ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -7- முமுஷூத்வ அதிகாரம் /அதிகாரம் -8- அதிகாரி விபாக அதிகாரம் – —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -7- முமுஷூத்வ அதிகாரம்

கால ஆவர்த்தான் பிரகிருதி விக்ருதீ காம போகேஷூ தோஷான்
ஜ்வாலா கர்த்தா ப்ரதிம துரித உதர்க்க துக்க அநுபூதிம்
யாதாதத்யம் ஸ்வ பரி நியதம் யச்ச திவ்யம் பதம் தத்
காரா கல்பம் வபுரபி விதன் கஸ்தி திஷேத பந்தம் –

இப்படி இவ் வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து
ஸ்வயம் பிரகாசாத்வ ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போத்ருத்வ சரீரித்வ அணுத்வ நித்யத்வ நிரவயவத்வ
ஸ்சேதன தஹன க்லேதன சோஷணாத்ய நர்ஹத்வ வ்ருத்திஹ் ரஸா ரஹித ஸ்வரூபத் வாதிகளாலே
ஆத்மாவுக்கு விசேஷண பூத தேக இந்த்ரிய வைலஷண்யத்தைக் கண்டு –
இவனுடைய பரலோக கமன தேஹாந்தர ப்ராப்தி யோக்யத்வ நிச்சயத்தாலே சாமான்யேன லோக உத்தீர்ண
புருஷார்த்த யோக்யராய் நரக பத நாதி ஜன்மாந்தர க்லேசங்களுக்கு அஞ்சி
அவற்றின் காரணங்களான கர்மங்களின் நின்றும் நிவ்ருத்தராய்
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வ அல்ப சக்தித்வ அணுத்வ சம்சய விபர்யய துக்காதி யோக்யத்வ அசுபாஸ்ரயத் வாதிகளாலே
உண்டான விசேஷ்ய பூத ஈஸ்வர வ்யாவ்ருத்தி நிச்சயத்தாலே
பகவத் கைங்கர்ய ரூபமான ஸ்வரூப ப்ராப்த வைபவத்தை அபேஷிக்கைக்கு யோக்யராய்
சர்வ அபேஷித சங்க்ரஹமான திரு மந்த்ரத்தைக் கொண்டு சார தம அர்த்தங்களை அனுசந்திக்கும் போது

1–பிரதம பதத்திலே த்ருதீய அஷரத்தாலே பிரதி பன்னமான ஞானத்வாத் யனுசந்தானத்தாலே
தேக தத் அனுபந்திகளில் வரும் அஹங்கார மமகாரங்களையும்-
2- பிரதம அஷரத்திலே லுப்த சதுர்தியாலே பிரதிபன்னமான தாதர்த்யத்தாலே தேஹாதிரிக்த ஆத்ம ஸ்வரூப தது குணங்களில்
த்வம் மே அஹம் மே என்கிற ஸ்லோகத்தின் படியே தனக்கு உரிமை உண்டாக நினைக்கிற அஹங்கார மமகாரங்களையும் –
3- மத்யம அஷரத்திலே அவதாராண அர்த்தத்தாலே அந்ய சேஷ பூதோ அஹம் என்றும் மமான்ய சேஷி என்றும் வரும்
அஹங்கார மமகாரங்களையும் –
4- மத்யம பதத்தில் பிரதிபன்னமான நிஷேத விசேஷத்தாலே ஸ்வ ரஷணத்தை வியாபாரத்தைப் பற்ற வரும்
நிரபேஷ ஸ்வாதந்த்ர்ய நிரூபாதிக சேஷித்வ அபிமான ரூபங்களான அஹங்கார மமகாரங்களையும்
5- இந் நிஷேத சாமர்த்தியம் தன்னாலே த்ருதீய பதத்திலே சதுர்த்தியாலே அபிப்ரேதமாய் பாவியான
கைங்கர்ய பரிந்த அனுபவம் ஆகிற பலத்தைப் பற்ற
இப்போது பலாந்தர அனுபவ ந்யாயத்தாலே வரும் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வ ஸ்வார்த்த கர்த்ருத்வ
போக்த்ருத்வ ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்களையும்
யதா யோக்யம் ஆர்த்தமாகவும் சப்தமாகவும் அடியறுத்து இப்படி ஸ்த்ர ப்ரதிஷ்ட ஞானராய்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -என்றும்
கண்டு கேற்று உற்று மோந்து உண்டு உலகும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்றும்
தஸ்மின் பிரசன்னே கிமிஹாஸ் த்யலப்யம் தர்மார்த்த காமரை லமல்ப காஸ்தே அந்தவஸ்து பலம் தத் பவத்யல்ப மேதஸாம்
அநித்யம ஸூகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் -மஹா பலான் மஹா வீர்யான் அநந்த தன சத்ஜயான் கதான்
காலேன மஹதா கதா சேஷான் நராதிபான் ச்ருத்வா ந புத்ர தாரா தௌ க்ருஹ ஷேத்ராதிகே அபி வா த்ரவ்யாதௌ
வா க்ருத பிரஜ்ஞோ மாமாத்வம் குருதே நர சர்வம் துக்கமயம் ஜகத் ஸ்வர்க்கே அபி பாத பீதச்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருத்தி –
ராஜ்யே க்ருத் நந்த்யே வித்வாம்சோ மமத்வாஹ்ருத சேதச அஹம் மான மஹா பான மதமத்தா ந மாத்ருசா –
ஆ ப்ரஹ்ம பாவனா தேதே தோஷா –சத்தி மஹா புனே அத ஏவ ஹிநேச்சந்தி சவர்க்க ப்ராப்திம் மநீஷிணா-
ப்ரஹ்மணா சதா நா தூர்த்வம் தத் விஷ்ணோ பரமம் பரம் சுத்தம் ச நா தா நம் ஜ்யோதி
பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா கச்சந்தி புருஷா விஷயாத்மகா
டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா-
நிர்மமா நிரஹங்காரா நிர்த்வந்தா சம்யதேந்த்ரியா த்யான யோக ரதாச்சைவ தத்ர கச்சந்தி சாதவ
ரம்யாணி காம சாராணி விமா நானி சமாஸ்ததா ஆக்ரீடா விவிதா ராஜன் பத்மின் யச்ராமலோதகா
ஏத வை நிரயாஸ்தாத ஸ்தா நஸ்ய பரமாத்மன -இத்யாதி பிரமாணங்களால்
அல்பத்வ அஸ்திரத்வ துக்க மூலத்வ துக்க மித்ரத்வ துக்கோ தர்க்கத்வ விபரீதாபிமான மூலத்வ
ஸ்வா பாவிகாநந்த விருத்தங்கள் ஆகிற அசித் விஷய அனுபவ தோஷ சப்தகத்தையும்
இவற்றில் யதா சம்பவம் உண்டான சேதனா மாத்ர அனுபவ தோஷங்களையும்
இவ் வனுபவங்களுக்கு எதிர்தட்டான பகவத் அனுபவத்தின் வை லஷண்யத்தையும் விசதமாக அனுசந்தித்து
பரமாத்மநி நியோ ரக்தோ விரக்த அபாரமாத்மநி -என்கிற அவஸ்தை யுடையராய்
ப்ரவ்ருத்தி லஷணம் தர்மம் பிரஜாபதி ரதாப்ரவீத் -என்கிற பிரவ்ருத்தி தர்மங்களில் நின்றும் நிவ்ருத்தராய்
நிவ்ருத்த லஷணம் தர்மம் ருஷிர் நாராயணோ அப்ரவீத் என்கிற நிவ்ருத்தி தர்மங்களில் பிரவ்ருத்தர் ஆனவர்கள்
முமுஷூக்களான அதிகாரிகள் –

கீழ் சொன்ன படியிலே பரா வரங்களான தத்தவங்களும் புருஷார்த்தங்களும் தெளிந்தாலும்
இப்படி வைராக்ய பூர்வகமாக பரம புருஷார்த்த உபாய அனுஷ்டானத்தில் ப்ரவர்த்தியானாகில்
சீல வ்ருத்த பலம் ஸ்ருதம் சமார்த்தம் சர்வ சாஸ்த்ராணி விஹிதானி மநீஷிபி தஸ்மாத் ச சர்வ சாஸ்த்ரஜ்ஞோ
யஸ்ய சாந்தம் மன சதா -என்கிற ஸ்ருத பலத்தையும் இழந்து
நாஸ்சாதயதி கௌபீனம் ந தம்ச மசகாபஹம் சுன புச்ச மிவா நர்த்தம் பாண்டித்யம் தரமி வர்ஜிதம் -என்கிறபடியே ஹாஸ்யனாம்
ஆகையாலே வயச கர்மணோ அர்த்தச்ய ஸ்ருதச்யாபி ஜ நஸ்ய ச வேஷ வாக்வ்ருத்தி சாருப்ய மாசரன் விசரேதிஹ என்கிறபடியே
ஸ்ருத அனுரூபமாக ஸ்வ உசிதமான பரம புருஷார்த்த உபாய அனுஷ்டானத்தில் த்வரிக்குமவர்கள்
தன் கருமம் செய்ய பிறர் உகந்தார் -என்கிறபடியே
தம் தேவா ப்ரஹ்மாணம் விது பிரணமந்தி தேவதா -இத்யாதிகளில் சொல்லும் ஏற்றம் பெறுவார்கள் –

நின்ற புராணன் அடி இணை ஏந்தும் நெடும் பயனும்
பொன்றுதலே நிலை என்றிடப் பொங்கும் பவக் கடலும்
நன்று இது தீயது இது என்று நவீன்ற்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே –

விஷமது பஹிஷ் குர்வன் தீரோ பஹிர் விஷயாத்மகம்
பரிமிதரச ஸ்வாத்ம ப்ராப்தி ப்ரயாச பராங்முக
நிரவதி மஹா நந்த ப்ரஹ்மாநுபூதி குதூஹலீ
ஜகதி பவிதா தைவாத் கச்சித் ஜிஹாசித சம்ஸ்ருதி —

———————————————————————————————-

அதிகாரம் -8- அதிகாரி விபாக அதிகாரம் –

முமுஷூத்வே துல்யே சதி ச மது வித்யா திஷூ யதா
வ்யவஸ்தா சம்சித்தயதி க்ருதி விசேஷண விதுஷாம்
விகல்பயேத நியாசே ஸ்திதி இதர வித்யாஸூ ச ததா
நியத்யா வையாத்யம் நியமயிதம் ஏவம் ப்ரபவதி-

இப்படி பரம புருஷார்த்த உபாயங்களான நிவ்ருத்தி தர்மங்களிலே பிரவ்ருத்தரான அதிகாரிகள் இருவர் –
அவர்கள் ஆகிறார் -அத்வாரக பிரபத்தி நிஷ்டனும் -சத்வாரக பிரபத்தி நிஷ்டனும் –
ஸ்வ தந்திர அங்க பிரபத்திப்யாம் ப்ரபன்னௌ அத்ர தாவுபௌ
பல சாதன பக்திப்யாம் பக்தாவபி ச தர்சிதௌ
ஒருவருக்கு பக்தி உபாயம் -மற்ற ஒருவருக்கு பக்தி பலமாகும் –
ஸ்நானம் சப்த விதம் ஸ்ம்ருதம் -மந்த்ரம் உச்சரித்தல் மானசீகம் திவ்ய ஸ்நானம் வாயு ஸ்நானம் -போன்றவை -என்கிறபடியே
யதாதிகாரம் மாந்திர மானச திவ்ய வாயவ்யாதிகளும் துல்ய பலங்களான ஸ்நான பேதங்கள் ஆனால் போலே
உக்தி ஆச்சார்ய நிஷ்டை என்கிற இவையும் பிரபத்தியில் முக பேதங்கள் —

இவற்றில் உக்தியாவது –
ஆநு கூல்ய சங்கல்பாதி அங்கங்களில் வேசத்யம் இல்லாதார் அவனை ஒழியப் போக்கற்று நிற்கிற அதிகாரமும்
அபேஷித்தால் ரஷிக்கும் என்கிற விஸ்வாசமும் உடையராய்க் கொண்டு –
சரண்யன் அறிய பூர்ண பிரபத்தி கர்ப்பமான ஆச்சார்ய உபதிஷ்ட வாக்யத்தாலே தாதிமார் சொன்ன பாசுரத்தைச் சொல்லி
சார்ம பௌமனை சரணம் புகும் முக்தரான சாமந்த குமாரர்களைப் போலே
என்னுடைய ரஷை உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ள வேணும் என்கை-
பத வாக்யாதி வ்ருத்தாந்தம் அறியாத பாலகன் ஒரு கால் பவதி பிஷாம் தேஹி என்றால்
ஆடச்யரான சத்துக்கள் அகத்திலே அப்போதே அபேஷித சித்தி உண்டாமாப் போலே
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் -என்றபடி பரிபூர்ண பரம உதாரர் விஷயத்தில்
இவ் உக்திக்கும் பல அவிநாபாவம் உண்டு –
அறிவிலிகளாய் இவ் உக்தி மாத்ரமே பற்றாசானவர்கள் திறத்தில்
யேன கே நாபி ப்ரகாரேண த்வ்யவக்தா த்வம் -என்று சொல்லுகிறபடியே
இவ் உக்தி மாத்ரமும் உண்டறுக்க மாட்டாது சரண்யரின் கிருபை –

இவ் வர்த்தத்தை -பாபியசோபி சரணாகதி சப்த மாஜ-என்றும்
சரண வரண வாகியம் பேதிதா ந பவதி பத சாபி தீ பூர்விகா -என்றும்
பிரபத்தி வாசைவ நிரீஷிதும் வ்ருணே என்றும் அபியுக்தர் பேசினார்கள் –
இவ் உக்தி மாத்ர நிஷ்டையனுடையவும் ஆசார்ய நிஷ்டையனுடையவும் நிலைகள் இரண்டையும்-
தவ பரோ அஹமகாரிஷி தார்மீகை சரணமித்யபி வாசமுதைரிரம் இதி சசாஷிக யன்நித மத்யமாம் குரு பரம்
தவ ரங்க துரந்தர-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-102-என்று சேர்த்து அனுசந்தித்தார்கள்
இதில் மிகுதி காட்டுகிற அபி சப்தத்தாலே ஒர் ஒன்றே அமையும் என்று ஸூசிதம் ஆயிற்று –
இவர்களில் ஆசார்ய நிஷ்டன் புத்தர ப்ரேயஷ்ததா சிஷ்ய இதி ஏவம் ச நிவேதயேத்-என்று
சாண்டில்ய ஸ்ம்ருதியாதிகளில் சொல்லுகிறபடியே ஆச்சார்யனுடைய ஆத்மாத்மீய பர சமர்ப்பணத்திலே தானும் அந்தர் பூதன் –
சித்திர் பவதி வா நேதி சம்சய அத்ர தத்பக்த பரிசர்யா ரதாத்மா நாம் -என்கிற கணக்கிலே
ஆச்சார்ய நிஷ்டனுக்கு கை முதிக ந்யாயத்தாலே பல சித்தியில் சந்தேஹம் இல்லை –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலையில் தாவும் சிம்ஹ சரீரத்திலே ஜந்துக்களைப் போலே
ஸ்ரீ பாஷ்யகாரர் சம்சார லங்கணம் பண்ண அவரோடு உண்டான குடல் துவக்காலே
நாம் உத்தீர்ணர் ஆவுதோம் என்று ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த பாசுரம் –
அந்த அநந்த ப்ரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத்
பங்குர் நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந
புங்க்தேபோகா நவிதித நிபஸ் சேவகஸ் யார்க்ககாதி
த்வத் சம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு –என்று நியாச திலகத்திலே சொன்னோம் –

ஏதேனும் ஒரு பிரகாரம் ஆகவுமாம்-ஆரேனும் ஒருவர் அனுஷ்டிக்கவுமாம் –
பிரபத்திக்கு அல்லது சர்வேஸ்வரன் பரம புருஷார்த்தம் கொடுக்க இரங்கான் -என்றதாயிற்று
இப்படி -பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா-தே நைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
தே வயம் பவதா ரஷயா பவத் விஷய வாஸிந நகரஸ்தோ வனச்யோ வா த்வம் நோ ராஜா ஜநேச்வர -என்றும்
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -என்றும்
வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை -என்றும்
சொல்லுகிற பகவத் அபிமான பகவத் விஷய வாசாதிகளுக்கும்
தன் பக்கலிலே யாதல் பிறர் பக்கலிலே யாதல் முன்பே யாதல் பின்பே யாதல் ஓர் உபாயத் துவக்குண்டு
எங்கனே என்னில்
இவை உபாசனத்திலே யாதல் பிரபத்தியிலே யாதல் உத்பன்ன உபாசனனுக்கு உத்தர உத்தர உபசயத்தைப் பண்ணியும்
ஸ்வ தந்திர பிரபத்தி அனுஷ்டானம் பண்ணினவனுக்கு இங்குற்ற கைங்கர்ய அபிவ்ருத்தியை உண்டாக்கியும்
பகவத் பிராப்தியிலே த்வரை உண்டாக்கியும் -உபகாரங்களாம்-

இவர்களில் வ்யாசாதிகளைப் போலே உபாயாந்தர சமர்த்தன் ஆகையாலே அகிஞ்சனும் இன்றிக்கே விலம்ப ஷமன் ஆகையாலே
அநந்ய கதியும் அன்றிக்கே இருக்கிற சத்வாரக பிரபத்தி நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மா பர்யவசான பாவியான அந்திம பிரத்யயத்தை அவதியாக உடைத்தான
உபாசன ரூப அங்கியினுடைய யதா வந் நிஷ்பந்தி பூர்வகமான மோஷம் பலம்
சர்வாதிகாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்-சர்வ இஷ்ட சாதனமாக வற்றாய்-
ஸூ கரமாய் -சக்ருத் கர்தவ்யமாய் -ஆசுகாரியாய் -ப்ரதிபன்னா நர்ஹமாய்
ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வ பலத்திலே உபயாந்தர பிரயோக அசஹமாய் இருந்துள்ள ப்ரபத்தியை தன் அதிகார அனுரூபமாக
அத்வாரமாகப் பற்றினவனுக்கு பரி பூர்ண அனுபவத்துக்கு வேறு பிரதிபந்தகம் இல்லாத படியாலே பிரபத்தி ஷணம் முதலாக
இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றேன் என்றும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே -என்றும்
ஸ்நேஹோ மே பரமோ ராஜன் வியாதி நித்யம் பிரதிஷ்டிதே -பக்திச்ச நியதா வீர
பாவோ நான்யத்ர கச்சதி -என்றும் சொல்லுகிற படிகளிலே
இச் சரீரத்தோடு இருந்து கைங்கர்யாத் அனுபவம் பண்ண வேணும் என்கிற அபி சந்திக்கு காரணமான
அர்ச்சாவதாராதி சங்கல்பம் அடியாக வந்த ஸ்வ அனுமதியாலே ஸ்தாபிதமான சரீரத்தின் அவசா நத்தை எல்லையாக உடைத்தாய் –
தேச கால ஸ்வரூப பரிச்சேத வத்தாய்க் கொண்டு

வரம் வராய தஸ்மாத்த்வம் யதாபி மதமாத்மன சர்வம் சம்பத்ச்யதே பும்ஸாம் மயி திருஷ்டி பதம் கதே-என்றும்
கிம் வா சர்வ ஜகத் ஸ்ரஷ்ட பிரசன்னே த்வயி துர்லபம் -என்றும்
தஸ்மின் பிரசன்னே கிமாஹாஸ் த்யலப்யம்-என்றும்
கிம் லோகே ததிஹ பரத்ர சாஸ்தி பும்ஸாம் யத் விஷ்ணு ப்ரவண தியாம் ந தால்ப்ய சாத்யம் -என்றும்
பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் 3-2-37–என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் சகல பல ப்ரதன் ஆகையாலே அவன் திருவடிகளிலே பிரபத்தி சகல பல சாதனம் ஆகையாலே
இவ் வதிகாரிகள் இருவருக்கும் இது யதாபிமத பல ஹேது வாயிற்று
சதுர்வித பஜந்தே மாம் -என்கிறபடியே உபாசனம் யாதொரு படி சதுர்வித பலத்துக்கும் சாதனமாய் இருக்கிறது அப்படியே
தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததா அஸூகம் யாவந்த யாதி சரணம் த்வாம சேஷாத நாச நம் என்கிறபடியே
பிரபத்தியும் இச் சதுர்வித பலத்துக்கும் சாதனமாக இறே மகரிஷிகள் அறுதி இடுவது-

இதில் அசேஷ அத நாசனம் என்கையாலும்-
ஆதாரம் தோற்றத் தாவத் என்று அதிகாரம் தோறும் ஆவர்த்திக்கை யாலும்
இவன் அபேஷித்த பலம் எல்லாம் இவன் கோலின காலத்திலே யதா மநோரதம் சித்திக்கும் –
இப்படிப்பட்ட ஏற்றத்தை நினைத்து
சத் கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா நார்ஹந்தி சரணஸ்
தஸ்ய கலாம் கோடி தமீமபி-லஷ்மீ தந்த்ரம் -16-62–என்று சொல்லுகிறது –
இவனுக்கு இங்கு இருந்த காலத்தில் கைங்கர்யத்தில் வைஷம்யம் தன் கோலுதலில் வைஷம்யத்தாலே வந்தது –
அது தனக்கு அடி பிராரப்த ஸூஹ்ருத விசேஷம் –
அந்திம சரீரா நந்தரம் பெரும் பேற்றில் ஒரு வைஷம்யமும் இல்லை
பாரதந்த்ரம் ஏக ரூபம் -பார தந்த்ர்யம் பரே பும்சி ப்ராரப்ய நிர்கத பந்தன
ஸ்வா தந்த்ர்யமாதுலம் ப்ராப்ய தே நைவ சஹ மோததே என்று
பல தசையில் சொல்லுகிற ஸ்வா தந்த்ர்யமும் கர்ம வச்யன் அன்றிக்கே
சர்வ வித கைங்கர்ய யோக்யனாகை என்று பல பாதத்திலே நிர்ணிதம்-

வேண்டும் பெரும் பயன் வீடு என்று அறிந்து விதி வகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் என்பர்
மூண்டு ஒன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தன் அடி
பூண்டு அன்றி மற்றோர் புகல் ஓன்று இலை என நின்றனரே –

பிரபன்னாத் அன்யேஷாம் ந திசதி முகுந்தோ நிஜ பதம்
பிரபன்னாச்ச த்வேதா ஸூ சரித பரீபாக பிதாய விளம்பே ந
ப்ராப்திர் பஜ ந ஸூ கமே கஸ்ய விபுலம்
ப்ரச்யாஸூ ப்ராப்தி பரிமித ரஸா ஜீவிததசா —

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: