ஸ்ரீ பாஷ்யம்-3-3– மூன்றாம் அத்யாயம் -சாதனா அத்யாயம்–மூன்றாம் பாதம் -குண உப சம்ஹார பாதம் –

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————————————————————————-

சாதனா அத்யாயம்-குண உப சம்ஹார பாதம் -உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும் அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன –
இதில் 26 அதிகரணங்கள்/  64  ஸூத்ரங்கள் உள்ளன –

——————————————————————————————————————————-

முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூ த்ரங்கள்–வைச்வாநர வித்யை-தஹரா வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும் அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது  –

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூ த்ரங்கள்–சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள் வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூ த்ரம்-சாந்தோக்யம் கௌ ஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை எனபது ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூ த்ரங்கள்-பிரமம் ஆனந்தமயம் -அவிகாராய -ஞானமயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது  –

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூ த்ரம்-ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூ த்ரம்–சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூ த்ரங்கள்-ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை -கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

எட்டாவது  அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூ த்ரம்-கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் -ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூ த்ரம்–சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ விதைகளில் ரூபம் வேறுபடுவதால் அவை வெவ்ப்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூ த்ரம் -தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள்  ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூ த்ரம் –புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை வீடு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூ த்ரங்கள்- -உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூ த்ரம்-அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூ த்ரங்கள்–ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூ த்ரங்கள்–ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூ த்ரங்கள்–சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூ த்ரம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூ த்ரம்–அபஹத பாபமா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -19-நாராயண அநுவாகம் ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூ த்ரங்கள் -அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூ த்ரங்கள் –சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூ த்ரங்கள் –சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூ த்ரம் -சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூ த்ரம் -சத் விதியை தஹர விதியை பொஇன்ட்ர பிரம்மா விதைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூ த்ரங்கள் – -ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூ த்ரங்கள்-உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-

——————————————————————————————————————————-

முதல் அதிகரணம் –சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம் -வைச்வாநர வித்யை-தஹரா வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும் அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது  –

——————————————–

3-3-1-சர்வ வேதாந்த ப்ரத்யயம் சோத நாத்ய விசேஷாத்–

வெவ்வேறு சாகைகளில் படிக்கப்படும் விதைகள் ஒரே பேராக இருந்தாலும் ஒன்றே என்னக் கூடாது என்பர் பூர்வ பஷி
பிரகரண பேதம் இருக்குமே
அவிசேஷ புன சரவணம் -வேறுபாடு இல்லாமல் மீண்டும் படிக்கப் படுத்தல் -மீண்டும்படித்தது வீணாகப் போகக் கூடாதே என்பதால் இரண்டு முறை படிப்பது வெவ்வேறே என்று கொள்ள வேண்டும் என்பர்
அதர்வண வேதம் சிரோ விரதம் சொல்லும் முண்டக உபநிஷத் -3-2-10-தோஷாமே வைதாம் ப்ரஹ்ம வித்யாம் வதேத சிரோவ்ரதாம் விதிவைத் பைஸ்து சீரணம் -என்று
யார் ஒருவன் முறைப்படி தலையிலே தீயை சட்டியில் வைத்து தாங்கும் விரதம் ஏற்கிறானோ அவனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க வேண்டும்
வேறு இடங்களில் இப்படி இல்லையே என்பர்
சோதனா -என்றால் விதி வாக்கியம்
சோதனா +ஆதி +அவிசேஷாத்–உபாசீத வித்யாத் -உபாசனைக்கு அறிய வேண்டும்
ஜைமினி ஸூ த்ரம்-2-4-9–ஏகம் வா சம்யோக ரூப சோதநாக்ய விசேஷாத் –என்று தொடர்பு விதி வாக்கியம் ரூபம் பெயர் வேறுபடாமல் உள்ளதால் ஒன்றே ஆகும் என்பதாம்
சாந்தோக்யத்திலும் வாஜசனே யாகத்திலும் வைச்வா நர வித்யை குறித்து -இது வைச்வா நரம் உபாசீதே -ஒரே மாதிரி உள்ளது
இரண்டிலும் உபாசிக்கப்படும் பரமாத்மா வைச்வா நரம் என்றும் ப்ரஹ்மத்தை குறித்தே பலனாகவும் கூறப்படுகின்றது
இப்படி வேவேறே சாகைகளில் படிக்கப் பட்டாலும் வித்யை ஒன்றே எனபது தெளிவாகும்

—————————————————————————————————————————

3-3-2- பேதாத் ந இதி சேத் ஏகச்யாம் அபி –

ஒரே வித்யை பல சாகைகளில் கூறப் பட்டு இருந்தாலும் உபாசகர்கள் வெவ்வேறே என்பதால்
சிரோ விரதம் அதர்வண வேதத்தில் அங்கமாக கூறப்பட்டுள்ளதே என்றால்-

———————————————————————————————————————————-

3-3-3-ஸ்வாத்யா யஸ்ய ததான்வே ஹி சமாசாரே அதிகாராத் ச சவவத் ச தந் நியம –

வேத அத்யயனம் செய்யத் தகுதி யாகும் பொருட்டு இத்தை அங்கமாக விதிக்கின்றது -சமாசாரம் என்ற கிரந்தம் இத்தை கூறும் ஸ்வ ஹோமங்கள் போலே –
முண்டக உபநிஷத் -3-2-11- நைதத சீர்ண வராதோ அதியீத -என்று சிரோ வ்ரதத்தை பின்பற்றாதவன் இந்த வேதத்தை அத்யயனம் செய்யக் கூடாது என்று விதிக்கிறது
3-2-10-ஏதாம் ப்ரஹ்ம வித்யாம் வதேத -என்று ப்ரஹ்ம வித்யைக்கும் இப்படியே என்கிறது
சப்த சூரியம் தொடங்கி சதோனம் எனபது வரை ஸ்வ ஹோமங்கள் அனைத்தும் மற்ற ஹோமங்கள் போன்று மூன்று அக்னியில்
இயற்றப் படாமல் ஒரே அக்னியில் இயற்றப் படும் -அதர்வண வேதத்துக்கு மட்டும் இது எப்படியோ அப்படியே சிரோ விரதமும் -என்பதால் இது வேறு விதைக் கூற வில்லை

——————————————————————————————————————————-

3-3-4- தர்சயதி ச

வேதம் உணர்த்துகிறது -தஹர வித்யை பல சாகைகளில் கூறப் பட்டு இருந்தாலும் ஒன்றே என்று உணர்த்துகிறது
சாந்தோக்யம் -8-1-1-தஸ்மின் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம்-தஹர ஆகாயம் என்பதற்குள் இருப்பதுவும் தேடப்படுவதுவும் எது என்று கேட்டு
8-1-2- கிம் தத்ர வித்யதே யதன்வேஷ்டவ்யம் -என்று தேடத் தகுந்ததாக எது என்று கேட்டு
அபஹதபாப்மா போன்ற எட்டு தன்மைகளுடன் கூடிய பரமாத்மாவே என்றது
தைத்ரிய நாராயண வல்லி சாந்தோக்ய உபநிஷத்தும் -12-3-தத்ர அபி தஹரம் ககனம் விசோகஸ் தஸ்மின் யதன் தாஸ்ததுபா ஸி தவ்யம் -என்று
தஹா என்னும் மாகாசம் தோஷம் வருத்தம் அற்று உள்ளது அதனுள் உள்ள பரமாத்மாவே உபாசிக்கத் தக்கவன் என்றது
இத்தால் ஒன்றே என்று நிரூபணம் ஆயிற்று-

——————————————————————————————————————————-

3-3-5-உப சம்ஹார அர்த்தா பேதாத் விதி சேஷவத் சமா நே ச

ஒன்றில் கூறிய வித்யையின் குணங்கள் அனைத்திலும் சேர்த்து கொள்ள வேண்டும்
ச என்று இதனை வலி உறுத்துகிறது

———————————————————————————————————————————————————————————————————–

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள் வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது

——————————————————-

எதிரிகளை வீழ்த்த சாம கானத்தில்பாடும் உத்கீதம் பகுதி வேதத்தில் உள்ளது
அசுரர்களை வீழ்த்த தேவர்கள் இத்தை கைக் கொண்டார்கள்
முதலில் வாக் தேவதை கொண்டு பாட -வாக்கின் தோஷங்களால் முயற்சி பலிக்க வில்லை இப்படியே பல உறுப்புகளை கொண்டு முயன்றும் பலிக்க வில்லை
இறுதியில் பிராணன் கொண்டு பாடி வென்றனர் -இத்தால் எல்லா உறுப்புக்களும் தோஷத்துடன் கூடியவை என்றும் பிராணன் மட்டுமே தோஷம் அற்றது என்றும் சொல்லிற்று ஆயிற்று

3-3-6-அந்ய தாத்வம் சப்தாதி சேத் ந அவிசேஷாத் —

வேத வரி மூலம் வேற்பாடு விளங்குகிறது எனபது பொருந்தாது -வேறுபாடு இல்லாமல் உள்ளதால் –
ப்ருஹத் உபநிஷத் -1-3-1-த்வயா ஹ பிரஜாபத்யா தேவாச்ச அஸூராச்ச –தே ஹ தேவா ஊசு ஹந்தா அஸூரான் யஜ்ஞே உத்கீதேன அத்யயாமா -என்றும்
1-3-7-அத ஹ ஏனம் ஆ சன்யம் பிராண மூசு –பவத்யாத்மநா பராஸ்யத் விஷன் ப்ராத்ருவ்யோ பவதி ய ஏவம் வேத -என்றது
சாந்தோக்யம் -1-2-1- தேவா ஸூராஹைவ யத்ர சம்யேதிரே–தத் தஹ தேவா உத்கீதம் ஆஜஹ்ரு அநேன ஏ நான் அபிஹநிஷ்யாமி -என்றும்
1-2-7-அத ஹ ஏவாயம் முக்யப்ராணம் தம் உத்கீதம் உபாசாம் சக்ரிரே -என்றும்
1-2-8-யதா அஸ்மா நமாகணம் ருத்வா விதயம் சதே ய ஏவம் ஹைவ சவித்வம்சதே ய ஏவம் விதி பாபம் காமயதே
இங்கு உபாசனம் விதிக்காமல் உத்கீததுக்கு பலன் சொன்னது அதன் மீது ஆசை உண்டாக்கவே
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-3-25- அர்த்தவாதம் -ஆசை உண்டாக்குவதும் ஒரு வகை பிரமாணம் என்று அறியலாம்-

பூர்வ பஷம்-இரண்டு வித்யையும் ஒன்றே -முக்ய பிராணனை ஏறிட்டுக் கொண்டு உபாசிப்பதாலும் -சத்ருக்களை அளிப்பதுண் பலன் என்பதாலும் –
ஆனால் ரூபத்தில் பேத முள்ளது என்பீர் ஆகில் -அதாவது
ப்ருஹத் உபநிஷத்தில் -வாஜச நேயகம் -அத ஹ இமம் ஆசந்யம் பிராணம் ஊசு த்வம் ந உத்காய ததா இதி தேப்ய ஏஷ பிராண உதகாயத் -என்று –ய ஏவம் வேத -என்று
உத்கீதத்தை கர்த்தாவின் மீது ஏற்றிக் கூறுவதாக -பாடுபவனை பிராணன் என்று கொண்டு அவனைத் த்யாநிப்பதாகக் கூறுகிறது
சாந்தோக்யத்தில் 1-2-8-அதஹ அயம் முக்ய பிராண தம் உத்கீதம் உபாசம் சக்ரிரே —-ய ஏவம் விதி பாபம் காமயதே ஏவ-என்று உத்கீத கர்மம் மீது பிராணன் ஏறிட்டு கூறப் படுவதால் ரூபம் வேறே என்றால்
பூர்வ பஷி வாதம் –

இரண்டிலும் அசுரர்களை அழிப்பதே குறிக்கோள் உண்டு-உத்கீதம் கொண்டே அழிக்கிறது
வாஜச நேயகத்தில் -ப்ருஹத் உபநிஷத் -9-3-1-தே ஹ தேவா ஊசு ஹந்தா அ ஸூ ரான் யஜ்ஞே உத்கீதேந -என்றும்
சாந்தோக்யத்தில்-1-2-10-தத்த தேவா உத்கீதம் ஆஜஹ்ரு அநேநைவ ஏ நான் அபிஹா நிஷ்யாம -என்று தொடக்க வரிகள் ஓன்று போலே உள்ளன
பின்னால் உள்ள ப்ருஹத் உபநிஷத்தும் -1-3-7-தேப்ய எஸ பிராண உதகாயத் -உத்கீதமே வஸ்துவாக இருந்த போதிலும் இங்கு கர்த்தாவாகவும் கூறப்பட்டது-உணவே சமைக்கிறது போலே -ஆகவே இரண்டு வித்யைகளும் ஒன்றே நஎன்பர் பூர்வ பஷி

—————————————————————————————————————————

இனி சித்தாந்தம்
3-3-7- ந வா பிரகரண பேதாத் பரோவரீயஸ் த்வாதிவத் —

இரண்டிலும் பிரகாரம் வேறுபட்டு உள்ளது -குணத்தில் வேறுபாடு கூறுவது போன்று
ந வா-பதங்கள் பூர்வ பஷத்தை தள்ளுகிறது-பிரகரண பேதம் உண்டே
சாந்தோக்யம் -1-1-1-ஓம் இதி ஏதத் அஷரம் உத்கீதம் உபாசன -என்று உத்கீத அவயவமான ஓம் குறித்து உபாசனை தொடங்கப் படுகிறது -மேலே தேவர்கள் முக்ய பிராணனை உபாசனம் செய்தார்கள் என்றது
ப்ருஹத் தில் இவ்விதமாக தொடங்கும் பிரகரணம் இல்லை
விஷய பேதமும் ரூப பேதமும் உண்டே -இரண்டு வித்யைகளும் ஓன்று அல்ல
சாந்தோக்யத்தின் தொடக்கத்தில் உத்கீத அவயவமான பிரணவத்தில் பரமாத்மாவை ஏறிட்டு உபாசிக்கும்படி
1-6-6-ய ஏஷோஅந்தராதித்யே ஹிரண்ய மய புருஷோ த்ருச்யதே -பொன்மயமான புருஷன் என்றும்
1-9-2-ச ஏஷ பரோவரீயான் உத்கீத -சிறந்த குணம் கொண்டவர்களில் சிறந்தவன் என்றும் இரு விதமான உபாசனைகள் உண்டே –

———————————————————————————————————————–

3-3-8-சம்ஜ்ஞாத சேத தத் உக்தம் அஸ்தி து தத் அபி —

பெயர் ஒன்றாக இருந்தாலும் வித்யைகள் ஒன்றே என்று சொல்ல முடியாதே -வெவ்வேறு விதிகள் உள்ள இடங்களில் இது போலே காணலாம் என்றவாறு
உத்கீத வித்யை-பெயர் ஒன்றாக இருந்தாலம் வெவ்வேறே என்று முன்பு பார்த்தோம்
அக்னிஹோத்ரம் எனபது அன்றாடம் இயற்றப் படும் அக்னி ஹோதரத்தையும் குண்ட பாயிகளின் அய நாக்னி ஹோத்ரம் இரண்டையும் குறிக்கும்
சாந்தோக்ய உபநிஷத்தில் முதல் பிரபாடகத்தில் பல வித்யைகளையும் உத்கீத வித்யை என்றே கூறப்படுவதை பார்க்கிறோம்-

————————————————————————————————————–

3-3-9-வ்யாப்தேச்ச சமஞ்ஜசம் –

பல இடங்களில் கூறப்படுவதால் நடுவில் கூறப்படுவதும் பொருந்தும்
சாந்தோக்யம் முதல் பிரபாடகத்தில் உத்கீதத்தின் அவயவமான பிரணவத்தைக் குறித்து பேசி மேலே -1-2-1-தத்த தேவா உத்கீதமா ஜஹ்ரு-என்றது
அங்கும் பிரணவமே உபாசிக்கத் தக்கது என்று கூறப்பட்டதாக அறிய வேண்டும்
ஆக சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்தில் சொல்லிய உத்கீத இரண்டு வித்யைகளும் வெவ்வேறு என்றவாறு-

————————————————————————————————————————-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -சாந்தோக்யம் கௌ ஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை எனபது ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————–

3-3-10-சர்வாபேதாத் அந்யத்ர இமே —

சாந்தோக்யத்திலும்-5-1-1- -வாஜச நேயகத்திலும் -ப்ருஹத் -6-1-1-பிராண வித்யை கூறப்படுகிறது
யோ ஹ வை ஜ்யேஷ்டம் ச ஸ்ரேஷ்டம் ச வேத ஜ்யேஷ்டச்ச ஹ வை ஸ்ரேஷ்டச்ச பவதி ப்ராணோ வாவ ஜ்யேஷ்டச்ச ஸ்ரேஷ்டச்ச -என்று
பிராணன் மூத்ததாகவும் உயர்ந்ததாகவும் கூறப்பட்டு உபாசிக்கத் தகுந்ததாக உணர்த்தப் பட்டது
இதனைத் தொடர்ந்து வாக் இந்த்ரியத்திடம் செல்வம் வசிஷ்டம்
கண் இந்த்ரியத்திடம் நிலை நிறுத்தும் தன்மை பிரதிஷ்டம்
காது இந்த்ரியத்திடம் சேகரிக்கும் தன்மை சம்பத்
மனம் -ஆயதனம்-அனைத்துக்கும் இருப்பிடம்
அனைத்தும் பிராணனை சேர்ந்தவை என்றது
கௌ ஷீதகீ உபநிஷத்திலும் பிராணன் மூத்ததாகவும் உயர்ந்ததாகவும் சொல்லப் பட்டாலும் வாக்கு முதலானவற்றுக்கு
கூறப்பட்ட வசிஷ்டம் முதலான தன்மைகள் சொல்ல பட வில்லை
எனவே உபாசன ரூபம் மாறுபடுகிறது இரண்டும் வெவ்வேறே என்பர் பூர்வ பஷி
இரண்டும் ஒன்றே -சாந்தோக்யம்–5-1-6- -ஏதா ஹ வை தேவதா அஹம் ஸ்ரேயசி வ்யூதரே -என்றும் ப்ருஹத் -6-1-7-அஹம் ஸ்ரேயசே விவதமா நா -என்றும் விவாதம் செய்து பிராண வித்யை தொடங்குகிறது
மற்ற இந்த்ரியங்கள் வெளியேறினாலும் பிராணன் உடல் தொடர்ந்து செயல்பட
மற்ற இந்த்ரியங்கள் தங்கள் இருப்புக்கு பிராணனையே அண்டி உள்ளமை காட்டப் பட்டது
ஆக வசிஷ்டம் போன்ற தன்மைகள் பிராணனுக்கு உள்ளமை மறைமுகமாக இங்கும் கூறப்பட்டன
எனவே இரண்டுக்கும் பேதம் இல்லை என்றதாயிற்று

——————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் -பிரமம் ஆனந்தமயம் -அவிகாராய -ஞானமயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது  –

————————————————————-

3-3-11-ஆனந்தாதய ப்ரதா நஸய —

ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் -ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –
அனைத்து குனங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்
தைத்ரிய ஆரண்யகத்தில் -2-5-தஸ்ய ப்ரியமேவ சிர-பிரியத்தைத் தலையாகக் கொண்டு போன்ற வரிகள் உண்டே இது போன்றவையும் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டி வருமே என்றால் பதில் அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————

3-3-12-ப்ரிய சிரஸ் த்வாத்ய ப்ராப்தி உபச யாபச யௌ ஹி

அவசியம் இல்லை -காரணம் உறுப்பு பேதங்களை ஏற்றால் வளர்த்தல் குறைதல் போன்ற தோஷங்கள் வருமே
தைத்ரிய ஆனந்த வல்லி-2-1- சத்யம் ஞானம் ஆநந்தம் ப்ரஹ்ம-என்பதற்கு முரணாகி விடுமே

———————————————————————————————————————-
அனைத்து குணங்களையும் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டும் என்றால் அளவிறந்த எண்ணிற்ற கல்யாண குணங்களையும் படிக்க வேண்டி வருமே
கணக்கற்று உள்ளதால் இயலாதே என்றால் –
3-1-13-இதரே து அர்த்த சாமான்யாத் –

இதரே -ஆநந்தம் முதலானவைகள்
சத்யத்வம் ஞானத்வம் அனந்ததவம் அமலத்வம் –யதோ வா இமானி -தைத்ரியம் -3-1-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்ம
குணங்கள் குணியை விட்டுப் பிரியாதவை
காருண்யம் போன்றவை எந்த வித்யையில் படிக்கப் படுகின்றனவோ அங்கு மட்டும் படித்தால் போதும் என்றதாயிற்று-

ஆத்மா நம் ரதி நம் வித்தி -கட உபநிஷத் -3-3-ஆத்மாவுக்கு தேருக்கு உரிமையாளன் -தேர் வீரன் -சரீரம் தேர் -அறிவி தேரோட்டி -மனஸ் கடிவாளம் போன்று -உபாசனதுக்கு உதவ
ப்ரஹ்மாவுக்கு ப்ரிய சிரஸ்த்வம் போன்றவை எதற்கு என்ன
3-3-14-ஆத்யா நாய பிரயோஜன அபவாத் –

வேறு பயன் கூறப் படாததால் உபாசனையின் பொருட்டே -ஆத்யாநம் அல்லது அநு சிந்தனம் எனபது உபாசனத்தையும் குறிக்கும் –
இப்படிப்பட்ட உபாசனம் சாஸ்திர ஞானம் மூலம் கை கூடும் -இந்த ஞானம் வரவே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –
அன்னமயம் -புத்தியில் ஏறிட்டுக் கூறுவது போலே தஸ்ய இதம் ஏவ சிர –தஸ்ய பிராண ஏவ சிர -போலே உபாசனையின் பொருட்டே
பிரிய சிரஸ்த்வம் போன்றவை குணங்கள் அல்ல -என்றே கொள்ள வேண்டும் –

—————————————————————————————————————

3-3-15-ஆத்ம சப்தச்ச —

தைத்ரியம் -2-5-அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று ஆத்மா பதத்தினால் ஆனந்தமயன் கூறப்பட்டான்
ஆத்மாவுக்கு தலை வாழ் பக்கம் இல்லாததால் ப்ரஹ்மத்துக்கும் இல்லை
ஆகவே ப்ரிய சிரஸ்த்வம் குணம் இல்லை உபாசனையின் பொருட்டே படிக்கப் பட்டது
இதற்கு பூர்வ பஷ வாதம்
தைத்ரியம் -2-5–அந்யோந்தர ஆத்மா பிராணமய -என்றும் -2-3-அந்யோந்தர ஆத்மா மநோமய என்றும் அசேத வஸ்துக்களையும் ஆத்மா பதம் குறிக்க
பரமாத்மாவை அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று ஆத்மா பதம் எவ்வாறு குறிக்க இயலும்
அடுத்த ஸூ த்ரம் விடை அளிக்கிறது-

——————————————————————————————————————-

3-3-16-ஆத்மக்ருஹீதி இதரவத் உத்தராத் —

அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும் -மற்றைய இடங்களிலும் இப்படியே கொள்ளப் படுகிறது
ஐ தரேய உபநிஷத் -1-1-1-ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் –ச ஈஷத லோகாந்து ஸ்ருஜை -ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும்
உத்தரேத் -அடுத்து உள்ள வரிகளில் ஆனந்தமயமானவனான அவனே உலகைப் படைக்கிறான்
தைத்ரியம் -2-6-சோகாமயத பஹூஸ் யாம் ப்ரஜாயேய-ஆக ஆத்மா பதம் பரமாத்மாவையே குறிக்கும் என்றதாயிற்று-

———————————————————————————————————–

3-3-17-அந்வயாத் இதி சேத் ஸ்யாத் அவதாரணாத்-

இப்படி நிச்சயம் அறியலாம் எவ்விதம் என்றால் முன்பும் இவ்விதம் கூறப்பட்டதால் ஆகும்
இதற்கு முன்பும் தைத்ரியம் -2-1-தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மந ஆகாச சம்பூத -இந்த பரமாத்மாவிடம் இருந்தே ஆகாயம் தோன்றிற்று
அன்னம் பிராணன் மநோ விஞ்ஞான மாயன் சொல்லி ஆனந்த மயனில் நிறுத்தி -ஆனந்தமயனான ப்ரஹ்மத்துக்கு அந்தர்யாமியாக யாரும் இல்லாததால் -அடுத்து-2-6- ச ஆகாமயதா-அவன் சங்கல்பித்தான் என்றது
ஆகவே பரமாத்மாவாக இல்லாத வஸ்துக்களுக்கும் ஆத்மா பத பிரயோகம் தோஷம் இல்லை-

——————————————————————————————————–

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————-

3-3-18-கார்யாக்யாநாத் அபூர்வம் —

சாந்தோக்யம் – 5-2-2-ச ஹோவாச கிம் மீ வாஸோ பவிஷ்யதீத்யா இதி ஹோசுஸ் தஸ்மாத் வா ஏதத சிஷ்யந்த புரஸ்தாத் உபரிஷ்டாச் சாத்பி பரிதததி சம்புகோ ஹ வாஸோ பவத்ய நக்நோ பவதி –
நீரே வஸ்த்ரமாக பிராணனுக்கு உள்ளது
இது போலே ப்ருஹத் உபநிஷத்திலும் -8-1-14-கிம் மீ வாஸ-என்றும் -ஆபோ வாஸ -என்றும் உள்ளது
தத் வித்வாம் சச் ச்ரோத்ரியா அசிஷ்யந்த ஆசாமந்த்ய சித்வா சாசாமந்த்யே தமே வததநமநகநம் குர்வந்தோ மன்யந்தே -என்றும்
ப்ருஹத் மாத்யந்தினத்தில் -தஸ்மாத் ஏவம்விதசிஷ்யன் நாசா மேதசித்வா சாசா மந்த்யேதமே வததநமநகநம் குருதே
ஆசமனம் செய்ய வேண்டும் எனபது விதி முறையே -பிராண வித்யையின் அங்கமாக-இது தவறான வாதம்
ஆசமன நீர் பிராணனுக்கு வஸ்த்ரம் ஆகிறது என்றதை உணர்த்தவே இங்கு கூறிற்று-

————————————————————————————————————-

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் -சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

—————————————————————————-

3-3-19-சமான ஏவம் ச அபேதாத் –

வாஹச நேயகத்தில் அக்னி ரகசியம் சாண்டில்ய வித்யை-சத்யம் ப்ரஹ்ம இதி உபாசீத அதகலு க்ரதும யோகம் புருஷ -என்று சத்தியத்தை பிரமமாக உபாசிக்க வேண்டும் என்று தொடங்கி
ச ஆத்மானம் உபாசீத மனோமயம் பிராண சரீரம் பாரூபம் சத்யா சங்கல்பம் ஆகாசாத்மானம் -என்று
தூய்மையான மனம் மூலம் அறியத் தக்கவனாக -பிராணனை சரீரமாகக் கொண்டவனாக – ஜ்யோதி ரூபமாக -ஆகாசத்துக்கு ஆத்மாவாக உள்ளவனாக -சத்ய சங்கல்பனாக –
உள்ள பரம் பொருளை உபாசிக்கக் கடவன் -என்று முடித்தது
இது போன்று ப்ருஹத் உபநிஷத்தில் -5-6-1- மநோமயோ அயம் புருஷ பாஸ் சத்ய தஸ்மின் அந்தர்ஹ்ருதயே யதா வ்ரீஹிர்வா யவோ வா ச ஏஷ சர்வச்ய வசீ சர்வஸ்யோசா நஸ் சர்வஸ் யாதிபதி சர்வம் இதம் ப்ரசாஸ்தி யதிதம் கிம் ச -என்று
இந்த புருஷன் தூய்மையான மனம் கொண்டு அறியத் தக்கவன் -தானாகவே பிரகாசமாக உள்ளவன் -மாற்றங்கள் அடையாதவன் -ஹிருதயத்தில் நெல் அளவு உள்ளவன் அனைவரையும் தன வசத்தில் படுத்தி நியமித்தபடி உள்ளவன் -என்றது
இரண்டு வித்யைகளிலும்-சம்யோகம் -பலன்களில் உள்ள தொடர்பும் –சோதனா -உபாசனை விதி முறைகளும் -ஆக்யா-பெயரும் -ஒன்றாக இருந்தாலும்
அனைவரையும் தன வசப்படுத்தும் தன்மையில் வேறுபாடு இருப்பதால் இரண்டும் வெவ்வேறு என்பர் பூர்வ பஷி
ஆனால் சமான ஏவம் -பொதுவாக உள்ளதால் இரண்டும் ஒன்றே
அனைத்தையும் வசப்படுத்தும் தன்மை சத்ய சங்கல்பத்தில் அடங்கும் -ஆகவே இரண்டும் ஒன்றே —

——————————————————————————————————

ஏழாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் -கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் -ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

—————————————————————————————–

3-3-20-சம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி

ப்ருஹத் உபநிஷத் -5-5-1-சத்யம் ப்ரஹ்ம என்று தொடக்கி –5-5-2-தத்யத் சத்யம் அசௌ ச ஆதித்யோ ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷோ யச்சாயம் தஷிணே அஷின் –என்று
சூர்ய மண்டலத்திலும் சூர்யனின் வலது கண்ணிலும் உள்ளான் அவனே உபாசிக்கத் தக்கவன் -என்றது
சூர்ய மண்டலத்தில் உள்ளதை தச்யோ உபநிஷதஹா என்றும் தச்யோ பநிஷதஹம் என்றும் அவன் பெயர் அஹ என்றும் அஹம் என்றும் கூறியது
உபாசிக்கு வஸ்து ஒன்றே என்பதால்-சத்யம் என்னும் ப்ரஹ்மமே — ரூப பேதம் இல்லை எனக்கே இரண்டும் ஒன்றே என்பர் பூர்வ பஷி
சித்தாந்தம் அடுத்த ஸூ த்ரத்தில்-

————————————————————————————————————–

3-3-21- ந வா விசேஷாத்

உபாசிக்கப்படும் வஸ்து வேறுபடுவதால் -இருக்கும் இட வேறுபாடு ரூப வேறுபாடு உள்ளதால் வெவ்வேறு வித்யைகள் என்றதாயிற்று

—————————————————————————————————————-

3-3-22-தர்சயதி ச –

சாந்தோக்யம் -1-7-5-தஸ்யை தஸ்ய தத் ஏவ ரூபம் யதமுஷ்ய ரூபம் -என்று ஒன்றில் உள்ள திரு மேனி மற்றதுக்கும் பொருந்தும் என்று தனித் தனியே சொல்வதால் இரண்டும் ஒன்றல்ல –

———————————————————————————————-

எட்டாவது  அதிகரணம் -சம்பந்தாதி கரணம் -ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை -கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————————–

3-2-23-சம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத —

தைத்ரியத்திலும் ராணாயணீய கிலயத்திலும்-ப்ரஹ்ம ஜ்யேஷ்டா வீரயா சம்ருதானி ப்ரஹ்மாக்ரே ஜ்யேஷ்டம் திவமாத தான ப்ரஹ்ம பூதானாம் ப்ரதமோத ஜஜ்ஞே தே நார்ஹதி ப்ரஹ்மணா ஸ்பர்த்திதும் க
இரண்டு தன்மைகளும் பொதுவாக உள்ளதால் அனைத்து வித்யைகளிலும் படிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி
சித்தாந்தம் -இரண்டும் சமாஹார த்வந்த்வம் ஒன்றே ஆகும்
எங்கு எங்கு சேர இயலுமோ அங்கு கொள்ள வேண்டும் அனைத்து வித்யைகளிலும் இல்லை-

சாந்தோக்யம் -3-14-3-ஜ்யாயான் ப்ருதிவ்யா -பூமியைக் காட்டிலும் ப்ரஹ்மம் பெரியது என்றும்
சாந்தோக்யம் -8-1-3-யாவான் வா அயம் ஆகாச தாவ நேஷ அந்தர்ஹ்ருதய ஆகாச -இதயத்தில் உள்ள ஆகாசம் என்று கூறப்படும் பரம்பொருள் வெளியே உள்ள ஆகாசம் போன்று பெரியது
என்று பிரமத்தின் பெருமையை கூறுவதற்காக சொல்லப் பட்டன —

———————————————————————————————————————-

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் -சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ விதைகளில் ரூபம் வேறுபடுவதால் அவை வெவ்ப்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

3-2-24–புருஷ வித்யாயாம் அபி ச இதரேஷாம் அநாம்தாநாத்-

தைத்ரியம் -தச்யைவம் விதுஷோ யஜ்ஞஸ் யாத்மா யஹமான ச்ரத்தா பத்நீ சரீர மித்மமுரோ வேதிர் லோமானி -என்று
முன்பு கூறப்பட்ட சரணாகதிக்கு ஆத்மா -யஜமானன் -தெய்வ பக்தி -தர்ம பத்நீ –உடல்-சமித்து –மார்பு -யாகம் செய்யும் இடம் –உடல் ரோமங்கள் பரிஸ்தரணம்-என்றது
சாந்தோக்யத்தில்-3-16-1-புருஷவாவ யஜ்ஞஸ் தஸ்ய யாநி சதுர்விம்சதி வர்ஷாணி -என்று புருஷ ஆயுளின் 116 வருடங்களில் முதல் 24 வருடங்கள் –
இரண்டிலும் பெயர் ஒன்றே என்றும் உடல் உறுப்புக்களே யஜ்ஞத்தின் அங்கங்கள் என்றும் சொல்வதால் ரூபம் ஒன்றே
பலன் சாந்தோக்யத்தில் 116 வருடங்கள் வாழ்வான் என்கிறது
இரண்டும் ஒன்றே என்பர் பூர்வ பஷி
ஒரு சாகையிலே கூறப்பட்ட குணங்கள் மற்று ஒன்றில் இல்லாததால் இரண்டும் வெவ்வேறே ஆகும் –
தைத்ரியம் -யத்சாயம் ப்ராதர் மத்யந்தினம் ச தானி சவதானி -என்று காலை மாலை மதியம் -ஆகிய மூன்று ச்வனங்கள்
சாந்தோக்யம் இது போல் அன்றி -மனிதன் வாழ்வை மூன்றாகப் பிரித்து அதுவே ச்வனங்கள் என்றது
ச்வனம் எனபது ஒரு நாள் சூரிய உதயம் முதல் மறு நாள் சூர்ய உதயம் வரையில்
சாந்தோக்யத்தில் அசிசிஷா எனப்படும் உண்பதில் உள்ள விருப்பம் தீஷை என்று கூறப்படும் -தைத்ரியத்தில் இல்லை
சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பத்னி எனபது தைத்ரியத்தில் வேறு பொருளில் உண்டு
ஆக ரூப வேறுபாடுகள் உள்ளதால் இரண்டும் வெவ்வேறே ஆகும் -தைத்ரியத்தில் இதற்கு முந்திய பகுதியில் -ப்ரஹ்மணே த்வா மஹச ஓம் இதி ஆத்மானம் யுஞ்ஜீத -என்று
ப்ரஹ்மத்தில் ஓம் என்று கூறி உனது ஆத்மாவை அதில் சேர்ப்பாயாக -என்று தொடங்கப் பட்டது
இதற்கு பலனாக -ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி-பிரமத்தின் மேன்மையை அடைகின்றான் என்கிறது –
இத்தை தொடர்ந்து -தச்யைவம் விதுஷா -இப்படியாக அறிந்தவன் என்று தொடக்கி கூறப்பட்ட புருஷ வித்யை அந்த ப்ரஹ்ம உபாசனையே யஜ்ஞமாக உருவகப் படுத்திக் கூறப்படுவதாகக் கொள்ள வேண்டும்
ஆக ப்ரஹ்ம விதயையுடன் தொடர்பு உள்ளதால் பிரமத்தை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும்
பூர்வ மீமாம்சம் -பலவத் சந்நிதாவ பலம் ததங்கம் -இரண்டு விஷயங்கள் கூறப்பட்டு ஒன்றுக்கு பலன் சொல்லி ஒன்றுக்கு சொல்லாமல் இருந்தால் பலன் கூறப்படாதது கூறப்பட்டதுக்கு அங்கம் என்று கொள்ள வேண்டும் என்றது
இதன்மடி புருஷ வித்யை ப்ரஹ்ம வித்யையின் அங்கம் ஆகும்
ஆக புருஷ வித்யையின் பலமாக ப்ரஹ்மமே கூறப்பட்டதாகும்
ஆனால் சாந்தோக்யத்தில் நீண்ட ஆயுள் பலனாக சொல்லப் பட்டது -ரூப வேறுபாடும் பளா வேறுபாடும் உள்ளதால் இரண்டும் வெவ்வேறே -ஒன்றில் கூறப்பட்ட குணங்கள் மற்று ஒன்றில் இல்லை –

———————————————————————————————————————-

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம் -தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள்  ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

—————————————————–

3-3-25-வேதாத்யர்த்த பேதாத் –

அதர்வணம் தொடக்கத்தில் தைத்ரியம் -1-1-1-சுக்ரம் பிரவித்ய ஹ்ருதயம் ப்ரவத்ய -என்று விரோதியின் வீர்யத்தையும் இதயத்தையும் பிளக்க வேண்டும் -என்று ஓதுகின்றனர்
சாமவேதம் ரஹச்ய பிரமாணத்தை படிக்கத் தொடங்கும் பொழுது -தேவ சவித பிர ஸூ வ யஜ்ஞம் பிர ஸூவ -என்றுசவித தேவனே யஜ்ஞத்தை உண்டாக்குவாயாக -என்கிறார்கள்
காடகர்களும் தைத்ரரீயர்களும் -சம் நோ மித்ர சம் வருண -என்று மித்திரன் வருணன் போன்றவர்கள் நமக்கு நன்மை அளிக்கட்டும் என்கிறார்கள்
சாம்யாயநியர்கள் -ஸ்வேத அஸ்வோ ஹரி நீலோசி -நீயே வெண் குதிரை கருப்பும் கூட -என்கிறார்கள்
ஐதரேயர்கள் மஹா வ்ரத பிரமாணத்தை -இந்திர ஹ வை வ்ருத்ரம் ஹத்வா மஹான் அபவத் -என்று வரதனைக் கொன்ற இந்த்ரன் வலிமை அடைந்தான் என்பர்
கௌஷீதகியர்கள் மஹா வ்ரத ப்ராமானத்தை-பிரஜாபதிர் வைசம்வத்சர தஸ்ய ஏஷ ஆத்மா யத் மஹா வ்ரதம்–பிரஜாபதியே வருடம் -அவரது ஆத்மாவே இவ் வ்ரதம் – -என்பர்
யஜூர் வேதத்தை சார்ந்தவர்கள் -ப்ரவர்க்ய பிரமாணத்தை -தேவாவை சத்ரம் நிஷேது -தேவர்கள் யஜ்ஞம் நிறைந்த காலத்தை தொடங்கினர் -என்று தொடங்குகிறார்கள்
இவை எல்லாம் வித்யையின் அங்கமே என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல -பிளப்பது குறித்து வேறுபாடுகள் உண்டே -தைத்ரியம் -1-1-சுக்ரம் ப்ரவித்ய ஹ்ருதயம் ப்ரவித்ய ருதம் வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி -என்று
அங்கத்தைப் பிளந்து இதயத்தை பிளந்து நான் உண்மையைக் கூறுகிறேன் நான் உண்மையைக் கூறுகிறேன்
தைத்ரியம் -1-12-ருதமவாதிஷம் சத்யமவாதிஷம் -நான் சரியாக உண்மையாக கூறினேன் என்றும்
கட உபநிஷத் -1-1- தேஜஸ்வி நாவதீத மஸ்து மா வித் விஷாவஹை -நாம் ஓதும் மந்த்ரங்கள் வலுப் பெற வேணும் நாம் த்வேஷம் கொள்ளாமல் இருப்போம் -என்பர்
எதிரிகளை வீழ்த்த அபிசார மந்த்ரங்கள் உடன் கூடியதாக உள்ளதால் இவை வித்யைக்கு அங்கம் இல்லை என்றதாயிற்று –

——————————————————————————————————————–

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் –புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை வீடு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

————————————————————————————-

3-3-26-ஹாநௌ து உபாய ந சப்த சேஷத்வாத் குசாஸ் சந்தஸ் ஸ்துத்யுபகா நவத் தத் உக்தம் –

சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ரஹோர்முகாத் பிரமுஷ்ய தூத்வா சரீரமக்ரதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -என்று
குதிரையின் முடி விடுவது போலேயும் சந்தரன் ராகு முகத்தில் விடுபடுவது போலேயும் சரீரம் விட்டு பரமபதம் அடைவேனாக-என்கிறது
முண்டகம் -3-1-3-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சனபரமம் சாம்யம் உபைதி -என்றும்
சாத்யாயர சாகையில் -தஸ்ய புத்ரா சாயம் உபயந்தி ஸூஸ்குதஸ் சாதுக்ருத்யாம் த்விஷந்த பாவக்ருத்யாம் -என்று
உபாசகர புத்ரர்கள் அவனது செல்வத்தையும் -நண்பர்கள் புண்ணியத்தையும் விரோதிகள் பாபத்தையும் அடைகின்றனர்
கௌ ஷீதகியில்1-4-தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தா நுதே தஸ்ய ப்ரியா ஜ்ஞாதயஸ் ஸூ க்ருதும் உபயந்தி அப்ரியா துஷ்க்ருதாம் -என்று
புண்ய பாபம் கை விடுவதையும் -ஹாநி –
மற்றவர்கள் இடம் சேர்வதையும் உபாய நம் -இரண்டுமே வித்யைகளின் அங்கம் ப்ரஹ்ம வித்யை செய்பவர் அனைவருக்கும் பொருந்தும் –

இதில் ஹாநி மட்டுமே ஓர் இடத்தில் கூறப்பட்டு உபாயநம் கூறப்படா விட்டாலும் அத்தையும் கொள்ள வேண்டுமா கூடாதா சங்கை வரும் -ஒன்றை மட்டுமே கொள்ள வேண்டும் என்பர் பூர்வ பஷி
ஸூ த்ரத்தில் து இத்தை தள்ளுகிறது -ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உடையதால்
ஒரு சாகையில் இல்லாததை வேறு ஒரு சாகை சொல்லும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு
கௌ ஷீதகீ -குசா வா நஸ்பத்யா-மரத்தினால் ஆகிய சமித்து என்கிறது -எந்த மரத்தினால் என்றால் –
சாட்யாய நசாகையில் -ஔதும்பர்ய குசா -அத்தி மரத்தின் சமித்து என்கிறது
தேவாசூரானாம் சந்தோபி -யார் சந்தஸ் முதலில் படிக்க வேண்டும் -தேவச் சம்தாம்சி பூர்வம் -தேவ சந்தசை முதலில் கூற வேண்டும் என்கிறது வேறு இடத்தில்
ஒரு சாகையில் பொன்னை வைத்துக் கொண்டு ஷோடசீ ஸ்தோத்ரம் தொடங்க வேண்டும் -எந்தக் காலத்தில் என்பதை
வேறு சாகையில் சமயா விஷிதே ஸூ ர்ய ஷோடசி ந ஸ்தோத்ரம் உபாகரோதி -பாதி அஸ்தமன நேரத்தில் என்கிறது
ஒரு சாகையில் ருத்விக்கள் உபகானம் செய்ய வேண்டும் என்றும் மற்று ஒன்றில் ந அர்வர்யு உபகாயேத் -என்று அத்வர்யு உபகானம் செய்யக் கூடாது என்று விதி விளக்குகிறது
ஆகவே ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உடைய இவை இரண்டையும் எங்கும் கொள்ள வேண்டும் என்றதாயிற்று-

——————————————————————————————————————-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம் -உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————–

3-3-27-சாம்பராயே தர்த்த வ்யாபாவாத ததா ஹி அன்யே–

ஒருபகுதி உடலை விட்டு கிளம்பும் போதும் மீதி பகுதி மோஷம் செல்லும் வழியிலும் என்பர் பூர்வ பஷி
கௌ ஷீதகீ -1-3-ச ஏதம் தேவயா நம் பந்தா நம் ஆபத்ய அக்னிலோகம் ஆகச்சதி என்று அர்ச்சிராதி மார்க்கத்தில் முதலில் அக்னி லோகம் வருவதையும்
தொடர்ந்து -1-4-ச ஆகச்சதி விரஜாம் நதீம் தாம் மன சாத்யேதி தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூநுதே-என்று
விரஜா நதி வந்து தனது சங்கல்பம் மூலம் தாண்டி புண்ய பாபங்களைத் துறக்கிறான் -என்கிறது
சாந்தோக்யம் -8-3-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ரஹோர்முகாத் பிரமுஷ்ய தூத்வா சரீரமக்ரதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி -என்று உடலைக் கை விடும் போதே துறக்கிறான் என்கிறது
சாட்யாயன சாகை தஸ்ய புத்ரா சாயம் உபயந்தி ஸூஸ்குதஸ் சாதுக்ருத்யாம் த்விஷந்த பாவக்ருத்யாம் -என்று
உபாசகர புத்ரர்கள் அவனது செல்வத்தையும் -நண்பர்கள் புண்ணியத்தையும் விரோதிகள் பாபத்தையும் அடைகின்றனர் என்று
உடலைக் கை விடும் பொழுதே இவை நீங்கி விடுகின்றன எனபது ஆயிற்று
இனி சித்தாந்தம் -சாம்பராயே -மரண காலத்திலேயே -உடலை விட்டு கிளம்பியதும் அவன் அனுபவிக்க வேண்டிய சுகமோ துக்கமோ இல்லை என்பதால் -ப்ரஹ்ம அனுபவம் தவிர
சாந்தோக்யம் -8-12-1-அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரிய ச்ப்ருசத-என்றும் -8-3-4-ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –
6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யதே சம்பத்ச்யே என்றும் சொல்லிற்றே-

———————————————————————————————————————-

3-3-28-சந்தத உபயா விரோதத்

முரண்பாடு இல்லாமல் வரிகளை மாற்றி அந்வயம் செய்து படிக்க வேண்டும்-தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூநுதே–ஏதம் தேவயா நம் பந்தா நம் ஆபத்ய என்று
புண்ய பாபங்களைக் கை விட்டு தேவ யான மார்க்கத்தை அடைந்து அக்னி லோகம் வருகிறான் என்று
இதற்க்கு பூர்வ பஷியின் ஆஷேபம் அடுத்த ஸூ த்ரம்

————————————————————————————————————————-

3-3-29-கதே அர்த்தத்வம் உபயதா அந்யதா ஹி விரோத —

உடலை விடும் பொழுதே கர்மங்கள் கழிந்தால் அவற்றால் உண்டான ஸூ ஷ்ம சரீரமும் அழிந்து விடுமே
அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்வது எனபது இயலாத ஒன்றாகி விடுமே
இதற்க்கு சித்தாந்தம் பதில் அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————–

3-3-30-உபபன்ன தல் லஷணார்த்தோ பலப்தே லோகவத் —

சாந்தோக்யம் -8-3-4-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும் –8-12-3- ச தத்ர பர்யேதி ஐஷத் கிரீடன் ரமமாண என்றும் —
7-25-2-ச ச்வராட்பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும் -7-26-2- ச ஏகதா பவதி த்ரிதா பவதி-என்றும்
சரீர தொடர்பு தொடரும் என்கின்றன ஸ்ருதி ஸ்ரீ ஸூ க்திகள்
ஸூ ஷ்ம சரீரத்தை உத்பத்தி செய்ய வல்ல கர்மங்கள் தொலைந்த பின்பு இது எவ்வாறு இயலும் என்றால்
ப்ரஹ்ம வித்யையால் உபாசகனுக்கு ப்ரஹ்ம அனுபவத்தை அளிக்கும் பொருட்டு ஸூ ஷ்ம சரீரத்தை நிலையாக இருக்கும் படி செய்கிறது
ப்ரஹ்மத்தை நேரடியாக அறிந்த வசிஷ்டாதிகளுக்கும் புத்திர சோகம் உண்டே சுக துக்கங்கள் இல்லை உபாசகனுக்கு என்றது எவ்விதம் -பதில் அடுத்த ஸூ த்ரத்தில்-

———————————————————————————————————————–

3-3-31-யாவத் அதிகாரம் அவஸ்திதி ஆதிகாரிணாம்

அனைத்து ஞானிகளுக்கும் புண்ய பாபம் கழிந்ததாக கூறவில்லை -யாருக்கு உடல் விழுந்த உடன் அர்ச்சிராதி மார்க்கம், கிட்டுமோ அவர்களுக்கு மட்டுமே
வசிசிஷ்டர் போல்வாருக்கு அவர்கள் தொடங்கி உள்ள பதவி முடியாமல் உள்ளதால் -கர்மம் மூலமே அந்த அந்த பதவியை பெறுகிறார்கள் -அர்ச்சிராதி மார்க்கம் அவர்களுக்கு இல்லை
பதவிக்கு காரணமான கர்மமும் கர்மம் காரணமாக உண்டான பதவியும் தொடர்ந்து அர்ச்சிராதி மார்க்கம் எனபது இல்லை

—————————————————————————————————————————–

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் -அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————-

3-3-32- அநியம சர்வேஷாம் அவிரோத சப்தா நுமா நாப்யம் —

சாந்தோக்யம் -5-10-1
தத்யா இத்தம் விதுர்யே சேமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாசதே தே அர்ச்சிஷிம் அபி சம்பவந்தி -என்றும்
-ப்ருஹத் -6-2-15 ய ஏவம் எதத் விது யே சாமி அரண்யே -ஸ்ரத்தாம் சத்யம் உபாசதே – தே அர்ச்சிஷிம் அபி சம்பவந்தி என்றும்
பஞ்சாக்னி வித்யை பற்றிக் கூறும் பொழுதும் வாஜச நேயக பகுதிகளிலும் அர்ச்சிராதி மார்க்கம் கூறப் பட்டுள்ளது
சத்யம் தப பதங்கள் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
சாந்தோக்யம் -சத்யம் த்வேவ விஜிஞ்ஞாசி தவ்யம் -என்றும் -7-19-1-ச்ரத்தா த்வேவ விஜிஞ்ஞாசி தவ்யம் -என்றும்
ஸ்ரீ கீதையில் 8-24-அக்னிர் ஜ்யோதிரஹ சுக்ல ஷண்மாசா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோம் ஜனா– என்று
பல ஸ்ருதி ஸ்ம்ருதி வரிகளில் -அனைத்து வித்யைகளிலும்
கூறப்பட்ட அர்ச்சிராதி மார்க்கம் என்பதை உபகோசல வித்யை போன்றவையும் மீண்டும் கூறும் –

——————————————————————————————————————————-

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் -ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————————————————-

3-3-33-அஷரதியாம் து அவரோத சாமான்ய தத் பாவாப்யாம் ஔபத சதவத் தத் உக்தம் —

ப்ருஹ தாரண்யகத்தில்-3-8-8/9—ஏதத் ஏவ தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி அஸ்தூலம் அநணு அஹரச்வம் அதீர்க்கம் அலோஹிதம் அச்நேஹம் அச்சயம் அதம –
அவாயு அநகாசம் அசங்கம் அரசம் அகந்தம் அசஷூஷ்கம் அச்ரோத்தம் அவாக் அமான அதேஜச்கம் அபராணம் அஸூகம்
அமாத்ரம் அனந்த்ர அபாஹ்யம் ந தத் அச்நாதி கிஞ்சன ஏதச்யா வா அஷரண்ய பிரசாசநே சார்க்கி ஸூ ர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத –என்றும்
-முண்டக உபநிஷத் -1-1-5-அத பரா யயா தத் அஷரம் அதிகம்யதே யத் தத் அரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணாம் அசஷூ ச்ரோத்ரம் தத் அபாணிபாதம் -என்றும் முழங்கியது –

இந்த ப்ரஹ்மத்தின் தன்மைகள் அனைத்து வித்யைகளிலும் படிக்கப் பட வேண்டுமா -இஷ்டி விதைகளில் மட்டும் படிக்கப் பட வேண்டும் என்பர் பூர்வ பஷி
ப்ரஹ்மம் பொதுவாக உள்ளதாலும் அஷர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை உணர்ந்து கொள்ளவும் எல்லா வித்யைகளிலும் படிக்க வேண்டும்
ஆனந்தாதி குணங்களை போலேவே அச்தூலத்வம் போன்ற தனித் தன்மைகளையும் உணர்ந்தே உபாசிக்க வேண்டும்
அங்கத்துக்கும் பிரதான முறைக்கும் விரோதம் வந்தால் பிரதான முறையே கொள்ள வேண்டும்
அக்னிர் வை ஹோத்ரம் வே -என்ற மந்த்ரத்தை சாம வேதத்தில் உரத்த குரலிலும் யஜூர் வேதத்திலும் தாழ்ந்த குரலிலும் சொல்ல வேண்டும் என்று உள்ளது –
அனைத்து வித்யைகளிலும் அனைத்து குணங்களையும் படிக்க வேண்டும் என்று கொண்டால்
சாந்தோக்யம் -3-14-2-சர்வ கர்ம சர்வ கந்த சர்வரச-போன்று
அந்த அந்த விதைகளில் படிக்க வேண்டிய சிறப்பான குணங்கள் இல்லாமல் போகுமே என்றால்

———————————————————————————————————————-

3-3-34-இயம் ஆம ந நாத் –

ஆமநநம் -தனித்தன்மையுடன் கூடிய த்யானம் -இந்த தனித் தன்மைகளை படிக்க வேண்டுமே ஒழிய -சர்வகர்மா போன்ற தன்மைகள் அந்தந்த விதைகளில் மட்டும் படித்தால் போதும்-

———————————————————————————————————————-

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————

3-3-35-அந்தரா பூதக்ராமாவத் ச்வாத்மான-அந்யதா பேதா நுபபத்தி இதி சேத ந உபதேசவத் —

ப்ருஹத் உபநிஷத்தில் -3-4-1-உஷஸ்தர் என்பவர் யாஜ்ஞ வல்க்யரிடம் -யத் சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வ்யாசஷ்வ -என்று உணர்த்த கேட்க –
ய ப்ராணே ந பிராணி ந ச த ஆத்மா சர்வாந்தரோ ய அபாநேநாபாநிதி ச த ஆத்மா சர்வாந்தர -என்று பதில் சொல்லியும்
திருப்தி அடையாமல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க -அதற்கு யாஜ்ஞ வல்க்யர் -3-4-2-ந த்ரேஷ்டர் த்ரஷ்டாரம் பச்யே-ந ஸ்ருதேஸ் ச்ரோதாரம் ஸ்ருணுயா-ந மதேர் மந்தாரம் மன்வீதா ந விஜ்ஞாதேர் விஜ்ஞாதாரம் விஜா நீயா ஏ ஷத ஆத்மா சர்வாந்தர அதோ ந்யதார்த்தம் -என்று பதில் அளித்தார்
இதே போன்று-அடுத்த பகுதியில் கஹோலர் யாஜ்ஞ வல்க்யர் இடம் -3-5-1-யத் ஏவ சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வ்யாசஷ்வ -என்று அதே கேள்வியைக் கேட்க
இதற்கு -ய அச நா யாபிபாசே சோகம் மோஹம் ஜராம் ம்ருத்யு மத்யேதி ஏவம் வை தம் ஆத்மானம் விதித்வா ப்ராஹ்மணா புத்ரேஷணாயாச்ச வித்தேஷணாயாச்ச லோகேஷ ணாயாச்ச வ்யுத்தாய -என்று பதில் சொல்லத் தொடங்கி-அநோன்யதார்த்தம் -இவனை விட வேறுபட்ட ஜீவன் துன்பம் நிறைந்தவன் என்று முடித்தார்
இரண்டிலும் கேள்விகள் ஒன்றாக இருந்தாலும் ரூப வேறுபாட்டால் இரண்டு வெவ்வேறே வித்யைகள் என்பர் பூர்வ பஷி
முதல் பதிலில் பிராண வாயுவை இயக்கம் செயல் போன்றவற்றைச் செய்பவனே அந்தர்யாமி-
சரீரம் இந்த்ரியம் புத்தி மனம் பிராணன் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்ட பிரத்யகாத்மா -ஜீவாத்மா அந்தர்யாமி – என்றும்
இரண்டாவது பதிளில்பசி தாகம் அற்ற பரமாத்மாவே அந்தர்யாமி என்றும் கூறுகிறார் -என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல இரண்டிலும் பரமாத்மாவே –
யத் சாஷாத் ப்ரஹ்ம என்று ப்ரஹ்மமே உணர்த்தப் படுகிறது -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் இவனே அனைத்துக்கும் அந்தர்யாமி
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ப்ருதிவ்யா திஷ்டன் பிருதிவ்யா அந்தர -ய ஆத்மி நி திஷ்டன் ஆத்மன அந்தர -என்றது
இது போன்றே ய ப்ராணேன ப்ராணதி–இயல்பாக இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது பரமாத்மாவே
இது போன்றே சாந்தோக்யத்திலும் சத் விதையில்
6-1-1-உத தமோ தேசமே ப்ராஷ்யா -ணீ அவனை அறிவாயா -என்றும் -6-1-40-பகவான் தேவ ப்ரவீது -எனக்கு அதனை உபதேசிக்க வேண்டும் -என்றும்
6-5-4-பூய ஏவ மா பகவன் விஜ்ஞாபயது -எனக்கு மீண்டும் உபதேசிக்க வேண்டும் என்றும் ‘
அதற்கு பதிலாக -6-8-7-ஏஷோ அணிமா ஜத தாத்ம்யமிதம் சர்வம் தத் சத்யம் -என்று உணர்த்தப் பட்டது
அதனால் இரண்டு வித்யைகளிலும் உள்ள ரூபம் ஒன்றேயாக உள்ளதால் இரண்டும் ஒன்றே

——————————————————————————————————————-

ஆனால் கேள்வி கேட்டவர்கள் இருவர் -உபாசிக்கப் படும் பரமாத்மாவின் தன்மைகளும் வெவ்வேறே என்பதால் வித்யைகளில் பேதம் உள்ளது என்பர் பூர்வ பஷி
இதற்க்கு பதில் அடுத்த ஸூ த்ரத்தில்
3-3-36–வ்யதிஹார விசிம் ஷந்தி ஹி இதரவத் —

இரண்டுமே பரமாத்மாவைப் பற்றியே
சர்வ அந்தர்யாமித்வமும் பிராணன் இயக்கம் தன்மையும் அவனுக்கே

———————————————————————————————————————–

3-3-37-சைவ ஹி சாத்யாதய —

சத் எனப்படும் பர ப்ரஹ்மமே -சாந்தோக்யம் -6-3-2- ஸேயம் தேவதை ஷத-சங்கல்பம் செய்தது -என்றும்
6-8-6- தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -அந்த பர ப்ரஹ்மத்தின் தேஜஸ் -என்றும்
6-9-1- யத சோம்யமது மதுக்ருதோ நிஸ் திஷ்டந்தி -தேனீக்கள் தேனில் ஒன்றுவது போன்று
6-8-7-ஏததாத்ம்யமிதம் சர்வே தத் சத்யம் ச ஆத்மா -அனைத்தும் இந்த சத் என்பதை ஆத்மாவாகக் கொண்டது
ஒரு சிலர் 36/37 வெவ்வேறே அதிகரணங்கள் என்பர்
ஜாபால உபநிஷத் -த்வா வா அஹம் அஸ்மி புகவோ தேவதே அஹம் வை த்வமசி பகவோ தேவதே -என்றும்
ஐ தரேய உபநிஷத் -தத்யோஹம் ச அசௌ ச அசௌ சோ அஹம் -என்றும்
ஜீவன் பரமாத்மா ஓன்று என்பர்
இது ஏற்க இயலாது -ப்ரஹ்மமே அனைத்தாகவும் உள்ளதே என்றே கூறுகின்றன
சாந்தோக்யம் -3-14-1-3-14-1- தத் சர்வே கல்விதம் ப்ரஹ்ம -என்றும் -6-8-7-ஏத தாத்ம்யமிதம் –சர்வம் –தத்வமஸி–என்றும்
ப்ரஹ்மம் அனைத்துக்கும் ஆத்மா -ஆத்மாவாகவே உபாசிக்க வேண்டும்
இத்தையே -4-1-3-ஆத்மேதிது உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
ப்ருஹத் உபநிஷத் -5-4-1-ச யோ ஹ வை மஹத்யஷம் ப்ரதமஜம் வேத சத்யம் ப்ரஹ்ம -என்றும்
5-4-2-தத் யத் சத்ய ச ஆதித்ய ஏ ஏஷ ஏ தஸ்மின் மண்டலே புருஷோ யச்சாயம் தஷிணே அஷின் -என்றும்
சொல்வது இரண்டும் ஒரே வித்யை என்பர் பூர்வ பஷி
சூரியன் கண்கள் இருப்பிட பேதம் உள்ளதால் வெவ்வேறே என்று 3-3-21- ந வா விசேஷாத் -ஸூ த்ரத்திலேயே பார்த்தோம்
பாபங்களை அழிக்கிறான் உடலை விடுகிறான் -வித்யைகளின் பலன் ஒன்றாகும் பொழுது

————————————————————————————————————————

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————

3-3-38-காமாதி இதரத்ர தத்ர ச ஆய்த நாதிப்ய —

சாந்தோக்யம் -8-1-1-அத ய இதம் ப்ரஹ்ம புரே தஹர்ரம் புண்டரீகம் வேச்ம தஹர அஸ்மின் அந்தராகாச தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்றும்
வாஜச நேயகத்தில் -ப்ருஹத் உபநிஷத் -4-4-2-ச வா ஏஷ மஹான் அஜ –ஆத்மா யோயம் விஜ்ஞான மாயா ப்ராணேஷூ ய -ஏஷேரந்தர் ஹ்ருதய ஆகாச தஸ்மின் சேதே சர்வச்ய வசீ சர்வஸ் யேசான-என்றும் உள்ளன
இவை இரண்டும் வெவ்வேறே ஆகும் பூர்வ பஷி -ரூப வேறுபாடு உள்ளதால் -சாந்தோக்யத்தில் அபஹதபாப்மா போன்ற எட்டு குணங்களுடன் கூடிய ஆகாசம் உபாசிக்கப் படுகிறது
ப்ருஹத்தில் வசீத்வம் குணம் கொண்ட பர ப்ரஹ்மம் உபாசிக்கப் படுகிறது
அனால் உண்மையில் ரூப வேறுபாடே இல்லை சத்ய காமத்வமே இரண்டிலும் உண்டு –
இத்தையே சாந்தோக்யம்-8-3-4- பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும் -ப்ருஹத் -4-4-25-அபயம் வை ப்ரஹ்ம பவதி -என்றும் கூறப்பட்டது கொண்டு அறியலாம்
சாந்தோக்யம் -1-3-13-தஹர உத்தேரேப்ய-ஆகாசம் பரமாத்மாவே என்றும்
நாரதீயம் -13-2-தச்யாந்தே ஸூ ஷிரம் ஸூ ஷ்மம்-என்கிறதால்
இரண்டு வித்யைகளும் ஒன்றே
இங்கு பூர்வ பஷி ப்ரஹ்மத்துக்கு வசித்வம் கிடையாதே குணங்கள் ஒன்றும் இல்லை என்பதால் என்பர்
ப்ருஹத் 4-4-19/20-மனசா ஏவ அனுத்ரஷ்டவ்யம் ம்ருத்யோஸ்ஸ ம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நானேவ பச்யதி ஏகத் ஏவ அனுத்ரஷ்டவ்யம் ஏதத் அப்ரமேயம் -என்றும்
4-4-22-ச ஏஷ நேதி நேத்யாத்மா -என்பர் இதற்கு பதில் அடுத்த ஸூ த்ரம் –

———————————————————————————————————————

3-3-39-ஆதராத் அலேப –

ப்ரஹ்மத்தின் குணங்கள் கை விட பட வேண்டியவை அல்ல என்று பல ஸ்ருதிகள் முழங்கும் –சாந்தோக்யம் -8-1-1-தஸ்மின் யத் அந்த தத் அந்தவேஷ்டவ்யம் -என்றும் -8-1-5-ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகா விஜிகத்ச அபிபாசாஸ் சத்ய காம சத்ய சங்கல்ப -என்றும்
ப்ருஹத் -4-4-22-சர்வச்ய வசீ –சர்வஸ் ஏசான்–ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேது விதரண ஏஷாம் லோகாநாம் அம்பேதாய -என்றும்
சாந்தோக்யம் -8-1-6-தத்ய இஹாத் மான மனுவித்ய விரஜந்தி ஏதாம்ச சத்திய காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்
அத யா இஹான் மான மனுவித்ய விரஜந்தி ஏதாம்ச சத்திய காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ அகாம சாரோ பவதி -என்றும்
வாஜச நேயகத்திலும் -4-4-22-சர்வச்ய வசீ –சர்வஸ் யேசானா–ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூ பால -என்றும்
அவனது சர்வேஸ்வரத்வத்தை முழங்கின  -ப்ருஹத் உபநிஷத் -4-4-19–நேஹ நாநாஸ்தி கிஞ்சன -என்றும் -4-4-20-ஏகத் ஏவ அநி நுரஷ்டவ்யம் -என்று அவனால் படைக்கப் பட்டவைகள் அனைத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும்
6-4-22-ச ஏஷ நேதி நேத்யாத்மா -ப்ரஹ்மம் அத்தகையது அல்ல அனைத்துக்கும் அந்தர்யாமி என்றும்
அக்ராஹ்யோ ந ஹி க்ருஹ்யதே அசீர்யோ ந ஹி சீர்யதே அசந்கோ ந ஹி லஜ்யதே அவ்யதிதோ ந ஹி வ்யததே நரிஷ்யதி -என்றும்
சாந்தோக்யம் -8-1-5-நாச்ய ஜரயைத் ஜீர்யதி ந வதேன அஸ்ய ஹன்யதே எதத் சத்யம் ப்ரஹ்ம புரம் அஸ்மின் காமாஸ்  சமாஹித  -என்றும் சொல்லிற்று

————————————————————————————————————————-

3-3-40-உபஸ்திதே அத தத் வசநாத்

ப்ரஹ்மத்தை அடைந்தவன் என்பதே காரணமாக பித்ரு லோகம் செல்வதாக கூறுகையால் -என்பர் பூர்வ பஷி
எங்கும் சஞ்சரிக்கிறான் -பிறவியை நினைவு கொள்ளாமல்
சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -சஞ்சாரம் செய்வது முக்தாத்மா அனுபவிக்கும் பலனே ஒழிய சம்சாரிகள் அனுபவிக்கும் பலன் அல்லவே
இதனால் சத்யகாமத்வம் போன்ற தன்மைகள் மோஷத்தை விரும்பும் உபாசகனால் அந்த அந்த உபாசனங்களில் த்யாநிக்கத் தக்கவன் என்று நிரூபணம் ஆயிற்று-

————————————————————————————————————————-

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் -சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

3-3-41-தந் நிர்த்தாரணா நியம -தத் த்ருஷ்டே -ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் —

சாந்தோக்யம் -1-1-1- ஓம் இதி ஏதத் அஷரம் உத்கீதம் உபாசீத —
அனைத்திலும் உத்கீத உபாசனை அங்கம் என்பர் பூர்வ பஷி
சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்ய வத்தரம் பவதி
இது தவறான வாதம் -தேந உபௌ குருதோ யச்சைதத் ஏவம் வேத யாச்ச ந வேத -உத்கீதம் அறிந்தவர்களுள் அறியாதவர்களும் பிரணவம் மூலமே உபாசனை செய்கிறார்கள் என்கிறது சாந்தோக்யம்
கோதோ ஹதே ந பசு காமஸ்ய -பசு பலனாக போன்ற யாகங்களில் உத்கீத உபாசனை அங்கமாக கொள்ள வேண்டாமே
-ப்ருதக்க்ய ப்ரதிபந்த பலம் -தடை நீக்கம் —என்றது இத்தகைய ஸ்வர்க்கம் போன்றவற்றை அளிக்கும் யாகங்களை விட மாறு பட்டது என்றது-

—————————————————————————————————————————

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்–அபஹத பாபமா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது  –

———————————————————————————————–

3-3-42-

ப்ரதா நவத் ஏவ தத் உக்தம் –

சாந்தோக்யம் -8-1-6- தஹர ஆகாச ஸ்வரூபம் சொல்லியே குணங்களும் விதிக்கப் படுகின்றன
பூர்வ பாஷம் தஹர ஆகாசம் குணங்கள் உடன் கூடியே உள்ளான் ஒரு தடவை உபாசனை செய்த பின் குணங்களை கொண்டவன் என்று தனியாக உபாசனை செய்ய வேண்டாம் என்பர்
அப்படி அல்ல -ஸ்வரூப உபாசனை வேற குண உபாசனை வேறு-

————————————————————————————————————————–

அதிகரணம் -19-நாராயண அநுவாகம் ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————————————————–

3-3-43-லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீய தத் அபி —

தைத்ரிய நாராயண வல்லி-13-1-சஹச்ர சீர்ஷம் தேவம் விச்வாஷம் விஸ்வ சம்பவம் விச்வம் நாராயணம் தேவம் அஷரம் பரமம் பதம் -என்றும்
13-2- சோ அஷரம் பரம ஸ்வராட் -என்று முடித்தது
முந்திய அனுவாகத்தில் -12-3- தஹாம் விபப்மாம் பரவேச்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்ய சமஸ்தம் தத்ர அபி
தஹரம் ககனம் விசோகஸ் தஸ்மின் யதந்தஸ் ததுபாசி தவ்யம் என்று தஹர விதியை சொல்லி
மீண்டும் இந்த அனுவாகத்திலும் -13-2-பத்மகோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சா ப்யதாமுகம்-என்று சொல்லி
நாராயண அனுவாகம் தஹர வித்யையின் உபாசனப் பொருள் என்று உணர்த்திற்று என்பர் பூர்வ பஷி -அப்படி அல்ல -இங்கு கூறப்படும் உபாசனப் பொருள் மற்ற வித்யைகளிலும் கொள்ளத் தக்கது என்று உணர்த்தவே
அஷரம் சிவன் சம்பு பரப்ரஹ்மம் பரஞ்சோதி பரதத்வம் பரமாத்மா பதங்களால் உணர்த்தப் படும் உபாசனப் பொருள் நாராயணனே
லிங்கம் -அடையாளம் -பூர்வ மீமாம்சை -3-3-14-சுருதி லிங்க வாக்ய பிரகரண ஸ்தான ஸ்மாக்யநாம் சமவாயே பார தௌர்பல்யம் அர்த்த விபர கர்ஷாத் -என்று லிங்கமே பிரதானம் என்று சொல்லும்
பத்மகோச ப்ரதீகாசம் தஹர வித்யைக்கு பின்பு சொல்லப் பட்டதால் இதுவும் தஹர வித்யையின் உபாசன பொருளே என்பர் பூர்வ பஷி
தஹர விதையிலும் உபாசனப் பொருள் நாராயணனே என்று காட்டவே -சித்தாந்தம்
சகஸ்ர சீர்ஷம் முதல் வேற்றுமையாகவே கொள்ள வேண்டும் விச்வமேதம் புருஷ போலே
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -13-1- என்றும்
தச்யாக்ச்சிகாய மத்யே பரமாத்மா வ்யவஸ்தித ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர சோஷர பரம்ஸ் ஸ்வராட் -13-2-என்றும் முதல் வேற்றுமையிலே உள்ளன
————————————————————————————————————————————-

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –
————————————————————————————–
3-3-44-பூர்வ விகல்ப பிரகரணாத் ஸ்யாத் க்ரியா மானஸ வத்

மனசால் உருவாக்கப்படும் அக்னி குறித்து வாஜச நேயகத்தில் அக்னி ரகச்யத்தில் -மனச்சித வாக்சித பிராண சித சஷூ சித ச்ரோத்ர சித கர்ம சித அக்னி சித
மனசால் கற்ப்பிக்கப் பட்ட அக்னியும் க்ரியா ரூபமான யாகங்களில் சேர்த்துக் கொள்ளப் படும் என்றவாறு
————————————————————————————————————
3-3-45-அதி தேசாத் ச

கற்கள் மீது வைக்கப்படும் அக்னி போன்று மனம் மூலம் ஏற்படும் அக்னிக்கும் உண்டு க்ரியா ரூபமான யாகத்தில் ஈடுபடுதலால்-கிரியா ரூபம் அடைகின்றன
————————————————————————————————————–
3-3-46-வித்யா ஏவ து நிர்த்தாரணாத் தர்சநாத் ச

அவை வித்யா ரூபன்மானவையே ஆகும் -இது முந்திய பூர்வ பஷ ஸூ த்ரங்களுக்கு பதில்
சதபத ப்ராஹ்மணம்-10-5-3-3- தே மனசைவ அதீயந்தி மனசைவ அசீயந்த மனசை ஷூக்ரஹா அக்ருஹந்த மனஸா ஸ்துவந்த மனஸா அசம்சன் யத்
கிஞ்ச யஜ்ஞே கர்ம க்ரியதே யத் கிஞ்ச யஜ்ஞீயம் கர்ம மனசைவ தேஷு மனோ மயேஷூ மனஸ் சித்ஸூ மனோமயம் அக்ரியதா -வித்யா ரூபமே

—————————————————————————————————————–

3-3-47-ஸ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத –

சுருதி லிங்கம் வாக்கியம் வலிமையானதால் தடை இல்லை -வித்யா ரூபமான யாகங்கள் குறித்து சுருதி வாக்யங்கள் உள்ளதால் இவற்றைத் தள்ள இயலாது –
மனம் மூலம் செய்யும் யாகம் எப்போதும் எங்கும் செய்யலாமே
மனம் மூலம் உண்டாகும் அக்னி வித்யா ரூபமான யாகத்தின் அங்கம் என்றதாயிற்று
பூர்வ பஷி இப்படியான வித்யா ரூப யாகத்துக்கு விதியும் இல்லை பயனும் இல்லை ஆகவே இப்படிப்பட்ட யாகம் ஏதும் இல்லை என்பர் –

——————————————————————————————————————

3-3-48-அநு பந்தா திப்ய-பிரஜ்ஞாந்திர ப்ருந்தக்த வவத் த்ருஷ்டச்ச தத் உக்தம் –

அநு பந்தங்கள் ஸ்தோத்ரம் போன்றவை மூலம் வித்யா ரூபமான யாகத்துக்கும் கர்ம ரூபமான யாகத்துக்கும் வேறுபாடு அறியப்படுகின்றன –
கர்மரூபமான யாகப் பலன்களும் வித்யா ரூபமான யாகங்களுக்கும் கிட்டும்-

—————————————————————————————————————–

3-3-49-சாமாந்யத் அபி உபலப்தே ம்ருத்யுவத் ந ஹி லோகாபத்தி

சில விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் ஒன்றாகவே கொள்ள முடியாது
ச ஏஷ ஏவ ம்ருத்யு ய ஏஷ ஏதஸ்மின் மண்டலே புருஷ -என்று இந்த புருஷனே ம்ருத்யு ஆவான் என்றது யம லோகத்தை ஆளுபவன் -என்றது இல்லை -எனவே வித்யாரூப யாகம் கர்ம ரூபமான யாகத்துக்கு அங்கம் இல்லை-

—————————————————————————————————————-

3-3-50-பரேண ச சப்தச்ய தாத்வித்யம் பூயஸ்த்வாத் து அநு பந்த

சதபத ப்ராஹ்மணத்தில்-10-5-4-1-அயம் வாவ லோக ஏஷ அக்னிச் சிதஸ் தச்யாப ஏவ பரிச்ரித -என்று உலகமே அக்னி மேடை -கடலில் உள்ள நீரே கற்கள் -என்றும்
ச ஏ ஹைததேவம் வேத லோகம் ப்ருணாம் ஏநம் பூதம் ஏதத் சர்வம் அபி சம்பத்யதே -என்று இப்படிப்பட்ட அக்னியை உலகமாக அறிபவனே அவனை அனைவரும் அடைகின்றனர்
தனிப்பலனைக் கொண்ட வித்யை கூறப்படுகிறது இங்கே
மனச்சித் போன்ற வித்யாமயமானவற்றை ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்தில் சொல்லாமல் அக்னி ரஹச்யத்தில்
படித்தது மனச்சித் போன்ற அக்னிகளுக்கும் படிக்க வேண்டிய தன்மைகள் பலவும் உள்ளதால்-

———————————————————————————————————-

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் –சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே  ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

——————————————————————————

3-3-51-ஏக ஆத்மந சரீரே பாவாத் —

இது பூர்வ பஷ ஸூ த்ரம்-சரீரத்தில் இருப்பு உள்ளதால் சிலர் இப்படி கொள்கின்றனர் –
ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-4-6-த்ரயாணாமேவ ச ஏவம் உபன்யாச பரச் நச்ச -என்று உபாயம் மற்றும் உபாயத்தால் அடையப் படும் வஸ்து அறிவதை போலே உபாசகனையும் பற்றியும் அறிய வேண்டும்
மேலும் ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-3-ஆத்மேதி தூப கச்சந்தி ப்ராஹ யந்தி ச -என்று தனது ஆத்மாவாக பரமாத்மாவாக உள்ளதால் ஜீவனையும் உபாசிக்க வேண்டும் என்கிறது
ஸ்வர்க்க பலன் போன்றவற்றை உபாசிக்கும் பொழுது தனது ஸ்வரூபம் பற்றி அறியாதவனாகவே ஆகிறான்
எப்படி உபாசிக்கிறானோ அப்படியே ஆகிறான் –

——————————————————————————————————-

3-3-52-வ்யதிரேகஸ் தத்பாவ பாவித்வாத் ந து உப லபதிவத்

அந்த அந்த ஸ்வரூபங்களைக் கொண்டவனாகவே ஆகிறான்
சாந்தோக்யம் -3-14-4-ஏவம் க்ரது அமும் லோகம் ப்ரேத்ய அபி சாம்பவி தாஸ்மி-என்று
உபாசனைக்குத் தக்கபடி உலகை விட்ட பின்னர் ஆவேன் -அடையப் போகும் ஸ்வரூபத்தையே உபாசிக்க வேண்டும்
யாகம் போன்ற கர்மங்களில் ஈடுபடும் ஒருவன் தன்னை சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாக ஜ்ஞாத்ருத்வம் போன்ற தன்மைகள் கொண்டவனாக அறிய வேண்டும் –இப்படி அறிந்தால் மட்டுமே கர்மங்களை இயற்ற அதிகாரம் படைத்தவன் ஆகிறான்-

—————————————————————————————————–

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————-

3-3-53-அங்காவ பத்தா து ந சாகா ஸூ ஹி ப்ரதிவேதம்–

சாந்தோக்யம் -1-1-1-ஓம் இதி ஏதத் உத்கீதம் உபாசீத் -2-2-1- லோகேஷூ பஞ்சவித்யாம் சாம உபாசீத் –
ஐதரேய ஆரண்யகம் -2-1-2—உக்தமுக்தமிதி வை பிரஜா வதந்தி ததிதமே வோக்த மியமேவ ப்ருத்வீ –
சதபத ப்ராஹ்மணம் -10-5-4-1-அயம் வாவ லோகே எஸ அக்னிச்ச
என்று அந்த அந்த கர்மங்களுக்கு அங்கமாக உத்கீத உபாசனங்கள் உள்ளன
அந்த ஸ்வரத்துடன் ஓதப் படுவதால் குறிப்பிட்ட சாகைக்கே பொருந்தும் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல உத்கீத உபாசனை அனைத்திலும் செய்யப்பட வேண்டும் சர்வசாகா ப்ரத்யய நியாயத்தால் -ஒரே யாகம் கூறப்படுவதால் அனைத்துக்கும் பொருந்தும்

———————————————————————————————–

3-3-54-மந்த்ராதிவத் வா அவிரோத

வா -உம்மைத் தொகை
ஆதி என்ற பதம் -ஜாதி குணம் எண்ணிக்கை ஒற்றுமை வரிசை பொருள் செயல்
மந்த்ரம் ஜாதி போன்றவை ஒவ் ஒரு சாகையிலே படிக்கப் பட்ட போதிலும் அதன் அங்கியான யாகம் அனைத்து சாகைகளிலும் ஒன்றே
என்பதால் அனைத்து சாகைகளிலும் அங்கமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன ஸ்வர பேதம் இருந்தாலும் முரண் பாடு இல்லை என்றதாயிற்று-

———————————————————————————————

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

————————————————————————————

3-3-55-பூம்ந க்ரதுவத் ஜ்யாயஸ்த்வம் ததா ஹி தர்சயதி

வைச்வா நரன் பரம புருஷன் மூன்று உலகங்களை சரீரமாக கொண்டு உள்ளான்
ஸ்வர்க்கம் தலை /சூர்யன் கண்கள் /வாயு -பிராணன் /ஆகாசம் சரீரத்தின் நடுப்பகுதி /நீர் மூத்திரப்பை /பூமி பாதங்கள்
அவயவங்களின் உபாசனையே கூறப் படுகிறது என்பர் பூர்வ பஷி
பூரணமான உபாசனமே கைக் கொள்ளத் தக்கது
—————————————————————————————————

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம் -சத் விதியை தஹர விதியை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

——————————————————————————————

3-3-56-நா நா சப்தாதி பேதாத் —

விதி வாக்யமும் ரூபமும் வேறு பட்டு உள்ளதால் வித்யைகள் வேருபட்டவையே ஆகும்
சத்வித்யை /பூம வித்யை /தஹர வித்யை /உபகோசல வித்யை /சாண்டில்ய வித்யை /வைச்வா நர வித்யை /ஆனந்த மய வித்யை / அஷர வித்யை
நா நா சப்தாதி வேருபட்டவையே
சப்தங்கள் /ஆதி சப்தத்தால் அப்யாசம் சங்க்யா சம்ஜ்ஞை குணம் பிரகரணாந்தரம்
உபாசனம் ஒரே ப்ரஹ்மம் பற்றி என்றாலும் வெவ்வேறே குணங்களை பற்றி உபாசனம் என்பதால் வித்யைகள் வேறுபட்டனவே ஆகும்-

——————————————————————————————-

அதிகரணம் -25-விகல்பாதிகரணம் -ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –
——————————————————————————————
3-3-57-விகல்போ அவிசிஷ்ட பலத்வாத்

ஜ்யோதிஷ்டோமம் தார்ச பூர்ண மாசம் போன்றவை ஸ்வர்க்கத்தில் அதிகம் காலம் இருக்கும் பொருட்டு அடுத்து அடுத்து அனுஷ்டிக்கும் யாகங்கள்
இது போலே அதிக ப்ரஹ்ம அனுபவத்துக்கு பல ப்ரஹ்ம வித்யைகள் உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல அவிசிஷ்ட பலத்வாத் -பலனில் வேறுபாடு இல்லாமையாலே
தைத்ரிய ஆனந்த வல்லி-2-1-ப்ரஹ்ம விதைப் நோதி பரம் -என்றும்
2-8-ச ஏகோ ப்ரஹ்மணா ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய சாகா மஹா தஸ்ய –
முண்டக -3-1-3-யதா பஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
ஆனந்த ரூபமாக ப்ரஹ்மம் பலன் என்பதால் ஒரே வித்யை

அனுஷ்டித்தால் போதுமே
————————————————————————————–
3-3-58-காம்யா து யதா காமம் சமுச்சீ யேரன் நவா பூர்வே ஹேத்வ பாவாத்

காம்ய பலன்கள் இஷ்டப்படி சேர்த்தோ தனியாகவோ அனுஷ்டிக்கலாம் -ப்ரஹ்ம வித்யை போலே அல்லாமல் அளவுள்ள பலன்களை அளிப்பதால்

———————————————————————————————

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம் -உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது

———————————————————————————————————-

3-3-59-அங்கேஷூ யதாச்ரய பாவ

யாகத்தின் ஆச்ரயமான உத்கீதம் போன்று உத்கீத உபாசனங்கள் யாகத்தின் அங்கமே ஆகும்
எப்போதும் கொள்ள வேண்டும் சாந்தோக்யம் -1-1-10-தே நோ பௌ குருதே -அதனைக் கொண்டு இருவரும் செய்ய வேண்டும் -ஓம் இதி உத்கீதம் உபாஸீதே -அனைத்து யாகங்களிலும் கொள்ள வேண்டும்-

—————————————————————————————————

3-3-60-சிஷ்டேச்ச-

விதிக்கப் பட்டதாலும் அங்கமே ஆகும் -உத்கீதம் உபாஸீத-சிஷ்டி ஸாசனம்
—————————————————————————————————-
3-3-61- சாம ஹாராத் –

சமா தானம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுவதால்
சாந்தோக்யம் -1-5-5-ஹோத்ரு ஷத நாத் ஹை வாபி துருக்கீதம் அநு சமா ஹரதி –என்று
தோஷங்கள் அனைத்தையும் ஹோத்ரி தள்ளுகிறான் -அதாவது உத்காதாவால் ஓதப்படும் உத்கீதத்தின் அவயவமான பிரணவமும் ஹோதாவால் கூறப்படும் ருக்குகளின் இறுதியில் உள்ள ஓங்காரமும் ஒன்றே என்று உத்காதாவும் ஹோதாவும் என்ன வேண்டும்
இதை அனைத்திலும் விதியாகக் கொள்ள வேண்டும் என்றதாயிற்று-

—————————————————————————————————

3-3-62-குண சாதாரணய் ஸ்ருதே ச

பிரணவத்தின் குணமான உபாசனத்தின் தன்மைக்கு இதன் தன்மை பொதுவாக உள்ளது என்று கூறப்படுவதால் –
சாந்தோக்யம் -1-1-9-தே நேயம் த்ரயீ வித்யா வர்த்ததே ஓம் இதி ஆச்ராவயதி ஓம் இதி சம்சதி ஓம் இதி உத்காயதி -என்றபடி
உத்கீத உபாசனம் அனைத்து கர்மங்களுக்கும் அங்கம் ஆகிறது-

——————————————————————————————————

இப்படி கூறப்பட்ட-3-3-59-முதல் -3-3-62- ஸூ த்ரங்களில் – பூர்வ பஷ வாதங்களுக்கு பதில் மேலே
3-3-63-ந வா தத்வ ஹ பாவ ஸ்ருதே –

உத் கீதத்துக்கு யாகத்தின் அங்கம் கூறப்படாத காரணத்தால் உத்கீத உபாசனம் அங்கம் எனபது சரியல்ல –
—————————————————————————–
3-3-64-தர்ச நாத் ச

இப்படி அங்கம் அல்ல என்று ஸ்ருதிகள் கூறுவதால்
சாந்தோக்யம் -4-17-10-ஏவம் வித ஹைவ ப்ரஹ்மா யஜ்ஞம் யஜமானம் சர்வாம்ச்சார்த் விஜோ அபி ரஷதி என்று சொல்வதால்
உத்கீத உபாசனம் எப்போதும் யாகங்களின் அங்கம் அல்ல என்றதாயிற்று-

————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: