ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் 2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் / அதிகாரம் -3-பிரதான ப்ரதி தந்திர அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
———————————————————————

ரஹஸ்ய த்ரயங்களின் உபயோக விசேஷம் –
மோக்ஷ -தத் உபாயங்களில் ச பதமே பிரமாணம் –
மற்றைய வியாபக மந்த்ரங்களை விடவும் சார தமமான உபநிஷத்துக்களை விடவும்
ரஹஸ்ய த்ரயமே பரம உபாதேயம்-

ஆச்சார்யர்களால் நன்கு போஷிக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டவை ரஹஸ்ய த்ரயம் -ஆச்சார்ய ருசி பரிஹ்ருஹீதம்-என்றவாறு
யதிவரானார் மடப்பள்ளி வந்த மணம்
பாற்கடலைக் கடைந்து எடுத்த அம்ருதம் போல் அன்றிக்கே இவை உபநிஷத் ஆகிற அம்ருத மயமான
கடலைக் கடைந்து எடுத்த அமுதம் அன்றோ -அபூத உவமை –

முதல் இரண்டும் ஒரு பிரகரணம்–சாஸ்த்ர ஆரம்பணீயம் என்று காட்டி
அடுத்த நான்கும் ஒரு பிரகரணம்- தத்வ நிரூபண பரங்கள்
அடுத்த ஆறும் ஒரு பிரகரணம் – அங்கங்கள் உடன் கூடிய உபாய விசேஷத்தை விவரிக்கும் -உபாய பரம்
அடுத்த பத்தும் புருஷார்த்த பரம்
இப்படி நான்கு பிரகரணங்கள் இந்த முதல் -22-அதிகாரங்களும் சேர்த்து அர்த்த அநு சாசன பாகம் ஆகும் –

அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –

ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —

(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)

இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)

அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —
பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –

(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)

அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–

அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத்சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –

(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)

(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)

அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –

——————————————————————–

அதிகாரம் -3-பிரதான ப்ரதி தந்திர அதிகாரம் –

பிரதிதந்தர சப்தார்த்தம் –
சரீர சரீரீ லக்ஷணம் –
ஆதேயத்வாதி நிரூபணம் –
ரஹஸ்ய த்ரயத்தில் இந்த அர்த்தங்கள் கிடைக்கும் பிரகாரம் –
திருமந்த்ரார்த்த அனுசந்தான அர்த்தம் -அப்புள்ளார் அருளிச் செய்த விரகு-
சேஷ சேஷி பாவ சம்பந்தத்திண் விசேஷமான தாசஸ்த்வ ஸ்வாமித்வ நிரூபணம் –
தத்வ ஹித புருஷார்த்தங்களை விசததமமாக விஸ்தாரமாக நிரூபிக்க ஆரம்பித்து -தத்வ பரமாக-பிரதானமான
சித்தாந்தத்துக்கு அசாதாரணமான சரீர ஆத்ம பாவத்தை நிரூபித்து அருளுகிறார் -என்று கீழோடே சங்கதி –

ஆதேயத்வ ப்ரப்ருதி நியமை ஆதிகர்த்து சரீரம்
சத்தா ஸ்தேம ப்ரயதன பலேஷூ ஏதத் ஆயத்த ஏதத்
விச்வம் பஸ்யன் இதி பகவத வ்யாபக ஆதர்சா த்ருஷ்டா
கம்பீராணாம் அக்ருத ககிராம் காஹதே சித்த வ்ருத்தம்-என்று

ஸர்வதா பிரபஞ்சம் ஆதேயமாயும் விதேயமாயும் சேஷ பூதமாயும் அவனுக்கு இருக்குமே –
எந்த வஸ்து தான் இருக்கும் அளவும் ஆதேயமாயும் விதேயமாயும் சேஷமாயும்-
அவனை விட்டுப் பிரியாததாயும்
அவனுடைய பிரயோஜனத்துக்காகவே இருக்குமோ அப்படிப்பட்ட வஸ்து அந்த சேதனனுக்கு சரீரம் -என்கிற லக்ஷணை உண்டே –
இவற்றின் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் ஸ்வரூபத்துக்கும் சங்கல்பத்துக்கும் அதீனம்-

ப்ரத்யக்ஷத்தில் ஸ்வ தந்திரமாக தோற்றும் இவை ரஹஸ்யத்ரயங்கள் மூலம் பார்க்கும் பொழுது அவனுக்கு சரீரம் என்பதை அறிகிறோம் –
சேதன அசேதன வஸ்துக்களை விபூதிகளோடு கூடிய ப்ரஹ்மத்தை அறியும் பொழுது ஸ்வரூப நிரூபகம் என்றும்
ஸூகத ஸ்வரூபத்தை அறியும் பொழுது நிரூபித ஸ்வரூப விசேஷணம் என்றும் சொல்லலாம் என்ற
திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் மேல் –

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும் விபூதிகள் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்று
அருளிச் செய்யப்பட்டுள்ளதை உண்டே –

இளைய பெருமாளுடைய விஸ்லேஷம் தரிக்காமல் பெருமாள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினாரே
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும்
உணர் முழு நலம் -என்றும் ஸூகத ஸ்வரூபத்தை சொல்லும் பொழுது விபூதிகள் இல்லாமல்
சொல்லப்படுகிறது நிரூபித ஸ்வரூப விசேஷணம் –

வ்யாபக மந்த்ரங்கள் மூலம் அனைத்தும் அவனது சரீரம் என்று அறிந்தவனே எல்லாம் அறிந்தவனாகிறான் –
ப்ரதி தந்த்ரமாவது –
மற்றுள்ள சித்தாந்திகள் ஒருவரும் இசையாதே தன்னுடைய சித்தாந்தத்துக்கே அசாதாராணமான அர்த்தம் –
இங்கு வேதாந்திகளான நம்முடைய தர்சனத்துக்கே அசாதாரணமுமாய் பிரதானமுமாயும் உள்ள அர்த்தம் ஏது என்னில்
சேதன அசேதனங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான சரீர ஆத்ம சம்பந்தாதிகள் —

இதில் ஈஸ்வரனுக்கு சரீரீரத்வம் ஆவது –
சேதன அசேதன த்ரவ்யங்களைப் பற்ற நியமேன தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியாயுமாய் இருக்கை
சேதன அசேதனங்களுக்கு-சரீரத்வமாவது
நியமேன ஈஸ்வரனைப் பற்ற தார்யமுமாய் -நியாம்யமுமாய் -சேஷமுமான த்ரவ்யமாய் இருக்கை –

சேதன அசேதனங்களைப் பற்ற தாரகனும் நியந்தாவுமாகை யாவது –
தன் ஸ்வரூபத்தாலும் சங்கல்ப்பத்தாலும் யதார்ஹே சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளுக்கு பிரயோஜகனாய் இருக்கை –
அது எங்கனே என்னில் –

ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவ்யவஹிதமாக ஸ்வரூபபேண ஆதாரமாய் இருக்கும் –
அவ்வோ த்ரவ்யங்களை ஆஸ்ரயித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வோ த்ரவ்யத்வாரா ஆதாரமாய் இருக்கும்
ஜீவர்களால் தரிக்கப் படுகிற சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று சிலர் சொல்லுவார்கள்
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டும் ஸ்வரூபத்தாலும் ஆதாரமாய் இருக்கும் என்று சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஈஸ்வர ஸ்வரூபத்தை அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள் –

சர்வ வஸ்துக்களுடையவும் சத்தை சங்கல்ப அதீநை யாகையாவது –
அநித்யங்கள் அநித்திய இச்சையாலே உத்பன்னங்களாயும்-
நித்யங்கள் நித்ய இச்சா சித்தங்களுமாய் இருக்கை –
இவ்வர்த்தத்தை
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் ஸ்லோகத்தால் அபியுக்தர் விவேகித்தார்கள் –
இத்தால் சர்வத்தினுடைய சத்தா அனுவ்ருத்தி ரூபையான ஸ்திதியும் ஈஸ்வர இச்சா அதீநையானபடியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்ப அதீநை என்று சொல்கிறது

குரு த்ரவ்யங்கள் சங்கல்ப்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்த்ரங்களில் சொல்லுமது
த்யைஸ்ஸ சந்த்ரார்க்க நஷத்ரம் கம் திசோ பூர்மஹோததி வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மன-என்கிறபடியே
கனத்த பொருள்களான சந்திர ஸூர்யர்கள் ஒவ்வொரு தேச விசேஷங்களிலே விழாதபடி நிறுத்துகையைப் பற்ற –
இப்படி இச்சாதீன சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளான வஸ்துக்களுக்கு பரமாத்ம ஸ்வரூபம் என் செய்கிறது என் என்னில்
பரமாத்மாவினுடைய இச்சை இவ் வஸ்துக்களைப் பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும் –
இப்படி சர்வ வஸ்துவும் ஈஸ்வர ஸ்வரூபாதீன ஆஸ்ரிதமுமாய் ஈஸ்வர இச்சா தீனமுமாய் இருக்கும் –

லோகத்திலும் சரீரம் சரீரி உடைய ஸ்வரூப ஆஸ்ரிதமுமாய் சங்கல்ப ஆஸ்ரிதமுமாய் இருக்கக் காணா நின்றோம்
ஜீவன் இருந்த காலம் இருந்து இவன் விட்ட போது அழிகையாலே ஸ்வரூப ஆஸ்ரிதம்
இவர் தம் சங்கல்பம் இல்லாத ஸூஷுப்தி அவஸ்தைகளிலே தெளிவது
ஜாகராதி தசைகளிலே சங்கல்ப்பத்தாலே விழாதபடி தாங்கும் போது சங்கல்ப ஆஸ்ரிதம் என்னக் கடவது
இதில் ஸ்வரூப ஆஸ்ரிதமாய் இருக்கிறபடியை ஆதேயத்வம் என்றும்
சங்கல்ப அதீனமாய் இருக்கிறபடியை நியாம்யத்வம் என்றும் சொல்லுகிறது –

சேஷன் சேஷி என்பதன் பொருள்
ஈஸ்வரன் சர்வ சேஷியாகையாவது
உபாதத்தே சத்தா ஸ்திதி நியமன ஆத்யை சித் அசிதௌ
ஸ்வம் உத்திச்ய ஸ்ரீ மான் இதி வததி வாகௌபவநிஷதீ
உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குனௌ
அதஸ்த்வாம் ஸ்ரீ ரெங்கேசயே சரண மவ்யாஜமபஜம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்- என்கிறபடியே
தன் பிரயோஜனத்துக்காகவே பாரார்த்யைக ஸ்வ பாவங்களான இவற்றை உபாதானம் பண்ணி இவற்றாலே அதிசயனாகை-

சேஷ சேஷி ஞானத்தினால் உண்டாகும் பயன் –
இந்த ஆதார ஆதேய பாவாதிகளால் இச் சேதனனுக்கு பலிப்பது என் என்னில்
ஆதார ஆதேய பாவத்தாலே அவனுடைய ஞான சக்தியாதிகளுக்கு போலே அப்ருதுக் சித்த ஸ்வரூப லாபமும்
சேஷ சேஷி பாவத்தாலே ஆத்மா அபிமான அனுகுண-புருஷார்த்த -வ்யவஸ்தையின் படி ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்த ருசியும்
சேஷ சேஷி பாவத்தாலும் நியந்த்ரு நியாமய பாவத்தாலும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்துக்கு அனுரூபமாய்
நிரபேஷமுமாய் இருந்துள்ள உபாய விசேஷத்தை அறிகையும் பலிக்கும்

ஆக
இவற்றால் இச் சேதனன்
அனந்யாதாரன்
அநந்ய பிரயோஜனன்
அநந்ய சரண்யன்
என்றதாயிற்று –

மேலே உள்ள கருத்துக்கள் ரகஸ்ய த்ரயத்தில் உள்ளன என்று காண்பித்தல் –
இவ்வர்த்தம் பிரதம ரகஸ்யத்தில் -கிடக்கிறபடி எங்கனே என்னில்
நாராயண சப்தத்தில் தத் புருஷ பஹூ வ்ரீஹி சமாச த்வயத்தால் உண்டான தாரகத்வ வ்யாபகத்வாதி களாலே
அநந்ய ஆதாரத்வாதி விசிஷ்ட ஸ்வரூப லாபமும்
பாரார்த்த்ய கர்ப்பமான கீழில் பத த்வயத்தாலே அநந்ய பிரயோஜனத்வமும் அநந்ய சரணத்வமும் பலிக்கும்

ப்ரபத்ய அனுஷ்டான பிரகாசகமான மந்திர ரத்னத்திலே
பூர்வ கண்டத்தாலே அநந்ய சரணத்வமும்
உத்தர கண்டத்தாலே அநந்ய பிரயோஜனத்வமும்
உபய பாகத்தாலும் அநந்ய ஆதாரத்வமும் பிரகாசிக்கிறது

இப்படி சப்தமாகவும் ஆர்த்தமாகவும் சரம ஸ்லோகத்தாலும் இவ்வகுப்பு கண்டு கொள்வது —

இப்படி சரம ஸ்லோகத்தாலே சித்த உபாய வசீகரண அர்த்தமாக விஹிதமான சாத்திய உபாய விஹிதத்தை
த்வயத்தாலே அனுஷ்டிக்கும் போதைக்கு
அனுசந்தேயங்களாக் கொண்டு அவஸ்ய அபேஷிதங்களான அர்த்தங்களை எல்லாம்
சிறிய கண்ணாடி பெரிய உருக்களைக் காட்டுமா போலே சுருங்கத் தெளிவிக்கும் திரு மந்த்ரம் –

அதில் பிரதம பதத்தில்
அர்த்தங்களை அர்ஜுன ரதத்திலும் -அக்ரத ப்ரயயௌ ராம -என்கிற ஸ்லோகத்திலும் கண்டு கொள்வது
த்வதீய பதத்தில் சப்தத்தாலும் அர்த்த ஸ்வ பாவத்தாலும் வரும் அர்த்தங்களை
ஸ்ரீ பரத ஆழ்வான் யுடையவும் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் யுடையவும் வ்ருத்தாந்தங்களிலே அறிவது
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இல்லாய் கண்டாய் என்னும் படி
இருக்கிற நாராயண சப்தார்த்தத்தை
கோசல ஜன பதத்தில் ஜந்துக்களையும் சக்கரவர்த்தி திரு மகனையும் உதாரணமாகக் கண்டு கொள்வது

பூர்வ பத த்வயத்தில் தோன்றின காஷ்டாப்ராப்த பாரார்த்த்ய பாரதந்த்ர்யங்கள் பேரணியாகத்
த்ருதீய பதத்தில் சதுர்த்தியில் கருத்திலே ப்ரார்த்த நீயமான சேஷி உகந்த கைங்கர்யத்தை
இளைய பெருமாளுடையவும் -இவருடைய அவதார விசேஷமான திருவடி நிலை ஆழ்வார் உடையவும்
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளில் தெளிவது

இது திருமந்திர அர்த்த அனுசந்தானத்துக்கு குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு
இதன் படியிலே த்வயத்திலும் சரம ஸ்லோகத்திலும் உள்ள அர்த்தங்கள் தெளிந்து கொள்வது –
இவற்றில் ஈஸ்வரனுக்கு பிரகாசித்த சேஷித்வம் சேதன அசேதன சாதாரண தர்மம் ஆகையாலே
சேதன ஏகாந்தமான ஸ்வாமித்வம் ஆகிற விசேஷத்திலே பர்யவசித்து அனுசந்திக்கப் பிராப்தம்
இப்படித் தன்னுடைய சேஷத்வமும் சாமான்யம் ஆகையாலே தாசத்வம் ஆகிற விசேஷத்திலே விஸ்ரமிப்பித்து அனுசந்திக்க வேணும்
இவற்றில் சாமான்யமான சேஷி சேஷ பாவம் பிரதம அஷரத்திலே சதுர்தியாலே பிரகாச்யம் –
இதன் விசேஷமான தாசத்வம் ஸ்வாமித்வங்கள் இருவரும் சேதனராயத் தோற்றுகையாலே அர்த்த சித்தம்
இப்படியே நாராயண சப்தத்திலும் சாமான்யமும் விசேஷமும் கண்டு கொள்வது
இதில் சாமான்ய சேஷத்வத்தாலே சேதனனுக்கு பிராப்தமான கிஞ்சித்காரம் தாசத்வம் ஆகிற விசேஷத்தாலே
கைங்கர்ய ரூபமான புருஷார்த்தம் ஆயிற்று –

இப்படி சேஷித்வத்தாலே வந்த ஈஸ்வரனுடைய அதிசய யோகமும்
ஸ்வாமித்வம் ஆகிற விசேஷத்திலே அவனுக்கு புருஷார்த்தமாய் பலிக்கிறது
சேதனருடைய ரஷணத்திலே ஈஸ்வரன் -பிராப்தனும் சக்தனுமாய் -தத் அதீன பிரவ்ருதியை ஒழிய
சேதனர் அப்ராப்தரும் அசக்தருமாய் இருக்கைக்கு நிபந்தனம் ஈஸ்வரனுடைய நிருபாதிக சேஷித்வமும் நிருபாதிக நியாம்யத்வமும்-
உடையவன் உடைமையை ரஷிக்கையும் சமர்த்தன் அசமர்த்தனை ரஷிக்கையும் பிராப்தம் இறே
ரஷிக்கும் போது கர்ம வச்யரை ஓர் உபாயத்திலே மூட்டி ரஷிக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வ சங்கல்ப நியதம் –

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்
துலை ஓன்று இல்லை என நின்ற துழாய் முடியன் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் என்று வேதியர் மெய்ப் பொருளே

யதி ஏதம் யதி சார்வ பௌம கதிதம் வித்யாத் அவித்யாதம
பிரத்யூஷம் பிரதிதந்த்ரம் அந்திமயுகே கச்சித் விபச்சித்தம
தத்ர ஏகத்ர ஞாடிதி உபைதம் விலயம் தத்தன்மத ஸ்தாபனா
ஹேவாக பிரதமான ஹைதுககதா கல்லோல கோலாஹல-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: