ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம்

ஆதௌ ப்ராப்யம் பரமம் அனதம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதௌ
இஷ்ட உபாயம் து அயனனமசோ ரீர்ப்சிதார்த்தம் சதுர்த்யாம்
தத் வ்யாதாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மனும் தம்
தத் ப்ராப்யம் ச த்வம் அபி விதன் சம்மத சர்வேதீ –

ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும் ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை –
நாராயணாதி சப்தங்களிலே விவஷிதமான சம்பந்த விசேஷத்தை சித்தாந்தத்துக்கு தளமாக்கி —
இத்தை அனுபந்தித்து இருக்கும் அர்த்த பஞ்சகத்தை சிலர் விசாரித்தார்கள் –
இச் சம்பந்தத்தோடு கூட ஷட் அர்த்தங்கள் என்று சிலர் அனுசந்தித்தார்கள் –
(அர்த்த பஞ்சக ஞானமும் -சரீராத்மா பாவ ஞானத்துடன் சேர்ந்து ஆறு அர்த்தங்கள்-என்றவாறு – )

இச் சம்பந்தம் போலே முமுஷூவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாக சேர்த்த அர்த்த பஞ்சகம் ஏது என்னில்
ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச பிரத்யகாத்மந
ப்ராப்த்யுபாய பலம் சஏவ ததா ப்ராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராணக–

( ஸ்வரூபம் குணம் விக்ரஹம் விபூதிகளோடே விசிஷ்டா பர ப்ரஹ்மத்தை அறிய வேண்டுமே –
அதில் பிரதமத்தில் ஸ்வரூபம் பற்றி பிராமண பூர்வகமாக அருளிச் செய்கிறார் -)

இவற்றில் பிராப்யமான ப்ரஹ்மத்தின் உடைய ஸ்வரூபம்
திரு மந்த்ரத்தில் பிரதம அஷரத்திலும்
நாராயண சப்தத்திலும்
த்வயத்தில் ச விசேஷணங்களான நாராயண சப்தங்களிலும்
சரம ஸ்லோகத்தில் மாம் அஹம் என்கிற பதங்களிலும்
அனுசந்தேயம் –

அவ்விடங்களில் அனுசந்திக்கும் போது –
ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி –
ஏஷ நாராயண -ஸ்ரீ மான் -பவான் நாராயணோ தேவதா –
ஸ்ரீ மான் சக்ரதரோ விபு –ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –விஷ்ணோ ஸ்ரீர அநபாயினி —
சீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்
சீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம் அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம்
பவேயம் சரணம் ஹி வ பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா- தயா சஹாசீனம் அநந்த போகினி —
காந்தஸ்தே புருஷோத்தம -ஸ்வ பரிசரண போகை-ஸ்ரீ மதி பிரியமாணே –
ஸ்ரீ மதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம-
ஸ்ரீய காந்த அனந்தோ வரகுண கணை காஸ்பத வபு –
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸோ-ஸ்ரீ யபதிர் நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநானந்த ஞானானந்த ஸ்வரூப –

நீயும் திருமகளும் நின்றாயால் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப –
கோலத் திரு மா மகளோடு உன்னை —
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
உன் தாமரை மங்கையும் நீயும் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா –
உணர் முழு நலம் –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -என்றும் பிரமாணங்கள் சொல்லுகிறபடியே

சர்வ பிரகாரத்தாலும்
சர்வ அவஸ்தைகளிலும்
சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான
அநந்த ஞானானந்த ஸ்வரூபமாக அனுசந்திக்க வேணும் –

(இத்தால் அவன் ஸ்வரூபம் போலே பிராட்டி ஸ்வரூபமும் ஞானாநந்தம் என்றதாயிற்று -)

இப்படி சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம் -என்றும் –
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேச -என்கிறபடியே
ஹேய ப்ரத்ய நீகமாக அனுசந்தேயம் –

தைர்யுக்த ஸ்ரூயதாம் நர –தமேவம் குண சம்பன்னம் –ஜ்யேஷ்டம் ஸ்ரேஷ்ட குணைர்யுக்தம் –
ஏவம் ஸ்ரேஷ்ட குணைர்யுக்த–குணைர் விருருசே ராம —
தமேவம் குண சம்பன்னம் அப்ரத த்ருஷ்டி பராக்கிரம -பஹவோ ந்ருப கல்யாண குணா —
புத்ரஸ்ய சந்தி தே –ஆன்ரு சம்சய மனுக்ரோச -ஸ்ருதம் சீலம் தமச்சம-ராகவம் ஸோபயந்த்யேதே ஷட் குணா –
புருஷோத்தமம் விதித – ச ஹி தர்மஜ்ஞ-சரணாகத வத்சல சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹூர்திவ்யா மஹர்ஷய–
நிவாஸ வ்ருஷ–சாதூனாம் ஆபன்னாம் பரா கதி –தேஜோ பலை ஐஸ்வர்ய மஹாவபோதஸ் வீர்ய சக்த்யாதி குணைகராசி-
சர்வ பூதாத்மா பூதச்ய விஷ்ணோ –கோ வேதிதும் குணான் யதா ரத்னா நி ஜலதே –
புத்தராக ததா குணாச்ச தேவஸ்ய த்வசங்க்யேயோ ஹி சக்ரிணா-
வர்ணாயு தைர்யச்ய குணா ந சக்யா வக்தும் சமேதைரபி சர்வ தேவை —
சதுர்முக யுர்யதி கோடி வக்த்ரோ பவேன் நர -க்வாபி விசுத்த சேதா-ச தே குணா நாமயுதைதை கமம்சம் வதேன்ன வா தேவவர ப்ரசீத –
தவானந்த குணஸ் யாபி ஷடேவ பரதமே குணா -யைஸ்த்வயேவ ஜகத் குஷௌ அன்யே அப்யந்தர் நிவேசிதா
இஷூஷயான் நிவர்த்தந்தே நாந்தரிஷ ஷிதி ஷயாத் மதி ஷயான் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷ்யாத்-

வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் –
உயர்வற உயர் நலம் உடையவன் என்கிறபடியே —
ப்ராப்யத்வ ப்ராபகத்வ உபய உக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அனுசந்தேயம் —

திவ்ய மங்கள விக்ரஹம் –
சதைகரூப ரூபாய—நித்ய சித்தே ததாகாரே தத் பரத்வே ச பௌஷ்கர யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே
தஸ்யா சௌ சந்நிதம் பிரஜேத்–
சமஸ்தாச் சக்த்யச் சைதா ந ரூப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அன்யத்தரேர் மஹத்-
இச்சா க்ருஹீதா அபிமதோரு தேக-ந பூத சங்க சமஸ்தாநோ தேக அஸ்ய தேஹோ அஸ்ய பரமாத்மன —
ந தஸ்ய பிரக்ருதா மூர்த்தி –மாம்சமேதோ அஸ்தி சம்பவா -பூஜைச் சதுர்பி -சமுபேத மேதத்ரூபம் விசிஷ்டம் திவி சம்ஸ்திதம்ச —
ருக்மாபம் ஸ்வ பன் தீ கம்யம் –தத்ரைகச்தம் -ஜகத் க்ருத்ச்னம் –பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேக-
அஸ்த்ர பூஷண சமஸ்தான ஸ்வரூபம் -பூஷண அஸ்த்ர ஸ்வரூபச்தம் யதேதம் அகிலம் ஜகத் –
தமஸா பரமோ தாதா சங்கம் சக்ர கதா தரா -என்கிறபடியே
சர்வ ஜகத் ஆஸ்ரயமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டமாக அனுசந்தேயம் –

இவ் விக்ரஹம்
பர வியூஹ விபவ ஹர்த்த அர்ச்ச்சாவதார ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும்படியும் –
இவற்றில் உள்ள விசேஷங்களும் பகவச் சாஸ்திர சம்ப்ரதாயத்தாலே அறியப்படும் –

விஷ்ணோ ரேதா விபூதய –மஹா விபூதி சமஸ்தான –நாந்த அஸ்தி மம திவ்யானாம் விபூதினாம் பரந்தப —
இத்யாதிகள் உடைய சங்க்ரஹமான
யதண்ட மண்டாந்தர கோசரம் ச யத் -என்கிற ஸ்லோகத்தின் படியே அநந்த விபூதி விசிஷ்டமாக அனுசந்தேயம் —

இவ் விபூதிகளில் சேதனங்களாயும் அசேதனங்களாயும் உள்ள இரண்டு வகையும்
லீலார்த்தங்களாயும்-போகார்த்தங்களாயும்-விபக்தங்களாய் இருக்கும் அனுசந்தேயம் பொதுவாய் இருக்க
ரச வைஷம்யத்தாலே லீலா போக விபாகம் யதா லோகம் கண்டு கொள்வது –

அப்படியே ஜன்மாத் யஸ்ய யத–க்ரீடா ஹரேரிதம் சர்வம் –க்ரீடதோ பாலகச்யேவ பால –கிரீட நகைரிவ-
ஹரே விகரசி க்ரீடா கந்து கைரிவ ஜந்துபி -லோகவத்து லீலா கைவல்யம் -என்கிறபடியே
லீலாரூப ஜகத் வியாபார லஷணமாக அனுசந்தேயம் –

—————————————————————-

இப்படி லஷ்மீ சஹாயமாய்-அபரிமித ஞானானந்தமாய் -ஹேய ப்ரத்ய நீகமாய் –
ஞான சக்த்யாதி அநந்த மங்கள குண விசிஷ்டமாய்
திவ்ய மங்கள விக்ரஹ உபேதமாய்-சரீர பூத விபூதி த்வய யுக்தமாய்- ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபார லீலமாய்க் கொண்டு
பிராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் பிரத்யகாத்மாவினுடைய –
பக்த முக்த நித்ய சாதாரண ரூபமும்
உபாய அதிகாரியான தனக்கு இப்போது அசாதாரணமான ரூபமும் அறிய வேணும் –

இவர்களில் பக்தரானவர் –
அநாதி கர்ம பிரவாஹத்தாலே அனுவ்ருத்த சம்சாரராய் –
ப்ரஹ்மாதி ஸ்தம்ப பரிந்த விபாக பாகிகளான ஷேத்ரஜ்ஞர்
முக்தராவார் —
சாஸ்திர சோதிதங்களான உபாய விசேஷங்களால் உண்டான பகவத் பிரசாதத்தாலே
அத்யந்த நிவ்ருத்த சம்சாரராய் சங்கோச ரஹித பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்தராய் இருக்குமவர்கள் —
நித்யராவார் –
ஈஸ்வரனைப் போலே அனாதியாக ஞான சங்கோசம் இல்லாமையாலே –
சவயச இவ யே நித்ய நிர்த்தோஷ கந்தா -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சாரராய்க் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணுகிற அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் –
இவர்கள் எல்லார்க்கும் சாதாரணமான ரூபம் –
அணுத்வ ஞானானந்த அமலத்வாதிகளும் -பகவத் சேஷத்வ பாரதந்த்ர்யாதிகளும் –
முமுஷுவான தனக்கு அசாதாரணமாக அறிய வேண்டும் ஆகாரங்கள் உபோதாத்திலே சொன்னோம் –
மேலும் கண்டு கொள்வது —

இப் ப்ராப்தாவினுடைய ஸ்வரூபம்
பிரணவ நமஸ் ஸூக்களில் மகாரங்களிலும் -நார சப்தங்களிலும் –
ப்ரபத்யே என்கிற உத்தமனிலும்
வ்ரஜ என்கிற மத்யமனிலும்
த்வா என்கிற பதத்திலும்
மாஸூச என்கிற வாக்யத்திலும் அனுசந்தேயம்

—————————————————

உபாய ஸ்வரூபம் -பல ஸ்வரூபம்

பிரத்யுபாயமும் இதின் பரிகரங்களும் பல ஸ்வரூபம் இருக்கும் படியும்
மேலே பிராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம்
இவற்றில் உபாயம்
திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும் -அயன சப்தத்திலும்
த்வயத்தில் பூர்வ கண்டத்திலும்
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் -அனுசந்தேயம்

பல ஸ்வரூபம்
சதுர்த்யந்த பதங்களிலும்
த்வயத்தில் நமஸ்ஸிலும்
சரம ஸ்லோகத்தில் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற இடத்திலும் அனுசந்தேயம் —

——————————————————————

விரோதி ஸ்வரூபம் –
ப்ராப்தி விரோதியாவது –
அவித்யா கர்ம வாசனாதி ரூபமான மோஷ பிரதிபந்தக வர்க்கம் –
இதில் பிரதானம் அநாதியாக சந்தன்யமானமான ஆஜ்ஞாதி லங்கணம் அடியாக பிறந்த பகவன் நிக்ரஹம் —
இது ஷேத்ரஜ்ஞர்க்கு ஞான சங்கோச கரமான த்ரிகுணாத்மக பிரகிருதி சம்சர்க்க விசேஷத்தை உண்டாக்கியும்
இப் பிரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீர இந்த்ரியாதிகளோடு துவக்கி திண்ணம் அழுந்தக் கட்டி

பல செய்வினை வன் கயிற்றால் புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் என்றும்
சொல்லுகிறபடியே தேக இந்த்ரியாதி பரதந்த்ரன் ஆக்கியும்
அவ் வஸ்தையிலும் சாஸ்த்ர வஸ்யத்தை கூடாத திர்யக்காதி தசைகளிலே நிறுத்தியும்
சாஸ்திர யோக்யங்களான-மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும்

அவற்றில் இழியாதவர்களையும் உள்பட
பகவஸ் ஸ்வரூப திரோதானகரீம் விபரீத ஞான ஜனனீம் ஸ்வ விஷயா யாச்ச கோயபுத்தேர் ஜனனீம் என்கிறபடி
இம் மூலப் பிரகிருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வ ஞான விபரீத ஞான விஷய ப்ராவண்யங்களை பண்ணியும்

இவை யடியாக ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிறபடியே
ஸூக லவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதி லங்கனத்தைப் பண்ணுவித்தும் –
பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புன புன நஷ்ட பிரஜ்ஞ பாபமேவ புனராரபதே நர –என்கிறபடியே
மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக ஷிபாம் ஜயஸ்ரம்-இத்யாதிகளில் படியே
கர்ப்ப ஜன்ம ஜரா மரண நரகாதி சக்ர பிரவ்ருதியிலே பரிப்ரமிப்பித்தும்

ஷூத்ர ஸூகாதிகளுக்கு சாதனமான ராஜச தாமச சாஸ்த்ரங்களை கொண்டு
யஷ ரஷாம்ஸி ராஷசா ப்றேதான் பூத கணாம்ச்சான்யே யஜந்தே தாமஸா ஜனா -என்கிறபடியே
தன்னோடு ஒக்க ஒழுகு சங்கிலி யிலே கட்டுண்டு உழலுகிற ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப் பண்ணியும்
அவர்கள் கொடுத்த ஜூகுப்சாவஹ ஷூத்ர புருஷார்த்தங்களிலே கிருமிகளைப் போலே க்ருதார்த்தராக மயக்கியும்
யோக பிரவ்ருத்தரானவர்களையும் ஷூத்ர தேவதா யோகங்களில் யாதல் – நாமாத்ய சேதனா உபாசனங்களிலே ஆதல்
மூளப் பண்ணி சில் வாகனங்களான பலன்களாலே யோகத்தை தலை சாய்ப்பித்தும்

ஆத்ம பிரவணரையும் பிரகிருதி சம்ஸ்ருஷ்டம் பிரகிருதி வியுக்தம் என்கிற இவ்விரண்டு படியிலும்
ப்ரஹ்மாத் யஷ்டயாலே யாதல் -ஸ்வரூப மாத்ரத்தாலே யாதல் உபாசிக்க மூட்டி
அவை நாலு வகைக்கும் பலமாக அல்பாஸ் வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும்

ப்ரஹ்மாத்மாக ஸ்வ ஆத்ம சிந்தனை பிரவ்ருத்தர் ஆனவர்களையும்
ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்ம சிந்தனை பரரையும் அந்தராயமான
ஆத்ம அனுபவத்தாலே யாதல் -அஷ்டௌஸ்வர்ய சித்திகளாலே யாதல்-
வச்வாதி பதப்ராப்தி ப்ரஹ்ம காய நிஷேவணாதிகளாலே யாதல்
அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜ குமாரனுக்கு சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டம்
உண்டாமாப் போலே பிராரப்த கர்ம பலமான தேக இந்த்ரியங்களிலும் தத் அனுபந்திகளான பரிக்ரஹங்களிலும்
தன் மூல பலங்களிலும் கால் தாழப் பண்ணி யாதல் அந்ய பரராக்கியும்
இப்படி பல முகங்களிலே பகவத் பிராப்திக்கு விலக்காய் இருக்கும் –

முப்பத்து இரண்டு அடியான துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாம் அடியிலே அந்தராயம் உண்டானாலும்
இவன் சம்சாரத்தைக் கடந்தான் ஆகான் –
கர்ம யோகாதிகளில் பிரவர்த்தன் ஆனவனுக்கு -நேஹாபிக்ரம நாசோ அஸ்தி -இத்யாதிகளில் படியே
இட்ட படை கற்படையாய் என்றேனும் ஒரு நாள் பல சித்தி உண்டாம் என்கிற இதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர
ஜன்மாந்த்ராதிகளிலே எதிலே என்று தெரியாது

அனுகூல்யம் மிகவும் உண்டாய் இருக்க வசிஷ்டாதிகளுக்கு விலம்பம் காணா நின்றோம் –
பிரதிகூல்யம் மிகவும் உண்டாய் இருக்க வ்ருத்ர ஷத்ர பந்து ப்ரப்ருதிகளுக்கு கடுக மோஷம் உண்டாகக் காணா நின்றோம் –
ஆகையால் விலம்ப ரஹித மோஷ ஹேதுக்களான ஸூக்ருத விசேஷங்கள் ஆர் பக்கலிலே கிடக்கும் என்று தெரியாது –
விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்கு காரணங்களான துஷ் கர்ம விசேஷங்களும் ஆர் பக்கலிலே கிடக்கும் என்றும் தெரியாது –

இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதி லங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷம் ஆகிற
பிரதான விரோதிக்குச் செய்யும் பரிஹாரத்தை
தஸ்ய ச வசீகரணம் தச் சரணா கதிரேவ-என்று கட வல்லியிலே வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் –

இவ் விரோதி வர்க்கத்தை எல்லாம் ரகஸ்ய த்ரயத்திலே விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும்
நமஸ்ஸூக்களில் மகாரங்களில் சஷ்டிகளாலும்
சர்வ பாப சப்தத்தாலும்
அனுசந்தித்து சம்சாரத்திலே அடிச் சூட்டாலே பேற்றுக்கு உறுப்பான வழிகளிலே த்வரிக்க பிராப்தம் —

பொருள் ஓன்று என நின்ற பூ மகள் நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை என் மனம் தேற இயம்பினரே —

ப்ராப்யம் ப்ரஹ்ம சமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித
ப்ராப்தி தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ச்வத ஸூ ரிவத்
ஹந்த ஏநாம் அதிவ்ருத்தவான் அஹம் அஹமத்யா விபத்யாஸ்ரய
சேது சம்ப்ரதி சேஷி தம்பதி பரந்யாசஸ்து மே சிஷ்யதே —

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: