ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -9-உபாய விபாக அதிகாரம் /அதிகாரம் -10- பிரபத்தி யோக்ய அதிகாரம் /அதிகாரம் -11-பரிகர விபாக அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -9-உபாய விபாக அதிகாரம்-

உபாய ஸ்வ ப்ராப்தே உபநிஷத் அதீத ஸ பகவான்
ப்ரசத்த்யை தஸ்ய உக்தே பிரபதன நிதித்யாசன கதீ
ததாரோஹ பும்ஸ ஸூஹ்ருத பறி பாகேண மஹதா
நிதா நம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா —

இவர்களுக்கு கர்தவ்யமான உபாயமாவது ஒரு ஜ்ஞான விகாச விசேஷம் –
இத்தாலே சாத்யமாய் ப்ராப்தி ரூபமான உபேயம் ஆவது ஒரு ஜ்ஞான விகாச விசேஷம் –
இவற்றில் உபாயம் ஆகிற ஜ்ஞான விகாச விசேஷம்
கரண சாபேஷமுமாய் -சாஸ்திர விஹிதமுமாய்- சத்யத் வாதிகளான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் அஞ்சோடு கூடின
அவ்வோ வித்யா விசேஷ பிரதி நித்ய குணாதிகளிலே நியத ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபேயம் ஆகிற ஞான விகாச விசேஷம்
கரண நிரபேஷமுமாய்-ஸ்வ பாவ ப்ராப்தமுமாய் -குண விபூத் யாதிகள் எல்லா வற்றாலும்
பரி பூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –

உபாசித குணா தேர்யா ப்ராப்தாவப்யவ ஹிஷ்க்ரியா
ஸா தத்க்ரதுநய க்ராஹ்யா ந ஆகாராந்தர வர்ஜனம் –

பிராப்தி ரூபமான இவ் வனுபவத்தினுடைய பரீவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம் உபேயம் –
இவ் வுபாய ரூபமாயும் ப்ராப்தி ரூபமாயும் இருக்கிற ஜ்ஞானத்துக்கு விஷயமாகக் கொண்டு
பல பிரதந்த்வ போக்யத்வாதி வேஷத்தாலே ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமும்-
இவ் வீச்வரனுடைய உபாயத்வம்
அத்வாரக ப்ராப்தி நிஷ்டன் பக்கல் உபாயாந்தர ஸ்தானே நிவேசத்தால் விசிஷ்டமாய் இருக்கும் –
மற்ற அதிகாரிக்கும் கர்ம யோகம் ஆரம்பம் முதலாக உபாசன பூர்த்தி பர்யந்தமாக நடுவுள்ள
கர்த்தவ்யங்களில் அத்யந்த அசக்த்யமான நேர்களிலே
இப் பிரபத்தி வசீக்ருதனான ஈஸ்வரன் புகுந்து நின்று அந்த துஷ்கர கர்த்தவ்யங்களாலே வரும் பாப நிவ்ருத்தியையும்
சத்வ உன்மேஷாதி களையும் உண்டாக்கிக் கொடுத்து அவ் உபாசனம் ஆகிற உபாயத்தை பல பர்யந்தமாக்கிக் கொடுக்கும் –

அங்கு கர்ம யோகமாவது –
சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்ம யாதாத்ம ஜ்ஞானம் பிறந்தால் தனக்கு சக்யங்களாய் பல சங்காதி ரஹீதங்களான
காம்ய கர்மங்களோடும் நித்ய நைமித்திகங்களோடும் கூட ஸ நியமமாக பரிக்ருஹீதமாய் இருக்கும் கர்ம விசேஷம் –
அதன் அவாந்தர பேதங்கள் தைவமே வபரே யஜ்ஞம்-ஸ்ரீ கீதை -4-25- என்று தொடங்கிச் சொல்லப்பட்ட
தேவார்சன தபஸ் தீர்த்த தான யஜ்ஞாதிகள் –
அதிகாரி பேதத்தாலே பிரபத்தி தானே பக்தியை இடையிட்டும் இடையிடாதேயும் மோஷ ஹேது வானால் போலே
இக் கர்ம யோகம் ஜ்ஞான யோகத்தை இடையிட்டும் இடையிடாதேயும்
ச பரிகரமான யோகத்தைக் கொண்டு ஆத்ம அவலோகன சாதனமாம் —

ஜ்ஞான யோகமாவது –
கர்ம யோகத்தாலே அந்த கரண ஜெயம் பிறந்தவனுக்கு பிரக்ருதியாதி விலஷணமாய் ஈஸ்வரனைப் பற்ற
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வங்களாலே சரீர தயா பிரகாரமான தன் ஸ்வரூபத்தை நிரந்தர சிந்தனம் பண்ணுகை-
இக் கர்ம ஜ்ஞான யோகங்களாலே யோக முகத்தாலே ஆத்ம அவலோகனம் பிறந்தால்
வைஷயிக ஸூக வைத்ருஷ்ண யாவஹமான ஆத்ம அனுபவ ஸூகம் ஆகிற ஆகர்ஷகத்தில் அகப்பட்டிலன் ஆகில்
பரம புருஷார்த்தமான பகவத் அனுபவத்துக்கு உபாயமான பக்தி யோகத்திலே இழியும் போது
உள்ளிருக்கிற ரத்னம் காண்கைக்கு கிழிச் சீரை கண்டால் போலே அந்தர்யாமியைப் பார்க்கும் போதைக்கு அவனுடைய
சரீர பூதனான ஜீவாத்மாவினுடைய தர்சனம் உபயுக்தமாய்க் கொண்டு பக்தி யோகத்துக்கு அதிகாரி கோடியிலே ஏறிட்டுக் கிடக்கும்

பக்தி யோகமாவது
அநந்ய நிஷ்டனாய் அநந்ய கதியினாய் அநந்ய சேஷ பூதனான பகவானுடைய
ஸ்வரூபாதிகளை விஷயமாக உடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான த்யான விசேஷம்
அது தான் தைல தாரை போலே நிரந்தரமான ஸ்ம்ருதி ரூபமாய் -சாஷாத்கார துல்யமான வைசத்யத்தை யுடைத்தாய்
பரம பதத்துக்கு பிரயாணம் பண்ணும் திவசம் அறுதியாக நாள் தோறும் அனுஷ்டிக்க வளர்ந்து வருவதாய்
அந்திம ப்ரத்யய அவதியான ஜ்ஞான சந்ததி விசேஷம் –
இதுக்கு வர்ணாஸ்ரம தர்மங்கள் ஜ்ஞான விகாச ஹேதுவான சத்வாதி வ்ருத்திக்கு களையான
ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு மூலமான பாபங்களைக் கழித்துக் கொண்டு இதி கர்த்தவ்யதையாய் இருக்கும்
இப் பக்தி யோகம் தானே
பிரத்யயார்த்தம் ஸ மோஷச்ய சித்தய சம்ப்ரகீர்த்திதா -என்கிறபடியே
இள நெஞ்சரைத் தேற்றுகைக்கு இட்ட விரகான வழியாலே காமநா பேதத்தாலே
ஐஸ்வர் யாதிகளுக்கும் சாதனம் என்னும் இவ்வர்த்தம் சதுர்விதா பஜந்தே மாம் -என்று சொல்லப்பட்டது –
அவ்விடத்தில் தேஷாம் ஞாநீ நித்ய யுகத ஏக பக்திர் விசிஷ்யதே -ஸ்ரீ கீதை -7-17–என்று
தொடங்கிச் சொன்ன ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்
இப்படி மோஷ உபாயமாக விதித்த பக்தி யோகம் பர பக்தி என்று பேசப் பட்டது –

இதினுடைய ஹேதுவாய் சாத்விக பரிசீல நாதிகளாலே வந்த
பகவத் விஷயத்தில் ப்ரீதி விசேஷம் சர்வேஸ்வரனை தெளிய அறிய வேணும் என்னும்
அபி நிவேசத்துக்கு காரணமாய் பக்தி என்று பேர் பெற்று இருக்கும் –
இத்தாலே சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜனார்த்தனம் என்கிறபடியே
சாஸ்திர ஜன்ய தத்வ ஜ்ஞான கர்ம யோகாதி பரம்பரையாலே பிறந்த
பரபக்தி யானது
சாஷாத் கரிக்க வேணும் என்ற அபி நிவேசத்தை உண்டாக்கி –
யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ச யாத்மா நமவ்யயம் -என்றும்
காணுமாறு அருளாய் -என்றும் –
ஒரு நாள் காண வாராய் -என்றும் விலபிக்கும் படி பண்ணி இவ் அபேஷம் மாத்ரம் அடியாக வந்த
பகவத் பிரசாத விசேஷத்தாலே தத் கால நியதமான பரி பூர்ண சாஷாத் காரத்தை உண்டாக்கும் –
இச் சாஷாத் காரம் பர ஜ்ஞானம் என்று பேசப் பட்டது –

இப்படி நிரதிசய போக்யமான பகவத் ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த வாறே
பெரு விடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டால் போலே பிறந்த ப்ரீதி அதிசயம்
பரம பக்தி –
இது முனியே நான்முகனில் படியே சங்கோசம் அற அனுபவித்து அல்லது தரிக்க ஒண்ணாத அபி நிவேசத்தை உண்டாக்கி
மறுக்க ஒண்ணாத திரு வாணை இட்டு வளைத்துக் கூப்பிடுகையாலே இவனுக்கு கடுகப் பிராப்தியைக் கொடுக்கும் படி
சர்வேஸ்வரனுக்கு த்வரை அதிசயத்தை உண்டாக்கி இவனை அவா அற்று வீடு பெறப் பண்ணும் –

இப் பக்தி யோகம் த்ரை வர்ணிகர் ஒழிந்தார்க்கும் த்ரை வர்ணிகர் தங்களில்
ஜ்ஞானத்திலே ஆதல் சக்தியிலே யாதல் இரண்டிலும் ஆதல் குறை யுடையாருக்கும்
பல விளம்பம் பொறுக்க இசையாத தீவ்ர சம்வேகம் உடையார்க்கும் யோக்யம் அல்லாமையாலே தங்கள் அளவுகளைத் தெளிந்து
அத்வாரமாக பிரபத்தியை மோஷ உபாயமாகப் பற்றுமவர்களுக்கு சர்வ பல சாதனமான பிரபத்தி தானே பரபக்தி ஸ்தானத்திலே
சோதிதை யாகையாலே உபாசகனுக்கு பரபக்திக்கு மேல் வரும் அவஸ்தைகள் போலே இஸ் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுடைய
கோலுதலுக்கு ஈடாக
இப் பிரபத்திக்கு மேல் வரும் அனுகூல அவஸ்தைகள் இதின் பலமாய் இருக்கும் –
இப்படி பிரபத்திக்கு பக்திக்கும் அதிகாரி விசேஷத்தைப் பற்றி துல்ய பலத்வம் உண்டாகையாலே விகல்பமாகக் கடவது
இவற்றுக்கு நாநா சப்தாதி பேதாத் -என்கிற-3-3-56- அதிகரணத்திலே பேதம் சித்தம்
விகல்போ அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற-3-3-57-அதிகரணத்திலே விகல்பமும் சித்தம் –

உபாசனத்தில் விசேஷங்கள் போலே சாகா பேதங்களிலும் பகவச் சாஸ்திர சஹிதா பேதங்களிலும் சொல்லும்
நியாச வித்தையில் மந்த்ராதி விசேஷங்களைக் கண்டு கொள்வது –
நமஸ்காரம் வாசிகம் மானசம் காயிகம் என்று பிரிந்தால் போலே
பிரபத்தியிலும் ஓர் ஒன்றை முன்னிட்டு இவ் விபாகங்கள் சொல்லப்பட்டன
இவை மூன்றும் பொருந்தின போது பூர்ண நமஸ்காரம் ஆனால் போலே
பூர்ண பிரபத்தி யாகக் கடவது என்றவர்கள் பாசுரங்களுக்கும்
வாசிக காயிகங்களான வியாபார விசேஷங்கள் பரீவாஹமாம் படியான மானச பிரபத்தியினுடைய பூர்தியிலே
தாத்பர்யமாகக் கடவது
யதாதிகாரம் இவை எல்லாம் பல ப்ரதங்கள் என்னும் இடம் முன்பே சொன்னோம்

நின்ற நிலைக்கு உற நிற்கும் கருமமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள் கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தரும் ஆறும் அறிந்தனர் அந்தணரே —

கர்ம ஞானம் உபாசனம் சரண வ்ரஜ்யா இதி ஸ அவஸ்தி தான்
சன்மார்க்கான் அபவர்க்க சாதன வித்யௌ சத்வாரக அத்வாரகான்
ஏகத்வி ஆக்ருதி யோக சம்ப்ருத ப்ருதக்பாவ அநு பாவான் இமான்
சமயக் ப்ரேஷ்ய சரண்ய சரதி கிராமந்தி ரமந்தி புதா —

——————————————————————

அதிகாரம் -10- பிரபத்தி யோக்ய அதிகாரம் –

அர்த்தித்வேந சமர்த்ததா த்ரிகதநு சம்பிண்டிதா அதிக்ரியா
ச சாஷ்டாங்க ஷடங்கயோகா நியதாவஸ்தா வ்யவஸ்தாபிதா
ச்ரோதீ சர்வ சரண்யதா பகவத ஸ்ம்ருத்யா அபி சத்யா பிதா
சத்யா திஷூ இவ நைக மேஷூ அதிக்ருதி சர்வ ஆஸ்பதே சத்பதே —

இப்படி அபிமத பலனுக்கு உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் நியாச வித்யையிலே இழியும் அவனுக்கு
இவ் வித்யைக்கு அதிகார விசேஷம் முதலானவை இருக்கும்படி அறிய வேணும்
அதிகாரமாவது அவ்வோ பல உபாயங்களிலே பிரவ்ருத்தனாம் புருஷனுக்கு பலத்தில் அர்த்தித்வமும் –
உபாயத்தில் சாமர்த்தியமும் —
இவற்றில் சாமர்த்தியம் ஆவது
சாஸ்த்ரார்த்தத்தை அறிகையும்-அறிந்த படி அனுஷ்டிக்க வல்லனாகையும் -சாஸ்திர அநுமத ஜாதி குணாதி யோக்யதையும் –
இவ் வதிகாரம் முன்பே சித்தமாய் இருக்கும் -இது உடையவனுக்கு பிரயோஜனமாகக் கொண்டு
சாத்யமாக அனுவதிக்கப் படுவது பலம் -ததார்த்தமாக சாத்யமாக விதிக்கப் படுமது உபாயம் –
இங்கு முமுஷூத்வம் உண்டாய் ஸ்வ தந்திர பிரபத்தி ரூப மோஷ உபாய விசேஷ நிஷ்டனுக்கு
சாஸ்திர ஜன்ய சம்பந்த ஞானாதிகள் உபாசகனோடு சாதாரணமாய் இருக்க
விசேஷித்த அதிகாரம் தன்னுடைய -ஆகிஞ்சன்யமும் –அநந்ய கதித்வமும் —

ஆகிஞ்சன்யமாவது உபாயாந்தர சாமர்த்ய அபாவம் –
அநந்ய கதித்வமாவது பிரயோஜனாந்தர வைமுக்யம் -சரண்யாந்தர வைமுக்யமுமாம் –
இது பிரயோஜனாந்தர வை முக்யத்தாலும் அர்த்த சித்தம் –
இவ் வர்த்தம் -ப்ராஹ்மணம் சித்தி கண்டம் ச யான்சான்யா தேவதா ஸ்ம்ருதா —
பிரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
தீவ்ரதமான முமுஷூத்வம் இன்றிக்கே தேக அனுவ்ருத்தியாதி பிரயோஜனாந்தர சக்தனானவன்
மோஷார்த்தமாக பிரபத்தியைப் பற்றினால் அவ்வோ பிரயோஜனாந்தரங்களின் அளவுக்கு ஈடாக மோஷம் விளம்பிக்கும் –

இவ் ஆகிஞ்சன்யத்துக்கும் அநந்ய கதித்வத்துக்கும் நிபந்தனம்
உபயாந்தரங்களில் இவ் வதிகாரியினுடைய அஜ்ஞான அசக்திகளும் பல விளம்ப அசஹத்வமும் —
இதில் சரண்யாந்தர வைமுக்யத்துக்கு நிபந்தனம் –
யதா வாயோஸ் த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயச-தாதுரேவ வசம் யாந்தி சர்வ பூதானி பாரத -என்கிறபடியே
தனக்கும் பிறருக்கும் ஒத்து இருக்கிற பகவத் ஏக பாரதந்த்ரயாத் யவசாயமும் -பிரயோஜனாந்தர வைமுக்யமும்
இப் பிரபத்தி அதிகாரி விசேஷம்
ச பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்றும்
அஹமஸ்ம்ய அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி -என்றும்
ஆகின்ஜன அநந்ய கதி -சரண்ய–என்றும் –
அநாகதாநந்தகால சமீஷயாப்யத்ருஷ்ட சந்தாரோபாய –என்றும்
தத் ப்ராப்த்யே ச தத் பதாம் புஜத்வய பிரபத்தேரன்யன்ன மே கல்பகோடி சஹஸ்ரேணாபி சாதனமஸ்தீதி மனவான -என்றும்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -என்று இவை முதலான பிரமான சம்ப்ரதாயங்களாலே சித்தம் —

இவ்வளவு அதிகாரம் பெற்றால் பிரபத்திக்கு ஜாத்யாதி நியமம் இல்லாமையாலே சர்வ அதிகாரத்வம் சித்தம் –

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே –

பக்த்யாதௌ சக்தி அபாவ பிரமிதி ரஹிததா சாஸ்த்ரத பர்யுதாச
காலஷேப அஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி சதுர்பி
ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா சம்ஸ்ரயந்தே
சந்த ஸ்ரீ சம் ஸ்வதந்திர பிரபதன விதி நா முக்த்யே நிர்விசங்கா–

————————————————————————

அதிகாரம் -11-பரிகர விபாக அதிகாரம் –

இயான் இத்தம் பூத சக்ருத் அயம் அவசியம் பவ நவான்
தயா திவ்ய அம்போதௌ ஜகத் அகிலம் அந்த யமயதி
பவ தவம்ச உத்யுக்தே பகவதி பர நியாச வபுஷ
பரபத்தே ஆதிஷ்ட பரிகர விசேஷ சுருதி முகை —

இவ்வித்யைக்கு பரிகரமாவது-
ஆநு கூல்ய சங்கல்பமும் பிரதிகூல்ய வர்ஜனமும் கார்பண்யமும் மஹா விஸ்வாசமும் கோப்த்ருத்வ வர்ணமும் —
இவ்விடத்தில்
ஆநு கூல்யச்ய சங்கல்ப பிரதிகூல்யச்ய வர்ஜனம்
ரஷிப்யதீதி விஸ்வாசோ கோப்த்ருத்வ வர்ணம் ததா
ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்விதா சரணாகதி –இத்யாதிகளில் சொல்லுகிற ஷாட் வித்யமும் –
பிரபத்தியையும் உள்பட ஷாட் விதியை என்றது
அஷ்டாங்க யோகம் என்னுமா போலே அங்க அங்கி சமுச்சயத்தாலே -ஆகக் கடவது என்னும் இடமும் —
சமாதி நிலையையும் சேர்த்து அஷ்டாங்க யோகம் என்றால் போலே
இவற்றில் இன்னது ஒன்றுமே அங்கி இதரங்கள் அங்கங்கள் என்னும் இடமும்
நிஷேபா பர பர்யாயோ நியாச பஞ்சாங்க சம்யுத
சந்ந்யாச சத்யாக இத்யுக்த சரணாகதி ரித் யபி -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -017-74—என்கிற ஸ்லோகத்தாலே
நியாய நிரபேஷமாக சித்தம் –
இவ் விடத்தில் -சாச்வதீ மம சம்சித்திரியம் ப்ரஹ்ம விபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே சித்திரித அன்யதா
இதி யங்கமுதிதம் ஸ்ரேஷ்டம் பலேப்சா தத் விரோதி நீ –என்று அஹிர்புத்ன்ய உக்தமான
பல த்யாக ரூப அங்காந்தரம் மோஷார்த்தமான ஆத்ம நிஷேபத்தில் நியதம் —

பல சங்க கர்த்ருத்வாதி த்யாகம் கர்ம யோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்கள் எல்லா வற்றிலும் வருகையாலே
இவ் வனுசந்தானம் முமுஷூவுக்கு சாங்க சமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம் –
இங்கு பரிகரங்கள் ஆனவற்றில் ஆநு கூல்ய சங்கல்பத்துக்கும் பிரதி கூல்ய வர்ஜனத்துக்கும் நிபந்தனம்
சர்வ சேஷியான ஸ்ரீயபதியைப் பற்ற
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமத அனுவர்த்தனம் பண்ண வேண்டும்படி இவனுக்கு உண்டான பாரார்த்த்ய ஜ்ஞானம் –
இத்தாலே ஆநு கூல்யே தராப்யாம் து வி நிவ்ருதிரபாயத-என்கிறபடியே அபாய பரிஹாரம் சித்தம் –
கார்ப்பண்யம் ஆவது முன்பு சொன்ன ஆகிஞ்சன்யாதிகளுடைய அனுசந்தானம் ஆதல் –
அதடியாக வந்த கர்வ ஹானி யாதல் -க்ருபா ஜனக க்ருபண வ்ருத்தி யாதலாய் நின்று
சரண்யனுடைய காருண்ய உத்தம்ப நார்த்தமுமாய் –
கார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்தி ரிஹேரிதா -என்கிறபடியே பின்பும்
அநந்ய உபாயதைக்கும் உபயுக்தமாய் இருக்கும் –
மஹா விஸ்வாசம் ரஷிஷ்ய தீதி விஸ்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம் -என்கிறபடியே
அணியிடாத அனுஷ்டான சித்தர்த்தமுமாய் -பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாய் இருக்கும் –
ஸ்வரூப அனுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும் புருஷார்த்தமாம் போது
புருஷன் அர்த்திக்கக் கொடுக்க வேண்டியதாலே இங்கே கோப்த்ருத்வ வர்ணமும் அபேஷிதம்-

நன்றாய் இருப்பது ஒன்றையும் இப் புருஷன் அர்த்திக்கக் கொடாத போது புருஷார்த்தம் கொடுத்தான் ஆகாது இறே-
ஆகையாலே இறே அப்ரார்த்திதோ ந கோபாயேத்-என்றும்
கோப்த்ருத்வ வர்ணம் நாம ஸ்வ அபிப்ராய நிவேதனம் என்றும் சொல்லுகிறது
இப்படி இவ்வைந்தும் இவ்வித்ய அனுஷ்டான காலத்தில் உப யுக்தங்கள் ஆகையாலே இவை
இவ்வாத்ம நிஷேபத்துக்கு அவிநா பூத ஸ்வ பாவங்கள் –

இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கோள்-என்று
சாத்விக பிரக்ருதியான த்ரிஜடை ராஷசிகளுக்கு சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம் –
ததலம் க்ரூ ஸ்வாக் யைர்வ-என்று பிரதிகூல வர்ஜனம் சொல்லப் பட்டது
சாந்த்வமே வாபிதீயதாம் என்கையாலே மன பூர்வகம் அல்லது வாக் பிரவ்ருத்தி இல்லாமையாலே
ஆநு கூல்ய சங்கல்பம் ஆக்ருஷ்ட்யம் ஆயிற்று
ராகவாத்தி பயம் கோரம் ராஷசா நாமுபஸ்திதம்-என்று போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே
அதிகாரமான ஆகிஞ்சன்யமும் அதனுடைய அனுசந்தான முகத்தாலே வந்த கர்வ ஹந்த்யாதி ரூபமாய்
அங்கமான கார்ப்பண்யமும் சொல்லிற்று ஆயிற்று
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-என்கையாலும் இத்தை விவரித்துக் கொண்டு
அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம் -என்று திருவடி அனுவதிக்கையாலும்
பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும் இவர் சீற்றத்தை ஆற்றி இவள் ரஷிக்க வல்லவள் ஆகையாலே –
ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லப்பட்டது –
அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே பர்த்சிதாமபி யாசத்வம் ராஷச்ய கிம் விவஷயா என்கையாலே
கோப்த்ருத்வ வர்ணம் சொல்லிற்று ஆயிற்று –

இவ் வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிஷேபம் –
ப்ரணிபாத பிரசன்நா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று பிரசாத காரண விசேஷத்தைச் சொல்லுகிற
ப்ரணிபாத சப்தத்தாலே விவஷிதம் ஆயிற்று –
ஆகையாலே நியாச பஞ்சாங்க சம்யுத -என்கிற சாஸ்த்ரார்த்தம் இங்கே பூர்ணம-
இப்படி உபதேசிக்க ராஷசிகள் விளக்காத மாட்டே பற்றாசாக பிராட்டி தன் வாத்சல்யாதி அதிசயத்தாலே –
பவேயம் சரணம் ஹி வ என்று அருளிச் செய்தாள்-
இப் பாசுரம் சஹ்ருதமாய் பல பர்யந்தமான படியை –
மாதர் மைதிலீ ராஷசீ த்வயி ததைவ ஆர்த்ரா பராதா த்வயா -ரஷந்த்யா பவ நாத்மஜாத் லகுதரா
ராமஸ்ய கோஷ்டீ க்ருதா-என்று அபியுக்தர் வெளியிட்டார்கள் –
இவ் விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பர சமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே
நம்மவர்கள் என்று கண்ணோட்டம் பிறக்கும் ராஷசிகளும் அந்தர் பூதைகள் –
அப்படியே ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடு கூட வந்த நாலு ராஷசரும் அவனுடைய உபாயத்திலே அந்தர்பூதர் –

அங்குற்ற அபய பிரதான பிரகரணத்திலும் இவ் வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம்-எங்கனே என்னில் –
ப்ராதி கூல்யத்தில் வ்யவஸ்திதனான ராவணனுக்கும் கூட –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ சீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வசேம ராஜன் நிஹ வீத சோகா -என்று
ஹிதம் சொல்லுகையாலே ஆநு கூல்ய சங்கல்பம் தோற்றிற்று –

இந்த ஹித வசனம் பித்த உபஹதனுக்கு பால் கைக்குமா போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று-
த்வாம் து திக் குல பாம்சனம் -என்று திக்காரம் பண்ணின பின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது –
இவனோடு அனுபந்தித்த விபூதிகளும் ஆகாது -இவன் இருந்த இடத்திலே இருக்கவும் ஆகாது என்று அறுதியிட்டு
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச-என்று
ஸ்வ வாக்யத்தின் படியே அங்கு துவக்கு அற்று போருகையாலே பிரதிகூல்ய வர்ஜன அபிசந்தி தோற்றிற்று –
ராவணோ நாம துர்வ்ருத்தா -என்று தொடங்கி சர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே
தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும் பின்பும்
அநுஜோ ராவணஸ்யாஹம் தேன சாச்ம்யவமாநித-பவந்தாம் சர்வ பூதா நாம் சரண்யம் சரண்யம் கத -என்கையாலும்
கார்ப்பண்யம் சொல்லிற்று –

அஞ்சாதே வந்து கிட்டி -சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே -என்று சொல்லும் படி
பண்ணின மஹா விஸ்வாசம் விபூஷணோ மஹா ப்ராஜ்ஞா என்று காரண முகத்தாலே சொல்லப் பட்டது –
ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விஸ்வாசாதி அதிசயம் தானே விவஷிதம் ஆகவுமாம்-
ராவணம் சரணம் கத என்கையாலே உபாய வர்ண அந்தர் நீதமான கோப்த்ருத்வ வர்ணம் சொல்லிற்று ஆயிற்று –
உபாய வர்ண சப்தத்தாலே வ்யாஜிதம் ஆகிற அளவு அன்றிக்கே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷனம் உபாஸ்திதம்-என்கையாலே கடக புரஸ்சரமான ஆத்ம நிஷேபம் சொல்லிற்று
இப் பிரகரணத்தில் நிவேதன சப்தம் விஜ்ஞாபன மாத்ர பரமானால் நிஷ் பிரயோஜனம் –

இப்படி மற்றும் உள்ள பிரபத்தி பிரகரணங்களிலும்-
லௌகிக த்ரவ்ய நிஷே பங்களிலும் சம்ஷேப விஸ்தர பிரக்ரியையாலே இவ் வர்த்தங்கள் காணலாம் –
தான் ரஷிக்க மாட்டாதொரு வஸ்துவை ரஷிக்க வல்லான் ஒருவன் பக்கலிலே சமர்ப்பிக்கும் போது
தான் அவன் திறத்திலே அனுகூல அபிசந்தியை யுடையவனாய்
பிரதிகூல அபிசந்தியைத் தவிர்ந்து -இவன் ரஷிக்க வல்லவன் -அபேஷித்தால் ரஷிக்கவும் செய்யும் என்று தேறி
தான் ரஷித்துக் கொள்ள மாட்டாமையை அறிவித்து -நீ ரஷிக்க வேணும் என்று அபேஷித்து-
ரஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே சமர்ப்பித்து
தான் நிர்பரனாய் பயம் கெட்டு மார்பிலே கை வைத்துக் கொண்டு கிடந்தது உறங்கக் காணா நின்றோம் இறே

இக் கட்டளைகள் எல்லாம் க்ரியாமாணார்த்த பிரகாசகமான த்வயாக்ய மந்த்ரத்திலே அனுசந்திக்கும்படி எங்கனே என்னில்
சர்வஜ்ஞ சர்வ சக்தி உக்தனாய் -கர்ம அநுரூப பலப்ரதனாய் -சர்வ உபகார நிரபேஷனாய்-
ஷூத்ர தேவதைகளைப் போலே ஷிப்ரகாரி யன்றிக்கே இருப்பானாய்-
ஸ்சேமாதிக தரித்ரனான சர்வேஸ்வரன் அநந்த அபராதங்களை யுடையார்க்கு அபிகம்யன் ஆகையும்-
பிராப்தி விரோதியான அநந்த அபராதங்களை உடையார்க்கு
அளவில்லாத பலத்தை தருகையும் -அல்ப வியாபாரத்துக்கு தருகையும் -தாழாதே தருகையும் -தரம் பாராதே தருகையும்
கூடுமோ என்கிற சங்கைகளுக்கு நிவர்த்த கங்களுமாய் யதா சம்பவம் –
உபாயத்வ ப்ராப்யத்வ உப உக்தங்களுமாய் இருந்துள்ள புருஷகார சம்பந்த குண வியாபார பிரயோஜன விசேஷங்கள் ஆகிற
சேஷியினுடைய ஆகாரங்களைப் பொதிந்து கொண்டு இருக்கிற
ஸ்ரீ மச் சப்தத்திலும்
நாராயண சப்தத்திலும்
ஆர்தமாக அநு கூல்ய சங்கல்பமும் பிரதிகூல வர்ஜனமும் அனுசந்தேயமாகக் கடவது –

இப்படி விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஔசித்யத்தாலே அவன் திறத்தில் பிராப்தமான
அபிமத அனுவர்த்தன சங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் பிரகாசிப்பிக்கின்றன –
இப்புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்கள் ஆவன –
மறுக்க ஒண்ணாமையும்
ஒழிக்க ஒழியாமையும்
நிருபாதிகம் ஆகையும்
சஹகாரியைப் பார்த்து இருக்க வேண்டாமையும்
தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும் –
இவ் விசேஷங்கள் அஞ்சாலும் சங்கா பரிஹாரம் பிறந்த படி எங்கனே என்னில்

சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தானே யாகிலும் மறுக்க ஒண்ணாத புருஷகார விசேஷத்தாலே
அந்தப்புர பரிஜன விஷயத்தில் போலே
அபிகந்தவ்யதா விரோதிகளான அபராதங்களை எல்லாம் ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும் படி
நின்று அபிகந்தவ்யானாம் –
கர்ம அநுரூப பலப்ரதனே ஆகிலும் -இப் பிரபத்தி ரூப வ்யாஜத்தாலே பிரசன்னனாய்
ஸ்வாமித்வ தாசஸ்த்வ சம்பந்தோ போதிதமாய்
தாயம் போலே ஸ்வத பிராப்தமான அளவில்லாத பலத்தையும் தரும் –
அவாப்த சமஸ்த காமதை யாலே சர்வ உபகார நிரபேஷனே யாகிலும்
அல்ப வ்யாஜத்தாலே வசீகார்யனான ஸூஜன சார்வ பௌமனைப் போலே
காருண்யாதிகளாலே இவன் செய்கிற சிலவான வியாபாரத்தைத் தனக்கு பரிபோகாரமாக ஆதரித்துக் கொண்டு
க்ருதஜ்ஞனாய் கார்யம் செய்யும் –
ஷூத்ர தேவதைகளைப் போலே ஷிப்ரகாரி அன்றாகிலும் –
மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்து பலம் கொடுத்தானே யாகிலும்
அநந்ய சரண்யனுடைய ப்ரபத்திக்கு ஔதார்யாதி குண சஹிதமாய்
சஹகார்யந்தர நிரபேஷமான தன் சங்கல்ப மாத்ரத்தாலே
காக விபீஷணாதிகளைப் போலே இவன் கோலின காலத்திலே அபேஷிதம் கொடுக்கும்

சமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ர்யாதி குண விசிஷ்டனாய் தன் பிரயோஜனமாக
ஆஸ்ரிதர்க்கு அபேஷிதம் செய்கிறான் ஆகையாலே
கோசல ஜன பதத்தில் ஜந்துக்களுக்குப் போலே குமாரனோடு ஒக்கத் திர்யக்கான கிளிக்கு பாலூட்டும்
கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும் –
இப்படி யதா லோகம் பிறந்த சங்கைகளுக்கு யதா லோகம் பரிஹாரம் உண்டாகையாலே
யதா சாஸ்திரம் பிரபத்தி அபேஷித சாதனமாகக் குறை இல்லை –

இவ் விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் சதாசார்ய கடாஷ விசேஷத்தாலே தெளிந்தவனுக்கு அல்லது
மஹா விஸ்வாசம் பிறக்காது -எங்கனே என்னில் –
ஈஸ்வரன் அபிமுகன் அல்லாமையாலே கர்ம யோகாதிகளுக்கு அனர்ஹனாம் படியான
மஹா பாதங்களை உடையவனாய்
திகசுசி மவிநீதம் என்கிற ஸ்லோகத்தின் படியே எட்ட அரிய பலத்தை
கணிசிக்கும் படியான சாபலத்தையும் உடையனாய் –
இப் பலத்துக்கு அனுஷ்டிக்கப் புகுகிற உபாயம் காயக்லேச அர்த்தவ்யய கால தைத்ர்த்யாதிகள்
ஒன்றும் வேண்டாத தொரு சக்ருத அனுசந்தானம் ஆதல்
சமுதாய ஜ்ஞான பூர்வாக சக்ருத் உக்தி மாதரம் ஆதலாய் -இந்த லகு தர மான உபாயத்தைக் கொண்டு
அந்த குரு தரமான பலத்தை தான் கோலின காலத்திலே ஆசைப்பட்டு
இப் பலத்துக்கு சுநமிவ புரோடாச என்கிறபடியே ஜன்ம வ்ருத்தாதிகளாலே தான் அனர்ஹனாய் வைத்து
தன் அனுபந்திகளையும் கொண்டு இப் பேறு பெறுவதாக ஒருத்தனுக்கு மஹா விஸ்வாசம் பிறக்கையில்
அருமையை நினைத்து கல வெள்ளக் கட்டுப் போய் கல எண்ணெய் ஆயிற்று என்று எம்பார் அருளிச் செய்தார் இறே
கர்ம யோகத்துக்கே தகுதி இல்லாதவன் இந்த பிரபத்தியில் மஹா விஸ்வாசம் கொள்ள நினைப்பது
என்ற பொருளில் அருளிச் செய்தார் –

இவ்விடத்தில் சர்வேஸ்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நாரதமன் என்று
பேர் பெற்ற பிறந்து கெட்டானில் காட்டில்
இடைச்சிகளைப் போலே விவேகம் இல்லையே யாகிலும் சௌலப்யத்தை அறிந்து
அந்நலன் உடை ஒருவனை நணுகுமவனே பரம ஆஸ்திகன் என்று அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் –

இப்படி புருஷகாராதி ஜ்ஞானத்தாலே பிறந்த விஸ்வாச மஹத்வமும் விஸ்வாச ஸ்வரூபமும் கார்ப்பண்யமும்
ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்தில் உப சர்க்கத்திலும்
சரண சப்தோ பலிஷ்டமான தாதுவிலும்
உத்தமன் தாது பொருளிலும்
அனுசந்தேயங்கள்
இதில் உத்தமனில் விவஷிதத்தை -அநந்ய சரண்ய-என்று கத்யத்திலே எம்பெருமானார் வியாக்யானம் பண்ணி அருளினார் –
இவ்விடத்தில் உபாயத்வ அத்யவசாய வாசக சப்தத்திலே கோப்த்ருத்வ வரணம் அந்தர் நீதம் –

அஹம் அஸ்மி அபராதா நாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி -என்றும்
சரணாகதி ரித்யுக்தா சா தேவ அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்றும்
உபாயோ க்ருஹ ரஷித்ரோ சப்த சரணமித்யயம்
வர்த்ததே சாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக -என்றும் சொல்லுகிறபடியே
உபாயாந்தர அசக்தனுக்கு சர்வேஸ்வரன் சர்வ சாஸ்த்ரார்த்த சாதரணமான ரஷகத்வத்திலே மாத்ரம் நிற்கை அன்றிக்கே
ஸ்வீக்ருத பரனாய்க் கொண்டு உபாயாந்தர ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும் –
ந்யஸ்த பரனான இவ்வதிகாரிக்கு பின்பு அநந்ய உபாயத்வம் நிலை நிற்கைக்காகவும்
உபாயத்வ அத்யவசாயம் இவ்விடத்திலே விவஷிதமாயிற்று –

உபாயம் என்றால் ஒரு விரகு என்ற மாத்ரம் ஆகையாலே இவ் உபாயத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கையாலும்
ரஷிஷ்யதீதீ விஸ்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -என்றும்
சர்வஜ்ஞ அபி ஹி விச்வேசா சதா காருணிகோ அபிசன்
சம்சாரதந்திர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்றும் சொல்லுகிறபடியே
சேத நை காந்தமான கோப்த்ருத்வ வரணம் அனுசந்தேயம் ஆகையாலும் கோப்த்ருத்வ வரணம் இங்கே விவஷிதம்
அதி சரண சப்தம் ஒரு பிரயோகத்திலே இரண்டு அர்த்தத்தை அபிகா நம் பண்ண மாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு
அசாதாரணமான உபாய அத்யவசாயம் இவ்விடத்தில் சப்தமாய் சர்வாதிகாரி சாதாரணமான
கோப்த்ருத்வ வரணம் அர்த்தமாகக் கடவது

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற உம்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே —

பிரக்யாத பஞ்சஷ அங்க சக்ருத் இதி பகவச் சாசநை ஏஷ யோக
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அன்யேன தத் சாத்யதா இச்சா
தத்வஜ்ஞான பிரயுக்தா து இஹ ச பரிகரே தாததீன்ய ஆதி புத்தி —

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: