெளிவாகிறது –
———————————————————————————————————————–

2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-

மாற்றங்கள் உள்ள அல்ப இன்பம் அனுபவிக்கிறான் என்றால் முக்தனின் செல்வமும் அல்பம் என்றது ஆகுமோ என்னில் மாற்றம் இல்லாத பர ப்ரஹ்மத்தையும் அனுபவிக்கிறான் என்கிறது
தைத்ரியம் -2-7-யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே அநிக்ருதே அநிலயநே அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கதோ பவதி -என்றும்
ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி என்றும்
கட தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்றும்
சாந்தோக்யம் -7-25-2- சர்வேஷூ லோகேஷூ காமசார -என்றும்
அனைத்து செல்வங்களுடன் கூடிய பர ப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பொழுது அனைத்தையும் அனுபவிப்பதாகவே கூறப்பட்டது
இதனை விடுத்து ஜகத் வியாபாரம் போன்ற எதுவும் அங்கெ கூறப் பட வில்லையே

—————————————————————————————-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-

ஜகத் வியாபாரம் பரம புருஷனுக்கே உரியவை என்று ஸ்ருதிகள் கூறுமே
தைத்ரியம் -2-8- பீஷாச்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூ ர்ய பீஷாஹ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர்தாவதி பஞ்சமா இதி -என்றும்
ப்ருஹத் -3-8-9-ஏதஸ்ய வா அஷரச்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்
ப்ருஹத் -2-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேதுர்விதரண ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய -என்றும்
ஸ்ரீ கீதை -9-10-மாயத்யஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நாகேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்
10-42-விஷ்டாப்யாஹமிதம் க்ருத்ச்னம் ஏகாம் சேன ஸ்திதோ ஜகத் -என்றும்
இது போலே முக்தனின் சங்கல்பம் ஆனந்தம் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் என்று ஸ்ருதிகள் முழங்கும்
தைத்ரியம் -2-7-ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்
ஸ்ரீ கீதை -14-26-மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத்ய ஏதான் ப்ரஹ்ம பூபாய கல்பதே -என்றும்
14-27-ப்ரஹ்மணோஹி பிரதிஷ்டாஹம் அம்ருதச்ய அவ்யயச்ய ச சாச்வதச்ய ச தர்மஸ்ய ஸூ கஸ்ய ஏகாந்தி கஸ்ய ச -என்றும்
அனைத்தும் அவன் இச்சை சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று

—————————————————————————————

4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச

ப்ரஹ்ம அனுபவம் என்னும் போகம் மூலமாகவே முக்தனுக்கு ப்ரஹ்மத்துடன் சாம்யம் கூறுவதால் ஜகத் வியாபாரம் இல்லாமல் உள்ளதே முக்தனின் ஐஸ்வர்யம் என்றதாயிற்று
ப்ரஹ்மத்துடன் கூடி இருந்தே முக்தன் அனுபவிக்கிறான் என்கிறது தைத்ரியம் -2-1- சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறது –

———————————————————————————-

4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

பரமாத்மாவாலே முக்தனின் ஐஸ்வர்யம் என்றால் அவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ -சம்சாரத்துக்கு தனது சங்கல்பத்தினால் அனுப்புவானோ என்னில்
அகில ஹேய ப்ரத்ய நீகன்
சமஸ்த கல்யாண குணகன்
ஆதி ஸ்வாமி எங்கும் வியாபித்து உள்ளவன் சத்ய சங்கல்பன்
சர்வஜ்ஞன் வாத்சல்யம் மிக்கவன் பரம காருணிகன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
தானே கர்ம பலன்களை நீக்கி தன்னை அனுபவிக்கப் பண்ணுபவன்
இவற்றை எல்லாம் ஸ்ருதி மூலமே அறிகிறோம்
அதே ஸ்ருதி மீண்டும் அனுப்புவது இல்லை என்கிறதே
சாந்தோக்யம் -8-12-1-ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே -என்றும்
ஸ்ரீ கீதை -8-15-மாமுபேத்ய புனர்ஜன்ம துக்காலய சாஸ்வதம் நாப் நுவந்தி மஹாத்மன சம்சித்திம் பரமாம் கதா -என்றும்
8-16-ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே -என்றும்
சொல்வதால் அவன் அனுப்ப மாட்டான்
பர ப்ரஹ்மத்தையே அனுபவிக்கும் சுருக்கம் இல்லாத ஞானம் கொண்ட முக்தன் வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்க மீண்டும் பிறப்பான் என்ற அச்சம் தேவை இல்லை
தனக்கு மிகவும் பிரியமான ஞானி ஸ்ரீ கீதை -7-17-ப்ரியோ ஹி ஜ்ஞாநின அத்யர்த்தம் அஹம் ச ச மம்ப்ரிய -என்றும்
‘7-18-உதாராஸ் சர்வே ஏதைவி ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் -என்றும்
7-19- பஹூ நாம் ஜன்மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாஸூதேவஸ் சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லப
இப்படி கிடைப்பதற்கு மிகவும் அரியவன் நான் விடுவேனோ
ஸ்ரீ பாஷ்யம் நியமிக்கப் படுவதால் இரண்டு தடவை -அநாவ்ருத்தி சப்தாத் –அநாவ்ருத்தி சப்தாத் —

——————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–4-3— நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-மூன்றாம் பாதம் –கதி பாதம் —

June 16, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூப

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் -சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் -அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————
அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
—————————————————————————————————————-
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

அர்ச்சிராதி கதி மூலமே -அதற்கே பிரசித்தம் உள்ளது -சாந்தோக்யம் -4-15-5/6-
அத யது ச ஏவ அஸ்மின் சவ்யம் குர்வந்தி யது ச ந அர்ச்சிஷமேவ அஹ-அன்ஹ -அபூர்யமாண பஷம் அபூர்யமாண பஷாத் யான் ஷடுதங்நேதி மாசாம்ஸ்தான்
மாசேப்ய-சம்வத்சரம் சம்வத்சரான் ஆதித்யம் ஆதிதான் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் தத்புருஷோ அமாநவ
ச ஏதான் ப்ரஹ்ம கமயதி ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமா நா இமம் மா நவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே -என்கிறது
இதே உபநிஷத்தில் எட்டாவது ப்ரபாடகத்தில் -8-6-5-அத ஏதைரேவ ரச்மிபி ஊர்த்வம் ஆக்ரமதே -என்று சூர்யா கிரணங்கள் மூலமாகவே கிளம்புகிறான் என்கிறது –
கௌஷீ தகீ -1-3- ச ஏதம் தேவயாநம் பந்தா நம் ஆபத்ய அக்னி லோகம் ஆகச்சி ச வாயு லோகம் ச வருண லோகம் ச ஆதித்ய லோகம் ச இந்திர லோகம் ச பிரஜாபதி லோகம் ச ப்ரஹ்ம லோகம் -என்கிறது
ப்ருஹதாரண்யகம் -6-2-15-ய ஏவமேவ விது-ஏ ச கிமே அரண்யே ஸ்ரத்தாம் சத்யம் உபாஸ்தே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹ –
அஹ்ந ஆபூர்யமாண பஷம் ஆபூர்யமாண பஷாத் யான் ஷண்மாசான் உதங் ஆதித்ய ஏதி மாசேப்ய தேவலோகம் தேவ லோகாத்
ஆதித்யம் ஆதித்யாத் வைத்யுதம் வைத்யுதாத் புருஷோ மானச ச ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -என்றும்
5-10-1-யதா வை புருஷ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமா கச்சதி தஸ்மை ச விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வம் ஆக்ரமதே ச ஆதித்யமாகச்சதி
தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ஆடம்பரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே சந்த்ரமசம் ஆகச்சதி தஸ்மை ச தத்த விஜிஹீதே யதா துந்துபே கம் -என்கிறது
இப்படி அனைத்து இடங்களிலும் அர்ச்சிராதி கதி பிரசித்தம் -சில இடங்களில் கூட்டியும் குறித்தும் சொல்லப் பட்டாலும் அர்ச்சிராதி கதி அக்னி சூர்யன் போன்றவை ஓன்று பொஎ படிப்படுகிறது –
————————————————————————————————–
அதிகரணம் -2-வாய்வதிகரணம் -சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது
————————————————–
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும் ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது
வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது
சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் -தேவ லோகம் என்பதம் வாய்வக் குறிக்கும்
வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும் யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ -வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-
—————————————————————————————–
அதிகரணம் 3-வருணாதி கரணம் – தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
—————————————————————
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் -கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது
ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல்
வருணன் வாயு வின் பின்னாலா ம்ன்னளின் பின்னாலா
மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் த்டர்பு உள்ளதால்
அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் -அமானவனுக்கும் ப்ரஹ்மதுக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –
—————————————————————————————————————
அதிகரணம் -4-ஆதி வாஹாதி கரணம் -அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-

இவர்கள் ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்-இப்படியாக ப்ரஹ்மத்தால் நியமிக்கப் பட்டவர்களே அடையாளங்கள் உண்டே -அதி வஹ -அழைத்து செல்பவர்கள்
சாந்தோக்யம் -4-15-5-/5-10-2-தத் புருஷ அமானவன் ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி -இறுதியில் சொன்னதால் முன்பே கூறப்பட்டவர்களும் ஆதி வாஹர்கள் என்றே கொள்ள வேண்டும்
அர்ச்சிஸ் பதங்கள் அபிமான தேவதைகளையே குறிக்கும் மின்னலுக்கு பின் படிக்கப் பட்ட வருணன் இந்த்ரன் பிரஜாபதிகளை விட்டு
வித்யுத் புருஷன் மட்டும் என்பர் பூர்வ பஷி -சித்தாந்தம் அப்படி அல்ல

—————————————————————-

4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

வருணன் உள்ளிட்டவர்கள் அமாநவ புருஷனுக்கு இந்த பணியில் உதவி செய்கிறார்கள் –
———————————————————————————————————————————————————
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது –
—————————————————–
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே

ஹிரண்ய கர்ப்பனான நான்முகனை உபாசிப்பவர்களையே -என்பர் பூர்வ பஷி -பரிபூர்ணான ப்ரஹ்ம உபாசகனுக்கு ஒரு இடம் தேடி செல்ல வேண்டியது இல்லையே எங்கும் உளன் ஆதலால்
எனவே கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாசிப்பவர்களையே அமானவன் கூட்டிச் செல்கிறார்கள் என்பர் –
———————————————————————————–
4-3-7- விசேஷி தத்வாத் ச

ப்ருஹத் -6-2-15-புருஷ மானஸ ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -ப்ரஹ்ம லோகம் அழைத்து செல்கிறான் என்பர்
சாந்தோக்யம் -8-14-1-ப்ரஜாபதே சபாம் வேச்ம ப்ரபத்யே -பிரஜாபதியின் அரச சபையை அடைகிறேன் -என்பர்
அப்படி ஆகில் -சாந்தோக்யம் 4-15-5/5-10-2-தத்புருஷ அமாநவ ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி -என்றது பொருந்தாதே
ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம் பொருந்தாதே -ப்ரஹ்மாணம் கமயதி என்று அன்றோ இருக்க வேண்டும் –

——————————————————————————–

4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –

நெருக்கமாக உள்ளவன் என்பதால் இப்படியே கூறப்படுகிறது
சாந்தோக்யம் -6-18-யோ ப்ரஹ்மாணம் விததாதி -பிரமனை யார் படைக்கின்றானோ
சாந்தோக்யம் -4-15-6-ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதே ந பிரதிபத்யமா நா இமம் மானவமவர்த்ததம் நாவர்த்தந்தே -என்றும்
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-/தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி -என்றும் திரும்புதல் இல்லை என்றதே
ஆனால் ஸ்ரீ கீதை8-16- -ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன -என்று நான்முகன் இருப்பிடம் வரை சென்ற அனைத்தும் திரும்புகின்றன என்றதே
இரண்டு பரார்த்தங்களின் முடிவில் நான்முகனுக்கும் முடிவு உண்டே

——————————————————————————–

4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —

ப்ரஹ்ம லோகம் நான்முகன் அழியும் போது பாசகன் அங்கு இருந்து பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது
மஹா நாராயண உபநிஷத் -12-3-தே ப்ரஹ்மலோகே து பராந்த காலே பராம்ருதாத் பரிமுச்யந்தி சர்வே -என்றதே –

———————————————————————————
4-3-10-சம்ருதேச்ச

ச்ம்ருதியிலும் இவ்வாறே கூறப்படுகிறது -ஸ்ரீ கூர்ம புராணம் -12-269-ப்ரஹ்மணா சஹ தே சர்வே சம்ப்ராப்தே பிரதிசஞ்சரே பரஸ் யாந்தே க்ருதாத்மனா ப்ரவி சந்தி பரம் பதம் -என்கிறது
இப்படியாக பல ஸூத்ரங்களால் நான்முகனை உபாசிப்பவர்களையே அழைத்து செல்வதாக பாதரி என்னும் ஆச்சார்யர் உரைத்தார்
இனி ஜைமினி அடுத்த 3 ஸூத்ரங்களால் தனது கருத்தை உரைக்கிறார் –
————————————————————————————-
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்

பரம் பொருளை உபாசிப்பவர்களையே அழைத்துக் கொண்டு செல்வதாக ஜைமினி கூறுகிறார் -முக்கியமாக உள்ளதால்
பர ப்ரஹ்மம் எங்கும் இருந்த போதிலும் பரமபதம் சென்ற பின்னரே ப்ரஹ்ம ஞானிக்கு தனது ஸ்வரூபம் மறைக்கும் கர்மங்கள் அழியும்
அவித்யை நீங்கி ப்ரஹ்ம அனுபவம் ஏற்படும் -ப்ருஹத் -ப்ரஹ்ம லோகன் -என்றது ப்ரஹ்மமாக உள்ள லோகம் என்று பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
———————————————————————————————————
4-3-12-தர்ச நாத் ச —

ஸ்ருதியிலும் காணலாம் -சாந்தோக்யம் -8-3-4-ஏஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஞோதிரூப சம்பந்தய ஸ்வேண ரூபேண அபி நிஷ்பத்யதே
நான்முகனை அடைதல் தள்ளப் பட்டது
————————————————————————————————————————
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —

சாந்தோக்யம் -8-14-1-யசோஹம் பவாமி ப்ரஹ்மணாநாம்-அனைத்துக்கும் ஆத்மாவாக பரமாத்மா உள்ளதாக எண்ணுவதால் அவித்யை நீங்கப் பெற்று இந்த எண்ணம் நிலைக்கப் பெற்று உள்ளான் –
சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூயபாபம் சந்திர இவராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம் அக்ருதம் க்ருத்தாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றது
நித்தியமான பர ப்ரஹ்ம லோகத்தையே -நான்முகனின் பிரமலோகம் அல்ல –
——————————————————————————————————————————————————————————
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச

ப்ரஹ்மத்தின் அவயவமான சித் மற்றும் அசித்துக்களை பிராப்யமாகக் கொண்டு உபாசிக்காதவர்களை அர்ச்சிராதி மார்க்கமாக அழைத்து செல்கின்றனர் -என்பர் பாதராயணர்
இவ்விதம் கூறாமல் மற்ற இரண்டு வாதங்களிலும் தோஷங்கள் உள்ளன -இதனையே தத்க்ரது நியாயம் கூறும்
பிரதீகம் -ப்ரஹ்மத்தின் அவயவம்சித் அசித் -போன்றவை -ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை என்கிறார்
பர ப்ரஹ்மத்தை உபாசிப்பவர்கள் அனைவருக்கும் மோஷ பிராப்தி இல்லையே -ஐஸ்வர்யம் கைவல்யம் வேண்டுவாரும் அவனையே உபாசிப்பதால்
ஜீவாத்மா ஸ்வரூபத்தை பஞ்சாக்னி வித்யையின் படி -பரமாத்மாவின் ஸ்வரூபமே ஆத்மா என்று உணர்ந்து -உபாசிப்பவர்களும் மோஷம் அடைகிறார்களே
அதாவது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மா -என்று உணர்ந்து
உபாசனையின் படியே பலம் என்பதையே தத் க்ரதுச்ச தத்க்ரது -என்கிறது –
——————————————————————————————————————
4-3-15-விசேஷம் ச தர்சயதி

ப்ரதீகங்களை உபாசிப்பவர்களுக்கு அல்ப பலமே கிட்டும் -சாந்தோக்யம் -7-1-5-யாவன் நாம் நோ கதம் தத்ர அஸ்ய காமசாரோ பவதி –
அளவான பலனே கீட்டும் அர்ச்சிராதி மார்க்கம் கிட்டாது
———————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–4-2— நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் —

June 16, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் -மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் -பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –ஸூத்ரங்கள்–தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
——————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம் -மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது

—————————————————————————————————————–

4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –

காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும் -சாந்தோக்யம் -6-8-6-அஸ்ய சோம்ய புருஷஸ்ய ப்ரயத வாங்மனஸி சம்பத்யதே மன ப்ராணே ப்ராணா தேஜஸி தேஜ ப்ரச்யாம் தேவதாயாம் -என்று
உடலை விட்டுக் கிளம்பும் உபாசகனின் வாக்கு இந்த்ரியம் மனதை அடைகிறது -மனம் பிராணனிலும் -பிராணன் தேஜச்சிலும்-தேஜஸ் உயர்ந்த வஸ்துவிலும் சேர்கின்றன -என்றது
இந்த்ரியமா– செயல்பாடா– சங்கை பூர்வ பஷி செயல்பாடு என்பர் -செயல்பாட்டுக்கு மனம் பிரதான கார்யம் என்பதால் –
அப்படி அல்ல ஸ்வரூபமே இணைகிறது -வாக் செயல்பாட்டை இழந்த பின்னரும் மனம் தொடர்ந்து இயங்குவதைக் காண்கிறோம்
பூர்வ பஷி வாதம் போலே மனம் வாக் இந்த்ரிய காரணம் அல்ல எனவே லயிக்கிறது எனபது பொருந்தாது -சுருதி வாக்யத்தின் படி -சென்று சேருகிறது என்றே கொள்ள வேண்டும் –

————————————————————————————————————————————

4-2-1- அத ஏவ சர்வாணி அநு

ப்ரசன உபநிஷத் -3-9-தஸ்மாத் உபசாந்தா தேஜா புனர்பவம் இந்த்ரியை மனஸி சம்பத்ய மானை–உஷ்ணம் குறைந்து மனதுடன் இந்த்ரியங்கள் இணைந்து மறு பிறவி அடைகிறான் -என்கிறது

—————————————————————————————-

அதிகரணம் -2- மநோதிகரணம் -மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————–

4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

சாந்தோக்யம் -6-8-6- மன ப்ராணே சம்பத்யதே -என்பதால் முழுமையாக சேர்கின்றன செயல்பாடுகள் மட்டும் அல்ல –
இதற்கு பூர்வ பஷி -மனம் உபாதான காரணமாக உள்ள பிருத்வீ தத்தவத்தின் மூலமாக பிராணனின் உபதானக் காரணமான ஜல தத்துவத்தில் லயிக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும் என்பர்
சாந்தோக்யம் -6-5-4-அன்னமயம் ஹி சோம்ய மன -மனம் அன்னத்தால் ஆனது -என்றும்
6-2-4-தா அன்ன ம ஸ்ருஜந்த–அன்னத்தை நீர் உண்டாக்கியது -6-4-4-ஆபோ மய ப்ராணா – ஜல தத்வத்தில் இருந்து பிராணன் உண்டானது என்பர்
சித்தாந்தம் மனம் அன்னத்தால் போஷிக்கப் படுகிறது -பிராணன் ஜலத்தால் போஷிக்கப் படுகிறது என்று
வளர்க்கும் பொருள் அன்றி காரணப் பொருள் அல்ல
மனம் -அஹங்காரத்தின் மாறுபாடு என்றும் பிராணன் ஆகாசத்தின் மாறுபாடு என்றும் சொல்வர்
ஆக மனம் பிராணனுடன் சேர்க்கிறது என்பதே கருத்து –

————————————————————————–

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் –பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————

4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

ஜீவனுடன் பிராணன் ஒதுங்குகிறது –சாந்தோக்யம் -6-8-6-பிராணஸ் தேஜஸி-என்பதால் தேஜஸ் ஸில் ஒதுங்கும் என்பர் பூர்வ பஷி -அப்படி அல்ல
ப்ருஹத் -4-3-38-ஏவமேவ இமம் ஆத்மானம் அந்தகாலே சர்வே ப்ராணா அபி சமா யாந்தி -என்று
அரசனை வேலையாட்கள் பின் தொடர்வது போலே அனைத்து பிரானங்களும் ஜீவனை பின் தொடர்கின்றன –
இது போலே ப்ருஹத் -4-4-2-தம் உத்க்ராமந்தம் பிராண அநூதக்ரமாதி -என்று அந்திம காலத்தில் வெளிக் கிளம்பும் ஜீவனைத் தொடர்ந்து பிராணனும் கிளம்புகிறது
பிராணஸ் தேஜஸீ-மூலம் பிராணன் ஜீவன் உடன் சேர்ந்து கொண்டு அதன் பின்னர் தேஜஸ் ஸில் சேர்க்கிறது
யமுனை கங்கையில் சேர்ந்து கடலில் சேர்வது போலே

——————————————————————————————————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————————

4-2-5-பூதேஷு தச்ச்ருதே –

அனைத்து பூதங்களிலும் சேர்க்கிறது தேஜஸ் ஸில் மட்டும் இல்லை -ப்ருஹத் -4-4-5-ப்ருதிவீ மய ஆபோ மய தேஜோ மய –
இதன் படி ஜீவனுடன் கூடிய பிராணன் பஞ்ச பூதங்களின் கூட்டத்தில் சென்று சேர்க்கிறது –

————————————————————————-

4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

பூதங்கள் தனித் தனியே தங்கள் செயலைச் செய்யும் வலிமை அற்றவை –
சாந்தோக்யம் -6-3-2-3-அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி தாஸாம் த்ரிவிருத்தம் த்ரிவிருத்தம் எகைகாம் கரவாணி -என்று
ஜீவ சரீகனான என்னால் உள்ளே புகுந்து பெயர் மற்றும் சரீரம் அளிக்கப் படுகின்றன -அவற்றை மூன்று மூன்று என நான் சேர்க்கிறேன் -என்று
பஞ்சீ கரணம் செய்த பின்னரே இவற்றை அறியலாம் -இது போன்று ஸ்ரீ விஷ்ணு புராணமும்
நா நா வீர்யா ப்ருதக்பூதா தத தே சம்ஹதிம் விநா -நா சக்துவன் பிரஜா ஸ்ரஷ்டும் அசமாகம்ய க்ருத்சனச
சமேத்யே அந்யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா மஹதாத்யா விசேஷாந்தா ஹ்யண்டம் உத்பாதயந்தி தே -என்று
தேஜஸ் எனபது மற்ற பூதங்களுடன் ஒன்றாக உள்ள தேஜஸ் என்பதையே குறிப்பதாகக் கொண்டு பிராணன் அனைத்து பூதங்களுடன் சென்று ஒடுங்குவதாகவே கொள்ள வேண்டும் –
—————————————————————————————————————————————————–

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————

4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —

ப்ரஹ்ம ஞானிக்கு உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி -அவன் சரீரத்தில் உள்ள போதே மோஷம் என்பதை கட உபநிஷத் -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமா யேச்ய ஹ்ருதி ஸ்திதா –அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஸ்நுதே-என்று
அனைத்து ஆசைகளும் விலகின உடனே மோஷம் அடைகிறான் -என்பதால் -அப்படி அல்ல -நாடி வழியாகவே சென்று மோஷம் அடைகிறான் என்பதை
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ந ஹ்ருதயச்ய நாட்ய தாஸாம் மூர்த்தானம் அபி நி ஸ்ருதைகா தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி விஷ்வக் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றும்
ப்ருஹத் உபநிஷத் -நே ந பிரத்யோத நைஷ ஆத்மா நிஷ்காமதி சஷூஷோ வா மூர்த்நோ வான்யேப்யோ வா சரீர தேசேப்ய-என்பதால்
ப்ரஹ்ம ஞாநிக்குமூர்த்த்ன நாடி தலை மூலமும் மற்றவர்களுக்கு கண்கள் மற்ற தவாரங்கள் மூலமோ வெளிக் கிளம்புவதை உணர்த்தும்
அம்ருதோ இஹ பவதி -என்றது இந்த சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் இவனை விட்டு நீங்காமல் இருந்த போதிலும் புண்ய பாபங்கள் ஒட்டாத தன்மை மற்றும் அவற்றின் அழிவே அம்ருதத்வம் எனப்பட்டது
இத்தைக் கருத்தில் கொண்டே யதா சர்வே பிரமுச்யந்தே -அனைத்தும் நீங்கிய பின் என்றும் அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -இங்கேயே ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது –

—————————————————————————————————–

4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —

சம்சாரத்தில் உள்ள போதே மோஷம் -ப்ரஹ்மத்தை அடையும் வரையில் சம்சாரம் -அர்ச்சிராதி மார்க்கம் வழியாக ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த பின்னரே புருஷார்த்தம்
அதுவரை சரீரத்தின் தொடர்புள்ள சம்சாரம் நீடிக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே-என்றும்
8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம் அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றும் சொல்லிற்று –

————————————————————————————

4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –

ஸூ ஷ்ம சரீரம் தொடர்கிறது -அர்ச்சிராதி மார்க்கம் வலி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்
கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூ ஷ்ம சரீரம் உள்ளது -சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்

————————————————————————————-

4-2-10-நோப மர்த்தே ந அத

இந்த காரணங்களால் -கட -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமோ யேச்ய ஹ்ருதி ஸ்திதா அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -என்றது
பந்தங்கள் நீங்கி அதன் பின்னர் உண்டாகும் மோஷம் குறித்து ஏதும் கூற வில்லை

——————————————————————–

4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூ ஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால் ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –

————————————————————————–

4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —

ஞானி அல்லாதவனது உத்க்ராந்தியை ப்ருஹத் -4-4-2-ச ஏதா தேஜோ மாத்ரா சமப்யாததாநோ ஹ்ருதய மேவ அன்வக்ராமதி-என்று வாக்கு ஆத்மாவை அடைந்து ஆத்மா இதயத்தை அடைகிறது -என்றது
முன்னர் -4-4-1-தே ந பிரத்யோ தே ந ஆத்மா நிஷ்க்ராமதி தமுத்க்ராமந்தம் ப்ராணோ நுத்க்ராமதி -என்று
இதயத்தில் உள்ள த்வாரம் பிரகாசிக்கிறது -ப்ரஹ்மத்தால்பிரகாசம் பெற்ற த்வாரத்தைக் கொண்டு ஆத்மா வெளிக் கிளம்பும் போது பிராணனும் வெளிக் கிளம்பும் -என்றும்
இதை முடிக்கும் பொழுது -4-4-4-அந்யத் நவதரம் கல்யாண தரம் ரூபம் குருதே -என்று
பழைய பொன் மூலம் தட்டான் புது ஆபரணம் பண்ணுமா போலே ஆத்மா வேறு சரீரம் எடுக்கிறான் –
4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத்கிஞ்ச இஹ க்ரோத்யயம் தஸ்மாத் லோகாத் புன -ஏதி அஸ்மை லோகாய கர்மணே இது து காமாய மா ந –ஸ்வர்க்கம் அனுபவித்து திரும்புகிறான் என்றும்
4-4-6-அத ஆகாமயமா ந யோ அகாம நிஷ்காம அப்தகாம ஆத்மகாம ந தஸ்ய பிராண உத்க்ராமந்தி ப்ரஹ்மைவ சந் ப்ரஹ்மாப்யேதி–ப்ரஹ்ம ஞானிக்கி பிராணன் வெளிக் கிளம்புவது இல்லை
இது போன்று ஆத்மபாதர் என்பவர் யாஜ்ஞவல்க்யர் இடம் கேட்டு பெற்ற பதிலிலும் பிராணன்கள் போவது இல்லை இங்கேயே சேர்க்கப் படுகின்றன என்பர்
இது தவறான வாதம் -இங்கு பிராணன் ஜீவன் இடம் இருந்து வெளிக் கிளம்புவது இல்லை என்றே சொல்லப்பட்டது சாரீரத்தில் இருந்து பிராணன் வெளிக் கிளம்புவது பற்றி இங்கும் ஏதும் கூறப்பட வில்லை
ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பிரமத்தை அடைகிற வரை பிராணன் பிரிவது இல்லை என்பதையே
ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி என்றது –

———————————————————————————

4-2-13-ச்மர்யதே ச

ச்ம்ருதியிலும் இப்படியே உள்ளது -யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி -3-167-ஊர்த்வம் ஏக ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா ஸூ ர்ய மண்டலம் ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்யதேந யாதி பராம் கதிம்-என்றது

—————————————————————-

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் -தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————————–
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ–

பூத ஸூ ஷ்மங்கள் அனைத்தும் பரமாத்மாவுடனே சேருகின்றன – சாந்தோக்யம்-6-8-6-தேஜ பரஸ்யாம் தேவதாயாம்
இன்ப துன்பங்களால் வரும் களைப்பு உறங்கும் பொழுது போவது போலே சிருஷ்டி காலத்தில் அனுபவித்த இன்ப துன்பங்களின் களைப்பால்
இளைப்பாறும் பொருட்டு பிரளய காலத்தில் பரமாத்மாவிடம் சென்று மறைவது போன்று என்று கொள்ள வேண்டும்

———————————————————————————————-

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம் -பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

———————————————————————————–

4-2-15-அவிபாகோ வசநாத் —

பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -ஈபடியே கூறப்பட்டது -பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர் உபாதான காரணமாக பர பிரமம் என்பதால்
இது தவறு லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –

————————————————————————————

அதிகரணம் -8-ததோகோதி கரணம் -மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

———————————–

4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச -அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான ஸூ ஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்
இந்த சிறப்பான உத்க்ராந்தி கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ் ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது
மிகவும் நுண்ணியமான நாடி –
சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-

—————————————————————————————————————–
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது
——————————————————————————————————————
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் சூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் -இரவிலும் சூர்ய கிரணங்கள் உண்டே
நாடிகளுக்கும் சூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு -சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –
———————————————————————————————–
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
——————————————————————————————————————————————–
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

இரவில் மரணம் அடைந்தாள் மோஷம் இல்லை எனபது சரியல்ல -கர்மத்தின் சம்பந்தம் சரீரம் உள்ள வரையிலும் தான்
பூர்வ பஷி திவா ச சுக்ல பஷ ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பரசஸ்தா நி விபரீதம் து கர்ஹிதம் -என்றதே
அப்படி அல்ல -சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே -என்று
ப்ரஹ்ம ஞானிக்கு சரீரம் விடும் வரை மட்டுமே கால தாமதம் என்றதே-
———————————————————
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –
———————————————————————————-

4-2-19-அத ச அயநே அபி தஷிணே –

பூர்வ பஷி காட்டும் பிரமாணம் -மஹா நாராயண உபநிஷத் -25-1-அதயோ தஷிணே பிரமீயதே பித்ருணா மேவ மஹிமானம் கத்வா சந்திர மசஸ் சாயுஜ்யம் கச்சதி -என்றும்
ப்ருஹத் -6-2-16-யதா தத்பர்ய வௌதி-அது முடிந்த பின்னர் -5-10-5-அத ஏவமேவ அத்வானம் புநர் நிவர்த்தந்தே – சம்சார மண்டலத்துக்கே திரும்புகின்றனர்
மேலும் பீஷ்மர் போல்வார் உத்தராயண காலத்துக்கு காத்து இருந்தனரே என்பர்
இது தவறு சந்திர மண்டலம் செல்வது ஒய்வு எடுக்கவே -இத்தை மஹா நாராயண உபநிஷத் 24-2/25-1-தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமாநம் ஆப் நோதி-ஆகவே அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது –
ஸ்ரீ கீதை -8-23-யத்ர காலே த்வ நாவ்ருத்திம் ஆவ்ருத்திம் சைவ யோகிந ப்ரயாதா யாந்தி தம் காலம் வஷ்யாமி பரதர்ஷப -என்றும்
8-24-அக்னிர் ஜ்யோதி ரஹஸ் சுக்ல ஷண் மாஸா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா
8-25-தூமோ ராத்ரி ததா கிருஷ்ண ஷண் மாஸா தஷிணாயநம் தத்ர சந்த்ரமசம் ஜ்யோதி யோகீ ப்ராப்ய நிவர்த்ததே -என்றும்
8-26-சுக்ல கிருஷ்ணே கதீ ஹ்யதே ஜகதச் சாச்வதே மதே ஏகயா யாத்ய நாவ்ருத்திம் அன்யயா ஆவர்த்ததே புந-என்றும்
தஷிணா யானத்தில் மரணம் அடைந்தால் ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்பர் பூர்வ பஷி –

——————————————————————————————————-

4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

இவை யோகிகள் குறித்து தேவயான மற்றும் பித்ருயான மார்க்கங்கள் பற்றி உணர்த்தவே கூறப்பட்டன –
இத்தையே ஸ்ரீ கீதையில் -8-26-நை தே ஸ்ருதீ பார்த்தஜாநத் யோகீ முஹ்யதி கச்சன தஸ்மாத் சர்வேஷூ காலேஷூ யோகயுக்தோ பாவர்ஜுனா-என்று
யோகிகள் மயங்க மாட்டார்கள் நீ அர்ச்சிராதி மார்க்கத்தை எண்ணி இருப்பாயாக என்றான்
8-24-அக்னிர் ஜ்யோதி -25-தூமோ ராத்ரி —என்பவை தேவயானம் பித்ரு யானம் பற்றியே குறிக்கும்
26-யத்ர காலேது -அபிமான தேவதையான ஆதி வாஹிகர்களை கால பதம் குறிக்கும்
ப்ருஹத் -6-2-15-தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி -அவர்கள் அர்ச்சையில் செல்கின்றார்கள் என்பதால் அத்தையே எண்ணி இருப்பார்கள் –

———————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்—4-1— நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் —

June 15, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————————————————————–
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்- தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்- ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் -பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் -பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————–
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது
————————————-

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –

ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்
ச்வேதாச்வதர -3-8- தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி -ப்ரஹ்மத்தை அறிவதால் மட்டும் மரணத்தை கடந்து செல்கிறான் -என்றும்
முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேதி ப்ரஹ்ம ஏவ பவதி -ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் –
முண்டக -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் -பொன் நிறமான ப்ரஹ்மத்தைக் கண்டவன்
உமி நீங்கும் வரை தானே நெல்லைக் குத்த வேண்டும் ஒரு முறை ப்ரஹ்மத்தை அறியும் வரை உபாசனம் போதும் என்பர் பூர்வ பஷி ஜ்யோதிஷ்டோமம் ஒரு முறை அனுஷ்டித்து பலம் பெறுவது போலே என்பர்
இது சரி அல்ல -த்யானம் உபாசனம் போலவே வேதனமும் –உபாஸ்தி த்யாயதி பதங்கள் மூலம் வேதனமும் உணர்த்தப் படுகிறது
சாந்தோக்யம் -3-8-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –மனசை ப்ரஹ்மமாக உபாசிக்க வேண்டும் -மூலம் அறியலாம்
சாந்தோக்யம் -3-18-3-பாதி ச தபதி ச கீர்த்யா யசச ப்ரஹ்ம வர்ச்ச சேன ய ஏவம் வேத – இப்படி அறிந்து கொள்கிறவன் ப்ரஹ்ம தேஜஸ் அடைகிறான் -இங்கு வேதன சப்தம்
சாந்தோக்யம் -4-1-4-யஸ்தத்வேத யத் ச வேத சமயைதத் உகத -ரைக்வர் எதனை அறிகிராரோ அதனையே மற்றும் உள்ள அனைவரும் அறிகின்றனர் –
என்று தொடங்கப் பட்டதில் வேதன சப்தமும் முடியும் பொழுது -4-2-2-அநும ஏதாம் பாகவோ தே வதாம் சாதியாம் தேவதாம் உபாஸ் ஸே -என்று
மூத்தவரே நீர் எந்த தேவதையை உபாசனம் செய்கின்றீரோ அதையே எனக்கு உபதேசிக்க வேண்டும் -என்று உபாசன பத பிரயோகம் உண்டே
இது போலே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்
/ப்ருஹத் -2-4-5-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்று உயர்ந்த அந்த பரமாத்மாவே காணப் படத்தக்கது த்யானிக்கப் பட வேண்டியது என்னப்பட வேண்டியது ஆகும் என்றும்
முண்டக -3-1-8-ததஸ்து தம் பஸ்யதே நிஷ்கலம் த்யாயமான -த்யானத்தில் உள்ளவன் அவனைக் காண்கிறான் -என்றும்
த்யானம் இடைவிடாமல் நினைப்பதே -உபாசனையும் அவ்விதமே -வேதனமும் இவற்றைப் போன்றதே –
முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -ப்ரஹ்மத்தை அறிபவன் அவனையே அடைகிறான்
ச்வேதாச்வதர -1-8-ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை அதனை அறிந்தவன் அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான் –
———————————————————————————————————————————
4-1-2- லிங்காத் ச

லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ச்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-தத்ரூப ப்ரத்யயே சைகா சந்ததிச் சான்ய நிஸ் ஸ்ப்ருஹா தத் த்யானம் பிரதமை -ஷட்பி அங்கை –நிஷ்பாத்யதே ததா -என்று
தாரணை மூலம் கிட்டும் ப்ரஹ்மத்தின் திரு மேனி குறித்த ஞானம் என்பதில் வேறு விதமான அறிவு கலக்காமல் ஒரே எண்ணமாக இருப்பதே த்யானம்
அதற்கு முன்பு யமம் -நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் மற்றும் தாரணை ஆகிய ஆறு அங்கங்களாக ஏற்படுகிறது
ஆக வேதனம் எனபது ஒரு முறை அல்லாமல் பல முறை செய்யப்பட வேண்டியது என்றதாயிற்று –
————————————————————————————————————–

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்-தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது

—————————————————————————————————-
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1-2-அதிகம் து பேத நிர்தேசாத் -வேறு பட்டது -என்றும்
3-4-8-அதி கோபதேசாத்–அதிகமான உபதேசம் உள்ளதால் -என்றும்
1-1-14-நேதரோ நுபபத்தே —
தத்க்ரது நியாயம் -சாந்தோக்யம் -3-14-1-யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி தத்த ப்ரேத்ய பவதி -இங்கு எவ்விதம் உபாசிகின்றானோ அப்படியே அவ உலகிலும் அனுபவிக்கின்றான்
ஆக பிரமத்தைக் காட்டிலும் வேறு பட்டவனாகவே உபாசிக்க வேண்டும் என்பர்
து -சப்தம் -ஏவ பொருளில் -ஆத்மாவாக மட்டுமே உபாசிக்க வேண்டும் -தன சரீரத்துக்கு தான் ஆத்மாவாக இருப்பது போலேவே
பரமாத்மா தனக்கு ஆத்மா -ஏன் என்றால் இப்படியே உபாசிப்பவர்கள் செய்துள்ளார் -த்வாம் வா அஹமசி புகவோ தேவதே அஹம் வை த்வம் அஸி-என்று
நீயே நான் ஆகிறேன் நானே நீ ஆகிறாய் –
சதபத ப்ராஹ்மணம்–14-16-7-30-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந-அந்தரயமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்ம நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்யம்ருத -என்று
யார் ஒருவன் ஆத்மாவின் உள்ளும் புறமும் வியாபித்து -யாரை ஆத்மா அறியாமல் உள்ளதோ -யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவின் உள்ளே புகுந்து நியமனம் செய்கின்றானோ –
யார் அழிவற்றவனோ-அவனே உனக்கு ஆத்மாவாக உள்ள அந்தர்யாமி என்றும்
சாந்தோக்யம் -6-8-6-சந்மூலா சோம்யேமா சர்வா பிரஜா சதாயதநா -சத்ப்ரதிஷ்டா ஐததாத்ம்யமிதம் சர்வம் -என்று
இவை அனைத்தும் சத் எனப்படும் ப்ரஹ்மத்தின் இடம் உத்பத்தி யான பின்னர் அதனிடம் வாழ்ந்து அதனிடமே லயித்து விடுகின்றன -இவை அனைத்தும் ஆத்மாவாகவே உள்ளன –
சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தாஜ்ஜலான் -ப்ரஹ்மத்திடம் தோன்றி அதிலே லயித்து விடுவதாலும் அதனிடமே வாழ்வதாலும் இவை அனைத்துமே பிரமம் ஆகும் –
அனைத்து அறிவுகளும் ப்ரஹ்மத்திடமே சேர்வதால் அனைத்து சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
ப்ருஹத் -1-4-10-அத யோன்யம் தேவதா முபாஸ்தே அந்ய அசாவந்ய அசமஸ்மீதி ந ஸ தேவதே -என்று
யார் ஒருவன் தன்னைக் காட்டிலும் வேறான தேவதையை -நான் வேறு அது வேறு -என்று உபாசிக்கிறானோ அவன் ஏதும் அறியாதவனாக இருக்கிறான் –
ப்ருஹத் -1-4-7-அக்ருத்ஸ் நோ ஹி ஏஷ ஆத்மேத்யே வோயா சீத-இந்த ஜீவன் பூர்ணம் அல்ல ஆகவே பூரணமான ஜீவனை உபாசிக்க வேண்டும்
ப்ருஹத் -2-4-6-சர்வே தம் பராதாத்யோ அந்யத் ராத்மனா சர்வே வேத -என்று ஆத்மாவைக் காட்டிலும் அனைத்தையும் வேறுபடுத்திக் காண்பவனை -மற்றவை அனைத்தும் வேறுபடுத்தித் தள்ளிவிடும்
இந்த வரிகளும் ச்வேதாச்வதர 1-5-ப்ருதகாத்மானம் ப்ரேரிதம் ஸ மத்வா -என்று தன்னை விட வேறுபட்டதான நியமிப்பவனை -என்றதும் முரண்பட்ட வரிகள் அல்ல
ஆகவே
உபாசகனின் ஆத்மாவாகவே உள்ள ப்ரஹ்மமே உபாசனை செய்யப்பட வேண்டும் என்றும்
தனது ஆத்மாகவே ப்ரஹ்மத்தை எண்ணி உபாசிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் காட்டப் பட்டது –

———————————————————————————
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் -பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————————

4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –

சாந்தோக்யம் -3-11-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத -மனத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பனாக -என்றும் –
சாந்தோக்யம் -7-1-5-ஸ யோ நாம ப்ரஹ்ம இதி உபாஸ்தே-நாமத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பவன்
ந ப்ரதீகே -மனம் முதலியவற்றில் ஆத்மாவை ஏற்றி உபாசனை செய்வது பொருந்தாது
ஏன் என்றால்
ந ஹி ஸ -அத்தைய மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல
உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –

—————————————————————————————————-

4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –

ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது -மனம் முதலானவற்றில் ப்ரஹ்ம திருஷ்டியை ஏற்கலாம் -ப்ரஹ்மத்திடம் மனம் போன்றவற்றின் த்ருஷ்டி பொருந்தாது
வேலைக்காரனை அரசன் என்று புகழ்ந்தால் அவன் சில நன்மைகள் செய்வான் அரசனை வேலைக் காரன் என்றால் தண்டனை தானே கொடுப்பான் –

————————————-

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது –

4-1-6-ஆதித்யாதி மதய ஸ அங்கே உபபத்தே —

சாந்தோக்யம் -1-3-1-ய ஏவ அசௌ தபதி தம் உத்கீதம் உபாசீத -என்று யார் இப்படி ஒளிர்கிறானோ அவனையே உத்கீதமாக உபாசிக்க வேண்டும்
யாகங்களின் அங்கமான உத்கீதம் உயர்ந்ததா சூரியன் போன்றார்கள் உயர்ந்தவர்களா சங்கை
தேவர்களை ஆராதிப்பதால் அன்றோ கர்ம பலன்கள் -அவர்கள் மகிழ்ந்து அளிக்கின்றார்கள் -ஆகவே உத்கீதம் முதலான வற்றை சூரியன் போன்றாராக எண்ண வேண்டும் –

——————————————————————————————-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் -அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

——————————————————————————————

4-1-7-ஆஸிந சம்பவாத் —

அமர்ந்து கொண்டு மட்டுமே -அப்போது தான் கை கூடும் -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்

———————————————————————————

4-1-8-த்யா நாத் ஸ —

நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்

——————————————————————————

4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-

அசையாமல் இருப்பதே த்யானம் -சந்தோக்யம் -7-6-1-த்யாய தீவ ப்ருத்வீ த்யாய தீவ அந்தரிஷம் த்யாய தீவ த்வயௌ த்யாய தீவ ஆப த்யாயந்தீவ பர்வதா -போலே அந்த நிலை அவசியம் –

————————————————————————

4-1-10-ஸ்மரந்தி ஸ –

ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆசனம் ஆத்மந நாத் யுச்சரிதம் நாதி நீசம் சேலாஜி நகு சோத்தரம்-என்றும்
தத்ர ஏகாக்ரம் மன க்ருத்வா யத சிந்தேந்த்ரிய க்ரிய உபவிச்யாசதே யுஜ்ஞ்யாத் யோகம் ஆத்ம விசுத்தயே-என்றும் சொல்லிற்றே-

—————————————————————————

4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–

மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்
ச்வேதாச்வதர -2-10-சமே சுசௌ சர்க்கராவஹ் நிவாலுகா விவர்ஜிதே -சம தளம் -மணல் நெருப்பு சிறுகற்கள் இல்லாத இடம் -மநோ அனுகூலே -மனத்து ஏற்ற இடம் தேவை –

————————————————————————-

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————

4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்

மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-
சாந்தோக்யம் -8-15-1-ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே -என்று
ஆயுள் உள்ள வரையில் உபாசனத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து ப்ரஹ்ம லோகம் அடைகிறான் -என்கிறது –

————————————————————————————–

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் – ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————————–

4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இல்லை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்
ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாதுஎன்றும் –ஒட்டாதவற்றையும்
சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்
ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே
பூர்வ பஷி -இவை இரண்டும் சரி அல்ல எதனால் என்றால்-ப்ரஹ்ம வைவர்த்த புராணம் -நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி என்ற சாஸ்திர வாக்யங்களுக்கு முரணாக இருப்பதால் -இவை அர்த்த வாதங்களே -வித்யையை புகழவே சொல்லப்பட்டவை
வித்யை ப்ரஹ்மத்தை அடைய மட்டுமே என்று தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் -முண்டகம் -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -என்றும் தானே சொல்லிற்று என்பர்
அப்படி அல்ல -வித்யையின் மஹாத்ம்யம் குறித்து -சாந்தோக்யம் -4-14-3-ஏவம் விதி பாபாம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று இப்படி அறிந்தவனை பாவங்கள் தீண்டுவது இல்லை என்றும்
சாந்தோக்யம் -5-24-3-ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –என்றது நெருப்பு எரிக்கிறது என்பதற்கும் தீ அணைக்கும் என்பதரும் முரண்பாடு இல்லையே
பரம புருஷனின் ஆராதனத்தால் முன்பு செய்த பாவங்களால் உண்டான ப்ரஹ்மத்தின் அப்ரீதியை மாற்றி ப்ரீதியை யுண்டாக்குவதாலே முன்பு செய்த பாவங்கள் அழியும்
அச்லேஷம் புத்தி பூர்வகமாக செய்யப்படாத தெரியாமல் செய்யும் பாவங்களையே குறிக்கும் ஏன் எனில்
கட உபநிஷத் -2-24-நா விரதோ துச்சரிதாத் -என்று முரணான ஒழுக்கத்தில் இருந்து விலகாதவன் பரமாத்மாவை அடைய முடியாது -என்பதால் –
ஆகையால் மரண காலம் வரை தொடரும் வித்யை நாள் தோறும் வலிமை அடைந்து -தவறான செயல்கள் அழிவதால் -மாறிக் கொண்டே வரும் என்றதாயிற்று

———————————————————————————-

அதிகரணம் -8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————

4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

சாந்தோக்யம் -8-4-1-சர்வே பாப்மான அதோ நிவர்த்தந்தே -என்றும் -கௌஷீ தகீ -1-4- தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூ நுதே –என்று புண்ய பாவங்களை உதறுகிறான்
புண்ய பலன்கள் மலை உணவு போன்றவை உபாசனம் முழுவதும் இயற்ற வேண்டுமே-அழிவு பற்றி கூறலாமோ என்ன
பாதே து – சரீரம் விழும் நேரத்தில் அந்த புண்ய பலன்கள் அழிகின்றன -ப்ரஹ்ம ப்ராப்திக்கு தடையாக உள்ளதால் –

———————————————————————————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம் -பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
————————————————————————————————————————
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –

இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன -சர்வ பாப்மாந பிரயந்துதே -அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது
——————————————————-
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம் -பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

—————————————————————————-

4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –

அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
ப்ரஹ்ம விதியை -4-1-14-இதரஸ் யாப்யேவம் அசம்ச்லேஷ -என்று ப்ரஹ்ம வித்யைக்கு பின்புள்ள புண்ய பாவங்கள் ஒட்டாமல் போகும் என்றால்
பலன் இல்லாத கர்மாக்களை யார் இயற்றுவார்கள்
து பதம் அக்னிஹோத்ரம் போன்றவை அன்றாடம் இயற்றப்பட வேண்டும்
தா தர்சநாத் இப்படி வேதங்களில் சொல்வதால் வித்யை வளரும் பொருட்டு நித்யம் இயற்றியே ஆகவேண்டும்
இல்லையேல் அதனால் வரும் பாவம் மன உறுதியைக் குலைத்து விடும் -உபாசனை செய்ய இயலாமல் போய் விடும்

————————————————————————
புண்ய பாவங்கள் அனுபவித்தே கழிக்க வேண்டி இருக்குமாகில் சாட்யாயன சாகை -ஸூ க்ருத சாதுக்ருத்யாம் -என்று ஏன் கூற வேண்டும்

4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –

அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால் -ப்ரஹ்ம வித்யைக்கு முன்பும் பின்னும் பலன் மீது விருப்பம் கொண்டு செய்யப்பட புண்ய கர்மங்களுக்குள்
வலிமையான பாவ கர்மங்களால் தடைப்பட்ட ஏராளமான புண்ணியங்கள் இருக்கக் கூடும்
இவற்றையே அழிகின்ற பூர்வ புண்யங்களும் ஒட்டாமல் போகும் உத்தர புண்யங்களும் என்றது

——————————————————————————-

4-1-18-யதேவ வித்யயேதி ஹி —

வித்யையின் மூலமாக -சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம் -என்று
எந்த கர்மத்தை உத்கீத விதையுடன் இயற்றுகின்றானோ அதுவே தடையின்றி பலன் தரும்
இவையே உபாசகனின் நண்பர்களுக்கு சென்று சேரும் –

———————————————————————–
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் -பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள்
ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –

பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –
தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்ய-என்பதால் பிராரப்த கர்மாக்கள் முடிந்த பின்னரே ப்ரஹ்மத்தை அடைகிறான் –

——————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-3-4– மூன்றாம் அத்யாயம் –சாதனா அத்யாயம்–நான்காம் பாதம் -அங்க பாதம் –

June 15, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————————————————

சாதனா அத்யாயம்–அங்க பாதம் -கர்மங்கள் அனைத்தும் கைவிடத் தக்கது என்ற வாதம் தள்ளப்பட்டு
அனைத்தும் கொள்ளத் தக்கதே என்று நிரூபிக்கப் படுகிறது
மேலும் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ளவற்றையும் பற்றி கூறப்படுகிறது
இதில் 15 அதிகரணங்களும் 50 ஸூத்ரங்களும் உள்ளன-

————————————————————————–

அதிகரணம் -1-புருஷார்த்தாதி கரணம் -20 ஸூத்ரங்கள் -கர்மத்தை அங்கமாக கொண்ட ப்ரஹ்ம உபாசனை மூலம் மோஷம் என்னும் புருஷார்த்தம் கிட்டுவதாக நிரூபிக்கப் படுகிறது-
அதிகரணம் -2- ஸ்துதி மாத்ராதிகரணம் – 2 ஸூத்ரங்கள்-சாந்தோக்யம் -1-1-3-ச ஏஷ ரஸா நாம் ரசதம -என்றது உத்கீதம் புகழ மட்டும் அல்ல -விதி வாக்யம் என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -3- பாரிப்லவாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்–கௌஷீ தகீ உபநிஷத் -3-10-சாந்தோக்யம் -6-1-1-போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள் அங்கு விதிக்கப்படும் வித்யைகளைப் புகழ் வதற்காகவே என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -4- அக்நீந்த நாத்யாதி கரணம் -1 ஸூத்ரம்–சன்யாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் பொழுது அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர் பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -5-சர்வ அபேஷாதி கரணம் –1 ஸூத்ரம்–கிருஹஸ்தாச்ரமத்தில் உள்ளோர்க்கு யஜ்ஞம் போன்றவற்றை ப்ரஹ்ம உபாசனம் எதிர்பார்க்கின்றது -என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -6- சம தமாத்யாதிகரணம் –1 ஸூத்ரம்–க்ருஹஸ்ரமத்திலுள்ள ப்ரஹ்ம ஞானிக்கும் சமம் தமம் ஆத்ம குணங்கள் கைக் கொள்ளத் தக்கவை என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –4–ஸூத்ரங்கள்–பிராண வித்யை கூடின ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே அனைத்து வித உணவும் அநு மதிக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -8- விஹி தத்வாதி கரணம் —4–ஸூத்ரங்கள்–யஜ்ஞம் போன்ற கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை மற்றும் க்ருஹஸ்தாஸ்ரம த்தின் அங்கமாகவே விதிக்கப் பட்டதால் இவற்றை ப்ரஹ்ம நிஷ்டர்கள் மற்றும் கிருஹஸ்தர்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -9-விதுராதிகரணம் —4–ஸூத்ரங்கள்–எந்த ஆச்ரமத்திலும் இல்லாத விதுரர்களுக்கும் ப்ரஹ்ம விதையில் அதிகாரம் உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
விதுரர் க்ருஹஸ்ராமத்தில் இருந்து மனைவியை இழந்த பின்னர் சன்யாசமோ வானப்ரச்தாமோ கைக் கொள்ளாமல் -அநாஸ்ரமி-என்பர்
அதிகரணம்-10-தத் பூதாதிகரணம் —4–ஸூத்ரங்கள்–ப்ரஹ்மச்சாரி வானப்ரஸ்தன் சந்நியாசி ஆகியவர்கள் ஆச்ரமன்களைக் கைவுஇட நேர்ந்தால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -11-ஸ்வாம்யதிகரணம் –2 ஸூத்ரங்கள்–ருத்விக்கால் -யாகம் யஜ்ஞம் போன்றவற்றை நடத்தி வைப்பவர் -உத்கீத உபாசனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -3 ஸூத்ரங்கள்-பால்யம் பாண்டித்தியம் மௌனம் ஆகியவை யஜ்ஞம் போன்ற ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ளன என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -13-அநாவிஷ்கராதி கரணம் –1 ஸூத்ரம்–பால்யம் எனபது ப்ரஹ்ம ஞானிகள் தங்கள் மேன்மைகளை வெளிக் காட்டாமல் உள்ளதே ஆகும் -என்று நிரூபிக்கப் படுகிறது
அதிகரணம் -14-ஐஹிகாதிகரணம் —1 ஸூத்ரம்–இந்த பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடை இல்லாமல் இருந்தால் மட்டுமே உண்டாகும் -தடை இருந்தால் உண்டாகாது என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -15-முக்தி பலாதிகரணம் –1 ஸூத்ரம்–மோஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்கும் தடை ஏற்படா விடில் பலன் உடனே கிட்டும் -தடை ஏற்பட்டால் தாமதமாகவே ஏற்படும் என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————

அதிகரணம் -1-புருஷார்த்தாதி கரணம் -கர்மத்தை அங்கமாக கொண்ட ப்ரஹ்ம உபாசனை மூலம் மோஷம் என்னும் புருஷார்த்தம் கிட்டுவதாக நிரூபிக்கப் படுகிறது-

—————————————————————
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –

ப்ரஹ்ம வித்யைகள் மூலம் மோஷ புருஷார்த்தம் ஏற்படுகிறது என ஸ்ருதிகள் கூறுவதால் -என்று பாதராயணர் கருதுகிறார் –
தைத்ரிய ஆனந்த வல்லி -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -3-8-வேதாஹா மேந்தம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ-புரஸ்தாத் தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும்
முண்டக உபநிஷத் -3-2-8-யதா நன்ய ச்யந்த மாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம்
அடுத்து உள்ள ஆறு ஸூ த்ரங்கள் பூர்வ பஷ ஸூ த்ரங்கள்-அடுத்த 13 ஸூ த்ரங்கள் இவற்றை தள்ளி சித்தாந்த நிரூபண ஸூ த்ரங்கள்

——————————————————————————-

3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —

யாகத்தின் -கர்மத்தின் -சேஷமாக-தொண்டு செய்வதாக மட்டுமே வித்யைகள் உள்ளதால் அவன் பலன் அளிக்கின்றன என்று கூறுவது புகழ்ச்சிக்கு மட்டுமே
இவை அர்த்த வாதமே -யாகங்களில் பயன்படுத்த படும் மற்ற உபகரணங்கள் போன்று உள்ளவையே என்று ஜைமினி கூறுகிறார்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று உயர்ந்த பலனை அடைகின்றான் என்கிறது மோஷம் கிட்டுகிறது என்று சொல்ல வில்லை என்பர்
உடலை விட மாறுபட்டதும் நித்யமாக உள்ளதும் ஆத்மா என்று அறிந்தவனுக்கே மட்டுமே யாகத்தில் கர்த்ருத்வம் கை கூடுகிறது
வித்யைகள் மூலமாகவே இத்தை அறிவதால் அவை யாகம் என்கிற கர்மத்துக்கு வித்யை அங்கமாக உள்ளது
எனவே வித்யைகள் கர்மங்களின் அங்கமே -வித்யைகள் மூலம் புருஷார்த்தங்கள் கிட்டாது -கர்மங்கள் மூலமே என்பர் –

——————————————————————————————————
3-4-3-ஆசார தர்சநாத் —

சாந்தோக்யம் -5-11-5-யஷ்ய மாணோ ஹவை பகவந்தோ அஹம் அஸ்மி -என்றும்
ஸ்ரீ கீதையில் -கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதய -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-12-இயாஜ ச அபி ஸூ பஹூன் யஜ்ஞான் ஞான வ்யபாஸ்ரைய -என்றும் ப்ரஹ்ம ஞானிகள் கர்மத்தையே முக்கியமாக கொண்டதை சொல்லிற்று
இத்தால் வித்யைகள் கர்மத்தின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் அங்கமே என்றும் அவற்றின் மூலம் புருஷார்த்தம் கிட்டும் என்றது தவறு என்பர் –

————————————-

3-4-4-தத் ஸ்ருதே –

வேத வரிகளிலும் வித்யைகள் கர்மங்களின் அங்கம் எனக் காணலாம் -சாந்தோக்யம் -1-1-10-ய தேவ வித்யயா கரோதி ததேவ வீர்ய வத்திரம் பவதி -என்று
வித்யை யுடன் செய்யப்படும் கர்மம் அதிக வீர்யம் உள்ளதாக மாறுகிறது

————————————————————————————-
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –

ப்ருஹத் உபநிஷத் -4-4-2-தம் வித்யா கர்மணீ சமன்வார பேத -என்று பரலோகம் செல்லும் ஒருவனை வித்யையும் கர்மமும் பின் தொடர்ந்து செல்கின்றன என்பதால்
இத்தகைய தொடர்பு வித்யை கர்மத்தின் அங்கமாக இருந்தால் மட்டுமே பொருந்தும்

—————————————————————————–

3-3-6-தத்வத விதா நாத் –

சாந்தோக்யம் -8-15-1-ஆசார்ய குலாத் வேத மதீத்ய யதா விதா நம் குரோ கர்மாதி சேஷணாபி சமாவ்ருத்ய குடும்பே சுசௌ தேசே -என்று
வேதத்தை அறிந்தவனுக்கும் கர்மம் விதிக்கப் பட்டது -வேத அத்யயயனம் அர்த்தங்களை அறியும் வரை செல்வதாகும் பிரபாரகர் குமாரிலபட்டர் ஆகியவர்களின் வாதம்
ஆக ப்ரஹ்ம வித்யை கர்மங்களின் அங்கமாக உள்ளதால் அதற்கு தனிப் பலன் இல்லை என்று உணரலாம்

————————————————————————————————–

3-4-7-நியமாத் –

ஈசாவாசய உபநிஷத் -1-2- குர்வந்நேவே ஹ கர்மாணி ஜிஜீவிஷேத் சதம் வா -என்று நூறாண்டு காலம் கர்மம் செய்து வாழ்வதையே ஒருவன் விரும்ப வேண்டும் –
என்று பலன் கர்மம் மூலமே கிட்டுகிறது என்பதும் வித்யை கர்மத்தின் அங்கம் என்பதும் தெளிவாகிறது –

————————————————————————————

இனி சித்தாந்தம்
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —

உபாசிக்கத் தக்கவன் பர ப்ரஹ்மமே என்று -சாந்தோக்யம் -8-1-5-அபஹத பாபமா விஜர விம்ருத்யு விசோக விஜிகித்ச அபிபாச சத்ய காம -சத்ய சங்கல்பன் என்றும்
6-2-3-தத் ஐஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத-என்றும்
முண்டக -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் -என்றும் -ச்வேதாச்வதர உபநிஷத் -பராஸ்ய சக்தி வித்தைவ ச்ரூயதே ஸ்வ பாவிகீ ஜ்ஞான பல க்ரியாச்ச
தைத்ரியம் -2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த என்றும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ ஆனந்தம் ப்ராஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்ச நேதி-என்றும்
ப்ருஹத் உபநிஷத் -4-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேது விதரண -என்றும்
ச்வேதாச்வதர உபநிஷத் -6-9-ச காரணம் கரணாதிபாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ச அதிப -என்றும்
ப்ருஹத் உபநிஷத் -3-8-9-ஏதஸ்ய வா அஹரச்யபிரசாசனே கார்க்கி ஸூ ர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்
தைத்ரிய உபநிஷத் -2-8-பீஷாச்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூ ர்ய பீஷாஸ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யூர் தாவதி பஞ்சமா -என்றும்
பரம புருஷ உபாசனை எனப்படும் வித்யையின் பலமே மோஷம் புருஷார்த்தம் கிட்டுகிறது -இத்தால் அடையாள வாக்யங்கள் தள்ளப் படுகின்றன –

——————————————————————————————

3-4-9-துல்யம் து தர்சனம் –

வித்யைகள் கர்மங்களின் அங்கங்கள் அல்ல என்றும் கூறப் படுகின்றன -கௌ ஷீ தகீ உபநிஷத் -3-2-6-ருஷய காவஷேயோ கிமர்த்தா வயம் யஷ்யாமகஹே கிமர்த்தா வயம் யஷ்யாமகஹே
-என்று காவேஷயர் போன்ற முனிவர்கள் எதற்கு வேத அத்யயனம் செய்ய வேண்டும் என்று இரு முறை கேட்டதால் கர்மங்கள் கை விட்டதையும் காணலாம்
பலனை எதிர்பாராமல் செய்யப்படும் கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகும் -பலனை எதிர்பார்த்து செய்யும் கர்மங்கள் ப்ரஹ்ம ஞானிக்கு விரோதங்கள்

————————————————————-

3-4-10-அசாவத்ரீகீ —

சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி–ததேவ வீர்ய வத்தரம் பவதி என்று -யத் கரோதி என்னாமல் -ய -என்று முன்ப -1-1-10-உத்கீதம் உபாசீத -என்பதைக் குறித்தே சொல்லப் பட்டது பொதுவாக இல்லை
ப்ருஹத் உபநிஷத் -4-4-2-தம் வித்யா கர்மணீ சமன்வார பேத -பரமபதம் செல்வனை தொடர்ந்து வித்யையும் கர்மமும் செல்கின்றன என்கிறது –

——————————————————————————————————————————————————–

3-4-11- விபாக சதவத்

வித்யை அதன் பலனை பெறுவதற்காக பின் செல்கிறது
கர்மம் தனது பலனை அடைய பின் செல்கிறது

——————————————————————————

3-4-12-அத்யாப ந மாத்ரவத்

சாந்தோக்யம் -8-15-1- வேதமதீத்ய -வேத அத்யயனம் உள்ளவனுக்கே கர்மம் விதிக்கப் பட்டதால் வித்யை கர்மத்தின் அங்கம் அல்ல
அர்த்த ஞானம் கர்மத்தின் அங்கம் ஆகாது -அத்யயன விதி அர்த்த ஞானத்தை ஏற்படுத்தும்
அர்த்த ஞான ரூபமாக உள்ள பிரமத்தின் ச்வரூஒபம் அறிதல்
மோஷ சாதனம் -த்யானம் உபாசனம் போன்றவற்றால் கூறப்படுவதும் புருஷார்த்தமாக உள்ளதை அடைய உதவும் ப்ரஹ்ம வித்யையும் வெவ்வேறே ஆகும்
ஆகவே ப்ரஹ்ம வித்யை கர்மத்தின் அங்கம் ஆகாது

————————————————————————————-

3-14-13-நா விசேஷாத் –

ஈசாவாஸ்ய -1-2- குர்வன்நேவேஹ கர்மாணி -கர்மங்களை மட்டும் இயற்று -ந அவிசேஷாத்-விசேஷமான காரணம் ஏதும் இல்லை
ஜனகர் போன்றவர் கர்மம் மூலம் சித்தி பெற்றனர் என்றது முக்தி அடையும் வரை உபாசனம் செய்ய வேண்டும் என்பதற்கே —

——————————————————-

3-4-14-ஸ்துதயே அநு மதிர் வா —

வித்யையை புகழும் பொருட்டே கர்மங்களை எப்பொழுதும் செய்ய வேண்டும் என்றது
வா -பதம் உறுதியாக கூறுவதை சொல்கிறது
ஈசாவாஸ்ய உபநிஷத் -1-1- ஈசாவாஸ்யம் இதம் சர்வம் -என்று தொடங்கிய பிரகரணம் விதைப் பற்றி தொடர்ந்து கூறுகிறது
இந்த வித்யை உள்ளவனுக்கு கர்மம் ஒட்டாது என்றும்
வாழ் நாள் முழுவதும் இயற்றினாலும் ஒட்டாது என்பதால் அனுமதிக்கிறது
இதன் பிற்பகுதி -ஏவம் த்வயி நாந்யதே தோஸ்தி ந கர்ம லிப்யதே நரே-கர்மங்கள் ஓட்டுவது இல்லை -ஆகவே வித்யைகள் கர்மங்களின் அங்கம் அல்ல

—————————————————————————

3-4-15-காம காரேண ச ஏகே

க்ருஹச்த தர்மத்தை கை விடலாம் என்பர் சிலர் ப்ருஹத் -4-4-22-கிம் பிரஜயா கரிஷ்யாமோ ஏஷாம் நோயமாத்மா அயம் சோக -என்று
பிள்ளைகள் மூலம் அடையப் படும் உலகாக பரமாத்மாவே எங்களுக்கு உள்ள போது பிள்ளைகளைப் பெற்று என்ன செய்யப் போகிறோம்-
எனவே வித்யை கர்மத்தின் அங்கம் அல்ல –

————————————————————————————————————————————

3-4-16-உபமர்த்தம் ச

கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை மூலம் அழிக்கப் படுகின்றன -முண்டகம் -2-2-8-பித்யதே ஹ்ருதய க்ராந்தி-சித்யந்தே சர்வ சம்சய -ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே —
வித்யை கர்மத்தின் அங்கமாக இருந்தால் இப்படி கர்மங்கள் அழிப்பது பொருந்தாது

——————————————————————————————————————

3-4-17-ஊர்த்வரே தஸ் ஸூ ச சப்தே ஹி

சந்யாசிகளுக்கும் ப்ரஹ்ம வித்யை கூறப்படுவதை காண்கிறோம் -அக்னி ஹோத்ரம் தர்ச பூர்ண மாச கர்மாக்கள் அவர்களுக்கு இல்லையே
ஆபஸ்தம்ப ச்ரௌதம் -3-14-8- யாவத் ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜூ ஹோதி -சன்யாசம் வாழ்க்கை நெறி இல்லை என்பர் பூர்வ பஷி ஆனால்
-சாந்தோக்யம் -2-3-21-த்ரயோ தர்மஸ்கந்தா-தர்மத்தை மூன்று மார்க்கங்கள் நிலை நிறுத்துகின்றன அதாவது யஜ்ஞம் அத்யயனம் தானம் கொண்ட க்ருஹதாச்ரமம் -தவம் கொண்ட சன்யாசம் ப்ரஹ்மசர்யம்
சாந்தோக்யம் -5-10-1-ஏ சேமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாசதே
ப்ருஹத் 4-4-22-எவம் ஏவ பிரவ்ராஜி நோ லோகம் இச்சந்த பிரவ்ரஜந்தி
ஆக சன்யாசம் குறித்து வைராக்கியம் இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டன

———————————————————————————————————————————

3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
அநு வாதம்மட்டுமே -உணர்த்தியதை மீண்டும் உணர்த்துதல் -விதிக்கப்பட வில்லை மறுத்து கூறுகிறது
பூர்வ பஷி த்ரயோ தர்மசகந்தா என்று சன்யாச ஆஸ்ரமம் ஏற்கப் பட்டதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
உபாசனையை புகழ்வதற்கே இப்படி சொல்வதாக சொல்வார்கள் -தைத்ரிய சம்ஹிதையில் -1-5-2- வீரஹா வா ஏஷ தேவா நாம் யோ அக்னிம் உத்வாசயதே -என்று
அக்னி தர்மத்தை கை விடுகிறவன் வீரனைக் கொன்ற பாபத்தை அடைகிறான் என்கிறது
எனவே சன்யாச ஆஸ்ரமம் நிலையே இல்லை என்பர் ஜைமினி

—————————————————————————————————————————

3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே

அனைத்து ஆச்ரமங்களும் கடைப் பிடிக்கத் தக்கதே -அனைத்தும் கூறப்படுவதால் -பாதராயணர் இப்படியே கருதுகிறார்
த்ரயோ தர்மஸ்கந்தா என்று மூன்றையும் பொதுவாக சொல்வதால் -சாந்தோக்யம் -2-23-1-ப்ரஹ்ம சம்ச்தோ அம்ருதத்வமேதி -ப்ரஹ்மத்தை அடைந்தவன் இறவாமை அடைகிறான் -என்று
பிரமத்தில் ஈடுபட்டு நிலையாக இருத்தல் அனைத்து ஆச்ரமங்களுக்கும் பொருந்தும்
பிரமத்தில் நிலை நிற்காமல் ஆஸ்ரம தர்மங்களை மட்டுமே செய்பவர்கள் பிரமலோகம் போன்றவற்றை அடைகிறார்கள்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-34-பிரஜாபத்யம் ப்ராஹ்மணானாம் -என்று தொடங்கி-1-6-37-ப்ராஹ்மம் சந்நியாசினாம் ஸ்ம்ருதம் -என்றும்
1-6-38-ஏகாந்தின சதா ப்ரஹ்ம த்யாயினோ யோகினோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூ ர்ய-என்றும்
சாந்தோக்யம் -5-10-1- யே சேமே அரண்யே ஸ்ரத்தா தப இதி உபாசதே
ஆக மற்றை ஆஸ்ரமங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றதாயிற்று -அனைத்தும் விதிகளே அனுவாதம் மட்டும் அல்ல

—————————————————————————

3-4-20-விதி வா தாரணவத்-

ஜாபால ஸ்ருதியில் ப்ரஹ்மசர்யம் சமாப்ய க்ருஹீபவேத் க்ருஹாத்வாநீ பூத்வா ப்ரவ்ரஜேத் யதிவேததரா ப்ரஹ்மசார்ய தேவ ப்ரவ்ரஜேத் க்ருஹாத்வா
வநாத்வா யதஹரேவ விரஜேத் ததஹரேவப்ரவ்ரஜேத்-என்று
எப்பொழுது வைராக்கியம் விரக்தி உண்டாகிறதோ அப்பொழுது சன்யாசம் கொள்ளக் கடவன்என்றது
ஆக ப்ரஹ்ம வித்யை கர்மத்தின் அங்கம் அல்ல -மோஷ புருஷார்த்தம் ப்ரஹ்ம வித்யையின் மூலம் கிட்டும் கர்மத்தினால் அல்ல என்று தேறுகிறது –

—————————————————————————————————————————-

அதிகரணம் -2- ஸ்துதி மாத்ராதிகரணம் -சாந்தோக்யம் -1-1-3-ச ஏஷ ரஸா நாம் ரசதம -என்றது உத்கீதம் புகழ மட்டும் அல்ல -விதி வாக்யம் என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————————————————————–

3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்

சாந்தோக்யம் -1-1-3- ச ஏஷ ரஸா நாம் ரச தம பரம பரார்த்யோ அஷ்டமோ யத் உத்கீதம் -எட்டாவது சுவை ப்ரஹ்மத்துக்கு ஒப்பான சுவை உத்கீதம் –
உத்கீதம் முதலானவற்றில் மிகுதியான வீர்யத்துடன் கூடிய பலன் உண்டாக இப்படி த்ருஷ்டி விதி வாக்யம் அமைக்கப் பட்டது –

——————————————————————————————————————

3-4-22-பாவ சப்தாத் ச

உபா சீத என்று செயலைக் குறிக்கும் -விதி யுடன் கூடிய வினைச் சொல்-எனவே இது விதி வாக்யமே என்றதாயிற்று

——————————————————————————————————————————————————-

அதிகரணம் -3- பாரிப்லவாதி கரணம் -கௌஷீ தகீ உபநிஷத் -3-10-சாந்தோக்யம் -6-1-1-போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள் அங்கு விதிக்கப்படும் வித்யைகளைப் புகழ் வதற்காகவே என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————-

3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –

கௌ ஷீ தகீ -ப்ரதர்த்தநோ வை தைவோதா சிரிந்த்ரச்ய ப்ரியம் தாம உபஜகாம -திவோ தாசனின் புத்திரன் ப்ரதர்த்தனன் என்பவன் இந்தரனின் சுகமான உலகத்தை அடைந்தான் –
சாந்தோக்யம் -ச்வேதகேது ஹாருணேய ஆஸ-அருணனின் பிள்ளைக்கு பிள்ளை ஸ்வேதகேது
மனு வைவஸ்வதோ ராஜா -வைவச்வதனின் புத்ரனான மனு என்னும் ராஜா -போன்றவை
நிகழ்வுகள் ஆங்காங்கு உள்ள வித்யைகளை புகழ் வதற்காகவே –

———————————————————————————————————————————————–

3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

விதி வாக்யத்துடன் கூடிய ஒரே வாக்யமாகையாலும்
ப்ருஹத் -4-5-6-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய -ஆத்மாவைக் காண வேண்டும் ஆத்மாவே காணத் தக்கது
யஜூர் வேதம் அக்னி அழுதான் அவன் கண்ணீர் என்பதே வெள்ளி யாகத் தோன்றிற்று
இது போன்ற வரிகள் யாக விதி யுடன் தொடர்பு கொண்டே கூறப்பட்டவை -பார்ப்லாவம் பொருட்டு அல்ல –

——————————————————————–

அதிகரணம் -4- அக்நீ இந்தநாத்யாதி கரணம் -சன்யாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் பொழுது அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர் பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————————————————–

3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

சன்யாசிகள் வித்யைகள் அக்னி ஹோத்ரம் எதிர்பாராமல் உள்ளன
சாந்தோக்யம் -2-23-1-ப்ரஹ்ம சமஸ்தோ அம்ருதத்வமேதி -என்றும் -5-10-1-யே சேமே அரண்யே ச்ரத்தா தப இத்யுபாசதே -என்று காடுகளின் சன்யாசிகள் எந்த பிரமத்தை உபாசிக்கின்றார்களோ
ப்ருஹத் -4-4-22-ஏதமேவ ப்ரவ்ராஜிநோ லோகமிச்சந்த ப்ரவ்ரஜந்தி -என்று அந்த பரம் பொருளை அடைய விரும்பும் காரணத்தினால் மட்டுமே சன்யாசிகள் அனைத்தையும் துறக்கின்றார்கள் என்றும்
கட -1-2-15-யதிச் சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி -என்றும்
சன்யாசிகளுக்கு உரிய கர்மங்கள் மட்டுமே போதும் அக்னி ஹோத்ரம் தர்ச பூர்ண மாசம் போன்ற கர்மாக்கள் தேவை இல்லை என்றதாயிற்று –

—————————————————————————————————

அதிகரணம் -5-சர்வ அபேஷாதி கரணம் –கிருஹஸ்தாச்ரமத்தில் உள்ளோர்க்கு யஜ்ஞம் போன்றவற்றை ப்ரஹ்ம உபாசனம் எதிர்பார்க்கின்றது -என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————————————————-

3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

யஜ்ஞேன தானேன-என்று ஸ்ருதி கிருஹஸ்தர்கள் இடம் அக்னி ஹோத்ரம் போன்றவற்றை எதிர்பார்க்கும் -குதிரைக்கு கடிவாளம் போலே
ப்ருஹத் -4-4-22–விவிதிஷந்தி -அறிய விரும்புகின்றனர் -விருப்பத்து யஜ்ஞம் போன்றவை உபாயம் ஒழிய ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் இல்லை என்ற சங்கை வந்தால் அப்படி அல்ல
தமேவம் வேத அநு வசநேன ப்ராஹ்மணா விவிதிஷந்தி யஜ்ஞேன தானேன தமஸா அநாசகேன-அங்கம் தான் ஆர்வம் மூலம்
வேதனம் -ப்ரஹ்ம ஞானமும் அங்கமே -இவற்றால் எம்பெருமானுக்கு மகிழ்வு உண்டாக்கி உயிர் பிரியும் காலம் வரை கர்மங்கள் செய்து அவன் கடாஷத்தால் கிட்டுவதே யாகும்
ப்ரஹம ஸூ த்ரம் -4-1-1-ஆவ்ருத்தி ரச க்ருதுபதேசாத் -என்றும்
ஸ்ரீ கீதை–18-5-யஜ்ஞ தான தப கர்ம ந த்யாஜ்யம் கார்யம் ஏவ தத் யஜ் நோ தானம் தபச்சைவ பாவனானி மநீஷிணாம் -என்றும்
18-46-யத ப்ரவ்ருத்தி பூதா நாம் யேன சர்வமிதம் ததம் ஸ்வ கர்மாணா தமப்யர்ச்சைய சித்திம் விந்ததி மா நவ -என்றும் சொல்லிற்று –

———————————————————————————————————————

அதிகரணம் -6- சம தமாத்யாதிகரணம் -க்ருஹஸ்ரமத்திலுள்ள ப்ரஹ்ம ஞானிக்கும் சமம் தமம் ஆத்ம குணங்கள் கைக் கொள்ளத் தக்கவை என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————–

3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

கர்மங்கள் உள் வெளி இந்த்ரியங்க ளால் நடத்தப் படுவதால் சமம் தமம் -இவற்றை அடக்குவது -எனபது முரண்படும் என்பர் பூர்வ பஷி -அப்படி அல்ல
இவற்றுடன் கூடியவர்களாகவே இருத்தல் வேண்டும் -ப்ருஹத் உபநிஷத் -4-4-23-தஸ்மாத் ஏவம்வித சாந்தோ தாந்த திதி ஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வாத்மானம் பச்யேத்-என்று
த்யானம் கை கூட அவசியம் -ப்ரஹ்ம வித்யையும் கை கூட அவசியம் –
சாஸ்த்ரங்களில் விதிக்கப் பட்ட கர்மங்களை இயற்றுவதே கர்ண இந்த்ரியங்களின் பணி
சாஸ்த்ரங்களில் விதிக்கப் படாதவற்றையும் விலக்கப் பட்டவற்றையும் பிரயோஜனம் இல்லாத வற்றையும் செய்யாமல் இருப்பதே சமம் தமம் ஆகும்
விதிக்கப் பட்ட கர்மங்கள் பகவத் ஆராதன ரூபம் -இத்தை செய்வதால் பர ப்ரஹ்மம் மகிழ்ந்து கடாஷம் காரணமாகவே பூர்வ ஜன்ம வாசனைகள் அழியும்
எனக்கே க்ருஹச்தாஸ்ரமத்தில் உள்ளாருக்கும் சமம் தமம் போன்ற ஆத்ம குணங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்றதாயிற்று –

——————————————————————————————————————————————-

அதிகரணம் -7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் -பிராண வித்யை கூடின ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே அனைத்து வித உணவும் அநு மதிக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது

————————————————————

3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –

ப்ருஹத் -6-1-14-ந ஹவாஸ்ய அன்னம் ஜக்தம் பவதி நா நன்னம் பரிக்ரஹீதம் பவதி -என்றும்
சாந்தோக்யம் -5-2-1-ந ஹவா ஏவம் விதி கிஞ்சித் அநன்னம் பவதி -என்றும் சொல்லிற்றே
சாந்தோக்யத்தில் ஒரு கதை குரு தேசத்தில் பஞ்ச நிலையில் உஷஸ்தி ப்ரஹ்ம ஞானி தொடர்ந்து த்யானம் செய்ய பக்கத்து கிராமம் போக
அங்கே யானைப்பாகன் வேக வைத்த கொள்ளை கொடுக்க அத்தை உண்டு உயிர் தரித்தார்
அடுத்து யானைப் பாகன் தண்ணீரை அளிக்க அத்தை குடிக்க மறுத்து -உச்சிஷ்டம் மே பீதம் ஸ்யாத் -சாந்தோக்யம் -1-10-3-
உயிர் தரிக்க அது அவசியம் ஆயிற்று உண்டேன்
சாந்தோக்யம் -1-10-4-ந வா அஜீவிஷ்ய மிமா நகா தன்காமோ ம உதபானம் -இந்த தண்ணீர் பருகுவது விருப்பமே -உயிர் தரிக்க அல்லவே
மீதம் இருந்த கொள்ளை மனைவியிடம் கொடுத்து வைத்து அடுத்த நாளும் உயிர் பிரியும் ஆபத்திலே உண்டார்
இத்தால் ப்ரஹ்ம வித்யை கை வந்தவருக்கும் உயிர் பிரியும் நிலையில் அனைத்தும் கொள்ளத் தக்கது என்னும் போது ப்ரஹ்ம வித்யை இல்லாதவனுக்கும் அப்படியே என்று சொல்லவும் வேண்டுமோ –

———————————————————————————————————

3-3-29-அபாதாத் ச –

சாந்தோக்யம் -7-26-2-ஆஹார சுத்தௌ சத்வ சுத்தி சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி –
ஆபத்து காலத்தில் தள்ளப் படாத காரணத்தால் -அனைத்தும் அனுமதிக்கப் பட்டதாகும்

—————————————————————————————————————-

3-4-30-அபி ஸ்மர்யதே-

ஸ்ம்ருதியும் -பிராண சம்சயமா பந்த யோன்னமத்தி யதச்தத லிப்யதே ந சா பாபேன பத்மபத்ர இவாம் பஸா–தாமரை இல்லை தண்ணீர் போலே ஒட்டாது என்கிறது –

————————————————————————————

3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

விருப்பத்தின் படி அனைத்தையும் உண்ணும் செயலைத் தடுக்கும் வேத வாக்யம்-கட சம்ஹிதை -தஸ்மாத் ப்ராஹ்மண ஸூ ரம் ந பிபதி பாப்ம நா நோத்ஸ்ருஜா இதி -என்று
அந்தணர்கள் கள்ளைப் பருகாமல் -விருப்பத்தின் அடிப்படையில் -சொல்லப் பட்டது –

—————————————————————————–

அதிகரணம் -8- விஹி தத்வாதி கரணம் -யஜ்ஞம் போன்ற கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை மற்றும் க்ருஹஸ்தாஸ்ரம த்தின் அங்கமாகவே விதிக்கப் பட்டதால்
இவற்றை ப்ரஹ்ம நிஷ்டர்கள் மற்றும் கிருஹஸ்தர்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி

யஜ்ஞம் போன்ற கர்மங்கள் மோஷத்தில் இச்சை இல்லாத க்ருஹச்தாஸ்ரமத்தில் உள்ளவர்களுக்கும் அனுஷ்டிக்க வேண்டுமா
ஆஸ்ரம கர்ம அபி -அந்தந்த ஆஸ்ரமத்தில் விதிக்கப் பட்டதை இயற்ற வேண்டும் -ஆபஸ்தம்ப ஸூ த்ரம் -3-14-11-யாவஜ் ஜீவனம் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி-நித்ய கர்மாவை போன்று விதிக்கப் பட்டுள்ளது
ப்ருஹத் -4-4-22-தமேவம் வேத அநு வசநேன -வேதங்கள் மூலம் அறிய முயல்கின்றனர் -இவற்றின் மூலம் கர்மங்களை வித்யைக்கு அங்கமாக கூறப்பட்டன –
ஆக க்ருஹச்தர்களும் யஜ்ஞம் முதலானவற்றை இயற்ற வேண்டும் –

——————————————————————————————————————————————-

3-4-33-சஹ காரித்வேன ச

ப்ரஹ்ம வித்யைக்கு கர்மங்கள் அங்கமாக துணையாக இருப்பதனால் -க்ரஹச்தர்களால் அன்றாடம் இயற்றப்படும் யஜ்ஞம் முமுஷூக்களால் இயற்றப் படும் பொழுது ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் ஆகும் என்றதாயிற்று

————————————————————————————

3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —

யஜ்ஞம் முதலானவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் ஆனாலும் க்ருஹ்ஸ்ராமத்துக்கு அங்கமானாலும் கர்ம ஸ்வரூபங்களில் வேறுபாடு இல்லை
அப்படி இருப்பதாக ஸ்ருதிகளில் சொல்லாமையால் –

—————————————————————————

3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

தைத்ரிய நாராயண வல்லி-தர்மேண பாபம் அப நுததி–தடையாக உள்ள பாபங்களை நீக்குகிறான்
மனத் தூய்மை உண்டாக்கி -வித்யை உண்டாகி ஓங்கி வளர்கிறது
எனவே வித்யைகளின் அங்கமாகவும் ஆஸ்ரமத்தின் அங்கமாகவும் யஜ்ஞம் போன்றவை உள்ளன –

————————————————————————————————————————————————————-

அதிகரணம் -9-விதுராதிகரணம் -எந்த ஆச்ரமத்திலும் இல்லாத விதுரர்களுக்கும் ப்ரஹ்ம விதையில் அதிகாரம் உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
விதுரர் க்ருஹஸ்ராமத்தில் இருந்து மனைவியை இழந்த பின்னர் சன்யாசமோ வானப்ரச்தாமோ கைக் கொள்ளாமல் -அநாஸ்ரமி-என்பர் –

—————————————————————————–

3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே

ரைக்வர் பீஷ்மர் சம்வர்த்தர் – போன்றவர்களிடம் கண்டோம் –
ப்ருஹத் -4-4-22- யஜ்ஞேன தானேன தபஸா நாசகேன-யஜ்ஞம் தபஸ் தானம் மூலம் –
எந்த வித ஆஸ்ரமத்தில் இல்லாதது இருந்தும் தானம் -ஜபம் உபவாசம் மூலம் ப்ரஹ்ம வித்யை அடையலாமே –

—————————————————————————-

3-4-37-அபி ஸ்மர்யதே –

மனு ஸ்ம்ருதி -2-87-ஜப்யேநாபி ச சம்சித்யேத் ப்ராஹ்மணோ
நாத்ர சம்சய குர்யாத் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே –என்று சம்சித்தயேத் -தகுந்த நிலையை ஜபம் மூலமே அடைகிறான் என்றது

———————————————————————————–

3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –

ப்ரசன உபநிஷத் -1-10-தபஸா ப்ரஹ்ம சர்யேண ச்ரத்தயா வித்யயா ஆத்மானம் அன்விஷ்யேத்-

——————————————————————————–

3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

ஆஸ்ரமத்தில் இருப்பதே சிறந்தது
தஷ ஸ்ம்ருதி 1-10-அநாஸ்ரமீ ந திஷ்டேத்துதி நமேகமபி த்விஜ-என்றதே

————————————————————————-

அதிகரணம்-10-தத் பூதாதிகரணம் –ப்ரஹ்மச்சாரி வானப்ரஸ்தன் சந்நியாசி ஆகியவர்கள் ஆச்ரமன்களைக் கைவுஇட நேர்ந்தால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————————–

3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —

ஆஸ்ரமங்களில் இருந்து நழுவினால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை -ஜைமினியும் இவ்வாறே கருதுகிறார்
கிருஹஸ்தர் நாவி தானம் செய்து ப்ரஹ்ம விதியை அடைவது போலே மூவரும் அடையலாம் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல சாந்தோக்யம் -2-22-1- பிராமசார்யாசார்யா குல வாஸீ த்ருதீயோ அத்யந்தம் ஆத்மநாசார்ய குலே அவசாதயன் -என்றும்
அரண்யமியாத் ததோ ந புரேயாத்-என்றும் சந்த்யச்யாக்னிம் ந புனராவர்த்தயேத்-என்றும் சொல்வதால் –

——————————————————————————-

3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்

பூர்வ மீமாம்சை -6-8-24-அவாகீர்ணி பசு பதநாநுமாநாத் தத யோகாத் -என்று பிராமசார்யத்தில் இருந்து நழுவினால் பிராயச் சித்தம் உண்டு என்கிறது என்பர் பூர்வ பஷி
அது சரியல்ல -அவர்கள் பதிதர்கள்-ஸ்திரீ தொடர்பு உள்ளவர்கள் என்று ஸ்ம்ருதியில் உள்ளதால்
ஆரூடோ நைஷ்டிக தர்மம் யஸ்து பிரச்யவதே த்விஜ பிராயச்சித்தம் ந பஸ்யாமி யேன கத்யேத் ஆத்மஹா -என்று
அவனுக்கு பிராயச் சித்தம் இல்லை என்பதால் –

——————————————————————————-

3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
ப்ரகுமச்சார்யத்தில் இருந்து நழுவினால் சிறிய பாவம் என்பர் பூர்வ பஷி -பிராயச்சித்தம் செய்து அதிகாரம் பெறலாம் என்பர் பூர்வ பஷி –

—————————————————————————-

3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அப்படி அல்ல -இவர்கள் ப்ரஹ்ம வித்யைக்கு புறம்பு ஆனவர்களே ஆவார் -ஆத்மாவைக் கொன்றவன் போலே
இவர்கள் உடன் தொடர்பும் கூடாது –

————————————————————————————–

அதிகரணம் -11-ஸ்வாம்யதிகரணம் -ருத்விக்கால் -யாகம் யஜ்ஞம் போன்றவற்றை நடத்தி வைப்பவர் -உத்கீத உபாசனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————

3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய

உபாசனையின் பலன் யாருக்கு கிட்டுகிறதோ அவனே அந்த உபாசனைகளையும் இயற்ற வேண்டும்
உத்கீத உபாசனம் தடைகளை நீக்கி வீர்யம் அளிப்பதால் யஜமானன் மட்டுமே உரிமை உள்ளவன் ஆவான்

——————————————————————————–

3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

ருத்விக்கே செய்ய வேண்டும் -ருத்விஜோ வ்ருணீதே ருத்விக்ப்யோ தஷிணாம் ததாதி -இதற்க்ஜ்காக அன்றோ தஷ்ணை அளிக்கின்றான்
ருத்விக்கு மட்டுமே அதனை இயற்றும் தகுதி உள்ளது -எனவே அவனே இயற்ற வேண்டும்

———————————————————————————-

அதிகரணம் -12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -பால்யம் பாண்டித்தியம் மௌனம் ஆகியவை யஜ்ஞம் போன்ற ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ளன என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————-

3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்

ப்ருஹத் -3-5-1-தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத் பால்யம் ச பாண்டித்தியம் ச நிர்வித்யாத முனி -என்று
பால்யம் பாண்டித்தியம் மௌனம் விதிக்கப்பட்டவையா வெறுமனே கூறப்பட்டவையா
ஞானம் என்பதை குறித்தே உள்ளன இவை விதி இல்லை என்பர் பூர்வ பஷி -அப்படி அல்ல
சமம் தமம் போலேவே மௌனம் சரவணம் மனனம் -வித்யாதிவத் -விதி +ஆதிவத்
இவற்றை ப்ருஹத் -4-4-22 -தமேதம் வேதாநுவசநேன ப்ராஹ்மண விவிதிஷந்தி யஜ்ஞேன தானேன தபஸா நாசகேன-என்றும் -4-4-23-சாந்தோ தாந்தோ -என்றும்
சமம் தமம் அங்கங்கள் போலே -2-4-5-ச்ரோதவ்யோ மந்தவ்யோ –3-5-1- தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்தியம் நிர்வித்ய -என்று இவையும் அங்கங்கள் ஆகும்
பஷேண-மௌனம் -கெட்டவற்றை மீண்டும் சிந்தித்தல் -ப்ரஹ்மம் தூய்மையானது பூரணமானது என்று அறிந்து
சரவணம் மனனம் மூலம் உபாசனத்தை அடைந்து பக்தி காரணமாக சத்வ குணத்தால் உறுதி யாக்கி –
ஸ்ரீ கீதை -11-530 நாஹம் வேதை என்றும் -11-54-பக்த்யாது அனந்யா சக்த்யா ஜ்ஞாதும் -எனபது போலே
ச்வேதாச்வதர -6-23-யத்ய தேவே பரா பக்தி -என்றும் கட -2-23/முண்டக -3-2-3- நாயமாத்மா ப்ரவசநேன-என்றும் ப்ருஹத் -3-5-1-பால்யேன திஷ்டாசேத் -என்றும் பால்யம் ச பண்டிதம் ச நிர்வித்ய அத முனி ஸ்யாத்-என்றும்
ச ப்ராஹ்மணா கேன ஸ்யாத் -யேன ஸ்யாத் தேன ஈத்ருச ஏவ-என்று மௌனம் மட்டுமே உபாயம்-அனைத்து ஆச்ரமங்களுக்கு – என்றதே –
சாந்தோக்யம் -அபிசமாவ்ருத்ய குடும்பே சுசௌ தேசே –ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபிசம்பத்யதே ந ச புநரா வர்த்ததே -என்று
க்ருஹஸ்ராமத்துக்கு சொன்னது அனைத்துக்கும் சொன்னதற்கு உப லஷணம்

———————————————————————————————————————————-

3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார

அனைத்து ஆச்ரமங்களுக்கும் உண்டு என்கிறது
ப்ருஹத் -3-5-1-ப்ரஹ்மணா புத்ரைஷணாயாச்ச வித்தை ஷணாயாச்ச லோகை ஷணாயாச்ச வ்யுத்தாய பிஷாசர்யம் சரத்தி என்று சன்யாச ஆச்ரமத்துக்கும்
தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்தியம் நிர்வித்ய என்றும் கூறிற்று

——————————————————————-

3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

மௌனம் போன்று ப்ரஹ்மத்தை அடைதல் அனைத்து ஆச்ரமங்களுக்கும் உள்ளது
யஜ்ஞம் போன்றவற்றை போன்று பாண்டித்தியம் முதலானவையும் ப்ரஹ்ம விதைக்கு அங்கம் என்றதாயிற்று –

————————————————————

அதிகரணம் -13-அநாவிஷ்கராதி கரணம் -பால்யம் எனபது ப்ரஹ்ம ஞானிகள் தங்கள் மேன்மைகளை வெளிக் காட்டாமல் உள்ளதே ஆகும் -என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————

3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

வேத அத்யயனம் பண்ணி அர்த்தங்களை அறிந்த பின்பு பால்யத்துடன் -ஏதும் அறியாத மாதிரி -பாலகனின் தன்மையையே பாலகன் என்கிறது டம்பம் போன்றவற்றை வெளிக் காட்டாமல் –
கட உபநிஷத் -2-23-நாவிரதோ துச்சரிதாத் நாசாந்தோ நாசமாஹித நாசாந்த மா நசோ வாபி ப்ரஜ்ஞாநேநைநம் ஆப்நுயாத்-என்றும்
சாந்தோக்யம் -7-26-2–ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்றும் சொல்லிற்றே-

————————————————————————————————————————————————–

அதிகரணம் -14-ஐஹிகாதிகரணம் –இந்த பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடை இல்லாமல் இருந்தால் மட்டுமே உண்டாகும் -தடை இருந்தால் உண்டாகாது என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————————————————————————

3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

வித்யைகள் மோஷம் அளிக்கவும் உலக பயன்கள் அளிக்கவும்-புண்ய கர்மங்கள் முடிந்த உடனே பலமா கால தாமதம் உண்டா
ஸ்ரீ கீதை -7-16-சதுர்விதா பஜந்தா மாம் ஜநா ஸூ க்ருதி நோர்ஜுனா
வலிமையான பூர்வ கர்மங்கள் மூலம் தடை ஏற்படலாம் -சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ஸ்ராத்த யோபநிஷதா ததேவ வீர்ய வத்தரம்
உத்கீத வித்யையுடன் கூடிய கர்மங்களில் உண்டாகும் தடை ஏதும் இல்லை
ஆகவே புண்ய கர்மங்கள் செய்த உடனே பலன் உண்டாகும் என்பதில் விதி முறை இல்லை என்றதாயிற்று –

——————————————————————————————————————————–

அதிகரணம் -15-முக்தி பலாதிகரணம் –மோஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்கும் தடை ஏற்படா விடில் பலன்
உடனே கிட்டும் -தடை ஏற்பட்டால் தாமதமாகவே ஏற்படும் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————————————

3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

மிகப் பெரிய புண்ய கர்மங்கள் இயற்றினாலும் அந்த கர்மங்கள் முடிந்த உடனேயே ப்ரஹ்ம உபாசனம் கைக் கூட வேண்டிய அவசியம் இல்லை
வலிமையான தடைகள் ஏதும் இல்லாமல் மட்டுமே பலன் உடனடியாக ஏற்படும்
ப்ரஹ்ம ஞானிகளுக்கு அபசாரம் செய்தல் போன்ற பாபங்கள் மற்றவற்றை விட மிகவும் வலிமையானதாகும்
ததா வஸ்தாவ்ருதே-இரண்டு முறை படித்தது இந்த அத்யாயம் நியமனம் என்பதைக் காட்டிற்று –

————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்-3-3– மூன்றாம் அத்யாயம் -சாதனா அத்யாயம்–மூன்றாம் பாதம் -குண உப சம்ஹார பாதம் –

June 13, 2015

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————————————————————————-

சாதனா அத்யாயம்-குண உப சம்ஹார பாதம் -உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும் அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன –
இதில் 26 அதிகரணங்கள்/  64  ஸூத்ரங்கள் உள்ளன –

——————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூ த்ரங்கள்–வைச்வாநர வித்யை-தஹரா வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும் அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது  –

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூ த்ரங்கள்–சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள் வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூ த்ரம்-சாந்தோக்யம் கௌ ஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை எனபது ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூ த்ரங்கள்-பிரமம் ஆனந்தமயம் -அவிகாராய -ஞானமயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது  –

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூ த்ரம்-ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூ த்ரம்–சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூ த்ரங்கள்-ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை -கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

எட்டாவது  அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூ த்ரம்-கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் -ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூ த்ரம்–சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ விதைகளில் ரூபம் வேறுபடுவதால் அவை வெவ்ப்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூ த்ரம் -தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள்  ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூ த்ரம் –புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை வீடு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூ த்ரங்கள்- -உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூ த்ரம்-அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூ த்ரங்கள்–ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூ த்ரங்கள்–ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூ த்ரங்கள்–சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூ த்ரம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூ த்ரம்–அபஹத பாபமா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -19-நாராயண அநுவாகம் ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூ த்ரங்கள் -அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூ த்ரங்கள் –சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூ த்ரங்கள் –சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூ த்ரம் -சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூ த்ரம் -சத் விதியை தஹர விதியை பொஇன்ட்ர பிரம்மா விதைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூ த்ரங்கள் – -ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூ த்ரங்கள்-உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-

——————————————————————————————————————————-

முதல் அதிகரணம் –சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம் -வைச்வாநர வித்யை-தஹரா வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும் அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது  –

——————————————–

3-3-1-சர்வ வேதாந்த ப்ரத்யயம் சோத நாத்ய விசேஷாத்–

வெவ்வேறு சாகைகளில் படிக்கப்படும் விதைகள் ஒரே பேராக இருந்தாலும் ஒன்றே என்னக் கூடாது என்பர் பூர்வ பஷி
பிரகரண பேதம் இருக்குமே
அவிசேஷ புன சரவணம் -வேறுபாடு இல்லாமல் மீண்டும் படிக்கப் படுத்தல் -மீண்டும்படித்தது வீணாகப் போகக் கூடாதே என்பதால் இரண்டு முறை படிப்பது வெவ்வேறே என்று கொள்ள வேண்டும் என்பர்
அதர்வண வேதம் சிரோ விரதம் சொல்லும் முண்டக உபநிஷத் -3-2-10-தோஷாமே வைதாம் ப்ரஹ்ம வித்யாம் வதேத சிரோவ்ரதாம் விதிவைத் பைஸ்து சீரணம் -என்று
யார் ஒருவன் முறைப்படி தலையிலே தீயை சட்டியில் வைத்து தாங்கும் விரதம் ஏற்கிறானோ அவனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க வேண்டும்
வேறு இடங்களில் இப்படி இல்லையே என்பர்
சோதனா -என்றால் விதி வாக்கியம்
சோதனா +ஆதி +அவிசேஷாத்–உபாசீத வித்யாத் -உபாசனைக்கு அறிய வேண்டும்
ஜைமினி ஸூ த்ரம்-2-4-9–ஏகம் வா சம்யோக ரூப சோதநாக்ய விசேஷாத் –என்று தொடர்பு விதி வாக்கியம் ரூபம் பெயர் வேறுபடாமல் உள்ளதால் ஒன்றே ஆகும் என்பதாம்
சாந்தோக்யத்திலும் வாஜசனே யாகத்திலும் வைச்வா நர வித்யை குறித்து -இது வைச்வா நரம் உபாசீதே -ஒரே மாதிரி உள்ளது
இரண்டிலும் உபாசிக்கப்படும் பரமாத்மா வைச்வா நரம் என்றும் ப்ரஹ்மத்தை குறித்தே பலனாகவும் கூறப்படுகின்றது
இப்படி வேவேறே சாகைகளில் படிக்கப் பட்டாலும் வித்யை ஒன்றே எனபது தெளிவாகும்

—————————————————————————————————————————

3-3-2- பேதாத் ந இதி சேத் ஏகச்யாம் அபி –

ஒரே வித்யை பல சாகைகளில் கூறப் பட்டு இருந்தாலும் உபாசகர்கள் வெவ்வேறே என்பதால்
சிரோ விரதம் அதர்வண வேதத்தில் அங்கமாக கூறப்பட்டுள்ளதே என்றால்-

———————————————————————————————————————————-

3-3-3-ஸ்வாத்யா யஸ்ய ததான்வே ஹி சமாசாரே அதிகாராத் ச சவவத் ச தந் நியம –

வேத அத்யயனம் செய்யத் தகுதி யாகும் பொருட்டு இத்தை அங்கமாக விதிக்கின்றது -சமாசாரம் என்ற கிரந்தம் இத்தை கூறும் ஸ்வ ஹோமங்கள் போலே –
முண்டக உபநிஷத் -3-2-11- நைதத சீர்ண வராதோ அதியீத -என்று சிரோ வ்ரதத்தை பின்பற்றாதவன் இந்த வேதத்தை அத்யயனம் செய்யக் கூடாது என்று விதிக்கிறது
3-2-10-ஏதாம் ப்ரஹ்ம வித்யாம் வதேத -என்று ப்ரஹ்ம வித்யைக்கும் இப்படியே என்கிறது
சப்த சூரியம் தொடங்கி சதோனம் எனபது வரை ஸ்வ ஹோமங்கள் அனைத்தும் மற்ற ஹோமங்கள் போன்று மூன்று அக்னியில்
இயற்றப் படாமல் ஒரே அக்னியில் இயற்றப் படும் -அதர்வண வேதத்துக்கு மட்டும் இது எப்படியோ அப்படியே சிரோ விரதமும் -என்பதால் இது வேறு விதைக் கூற வில்லை

——————————————————————————————————————————-

3-3-4- தர்சயதி ச

வேதம் உணர்த்துகிறது -தஹர வித்யை பல சாகைகளில் கூறப் பட்டு இருந்தாலும் ஒன்றே என்று உணர்த்துகிறது
சாந்தோக்யம் -8-1-1-தஸ்மின் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம்-தஹர ஆகாயம் என்பதற்குள் இருப்பதுவும் தேடப்படுவதுவும் எது என்று கேட்டு
8-1-2- கிம் தத்ர வித்யதே யதன்வேஷ்டவ்யம் -என்று தேடத் தகுந்ததாக எது என்று கேட்டு
அபஹதபாப்மா போன்ற எட்டு தன்மைகளுடன் கூடிய பரமாத்மாவே என்றது
தைத்ரிய நாராயண வல்லி சாந்தோக்ய உபநிஷத்தும் -12-3-தத்ர அபி தஹரம் ககனம் விசோகஸ் தஸ்மின் யதன் தாஸ்ததுபா ஸி தவ்யம் -என்று
தஹா என்னும் மாகாசம் தோஷம் வருத்தம் அற்று உள்ளது அதனுள் உள்ள பரமாத்மாவே உபாசிக்கத் தக்கவன் என்றது
இத்தால் ஒன்றே என்று நிரூபணம் ஆயிற்று-

——————————————————————————————————————————-

3-3-5-உப சம்ஹார அர்த்தா பேதாத் விதி சேஷவத் சமா நே ச

ஒன்றில் கூறிய வித்யையின் குணங்கள் அனைத்திலும் சேர்த்து கொள்ள வேண்டும்
ச என்று இதனை வலி உறுத்துகிறது

———————————————————————————————————————————————————————————————————–

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள் வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது

——————————————————-

எதிரிகளை வீழ்த்த சாம கானத்தில்பாடும் உத்கீதம் பகுதி வேதத்தில் உள்ளது
அசுரர்களை வீழ்த்த தேவர்கள் இத்தை கைக் கொண்டார்கள்
முதலில் வாக் தேவதை கொண்டு பாட -வாக்கின் தோஷங்களால் முயற்சி பலிக்க வில்லை இப்படியே பல உறுப்புகளை கொண்டு முயன்றும் பலிக்க வில்லை
இறுதியில் பிராணன் கொண்டு பாடி வென்றனர் -இத்தால் எல்லா உறுப்புக்களும் தோஷத்துடன் கூடியவை என்றும் பிராணன் மட்டுமே தோஷம் அற்றது என்றும் சொல்லிற்று ஆயிற்று

3-3-6-அந்ய தாத்வம் சப்தாதி சேத் ந அவிசேஷாத் —

வேத வரி மூலம் வேற்பாடு விளங்குகிறது எனபது பொருந்தாது -வேறுபாடு இல்லாமல் உள்ளதால் –
ப்ருஹத் உபநிஷத் -1-3-1-த்வயா ஹ பிரஜாபத்யா தேவாச்ச அஸூராச்ச –தே ஹ தேவா ஊசு ஹந்தா அஸூரான் யஜ்ஞே உத்கீதேன அத்யயாமா -என்றும்
1-3-7-அத ஹ ஏனம் ஆ சன்யம் பிராண மூசு –பவத்யாத்மநா பராஸ்யத் விஷன் ப்ராத்ருவ்யோ பவதி ய ஏவம் வேத -என்றது
சாந்தோக்யம் -1-2-1- தேவா ஸூராஹைவ யத்ர சம்யேதிரே–தத் தஹ தேவா உத்கீதம் ஆஜஹ்ரு அநேன ஏ நான் அபிஹநிஷ்யாமி -என்றும்
1-2-7-அத ஹ ஏவாயம் முக்யப்ராணம் தம் உத்கீதம் உபாசாம் சக்ரிரே -என்றும்
1-2-8-யதா அஸ்மா நமாகணம் ருத்வா விதயம் சதே ய ஏவம் ஹைவ சவித்வம்சதே ய ஏவம் விதி பாபம் காமயதே
இங்கு உபாசனம் விதிக்காமல் உத்கீததுக்கு பலன் சொன்னது அதன் மீது ஆசை உண்டாக்கவே
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-3-25- அர்த்தவாதம் -ஆசை உண்டாக்குவதும் ஒரு வகை பிரமாணம் என்று அறியலாம்-

பூர்வ பஷம்-இரண்டு வித்யையும் ஒன்றே -முக்ய பிராணனை ஏறிட்டுக் கொண்டு உபாசிப்பதாலும் -சத்ருக்களை அளிப்பதுண் பலன் என்பதாலும் –
ஆனால் ரூபத்தில் பேத முள்ளது என்பீர் ஆகில் -அதாவது
ப்ருஹத் உபநிஷத்தில் -வாஜச நேயகம் -அத ஹ இமம் ஆசந்யம் பிராணம் ஊசு த்வம் ந உத்காய ததா இதி தேப்ய ஏஷ பிராண உதகாயத் -என்று –ய ஏவம் வேத -என்று
உத்கீதத்தை கர்த்தாவின் மீது ஏற்றிக் கூறுவதாக -பாடுபவனை பிராணன் என்று கொண்டு அவனைத் த்யாநிப்பதாகக் கூறுகிறது
சாந்தோக்யத்தில் 1-2-8-அதஹ அயம் முக்ய பிராண தம் உத்கீதம் உபாசம் சக்ரிரே —-ய ஏவம் விதி பாபம் காமயதே ஏவ-என்று உத்கீத கர்மம் மீது பிராணன் ஏறிட்டு கூறப் படுவதால் ரூபம் வேறே என்றால்
பூர்வ பஷி வாதம் –

இரண்டிலும் அசுரர்களை அழிப்பதே குறிக்கோள் உண்டு-உத்கீதம் கொண்டே அழிக்கிறது
வாஜச நேயகத்தில் -ப்ருஹத் உபநிஷத் -9-3-1-தே ஹ தேவா ஊசு ஹந்தா அ ஸூ ரான் யஜ்ஞே உத்கீதேந -என்றும்
சாந்தோக்யத்தில்-1-2-10-தத்த தேவா உத்கீதம் ஆஜஹ்ரு அநேநைவ ஏ நான் அபிஹா நிஷ்யாம -என்று தொடக்க வரிகள் ஓன்று போலே உள்ளன
பின்னால் உள்ள ப்ருஹத் உபநிஷத்தும் -1-3-7-தேப்ய எஸ பிராண உதகாயத் -உத்கீதமே வஸ்துவாக இருந்த போதிலும் இங்கு கர்த்தாவாகவும் கூறப்பட்டது-உணவே சமைக்கிறது போலே -ஆகவே இரண்டு வித்யைகளும் ஒன்றே நஎன்பர் பூர்வ பஷி

—————————————————————————————————————————

இனி சித்தாந்தம்
3-3-7- ந வா பிரகரண பேதாத் பரோவரீயஸ் த்வாதிவத் —

இரண்டிலும் பிரகாரம் வேறுபட்டு உள்ளது -குணத்தில் வேறுபாடு கூறுவது போன்று
ந வா-பதங்கள் பூர்வ பஷத்தை தள்ளுகிறது-பிரகரண பேதம் உண்டே
சாந்தோக்யம் -1-1-1-ஓம் இதி ஏதத் அஷரம் உத்கீதம் உபாசன -என்று உத்கீத அவயவமான ஓம் குறித்து உபாசனை தொடங்கப் படுகிறது -மேலே தேவர்கள் முக்ய பிராணனை உபாசனம் செய்தார்கள் என்றது
ப்ருஹத் தில் இவ்விதமாக தொடங்கும் பிரகரணம் இல்லை
விஷய பேதமும் ரூப பேதமும் உண்டே -இரண்டு வித்யைகளும் ஓன்று அல்ல
சாந்தோக்யத்தின் தொடக்கத்தில் உத்கீத அவயவமான பிரணவத்தில் பரமாத்மாவை ஏறிட்டு உபாசிக்கும்படி
1-6-6-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்ய மய புருஷோ த்ருச்யதே -பொன்மயமான புருஷன் என்றும்
1-9-2-ச ஏஷ பரோவரீயான் உத்கீத -சிறந்த குணம் கொண்டவர்களில் சிறந்தவன் என்றும் இரு விதமான உபாசனைகள் உண்டே –

———————————————————————————————————————–

3-3-8-சம்ஜ்ஞாத சேத தத் உக்தம் அஸ்தி து தத் அபி —

பெயர் ஒன்றாக இருந்தாலும் வித்யைகள் ஒன்றே என்று சொல்ல முடியாதே -வெவ்வேறு விதிகள் உள்ள இடங்களில் இது போலே காணலாம் என்றவாறு
உத்கீத வித்யை-பெயர் ஒன்றாக இருந்தாலம் வெவ்வேறே என்று முன்பு பார்த்தோம்
அக்னிஹோத்ரம் எனபது அன்றாடம் இயற்றப் படும் அக்னி ஹோதரத்தையும் குண்ட பாயிகளின் அய நாக்னி ஹோத்ரம் இரண்டையும் குறிக்கும்
சாந்தோக்ய உபநிஷத்தில் முதல் பிரபாடகத்தில் பல வித்யைகளையும் உத்கீத வித்யை என்றே கூறப்படுவதை பார்க்கிறோம்-

————————————————————————————————————–

3-3-9-வ்யாப்தேச்ச சமஞ்ஜசம் –

பல இடங்களில் கூறப்படுவதால் நடுவில் கூறப்படுவதும் பொருந்தும்
சாந்தோக்யம் முதல் பிரபாடகத்தில் உத்கீதத்தின் அவயவமான பிரணவத்தைக் குறித்து பேசி மேலே -1-2-1-தத்த தேவா உத்கீதமா ஜஹ்ரு-என்றது
அங்கும் பிரணவமே உபாசிக்கத் தக்கது என்று கூறப்பட்டதாக அறிய வேண்டும்
ஆக சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்தில் சொல்லிய உத்கீத இரண்டு வித்யைகளும் வெவ்வேறு என்றவாறு-

————————————————————————————————————————-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -சாந்தோக்யம் கௌ ஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை எனபது ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————–

3-3-10-சர்வாபேதாத் அந்யத்ர இமே —

சாந்தோக்யத்திலும்-5-1-1- -வாஜச நேயகத்திலும் -ப்ருஹத் -6-1-1-பிராண வித்யை கூறப்படுகிறது
யோ ஹ வை ஜ்யேஷ்டம் ச ஸ்ரேஷ்டம் ச வேத ஜ்யேஷ்டச்ச ஹ வை ஸ்ரேஷ்டச்ச பவதி ப்ராணோ வாவ ஜ்யேஷ்டச்ச ஸ்ரேஷ்டச்ச -என்று
பிராணன் மூத்ததாகவும் உயர்ந்ததாகவும் கூறப்பட்டு உபாசிக்கத் தகுந்ததாக உணர்த்தப் பட்டது
இதனைத் தொடர்ந்து வாக் இந்த்ரியத்திடம் செல்வம் வசிஷ்டம்
கண் இந்த்ரியத்திடம் நிலை நிறுத்தும் தன்மை பிரதிஷ்டம்
காது இந்த்ரியத்திடம் சேகரிக்கும் தன்மை சம்பத்
மனம் -ஆயதனம்-அனைத்துக்கும் இருப்பிடம்
அனைத்தும் பிராணனை சேர்ந்தவை என்றது
கௌ ஷீதகீ உபநிஷத்திலும் பிராணன் மூத்ததாகவும் உயர்ந்ததாகவும் சொல்லப் பட்டாலும் வாக்கு முதலானவற்றுக்கு
கூறப்பட்ட வசிஷ்டம் முதலான தன்மைகள் சொல்ல பட வில்லை
எனவே உபாசன ரூபம் மாறுபடுகிறது இரண்டும் வெவ்வேறே என்பர் பூர்வ பஷி
இரண்டும் ஒன்றே -சாந்தோக்யம்–5-1-6- -ஏதா ஹ வை தேவதா அஹம் ஸ்ரேயசி வ்யூதரே -என்றும் ப்ருஹத் -6-1-7-அஹம் ஸ்ரேயசே விவதமா நா -என்றும் விவாதம் செய்து பிராண வித்யை தொடங்குகிறது
மற்ற இந்த்ரியங்கள் வெளியேறினாலும் பிராணன் உடல் தொடர்ந்து செயல்பட
மற்ற இந்த்ரியங்கள் தங்கள் இருப்புக்கு பிராணனையே அண்டி உள்ளமை காட்டப் பட்டது
ஆக வசிஷ்டம் போன்ற தன்மைகள் பிராணனுக்கு உள்ளமை மறைமுகமாக இங்கும் கூறப்பட்டன
எனவே இரண்டுக்கும் பேதம் இல்லை என்றதாயிற்று

——————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் -பிரமம் ஆனந்தமயம் -அவிகாராய -ஞானமயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது  –

————————————————————-

3-3-11-ஆனந்தாதய ப்ரதா நஸய —

ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் -ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –
அனைத்து குனங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்
தைத்ரிய ஆரண்யகத்தில் -2-5-தஸ்ய ப்ரியமேவ சிர-பிரியத்தைத் தலையாகக் கொண்டு போன்ற வரிகள் உண்டே இது போன்றவையும் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டி வருமே என்றால் பதில் அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————

3-3-12-ப்ரிய சிரஸ் த்வாத்ய ப்ராப்தி உபச யாபச யௌ ஹி

அவசியம் இல்லை -காரணம் உறுப்பு பேதங்களை ஏற்றால் வளர்த்தல் குறைதல் போன்ற தோஷங்கள் வருமே
தைத்ரிய ஆனந்த வல்லி-2-1- சத்யம் ஞானம் ஆநந்தம் ப்ரஹ்ம-என்பதற்கு முரணாகி விடுமே

———————————————————————————————————————-
அனைத்து குணங்களையும் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டும் என்றால் அளவிறந்த எண்ணிற்ற கல்யாண குணங்களையும் படிக்க வேண்டி வருமே
கணக்கற்று உள்ளதால் இயலாதே என்றால் –
3-1-13-இதரே து அர்த்த சாமான்யாத் –

இதரே -ஆநந்தம் முதலானவைகள்
சத்யத்வம் ஞானத்வம் அனந்ததவம் அமலத்வம் –யதோ வா இமானி -தைத்ரியம் -3-1-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்ம
குணங்கள் குணியை விட்டுப் பிரியாதவை
காருண்யம் போன்றவை எந்த வித்யையில் படிக்கப் படுகின்றனவோ அங்கு மட்டும் படித்தால் போதும் என்றதாயிற்று-

ஆத்மா நம் ரதி நம் வித்தி -கட உபநிஷத் -3-3-ஆத்மாவுக்கு தேருக்கு உரிமையாளன் -தேர் வீரன் -சரீரம் தேர் -அறிவி தேரோட்டி -மனஸ் கடிவாளம் போன்று -உபாசனதுக்கு உதவ
ப்ரஹ்மாவுக்கு ப்ரிய சிரஸ்த்வம் போன்றவை எதற்கு என்ன
3-3-14-ஆத்யா நாய பிரயோஜன அபவாத் –

வேறு பயன் கூறப் படாததால் உபாசனையின் பொருட்டே -ஆத்யாநம் அல்லது அநு சிந்தனம் எனபது உபாசனத்தையும் குறிக்கும் –
இப்படிப்பட்ட உபாசனம் சாஸ்திர ஞானம் மூலம் கை கூடும் -இந்த ஞானம் வரவே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –
அன்னமயம் -புத்தியில் ஏறிட்டுக் கூறுவது போலே தஸ்ய இதம் ஏவ சிர –தஸ்ய பிராண ஏவ சிர -போலே உபாசனையின் பொருட்டே
பிரிய சிரஸ்த்வம் போன்றவை குணங்கள் அல்ல -என்றே கொள்ள வேண்டும் –

—————————————————————————————————————

3-3-15-ஆத்ம சப்தச்ச —

தைத்ரியம் -2-5-அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று ஆத்மா பதத்தினால் ஆனந்தமயன் கூறப்பட்டான்
ஆத்மாவுக்கு தலை வாழ் பக்கம் இல்லாததால் ப்ரஹ்மத்துக்கும் இல்லை
ஆகவே ப்ரிய சிரஸ்த்வம் குணம் இல்லை உபாசனையின் பொருட்டே படிக்கப் பட்டது
இதற்கு பூர்வ பஷ வாதம்
தைத்ரியம் -2-5–அந்யோந்தர ஆத்மா பிராணமய -என்றும் -2-3-அந்யோந்தர ஆத்மா மநோமய என்றும் அசேத வஸ்துக்களையும் ஆத்மா பதம் குறிக்க
பரமாத்மாவை அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று ஆத்மா பதம் எவ்வாறு குறிக்க இயலும்
அடுத்த ஸூ த்ரம் விடை அளிக்கிறது-

——————————————————————————————————————-

3-3-16-ஆத்மக்ருஹீதி இதரவத் உத்தராத் —

அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும் -மற்றைய இடங்களிலும் இப்படியே கொள்ளப் படுகிறது
ஐ தரேய உபநிஷத் -1-1-1-ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் –ச ஈஷத லோகாந்து ஸ்ருஜை -ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும்
உத்தரேத் -அடுத்து உள்ள வரிகளில் ஆனந்தமயமானவனான அவனே உலகைப் படைக்கிறான்
தைத்ரியம் -2-6-சோகாமயத பஹூஸ் யாம் ப்ரஜாயேய-ஆக ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும் என்றதாயிற்று-

———————————————————————————————————–

3-3-17-அந்வயாத் இதி சேத் ஸ்யாத் அவதாரணாத்-

இப்படி நிச்சயம் அறியலாம் எவ்விதம் என்றால் முன்பும் இவ்விதம் கூறப்பட்டதால் ஆகும்
இதற்கு முன்பும் தைத்ரியம் -2-1-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மந ஆகாச சம்பூத -இந்த பரமாத்மாவிடம் இருந்தே ஆகாயம் தோன்றிற்று
அன்னம் பிராணன் மநோ விஞ்ஞான மாயன் சொல்லி ஆனந்த மயனில் நிறுத்தி -ஆனந்தமயனான ப்ரஹ்மத்துக்கு அந்தர்யாமியாக யாரும் இல்லாததால் -அடுத்து-2-6- ச ஆகாமயதா-அவன் சங்கல்பித்தான் என்றது
ஆகவே பரமாத்மாவாக இல்லாத வஸ்துக்களுக்கும் ஆத்மா பத பிரயோகம் தோஷம் இல்லை-

——————————————————————————————————–

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————-

3-3-18-கார்யாக்யாநாத் அபூர்வம் —

சாந்தோக்யம் – 5-2-2-ச ஹோவாச கிம் மீ வாஸோ பவிஷ்யதீத்யா இதி ஹோசுஸ் தஸ்மாத் வா ஏதத சிஷ்யந்த புரஸ்தாத் உபரிஷ்டாச் சாத்பி பரிதததி சம்புகோ ஹ வாஸோ பவத்ய நக்நோ பவதி –
நீரே வஸ்த்ரமாக பிராணனுக்கு உள்ளது
இது போலே ப்ருஹத் உபநிஷத்திலும் -8-1-14-கிம் மீ வாஸ-என்றும் -ஆபோ வாஸ -என்றும் உள்ளது
தத் வித்வாம் சச் ச்ரோத்ரியா அசிஷ்யந்த ஆசாமந்த்ய சித்வா சாசாமந்த்யே தமே வததநமநகநம் குர்வந்தோ மன்யந்தே -என்றும்
ப்ருஹத் மாத்யந்தினத்தில் -தஸ்மாத் ஏவம்விதசிஷ்யன் நாசா மேதசித்வா சாசா மந்த்யேதமே வததநமநகநம் குருதே
ஆசமனம் செய்ய வேண்டும் எனபது விதி முறையே -பிராண வித்யையின் அங்கமாக-இது தவறான வாதம்
ஆசமன நீர் பிராணனுக்கு வஸ்த்ரம் ஆகிறது என்றதை உணர்த்தவே இங்கு கூறிற்று-

————————————————————————————————————-

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் -சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

—————————————————————————-

3-3-19-சமான ஏவம் ச அபேதாத் –

வாஹச நேயகத்தில் அக்னி ரகசியம் சாண்டில்ய வித்யை-சத்யம் ப்ரஹ்ம இதி உபாசீத அதகலு க்ரதும யோகம் புருஷ -என்று சத்தியத்தை பிரமமாக உபாசிக்க வேண்டும் என்று தொடங்கி
ச ஆத்மானம் உபாசீத மனோமயம் பிராண சரீரம் பாரூபம் சத்யா சங்கல்பம் ஆகாசாத்மானம் -என்று
தூய்மையான மனம் மூலம் அறியத் தக்கவனாக -பிராணனை சரீரமாகக் கொண்டவனாக – ஜ்யோதி ரூபமாக -ஆகாசத்துக்கு ஆத்மாவாக உள்ளவனாக -சத்ய சங்கல்பனாக –
உள்ள பரம் பொருளை உபாசிக்கக் கடவன் -என்று முடித்தது
இது போன்று ப்ருஹத் உபநிஷத்தில் -5-6-1- மநோமயோ அயம் புருஷ பாஸ் சத்ய தஸ்மின் அந்தர்ஹ்ருதயே யதா வ்ரீஹிர்வா யவோ வா ச ஏஷ சர்வச்ய வசீ சர்வஸ்யோசா நஸ் சர்வஸ் யாதிபதி சர்வம் இதம் ப்ரசாஸ்தி யதிதம் கிம் ச -என்று
இந்த புருஷன் தூய்மையான மனம் கொண்டு அறியத் தக்கவன் -தானாகவே பிரகாசமாக உள்ளவன் -மாற்றங்கள் அடையாதவன் -ஹிருதயத்தில் நெல் அளவு உள்ளவன் அனைவரையும் தன வசத்தில் படுத்தி நியமித்தபடி உள்ளவன் -என்றது
இரண்டு வித்யைகளிலும்-சம்யோகம் -பலன்களில் உள்ள தொடர்பும் –சோதனா -உபாசனை விதி முறைகளும் -ஆக்யா-பெயரும் -ஒன்றாக இருந்தாலும்
அனைவரையும் தன வசப்படுத்தும் தன்மையில் வேறுபாடு இருப்பதால் இரண்டும் வெவ்வேறு என்பர் பூர்வ பஷி
ஆனால் சமான ஏவம் -பொதுவாக உள்ளதால் இரண்டும் ஒன்றே
அனைத்தையும் வசப்படுத்தும் தன்மை சத்ய சங்கல்பத்தில் அடங்கும் -ஆகவே இரண்டும் ஒன்றே —

——————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் -கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் -ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————————–

3-3-20-சம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி

ப்ருஹத் உபநிஷத் -5-5-1-சத்யம் ப்ரஹ்ம என்று தொடக்கி –5-5-2-தத்யத் சத்யம் அசௌ ச ஆதித்யோ ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷோ யச்சாயம் தஷிணே அஷின் –என்று
சூர்ய மண்டலத்திலும் சூர்யனின் வலது கண்ணிலும் உள்ளான் அவனே உபாசிக்கத் தக்கவன் -என்றது
சூர்ய மண்டலத்தில் உள்ளதை தச்யோ உபநிஷதஹா என்றும் தச்யோ பநிஷதஹம் என்றும் அவன் பெயர் அஹ என்றும் அஹம் என்றும் கூறியது
உபாசிக்கு வஸ்து ஒன்றே என்பதால்-சத்யம் என்னும் ப்ரஹ்மமே — ரூப பேதம் இல்லை எனக்கே இரண்டும் ஒன்றே என்பர் பூர்வ பஷி
சித்தாந்தம் அடுத்த ஸூ த்ரத்தில்-

————————————————————————————————————–

3-3-21- ந வா விசேஷாத்

உபாசிக்கப்படும் வஸ்து வேறுபடுவதால் -இருக்கும் இட வேறுபாடு ரூப வேறுபாடு உள்ளதால் வெவ்வேறு வித்யைகள் என்றதாயிற்று

—————————————————————————————————————-

3-3-22-தர்சயதி ச –

சாந்தோக்யம் -1-7-5-தஸ்யை தஸ்ய தத் ஏவ ரூபம் யதமுஷ்ய ரூபம் -என்று ஒன்றில் உள்ள திரு மேனி மற்றதுக்கும் பொருந்தும் என்று தனித் தனியே சொல்வதால் இரண்டும் ஒன்றல்ல –

———————————————————————————————-

எட்டாவது  அதிகரணம் -சம்பந்தாதி கரணம் -ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை -கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————————–

3-2-23-சம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத —

தைத்ரியத்திலும் ராணாயணீய கிலயத்திலும்-ப்ரஹ்ம ஜ்யேஷ்டா வீரயா சம்ருதானி ப்ரஹ்மாக்ரே ஜ்யேஷ்டம் திவமாத தான ப்ரஹ்ம பூதானாம் ப்ரதமோத ஜஜ்ஞே தே நார்ஹதி ப்ரஹ்மணா ஸ்பர்த்திதும் க
இரண்டு தன்மைகளும் பொதுவாக உள்ளதால் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி
சித்தாந்தம் -இரண்டும் சமாஹார த்வந்த்வம் ஒன்றே ஆகும்
எங்கு எங்கு சேர இயலுமோ அங்கு கொள்ள வேண்டும் அனைத்து வித்யைகளிலும் இல்லை-

சாந்தோக்யம் -3-14-3-ஜ்யாயான் ப்ருதிவ்யா -பூமியைக் காட்டிலும் ப்ரஹ்மம் பெரியது என்றும்
சாந்தோக்யம் -8-1-3-யாவான் வா அயம் ஆகாச தாவ நேஷ அந்தர்ஹ்ருதய ஆகாச -இதயத்தில் உள்ள ஆகாசம் என்று கூறப்படும் பரம்பொருள் வெளியே உள்ள ஆகாசம் போன்று பெரியது
என்று பிரமத்தின் பெருமையை கூறுவதற்காக சொல்லப் பட்டன —

———————————————————————————————————————-

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் -சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ விதைகளில் ரூபம் வேறுபடுவதால் அவை வெவ்ப்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

3-2-24–புருஷ வித்யாயாம் அபி ச இதரேஷாம் அநாம்தாநாத்-

தைத்ரியம் -தச்யைவம் விதுஷோ யஜ்ஞஸ் யாத்மா யஹமான ச்ரத்தா பத்நீ சரீர மித்மமுரோ வேதிர் லோமானி -என்று
முன்பு கூறப்பட்ட சரணாகதிக்கு ஆத்மா -யஜமானன் -தெய்வ பக்தி -தர்ம பத்நீ –உடல்-சமித்து –மார்பு -யாகம் செய்யும் இடம் –உடல் ரோமங்கள் பரிஸ்தரணம்-என்றது
சாந்தோக்யத்தில்-3-16-1-புருஷவாவ யஜ்ஞஸ் தஸ்ய யாநி சதுர்விம்சதி வர்ஷாணி -என்று புருஷ ஆயுளின் 116 வருடங்களில் முதல் 24 வருடங்கள் –
இரண்டிலும் பெயர் ஒன்றே என்றும் உடல் உறுப்புக்களே யஜ்ஞத்தின் அங்கங்கள் என்றும் சொல்வதால் ரூபம் ஒன்றே
பலன் சாந்தோக்யத்தில் 116 வருடங்கள் வாழ்வான் என்கிறது
இரண்டும் ஒன்றே என்பர் பூர்வ பஷி
ஒரு சாகையிலே கூறப்பட்ட குணங்கள் மற்று ஒன்றில் இல்லாததால் இரண்டும் வெவ்வேறே ஆகும் –
தைத்ரியம் -யத்சாயம் ப்ராதர் மத்யந்தினம் ச தானி சவதானி -என்று காலை மாலை மதியம் -ஆகிய மூன்று ச்வனங்கள்
சாந்தோக்யம் இது போல் அன்றி -மனிதன் வாழ்வை மூன்றாகப் பிரித்து அதுவே ச்வனங்கள் என்றது
ச்வனம் எனபது ஒரு நாள் சூரிய உதயம் முதல் மறு நாள் சூர்ய உதயம் வரையில்
சாந்தோக்யத்தில் அசிசிஷா எனப்படும் உண்பதில் உள்ள விருப்பம் தீஷை என்று கூறப்படும் -தைத்ரியத்தில் இல்லை
சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பத்னி எனபது தைத்ரியத்தில் வேறு பொருளில் உண்டு
ஆக ரூப வேறுபாடுகள் உள்ளதால் இரண்டும் வெவ்வேறே ஆகும் -தைத்ரியத்தில் இதற்கு முந்திய பகுதியில் -ப்ரஹ்மணே த்வா மஹச ஓம் இதி ஆத்மானம் யுஞ்ஜீத -என்று
ப்ரஹ்மத்தில் ஓம் என்று கூறி உனது ஆத்மாவை அதில் சேர்ப்பாயாக -என்று தொடங்கப் பட்டது
இதற்கு பலனாக -ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி-பிரமத்தின் மேன்மையை அடைகின்றான் என்கிறது –
இத்தை தொடர்ந்து -தச்யைவம் விதுஷா -இப்படியாக அறிந்தவன் என்று தொடக்கி கூறப்பட்ட புருஷ வித்யை அந்த ப்ரஹ்ம உபாசனையே யஜ்ஞமாக உருவகப் படுத்திக் கூறப்படுவதாகக் கொள்ள வேண்டும்
ஆக ப்ரஹ்ம விதயையுடன் தொடர்பு உள்ளதால் பிரமத்தை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும்
பூர்வ மீமாம்சம் -பலவத் சந்நிதாவ பலம் ததங்கம் -இரண்டு விஷயங்கள் கூறப்பட்டு ஒன்றுக்கு பலன் சொல்லி ஒன்றுக்கு சொல்லாமல் இருந்தால் பலன் கூறப்படாதது கூறப்பட்டதுக்கு அங்கம் என்று கொள்ள வேண்டும் என்றது
இதன்மடி புருஷ வித்யை ப்ரஹ்ம வித்யையின் அங்கம் ஆகும்
ஆக புருஷ வித்யையின் பலமாக ப்ரஹ்மமே கூறப்பட்டதாகும்
ஆனால் சாந்தோக்யத்தில் நீண்ட ஆயுள் பலனாக சொல்லப் பட்டது -ரூப வேறுபாடும் பளா வேறுபாடும் உள்ளதால் இரண்டும் வெவ்வேறே -ஒன்றில் கூறப்பட்ட குணங்கள் மற்று ஒன்றில் இல்லை –

———————————————————————————————————————-

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம் -தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள்  ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

—————————————————–

3-3-25-வேதாத்யர்த்த பேதாத் –

அதர்வணம் தொடக்கத்தில் தைத்ரியம் -1-1-1-சுக்ரம் பிரவித்ய ஹ்ருதயம் ப்ரவத்ய -என்று விரோதியின் வீர்யத்தையும் இதயத்தையும் பிளக்க வேண்டும் -என்று ஓதுகின்றனர்
சாமவேதம் ரஹச்ய பிரமாணத்தை படிக்கத் தொடங்கும் பொழுது -தேவ சவித பிர ஸூ வ யஜ்ஞம் பிர ஸூவ -என்றுசவித தேவனே யஜ்ஞத்தை உண்டாக்குவாயாக -என்கிறார்கள்
காடகர்களும் தைத்ரரீயர்களும் -சம் நோ மித்ர சம் வருண -என்று மித்திரன் வருணன் போன்றவர்கள் நமக்கு நன்மை அளிக்கட்டும் என்கிறார்கள்
சாம்யாயநியர்கள் -ஸ்வேத அஸ்வோ ஹரி நீலோசி -நீயே வெண் குதிரை கருப்பும் கூட -என்கிறார்கள்
ஐதரேயர்கள் மஹா வ்ரத பிரமாணத்தை -இந்திர ஹ வை வ்ருத்ரம் ஹத்வா மஹான் அபவத் -என்று வரதனைக் கொன்ற இந்த்ரன் வலிமை அடைந்தான் என்பர்
கௌஷீதகியர்கள் மஹா வ்ரத ப்ராமானத்தை-பிரஜாபதிர் வைசம்வத்சர தஸ்ய ஏஷ ஆத்மா யத் மஹா வ்ரதம்–பிரஜாபதியே வருடம் -அவரது ஆத்மாவே இவ் வ்ரதம் – -என்பர்
யஜூர் வேதத்தை சார்ந்தவர்கள் -ப்ரவர்க்ய பிரமாணத்தை -தேவாவை சத்ரம் நிஷேது -தேவர்கள் யஜ்ஞம் நிறைந்த காலத்தை தொடங்கினர் -என்று தொடங்குகிறார்கள்
இவை எல்லாம் வித்யையின் அங்கமே என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல -பிளப்பது குறித்து வேறுபாடுகள் உண்டே -தைத்ரியம் -1-1-சுக்ரம் ப்ரவித்ய ஹ்ருதயம் ப்ரவித்ய ருதம் வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி -என்று
அங்கத்தைப் பிளந்து இதயத்தை பிளந்து நான் உண்மையைக் கூறுகிறேன் நான் உண்மையைக் கூறுகிறேன்
தைத்ரியம் -1-12-ருதமவாதிஷம் சத்யமவாதிஷம் -நான் சரியாக உண்மையாக கூறினேன் என்றும்
கட உபநிஷத் -1-1- தேஜஸ்வி நாவதீத மஸ்து மா வித் விஷாவஹை -நாம் ஓதும் மந்த்ரங்கள் வலுப் பெற வேணும் நாம் த்வேஷம் கொள்ளாமல் இருப்போம் -என்பர்
எதிரிகளை வீழ்த்த அபிசார மந்த்ரங்கள் உடன் கூடியதாக உள்ளதால் இவை வித்யைக்கு அங்கம் இல்லை என்றதாயிற்று –

——————————————————————————————————————–

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் –புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை வீடு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

————————————————————————————-

3-3-26-ஹாநௌ து உபாய ந சப்த சேஷத்வாத் குசாஸ் சந்தஸ் ஸ்துத்யுபகா நவத் தத் உக்தம் –

சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ரஹோர்முகாத் பிரமுஷ்ய தூத்வா சரீரமக்ரதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -என்று
குதிரையின் முடி விடுவது போலேயும் சந்தரன் ராகு முகத்தில் விடுபடுவது போலேயும் சரீரம் விட்டு பரமபதம் அடைவேனாக-என்கிறது
முண்டகம் -3-1-3-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சனபரமம் சாம்யம் உபைதி -என்றும்
சாத்யாயர சாகையில் -தஸ்ய புத்ரா சாயம் உபயந்தி ஸூஸ்குதஸ் சாதுக்ருத்யாம் த்விஷந்த பாவக்ருத்யாம் -என்று
உபாசகர புத்ரர்கள் அவனது செல்வத்தையும் -நண்பர்கள் புண்ணியத்தையும் விரோதிகள் பாபத்தையும் அடைகின்றனர்
கௌ ஷீதகியில்1-4-தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தா நுதே தஸ்ய ப்ரியா ஜ்ஞாதயஸ் ஸூ க்ருதும் உபயந்தி அப்ரியா துஷ்க்ருதாம் -என்று
புண்ய பாபம் கை விடுவதையும் -ஹாநி –
மற்றவர்கள் இடம் சேர்வதையும் உபாய நம் -இரண்டுமே வித்யைகளின் அங்கம் ப்ரஹ்ம வித்யை செய்பவர் அனைவருக்கும் பொருந்தும் –

இதில் ஹாநி மட்டுமே ஓர் இடத்தில் கூறப்பட்டு உபாயநம் கூறப்படா விட்டாலும் அத்தையும் கொள்ள வேண்டுமா கூடாதா சங்கை வரும் -ஒன்றை மட்டுமே கொள்ள வேண்டும் என்பர் பூர்வ பஷி
ஸூ த்ரத்தில் து இத்தை தள்ளுகிறது -ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உடையதால்
ஒரு சாகையில் இல்லாததை வேறு ஒரு சாகை சொல்லும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு
கௌ ஷீதகீ -குசா வா நஸ்பத்யா-மரத்தினால் ஆகிய சமித்து என்கிறது -எந்த மரத்தினால் என்றால் –
சாட்யாய நசாகையில் -ஔதும்பர்ய குசா -அத்தி மரத்தின் சமித்து என்கிறது
தேவாசூரானாம் சந்தோபி -யார் சந்தஸ் முதலில் படிக்க வேண்டும் -தேவச் சம்தாம்சி பூர்வம் -தேவ சந்தசை முதலில் கூற வேண்டும் என்கிறது வேறு இடத்தில்
ஒரு சாகையில் பொன்னை வைத்துக் கொண்டு ஷோடசீ ஸ்தோத்ரம் தொடங்க வேண்டும் -எந்தக் காலத்தில் என்பதை
வேறு சாகையில் சமயா விஷிதே ஸூ ர்ய ஷோடசி ந ஸ்தோத்ரம் உபாகரோதி -பாதி அஸ்தமன நேரத்தில் என்கிறது
ஒரு சாகையில் ருத்விக்கள் உபகானம் செய்ய வேண்டும் என்றும் மற்று ஒன்றில் ந அர்வர்யு உபகாயேத் -என்று அத்வர்யு உபகானம் செய்யக் கூடாது என்று விதி விளக்குகிறது
ஆகவே ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உடைய இவை இரண்டையும் எங்கும் கொள்ள வேண்டும் என்றதாயிற்று-

——————————————————————————————————————-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம் -உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————–

3-3-27-சாம்பராயே தர்த்த வ்யாபாவாத ததா ஹி அன்யே–

ஒருபகுதி உடலை விட்டு கிளம்பும் போதும் மீதி பகுதி மோஷம் செல்லும் வழியிலும் என்பர் பூர்வ பஷி
கௌ ஷீதகீ -1-3-ச ஏதம் தேவயா நம் பந்தா நம் ஆபத்ய அக்னிலோகம் ஆகச்சதி என்று அர்ச்சிராதி மார்க்கத்தில் முதலில் அக்னி லோகம் வருவதையும்
தொடர்ந்து -1-4-ச ஆகச்சதி விரஜாம் நதீம் தாம் மன சாத்யேதி தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூநுதே-என்று
விரஜா நதி வந்து தனது சங்கல்பம் மூலம் தாண்டி புண்ய பாபங்களைத் துறக்கிறான் -என்கிறது
சாந்தோக்யம் -8-3-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ரஹோர்முகாத் பிரமுஷ்ய தூத்வா சரீரமக்ரதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -என்று உடலைக் கை விடும் போதே துறக்கிறான் என்கிறது
சாட்யாயன சாகை தஸ்ய புத்ரா சாயம் உபயந்தி ஸூஸ்குதஸ் சாதுக்ருத்யாம் த்விஷந்த பாவக்ருத்யாம் -என்று
உபாசகர புத்ரர்கள் அவனது செல்வத்தையும் -நண்பர்கள் புண்ணியத்தையும் விரோதிகள் பாபத்தையும் அடைகின்றனர் என்று
உடலைக் கை விடும் பொழுதே இவை நீங்கி விடுகின்றன எனபது ஆயிற்று
இனி சித்தாந்தம் -சாம்பராயே -மரண காலத்திலேயே -உடலை விட்டு கிளம்பியதும் அவன் அனுபவிக்க வேண்டிய சுகமோ துக்கமோ இல்லை என்பதால் -ப்ரஹ்ம அனுபவம் தவிர
சாந்தோக்யம் -8-12-1-அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரிய ச்ப்ருசத-என்றும் -8-3-4-ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –
6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யதே சம்பத்ச்யே என்றும் சொல்லிற்றே-

———————————————————————————————————————-

3-3-28-சந்தத உபயா விரோதத்

முரண்பாடு இல்லாமல் வரிகளை மாற்றி அந்வயம் செய்து படிக்க வேண்டும்-தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூநுதே–ஏதம் தேவயா நம் பந்தா நம் ஆபத்ய என்று
புண்ய பாபங்களைக் கை விட்டு தேவ யான மார்க்கத்தை அடைந்து அக்னி லோகம் வருகிறான் என்று
இதற்க்கு பூர்வ பஷியின் ஆஷேபம் அடுத்த ஸூ த்ரம்

————————————————————————————————————————-

3-3-29-கதே அர்த்தத்வம் உபயதா அந்யதா ஹி விரோத —

உடலை விடும் பொழுதே கர்மங்கள் கழிந்தால் அவற்றால் உண்டான ஸூ ஷ்ம சரீரமும் அழிந்து விடுமே
அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது எனபது இயலாத ஒன்றாகி விடுமே
இதற்க்கு சித்தாந்தம் பதில் அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————–

3-3-30-உபபன்ன தல் லஷணார்த்தோ பலப்தே லோகவத் —

சாந்தோக்யம் -8-3-4-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும் –8-12-3- ச தத்ர பர்யேதி ஐஷத் கிரீடன் ரமமாண என்றும் —
7-25-2-ச ச்வராட்பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும் -7-26-2- ச ஏகதா பவதி த்ரிதா பவதி-என்றும்
சரீர தொடர்பு தொடரும் என்கின்றன ஸ்ருதி ஸ்ரீ ஸூ க்திகள்
ஸூ ஷ்ம சரீரத்தை உத்பத்தி செய்ய வல்ல கர்மங்கள் தொலைந்த பின்பு இது எவ்வாறு இயலும் என்றால்
ப்ரஹ்ம வித்யையால் உபாசகனுக்கு ப்ரஹ்ம அனுபவத்தை அளிக்கும் பொருட்டு ஸூ ஷ்ம சரீரத்தை நிலையாக இருக்கும் படி செய்கிறது
ப்ரஹ்மத்தை நேரடியாக அறிந்த வசிஷ்டாதிகளுக்கும் புத்திர சோகம் உண்டே சுக துக்கங்கள் இல்லை உபாசகனுக்கு என்றது எவ்விதம் -பதில் அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————–

3-3-31-யாவத் அதிகாரம் அவஸ்திதி ஆதிகாரிணாம்

அனைத்து ஞானிகளுக்கும் புண்ய பாபம் கழிந்ததாக கூறவில்லை -யாருக்கு உடல் விழுந்த உடன் அர்ச்சிராதி மார்க்கம், கிட்டுமோ அவர்களுக்கு மட்டுமே
வசிசிஷ்டர் போல்வாருக்கு அவர்கள் தொடங்கி உள்ள பதவி முடியாமல் உள்ளதால் -கர்மம் மூலமே அந்த அந்த பதவியை பெறுகிறார்கள் -அர்ச்சிராதி மார்க்கம் அவர்களுக்கு இல்லை
பதவிக்கு காரணமான கர்மமும் கர்மம் காரணமாக உண்டான பதவியும் தொடர்ந்து அர்ச்சிராதி மார்க்கம் எனபது இல்லை

—————————————————————————————————————————–

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் -அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————-

3-3-32- அநியம சர்வேஷாம் அவிரோத சப்தா நுமா நாப்யம் —

சாந்தோக்யம் -5-10-1
தத்யா இத்தம் விதுர்யே சேமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாசதே தே அர்ச்சிஷிம் அபி சம்பவந்தி -என்றும்
-ப்ருஹத் -6-2-15 ய ஏவம் எதத் விது யே சாமி அரண்யே -ஸ்ரத்தாம் சத்யம் உபாசதே – தே அர்ச்சிஷிம் அபி சம்பவந்தி என்றும்
பஞ்சாக்னி வித்யை பற்றிக் கூறும் பொழுதும் வாஜச நேயக பகுதிகளிலும் அர்ச்சிராதி மார்க்கம் கூறப் பட்டுள்ளது
சத்யம் தப பதங்கள் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
சாந்தோக்யம் -சத்யம் த்வேவ விஜிஞ்ஞாசி தவ்யம் -என்றும் -7-19-1-ச்ரத்தா த்வேவ விஜிஞ்ஞாசி தவ்யம் -என்றும்
ஸ்ரீ கீதையில் 8-24-அக்னிர் ஜ்யோதிரஹ சுக்ல ஷண்மாசா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோம் ஜனா– என்று
பல ஸ்ருதி ஸ்ம்ருதி வரிகளில் -அனைத்து வித்யைகளிலும்
கூறப்பட்ட அர்ச்சிராதி மார்க்கம் என்பதை உபகோசல வித்யை போன்றவையும் மீண்டும் கூறும் –

——————————————————————————————————————————-

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் -ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————————————————-

3-3-33-அஷரதியாம் து அவரோத சாமான்ய தத் பாவாப்யாம் ஔபத சதவத் தத் உக்தம் —

ப்ருஹ தாரண்யகத்தில்-3-8-8/9—ஏதத் ஏவ தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி அஸ்தூலம் அநணு அஹரச்வம் அதீர்க்கம் அலோஹிதம் அச்நேஹம் அச்சயம் அதம –
அவாயு அநகாசம் அசங்கம் அரசம் அகந்தம் அசஷூஷ்கம் அச்ரோத்தம் அவாக் அமான அதேஜச்கம் அபராணம் அஸூகம்
அமாத்ரம் அனந்த்ர அபாஹ்யம் ந தத் அச்நாதி கிஞ்சன ஏதச்யா வா அஷரண்ய பிரசாசநே சார்க்கி ஸூ ர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத –என்றும்
-முண்டக உபநிஷத் -1-1-5-அத பரா யயா தத் அஷரம் அதிகம்யதே யத் தத் அரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணாம் அசஷூ ச்ரோத்ரம் தத் அபாணிபாதம் -என்றும் முழங்கியது –

இந்த ப்ரஹ்மத்தின் தன்மைகள் அனைத்து வித்யைகளிலும் படிக்கப் பட வேண்டுமா -இஷ்டி விதைகளில் மட்டும் படிக்கப் பட வேண்டும் என்பர் பூர்வ பஷி
ப்ரஹ்மம் பொதுவாக உள்ளதாலும் அஷர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை உணர்ந்து கொள்ளவும் எல்லா வித்யைகளிலும் படிக்க வேண்டும்
ஆனந்தாதி குணங்களை போலேவே அச்தூலத்வம் போன்ற தனித் தன்மைகளையும் உணர்ந்தே உபாசிக்க வேண்டும்
அங்கத்துக்கும் பிரதான முறைக்கும் விரோதம் வந்தால் பிரதான முறையே கொள்ள வேண்டும்
அக்னிர் வை ஹோத்ரம் வே -என்ற மந்த்ரத்தை சாம வேதத்தில் உரத்த குரலிலும் யஜூர் வேதத்திலும் தாழ்ந்த குரலிலும் சொல்ல வேண்டும் என்று உள்ளது –
அனைத்து வித்யைகளிலும் அனைத்து குணங்களையும் படிக்க வேண்டும் என்று கொண்டால்
சாந்தோக்யம் -3-14-2-சர்வ கர்ம சர்வ கந்த சர்வரச-போன்று
அந்த அந்த விதைகளில் படிக்க வேண்டிய சிறப்பான குணங்கள் இல்லாமல் போகுமே என்றால்

———————————————————————————————————————-

3-3-34-இயம் ஆம ந நாத் –

ஆமநநம் -தனித்தன்மையுடன் கூடிய த்யானம் -இந்த தனித் தன்மைகளை படிக்க வேண்டுமே ஒழிய -சர்வகர்மா போன்ற தன்மைகள் அந்தந்த விதைகளில் மட்டும் படித்தால் போதும்-

———————————————————————————————————————-

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————

3-3-35-அந்தரா பூதக்ராமாவத் ச்வாத்மான-அந்யதா பேதா நுபபத்தி இதி சேத ந உபதேசவத் —

ப்ருஹத் உபநிஷத்தில் -3-4-1-உஷஸ்தர் என்பவர் யாஜ்ஞ வல்க்யரிடம் -யத் சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வ்யாசஷ்வ -என்று உணர்த்த கேட்க –
ய ப்ராணே ந பிராணி ந ச த ஆத்மா சர்வாந்தரோ ய அபாநேநாபாநிதி ச த ஆத்மா சர்வாந்தர -என்று பதில் சொல்லியும்
திருப்தி அடையாமல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க -அதற்கு யாஜ்ஞ வல்க்யர் -3-4-2-ந த்ரேஷ்டர் த்ரஷ்டாரம் பச்யே-ந ஸ்ருதேஸ் ச்ரோதாரம் ஸ்ருணுயா-ந மதேர் மந்தாரம் மன்வீதா ந விஜ்ஞாதேர் விஜ்ஞாதாரம் விஜா நீயா ஏ ஷத ஆத்மா சர்வாந்தர அதோ ந்யதார்த்தம் -என்று பதில் அளித்தார்
இதே போன்று-அடுத்த பகுதியில் கஹோலர் யாஜ்ஞ வல்க்யர் இடம் -3-5-1-யத் ஏவ சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வ்யாசஷ்வ -என்று அதே கேள்வியைக் கேட்க
இதற்கு -ய அச நா யாபிபாசே சோகம் மோஹம் ஜராம் ம்ருத்யு மத்யேதி ஏவம் வை தம் ஆத்மானம் விதித்வா ப்ராஹ்மணா புத்ரேஷணாயாச்ச வித்தேஷணாயாச்ச லோகேஷ ணாயாச்ச வ்யுத்தாய -என்று பதில் சொல்லத் தொடங்கி-அநோன்யதார்த்தம் -இவனை விட வேறுபட்ட ஜீவன் துன்பம் நிறைந்தவன் என்று முடித்தார்
இரண்டிலும் கேள்விகள் ஒன்றாக இருந்தாலும் ரூப வேறுபாட்டால் இரண்டு வெவ்வேறே வித்யைகள் என்பர் பூர்வ பஷி
முதல் பதிலில் பிராண வாயுவை இயக்கம் செயல் போன்றவற்றைச் செய்பவனே அந்தர்யாமி-
சரீரம் இந்த்ரியம் புத்தி மனம் பிராணன் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்ட பிரத்யகாத்மா -ஜீவாத்மா அந்தர்யாமி – என்றும்
இரண்டாவது பதிளில்பசி தாகம் அற்ற பரமாத்மாவே அந்தர்யாமி என்றும் கூறுகிறார் -என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல இரண்டிலும் பரமாத்மாவே –
யத் சாஷாத் ப்ரஹ்ம என்று ப்ரஹ்மமே உணர்த்தப் படுகிறது -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் இவனே அனைத்துக்கும் அந்தர்யாமி
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ப்ருதிவ்யா திஷ்டன் பிருதிவ்யா அந்தர -ய ஆத்மி நி திஷ்டன் ஆத்மன அந்தர -என்றது
இது போன்றே ய ப்ராணேன ப்ராணதி–இயல்பாக இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது பரமாத்மாவே
இது போன்றே சாந்தோக்யத்திலும் சத் விதையில்
6-1-1-உத தமோ தேசமே ப்ராஷ்யா -ணீ அவனை அறிவாயா -என்றும் -6-1-40-பகவான் தேவ ப்ரவீது -எனக்கு அதனை உபதேசிக்க வேண்டும் -என்றும்
6-5-4-பூய ஏவ மா பகவன் விஜ்ஞாபயது -எனக்கு மீண்டும் உபதேசிக்க வேண்டும் என்றும் ‘
அதற்கு பதிலாக -6-8-7-ஏஷோ அணிமா ஜத தாத்ம்யமிதம் சர்வம் தத் சத்யம் -என்று உணர்த்தப் பட்டது
அதனால் இரண்டு வித்யைகளிலும் உள்ள ரூபம் ஒன்றேயாக உள்ளதால் இரண்டும் ஒன்றே

——————————————————————————————————————-

ஆனால் கேள்வி கேட்டவர்கள் இருவர் -உபாசிக்கப் படும் பரமாத்மாவின் தன்மைகளும் வெவ்வேறே என்பதால் வித்யைகளில் பேதம் உள்ளது என்பர் பூர்வ பஷி
இதற்க்கு பதில் அடுத்த ஸூ த்ரத்தில்
3-3-36–வ்யதிஹார விசிம் ஷந்தி ஹி இதரவத் —

இரண்டுமே பரமாத்மாவைப் பற்றியே
சர்வ அந்தர்யாமித்வமும் பிராணன் இயக்கம் தன்மையும் அவனுக்கே

———————————————————————————————————————–

3-3-37-சைவ ஹி சாத்யாதய —

சத் எனப்படும் பர ப்ரஹ்மமே -சாந்தோக்யம் -6-3-2- ஸேயம் தேவதை ஷத-சங்கல்பம் செய்தது -என்றும்
6-8-6- தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -அந்த பர ப்ரஹ்மத்தின் தேஜஸ் -என்றும்
6-9-1- யத சோம்யமது மதுக்ருதோ நிஸ் திஷ்டந்தி -தேனீக்கள் தேனில் ஒன்றுவது போன்று
6-8-7-ஏததாத்ம்யமிதம் சர்வே தத் சத்யம் ச ஆத்மா -அனைத்தும் இந்த சத் என்பதை ஆத்மாவாகக் கொண்டது
ஒரு சிலர் 36/37 வெவ்வேறே அதிகரணங்கள் என்பர்
ஜாபால உபநிஷத் -த்வா வா அஹம் அஸ்மி புகவோ தேவதே அஹம் வை த்வமசி பகவோ தேவதே -என்றும்
ஐ தரேய உபநிஷத் -தத்யோஹம் ச அசௌ ச அசௌ சோ அஹம் -என்றும்
ஜீவன் பரமாத்மா ஓன்று என்பர்
இது ஏற்க இயலாது -ப்ரஹ்மமே அனைத்தாகவும் உள்ளதே என்றே கூறுகின்றன
சாந்தோக்யம் -3-14-1-3-14-1- தத் சர்வே கல்விதம் ப்ரஹ்ம -என்றும் -6-8-7-ஏத தாத்ம்யமிதம் –சர்வம் –தத்வமஸி–என்றும்
ப்ரஹ்மம் அனைத்துக்கும் ஆத்மா -ஆத்மாவாகவே உபாசிக்க வேண்டும்
இத்தையே -4-1-3-ஆத்மேதிது உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
ப்ருஹத் உபநிஷத் -5-4-1-ச யோ ஹ வை மஹத்யஷம் ப்ரதமஜம் வேத சத்யம் ப்ரஹ்ம -என்றும்
5-4-2-தத் யத் சத்ய ச ஆதித்ய ஏ ஏஷ ஏ தஸ்மின் மண்டலே புருஷோ யச்சாயம் தஷிணே அஷின் -என்றும்
சொல்வது இரண்டும் ஒரே வித்யை என்பர் பூர்வ பஷி
சூரியன் கண்கள் இருப்பிட பேதம் உள்ளதால் வெவ்வேறே என்று 3-3-21- ந வா விசேஷாத் -ஸூ த்ரத்திலேயே பார்த்தோம்
பாபங்களை அழிக்கிறான் உடலை விடுகிறான் -வித்யைகளின் பலன் ஒன்றாகும் பொழுது

————————————————————————————————————————

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————

3-3-38-காமாதி இதரத்ர தத்ர ச ஆய்த நாதிப்ய —

சாந்தோக்யம் -8-1-1-அத ய இதம் ப்ரஹ்ம புரே தஹர்ரம் புண்டரீகம் வேச்ம தஹர அஸ்மின் அந்தராகாச தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்றும்
வாஜச நேயகத்தில் -ப்ருஹத் உபநிஷத் -4-4-2-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா யோயம் விஜ்ஞான மாயா ப்ராணேஷூ ய -ஏஷேரந்தர் ஹ்ருதய ஆகாச தஸ்மின் சேதே சர்வச்ய வசீ சர்வஸ் யேசான-என்றும் உள்ளன
இவை இரண்டும் வெவ்வேறே ஆகும் பூர்வ பஷி -ரூப வேறுபாடு உள்ளதால் -சாந்தோக்யத்தில் அபஹதபாப்மா போன்ற எட்டு குணங்களுடன் கூடிய ஆகாசம் உபாசிக்கப் படுகிறது
ப்ருஹத்தில் வசீத்வம் குணம் கொண்ட பர ப்ரஹ்மம் உபாசிக்கப் படுகிறது
அனால் உண்மையில் ரூப வேறுபாடே இல்லை சத்ய காமத்வமே இரண்டிலும் உண்டு –
இத்தையே சாந்தோக்யம்-8-3-4- பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும் -ப்ருஹத் -4-4-25-அபயம் வை ப்ரஹ்ம பவதி -என்றும் கூறப்பட்டது கொண்டு அறியலாம்
சாந்தோக்யம் -1-3-13-தஹர உத்தேரேப்ய-ஆகாசம் பரமாத்மாவே என்றும்
நாரதீயம் -13-2-தச்யாந்தே ஸூ ஷிரம் ஸூ ஷ்மம்-என்கிறதால்
இரண்டு வித்யைகளும் ஒன்றே
இங்கு பூர்வ பஷி ப்ரஹ்மத்துக்கு வசித்வம் கிடையாதே குணங்கள் ஒன்றும் இல்லை என்பதால் என்பர்
ப்ருஹத் 4-4-19/20-மனசா ஏவ அனுத்ரஷ்டவ்யம் ம்ருத்யோஸ்ஸ ம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நானேவ பச்யதி ஏகத் ஏவ அனுத்ரஷ்டவ்யம் ஏதத் அப்ரமேயம் -என்றும்
4-4-22-ச ஏஷ நேதி நேத்யாத்மா -என்பர் இதற்கு பதில் அடுத்த ஸூ த்ரம் –

———————————————————————————————————————

3-3-39-ஆதராத் அலேப –

ப்ரஹ்மத்தின் குணங்கள் கை விட பட வேண்டியவை அல்ல என்று பல ஸ்ருதிகள் முழங்கும் –சாந்தோக்யம் -8-1-1-தஸ்மின் யத் அந்த தத் அந்தவேஷ்டவ்யம் -என்றும் -8-1-5-ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகா விஜிகத்ச அபிபாசாஸ் சத்ய காம சத்ய சங்கல்ப -என்றும்
ப்ருஹத் -4-4-22-சர்வச்ய வசீ –சர்வஸ் ஏசான்–ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேது விதரண ஏஷாம் லோகாநாம் அம்பேதாய -என்றும்
சாந்தோக்யம் -8-1-6-தத்ய இஹாத் மான மனுவித்ய விரஜந்தி ஏதாம்ச சத்திய காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்
அத யா இஹான் மான மனுவித்ய விரஜந்தி ஏதாம்ச சத்திய காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ அகாம சாரோ பவதி -என்றும்
வாஜச நேயகத்திலும் -4-4-22-சர்வச்ய வசீ –சர்வஸ் யேசானா–ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூ பால -என்றும்
அவனது சர்வேஸ்வரத்வத்தை முழங்கின  -ப்ருஹத் உபநிஷத் -4-4-19–நேஹ நாநாஸ்தி கிஞ்சன -என்றும் -4-4-20-ஏகத் ஏவ அநி நுரஷ்டவ்யம் -என்று அவனால் படைக்கப் பட்டவைகள் அனைத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும்
6-4-22-ச ஏஷ நேதி நேத்யாத்மா -ப்ரஹ்மம் அத்தகையது அல்ல அனைத்துக்கும் அந்தர்யாமி என்றும்
அக்ராஹ்யோ ந ஹி க்ருஹ்யதே அசீர்யோ ந ஹி சீர்யதே அசந்கோ ந ஹி லஜ்யதே அவ்யதிதோ ந ஹி வ்யததே நரிஷ்யதி -என்றும்
சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயைத் ஜீர்யதி ந வதேன அஸ்ய ஹன்யதே எதத் சத்யம் ப்ரஹ்ம புரம் அஸ்மின் காமாஸ்  சமாஹித  -என்றும் சொல்லிற்று

————————————————————————————————————————-

3-3-40-உபஸ்திதே அத தத் வசநாத்

ப்ரஹ்மத்தை அடைந்தவன் என்பதே காரணமாக பித்ரு லோகம் செல்வதாக கூறுகையால் -என்பர் பூர்வ பஷி
எங்கும் சஞ்சரிக்கிறான் -பிறவியை நினைவு கொள்ளாமல்
சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -சஞ்சாரம் செய்வது முக்தாத்மா அனுபவிக்கும் பலனே ஒழிய சம்சாரிகள் அனுபவிக்கும் பலன் அல்லவே
இதனால் சத்யகாமத்வம் போன்ற தன்மைகள் மோஷத்தை விரும்பும் உபாசகனால் அந்த அந்த உபாசனங்களில் த்யாநிக்கத் தக்கவன் என்று நிரூபணம் ஆயிற்று-

————————————————————————————————————————-

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் -சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

3-3-41-தந் நிர்த்தாரணா நியம -தத் த்ருஷ்டே -ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் —

சாந்தோக்யம் -1-1-1- ஓம் இதி ஏதத் அஷரம் உத்கீதம் உபாசீத —
அனைத்திலும் உத்கீத உபாசனை அங்கம் என்பர் பூர்வ பஷி
சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்ய வத்தரம் பவதி
இது தவறான வாதம் -தேந உபௌ குருதோ யச்சைதத் ஏவம் வேத யாச்ச ந வேத -உத்கீதம் அறிந்தவர்களுள் அறியாதவர்களும் பிரணவம் மூலமே உபாசனை செய்கிறார்கள் என்கிறது சாந்தோக்யம்
கோதோ ஹதே ந பசு காமஸ்ய -பசு பலனாக போன்ற யாகங்களில் உத்கீத உபாசனை அங்கமாக கொள்ள வேண்டாமே
-ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் -தடை நீக்கம் —என்றது இத்தகைய ஸ்வர்க்கம் போன்றவற்றை அளிக்கும் யாகங்களை விட மாறு பட்டது என்றது-

—————————————————————————————————————————

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்–அபஹத பாபமா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது  –

———————————————————————————————–

3-3-42-

ப்ரதா நவத் ஏவ தத் உக்தம் –

சாந்தோக்யம் -8-1-6- தஹர ஆகாச ஸ்வரூபம் சொல்லியே குணங்களும் விதிக்கப் படுகின்றன
பூர்வ பாஷம் தஹர ஆகாசம் குணங்கள் உடன் கூடியே உள்ளான் ஒரு தடவை உபாசனை செய்த பின் குணங்களை கொண்டவன் என்று தனியாக உபாசனை செய்ய வேண்டாம் என்பர்
அப்படி அல்ல -ஸ்வரூப உபாசனை வேற குண உபாசனை வேறு-

————————————————————————————————————————–

அதிகரணம் -19-நாராயண அநுவாகம் ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————————————————–

3-3-43-லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீய தத் அபி —

தைத்ரிய நாராயண வல்லி-13-1-சஹச்ர சீர்ஷம் தேவம் விச்வாஷம் விஸ்வ சம்பவம் விச்வம் நாராயணம் தேவம் அஷரம் பரமம் பதம் -என்றும்
13-2- சோ அஷரம் பரம ஸ்வராட் -என்று முடித்தது
முந்திய அனுவாகத்தில் -12-3- தஹாம் விபப்மாம் பரவேச்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்ய சமஸ்தம் தத்ர அபி
தஹரம் ககனம் விசோகஸ் தஸ்மின் யதந்தஸ் ததுபாசி தவ்யம் என்று தஹர விதியை சொல்லி
மீண்டும் இந்த அனுவாகத்திலும் -13-2-பத்மகோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சா ப்யதாமுகம்-என்று சொல்லி
நாராயண அனுவாகம் தஹர வித்யையின் உபாசனப் பொருள் என்று உணர்த்திற்று என்பர் பூர்வ பஷி -அப்படி அல்ல -இங்கு கூறப்படும் உபாசனப் பொருள் மற்ற வித்யைகளிலும் கொள்ளத் தக்கது என்று உணர்த்தவே
அஷரம் சிவன் சம்பு பரப்ரஹ்மம் பரஞ்சோதி பரதத்வம் பரமாத்மா பதங்களால் உணர்த்தப் படும் உபாசனப் பொருள் நாராயணனே
லிங்கம் -அடையாளம் -பூர்வ மீமாம்சை -3-3-14-சுருதி லிங்க வாக்ய பிரகரண ஸ்தான ஸ்மாக்யநாம் சமவாயே பார தௌர்பல்யம் அர்த்த விபர கர்ஷாத் -என்று லிங்கமே பிரதானம் என்று சொல்லும்
பத்மகோச ப்ரதீகாசம் தஹர வித்யைக்கு பின்பு சொல்லப் பட்டதால் இதுவும் தஹர வித்யையின் உபாசன பொருளே என்பர் பூர்வ பஷி
தஹர விதையிலும் உபாசனப் பொருள் நாராயணனே என்று காட்டவே -சித்தாந்தம்
சகஸ்ர சீர்ஷம் முதல் வேற்றுமையாகவே கொள்ள வேண்டும் விச்வமேதம் புருஷ போலே
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -13-1- என்றும்
தச்யாக்ச்சிகாய மத்யே பரமாத்மா வ்யவஸ்தித ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர சோஷர பரம்ஸ் ஸ்வராட் -13-2-என்றும் முதல் வேற்றுமையிலே உள்ளன
————————————————————————————————————————————-

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –
————————————————————————————–
3-3-44-பூர்வ விகல்ப பிரகரணாத் ஸ்யாத் க்ரியா மானஸ வத்

மனசால் உருவாக்கப்படும் அக்னி குறித்து வாஜச நேயகத்தில் அக்னி ரகச்யத்தில் -மனச்சித வாக்சித பிராண சித சஷூ சித ச்ரோத்ர சித கர்ம சித அக்னி சித
மனசால் கற்ப்பிக்கப் பட்ட அக்னியும் க்ரியா ரூபமான யாகங்களில் சேர்த்துக் கொள்ளப் படும் என்றவாறு
————————————————————————————————————
3-3-45-அதி தேசாத் ச

கற்கள் மீது வைக்கப்படும் அக்னி போன்று மனம் மூலம் ஏற்படும் அக்னிக்கும் உண்டு க்ரியா ரூபமான யாகத்தில் ஈடுபடுதலால்-கிரியா ரூபம் அடைகின்றன
————————————————————————————————————–
3-3-46-வித்யா ஏவ து நிர்த்தாரணாத் தர்சநாத் ச

அவை வித்யா ரூபன்மானவையே ஆகும் -இது முந்திய பூர்வ பஷ ஸூ த்ரங்களுக்கு பதில்
சதபத ப்ராஹ்மணம்-10-5-3-3- தே மனசைவ அதீயந்தி மனசைவ அசீயந்த மனசை ஷூக்ரஹா அக்ருஹந்த மனஸா ஸ்துவந்த மனஸா அசம்சன் யத்
கிஞ்ச யஜ்ஞே கர்ம க்ரியதே யத் கிஞ்ச யஜ்ஞீயம் கர்ம மனசைவ தேஷு மனோ மயேஷூ மனஸ் சித்ஸூ மனோமயம் அக்ரியதா -வித்யா ரூபமே

—————————————————————————————————————–

3-3-47-ஸ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத –

சுருதி லிங்கம் வாக்கியம் வலிமையானதால் தடை இல்லை -வித்யா ரூபமான யாகங்கள் குறித்து சுருதி வாக்யங்கள் உள்ளதால் இவற்றைத் தள்ள இயலாது –
மனம் மூலம் செய்யும் யாகம் எப்போதும் எங்கும் செய்யலாமே
மனம் மூலம் உண்டாகும் அக்னி வித்யா ரூபமான யாகத்தின் அங்கம் என்றதாயிற்று
பூர்வ பஷி இப்படியான வித்யா ரூப யாகத்துக்கு விதியும் இல்லை பயனும் இல்லை ஆகவே இப்படிப்பட்ட யாகம் ஏதும் இல்லை என்பர் –

——————————————————————————————————————

3-3-48-அநு பந்தா திப்ய-பிரஜ்ஞாந்திர ப்ருந்தக்த வவத் த்ருஷ்டச்ச தத் உக்தம் –

அநு பந்தங்கள் ஸ்தோத்ரம் போன்றவை மூலம் வித்யா ரூபமான யாகத்துக்கும் கர்ம ரூபமான யாகத்துக்கும் வேறுபாடு அறியப்படுகின்றன –
கர்மரூபமான யாகப் பலன்களும் வித்யா ரூபமான யாகங்களுக்கும் கிட்டும்-

—————————————————————————————————————–

3-3-49-சாமாந்யத் அபி உபலப்தே ம்ருத்யுவத் ந ஹி லோகாபத்தி

சில விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒன்றாகவே கொள்ள முடியாது
ச ஏஷ ஏவ ம்ருத்யு ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷ -என்று இந்த புருஷனே ம்ருத்யு ஆவான் என்றது யம லோகத்தை ஆளுபவன் -என்றது இல்லை -எனவே வித்யாரூப யாகம் கர்ம ரூபமான யாகத்துக்கு அங்கம் இல்லை-

—————————————————————————————————————-

3-3-50-பரேண ச சப்தச்ய தாத்வித்யம் பூயஸ்த்வாத் து அநு பந்த

சதபத ப்ராஹ்மணத்தில்-10-5-4-1-அயம் வாவ லோக ஏஷ அக்னிச் சிதஸ் தச்யாப ஏவ பரிச்ரித -என்று உலகமே அக்னி மேடை -கடலில் உள்ள நீரே கற்கள் -என்றும்
ச ஏ ஹைததேவம் வேத லோகம் ப்ருணாம் ஏநம் பூதம் ஏதத் சர்வம் அபி சம்பத்யதே -என்று இப்படிப்பட்ட அக்னியை உலகமாக அறிபவனே அவனை அனைவரும் அடைகின்றனர்
தனிப்பலனைக் கொண்ட வித்யை கூறப்படுகிறது இங்கே
மனச்சித் போன்ற வித்யாமயமானவற்றை ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்தில் சொல்லாமல் அக்னி ரஹச்யத்தில்
படித்தது மனச்சித் போன்ற அக்னிகளுக்கும் படிக்க வேண்டிய தன்மைகள் பலவும் உள்ளதால்-

———————————————————————————————————-

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் –சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே  ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

——————————————————————————

3-3-51-ஏக ஆத்மந சரீரே பாவாத் —

இது பூர்வ பஷ ஸூ த்ரம்-சரீரத்தில் இருப்பு உள்ளதால் சிலர் இப்படி கொள்கின்றனர் –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-4-6-த்ரயாணாமேவ ச ஏவம் உபன்யாச பரச் நச்ச -என்று உபாயம் மற்றும் உபாயத்தால் அடையப் படும் வஸ்து அறிவதை போலே உபாசகனையும் பற்றியும் அறிய வேண்டும்
மேலும் ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-3-ஆத்மேதி தூப கச்சந்தி ப்ராஹ யந்தி ச -என்று தனது ஆத்மாவாக பரமாத்மாவாக உள்ளதால் ஜீவனையும் உபாசிக்க வேண்டும் என்கிறது
ஸ்வர்க்க பலன் போன்றவற்றை உபாசிக்கும் பொழுது தனது ஸ்வரூபம் பற்றி அறியாதவனாகவே ஆகிறான்
எப்படி உபாசிக்கிறானோ அப்படியே ஆகிறான் –

——————————————————————————————————-

3-3-52-வ்யதிரேகஸ் தத்பாவ பாவித்வாத் ந து உப லபதிவத்

அந்த அந்த ஸ்வரூபங்களைக் கொண்டவனாகவே ஆகிறான்
சாந்தோக்யம் -3-14-4-ஏவம் க்ரது அமும் லோகம் ப்ரேத்ய அபி சாம்பவி தாஸ்மி-என்று
உபாசனைக்குத் தக்கபடி உலகை விட்ட பின்னர் ஆவேன் -அடையப் போகும் ஸ்வரூபத்தையே உபாசிக்க வேண்டும்
யாகம் போன்ற கர்மங்களில் ஈடுபடும் ஒருவன் தன்னை சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாக ஜ்ஞாத்ருத்வம் போன்ற தன்மைகள் கொண்டவனாக அறிய வேண்டும் –இப்படி அறிந்தால் மட்டுமே கர்மங்களை இயற்ற அதிகாரம் படைத்தவன் ஆகிறான்-

—————————————————————————————————–

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————-

3-3-53-அங்காவ பத்தா து ந சாகா ஸூ ஹி ப்ரதிவேதம்–

சாந்தோக்யம் -1-1-1-ஓம் இதி ஏதத் உத்கீதம் உபாசீத் -2-2-1- லோகேஷூ பஞ்சவித்யாம் சாம உபாசீத் –
ஐதரேய ஆரண்யகம் -2-1-2—உக்தமுக்தமிதி வை பிரஜா வதந்தி ததிதமே வோக்த மியமேவ ப்ருத்வீ –
சதபத ப்ராஹ்மணம் -10-5-4-1-அயம் வாவ லோகே எஸ அக்னிச்ச
என்று அந்த அந்த கர்மங்களுக்கு அங்கமாக உத்கீத உபாசனங்கள் உள்ளன
அந்த ஸ்வரத்துடன் ஓதப் படுவதால் குறிப்பிட்ட சாகைக்கே பொருந்தும் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல உத்கீத உபாசனை அனைத்திலும் செய்யப்பட வேண்டும் சர்வசாகா ப்ரத்யய நியாயத்தால் -ஒரே யாகம் கூறப்படுவதால் அனைத்துக்கும் பொருந்தும்

———————————————————————————————–

3-3-54-மந்த்ராதிவத் வா அவிரோத

வா -உம்மைத் தொகை
ஆதி என்ற பதம் -ஜாதி குணம் எண்ணிக்கை ஒற்றுமை வரிசை பொருள் செயல்
மந்த்ரம் ஜாதி போன்றவை ஒவ் ஒரு சாகையிலே படிக்கப் பட்ட போதிலும் அதன் அங்கியான யாகம் அனைத்து சாகைகளிலும் ஒன்றே
என்பதால் அனைத்து சாகைகளிலும் அங்கமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன ஸ்வர பேதம் இருந்தாலும் முரண் பாடு இல்லை என்றதாயிற்று-

———————————————————————————————

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————————————

3-3-55-பூம்ந க்ரதுவத் ஜ்யாயஸ்த்வம் ததா ஹி தர்சயதி

வைச்வா நரன் பரம புருஷன் மூன்று உலகங்களை சரீரமாக கொண்டு உள்ளான்
ஸ்வர்க்கம் தலை /சூர்யன் கண்கள் /வாயு -பிராணன் /ஆகாசம் சரீரத்தின் நடுப்பகுதி /நீர் மூத்திரப்பை /பூமி பாதங்கள்
அவயவங்களின் உபாசனையே கூறப் படுகிறது என்பர் பூர்வ பஷி
பூரணமான உபாசனமே கைக் கொள்ளத் தக்கது
—————————————————————————————————

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம் -சத் விதியை தஹர விதியை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————

3-3-56-நா நா சப்தாதி பேதாத் —

விதி வாக்யமும் ரூபமும் வேறு பட்டு உள்ளதால் வித்யைகள் வேருபட்டவையே ஆகும்
சத்வித்யை /பூம வித்யை /தஹர வித்யை /உபகோசல வித்யை /சாண்டில்ய வித்யை /வைச்வா நர வித்யை /ஆனந்த மய வித்யை / அஷர வித்யை
நா நா சப்தாதி வேருபட்டவையே
சப்தங்கள் /ஆதி சப்தத்தால் அப்யாசம் சங்க்யா சம்ஜ்ஞை குணம் பிரகரணாந்தரம்
உபாசனம் ஒரே ப்ரஹ்மம் பற்றி என்றாலும் வெவ்வேறே குணங்களை பற்றி உபாசனம் என்பதால் வித்யைகள் வேறுபட்டனவே ஆகும்-

——————————————————————————————-

அதிகரணம் -25-விகல்பாதிகரணம் -ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –
——————————————————————————————
3-3-57-விகல்போ அவிசிஷ்ட பலத்வாத்

ஜ்யோதிஷ்டோமம் தார்ச பூர்ண மாசம் போன்றவை ஸ்வர்க்கத்தில் அதிகம் காலம் இருக்கும் பொருட்டு அடுத்து அடுத்து அனுஷ்டிக்கும் யாகங்கள்
இது போலே அதிக ப்ரஹ்ம அனுபவத்துக்கு பல ப்ரஹ்ம வித்யைகள் உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல அவிசிஷ்ட பலத்வாத் -பலனில் வேறுபாடு இல்லாமையாலே
தைத்ரிய ஆனந்த வல்லி-2-1-ப்ரஹ்ம விதைப் நோதி பரம் -என்றும்
2-8-ச ஏகோ ப்ரஹ்மணா ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய சாகா மஹா தஸ்ய –
முண்டக -3-1-3-யதா பஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
ஆனந்த ரூபமாக ப்ரஹ்மம் பலன் என்பதால் ஒரே வித்யை

அனுஷ்டித்தால் போதுமே
————————————————————————————–
3-3-58-காம்யா து யதா காமம் சமுச்சீ யேரன் நவா பூர்வே ஹேத்வ பாவாத்

காம்ய பலன்கள் இஷ்டப்படி சேர்த்தோ தனியாகவோ அனுஷ்டிக்கலாம் -ப்ரஹ்ம வித்யை போலே அல்லாமல் அளவுள்ள பலன்களை அளிப்பதால்

———————————————————————————————

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம் -உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது

———————————————————————————————————-

3-3-59-அங்கேஷூ யதாச்ரய பாவ

யாகத்தின் ஆச்ரயமான உத்கீதம் போன்று உத்கீத உபாசனங்கள் யாகத்தின் அங்கமே ஆகும்
எப்போதும் கொள்ள வேண்டும் சாந்தோக்யம் -1-1-10-தே நோ பௌ குருதே -அதனைக் கொண்டு இருவரும் செய்ய வேண்டும் -ஓம் இதி உத்கீதம் உபாஸீதே -அனைத்து யாகங்களிலும் கொள்ள வேண்டும்-

—————————————————————————————————

3-3-60-சிஷ்டேச்ச-

விதிக்கப் பட்டதாலும் அங்கமே ஆகும் -உத்கீதம் உபாஸீத-சிஷ்டி ஸாசனம்
—————————————————————————————————-
3-3-61- சாம ஹாராத் –

சமா தானம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுவதால்
சாந்தோக்யம் -1-5-5-ஹோத்ரு ஷத நாத் ஹை வாபி துருக்கீதம் அநு சமா ஹரதி –என்று
தோஷங்கள் அனைத்தையும் ஹோத்ரி தள்ளுகிறான் -அதாவது உத்காதாவால் ஓதப்படும் உத்கீதத்தின் அவயவமான பிரணவமும் ஹோதாவால் கூறப்படும் ருக்குகளின் இறுதியில் உள்ள ஓங்காரமும் ஒன்றே என்று உத்காதாவும் ஹோதாவும் என்ன வேண்டும்
இதை அனைத்திலும் விதியாகக் கொள்ள வேண்டும் என்றதாயிற்று-

—————————————————————————————————

3-3-62-குண சாதாரணய் ஸ்ருதே ச

பிரணவத்தின் குணமான உபாசனத்தின் தன்மைக்கு இதன் தன்மை பொதுவாக உள்ளது என்று கூறப்படுவதால் –
சாந்தோக்யம் -1-1-9-தே நேயம் த்ரயீ வித்யா வர்த்ததே ஓம் இதி ஆச்ராவயதி ஓம் இதி சம்சதி ஓம் இதி உத்காயதி -என்றபடி
உத்கீத உபாசனம் அனைத்து கர்மங்களுக்கும் அங்கம் ஆகிறது-

——————————————————————————————————

இப்படி கூறப்பட்ட-3-3-59-முதல் -3-3-62- ஸூ த்ரங்களில் – பூர்வ பஷ வாதங்களுக்கு பதில் மேலே
3-3-63-ந வா தத்வ ஹ பாவ ஸ்ருதே –

உத் கீதத்துக்கு யாகத்தின் அங்கம் கூறப்படாத காரணத்தால் உத்கீத உபாசனம் அங்கம் எனபது சரியல்ல –
—————————————————————————–
3-3-64-தர்ச நாத் ச

இப்படி அங்கம் அல்ல என்று ஸ்ருதிகள் கூறுவதால்
சாந்தோக்யம் -4-17-10-ஏவம் வித ஹைவ ப்ரஹ்மா யஜ்ஞம் யஜமானம் சர்வாம்ச்சார்த் விஜோ அபி ரஷதி என்று சொல்வதால்
உத்கீத உபாசனம் எப்போதும் யாகங்களின் அங்கம் அல்ல என்றதாயிற்று-

————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-