ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -6-பரதேவதா பாரமார்த்த்ய அதிகாரம் – —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -6-பரதேவதா பாரமார்த்த்ய அதிகாரம்-

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகசமதிகதா துல்ய தைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐஸ்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ ஆத்ரியந்தே ந சந்த
த்ரயந்தை ஏக கண்டை தத் அனுகுண மனு வியாச முக்ய உக்திபி ச
ஸ்ரீ மான் நாராயணோ ந பதி அகிலதநு முக்தித முக்த போக்ய —

உக்தவை தர்ம்யங்களால் பொதுவிலே பிரகிருதி -புருஷ -ஈஸ்வர விவேகம் பண்ணினாலும்
ஒன்றும் தேவும் இத்யாதிகளில் படியே பர தேவதா விசேஷம் நிச்சம் இல்லாத போது —
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்அவனை அல்லால் என்கிற பரமை காந்தித்வம் கூடாமையாலும்
பரமை காந்திக்கு அல்லது வ்யவதான ரஹிதமாக மோஷம் கிடையாமையாலும் —
ஈஸ்வரன் இன்ன தேவதா விசேஷம் என்று நிஷ்கர்ஷிக்க வேணும் –
அவ் விடத்தில் -சேதன அசேதனங்களுடைய அத்யந்த பேதம் பிரமான சித்தம் ஆகையாலே
எல்லாம் பரதேவதையாய் இருக்கிற ப்ரஹ்ம த்ரவ்யம் -அங்கம் – என்கிற பஷம் தடியாது –
ஸ்வபாவ சித்தமான ஜீவேஸ்வர பேதமும் –
அப்படியே தேவாதி ரூபரான ஜீவர்களுடைய அந்யோந்ய பேதமும்
ஸூக துக்காதி வ்யவச்தையாலே பிரமாணிகம் ஆகையாலே —
சர்வ அந்தர்யாமி ஒருவனே யாகிலும்
ப்ரஹ்ம ருத்ரேந்தாதி சர்வ தேவதைகளும் ஈஸ்வரனோடும் தன்னில் தானும் அபின்னர் என்கிற பஷம் கூடாது –

இத் தேவதைகளில் பிரதானராகச் சொல்லுகிற பிரம்ம ருத்ரேந்த்ராதிகளுக்கு
கார்யத்வ கர்ம வச்யத்வங்கள் பிரமாணிகங்கள் ஆகையாலும் –
ஆபூத சம்ப்லவே ப்ராப்தே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான்
ஏகாஸ் திஷ்டதி விச்வாத்மா ச து நாராயணா பிரபு –என்றும்
ஆத்யோ நாராயணா தேவ தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ -என்றும்
பரோ நாராயணோ தேவோ தஸ்மாத் ஜாதச் சதுர்முக
தஸ்மாத் ருத்ரோ அபவதேவி -என்றும் –இத்யாதிகளிலே
ததஸ்த்வமாபி துர்தர்ஷ தஸ்மாத் அபவாத் சநாதனம்
ரஷார்த்தம் சர்வ பூதா நாம் விஷ்ணுத்வ முபஜக்மிவான் -என்கிறபடியே
ஸ்வ இச்சா அவதீரணனாய்-த்ரிமூர்த்தி மத்யஸ்தனான விஷ்ணு நாராயாணாதி சப்த வாச்யன் தானே
தன்னுடைய பூர்வ அவஸ்தையிலே ஜகத்துக்கு காரணம் என்கையாலும்
நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம்-ருதே தமேகம் புருஷம் வா ஸூ தேவம் சநாதனம்-என்கிறபடியே
அவனே நித்யன் என்கையாலும்-
த்ரி மூர்த்திகளும் சமர் என்றும் –
த்ரி மூர்த்திகள் ஏக தத்வம் என்றும் –
த்ரிமூர்த்யுத்தீர்ணன் ஈஸ்வரன் என்றும் –
த்ரி மூர்த்திகளுக்கு உள்ள ப்ரஹ்மா வாதல் ருத்ரன் ஆதல் ஈஸ்வரன் என்று சொல்லுகிற
சாம்ய ஐக்ய உத்தீர்ண வ்யக்தந்தர பஷங்கள் தடியா —

பிரம்ம ருத்ராதிகள் சர்வேஸ்வரனுக்கு கார்ய பூதர் என்னும் இடம் –
தத் வித்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்தயதே -இத்யாதிகளாலும்
சங்க்ஷிப்ய ச புரான் லோகன் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ண்வே சாயாந அப் ஸூ மாம் தவம் பூர்வ மஜீஜந–என்றும்
க இதி ப்ரஹ்மணோ நாம ஈச அஹம் சர்வ தேஹி நாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான் -என்றும்
அஹம் பிரசாதஜஸ் தஸ்ய கஸ்மிம் ச்சித் காரணாந்தரே
த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வ சர்க்கே ஸநாதநே-என்று எதிரி கையாலே விடு தீட்டான படியே அவர்கள் தங்கள் பாசுரங்களிலும் சித்தம் –

இவர்கள் கர்ம வஸ்யராய்ச் சில கர்ம விசேஷங்களாலே சர்வேஸ்வரனை ஆராதித்து தத்தம் பதங்கள் பெற்றார்கள் என்னும் இடம்
சர்வே தேவா வா ஸூ தேவம் யஜந்தே சர்வே தேவா வாஸூ தேவம் நமந்தே -என்றும்
ச ப்ரஹ்மகாஸ் ஸ்ருத்ராச்ச சேந்திர தேவா மஹர்ஷய
அர்ச்சயந்தி ஸூ ரஸ்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம் -என்றும்
சிந்தயந்தோ ஹி யம் நித்யம் ப்ரஹ்மே சா நாதாய பரப்பும்
நிச்சயம் நாதி கச்சந்தி தமஸ்மி சரணம் கத -என்றும்
பத்மே திவே அர்க்க சங்காசோ நாப்யா முத்பாத்ய மாமபி
ப்ரஜாபத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம்
ஸோ அஹம் சந்ந்த்யஸ்த பாரோ ஹி த்வாமுபாசே ஜகத்பதிம் -என்றும்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ
புனஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நித சுச்ரும -என்றும்
விஸ்வ ரூபோ மஹாதேவ சர்வமேத மஹா க்ரதௌ
ஜூஹாவ சர்வ பூதானி ஸ்வய மாத்மா நமாத்மநா-என்றும்
மஹா தேவ சர்வமேத மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மா நம் தேவ தேவோப் பூவ-
விச்வான் லோகன் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதி மான் க்ருத்தி வாஸா- என்றும்-
யோ மே யதா கல்பிதவான் பாகமஸ்மின் மஹாக்ரதௌ
ச ததா யஜ்ஞபாகர்ஹோ வேத ஸூ த்ர மயா க்ருத–என்றும் இத்யாதிகளிலே பிரசித்தம்

இவர்கள் பகவன் மாயா பரதந்த்ரராய் -குனவஸ்யராய் -ஞான சங்கோச விகாச வான்களாய் இருப்பார்கள்
என்னும் இடம் வேத அபஹாராதி விருத்தாந்தங்களிலும்
ப்ரஹ்மாத்யாஸ் சகலா தேவா மனுஷ்யா பசவஸ் ததா
விஷ்ணு மாயா மஹா வர்த்த மோஹாந்த தமஸா வ்ருதா–என்றும்
ப்ரஹ்மா விஸ்வஸ்ருஜோ தர்மா மஹான் அவ்யக்தமேவ ச
உத்தமாம் சாத்த்விகீ மேதாம் கதி மாஹூர்மநீஷிணா –இத்யாதிகளிலும் பிரசித்தம் –
இவர்கள் தங்களுக்கு அந்தராத்மாவான அவன் கொடுத்த ஞானாதிகளைக் கொண்டு அவனுக்கு ஏவல் தேவை செய்கிறார்கள் என்னும் இடம்
ஏதௌ விபுதச்ரஷ்டௌ பிரசாத க்ரொதஜௌ ஸ்ம்ருதௌ
ததாதர்சித பன்னானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்று சொல்லப்பட்டது —

இவர்களுக்கு சுபாஸ்ரயத்வம் இல்லை என்னும் இடத்தை
ஹிரண்ய கர்ப்போ பகவான் வாசவோ அத பிரஜாபதி -என்று தொடங்கி
அசுத்தாஸ்தே சமஸ்தாஸ்து தேவாத்யா கர்மயோ நய -என்றும்
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர் வ்யவஸ்திதா
பிராணின கர்ம ஜனித சம்சார வச வர்த்தி ந —என்றும்
கர்மாணம் பரிபாகத்வாத் ஆ விரிஞ்சாத மதங்களம்
இதி மத்வா விரக்தச்ய வா ஸூ தேவ பரா கதி -என்றும் பராசர சௌனக சுகாதிகள் –
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும் –ஸ்ரீ மத் பாகவதத்திலும் – பிரதிபாதித்தார்கள் —

இவர்களுக்கு பகவான் ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தையும் பகவானுக்கு ஒரு ஆஸ்ரயணீயர் இல்லை என்னும் இடத்தையும்
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ரஹ்மாணமாஸ்ரித
ப்ரஹ்மா மாமமஸ்ரிதோ ராஜன் அஹம் கஞ்சிதுபாஸ்ரித
மமாஸ்ரயோ ந கச்சித்து சர்வேஷாம் ஆஸ்ரியோ ஹி அஹம் -என்று தானே அருளிச் செய்தான் –

இவர்கள் உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனுக்கு விபூதி பூதர் என்னும் இடம் –
ப்ரஹ்மா தஷாதய கால ருத்ர காலாந்த காத்யாச்ச -இத்யாதிகளிலே ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -1-22-31-33-என்று
மற்று உள்ளாரோடு துல்யமாக சொல்லப்பட்டது –
இப்படி வஸ்வந்தரம் போலே இவர்களும் சர்வ சரீரியான சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதர் என்னும் இடம்
வஸ்து வந்தரங்கங்களும் இவர்களுக்கும் சேர நாராயணாதி சப்த சாமா நாதி கரணயத்தாலே சித்தம் –

இவர்கள் சரீரமாய் அவன் ஆத்மாவாய் இருக்கிறபடியை-
தவாந்தராத்மா மம ச யே ச அந்ய தேஹி சம்ஞ்தா
சர்வேஷாம் சாஷி பூத அசௌ ந க்ராஹ்ம கே நசித் க்வசித் -என்று ப்ரஹ்மா ருத்ரனைக் குறித்து சொன்னான் –
இவர்கள் சேஷபூதர் அவன் சேஷி என்னும் இடத்தை
தாஸ பூதாஸ் ஸ்வ தஸ் சர்வே ஹி ஆத்மாந பரமாத்மன
அத அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம் -என்று மந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்திலே சர்வஜ்ஞனான ருத்ரன் தானே சொன்னான் –

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாராயணன் சமாதிக தரித்திரன் என்னும் இடத்தை
ந பரம் புண்டரீகாஷாத் த்ருச்யதே புருஷர்ஷப -என்றும்
பரம் ஹி புண்டரீகாஷாத் பூதம் ந பவிஷ்யதி -என்றும்
ந விஷ்ணோ பரமோ தேவோ வித்யதே ந்ருபசத்தம-என்றும்
ந வா ஸூ தேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வா ஸூ தேவாத் பரம் அஸ்தி பாவ நம் ந வா ஸூ தேவாத் பரம் அஸ்தி
தைவதம் ந வா ஸூ தேவம் ப்ரணிபத்ய சீததி -என்றும்
த்ரைலோக்யே தாத்ருசா கச்சித் ந ஜாதோ ந ஜ நிஷ்யதே -என்றும்
ந தைவம் கேசவாத் பரம்-என்றும்
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான்
ஈச்வரம் தம் விஜாநீம ச பிதா ச பிரஜாபதி –இத்யாதிகளாலே பல படியும் சொன்னார்கள் –

கருவிலே திரு வுடையர்களாய் ஜாயமான தசையிலே ரஜஸ் தம ப்ரசம ஹேதுவான மது ஸூ தனனுடைய
கடாஷம் உடையவர்கள் முமுஷூக்கள் ஆவார்கள் என்னும் இடமும்
ப்ரஹ்ம ருத்ர த்ருஷ்டரானவர்கள் ரஜஸ் தம பரதந்த்ரர்கள் ஆவார்கள் என்னும் இடமும்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேன் மது ஸூ தன சாத்விகஸ் சது விஜ்தஞேயஸ்ய வை மோஷார்த்த சிந்தக பச்யத்யேனம்
ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர அதவா புன ரஜஸா தமஸா ச அஸ்ய மானசம் சமபிப்லுதம் -என்று விபஜிக்கப் பட்டது –
இவர்கள் முமுஷூக்களுக்கு அனுபாஸ்யர் என்னும் இடமும் –
இவர்களுக்கு காரண பூதனான சர்வேஸ்வரனே இவர்களுக்கும் மற்றும் உள்ள முமுஷூக்களுக்கும் உபாஸ்யர் என்னும் இடம்
சம்சார ஆர்ணவ மக்நாநம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம் -என்றும்
ப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச்சான்யா தேவதாஸ் ஸ்ம்ருதா பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம் -என்றும்
ஹரிரேக சதா த்யேயோ பவத்பி சத்த்வ சம்ச்திதை உபாச்ய அயம் சதா விப்ரா உபாய அஸ்மி ஹரே ச்ம்ருதௌ -என்றும் சொல்லப்பட்டது –

இத்தாலே இவர்களை மோஷ உபகாரராகச் சொன்ன இடங்களும்
ஆசார்யாதிகளைப் போலே ஞானாதி ஹேதுக்கள் ஆகையாலே என்றும் நிர்ணிதம்-
இவ்வர்த்தம் சூர்யஸ்யைவ து யோ பக்த சப்த ஜன்மாந்த்ரம் நர -தச்யைவ து பிரசாதே ந வா ஸூ தேவ ப்ரலீயதே -என்கிற இடத்திலும் விவஷிதம் –
இப்படி சூர்யா பக்த்யாதிகள் பரஸ்பரயா பகவத் பக்த்யாதிகளிலே மூட்டுவதும்
பராவர தத்வங்களிலே ஏக்க்ய புத்தியும் -வ்யத்யய புத்தியும் சமத்வ புத்தியும் மற்றும் இப்புடைகளிலே வரும்
மதி மயக்கங்களும் ஆசூர ஸ்வ பாவத்தாலே ஒரு விஷயத்தில் பர த்வேஷாதிகளும் இன்றிக்கே
சூர்யாதிகளைப் பற்றுமவர்களுக்கே என்னும் இடத்தை
யே து சாமான்ய பாவேன மந்யந்தே புருஷோத்தமம் தே வை பாஷாண்டி நோ ஜ்ஞேயா
சர்வ கர்ம பஹிஷ்க்ருதா -இத்யாதிகளிலே கண்டு கொள்வது –

இப்படி ஞானாதிகளில் மாறாட்டம் உடையாருக்கு தேவதாந்திர பக்தி உண்டே யாகிலும்
பகவன் நிக்ரஹத்தாலே ப்ரத்யவாயமே பலிக்கும் -ஆகையாலே
த்வம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய தர்சயித்வா அல்பமாயாசம் பலம் சித்ரம் பிரதர்சய -ஸ்ரீ வராஹ புராணம் –என்கிறபடி
மோஹன சாஸ்த்ரன்களிலே திருஷ்ட பல சித்தியை உண்டாக்கினதும் அவற்றை இட்டு மோஹிப்பித்து நரகத்திலே விழ விடுகைக்கு அத்தனை —
சத்ய சங்கல்பனான பகவான் ஒருவனை நிக்ராஹவனாக்க கோலினால் –
ப்ரஹ்மா ச்வயம்பூச் சதுரா நநோ வா ருத்ராஸ் த்ரி நேத்ரஸ் த்ரி புராந்தகோவா இந்த்ரோ மகேந்திர
ஸூர நாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
தேவதாந்தரங்கள் ரஷிக்க சக்தர் அல்லர்கள் –
சர்வ தேவதைகளும் ஸூக்ரீவ மஹா ராஜாதிகளைப் போலே தனக்கு அந்தரங்க பூதராய் இருப்பாரும்
தன்னை அடைய நினைந்தான் ஒருவனை நலிய நினைந்தால் சக்ருதேவ பிரபன்னாய -என்கிறபடி
சத்ய பிரதிஜ்ஞனான தனது வ்ரதம் குலையாமைக்காக
ராவணாதிகளைப் போலே துஷ் பிரக்ருதிகளாய் நிராகரிக்க வேண்டுவாரை நிராகரித்தும்
ஸ்ரீ வானர முதலிகளைப் போலே சத் பிரவ்ருதிகளாய் அனுகூலிப்பிக்க வேண்டுவாரை அனுகூலிப்பித்தும் சர்வேஸ்வரன் ரஷிக்கும்-

தேவதாந்தரங்கள் பக்கல்
காங்ஷந்த கர்மாணம் சித்திம் யஜந்த இஹ தேவதா ஷிப்ரம் ஹி மானுஷே லோகே சித்திர்பவதி கர்மஜ-ஸ்ரீ கீதை -4-12 –என்கிறபடியே
விஷமது துல்யங்களான ஷூ த்ர பலங்கள் கடுக சித்திக்கும் –
அவை தாமும் லபதே ச தத காமான் மயைவ விஹிதான் ஹி தான் -ஸ்ரீ கீதை -7-22 —
ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதா மஹ மயா அனுசிஷ்டோ பவிதா சர்வம் பூதம் வரப்ரதாஅஸ்ய சைவானுஜோ
ருத்ரோ லலாடாத்ய சமுத்தித ப்ரஹ்ம அனுசிஷ்டோ பவித சர்வ சத்த்வ வரப்ரதா -இத்யாதிகளில் படியே பகவத் அதீனங்கள்
யஸ்மாத் பரிமிதம் பலம் சாத்விகேஷூ து கல்பேஷூ மகாத்ம்யமாதிகம் ஹரே தேஷ்வேவ யோ சம்சித்தா
கமிஷ்யந்தி பராம் கதிம் என்கையாலே அவர்கள் பக்கல் மோஷம் விளம்பித்தும் கிடையாது –
சர்வேஸ்வரன் பக்கல் யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ -இத்யாதிகளில் படியே அதிசயிதமான ஐஸ்வர் யாதிகளும் வரும் –
விடாய் தீரக் கங்கா ஸ்நானம் பண்ணப் பாபம் போமாப் போலே விஷய ஸ்வ பாவத்தாலே ஆநுஷங்கிகமாய்
பாப ஷயம் பிறந்து ரஜஸ் தமஸ் ஸூக்கள் தலை சாய்ந்து
சத்வ உன்மேஷம் உண்டாய் ஜனக அம்பரீஷ கேயாதிகளைப் போலே க்ரமேண மோஷ பர்யந்தமாய் விடும்

மோஷ உபாய நிஷ்டனாம் போது பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஞானவான் மாம் பிரபத்யதே ய ஜன்ம கோடிபி சித்தா
தேஷாமந்தே அத்ர சமஸ்திதி ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி நரநாம் ஷிண பாபானாம்
கிருஷ்ணா பக்தி பிரஜாயதே என்கிறபடியே
விளம்பம் உண்டு -மோஷ ருசி பிறந்து வல்லதோர் உபாயத்திலே மூண்டால்
தேஷா மகாம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் பவாமி ந சிராத் பார்த்த மய்யா வேசித்த சேதஸாம் என்கிறபடியே
மோஷ சித்திக்கு விளம்பம் இல்லை –
ஸ்வ தந்திர ப்ரபன்ன நிஷ்டனுக்கு தான் கோலினதே அளவு -வேறு விளம்ப அவிளம்பங்களுக்கு குறி இல்லை –
இந் நியமங்கள் எல்லாம் ஸ்வா தந்த்ர்யம் ஐஸ்வர்யம் பர்யநு யோஜ்யமாஹூ -என்கிற
நிரந்குச ஸ்வ ச்சந்தையாலே சித்தங்கள் என்று பிரமாண பரதந்த்ரர்க்கு சித்தம்
இவ் வர்த்தங்கள் இப்படி தெளியாதார்க்கே தேவதாந்த்ரங்கள் சேவ்யங்கள் என்னும் இடம்
ப்ரபுத்தவர்ஜம் சேவ்யந்தி என்று வ்யவஸ்தை பண்ணப் பட்டது –
இத் தேவதாந்தரங்களை பகவச் சரீரம் என்று அறியாதே பற்றினார்க்கு சார்வாகனாய் இருப்பான்
ஒரு சேவகன் ராஜாவின் உடம்பிலே சந்தனாதிகளைப் பிரயோகிக்க
ராஜா சரீரத்தில் ஆத்மா ப்ரீதனாமாம் போலே வஸ்து வ்ருத்தியிலே சர்வேஸ்வரனே ஆராத்யன் ஆனாலும்
யே அப்யன்ய தேவதா பக்தி யஜந்தே ச்ரத்தயா அந்விதா தி அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் -என்கிறபடியே
சாஸ்த்ரார்த்த வைகல்யம் உண்டான படியாலே அவற்றின் சொன்ன பலம் விகலமாம்-

பகவச் சரீரங்கள் என்று அறிந்து ஷூத்ர பலங்களைக் கடுகப் பெற வேணும் என்கிற ராக விசேஷத்தாலே
அவர்களை உபாசிப்பாருக்கு அவ்வோ பலங்கள் பூரணமாம்
இப்படி அறிந்தால் பகவான் தன்னையே ஆர்த்தா ஜிஜ்ஞாஸூ அர்த்தார்த்தி என்கிறபடியே
பலாந்தரங்களுக்காகவும் பற்றினால் அந்த பலங்கள் அதிசயிதங்களாம்-
அநந்ய பிரயோஜனராய்ப் பற்றினார்கும்-சரீரா யோக்யா மர்த்தாம்ச்ச போகாம்ச்சைவ ஆநு ஷங்கிகான்
ததாதி த்யாயினாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி என்கிறபடியே
பலாந்தரங்கள் ஆநு ஷங்கிகமாக வரும் –
இவ்வர்த்தத்தை ஆநு ஷங்க சித்த ஐஸ்வர் யரான ஸ்ரீ குலசேகரப் பெருமாளும்
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் -என்று அருளிச் செய்தார்
அபலஷித துராப யே புறா காமயோகா ஜலதிமவ ஜலௌ தாஸ்தே விசாந்தி ஸ்வயம் ந -என்று
ஈசாண்டாலும் தாம் அருளிச் செய்த ஸ்தோத்ரத்திலே நிபந்தித்தார் –
இது வித்யா விசேஷ ராக விசேஷாதி நியதம் –

இப்படி சர்வேஸ்வரனுக்கும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உண்டான விசேஷங்களை
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகனாய் சங்கரனைத் தான் படைத்தான் -என்றும்
மேவித் தொழும் பிரமன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கு -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை -என்றும்
வானவர் தம்மை ஆளுபவனும் நான்முகனும் சடை அண்ணலும் செம்மையானவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே -என்றும்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -என்றும்
ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியாப் பெருமையோனே -என்றும்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
என்று பல முகங்களாலே அருளிச் செய்தார்கள் –

இப்பர தேவதா பாரமார்த்தம்
திரு மந்த்ரத்தில் பிரதம அஷரத்திலும் நாராயண சப்தத்திலும்
த்வ்யத்தில் ச விசேஷணங்களான நாராயண சப்தங்களிலும்
சரம ஸ்லோகத்தில் மாம் அஹம் என்கிற சப்தங்களிலும் அனுசந்தேயம் –
இத் தேவதா விஷய நிச்சயம் உடையவனுக்கு அல்லது
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
களைவாய் துன்பம் கலையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னல்லால் அறிகின்றிலேன் யான் -என்றும்
தருதுயரம் தடாயேல் -என்கிற பெருமாள் திருமொழி முதலானவற்றிலும் சொல்லும் அநந்ய சரணத்வ அவஸ்தை கிடையாது –

இந்த பர தேவதா பாரமார்த்தத்தை திரு மந்த்ரத்திலே கண்டு
ததீய பர்யந்தமாக தேவதாந்தர த்யாகமும் ததீய பர்யந்தமாக பாகவத சேஷத்வமும் பிரதிஷ்டிதமான படியை
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிற பாட்டிலே
சர்வேஸ்வரன் பக்கலிலே சர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் ஆருளிச் செய்தார்
இவர் பாருருவி நீர் எரி கால் -என்கிற பாட்டிலே
பரிசேஷ க்ரமத்தாலே விவாத விஷயமான மூவரை நிறுத்தி அவர்கள் மூவரிலும்
பிரமாண அணு சந்தானத்தாலே இருவரைக் கழித்து
பரிசேஷித்த பரஞ் ஜோதிசான ஒருவனை முகில் உருவம் எம்மடிகள் உருவம் -என்று நிஷ்கரிஷித்தார்
இந்த ரூப விசேஷத்தை உடைய பரம புருஷனே சர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னும் இடத்தை
சர்வ வேத சார பூத பிரணவ பிரதிபாத்யதை யாலே –
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்ரை உள் எழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் -என்று
பெரியாழ்வார் அருளிச் செய்தார் –
தைத்ரியத்திலே ஸ்ரீ யபதித்வ சிஹ்னத்தாலே மகா வ்யாவ்ருத்தி ஒதினபடியே நினைத்து
திருக்கண்டேன் பன் மேனி கண்டேன் என்று உபக்ரமித்து சார்வு நமக்கு என்கிற பாட்டிலே
பிரதிபுத்தரான நமக்கு பெரிய பிராட்டியாருடனே இருந்து என்றும் ஒக்கப் பரிமாறுகிற இவனை ஒழிய
ப்ராப்யாந்தரமும் சரண்யாந்தரமும் இல்லை -இத்தம்பதிகளே ப்ராப்யரும் சரண்யரும்-என்று நிகமிக்கப் பட்டது

இவ்வர்த்தத்தை தேவதா பாரமார்த்யம் ச யதாவத் வேத்ச்யதே பவான் புலஸ்தயேன யதுக்தம் தே சர்வமேதத் பவிஷ்யதி -என்று
புலச்ய வசிஷ்ட வர ப்ரசாதத்தாலே பரதேவதா பாரமார்த்ய ஞானம் உடையனாய் -பெரிய முதலியார் –
தஸ்மை நமோ முனிவராய பராசராய -என்று ஆதரிக்கும் படியான
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பரக்கப் பேசி தேவ திர்யங் மனுஷ்யேஷூ புன்நாம பகவான் ஹரி ஸ்த்ரி நாம்னி
லஷ்மீ மைத்ரேய நானயோர்வித்யதே பரம் -என்று
பரம ரகஸ்ய யோக்யனான சச் சிஷ்யனுக்கு உபதேசித்தான் –
இத்தை மயர்வற மதிநலம் அருளப் பெற்று
ஆத்யஸ்ய ந குல பதே -என்கிறபடியே பிரபன்ன சந்தான கூடஸ்தரான நம்மாழ்வாரும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு -என்று அருளிச் செய்தார் –
இவ்விஷயத்தில் வக்தவ்யம் எல்லாம் சதுஸ் ஸ்லோகீ வ்யாக்யானத்திலே
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக பரக்கச் சொன்னோம் -அங்கெ கண்டு கொள்வது –

வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித் தனியே
ஆதி எனா வகை ஆரண தேசிகர் சாற்றினார் -நம்
போதமரும் திரு மாதுடன் நின்ற புராணனையே-

ஜனபத புவ நானி ஸ்தான் ஜைத்ராச நஸ்தேஷு
அநு கத நிஜவார்த்தம் நச்சரேஷூ ஈச்வரேஷூ
பரிசித் நிகமாந்த பஸ்யதி ஸ்ரீ சஹாயம்
ஜகதி கதிம் அவித்யா தந்துரே ஜந்து ரேக-

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: