Archive for June, 2015

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -21 – கதி விசேஷ அதிகாரம் /அதிகாரம் -22–பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 30, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

————————————————————-

அதிகாரம் -21 – கதி விசேஷ அதிகாரம்–

ஜ்வலன விதச ஜ்யோத்ஸ் நா பஷ உத்தராயண வத்சரான்
பவன தபன ப்ராலேயாம் சூன் க்ரமாத சிரத்யுதிம்
ஜலதரபதிம் தேவாதீசம் பிரஜாபதிமாகத
தரதி விரஜாம் தூரே வாசஸ் தத பரமத்புதம் –

இப்படி மூர்த்தன்ய நாடியிலே பிரவேசிதனான முமுஷூவை ஸ்தூல சரீரமாகிற ப்ரஹ்ம புரத்தின் நின்றும்
ப்ரஹ்ம நாடி ஆகிற தலை வாசலாலே
வத்சலனான ஹார்த்தன் வார்த்தை சொல்லக் கற்கிற முக வச்யனான ராஜ குமாரனை
ராஜா எடுத்துக் கொண்டு உலாவுமா போலே கொண்டு புறப்பட்டு
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய்–என்றும்
தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்றும்
சண்ட மண்டலத்தினூடு சென்று -என்றும்
இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்றும்
சொல்லுகிற தேவையான மார்க்கத்திலே வழிப்படுத்தி
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே -என்கிறபடி
அர்ச்சிஸ் என்றும் -அஹஸ் என்றும் -பூர்வ பஷம் என்றும் -உத்தராயணம் என்றும் –
சம்வத்சரம் என்றும் -வாயு என்றும் -ஆதித்யன் என்றும்
சந்தரன் என்றும் வைத்யுதன் என்றும் அமாநவ சம்ஜ்ஞனான இவனுக்கு சஹகாரிகளான வருண இந்திர பிரஜாபதிகள்
என்றும் சொல்லப்படுகிற வழி நடத்தும் முதலிகளை இட்டு அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
தான் பிரதானனாய் நடத்தி -அவ்வோ எல்லைகளிலே பகவச் சாஸ்த்ரத்திலே பறக்கப் பேசின போகங்களையும் அனுபவிப்பித்து –

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷட் குண்ய சம்யுதம்
அவைஷ்ணவா நாம ப்ராண்யம் குணத்ரய விவர்ஜிதம்
நித்ய சித்தை சமாகீர்ணம் தன்மயை பாஞ்ச காலிகை
சபா பிராசாத சம்யுக்தம் வனைச் சோப வனை சுபம்
வாபீ கூப தடாகைச்ச வ்ருஷ ஷண்டைச்ச மண்டிதம்
அப்ராக்ருதம் ஸூ ரைர் வந்த்யம யுதார்க்க சம ப்ரபம்
ப்ரக்ருஷ்ட சத்த்வராசிம் தம் கதா த்ரஷ்யாமி சஷூஷா-என்று
நெடும் காலம் காண ஆசைப்பட்டதொரு தேச விசேஷத்திலே சென்றவாறே

கர்ம பலம் விசேஷ போகார்த்தமாக வன்றிக்கே-வித்யைதையாலே ஸ்தாபிதமாய் கதி மாத்ரார்த்தம் அனுவ்ருத்தமான
ஸூஷ்ம சரீரத்தை ஆறு கடக்கைக்கு பற்றின தெப்பம் போக விடுமா போலே போக விடுவித்து –
விரஜைக்கு அக் கரைப் படுத்தி -அப்ராக்ருத சரீரத்தைக் கொடுத்து –
ஜரமதீயம் என்கிற சரசின் அளவும் சேர்த்து -சோமசவனம் என்கிற அஸ்வத்தைக் கிட்டுவித்து
மாலா அஞ்ஜன சூர்ண வாஸ–பண ஹஸ்தைகளான ஐந்நூறு திவ்ய அப்சரஸ்ஸூங்களை இட்டு எதிர்கொள்வித்து
ப்ரஹ்ம அலங்காரத்தாலே அலங்கரிப்பித்து
ரஹ்ம கந்த ரச தேஜஸ் ஸூக்களை பிரவேசிப்பித்து –
குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளக்
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகுவித்து
இந்திர பிரஜாபதிகள் என்று பேருடையை த்வார கோபரைக் கிட்டுவித்து வைகுந்தம் புகுதலும் -என்று
தொடங்கி மேல் மூன்று பாட்டிலும் சொல்லுகிறபடியே
அப்ராக்ருதங்களான ராஜ உபசாரங்களைப் பண்ணுவித்து ஆனந்த மயமான மண்டப ரத்னத்திலே அழகு ஓலக்கத்திலே புகவிட்டு –

அநயாஹம் வசீபூத காலமே தன்ன புத்வவான்
உச்ச மத்யம நீசாந்தாம் தாமஹம் கதமா வஸே
அபேத்யாஹ மிமாம் ஹித்வா சம்ஸ்ரயிஷ்யே நிராமயம்
அநேன சாம்யம் யாஸ்யாமி நாநயாஹாம சேதஸா
ஷமம் மம சகா நேந ஹி ஏகத்வம் நாநயா சஹ –என்றும் –

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷூ கேசவம்
மேகச்யாமம் விசாலாஷம் கதா த்ரஷ்யாமி சஷூஷா
மேகச்யாமம் மஹா பாஹூம் ஸ்திர சத்த்வம் த்ருடவ்ரதம்
கதா த்ரஷ்யாமஹே ராமம் ஜகத சோக நாசனம்
திருஷ்ட ஏவ ஹி ந சோகமப நேஷ்யதி ராகவ
தம சர்வச்ய லோகஸ்ய சமுத் யன்நிவ பாஸ்கர —

இத்யாதிகளின் கட்டளையிலே இவன் மனோரதித்தபடியே இழந்த இழவு எல்லாம் தீர நிரதிசய போக்கினான தன்னைக் காட்டித்
தன்மை பெருத்தித் தன் தாளிணைக் கீழ் -கொண்டு தன்னோடு
சமான போகத்வ லஷணமான சாயுஜ்யத்தாலே இவனுக்கு
சஜாதீயரான -அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருத்தி -இப்படி சமஸ்த பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாகவும்
தேச கால அவஸ்தா சங்கோசம் இல்லாத படியாகவும் தன் மனோ ரதத்துக்கு அனுரூபமாக
இவன் மனோ ரதித்த கைங்கர்யங்களை எல்லாம் யாவதாத்மா பாவியாகக் கொண்டு அருளி –
ஸ்வயச இவ யே நித்ய நிர்தோஷ கந்தா என்கிறபடியே
தனக்கு அன்யோன்யம் ஒரே வயசில் தோழன்மாரைப் போலே இருக்கிற நித்ய ஸூரிகளோடே
இன்று வந்த இவனோடு வாசியற புறையறப் பரிமாறி ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்திலும் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் அருளிச் செய்த
மனோ ரதத்தின் படியே ஐகாந்திக ஆதியந்திக நித்ய கிங்கரனான இவனுக்கு அப்பாலே தான் நிரதிசய ஆனந்தனாய் இருக்கும் –

ஸ்வவாதி பத ப்ராப்தி பூர்வக மோஷ சாதனமான மது வித்யாதிகளிலும் –
சத்த்வம் வஹதி சுத்தாத்மா தேவம் நாராயணம் ஹரிம்
ப்ரபுர் வஹதி சுத்தாத்மா பரமாத்மா ந மாத்மநா –
யேது தக்தேந்தநா லோகே புண்ய பாப விவர்ஜிதா
தேஷாம் வை ஷேம மத்வாநம் கச்சதாம் த்விஜ சத்தம
சர்வ லோகே தமோ ஹந்தா ஆதித்யோ த்வார முச்யதே
ஜ்வாலா மாலீ மஹா தேஜா யே நேதம் தார்யதே ஜகத்
ஆதித்ய தக்தா சர்வாங்கா அத்ருச்யா கேநசித் க்வசித்
பரமாண் வாத்ம பூதாச்ச தம் தேவம் ப்ரவிசந்த்யுத
தஸ்மாதபி விநிர்முக்தா அநிருத்த தநௌ ஸ்திதா
மநோ பூதாஸ் ததோ பூய பிரத்யும்னம் ப்ரவிசந்த்யுத
பிரத்யும் நாச்ச விநிர்முக்தா ஜீவம் சங்கர்ஷணம் ததா
விசந்தி விப்ரப்ரவாரா சாங்க்ய்யோகச்ச தை சஹ
ததஸ் த்ரைகுண்ய ஹீ நாஸ்தே பரமாத்மா நமஞ்ஜஸா
ப்ரவிசந்தி த்விஜஸ்ரேஷ்டா ஷேத்ரஜ்ஞம் நிர் குணாத்மகம்
சர்வா வாஸம் வா ஸூ தேவம் ஷேத்ரஜ்ஞம் வித்தி தந்வத
சமாஹித மனஸ் காஸ்து நியதா சம்யதேந்த்ரியா
ஏகாந்த பாவோ பகதா வா ஸூ தேவம் விசந்தி தே–இத்யாதிகளான மகாபாரதாதி வசனங்களிலும்

ஸ்வேத த்வீபமத ப்ராப்ய விஸ்வ ரூப தரம் ஹரிம்
தத அநிருத்த மாசாத்ய ஸ்ரீ மத் ஷீரோத தௌ ஹரிம்
தத பிரத்யும்ன மாசாத்ய தேவம் சர்வேச்வரச்வரம்
தத சங்கர்ஷணம் திவ்யம் பகவந்தம் ச நாதனம்
அயமப்யபரோ மார்க்க சதா ப்ரஹ்ம ஸூ கைஷிணாம்
பரமைகாந்தி சித்தா நாம் பஞ்ச கால ரதாத்மா நாம் –என்று இப்புடைகளிலே ஜயத் சம்ஹிதாதிகளிலும்

விபவார்ச்ச நாத் வ்யூஹம் ப்ராப்ய வ்யூஹார்ச்ச நாத்
பரம் ப்ரஹ்ம வா ஸூ தேவாக்யம் ஸூ ஷ்மம் ப்ராப்யத இத வதந்தி -என்று ஸ்ரீ பாஞ்ச ராத்ராதிகரணத்திலும்

சில அதிகார விசேஷங்களைப் பற்ற சொல்லுகிற க்ரம முக்தி பஷத்திலும் சத்ய லோகாதிகளில் இருந்து
முக்தராமவர்களுக்கும் உள்ள கதி விசேஷாதிகள் இருக்கும் கட்டளைகள்
அவ்வோ அதிகாரிகளுக்கே ஜ்ஞாதவ்யங்கள் ஆகையாலே இங்கு அவை வகுத்துச் சொல்லுகை அபேஷிதம் அன்று –

இக் கத்ய அனுசந்தானாதிகள் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனான இவனுக்கு உபாய அங்கமாக
நாள் தோறும் கர்த்தவ்யங்கள் அல்லவாகிலும்
இவ் உபாயத்தில் இழியும் போது அதிகாரித்வ சித்திக்காக பலார்த்தித்வம் அபேஷிதம் ஆகையாலே
பல பர்வ விசேஷ அனுசந்தானமாகப் புகக் கடவன –

பின்பு வரப் போகிற கண்ணாலத்துக்கு நாள் எண்ணி இருக்குமா போலே பூர்வ பிரார்த்தித புருஷார்த்த ஸ்மரண மாத்ரமாய்
இப் புருஷார்த்தம் பெறப் போகிறோம் என்கிற ப்ரீதி அதிசயத்தை விளைவித்துக் கொண்டு ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கும் –
ஆகையால் இங்கு சமுதாய ஞான மாத்ரத்தாலும் இவனுக்கு அபேஷித சித்தி உண்டு –
சமீபம் ராஜ சிம்ஹச்ய ராமஸ்ய விதிதாத்மான
சங்கல்பஹய சம்யுக்தைர் யாந்தீமிவ மநோ ரதை–என்னும்படி பிராட்டி இருந்த இருப்பு
இவனுடைய கத்யனுசந்தானத்துக்கு நிதர்சனம் –

நடைபெற வங்கிப் பகல் ஒளி நாள் உத்தராயணம் ஆண்டு
இடைவரு காற்று இரவி இரவின் பதி மின் வருணன்
குடையுடை வானவர் கோன் பிரசாபதி என்று இவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழில் பதம் ஏறுவரே–

பித்ருபத கடீ யந்த்ர ஆரோஹ அவரோஹ பரின்பமை
நிரயபதவீ யாதாயாத க்ரமைச்ச நிரந்தரை
அதிகத பரிச்ராந்தீன் ஆஜ்ஞா தரை அதிவாஹ்ய ந
ஸூ கயதி நிஜச் சாயா தாயீ ஸ்வயம் ஹரி சந்தன —

——————————————————————————-

அதிகாரம் -22–பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –

விதமசி பதே லஷ்மீ காந்தம் விசித்ர விபூதிகம்
சசிவ கமித சம்பத்ய ஆவிர்பவத் சஹஜ ஆக்ருதி
ஸ்புட தத் அப்ருதக் சித்தி சித்யத் குணாஷ்டக தத்பலோ
பஜதி பரமம் சாம்யம் போகே நிவ்ருத்தி கதா உஜ்ஞிதம்–

இக் கதி விசேஷத்தால் சென்றவனுடைய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் இருக்கும் படி எங்கனே என்னில்
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள்-இத்யாதிகளில் படியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வேஸ்வரனை அனந்தங்களான விக்ரஹ குண விபூதி சேஷ்டிதங்களில்
ஒன்றும் குறையாமே நிரதிசய போக்யமாக விஷயீ கரித்துக் கொண்டு இருக்கும் –
இவ் வனுபவம் ஈஸ்வரனுக்கும் இவனுக்கும் அத்யந்த துல்யம் ஆகையாலே பரம சாம்யம் சொல்லுகிறது –

உணர் முழு நலம் -என்றும்
நிரஸ்தாதிசயாஹ்ணாத ஸூக பாவைக லஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரே காந்த ஆத்யந்தகீ மதா-என்றும்
சொல்லுகிறபடியே பகவத் ஸ்வரூபம் போக்யமாகப் பிராப்தம் –
மற்று உள்ளவை போக்யமாம் படி எங்கனே என்னில் -ராஜ மஹிஷிக்கு ராஜா போக்யனானால்
அவனுக்கு அபிமதங்களாய்-அவனுடைய போகத்துக்கு உறுப்பான போக உபகரண போக ஸ்தா நாதிகளும்
இவளுக்கு அனுகூலமாமாப் போலே
இங்கும் பகவத் ஸ்வரூப அனுபந்திகள் ஆனவை எல்லாம் போக்யமாகக் குறை இல்லை –

இப்படி சர்வ பிரகார விசிஷ்டனாய்க் கொண்டு சர்வேஸ்வரன் போக்யன் என்னும் இடம் சுருதி ஸ்ம்ருதி யாதிகளிலே பிரசித்தம் –
இவ்வர்த்தத்தை பூமாதி கரணத்திலே சாதித்து அருளினார் –
இவற்றில் நிரதிசய அனுகூல்யத்தாலே பரம ப்ராப்யம் ஆகையாலே பகவத் ஸ்வரூபத்தை பரம பதம் என்கிறது –
இப் பகவத் ஸ்வரூபத்தின் உடைய பரிபூர்ண அனுபவம் பெறுவது போக்ய தமமாய் -சர்வோத்தரமாய் இருப்பதொரு
ஸ்தான விசேஷத்திலே சென்றால் ஆகையாலே அந்த ஸ்தான விசேஷத்தையும் பரம பதம் என்கிறது –
இவ் வனுபவத்துக்கு ஆஸ்ரயமாய்க் கொண்டு அனுபாவ்யம் ஆகையாலே –
பகவத் விபூதி பூதமாய் ஞானானந்த லஷணமான தன் ஸ்வரூபத்தையும் பரமபதம் என்கிறது –
இவை மூன்றுக்கும் மற்றுள்ள வற்றுக்கும் ப்ராப்யத்வ மாத்ரம் அவிசிஷ்டம் –

இப்படி பகவத் ஸ்வரூப குண விக்ரஹாதிகளும்–சுத்த சத்வ ஆஸ்ரயமான நித்ய விபூதியும் -ஸ்வ ஸ்வரூபமும் போக்யமானால்
பிரதிகூலமாக பிரத்யஷாதி பிரமாண சித்தமாய் முமுஷூவுக்கு தியாஜ்யமாய் சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
லீலா விபூதியில் பதார்த்தங்கள் முக்தனுக்கு போக்யமாகக் கூடுமோ என்னில் –
அதிலும் குறை இல்லை –

பித்தோபஹதனுக்கு பிரதிகூலமான பால் பித்தம் சமித்தால் அனுகூலமாமாப் போலேயும்
சார்வ பௌமனான பிதாவினுடைய சிறைக் கூடம் சிறை கிடக்கிற ராஜ குமாரனுக்கு அப்போது பிரதிகூலமாய்
ராஜா சிறைக் கூடத்தின் நின்றும் புறப்பட விட்டு உகந்து துல்ய போகனான வைத்த அளவிலே
சிறைக் கூடமான கோப்பு குலையாது இருக்கச் செய்தே பிதாவினுடைய விபூதி என்று அனுகூலமாம் போலேயும்
யஸ் த்வயா சஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா வி நா -என்றும்
ந ஹி மே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் ந ச பூஷணை வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மஹா ரதம் -என்றும்
ஏறாளும் இறையோனும் -என்றதில் சொல்லுகிறபடியே
சம்ச்லேஷம் இன்றிக்கே தான் நின்ற போது கர்ம அனுரூபமாக தனக்கு பிரதிகூல்யமாயும் அல்ப அனுகூலமாயும் தோன்றின
லீலா விபூதியில் பதார்த்தங்கள்
முக்தனாய் நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிறவனுக்கு
நிரதிசய போகய வர்க்கத்திலே சொருகுகை உப பன்னம் –
இப்படி பத்தருக்கு பிரதி கூல்யமாயும் அல்ப அனுகூலமாயும்
கர்ம பந்தம் இல்லாதார்க்கு
அனுகூல ஸ்வ பாவமுமாய் இருக்கை அப்பதார்த்தங்களுக்கு பகவத் இச்சா சித்தம் –

இப்படி ஸ்வ இச்சா சித்தமான ஆநு கூல்யத்தை உடைத்தான தன் பிரகாரங்கள் எல்லாவற்றோடும் கூடின ஸ்ரீ மானான நாராயணன்
ப்ராப்யன் என்னும் இடம் திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் சதுர்த்யந்த பதங்களிலே அபிப்ரேதம் –
முன்பு சொன்ன கைங்கர்யம் இப்படி பரிபூர்ண அனுபவித்திலே பிறந்த ப்ரீதி விசேஷத்துக்கு பரீவாஹம்
என்னும் இடத்தை கத்யத்திலே பலகாலும் அருளிச் செய்தார் –
முக்த தசையிலே சுருதி சித்தமான ஐஷணாதிகளும் ஜ்ஞாத்யாதி சம்பாதநங்களும் எல்லாம்
புண்ய பாப ரூப கர்ம நிரபேஷ பகவத் இச்சா அனுகுண ஸ்வ இச்சா மூலங்கள்
ஆகையாலே -கர்ம பலம் அன்றிக்கே அனுபவ பரீவாஹமான கேவல கைங்கர்யத்திலே அந்தர் பூதங்கள்-
ஆகையால் பிராப்தியாயற்றது – யதாபிமத கைங்கர்ய பர்யந்த பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் என்றது ஆயிற்று –

இவ் வனுபவம் உண்டானால் பின்பு ஒரு காலத்திலும் அழியாது என்னும் இடம் –
ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி-என்றும்
மாமுபேத்ய புனர்ஜன்ம துக்காலயம சாஸ்வதம்
நாப் நுவந்தி மஹாத்மான சம்சித்தி பரமாம் கத
ஆ ப்ரஹ்ம புனநால்லோகா புநாரா வர்த்தின அர்ஜுன
மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே -என்றும்

யதா ச கேவலீ பூத ஷட்விம்சமநுபச்யதி
ததா ச சர்வ சித்தத்வாத் புனர் ஜன்ம ந விந்ததி -என்றும்
கத்வா கத்வா நிவர்த்தந்தே சந்திர ஸூர்யாதயோ க்ரஹா
அத்யாபி ந நிவர்த்தந்தே த்வாதச அஷர சிந்தகா -என்றும்
வாயினால் நமோ நாராயணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
இத்யாதிகளிலே பிரசித்தம் –
பகவத் கைங்கர்ய அந்தர்கதமான ஸ்வச்சந்த விகாரத்தாலே லீலா விபூதியிலே புகுந்தாலும்
இவ் வனுபவத்துக்கு சங்கோ சாதிகள் பிறவாமையாலே -புனராவ்ருத்தி இல்லை என்கிறது –

இப்படி உத்தர அவதி இல்லாத இவ் வனுபவம் பெறுவார்க்கு
அந்திம சரீரம் தேவ மனுஷ்யாதிகளில் இன்னது என்று தெரியாது -ப்ரஹ்மாதிகளுக்கும் மோஷம் உண்டு
அப்படியே -தர்ம வ்யாதாதய அப்யந்தே பூர்வே அப்யாஸாத் ஜூகுப்சிதே
வர்ணாவரத்வே சம்ப்ராப்தா சம்சித்திம் ஸ்ரமணீ யதா -என்று மகரிஷிகள் சொன்னார்கள் –
ஆகையால் முமுஷூ தசையில் ஔபாதிகங்களான உத்கர்ஷ அபகர்ஷங்களைக் கொண்டு முக்த தசையிலும் அனுபவ தாரதம்யம் உண்டு
என்ற ஆனந்த தீர்த்தீயயர் -முக்தருக்கு எல்லாம் சர்வேஸ்வரன் உடன் பரம சாம்யம் சொல்லுகிற ஸ்ருத்யாதிகளை மறந்தார்கள்

ஆசார கைவல்யம் உடைய முமுஷூக்களுக்கு ஆனந்தஹாசம் உண்டு என்று சிலர் சொல்லும் வசனம் ஆப்தமானாலும்
முக்தர் ஆவதற்கு முன்னே வரும் பகவத் அனுபவத்தில் சங்கோசத்தைச் சொல்லிற்றாம் இத்தனை –
பிற்பட முக்தரானாருக்கும் நாள் இழவே போக்கி பொருள் இழவு இல்லை-
ஸ்ரீ விஷ்ணு லோகாதிகளிலே சாலோக்ய சாரூப்யாதி மாத்ரம் பெற்றார்க்கு முக்த வ்யபதேசம் அதூர விப்ர கர்ஷத்தாலேயாம் இத்தனை-
இவ்வர்த்தம் –லோகேஷூ விஷ்ணோர் நிவ சாந்தி கேசித் சமீபம் ருச்சந்தி ச கேசி தன்யே
அன்யே து ரூபம் சத்ருசம் பஜந்தே சாயுஜ்ய மன்யே ச து மோஷ உக்த-என்று நியமிக்கையாலே சித்தம்
இது பரம பதத்திலே சென்றால் வரும் சாயுஜ்யமே மோஷம் என்கிறது –

அதுக்குள்ளே சஹஸ்ரத்தில் சதாதிகளைப் போலே சாலோக்யாதிகள் எல்லாம் அந்தர்பூதங்கள் ஆகையாலே
அங்கு ஒருவருக்கும் வைஷம்யம் இல்லை –
மோஷம் சாலோக்ய சாரூப்யம் ப்ரார்யயே ந கதாசன
இச்சாம்யஹம் மஹா பாஹோ சாயுஜ்யம் தவ ஸூ வ்ரத–என்கிற இடத்திலும் இவ்வர்த்தம் கண்டு கொள்வது –

சாயுஜ்யம் ஆவது சயுக்கினுடைய பாவம் -சயுக்கானவன் ஒரு போக்யத்திலே போக்தாவாய்க் கொண்டு கூட அன்வயிக்குமவன் –
இங்கு சப்ரகாரம் ப்ரஹ்மம் ஆகிற போக்யத்திலே ப்ரஹ்மமும் முக்தனும் கூட போக்தாக்களாய்
அன்வயிக்கையாலே முகத்தனை சயுக் என்கிறது –
இப்படியாகில் ஸ்ருதியில் சாயுஜ்ய சப்தமும் சார்ஷ்டிதா சப்தமும் சேரப் பிரயோகிப்பான் ஏன் என்னில்
சாயுஜ்யம் சமுபயோரத்ர போக்தவ்யஸ்யா விசிஷ்டதா
சார்ஷ்டிதா தத்ர போக்யச்ய தாரதம்ய விஹீ நதா-
முக்தனுக்கு ஜகத் வியாபாரம் இல்லையே யாகிலும் கிருஷி பண்ணின பிதாவும் நிவ்யாபாரரான புத்ராதிகளும்
கிருஷி பலத்தை பஜிக்குமா போலே
ஜகத் வ்யாபாரத்தாலே வரும் ரசம் வ்யாபரிக்கிற ஈஸ்வரனுக்கும் பார்த்து இருக்கிற முக்தனுக்கும் துல்யம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரகாரரும் ஜகத் வியாபார வர்ஜம் –4-4-17-என்று தொடங்கி–
போக மாத்ர சாம்ய லிங்காச்ச -4-4-21-என்று அருளிச் செய்தார்
சாம ரஸ்யம் ஹி சாயுஜ்யம் வதந்தி ப்ரஹ்ம வதின -என்று சாகடாயநனும் அருளிச் செய்தான் –
சப்த சக்தி அன்றிக்கே இருக்க -பேத ஸ்ருதிகளும் விரோதிக்க சாயுஜ்யம் சப்தத்துக்கு ஐக்யம் பொருளாக நினைத்து இருப்பார்க்கு
முக்தன் பரம சாம்யத்தை அடையும் என்றும்
தாத்ருக்காம் என்றும் சொல்லுகிற ஸ்ருதிகளும் விரோதிக்கும் –
மம சாதர்ம்யமாகதா-என்று ஸ்ரீ கீதாச்சார்யனும் அருளிச் செய்தான் —

இவ்வர்த்தத்தை –
பரேண பரதர்மீ ச பவத்யேஷ சமேத்யவை
விசுத்த தர்மா சுத்தேன புத்தேன ச ச புத்திமான்
விமுக்த தர்மா முக்தேன சாமேத்ய பரதர்ஷப
வியோக தர்மணாசைவ வியோகாத்மா பவத்யபி
விமோஷிணா விமோஷீ ச மேத்யேஹ ததா பவேத்
சுசி கர்மணா சுசிஷ்ஷை பவத்யமித தீப்திமான்
விமலாத்மா ச பவதி சமேத்ய விமலாத்மநா
கேவலாத்மா ததா சைவ கேவலேன சமேத்ய வை
சர்வ தந்த்ரச்ச ஸ்வ தந்த்ரத்வம் உபாஸ் நுதே
ஏதாவ தேதத் கதிதம் மயா தே தத்யம் மகாராஜ யதார்த்த தத்தவம்
அமத் சரஸ்தவம்பிரதிக்ருஹ்ய சார்த்தம் ச நாதனம் ப்ரஹ்ம விசுத்தமாத்யம் -என்று
வசிஷ்ட கரால சம்வாதத்திலே பரக்க பேசி இதுவே பரமார்த்தம் என்று மகரிஷி நிகமித்தான் –

இங்கு முகத்தனை ஸ்வ தந்த்ரன் என்கிறது கர்ம வச்யன் அல்லன் -என்றபடி –
முக்த விஷயமான ஸ்வராட் சப்தத்தை அகர்மவச்ய -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் வியாக்யானம் பண்ணி அருளினார் –
இப்படி சுருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களிலே சாம்யம் கண்டோக்தம் ஆகையாலே முக்த தசையில் ஐக்யம் தோன்றின இடங்களில் எல்லாம்
ராம ஸூக்ரீவரோர் ஐக்யம் தேவ்யேயம் ராமஜாயாத -இத்யாதிகளில் படியே பேத ஸ்ருத்ய விரோதேன கண்டு கொள்வது –
யதாது மந்யதே அந்ய அஹம் அந்ய ஏஷ இதி த்விஜ
ததா ச கேவலீ பூத ஷட்விம்ச புனபச்யதி
அந்ய ச்ச ராஜன் ச பரஸ்ததா அந்ய பஞ்ச விம்சக
தத்ச்தத்வாத நு பச்யந்தி ஹி ஏக ஏவதி சாதவ
அந்ய ச்ச ராஜன் ச பரஸ்ததா அந்ய பஞ்ச விம்சக
தேநை தன்னாபிஜாநந்தி பஞ்ச விம்சகம் அச்யுதம்
ஜன்ம ம்ருத்யு பயாப்தீதா சாங்க்ய யோகாச்ச காஸ்யப
ஷட்விம்சம் அனுபச்யந்தி சுசயஸ் தத் பராயணா உத்தம புருஷஸ் த்வந்ய –என்றும்

தத்ர ய பரமாத்மா து ச நித்யோ நிர்குண
ச து நாராயணோ ஜ்ஞேய சர்வாத்மா புருஷோ ஹி ச
ந லிப்யதே கர்மபலை பத்மபத்ர மிவாம் பஸா
கர்மாத்மா த்வ வரோ ய அசௌ மோஷ பந்தை சாயுஜ்யதே
அய பிண்டே யதா வஹ்நிர் பின்னஸ்தி ஷ்டத்ய பின்னவத்
ததா விச்வமிதம் தேவோ ஹி ஆவ்ருத்ய பிரதிஷ்டதி –இத்யாதி பிரமாண சஹச்ரம் விரோதிக்கும் –

ஆகையால் முக்தனுக்கு ஜ்ஞான போக்யாதிகளால் வந்த பரம சாம்யமே உள்ளது —
ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லஷணமாக சொன்ன –
ஜகத் காரணத்வ -மோஷ ப்ரதத்வ –சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ -சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ –
சர்வ சப்த வாச்யத்வ -சர்வ வேத வேத்யத்வ -சர்வ லோக சரண்யத்வ-சர்வ முமுசூபாச்யத்வ-சர்வ பலப்ரதத்வ –
சர்வ வ்யாப்த ஜ்ஞானானந்த ஸ்வரூபத்வ-லஷ்மி சஹாயத்–வாதிகள் பிரதி நியதங்கள்-
முக்தனுக்கு ஆதேயத்வ -விதேயத்வ -சேஷத்வ –அணுத்வாதிகள் வ்யவச்திதங்கள்-

இப்படியாகில் -ந சம்பாதம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தநே
சமர்த்தோ வித்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் – என்கிற நிலையாய்
ஸ்வ தந்த்ரர் அல்லாத முக்தர்க்கு ஏதேனும் ஒரு ஹேதுவாலே ஆவ்ருத்தி சங்கை வாராதோ என்னில் -அது வாராது –
சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே தீவ்ர பக்தாஸ் தபஸ்வின
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிரூபத்ரவா –என்று தானே அருளிச் செய்தான் இறே-
முமுஷூ தசையில் கேவல அசித்தையும் கேவல சித்தையும் அனுபவிக்கை யாகிற
ஐஸ்வர்ய கைவல்யங்களில் வைராக்கியம் பிறந்த இது முக்தனுக்கு
ப்ரஹ்மாத்மகமாக சர்வத்தையும் காண்கையாலே கேவல அனுபவ பிரசங்கம் இல்லாமையாலும் –
அந்த புருஷார்த்தங்களினுடைய தோஷம் எல்லாம் மேல் நித்ய பிரத்யஷிதம் ஆகையாலும் ப்ரதிஷ்டிதம் ஆயிற்று –
ஆகையால் தன்னிச்சை அடியாக ஆவ்ருத்தி சங்கை இல்லை –

சித் அசித் ஈஸ்வர தத்வத்ரய விஷயமாகவும் ஹேய உபாதேய விஷயமாகவும் முன்பு பிறந்த ஜ்ஞானம் இப்போது
விச்சேந்த சங்கோ சங்கள் இல்லாத படி விகசிதம் ஆயிற்று –
ஆகையால் தனம் அஜ்ஞானம் அடியாக ஆவ்ருத்தி சங்கிக்க ஒண்ணாது –
பகவத் விஷய வைலஷ்ண்ய ஞானத்தாலே முன்பு பிறந்த பக்தி சப்த வாச்யமான ப்ரீதி ரூபா பன்ன ஜ்ஞானம் இப்போது
சாஸ்த்ரங்களுக்கு நிலம் அல்லாத பகவத் வைலஷ்ண்யம் எல்லாம் ப்ரத்யஷம் ஆனபடியாலே
நிரதிசய ப்ரீதி ரூபா பன்னமாய்த் தலைக் கட்டிற்று –
இப்படி இருக்கையாலே ச ச மம ப்ரிய-என்ற ஈஸ்வரனுடைய ப்ரீதி அதிசயம் அவன் தன்னாலும் நியமிக்க ஒண்ணாத படி
கரை புரண்டு இவனோடு பரம்பரையா சம்பந்தம் உடைய திடர் நிலங்களிலும் ஏறிப் பாயும் படி யாயிற்று –
ஆகையால் கர்மம் இல்லை யாகிலும் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனுடைய இச்சையாலே
புனராவ்ருத்தி உண்டாகிறதோ என்று சங்கிக்க ஒண்ணாது –

சாஸ்திர வஸ்ய அதிகாரம் களிகையாலே முக்த தசையிலே ஆஜ்ஞாதி லங்கனம் இல்லை –
அவன் உகப்பே தனக்கு உகப்பாகையாலே ஈஸ்வர அபிமததுக்கு விபரீதமான அனுஷ்டானமும் இல்லை –
ஆகையாலே கைங்கர்ய பர்யந்த பரிபூரண ப்ரஹ்ம அனுபவ ரூபமான மோஷாக்ய புருஷார்த்தம் மேல் யாவதாத்ம பாவியாயிற்று –
இவை எல்லா வற்றையும் நினைத்து
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் –4-4-22-அருளிச் செய்து அருளினார் –

ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —

அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —

——————————————————————————

சந்த்ருஷ்ட சாரவாக்வித் ஸ்வ பர நிசித நீ சங்கஜித் நைக சமஸ்த
ஸ்பஷ்ட உபாய அதிகிந்ன சபரிகர பரந்யாச நிஷ்பன்ன க்ருத்ய
ஸ்வ அவஸ்தா அர்ஹம் சபர்யாவிதம் இஹ நியதம் வ்யாகசம் க்வாபி பிப்ரத்
நிர்முக்த ஸ்தூல ஸூ ஷ்ம பிரகிருதி அநுபவதி அச்யுதம் நித்யம் ஏக —

சந்த்ருஷ்ட -முதல் அதிகாரம் -ஒரு அதிகாரியானவன் எம்பெருமானால் கடாஷிக்கப்பட்டு
சாரவாக்வித்-இரண்டாம் அதிகாரம் -சாரமான ரகஸ்ய த்ரயத்தார்த்தத்தை அறிந்தவனாக
ஸ்வ பர நிசித நீ சங்கஜித் நைக சமஸ்த -3/4/5/6 /7அதிகாரங்கள் -தத்வத்ரய ஞானம் தெளிந்து உலகியல் இன்ப பற்றுதல்களை வென்றவனாக
ஸ்பஷ்ட உபாய அதிகிந்ன சபரிகர பரந்யாச நிஷ்பன்ன க்ருத்ய-9/10/11/12/13 -அத்யாயங்கள் —
பக்தி பிரபத்தி இவற்றைக் கைக் கொண்டு -உபாயங்கள் பற்றிய தெளிந்த ஞானம் கொண்டு –
மற்ற உபாயங்களைக் கைக் கொள்ள வலிமை அற்று வருந்தி அங்கங்களுடன் கூடிய பரந்யாசத்தால் தன் கார்யம் நிறைவேற்றப் பட்டவனாக
ஸ்வ அவஸ்தா அர்ஹம் -14-அத்யாயம் -தன் நிஷ்டைக்கு ஏற்றதான கைங்கர்ய விதி முறைகளை –
சபர்யாவிதம் இஹ நியதம் வ்யாகசம் க்வாபி பிப்ரத் -15/16/17/18–இந்த சம்சார நிலையில் உள்ள போது
சாஸ்த்ரங்களில் விதிக்கப் பட்ட படியும் -அபராதம் ஏதும் இல்லாமலும் -ஒரு திவ்ய தேசத்தில் இயற்றுபவனாக
நிர்முக்த ஸ்தூல ஸூ ஷ்ம பிரகிருதி அநுபவதி அச்யுதம் நித்யம் ஏக –19/20/21/22–ஸ்தூலம் மற்றும் ஸூ ஷ்ம சரீரம் விட்டவனாக
எம்பெருமானை எப்போதுமே அனுபவித்த படி உள்ளான் -என்றதாயிற்று –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -19 – ஸ்தான விசேஷ அதிகாரம் /அதிகாரம் -20 நிர்ணய அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 29, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

————————————————————————–

அதிகாரம் -19 – ஸ்தான விசேஷ அதிகாரம்–

யத்ர ஏகா க்ரக்யம் பவதி பகவத் பாத சேவா அர்ச்ச நாதே
யத்ர ஏகாந்த்ய வ்யவஸ்தித தியோ யஸ்ய கஸ்யாபி லாப
வாஸ ஸ்தாநம் ததிஹ க்ருதி நாம் பாதி வைகுண்ட கல்யம்
ப்ராயோ தேசா முனி பிருதிதா ப்ராயிக ஔசித்ய வந்த —

இருந்த நாள் இப்படி ஸ்வயம் பிரயோஜனமாக நிரபராத அனுகூல வ்ருத்தியிலே ருசியும் த்வரையும் யுடையவனாய்
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய தஸ்ய சர்வம் ச ஏவ ஹி –என்னும்படியாய் இருக்கிற பரமை காந்திக்கு
வ்ருத்திக்கு அனுகுணமாக வாஸஸ்தான விசேஷம் ஏது என்னில்
ஆர்யாவர்த்தாதி புண்ய தேசங்கள்
யுக ஸ்வ பாவத்தாலே இப்போது வ்யாகூலங்கள் ஆன படியாலே சாதுர் வர்ண்ய தர்மம் பிரதிஷ்டிதமான இடத்திலே
வசிப்பான் என்கிற இதுவே இப்போதைக்கு உபாதேயம்

அவ்விடங்கள் தம்மிலும் –
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் இருந்த ஊரில் இருக்கும்
மாநிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ-என்கிறபடியே பாகவதோத்தரமான தேசம் முமுஷூவுக்கு ப்ரிக்ராஹ்யம்
கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சந்த்ரஷ்டார மீச்வரம்
நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பக்தா ஜநா –என்னச் செய்தே
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா–க்வசித் க்வசித் மகா பாகா த்ரமிடேஷூ ச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயச்விநீ காவேரி ச மகா பாகா ப்ரதீசீ ச மகா நதீ யே பிபந்தி ஜாலம் தாசாம்
மனுஜா மனுஜேச்வர ப்ராயோ பக்தா பகவதி வா ஸூ தேவ அமலாசயா -இத்யாதிகளிலே
கலியுகத்திலே பாகவதர்கள் வசிக்கும் தேச விசேஷம் சொல்லுகையாலே
இந்த யுகத்தில் இப் பிரதேசங்களில் பாகவத பரிக்ருஹீதமான ஸ்தலங்களே பரிக்ராஹ்யங்கள் –

திரு நாராயணீயத்தில்
ஏகபாத ஸ்திதே தரமே யத்ர க்வசன காமினி கதம் வஸ்தவ்யம் அஸ்மாபி பகவம்ஸ் தத்வ தஸ்வ ந-என்று –
தேவர்களும் ருஷிகளும் விண்ணப்பம் செய்ய
குரவோ யத்ர பூஜ்யந்தே சாதுவ்ருத்தா சாமந்திதா -வஸ்தவ்யம் தத்ர யுஷ்மாபி –
யத்ர தர்மோ ந ஹீயதே யத்ர தேவாச்ச யஜ்ஞாச்ச தப சத்யம் தமஸ் ததா ஹிம்சா ச தர்ம சம்யுக்தா பிரசரேயு
ஸூ ரோத்தமா ச வை தேசோ ஹி வ சேவ்யோ மா வ அதர்ம பதா ஸ்ப்ருசேத்-என்று பகவான் அருளிச் செய்தான்

அவ்விடங்கள் தம்மில் உகந்து அருளின திவ்ய தேசங்களிலே
தனக்கு கைங்கர்யத்துக்கு சௌகர்யம் உள்ள இடத்திலே நிரந்த வாசம் பண்ண உசிதம் –
இத்தை -யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூ கமாஸ்வ -என்று
சத்த்வோத்தரங்களான பகவத் ஷேத்ரங்களுக்கு பிரதர்சநார்த்தமாக அருளிச் செய்தார் –
பகவத் ஷேத்ரங்களே விவேகிக்கு வாசஸ்தானம் என்னும் இடத்தை
யத்ர நாராயணோ தேவ பரமாத்மா சநாதன–தத்ர புண்யம் தத்பரம் ப்ரஹ்மா தத்தீர்த்தம் தத்போவனம் —
தத்ர தேவர்ஷய சித்தா சர்வே சைவ தபோதனா -என்று -ஆரண்ய பர்வத்தில் தீர்த்த யாத்ரையிலும்
கோமந்த பர்வதோ ராஜன் ஸூ மஹான் சர்வதாதுமான் -வசதே பகவான் யத்ர ஸ்ரீமான் கமல லோசன -மோஷிபி
சம்ஸ்துதோ நித்யம் ப்ரபுர் நாராயணோ ஹரி – என்று ப்ரேதேசாந்தரத்திலும் மஹர்ஷி அருளிச் செய்தான் –
ஸ்ரீ வால்மீகி பகவானாலும் -ஸூ பகச் சித்திரகூடோ அசௌ கிரிராஜோ பமோகிரி-யஸ்மின் வசதி காகுத்ஸ்த குபேர இவ நந்தன –
என்கிற இடத்திலும் பகவத் அதிஷ்டித ஷேத்ரத்தினுடைய அபிகந்தவ்யதையை -ஸூ பக சப்தத்தாலே ஸூசிக்கப் பட்டது –

ஸ்ரீ சாத்த்வதாதிகளிலும் ஸ்வயம் வ்யக்த சைத்ய வைஷ்ணவங்கள் என்கிற ஷேத்திர விசேஷங்களையும் –
அவற்றின் எல்லைகளில் ஏற்றச் சுருக்கங்களையும் பிரியச் சொல்லி
த்ருஷ்டேந்த்ரிய வசச்சித்தம் ந்ருணாம் யத் கல்மஷைர்வ்ருதம் ததந்த காலே சம்சுத்திம் யாதி நாராயண ஆலயே-என்று
அவ்வோ ஷேத்ரங்களில் எல்லைக்கு உள்ளே வசித்தவனுக்கு தேஹந்யாச காலத்திலேயே வரும் விசேஷமும் சொல்லப் பட்டது –

ஆகையால் யத் கிஞ்சிதபி குர்வாணோ விஷ்ணோர் ஆயதனே வசேத் ந கிஞ்சிதபி
குர்வாணோ விஷ்ணோர் ஆயதனே வசேத் -என்கிறபடியே
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே வல்ல கைங்கர்யத்தைப் பண்ணிக் கொண்டு
பகவத் பாகவத அபிமான விஷயமான சத்த்வோத்தர ஷேத்ரத்திலே வசிக்கை உசிதம் –

நிக்ருஹீதேந்த்ரிய க்ராமோ யத்ர யத்ர வசேன் நர
தத்ர தத்ர குருஷேத்ரம் நைமிசம் புஷ்கரம் ததா -என்று சொல்லுகிற இது
கத்யந்தரம் இல்லாத போது ஏதேனும் ஒரு தேசத்திலே வசித்தாலும் இவன் வாசத்தாலே அத் தேசமும் பிரசஸ்தமாம் என்கைக்காக –
இதுக்கு சாண்டிலீ வ்ருத்தாந்தம் உதாஹரணமாகக் கண்டு கொள்வது-
ஆகையால்
ஞான சம கால முக்த்வா கைவல்யம் யாதி கதசோக
தீர்த்தே ச்வபச க்ருஹே வா நஷ்ட ஸ்ம்ருதி ரபி பரித்யஜன் தேஹம் -என்று
சரீர பாதத்துக்கு ஒரு தேச விசேஷ நியமம் இல்லை என்றதுவும் எப்படிக்கும் பலத்தில் இழவு இல்லை என்கைக்காக –

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்கு துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே —

கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்புக்
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்புத்
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறித்த வெற்புப்
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்புப்
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே –

உத்தம வமர்த் தலமமைத்ததோர் எழில் தனுவின் உய்த்த கணையால்
அத்தி வரக்கன் முடி பத்தும் ஒரு கோத்தென உதிர்த்த திறலோன்
மத்தறு மிகுத்த தயிர் மொய்த்த வெணெய் வைத்ததுணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி யத்திகிரியே —

தேனார் கமலத் திருமகள் நாதன் திகழ்ந்து உறையும்
வானாடுகந்தவர் வையத்திருப்பிடம் வன்தருமக்
கானாரிமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே –

சா காசீதி ந சாகசீதி புவி ச அயோத்யேதி
ச அவந்தீதி ந கல்மஷாதவதி ச காஞ்சீதீ நோதஞ்சதி
தத்தே சா மதுரேதி நோத்தமதுரம் நான்யாபி மான்யா பூரி
யா வைகுண்ட கதா ஸூ தா ரச புஜாம் ரேசேத நி சேதசே —

———————————————————————

அதிகாரம் -20 நிர்ணய அதிகாரம் –

மனஸி கரண க்ராமம் பிராணே புன புருஷே ச தம்
ஜடிதி கடயன் பூதேஷ்வேநம் பரே ச தமாத்மநி
ஸ்வவித் அவிதுஷோ இத்தம் சாதாரணே சரணேர்முகை
நயதி பரதோ நாடீபேதை யதோசிதம் ஈஸ்வர –

இப்படி லோக விக்ராந்த சரனௌ சரணம் தே அவ்ரஜம் விபோ -என்று இவன் கால் பிடிக்க
ஹஸ்தா வலம்ப நோ ஹி ஏகோ பக்தி கரீதோ ஜனார்த்தன -என்கிறபடியே இவனைக் கை பிடித்து
ராஜாதி ராஜ சர்வேஷாம் -என்கிறபடியே உபய விபூதி நாதனான சர்வேஸ்வரன் -தான் உகந்ததொரு நிலத்திலே வைக்க –
அபிஷிக்தையான மகிஷியைப் போலே பஹூ மதனாய் தன் பரமைகாந்தித்வத்துக்கு அனுரூபமான் வ்ருத்தியோடே போகும் இவ்வதிகாரி-

இப்படிப்பட்ட அதிகாரிகளிலே பிராரப்த துஷ்க்ருத விசேஷ வைசித்ரியாலே வரும் அஹங்கார மமகாரங்கள் என்ன –
அவை யடியாக அதடியாக அபசாரங்கள் என்ன -பிரயோஜநாந்தர ருசி என்ன -அதடியாக சம்பாவிதமான தேவதாந்திர ஸ்பர்சம் என்ன
புத்தி தௌர்பல்யம் என்ன -அதடியாக வரும் உபாயாந்தர பிரத்யாசை என்ன –
இவ் வைபரீத்யம் பிறந்தவர்களுக்கும் இவை பிறவாதே

பிராரப்த ஸூக்ருத விசேஷத்தாலும்-பூர்வ பிரபத்தியில் பல சங்கல்ப விசேஷத்தாலும்
சித்ரமில்லாத கைங்கர்யத்தில் பிரதிஷ்டிதராய்ப் போந்தவர்களும்
சம்சாரத்தின் நின்றும் நிர்யணத்துக்கு விலம்ப அவிலம்பங்களிலே நிலை இருக்கும் படி எங்கனே என்னில்
இவ் விடத்தில் இவர்களுக்கு சார்வாதிகளுக்கு போலே நிலை நின்ற அஹங்கார மமகாரங்கள் புகா –
அவஹிதராய் நடப்பார் இடறுமா போலே என்றேனும் ஒரு கால் வரும் அஹங்கார மமகாரங்கள்
விவேகாவதிகளாய் பின்பற்ற தெளிவாலே கழிந்து போம் –
அபராதங்கள் பிறந்தால் ஷாமணாவதியாயும் சிஷாவதியாயும் கோரின காலத்துக்கு உள்ளே
அபராத நிஸ்தாரம் பிறக்கும் படி அபராத பரிஹார அதிகாரத்திலே சொன்னோம் –

மோஷம் பெறுகைக்கு கால விசேஷம் குறியாதே பிரபன்னரானாரைப் பற்ற –
அபாயா விரத சச்வன்மாம் சைவ சரணம் கத -தநூக்ருத் யாச்விலம் பாபம் மாமாப் நோதி நர சனை–என்று சொல்லுகிறது –
முமுஷூவாய் இழிந்தவன் ஆகையாலே பிரயோஜ நாந்தர ருசி நிலை நிற்க உண்டாகாது –
உபய பாவனருக்கு போலே மோஷ ருசியோடு கூட பிரயோஜ நாந்தர ருசியும் கலந்து வந்தால் இவனுக்கு ஹித பரனான ஈஸ்வரன்
யாசிதோ அபி பக்தைர் நாஹிதம் கார யேத்தரி யஸ்ய அனுக்ரஹம் இச்சாமி தனம் தஸ்ய ஹராம்யஹம் -இத்யாதிகளிலும்
குண்டதாரோபாக்ய நாதிகளிலும் சொல்லுகிறபடியே
சில பிரயோஜ நாந்தரங்களை கொடாதே கண் அழித்தும்-
சிலவற்றிலே அல்ப அஸ்திரத்வ துக்க மிஸ்ரத்வாதி விவேகத்தாலே இவன் தனக்கு அருசியை விளைவித்தும் –
சௌபரி குசேலாதிகளுக்கு போலே சில போகங்களைக் கொடுத்து தானே அலமந்து விடப் பண்ணியும் விடுகையாலே
மோஷ காலம் குறித்து பிரபத்தி பண்ணியவனுக்கு அக் காலத்துக்குள்ளே ப்ரயோஜ நாந்தர வைமுக்யம் பிறந்து விடும் –
மற்றையவனுக்கும் -அதோபாயோ பிரசக்தோ அபி புக்த்வா போகாநநா மயான் –
அந்தே விரக்தி மா சாத்ய விசதே வைஷ்ணவம் பதம் -என்கிறபடியே வைராக்ய அவதியே விலம்பமாய் இருக்கும்

தேவதாந்திர ஸ்பர்சம் உண்டாயிற்று ஆகிலும் சர்வேஸ்வரன் ஏதேனும் ஒரு நாளிலே ஸ்ருத்யுக்தமான படியே
பரமை காந்திகளோடே சேர்த்து லஜ்ஜாவதியாகத் திருத்தி இவனுடைய வியபிசாரத்தைத் தீர்க்கும் –
சிலருக்கு தேவதாந்திர ஸ்பர்சம் நிலை நிற்குமாகில் பின்பு உபாய ஸ்பர்சம் இல்லை –
மேல் நரகாதிகளும் உண்டு என்று அறியலாம் –
இவனுக்கு பகவத் விஷயத்தில் க்ருதாம்சம் என்றேனும் ஒரு நாள் உபாய நிஷ்பத்தியைப் பண்ணி கார்யகரமாம் –
மஹா விஸ்வாசம் பூரணமாக பிறந்து பிரபத்தி பண்ணினார்க்கு புத்தி தௌர்பல்யமும்-உபாயாந்தர பிரத்யாசையும் பிறவா –
இவை பிறந்தவர்களுக்கு முன்பு பிறந்த விஸ்வாசம் மந்தமாய் இருக்கும் –
இவர்களையும் சர்வேஸ்வரன் மஹா விஸ்வாச அவதியாகத் திருத்தி பூர்ண பிரபத்தி நிஷ்டர் ஆக்கும் –
இவ்வைபரீத்யங்களுள் ஒன்றும் பிறவாதே நடந்தவர்களுக்கு விலம்பாதி சங்கையும் கூட இல்லை –
இவர்களுக்கு இச்சாவதி விலம்பம்-இவர்கள் கோலின எல்லையிலே மோஷம் அவினாபூதம் –
இந் நிஷ்டையைப் பெற்ற இவ்வதிகாரி -கடைத்தலையில் இருந்து வாழும் சோம்பரை உகத்தி -என்கிறபடியே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு சர்வதா அபிமதனாய் இருக்கும் –

1-இவன் திறத்தில் நிருபாதிக சர்வ சேஷியாய்-நிருபாதிக ஸ்வ தந்த்ரனாய் -சத்ய சங்கல்பனுமான சர்வேஸ்வரன்
சர்வ பயங்களுக்கும் காரணமான நிக்ரஹ சங்கல்பத்தை –
தததிகம உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசௌ தத்த்வ்யபதேசாத்- ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-1-13- -என்கிறபடியே
சத்வாரக பிரபத்தி நிஷ்டனுக்கு உபாசன ப்ராரம்பத்தில் போலே பிரபத்தி வாக்ய உச்சாரணத்தில் பிரதம ஷணத்திலே விலக்கி
2- இவனையும் இவனுடைய அனுபந்திகளையும் நித்ய ஸூரிகள் கோவையிலே கோத்தாலும் ஆவல் கெடாதே
ஆஸ்ரித அபராத ராசிகளில் உண்டது உருக்கட்டாதே வயிறு தாரியாய்
அனுபந்திகளுடைய புத்தி பூர்வ அபராதங்களுக்கும் அனுதாபாதிகளாலே
நிஸ்தாரம் பண்ணுவிக்கும் படிக்கு ஈடான அனுக்ரஹ சங்கல்ப்பத்தை பண்ணி –
3- விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்கிறபடியே இவன் இசைந்த விலம்பத்துக்கு தான் சாநுசயனாய்த் த்வரித்து –
4-இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் -என்றும் –
மாயம் செய்யேல் என்னை -என்றும் -சொல்லுகிறபடி இவனுக்கு இசைவை உண்டாக்கி –
5-உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய்யும் பூம் குழலாள் திருவாணை நின்னாணை -என்று
இவன் தான் த்வரித்து வளைக்கும் படி பண்ணி
6-சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடியே
இவன் கோருதலுக்கு ஈடாக பிராரப்த சரீர அவசானத்திலே பரம பத ப்ராப்தி உண்டாக்குவதாக கோரி –
7-பொன்னும் இரும்புமான விலங்குகள் போலே பந்தங்களான பூர்வ உத்தர புண்ய பாபங்களையும் பிராரப்த கார்யமான கர்மத்தில்
இவன் இசைந்த அம்சம் ஒழிய மேலுள்ள கூற்றையும் போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்கிறபடியே
முன்பே இவனோடு துவக்கு அறுத்து வைக்கையாலே சரீர பாதத்துக்கு நினைப்பிட்ட சமயம் வந்தவாறே
ப்ரியேஷூ சர்வேஷூ ஸூக்ருதம்
அப்ரியேஷூ ச துஷ்க்ருதம்-விஸ்ருஜ்ய த்யான யோகேன ப்ரஹ்மாப் யேதி சநாதநம் -என்றும்
நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே –என்றும்
ஸ்மர்த்தாக்கள் சொன்ன உபநிஷத் அர்த்தத்தின் படியே இவனுக்கு அனுகூல பிரதிகூலராய் இருந்துள்ள இரண்டு சிறகிலும்
இவன் பக்கல் ஆநுகூல்ய ப்ராதிகூல்யங்களுக்கு பலமாக அசல் பிளந்து ஏறி ஓடுகிறது என்னும் படி பண்ணி
8-திவா ச சுக்ல பஷச்ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பிரசாச்தானி என்று
ஸ்ம்ருதியிலும் ஜ்யோதி சாஸ்த்ரத்தில் நிர்யாண பிரகரணத்திலும்
பலாந்தர பிரசக்தரையும் மோஷ உபாய பூர்த்தி இல்லாதாரையும் பற்றிச் சொல்லும் கால நியமம் இன்றிக்கே
நிசி நேதி சேன்ன சம்பந்தச்ய யாவத் தேஹபாவித்வாத்-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-3-8–என்றும் –
அதச் சாயேன அபி தஷிணே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-2-19–என்றும் சொல்லுகிறபடியே –
மனுஷ்ய பித்ரு தேவர்களுடைய பகல்களிலே யாதல் -ராத்ரிகளிலே யாதல் –
தான் சங்கல்ப்பித்த சமயத்திலே அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மநோ ரதனாம்படி பண்ணி —
9-சிறை கிடந்த ராஜ குமாரன் திறத்தில் பிரசன்னனான ராஜா விலங்கை வெட்டி சிறைக் கூடத்தின் நின்றும் கொண்டு புறப்படுமா போலே
பிரசச்த அப்ரசச்த நியமம் அற தத் கால உபச்திதமாய் இருப்பது ஏதேனும் ஒரு சரீர விஸ்லேஷ நிமித்தத்தை உண்டாக்கி –
10- வாக்காதிகளான பாஹ்ய இந்த்ரியங்கள் பத்தையும் மனசிலே சேர்த்து
11-இப்படி கர்ம ஞான இந்த்ரியங்கள் எல்லாவற்றோடும் கூடின மனசை பிராண வாயுவோடே சேர்த்து
12-இப்படி பதினோர் இந்த்ரியங்களோடும் கூடின பிராண வாயுவை ஜீவனோடு சேர்த்து
13-பிராண இந்த்ரிய சம்யுக்தனான த்ரி ஸ்தூண ஷோப தசையிலே ஸ்தூல தேகத்தின் நின்றும்
கடைந்து எடுத்த பஞ்ச பூத சூஷ்மங்களோடே சேர்த்து –
14-இப்படி இந்த்ரிய பிராண பூத சூஷ்ம சம்யுக்தனான ஜீவனை நிசர்க்க சௌஹார்த்தம் உடைய ஹார்த்தனான தன் பக்கலிலே இளைப்பாற்றி
இப்படி ஸ்தூல சரீரத்தின் நின்றும் வித்வதவித்வத் சாதாரணமான உத்க்ராந்தி க்ரமத்தை நடத்தி –
15-அநந்தா ரச்மயஸ் தஸ்ய தீபவத்ய ஸ்திதோ ஹ்ருதே
ஸிதாஸிதா கந்தரு லீலா கபிலா பீதலோஹிதா
ஊர்த்தமேவ ஸ்திதஸ் தேஷாம் யோ பித்தவா ஸூர்ய மண்டலம்
ப்ரஹ்ம லோக அதிக்ரம்ய தேன யதி பராம் கதிம்
யதஸ் யான்யந்த்ரச்மி சதமூர்த்வமேவ வ்யவஸ்திதம்
தேன தேவ சரீராணி ச தாமானி ப்ரபத்யதே
ஏனைக ரூபாச் சாதஸ் தாந்த்ரச்மய அஸ்ய ம்ருதுப்ரபா
இஹ கர்மோபபோகாயா தை சம்சரதி ச அவச –என்கிறபடியே
கள்ளர் கொண்டு போம் வழிகள் போலே -ஆத்மாபஹாரிகள் ஸ்வர்க்க நரகங்களுக்கு போம் மார்க்காந்தரங்களுக்கு
முகங்களான நாடி விசேஷங்களில் போகாத படி வழி விலக்கி
16-அர்ச்சிராதி மார்க்கத்துக்கு முகமான சதாதிகையான ப்ரஹ்ம நாடியிலே பிரவேசிப்பித்து
ஸூர்ய கரா வலம்பியாய்க் கொண்டு புறப்படும்படி பண்ணும்

ஆழ்வான் அந்திம தசையில் விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க
இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய
இப்பேறு நமக்கு வருகை அரிது -நாம் என்ன செய்யக் கடவோம் -என்று அப்போது சேவித்து இருந்த முதலிகள் கலங்க
இவர்கள் அபிராயத்தை திரு உள்ளம் பற்றி -ஆழ்வான் பிரகிருதி அறியீர்களோ –
இவ் வவஸ்தையிலே இவருக்கு இது கர்பூரத்தையும் கண்ட சக்கரையும் இட்ட மாத்ரம் அன்றோ –
நாம் இது உபாயத்துக்கு பரிகரமாகச் செய்தோம் அல்லோம் –
என்று அருளிச் செய்ய முதலிகள் தெளிந்து நிர்பரர் ஆனார்கள்
ஆகையால் –
நஷ்ட ஸ்ம்ருதி ரபி பரித்யஜன் தேஹம் -என்றும்
ஸ்திதே மனஸி ஸூஸ் வஸதே-என்கிற ஸ்லோக த்வயத்திலும்
துப்புடையாரை அடைவது எல்லாம் என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே
பிரபன்னனுக்கு அந்திம ஸ்ம்ருதியாதிகளில் நிர்பந்தம் இல்லை –

சரீரபாத சமே து கேவலம் மதீயைவ தயயா அதிப்ரபுத்தோ மாமேவா வலோகயன்
அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மனோரத -என்று ஸ்ரீ சரணா கத்யம் -21- அருளிச் செய்ததும்
இவ் வசனங்களுக்கு அவிருத்தமாக ஒரு பிரகாரத்தாலே நிர்வாஹம் -எங்கனே என்னில்
கத்யத்தில் அருளிச் செய்கிற அந்திம ஸ்ம்ருதி இவ் வந்திம ஸ்ம்ருதியையும் உபாய பலமாகக் கோரி
பிரபன்ன ரானவர்களுக்கு வரக் கடவது என்று சில ஆசார்யர்கள் நிர்வகிப்பார்கள் –
இப்படியாகில் ஒரு சரீரத்திலும் அந்திமமான ப்ரத்யயம் நிர்விஷயமாய் இராமையாலே இது பகவத் வியதிரிக்த விஷயத்தில் போமாகில்
யம் யம் வாபி ஸ்மரன் பாவம் -என்கிற கணக்கிலே விபரீத பலமாம் –
ஆன பின்பு கத்யத்திலே அருளிச் செய்த படியே ஸ்வதந்திர பிரபத்தி நிஷ்டனுக்கு பகவத் விஷயத்திலே அந்திம ஸ்ம்ருதி அவசியம் வரும்
நஷ்ச ஸ்ம்ருதி ரபி இத்யாதிகள் ஸ்ரீ கீதையில் அஷ்டம அத்யாயத்திலும்
யம் யோகின பிராணவியோக காலே யத் நேன விநிவேசயந்தி இத்யாதிகளிலும்
ஸ்வ யத்ன சாத்யமாக விதித்த கட்டளையிலே உபாயமாக அந்திம ஸ்ம்ருதி வேண்டா என்கின்றன என்று சில ஆசார்யர்கள் அனுசந்திப்பார்கள்
கேவலம் மதீயயைவ தயா -என்றே இங்கே அருளிச் செய்தது –
அந்திம ஸ்ம்ருதி யாவது வாகாதிகள் உபசாந்தமானால் மனஸூ உப சாந்தமாவதற்கு முன்பே பிறப்பதொரு ஸ்ம்ருதி –
இது அருகில் இருந்தார்க்கு தெரியாது –
த்ருஸ்யதே ஹி வாகிந்த்ரிய உபரதே அபி மன ப்ரவ்ருத்தி -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-2-1- –
இவனுக்கு உண்டு என்று அறிகிற அளவைச் சொல்லுகிறது –
தனக்கு சில வ்யாத்யாத்யவஸ்தைகளிலே கண்டபடியைச் சொல்லுகிறது ஆகவுமாம் –
ஆன பின்பு பகவத் விஷயத்தில் அந்திம ஸ்ம்ருதி முக்தர் ஆகிறவர்க்கும் மோஷம் கொடுக்கிறவர்க்கும் தெரியும் அத்தனை –

இதுக்கு அநந்தரம் யோகிகளோடும் அயோகிகளோடும் வாசியற
ஹார்த்தனான பரமாத்மாவின் பக்கலிலே விஸ்ரமிக்கும் அளவும் ஸூ ஷுப்தி துல்யமாய் இருக்கும் –
இவ் வவஸ்தையைப் பற்ற காஷ்ட பாஷாண சந்நிபம் -என்றும் நஷ்ட ஸ்ம்ருதரபி -என்றும் நினைக்க மாட்டேன் -என்றும்
சொல்லுகிறது என்றால் பிரபன்ன அதிகாரிக்கு விசேஷித்து ஓர் அதிசயம் சொல்லிற்று ஆகாது
இதுக்கு மேல் மத்த ஸ்ம்ருதிர் ஞான மபோஹனம் ச என்கிற ப்ராஜ்ஞன் உணர்த்த
தத் பிரகாசி தத்வாரானாய்க் கொண்டு ப்ரஹ்ம நாடியிலே பிரவேசித்தால் பின்பு
கால தத்வம் உள்ளது அனைத்தும் ஒரு பகலாய் உணர்த்தியே யாம்

—————-

நன்னிலமாமது நற்பகலாமது நன்னிமித்தம்
என்னலாமாமது யாதானுமாம் ஆங்கு அடியவர்க்கு
மின்னிலை மேனி விடும் பயணத்து விலக்கிலதோர்
நன்னிலையா நடுநாடி வழிக்கு நடை பெறவே –

தஹர குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்த்வர தீர்க்கிகா
நிபதித நிஜாபத்யாதித் சாவதீர்ண பித்ருக்ரமாத்
தம நிமஹ நச்தஸ்மின் காலே ச ஏவ சதாதிகாம்
அக்ருதக புர ப்ரஸ்தா நாரத்தம் பிரவேசயிதி ப்ரபு

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -17 -சாஸ்த்ரீய நியமன அதிகாரம் /அதிகாரம் -18-அபராத பரிஹார அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 28, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

—————————————————————————

அதிகாரம் -17 -சாஸ்த்ரீய நியமன அதிகாரம்–

முகுந்தே நிஷிப்ய ஸ்வ பரம் அநதோ முக்தவத் அசௌ
ஸ்வ தந்திர ஆஜ்ஞா சித்தம் ஸ்வயம் அவிதித ஸ்வாமி ஹ்ருதய
பரித்யாகே சத்ய ஸ்வ பர விவித அநர்த்த ஜனநாத்
அலங்க்யாம் ஆமோஷாத் அநுசரதி சாஸ்த்ரீய சரணிம்–

இச் சேஷத்வ சம்பந்தம் அடியாக பகவத் பாகவத விஷயங்களில் இவன் பண்ணும் கைங்கர்யம்
சாஸ்திர சாபேஷை ருசியாலேயோ -சாஸ்திர நிரபேஷ ருசியாலேயோ -என்னில்
இருள் தரும் மா ஞாலத்துள் இருக்கிற இவனுக்கு சாஸ்திரம் கை விளக்காக வேண்டுகையாலே
யதா சாஸ்த்ரமாய் -சாஸ்திரம் விகல்பபித்த வற்றில் யதா ருசியாகக் கடவது –
அது எங்கனே என்னில்
எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருந்த
முதலிகளுடைய ஆர்த்தியைக் கண்டு அருளி
இவர்களை அழைத்து அருளி -என்னுடைய வியோகத்தில் தேக த்யாகம் பண்ணினார் உண்டாகில்
ஆளவந்தார் ஸ்ரீ பாதமே என்னோடு அவர்களுக்கு சம்பந்தம் இல்லை -என்று அருளிச் செய்ய –
இவர்களும் இதைக் கேட்டு மிகவும் சோகார்த்தராய்-
இனி எங்களுக்கு செய்ய அடுப்பது எது என்று விண்ணப்பம் செய்ய –
இவர் அருளிச் செய்து அருளின வார்த்தை –

1-ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்ம யாத்ரை பகவத் அதீனை யாகையாலே
அதில் அவனுக்கு அந்வயம் இல்லை –
உண்டு என்று இருந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் இத்தனை –
தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையாலே அதுக்கு கரைய வேண்டா –
கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை –
ஆகையால் உபய யாத்ரையும் கொண்டு இவனுக்கு கார்யம் இல்லை —
2-ஆனால் மநோ வாக் காயங்கள் ஆகிற முக் கரணங்களையும் கொண்டு வேண்டிற்றுச் செய்து திரிய அமையுமோ என்னில்
அது இவனுக்கு ஸ்வரூபம் அன்று –
உபய அம்சத்தில் அந்வயம் இல்லா விட்டாலும் ப்ராப்யமான கைங்கர்யத்தில் இவற்றை அன்வயிப்பிக்கும் இத்தனை –
3-அதில் இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு உண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை உண்டாக்குதல்
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தினுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல்
அதுக்கு யோக்யதை இல்லையாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
அபி மானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம்-
ஆகிய ஐந்து வித கைங்கர்யங்கள் செய்யலாம் என்று அருளிச் செய்தார் –
4-இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவன மூன்று விஷயம் உண்டு –
அவை யாவன -அநு கூலர் என்றும் -பிரதி கூலர் என்றும் -அநு பயர் என்றும்
அநு கூலர் ஆவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதி கூலர் ஆவார் -பகவத் த்விட்டுக்கள் –
அநு பயராவார் -இவ் விரண்டும் இல்லாத சம்சாரிகள் –
இதில் அநு கூலரைக் கண்டால் -சந்தன குஸூமாதிகள் போலவும் -நிலவு தென்றல் போலவும் –
அபிமத விஷயங்கள் போலவும் உகந்து வர்த்திப்பான்
பிரதி கூலரைக் கண்டால் -சர்ப்பாதிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திப்பான்
அநு பயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணவத் கரித்து வர்த்திப்பான் –
இவர்கள் அநு கூலிப்பார்கள் ஆகில் இவர்களுக்கு ஞானத்தை உண்டாக்கவும்
இவர்கள் அநு கூலியார்கள் ஆகில் ஐயோ என்று இவர்கள் பக்கல் கிருபை பண்ணி இருக்கவும் அடுக்கும்
5-இப்படி செய்ய ஒட்டாது ஒழிகிறது அர்த்த காமங்களில் ப்ராவண்யம் –
அர்த்த காமங்கள் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அநாதரித்து இருக்குமாகில் சார்வ பௌமனாய் இருப்பான்
ஒரு ராஜாவினுடைய புத்திரனை
ராஜ சந்நிதியிலே பரிபிவித்தால் ராஜா வெறுக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் சீறும் –
அர்த்த காமங்கள் அடியாக பிரதி கூலரை ஆதரிக்குமாகில் ராஜா சார்வ பௌமனாய் இருக்க
ராஜ மகிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடிப்பிச்சை புக்கால்
ராஜாவுக்கு அவத்யமாய் அத்தாலே அவளை அவன் வெறுக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் வெறுத்து இருக்கும் –
அர்த்த காமங்கள் அடியாக அநு கூலரை ஆதரிக்குமாகில் ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசி அறியாதாப் போலே
இவனுக்குப் பிறந்த ஞானம் கார்யகரம் ஆயிற்று இல்லை என்று அவன் அளவிலே எம்பெருமான் அநாதரித்து இருக்கும் –

இப்படி ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த உத்தர க்ருத்யத்திலே
குலடா ஷண்ட பதிதா வைரிப்ய காகிணீமபி
உத்யதாமபி க்ருஹீண்யா ந்நாபத்யபி கதாசன -என்றும்
பர ரந்த்ரேஷூ ஜாத்யந்தா பரதாரேஷ்வ பும்சகா
பரிவாதேஷூ யே மூகா தே அதீவ திதா மம–என்றும்
சொல்லுகிறபடியே தர்ம விருத்த அர்த்த காமங்கள் தூரதோ நிரஸ்தங்களான படியாலே
தர்ம அவிருத்தங்களான அர்த்த காமங்கள் உபாதியாகவும்
அநு கூல பிரதிகூல உதாசீன விஷயங்களில் தான் நின்ற நிலை குலையலாகாது என்றும் திரு உள்ளம் –

அதில் அநு கூலரை அநாதரிக்கலாகாது என்னும் இடம் ஸ்ரீ சாண்டில்ய சுருதியிலே –
அநாத்யத ஸூதம் கேஹீ புருஷம் நாபி நந்ததி ததா அநார்சித சத் பக்தம் பகவான் நாபி நந்ததி -என்று சொல்லப் பட்டது –

பிரதி கூல சம்சர்க்கம் ஆகாது என்னும் இடம் மகா பாரதத்திலே
யே த்விஷந்தி மஹாத்மானம் ந ஸ்மரந்தி ச கேசவம் ந தேஷாம் புண்ய தீர்த்தேஷூ கதி சம்சர்க்ககிணாம் அபி -என்று சொல்லப்பட்டது –

அப்படியே -மூடை பாபரதை க்ரூரைர் பகவச் சாஸ்திர தூஷகை சம்பந்தம் நாசரேத் பக்திர் நச்யத்தே தைஸ்து சங்கமே என்று
பிரதி கூல சம்சர்க்கம் பகவத் பிரேமத்தை அழிக்கும் என்று சொல்லப்பட்டது –

உதாசீனரை த்ருணவத் கரித்து இருக்க வேணும் என்னும் இடம்
அத்ய ப்ரப்ருதி ஹி லோகா யூயம் வயம் வயம் அர்த்த காமபரா யூயம் நாராயண பரா வயம் நாஸ்தி சங்கதிரச்மாகம்
யுஷ்மாகம் ச பரஸ்பரம் வயம் து கிங்கரா விஷ்ணோர் யூய மிந்த்ரய கிங்கரா -இத்யாதிகளிலே பிரசித்தம் –

இப்படி முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டும் என்று அருளிச் செய்த அர்த்தம் சாஸ்த்ரைக வேத்யம் ஆகையாலே
சாஸ்த்ரீயங்களுக்கு உப லஷணமாக சாரோத்தாரம் பண்ணி இவர் அருளிச் செய்த கைங்கர்யங்களும்
தான் வேண்டின படி செய்ய ஒண்ணாமை யாலே சாஸ்த்ரோக்தமான நியமத்தோடு செய்தால் கைங்கர்யமாம் என்று ஸூசிதம்-

வேண்டிற்றுச் செய்து திரிய அமையுமோ என்னில் அது இவனுக்கு ஸ்வரூபம் அன்று -என்று அருளிச் செய்த படியாலே
அசாஸ்த்ரமாஸூரம் க்ருத்ச்னம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -21-என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த படியே
சாஸ்திர விருத்தங்கள் தைவப் பிரக்ருதியான இவன் ஸ்வரூபத்துக்கு பொருந்தாமையாலும்
சுருதி ச்ம்ருதிர் மமை வாஜ்ஞா யஸ்தா முல்லன்க்யம் வர்த்ததே
ஆஜ்ஞாச் சேதீ மம த்ரோஹீ மத்பக்தோ அபி ந வைஷ்ணவ -என்று அடிமை கொள்ளுகிறவன் அருளிச் செய்த படியாலும்
இவன் சரீரத்தோடு இருந்த காலம் சாஸ்திர வச்யனாய் அடிமை செய்ய வேண்டும் என்று திரு உள்ளம் –

நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித
உபாயதாம் பரித்யஜ்ய ந்யச்யே தேவ து தாம்பீ -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -31–அருளிச் செய்த படி
ப்ரீத்யைவ -என்கிற அவதாரணத்தாலே சாதனத்வ புத்தியை வ்யவச்சேதித்தார் என்னும் இடம்–
உபாயதாம் பரித்யஜ்ய -என்று விவரிக்கையாலே வ்யக்தம்
சாஸ்த்ரீய கைங்கர்யத்தில் ப்ரீதியினுடைய ப்ரேரகத்வ அதிசயம் விவஷிதம் ஆனாலும்
நிஜகர்மாதி பக்த்யந்தம் என்கிற இவற்றின் ஸ்வரூபத்துக்கு
சாஸ்திரமே பிரமாணம் என்னும் இடம் நிஜ கர்ம சப்தத்தாலே தர்சிதமாயிற்று -இது சாஸ்த்ரீய நியமம் –

அவிப்லவாய தர்மாணாம் பால நாய குலச்ய ச
சங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாப நாய ச
ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவ தேவஸ்ய சாரங்கிண
மநீஷீ தைவிகாசாரம் மநஸா அபி ந லங்கயேத்–என்று -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -17-93/94-பிரபத்யாயத்திலே பிரசித்தம்

இது தவிர்ந்த போது வரும் அநிஷ்டமும்
யதா ஹி வல்லபோ ராஜ்ஞோ நதீம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம்
லோகோப யோகி நீம் ரம்யாம் பஹூ சஸ்ய விவர்த்தநீம்
லங்கயன் சூலமாரோ ஹேதநபேஷ அபி தாம் ப்ரதி
ஏவம் விலங்கயன் மர்யாதாம் வேத நிர்மிதாம்
ப்ரிய அபி ந ப்ரிய அசௌ மே மதாஜ்ஞா வ்யதிவர்த்த நாத் –ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -17-95/96/97–என்று அனந்தரம் சொல்லப்பட்டது

இந்த பகவத ப்ரீதிக்கு ஷமை கொண்டிலன் ஆகில் முக்தன் ஆவதற்கு முன்னே
அதிகார அனுரூபமாக ஏதேனும் ஒரு அநிஷ்டத்தை விளைவிக்கும் –
அது நிற்க சத்த்வ பிரக்ருதியான இவனுக்கு பகவத் அப்ரீதிக்கு மேற்பட்ட நரகம் இல்லை
அந்த பகவத் அப்ரீதி சமிப்பதும் பின்பு ஷமை கொள்ளில் –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் என்னும் படி நிசர்க்க ஸூ ஹ்ருத்தான ஈஸ்வரனுடைய
அப்ரீதி சமிக்கும் அளவும் இவனுக்கு அருந்து தமாயிருக்கும்
இங்கன் இராதவனுக்கு ஸ்வாமி விஷயத்தில் பிராவண்யமும் கைங்கர்ய ரூபமான மோஷத்தில் ருசியும் சங்கிக்க அடுக்கும் –

இவ் வாஜ்ஞாதி லங்கனம் ப்ரஹர்ஷ யிஷ்யாமி-என்று உத்தேச்யையான பகவத் ப்ரீதிக்கு விரோதியான படியாலே
இக் சாஸ்த்ரீய நியமம் ரகஸ்ய த்ரயத்தில்
விரோதி நிவ்ருத்தியை அனுசந்திக்கும் இடங்களிலே அனுசந்திக்கப் பிராப்தம் –
இந்த நியமன அனூவர்த்தனம் பூர்ண உபாயர் அல்லாத அதிகாரிகளுக்கு உபாய பூர்த்தி விரோதியை
சமிப்பித்துக் கொண்டு பகவத் பிரசாதமாய் இருக்கும்
பூர்ண உபாயருக்கு அதி லங்கன ஹேதுக அப்ரீதி பிறவாத படி பண்ணிக் கொண்டு பகவத் ப்ரீணமாய் இருக்கும் –

ஆஜ்ஞா அநுஜ்ஞா விபாகேன த்விதா சாஸ்த்ரீய புத்தி
நிக்ரஹ அநுதயாய ஆத்யா பரா தத்தத் பல ஆப்தயே-என்றும்
அநுஜ்ஞாய ப்ரவ்ருத்தே அபி க்ரம கோப ஆதி சம்பவே
ஆஜ்ஞா அதிக்ரம தோஷ ஸ்யாத் நியம அதி துரத்யய-என்றும்
பிரத்யவாய பரீஹார பலாந்தர சமன்விதே
தத்ர சம்வலிதம் ப்ராஹூ அதிகாரம் விசஷணா -என்றும்
நித்ய காம்ய ஸ்வரூப ஐக்யே விநியோகே ப்ருதக்த்வ
பலார்த்தம் க்ரியமாணே அபி நித்யம் பவதி தந்தரத -என்றும்
அநுஜ்ஞா மாத்ர சித்தேஷூ கைங்கர்யேஷூ விசஷணை
அக்ருதௌ தத் பல அலாப ந து தோஷ இதி ஈரிதம் -என்றும் சொல்லக் கடவது இறே

நின்ற நம் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயது இது என்று நடத்திய நான் மறையால்
இன்று நமக்கு இரவாதலில் இம் மதியின் நிலவே
அன்றி அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடி யுளதே –

சுருதி ஸ்ம்ருதி ஆஸாரை ஸ்வ மதி பதிபி சுத்த மனசாம்
ஸூ சங்கல்பை தர்ம்யை குல சரண தேசாதி சமயை
நியோகை யோக்யாநாம் நியமயிது ஆதே அபிமதம்
நிமித்த ச்வப்னாத்யை நிபுணம் அந்திச்சதி புத —

—————————————————————————

அதிகாரம் -18-அபராத பரிஹார அதிகாரம் –

ஸ்வச்ச ஸ்வாது சதா அவதாத ஸூ பகாம் தைவாதயம் தேஹப்ருத்
மாலின்ய ப்ரசமாய மாதவ தயா மந்தாகிநீம் விந்ததி
யத்யப்யேவமசாவசார விஷய ஸ்ரோத ப்ர ஸூதை புன
பங்கை ரேவ கலங்கயன் ப்ராஜ்ஞைர்ந சம்லிஷ்யதே-

இப்படி பகவத் சேஷதைக ஸ்வ பாவன் ஆகையாலே –
சாஸ்திர நியத -தத் கைங்கர்யைக ரசனான இவ்வதிகாரிக்கு பின்பு அநாபத்தில் புத்தி பூர்வகமான அபராதம் வருகை
பற்றின கைங்கர்யைக நிஷ்டைக்கு விருத்தம் ஆகையாலே ப்ராயேண சம்பாவிதம் அன்று –

பிராரப்த கர்ம விசேஷ வசத்தாலே தேச கால அவஸ்தா வைகுண்ய ஹேதுகமாகவும்
ப்ராமாதிகமாகவும் ஸூ ஷூப்த்யாதி அவஸ்தைகளிலும்
வரும் அபராத லேசங்கள் உள்ளவை அஸ்லேஷ விஷயமாய்க் கழிந்து போம் –

புத்தி பூர்வக பாபாரம்பக பாபங்களுக்கு அஞ்சி அவையும் கழிய வேணும் என்று பிரபத்தி பண்ணாதே –
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போலே –
பிரக்ருதியோடே கூட இருக்கிற இவனுக்கு ஆத்ம குண பூர்த்தி இல்லாமையாலே
மந்ததைர்யரான ரிஷிகளுக்குப் போலே புத்தி பூர்வகமாகவும்
சில ஸ்வ நிஷ்டா விபரீதங்கள் வந்தாலும் -நிசர்க்க ஸூ ஹ்ருதான ஸ்ரீ யபதி ரஷண உன்முகனாய் நிற்கையாலே
இவ்விபநீத அனுஷ்டானங்கள் மின்னொளி மாத்ரமாய் நிலை நிற்குமவை அன்றிக்கே
அக் காலத்தில் பிறந்த ஸ்வ நிஷ்டாவைப்ரீத்யம் ஆகிற இழவை கடுக அனுசந்தித்து யதோசிதமாக லஜ்ஜா அனுதாபங்கள் பிறந்து

அபாய சம்ப்லவே சத்ய பிராயச்சித்தம் சமாசரேத்
பிராயச் சித்திரியம் சாத்ர யுத் புன சரணம் வ்ரஜேத்
உபாயா நாமுபாயத்வ ச்வீகாரேப்யததேவ ஹி -என்றும்
அஜ்ஞாநாத தவா ஜ்ஞாநாத் அபராதேஷூ சத்ஸ்வபி
பிராயச் சித்தம் ஷமச்வேதி ப்ரார்த்த நைகைவ கேவலம் -என்றும்

விதித ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி
பிரசாத யஸ்வ த்வம் சைனம் சரணாகத வத்சலம்
மாம் சாஸ்மை பிரயதோ பூத்வா நிர்யாத யிது மர்ஹசி -என்றும்
சொல்லுகிறபடி யதாதிகாரம் ப்ராயச்சித்தா வலம்பனம் உண்டாம் –

பிராரப்த கர்ம விசேஷ வசத்தாலே கடின ப்ரக்ருதியாய் ஷமை கொள்ளுகையும் கை தப்பின போது
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தாம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிரபு ரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –என்றும்

கமல நயன வா ஸூ தேவ விஷ்ணோ தரணி தராச்யுத சங்க சக்ர பாணே
பவ சரணமிதீரயந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான்-என்றும்

தேவ சார்ங்க தரம் விஷ்ணும் பிரபன்னா பராயணம்
ந தேஷாம் யமஸா லோக்யம் நச தே நரகௌ கச –என்றும்
வைஷ்ணவ வாமனாதி புராணங்களில் பாசுரங்களுக்கு மூலமான ஸ்ருதிகளில் சொல்லுகிறபடியே
யம விஷய கமனம் இன்றிக்கே
வேலிட்டுப் பாய வேண்டுமது முள்ளிட்டுப் பாய்ந்து கழியும்-என்கிற கணக்கிலே
காணான் கஞ்சன் என்று முதலாக ஓதுகிற இங்குத்தை உபக்லேச முகத்தாலே
சிகை யறுக்கும் விரகுகளை முன்னிட்டு சர்வேஸ்வரன்
ஷமா
பிரேமா
தயா
வாத்சல்யங்களாலே-தணிந்த பிரதாபத்தை யுடையனாய் –
மிகவும் தண்டிக்க வேண்டும் அபராதத்துக்கு சேவ்யனான சார்வ பௌமன்
அடையாளககாரர்-அந்தபுர பரிஜனம்-கூனர் குறளர்-குமாரர்கள் விஷயத்தில் அபராதங்களுக்கு ஈடாகவும்
அந்தரங்கத்வாதி தாரத்ம்யத்துக்கு ஈடாகவும்
சம்பந்த ஆன்ரு சம்ச்யாதிகளாலே ப்ரீதி நடக்கச் செய்தே அவர்கள் தப்பிதனதுக்கு ஷமை கொள்ளுகைக்காகவும்
மேலைக்கும் சிஷை யாகைக்காகவும்
முகம் கொடாதே இருத்தல்
சம்மட்டி இட்டு அடித்தல்
தள்ளுவித்தல்
வாசலிலே தகைவித்தல்
சிறிது நாள் சேவையை விலக்கி விடுதல்
செய்யுமா போலே காக ந்யாயத்தாலே ஒரு கண் அழிவாலே இவ் வாஸ்ரிதரை ரஷித்து விடும் –

இப்படி ம்ருது பிரக்ருதிகளை ஷமை கொள்ளப் பண்ணுவித்தல்
கடின பிரக்ருதிகளுக்கு சிஷா ரூபமான தண்ட விசேஷம் பண்ணுதல் செய்கிற இடமும்
பூர்வ பிரபத்தி பலமான ஷமையின் பிரகார பேதம் என்று சிஷகனான சேஷி பக்கலிலே க்ருதஜ்ஞதை நடக்கைக்காக
புத்தி பூர்வக உத்தராகத்தையும் ஷமிக்கும் என்று சிலர் சொன்னார்கள் –

பிராரப்த கர்மத்தில் பாபாம்சம் போலே புத்தி பூர்வக உத்தராகம் ப்ராயாச் சித்தம் பண்ணாத போது சபலமானாலும்
பண்ணின பிரபத்தி மோஷம் கொடாது ஒழியுமோ என்று சங்கிக்க ஒண்ணாது
பெருங்காயம் வைத்த மரங்களுக்கு ஸ்தலாதி விசேஷங்களால் வாட்டத்துக்கு கால தாரதம்யம் உள்ள மாத்ரம்
இங்கும் இவர்கள் சம்சாரத்தினுடைய நிச்சேஷ நிவ்ருத்தி பிறக்கைக்காக விலம்பாவிலம்ப வைஷம்யமே உள்ளது
இத் தேக அநந்தரம் மோஷம் பெற வேணும் என்று அபேஷித்தாலும்
அநியதாயுஸ் ஸூக்களாய் விலம்ப ஷமராய் இருப்பாருக்கு ஆயுர் வ்ருத்தியாலே விலம்பம் வரும் –
நியதாயுஸ் ஸூக்களுக்கு உள்ள ஆயுஸ் ஸூக்குள்ளே பலித்து விடும் –

பவேயம் சரணம் ஹி வ -என்ற பின்பும் உண்டான ராஷசிகளுடைய புத்தி பூர்வ அபசாரங்கள்
மர்ஷயாமீஹ துர்பலா பாபா நாம் வா சாபா நாம் வா வதார் ஹாணாம் ப்லவங்கம் -என்கிறபடியே
பிராட்டிக்கு ஷமா விஷயம் ஆயிற்று இல்லையோ என்னில்
அவ் விடத்திலும் அவர்களுக்கு திருவடி நலியப் புகுகிறார் என்கிற பயம் விளைந்து நலிவுக்கு விலக்கு உண்டான படியாலே
வாளாலே ஓங்கி விடுமா போலே தண்ட லேசமும் ஷமையும் –சித்தம் –

ஆகையால் பிரபன்னனுக்கு புத்தி பூர்வக உத்தராகம் லேபியாது என்று விசேஷித்து சொல்லுவது ஒரு பிரமாணம் இன்றிக்கே இருக்க
இவனுக்கு பின்பு புத்தி பூர்வக உத்தராகம் பிறந்தாலும் ஷமை கொள்ள வேண்டாம் என்றும்
ஷமை கொள்ளா விடிலும் சிஷா ரூப தண்ட விசேஷம் இல்லை என்றும்
விலம்ப ஷமருக்கும் பரம பலத்துக்கு விலம்பம் வாராது என்றும்
பிராரப்த ஸூக்ருத விசேஷாதிகளாலே வரும் இங்குத்தை கைங்கர்யத்துக்கு விச்சேத சங்கோ சங்கள் வாராது என்றும்
சொல்லுகிற பஷங்கள் சரண்யனுடைய குணங்களையும் சரணா கதியினுடைய பிரபாவத்தையும் சொல்லுகைக்காக அத்தனை –

இப்படி அல்லாத போது பிரபன்னரான பூர்வர்களுடைய அனுஷ்டான பரம்பரைக்கும் –
பிரபன்னரைப் பற்றவே பிராயச் சித்தம் விதிக்கிற சாஸ்த்ரத்துக்கும்-
மோஷம் பெறுகைக்கு காலம் குறித்து பிரபத்தி பண்ணாதே அனுவ்ருத்த புத்தி பூர்வக அபராதருமாய் –
விலம்பாஷாமருமாய் இருப்பார்க்கு விலம்பம் சொல்லுகிற பிரமாணங்களுக்கும் சேராது –

சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று சாமான்யேன சொல்லச் செய்தேயும் –
பிராயச் சித்திரியம் சா அத்ர யத் புன சரணம் வ்ரஜேத் -என்று விசேஷிக்கையாலே
புத்தி பூர்வக உத்தராகத்துக்கு ப்ரபத்ய அநந்தரம் பிராயச் சித்தமாக ப்ராப்யம் ஆயிற்று –
புன சரணாகதியை விதிக்கிற வசனத்தை அடியிலே புத்தி பூர்வக உத்தராகத்துக்கும் பரிகாரமாக
பிரபத்தி பண்ணாதார் விஷயத்திலே நியமித்தாலோ என்ன ஒண்ணாது –
புத்தி பூர்வக உத்தராகத்தையும் பற்ற பிரபத்தி பண்ணலாம் என்று விசேஷித்து கண்டோக்தி
பண்ணுவதொரு வசனம் உண்டாகில் இறே இப்படி நியமிக்கலாவது –
இப் பிரபத்தி பூர்வ உத்தராகத்துக்கும் பரிஹாரம் என்று அறிந்தால்
இச்செட்டை விடுவாரையும் கிடையாமையாலே புன பிரபத்தி வசனம் நீர் விஷயமாம் –

சாமான்ய வசனத்து அளவைப் பற்றி விசேஷ வசனத்தை பாதிக்க ஒண்ணாது –
இப்படி விசேஷ வசனத்தைப் பாதிக்கில் உபாச நிஷ்டனுக்கும் பூர்வ உத்தராகத்துக்கும் தோஷம் இல்லையாம் –
பூர்வ உத்தராகத்திலும் பரமை காந்திகளான இவர்கள் இருவருக்கும் யம வச்யாதிகள் இல்லை என்னும் இடம்
யஸ்மின் கஸ்மின் குலே ஜாதா யத்ர குத்ர நிவாசின –வாஸூ தேவ ரதா நித்யம் யமலோகம்
ந யாந்தி தே –இத்யாதி வசன பலத்தாலே சித்தம் –

ஒரு பாபம் தானே ஜாதி குணாதி அதிகாரி பேதத்தாலே குரு லகு பல பேதவத்தாய் இருக்கும்
என்னும் இடம் சர்வ சம் ப்ரதி பன்னம் –
இவ் வர்த்தம் ராஜ புத்ர அபராதிகளில் போலே லோக மரியாதையாலும் உப பன்னம் –
ந ப்ராக்வத் புத்திம் பூர்வாதே ந சாத்யந்தம நுக்ரஹ –லகுர் தண்ட பிரபன்னச்ய ராஜ புத்ர அபராதவத் —
ஆகையாலே அதிகார அனுரூபமாக லகுபலமும் வாராமைக்காக புன பிரபதனம் விதிக்கப் படுகிறது –
சிஷ்டதயா வ்யபதேச்யரான சமர்த்தருக்கு லோக சங்க்ரஹத்துக்காகவும் பிரசித்த நிமித்தங்களில்
யதா சக்தி பிரசித்த பிராயச் சித்தம் உசிதம் –
அது தவிருகையும் முன் சொன்ன ஆஜ்ஞாதி லங்கனமாம்
சைரந்திக்கு சேவை தப்பின போது ததாத்விகமான பரிமளாதிகளையும் இழந்து
பய அனுபவம் உண்டாமா போலே ஆஜ்ஞாதி லங்கநம் இரண்டு படி அநர்த்தம்-

ஸ்வ இச்சா மாத்ரத்தாலே புத்தி பூர்வக உத்தராகத்தையும் அடியிலே பிரபதனம் பண்ணினாலோ என்னில்
இது உபாசனத்தையும் புத்தி பூர்வக உத்தராகத்துக்கும் பரிஹாரமாகப் பண்ணினாலோ –
அங்கப் பிரபத்தியும் அதுக்குச் சேர பண்ணினாலோ என்கிற பிரதிபந்தியாலே நிரச்தம்-
இருவருக்கும் இப்படி யாயிடுக என்கை பாஷ்யாதி விருத்தம் ஆகையாலே அபசித்தாந்தம் –
உஷச்தி பிரவ்ருத்திகளான ப்ரஹ்ம நிஷ்டர்களுடைய அனுஷ்டானத்துக்கும் விருத்தம் –
ஆகையாலே விசேஷ வசனம் இல்லாமையாலே க்ருதே பாபே அனுதாபோ வை -இத்யாதிகள் கணக்கிலே
நிமித்தம் உதித்தால் அல்லது நைமித்திகம் பிராப்தம் அன்று என்கிற ஞாயம் புத்தி பூர்வக உத்தராகத்தில் பதிதம் ஆகாது –
ஆனபின்பு ஆகாமி புத்தி பூர்வ பாவத்துக்கு அஞ்சினான் ஆகில்
அதுக்கு காரணமான பிராரப்த பாபத்துக்கு பிரபதன ரூப பிராயச் சித்தம் பண்ணப் ப்ராப்தம் —
ராத்ய பக்திஸ்து சா ஹந்த்ரீ ப்ராரப்தஸ் யாபி பூய ஸீ-என்றார்கள் இறே
ஜன்மாந்தர க்ருதே பாபம் வியாதி ரூபேண பாததே–தத் சாந்தி ஔஷதை தாநை ஜப ஹோமர்ச நாதிபி -இத்யாதிகளில்
தான ஜபாதிகளிலும் அகப்படாத பிராரப்த பாப நாசம் சொல்லப் பட்டது இறே –
ஆகையால் பாபாரம்பக பாபத்துக்கு அஞ்சி பிரபத்தி பண்ணினான் ஆகில் அப்போது புத்தி பூர்வக பாபமும் உதியாது-

தாஸ சஹா வாஹனம் ஆசனம் த்வஜ -இத்யாதிகளில் படியே
அத்யந்த பகவத் அந்தரங்கர்க்கும் சாத்விக அபராத லேசமும் பிரத்யவாயகரம் என்னும் இடம்
சாண்டிலீ விருத்தாந்தகளிலே பிரசித்தம் –

சர்வேஸ்வரனைப் போலே ஸூரிகளும் அவதரித்தால்
கர்ம வச்யத்ய அபி நயம் பண்ணி லோக ஹித பிரவர்த்தன அர்த்தமாக அபசார பரிஹாராதிகளை நடத்திப் போருவார்கள் –
ஆகையால் பகவத் ப்ரீதி இழவாமைக்கும்-அதுக்காக புன பிரபத்தி யாதல் -லகு தண்டமாதல் -பிரசங்கியாமைக்கும்
மேல் வரும் அபராதங்கள் வேர் அறுக்கும் விரகு பார்க்க வேணும் –

அபராதங்கள் எல்லாவற்றுக்கும் அடி அவிவேகம் –
அதில் பிரதானமான அவிவேகம் அசித் ஸ்வ பாவமான ஜடத்வ விகாராதிகளை சுமைக்கையும்
ஈஸ்வர ஸ்வ பாவமான ஸ்வ நிஷ்டத்வ ஸ்வ தந்த்ர்ய அனந்யார்த்த வாதிகளைச் சுமைக்கையும் –
இவ் அவிவேகத்தை அறுக்கைக்கு தெளிவாளாய் இருப்பது ஏற்றச் சுருக்கமறத் தன்னளவில் உண்டான தெளிவு –
அவிவேக ப்ரபுத்வாதேர் நிதா நஸ்ய நிவர்த்த நாத்
அர்த்த காமாபசாராணாமயத் நோன்மூல நம் பவேத் –
இவை எல்லா வற்றுக்கும் அடி பலப்ரதான உன்முகமாய் இருப்பதொரு பூர்வாகம் ஆகையாலே
அதினுடைய நிவ்ருத்திக்குமாக அடியிலே பிரபத்தி பண்ணுதல் –
இதுக்கு என்று பின்பு ஒரு பிரபத்தி பண்ணுதல் செய்தார்க்கு இவை எல்லாம் பரிஹ்ருதங்களாம்-

இப்படி இவனுக்கு பரிஹரணீயங்கள் ஆன வற்றில் ராஜதார அபராதம் போலே பாகவத அபசாரம் பிரதானம் என்னும் இடத்தை
ஏவம் முக்தி பலா நியம தத்வஸ்தா வத்ருதே தத்வஸ்தா வத்ருதே -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -3-4-51-என்றதிலே
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் –
ஆன பின்பு ஜாதி குண வ்ருத்தாதிகளாலே உத்க்ருஷ்டரான பராசர வியாச சுக சௌநக நாதமுனி ப்ரப்ருதிகளுக்கும் தனக்கும்
பாகவதத் வாதிகளும் பரம புருஷார்த்த லாபமும் துல்யமாய் இருந்தாலும் –
பகவத் பரிக்ரஹமான-கோ கோப ஜாதிகளுடையவும் -துளசி சம்பகாதிகளுடையவும்
கோமய ம்ருகமதாதிகளுடையவும் வைஷம்யம் போலே
பகவத் சங்கல்ப விசேஷ பிரயுக்தமான தத்ததுபாதி ஸ்வ பாவத்தாலே சித்தங்களான உத்கர்ஷ அபகர்ஷங்களை
அஸூயா ப்ராதுர்பாவ பிரகரணத்தில் ஆப் நாதமான படியே திரஸ்கரிக்க நினையாது ஒழியவும்

ஜாத்யாத் உபாதிகளாலே பாகவதர் திறத்தில்
அநுஜ்ஞா பரிஹாரௌ தேக சம்பந்தாஜ் ஜ்யோதிராதிவத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-47–என்கிற நியாயத்தாலே
பிரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களுக்கு யதா சாஸ்திரம் நியமம் உண்டானாலும் –
சாதுரேவ ச மந்தவ்ய -என்றும் –
ஸ்ம்ருத சம்பாஷிதோ வா அபி -என்றும் –
ய சூத்ரம் பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீஷதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர -என்றும்
தஸ்மாத் விஷ்ணு பிரசாதாய வைஷ்ணவான் பரிதோஷயேத் பிரசாத ஸூமுகோ விஷ்ணு தே நைவ ச்யாந்த சம்சய -என்றும்
பயிலும் சுடரொளி –
நெடுமாற்கு அடிமைகளிலும் -விசேஷித்த படி பிரதிபத்தியில் குறை அற்று இருக்கவும்

இப் பிரதிபத்தி மாத்ரத்தாலும் தச்யேதமித தீ ஹேது ரப்யபகாரீ -என்கிறபடியே
பரிபூர்ண விஷயத்தில் சேஷத்வ உசித கிஞ்சித் காரமான கைங்கர்யம் சித்தம் என்று இருக்கவும்
இந் நிலைகளிலே ஓன்று கோணின போது –
சர்வம் ஜிஹ்யம் ம்ருத்யுபத மார்ஜவம் -ப்ரஹ்மண பதம் என்கிறபடியே
ம்ருத்யுவின் கடை வாயிலிலே அகப்பட்டால் போலே நடுங்கி
க்ருதாபராச்ய ஹி தே நாந்யத் பச்யாம் சமம் அந்தரேணாஞ்ஜலீம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாதநாத் -என்றும்
யதி கிஞ்சித்த தீக்ராந்தம் விச்வாசாத் ப்ரணயேனவா ப்ரேஷ்யச்ய ஷமிதவ்யம் மே ந கச்சித் அபராத்யதி -என்றும்
யாச்ச சோகாபி பூதச்ய ஸ்ருத்வாத் ராமஸ்ய பாஷிதம் மயா த்வம் புருஷாண் யுக்தஸ் தச்ச த்வம் ஷந்து மர்ஹசி -என்றும்
மகா ராஜருடையவும் இளைய பெருமாளுடையவும் அந்யோந்ய பிரசாதன பிரகாரம் சொல்லுகிற ஸ்லோகங்களை பராமர்சித்து
அப்படியே ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரா லேப கடிதம் ஆனால் போலே பொருந்திப் போரவும் ப்ராப்தம் –

ஜ்ஞானா வானவன் ப்ராதி கூல்யத்தில் புத்தி பூர்வகமாக பிரவ்ருத்தன் ஆனாலும்
புன பிரபத்தியாலே சர்வேஸ்வரன் ஷமிக்கும் என்னும் இடம்
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்திலே க்ரோதாந்தனாய் தர்மாத்மஜனான பகவானோடு எதிர் அம்பு கோத்த ருத்ரனை
ப்ரஹ்மா தெளிவித்து விலக்க-அவனும்
பிரசாதயாமாச பவோ தேவம் நாராயணம் ப்ரபும்
சரணம் ச ஜகா மாத்யம் வரேண்ய வரதம் ஹரிம் -என்கிறபடியே பிரசாதமான சரணாகதியைப் பண்ண
ததோ அத வரதோ தேவோ ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய
ப்ரீதி மா நபவத் தத்ர ருத்ரேண சஹ சங்கத -என்கிறபடியே
சர்வேஸ்வரன் பிரசன்னனாய் ருத்ரனை அங்கீ கரித்தான் என்கையாலே சித்தம் –

தான் குற்றவாளன் ஆகவுமாம்-
தான் இப்போது குற்றம் செய்யாதே இருக்க -ஜன்மாந்தர துஷ்க்ருதத்தாலே ஆகவுமாம்
சில பாகவதர் தன்னை வெறுக்கில் ஏதேனும் ஒரு விரகாலே அவர்களை ஷமை கொள்ளுகிற முகத்தாலே
ஈஸ்வரனை ஷமை கொள்ள வேணும் என்னும் இடம்
ருஷாஷராணி ஸ்ருண்வந் வை ததா பாகவதேரிதான்
ப்ரணாம பூர்வகம் ஷாந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ச -என்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சொல்லுகிற பிரமாணத்திலே பிரசித்தம்

இங்கனம் செய்யாத போது
யே ப்ரஹ்மாணச்தே அஹமசம்சயம் ந்ருப -தேஷ்வர்ச்சி தேஷ்வர்ச்சிதோ அஹம் யதாவத்
தேஷ்வேவ துஷ்டேஷ்வஹமேவ துஷ்டோ வைரம் ச தைர்யச்ய மமாபி வைரம் -என்றும்
க்நந்தம் சபந்தம் புருஷம் வதந்தம் யோ ப்ரஹ்மணம் ண் ப்ரண மேத்யதா அஹம்
ச பாபக்ருத் ப்ரஹ்ம தவாக்நிதக்தோ வக்யச்ச தண்டயச்ச ந சாஸ்மதீய -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் அபிமான பாஹ்யனுமாய் வைஷ்ணவ ப்ரக்ருதியாய் இருக்கிற தனக்கு ஸ்வரூபம் என்னலாம் படி
அந்தரங்கமான பாகவத சேஷத்வத்தையும்
ஸ்வ பாவமாய் நிற்கிற சம தம தாதிகளையும் இழந்தானாம்-
இவற்றை இழைக்கை தானே இவனுக்கு வதமும் தண்டமும் –

பகவத அபிமான பாஹ்யதையின் கொடுமையை -அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே -என்று
பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்தார் –
இஸ் ஸ்லோகங்களில்
ப்ராஹ்மண சப்தம் -விஷ்ணும் க்ராந்தம் வாஸூ தேவம் விஜானன் விப்ரோ விப்ரத்வம் கச்சதே தத்தவ தர்சீ என்கிற
பிரக்ரியையாலே விசேஷ விஷயம்
சாமான விஷயம் ஆனாலும் பாகவத விஷயத்திலே அபராதம் கைமுதிக நியாயத்தாலே சித்தம் –

அனுதா பாதுபரமாத் பிராயச்சித்த உன்முகத்வத
தத் பூரணாசாபராதா சர்வம் நச்யந்தி பாரச-

பூர்வஸ்மின் வா பரஸ்மின் வா கல்பே நிர்விண்ண சேதஸாம்
நிவர்த்ய தாரதம்யே அபி ப்ரபத்திர்ந விசிஷ்யதே

ஏவமேவ லகூநாம் வா குருணாமபி வா ஆகசாம்
சக்ருத் பிரபத்திரே கைவ சத்ய பரசம காரணம்

உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர் தாமரையிணை வன்சரணாக வரித்தவர் தம்
களைதான் என எழும் கன்மம் துறப்பர் துறந்திடிலும்
இளைதா நிலை செக எங்கள் பிரான் அருள் தேன் எழுமே –

ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு –

———————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -15 உத்தர க்ருத்ய அதிகாரம் /அதிகாரம் -16-புருஷார்த்த காஷ்ட்ட அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 28, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -15 உத்தர க்ருத்ய அதிகாரம்-

சந்தோஷார்த்தம் விம்ருசதி முஹூ சத்பி அத்யாத்ம வித்யாம்
நித்யம் ப்ரூதே நிசமயதி ச ஸ்வாது ஸூ வ்யா ஹ்ருதாநி
அங்கீ குர்வன் அனத லலிதாம் வருத்தி மாதேஹபாதாம்
த்ருஷ்ட அத்ருஷ்ட ஸ்வ பர விகமே தத்த த்ருஷ்டி ப்ரபன்ன –

இப்படி க்ருத க்ருத்யனாய் -ஸ்வ நிஷ்டியைத் தெளிந்து -சரீரத்தோடு இருந்த காலம்
பழம் திரு விடையாட்டத்திலே சிறிது இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பாரைப் போலே
ஒரு படி துவக்கற்று ஒரு படி துவக்குண்டு இருக்கிற இவ் வதிகாரிக்கு
முக்தருடைய கைங்கர்ய பரம்பரை போலே ஸ்வாது தம மாகையாலே ஸ்வயம் பிரயோஜனமாய் –
சாஸ்திர விமுக்த பால விசேஷ நியதமாய் -உத்தர கைங்கர்யத்துக்கு அவசர லாபார்த்தமாய் –
பூர்வ கைங்கர்யம் தலைக் கட்ட வேண்டும்படி சங்கிலித் துவக்காய்-ஸ்வாமி சம்ப்ரீதிக்கு காரணமுமாய்-கார்யமுமாய் –
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும்
சீர் கலந்த சொல் நினைந்து போக்கரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது -என்றும்

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலாவடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள் வடிவு என் மனத்ததாய் அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோட அருளில் -என்றும்
நாடாத மலர் நாடி -என்றும் –
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க -என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் -என்றும்
எண்ணக் கண்ட விரல்கள் -என்றும்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா வென்று எண்ணா நாளும்
இருக்கெகச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம் நண்ணா நாள் அவை தத்துற்மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாள் -என்றும்

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசமன்று -என்றும்
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்றும்
தோள் அவனை அல்லால் தொழா-என்றும்
நயவேன் பிறர் பொருள் -என்றும்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும்
இருளிரிய –ஊனேறு செல்வத்து –நீணாகம் சுற்றி -என்ற திரு மொழிகளிலும் –

பத்யு ப்ரஜாநாம் ஐஸ்வர்யம் பசூணாம் வா ந காமயே
அஹம் கதம்போ பூயாசம் குந்தோ வா யமுனாதடே –என்றும்
குருஷ்வமாம் அனுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச்ச தே
பரவா நாஸ்மி காகுத்ச்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே -என்றும்
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத -என்றும் –
காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் -என்றும்
வர்த்தமான சதா சைவம் பாஞ்ச காலிக வர்த்தமான
ஸ்வார்ஜிதைர் கந்த புஷ்பாத்யை சுபை சக்த்ய நுரூபத -என்றும்
ஆராதயன் ஹரிம் பக்த்யா கமயிஷ்யாமி வாசரான் -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்வரூப அநுரூப கால ஷேப அர்த்தமான உத்தர க்ருத்யம் இருக்கும் படி —

தன் நிஷ்டைக்கு அனுரூபமாக தெளிய வேண்டும் அர்த்தங்களில் தனக்குத் தெளியாத நிலங்களை
நான் க்ருத க்ருத்யன் என்று அநாதரித்து இராதே
அனுபவ பூர்த்தி யுண்டாம் போது தெளிவும் பிரேமமும் வேண்டுகையாலும் –
தத் பாத பக்தி ஞானாப்யாம் பலம் அந்யத் கதாசன
ந யாசேத் விஷ்ணும் யாச நான்நச்யதி த்ருவம் -என்கிறபடியே
ஞான பக்திகளை அபேஷித்தால் குற்றம் இல்லாமையாலும்
தனக்கு சேஷி விஷயத்தில் சித்தரஜ்ஞானம் பிறக்கைக்காக
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்னும் படி நிற்கிற தெளிவை யுடைய பரமை காந்திகள் பக்கலிலே
தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந சேவயா
உபதேஷ்யந்தி ஞானம் ஞானிநஸ் தத்வதர்சிந -என்கிற கட்டளையிலே தெளியக் கேட்டு
மந்தோப்ய மந்ததா மேதி சம்சர்க்கேண விபச்சித
பங்கச்சித பலஸ்யேவ நிதர் ஷேணா விலம்மய -என்கிறபடியே பரிசுத்த ஞானனாய் –

யஸ்ய அனுபவ பர்யந்தா புத்திஸ் தத்த்வே பிரதிஷ்டிதா
தத்த்ருஷ்டி கோசரா சர்வே முச்யந்தே சர்வகில்பிஷை -என்கிறபடியே
இவ்வர்த்தங்களில் நிஷ்டை உடையவர்கள் உடனே நெருங்கி வர்த்தித்து அவர்கள் அனுஷ்டானங்களிலே
யாவா நர்த்த உதபாநே சர்வத சம்ப்லு தோதக-என்கிற பிரகாரத்திலே
தன் வர்ண ஆஸ்ரம ஜாதி குணங்களுக்கு அனுரூபமான
கர்த்தவ்யாம்சத்தை நிஷ்கரித்து அனுஷ்டித்து -இவ் வனுஷ்டாநாதிகளை யுடையோம் என்னும் பாவனை யடியாக வரும்
ஸ்வ உத்கர்ஷ பர நிகர்ஷ அனுசந்தானங்கள் ஆகிற படு குழிகளைத் தப்பும்படி தான் முன்னடி பார்த்து நடக்கவும்-

தனக்கு சரண்ய பிரசாத விசேஷ மூலமாக
நம்மாழ்வார் நாதமுனிகள் உள்ளிட்டார்களுக்கு போலே சாஷாத் காராதிகள் ஆகிற பலோத்கம பர்வங்கள் வந்தாலும் –
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் -என்றும்
அறிவனேலும் இவை எல்லாம் என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது -என்றும் நிச்சயித்து

பராதீன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தியான தன் அதிகாரத்திலே சொருகின ஆகிஞ்சன்யத்தை அழிய மாறாதே
அஹம் அஸ்ம்ய அபராதா நாம் ஆலப அகிஞ்சநோ அகதி -இத்யாதிகளை அடி யொற்றி நடக்கிற
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் –
என் நான் செய்கேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்-
புகல் ஒன்றில்லா அடியேன் –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் –
கறவைகள் பின் சென்று –
குளித்து மூன்று அனலை ஓம்பும் –
குலங்களாய ஈரிரண்டில்
ஏழை ஏதலன்
பற்றேல் ஒன்றுமிலேன்
தருதுயரம் தடாயேல்–என்கிற பாட்டுக்களிலும்
ந தர்ம நிஷ்ட –அஸ்தி-என்ற ஸ்லோகத்திலும்
இவர்கள் அருளிச் செய்த கார்ப்பண்யத்தின் சுவடுகளை எல்லாம் அவலம்பித்துக் கொண்டு போரவும்–

இப்படி தனக்கு அநாதி காலம் பிறந்த அநர்ஹதையையும் அதடியாக இழந்த கைங்கர்யத்தையும் பார்த்து
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்று அலற்றப் பண்ணும்
நிர்வேத ப்ராசுர்யத்தாலே அவசன்னன் ஆகாதே
உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -என்கிறபடியே
எதிர் சூழல் புக்கு நிற்கிற சரண்யனுடைய தாய் முலைப்பால் போலே
பத்ய தமமுமாய் ப்ரிய தமமுமான உபதேசத்தாலே தெளிந்த அவதார ரகஸ்யாதிகள் ஆகிற
தீர்த்தங்களை அவஹாகித்துத் தேறி

உத்தமே சேத்வயசி சாது வ்ருத்த-என்றும்
துராசார அபி சர்வாசீ க்ருதந்தோ நாஸ்திக புரா
சமாஸ்ரயே தாதி தேவம் ஸ்ருத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி ஜந்தும் பிரபாவாத் பரமாத்மன –என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியதாநுபவே அப்ய நாச்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ ஷணார்த்தே
ஏவம் சதா சகல ஜன்ம ஸூ சபராதம் -என்றும்
ப்ரவஹத் ஏவ ஹி ஜலே சேது கார்யோ விஜா நதா–ஸ்ரீ வங்கிபர நம்பி காரிகை-31- என்றும்
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே-என்றும் சொல்லுகிற ந்யாயத்தாலே
கதத்துக்கு சோகியாதே
கதமான அயோக்யதையைக் கண்டு அகலவும் பாராதே
அபர்யநு யோஜ்யமாய் அநவதிகமான சரண்ய பிரபாவத்தாலே இப்போது பிறந்த யோக்யதையைக் கண்டு
வருகிற நீருக்கு அணை கோலும் கணக்கிலே இவ் வவஸ்தைக்கு அனுரூபமான
ஆஜ்ஞா அனுஜ்ஞா அனுவர்த்தனம் ஆகிற கைங்கர்ய அனுபவத்தை இழவாதே

முடியானே யில் படியே -விடாய்த்த கரணங்களை சாத்விக ஆஹார சேவாதிகளாலே யோக்யங்கள் ஆக்கி –
பிராப்தங்களான அனுபவங்களிலே மூட்டி –
அயோக்ய விஷயாந்தரங்களில் பட்டி புக்க வாசனைகளை மாற்றுவிக்கவும் –

அக் கரையில் அபிமத தேசத்துக்கு போக ஓடம் பார்த்து இருப்பார்
நினைத்த போது விட ஒண்ணாத பண பந்த த்யூதத்தில் இழியாதே
வேண்டின மட்டிலே தலைக் கட்டுகைக்கு ஈடான விஹார த்யூதத்தில் இழிந்தாலும்
த்யூத சாஸ்திரத்தின் படி அடி தப்பாதே கருவி வைக்குமா போலே
ஆஜ்ஞா அனுஜ்ஞைகளால் அடிமை கொள்ளுகிற சாசிதாவினுடைய சாசனத்துக்கு
பொருந்தின கால விசேஷாதி நியதமான கைங்கர்யத்தை
பித்த பரிஹார்த்தமாக ஷீர சேவை பண்ணுவாரைப் போலே அன்றிக்கே
அயத்ன லப்தமான ஔஷத்தாலே அவிலம்பிதமாக ஆரோக்கியம் பெற்றவர்கள்
பால் வார்த்து உண்ணுவாரைப் போலே உகந்து பண்ணவும்

அப்போது
நித்ய சித்தே ததாகாரே தத் பரத்வே ச பௌஷ்கர யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யா சௌ சந்நிதிம் வ்ரஜேத் -என்றும்
யதா சாஸ முத்ரமம்ப அப்தை ச்ப்ருஷ்டமேத்யு போக்யதாம் ததைவ ஹி மனுஷ்யாணாம்
பக்தை சம்பாவிதோ ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
ஒரு அதிகாரி விசேஷத்துக்காக சாந்நித்யாதிகளைப் பண்ணி பரமை காந்தியான தன்னை உகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணி இருக்கிற எம்பெருமான் பக்கலிலே
சர்வாதிசாயி ஷாட் குண்யம் சம்ஸ்திதம் மந்திர பிம்பயோ -என்கிற பூர்த்தியையும்
ஆபீடான் மௌலி பர்யந்தம் பஸ்யத புருஷோத்தமம் பாதகான்யாசு நச்யந்தி கிம் புனச்தூப பாதகம் -என்கிற பாவனத் மத்வத்தையும் –
சந்தர்ச நாத கஸ்மாச்ச பும்ஸாம் சம்பூட சேதஸாம் குவாச ந குபுத்திச்ச குதர்க்க நிசயச்சய்
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்தி கத்வம் லயம் வ்ரஜேத் -என்கிறபடியே
பிரத்யஷாதி பிரமாண த்ரயத்திலும் ஹேது பல பாவத்தாலே வரும் மதி மயக்குகள்
எல்லா வற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் -என்றும்
தமர் உகந்தது எவ்வுருவம் -என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே
அவாங்மனஸா பரிச்சேத்யமான ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தையும்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணா-என்கிற ஆகர்ஷகத்தையும் அனுசந்தித்து
சதீவ ப்ரிய பர்த்தாரம் ஜன நீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்ய வந்மித்ரம் மித்ர வல்லால யேத்திரம்
ஸ்வாமித்வேந ஸூ ஹ்ருத்வேந குருத்வே ந ச சர்வதா
பித்ருத்வே ந ததா பாவ்யோ மாத்ருத்வே ந ச மாதவ
யதா யுவா நம் ராஜா நம் யதா ச மத ஹஸ்தி நம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்-என்றும்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோப சரேத்திரம்-என்றும் சொல்லுகிறபடியே
அவ்வோ சம்பந்த வர்க்க பரத்வ சௌலப்யாதிகளுக்கு அனுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும் –

அப்போது
ததா ஹி யத் கார்யமுபைதி கிஞ்சித்துபாய நம் சோபஹ்ருதம் மஹார்ஹம்
ச பாதுகாப்யாம் ப்ரதமம் நிவேத்ய சகாரா பச்சாத் பரதோ யதாவத் -என்று
திருவடி நிலைகள் விஷயத்தில் ஸ்ரீ பரத ஆழ்வான் நடத்தின ராஜ சேவக வ்ருத்தியை ந்யாயார்ஜித த்ரவ்யங்களாலே நடத்தவும் –
இவ் வ்ருத்தியை வாழ்க்கைப் பட்ட வதூவின் மாங்கல்ய ஸூத்ராதி ரஷண மாத்ரமாக நினைத்து இருக்கவும்
இப்படி பகவத் உபக்ரமாய் பாகவத பர்யந்தமாக வருகிற கைங்கர்யாக்ய புருஷார்த்த சித்திக்கு பிரதான காரணம்
பாபிஷ்ட ஷத்த்ர பந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத்
ஆச்சார்யவத்தயா முக்தௌ தஸ்மாதா சார்யவான் பவேத் -என்றும்
எம் மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே –என்றும்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்றும் சொல்லுகிறபடியே
சதாச்சார்ய சம்பந்தமே என்று விச்வசித்து

அபிஷேகம் பண்ணப் புகுகிற ராஜ குமாரனுக்கு ராத்ரியிலே விளக்கு ஏற்றி வைக்குமா போலே
தனக்கு அவர்கள் பண்ணின வெளிச் சிறப்பையும் அதடியாக தனக்கு வந்த கைங்கர்யாதிகளையும் அனுசந்தித்து
அவர்கள் பக்கலிலே க்ருதஜ்ஞனாய் இருக்கவும்
இவை எல்லாவற்றுக்கும் சாதாரணமான பிரதான காரணமுமாய்
முக்த தசையிலே ஆத்ம அனுபந்தியான பகவத் அனுபவத்தைப் பற்ற
அபர்ய நு யோஜ்ய ஸ்வா தந்த்ரம் அடியாக சங்கிதமாம் விச்சேததுக்கும் பரிஹாரமாய் இருப்பது

இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்றும்
போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டார் -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்றும்
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தி தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன் -என்றும்
தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை -என்றும் சொல்லுகிறபடியே
அபுநாவ்ருத்தியிலும் -முன்பு சம்சரிக்கையில் போலே சத்ய சங்கல்பனாய் சேஷியான ஸ்ரீ யபதியினுடைய
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து-என்று
சொல்லப்பட்ட சஹஜ காருண்யம் என்று தெளிந்து அவ்விஷயத்திலும் க்ருதஜ்ஞானாய் இருக்கவும் பிராப்தம் –

இவ் வுத்தர க்ருத்யத்தில் மநோ வாக் காயங்கள் என்று சொல்லுகிற கரணங்கள் மூன்றாலும்
பரிஹரணீயங்களிலும் பரிக்ராஹ்யங்களிலும் சாரம் இருக்கும் படி சொல்லுகிறோம்
விஷச்ய விஷயாணாம் ச தூர மத்யந்த மந்தரம்
உப புக்தம் விஷம் ஹந்தி விஷயா ஸ்மரணாதபி – என்றும்
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும் சொல்லுகையாலே
பரம புருஷார்த்த ருசி குலையாமைக்காக மறக்க வேண்டுமவற்றில் பிரதானம் -விஷயாஸ் வாதம்
க்ருதத்நதை வாராமைக்காக நினைக்க வேண்டுமவற்றில் பிரதானம் ஆசார்யன் செய்த பிரதம கடாஷம் முதலான உபகாரம் –
கார்ப்பண்யம் குலையாமைக்காக சொல்லாது ஒழிய வேண்டுமவற்றில் பிரதானம் -ஆத்ம உத்கர்ஷம் –
உபாய நிஷ்டையை மறவாமைக்காக-சதைவம் வக்தா -என்கிறபடியே -சொல்ல வேண்டுமவற்றில் பிரதானம் த்வயம்
உகந்து பணி கொள்ள உரியனான எம்பெருமான் திரு உள்ளம் அழலாமைக்காக
கரண த்ரயத்தாலும் செய்யாதன செய்யோம் என்னுமவற்றில் பிரதானம் ப்ரஹ்ம விதபசாரம்
புருஷார்த்த சாகரம் வற்றுதல் வரையிடுதல் செய்யாமைக்காக கரண த்ரயத்தாலும்
கர்த்தவ்யங்களில் பிரதானம் –
பகவத் கைங்கர்யத்தின் எல்லை நிலமாய் சாஸ்திர அநுஜ்ஞாதமான ஆசார்யாதி பாகவத கைங்கர்யம் –
ஸ்வயம் பிரயோஜனமான இவ் உத்தர க்ருத்யமும் ரகஸ்ய த்ரயத்தில் பல பிரதி பாதகங்களான
பிரதேசங்களிலே அனுசந்தேயம் –

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை எல்லாம்
மண்ணுலகத்தில் மகிழ்ந்து அடைகின்றனர் வண் துவரைக்
கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண்ணமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே–

பிரணயி நமிவ ப்ராப்தம் பச்சாத் ப்ரியா ஸ்வ சமந்திதம்
மஹதி முஹூராம் ருஷ்டே த்ருஷ்ட்வா மனௌ மணி தர்ப்பணே
ப்ரபத நத நா சந்த சுத்தை ப்ரபும் பரி புஞ்ஜதே
பரஸ் ருமர மஹா மோத ஸ்மேர பிர ஸூ நசமை க்ரமை –

————————————————————————–

அதிகாரம் -16-புருஷார்த்த காஷ்ட்ட அதிகாரம் –

ஸ்வ தந்திர ஸ்வாமித்வாத் ஸ்வ பஹூ மதி பாத்ரேஷூ நியதம்
ஸ்ரீய காந்தோ தேவ ஸ கலு விநியுங்க்தே சிதசிதௌ
யதா லோகாம் நாயம் யதிபதிமுகை ராஹி ததியாம்
ததோ ந கைங்கர்யம் ததபிமத பர்யந்தம் அபவத் –

இங்கு பகவத் கைங்கர்யத்தை பாகவத கைங்கர்ய பர்யந்தமாகச் சொல்லுகைக்கு அடி என் என்னில்
பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பர சேஷீ-என்று
வேதார்த்த சங்க்ரஹத்திலே அருளிச் செய்த படி
சர்வேஸ்வரனைப் பற்ற சேஷ பூதனான இவன் அதிசய ஆதானம் பண்ணப் பிராப்தன் –
அவ் வதிசயம் தான் வஸ்து சக்தியை அனுரோதித்து வர வேணும் —
ஆனால் ஜீவனுக்கு பரனைப் பற்ற சக்யமான அதிசயம் எது என்று பார்த்த இடத்தில்
சரீரத்வாதி முகத்தாலே அதிசய ஆதானம் பண்ணுகை இவனுக்கும் அசித்துக்கும் பொதுவாய் இருந்தது –
இவன் சேஷிக்கு விசேஷித்துப் பண்ணும் அதிசயம் சைதன்ய முகத்தாலேயாய் இருக்கும் –

அதில் இவன் சாஸ்திர விருத்தமாக வர்த்திக்கும் போது சாசிதாவாய் தண்டகரான ஈஸ்வரனுக்கு
லீலா ரச மாத்ரத்தை உண்டாக்கி அம்முகத்தாலே அதிசய தாயகனாம் –
சாஸ்திர அனுகுணமாக வர்த்திக்கும் போது
சுபே த்வசௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதே அசௌ பரம சரீரீ-என்கிறபடியே
ஈஸ்வரனுக்கு சந்தோஷத்தை உண்டாக்கி அவனுடைய ஔதார்யாதி குணங்கள் குமரிராத படி
அம் முகத்தாலே உதாரா சர்வ ஏவைதே என்று அவன் தானே கொண்டாடும்படி அதிசய தாயகனாம்
அப்படியே நித்தியரும் முக்தரும் ஈஸ்வர அபிப்ராயத்தை சாஷாத் கரித்து பண்ணுகிற கைங்கர்யங்களாலே –
ப்ரஹர்ஷயாமி ச நாத ஜீவித -என்கிறபடியே
போக விசேஷத்தை உத்பாதித்து அம் முகத்தாலே அதிசயா தாயகர் ஆவார்கள் –
இப் பிரகாரம் சாஸ்திர முகத்தாலே ஈஸ்வர அபிப்ராயத்தை அறிந்து கைங்கர்யம் பண்ணுகிற கிருதக்ருத்யனுக்கும் சமானம் –

இவற்றில் சாஸ்திர விருத்தங்களாலே
ஈஸ்வரனுக்கு லீலா ரச மாத்ரத்தை உண்டாக்கும் போது தனக்கு அனர்த்த பர்யவசிதமாய் இருக்கும் –
பத்த தசையிலே சாஸ்த்ரத்தாலும் முக்த தசையிலே பிரத்யஷத்தாலும் ஈஸ்வர அபிப்ராயத்தைக் கண்டு
தத் அனுரூபமாக வர்த்திக்கும் போது
ஈஸ்வரனுடைய லீலாதி புருஷார்த்ததுடனே ஆநு ஷங்கிதமாக தனக்கும் ஸ்வ அபிமத புருஷார்த்தம் உண்டாகும்
ஆன பின்பு
சேதனனான இவன் புத்தி பூர்வகமாக ஒரு பிரவ்ருத்தி பண்ணும் போது தன் புருஷார்த்தமும்
ஆநு ஷங்கிதமாகிலும் புகிர வேண்டியதால் அது வரும் போது ஈஸ்வர அபிப்ராய விசேஷம் அடியாக வர
வேண்டிதாகையால் அதுக்காக ஈஸ்வர அபிப்பிராயத்தை ஆராய்ந்த இடத்தில்
பாகவத கைங்கர்யம் அவனுக்கு சர்வத்திலும் அபிமதமாய் இருந்தது –

இவ் வர்த்தத்தில்
ஆராதநாநாம் சர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்
தஸ்மாத் பரதம் ப்ரோக்தம் ததீ யாராதனம் பரம் -என்றும் –

மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதி ரப்யதிகா பவேத்
தஸ்மாத் மத்பக்த பக்தாச்ச பூஜநீயா விசேஷத -என்றும் –
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாம் சாநுமோதனம்
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா
ஸ்வயம் ஆராதநே யத்நோ மமார்த்தே டம்ப வர்ஜனம்
மம அநு ஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி
பக்தி ரஷ்டாவித ஹி ஏஷா யஸ்மின் ம்லேச்சே அபி வர்த்ததே
ச விப்ரேந்த்ரோ முனி ஸ்ரீ மான் ச யதி ச பண்டித
தஸ்மை தேயம் க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதா ஹி அஹம் -என்றும்

அந்ய தேவதா பக்தா யே மத் பக்த ஜன ப்ரியா
மாமேவ சரணம் ப்ராப்தாச்தே மத்பக்தா பிரகீர்த்திதா -என்றும்
தஸ்ய யஜ்ஞ வராஹச்ய விஷ்ணோ ரமித தேஜஸ
ப்ரணாமம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம-என்றும்
ததாஸ்ரயஸ் யாஸ்ரயணாத் தஸ்ய ச தஸ்ய ச
சம்சேவ நான்நர லோகே பூயந்தே சர்வ பாதகை -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால் ராஜாவுக்கு ராஜ குமார உபலாலனம் போலே
பாகவத கைங்கர்யம் பகவானுக்கு அபிமதமாய் இருக்கையாலே
சேஷ பூதனான இவன் செய்யும் கிஞ்சித் காரங்களில் பாகவத கைங்கர்யம் பிரதானம் ஆயிற்று –

இவ் விடத்தில் தத்தவ வித்துக்கு பிரமாண சரணியைப் பார்த்தால் –
யே யஜந்தி பித்ரூன் தேவான்-இத்யாதிகளில் படியே ஈஸ்வரன் பாகவத சரீரனாய்க் கொண்டும் ஆராத்யனாம் —
ச ச மம ப்ரிய -என்கிறபடியே பரமைகாந்தி விஷயத்தில் ப்ரீதி பரதந்த்ரனான பிரகாரியினுடைய நினைவைப் பார்த்தால்
ஜ்ஞாநீ த்வாத்மை மே மதம் -என்கிறபடியே
பாகவத கைங்கர்யத்தைப் பார்த்தால் பகவான் தன் அந்தர்யாமி பக்கலிலே பண்ணினதாக உகக்கும் –

இப்படி சேஷிக்கு அபிமதம் என்கிற அளவே அன்றிக்கே
சேஷத்வம் ஆகிற சம்பந்தம் தான் சத்வாரமாகவும் உண்டாகையாலே கைங்கர்யமும் சத்வாரமாகவும் பிராப்தம்
அது எங்கனே என்னில்
நித்யம் ஸ்ரியா சமே தஸ்ய பக்தே ராத்மவத சதா
சஹ சத்வாரகம் ச ஸ்யாத் சேஷித்வம் பரமாத்மன -என்கிறபடி
ஸ்வ தந்த்ரனாய் ஸ்வச்சந்த சீலனான ராஜா தான் பூண்ட ஆபரணத்தையும் இட்ட மாலையையும்
அடியார்களுடையவும் ஆனை குதிரைகளுடையவும் கழுத்திலே இடுமா போலே
அடியார்க்கு ஆட்படுத்த விமலன் -என்றும்
நாரத அஹமநுப்ராப்த ஸ்வ தர்சன குதூஹலாத்
ப்ரபவோ பகவத் பக்தா மாதர்சாம் சத்தம் த்விஜ-என்றும்
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் சொல்லுகிறபடியே
அத்யந்த பாரதந்த்ர்யாதிகள் அடியாக பகவத் இஷ்ட விநியோஹ அர்ஹதையாலே –
பகவச் சேஷத்வம் தான் யாவதாத்ம பாவியான கட்டளையிலே பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆயிற்று –

இங்கு பாகவதத்வம் அடியாக ஸ்வரூப பிரயுக்தமாகவும் குணைர் தாஸ்யம் உபாகத -என்கிற நியாயத்தாலே
குண ஞானம் அடியாக ஸ்வ இச்சையாலும் வந்த
பாகவத சேஷத்வம் -பகவத் பக்தா -மாத்ருசாம் -என்கிற இரண்டு பதத்தாலும் ஸூசிதம்-
இப் பாகவத சேஷத்வம் க்ரயம் செல்லும் படியை –அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -என்று
கல்ப ஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் அருளிச் செய்தார்
இது மத்யம பதத்துக்கு தாத்பர்யார்த்தம் -இவ்வர்த்தத்தை அனுசந்தித்தால் இச் சேஷத்வம் சத்வாரமாகவும்
அத்வாரமாகவும் நின்ற நிலையிலே சேஷ வ்ருத்தியான கைங்கர்யமும் நிற்கும் –
ஆகையால் தன் சக்திக்கு அனுரூபமாக பகவத் கைங்கர்யத்தினுடைய சாத்ய ஆகார விவ்ருத்தியான புருஷார்த்தத்தில்
எல்லை நிலத்தை தரிசு தூறு விடாது ஒழிய ப்ராப்தம்

இது பர்த்துர் ப்ருத்ய கணச்ய ச -என்றும்
ஆப்தோ விஷ்ணோர நாப்தச்ச த்விதா பரிகர ஸ்ம்ருத
நித்யோ வந்த்யோ ந வா நித்ய கர்ம வச்யோ முமுஷூபி -என்று ஸ்ரீ பௌஷ்காதிகளில் சொன்ன நியாயத்தாலே
பதி வ்ரதா தர்மம் போல் இருக்கிற பரமை காந்தித்வத்துக்கு
மிகவும் உசிதமான பத்தி சித்தா நு வர்த்தனம் ஆகையாலே ஹேத்வந்த்ரத்தால் அன்றிக்கே
அனன்யார்ஹ சேஷத்வ ஞானம் அடியாக வருகையாலே இவ் வன்ய சேஷத்வம் விருத்தம் அன்று –

இப் பாகவாத சேஷத்வம் ஸ்வா பாவிகமோ ஔபாவிகமோ என்னில் –
கர்மாத் யுபாதிகள் அற-நித்யாபிவாச்சித பரஸ்பர நீச பாவை -என்கிறபடியே
யாவதாத்ம பாவியாகக் கொண்டு முக்த தசையிலும் அனுவர்த்திப்பது ஓன்று ஆகையாலே
ஸ்வா பாவிகம் என்னவுமாம் –
பகவத் சம்பந்த ஜ்ஞான விசேஷ நிபந்தனம் ஆகையாலே ஔபாவிகம் என்னவுமாம் —

இப்படி யாகில் இருவருக்கும் பாகவதத்வம் உண்டானால் ஒருவரைப் பற்ற
ஒருவருக்கு சேஷத்வமும் சேஷித்வமும் வருகை விருத்தம் அன்றோ என்னில்
பரஸ்பர உபகார்யே உபகாரக பாவாதி களில் போலே இங்கும் விரோதம் இல்லை –
அதிகார்ய வஸ்தையிலே கிரியைக்கு சேஷி யானவன் தானே கர்த்தர வஸ்தையிலே இதுக்கு சேஷமாய் நில்லா நின்றான்
அப்படியே அந்யோந்யம் பண்ணும் அதிசயங்களை உபஜீவியாதே ஒருத்தருக்கு ஒருத்தர் அதிசயாதானம் பண்ணினால்
அதிசயாதாயகத்வ வேஷத்தாலே இருவருக்கும் சேஷத்வம் உண்டாய் அதிசயத்துக்கு வேஷத்தாலே
இருவருக்கும் சேஷித்வம் உண்டாக குறை இல்லை –

இப்படியே ஈஸ்வர இச்சையாலே இருவரும் பரஸ்பரம் அதிசயாதாயகராக விநியுக்தர் ஆகையாலே
இருவருக்கும் பாகவத சேஷித்வ சம்பந்தம் ப்ராமாணிகம் –
குண வசீக்ருதனான தன் நினைவாலே பகவத் விஷயத்திலும் பாகவத விஷயத்திலும் வரும் தாசத்வம்
போக வர்த்தகமாகக் கொண்டு தன்னேற்றமாய் இருக்கும்
இவ் விடத்தில் ஈஸ்வரன் ஸ்வா தந்த்ர்ய சஹக்ருதையான தன் இச்சையாலே பாகவதர்க்கு எல்லாம் சேஷித்வத்தை உண்டாக்கும்
இவர்கள் இச்சையும் கூட்டிக் கொண்டு இவர்களுக்கு பாகவத சேஷத்வத்தை உண்டாக்கும்
இப்படி ஸ்வாமிக்கு இஷ்ட விநியோஹ அர்ஹராய்க் கொண்டு சேஷிகளாய் நிற்கை தன்னாலே இருவரும் ஸ்வரூபம் பெற்றார்கள்
ஸ்வ அபீஷ்டமான பாகவத சேஷத்வமும்
அதன் பலமான பாகவத கைங்கர்யமும் சித்திக்கையாலே இருவரும் புருஷார்த்த காஷ்டை பெற்றார்கள்
இருவரையும் இப்படி பரஸ்பர சேஷ சேஷிகளாக நியமித்து ரசிக்கையாலே
ஈஸ்வரன் தன் ஈஸ்வரத்வமும் போக்த்ருத்வமும் பெற்றான் –

இப்பிரகாரத்தாலே தங்களுக்கு வந்த சேஷத்வ சேஷித் வாதிகள் எல்லாம் ஈஸ்வரனுடைய போக்த்ருத்வத்துக்கு
சேஷம் என்று தெளிகையாலே இருவருக்கும் கோதற்ற புருஷார்த்த காஷ்டை உண்டாகிறது –
இப்படி நிச்சிதார்த்தராய் சார வித்துக்களான க்ருத க்ருத்யருக்கு
அபராத ருசியும்
அதி சங்கையும்
அந்ய தேவதா ஸ்பர்சமும்
ஆத்மாதீன போகமும்
ஆத்மார்த்த போகமும் ஆகிற
பழுதில்லாத பரமை காந்திகளுடைய ப்ரசாதமே எப்போதும் ஸ்வயம் பிரயோஜனமாக அபேஷணீயம் –

வேதம் அறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன் வகுத்த வகை பெறு நாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறை நூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே –

நாதே ந த்ருணம் அந்யத் அந்யத் அபி வா தந்நாபி நாலீகி நீ
நாலீக ஸ்ப்ருஹணீய சௌரபமுசா வாசா ந யாசா மஹே
சுத்தா நாம் து லபே மஹி ஸ்திரதியாம் சுத்தாந்த சித்தாந்தி நாம்
முக்தைச்வர்ய திந ப்ரபாத சமயாசித்தம் ப்ரசத்திம் முஹூ —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -12- சாங்க ப்ரபதன அதிகாரம் /அதிகாரம் -13-க்ருதக்ருத்ய அதிகாரம் /அதிகாரம் -14 ஸ்வ நிஷ்ட்டாபிஜ்ஞஅதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 27, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -12- சாங்க ப்ரபதன அதிகாரம்–

அபீஷ்ட்டே துஸ்ஸாதே ஸ்வத இதரதோ வா க்வசன தத்
பரந்யாசம் யாச்சா அந்விதம்அபிவதந்தி பிரபதனம்
இத பச்சாத் அஸ்மத் யதன நிரபேஷேண பவதா
சமர்த்ய அசௌ அர்த்த து இதி மதி விசேஷம் ததாவிது —

விரும்பும் பலன் ஒன்றை சுய முயற்சியில் பெறமுடியாத சமயத்திலும் வேறு எந்த முயற்சியிலும் பெற முடியாத போது,
அந்தப் பலனை அடைய ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது –ப்ரபத்தி -இது ஆசார்யர்கள் கூறுவது
இந்த க்ஷணம் முதல், என் பொருட்டு இந்தச் செயலை எனக்காக முடித்தருள்க—அடியேன் இதற்காக எவ்வித முயற்சியும்
செய்ய மாட்டேன் என்கிற மன உறுதி என்றும் சொல்லலாம்

முமுஷூவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கி ஸ்வரூபம் ஆவது
ஆபரணத்தை உடையவனுக்கு அவன் தானே ரஷித்துக் கொண்டு பூணக் கொடுக்குமா போலே
யதாவஸ்திதமான ஆத்ம நிஷேபம் -அதாவது
பிரணவத்திலே பிரதம அஷரத்தில் பிரகிருதி பிரத்யயங்களாலே –
சர்வ ரஷகனாய் -சர்வ சேஷியாய் தோற்றின சர்வேஸ்வரனைப் பற்ற
ஆத்மாத்மீய ரஷண வியாபாரத்திலும்
ஆத்மாத்மீய ரஷண பலத்திலும்
ஸ்வ அதீனமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயம் இல்லாத படி
பரந்யாச பிரதானமான அத்யந்த பாரதந்த்ர்ய விசிஷ்ட சேஷத்வ அனுசந்தான விசேஷம் —

ஸ்வாத் மாநம் மயி நிஷிபேத்–( ஸாத்யகி தந்த்ரம் ) (தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஒப்படைப்பது —)என்று
சோதிதமான இவ்வனுசந்தான விசேஷத்தை அனுஷ்டிக்கும் படி –
சேஷியாய் ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன் பிரயோஜனமாகவே தானே ரஷிக்கும் படிக்கு ஈடாக –
அனன்யார்ஹ அநந்ய அதீன சேஷ பூதனாய்-அத்யந்த பரதந்த்ரனான நான்
ஆத்மாபிசாயம் ந மம -மஹாபாரதம்-என்னுடைய ஆத்மா என்னைச் சார்ந்ததல்ல;-என்கிறபடியே –
எனக்கு உரியேன் அல்லேன் –
ஒன்றை நிரூபாதிகமாக என்னது என்னவும் உரியேன் அல்லேன் –
ஸ்வயம் ம்ருத் பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹி ந
ஸ்வ ரஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது பர ரஷணே-(ஆத்மாத்மீய ரக்ஷணம் = ஜீவன், மண்கட்டி போன்றவன்;
தன்னைக் காத்துக்கொள்ளும் திறனற்றவன் ;எம்பெருமானையே நம்பி இருப்பான் –இப்படி இருப்பவன் ,மற்றவர்களைக் காப்பது இயலாதது .
ஆகவே , தன்னையும் ,தன்னைச் சேர்ந்தவர்களையும் ,சுயமாகக் காக்கும் திறனற்றவன்.பகவானின் அருள் வேண்டும் .) -என்கிறபடியே
என்னையும் என்னது என்று பேர் பெற்ற வற்றையும்
நானே ஸ்வ தந்த்ரனாயும் பிரதான பலியாயும் ரஷித்துக் கொள்ள யோக்யனும் அல்லேன் –

ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச ஏதத் பகவதே சர்வம் இதி தத் ப்ரேஷிதம் சதா —
(உபரிசரவஸு என்பவன் ஒரு அரசன் —அவன் சொன்னதாவது—ஆத்மா ,ராஜ்யம், பொருட்செல்வம் ,மக்கள் மனைவி, வாஹனங்கள்
போன்ற யாவும் எம்பெருமானுக்காகவே உள்ளன. இவ்விதம் , அறிவாளிகள் கூறுவதைப்போல என்னுடையது என்று
நினைக்கிற எல்லாமும் பகவானுக்கே உரியது
உபரிசரவஸு =வஸு என்கிற அரசனுக்கு ,இந்த்ரனால் வானத்தில் செல்லும் விமானம் கொடுக்கப்பட்டிருந்தது;
அதனால், வஸு என்கிற அரசன், உபரிச்ரவசு ஆனான்)என்று
விவேகிகள் அனுசந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஆத்மாத்மீயங்களும் அவனதே –

ஆத்மாத்மீய பர நியாசோ ஹி ஆத்ம நிஷேப உச்யதே-லக்ஷ்மீ தந்த்ரம்
(ஆத்மாவையும் அதைச் சேர்ந்தவற்றையும்/சார்ந்தவற்றையும் காப்பாற்றும் பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்பதே
”ஆத்ம நிக்ஷேபம் ‘ எனப்படும். ஆதலால், எல்லாவற்றையும் காக்கும் பொறுப்பு அவனைச் சேர்ந்தது) –
என்கையாலே இவற்றினுடைய ரஷண பரமும்

ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -விஷ்ணு புராணம்-
(எல்லாவற்றையும் நியமிக்கும் அந்த ஸ்ரீ ஹரி தான், எல்லோரையும் காக்கும் திறன் உள்ளவன்;
அந்தத் திறன் வேறு யாருக்கும் இல்லை )என்கிறபடியே சர்வ ரஷகனான அவனதே –

தேந சம்ரஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்ம நிஷேப உச்யதே –லக்ஷ்மீ தந்த்ரம்-
(பகவானால் காக்கப்படும் ஆத்மாவை ,பலனில்கூடத் தனக்கு உரிமையில்லை என்கிற உறுதியுடன் கேசவனிடம் ஸமர்ப்பிப்பதே ,
”ஆத்ம நிக்ஷேபம் ” இப்படி, ஸமர்ப்பணம் செய்வதால் உண்டாகும் பலனும் அவனுடையதே என்கிற எண்ணம் வேண்டும்)
என்கிறபடியே ரஷண பலமும் பிரதான பலியான அவனதே என்று பாவிக்கை –

முமுஷூ மாத்ர சாமான்யம் ஸ்வரூபாதி சமர்ப்பணம்
அகிஞ்சனே பரந்யாச த்வதிக அங்கிதயா ஸ்தித
அத்ர ரஷா பரந்யாச சமஸ் சர்வே பலார்த்தி நாம்
ஸ்வரூப பல நிஷேபஸ் த்வதிகோ மோஷ காங்ஷிணாம்-

(முமுக்ஷுக்கள் தங்களுடைய ஸ்வரூபம், பலன் இவற்றை சமர்ப்பணம் செய்கின்றனர்.
தன்னைக் காக்கும் பொறுப்பையும் ஸமர்ப்பிப்பது, முமுக்ஷுக்களுக்கு மேலும் ஒரு அங்கியாகிறது.
மோக்ஷத்தை விரும்புபவர் ஸ்வரூபம், பலன் தன்னைக் காக்கும் பொறுப்பு யாவற்றையும் சமர்ப்பணம் செய்கின்றனர்)

பலார்த்தியாய் உபாய அனுஷ்டானம் பண்ணுகிற ஜீவன் பலியாய் இருக்க ஈஸ்வரன் இங்கே
பிரதான பலியான படி எங்கனே என்னில்
அசித்தின் பரிணாமங்கள் போலே சித்துக்கு தான் கொடுத்த புருஷார்த்தங்களும் சர்வ சேஷியான
தனக்கு உகப்பாய் இருக்கையாலே
ஈஸ்வரன் பிரதான பலி யாகிறான் –

அசேதனமான குழமணனை அழித்துப் பண்ணியும் ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு
சேதனமான கிளியை பஞ்ஜரத்தில் வைத்துப் பால் கொடுத்தும் -வேண்டினபடி பறக்க விட்டும்
அதன் உகப்பு கண்டு உகக்கிறதோடு வாசி இல்லை இறே நிரபேஷரான ரசிகருக்கு
ஆன பின்பு இங்கு
ஸ்வ நிர்பரத்வ பர்யந்த ரஷகைகார்த்ய பாவ நம்
த்யுக்த ரஷா பல ஸ்வாம்யம் ரஷ்யஸ்யாத்ம சமர்ப்பணம் —
(ஆத்ம ஸமர்ப்பணம் என்பது
1. தன்னுடைய ஆத்மா என்பது ,தன்னைக் காப்பாற்றுகிற பகவானுக்காகவே உள்ளது
2. ஆத்மா குறித்த தனது பொறுப்பு கிடையாது
3.இப்படி ஸமர்ப்பணம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் தனக்கல்ல -இவ்வாறு உறுதியிட்டுச் செய்வது ஆத்ம ஸமர்ப்பணம்)

வபுராதிஷூ யோ அபி கோ அபி வா குணத அஸாநி யதாததாவித
ததயம் தவ பாத பத்ம யோரஹமத்யைவ மயா சமர்ப்பித -ஸ்தோத்ர ரத்னம் -52-
(ப்ரபத்தி பண்ணுகிற நான் த்ரேகம் முதலான ரூபமான வஸ்துக்களிலே ஏதேனுமாகவும் ஆத்மகுணங்களிலே
ஏதேனும் உடையவனாகவும் ஆகக்கடவேன் .என் ஸ்வரூபங்களை நான் உள்ளது உள்ளபடி அறியாமலிருக்கலாம்.
அறியாமலே,ப்ரபத்தி அதிகாரியாகையாலே ஏதேனும் ஒரு ஸ்வரூபஸ்வபாவம் உடைய நான் ,
உனது திருவடித் தாமரைகளில் இப்போதே என்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டேன்
ஆத்மவிசாரம் தேஹமே ஆத்மா என்பர் ; தேஹம் இருந்தும் அறிவு இல்லையென்றால் ,இந்த்ரியம் ஆத்மா என்பர் ;
கண் , காது முதலிய இந்த்ரியங்கள் பலவாக ஒரே தேஹத்தில் இருப்பதால், ஒரே ஆத்மா என்பதற்காக ”மனஸ் ” ஸே ஆத்மா என்பர் ;
ப்ராணவாயுவால் ஜீவிப்பதால் அதையே ஆத்மா என்பர் ;இப்படிப் பலவிதமாகச் சொல்வர் .ஆதலால் எனக்கு ஸ்வரூப நிச்சயம் ஏற்படவில்லை .
இதனால், குண விஷயத்திலும் நிச்சயமில்லை.பக்தியோகம் செய்பவர்கள் ஆத்மா நித்யமா அநித்யமா அணுவா விபுவா
உடல் அளவா ஜடமா , ஸ்வயம்ப்ரகாஸமா ஞானம் என்கிற நிலை உள்ளதா ,இல்லையா என்று ஆத்ம ஸ்வரூபத்தைத் தேடுகிறார்கள்.
எனக்கு அதெல்லாம் தேவையில்லை .நான் ப்ரபத்தி பண்ணுகிறேன்.உனக்கே நான் சேஷன் என்று ,
இதை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்.எந்த ஸ்வரூபம் ஆனாலும் ,எந்த ஸ்வபாவம் உனக்கே சேஷம்.)என்கிறதுக்கு
தாத்பர்யம் என் என்னில் –

முத்திரை இட்டு இருக்கிற ராஜாவின் கிழிச் சீரை ஒரு ஹேதுவாலே தன் கையில் இருந்தால் ராஜா கைக் கொள்ளும் என்று
உள்ளிருக்கிற மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை விசதமாக அறியாதே கிழிச் சீரையோடே மீளக் கொடுக்குமா போலே
தேஹாத்யதிரிக்த ஆத்மாவின் ஸ்வரூப ஸ்வ பாவ ஸ்திதிகளை விசதமாக விவேகிக்க அறியாதாரும்
உள்ள அறிவைக் கொண்டு ஆத்ம சமர்ப்பணம் பண்ணினால்
அவ்வளவாலும் அநாதி காலம் பண்ணின ஆத்ம அபஹார சைர்யத்தால் உண்டான
பகவன் நிக்ரஹம் சமிக்கும் என்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திரு உள்ளம் –

இதுக்கு மேலே -53-மம நாத யதஸ்தி-என்கிற அடுத்த ஸ்லோகத்திலே
(பகவான் கேட்கிறானாம் —
இதுவரை யாருக்கு சேஷனாய் இருந்தாய் ? ஸ்வதந்த்ரமாகவும் இருந்தாய்.இப்படி உம் இஷ்டப்படி இருந்துவிட்டு ,இப்போது
உம்முடைய ஸ்வாதந்தர்யத்தை ஏன் விடுகிறீர் ? எனக்கு மட்டும் தான் ஸமர்ப்பணம் என்கிறீர் .பிராட்டிக்கும் எனக்குமாக ,
ஆக இருவருக்குமாக இந்த ஸமர்ப்பணம் இல்லையென்றால் இதற்கு நான் எப்படி சம்மதிப்பது ?
பலபேருக்கு சேஷமாக இருந்தீர். ஸ்வதந்த்ரமாக இருந்தீர். –இப்போது, உன் திருவடித்தாமரைகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன்
என்பதை மாற்றினால் —- உமக்கு ஸ்வாதந்த்ரியம் இருப்பது , ”மயா ” என்கிற உம்முடைய சொல்லாலே வெளியாகிறதே —
அடியேன் அப்படிக் கருதவில்லை—அந்தச் சொல்லுக்கு அது பொருள் அல்ல !

மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம் ஸகலம் தத்த்தி தைவ வ மாதவ |
நியத ஸ்வம் இதி ப்ரபுத்த தீ : அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

நாதனே—பகவானே—–எந்தப்பொருள் எனதாக உள்ளதோ நான் எதுவாக இருக்கிறேனோ அது எல்லாமே பிராட்டியுடன் சேர்க்கை
உனக்கே தானே ! பகவானே ! எப்போதும் உடைமை சொத்து இவ்வாறு தெளிவான அறிவை உடைய நான் அந்த அறிவுக்குப்
பின்னால்கூட உனக்கு எதைத்தான் எனதாகக்கொண்டு நானாக ஸமர்ப்பிப்பேன் ?
நானும் , என்னைச் சேர்ந்த சேதநாசேதந வஸ்துக்களும் என் பரம் முதலானவையும் எல்லாமே உனக்கும் பிராட்டிக்கும் என்றும்
பொதுவாக சேஷமாக இருப்பதை நான் முன்னமேயே உணர்ந்து இருக்கிறேன் நான் செய்தது எல்லாம் சேதனனான என்னை
உனக்கு அதீனமாக்கினேன்-ஸ்வாத் மாநம் மயி நிக்ஷிபேத் —-என்று என்னைப் பார்த்து ,எப்படிச் செய்யவேண்டும்
என்று கட்டளை இட்டாயோ அவ்வாறே செய்தேன் )

இச் சமர்ப்பணத்தை பற்ற அனுசயம் பண்ணிற்றும் ஸ்வரூபாதி விவேகம் இன்றிக்கே சமர்ப்பிக்க
புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை ராஜாவுக்கு உபகாரமாகக் கொடுப்பாரைப் போலே )
என்னது -என்கிற அபிமானத்தோடு சமர்ப்பிக்கில் ஆத்ம அபஹார சைர்யம் அடியற்றதாகது என்கைக்காக அத்தனை –
அல்லது சாஸ்திர சோதிதமாய் தாம் அனுஷ்டித்த சமர்ப்பணத்தை அஜ்ஞக்ருதயம் ஆக்கின படி அன்று –

ஆக இரண்டு ஸ்லோகத்தாலும்-
யதா வஸ்தித ஸ்வரூபாதி விவேகம் இல்லையே யாகிலும் -ந மம -என்று ஸ்வ சம்பந்தம் அறுக்கையே-
அஹமபி தேவை வாஸ்மி ஹி பர -என்னும்படி பர சமர்ப்பண பிரதானமான சாஸ்த்ரார்த்தத்தில் சாரம் என்றது ஆயிற்று –

(பிதா த்வம் மாதாத்வம் , தயித நயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத் த்வமேவ , த்வபந்து :
கு ருரஸி கதிஸ் சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவபரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதி அஹமபி
தவைவாஸ்மி ஹி பர : ||–(60ம் ச்லோகம்)
ஜகதாம் த்வம் ஏவ பிதா = எல்லா உலகங்களுக்கும் நீயே பிதா. மாதா = தாய்
தயித தநய : =பிரியமான புத்ரன் .ப்ரிய ஸுஹ்ருத் =இஷ்டமான மித்ரன்
பந்து = உறவு . குரு = இருள்நீக்கும் ஆசார்யன் . கதி = எல்லோருக்கும் கதி .
அஹம் த்வதீய =நான் உனக்கு சேஷன் . த்வத் ப்ருத்ய = உன்னால் வளர்க்கப்படவேண்டியவன்
தவ பரிஜந : = உனக்கு ஊழியன் . த்வத் கதி = உன்னையே பேறாக உடையவன்
ப்ரபந்ந ச = ஸரணாகதி செய்தவன் . ஏவம் ஸதி = இப்படி இருக்கும் போது
அஹம் அபி தவ ஏவ பர அஸ்மிஹி =நானும் உனக்கே பரமாகிறேன் –உன்னால் ரக்ஷிக்க வேண்டியவனாக இருக்கிறேன்)

இப்படி சேஷத்வ அனுசந்தான விசிஷ்டமான ஸ்வ ரஷா பர சமர்ப்பணம்
த்வயத்தில் –உபாய பரமான -பூர்வ கண்டத்தில்
மஹா விஸ்வாச பூர்வக-கோப்த்ருத்வ வர்ண கர்ப்பமான
சரண சப்தோ பலிஷ்ட க்ரியா பதத்திலே சேர்ந்து அனுசந்திக்கப் பிராப்தம் –

இப்படி இவை ஆறும் -ஐந்து அங்கங்களும் ஒரு அங்கியும் -இம் மந்த்ரத்தில் விமர்ச தசையிலே தனித் தனியே அனுசந்தித்தாலும்
வாக்யார்த்த பிரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள் போலே சாங்கமான பிரதானம் ஏக புத்தயாரூடமாம் –
ஆகையால் யதா சாஸ்திரம் சாங்க பிரதான அனுஷ்டானம் சக்ருத் கர்த்தவ்யம் ஆயிற்று –
அநேக வியாபார சாத்ய தானுஷ்கனுடைய லஷ்ய வேதார்த்தமான பாண மோஷம் ஷண் க்ருத்யம் ஆகிறாப் போலே
இவ்வாத்ம ரஷா பர சமர்ப்பணம் இருக்கும் படி என்று ஸ்ருதி சித்தம் –

(ப்ரணவோ தனு : சரோஹ்யாத்மா ,ப்ரஹ்ம தல்லக்ஷ்ய முச்யதே |
அப்ரமத்தேன வேத்தவ்யம்சரவத் —தன்மயோ பவேத் ||–முண்டகோபநிஷத் சொல்கிறது —- ( 2–2–4 )
ப்ரணவமே —வில்.
ஆத்மாவே —-அம்பு
ப்ரஹ்மமே —அதன் குறி
அம்பைப்போல ,கொஞ்சங்கூடக் கவனம் பிசகாமல் எய்யப்படவேண்டும். அப்படி எய்தால் , லக்ஷ்யத்துடன் ஒன்றுபட்ட நிலை வரும்)

இப் பர சமர்ப்பணமே பிரபத்தி மந்த்ரங்களில் பிரதானமாக அனுசந்தேயம் என்னும் இடத்தை
அநே நைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிஷிபேத்
மயி நிஷிப்த கர்த்தவ்ய க்ருதக்ருத்யோ பவிஷ்யதி -ஸாத்யகி தந்த்ரத்திலே,-என்று சாத்யகி தந்த்ரத்திலே
பர ச்வீகாரம் பண்ணுகிற சரண்யன் தானே தெளிய அருளிச் செய்தான் –

(லக்ஷ்யத்தில் –இலக்கு –தைத்த அம்பு, இலக்கோடு ஒன்றிவிடுவதைப்போல , பகவானிடத்தில் ப்ரணவத்தினால்
ஸமர்ப்பிக்கப்பட்ட ஜீவாத்மா, பகவானுடன் ஒன்றி முக்தி நிலையைத் த்யானிக்க வேண்டும்.
இந்த மந்த்ரம் ”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணத்தைச் சொல்கிறது. இதை அம்பை எய்வதற்கு ஒப்பிடுகிறது.
அம்பை எடுப்பது, வில்லில் நாணேற்றுவது, அம்பைத் தொடுப்பது,இழுப்பது , குறிபார்ப்பது என்று பற்பலச் செயல்கள்
ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யப்பட்டாலும் ,அம்பை விடுவது ஒரு நொடியில் நடந்து விடுகிறது.
அதைப்போல,ப்ரபத்திக்கு ஸர்வ அங்கங்கள் இருந்தபோதிலும் ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் ” நொடியில் முடிகிறது.
பகவானுக்குச் சேஷமாகவே த்யானம் செய்யவேண்டும் —-என்று பொருள்
இப்படிச் செய்ய வேண்டியத்தை என்னிடம் செய்தவன், செய்யவேண்டியத்தைச் செய்துள்ளான் –என்று கருத்தாகும் )

இதில் சாங்க அனுஷ்டானமாயிற்றது
கர்த்ருத்வ த்யாக மமதா த்யாக பல த்யாக பல உபாயத்வ த்யாக பூர்வகமான
ஆநு கூல்ய சங்கல்பாதி அர்த்த அனுசந்தானத்தோடே
குரு பரம்பர உபசத்தி பூர்வக த்வய வசன முகத்தாலே
ஸ்வரூப பல ந்யாச கர்மமான ஆத்மா ரஷா பர சமர்ப்பணம் பண்ணுகை-

இக் கர்த்ருத்வ த்யாகத்துக்கு நிபந்தனம்
தன் கர்த்ருத்வம் அவன் அடியாக வந்தது என்று தனக்கு யாவதாத்ம பாவியான பகவத் ஏக பாரதந்த்ர்யத்தை அறிகை–

மம த்யாகத்துக்கும் பல த்யாகத்துக்கும் நிபந்தனம்
ஆத்மாத்மீயங்களுடைய ஸ்வரூப அனுபந்தி பகவத் ஏக சேஷத்வ ஞானம் –

பல உபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தனம்
சரண்ய பிரசாதனமான இவனுடைய அனுஷ்டானம் பிரதான பலத்துக்கு வ்யவஹித காரணமாகையும்
அசேதனம் ஆகையாலே பல பிரதான சங்கல்ப ஆஸ்ரயம் அல்லாமையும் –
ஈஸ்வரன் பல உபாயம் ஆகிறது –

சஹஜ சௌஹார்த்தத்தாலே கரண களேபர பிரதானம் தொடங்கி த்வய உச்சாரணம் பர்யந்தமாக சர்வத்துக்கும்
ஆதி காரணமான தானே பிரசாத பூர்வக சங்கல்ப விசேஷ விசிஷ்டனாய்க் கொண்டு அவ்யவித காரணம் ஆகையாலும்
உபாயாந்தர சூன்யனுக்கு அவ்வோ உபாய ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும்
இங்கன் இருக்கைக்கு அடி தர்மி க்ராஹகமான சாஸ்த்ரத்தாலே அவகதமான வஸ்து ஸ்வ பாவம் ஆகையாலே
இவ் வர்த்தம் உக்திகளால் சலிப்பிக்க ஒண்ணாது –

இது சாங்க அனுஷ்டானத்துக்கு
நடாதூரம்மாள்(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் ) அருளிச் செய்யும் சுருக்கு –
அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே சம்சரித்துப் போந்தேன்-
இன்று முதல் அனுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் –
பிரதிகூலாசரணம் பண்ணக் கடவேன் அல்லேன் –
தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம் முதல் இல்லை –
தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –
தேவரீரே உபாயமாக வேணும் –
அநிஷ்ட நிவ்ருத்தி இலாதல் இஷ்ட ப்ராப்தி இலாதல் எனக்கு இனி பரமுண்டோ -என்று —

இவ்விடத்தில் ஆனுகூல்ய சங்கல்பாதிகள் உபாய பரிகரமாய் சக்ருத்தாய் இருக்கும் –
மேல் இவன் கோலின அனுகூல வ்ருத்யாதிகளோடே கூடப் போகிற இடமும் உபாய பலமாய் யாவதாத்மா பாவியாய் இருக்கும் –
இவற்றில் பிரதிகூல்ய வர்ஜனமும் அம்மாள் அருளிச் செய்த படியே
ஆனுகூல்ய சங்கல்பம் போலே சங்கல்ப ரூபம் ஆனாலும் சக்ருத் கர்த்தவ்யம் என்னும் இடம் ஸ்பஷ்டம் –
அபாயேப்யோ நிவ்ருத்த அஸ்மி -லக்ஷ்மீ தந்த்ரம் ( 50–215 )
(ஸம்ஸாரத்தில் தள்ளக்கூடிய பாவங்களிலிருந்து விலகினேன்-) என்கிறபடியே
அபிசந்தி விராமமாதல் -ப்ராதி கூல்ய ஸ்வரூப நிவ்ருத்தி யாதல் யானாலும்
அதில் பிரதம ஷணம் அங்கமாய் -மேல் உள்ளது பலமாய் கடவது –
இப்படி விஸ்வாசத்திலும் பார்ப்பது –

ப்ரவ்ருத்தி அநு கூலேஷூ நிவ்ருத்தி ச அன்யத பலம்
பிராரப்த ஸூ க்ருதாச்ச ஸ்யாத் சங்கல்பே ச பிரபத்தி –

(ப்ரபத்தி செய்துகொண்ட பிறகு பகவானுக்கு உகப்பைச் செய்வதும் ,உகப்பில்லாததைத் தள்ளுவதும் ப்ரபன்னனின்
பூர்வ ஜந்ம புண்யத்தாலும் ,ப்ரபத்தி சமயத்தில் செய்துகொண்ட சங்கல்பத்தாலும் –அவற்றின் பலனாக அமைகிறது .
ப்ரபத்தி செய்தபிறகு ப்ரபந்நன் இவ்வுலகில் ஜீவிக்கும் காலத்திலும் ப்ரபத்தி பலனைக் கொடுக்கிறது. எப்படியெனில் ,
பகவானுக்கு உகப்பில்லாததை விலக்குதல் உகப்பானதைச் செய்தல் –தானாகவே ப்ரபத்தியின் பலனாகவே ப்ரபந்நன் செய்கிறான்)

ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும்
பிராரப்த சரீரா நந்தரம் மோஷத்தையும்
சேர பலமாகக் கோலி-பிரபத்தி பண்ணுவார்கள் நிபுணர் –

அறவே பரம் என்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மைப்
பெறவே கருதிப் பெரும் தகவுற்ற பிரான் அடிக் கீழ்
உறவே இவனுயிர் காக்கின்ற ஓர் உயிர் உண்மையை நீ
மறவேல் என நம் மறை முடி சூடிய மன்னரே —

(நமது ஆசார்யர்கள் வேத ஸாம்ராஜ்யத்தின் மன்னர்கள்;இவர்கள் ,அவர்களது சிஷ்யர்களாகிய நம்மை, கருணாமூர்த்தியான ,
கணக்கில்லாக் காலமாக நம்மை ரக்ஷிப்பேன் என்று உறுதியுடன் இருக்கிற பகவானின் திருவடியில் சேர்த்து நம்மை ரக்ஷிக்கும்
பொறுப்பை நம்மிடமிருந்து நீக்கி, பகவானே ரக்ஷிக்கவேண்டும் என்பதாக, ரக்ஷிக்கப்பட வேண்டிய பொருளாகச் ஸமர்ப்பிக்கின்றனர் .
நமக்கு,”அந்தர்யாமியாக உன் ஹ்ருதயத்தில் உள்ள பகவான் எப்போதும் உன்னை ரக்ஷிப்பான் ” என்று உபதேசிக்கின்றனர்)

யுக்ய ஸ்யந்தன சாரதி க்ரமவதி த்ரயந்த சந்தர்சிதே
தத்த்வா நாம் த்ரிதயே யதார்ஹ விவித வியாபார சந்தா நிதி
ஹேதுத்வம் த்ரிஷூ கர்த்து பாவ உபயோ ஸ்வாதீ நதை கத்ர தத்
ஸ்வாமி ச்வீக்ருத யத் பர அயம் அலச தத்ர ஸ்வயம் நிர்பர–

(சித் , அசித் , ஈஸ்வரன் —-குதிரை, ரத்தம், ரத சாரதி-இப்படி இந்த மூன்றும் தன்மை செயல்கள் இவைகளில் ஒத்திருக்கின்றன,
என்று வேதாந்தங்கள் சொல்கின்றன . இவற்றில் செயலாற்றுதல் சித் மற்றும் அசித்திடமும் , செயலற்ற தன்மை
ஈச்வரனிடமும் காணப்படுகின்றன.ஆதலால், யஜமானான எம்பெருமானால், காப்பாற்றும் பொறுப்பு ஏற்கப்படுவதால்
ஜீவன் ( சித் ) தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொறுப்பு இல்லாதவனாகிறான்)

————————————————————————-

அதிகாரம் -13-க்ருதக்ருத்ய அதிகாரம் –

சமர்த்தே சர்வஜ்ஞ சஹஜ சஹ்ருதி ஸ்வீக்ருத பரே
யத் அர்த்தம் கர்த்தவ்யம் ந புநரிஹ யத் கிஞ்சித் அபி ந
நியஸ் சந்தஸ் தஸ்மின் நிருபாதி மஹா நந்த ஜலதௌ
க்ருதார்த்தீ குர்ம ஸ்வம் க்ருபணம் அபி கைங்கர்ய தநிந–

(பகவான் எல்லாவற்றையும் செய்யும் சமர்த்தன்; எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்;அனந்தகல்யாண குணபரன் ;
நமது ப்ரபத்தியை அங்கீகரித்தபிறகு இந்த மோக்ஷம் என்கிற பலத்துக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை.
ஆதலால், நாம் க்ருதக்ருத்யர் . ஆத்மாவை, பகவானை அனுபவித்தல் என்கிற ஆனந்தத்தில் நிலை நிறுத்தியுள்ளோம்
இப்போது ,பகவானுக்கு கைங்கர்யம் என்கிற தனம் ப்ராப்தமாகையால் க்ருதார்த்தம் ஆபாச புருஷார்த்தங்களை எல்லாம் விட்டோம்.
மஹா புருஷார்த்தங்களைப் பெறுகிறோம். இதையும், பலப்பல ஜன்மங்களில் பக்தி முதலிய உபாயங்களில் இறங்கி கால தாமதம்
செய்யாமல் க்ஷணகால ஸாத்யமான ப்ரபத்தியாலே பெறுகிறோம் என்கிற மகிழ்ச்சி)

இவ் உபாய விசேஷ நிஷ்டன் ப்ராப்திக்கு அனந்தர காலம் தொடங்கி
தான் இதுக்குக் கோலின பலத்தைப் பற்ற தனக்கு கர்த்தவ்ய அம்சத்தில் அந்வயம் இல்லாமையாலும்
கர்த்தவ்ய அம்சம் சக்ருத் அனுஷ்டானத்தாலே க்ருதமாகையாலும்
ஸ்வ தந்த்ரனாய் சத்ய சங்கல்பனான பல ப்ரதன் மாஸூச -என்று அருளிச் செய்கையாலும்
தனக்குப் பிறந்த பர ந்யாச ரூப தசையைப் பார்த்து நிர்பரனாய்-
மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடியே சித்த உபாயத்வேன ஸ்வீக்ருதனான சர்வேஸ்வரன் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று பல பிரதான சங்கல்பத்தைப் பண்ணுகையாலே

இப்படி விச்வச நீயனுமாய் -சமர்த்தனுமாய் உபாய பூதனுமான ஈஸ்வரனைப் பார்த்து
பல சித்தியில் நிஸ் சம்சயனுமாய் -நிர்பயனுமாய்
கடையேற விட்ட அந்ய புருஷார்த்தங்களையும் -காம்பற விட்ட உபாயாந்தரங்களையும் –
அகிஞ்சனன் அயத்னமாக மஹா தனத்தைப் பெறுமா போலே
தான் பெறப் புகுகிற பரம புருஷார்த்தத்தையும் பார்த்து ஹ்ருஷ்டமநாவாய்

தேவர்ஷி பூதாத்மா ந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜன்
சர்வாத்மநா ய சரணம் சரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபன்ன ஸ்ரீமத் பாகவதம்-
(எல்லோராலும் அடையத்தக்கவனும் , எல்லோருக்கும் ஆசார்யனுமான நாராயணனைச் சரணமடைந்தவன், தேவர், முனிவர் ,
மனிதர், பித்ருக்கள் என்கிற எவருக்கும் அடிமையில்லை. கடன்பட்டவனுமல்ல . நித்ய நைமித்திக கர்மாக்களில், ப்ரஜாபதி,
பசுபதி என்கிற நாமாக்களை சொன்னாலும், வர்ணாச்ரம தர்மப்படி வேதங்களுக்குக் கடன்பட்டவர்களாக அந்தக்கடனுக்கு வட்டி
செலுத்துவதைப்போலத் தொண்டு செய்தாலும், ப்ரபந்நன் –ப்ரபத்தி செய்தவனுக்கு இந்தக் கடன் சீட்டு கிழிக்கப்பட்டதாகிறது .
பஞ்சமஹா யஜ்ஞங்களில் இவர்களின் பெயர்களை சொன்னாலும், அவை எம்பெருமானையே சொல்வதாகும்.) என்கிற ஸ்லோகத்தின் படி
பிரஜாபதி பசுபதி என்றால் போலே பேரிட்டுக் கொண்டு இருக்கிற சஜாதீயரான ஷேத்ரஜ்ஞரைப் பற்ற
ஓரோர் அவசரங்களிலே கைக்கூலி போலே சில உபாதிகள் அடியாக எழுதா மறையிலே ஏறிட்டுக் கிடக்கிற அடிமை தீட்டும்

முதல் மாளாதே பொலிசை யிட்டுப் போகிற தனிசு தீட்டும் கிழித்தவன் ஆகையாலே
பஞ்ச மஹா யஜ்ஞாதிகளான நித்ய நைமித்திகங்களில் அவர்கள் பேர் சொல்லும் போது
யே யஜந்தி பித்ருன் தேவான் ப்ராஹ்மாணான் ஸஹூ தாசனான்
சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணுமேவ யஜந்தி தே-மஹாபாரதம்-
(எந்தப் பரமைகாந்திகள், பித்ருக்களையும் , தேவதைகளையும் ,ப்ராஹ்மணர்களையும் , அக்னியையும் கூறி யாகம் செய்கிறார்களோ,
அவர்கள் அந்த பித்ராதிகளுக்கு அந்தர்யாமியான விஷ்ணுவையே ஆராதிக்கிறார்கள்.
பரமைகாந்திகள் அல்லாதவர்கள், பரமாத்மாவை அறியாதவர்கள் செய்யும் யாகாதிகள்கூட விஷ்ணுவுக்குச் செய்யும் ஆராதனமே .
ஆனால், பரமாத்மாவை இவர்கள் அறியாததால், ஸ்பஷ்டமாக இவர்களுக்குப் புரிவதில்லை.)இத்யாதிகளிலே
மகரிஷிகள் அறுதியிட்ட படியே
ராஜ சேவகர் ராஜாவுக்கு சட்டை மேலே மாலையையும் ஆபரணத்தையும் இட்டாலும்
சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரிதியே பிரயோஜனமாகத் தெளிந்து இருக்குமா போலேயும்

மஹாபாரதம்—-சாந்தி பர்வம்-யஜ்ஞ அக்ரஹர அத்யாயாதிகளிலும் –
(வேத வ்யாஸர் , தன்னுடைய சிஷ்யர்களான ஸுமந்து , ஜைமினி , பைலர் ,வைசம்பாயனர் சுகப்ரஹ்மம் ஆகிய 5 சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.
கல்பத்தின் துவக்கத்தில் நாராயணன் ப்ரக்ருதியையும் , ப்ரஹ்மாவையும் ,பஞ்சபூதங்களையும் மரீசி ,, மநு முதலிய எட்டுப் போரையும் ச்ருஷ்டித்தார் .
ப்ருஹ்மா —-வேதங்கள், வேதாந்தங்கள் , யஜ்ஞம் , அதன் அங்கம் ,ருத்ரன், இவைகளைச் ச்ருஷ்டித்தார் . ருத்ரன் , 10 ருத்ரர்களை ச்ருஷ்டித்தார்.
ப்ருஹ்மா , தேவர்கள் தேவரிஷிகளிடம் உலகை அமைக்கவேண்டிய பொறுப்பைக் கொடுத்தார்.
ஆனால், அவர்களோ பொறுப்புக்களை நிறைவேற்ற இயலவில்லை என்று ப்ருஹ்மாவிடம் சொன்னார்கள்.
அதற்கான சக்தியைப் பெறுவதற்கு, ப்ருஹ்மா இவர்களுடன் திருப்பாற்கடலுக்குச் சென்று , கைகளை உயரத் தூக்கி ஒற்றைக்காலால்
ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார்கள். அப்போது, ”நீங்கள் என்னை ஆராதித்த பலனை விரைவில் அடைவீர்கள் ;எல்லோரும்
தினந்தோறும் யாகம் செய்து அதில் எனக்கு ”ஹவிஸ் ” அளியுங்கள் . நான் உங்களுக்கு ச்ரேயஸ்ஸைக் கொடுக்கிறேன் ” என்று
அசரீரி ஒலித்தது .இதைக்கேட்டு மகிழ்ந்த தேவர்கள் வைஷ்ணவ யாகத்தைச் செய்தார்கள்.

பாரதத்தில், யாகங்களில் முக்யமான பாகத்தைக் பகவான் ஸ்வீகரிக்கிறான் என்பதை விரிவாகச் சொல்வது யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் —
ப்ரஹ்ம —ருத்ராதி தேவர்கள் தாங்கள் செய்யும் லோக நிர்வாகத்தைச் சரியாகச் செய்வதற்கு, பகவானை வேண்டினார்கள்.
அவர், ”வைஷ்ணவ யாகம் ”செய்யும்படியும் அதில், அவரவர்கள் தங்களுக்கு முடிந்தவரையில் தன்னை ஆராதிக்கும்படியும்
யார் யார் எவ்வளவு தூரம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு , யாகத்தில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும் .
ப்ரவர்த்தி தர்மம், நிவ்ருத்தி தர்மம் இரண்டில் மோக்ஷம் தவிர வேறு பலன்களுக்குப் ப்ரவர்த்தி தர்மம் என்கிறவற்றைச் செய்பவர் –
உங்களை ஆராதிப்பர் .அவர்கள் அளிப்பவை, உங்களைப் புஷ்டியாக்கி நிர்வாஹம் செய்ய உதவும்.
ப்ரஹ்மா ருத்ரன் இருவரும் இந்த வரப்ரதான சக்தியை விசேஷமாகப் பெறுவார்கள்.
முமுக்ஷுக்கள், நிஷிகாம்யமாக நிவ்ருத்தி தர்மமாகச் செய்வர் — அதனால், அதில் நானே ஆராதிக்கப்படுகிறேன் —–)

ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்ம்யத்திலும் –
(ப்ருஹ்மா செய்த அச்வமேத யாகத்தில் அக்நி மத்தியில் இருந்துகொண்டு, எம்பெருமானே வரதனே எல்லா ஹவிஸ்ஸையும் ஸ்வீகரித்தார்
தேவதைகள், ப்ருஹ்மாவிடம் ” தேவரீர் , எங்கள் பெயரைச் சொல்லி ஹவிஸ்ஸை அக்நியில் சேர்க்கும்போது , அந்த ஹவிஸ்ஸுக்கள்
எங்களுக்கு வரவில்லையே –” என்று கேட்டார்கள். அதற்கு, ப்ருஹ்மா , ”நான் ஒருபோதும் உங்களை ஆராதிக்கவில்லை.
முமுக்ஷுக்கள் செய்யும் கர்மாக்களில், பகவானே நேரில் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்கிறான் ”என்றார்)

சாஷா தர்ப்யாவரோதம் ஜைமினி -என்கிற-ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-29- ஸூத்ரத்திலும்
(அக்நி போன்ற சொற்கள் எம்பெருமானையே குறிக்கிறது. அதனால், விரோதமில்லை என்று ஜைமினி கூறுகிறார்)சொல்லுகிறபடியே
தேவர்கள் பித்ருக்கள் என்கிற சட்டைகளோடு துவக்கற அவ்வோ சப்தங்கள் அவயவ சக்தி பௌஷ்கல்யங்களாலே
ஈஸ்வரன் பக்கலிலே நாராயணாதி சப்தங்கள் போலே நிற்கிற நிலைமையும் கண்டு
அவற்றினுடைய உச்சாராணாதிகளிலே ஸ்வேத தீப வாசிகளான சுத்த யஜாதீகளுக்குப் போலே
தன் பரமை காந்தித்வம் குறையாதே நிற்கிறபடியை நிரூபித்து
தன் வர்ணாஸ்ரம நிமித்த குணாத் யதிகாரத்துக்கு அனுரூபமாக அடிமை கொள்ள சங்கல்ப்பித்து இருக்கிற
சாஸ்தாவான சேஷியினுடைய சாஸ்திர வேத்ய ஆஜ்ஞாநுஜ்ஞா பரிபாலன ரூப கைங்கர்ய முகத்தாலே
ப்ரத்யஷ விதித பரம புருஷ அபிப்ராயரான முக்தரைப் போலே கிஞ்சித்கரனாய்க் கொண்டு
முக்த துல்யனாய் -உபாய பூர்த்தியாலே க்ருத்க்ருத்யன் என்றும் –
புருஷார்த்த பூர்த்தியாலே க்ருதார்த்தன் என்றும் –
சாஸ்த்ரங்களாலும் தந் நிஷ்டராலும் கொண்டாடப் பட்டு இருக்கும் –

இவனுடைய இந்த க்ருதக்ருத்ய அனுசந்தானத்தை
அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ நிச்சய ஸூகமாஸ் ஸ்வ -என்று
எம்பெருமானார் சரணாகதி கத்யத்திலே நியமித்து அருளினார் –
(எம்பெருமானார் ,சரணாகதிகத்யத்தில்
அந்மதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்ய கதாசன ராமோ த்விர்நாபி பாஷதே ,
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யா ச தே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ :
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச :

இதி மயைவஹ்யுக்தம் || அதஸ்த்வம் தவ தத்வதோ மத்
ஜ்ஞான தர்ஸந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய :ஸுகமாஸ்வ ||)

இதுக்கு கருத்து –
அநாதி காலம் அஜ்ஞாதி லங்கனம் அடியாக யுண்டான பகவத் நிக்ரஹத்தாலே சம்சரித்துப் போந்த நமக்கு
அவசர ப்ரதீஷை பகவத் கிருபை அடியாக உண்டான சதாசார்யா கடாஷ விஷயீ காரத்தாலே வந்த
த்வய உச்சாரண அனுச்சாரணத்தாலே பிரபத்யனுஷ்டானம் பிறந்த பின்பு
சரண்ய பிரசாதனங்களில் இதுக்கு மேல் ஓன்று இல்லாமையாலே நிக்ரஹ ஹேதுக்களை எல்லாம் ஷமித்து
தீர்ந்த அடியவர் தம்மை திருத்திப் பணி கொள்ள வல்ல சர்வ சேஷியான ஸ்ரீ யபதி
தன் பேறாகத் தானே ரஷிக்கும் என்று தேறி நிர்பரனாய் இரு என்கை
இது மாஸூச என்கிற சரண்யன் வாக்யத்திலும் தீர்ந்த பொருள்

இவனுக்கு பிரபத்திக்கு முன்புற்ற சோகம் –
அதிகாரத்தில் சொருகுகையாலே முன்பு சோகித்திலன் ஆகில் அதிகாரி அல்லாமையாலே
காரணாபாவத் கார்ய பாவ -என்கிற ந்யாயத்தாலே உபாய நிஷ்பத்தி உண்டாகாது –
உபாய ஸ்வீகாரம் பண்ணினாகா தன்னை நினைத்து இருந்த பின்பு
சரண்ய உக்தியிலே நெகிழ்ச்சி யுடையவனே சோகித்தான் ஆகில்
கார்ய பாவாத் சமாக்ரஞ்ய பாவ -என்கிற ந்யாயத்தாலே
பூர்ண உபாயன் அல்லாமையாலே பலம் உபாய பூர்த்தி சாபேஷமாய்க் கொண்டு விலம்பிக்கும் என்று அறியலாம் –
முன்பு ப்ரசக்த சோகனாய் பின்பு மாஸூச என்று பிரதிஷேகிக்கிற படியே
வீத சோகனானவன் க்ருதக்ருத்யன் என்று அறியலாம் –

மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர்
அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரி திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே —

(யார் = மன்னவர்—-நமக்கு அரசர்கள்
யார் = விண்ணவர் —–தேவதைகளைப் போல நம்மால் ஆராதிக்கத் தகுந்தவர்
யார் = வானோரிறை —நித்ய ஸூரி களுக்கு ஸ்வாமியான பகவான்
யார் = ஒன்றும் வான் கருத்தோர் —-வசிக்கும் பரமபதத்திலேயே ஆசையுடையவர்கள்
யார் = அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் —நல்லது,கெட்டதுகளைப் பிரித்து அறிபவர்கள் ,செய்யவேண்டிய
யாகங்கள் யாவும் செய்துமுடித்தனர்
இவர்கள் அன்புடையார்க்கு என்னவரம் தரவென்ற —தன்னிடம் பக்தி உடையோர்க்கும் அவர்களைச் சேர்ந்தோர்க்கும்
மோக்ஷம் கொடுத்தபின்பும்,இன்னும் என்ன வரம் கொடுக்கலாம் எனச் சிந்திக்கிற
நம் அத்திகிரித் திருமால் —ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் நம் பேரருளாளனால்-முன்னம் வருந்தி—–முன்பு ப்ரயாசைப்பட்டு
அடைக்கலம்கொண்ட நம் முக்கியரே –ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நமக்கு முக்கியர்களான ப்ரபந்நர்கள்)

பகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யசநம் க்ருதம்
பரிமித ஸூ க ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம் அக்ருத்யவத்
பவதி ச வபுவ்ருத்தி பூர்வம் க்ருதை நியதக்ரமா
பரம் இஹ விபோ ஆஜ்ஞா சேது புதை அனுபால்யதே —

தன்னிடம் பக்தியுள்ளவர்கட்கு ,என்ன வரம் அளிக்கலாம் என்று எண்ணியபடி ஹஸ்திகிரியில் எழுந்தருளியுள்ள பேரருளாளன்,
தன்னால் காக்கப்படவேண்டியவர்கள் என்று அவர்களை ப்ரபன்னர்களாக்குகிறான் இப்படிப்பட்ட ப்ரபன்னர்கள் , நமக்கு அரசர்
போன்றவர்கள்; தேவர்களைப்போல நம்மால் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்;
நித்யஸூரிகளின் தலைவனான எம்பெருமானின் வைகுண்டத்தில் வஸிக்க ஆர்வமுடையவர்கள் நல்லது , கெட்டது
அறியக்கூடிய அன்னம் போன்றவர்கள்; இவர்கள் செய்யவேண்டியத்தைச் செய்து முடித்தவர் ஆவர்

ஸம்ஸாரத்திலிருந்து விடுபட,விரோதியை அழிக்கும் பகவானின் திருவடிகளில் ப்ரபத்தி செய்யப்பட்டது.
அல்ப பலனைக் கொடுக்கும் காம்ய கர்மாக்களை விட்டொழித்து, ப்ரபத்திக்குப் பிறகு பகவானின் கட்டளையாகிற
நித்ய, நைமித்திக கர்மாக்களைச் செய்வது ஸ்வரூபம் அறிந்த ப்ரபன்னர்களின் கடமையாகும்.

—————————————————————–

அதிகாரம் -14 ஸ்வ நிஷ்ட்டாபிஜ்ஞ அதிகாரம் –

ஸ்வரூப உபாய அர்த்தேஷூ அவித்த நிவித்ய ஸ்திரமதே
ஸ்வ நிஷ்ட அபிஜ்ஞானம் ஸூபகம் அபவர்க்காத் உபத்த நாத்
பிரதிம் நா யஸ்ய ஆதௌ பிரபவதி விநீத ஸ்தகயிதம்
கபீரான் துஷ்பூரான் ககன மஹத சித்ர நிவஹான் –

இப்படி தனக்கு நிஷ்டை உண்டு என்று தான் அறியும்படி எங்கனே என்னில்
1-பரராலே பரிபவாதிகள் யுண்டாம் போது தன் தேஹாதிகளைப் பற்ற பரிபாவகர் சொல்லுகிற குற்றங்கள்
தன் ஸ்வரூபத்தில் தட்டாதபடி விஷாதாதிகள் அற்று இருக்கையும்
2-சாப்ய மானச்ய யத் பாபம் சாப்யந்த மதிகச்சதி -என்கிறபடி பரிபவாதிகளாலே
தன் பாபத்தை வாங்கிக் கொள்ளுகிற மதி கேடரைப் பற்ற
பத்த வைராணி பூதானி த்வேஷம் குர்வந்தி சேதத்த
சோத்யான்யஹ அதி மோஹென வ்யாப்த நீதி மநீஷிணா
ஆத்ம த்ருஹம மர்யாதம் மூட முஞ்ஜித சத்பதம்
ஸூ தாரமநுகம் பேத நரகார்ச்சிஷ் மாதிந்தனம் –என்கிறபடி கரை கண்ட கிருபையும்
3-அமர்யாத ஷூத்ர என்கிற ஸ்லோகத்தாலும்
வாடினேன் வாடி முதலான ஆழ்வார் பாசுரங்களாலும்
தனக்கு அனுசந்தேயமாக உதாஹரித்த தோஷங்களை
பரிவாதாதிகளாலே மறவாத படி பண்ணினார்கள் என்கிற உபகார ஸ்ம்ருதியும்
4-ஆத்மாக்களுக்கு எல்லாம் ஸ்வரூப அனுபபந்தியான பகவத் பாரதந்த்ர்யத்தையும்
ஷேத்ரஜ்ஞர் எல்லாரும் கர்ம வஸ்யராய் நிற்கிற நிலையையும் பார்த்து
நமக்கும் நம்மளவில் பரிபவாதிகள் பண்ணுகிற சேதனருக்கும் உள்ள கர்ம அனுகுணமாக
இன்புறும் இவ் விளையாட்டு உடையனான
ஸ்வ தந்திர சேஷியாலே ப்ரேரிதராய் அவர்கள் பரிவதாதிகள் பண்ணுகிறார்கள் என்று
அவர்கள் பக்கல் நிர் விகார சித்தத்தையும்
5-பிராரப்த பாப விசேஷம் சிகை அறுக்கிறது என்ற சந்தோஷம் நடை யாடிற்று ஆகில்
பிரதம மத்யம பதங்களில் சோதிதமான படியே அசித் வை லஷண்யத்தையும்
சர்வ பூத அனுகூல்யாதிகளுக்கு யோக்யமான ஜ்ஞானத்தையும் -சர்வதோமுகமான ஆகிஞ்சன்யத்தையும் –
ஸ்வத சர்வ சமனாய் கர்ம அநுரூப பல பிரதனான ஸ்வ தந்திர சேஷிக்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாம் படி
அனன்யார்ஹ சேஷத்வ பாரதந்த்ர்யங்களையும் -யத்திதம் மம தேவேச -இத்யாதிகளில் படியே
பராதீன ஹித சித்தியையும் உடைய தன் ஸ்வரூபத்தில் நிஷ்டை உண்டு என்று அறியலாம் –

1- சர்வேஸ்வரனை ஒழிய தானும் பிறரும் தனக்குத் தஞ்சம் என்ற புத்தியும்
2-ம்ருத்யு பர்யந்தமான பய ஹேதுக்களைக் கண்டாலும் –
ப்ராயோணா க்ருதக்ருத்யவாத் ம்ருத்யோருத் விஜதே ஜன க்ருதக்ருத்யா ப்ரதீ ஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதம் –
என்கிறபடியே இச் சரீர அநந்தரம் என் படப் புகுகிறோம் என்கிற கரைதல் அற்று
அபிமத ஆசக்தியாலே ப்ரீதனாய் இருக்கையும் –
3-கஜம் வா வீஷ்ய சிம்ஹம் வ்யாக்ரம் வா அபி வராநநா
நாஹாரயதி சந்த்ராசம் பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
அசந்தே சாத்து ராமஸ்ய தபஸ ச்வாநுபாலநாத்
ந த்வா குர்மி தசக்ரீவ பச்ம பச்மார்ஹ தேஜஸா -என்றும்
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபாலார்த்தன
மாம் நயேத்யாதி காகுத்ஸ்த தத் தச்த சத்ருசம் பவேத் -என்றும்
பிராட்டி நடத்திக் காட்டின ரஷக அவஷ்டம்பத்தால் உள்ள தேற்றமும்
4-தான் பர ந்யாசம் பண்ணின விஷயத்தில் ஸ்வ யத்னம் அற்று இருக்கையும்
5-அதில் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் அவன் கையதே என்று இருக்கையும்
உண்டாயிற்று ஆகில் —
தான் கோலின சகல பலத்துக்கும் சாதனமாக வற்றாய்
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் விஹிதமாய்
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அனுசந்தேயமாய்
திரு மந்த்ரத்தில் மத்யம பதத்திலும் –
விவஷிதமான உபாயத்திலே தனக்கு நிஷ்டை உண்டு என்று அறியலாம் –

உத்பத்தி ஸ்திதி நாசாநாம் ஸ்திதௌ சிந்தா குதஸ்தவ
யத் உத்பத்தி யதா நாச ஸ்திதிச்த த்வத் பவிஷ்யதி -என்றும்
அசேஷ்ட மாந மாஸீநம் ஸ்ரீ கிஞ்சித் உபதிஷ்டதி
கர்மீ கர்மா நுஸ்ருத்யாந்யோ ந ப்ராச்ய மதிகச்சதி -என்றும் சொல்லுகிறபடியே
பிராரப்த கர்ம விசேஷ அதீனமாக ஈஸ்வரன் செய்யும் தேக யாத்ராதிகளில் கரைதல் அற்று -தான் கரைந்தாலும்
உத்பதன்நபி சாகாசம் விசன்நபி ரசாதலம்
அடன்நபி மஹீம் க்ருத்ச்நாம் நாதத்த முபதிஷ்டதே -என்றும்
யத் கிஞ்சித் த்வர்த்ததே லோகே சர்வம் தந்மத் விசேஷ்டிதம்
அன்யோ ஹி அந்யச் சிந்தயதி ஸ்வச் சந்தம் விததாம் யஹம் -என்றும் சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் நினைவின் படியே அல்லது ஒன்றும் நடவாது என்று பிரதி சந்தானம் பண்ணி
அப்ரயத் நாகதா சேவ்யா க்ருஹச்தைர் விஷயா சதா
பிரயத் நே நாபி கர்த்தவ்ய ஸ்வ தர்ம இதி மே மதி -என்றும்
நாஹாரம் சிந்தயேத் ப்ராஜ்ஞோ தர்மமேவா நு சிந்தயேத்
ஆஹாரோ ஹி மனுஷ்யாணாம் ஜன்மனா சஹ ஜாயதே -என்றும் பராசர கீதாதிகளிலும்
ந சந்நிபதிதம் தர்ம்மயம் உபயோகம் யத்ருச்சயா
ப்ரத்யா சஷே ந சாப்யேநம் அநுருந்தே ஸூ துர்லபம் –என்று அஜகரோபாக்யாநத்திலும் சொல்லுகிறபடியே
சாஸ்திர விருத்தம் இல்லாத விஷயங்கள் தான் ஒரு விரகு செய்யாது இருக்க
பகவத் சங்கல்பத்தாலே தானே வரக் கண்டு பிராரப்த கர்ம பலமான தனிசு தீருகிறது என்று
விலக்காதே அனுபவிக்கையும்

இப்படி கர்ம விசேஷ அதீனமாக வருகிற ப்ராப்யாந்தர லாப அலாபங்களில்
தயோரே கதரோ ராசிர்யத்யே நமுபசன்னமேத்
ந ஸூ கம் ப்ராப்யம் சம்ஹ்ருஷ்யேத் ந துக்கம் ப்ராப்ய சம்ஜ்வரேத் -என்றும்
உளது என்று இறுமாவார் -என்றும் சொல்லுகிறபடியே
ஹர்ஷ சோகங்கள் அற்று ஸ்வரூப அனுரூபமான பரம ப்ராப்ய கைங்கர்யத்திலே ருசியும்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்திலும் ஸ்ரீ வைகுண்ட கத்யாதிகளிலும் கடா கடா என்று வாய் புலற்றப் பண்ணுகிற
ப்ராப்தியில் த்வரையும் நடை யாடிற்று ஆகில்
திரு மந்த்ரத்தில் நாராயண சப்தத்தில் -சதுர்த்தியாலும்
த்வயத்தில் சதுர்த்தி நமஸ் ஸூக்களாலும்
சரம ஸ்லோகத்தில் அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற வாக்யத்தாலும்
கடலைக் கையிட்டுக் காட்டுமா போலே காட்டப்பட்ட அபரிச்சேத்யமான பரம புருஷார்த்தத்திலே
நிஷ்டை உண்டு என்று அறியலாம் –

இப்படி அவ்வோ அடையாளங்களாலே
அஹமாத்மா ந தேக அஸ்மி விஷ்ணு சேஷ அபரிக்ரஹ
தமேவ சரணம் ப்ராப்த தத் கைங்கர்ய சிகிர்ஷயா -என்கிறபடியே
மூல மந்த்ராதிகளைக் கொண்டு
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களில்
தன்னுடைய நிஷ்டையை உணர்ந்து போரும் இவ் வதிகாரிக்கு
நைஷா பச்யாதி ராஷச்யோ நிமான் புஷ்ப பலத்ருமான்
ஏகச்த ஹ்ருதயா நூநம் ராம மேவா நு பச்யதி -என்கிறபடியே
விரோதியோடே கூடி இருக்கிற தனக்கு பாஷிகமாக சம்பாவிதமான
ப்ரஹ்ம விதப சாரதி வ்யதிரிக்தங்களான ஏதேனும் ஒரு பீதி ஹேதுக்களிலும்
ஸ்வரூப பிராப்த கைங்கர்ய வ்யதிரிக்தங்களான ஏதேனும் ஒரு பீதி ஹேதுக்களிலும் கண்ணோட்டம் உண்டாகாது
யத்ருச்சயா உண்டானாலும் அவற்றால் பீதியும் பிராப்தியும் உண்டாகாது –

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றின் நிலையுடையார்
தக்கவை யன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார்
இக் கருமங்கள் எமக்கு உள வென்னும் இலக்கணத்தால்
மிக்க உணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே –

ஸ்வாப உத்வோத வ்யதிகர போக மோஷாந்தராலே
காலம் கஞ்சித் ஜகாதி விதிநா கேநசித் ஸ்தாப்யமானா
தத்வ உபாய ப்ரப்ருதி ஸ்வாமி ததாம் ஸ்வ நிஷ்டாம்
சேஷாம் க்ருத்வா சிரஸி க்ருதிந சேஷமாயுர் நயந்தி

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -9-உபாய விபாக அதிகாரம் /அதிகாரம் -10- பிரபத்தி யோக்ய அதிகாரம் /அதிகாரம் -11-பரிகர விபாக அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 26, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -9-உபாய விபாக அதிகாரம்-

உபாய ஸ்வ ப்ராப்தே உபநிஷத் அதீத ஸ பகவான்
ப்ரசத்த்யை தஸ்ய உக்தே பிரபதன நிதித்யாசன கதீ
ததாரோஹ பும்ஸ ஸூஹ்ருத பறி பாகேண மஹதா
நிதா நம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா —

(பகவானை அடைவதற்கான உபாயம் அவனே –இதை உபநிஷத்துக்கள் சொல்கின்றன.
பகவானின் க்ருபையைப் பெற இரண்டு மார்க்கங்கள்
ஒன்று பக்தி ,மற்றொன்று ப்ரபத்தி. இந்த வழிகளில், இழிவதற்கு, பூர்வ ஜன்ம புண்யம் தேவைப்படுகிறது.
இருந்தாலும், அனைத்துக்கும் யஜமானனான பகவானே காரணம்.)

இவர்களுக்கு கர்தவ்யமான உபாயமாவது ஒரு ஜ்ஞான விகாச விசேஷம் –
இத்தாலே சாத்யமாய் ப்ராப்தி ரூபமான உபேயம் ஆவது ஒரு ஜ்ஞான விகாச விசேஷம் –

இவற்றில் உபாயம் ஆகிற ஜ்ஞான விகாச விசேஷம்
கரண சாபேஷமுமாய் -சாஸ்திர விஹிதமுமாய்- சத்யத் வாதிகளான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் அஞ்சோடு கூடின
அவ்வோ வித்யா விசேஷ பிரதி நித்ய குணாதிகளிலே நியத ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
(ஆனந்தவல்லி என்கிற ப்ரஹ்ம வள்ளி ( வாருணீ உபநிஷத் ) சொல்கிறது—
ப்ரஹ்மவிதா” ப்னோதி பர”ம்-ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான்
ப்ரஹ்மம் ,ஸத்யம் ஜ்ஞானம் , அனந்தம் —இந்த ப்ரஹ்மம், ஹ்ருதய குகையில் பரமாகாசத்தில் இருக்கிறது.
இது ப்ரஹ்மத்தையே குறியாகக் கொண்டுள்ளது.
இப்போது சொன்ன ஸத்யம் முதலான தன்மைகள் அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைச்
சொல்கிறது.தவிரவும் பல ப்ரஹ்ம வித்யைகளில் சொல்லியுள்ள தன்மைகளும் உள்ளன.)

உபேயம் ஆகிற ஞான விகாச விசேஷம்
கரண நிரபேஷமுமாய்-ஸ்வ பாவ ப்ராப்தமுமாய் -குண விபூத் யாதிகள் எல்லா வற்றாலும்
பரி பூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –

உபாசித குணா தேர்யா ப்ராப்தாவப்யவ ஹிஷ்க்ரியா
ஸா தத்க்ரதுநய க்ராஹ்யா ந ஆகாராந்தர வர்ஜனம் –
(தத்க்ரதுந்யாயம் என்று சொல்கிறார்கள். இது, பகவானை அனுபவிக்கும் சமயத்தில் த்யானம் முதலியவை அப்படியே
உள்ளன என்பதைச் சொல்கிறது. வேறு எதையும் விடச் சொல்லவில்லை.
தத்க்ரதுந்யாயம்
இவ்வுலகில் முமுக்ஷு, பகவானை எவ்வித குணம் உள்ளவனாக உபாஸிக்கிறானோ த்யானம் செய்கிறானோ,
அவ்வித குணம் உள்ளவனாகவே ,சரீரத்தை விட்டு பகவானை அடையும்போதும் அநுபவிக்கிறான் .
இது சாந்தோக்யத்தில் சொல்லப்படுகிறது
இங்கு உபாஸிக்கப்படும் / த்யானிக்கப்படும் பகவானின் குணங்கள் மோக்ஷ தசையில் அவச்யம் அனுபவிக்கப்படுகிறது
என்பதுதான் ,இந்த ”ந்யாயத்”துக்குத் தாத்பர்யம். இங்கு உபாஸிக்கப்படாத / த்யானிக்கப்படாத குணாதிகள் அங்கு
அனுபவிக்க உரியன அல்ல என்றோ அனுபவிக்க இயலாது என்றோ தாத்பர்யமல்ல.)

பிராப்தி ரூபமான இவ் வனுபவத்தினுடைய பரீவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம் உபேயம் –

இவ் வுபாய ரூபமாயும் ப்ராப்தி ரூபமாயும் இருக்கிற ஜ்ஞானத்துக்கு விஷயமாகக் கொண்டு
பல பிரதந்த்வ போக்யத்வாதி வேஷத்தாலே ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் உபேயத்வமும்-

இவ் வீச்வரனுடைய உபாயத்வம்
அத்வாரக ப்ராப்தி நிஷ்டன் பக்கல் உபாயாந்தர ஸ்தானே நிவேசத்தால் விசிஷ்டமாய் இருக்கும் –
மற்ற அதிகாரிக்கும் கர்ம யோகம் ஆரம்பம் முதலாக உபாசன பூர்த்தி பர்யந்தமாக நடுவுள்ள
கர்த்தவ்யங்களில் அத்யந்த அசக்த்யமான நேர்களிலே
இப் பிரபத்தி வசீக்ருதனான ஈஸ்வரன் புகுந்து நின்று அந்த துஷ்கர கர்த்தவ்யங்களாலே வரும் பாப நிவ்ருத்தியையும்
சத்வ உன்மேஷாதி களையும் உண்டாக்கிக் கொடுத்து அவ் உபாசனம் ஆகிற உபாயத்தை பல பர்யந்தமாக்கிக் கொடுக்கும் –
(ஆக , பக்திநிஷ்டனுக்கும் ,ப்ரபத்தி தேவை. இப்படிப் பல ப்ரபத்திகளை,
பக்தியோகத்துக்காகச் செய்கிறான்.ஆதலால், பக்தியோகத்தை விடமாட்டான்.)

அங்கு கர்ம யோகமாவது –
சாஸ்த்ரத்தாலே ஜீவ பரமாத்ம யாதாத்ம ஜ்ஞானம் பிறந்தால் தனக்கு சக்யங்களாய் பல சங்காதி ரஹீதங்களான
காம்ய கர்மங்களோடும் நித்ய நைமித்திகங்களோடும் கூட ஸ நியமமாக பரிக்ருஹீதமாய் இருக்கும் கர்ம விசேஷம் –
அதன் அவாந்தர பேதங்கள்
தைவமே வபரே யஜ்ஞம்-ஸ்ரீ கீதை -4-25- என்று தொடங்கிச் சொல்லப்பட்ட
தேவார்சன தபஸ் தீர்த்த தான யஜ்ஞாதிகள் –
(தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந : பர்யுபாஸதே |
ப்ரஹ்மாக் நாவபஸே யஜ்ஞம் யஜ்ஜேநைவோ பஜுஹ்வதி ||
சில கர்மயோகிகள், தேவதாராதனமென்றுயஜ்ஞம் செய்கிறார்கள்.வேறுசிலர்
ப்ரஹ்மமாகிய அக்நியில் யஜ்ஞத்தால் யஜ்ஞத்தையே ஹோமம் செய்கிறார்கள்.)
அதிகாரி பேதத்தாலே பிரபத்தி தானே பக்தியை இடையிட்டும் இடையிடாதேயும் மோஷ ஹேது வானால் போலே
இக் கர்ம யோகம் ஜ்ஞான யோகத்தை இடையிட்டும் இடையிடாதேயும்
ச பரிகரமான யோகத்தைக் கொண்டு ஆத்ம அவலோகன-(ஜீவாத்ம தர்ஸநம் ) சாதனமாம் —

ஜ்ஞான யோகமாவது –
கர்ம யோகத்தாலே அந்த கரண ஜெயம் பிறந்தவனுக்கு பிரக்ருதியாதி விலஷணமாய் ஈஸ்வரனைப் பற்ற
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வங்களாலே சரீர தயா பிரகாரமான தன் ஸ்வரூபத்தை நிரந்தர சிந்தனம் பண்ணுகை-

இக் கர்ம ஜ்ஞான யோகங்களாலே யோக முகத்தாலே ஆத்ம அவலோகனம் பிறந்தால்
வைஷயிக ஸூக வைத்ருஷ்ண யாவஹமான ஆத்ம அனுபவ ஸூகம் ஆகிற ஆகர்ஷகத்தில் அகப்பட்டிலன் ஆகில்
பரம புருஷார்த்தமான பகவத் அனுபவத்துக்கு உபாயமான பக்தி யோகத்திலே இழியும் போது
உள்ளிருக்கிற ரத்னம் காண்கைக்கு கிழிச் சீரை கண்டால் போலே அந்தர்யாமியைப் பார்க்கும் போதைக்கு அவனுடைய
சரீர பூதனான ஜீவாத்மாவினுடைய தர்சனம் உபயுக்தமாய்க் கொண்டு பக்தி யோகத்துக்கு அதிகாரி கோடியிலே ஏறிட்டுக் கிடக்கும்

(கிழிச்சீரை —துணி— ரத்னத்தை மூடிக்கொண்டிருக்கும் . ரத்னம், துணி அல்லது செப்புப் பெட்டியில் இருக்கும்.
முதலில் தெரிவது, கிழிச்சீரை. பிறகே அதனுள் இருக்கும் ரத்னம் தெரியும். அதைப்போல,முதலில் தன் ஆத்ம தர்ஸனம்
இது கிழிச்சீரையைப்போல. பிறகு, அந்தர்யாமியான பரமாத்ம தர்ஸனம் .இது ரத்னத்தைப்போல.
ஐச்வர்ய பல அநுபவம் .ஸூக்ஷ்ம ஆத்ம விஷயத்தில் அநுபவம் .இதில் இவனுடைய வைராக்யத்தைப் பரீக்ஷை செய்து ,
ஈச்வரன் பக்தி யோகத்தில் இழியச் செய்கிறான்.ஜீவாத்ம அந்தர்யாமியாக, பரமாத்மாவை த்யானிக்கிறான்.
இரண்டும் வேறாக இருந்த போதிலும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து காண வேண்டிய போது
ஒன்றின் தர்ஸனம் மற்றொன்றின் தர்சநத்துக்குக் காரணம் ஆகிறது.)

பக்தி யோகமாவது
அநந்ய நிஷ்டனாய் அநந்ய கதியினாய் அநந்ய சேஷ பூதனான பகவானுடைய
ஸ்வரூபாதிகளை விஷயமாக உடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான த்யான விசேஷம்

அது தான் தைல தாரை போலே நிரந்தரமான ஸ்ம்ருதி ரூபமாய் -சாஷாத்கார துல்யமான வைசத்யத்தை யுடைத்தாய்
பரம பதத்துக்கு பிரயாணம் பண்ணும் திவசம் அறுதியாக நாள் தோறும் அனுஷ்டிக்க வளர்ந்து வருவதாய்
அந்திம ப்ரத்யய அவதியான ஜ்ஞான சந்ததி விசேஷம் –

இதுக்கு வர்ணாஸ்ரம தர்மங்கள் ஜ்ஞான விகாச ஹேதுவான சத்வாதி வ்ருத்திக்கு களையான
ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு மூலமான பாபங்களைக் கழித்துக் கொண்டு இதி கர்த்தவ்யதையாய் இருக்கும்

இப் பக்தி யோகம் தானே
பிரத்யயார்த்தம் ஸ மோஷச்ய சித்தய சம்ப்ரகீர்த்திதா -ஸத்வத ஸம்ஹிதை-
(மோக்ஷம் என்கிற பலன் விஷயத்தில், நம்பிக்கை வருவதற்காக ஐச்வர்யாதி பலன்களும் கூறப்பட்டன.
ஸாரப்ரகாஸிகா —-ஸாராஸ்வாதிநி இவற்றில் பகவான் தானாக அளிக்கும் அஷ்டஸித்திகளைக் கொள்ளாமல் ,
ஐச்வர்யாதி பலன்களுக்காக இதை விதித்தது நம்பிக்கைக்காக என்று விளக்கமுள்ளது
வேதத்தில் நம்பிக்கை ஏற்பட , சத்ருவைக் கொல்ல அபிசார ஹோமம் உள்ளது.
ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை வருவதற்காக, ஏழு மராமரங்களை ராமபிரான் ஒரே பாணத்தால் வீழ்த்தினான் ) என்கிறபடியே
இள நெஞ்சரைத் தேற்றுகைக்கு இட்ட விரகான வழியாலே காமநா பேதத்தாலே
ஐஸ்வர் யாதிகளுக்கும் சாதனம் என்னும் இவ்வர்த்தம் சதுர்விதா பஜந்தே மாம் -என்று சொல்லப்பட்டது –
அவ்விடத்தில்
தேஷாம் ஞாநீ நித்ய யுகத ஏக பக்திர் விசிஷ்யதே -ஸ்ரீ கீதை -7-17–
(சதுர்விதா பஜந்தேமாம் ஜநா : ஸுக்ருதிநோர்ஜூந |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||
அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன் பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –
என்று நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்) என்று தொடங்கிச் சொன்ன ஞானியினுடைய ஏற்றத்தை
(தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏகபக்திர் விசிஷ்யதே |
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்த மஹம்ஸ ச மம ப்ரிய : ||
இந்த நால்வருள், எப்போதும் என்னிடம் பக்தி செய்பவன் ,என்னையே த்யானம் செய்பவன் —இவன் –ஞாநி —-இவன் உயர்ந்தவன்,
அவனுக்கு நான் ப்ரியமானவன். அதைப்போல எனக்கும் அவன் மிக ப்ரியமானவன்
உடையவர் வ்யாக்யானம் —-ஞாநிக்கு , நான் ப்ரியமானவன் என்று பகவான் சொல்கிறார்; எவ்வளவு ப்ரியம் என்பதை,
அவனாலேயே அளவிட்டுச் சொல்லமுடியாது;இத்தனைக்கும் பகவான் , ஸர்வஜ்ஞன் -ஸர்வ ஸக்தன் —-)

சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்–மஹா பாரதம் சாந்தி பர்வத்தில்
(என்னுடைய பக்தர்கள் நான்குவகைப்படுவர்.அவர்களில் மற்ற தேவதைகளை நாடாமல், என்னிடமே பக்தி செலுத்துபவர்கள் சிறந்தவர்.
இவர்கள் தங்கள் கர்மாக்களை எவ்வித ப்ரதிபலனையும் எதிர்பாராமல் செய்கின்றனர்.என்னை அடைவதே இவர்களின் லக்ஷ்யம் .
மற்ற மூன்று வகைப்படுபவரும் உலக இன்பங்களைப் பலனாகக் கோருகிறார்கள் .அதனால், முக்கிய லக்ஷ்யத்தை நழுவ விடுகிறார்கள்.
என்னை மட்டுமே ஆச்ரயிப்பவன் புத்திமானாக ,என்னையே அடைகிறான் )என்று தானே வெளியிட்டு அருளினான்

இப்படி மோஷ உபாயமாக விதித்த பக்தி யோகம் பர பக்தி என்று பேசப் பட்டது –

இதினுடைய ஹேதுவாய் சாத்விக பரிசீல நாதிகளாலே வந்த
பகவத் விஷயத்தில் ப்ரீதி விசேஷம் சர்வேஸ்வரனை தெளிய அறிய வேணும் என்னும்
அபி நிவேசத்துக்கு காரணமாய் பக்தி என்று பேர் பெற்று இருக்கும் –
(மோக்ஷத்துக்கு உள்ள பக்தியோகம் ”பரபக்தி ” எனப்படுகிறது.ஸாத்விகர்களுடன் சகவாஸம், பகவானிடம் அளவு கடந்த ப்ரேமை ,
இவற்றால் ஏற்படும் பரபக்தியே பக்தியாகும். இதனால்,பகவானை மேலும் மேலும் அனுபவிக்க ஆவல் பெருகும்)

இத்தாலே சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேதிந ஜனார்த்தனம் = மஹாபாரதம்
(பகவான் மற்றும் ஆசார்யன் மீது உள்ள பக்தி காரணமாக என்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்தேன்.
சாஸ்த்ரம் மூலமாக, ஜனார்த்தனனை அறிகிறேன்) என்கிறபடியே
சாஸ்திர ஜன்ய தத்வ ஜ்ஞான கர்ம யோகாதி பரம்பரையாலே பிறந்த
பரபக்தி யானது
சாஷாத் கரிக்க வேணும் என்ற அபி நிவேசத்தை உண்டாக்கி –

யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ச யாத்மா நமவ்யயம்
(மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ |
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநமவ்யயம் ||-ஸ்ரீமத் பகவத் கீதை ( 11–4 )
ஜ்ஞானம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமான க்ருஷ்ணா —— நான் பார்க்கலாம் என்று எண்ணினால்
அழிவில்லாத உன் திருவடியை எனக்குக் காட்டி அருள்வாயாக) -என்றும்

காணுமாறு அருளாய் –
(தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண் அது ஓர் பவளவாய் மணியே !
ஆவியே !அமுதே! அலைகடல் கடந்த அப்பனே ! காணுமாறு அருளாய் !-திருவாய்மொழி -8–1–1)என்றும் –

ஒரு நாள் காண வாராய் –
(தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா
பிளந்தும் வீயத் திருக்காலால் ஆண்ட பெருமானே !
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்கவொருநாள் காணவாராய் விண்மீதே–6–9–4

பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் ,ஆகாயத்தில் வந்து நிற்கலாமே ! நீ, எனக்காகப் பரமபதத்திலிருந்து
கிளர்ந்து விரைவில் வந்தால் கஜேந்த்ர ஆழ்வானுக்காக நீ அரை குலைய தலை குலைய வந்து அருளியபோது,
”நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதிபுன :தாத்ருஸோ மாத்ரேஷு ” என்று தாங்கள் ஆதிமூலம் இல்லை
என்று ப்ரம்மா சிவன் இந்த்ரன் விண்ணவர் எல்லோரும் உன்னை ஆகாயத்தில் சூழ்ந்து இருந்தனர்.
பூமிக்கு வர இஷ்டமில்லையாகில் இவர்கள் சூழ , நீ, விண்ணில் நின்றால் உன் ப்ரகாசத்தால் உலகம் எல்லாம் விளங்கும்.
நானும் உன்னைத் தர்ஸிப்பேன்—வந்து அருள்க ! )

(மாயக்கூத்தா ! வாமநா ! வினையேன் கண்ணா !கண்கைகால் ,
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாயமுகில் அது ஆ
சாயல் சாமத் திருமேனி தண் பா சடையா தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே ! ஒருநாள் காணவாராயே !–8–5–1 )

என்றும் விலபிக்கும் படி பண்ணி இவ் அபேஷம் மாத்ரம் அடியாக வந்த
பகவத் பிரசாத விசேஷத்தாலே தத் கால நியதமான பரி பூர்ண சாஷாத் காரத்தை உண்டாக்கும் –
இச் சாஷாத் காரம் பர ஜ்ஞானம் என்று பேசப் பட்டது –

இப்படி நிரதிசய போக்யமான பகவத் ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த வாறே
பெரு விடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டால் போலே பிறந்த ப்ரீதி அதிசயம்
பரம பக்தி –

இது முனியே நான்முகனில் படியே
(முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா !என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என்கள்வா !
தனியேனாருயிரே ! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-10-10-1-)சங்கோசம் அற அனுபவித்து அல்லது
தரிக்க ஒண்ணாத அபி நிவேசத்தை உண்டாக்கி மறுக்க ஒண்ணாத திரு வாணை இட்டு வளைத்துக் கூப்பிடுகையாலே

(மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்துமாலைநங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின் ஆணைகண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கண்டாய் ! என்னைக் கூவிக்கொள்வாய் வந்து அந்தோ !-10-10-2-) இவனுக்கு
கடுகப் பிராப்தியைக் கொடுக்கும் படி
சர்வேஸ்வரனுக்கு த்வரை அதிசயத்தை உண்டாக்கி இவனை அவா அற்று வீடு பெறப் பண்ணும் –

இப் பக்தி யோகம் த்ரை வர்ணிகர் ஒழிந்தார்க்கும் த்ரை வர்ணிகர் தங்களில்
ஜ்ஞானத்திலே ஆதல் சக்தியிலே யாதல் இரண்டிலும் ஆதல் குறை யுடையாருக்கும்
பல விளம்பம் பொறுக்க இசையாத தீவ்ர சம்வேகம் உடையார்க்கும் யோக்யம் அல்லாமையாலே
தங்கள் அளவுகளைத் தெளிந்து அத்வாரமாக பிரபத்தியை மோஷ உபாயமாகப் பற்றுமவர்களுக்கு
சர்வ பல சாதனமான பிரபத்தி தானே பரபக்தி ஸ்தானத்திலே சோதிதை யாகையாலே
உபாசகனுக்கு பரபக்திக்கு மேல் வரும் அவஸ்தைகள் போலே இஸ் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுடைய
கோலுதலுக்கு ஈடாக இப் பிரபத்திக்கு மேல் வரும் அனுகூல அவஸ்தைகள் இதின் பலமாய் இருக்கும் –

இப்படி பிரபத்திக்கு பக்திக்கும் அதிகாரி விசேஷத்தைப் பற்றி துல்ய பலத்வம் உண்டாகையாலே விகல்பமாகக் கடவது
இவற்றுக்கு நாநா சப்தாதி பேதாத் -என்கிற-3-3-56- அதிகரணத்திலே
(ப்ரஹ்ம வித்யைகள் வெவ்வேறாக இருப்பதைப்போல, அவற்றின் பெயர் முதலியனவும் வெவ்வேறானவை.) பேதம் சித்தம்
விகல்போ அவிசிஷ்ட பலத்வாத் -என்கிற-3-3-57-அதிகரணத்திலே
(ப்ரஹ்ம வித்யைகள் அனைத்துக்கும் மோக்ஷம் ஒன்றே பலன் . ஆதலால்,அந்த வித்யைகளில், எதில் ஈடுபாடு உள்ளதோ
அதைச் செய்யலாம்.) விகல்பமும் சித்தம் –

(உதாரணம் =32 வித்யைகளும்,ப்ரபத்தியும் மோக்ஷத்துக்கு என்று உள்ளன.
அவற்றுள், மோக்ஷத்துக்கு என்பதாக ஏதாவதொன்றை அநுஷ்டிப்பது சாஸ்த்ர ஸம்மதம் .
இப்படி, இங்குள்ள பலன்களில் வித்யாஸம் இருந்தாலும் மோக்ஷரூப முக்ய பலனில் வித்யாஸமில்லை .
ஒரு யோகத்தில் இழிந்தவன் ,வேறொரு பக்தி யோகத்தைச் செய்யாமல் இருப்பதைப்போல ,
ப்ரபத்தியில் இழிந்தவனும் வேறு உபாயம் தேடவேண்டியதில்லை
ப்ரஹ்ம வித்யைகள் 32—இவை,
1.சாந்தோக்யம் 2.முண்டகோபநிஷத் 3.ப்ரஹதாரண்ய உபநிஷத் 4.தைத்திரீயம் 5.சுபாலோபநிஷத்
6.ஸ்வேதாஸ்வர உபநிஷத் 7.ஈசாவாச்யம் 8.கேநோபநிஷத் என்கிற எட்டு உபநிஷத்துக்களில் விளக்கப்பட்டுள்ளன
இவை உபாஸனா மார்க்கங்கள்
1.அக்நி வித்யை
2.அக்ஷர வித்யை
3.ஆனந்த வித்யை
4.அபிம்ருத்யுபாஸன வித்யை
5.பாலாகி வித்யை
6.பூமி வித்யை
7.ப்ரஹ்ம வித்யை
8.சாண்டில்ய வித்யை
9.தஹர வித்யை
10.ஜ்யோதிர் வித்யை
11.கோஸவிஜ்ஞான வித்யை
12.மது வித்யை
13.மைத்ரேயி வித்யை
14.கௌரக்ஷஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16.பஞ்சாக்னி வித்யை
17.பரவித்யை
18.பர்யங்க வித்யை
19.ப்ரஜாபதி வித்யை
20.ப்ராண வித்யை
21.ப்ரதர்ன வித்யை
22.புருஷ வித்யை
23.புருஷாத்ம வித்யை
24.ரைக்வ வித்யை
25.புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27.ஸர்வ பரவித்யை
28.ஷோடஸகல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31.வைஷ்ணவ வித்யை
32.வைச்வாநர வித்யை )

உபாசனத்தில் விசேஷங்கள் போலே சாகா பேதங்களிலும் பகவச் சாஸ்திர சம்ஹிதா பேதங்களிலும் சொல்லும்
நியாச வித்தையில் மந்த்ராதி விசேஷங்களைக் கண்டு கொள்வது –
நமஸ்காரம் வாசிகம் மானசம் காயிகம் என்று பிரிந்தால் போலே
பிரபத்தியிலும் ஓர் ஒன்றை முன்னிட்டு இவ் விபாகங்கள் சொல்லப்பட்டன
இவை மூன்றும் பொருந்தின போது பூர்ண நமஸ்காரம் ஆனால் போலே
பூர்ண பிரபத்தி யாகக் கடவது என்றவர்கள் பாசுரங்களுக்கும்
வாசிக காயிகங்களான வியாபார விசேஷங்கள் பரீவாஹமாம் படியான மானச பிரபத்தியினுடைய பூர்தியிலே
தாத்பர்யமாகக் கடவது
யதாதிகாரம் இவை எல்லாம் பல ப்ரதங்கள் என்னும் இடம் முன்பே சொன்னோம்

நின்ற நிலைக்கு உற நிற்கும் கருமமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள் கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தரும் ஆறும் அறிந்தனர் அந்தணரே —

(க்ஷத்ரிய ,ப்ராம்மண , வைச்ய வர்ணாச்ரமத்தில் இருப்பவர்கள், அந்தந்த தர்மத்துக்கு ஏற்றபடி கர்மயோகம் செய்தல்,
ஞானயோகத்தை அதன் பலனை முழுவதுமாகத் தெரிந்த ஞானத்துடன் செய்தல்,
பக்தியோகத்தை ஆத்ம ஸாக்ஷாத்காரத்துடன் செய்தல், இவற்றுக்கெல்லாம் தகுதி இல்லாதவர்கள்,
மோக்ஷம் பெறுவதில் தாமதத்தைப் பொறுக்காதவர்கள், ஆகியோருக்கு, பகவானின் க்ருபையால் , விரைவாகப்
பலனளிக்கும் ப்ரபத்தி –இவற்றை அறிந்தவர்கள் வேதம் முற்றும் கற்ற அந்தணர்

கர்ம ஞானம் உபாசனம் சரண வ்ரஜ்யா இதி ஸ அவஸ்தி தான்
சன்மார்க்கான் அபவர்க்க சாதன வித்யௌ சத்வாரக அத்வாரகான்
ஏகத்வி ஆக்ருதி யோக சம்ப்ருத ப்ருதக்பாவ அநு பாவான் இமான்
சமயக் ப்ரேஷ்ய சரண்ய சரதி கிராமந்தி ரமந்தி புதா —

கர்ம , ஞான ,பக்தி யோகங்கள், மற்றும் சரணாகதி –இவை நான்கும் மோக்ஷத்துக்கான உபாயங்கள் —
இவற்றில் சில நேராகவே மோக்ஷம் அளிக்கும். சில மறைமுகமாக மோக்ஷமளிக்கும் .
கர்ம ,ஞான யோகங்கள் மறைமுகமாகவும் பக்தியோகம் நேரிடையாகவும் மோக்ஷபலன் அளிப்பவையாகும்.
ப்ரபத்தி தானாகவே நேராக மோக் ஷபலனை அளிக்கும். பக்தி யோகத்தைத் தூண்டி மறைமுகமாகவும் பலனளிக்கும் .
இப்படி, இரண்டு வழிகளிலும் மோக்ஷமளிக்க வல்ல உபாயமாக இருப்பது ப்ரபத்தி .
இந்த மேன்மையையும் உண்மையையும் அறிந்தவர்கள் ப்ரபத்தி அநுஷ்டிக்கிறார்கள்

——————————————————————

அதிகாரம் -10- பிரபத்தி யோக்ய அதிகாரம் –

அர்த்தித்வேந சமர்த்ததா த்ரிகதநு சம்பிண்டிதா அதிக்ரியா
ச சாஷ்டாங்க ஷடங்கயோகா நியதாவஸ்தா வ்யவஸ்தாபிதா
ச்ரோதீ சர்வ சரண்யதா பகவத ஸ்ம்ருத்யா அபி சத்யா பிதா
சத்யா திஷூ இவ நைக மேஷூ அதிக்ருதி சர்வ ஆஸ்பதே சத்பதே —

(ஒருபலனைப் பெற மிக ஆவல் இருந்து, அதை அடைவதற்கான உபாயத்தில் ஈடுபட தகுதி வேண்டும்.
முதலாவது, அந்தப் பலனில் ,அளவில்லா ஆவல் இருக்கவேண்டும்அடுத்து, மூன்று விதமான தகுதிகள் வேண்டும்.
1.ஜ்ஞானம்–2.சக்தி–3. யோக்யதை இந்தத் தகுதிகளைப் பொறுத்தே உபாயத்துக்கான வழியில் ,ஒரு முமுக்ஷு ஈடுபடுகிறான்.
ஆனால், பக்தி யோகத்துக்கு எட்டு அங்கங்கள் ; ப்ரபத்தி அனுசரிக்க ஆறு அங்கங்கள்.
எல்லா ஜீவராசிகளுக்கும், பகவானே சரணமளிக்கிறான் என்பதை ஸ்ருதிகள் கூறுகின்றன; ஸ்ம்ருதிகள் உறுதி செய்கின்றன.
உண்மையை மட்டுமே பேசு என்று வேதங்கள் சொல்வது,எல்லோருக்கும் பொருந்துவதைப்போல, ப்ரபத்தியும் யாவருக்கும் பொருந்துகிறது

ப்ரபத்திக்கான ஆறு அங்கங்கள்
1.ஆநுகூல்ய ஸங்கல்பம் =இன்று முதல் அநுகூலனாக வர்த்திக்கக்கடவேன் என்கிற ஸங்கல்பம்
2.ப்ராதிகூல்யவர்ஜநம் =ப்ரதிகூலம் செய்யமாட்டேன் என்கிற ஸங்கல்பம்
3. கார்ப்பண்யம் =கர்ம ,ஞான,பக்தி யோகங்கள் செய்யச் சக்தியில்லை என்று ப்ரார்த்தித்தல்
4. மஹாவிச்வாஸம் =பகவானின் திருவடிகளைப் பற்றினால் , பகவான் நிச்சயம் அருளுவான் என்கிற திடமான நம்பிக்கை
5.கோப்த்ருவ வரணம் = எதுவும் சக்தியில்லாத எனக்கு, நீயே உபாயமாக இருந்து, பலனளிக்கவேண்டும் என்று வேண்டுவது
6. ஸாத்விகத்யாகம் = மோக்ஷத்தை உத்தேசித்துச் செய்த ப்ரபத்திக்கு –பலத்யாகம் அதாவது, இந்த ஆத்மாவை ரக்ஷிக்கிற
பர ஸமர்ப்பணத்தை பகவானே, தன்னுடைய ப்ரீதிக்காக, தானே, தன்னைச் சேர்ந்த என்னைக்கொண்டு
செய்துகொள்கிறான் /செய்துகொண்டான் இதனால் வரும் பலன் பகவானுக்கே என அர்ப்பணித்தல்)

இப்படி அபிமத பலனுக்கு உபாயாந்தர நிஸ்ப்ருஹனாய் நியாச வித்யையிலே இழியும் அவனுக்கு
இவ் வித்யைக்கு அதிகார விசேஷம் முதலானவை இருக்கும்படி அறிய வேணும்
அதிகாரமாவது அவ்வோ பல உபாயங்களிலே பிரவ்ருத்தனாம் புருஷனுக்கு
பலத்தில் அர்த்தித்வமும் –
உபாயத்தில் சாமர்த்தியமும் —

இவற்றில் சாமர்த்தியம் ஆவது
சாஸ்த்ரார்த்தத்தை அறிகையும்-
அறிந்த படி அனுஷ்டிக்க வல்லனாகையும் –
சாஸ்திர அநுமத ஜாதி குணாதி யோக்யதையும் –

இவ் வதிகாரம் முன்பே சித்தமாய் இருக்கும் –
இது உடையவனுக்கு பிரயோஜனமாகக் கொண்டு சாத்யமாக அனுவதிக்கப் படுவது பலம் –
ததார்த்தமாக சாத்யமாக விதிக்கப் படுமது உபாயம் –

இங்கு முமுஷூத்வம் உண்டாய் ஸ்வ தந்திர பிரபத்தி ரூப மோஷ உபாய விசேஷ நிஷ்டனுக்கு
சாஸ்திர ஜன்ய சம்பந்த ஞானாதிகள் உபாசகனோடு சாதாரணமாய் இருக்க
விசேஷித்த அதிகாரம் தன்னுடைய -ஆகிஞ்சன்யமும் –அநந்ய கதித்வமும் —

ஆகிஞ்சன்யமாவது உபாயாந்தர சாமர்த்ய அபாவம் –
அநந்ய கதித்வமாவது பிரயோஜனாந்தர வைமுக்யம் -சரண்யாந்தர வைமுக்யமுமாம் –
இது பிரயோஜனாந்தர வை முக்யத்தாலும் அர்த்த சித்தம் –

இவ் வர்த்தம் –
ப்ராஹ்மணம் சித்தி கண்டம் ச யான்சான்யா தேவதா ஸ்ம்ருதா —
பிரதிபுத்தா ந ஸ்வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -மஹாபாரதம் சாந்திபர்வம் ( 350–36 -இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
(அறிவிற் சிறந்த முமுக்ஷுக்கள் ,ப்ரம்மன் ருத்ரன் போன்றவர்களை ஆச்ரயிப்பதில்லை .
ஏனெனில் அவர்கள் அருளும் பலன்கள் மிக அற்பமானவை என்பதை அறிந்துள்ளனர்)
தீவ்ரதமான முமுஷூத்வம் இன்றிக்கே தேக அனுவ்ருத்தியாதி பிரயோஜனாந்தர சக்தனானவன்
மோஷார்த்தமாக பிரபத்தியைப் பற்றினால் அவ்வோ பிரயோஜனாந்தரங்களின் அளவுக்கு ஈடாக மோஷம் விளம்பிக்கும் –

இவ் ஆகிஞ்சன்யத்துக்கும் அநந்ய கதித்வத்துக்கும் நிபந்தனம்
உபயாந்தரங்களில் இவ் வதிகாரியினுடைய அஜ்ஞான அசக்திகளும் பல விளம்ப அசஹத்வமும் —
இதில் சரண்யாந்தர வைமுக்யத்துக்கு நிபந்தனம் –
யதா வாயோஸ் த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயச-தாதுரேவ வசம் யாந்தி
சர்வ பூதானி பாரத-மஹாபாரதம் உத்யோக பர்வம் ( 26–29 )
(ஹே –பாரத —-பலமான காற்றின் வசத்தில் ,புல்லின் நுனிகள் இருப்பதைப்போல எல்லாப் பிராணிகளும் ,
உலகைப் படைக்கிற பகவானின் வசத்தில் இருக்கின்றன) -என்கிறபடியே
தனக்கும் பிறருக்கும் ஒத்து இருக்கிற பகவத் ஏக பாரதந்த்ரயாத் யவசாயமும் -பிரயோஜனாந்தர வைமுக்யமும்

இப் பிரபத்தி அதிகாரி விசேஷம்
ச பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
(இந்த்ரனின் பிள்ளையானவன் ,காக்கை ரூபத்தில் ஸீதா பிராட்டியிடம் அபசாரப்பட்டு, ஸ்ரீ ராமபிரான் அஸ்த்ரம் ஏவ, தப்பிப்பிதற்காக
தேவர்கள்,ரிஷிகள்,தனது தந்தையான இந்த்ரன் யாவராலும் கைவிடப்பட்டுக் கடைசியில் ராமபிரானையே சரணமடைந்தது.) -என்றும்

அஹமஸ்ம்ய அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி -அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை —- ( 37—30 )-என்றும்
(நாரதர் கேட்கிறார் மஹேஸ்வரனே —-”ந்யாஸம் ” என்பதை விளக்கிச் சொல்லவேண்டும் .
அஹிர்புத்ந்யர் ——நாரதா—இது தேவர்களும் அறியாத பரம ரஹஸ்யம் . உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளது.
விரும்பிய பலனை உடனே தரவல்லது .அனைத்துப் பாபங்களையும் போக்கச் சக்தி உள்ளது. இதை எல்லோருக்கும் சொல்லி விடக்கூடாது.
பக்தி இலாதவனுக்குச் சொல்லவே கூடாது. நீர், ஆழ்ந்த பக்தி உள்ளவராதலால் உமது க்ஷேமத்தை விரும்பி இதைச் சொல்கிறேன் .
பலவித விருப்பங்களை அடைய விரும்புபவன் ,யாரால், மற்ற உபாயங்களால் விரைவில் அடைய முடியாதோ, மோக்ஷத்தை விரும்புபவன் பக்தியோகம்
செய்து அதை எப்போது அடைவோம் என்று அறிய இயலாதோ , எங்கு சென்றால் திரும்பவும் ஜனனம் என்பதே கிடையாதோ
அப்படிப்பட்ட ”பரமபதம் ”, ந்யாஸத்திலே கிடைக்கும். இதனால், புருஷோத்தமனான பரமபுருஷனை அடையலாம்.
அடியேன் குற்றங்களுக்கெல்லாம் இருப்பிடம் ;கைமுதல் ஏதும் இல்லாதவன்; உம்மைத் தவிர அடியேனை ரக்ஷிக்க யாருமில்லை ;
தேவரீரே , அடியேனுக்கு உபாயமாக இருக்கவேண்டும்; என்கிற ப்ரார்த்தனை வடிவான ஜ்ஞானம் —ஸரணாகதி /ந்யாஸம் .
கார்பண்யம் ( ஆகிஞ்சன்யம் —கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் செய்யச் சக்தியில்லாதவன் ; அநந்யகதித்வம் —உன்னைத் தவிர ரக்ஷகன் இல்லை;)
கார்பண்யம் இவையிரண்டும் சேர்ந்தது.ஆத்மாவை ,பகவானுக்குச் சமர்ப்பிக்கும்போது , ஒரு உபாயத்தைக் கொண்டு சமர்ப்பிக்கவேண்டும்.
அப்படி, ஏதும் ,அடியேனிடம் இல்லை.ஆதலால்,தேவரீர் ”பக்தி ” என்கிற உபாயமாக இருந்து ரக்ஷிக்கவேண்டும் .
இப்படி,நிறைய விஷயங்களைச் சொல்கிறார்.))

ஆகின்ஜன அநந்ய கதி -சரண்ய–என்றும் –

(ந தர்ம நிஷ்ட்டோஷ்மி ந சாத்ய வேதீ
ந பக்திமான் த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ நந்ய கதிஸ் சரண்ய
த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே ||-(ஸ்தோத்ர ரத்னம் ( 22 )

முதலில், ஸாத்விக த்யாகம் . பிறகு, கீதையில் சொன்ன தேவ அர்ச்சனை போன்ற கர்மயோகம் இதில் ஒன்று. வெகு காலம்
இப்படிச் செய்து, மனஸ் சுத்தமானால் ஜீவாத்ம தத்வ சிந்தனை என்கிற ஜ்ஞான யோகம். இப்படிப் பலகாலம் செய்து,
ஜீவனை சாக்ஷாத்காரம் செய்தபிறகு ,பகவானிடம் பக்தியோகம் . பகவானின் திருவடியை அடைய, கீதையில் க்ருஷ்ணன் சொன்னது.
இவற்றில் ஒன்றும் செய்யவல்லேன்
த்வத்பாதமூலம் –உன் திருவடியின் உட்புறத்தைச் சரணமாகப் பற்றுகிறேன் . வெளிப்புறம் பற்றி ,வேறு பலன் பெற்றுப் போகமாட்டேன்.
உன் திருவடியின் உட்புறத்தில் மறைந்தாலல்லாது , எனது பாபங்கள் —வினைகள்—என்கிற யமகிங்கரர்கள் விடமாட்டார்கள்.
கர்மயோகம் செய்வதற்கும் ,ஜ்ஞானம் வேண்டும் .
ந பக்திமான்—நாத்ம வேதீ —ந தர்ம நிஷ்ட்ட : செய்யாவிட்டாலும் செய்ய முயற்சிக்கலாமே என்றால் அதற்குச் சக்தியில்லை -அகிஞ்சந 🙂

(உபாயச் ச சதுர்த்தஸ்தே ப்ரோக்த : சீக்ரபலப்ரத |பூர்வேத்ரய உபாயஸ்தே பவேயு ரமமநோஹரா : ||
சதுர்த்த மாச்ரயந் ஏவம் உபாயம் சரணாச்ரயம் —–லக்ஷ்மி தந்த்ரம் –

நான்குவித உபாயங்கள் இருந்தாலும் , மூன்று உபாயங்கள் ( கர்மா, ஞான, பக்தி ) பலகாலம் செய்யவேண்டும்.
இதற்கே பற்பல ஜன்மங்கள் எடுக்கவேண்டும். எல்லா ஜன்மங்களிலும் , உபாயத்துக்கான லக்ஷ்யம் எண்ணெய் ஒழுக்கு போல
இருக்கவேண்டும். ஆதலால், நான்காவதான சரணம் ஆச்ரயம் என்கிறது.)

அநாகதாநந்தகால சமீஷயாப்யத்ருஷ்ட சந்தாரோபாய தத் ப்ராப்த்யே ச தத் பதாம் புஜத்வய பிரபத்தேரன்யன்ன மே
கல்பகோடி சஹஸ்ரேணாபி சாதனமஸ்தீதி மனவான – -ஸ்ரீ வைகுண்ட கத்யம்-என்றும்
(பகவானை அடைவதற்கு, அவனுடைய திருவடித்தாமரைகளில் ப்ரபத்தி செய்வதைத் தவிர வேறு உபாயம் , ஆயிரம்
கல்பகோடிக் காலம் சென்றாலும் அடியேனுக்கு இல்லை என்கிற எண்ணமுடைய நான்——-)

புகல் ஒன்றும் இல்லா அடியேன் –
(அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !–6-10-10-)
என்று இவை முதலான பிரமாண சம்ப்ரதாயங்களாலே சித்தம் —

இவ்வளவு அதிகாரம் பெற்றால் பிரபத்திக்கு ஜாத்யாதி நியமம் இல்லாமையாலே சர்வ அதிகாரத்வம் சித்தம் –

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே –

பக்த்யாதௌ சக்தி அபாவ பிரமிதி ரஹிததா சாஸ்த்ரத பர்யுதாச
காலஷேப அஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி சதுர்பி
ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா சம்ஸ்ரயந்தே
சந்த ஸ்ரீ சம் ஸ்வதந்திர பிரபதன விதி நா முக்த்யே நிர்விசங்கா–

(பக்தியோகம் போன்ற உபாயங்களை அநுஷ்டிக்க சக்தியில்லாமை , இவற்றைப்பற்றிய ஞானமில்லாமை , இவற்றையெல்லாம்
அநுஷ்டிக்கத் தகுதியில்லை என்று சாஸ்த்ரங்களால் விலக்கி வைப்பது,மோக்ஷமடைய நேரும் காலதாமதத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை—
இவற்றில் ,ஒன்றோ , இரண்டோ, மூன்றோ அல்லது நான்கோ அல்லது யாவுமோ அமைவது , பூர்வ கர்மபலனால் நேரும்.
இவை, லக்ஷ்மிநாயகனான எம்பெருமானை ப்ரபத்தி மூலமாக அடைவதற்கான தகுதிகள் . இவற்றை அறிந்தவர்,இவ்வுபாயங்களைக்
கொண்டு மோக்ஷம் அடைவதில் எவ்வித சந்தேகமுமின்றி எம்பெருமானை அண்டியுள்ளனர்.)

————————————————————————

அதிகாரம் -11-பரிகர விபாக அதிகாரம் –

இயான் இத்தம் பூத சக்ருத் அயம் அவசியம் பவ நவான்
தயா திவ்ய அம்போதௌ ஜகத் அகிலம் அந்த யமயதி
பவ தவம்ச உத்யுக்தே பகவதி பர நியாச வபுஷ
பரபத்தே ஆதிஷ்ட பரிகர விசேஷ சுருதி முகை —

(கருணைக்கடல் என்றால் இவனையே குறிக்கும்படியான கருணைக்குக்குச் சிறந்த ஸமுத்ரமாகவும் ,எல்லா ஜீவராசிகளுக்கும்
ஹ்ருதயத்தின் உள்ளே இருந்து நியமிக்கும் பரமாத்மாவாகவும் ,ஸம்ஸார நாசகனாகவும் இருக்கிற பகவானிடம் பொறுப்பை
ஸமர்ப்பிக்கிற ப்ரபத்தியின் அங்கங்களின் விசேஷம், வேதம் இவற்றால் இது என்றும் இத்தனை என்றும் ,
இவைகளின் ஸ்வரூபம், உபயோகம் இவற்றைப் பற்றியும் ,ப்ரபத்தி செய்யும் போது
இந்த அங்கங்கள் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருக்கிறது.)

இவ்வித்யைக்கு பரிகரமாவது-
ஆநு கூல்ய சங்கல்பமும் பிரதிகூல்ய வர்ஜனமும் கார்பண்யமும் மஹா விஸ்வாசமும் கோப்த்ருத்வ வர்ணமும் —
(பகவானைத் தவிர வேறு உதவியில்லை என்று இருத்தல் –கார்பண்யம்
பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என ப்ரார்த்திப்பது — கோப்த்ருவ வரணம்)
இவ்விடத்தில்
ஆநு கூல்யச்ய சங்கல்ப பிரதிகூல்யச்ய வர்ஜனம்
ரஷிப்யதீதி விஸ்வாசோ கோப்த்ருத்வ வர்ணம் ததா
ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்விதா சரணாகதி -அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சொல்கிறது ( 37 வது அத்யாயம் —28, 29 பகுதிகள் )-
இத்யாதிகளில் சொல்லுகிற ஷாட் வித்யமும் –

(நாரதர், ருத்ரனை—பரமேஸ்வரனை , ந்யாஸத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார் —

பிரபத்தியையும் உள்பட ஷாட் விதியை என்றது
அஷ்டாங்க யோகம் என்னுமா போலே அங்க அங்கி சமுச்சயத்தாலே -ஆகக் கடவது என்னும் இடமும் —
சமாதி நிலையையும் சேர்த்து அஷ்டாங்க யோகம் என்றால் போலே
இவற்றில் இன்னது ஒன்றுமே அங்கி இதரங்கள் அங்கங்கள் என்னும் இடமும்
நிஷேபா பர பர்யாயோ நியாச பஞ்சாங்க சம்யுத சந்ந்யாச சத்யாக இத்யுக்த சரணாகதி ரித் யபி -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -017-74—
என்கிற ஸ்லோகத்தாலே நியாய நிரபேஷமாக சித்தம் –

இவ் விடத்தில் –
சாச்வதீ மம சம்சித்திரியம் ப்ரஹ்ம விபவாமி யத் புருஷம் பரமுதிச்ய ந மே சித்திரித அன்யதா
இதி யங்கமுதிதம் ஸ்ரேஷ்டம் பலேப்சா தத் விரோதி நீ –என்று
அஹிர்புத்ன்ய (52 வது அத்யாயம் —-பகுதிகள் 13 மற்றும் 14)உக்தமான
பல த்யாக ரூப அங்காந்தரம் மோஷார்த்தமான ஆத்ம நிஷேபத்தில் நியதம் —
பல சங்க கர்த்ருத்வாதி த்யாகம் கர்ம யோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்கள் எல்லா வற்றிலும் வருகையாலே
இவ் வனுசந்தானம் முமுஷூவுக்கு சாங்க சமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம் –

(அஹிர்புத்ந்யர் சொல்கிறார் —
உலகத்தில் தாழ்ந்தவன் என்கிற வரிசையில் எல்லா ஜீவர்களும் அடங்குவர் .
உயர்ந்தவன் எம்பெருமான் ஒருவனே. ஜீவன்கள் நமஸ்கரிக்கிறார்கள் ; எம்பெருமான் வணங்கப்படுகிறான் ;அவனே வணங்கப்படுபவன் .
ஸம்பந்தம் எந்தப் பலனையும் கருதியது அல்ல . நமஸ்கரித்தலே , ப்ரபத்தி . இதுவே புருஷார்த்தம் .
”நம ” என்கிற ஸப்தம் ப்ரபத்தி என்கிற அர்த்தத்தை நிரூபிக்கிறது. பரமபுருஷனைக் குறித்து , நான் நமஸ்கரிக்கிறேன்
என்பது எதுவோ அதுவே எனக்கு நிலையான புருஷார்த்தம் அல்லது ஸ்வாபாவிக கார்யம்.
இதைவிட வேறான பலனானது எனக்கு வேண்டாம் இதுவே சிறந்த அங்கம் .மோக்ஷம் அடைய ஆத்ம ஸமர்ப்பணமான ஸரணாகதி –ப்ரபத்தி –
இதற்கு கர்மங்களை நாமே செய்கிறோம் என்கிற எண்ணமும்,பலன்களில் பற்றும் அறவே கூடாது.)

இங்கு பரிகரங்கள் ஆனவற்றில் ஆநு கூல்ய சங்கல்பத்துக்கும் பிரதி கூல்ய வர்ஜனத்துக்கும் நிபந்தனம்
சர்வ சேஷியான ஸ்ரீயபதியைப் பற்ற
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமத அனுவர்த்தனம் பண்ண வேண்டும்படி இவனுக்கு உண்டான பாரார்த்த்ய ஜ்ஞானம் –
இத்தாலே
ஆநு கூல்யே தராப்யாம் து வி நிவ்ருதிரபாயத-லக்ஷ்மீ தந்த்ரம் ( 17–76 )-என்கிறபடியே அபாய பரிஹாரம் சித்தம் –
(பகவானுக்கு விருப்பமானதைச் செய்தல், அவன் விரும்பாதவற்றைச் செய்யாதொழிதல் –என்பதன் மூலமாக,
அவனது கட்டளைகளை மீறாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.)

கார்ப்பண்யம் ஆவது முன்பு சொன்ன ஆகிஞ்சன்யாதிகளுடைய அனுசந்தானம் ஆதல் –
அதடியாக வந்த கர்வ ஹானி யாதல் -க்ருபா ஜனக க்ருபண வ்ருத்தி யாதலாய் நின்று
சரண்யனுடைய காருண்ய உத்தம்ப நார்த்தமுமாய் –
கார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்தி ரிஹேரிதா லக்ஷ்மீ தந்த்ரம்
(மற்ற எந்த உபாயத்தையும் நாடாமலிருப்பதே கார்ப்பண்யம்)-என்கிறபடியே பின்பும்
அநந்ய உபாயதைக்கும் உபயுக்தமாய் இருக்கும் –

மஹா விஸ்வாசம் ரஷிஷ்ய தீதி விஸ்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம் -லக்ஷ்மீ தந்த்ரம் : –
(பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான் என்கிற மஹா விச்வாஸத்தால்
பகவானை உபாயமாகப் பற்றுதல் என்கிற பலன் ஏற்படுகிறது ) என்கிறபடியே
அணியிடாத அனுஷ்டான சித்தர்த்தமுமாய் -பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாய் இருக்கும் –

ஸ்வரூப அனுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும் புருஷார்த்தமாம் போது
புருஷன் அர்த்திக்கக் கொடுக்க வேண்டியதாலே இங்கே கோப்த்ருத்வ வர்ணமும் அபேஷிதம்-

நன்றாய் இருப்பது ஒன்றையும் இப் புருஷன் அர்த்திக்கக் கொடாத போது புருஷார்த்தம் கொடுத்தான் ஆகாது இறே-
ஆகையாலே இறே அப்ரார்த்திதோ ந கோபாயேத்-லக்ஷ்மீ தந்த்ரம் —17—72-
(வேண்டுதல் இல்லாமல், எந்த ரக்ஷத்வமும் செய்யப்படுவதில்லை)என்றும்
கோப்த்ருத்வ வர்ணம் நாம ஸ்வ அபிப்ராய நிவேதனம் -லக்ஷ்மீ தந்த்ரம் —17–78
(நமது மனத்தில் உள்ளதை பகவானிடம் சொல்வதே கோப்த்ருவ வரணம்)என்றும் சொல்லுகிறது

இப்படி இவ்வைந்தும் இவ்வித்ய அனுஷ்டான காலத்தில் உப யுக்தங்கள் ஆகையாலே இவை
இவ்வாத்ம நிஷேபத்துக்கு அவிநா பூத ஸ்வ பாவங்கள் –

இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கோள்-என்று
சாத்விக பிரக்ருதியான த்ரிஜடை ராஷசிகளுக்கு சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம் –
ததலம் க்ரூ ஸ்வாக் யைர்வ–(நீங்கள் பேசும் குரூர வார்த்தைகளை நிறுத்துங்கள் )என்று பிரதிகூல வர்ஜனம் சொல்லப் பட்டது

சாந்த்வமே வாபிதீயதாம் (சாந்தத்தை /சமாதானத்தை உண்டாக்கும் சொற்களைப் பேசுங்கள் என்பதால்) என்கையாலே
மன பூர்வகம் அல்லது வாக் பிரவ்ருத்தி இல்லாமையாலே ஆநு கூல்ய சங்கல்பம் ஆக்ருஷ்ட்யம் ஆயிற்று

ராகவாத்தி பயம் கோரம் ராஷசா நாமுபஸ்திதம்–(ராமபிரான் மூலமாக , அரக்கர்களுக்கு பெரிய பயம் ஏற்பட்டது )என்று
போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே
அதிகாரமான ஆகிஞ்சன்யமும்
அதனுடைய அனுசந்தான முகத்தாலே வந்த கர்வ ஹந்த்யாதி ரூபமாய் அங்கமான கார்ப்பண்யமும் சொல்லிற்று ஆயிற்று

அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-(த்ரிஜடை சொல்கிறாள். அரக்கிகளே , ராமன் மூலமாக நமக்கு ஏற்படும்
பயத்திலிருந்து இவள் –சீதை நம்மைக் காப்பாற்றுகிற சக்தி உடையவள்
ப்ரணிபாத ப்ரஸன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா |
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் ||
மிதிலா நகரைச் சேர்ந்தவள் ,ஜனக மஹா ராஜாவின் புத்ரியான ஸீதை , நமது நமஸ்காரத்தால் கோபம் தணிந்தவளாக ஆகிவிடுவாள்
ராக்ஷஸிகளே —பெரிய பயத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ,இவள் சக்தி வாய்ந்தவள் .
த்ரிஜடை இப்படிச் சொன்ன போது, ராக்ஷஸிகளுக்கு , ஸீதை ரக்ஷிப்பாள் என்கிற மஹாவிச்வாஸம் ஏற்பட்டது.) என்கையாலும்
இத்தை விவரித்துக் கொண்டு
அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம் –
(மேற்கூறிய த்ரிஜடையின் பேச்சை , ஹநுமானும், ராமனிடமிருந்து அரக்கிகளைக் காக்கும் சக்தி உடையவள் )என்று
திருவடி அனுவதிக்கையாலும்
பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும் இவர் சீற்றத்தை ஆற்றி இவள் ரஷிக்க வல்லவள் ஆகையாலே –
ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லப்பட்டது –

அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே பர்த்சிதாமபி யாசத்வம் ராஷச்ய கிம் விவஷயா
(ஸீதையிடம் , நாம், அபயம் என்று வேண்டுவோம் .இதுவே எனக்குச் சரியாகப் படுகிறது என்று த்ரிஜடை ,அரக்கிகளிடம் சொல்கிறாள்.
நீங்கள் ஸீதையைப் பயமுறுத்தி இருந்தாலும் அவளைப் பிரார்த்தியுங்கள் -அவள் காப்பாற்றுவாளோ என்கிற சந்தேகமே வேண்டாம் )
என்கையாலே கோப்த்ருத்வ வர்ணம் சொல்லிற்று ஆயிற்று –

இவ் வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிஷேபம் –
ப்ரணிபாத பிரசன்நா ஹி மைதிலீ ஜனகாத்மஜா –
(நீங்கள் ஸீதையிடம் செய்த ப்ரபத்தியால் , அவள் உங்களுக்குக் கருணை புரிபவளாக இருக்கிறாள்)என்று
பிரசாத காரண விசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத சப்தத்தாலே விவஷிதம் ஆயிற்று –
ஆகையாலே நியாச பஞ்சாங்க சம்யுத -லக்ஷ்மீ தந்த்ரம் -என்கிற சாஸ்த்ரார்த்தம் இங்கே பூர்ணம-
இப்படி உபதேசிக்க ராஷசிகள் விலக்காத மாட்டே பற்றாசாக பிராட்டி தன் வாத்சல்யாதி அதிசயத்தாலே –
பவேயம் சரணம் ஹி வ என்று அருளிச் செய்தாள்-

இப் பாசுரம் சஹ்ருதமாய் பல பர்யந்தமான படியை –
மாதர் மைதிலீ ராஷசீ த்வயி ததைவ ஆர்த்ரா பராதா த்வயா -ரஷந்த்யா பவ நாத்மஜாத் லகுதரா
ராமஸ்ய கோஷ்டீ க்ருதா-என்று அபியுக்தர் வெளியிட்டார்கள் –
(மாதர் மைதிலீ ! ராக்ஷஸீ த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா |
காகம் த விபீஷணம் ”சரணம்” இத்யுக்தி க்ஷமெள ரக்ஷத :
ஸாந : ஸாந்த்ரமஹாகஸ : ஸுகயது க்ஷாந்திஸ் தவாகஸ்மிகீ ||–ஸ்ரீகுணரத்னகோசம் ( 50 )
இவ் விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பர சமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே
நம்மவர்கள் என்று கண்ணோட்டம் பிறக்கும் ராஷசிகளும் அந்தர் பூதைகள் –
அப்படியே ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடு கூட வந்த நாலு ராஷசரும் அவனுடைய உபாயத்திலே அந்தர்பூதர் –

அங்குற்ற அபய பிரதான பிரகரணத்திலும் இவ் வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம்-எங்கனே என்னில் –
ப்ராதி கூல்யத்தில் வ்யவஸ்திதனான ராவணனுக்கும் கூட –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ சீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வசேம ராஜன் நிஹ வீத சோகா -என்று
ஹிதம் சொல்லுகையாலே ஆநு கூல்ய சங்கல்பம் தோற்றிற்று –

(பூரா ஸரத்ஸூர்ய மரீசி ஸன்னிபான் நவான்
ஸுபுங்கான் ஸுத்ருடான் ந்ருபாத்மஜ |
ஸ்ருஜத்யமோகான் விஸிகான் வதாய தே
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||-யுத்த காண்டம் ( 9–22 )

த்யஜஸ்வ கோபம் ஸுகதர்ம நாஸனம்
யஜஸ்வ தர்மம் ரதிகீர்தி வர்தனம் |
ப்ரஸீத ஜீவேம ஸுபுத்ர பாந்தவா :
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

யாவன்ன லங்காம் ஸமபித்ரவந்தீ வலீமுகா : பர்வத கூடமாத்ரா : |
தம்ஷ்ட்ராயுதாஸ்சைவ நகாயுதாஸ்ச ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

யாவன்ன க்ருஷ்ணந்தி ஸிராம்ஸி வாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவானாம் |
வஜ்ரோபமா வாயு ஸமான வேகா : ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

ராமனிடம் ஸீதையை ஒப்படைத்துவிடு என்றும்,ஸீதையை , ராமனிடம் ஒப்படைத்துவிட்டு ,
நாம் இந்த லங்காராஜ்யத்தில் வருத்தமில்லாமல் வாழலாம் — என்றெல்லாம் விபீஷணன் சொல்கிறான்—)

இந்த ஹித வசனம் பித்த உபஹதனுக்கு பால் கைக்குமா போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று-
த்வாம் து திக் குல பாம்சனம் -என்று திக்காரம் பண்ணின பின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது –
இவனோடு அனுபந்தித்த விபூதிகளும் ஆகாது -இவன் இருந்த இடத்திலே இருக்கவும் ஆகாது என்று அறுதியிட்டு
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச-என்று
ஸ்வ வாக்யத்தின் படியே அங்கு துவக்கு அற்று போருகையாலே பிரதிகூல்ய வர்ஜன அபிசந்தி தோற்றிற்று –

ராவணோ நாம துர்வ்ருத்தா -என்று தொடங்கி சர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே
தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும் பின்பும்
அநுஜோ ராவணஸ்யாஹம் தேன சாச்ம்யவமாநித-பவந்தாம் சர்வ பூதா நாம் சரண்யம் சரண்யம் கத -என்கையாலும்
கார்ப்பண்யம் சொல்லிற்று –

அஞ்சாதே வந்து கிட்டி -சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே -என்று சொல்லும் படி
பண்ணின மஹா விஸ்வாசம் விபூஷணோ மஹா ப்ராஜ்ஞா என்று காரண முகத்தாலே சொல்லப் பட்டது –
ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச் சப்தத்தாலே விஸ்வாசாதி அதிசயம் தானே விவஷிதம் ஆகவுமாம்-

ராவணம் சரணம் கத என்கையாலே உபாய வர்ண அந்தர் நீதமான கோப்த்ருத்வ வர்ணம் சொல்லிற்று ஆயிற்று –
உபாய வர்ண சப்தத்தாலே வ்யாஜிதம் ஆகிற அளவு அன்றிக்கே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷனம் உபாஸ்திதம்-என்கையாலே கடக புரஸ்சரமான ஆத்ம நிஷேபம் சொல்லிற்று
இப் பிரகரணத்தில் நிவேதன சப்தம் விஜ்ஞாபன மாத்ர பரமானால் நிஷ் பிரயோஜனம் –

இப்படி மற்றும் உள்ள பிரபத்தி பிரகரணங்களிலும்-
லௌகிக த்ரவ்ய நிஷே பங்களிலும் சம்ஷேப விஸ்தர பிரக்ரியையாலே இவ் வர்த்தங்கள் காணலாம் –
தான் ரஷிக்க மாட்டாதொரு வஸ்துவை ரஷிக்க வல்லான் ஒருவன் பக்கலிலே சமர்ப்பிக்கும் போது
தான் அவன் திறத்திலே அனுகூல அபிசந்தியை யுடையவனாய்
பிரதிகூல அபிசந்தியைத் தவிர்ந்து -இவன் ரஷிக்க வல்லவன் -அபேஷித்தால் ரஷிக்கவும் செய்யும் என்று தேறி
தான் ரஷித்துக் கொள்ள மாட்டாமையை அறிவித்து -நீ ரஷிக்க வேணும் என்று அபேஷித்து-
ரஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே சமர்ப்பித்து
தான் நிர்பரனாய் பயம் கெட்டு மார்பிலே கை வைத்துக் கொண்டு கிடந்தது உறங்கக் காணா நின்றோம் இறே

இக் கட்டளைகள் எல்லாம் க்ரியாமாணார்த்த பிரகாசகமான த்வயாக்ய மந்த்ரத்திலே அனுசந்திக்கும்படி எங்கனே என்னில்
சர்வஜ்ஞ சர்வ சக்தி உக்தனாய் -கர்ம அநுரூப பலப்ரதனாய் -சர்வ உபகார நிரபேஷனாய்-
ஷூத்ர தேவதைகளைப் போலே ஷிப்ரகாரி யன்றிக்கே இருப்பானாய்-
ஸ்சேமாதிக தரித்ரனான சர்வேஸ்வரன் அநந்த அபராதங்களை யுடையார்க்கு அபிகம்யன் ஆகையும்-
பிராப்தி விரோதியான அநந்த அபராதங்களை உடையார்க்கு
அளவில்லாத பலத்தை தருகையும் -அல்ப வியாபாரத்துக்கு தருகையும் -தாழாதே தருகையும் -தரம் பாராதே தருகையும்
கூடுமோ என்கிற சங்கைகளுக்கு நிவர்த்த கங்களுமாய் யதா சம்பவம் –
உபாயத்வ ப்ராப்யத்வ உப உக்தங்களுமாய் இருந்துள்ள புருஷகார சம்பந்த குண வியாபார பிரயோஜன விசேஷங்கள் ஆகிற
சேஷியினுடைய ஆகாரங்களைப் பொதிந்து கொண்டு இருக்கிற
ஸ்ரீ மச் சப்தத்திலும்
நாராயண சப்தத்திலும்
ஆர்தமாக அநு கூல்ய சங்கல்பமும் பிரதிகூல வர்ஜனமும் அனுசந்தேயமாகக் கடவது –

இப்படி விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஔசித்யத்தாலே அவன் திறத்தில் பிராப்தமான
அபிமத அனுவர்த்தன சங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் பிரகாசிப்பிக்கின்றன –
இப்புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்கள் ஆவன –
மறுக்க ஒண்ணாமையும்
ஒழிக்க ஒழியாமையும்
நிருபாதிகம் ஆகையும்
சஹகாரியைப் பார்த்து இருக்க வேண்டாமையும்
தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும் –
இவ் விசேஷங்கள் அஞ்சாலும் சங்கா பரிஹாரம் பிறந்த படி எங்கனே என்னில்

சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தானே யாகிலும் மறுக்க ஒண்ணாத புருஷகார விசேஷத்தாலே
அந்தப்புர பரிஜன விஷயத்தில் போலே
அபிகந்தவ்யதா விரோதிகளான அபராதங்களை எல்லாம் ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும் படி
நின்று அபிகந்தவ்யானாம் –

கர்ம அநுரூப பலப்ரதனே ஆகிலும் -இப் பிரபத்தி ரூப வ்யாஜத்தாலே பிரசன்னனாய்
ஸ்வாமித்வ தாசஸ்த்வ சம்பந்தோ போதிதமாய்
தாயம் போலே ஸ்வத பிராப்தமான அளவில்லாத பலத்தையும் தரும் –

அவாப்த சமஸ்த காமதை யாலே சர்வ உபகார நிரபேஷனே யாகிலும்
அல்ப வ்யாஜத்தாலே வசீகார்யனான ஸூஜன சார்வ பௌமனைப் போலே
காருண்யாதிகளாலே இவன் செய்கிற சிலவான வியாபாரத்தைத் தனக்கு பரிபோகாரமாக ஆதரித்துக் கொண்டு
க்ருதஜ்ஞனாய் கார்யம் செய்யும் –

ஷூத்ர தேவதைகளைப் போலே ஷிப்ரகாரி அன்றாகிலும் –
மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்து பலம் கொடுத்தானே யாகிலும்
அநந்ய சரண்யனுடைய ப்ரபத்திக்கு ஔதார்யாதி குண சஹிதமாய்
சஹகார்யந்தர நிரபேஷமான தன் சங்கல்ப மாத்ரத்தாலே
காக விபீஷணாதிகளைப் போலே இவன் கோலின காலத்திலே அபேஷிதம் கொடுக்கும்

சமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ர்யாதி குண விசிஷ்டனாய் தன் பிரயோஜனமாக
ஆஸ்ரிதர்க்கு அபேஷிதம் செய்கிறான் ஆகையாலே
கோசல ஜன பதத்தில் ஜந்துக்களுக்குப் போலே குமாரனோடு ஒக்கத் திர்யக்கான கிளிக்கு பாலூட்டும்
கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும் –
இப்படி யதா லோகம் பிறந்த சங்கைகளுக்கு யதா லோகம் பரிஹாரம் உண்டாகையாலே
யதா சாஸ்திரம் பிரபத்தி அபேஷித சாதனமாகக் குறை இல்லை –

இவ் விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் சதாசார்ய கடாஷ விசேஷத்தாலே தெளிந்தவனுக்கு அல்லது
மஹா விஸ்வாசம் பிறக்காது -எங்கனே என்னில் –
ஈஸ்வரன் அபிமுகன் அல்லாமையாலே கர்ம யோகாதிகளுக்கு அனர்ஹனாம் படியான
மஹா பாதங்களை உடையவனாய்
திகசுசி மவிநீதம் என்கிற ஸ்லோகத்தின் படியே எட்ட அரிய பலத்தை
கணிசிக்கும் படியான சாபலத்தையும் உடையனாய் –
(திகசுசிமவிநீதம் நிர்ப (த )யம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ யோஹம் யோகிவர்யாக்ரகண்யை : |
விதிசிவ ஸநகாத்யைர் த்யாது மத்யந்ததூரம்
தவபரிஜந பாவம் காமயே காமவ்ருத்த : ||ஸ்தோத்ர ரத்னத்தில் (47)
சாஸ்த்ரங்களில் சொல்லியபடி ஸாத்விக ஆகாரங்களை உண்டு ,இந்த்ரியங்களை அடக்கி , மனத்தையும் ஸாத்விகமாக்கி
பெரியவர்களிடம் அடக்க ஒடுக்கமாக அவர்களுக்குப் பணிவிடை செய்து பூர்ண புருஷாகாரம் இருந்தாலும்
உன்னிடம் நெருங்க அஞ்சுகிறார்கள் .
யோக்யதை இருந்தாலும் பெரியோர்கள் கோஷ்டியில் சேர வெட்கப்பட்டு , அநுஷ்டானபரர்களும் நெருங்கப் பயப்படுகிறார்கள் .
ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸநகாதி முனிவர்களும் உன்னை அண்டவே அஞ்சுகிறார்கள் .அப்படி அஞ்சாமல் உன்னிடம் மோக்ஷத்தைக்
கேட்டிருந்தால் எப்போதோ மோக்ஷம் அடைந்திருப்பார்கள்.
நானோ ஒருவித சக்தியுமில்லாதவன் எவ்வித சிக்ஷையும் பெறாதவன் .துணிந்து வெட்கமின்றிப் ப்ரார்த்திப்பது தகாதுதான் .
ஆனால், நான் காமவ்ருத்தன் ; எல்லா சாஸ்திரங்களையும் மீறி நடந்ததைப்போல ,மோக்ஷம் வேண்டுவதற்கான
சாஸ்த்ரங்களையும் மீறி இருக்கிறேன்.துணிந்து கேட்கிறேன், மோக்ஷம் . இதனை ஆராய்ந்தால் நானே என்னை வெறுத்து
ஒதுக்கவேண்டியவன் ஆவேன்
திகசுசிமவிநீதம் =தூய்மை வெட்கம் தயை போன்றவை இல்லாதவனை நிந்திக்க வேண்டியது தான் நியாயம்.
ஆனால், அடைய இயலாத ஒன்றுக்கு முயற்சி செய்து சுலபமான உபாயத்தைச் செய்கிறான் )

இப் பலத்துக்கு அனுஷ்டிக்கப் புகுகிற உபாயம் காயக்லேச அர்த்தவ்யய கால தைத்ர்த்யாதிகள்
ஒன்றும் வேண்டாத தொரு சக்ருத அனுசந்தானம் ஆதல்
சமுதாய ஜ்ஞான பூர்வக சக்ருத் உக்தி மாதரம் ஆதலாய் -இந்த லகு தர மான உபாயத்தைக் கொண்டு
அந்த குரு தரமான பலத்தை தான் கோலின காலத்திலே ஆசைப்பட்டு
இப் பலத்துக்கு சுநமிவ புரோடாச-பாத்ம ஸம்ஹிதையில்-
(புரோடாசம் என்பது ஹோம த்ரவ்யம் –இது தேவர்களுக்கு உரியது, அதை ஏற்கும் தகுதி நாய்க்கு இல்லை—)என்கிறபடியே
ஜன்ம வ்ருத்தாதிகளாலே தான் அனர்ஹனாய் வைத்து
தன் அனுபந்திகளையும் கொண்டு இப் பேறு பெறுவதாக ஒருத்தனுக்கு மஹா விஸ்வாசம் பிறக்கையில்
அருமையை நினைத்து கல வெள்ளக் கட்டுப் போய் கல எண்ணெய் ஆயிற்று என்று எம்பார் அருளிச் செய்தார் இறே
கர்ம யோகத்துக்கே தகுதி இல்லாதவன் இந்த பிரபத்தியில் மஹா விஸ்வாசம் கொள்ள நினைப்பது
என்ற பொருளில் அருளிச் செய்தார் –

(ஒரு வாணியனின் –எண்ணெய் விற்பவனின்— செக்கு —எண்ணையை ஆட்டும் மரத்தாலான சாதனம்—-பழுதுபட ,
வாணியன் ,கானகத்துக்குச் சென்று செக்குக்கான ஒரு மரத்தை வெட்ட முயன்றான். அப்போது அந்த மரத்தில் குடியிருந்த ஒரு பிசாசு,
”மரத்தை வெட்டாதே—-உனக்குப் பிழைப்பதற்கு தினமும் ஒரு மூட்டை எள்ளையே தருகிறேன்;எள்ளை விற்றுப் பிழைத்துக்கொள் —” என்க ,
வாணியனும் சம்மதிக்க, அந்தப் பிசாசு, தினமும் ஒரு மூட்டை எள் கொடுத்துவந்தது.சிறிதுநாள் கழித்து,அந்த மரத்தினடியே
வந்த மற்றொரு பிசாசு, விஷயத்தைக் கேள்விப்பட்டு,முதல் பிசாசிடம் , நான் அந்த வாணியனைக்
கொன்றுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, வாணியனின் வீட்டுக்கு வந்தது.
அந்தச் சமயத்தில், வாணியன் , தனது பிள்ளையிடம் , முரண்டு பிடிக்கும் இரண்டாவது காளை மாட்டைக் காட்டி ,
” மகனே—அந்த இரண்டாவது பிசாசைப் பிடித்துக் கட்டு –” என்றான். வாணியனைக் கொல்ல வந்த பிசாசு ,நடுங்கிப்போய் ,
”ஐயா —நான் உனக்கு தினமும் எண்ணெயாகவே கொடுக்கிறேன் –என்னை —” என்று சொல்லி ஓடிப் போயிற்று.
இதைக் கேள்வியுற்ற முதல் பிசாசு, சிரித்ததாம் .
இதைப் போன்றே மஹா விச்வாஸம் , பக்தி யோகத்தைக் காட்டிலும் சிரமமானது என்பர்.
ஒருபிடி எள்ளையே , கொடுக்க இயலாதவனிடம் ,ஒரு பாத்திரம் நிரம்ப எண்ணெய் கேட்பது போல—கர்மயோகத்துக்கே
தகுதி இல்லாதவன் மஹாவிச்வாஸம் கொள்ள நினைப்பது உள்ளது –என்றும் பொருள் கொள்ளலாம் )

இவ்விடத்தில் சர்வேஸ்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நாரதமன் என்று
பேர் பெற்ற பிறந்து கெட்டானில் காட்டில்
இடைச்சிகளைப் போலே விவேகம் இல்லையே யாகிலும் சௌலப்யத்தை அறிந்து
அந்நலன் உடை ஒருவனை நணுகுமவனே பரம ஆஸ்திகன் என்று அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் –

இப்படி புருஷகாராதி ஜ்ஞானத்தாலே பிறந்த விஸ்வாச மஹத்வமும் விஸ்வாச ஸ்வரூபமும் கார்ப்பண்யமும்
ப்ரபத்யே -என்கிற க்ரியா பதத்தில் உப சர்க்கத்திலும்
சரண சப்தோ பலிஷ்டமான தாதுவிலும்
உத்தமன் தாது பொருளிலும்
அனுசந்தேயங்கள்
இதில் உத்தமனில் விவஷிதத்தை -அநந்ய சரண்ய-என்று கத்யத்திலே எம்பெருமானார் வியாக்யானம் பண்ணி அருளினார் –
இவ்விடத்தில் உபாயத்வ அத்யவசாய வாசக சப்தத்திலே கோப்த்ருத்வ வரணம் அந்தர் நீதம் –

அஹம் அஸ்மி அபராதா நாம் ஆலயோ அகிஞ்சனோ அகதி
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி –அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை-37-30-என்றும்
சரணாகதி ரித்யுக்தா சா தேவ அஸ்மின் பிரயுஜ்யதாம் -37-31–என்றும்
உபாயோ க்ருஹ ரஷித்ரோ சப்த சரணமித்யயம்
வர்த்ததே சாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக 37–29 )-என்றும் சொல்லுகிறபடியே
உபாயாந்தர அசக்தனுக்கு சர்வேஸ்வரன் சர்வ சாஸ்த்ரார்த்த சாதரணமான ரஷகத்வத்திலே மாத்ரம் நிற்கை அன்றிக்கே
ஸ்வீக்ருத பரனாய்க் கொண்டு உபாயாந்தர ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும் –
ந்யஸ்த பரனான இவ்வதிகாரிக்கு பின்பு அநந்ய உபாயத்வம் நிலை நிற்கைக்காகவும்
உபாயத்வ அத்யவசாயம் இவ்விடத்திலே விவஷிதமாயிற்று –

உபாயம் என்றால் ஒரு விரகு என்ற மாத்ரம் ஆகையாலே
இவ் உபாயத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கையாலும்
ரஷிஷ்யதீதீ விஸ்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -என்றும்
சர்வஜ்ஞ அபி ஹி விச்வேசா சதா காருணிகோ அபிசன்
சம்சாரதந்திர வாஹித்வாத் ரஷாபேஷாம் ப்ரதீஷதே -லக்ஷ்மீ தந்த்ரம்–என்றும் சொல்லுகிறபடியே
சேத நை காந்தமான கோப்த்ருத்வ வரணம் அனுசந்தேயம் ஆகையாலும் கோப்த்ருத்வ வரணம் இங்கே விவஷிதம்

அதி சரண சப்தம் ஒரு பிரயோகத்திலே இரண்டு அர்த்தத்தை அபிகா நம் பண்ண மாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு
அசாதாரணமான உபாய அத்யவசாயம் இவ்விடத்தில் சப்தமாய் சர்வாதிகாரி சாதாரணமான
கோப்த்ருத்வ வரணம் அர்த்தமாகக் கடவது

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற உம்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே —

பக்தியோகம் போன்றவற்றை அனுசரிக்க இயலாத நிலையில் இருப்போருக்கும்-இவை பலன்தருமோ என்று
சந்தேகப்படுவோருக்கும் இவர்களது கதியற்ற நிலையை உணர்ந்த எம்பெருமான் நம்மைக் காக்கத் திருவுள்ளம் கொண்டான்.
உபாயமாக அவனையே வேண்டி,அவனையே அடைய அன்புகொண்ட ஆசார்யர்கள் -அதற்கான வழியை உபதேசித்தார்கள்
இதன் மூலமாக,நம்மைப்போன்றே கர்மவினைகளால் பீடிக்கப்படும் மற்ற தெய்வங்களை நாடி , நமக்குச் சிறிதும் தொடர்பில்லாத
அவர்களிடம் என்னை இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்று இத் தெய்வங்களிடம்
கையேந்தும் தவறைச் செய்யமாட்டோம்

பிரக்யாத பஞ்சஷ அங்க சக்ருத் இதி பகவச் சாசநை ஏஷ யோக
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அன்யேன தத் சாத்யதா இச்சா
தத்வஜ்ஞான பிரயுக்தா து இஹ ச பரிகரே தாததீன்ய ஆதி புத்தி —

பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரபத்தி யோகம் ஐந்து அங்கங்களைக் கொண்டது என்றும் ஒரே ஒருமுறை செய்யப்பட வேண்டும்
என்று கூறப்பட்டது.
(மோக்ஷத்துக்காகச் செய்யப்படும் ப்ரபத்தியில் ”ஸாத்விக த்யாகம் ”ஆறாவது அங்கம் )
ஏனைய பலன்களைக் கோரிச் செய்யப்படும் ப்ரபத்தியில் இந்த அங்கம் இல்லை.
எம்பெருமானின் கட்டளையை மீறுதல் என்பதை மாற்ற,ஆநுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வ்ரஜநம் இரண்டு அங்கங்களும் ,
பகவானை அல்லாது வேறு உபாயத்தைப் பற்றாததை கார்ப்பண்யம் என்கிற அங்கமும் , தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்
விஷயத்தில் வேறு உபாயங்களை நாடாமல் பகவானை நம்பியிருப்பது மஹா விச்வாஸத்தையும் , விரும்பும் பலனை அளிக்கிறேன்
என்கிற பகவானின் ஸங்கல்பத்தை கோப்த்ருத்வவரணம் என்கிற அங்கமும் ஏற்படுத்துகிறது .
இப்படியாக உள்ள ப்ரபத்தியில் ,இவை யாவும் பகவானாலேயே என்கிற எண்ணமும் சாஸ்த்ர ஞானத்தால் மட்டுமே உண்டாகிறது .

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -7- முமுஷூத்வ அதிகாரம் /அதிகாரம் -8- அதிகாரி விபாக அதிகாரம் – —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 26, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -7- முமுஷூத்வ அதிகாரம்

கால ஆவர்த்தான் பிரகிருதி விக்ருதீ காம போகேஷூ தோஷான்
ஜ்வாலா கர்த்தா ப்ரதிம துரித உதர்க்க துக்க அநுபூதிம்
யாதாதத்யம் ஸ்வ பரி நியதம் யச்ச திவ்யம் பதம் தத்
காரா கல்பம் வபுரபி விதன் கஸ்தி திஷேத பந்தம் –

(சுழலைப்போல மறுபடியும் மறுபடியும் வருகின்ற காலங்கள் , ப்ரக்ருதி , மற்றும் அதன் மாற்றமான மஹத் போன்ற தத்வங்கள் ,
இவ்வுலகம் மற்றும் அவ்வுலகம் ஆகியவற்றில் உள்ள சுகங்களில் மறைந்து இருக்கிற தோஷங்கள், நெருப்பு ஜ்வாலையால்
குழியில் நிரம்ப உள்ள பாவங்களின் பலனாக தொடர்ந்து வருகிற துன்பங்கள் , தன்னிடமும் பகவானிடமும் எப்போதும்
சேர்ந்து இருக்கும் உண்மையான ஸ்வபாவங்கள், ப்ரஸித்தமான பரமபதம்,சிறைபோல் இருக்கிற சரீரம் –
இவையெல்லாம் அறிந்த /அறிகிற யார் ஒருவன் * /எவன்தான் , இந்த ஸம்ஸார பந்தத்தைப் பொறுத்துக்கொள்வான் ?
( ஒருவரும் பொறுத்துக்கொள்ள மாட்டான்—)
புத்தியால் அறிவது—-இந்தப் புத்திக்கு எட்டு வகையான சிறப்பு –இவற்றால் அறிதல்
1.கேட்க ஆவல் , 2. கேட்டல், 3.கேட்டதை புத்தியில் நன்கு வாங்கிக் கொள்ளுதல் 4.அப்படி வாங்கிக் கொண்டதைத் தரித்தல் ,
5.சேர்க்க வேண்டியதை ஊகித்துச் சேர்த்தல், 6.தள்ள வேண்டியதை விளக்குதல், 7.ஒவ்வொரு வஸ்துவிலும் உள்ள
விசேஷங்களை அறிதல், 8.உண்மையான அறிவைப் பெறுதல்
புத்தி என்கிறோமே , இது எட்டு வகை
1.சீக்ரத்தில் க்ரஹிப்பது , 2. மறக்காமல் தரிப்பது , 3.சமயத்தில் நினைவுபடுத்திக்கொள்வது 4.பிறருக்குச் சொல்லிக்கொடுப்பது ,
5.ஊகித்துத் தானாகவே சரியாகத் தெரிந்துகொள்வது 6.ஸமயோசிதமாய் மாற்றுவது, 7.பகுத்து அறிவது , 8.தத்வ ஜ்ஞானம்
மேற்கண்டவற்றையெல்லாம் இப்படிப் புத்தியால் அறிகிறோம்.)

இப்படி இவ் வர்த்தங்களை அத்யாத்ம சாஸ்த்ரங்களாலே தெளிந்து
ஸ்வயம் பிரகாசாத்வ ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போத்ருத்வ சரீரித்வ அணுத்வ நித்யத்வ நிரவயவத்வ
ஸ்சேதன தஹன க்லேதன சோஷணாத்ய நர்ஹத்வ வ்ருத்திஹ் ரஸா ரஹித —
(ச்சேதந , தஹந , க்லேதந , = அறுக்க ,எரிக்க, காயப்படுத்த இயலாத
சோஷணாத்யநர்ஹத்வ =உணரவைக்க இயலாத ,
வ்ருத்திஹ்ரஸா ரஹித =எந்த வகையிலும் மாற்ற இயலாத -ஆத்மா விரிவதோ,சுருங்குவதோ இல்லை)
ஸ்வரூபத் வாதிகளாலே ஆத்மாவுக்கு விசேஷண பூத தேக இந்த்ரிய வைலஷண்யத்தைக் கண்டு –

இவனுடைய பரலோக கமன தேஹாந்தர ப்ராப்தி யோக்யத்வ நிச்சயத்தாலே சாமான்யேன லோக உத்தீர்ண
புருஷார்த்த யோக்யராய் நரக பத நாதி ஜன்மாந்தர க்லேசங்களுக்கு அஞ்சி
அவற்றின் காரணங்களான கர்மங்களின் நின்றும் நிவ்ருத்தராய்
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வ அல்ப சக்தித்வ அணுத்வ சம்சய விபர்யய துக்காதி யோக்யத்வ அசுபாஸ்ரயத் வாதிகளாலே
உண்டான விசேஷ்ய பூத ஈஸ்வர வ்யாவ்ருத்தி நிச்சயத்தாலே
பகவத் கைங்கர்ய ரூபமான ஸ்வரூப ப்ராப்த வைபவத்தை அபேஷிக்கைக்கு யோக்யராய்
சர்வ அபேஷித சங்க்ரஹமான திரு மந்த்ரத்தைக் கொண்டு சார தம அர்த்தங்களை அனுசந்திக்கும் போது

1–பிரதம பதத்திலே த்ருதீய அஷரத்தாலே பிரதி பன்னமான ஞானத்வாத் யனுசந்தானத்தாலே
தேக தத் அனுபந்திகளில் வரும் அஹங்கார மமகாரங்களையும்-

2- பிரதம அஷரத்திலே லுப்த சதுர்தியாலே பிரதிபன்னமான தாதர்த்யத்தாலே தேஹாதிரிக்த ஆத்ம ஸ்வரூப தது குணங்களில்
த்வம் மே அஹம் மே என்கிற ஸ்லோகத்தின் படியே தனக்கு உரிமை உண்டாக நினைக்கிற அஹங்கார மமகாரங்களையும் –

(த்வம் மே அஹம் மே குதஸ்தத் தபி குத இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச் சரணாதி சித்தா தநுபவ விபவாத் ஸோபி ஸாக்ரோஸ ஏவ
காக்ரோஸ :கஸ்ய கீ தாதி ஷு மம விதித :கோத்ர ஸாக்ஷீ ஸுதீ ;ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி ந்ருக லஹே ம்ருக்ய மத்யஸ் தவத் த்வம்

நம்பெருமாள் = நீ எனக்கு சேஷன்
ஜீவாத்மா =நான் எனக்கே சேஷன்
நம்பெருமாள் =நீ இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன
ஜீவாத்மா = தேவரீர் ,சொல்வதற்கு என்ன காரணம்
நம்பெருமாள் =நான் சொன்னது வேதத்தை மூலமாகக் கொண்ட ப்ரமாணத்தால்
ஜீவாத்மா =நான் சொன்னது ,அனாதையாக ஏற்பட்ட அநுபவத்தின் பெருமையால்
நம்பெருமாள் =உன் அநுபவம் ஆக்ஷேபிக்கப்பட்டிருக்கிறது
ஜீவாத்மா =எங்கே எவரால் ஆக்ஷேபிக்கப்பட்டது
நம்பெருமாள் =கீதை முதலிய நூல்களில் ஆக்ஷேபிக்கப்பட்டிருக்கிறது
ஜீவாத்மா =இவ்விஷயத்தில் யார் சாக்ஷி
நம்பெருமாள் =மஹாஜ்ஞானிகளான வ்யாஸர் ,பராசரர் போன்றோர்
ஜீவாத்மா = ஆனால்,அவர்கள் உன்னிடம் பக்ஷபாதம் உள்ளவர்கள்
இவ்வாறு , ஜீவாத்மாவுக்கும் ஸம்வாதம் ஏற்பட்டபோது, நீர் எங்கு தேடியும் இரண்டு கக்ஷிக்கும்
பொதுவான ஒருவர் கிடைக்காததால் ,ஸத்யப்ரமாணம் செய்ய முயற்சிப்பவரைப் போல ,ஸேவை ஸாதிக்கிறீர்)

3- மத்யம அஷரத்திலே அவதாராண அர்த்தத்தாலே அந்ய சேஷ பூதோ அஹம் என்றும் மமான்ய சேஷி என்றும் வரும்
அஹங்கார மமகாரங்களையும் –

4- மத்யம பதத்தில் பிரதிபன்னமான நிஷேத விசேஷத்தாலே ஸ்வ ரஷணத்தை வியாபாரத்தைப் பற்ற வரும்
நிரபேஷ ஸ்வாதந்த்ர்ய நிரூபாதிக சேஷித்வ அபிமான ரூபங்களான அஹங்கார மமகாரங்களையும்

5- இந் நிஷேத சாமர்த்தியம் தன்னாலே த்ருதீய பதத்திலே சதுர்த்தியாலே அபிப்ரேதமாய் பாவியான
கைங்கர்ய பரிந்த அனுபவம் ஆகிற பலத்தைப் பற்ற
இப்போது பலாந்தர அனுபவ ந்யாயத்தாலே வரும் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வ ஸ்வார்த்த கர்த்ருத்வ
போக்த்ருத்வ ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்களையும்

யதா யோக்யம் ஆர்த்தமாகவும் சப்தமாகவும் அடியறுத்து இப்படி ஸ்த்ர ப்ரதிஷ்ட ஞானராய்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -என்றும்
( கிற்பன் கில்லே னென்றிலன் முனநாளால்
அற்ப சாரங்க ளவை சுவைத்தகன்றொழிந்தேன்
பற் பல்லாயிரமுயிர் செய்த பரமா !—நின்
நற் பொற் சோதித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே ?–திருவாய்மொழி – 3–2–6 )

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உணரும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்றும்
(கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே—–திருவாய்மொழி (4-9-10))

தஸ்மின் பிரசன்னே கிமிஹாஸ் த்யலப்யம் தர்மார்த்த காமரை லமல்ப காஸ்தே -விஷ்ணு புராணம்-
(தஸ்மிந் =அந்த பகவான்/ப்ரஸந்நே =அநுக்ரஹிக்கும்போது/இஹ அலப்யம் = இங்கு அடைய முடியாதது
கிம் அஸ்தி = என்ன இருக்கிறது !/தர்மார்த்தகாமைரலமல்பகா =தர்மம், அர்த்தம், காமம் மூன்றும் வேண்டாம்,
அவை அல்ப புருஷார்த்தங்கள்;அவற்றால் ஆவது ஏதுமில்லை)

அந்தவஸ்து பலம் தத் பவத்யல்ப மேதஸாம்-ஸ்ரீமத் பகவத் கீதை ( 7–23 )
(அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்ப மேதஸாம் தேவாந்தே வயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி
தேவதாந்தரர்களின் பக்தர்கள்,சிற்றறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பூஜிக்கும் தேவதாந்தரங்கள்
அல்ப பலனையே கொடுக்கின்றன . இது அழியக்கூடியது)

அநித்யம ஸூகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் -ஸ்ரீமத் பகவத் கீதை ( 9–33 )
(கிம் புநர் ப்ராஹ்மணா : புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா | அநித்ய ஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறார் — புண்யம் செய்து ப்ராம்மணப் பிறவி எடுத்த ப்ராம்மணர்களும்,
பக்தர்களான ராஜரிஷிகளும் , இந்த உலகம் அநித்யம் ,இங்கு ஸுகம் இல்லை, என்பதைத் தெளிந்து உணர்ந்து ,
நித்யலோகப் ப்ராப்திக்காக என்னை ஆச்ரயிப்பதைப்போல, நீயும் , என்னைப் பூஜிப்பாயாக .)

மஹா பலான் மஹா வீர்யான் அநந்த தன சத்ஜயான் கதான் காலேன மஹதா கதா சேஷான்
நராதிபான் ச்ருத்வா ந புத்ர தாரா தௌ க்ருஹ ஷேத்ராதிகே அபி வா த்ரவ்யாதௌ
வா க்ருத பிரஜ்ஞோ மாமாத்வம் குருதே நர -விஷ்ணு புராணம்
(மிக்க மனோபலம், வீர்யம் ,அளவற்ற தானம் , உடையவர்களாக இருந்தும்,
நராதிபாந் =உலகங்களை ஆண்ட அரசர்கள் , கதாந் = மாண்டவர்களாய்
மஹதா காலோ =அவர்கள் காலம் ஜீவிதம் அதிகமாக இருந்தாலும்
கதாஸேஷாந் ச்ருத்வா =அவர்களின் கதைகளைமட்டில் கேட்டு ,எல்லாம் அல்பம், அநித்யம் என்று தெளிவு உடையவன்
ந புத்ரதாராதௌ க்ருஹக்ஷேத்ராதிகே அபி வா = மக்கள், மனைவி, வீடு,வயல், பணம் போகம் இவற்றில் அபிமானமின்றி
எல்லாம் என்னுடையது என்கிற மமதை கொள்ளமாட்டான்.)

சர்வம் துக்கமயம் ஜகத் விஷ்ணு புராணம்
(இந்த உலகம் முழுதும் துக்கமயமானது)

ஸ்வர்க்கே அபி பாத பீதச்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருத்தி -விஷ்ணு புராணம்
(புண்யம் செய்து ஸ்வர்க்கத்தில் உள்ளவன் , ஸுகத்தை அனுபவித்தாலும் அந்தப் புண்யபலன் குறைந்து, தீர்ந்துவிட்டால்,
தான் கீழே விழுந்து பூமியில் துன்பம் அனுபவிக்க நேரிடுமே என்கிற பயம் காரணமாக முழுமையான ஸுகம் அநுபவிக்க முடிவதில்லை)

ராஜ்யே க்ருத் நந்த்யே வித்வாம்சோ மமத்வாஹ்ருத சேதச அஹம் மான மஹா பான மதமத்தா ந மாத்ருசா -விஷ்ணு புராணம்
(அஹங்காரம் கொண்டவர்கள் மட்டுமே ,அந்த அஹங்காரத்தால் ,ராஜ்யம் , ப்ரதேசம் இவைகளில் ஆசையுடன் இருப்பர்.
என் போன்றவர்கள் அவைகளுக்காக ஏங்குவதில்லை )

ஆ ப்ரஹ்ம பாவனா தேதே தோஷா –சத்தி மஹா புனே அத ஏவ ஹிநேச்சந்தி சவர்க்க ப்ராப்திம் மநீஷிணா-இதிஹாச சமுச்சயம்
(ஹே –ரிஷியே ! ப்ரம்மலோகம் முதலாக எல்லா உலகங்களிலும் மிக அல்பமான தோஷங்களே பரவி இருக்கின்றன.
ஆதலால்,அறிவாளிகள், ஸ்வர்க்கத்துக்கு ஆசைப்படுவதில்லை )

ப்ரஹ்மணா சதா நா தூர்த்வம் தத் விஷ்ணோ பரமம் பரம் சுத்தம் சநாதாநம் ஜ்யோதி பரம் ப்ரஹ்மேதி ந தத்ர பூதா
கச்சந்தி புருஷா விஷயாத்மகா டம்ப லோப மத க்ரோத த்ரோஹ மோஹைரபி த்ருதா-
நிர்மமா நிரஹங்காரா நிர்த்வந்தா சம்யதேந்த்ரியா த்யான யோக ரதாச்சைவ தத்ர கச்சந்தி சாதவ -மஹாபாரதம்
(ப்ரம்மலோகத்தின் மேலே விஷ்ணுவின் பரமபதம் இருக்கிறது.தூய்மையாகவும் , நித்யமாயும் , ஜ்யோதிஸ்ஸாகவும் இருக்கிறது.
பரம்பொருளை அனுபவிக்கத் தகுந்ததாக ”பதம் ”-இங்கு, டம்பம் , லோபம் , ஆணவம் , கோபம் , த்ரோகம் , ஆசை இவற்றுக்கு
ஆளான அறிவு இல்லாதவர்கள் இங்கு செல்வதில்லை;செல்ல இயலாது.-அஹங்கார ,மமகாரம் அற்றவர்கள் ,
இன்பதுன்பங்களில் சமநிலையில் இருப்பவர்கள், புலன்களை அடக்கியவர்கள், பகவானைத் த்யானித்தபடி இருப்பவர்கள் –
இவர்கள்தான்–இப்படிப்பட்ட சாதுக்கள்தான் -அவர்கள் மட்டுமே அங்கு செல்கிறார்கள)

ரம்யாணி காம சாராணி விமா நானி சமாஸ்ததா ஆக்ரீடா விவிதா ராஜன் பத்மின் யச்ராமலோதகா -மஹாபாரதம்
(பரமபதத்தில் இஷ்டப்படி செல்லக்கூடிய அழகிய விமானங்கள், அழகான மண்டபங்கள்,பற்பலவகையான தோட்டங்கள்,
தெளிந்த நீருள்ள தடாகங்கள் ஆகியவை இருக்கின்றன )

ஏத வை நிரயாஸ்தாத ஸ்தா நஸ்ய பரமாத்மன -மஹாபாரதம்
(பகவானின் பரமபதத்துக்கு முன்பாக, மற்ற எல்லா உலகங்களும் நரகம் போன்றவையே ) இத்யாதி பிரமாணங்களால்

அல்பத்வ அஸ்திரத்வ துக்க மூலத்வ துக்க மிஸ்ரத்வ துக்கோ தர்க்கத்வ விபரீதாபிமான மூலத்வ
ஸ்வா பாவிகாநந்த விருத்தங்கள் ஆகிற அசித் விஷய அனுபவ தோஷ சப்தகத்தையும்
இவற்றில் யதா சம்பவம் உண்டான சேதனா மாத்ர அனுபவ தோஷங்களையும்
இவ் வனுபவங்களுக்கு எதிர்தட்டான பகவத் அனுபவத்தின் வை லஷண்யத்தையும் விசதமாக அனுசந்தித்து

பரமாத்மநி நியோ ரக்தோ விரக்த அபாரமாத்மநி பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி
(இப்படி இழிந்தால்,பகவானிடம் மட்டுமே ப்ரேமை;மற்றவற்றில் வெறுப்பு என்கிற நிலைக்கு முமுக்ஷு வந்துவிடுவான்)
என்கிற அவஸ்தை யுடையராய்
ப்ரவ்ருத்தி லஷணம் தர்மம் பிரஜாபதி ரதாப்ரவீத் -மஹாபாரதம்
என்கிற பிரவ்ருத்தி தர்மங்களில் நின்றும் நிவ்ருத்தராய்
நிவ்ருத்த லஷணம் தர்மம் ருஷிர் நாராயணோ அப்ரவீத்-மஹாபாரதம்- என்கிற நிவ்ருத்தி தர்மங்களில் பிரவ்ருத்தர் ஆனவர்கள்
முமுஷூக்களான அதிகாரிகள் –

(ப்ரவ்ருத்தி லக்ஷணம் தர்மம் ப்ரஜாபதிரதாப்ரவீத் நிவ்ருத்தலக்ஷணம் தர்மம் ருஷிர்நாராயணோ அப்ரவீத்
ப்ரவ்ருத்தி தர்மங்களை ப்ரம்மன் சொன்னான் என்று உள்ள ப்ரவ்ருத்தி தர்மங்களைக் கைவிட்டும்
( ப்ரவ்ருத்தி தர்மம் =பயனை வேண்டிச் செய்யும் தர்மங்கள் ), நாராயண ரிஷி என்பவர்,நிவ்ருத்தி தர்மங்களை
உரைத்தார் என்னும்படியான தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்
நிவ்ருத்தி தர்மம் =மோக்ஷத்தை விரும்பிச் செய்யப்படும் தர்மங்கள் )

கீழ் சொன்ன படியிலே பரா வரங்களான தத்தவங்களும் புருஷார்த்தங்களும் தெளிந்தாலும்
இப்படி வைராக்ய பூர்வகமாக பரம புருஷார்த்த உபாய அனுஷ்டானத்தில் ப்ரவர்த்தியானாகில்
சீல வ்ருத்த பலம் ஸ்ருதம் மஹாபாரதம்
(சாஸ்த்ர அறிவால் ஏற்படும் ஞான பலன்களான ஆத்மகுணம் நல்லொழுக்கம் இவற்றை இழக்க நேரிடும்.)

சமார்த்தம் சர்வ சாஸ்த்ராணி விஹிதானி மநீஷிபி தஸ்மாத் ச சர்வ சாஸ்த்ரஜ்ஞோ யஸ்ய சாந்தம் மன சதா -இதிஹாச ஸமுச்சயம்
(மனஸ்ஸைக் கட்டுப்படுத்த பல சாஸ்த்ரங்கள் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், எவ்வளவு சாஸ்த்ரங்களைத்
தெரிந்து வைத்திருந்தாலும், மனஸ்ஸை அடக்காதவன் சாஸ்த்ரஜ்ஞன் என்கிற பெயரையும் இழக்கிறான்)
என்கிற ஸ்ருத பலத்தையும் இழந்து

நாஸ்சாதயதி கௌபீனம் ந தம்ச மசகாபஹம் சுன புச்ச மிவா நர்த்தம் பாண்டித்யம் தரமி வர்ஜிதம் –
(நாயின் வால் மறைக்கப்பட வேண்டிய இடத்தை மறைக்கவேண்டும்.ஈ ,கொசு இவற்றையும் விரட்டவேண்டும்;
அதைப்போல, தர்மானுஷ்டானமில்லாத அறிவு இருந்தும் ப்ரயோஜனமில்லை ) என்கிறபடியே ஹாஸ்யனாம்

ஆகையாலே
வயச கர்மணோ அர்த்தச்ய ஸ்ருதச்யாபி ஜ நஸ்ய ச வேஷ வாக்வ்ருத்தி சாருப்ய மாசரன் விசரேதிஹ-மநு ஸ்ம்ருதி
(வயது, கர்மம் , அதன் பிரயோஜனம் , சாஸ்த்ரஜ்ஞாநம் நற்குடியில் பிறப்பு இவைகளுக்கு ஏற்றபடி,
வயதுக்கேற்ற வேஷமும் வயதுக்கேற்ற பேச்சும் வயதுக்கேற்ற செயலும் இருக்கவேண்டும்.) என்கிறபடியே
ஸ்ருத அனுரூபமாக ஸ்வ உசிதமான பரம புருஷார்த்த உபாய அனுஷ்டானத்தில் த்வரிக்குமவர்கள்

தன் கருமம் செய்ய பிறர் உகந்தார் -என்கிறபடியே
தம் தேவா ப்ரஹ்மாணம் விது -மஹாபாரதம்
(ஒரு சண்டாளன் நல்ல ஒழுக்கத்துடன் இருந்தால் அவன் தேவர்களால் பிராம்மணன் என்றே கொள்ளப்படுவான்)
பிரணமந்தி தேவதா-விஷ்ணு தர்மம்
(அப்படிப்பட்டவனை தேவர்கள் துதிக்கின்றனர்) -இத்யாதிகளில் சொல்லும் ஏற்றம் பெறுவார்கள் –

நின்ற புராணன் அடி இணை ஏந்தும் நெடும் பயனும்
பொன்றுதலே நிலை என்றிடப் பொங்கும் பவக் கடலும்
நன்று இது தீயது இது என்று நவீன்ற்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே –

விஷமது பஹிஷ் குர்வன் தீரோ பஹிர் விஷயாத்மகம்
பரிமிதரச ஸ்வாத்ம ப்ராப்தி ப்ரயாச பராங்முக
நிரவதி மஹா நந்த ப்ரஹ்மாநுபூதி குதூஹலீ
ஜகதி பவிதா தைவாத் கச்சித் ஜிஹாசித சம்ஸ்ருதி —

(கலக்கமில்லா மனதுடையவன்;விஷம் கலந்த தேன் போன்றுள்ள உலக விஷயங்களை ஒதுக்குபவன்;
அல்ப சுகத்தை அளிக்கும் ஆத்மானுபவத்தை வெறுப்பவன்;ஸர்வேச்வர அனுபவம் எல்லையில்லா ஆனந்தம் அளிக்கும்
என்பதில் ஆவல் கொண்டு பகவானின் அநுக்ரஹத்துடன் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட ஆசையுள்ளவன்)

———————————————————————————————-

அதிகாரம் -8- அதிகாரி விபாக அதிகாரம் –

முமுஷூத்வே துல்யே சதி ச மது வித்யா திஷூ யதா
வ்யவஸ்தா சம்சித்தயதி க்ருதி விசேஷண விதுஷாம்
விகல்பயேத நியாசே ஸ்திதி இதர வித்யாஸூ ச ததா
நியத்யா வையாத்யம் நியமயிதம் ஏவம் ப்ரபவதி-

இப்படி பரம புருஷார்த்த உபாயங்களான நிவ்ருத்தி தர்மங்களிலே பிரவ்ருத்தரான அதிகாரிகள் இருவர் –
அவர்கள் ஆகிறார் -அத்வாரக பிரபத்தி நிஷ்டனும் -சத்வாரக பிரபத்தி நிஷ்டனும் –

ஸ்வ தந்திர அங்க பிரபத்திப்யாம் ப்ரபன்னௌ அத்ர தாவுபௌ
பல சாதன பக்திப்யாம் பக்தாவபி ச தர்சிதௌ
ஒருவருக்கு பக்தி உபாயம் -மற்ற ஒருவருக்கு பக்தி பலமாகும் –

ஸ்நானம் சப்த விதம் ஸ்ம்ருதம் -மந்த்ரம் உச்சரித்தல் மானசீகம் திவ்ய ஸ்நானம் வாயு ஸ்நானம் -போன்றவை -என்கிறபடியே
யதாதிகாரம் மாந்திர மானச திவ்ய வாயவ்யாதிகளும் துல்ய பலங்களான ஸ்நான பேதங்கள் ஆனால் போலே
உக்தி ஆச்சார்ய நிஷ்டை என்கிற இவையும் பிரபத்தியில் முக பேதங்கள் —

இவற்றில் உக்தியாவது –
ஆநு கூல்ய சங்கல்பாதி அங்கங்களில் வேசத்யம் இல்லாதார் அவனை ஒழியப் போக்கற்று நிற்கிற அதிகாரமும்
அபேஷித்தால் ரஷிக்கும் என்கிற விஸ்வாசமும் உடையராய்க் கொண்டு –
சரண்யன் அறிய பூர்ண பிரபத்தி கர்ப்பமான ஆச்சார்ய உபதிஷ்ட வாக்யத்தாலே தாதிமார் சொன்ன பாசுரத்தைச் சொல்லி
சார்ம பௌமனை சரணம் புகும் முக்தரான சாமந்த குமாரர்களைப் போலே
என்னுடைய ரஷை உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ள வேணும் என்கை-

பத வாக்யாதி வ்ருத்தாந்தம் அறியாத பாலகன் ஒரு கால் பவதி பிஷாம் தேஹி என்றால்
ஆடச்யரான சத்துக்கள் அகத்திலே அப்போதே அபேஷித சித்தி உண்டாமாப் போலே
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் -என்றபடி பரிபூர்ண பரம உதாரர் விஷயத்தில்
இவ் உக்திக்கும் பல அவிநாபாவம் உண்டு –

அறிவிலிகளாய் இவ் உக்தி மாத்ரமே பற்றாசானவர்கள் திறத்தில்
யேன கே நாபி ப்ரகாரேண த்வ்யவக்தா த்வம் -என்று சொல்லுகிறபடியே
இவ் உக்தி மாத்ரமும் உண்டறுக்க மாட்டாது சரண்யரின் கிருபை –

இவ் வர்த்தத்தை -பாபியசோபி சரணாகதி சப்த மாஜ-என்றும்
சரண வரண வாகியம் பேதிதா ந பவதி பத சாபி தீ பூர்விகா -என்றும்
பிரபத்தி வாசைவ நிரீஷிதும் வ்ருணே என்றும் அபியுக்தர் பேசினார்கள் –

இவ் உக்தி மாத்ர நிஷ்டையனுடையவும்
ஆசார்ய நிஷ்டையனுடையவும் நிலைகள் இரண்டையும்-
தவ பரோ அஹமகாரிஷி தார்மீகை சரணமித்யபி வாசமுதைரிரம் இதி சசாஷிக யன்நித மத்யமாம் குரு பரம்
தவ ரங்க துரந்தர-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-102-என்று சேர்த்து அனுசந்தித்தார்கள்
இதில் மிகுதி காட்டுகிற அபி சப்தத்தாலே ஒர் ஒன்றே அமையும் என்று ஸூசிதம் ஆயிற்று –

இவர்களில் ஆசார்ய நிஷ்டன்
புத்தர ப்ரேயஷ்ததா சிஷ்ய இதி ஏவம் ச நிவேதயேத்-என்று
சாண்டில்ய ஸ்ம்ருதியாதிகளில் சொல்லுகிறபடியே
ஆச்சார்யனுடைய ஆத்மாத்மீய பர சமர்ப்பணத்திலே தானும் அந்தர் பூதன் –

சித்திர் பவதி வா நேதி சம்சய அத்ர தத்பக்த பரிசர்யா ரதாத்மா நாம் -என்கிற கணக்கிலே
ஆச்சார்ய நிஷ்டனுக்கு கை முதிக ந்யாயத்தாலே பல சித்தியில் சந்தேஹம் இல்லை –

ஒரு மலையில் நின்றும் ஒரு மலையில் தாவும் சிம்ஹ சரீரத்திலே ஜந்துக்களைப் போலே
ஸ்ரீ பாஷ்யகாரர் சம்சார லங்கணம் பண்ண அவரோடு உண்டான குடல் துவக்காலே
நாம் உத்தீர்ணர் ஆவுதோம் என்று ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த பாசுரம் –

அந்த அநந்த ப்ரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத்
பங்குர் நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந
புங்க்தே போகா நவிதித நிபஸ் சேவகஸ் யார்க்ககாதி
த்வத் சம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு –என்று நியாச திலகத்திலே சொன்னோம் –

ஏதேனும் ஒரு பிரகாரம் ஆகவுமாம்-ஆரேனும் ஒருவர் அனுஷ்டிக்கவுமாம் –
பிரபத்திக்கு அல்லது சர்வேஸ்வரன் பரம புருஷார்த்தம் கொடுக்க இரங்கான் -என்றதாயிற்று

இப்படி -பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா-தே நைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
தே வயம் பவதா ரஷயா பவத் விஷய வாஸிந நகரஸ்தோ வனச்யோ வா த்வம் நோ ராஜா ஜநேச்வர -என்றும்
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -என்றும்
வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை -என்றும்
சொல்லுகிற பகவத் அபிமான பகவத் விஷய வாசாதிகளுக்கும்
தன் பக்கலிலே யாதல் பிறர் பக்கலிலே யாதல் முன்பே யாதல் பின்பே யாதல் ஓர் உபாயத் துவக்குண்டு
எங்கனே என்னில்
இவை உபாசனத்திலே யாதல் பிரபத்தியிலே யாதல் உத்பன்ன உபாசனனுக்கு உத்தர உத்தர உபசயத்தைப் பண்ணியும்
ஸ்வ தந்திர பிரபத்தி அனுஷ்டானம் பண்ணினவனுக்கு இங்குற்ற கைங்கர்ய அபிவ்ருத்தியை உண்டாக்கியும்
பகவத் பிராப்தியிலே த்வரை உண்டாக்கியும் -உபகாரங்களாம்-

இவர்களில் வ்யாசாதிகளைப் போலே உபாயாந்தர சமர்த்தன் ஆகையாலே அகிஞ்சனும் இன்றிக்கே விலம்ப ஷமன் ஆகையாலே
அநந்ய கதியும் அன்றிக்கே இருக்கிற சத்வாரக பிரபத்தி நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மா பர்யவசான பாவியான அந்திம பிரத்யயத்தை அவதியாக உடைத்தான
உபாசன ரூப அங்கியினுடைய யதா வந் நிஷ்பந்தி பூர்வகமான மோஷம் பலம்

சர்வாதிகாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்-சர்வ இஷ்ட சாதனமாக வற்றாய்-
ஸூ கரமாய் -சக்ருத் கர்தவ்யமாய் -ஆசுகாரியாய் -ப்ரதிபன்னா நர்ஹமாய்
ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வ பலத்திலே உபயாந்தர பிரயோக அசஹமாய் இருந்துள்ள ப்ரபத்தியை தன் அதிகார அனுரூபமாக
அத்வாரமாகப் பற்றினவனுக்கு பரி பூர்ண அனுபவத்துக்கு வேறு பிரதிபந்தகம் இல்லாத படியாலே பிரபத்தி ஷணம் முதலாக
இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றேன் என்றும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே -என்றும்
ஸ்நேஹோ மே பரமோ ராஜன் வியாதி நித்யம் பிரதிஷ்டிதே -பக்திச்ச நியதா வீர
பாவோ நான்யத்ர கச்சதி -என்றும் சொல்லுகிற படிகளிலே
இச் சரீரத்தோடு இருந்து கைங்கர்யாத் அனுபவம் பண்ண வேணும் என்கிற அபி சந்திக்கு காரணமான
அர்ச்சாவதாராதி சங்கல்பம் அடியாக வந்த ஸ்வ அனுமதியாலே ஸ்தாபிதமான சரீரத்தின் அவசா நத்தை எல்லையாக உடைத்தாய் –
தேச கால ஸ்வரூப பரிச்சேத வத்தாய்க் கொண்டு

வரம் வராய தஸ்மாத்த்வம் யதாபி மதமாத்மன சர்வம் சம்பத்ச்யதே பும்ஸாம் மயி திருஷ்டி பதம் கதே-என்றும்
கிம் வா சர்வ ஜகத் ஸ்ரஷ்ட பிரசன்னே த்வயி துர்லபம் -என்றும்
தஸ்மின் பிரசன்னே கிமாஹாஸ் த்யலப்யம்-என்றும்
கிம் லோகே ததிஹ பரத்ர சாஸ்தி பும்ஸாம் யத் விஷ்ணு ப்ரவண தியாம் ந தால்ப்ய சாத்யம் -என்றும்
பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் 3-2-37–என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் சகல பல ப்ரதன் ஆகையாலே அவன் திருவடிகளிலே பிரபத்தி சகல பல சாதனம் ஆகையாலே
இவ் வதிகாரிகள் இருவருக்கும் இது யதாபிமத பல ஹேது வாயிற்று

சதுர்வித பஜந்தே மாம் -என்கிறபடியே உபாசனம் யாதொரு படி சதுர்வித பலத்துக்கும் சாதனமாய் இருக்கிறது அப்படியே
தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததா அஸூகம் யாவந்த யாதி சரணம் த்வாம சேஷாத நாச நம் என்கிறபடியே
பிரபத்தியும் இச் சதுர்வித பலத்துக்கும் சாதனமாக இறே மகரிஷிகள் அறுதி இடுவது-

இதில் அசேஷ அத நாசனம் என்கையாலும்-
ஆதாரம் தோற்றத் தாவத் என்று அதிகாரம் தோறும் ஆவர்த்திக்கை யாலும்
இவன் அபேஷித்த பலம் எல்லாம் இவன் கோலின காலத்திலே யதா மநோரதம் சித்திக்கும் –

இப்படிப்பட்ட ஏற்றத்தை நினைத்து
சத் கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா நார்ஹந்தி சரணஸ்
தஸ்ய கலாம் கோடி தமீமபி-லஷ்மீ தந்த்ரம் -16-62–என்று சொல்லுகிறது –

இவனுக்கு இங்கு இருந்த காலத்தில் கைங்கர்யத்தில் வைஷம்யம் தன் கோலுதலில் வைஷம்யத்தாலே வந்தது –
அது தனக்கு அடி பிராரப்த ஸூஹ்ருத விசேஷம் –
அந்திம சரீரா நந்தரம் பெரும் பேற்றில் ஒரு வைஷம்யமும் இல்லை
பாரதந்த்ரம் ஏக ரூபம் -பார தந்த்ர்யம் பரே பும்சி ப்ராரப்ய நிர்கத பந்தன
ஸ்வா தந்த்ர்யமாதுலம் ப்ராப்ய தே நைவ சஹ மோததே என்று
பல தசையில் சொல்லுகிற ஸ்வா தந்த்ர்யமும் கர்ம வச்யன் அன்றிக்கே
சர்வ வித கைங்கர்ய யோக்யனாகை என்று பல பாதத்திலே நிர்ணிதம்-

வேண்டும் பெரும் பயன் வீடு என்று அறிந்து விதி வகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் என்பர்
மூண்டு ஒன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தன் அடி
பூண்டு அன்றி மற்றோர் புகல் ஓன்று இலை என நின்றனரே –

பிரபன்னாத் அன்யேஷாம் ந திசதி முகுந்தோ நிஜ பதம்
பிரபன்னாச்ச த்வேதா ஸூ சரித பரீபாக பிதாய விளம்பே ந
ப்ராப்திர் பஜ ந ஸூ கமே கஸ்ய விபுலம்
ப்ரச்யாஸூ ப்ராப்தி பரிமித ரஸா ஜீவிததசா —

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -6-பரதேவதா பாரமார்த்த்ய அதிகாரம் – —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 25, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் -6-பர தேவதா பாரமார்த்த்ய அதிகாரம்-

1-ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகசமதிகதா துல்ய தைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐஸ்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ ஆத்ரியந்தே ந சந்த
த்ரயந்தை ஏக கண்டை தத் அனுகுண மனு வியாச முக்ய உக்திபி ச
ஸ்ரீ மான் நாராயணோ ந பதி அகிலதநு முக்தித முக்த போக்ய —

(சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,
ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ; த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;
இவர்களின் ஆத்மஸ்வரூபமும் ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன்.
ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை.
ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,
எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும், முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான
பிராட்டியுடன் எப்போதும் பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும் எஜமானன் –சேஷீ என்பதாகும் .)

2-உக்தவை தர்மங்களால் பொதுவிலே பிரகிருதி -புருஷ -ஈஸ்வர விவேகம் பண்ணினாலும்
ஒன்றும் தேவும் இத்யாதிகளில் படியே பர தேவதா விசேஷம் நிச்சயம் இல்லாத போது —
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் என்கிற பரமை காந்தித்வம் கூடாமையாலும்
பரமை காந்திக்கு அல்லது வ்யவதான ரஹிதமாக மோஷம் கிடையாமையாலும் —
ஈஸ்வரன் இன்ன தேவதா விசேஷம் என்று நிஷ்கர்ஷிக்க வேணும் –

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான்
குன்றம்போல் மணிமாட நீடு திருக்குருகூரதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே–4-10-1-
ஈடு வ்யாக்யானம்
வாஸுதேவம் பரித்யஜ்ய யோந்யம்தேவம் உபாஸதே |
த்ருஷிதோ ஜாஹ்நவீதீரே கூபம் அநதி துர்மதி ||
கங்கை பெருகி ஓடுகிறது; தாகம் உள்ளவன் நீரை அள்ளிக்குடித்துத் தாகம் தீர்த்துக் கொள்ளலாம் . அதன் கரையில் ,
குந்தாலி கொண்டு கிணறு கல்லித் தன் விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாப் போலே
ப்ராப்தனுமாய் ஸுலபனுமாய் , ஸுசீலனுமான இவனைவிட்டு திருவில்லாத் தேவரைத் தேடுதிரே —)

(உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
நும்மிச்சைச் சொல்லி நும்தோள் குலைக்கப்படுமன்னைமீர் !
மன்னப்படு மறைவாணனை வண்துவராபதி
மன்னனை , ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே–4-6-10-)

3-அவ் விடத்தில் -சேதன அசேதனங்களுடைய அத்யந்த பேதம் பிரமாண சித்தம் ஆகையாலே
எல்லாம் பரதேவதையாய் இருக்கிற ப்ரஹ்ம த்ரவ்யம் -அங்கம் – என்கிற பஷம் தடியாது –
ஸ்வபாவ சித்தமான ஜீவேஸ்வர பேதமும் –
அப்படியே தேவாதி ரூபரான ஜீவர்களுடைய அந்யோந்ய பேதமும்
ஸூக துக்காதி வ்யவஸ்தையாலே பிரமாணிகம் ஆகையாலே —
சர்வ அந்தர்யாமி ஒருவனே யாகிலும்
ப்ரஹ்ம ருத்ரேந்தாதி சர்வ தேவதைகளும் ஈஸ்வரனோடும் தன்னில் தானும் அபின்னர் என்கிற பஷம் கூடாது –

4-இத் தேவதைகளில் பிரதானராகச் சொல்லுகிற பிரம ருத்ரேந்த்ராதிகளுக்கு
கார்யத்வ கர்ம வச்யத்வங்கள் பிரமாணிகங்கள் ஆகையாலும் –

ஆபூத சம்ப்லவே ப்ராப்தே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான்
ஏகாஸ் திஷ்டதி விஸ்வாத்மா ச து நாராயணா பிரபு -மஹாபாரதம் —–என்றும்
(பஞ்சபூதங்களும் லயத்தை அடைந்து, மஹத் என்பது ப்ரக்ருதியில் லயத்தை அடைந்தபோது , அனைத்துக்கும்
ஆத்மாவான ஒருவன் மட்டுமே இருக்கிறான்; அவனே அனைத்துக்கும் ப்ரபுவான நாராயணன்)

ஆத்யோ நாராயணா தேவ தஸ்மாத் ப்ரஹ்மா த்தோ பவ -வராஹ புராணம் —–-என்றும்
(தொடக்கத்தில் , நாராயணன் மட்டுமே இருக்கிறான் ; அவனிடமிருந்து
பிரம்மனும் அவனிடமிருந்து ருத்ரனும் ( சிவன் ) தோன்றினார்கள்.)

பரோ நாராயணோ தேவோ தஸ்மாத் ஜாதச் சதுர்முக தஸ்மாத் ருத்ரோ அபவதேவி -வராஹ புராணம் —–-என்றும் —
(ஹே , தேவி, நாராயணனே எல்லோர்க்கும் மேலான தெய்வம்— அவனிடமிருந்து
நான்முகனும். நான்முகனனிடமிருந்து ,சிவனும் தோன்றினர்.)

இத்யாதிகளிலே

ததஸ்த்வமாபி துர்தர்ஷ தஸ்மாத் அபவாத் சநாதனம்
ரஷார்த்தம் சர்வ பூதா நாம் விஷ்ணுத்வ முபஜக்மிவான் -ஸ்ரீமத் ராமாயணம் –உத்தரகாண்டம் –ப்ரஹ்மா சொல்கிறார்— -என்கிறபடியே
(அடியேன் உபாஸனையால் , ஒருவராலும் வெல்ல இயலாத தேவரீர் , எப்போதுமிருக்கிற அந்தப் பரரூபத்திலிருந்து ,எல்லாப் பிராணிகளையும்
ரக்ஷிக்க , த்ரிமூர்த்திகளில் நடுவான ”விஷ்ணு ” வாகத் தோன்றினீர்
இவைபோன்றவற்றின் மூலமும் , நாராயணன், விஷ்ணு போன்ற பலத் திருநாமங்களால் அனைத்து நிலைகளிலும் இருக்கிறான்.)

ஸ்வ இச்சா அவதீரணனாய்-த்ரிமூர்த்தி மத்யஸ்தனான விஷ்ணு நாராயாணாதி சப்த வாச்யன் தானே
தன்னுடைய பூர்வ அவஸ்தையிலே ஜகத்துக்கு காரணம் என்கையாலும்
நித்யம் ஹி நாஸ்தி ஜகதி பூதம் ஸ்தாவர ஜங்கமம்-ருதே தமேகம் புருஷம் வா ஸூ தேவம் சநாதனம்-மஹாபாரதம்-என்கிறபடியே
அவனே நித்யன் என்கையாலும்-
(எப்போதும் இருக்கிற புருஷன் என்று சொல்லப்படுகிற அந்த வாஸுதேவன் ஒருவனைத் தவிர , உலகில்,
ஸ்தாவரமோ ஜங்கமமோ , நிரந்தரமாக இருப்பதில்லை என்று கூறியதன் மூலம், இவன் ஒருவனே நித்யன் என்று விளங்குகிறது.)
த்ரி மூர்த்திகளும் சமர் என்றும் –
த்ரி மூர்த்திகள் ஏக தத்வம் என்றும் –
த்ரிமூர்த்யுத்தீர்ணன் ஈஸ்வரன் என்றும் –
த்ரி மூர்த்திகளுக்கு உள்ள ப்ரஹ்மா வாதல் ருத்ரன் ஆதல் ஈஸ்வரன் என்று சொல்லுகிற
சாம்ய ஐக்ய உத்தீர்ண வ்யக்தந்தர பஷங்கள் தடியா —

5-பிரம்ம ருத்ராதிகள் சர்வேஸ்வரனுக்கு கார்ய பூதர் என்னும் இடம் –
தத் வித்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்தயதே –மநு ஸ்ம்ருதி -இத்யாதிகளாலும்
(நாராயணனிடமிருந்து உண்டான அந்தப்புருஷன், ப்ரம்மன் என்று
சொல்லப்படுகிறான் . என்கிற பிரமாணங்கள் மூலமும் அறியலாம் .)

சங்க்ஷிப்ய ச புரான் லோகன் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ண்வே சாயாந அப் ஸூ மாம் தவம் பூர்வ மஜீஜந–ஸ்ரீமத் ராமாயணம்–என்றும்
(முன்பு தேவரீரே , உமது ஸங்கல்பத்தாலே உலகங்களை அழித்து,ப்ரளயஸமுத்ரத்தில் படுத்து இருந்து,
முதலில் என்னைப் படைத்தீர்- ப்ரஹ்மா , தன்னைக் குறித்து பகவானிடம் சொன்னது )

க இதி ப்ரஹ்மணோ நாம ஈச அஹம் சர்வ தேஹி நாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான் -ஹரி வம்சம்–என்றும்
(சிவன் சொல்வது–”க ” என்று ப்ரம்மனுக்குப் பெயர்; நான் எல்லாப் பிராணிகளுக்கும்ஈசன் ; நாங்கள் இருவரும்,
தேவரீருடைய திருமேனியிலிருந்து உண்டானவர்கள் ; ஆதலால் , தேவரீர் ,”கேசவன் என்கிற திருநாமமுடையவர்)

அஹம் பிரசாதஜஸ் தஸ்ய கஸ்மிம் ச்சித் காரணாந்தரே
த்வம் ச ஏவ க்ரோதஜஸ்தாத் பூர்வ சர்க்கே ஸநாதநே—மஹாபாரதம்-என்று
(ப்ரம்மன் சொல்வது —- குழந்தாய் —-எம்பெருமான் மகிழ்வுடன் இருந்த சமயம் ,நான் அவரால் தோன்றினேன் .
ஒரு சமயம் அவர் கோபத்தில் இருக்கும்போது நீ முன் ஸ்ருஷ்டியில் அந்தக் கோபத்தால் உண்டானாய் .)

எதிரி கையாலே விடு தீட்டான படியே அவர்கள் தங்கள் பாசுரங்களிலும் சித்தம் –

6-இவர்கள் கர்ம வஸ்யராய்ச் சில கர்ம விசேஷங்களாலே சர்வேஸ்வரனை ஆராதித்து தத்தம் பதங்கள்
பெற்றார்கள் என்னும் இடம் –
சர்வே தேவா வாஸூ தேவம் யஜந்தே சர்வே தேவா வாஸூ தேவம் நமந்தே- -என்றும்
(எல்லாத் தேவர்களும் வாஸுதேவனையே ஆராதிக்கிறார்கள். எல்லாத்
தேவர்களும் வாசுதேவனையே நமஸ்கரிக்கிறார்கள்.)

ச ப்ரஹ்மகாஸ் ஸ்ருத்ராச்ச சேந்திர தேவா மஹர்ஷய
அர்ச்சயந்தி ஸூரஸ்ரேஷ்டம் தேவம் நாராயணம் ஹரிம் -மஹாபாரதம்-என்றும்
(ப்ரஹ்மா சிவன் இந்த்ரன் தேவர்கள் ரிஷிகள் யாவரும் தேவர்களுக்கெல்லாம்
தேவனான ஸ்ரீ ஹரியாகிய நாராயணனையே ஆராதிக்கிறார்கள்)

சிந்தயந்தோ ஹியம் நித்யம் ப்ரஹ்மே சா நாதாய பரப்பும்
நிச்சயம் நாதி கச்சந்தி தமஸ்மி சரணம் கத -மஹாபாரதம்–என்றும்
(ப்ரஹ்மா ,சிவன் முதலானோர் நாராயணனை எப்போதும் ஆராதித்து வந்தாலும் அவனது தன்மை இத்தகையது
என்பதை இன்னமும் அறியவில்லை; இப்படிப்பட்ட நாராயணனை வணங்குகிறேன்)

பத்மே திவே அர்க்க சங்காசோ நாப்யா முத்பாத்ய மாமபி
ப்ரஜாபத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம்
ஸோ அஹம் சந்ந்த்யஸ்த பாரோ ஹி த்வாமுபாசே ஜகத்பதிம்–ஸ்ரீமத் ராமாயணம் — -என்றும்
(ப்ரஹ்மா கூறுவதாவது —- தேவரீரின் திருநாபியில் உண்டான ஸுர்யன் போல ஜ்வலிக்கும் தாமரைப் புஷ்பத்தில்
என்னையும் உண்டாக்கி , ப்ரஜாபதி என்னும் அதிகாரி செய்யவேண்டிய காரியங்களையும் அடியேனை செய்விக்க வைத்து
பெரும் பாரத்தைக்கொண்டவனாக அடியேனை ஆக்கிய ஜகத்பதியாகிய உன்னை, (வணங்குகிறேன் ) த்யானம் செய்கிறேன்)

யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ
புனஸ் த்ரைலோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நித சுச்ரும -மஹாபாரதம்-என்றும்
(ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து ப்ரஹ்மா மறுபடியும் மூன்று உலகங்களைப் படைக்கும்
அதிகாரத்தைப் பெற்றான் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம்)

விஸ்வ ரூபோ மஹாதேவ சர்வமேத மஹா க்ரதௌ
ஜூஹாவ சர்வ பூதானி ஸ்வய மாத்மா நமாத்மநா–மஹாபாரதம்-என்றும்
(விச்வரூபன் என்கிற பெயர் கொண்ட ருத்ரன் ”ஸர்வமேதம் ” என்கிற பெரிய யாகத்தில்,
எல்லாப் பூதங்களையும் , தன்னையும் ,மனத்தாலே ஹோமம் செய்தான்)

மஹா தேவ சர்வமேத மஹாத்மா ஹ்ருத்வா ஆத்மா நம் தேவ தேவோப் பூவ-
விச்வான் லோகன் வ்யாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே துதி மான் க்ருத்தி வாஸா- மஹாபாரதம்- என்றும்-
(ஸர்வமேதம் என்கிற பெரிய யாகத்தில், ருத்ரன் இப்படியாகத் தன்னையும் அர்பணித்துக் கொண்டு ,தேவர்களில்
உயர்ந்தவன் என்கிற பெயர் பெற்றான்.இதன்மூலமாக, யானைத் தோலைத் தனது வஸ்த்ரமாகக் கொண்டு ,தன்னுடைய
ஜ்ஞானம் மூலமாக எல்லா உலகங்களிலும் வியாபித்து, எட்டுவித மூர்த்திகளைத் தாங்கி காந்தியுடன் கீர்த்தியுடன் ப்ரகாசிக்கிறான்)

யோ மே யதா கல்பிதவான் பாகமஸ்மின் மஹாக்ரதௌ
ச ததா யஜ்ஞபாகர்ஹோ வேத ஸூத்ர மயா க்ருத-மஹாபாரதம்-என்றும்
(இப்படியான பெரிய யாகத்தில், யார் , எனக்குக் கொடுக்கவேண்டிய ஹவிர்பாகத்தை முறைப்படி கொடுத்தாரோ ,
அவன் யஜ்ஞ பாகத்தைப் பெறுவதற்குத் தகுந்தவன் என்று வேதத்திலும், ஆபஸ்தம்ப ஸூத்ரத்திலும் சொல்லி
ஏற்படுத்தியிருக்கிறேன்) இத்யாதிகளிலே பிரசித்தம்

7-இவர்கள் பகவன் மாயா பரதந்த்ரராய் -குணவஸ்யராய் -ஞான சங்கோச விகாச வான்களாய் இருப்பார்கள்
என்னும் இடம் வேத அபஹாராதி விருத்தாந்தங்களிலும்

ப்ரஹ்மாத்யாஸ் சகலா தேவா மனுஷ்யா பசவஸ் ததா
விஷ்ணு மாயா மஹா வர்த்த மோஹாந்த தமஸா வ்ருதா-விஷ்ணு புராணம்-என்றும்
(பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், மனிதர்கள்,மிருகங்கள் ஆகிய எல்லாமும்
விஷ்ணுவின் மாயை ( மாயை என்பது ப்ரக்ருதி ) என்கிற இருளால் சூழப்பட்டுள்ளனர்)

ப்ரஹ்மா விஸ்வஸ்ருஜோ தர்மா மஹான் அவ்யக்தமேவ ச
உத்தமாம் சாத்த்விகீ மேதாம் கதி மாஹூர்மநீஷிணா மநு ஸ்ம்ருதி–
(முந்தைய ஜன்மத்தில் ஸத்வ குணத்தால் சிறந்த புண்யம் செய்தவர்களால் பிரம்மா, ஒன்பது ப்ரஜாபதிகள், தர்மதேவதை ,
மஹத் தேவதை , அவ்யக்த தேவதை என்கிற உயர்ந்த பிறவிகள் அடையப்படுகின்றன) இத்யாதிகளிலும் பிரசித்தம் –

8-இவர்கள் தங்களுக்கு அந்தராத்மாவான அவன் கொடுத்த ஞானாதிகளைக் கொண்டு அவனுக்கு ஏவல் தேவை
செய்கிறார்கள் என்னும் இடம்
ஏதௌ விபுதச்ரஷ்டௌ பிரசாத க்ரொதஜௌ ஸ்ம்ருதௌ
ததாதர்சித பன்னானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ–மஹாபாரதம்-என்று சொல்லப்பட்டது —
(பகவானின் சந்தோஷத்தாலும், கோபத்தாலும் தோன்றியவர்களான தேவர்களில் உயர்ந்தவர்களான பிரம்மனும் சிவனும் ,
பகவான் அளித்துள்ள ஜ்ஞானத்தின் மூலம் ஸ்ருஷ்டியையும் , ஸம்ஹாரத்தையும் செய்து வருகின்றனர் .)

9-இவர்களுக்கு சுபாஸ்ரயத்வம் இல்லை என்னும் இடத்தை
ஹிரண்ய கர்ப்போ பகவான் வாசவோ அத பிரஜாபதி -விஷ்ணுபுராணம்-என்று தொடங்கி
அசுத்தாஸ்தே சமஸ்தாஸ்து தேவாத்யா கர்மயோ நய -என்றும்

(ப்ரம்மன் இந்த்ரன் ப்ரஜாபதிகள் தேவர்கள் ஆகியோர் பூர்வகர்மத்தின் பயனாக பிறவி எடுத்தவர்கள்—ஆதலால், தூய்மையற்றவர்கள்
யோகிகள் த்யானம் செய்வதாயிருந்தால் , ப்ராணாயாமத்தினால் வாயுவையும், ப்ரத்யாஹாரத்தினால் இந்த்ரியங்களையும் வசப்படுத்தி
மனஸ்ஸைப் பகவானிடம் செலுத்தவேண்டும் . இப்படி த்யானிக்கப்படும் எம்பெருமானின் ஸ்வரூபம் , மூர்த்தம் , அமூர்த்தம் என்று இரண்டு
வகையாக உள்ளது. இவை மூர்த்த ப்ரஹ்மத் த்யானம் ,அமூர்த்த ப்ரஹ்மத் த்யானம் என்றும் சொல்லப்படும்.
மூர்த்தம் —-ஹிரண்யகர்பன் , ப்ரஜாபதி ,மருத்துக்கள்,வஸுக்கள் ,ருத்ரர்கள் , ஸூர்யன் ,நக்ஷத்ரங்கள் , கந்தர்வ,யக்ஷ தேவ வர்க்கங்கள்,
மனிதன், விலங்கு, மலைகள் ,கடல்கள், மரங்கள், இவையெல்லாம் உள்ள பூமி –இவைகள் யாவும் அசுத்தமானவை–”மூர்த்தம் ”.
இவை எல்லாமும் ,ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உடையதாகத் த்யானம் செய்வது—-மூர்த்த ப்ரஹ்மத் த்யானம்
ப்ரஹ்மத்தை ”ஸத் ” ஸ்வரூபமாக தோஷங்கள் இல்லாததாக ,ஸ்வயம் ப்ரகாசமான ஜ்ஞான ஸ்வரூபமாகத் த்யானம் செய்வது–
அமூர்த்த ப்ரஹ்மத் த்யானம்-மேற்சொன்ன இருவிதத் த்யானங்களும் மிகக் கடுமையானவை
எளியது, சிறந்தது எதுவெனில் அழகான திவ்யமங்கள விக்ரஹத்தோடு அனந்த கல்யாண குணங்களோடு , த்யானிப்பது . இது, சுபாச்ரய
ப்ரஹ்மத் த்யானம் எனப்படும்.)

ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர் வ்யவஸ்திதா
பிராணின கர்ம ஜனித சம்சார வச வர்த்தி ந –விஷ்ணு தர்மம்–என்றும்
(ப்ரம்மன் முதலாகத் துரும்புவரை –சிறிய புல் வரை—-இருக்கிற அனைத்து ஜீவன்களும் கர்மவினைகாரணமாகப்
பிறவி எடுத்தவர்களே . ஆதலால், அவர்களும் ஸம்ஸார சுழற்சிக்கு உட்பட்டவர்களே)

கர்மாணம் பரிபாகத்வாத் ஆ விரிஞ்சாத மதங்களம்
இதி மத்வா விரக்தச்ய வாஸூ தேவ பரா கதி -ஸ்ரீமத் பாகவதம்-
(உலகப்பற்றுக்களே இல்லாதவன், ப்ரம்மன் முதலானோர் ,எந்தப் பாவத்தையும் போக்க வல்லமை இல்லாதவர்கள் என்று தெளிய வேண்டும்.
ஏனெனில், அவர்கள் தூய்மையற்றவர்கள் . ஆதலால், வாஸுதேவனையே ,தங்களுடைய உயர்ந்த லக்ஷ்யமாகக் கொள்ள வேண்டும்)
என்றும் பராசர சௌனக சுகாதிகள் –
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும் –ஸ்ரீ மத் பாகவதத்திலும் – பிரதிபாதித்தார்கள் —

10-இவர்களுக்கு பகவான் ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தையும்
பகவானுக்கு ஒரு ஆஸ்ரயணீயர் இல்லை என்னும் இடத்தையும்
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ரஹ்மாணமாஸ்ரித
ப்ரஹ்மா மாமமஸ்ரிதோ ராஜன் அஹம் கஞ்சிதுபாஸ்ரித
மமாஸ்ரயோ ந கச்சித்து சர்வேஷாம் ஆஸ்ரியோ ஹி அஹம் -மஹாபாரதத்தில்-என்று தானே அருளிச் செய்தான் –
(ஹே ராஜன்—தேவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு , ருத்ரனை அண்டுகின்றனர்; ருத்ரன் ,ப்ரஹ்மனை அண்டுகிறான் ;
ப்ரஹ்மனோ ,தன பாதுகாப்புக்காக என்னை அடைகிறான். நான் எனது பாதுகாப்புக்கு யாரையும் அண்ட வேண்டியதில்லை.
நானே எல்லோருக்கும் புகலிடமாக இருப்பதால், என்னால் அடையப்படும் இடம் என்று ஏதுமில்லை.)

11-இவர்கள் உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனுக்கு விபூதி பூதர் என்னும் இடம் –
ப்ரஹ்மா தஷாதய கால ருத்ர காலாந்த காத்யாச்ச -இத்யாதிகளிலே ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -1-22-31-33-என்று
மற்று உள்ளாரோடு துல்யமாக சொல்லப்பட்டது –
(ப்ரம்மன் , தக்ஷன் ,காலம் போன்றவை எம்பெருமானின் விபூதிகளாக இருந்து உலகை உண்டுபண்ணக் காரணமாக இருக்கிறார்கள்
ருத்ரன் யமன் போன்றவர்கள் பகவானின் விபூதிகளாக இருந்து, நான்கு விதமான ப்ரளயங்களுக்குக் காரணமாக இருக்கின்றனர் .)

12-இப்படி வஸ்வந்தரம் போலே இவர்களும் சர்வ சரீரியான சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதர் என்னும் இடம்
வஸ்து வந்தரங்கங்களும் இவர்களுக்கும் சேர நாராயணாதி சப்த சாமா நாதி கரணயத்தாலே சித்தம் –

13-இவர்கள் சரீரமாய் அவன் ஆத்மாவாய் இருக்கிறபடியை-
தவாந்தராத்மா மம ச யே ச அந்ய தேஹி சம்ஞ்தா
சர்வேஷாம் சாஷி பூத அசௌ ந க்ராஹ்ம கே நசித் க்வசித் -மஹாபாரதம் -என்று ப்ரஹ்மா ருத்ரனைக் குறித்து சொன்னான் –
(ப்ரஹ்மா ,ருத்ரனிடம் சொன்னதாவது— உனக்கும் எனக்கும்,சரீரமெடுத்த எல்லோருக்கும் ஆத்மாவாக பகவான்
இருந்து, எல்லோருடைய செயல்களையும் எப்போதும் பார்க்கிறான். ஆனால்,அவனை யாராலும் எளிதில் இயலாது.)

14-இவர்கள் சேஷபூதர் அவன் சேஷி என்னும் இடத்தை
தாஸ பூதாஸ் ஸ்வ தஸ் சர்வே ஹி ஆத்மாந பரமாத்மன
அத அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாமி அஹம் -என்று மந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்திலே
சர்வஜ்ஞனான ருத்ரன் தானே சொன்னான் –
(அனைத்து ஆத்மாக்களும் இயற்கையாகவே பகவானுக்கு அடிமைகள். இந்த ஜ்ஞானமுடைய நானும்,
உன் தொண்டனான நானும் உன்னை வணங்கி நிற்கிறேன்)
(ஸ்ரீ ருத்ரபகவான் , ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரமான ”அநுஷ்டுப் ” மந்த்ரத்தை அநுஷ்டுப் சந்தஸ்ஸில் உள்ள
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
என்பதான மந்த்ரத்துக்கு ,பதம் பதமாக விவரித்து ஸ்தோத்ரம்–அருளியிருக்கிறார்.
மந்த்ரங்களுக்குள்ளே இது ராஜா .இதில் உள்ள பதினோரு பதங்களுக்கு விவரம் உள்ள ஸ்தோத்ரம்.
32 அக்ஷரங்கள் உள்ள மந்த்ரம் . 32 ப்ரஹ்ம வித்யைகள் இதில் அடக்கம். 11 பதங்களுக்கு 11 ச்லோகங்கள் .
பலச்ருதி ஒரு ச்லோகம் .ஆக 12 ச்லோகங்கள். இதில் 11 வது ச்லோகத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு சொல்கிறார்.
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் 54 முதல் 56 அத்தியாயங்கள் வரை இந்த மந்த்ரத்தின் விளக்கத்தைச் சொல்கிறது)

15-இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாராயணன் சமாதிக தரித்திரன் என்னும் இடத்தை
ந பரம் புண்டரீகாஷாத் த்ருச்யதே புருஷர்ஷப -மஹாபாரதம்-என்றும்
(புருஷச்ரேஷ்டனே ! செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்தவன் எவருமில்லை)

பரம் ஹி புண்டரீகாஷாத் பூதம் ந பவிஷ்யதி-மஹாபாரதம் -என்றும்
(செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் இல்லை; இனியும் உண்டாகப் போவதில்லை.)

ந விஷ்ணோ பரமோ தேவோ வித்யதே ந்ருபசத்தம-என்றும்
(அரசர்களில் ச்ரேஷ்டனே ! காட்டிலும் உயர்ந்த தேவர் எவருமில்லை)

ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி பாவ நம்
ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி தைவதம் ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய சீததி -என்றும்
(வாஸுதேவனை விடச் சிறந்த மங்களம் யாதுமில்லை ; வாஸுதேவனைக் காட்டிலும் நமது பாபத்தை அழித்து தூய்மையாக்குபவர் யாருமில்லை;
வாஸுதேவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் யாருமில்லை வாஸுதேவனைஅடைந்து ஒருவரும் வருத்தமடைகிறதில்லை)

த்ரைலோக்யே தாத்ருசா கச்சித் ந ஜாதோ ந ஜ நிஷ்யதே -என்றும்
(மூன்று உலகங்களிலும் பகவானுக்கு நிகராக யாரும் இல்லை ; இனியும் உண்டாகப் போவதில்லை.)

ந தைவம் கேசவாத் பரம்-என்றும்
(கேசவனை விட உயர்ந்த தெய்வம் வேறு எதுவும் இல்லை)

ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான்
ஈஸ்வரம் தம் விஜாநீம ச பிதா ச பிரஜாபதி -மஹாபாரதம்-
(அனைத்து உயிர்களுக்கும் அரசனைப் போன்றுள்ள ப்ரஹ்மாவுக்கும் அரசனாக விஷ்ணு இருக்கிறான். அவனே ப்ரஹ்மம்;
அவனே மிகவும் உயர்ந்தவன்;ஆதலால், நாம் அவனை ஈச்வரன் என்று அறிகிறோம்;
அவனே அனைத்துக்கும் தந்தை;அவனே ப்ரஜாபதி–அனைத்தையும் படைப்பவன் அவனே.)-
இத்யாதிகளாலே பல படியும் சொன்னார்கள் –

16-கருவிலே திரு வுடையர்களாய் ஜாயமான தசையிலே ரஜஸ் தம ப்ரசம ஹேதுவான மது ஸூதனனுடைய
கடாஷம் உடையவர்கள் முமுஷூக்கள் ஆவார்கள் என்னும் இடமும்
ப்ரஹ்ம ருத்ர த்ருஷ்டரானவர்கள் ரஜஸ் தம பரதந்த்ரர்கள் ஆவார்கள் என்னும் இடமும்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேன் மது ஸூதன சாத்விகஸ் சது விஜ்தஞேயஸ்ய வை மோஷார்த்த சிந்தக பச்யத்யேனம்
ஜாயமானம் ப்ரஹ்மா ருத்ர அதவா புன ரஜஸா தமஸா ச அஸ்ய மானசம் சமபிப்லுதம் -மஹாபாரதம்-என்று விபஜிக்கப் பட்டது –
(ஒருவன் பிறக்கும்போதே மதுஸூதனன் கடாக்ஷித்தால் அவன் ஸத்வகுணத்துடன் மோக்ஷத்தைப் பற்றியே எண்ணியபடி இருப்பான்.
ஆனால்,ப்ரம்மனோ, ருத்ரனோ பார்த்தால் ராஜஸ, தாமஸ குணங்கள் மேலோங்கி இருக்கும்.
முமுக்ஷுக்கள் –மோக்ஷத்தில் ஆர்வமுடையவர்கள்—ப்ரம்மன் ,ருத்ரன் போன்றோரை வழிபட அவச்யமில்லை.இவர்களுக்கு எல்லாம்
காரணமான நாராயணனையே இவர்களும் முமுக்ஷுக்களும் உபாஸிக்கவேண்டும் என்பது ப்ரமாணங்களில் காணலாம்)

இவர்கள் முமுஷூக்களுக்கு அனுபாஸ்யர் என்னும் இடமும் –
இவர்களுக்கு காரண பூதனான சர்வேஸ்வரனே இவர்களுக்கும் மற்றும் உள்ள முமுஷூக்களுக்கும் உபாஸ்யர் என்னும் இடம்
சம்சார ஆர்ணவ மக்நாநம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சித் அஸ்தி பராயணம்-விஷ்ணுதர்மம் -என்றும்
(ஸம்ஸாரக் கடலில் மூழ்கி உலக விஷயங்களில் அகப்பட்டுள்ள மனம் படைத்தவர்களுக்கு இந்தக் கடலிலிருந்து
கரையேற்றும் ஓடம் விஷ்ணுவைத் தவிர வேறொன்றில்லை)

ப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச்சான்யா தேவதாஸ் ஸ்ம்ருதா பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிதிதம் பலம் -மஹாபாரதம்-என்றும்
(நல்லறிவுள்ள முமுக்ஷுக்கள் , ப்ரம்மனையும் சிவனையும் மற்ற தேவர்களையும்
வணங்குவதில்லை; காரணம் ,இவர்கள் அளிக்கும் பலன் மிக அற்பமானதாகும்)

ஹரிரேக சதா த்யேயோ பவத்பி சத்த்வ சம்ச்திதை -ஹரிவம்ஸம்
(சிவன் –சொல்வது- ஸத்வ குணம் உள்ள அந்தணர்களே ! உங்களால் எப்போதும் த்யானிக்கப்பட வேண்டியவன், ஸ்ரீ ஹரி ஒருவனே)

உபாஸ்ய அயம் சதா விப்ரா உபாய அஸ்மி ஹரே ஸ்ம்ருதௌ -ஹரிவம்ஸம்-என்றும் சொல்லப்பட்டது –
(சிவன் மேலும் சொல்வது —ஸ்ரீ ஹரி ஒருவனே உபாஸிக்கத்தக்கவன்;அவனைத் த்யானம் செய்வதற்கு
ஏற்ற வழிகாட்டியாக நான் இருக்கிறேன்)

இத்தாலே இவர்களை மோஷ உபகாரராகச் சொன்ன இடங்களும்
ஆசார்யாதிகளைப் போலே ஞானாதி ஹேதுக்கள் ஆகையாலே என்றும் நிர்ணிதம்-
இவ்வர்த்தம் சூர்யஸ்யைவ து யோ பக்த சப்த ஜன்மாந்த்ரம் நர -தச்யைவ து பிரசாதே ந வாஸூ தேவ
ப்ரலீயதே -என்கிற இடத்திலும் விவஷிதம் –
(ஸுர்யஸ்யைவ து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந ருத்ர பக்த : ப்ரஜாயதே
சங்கரஸ்ய து யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந விஷ்ணு பக்த : ப்ரஜாயதே
வாசுதேவஸ்ய யோ பக்த : ஸப்த ஜன்மாந்தரம் நர :
தஸ்யைவ து ப்ரஸாதேந வாஸுதேவ ப்ரலீயதே
ஒருவன் , ஏழு ஜன்மங்களில் ஸூர்யனிடம் பக்தி செலுத்தினால்,அவன் ஸூர்யனின் அருளால் ருத்ரனின் பக்தனாகிறான்.
இவனே ,ஏழு பிறவிகளில் ருத்ர பக்தனாக நீடித்தால், ருத்ரனின் க்ருபையால் , விஷ்ணுபக்தனாகிறான்.
இப்படி இவனே ஏழு ஜென்மங்களில் விஷ்ணு பக்தனாக இருந்தால், வாஸுதேவனின் அருளால் அவனையே அடைகிறான்.)

இப்படி சூர்ய பக்த்யாதிகள் பரஸ்பரயா பகவத் பக்த்யாதிகளிலே மூட்டுவதும்
பராவர தத்வங்களிலே ஏக்க்ய புத்தியும் -வ்யத்யய புத்தியும் சமத்வ புத்தியும் மற்றும் இப்புடைகளிலே வரும்
மதி மயக்கங்களும் ஆசூர ஸ்வ பாவத்தாலே ஒரு விஷயத்தில் பர த்வேஷாதிகளும் இன்றிக்கே
சூர்யாதிகளைப் பற்றுமவர்களுக்கே என்னும் இடத்தை
யே து சாமான்ய பாவேன மந்யந்தே புருஷோத்தமம் தே வை பாஷாண்டி நோ ஜ்ஞேயா
சர்வ கர்ம பஹிஷ்க்ருதா -இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
(புருஷோத்தமனாகிய எம்பெருமானும் மற்ற தேவதைகளும் ஒன்றே என நினைப்பவர்கள் –பாஷாண்டிகள் –வேஷதாரிகள்
என்று உணர வேண்டும்.-அவர்களுக்கு எவ்விதமான கர்மம் இயற்றும் அதிகாரமும் இல்லை என்பதை அறிய வேண்டும்)

இப்படி ஞானாதிகளில் மாறாட்டம் உடையாருக்கு தேவதாந்திர பக்தி உண்டே யாகிலும்
பகவன் நிக்ரஹத்தாலே ப்ரத்யவாயமே பலிக்கும் -ஆகையாலே
த்வம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய தர்சயித்வா அல்பமாயாசம் பலம்
சித்ரம் பிரதர்சய -ஸ்ரீ வராஹ புராணம் –என்கிறபடி
(நீண்ட கரங்களுடைய ருத்ரனே !நீ , ஜனங்களுக்கு மோஹமுண்டாகும்படி மக்கள் மயங்கும்படியான சாஸ்த்ரங்களை இயற்றுவாயாக !
அவற்றில் உள்ள கொஞ்ச ச்ரமத்தை அனுபவித்து,சீக்ரமாகப் பலனடையலாம் என்று காண்பி.)
மோஹன சாஸ்த்ரன்களிலே திருஷ்ட பல சித்தியை உண்டாக்கினதும் அவற்றை இட்டு மோஹிப்பித்து
நரகத்திலே விழ விடுகைக்கு அத்தனை —

சத்ய சங்கல்பனான பகவான் ஒருவனை நிக்ராஹவனாக்க கோலினால் –
ப்ரஹ்மா ஸ்வயம்பூஸ் சதுரா நநோ வா ருத்ராஸ் த்ரி நேத்ரஸ் த்ரி புராந்தகோவா இந்த்ரோ மகேந்திர
ஸூர நாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -ஸுந்தர காண்-
(யுத்தத்தில் ராமனால் ஒருவன் கொல்ல உத்தேசிக்கப்பட்டால் , அவனை, நான்முகனான ப்ரஹ்மாவாலும் காப்பாற்றமுடியாது.
முக்கண்ணனாய் மூன்று பட்டணங்களை நாசம்செய்த ருத்ரனாலும் காப்பாற்றமுடியாது.
தேவர்களின் அதிபதியான இந்த்ரனாலும் ரக்ஷிக்க முடியாது.) என்கிறபடியே
தேவதாந்தரங்கள் ரஷிக்க சக்தர் அல்லர்கள் –

சர்வ தேவதைகளும் ஸூக்ரீவ மஹா ராஜாதிகளைப் போலே தனக்கு அந்தரங்க பூதராய் இருப்பாரும்
தன்னை அடைய நினைந்தான் ஒருவனை நலிய நினைந்தால் சக்ருதேவ பிரபன்னாய -என்கிறபடி
சத்ய பிரதிஜ்ஞனான தனது வ்ரதம் குலையாமைக்காக
ராவணாதிகளைப் போலே துஷ் பிரக்ருதிகளாய் நிராகரிக்க வேண்டுவாரை நிராகரித்தும்
ஸ்ரீ வானர முதலிகளைப் போலே சத் பிரவ்ருதிகளாய் அனுகூலிப்பிக்க வேண்டுவாரை அனுகூலிப்பித்தும் சர்வேஸ்வரன் ரஷிக்கும்-

தேவதாந்தரங்கள் பக்கல்
காங்ஷந்த கர்மாணம் சித்திம் யஜந்த இஹ தேவதா ஷிப்ரம் ஹி மானுஷே லோகே
சித்திர்பவதி கர்மஜ-ஸ்ரீ கீதை -4-12 —
(மனிதர்கள் பலன் வேண்டுமென்று கோரி தேவதைகளை ஆசையுடன் கர்மாக்களைச் செய்து பூஜிக்கிறார்கள் .
இந்த உலகத்தில் ,இப்படிப்பட்ட தேவதைகளை பலன் ஸித்திக்க வேண்டுமென்று கர்மாக்களை செய்து பூஜித்தால்
பலன் விரைவில் கிடைக்கிறது.) என்கிறபடியே
விஷமது துல்யங்களான ஷூ த்ர பலங்கள் கடுக சித்திக்கும் –

அவை தாமும் லபதே ச தத காமான் மயைவ விஹிதான் ஹி தான் -ஸ்ரீ கீதை -7-22 —
(அந்த மனிதன் ச்ரத்தையுடன் அந்தத் தேவதையைப் பூஜிக்கிறான். நானே,அந்தத் தேவதை மூலமாகப் பலனைக் கொடுக்கிறேன்.
பலனை என்னிடமிருந்து பெற்று அந்தத் தேவதை அவனுக்குக் கொடுக்கிறது.)
ஏஷ மாதா பிதா சாபி யுஷ்மாகம் ச பிதா மஹ மயா அனுசிஷ்டோ பவிதா சர்வம் பூதம் வரப்ரதாஅஸ்ய சைவானுஜோ
ருத்ரோ லலாடாத்ய சமுத்தித ப்ரஹ்ம அனுசிஷ்டோ பவித சர்வ சத்த்வ வரப்ரதா -மஹாபாரதம் —-
(பகவான் தேவர்களிடம் சொன்னது — இந்த நான்முகன் ,உங்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும்,பிதாமகனாகவும் உள்ளான்;
எனது கட்டளைக்கு ஏற்ப, எல்லா வரங்களையும் உங்களுக்கு அளிப்பான் ;
எனது நெற்றியிலிருந்து தோன்றியவனும் ப்ரம்மனுக்குப் பின்னால் வந்தவனுமான சிவன்,ப்ரம்மனின் ஆணைக்கு ஏற்ப
அனைவருக்கும் வரங்களை அளிப்பான்.)-இத்யாதிகளில் படியே பகவத் அதீனங்கள்

யஸ்மாத் பரிமிதம் பலம் -மஹாபாரதம் —-
(ப்ரம்மன் முதலானோர் அளிக்கும் பலன்கள் அற்பமானவை)
சாத்விகேஷூ து கல்பேஷூ மகாத்ம்யமாதிகம் ஹரே தேஷ்வேவ யோ சம்சித்தா
கமிஷ்யந்தி பராம் கதிம்–மத்ஸ்ய புராணம்-
(ஸத்வ குணம் மிகுந்த கல்பங்களில் பகவானுடைய பெருமை அதிகமென்று சொல்வர்.
அவைகளிலேயே மனதை நிறுத்தி சாஸ்த்ரவிஹிதமாக யோகம் செய்பவர்கள் மிக உயர்ந்த கதியை அடைகின்றனர்.
இதன்மூலமாக எவ்வளவு காலம் ஆனாலும் மற்ற தேவதைகளால் மோக்ஷம் அளிக்க இயலாது என்பது தெளிவாகிறது.)
என்கையாலே அவர்கள் பக்கல் மோஷம் விளம்பித்தும் கிடையாது –

சர்வேஸ்வரன் பக்கல் யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ -மஹாபாரதம்-
(ப்ரம்மன், ஆயிரம்கோடி யுகங்கள் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து ப்ரம்ம பதவி பெற்றான்.)
இத்யாதிகளில் படியே அதிசயிதமான ஐஸ்வர் யாதிகளும் வரும் –
விடாய் தீரக் கங்கா ஸ்நானம் பண்ணப் பாபம் போமாப் போலே விஷய ஸ்வ பாவத்தாலே ஆநுஷங்கிகமாய்
பாப ஷயம் பிறந்து ரஜஸ் தமஸ் ஸூக்கள் தலை சாய்ந்து
சத்வ உன்மேஷம் உண்டாய் ஜனக அம்பரீஷ கேயாதிகளைப் (ஜநகன் , அம்பரீஷன் , கேகயன் போன்றவர்கர்களைப்) போல
க்ரமேண மோஷ பர்யந்தமாய் விடும்
(ஜநகன்-யாஜ்ஞவல்க்யர் வேதாந்தபாடம் /அம்பரீஷன் -துர்வாஸ மஹரிஷி / கேகயன் –கேகய நாட்டு அரசன்.பெயர் யுதாஜித் .
பரதனுக்கு அம்மான். கர்மயோகம் செய்து பரம பக்தராகி,மோக்ஷம் பெற்றார்.)

மோஷ உபாய நிஷ்டனாம் போது
பஹூநாம் ஜன்ம நாமந்தே ஞானவான் மாம் பிரபத்யதே
(பஹுனாம் ஜன்மநாமந்தே ஞானவாந்மாம் ப்ரபத்யதே |
வாஸுதேவா ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப : ||
பலப் பலப் பிறவிகள் எடுத்து ,புண்யம் செய்து செய்து கடைசியில் ”ஸகலமும் வாஸுதேவனே ” என்கிற ஜ்ஞானத்தைப் பெற்று ,
என்னையே சரணம் அடைகிறான் .அத்தகையவன் கிடைத்தற்கு அரியவன்)
ய ஜன்ம கோடிபி சித்தா தேஷாமந்தே அத்ர சமஸ்திதி -பௌஷ்கர ஸம்ஹிதை-
(பலகோடிப் பிறவிகளில் பகவானிடமிருந்து ஐச்வர்யம் போன்றவற்றைப் பெற்றவர்களே பக்தி முதலியவற்றில் நிலைத்திருப்பர் .)
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி நரநாம் ஷிண பாபானாம் கிருஷ்ணா பக்தி பிரஜாயதே-பாஞ்சராத்ரம்
(பல்லாயிரம் ஜன்மங்களில் செய்த தபஸ் ,த்யானம் , யோகம் ஆகியவற்றால் தங்களின் பாபங்கள் யாவும் நீங்கப் பெற்றவர்களுக்கே ,
க்ருஷ்ணனிடம் பக்தி உண்டாகிறது.) என்கிறபடியே விளம்பம் உண்டு –

மோஷ ருசி பிறந்து வல்லதோர் உபாயத்திலே மூண்டால்
தேஷா மகாம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகராத் பவாமி ந சிராத் பார்த்த
மய்யா வேசித்த சேதஸாம்-ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 12–7 )
(என்னிடம் மனஸ்ஸைச் செலுத்தி, பக்தி செய்பவர்களை ஜனன ,மரணமாகிற ஸம்ஸாரக் கடலிலிருந்து
உடனே கரை சேர்க்கிறேன் — என்கிறார்)என்கிறபடியே மோஷ சித்திக்கு விளம்பம் இல்லை –

ஸ்வ தந்திர ப்ரபன்ன நிஷ்டனுக்கு தான் கோலினதே அளவு -வேறு விளம்ப அவிளம்பங்களுக்கு குறி இல்லை –
இந் நியமங்கள் எல்லாம் ஸ்வா தந்த்ர்யம் ஐஸ்வர்யம் பர்யநு யோஜ்யமாஹூ-ஸ்ரீ வைகுண்டஸ்தவம் (55 ) -என்கிற
நிரந்குச ஸ்வ ச்சந்தையாலே சித்தங்கள் என்று பிரமாண பரதந்த்ரர்க்கு சித்தம் –
(ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த்தம்
விச்வம் விபர்யஸிதும் அந்யத் அஸத் ச கர்தும் |
க்ஷாம்யன் ஸ்வபாவநியமம் கிமுதீக்ஷஸே த்வம் ?
ஸ்வாதந்த்ர்யம் ஐச்வரம் அபர்யநு யோஜ்யமாஹு : ||
உரு மாறுவது,தன்மை மாறுவது என்ற வ்யவஸ்தைகளை உடைய சேதநம், அசேதநம் எல்லாவற்றையும் மாற்றி அமைப்பதற்கும் வேறாகப்
படைப்பதற்கும் இல்லாமல் செய்யவும் தகுதி உள்ளவராக தேவரீர் , இது இது இந்த ஸ்வபாவத்தால் இப்படித்தான் ஆகும் என்கிற
வ்யவஸ்தையை ஏன் எதிர்பார்க்கிறீர் ? பகவானைச் சேர்ந்தவர்களை அவர் விருப்பப்படி நடத்துவது என்பதை, ஏன் என்று கேட்கமுடியாது
என்று பெரியோர்களும் ,வேதங்களும் சொல்கின்றன.
கல் பெண்ணாவது ,கரிக்கட்டை குழந்தையாவது –இவை ஸ்வபாவ நியமத்துக்கு மாறுபட்டு பகவானின் ஸ்வாதந்தர்யத்தில் நடந்தது.
பகவானின் ஸ்வாதந்தர்யம் =சிலரை ஸம்ஸார வாசனையே இல்லாமல் நித்யராக்குவது.ஸம்ஸார பயங்களுக்கு அஞ்சி அடைக்கலம்
அடைந்தவர்களை முக்தர்களாக ஆக்குவது.சிலரை ஸம்ஸாரிகளாகவே வைத்திருப்பது. பகவானின் ஈச்வரத்தன்மை சுதந்திரமானது.யாராலும்
கேள்வி கேட்க இயலாது.இப்படிப்பட்ட ஆழ்ந்த பொருளை அறியாதவர்களே மற்ற தேவதைகளைப் பூஜிக்கின்றனர்.)

இவ் வர்த்தங்கள் இப்படி தெளியாதார்க்கே தேவதாந்த்ரங்கள் சேவ்யங்கள் என்னும் இடம்
ப்ரபுத்தவர்ஜம் சேவ்யந்தி என்று வ்யவஸ்தை பண்ணப் பட்டது –

இத் தேவதாந்தரங்களை பகவச் சரீரம் என்று அறியாதே பற்றினார்க்கு சார்வாகனாய் இருப்பான்
ஒரு சேவகன் ராஜாவின் உடம்பிலே சந்தனாதிகளைப் பிரயோகிக்க
ராஜா சரீரத்தில் ஆத்மா ப்ரீதனாமாம் போலே வஸ்து வ்ருத்தியிலே சர்வேஸ்வரனே ஆராத்யன் ஆனாலும்
யே அப்யன்ய தேவதா பக்தி யஜந்தே ச்ரத்தயா அந்விதா தி அபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் -ஸ்ரீமத் பகவத் கீதை ( 9–23 )
(அர்ஜுனா—-யார் யார் வேறு தேவதைகளிடம் பக்திகொண்டு பூஜிக்கிறார்களோ அவர்களும் முறை தவறி , என்னையே பூஜிக்கிறார்கள்
ஆனாலும் அவர்கள் ஸாஸ்த்ர நெறிகளின்படி செய்யாதவர்கள் . ஆனால், இப்படிப்பட்ட தேவதைகள் பகவானின் சரீரம் என்று உணர்ந்து
பலன்களை சீக்கிரம் பெறவேண்டும் என்று எண்ணி அத்தேவதைகளின் பூஜையின் மூலம் பெறப்படும் பலன்கள்
மிக உயர்ந்தவை மற்றும் முழுமையானவை) என்கிறபடியே
சாஸ்த்ரார்த்த வைகல்யம் உண்டான படியாலே அவற்றின் சொன்ன பலம் விகலமாம்-

பகவச் சரீரங்கள் என்று அறிந்து ஷூத்ர பலங்களைக் கடுகப் பெற வேணும் என்கிற ராக விசேஷத்தாலே
அவர்களை உபாசிப்பாருக்கு அவ்வோ பலங்கள் பூரணமாம்
இப்படி அறிந்தால் பகவான் தன்னையே ஆர்த்தா ஜிஜ்ஞாஸூ அர்த்தார்த்தி
(அர்ஜுனா —துயரம் உள்ளவன் ,பகவத் தத்வத்தை அறிய விழைபவன் பொருளை விரும்புபவன் பகவத் தத்வ ஜ்ஞானம் உள்ளவன் –என்று
நான்கு வகையான மநுஷ்யர்கள் என்னையே துதிக்கிறார்கள்) என்கிறபடியே
பலாந்தரங்களுக்காகவும் பற்றினால் அந்த பலங்கள் அதிசயிதங்களாம்-

அநந்ய பிரயோஜனராய்ப் பற்றினார்கும்-
சரீரா யோக்யா மர்த்தாம்ச்ச போகாம்ச்சைவ ஆநு ஷங்கிகான் ததாதி த்யாயினாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி-விஷ்ணு தர்மம்
(தன்னைத் த்யானித்தபடி இருப்பவர்களுக்கு ஸ்ரீ ஹரி ,அவர்கள் வேண்டும் மோக்ஷம் மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான
ஆரோக்யம் , செல்வம், போகம் யாவையும் அளிக்கிறான் .ஆக , இவர்களுக்கு,இத்தகைய நலன்கள் அவர்கள் வேண்டாமையிலேயே கிட்டுகிறது.)
என்கிறபடியே பலாந்தரங்கள் ஆநு ஷங்கிகமாக வரும் –

இவ்வர்த்தத்தை ஆநு ஷங்க சித்த ஐஸ்வர் யரான ஸ்ரீ குலசேகரப் பெருமாளும்
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் -என்று அருளிச் செய்தார்
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே , தான் வேண்டும் செல்வம்போல் , மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா ,
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-

அபலஷித துராப யே புறா காமயோகா ஜலதிமவ ஜலௌ தாஸ்தே விசாந்தி ஸ்வயம் ந –
(எந்தச் செல்வங்களெல்லாம் ,முன்பு நாம் விரும்பியபோது கிடைக்காமல் இருந்தனவோ ,அவை யாவும் , நதிப் பெருக்கம் தானாகவே
கடலில் சென்று சேர்வதைப்போல ,இப்போது , நாம்எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கும்போது ,நம்மை அடைகின்றன.) என்று
ஈசாண்டாலும் தாம் அருளிச் செய்த ஸ்தோத்ரத்திலே நிபந்தித்தார் –
இது வித்யா விசேஷ ராக விசேஷாதி நியதம் –

17-இப்படி சர்வேஸ்வரனுக்கும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உண்டான விசேஷங்களை
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்றும்
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக்கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து, அன்று
எல்லாரும் அறியாரோ ? எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே ?அவன் அருளே உலகாவது அறியீர்களே !-பெரிய திருமொழி-11-6-2-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகனாய் சங்கரனைத் தான் படைத்தான் -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் , நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்—- யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து–1-

மேவித் தொழும் பிரமன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கு -என்றும்
கூவிக்கொள்ளாய் வந்து அந்தோ ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித்தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே !உம்பரந்ததுவே–திருவாய்மொழி ( 10–10–3 )–

தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை -என்றும்
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூத்தாமம்
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே–திருவாய்மொழி-2-8-6-

வானவர் தம்மை ஆளுபவனும் நான்முகனும் சடை அண்ணலும் செம்மையானவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே -என்றும்
வைம்மின் நும்மனத்தென்றி யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என் ? அதுநிற்க நாடொறும், வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் , சடைமுடி அண்ணலும்
செம்மையால், அவன் பாதபங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே–திருவாய்மொழி-3-6-4-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -என்றும்
பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே ,கபாலம் நல் மோக்கத்தில் கண்டுகொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்த அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே–திருவாய்மொழி-4-10-4-

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியாப் பெருமையோனே -என்றும்
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே !
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயோ !
அற்றது வாணாள் இவற்கென்றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்றல் உற்ற
அற்றைக்கு நீயென்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே !-பெரியாழ்வார் திருமொழி ( 4–10–4 )

எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
எருத்துக்கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா ! மறுபிறவி தவிரத்
திருத்தி, உன்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய் !–பெரியாழ்வார் திருமொழி-5-3-6-
என்று பல முகங்களாலே அருளிச் செய்தார்கள் –

18-இப்பர தேவதா பாரமார்த்தம்
திரு மந்த்ரத்தில் பிரதம அஷரத்திலும் நாராயண சப்தத்திலும்
த்வ்யத்தில் ச விசேஷணங்களான நாராயண சப்தங்களிலும்
சரம ஸ்லோகத்தில் மாம் அஹம் என்கிற சப்தங்களிலும் அனுசந்தேயம் –

19-இத் தேவதா விஷய நிச்சயம் உடையவனுக்கு அல்லது
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்
எண்ணின்மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடனுண்ட , நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமிப்படையாய் ! குடந்தைக் கிடந்த மாமாயா ! ,
தளராவுடலும் எனது ஆவி சரிந்து போம்போது ,
இளையாது உனதாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே

ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னல்லால் அறிகின்றிலேன் யான் -என்றும்
கூவிக்கொள்ளாய் வந்து அந்தோ ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித்தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக்கமல முதற்கிழங்கே !உம்பரந்ததுவே-10-10-3-

தருதுயரம் தடாயேல் -என்கிற பெருமாள் திருமொழி
தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரை குழுவு மலர்பொழில் சூழ் விற்றுவக்கோட்டம்மானே !
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் , மற்றவள்தன்
அருள் நினைந்தேயழும் குழவியதுவே போன்றிருந்தேனே
முதலானவற்றிலும் சொல்லும் அநந்ய சரணத்வ அவஸ்தை கிடையாது –
(அதாவது, பரதேவதா விச்வாஸம் வேண்டும்;பரதேவதை நாராயணன் என்கிற உறுதி வேண்டும்.)

20-இந்த பர தேவதா பாரமார்த்தத்தை திரு மந்த்ரத்திலே கண்டு
ததீய பர்யந்தமாக தேவதாந்தர த்யாகமும் ததீய பர்யந்தமாக பாகவத சேஷத்வமும் பிரதிஷ்டிதமான படியை
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிற பாட்டிலே
சர்வேஸ்வரன் பக்கலிலே சர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் ஆருளிச் செய்தார்
மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் , உற்றதும் உன்னடியார்க்கடிமை ,
மற்றெல்லாம் பேசினும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ணபுரத்துறையம்மானே-

இவர் பாருருவி நீர் எரி கால் -என்கிற பாட்டிலே
பாரருவி நீரெரிகால் விசும்புமாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற நீ
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
ஒருவரும் பொன்னுருவம் ஒன்று செந்தி ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே
பரிசேஷ க்ரமத்தாலே விவாத விஷயமான மூவரை நிறுத்தி அவர்கள் மூவரிலும்
பிரமாண அநு சந்தானத்தாலே இருவரைக் கழித்து
பரிசேஷித்த பரஞ் ஜோதிசான ஒருவனை முகில் உருவம் எம்மடிகள் உருவம் -என்று நிஷ்கரிஷித்தார்

இந்த ரூப விசேஷத்தை உடைய பரம புருஷனே சர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னும் இடத்தை
சர்வ வேத சார பூத பிரணவ பிரதிபாத்யதை யாலே –
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்ரை உள் எழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் -என்று
பெரியாழ்வார் அருளிச் செய்தார் –
மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினை உள்ளெழவாங்கி
காலுங்கையும் விதிர்விதிர்த்தேறிக் கண்ணுறக்கமதாவதன் முன்னம்
”மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே-
(ஓம் ”—- இது ப்ரணவம்.இதில் மூன்று எழுத்துக்கள் . ”அ , உ , ம ” எழுத்துக்கள்.
மஹரிஷிகள் ,ரிக் வேதத்தை ,புத்தியாகிய மத்தால் கடைந்தார்கள் . எட்டு அக்ஷரங்கள் கிடைத்தன.இதைப்போலக் கடைந்தபோது,யஜுர்
வேதத்திலிருந்து எட்டு அக்ஷரங்களும், ஸாம வேதத்திலிருந்து எட்டு அக்ஷரங்களும் கிடைத்தன. 3 x 8 =24 எழுத்துக்கள் .இதுவே
காயத்ரி மந்த்ரம். இதையும் சுருக்கினார்கள்
ரிக்வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து, ”பூ ”—இதிலிருந்து ”அ ”காரம்
யஜுர் வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து ”புவ :”. இதிலிருந்து ”உ ”காரம்
ஸாம வேத எட்டு அக்ஷரங்களிலிருந்து ”ஸுவ : ”.இதிலிருந்து ”ம ”காரம்
இந்த மூன்று அக்ஷரங்களையும் இன்னும் சுருக்கி ஒன்றாக்கினார்கள் — ”இப்பத்து,ஓம் ” காரம் பிறந்தது.)

21-தைத்ரியத்திலே ஸ்ரீ யபதித்வ சிஹ்னத்தாலே மகா வ்யாவ்ருத்தி ஒதினபடியே நினைத்து –
(தைத்திரீய உபநிஷத்தில் நாராயண அநுவாகத்தில் ) திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் என்று உபக்ரமித்து
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் , திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் —-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

சார்வு நமக்கு என்கிற பாட்டிலே
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் , தண்துழாய்த்
தார்வாழ்வரைமார்பன் தான் முயங்கும் —காரார்ந்த
வானமருமின்னிமைக்கும் வண்தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு .
பிரதிபுத்தரான நமக்கு பெரிய பிராட்டியாருடனே இருந்து என்றும் ஒக்கப் பரிமாறுகிற இவனை ஒழிய
ப்ராப்யாந்தரமும் சரண்யாந்தரமும் இல்லை -இத் தம்பதிகளே ப்ராப்யரும் சரண்யரும்-என்று நிகமிக்கப் பட்டது

இவ்வர்த்தத்தை
தேவதா பாரமார்த்யம் ச யதாவத் வேத்ச்யதே பவான் புலஸ்தயேன யதுக்தம் தே சர்வமேதத் பவிஷ்யதி -என்று
புலஸ்ய வசிஷ்ட வர ப்ரசாதத்தாலே பரதேவதா பாரமார்த்ய ஞானம் உடையனாய் -பெரிய முதலியார் –
தஸ்மை நமோ முனிவராய பராசராய -என்று ஆதரிக்கும் படியான
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பரக்கப் பேசி
தேவ திர்யங் மனுஷ்யேஷூ புன்நாம பகவான் ஹரி ஸ்த்ரி நாம்னி
லஷ்மீ மைத்ரேய நானயோர் வித்யதே பரம் -என்று
பரம ரகஸ்ய யோக்யனான சச் சிஷ்யனுக்கு உபதேசித்தான் –

(மைத்ரேயரே—தேவர்கள், மிருகங்கள், மனிதர்கள், இப்படியாக உள்ள பலவற்றில் ஆண்வர்க்கம் எல்லாமும் எம்பெருமானுக்கும்
பெண்வர்க்கம் எல்லாமும் மஹாலக்ஷ்மிக்கும் அடங்கியவை. என்று பரமரஹஸ்ய யோக்யனான ஸச்சிஷ்யனுக்கு( மைத்ரேயனுக்கு )
சொன்னார்.இந்த ரஹஸ்யம் , யாவும் , புலஸ்த்யர் ,வசிஷ்டர் மூலமாக இவர் அடைந்தார்.
தேவதா பாரமார்த்யம் ச யதாவத்வேத்ஸ்யதே பவாந்–புலஸ்த்யர் , பராசரருக்குச் சொன்னது—-
பரதேவதையைப் பற்றியா உண்மையை நீ தெரிந்துகொள்
வசிஷ்டர், பராசரருக்குச் சொன்னது— புலஸ்த்யேந யதுக்தம் தே ஸர்வமேதத்பவிஷ்யதி
புலஸ்த்யர் உனக்கு உபதேஸித்தது எல்லாமே உனக்குக் கைகூடும்
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில்
தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ போகாபவர்க ததுபாயகதீருதார :
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய
எந்த மஹரிஷி , சித் , அசித் , ஈச்வரன் , இம்மூன்றின் தன்மைகள், இவற்றின் அநுபவங்களான கைவல்ய,ஐச்வர்ய,புருஷார்த்தம் ,
மோக்ஷம் , இவற்றுக்கான உபாயம், இவற்றையெல்லாம் தெளிவாகச் சொல்லும் புராண ரத்னத்தை இயற்றினாரோ அந்த பராசரருக்கு
வந்தனம் —என்கிறார்)

இத்தை மயர்வற மதிநலம் அருளப் பெற்று
ஆத்யஸ்ய ந குல பதே -என்கிறபடியே பிரபன்ன சந்தான கூடஸ்தரான நம்மாழ்வாரும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு -என்று அருளிச் செய்தார் –
கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே——–திருவாய்மொழி (4-9-10)

இவ்விஷயத்தில் வக்தவ்யம் எல்லாம் சதுஸ் ஸ்லோகீ வ்யாக்யானத்திலே
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக பரக்கச் சொன்னோம் –
அங்கே கண்டு கொள்வது –

22-வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித் தனியே
ஆதி எனா வகை ஆரண தேசிகர் சாற்றினார் -நம்
போதமரும் திரு மாதுடன் நின்ற புராணனையே-

ஜனபத புவ நானி ஸ்தான் ஜைத்ராச நஸ்தேஷு
அநு கத நிஜவார்த்தம் நச்சரேஷூ ஈச்வரேஷூ
பரிசித் நிகமாந்த பஸ்யதி ஸ்ரீ சஹாயம்
ஜகதி கதிம் அவித்யா தந்துரே ஜந்து ரேக-

(கர்மவசப்பட்ட உலகில், ஞானம் முழுமையாக இல்லாத உலகில், ஜயம் மற்றும் சுகம் இவை சூசகங்களாக உள்ள சிம்மாசனத்தில்
அமர்ந்த ஈச்வரர்கள் தங்களுடைய கதைகளும் தங்களுடன் நாசமடையும்படி போகும்போது , வேதாந்தங்களை அடிக்கடி
படிக்கிற ஒரு ப்ராணி , ஸ்ரீமந் நாராயணனை ரக்ஷகனாக அறிகிறான்)

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -5 -தத்வ த்ரய சிந்தன அதிகாரம் — —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 23, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு —

———————————————————————

தத்வ த்ரய சிந்தன அதிகாரம் —

தத்வ த்ரய நிரூபண ப்ரயோஜனம்
தத்வத்ரய விபாகம் –
ஜீவாத்ம நிரூபணம் –
பத்த ஸ்வரூபம் -முத்த ஸ்வரூபம் -நித்யர் ஸ்வரூபம் –
முக்தர்களுக்கு சர்வவித கைங்கர்ய சித்தி–
தர்ம பூத ஞான நிரூபணம் –
ஸூத்த சத்வ நிரூபணம்
த்ரிகுண த்ரய நிரூபணம் –
கால நிரூபணம் –
ஈஸ்வர தத்வ நிரூபணம்
பர ரூபம் -வ்யூஹ ரூபம் -விபவ ரூபம் -அர்ச்சா ரூபம் -அந்தர்யாமி ரூபம் –
அவதார ரஹஸ்யம் –
ஸ்ரீ லஷ்மீ தத்வ நிரூபணம் –
தத்துவங்களில் ஏறவும் சுருங்கவும் பண்ணும் விபாகங்களின் தாத்பர்யம் –

பிரகிருதி ஆத்மா பிராந்தி களதி சித் அசித் லஷண தியா
ததா ஜீவா ஈச ஐக்ய ப்ரப்ருதி கலஹ தத் விபஜநாத்
அத போக்தா போக்யம் தத் உபய நியந்தா நிகமை
விபக்தம் ந தத்த்வத்ரயம் உபதி சந்தி அஷ ததிய –

(சேதநங்கள் , அசேநதங்கள் —இவைபற்றிய ஜ்ஞானம் ஏற்படும்போது, இதுவரை எண்ணியிருந்த, இந்த சரீரமும், இந்த்ரியங்களுமே ஆத்மா
என்கிற மதி மயக்கம் அகலும்; அதாவது, சித் , அசித் இவைபற்றிய ஜ்ஞானம். ஆத்மா வேறு; உடல் இந்திரியங்கள் வேறு என்கிற
உண்மையான ஜ்ஞானம் ஏற்படும். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கிற தவறான வாதம் , இவற்றின் குணங்களால் உணரப்படும் போது
அகன்றுவிடும்.அதாவது, ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மையான ஜ்ஞானம்.)

சம்பந்தமும் அர்த்த பஞ்சகமும் கூட ஆறு அர்த்தம் அறிய வேண்டி இருக்க –
இவற்றில் ஏக தேசமான தத்வ த்ரயத்தை முமுஷூவுக்கு விசேஷித்து அறிய வேண்டும் என்று
ஆசார்யர்கள் உபதேசித்து போருகைக்கு அடி என் என்னில் –
பிரகிருதி ஆத்ம க்ரமமும்
ஸ்வ தந்திர ஆத்ம க்ரமமும்
இதற்கு நிதானமான அநீஸ்வர வாத ருசியுமான மஹா விரோதிகளை முற்படக் கழிக்க பிராப்தமாகை –
இத்தை நினைத்து போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபத்தாலே சாஸ்த்ரங்களிலே தத்வ விவேகம் பண்ணுகிறது –

(சரீர ஆத்ம பிராந்தி என்னாமல் பிரகிருதி ஆத்ம பிராந்தி என்றது இந்திரியம் மனஸ் பிராணன்
இவையும் ஆத்மா என்கிற பிராந்திகளும் உண்டே
பிரகிருதி கர்மா சம்சாரம் பிறவி -பர்யாயம் என்றாலும் -கர்மம் அடியாக சம்சாரத்தில் பிரக்ருதி பரிணாமத்தால்
உண்டான சரீரம் எடுத்து பிறக்கிறோம் –
போக்தா போக்யம் பிரேரிததா -விபாகம் அறிந்து அவனது அனுக்கிரகத்தால் மோக்ஷம்
அர்த்த பஞ்சகத்தில் இவை அடங்கி இருந்தாலும் -இவற்றின் அசாதாரணமான ஆகாரங்களை கொண்டு அறிவதற்காக
இந்த பிரகிருதி ஆத்ம பிரமங்கள் போன்ற அல்வழக்கைப் போக்கி அருள ஆச்சார்யர்கள் உபதேசம் –
அர்த்த பஞ்சகம் அறிவதற்கு முன்பே ப்ரக்ருதி ஆத்ம பிரமம் போன்றவற்றைப் போக்கி -பரமபுருஷார்த்த யோஜனை பிறந்து –
அதில் ருசி பிறந்து உபாயத்தை விசாரிக்கும் பொழுது அர்த்த பஞ்சக ஞானம் பிரயோஜனம் ஆகும் )

இவற்றில் வைத்துக் கொண்டு –
அசேதனா பரார்த்தா ச நித்யா சததவீக்ரியா த்ரிகுணா கர்மிணாம் ஷேத்ரம் பிரக்ருதே ரூப முச்யதே-பரம ஸம்ஹிதையில் -என்றும்
(ப்ரக்ருதி , அறிவில்லாதது, எப்போதும் மற்றவர்களுக்காகவே உள்ளது, தனது ஸ்வரூபத்துக்கு அழிவு இல்லை ,
எப்போதும் மாறுகிற குணம் உள்ளது, ஸத்வம் ,ரஜஸ், தாமஸம் என்கிற மூன்று குணங்களை உடையது,
கர்மாக்களைச் செய்கிறார்களே–சேதநர்கள் —-அவர்களுக்கு, அந்தக் கர்மாக்களின் பலனை அநுபவிக்கும் சரீரமாக உள்ளது.)

அநாதிர் பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ விச்யதே -என்றும் –
கலா முஹூர்த்தாதி மயச்ச காலோ ந யத்விபூதே பரிணாம ஹேது -விஷ்ணு புராணம்-என்றும் –
(பகவானுக்குச் சரீரமாக உள்ள, காலம் என்பதற்கு, தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை; மற்றும், வினாடி,
முஹூர்த்தம் என்று காலப் பரிணாமங்களைச் சொல்கிறோமே இவை, எம்பெருமானின் நித்யவிபூதியில்
எந்தவிதமான மாற்றங்களையும் செய்வதில்லை–உண்டாக்குவதில்லை. ஞானானந்த மயா லோகா -என்றும் -)

காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ரவை பிரபு -மஹா பாரதம் –சாந்தி பர்வம்-
(நித்ய விபூதியில் ,காலமானது எம்பெருமானுக்குக் கட்டுப்பட்டது. அவன்தான் காலத்தை நிர்ணயிக்கிறான்.
நித்ய விபூதியில், ”காலம் ” எவ்வித மாறுதல்களையும் ஏற்படுத்த இயலாது.) என்றும் இத்யாதிகளிலே
த்ரிகுண கால சுத்த சத்வ ரூபங்களான த்ரிவித அசேதனங்களினுடைய ஸ்வபாவம் சொல்லிற்று –

புமான் ந தேவோ ந நர நாயம் தேவோ ந மர்த்யோ வா -ஸ்ரீ விஷ்ணு புராணம்-
(மனிதனும் அல்லன்; தேவனும் அல்லன்-தேவனும் அல்லன் ; மனிதனும் அல்லன்)
ஷரஸ் சர்வாணி பூதானி கூடஸ்த அஷர உச்யதே -ஸ்ரீமத் பகவத் கீதை ( 15–16 )
(த்வாமிமௌ புருஷெள லோகே க்ஷரஸ் ஸாக்ஷர ஏவ ச |
க்ஷவ : ஸர்வாணி பூதானி கூடஸ்தோக்ஷர உச்யதே ||
கர்மவசத்துக்கு உட்பட்டவர்கள் –க்ஷரன் /க்ஷரம்-அதாவது, பத்தர் ,கர்மவசப்பட்டவர்கள் . முக்தர்–கர்மஸம்பந்தம்
இல்லாமல் இருப்பவர்–அக்ஷரர் . நித்யஸூரிகள் –அக்ஷரர் –கர்மவசத்துக்கு உட்படாதவர்கள்)

யத்வை பஸ்யந்தி ஸூரய–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
(நித்ய ஸூரிகள் பார்த்தபடி உள்ள இடம்) இத்யாதிகளாலே த்ரிவித ஜீவர்களுடைய பிரகாரம் விவேகிக்கப் பட்டது –

சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வம் சக்தி ஞான பல க்லம தந்த்ரீ பய க்ரோத காமாதி பிரசம்யூத -ஸ்ரீ விஷ்ணு புராணம்-
(ஈச்வரன் —-பகவான் –இவன் ஸர்வஜ்ஞன் –அனைத்தும் அவனே-இவன் ஸர்வக்ருத் —எல்லாம் அறிந்தவன்
இவன் ஸர்வ ——சக்தி, ஜ்ஞான ,பல , ஐச்வர்ய , குணாதிகள் நிறைந்தவன்; களைப்பு, சோம்பல்,
பயம், கோபம், காமம் போன்றவை இல்லாதவன்) இத்யாதிகளாலே
ஈஸ்வர ஸ்வ பாவம் உபதிஷ்டமாயிற்று

இவ் ஈசோசிதவ்ய ரூபமான தத்தவ நிற்கும் நிலையை –
ஸ்வா தீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -என்று ஆளவந்தார் ஆத்ம சித்தியில்
சுருங்க அருளிச் செய்து அருளினார்
(ஸ்வாதீன த்ரிவித சேதநாசேதன ஸ்வரூப ஸ்திதிப்ரவ்ருத்திபேதம் , க்லேசகர்மாதி
அஸேஷதோஷா ஸம்ஸ்ப்ருஷ்டம் , ஸ்வாபாவிக அநவதிகாதிஸய , ஜ்ஞான
பல , ஐச்வர்ய , வீர்ய , சக்தி , தேஜ :, ப்ரப்ருதி அஸங்க்யேய கல்யாண குணகணெளக
மஹார்ணவம் , பரமபுருஷம் , பகவந்தம் , நாராயணம் , ஸ்வாமித்வேன ,
ஸுஹ்ருத்வேன , குரூத்த்வேன ச பரிக்ருஹ்ய ————
சம்ஸாரி , முக்தன் , நித்ய ஸூரி என்றும், 3 வித ஜீவராசிகளுடையவும் , த்ரிகுண ப்ரக்ருதி , காலம்,நித்ய விபூதி
என்றும் 3 வித அசேதனங்களுடையவும் ஸ்திதி, ப்ரவ்ருத்தி , நிவ்ருத்தி இவைகளைத் தாமிட்ட வழக்காக உடையவரும் ,
5 வித க்லேசங்களும், புண்ய பாபரூபமான கர்மங்களும் எனப்படும் எவராலும் மாசுபடாதவரும் , மிக உயர்ந்தவரும்,
இந்த்ரியங்களின் உதவியே இல்லாமல் காண்பது, மூலகாரணமாகப் பொருளாக ஆகும் ஆற்றல், அனைத்தையும்
எவ்வித ச்ரமமும் இன்றி தரிக்கும் வலிமை , எல்லாரையும் /எல்லாவற்றையும் ஸங்கல்பத்தின்படி நடத்தும் தலைமை ,
சிறிதும் சோர்வு அடையாத பெருமை , அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் ஒளி —-இவைகள் எல்லாம் நிறைந்தவரும்,
ஸமஸ்த ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்தவரும், பகவானான ஸ்ரீமந் நாராயணனை ,நம்மையெல்லாம் அடிமையாக்கிக்கொண்ட
ஸ்வாமியாகவும் , ஆசார்யனாகவும் )

த்ரிவித சேதனர் என்றது –பக்தரையும் முக்தரையும் நித்யரையும்-
த்ரிவித அசேதனம் என்றது த்ரிகுண த்ரவ்யத்தையும் காலத்தையும் சுத்த சத்வமான த்ரவ்யத்தையும்-
ஸ்வரூபம் என்றது -ஸ்வ அசாதாரண தர்மத்தாலே நிரூபிதமான தர்மியை —
ஸ்திதியாவது இதினுடைய காலாந்தர அனுவ்ருத்தி –
இது தான் நித்ய வஸ்துக்களுக்கு நித்யையாய் இருக்கும் –
அநித்ய வஸ்துக்களுக்கு ஈஸ்வர சங்கல்பத்துக்கு ஈடாக ஏறியும் சுருங்கியும் இருக்கும்
இங்கு பிரவ்ருத்தியாவது -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான வியாபாரம் –

இவை எல்லாம் வஸ்துக்கள் தோறும் பிரமாண பிரதி நியதமாய் இருக்கும் –
பிரமாணங்கள் வஸ்துக்களைக் காட்டும் போது அவ்வோ வஸ்துக்களின் ஸ்வரூபத்தையும் –
ஸ்வரூப நிரூபக தர்மங்களையும் -நிரூபித ஸ்வரூப விசேஷணங்களையும் -வியாபாரங்களையும் காட்டும்

அதில் ஸ்வரூபத்தை ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே விசிஷ்டமாகவே காட்டும்
அந்த ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களை இட்டு அல்லது சொல்ல ஒண்ணாது –
அவற்றைக் கழித்துப் பார்க்கில் ச ச விஷான துல்யமாம் –முயலின் காது பற்றி பேசுவது போலே என்றவாறு –

ஆகையாலே ஜீவ ஸ்வரூபத்தை -ஞானத்வம் ஆனந்தத்வம் அமலத்வம் அணுத்வம் இத்யாதிகளான
நிரூபக தர்மங்களை இட்டு நிரூபித்து
ஞானம் ஆனந்தம் அமலம் அணு என்று இம் முகங்களாலே சொல்லக் கடவது –

இஜ் ஜீவ தத்வம் சர்வேஸ்வரனுக்கு சேஷமாயே இருக்கும் என்றும் –
அவனுக்கே நிருபாதிக சேஷம் என்றும் –
அயோக அந்ய யோக வ்யவச் சேதங்களாலே-பரம பதத்திலே தோன்றின சேஷத்வம்
சம்பந்த ரூபம் ஆகையாலே சம்பந்தி ஸ்வரூபம் நிரூபிதம் ஆனால் அல்லது அறிய ஒண்ணாமை யாலே
ஜீவனுக்கு இது நிரூபித ஸ்வரூப விசேஷணம் என்னலாம் –
அணுத்வே சதி சேதனத்வம் போலே ச்வத சேஷத்வே சதி சேதனத்வமும் ஜீவ லஷணமாக வற்றாகையாலே
இச் சேஷத்வம் ஜீவனுக்கு ஸ்வரூப நிரூபகம் என்னவுமாம் –
இப்படி விபுத்வேசதி சேதனத்வமும் -அனன்யா தீனத்வ நிரூபாதிக சேஷித்வாதிகளும் ஈஸ்வர லஷணங்கள்-

ஜீவேஸ்வர ரூபமான ஆத்ம வர்க்கத்துக்கு எல்லாம் பொதுவான லஷணம் சேதனத்வமும் பிரத்யக்த்வமும் –
சேதனத்வமாவது-ஞான ஆச்ரயமாகை –
பிரத்யக்தமாவது தனக்குத் தானே தோற்றுகை-அப்போது தர்ம பூத ஞான நிரபேஷமாக நான் என்று தோற்றும் –
இப்படி சேதனத்வாதிகள் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பொதுவாகையாலே-
அவனில் காட்டில் வ்யாவ்ருத்தி தோற்றுகைக்காக ஜீவ லஷணத்தில் ஸ்வதஸ் சேஷத்வாதிகளைச் சொல்லுகிறது –

பிரதம அஷரத்தில் சதுர்த்தியில் தோற்றின தாதர்த்யத்ததுக்கு உபாதி இல்லாமையாலே
சர்வ ரஷகனான ஸ்ரீ யபதிக்கு ஜீவாத்மா நிருபாதிக சேஷமாயே இருக்கும் என்று
இப்படி யாவத் ஸ்வரூபம் சம்பந்தம் சொல்லுகை அயோக வ்யச்சேதம்

மத்யம அஷரத்திலே அவதாரண சாமர்த்யத்தாலே அவனுக்கே நிரூபாதிக சேஷம் வேறு ஒருத்தர்க்கு
நிரூபாதிக சேஷம் அன்று என்கை அந்ய யோக வ்யச்சேதம்

இச் சேஷத்வம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வளரும் படி மேலே சொல்லக் கடவோம் –

இப்படி இருக்கிற சேதனருக்கு ப்ரவ்ருத்தி யாவது –
பராதீனமுமாய் பரார்த்தமுமான கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் –
ஈஸ்வரன் தன் போக்த்ருத்வர்த்தமாக இவர்களுக்கு கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உண்டாக்குகையாலே இவை பரார்த்தங்கள்-

பக்த சேதனர்க்கு நீங்கி உள்ளாரில் பேதம் அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்த யுக்தராய் இருக்கை-
இவர்களுக்கு அன்யோன்யம் வரும் ஞான ஸூகாதி பேதத்தை ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தங்களான வகுப்புக்களிலே கண்டு கொள்வது –
இப் பத்த சேதனர் தம் தாமுக்கு கர்ம அனுரூபமாக ஈஸ்வரன் அடைத்த சரீரங்களை தர்மி ஸ்வரூபத்தாலும் தரியா நிற்பார்கள் –
தர்மியால் வருகிற தாரணம் சரீரத்தினுடைய சத்திக்கு பிரயோஜனமாய் இருக்கும் –
ஜாக்ரதாத்ய வஸ்தையில் தர்ம பூத ஞானத்தாலே வருகிற சரீர தாரணம்
புருஷார்த்த தத் உபாய அனுஷ்டானங்களுக்கும் க்ருத உபாயனான பரமைகாந்திக்கு
பகவத் அனுபவ கைங்கர்யங்களுக்கும் உபயுக்தமாய் இருக்கும்
பாப க்ருத்துக்களுக்கு இச் சரீர தாரணம் விபரீத பலத்துக்கு ஹேதுவாய் இருக்கும்
இஜ் ஜீவர்கள் சரீரங்களை விட்டால் இதன் சங்காதம் குலையும் இத்தனை –

சரீரத்துக்கு உபாதானமான த்ரவ்யங்கள் ஈஸ்வர சரீரமாய்க் கொண்டு கிடக்கும் –

பத்த சேதனர்க்கு இதரரில் காட்டில் ஸ்திதி பேதம் யாவன் மோஷம் அனுவர்த்திக்கை –
ப்ரவ்ருத்தி பேதம் புண்ய பாப அனுபய ரூபங்களான த்ரிவித பிரவ்ருத்திகளும் –
முக்தர்க்கு நீங்கி உள்ளாரில் பேதம் பிரதிபந்தக நிவ்ருத்தியாலே ஆவிர்பூத ஸ்வரூபராய் இருக்கை –

ஸ்திதி பேதம் பூர்வ அவதி உண்டான ஆவிர்பாவத்துக்கு உத்தர அவதி அன்றிக்கே இருக்கை –
இவர்களுக்கு அன்யோன்யம் ஸ்திதி பேதம் ஆவிர்பாவத்தில் முற்பாடு பிற்பாடு களால் உண்டான முன்புற்ற ஏற்றச் சுருக்கும் –
பிரவ்ருத்தி பேதம் அநாதி காலம் இழந்து பெற்ற பரிபூர்ண பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதமான
யதாபிமத கைங்கர்ய விசேஷங்கள் அனந்த கருடாதிகளுக்கு அதிகார விசேஷங்களும்
தத் உசித கைங்கர்யங்களும் வ்யவஸ்திதங்களாய் இருக்க –

நித்யருக்கும் முக்தருக்கும் சர்வ வித கைங்கர்ய சித்தி உண்டு என்கிற அர்த்தம் கூடுமோ என்னில் –
ஸ்வாமி யினுடைய அபிப்ராயத்துக்கு ஈடாக தனக்கு வ்யவஸ்திதங்களான கைங்கர்யங்களை தாங்கள்
அனுஷ்டிக்க வேணும் என்கிற அபிசந்தி வேறு ஒருவருக்கு பிறவாமையாலும் ஆரேனும் ஒருவர் அனுஷ்டிக்கும் கைங்கர்யமும்
ஸ்வாமிக்கு பிரியமான படியாலே தத் உசித கைங்கர்யங்களும் சர்வருக்கும் பிரியமாய் கைங்கர்ய பலமான
பரிதியிலே வாசி இல்லாமையாலும் சர்வருக்கும் சர்வ வித கைங்கர்ய சித்தி உண்டு என்கையில் விரோதம் இல்லை –

தர்மபூத ஞானம்
இவ்வாத்மாக்கள் எல்லாருக்கும் தர்மி ஸ்வரூபம் போலே தர்ம பூத ஞானமும் த்ரவ்யமாய் இருக்க –
இதன் ஸ்வரூபத்தை தனித்து இங்கு அருளிச் செய்யாது ஒழிந்தது
சேதனர் என்று எடுத்த விசிஷ்டத்திலே விசேஷணமாய் சொருகி நிற்கை யடியாக –
இத் தர்ம பூத ஞானம் விஷய பிரகாச தசையிலே ஸ்வ ஆஸ்ரயத்துக்கு ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும்-
இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் நித்ய விபுவாய் இருக்கும் –
மற்று உள்ளாருக்கு சம்சார அவஸ்தையில் கர்ம அனுரூபமாக பஹுவித சங்கோச விகாச வத்தாய்-
முக்தாவஸ்தையிலே ஏக விகாசத்தாலே பின்பு யாவத் காலம் விபுவாய் இருக்கும் –

இதுக்கு பிரவ்ருத்தி யாவது –
விஷயங்களை பிரகாசிப்பிக்கையும் –
பிரயத்ன அவஸ்தையிலே சரீராதிகளை ப்ரேரிக்கையும்-
பத்த தசையில் சங்கோச விகாரங்களும் –
ஆனுகூல்ய ப்ராதி கூலியா பிரகாச முகத்தாலே போகம் என்கிற அவஸ்தையை அடைகையும் –

போகமாவது தனக்கு அனுகூலமாக வாதல் பிரதிகூலமாக வாதல் ஒன்றை அனுபவிக்கை –
ஈஸ்வர விபூதியான சர்வ வஸ்துவுக்கும் ஆனுகூல்யம் ஸ்வ பாவமாய் இப்படி ஈஸ்வரனும் நித்தியரும் முக்தரும் அனுபவியா நிற்க –
சம்சாரிகளுக்கு கால பேதத்தாலும் புருஷ பேதத்தாலும் தேச பேதத்தாலும்
அல்ப அனுகூலமாயும் பிரதிகூலமாயும் உதாசீனமாயும் இருக்கிற இவ் விபாகங்கள் எல்லாம் இவ் வஸ்துகளுக்கு ஸ்வ பாவ சித்தங்கள் அல்ல –
இது இவர்களுடைய கர்மங்களுக்கு ஈடாக சத்ய சங்கல்பனான ஈஸ்வரன் இவர்களுக்குப் பல பிரதானம் பண்ணின பிரகாரம் –

இக் கர்ம பலம் அனுபவிக்கைக்குப் பத்தருக்கு ஸ்வரூப யோக்யதையும் சஹகாரி யோக்யதையும் உண்டு –
ஸ்வரூப யோக்யதை பரதந்திர சேதனத்வம்-
சஹகாரி யோக்யதை சாபராதத்வம் –

நித்யருக்கும் முக்தருக்கும் பரதந்திர சேதனதையாலே ஸ்வரூப யோக்யதை உண்டே யாகிலும்
ஈஸ்வர அநபிமத விபரீத அனுஷ்டானம் இல்லாமையாலே சஹகாரி யோக்யதை இல்லை-

ஈஸ்வரன் சர்வம் பிரசாசிதவாய் தான் ஒருத்தருக்கு சாசநீயன் அன்றிக்கே நிற்கையாலே
பரதந்திர சேதனத்வம் ஆகிற ஸ்வரூப யோக்யதையும் இல்லை –
ஸ்வ தந்திர ஆஜ்ஞாதி லங்கணம் ஆகிற சஹகாரி யோக்யதையும் இல்லை –

ஜீவ ஈஸ்வர ரூபரான ஆத்மாக்கள் எல்லாருடையவும் ஸ்வரூபம் ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசம் –
இத் தர்மி ஸ்வரூப பிரகாசத்துக்கு பத்தருக்கும் உள்பட ஒரு காலத்திலும் சங்கோச விகாசங்கள் இல்லை –
சர்வாத்மாகளுடையவும் தர்ம பூத ஞானம் விஷய பிரகாசன வேளையிலே ஸ்வ ஆஸ்ரயத்துக்கு ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும் –
ஞானத்வமும் ஸ்வயம் பிரகாசத்வமும் தர்ம தர்மிகளுக்கு சாதாரணம் –

தர்ம பூத ஞானத்துக்கு விஷயித்வம் ஏற்றம் -தர்மியான ஆத்ம ஸ்வரூபத்துக்கு பிரத்யக்தம் ஏற்றம் –
ஞானத்வம் ஆவது கஸ்யசித் பிரகாசகத்வம் –
அதாவது தன்னுடையாகவுவாம் வேறு ஒன்றினுடையாகவுமாம் ஏதேனும் ஒன்றினுடைய வ்யவஹார அனுகுண்யத்தைப் பண்ணுகை-
ஸ்வயம் பிரகாசத்வம் ஆவது தன்னை விஷயீ கரிப்பதொரு ஞானாந்தரத்தால் அபேஷை அறத் தானே பிரகாசிக்கை-

தர்ம பூத ஞானத்திற்கு விஷயித்வம் ஆவது தன்னை ஒழிந்த ஒன்றைக் காட்டுகை –

ஆத்மாக்களுக்கு பிரத்யக்த்மாவது ஸ்வஸ்மை பாசமானத்வம் –
அதாவது தன் பிரகாசத்துக்கு தானே பலியாய் இருக்கை என்றபடி
ஏதேனும் ஒரு வஸ்துவின் பிரகாசத்துக்கு பலி என்கிற சாமான்ய ஆகாரத்தை
தன் பிரகாசத்துக்கு தான் பலி என்று விசேஷித்த வாறே பிரத்யக்த்வமாம் —
இவ் விசேஷம் இல்லாத வஸ்துவுக்கு இச் சாமான்யமும் இத்தோடு வ்யாப்தமான சேதனத்வமும் இல்லை –

இத் தர்ம தர்மிகள் இரண்டும் ஸ்வயம் பிரகாசமாய் இருந்தாலும் நித்யத்வாதி தர்ம விசேஷ விசிஷ்ட ரூபங்களாலே
ஞானாந்தர வேத்யங்களுமாம்-
தன்னுடைய தர்ம பூத ஞானம் தனக்கு ஞானாந்தர வேத்யமாம் போது ப்ரசரண பேத மாத்ரத்தாலே ஞானாந்தர வ்யபதேசம்-

அசேதன த்ரவ்யங்கள் – த்ரிவித அசேதனங்களும் பரருக்கே தோன்றக் கடவனவாய் இருக்கும் –
அசேதனத்வம் ஆவது ஞாநாஸ்ரயமம் இன்றிக்கே ஒழிகை –
பிறருக்கே தோன்றுகையாவது தன் பிரகாசத்துக்கு தான் பலி இன்றிக்கே ஒழிகை –
இவை இரண்டும் தர்ம பூத ஞானாதிகளுக்கும் துல்யம் –

த்ரிவித அசேதனங்கள் என்று எடுத்த இவற்றில் பிரகிருதியும் காலமும் ஜடங்கள் –
சுத்த சத்வமான த்ரவ்யத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள் –
ஜடத்வம் ஆவது ஸ்வயம் பிரகாசத்வம் இன்றிக்கே ஒழிகை –
பகவச் சாஸ்த்ராதி பராமர்சம் பண்ணினவர்கள் ஞானாத்மகத்வம் சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரயத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –
இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யம் ஆக வேண்டாதே தானே தோன்ற வேண்டாவோ என்னில் –
சர்வாத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய் வேறு எல்லாருக்கும் ஞானாந்த வேத்யம் ஆனால் போலேயும்
தர்ம பூத ஞானம் ஸ்வ ஆஸ்ரயத்திற்கே ஸ்வயம் பிரகாசமாய் இதற்க்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும் நியத விஷயமாக ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை

யோ வேத்தி யுகபத் சர்வம் பிரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் ந்யாய தத்வம் பிரசஷ்மஹே -ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிய -ந்யாய தத்வ மங்கள ஸ்லோகம் –
(எந்த ஸர்வேச்வரன் , எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தனது ஸ்வபாவம் மூலமாக அறிகிறானோ அந்த ஸ்ரீ ஹரியை
நமஸ்கரித்து , ந்யாயதத்வம் என்கிற இந்த சாஸ்த்ரத்தைக் கூறுகிறோம்) என்கிறபடியே
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்துக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரயம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே என்னில்
இவனுடைய தர்ம பூத ஞானம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலே இதுவும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம் –
இப்படியே நித்யருக்கும் துல்யம் –

விஷய பிரகாச காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வ ஆச்ரயத்துக்கே ஸ்வயம் பிரகாசம் ஆனால் போலே
முக்தருக்கும் அவ்வஸ்தையிலே இதுவும் ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –
தர்ம பூத ஞானத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியானது விஷய பிரகாசம் இல்லாத காலத்தில்
கர்ம விசேஷங்களால் பிரதிபத்தை யானால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையிலே பிரதிபத்தை யாகையாலே
சுத்த சத்வம் பக்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-

திய ஸ்வயம் பிரகாசத்வம் முக்தௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித் சம்ருத்தம் ததா அத்ராபி நியாம்வதே –
(மோக்ஷ வேளையில் , தானாகவே வெளிப்படும் தர்மபூத ஞானம் ஸம்ஸாரத்தில் சில நேரங்களில் தடைப்படுகிறது .
இதைப்போலவே ஸுத்த ஸத்வ விஷயத்திலும் நேருகிறது.)
இவ்வளவு அவஸ்தா அந்தராபத்தி-(வேறு ஒரு நிலையை அடைவதானது ) விகார த்ரவ்யத்துக்கு விருத்தம் அன்று -ஆகையாலே
பிரமாண பிரதிபன்னார்தத்ததுக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை –
இங்கன் அன்றியிலே உபசாரத்தாலே நிர்வஹிக்கப் பார்க்கில் ஆத்ம ஸ்வரூபத்திலும் ஞானாதி சப்தங்களை அந்ய பரங்கள் ஆக்கலாம் –
ஸ்வயம் பிரகாசத்துக்கு ரூபம் ரசாதி குணங்களுக்கும் அவையடியாக வந்த பிருதிவ்யாதி விபாகமும் பரிணாமாதிகளும் கூடுமோ என்கிற சோத்யமும்
தர்ம பூத ஞானத்துக்கும் தர்மி ஞானத்துக்கும் உண்டான வைஷம்யங்களை பிரதிபந்தியாகக் கொண்டு பிரமாண பலத்தாலே பரிஹ்ருதம் –
இப்படி ஸ்வயம் பிரகாசமான சுத்த சத்வ த்ரயத்தை ஞாத்ருத்வம் இல்லாமையாலே த்ரிவித சேதனங்கள் என்று சேரக் கோத்தது –

இவ் அசேதனங்கள் மூன்றுக்கும் பிரவ்ருத்தி யாவது ஈஸ்வர சங்கல்ப அனுரூபங்களான விசித்திர பரிணாமாதிகள்-
இவற்றில் த்ரிகுண த்ரவ்யத்துக்கு ஸ்வரூப பேதம் குண த்ரய ஆஸ்ரயத்வம் –
சத்த பரிணாம சீலமான இத் த்ரவ்யத்துக்கு சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்கள் அந்யோந்யம் சமமான போது மஹா பிரளயம் —
விஷமமான போது ஸ்ருஷ்டி ஸ்திதிகள்-குண வைஷம்யம் உள்ள பிரதேசத்திலே மஹதாதி விகாரங்கள் –
இதில் விக்ருதம் அல்லாத பிரதேசத்தையும் விக்ருதமான பிரதேசத்தையும் கூட
பிரகிருதி மஹத் அஹங்கார தன்மாத்ர பூத இந்த்ரியங்கள் என்று இருபத்து தத்துவங்களாக சாஸ்திரங்கள் வகுத்துச் சொல்லும் –
சில விவஷா விசேஷங்களாலே ஓரோர் இடங்களிலே அவாந்தர வகுப்புக்களும் அவற்றின் அபிமானி தேவதைகளும்
அவ்வோ உபாசன அதிகாரிகளுக்கு அறிய வேணும் -ஆத்மாவுக்கு அவற்றில் காட்டிலும் வியாவ்ருத்தி அறிகை இங்கு நமக்குப் பிரதானம் –

இவை எல்லாம் சர்வேஸ்வரனுக்கு அஸ்த்ர பூஷணாதி ரூபங்களாக நிற்கும் நிலையை
புருடன் மணிவரமாக பொன்றா மூல பிரகிருதி மறுவாக மான் தண்டாக –
தெருள் வருள் வாள் மறைவாக -ஆங்காரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈர் ஐந்தும் சரங்களாக இரு பூத மாலை வனமாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே -அதிகார சங்க்ரஹம் ”–பாசுரம் 41–
என்கிற கட்டளையில் அறிகை உசிதம் –
(கருடனுடைய சரீரம் வேதங்கள்; இந்த வேதங்களின் பொருள் கண்ணன்.
ஜீவன் –கௌஸ்துப ரத்னம் ;மூல ப்ரக்ருதி –ஸ்ரீவத்ஸம் என்கிற மறு ; மஹத்வம் — கௌமோதகி என்கிற கதை ;
ஜ்ஞானமும் ,அஜ்ஞானமும் —கந்தகம் என்கிற கத்தி , அதன் உறை ; ஸாத்விக அஹங்காரம்—சார்ங்கம் என்கிற வில் ;
தாமஸ அஹங்காரம் —சங்கம் ; மனஸ் —சக்ரம் ; ஈரைந்து இந்த்ரியங்கள் —-பாணங்கள் ;தன்மாத்ரை 5ம் பூதங்கள் 5ம் —வனமாலை;
இப்படியாக, சகல தத்வங்களும் ,ஆயுதமாகவும் ஆபரணமாகவும் இருக்க,ஹஸ்திகிரியின் மேலே எல்லோரும் தரிசிக்கும்படி நின்று
எல்லாவற்றையும் காப்பாற்றுகிறான்
ஈரைந்து இந்த்ரியங்கள் —- ஜ்ஞானேந்திரியங்கள் 5ம் கர்மேந்த்ரியங்கள் 5ம் — பாணங்கள் ;
தன்மாத்ரை 5ம்—ஸப்தம் , வாயு, தேஜஸ், ஜலம் , மண்.
பூதங்கள் 5ம் — ஆகாசம் , காற்று,நெருப்பு, ஜலம் ,மண் ஆக 10ம் —வனமாலை;)
இருபத்து நாலு தத்துவங்களுக்கும் அந்யோந்ய ஸ்வரூப பேதமும் அவ்வோ லஷணங்களாலே சித்தம் –
இவற்றில் பிரக்ருதியின் கார்யமான 23 தத்துவங்களுக்கும் இவற்றால் ஆரப்தங்கள் ஆனவற்றுக்கும்
ஸ்திதியில் வரும் ஏற்றச் சுருக்கங்கள் புராணங்களிலே பிரசித்தமான படியே கண்டு கொள்வது –

ஸ்வ சத்தா பாசகம் சத்த்வம் குண சத்த்வாதி லஷணம்–பௌஷ்கர ஸம்ஹிதை
(ஸுத்தஸத்வம் என்பது தானாகவே வெளிப்படுவது; இந்த ஸுத்தஸத்வம்,
ரஜஸ் ,தமஸ் இவற்றுடன் உள்ள ஸத்வம் என்பதைக் காட்டிலும் வேறானது)
தமஸ பரமோ தாதா -ஸ்ரீமத் ராமாயணம்
(தமஸ்ஸுக்கும் அப்பால் உள்ளவன் பரமாத்மா –எம்பெருமான்)
அப்ராக்ருதம் ஸூ ரைர் வந்த்யம் -ஜிதந்தே ஸ்தோத்ரம்
(நித்யவிபூதி என்பது, ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானது;நித்யஸூரிகள் இருக்கும் இடம் ;அவர்களால் போற்றப்படுவது)
இத்யாதிகளிலே -தமஸ்ஸூக்கு மேலான தேச விசேஷம் சித்திக்கையாலே
அனந்தசய ந தச்யாந்த சங்க்யானம் வா அபி வித்யதே ததனந்தப சங்க்யாத பிரமாணம் சாபி வை யத-ஸ்ரீ விஷ்ணு புராணம் —
(ப்ரக்ருதிக்கு அழிவு கிடையாது ; கால அளவும் கிடையாது . இப்படி அளவிட இயலாதது)–இத்யாதிகள்
நித்ய விபூதியில் அவிச்சின்னம் அல்லாத பிரதேசத்தாலே மூல பிரக்ருதிக்கு அனந்தத்யம் -முடிவின்மை மட்டும் சொல்லுகின்றன –

த்ரிகுண த்ரயத்துக்கு பிரவ்ருத்தி பேதம் பத்த சேதனருடைய போகாப வர்க்கங்களுக்கும் ஈஸ்வரனுடைய லீலா ரசத்துக்குமாக –
சமமாகவும் விஷமமாகவும் பரிணாம சந்ததியை யுடைத்தாய் தேக இந்த்ரியாதி ரூபத்தாலே அவ்வோ வியாபாரங்களையும் பண்ணுகை-
இது ரஜஸ் தமஸ் ஸூக்களை இட்டு பத்தர்களுக்கு தத்வங்களின் உண்மையை மறைத்து விபரீத ஞானத்தை உண்டாக்குகிறது போகார்த்தமாக –
இது தானே அபவகார்த்தமாக சத்வ வ்ருத்தியாலே தத்தவங்களை யாதவத் பிரகாசிப்பிக்கிறது –
இவை எல்லாம் ஈஸ்வரனுக்கு லீலா ரசவஹமாய் இருக்கும் –
(மூன்று குணங்களும் ப்ரக்ருதியும் –ப்ரக்ருதியின் செயல்கள்
1. ஸத்வம் ,ரஜஸ் ,தமஸ் மூன்று குணங்களும் சமமாக ,ஒரே அளவில் இருக்கும்போது ப்ரளயம் உண்டாகிறது.
2. ப்ரக்ருதியின் செயல்கள் பேதப்பட்டு ( ஒன்று அதிகமாதல்,இன்னொன்று குறைதல்,இப்படி )
ப்ரக்ருதியும் மாறுதல் அடைந்து ஸ்ருஷ்டி ஏற்படுகிறது
3. ஸ்ருஷ்டி சமயத்தில் ஜீவன்கள் ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டு அநுபவத்தை அடைகிறது
4. அநுபவம் மூலமாக ஜீவன்கள் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுகிறது
5. இவை யாவும் பகவானின் லீலைக்காக ஏற்படுகிறது
6. லீலைக்கு ஏற்றவகையில் –அதற்கு ஏற்றவாறு பெயர் மற்றும் உருவம் எடுக்கிறது
( மொத்தத்தில் லீலா விபூதி )
7. ஜீவன்கள் அடையும் உடல்–சரீரம் காரணமாக ரஜோ தாமஸ குணங்களால்
உண்மையான தத்வத்தை , இவை மறைத்து ,தவறான ஜ்ஞானத்தைக் கொடுக்கிறது.
8. ஜீவனுக்கு ,ஸத்வகுணம் மேலோங்கும்போது அவனுக்கு உண்மையான ஜ்ஞானம் புலப்படுகிறது
9. இந்த உண்மையான ஜ்ஞானம் , மோக்ஷத்தை அடையும் வழியில் ஜீவனை முயற்சிக்கச் செய்கிறது.
இவை யாவும் பகவானின் லீலை)

—————————————————–

சுத்த சத்வத்துக்கு ஸ்வரூப பேதம் ரஜஸ் தமஸ் ஸூக்களோடு கலவாத சத்வ குண ஆச்ரயமாய் இருக்கை –
இதின் ஸ்திதி பேதம் நித்தியமான மண்டப கோபுராதி களிலும் ஈச்வரனுடையவும் நித்யர்களுடையவும்
விக்ரஹ விசேஷங்களிலும் நித்தியமாய் இருக்கும் –
நித்யருடையவும் முக்தருடையவும் ஈச்வரனுடையவும் அநித்யேச்சையால் வந்த -தற்காலிக விருப்பத்தால் வந்த –
விக்ரஹாதிகளில் அநித்யமாய் இருக்கும் –
இதன் பிரவ்ருத்தி பேதம் இவர்களுடைய இச்சைக்கு ஈடான பரிணாமாதி களாலே
சேஷிக்கு போக உபகரணமாயும் சேஷ பூதனுக்கு கைங்கர்ய உபகரணமாயும் நிற்கை ஆகிறது போகார்த்தமாக –
இது தானே அபவர்க்கார்த்தமாக சத்வ வ்ருத்தியாலே தத்தவங்களை யாதவத் பிரகாசிப்பிக்கிறது –
இவை எல்லாம் ஈஸ்வரனுக்கு லீலா ரசாவஹமாய் இருக்கும்

—————————————————–

காலத்துக்கு ஸ்வரூப பேதம் ஜடமாய் விபுவாய் இருக்கை –
இதன் ஸ்திதி காலவச்சேதம் இல்லாமையாலே நித்யையாய் இருக்கும் –
இதின் பிரவ்ருத்தி பேதம் கலா காஷ்டாதி விபாகத்தாலே ஸ்ருஷ்டியாதிகளுக்கு உபகரணமாய் இருக்கிறபடியிலே கண்டு கொள்வது –
இத் த்ரவ்யங்கள் எல்லாம் ஸ்வரூபேண நித்யங்களாய் இருக்கும் –
நாமாந்தர பஜனார்ஹா வஸ்தா விசேஷ விசிஷ்டதையை இட்டு சிலவற்றை அநித்யங்கள் என்கிறது –
அழிந்ததோடு சஜாதீயங்களான அவஸ்த்தாந்தரங்கள் மேலும் முழுக்க வருகையாலே ப்ரவாஹ நித்யங்கள் என்று சொல்லுகிறது –

இப் பதார்த்தங்கள் எல்லாவற்றினுடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள் ஈஸ்வரனுக்கு ஸ்வ அதீனங்களாய் இருக்கை யாவது
ஈஸ்வர சத்யையையும் ஈஸ்வர இச்சையும் ஒழிய இவற்றுக்கு சத்தாதிகள் கூடாது ஒழிகை –
ஆகையால் சமஸ்த வஸ்துக்களுக்கும் ஸ்வ பாவ சித்த அனுகூல்யம் ஈஸ்வர இச்சாயத்தம் –
இத்தாலே ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் சர்வமும் அனுகூல்யமாய் இருக்கும்
பத்தருக்கு கர்மானுரூபமாக புருஷ பேதத்தாலும் கால பேதத்தாலும் இவற்றில் ப்ராதி கூல்யங்களும் அல்ப அனுகூல்யங்களும் நடவா நிற்கும் –
இப் பத்தர் தங்களுக்கும் ஸ்வ ஆத்மா ஸ்வரூபம் சர்வதா அனுகூலமாக ஈஸ்வர இச்சா சித்தம் –
இப்படி அனுகூலமான ஆத்ம ஸ்வரூபத்தோடே ஏகத்வ பிரமத்தாலும் கர்ம வசத்தாலும் இறே
ஹேயமான சரீரம் ஞான ஹீனருக்கு அனுகூலமாய்த் தோற்றுகிறது-
இவற்றுக்கு கர்மாபாதிகமான பிரதிகூல ரூபத்தாலே முமுஷூவைப் பற்ற த்யாஜ்யத்வம் –
ஸ்வாபாவிகமான அனுகூல ரூபத்தாலே முக்தனைப் பற்ற அவை தமக்கே உபாதேயத்வம் –
அஹங்கார மமகார யுக்தனாய்க் கொண்டு தனக்கு என்று ஸ்வீ கரிக்குமவை எல்லாம் பிரதி கூலங்களாம்-
ஸ்வரூப ஞானம் பிறந்து ஸ்வாமி சேஷம் என்று காணப் புக்கால் எல்லாம் அனுகூலமாம் –
இவ் வர்த்தம் பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் சொல்லும் இடத்தில் பரக்கச் சொல்லக் கடவோம்

———————————————————

ஈஸ்வர தத்வம் –
இப்படி ஸ்வா தீன சர்வ சத்தாதிகளை யுடையனாய் இருக்கிற ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் –
சத்யத்வாதிகள் ஆகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே –
சத்தியமாய் ஞானமாய் அனந்தமாய் ஆனந்தமாய் அமலமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தை நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -என்றும்
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில்போல்
எந்தாய்!எமக்கே அருளாய் எனநின்று
இமையோர் பரவும் இடம் ,எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே
களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே–பெரிய திருமொழி ( 3–8–1 )
உணர் முழு நலம் என்றும் –
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறி உணர்வு அவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில எனனுயிர் மிகு நரையிலனே–திருவாய்மொழி (1–1–2 )
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் என்றும் –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பரநன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரியஎன்னவாவறச் சூழ்ந்தாயே–10-10-10-
அமலன் -என்றும் இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அனுசந்தித்தார்கள் –
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் ,விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன் நீள் மதிளரங்கத்தம்மான் , திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளனவொக்கின்றதே–1-

மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ராஹாதிகளும் எல்லாம் ஈஸ்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாய் இருக்கும்
இக் குணங்களில் ஞான பல ஐஸ்வர்ய வீர்யம் சக்தி தேஜஸ் ஸூக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வ உபயுக்தங்களாய் இருக்கும் –
சௌசீல்ய வாத்சல்யாதிகள் சௌலப்ய உபயுக்தங்களாய் இருக்கும் –
இக் குணங்கள் எல்லாம் சர்வ காலங்களிலும் ஸ்வரூப ஸ்ரீ தங்களாய் இருக்கும் –

பர வ்யூஹாதி விபவங்களிலே குண நியமம் சொல்லுகிறது எல்லாம் அவ்வோ ரூபங்களை அனுசந்திப்பார்க்கு
சர்வேஸ்வரன் ஆவிஷ்கரிக்கும் குண விசேஷங்கள் சொல்லுகைக்காக வந்தன

ஔபனிஷத் வித்யா விசேஷங்கள் தோறும் அனுசந்தேய குண விசேஷங்கள் நியதங்கள் ஆனால் போலே
பகவச் சாஸ்திர உக்தமான ரூப விசேஷ அனுசந்தானத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள் –

அவ் விடத்தில் பர ரூபத்தில் ஞானாதி குணங்கள் ஆறும் வேத்யங்கள்
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்திரங்கள் சொல்லும் –
நாலு வ்யூஹம் உண்டாய் இருக்க வ்யூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூதேவ ரூபத்தில் காட்டில்
அனுசந்தேய குண பேதம் இல்லாமையாலே த்ரி வ்யூஹம் என்கிறது -இப்பஷத்தை
குணைஷ் ஷட்பிஸ்த்வதை ப்ரதமதர மூர்த்தஸ் தவ பபௌ
ததாஸ்திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரிப்ரபு –ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -16 -சங்க்ரஹிக்கப் பட்டன-

(தேவப்பெருமாளே திருச்செவி சாத்திய ஸ்தோத்ரம்
எம்பெருமானாரும், மற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ வரதன் ஸந்நிதியில் குழுமியிருக்க
தேவப் பெருமாள் , திருமுகப்பில் அரங்கேறிய ஸ்தோத்ரம்

குணை:ஷட்பிஸ்த்வேதை : ப்ரதமதர மூர்திஸ்தவ பபௌ
தத ஸ்திஸ்ரதேஷாம் த்ரியுக 1 யுகலைர் ஹி த்ரிப்ரபு : |
வ்யவஸ்த்தா யா சைஷா நநு வரத ! ஸா$$விஷ்க்ருதி வசாத்
பவாந் ஸர்வத்ரைவ த்வகணித மஹாமங்கல குண : ||

த்ரியுக =மூவிரண்டு குணங்களை உடைய
வரத = தேவப்பெருமாளே
தவ=தேவரீருடைய
ப்ரதமதர மூர்தி =முதன்மையான திருவுருவான பரவாஸுதேவ மூர்த்தி
ஷட்குணை :=அந்த ஆறு குணங்களால்
பபௌ =விளங்கியது
தத :திஸ்ர =அதிலிருந்து தோன்றிய மூன்று மூர்த்திகளான ஸங்கர்ஷண ,
ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள்
தேஷாம்= அந்த ஜ்ஞான சக்த்யாதி குணங்களுடைய
த்ரிபி: யுகலை =மூன்று இரட்டைகளாகவே
அபு : =ப்ரகாசித்தன
ஏஷாயா வ்யவஸ்த்தா = இத்தகைய யாதொரு கட்டுப்பாடு உண்டோ
ஸா = அது
ஆவிஷ்க்ருதி வசாத் = அந்தந்த மூர்த்திகளின் குணங்களை வெளியிடுவதால்
உண்டானதாகும்
து =ஆனால்
பவாந் =தேவரீர்
ஸர்வத்ர ஏவ =எல்லா நிலைகளிலும்
அகணித =எண்ணில் அடங்காத
மஹா மங்கல குண : =பெரிய மங்களமான குணக்கூட்டங்களை உடையவரே

ஹே வரதனே —உன்னுடைய பரவாஸுதேவ ரூபம் ஆறு குணங்களால் ப்ரஸித்தி .
ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்கள் , இந்த ஆறு குணங்களிலிருந்து இரண்டிரண்டு குணங்களை ஸ்வீகரித்துக்கொண்டுள்ளன)

இப் பர வ்யூஹங்களில் குண க்ரியா விபவங்கள்
ஷாட் குண்யாத் வாஸூ தேவ பர இதி சபவான் முக்த போக்யோ பலாட்யாத்
த்வம் ஹரசி விதனுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யவாத்
பிரத்யுமன சர்க்க தர்மௌ நயசிச பகவன் சக்தி தேஜோ நிருத்த
த்வம் ஹரசி விதனுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யவாத்
பிப்ராண பாசி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதி ராஜா- ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-39-
என்கிற ஸ்லோகத்தில் சங்க்ரஹிக்கப் பட்டன —

(ஹே ரங்கராஜனே , ஆறு குணங்களை உடையவராய் பரவாஸுதேவன் என்று கொண்டாடப்படுகிற தேவரீர் முக்தர்களால்
இப்படியாக அனுபவிக்கப்படுகிறீர். அப்படியே மூன்றாகப் பிரிந்து, ஜ்ஞானம் ,பலம் இந்த இரண்டு குணங்களுடன்
ஸங்கர்ஷணனாக உலகை ஸம்ஹரிக்கிறீர் , சாஸ்த்ரப்ரவசனம் செய்கிறீர்.
ஐச்வர்யம் வீர்யம் இந்த இரண்டு குணங்களுடன் ,ப்ரத்யும்நனாயிருந்து உலகங்களைப் படைத்து, தர்ம ரக்ஷணம் செய்கிறீர்.
சக்தி, தேஜஸ் –இரண்டு குணங்களுடன் அநிருத்தனாயிருந்து ரக்ஷித்து,தத்வ உபதேசம் செய்கிறீர்)

போதாத் சங்கர்ஷண -ஜாக்ரதாதி பத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம்
ஜாக்ரத் ஸ்வப்நாத் யலச துரீய ப்ராய த்யாத்ருக்மவது பாச்ய
ஸ்வாமின் தத் தத் குண பரிவர்ஹ சாதுர் சதுர்த்தா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-40 -என்று சங்க்ருஹீதங்கள் ஆயிற்று

(ஹே ரங்கநாதா —தேவரீரைத் த்யானம் செய்பவர்கள் சிலர், விழித்துக் கொண்டிருப்பவர்கள் போல இருக்கிறார்கள்.
சிலர், கனவு காண்பவர்போல இருக்கிறார்கள். சிலர் தூங்குபவர் போல இருக்கிறார்கள்.
சிலர், மூர்ச்சையடைந்தவர் போல இருக்கிறார்கள்.
[விழித்திருப்பாருக்கு –இந்த்ரியங்கள் வேலை செய்கின்றன–கனவு காண்பவருக்கு –மனம் மாத்ரம் வேலை செய்கிறது
தூங்குபவர்களுக்கு–மனமும் வேலை செய்வதில்லை–மூர்ச்சை நிலையில் —உயிரோடு இருக்கும் அடையாளம்கூட இல்லை ]
இவர்களைப்போல, ஹே பகவந் , நீர்,நான்கு ரூபங்களாகப் பிரிந்து-அந்தந்த ரூபங்களுக்குத் தகுந்த
குணங்கள், ஆயுதங்களுடன் உபாஸிக்கப்படுகிறீர்)

(வ்யூஹாந்தரங்கள்
1. வாஸுதேவன் –கேசவன் நாராயணன் மாதவன்–பத்னி –லக்ஷ்மி ஸ்ரீ வாகீச்வரி காந்தீ
2. ஸங்கர்ஷணன் —கோவிந்தன் விஷ்ணு மதுஸூதனன்==பத்னி –கீர்த்தி-9ஜீவன் )–க்ரியா சாந்தி விபூதி :
3. ப்ரத்யும்நன் —— த்ரிவிக்ரமன் வாமநன் ஸ்ரீதரன்==பத்னி–ஜயா (புத்தி ) இச்சா ப்ரீதி : ரதி:
4.அநிருத்தன் — – ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன்–பத்னி–மாயா(அஹங்காரம் ) மாயா தீ : மஹிமா

பரமபதத்தில்—–விசாக ஸ்தம்பம் என்கிற அப்ராக்ருதமான பெரிய ஸ்தம்பம் உள்ளது. அது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாகத்துக்கும் நான்கு பக்கங்கள்.-கிழக்கே ஆரம்பித்து, தெற்கு, மேற்கு,வடக்கு என்று ஒவ்வொரு பக்கத்திலும்
வாஸுதேவ, ஸங்கர்ஷண ,ப்ரத்யும்ன, அநிருத்த ரூபங்களாக பகவான் எழுந்தருளியிருக்கிறான் .

1.–முதலில்–ஜாக்ரத் ஸ்தானம் –இதில், ஜகத் ஸ்ருஷ்டி, ஆயுதங்கள், வாஹனங்கள், சின்னம்
2.அதற்கு மேல் —ஸ்வப்ந ஸ்தானம் —ஆகாரம், வர்ணம், சின்னம் [ஸ்பஷ்டமாகப் ப்ரகாஸிக்காது; ஜகத் வ்யாபாரமின்றி இச்சை மாத்திரம் இருக்கும்.
3. அதற்கு மேல் —ஸுஷுப்தி ஸ்தானம் –வர்ணம்,ஆயுதம் இவை இன்றி, இச்சையுமின்றி ஸ்வாநத்தா அநுபவம்
4. அதற்கு மேல்–துரீய ஸ்தானம்—ஸ்தம்பத்தின் கிளைகள்போலத் தோற்றம்

ஜீவனுக்கு–
1. விழிப்பு நிலை—-அநிருத்தன்
2. ஸ்வப்ந நிலை—ப்ரத்யும்நன்
3. உறக்க நிலை–ஸங்கர்ஷணன்
4. மோக்ஷ நிலை —வாஸுதேவன் , பரவாஸுதேவன்

1. விழித்திருப்பது—
எல்ல இந்த்ரியங்களும் இயங்குகின்றன ;கர்மாவைச் செய்கிறான்

2. ஸ்வப்நம்
ஜீவன் , வேறு ஒரு சரீரத்தில் இருப்பதாக உணர்கிறான் ஸ்வப்ந சமயத்தில், ஜீவன் சரீரத்தைவிட்டு வெளியேறினாலும் ,
ப்ராணவாயு ( ப்ராணன் ),ஜீவனுடன்கூட வெளியே செல்வதில்லை.அது ,பழைய சரீரத்திலேயே இருக்கிறது.
அதன்மூலமாக,சரீரம் ரக்ஷிக்கப்படுகிறது.ஸ்வப்நத்தில் , இவன் எடுத்துக்கொண்ட சரீரம் ,விழித்துக்கொண்டிருக்கும்போது இவனுடன்
இருப்பதில்லை. விழித்திருக்கும்போது உள்ள சரீரம் ,ஸ்வப்நத்தில் இருப்பதில்லை. ஸ்வப்நத்தில் இவன் இதை விட்டுவிடுகிறான்.
ஆதலால், சரீரத்தைவிட , ஆத்மா வேறு என்பது தெளிவாகிறது

3. உறக்கம்–ஸுஷுப்தி
ஸ்வப்நத்தின்போது , ” ஜீவன்,”ஹிதா ” என்கிற நாடிகளில் இருக்கிறான்.
தூங்கும்போதோ , ஸாக்ஷாத் பரமாத்மாவிடமே இருக்கிறான். அப்போது, அவனுக்கு அநுகூல ,ப்ரதிகூல விஷயங்கள் தெரியாது.
வெளி உலகம் தெரியாது.சுக துக்கம் தெரியாது. ப்ரியமான ஸ்திரீயால் அணைக்கப்பட்டு உள்ள நிலையில், தன்னை மறந்து இருப்பதைப் போல
தூக்க நிலையில் ,பரம ப்ரியனான பரமாதவினால் அணைக்கப்பட்டு, அதிலேயே லயித்து, எல்லாவற்றையும் மறந்து தூங்குகிறான்.
பரமாத்மாவைக் கூட அறிய முடியாமல் தூங்குகிறான். இச்சமயம் எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.
ஜ்ஞானமானது ,மனஸ்ஸை அடைந்து ,மனஸ் இந்த்ரியங்களை ஏவுதல் போன்ற எந்தக் காரியமும் உரக்க நிலையில் இல்லை.

4. மோக்ஷ நிலை—

பரவாஸுதேவ , உபாஸனையில் ஆறு குணங்களையும் உபாஸிக்கவேணும்
ஜ்ஞானம் = சாஸ்த்ர நிர்மாணம்
பலம் =ஸம்ஹாரம்
ஐச்வர்யம் =ஸ்ருஷ்டி
வீர்யம் =தர்ம ஸ்தாபனம்
சக்தி = ரக்ஷிப்பது
தேஜஸ் =தத்வத்தை அறிவிப்பது

1. வைச்வாநரன் விழிப்பு அநிருத்தன் (சக்தி,தேஜஸ் –அறிவை அழிப்பது, ரக்ஷணம் )
2. தைஜஸன் ஸ்வப்நம் ப்ரத்யும்நன் ( ஐச்வர்யம், வீர்யம் –ஸ்ருஷ்டி, தர்ம வ்யவஸ்தை )
3. ப்ராஜ்ஞன் உறக்கம் ஸங்கர்ஷணன் (ஜ்ஞானம், பலம்–ஸம்ஹாரம் ,சாஸ்த்ர ப்ரசாரம் )
4. துரீயன் மோக்ஷம் வாஸுதேவன் (பொது–வ்யூஹ வாஸுதேவன் ))

கேசவாதிகளான பன்னிரண்டு ரூபங்களும் வ்யூஹாந்தரங்கள் –
விபவங்களான பத்ம நாபாதிகளான முப்பத்து சின்ன ரூபங்கள் –
இவற்றில் மத்ஸ்ய கூர்மாதி களான அவதாரங்கள் ஒரு பிரயோஜன வசத்தாலே விசேஷித்துச் சொல்லப் பட்டன –
இவ் விபவங்கள் ஈஸ்வரன் அவ்வோ கார்ய விசேஷங்களுக்கு ஈடாகத் தான் வேண்டின குணங்களை வேண்டின போது
மறைத்தும் வேண்டின போது பிரகாசிப்பித்தும் நடத்தும் –
இவற்றில் அவாந்தர பேதங்கள் -கிருஷ்ண ரூபாண்ய சங்க்யாநி-பாஞ்சராத்ர ஆகமம் -இத்யாதிகளில் படியே அனந்தங்கள்-
(அதாவது, க்ருஷ்ணனாக அவதரித்த எம்பெருமானின் ரூபங்களுக்குக் கணக்கில்லை என்று ஸ்ரீ பாஞ்சராத்ரம் சொல்லுகிறது)
இப்படியே விபவாந்தரங்களும் கண்டு கொள்வது –
சில ஜீவர்களை விக்ரஹ விசேஷத்தாலும் சக்தி விசேஷத்தாலும் அதிஷ்டித்து அதிசயித்த கார்யங்களை நடக்கிறதும் விபவ பேதம்

பர வ்யூஹாதி ரூபங்கள் தாமே ஆஸ்ரீதர்க்காக அவர்கள் அபேஷித்த படியிலே
பிம்பாக்ருத்யாத்மாநா பிம்பே சமாகத்யா வதிஷ்ட்யதே -என்கிற படியே நிற்கிற நிலை அர்ச்சாவதாரம்
(பிம்பத்தில்–விக்ரஹரூபமாக — விக்ரஹமா, திருமேனியா என்று பிரிக்க இயலாதபடி அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ளான்)

சர்வருடையவும் ஹிருதயங்களிலே ஸூஷ்மமாய் இருப்பதொரு ரூப விசேஷத்தைக் கொண்டு நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம் –
இது சர்வாந்தர்யாமியான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை அனுசந்திக்க இழிவாருக்கு துறையாக
அஷ்டாங்க யோக சித்தா நாம் ஹ்ருத்யாக நிரதாத்மா நாம்
யோகி நாமதிகாரஸ் ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயேசயே-இத்யாதிகளிலே சொல்லுகையாலே அந்தர்யாமி ரூபம் என்று சொல்லப் பட்டது —
(அஷ்டாங்க யோகத்தைச் செய்து, ஆத்மாவலோகனம் என்கிற ஸித்தியடைந்தவர்கள் , மானஸ பூஜையை விரும்பி
ப்ரஹ்மோபாஸனம் செய்து, யோகிகளாகி அவர்களின் ஹ்ருதயத்தில் ஒரு மூர்த்தியாக த்யானிப்பது.
மூர்த்தி என்பது, நான்கு வ்யூஹங்களாகப் பிரியாமலிருக்கிற ரூபம் என்று அர்த்தம்.)

இப்படி அவதரிக்கிற ரூபங்களில் வகைகள் எல்லாம் சுத்த சத்வ த்ரவ்ய மயங்களாய்
கர்ம தத் பலங்களோடு துவக்கற வருகையாலே சுத்த சிருஷ்டி என்று பேர் பெற்று இருக்கும் –
இவ் வவதாரங்கள் எல்லாம் சத்யங்கள் என்றும் –
இவற்றில் ஈஸ்வரனுக்கு ஞானாதி சங்கோசம் இல்லை என்றும் –
இவ் விக்ரஹங்கள் சுத்த சத்வ மயங்கள் என்றும் –
இவற்றுக்கு ஈஸ்வரன் இச்சா மாத்ரமே காரணம் என்றும் –
தர்ம ரஷணம் பண்ண வேண்டிய காலமே காலம் என்றும் –
சாது பரித்ராணாதிகளே பிரயோஜனங்கள் என்றும் –
இவ் வர்த்தம் அறிந்து தெளிந்து இருப்பார்க்கு ஏக ஜன்மத்தில் ஸ்வ அதிகார அனுகுண சமீஹித உபாய பூர்த்தியாலே
ஜன்மாந்தரம் அனுபவியாதே முக்தர் ஆகலாம் என்றும்
பஹூ நி மே வ்யதீதா நி என்று -ஸ்ரீ கீதை -4-5- ஐந்து ஸ்லோகத்தாலே ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்தான் –

(5.பஹு நி மே வியதீதாநி ஜன்மாநி தவ சார்ஜந |
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ! ||
பகவான் சொல்கிறார்
அர்ஜுனா ! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்துவிட்டன .
உனக்கும் அப்படியே.அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன் .
நீ அறியமாட்டாய்
6. அஜோ$பி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோபி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாப ஸம்பவாம்யாத்மமாயயா ||
நான் பிறப்பற்றவன். அழிவு இல்லாதவன்.ஸகல பூதங்களுக்கும் ஈச்வரன் .
இப்படி எல்லாம் இருந்தாலும் என்னுடைய மாயையால்
ஸங்கல்ப மாத்ரத்தில் அவதரிக்கிறேன்
7.யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத |
அப்யுத்தாந மதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||
எப்போது எப்போது தர்மம் நிலைகுலைந்துபோய் அதர்மம் வளர்கிறதோ
அந்தச் சமயத்தில் எல்லாம் நான் அவதரிக்கிறேன்
8.பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
ஸாதுக்களைக் காப்பாற்றவும் , துஷ்டர்களை அழிக்கவும்
தர்மத்தை நிலை நிறுத்தவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்
9. ஜந்ம கர்ம ச மே தி வ்யமேவம் யோ வேத்தி தத்வதா |
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந ||
அர்ஜுனா என்னுடைய திவ்ய அவதார ரஹஸ்யங்கள் என்னுடைய
செயல்கள் ,எவன் இப்படி உள்ளபடி தெரிந்து கொள்கிறானோ
அவன் (ஆத்மா ), சரீரத்தை விட்டவுடன் மறுபடியும் பிறவி இல்லாமல்
என்னையே அடைகிறான்
10. வீதராக பயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா |
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா ||
விருப்பம், பயம், கோபம் இல்லாதவர்களும் என்னையே
சரணம் என்று அடைந்தவர்களும் ஜ்ஞானம் என்கிற தவத்தால்
மோக்ஷமடைகிறார்கள்

விபாவதாரங்களைத் த்யானம் செய்வதால் அவனுக்கு அந்த எம்பெருமானின் குணங்கள் பற்றிய ஜ்ஞானம் வருகிறது;
மஹாவிச்வாஸம் உண்டாகிறது; இதனால், மோக்ஷம் அடைவதற்கு உள்ள உபாயம் ”ப்ரபத்தி ” என்று உணர்கிறான்)

இது ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுக்கு சரண்யா குண விசேஷ ஞான முகத்தாலே உபாய அனுஷ்டான ஷணத்திலே
மகா விச்வாசாதிகளை ஸ்திரீகரித்து உபகாரமாம்
இப்படியே அர்ச்சாவதாரமும் மிறுக்கிற மோஷத்தை தரும் என்னும் இடத்தை
ஸூ ரூபாம் பிரதிமாம் விஷ்ணோ பிரசன்ன வதநே ஷணாம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரீர் ஸூ வர்ண ரஜதாதிபி
விசத்ய பாஸ்ய தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரபிணீம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-16–என்று ஸ்ரீ சௌன பகவான் அருளிச் செய்தான்

(தங்கத்தாலே விக்ரஹத் திருமேனி, வெள்ளியாலே அப்படித் திருமேனி தரிசிப்பவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்குமாறு வடித்து,
அர்ச்சனம் செய்து த்யானிக்க வேண்டும். இதன்மூலமாக, அனைத்துத் தோஷங்களும் தொலைந்து ப்ரஹ்ம ரூபமான அதையே
அடைந்து விடுவான் இந்த அர்ச்சாவதார ரஹஸ்யம் ,இதன் மேன்மை இவற்றை உணர்ந்த ஆழ்வார்கள், அர்ச்சாவதாரத்திலேயே
முழுதும் மூழ்கி ,இதன் மூலமான பரமாத்மாவையே தர்ஸித்தனர் .)

ஆழ்வார்களும் இவ்வதார ரகஸ்யத்தையும்
அர்ச்சாவதார வை லஷண்யத்தையும் பிரகாரமாக அனுசந்தித்து இதற்குப் பேரணியாக பரத்வத்தைக் கண்டு போந்தார்கள் –

இப்படி இருக்கிற ஈஸ்வரன் தன் ஆனந்தத்துக்கு பரிவாஹமாகப் பண்ணும் வியாபாரங்கள்
சகல ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹார மோஷ பிரதத்வாதிகள் –

இவ் வீஸ்வரன் நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-இத்யாதிகளில் படியே –
சர்வ அவஸ்தையிலும் ச பத்நீகனாய்க் கொண்டே இருக்கும் என்னும் இடத்தை –
தத்த்வேந ய -மாதா பிதா -ஸ்லோக ரத்னம் ஸ்லோகங்கள் 4/5 -உபகார விசேஷத்தாலே
சாதரமாக விசேஷித்துச் சொல்லப்பட்ட பராசர பராங்குச பிரபந்தங்களிலே தெளிந்து கொள்வது –

(உலகத்துக்கே தாயான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , நாயகனான விஷ்ணுவை எப்போதும் பிரியாமல் உள்ளாள்.
( ப்ருகு மஹரிஷிக்குப் பெண்ணான பிறகோ , திருப்பாற்கடலில் தோன்றிய பிறகோ பகவானுடன் சேர்ந்தாள் என்பதல்ல–
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ,ரக்ஷண ,ஸம்ஹார ,மோக்ஷ தசைகளிலும்
பகவானுடன் கூடவே ஸர்வ அவஸ்தைகளிலும் பகவானுடன் கூடவே இருக்கிறாள் )

(ஸ்ரீ ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் –4 வது ச்லோகம்
தத்வேந யஸ்சிதசிதீஸ்வரதத் ஸ்வபாவ
போகாபவர்க ததுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

எந்த மஹரிஷி , வள்ளல்தன்மையுடன் ஜீவன், அசேதநம் ,ஈச்வரன் இவர்களின் தன்மை, ஜீவனின் அநுபவம், அசித்தின் அநுபவமான
கைவல்ய, ஐச்வர்ய , புருஷார்த்தங்கள் , மோக்ஷம், அவருக்கான -உபாயம்-வழி இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியாக
தெளிவாகக் காண்பிக்க புராண ரத்னம் என்பதை இயற்றினாரோ –அந்தப் பராசரருக்கு எனது வந்தனம்

5 வது ச்லோகம்
மாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீநம்மாழ்வார்—”ஆத்யஸ்ய ந குலபதே —-”, ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர் .
”மதன்வயாநாம்—” ஆளவந்தார், தம்மைச் சேர்ந்தவர் எல்லாரையும்
சேர்த்துக்கொண்டு,ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே ”சரணம்” என்கிறார்.

(ஈச்வருகிருபா அநாதிரபி ஆசார்யக்ருபாம் அபேக்ஷதே லீலாரஸ ஸஹசரிதா ச
ஆசார்யக்ருபாது தந்நிக்ரஹமபிசமயதி . அநுக்ரஹைக ரஸா ச . ஈச்வரஸ்ய
க்வசித் அதோ நீநீஷாபிவர்த்ததே அஸாது காரயித்ருத் வம் ச . ஆசார்யஸ்தது
ஸர்வத்ர உந்நிநீஷைவ ஸ ஸாத்வேவ காரயதி —
எம்பெருமானின் தயை ,ஆசார்யனின் தயையை அபேக்ஷித்தே நமக்கு நன்மையைச் செய்கிறது.
சிலபேர்விஷயத்தில், ஈச்வரன் நிக்ரஹமும் செய்வன் . கெட்ட செயல்களைச் செய்ய இடமளிப்பான்.
ஆசார்யனின் க்ருபை அநுக்ரஹத்தையே செய்யும்.நன்மையையே விளைவிக்கும்.)

(ஸ்வாமி தேசிகன் தன்னுடைய ஸ்தோத்ர பாஷ்யத்தில்
அத்ராஸம் மானதம் ரத்னம் ஸ்திரம் போக்யம் ப்ரகாஸகம் |
மஹார்கம் மங்களம் மான்யம் ஸுரக்ஷம் ஸுக்ரஹம் ந்ருணாம் || என்கிறார்
த்ராஸம் என்றால் ரத்னத்துக்கு உள்ள தோஷத்தைச் சொல்வது.
இது ”அத்ராஸம் ”. இந்த ரத்னம் எவ்விதத் தோஷமும் இல்லாதது.
மேலும் வைத்திருப்பவருக்குப் பெருமை முதலியன தருவது.
ஸ்தோத்ர ரத்னத்தில் , ஸ்ரீ ஆளவந்தார் முதல் 5 ச்லோகங்களாலே ஜ்ஞானத்தைக் கொடுத்தவர்களை நமஸ்கரிக்கிறார்.
ச்லோகம் 6ம் 7ம் —பரத்வம்
ச்லோகம் 8ம் 9ம் —ஸௌலப்யம்
ச்லோகம் 10 முதல் 21 —நாராயண ஸப்தார்த்தம்
ச்லோகம் 22–ப்ரபத்தி அநுஷ்டித்தது
ச்லோகம் 23—27 =ப்ரபத்திக்கு அதிகாரம் தமக்கு உள்ளதென்கிறார்
ச்லோகம் 28ம் 29ம், —லகு உபாயத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 30—46 =த்வயத்தில் உத்தரகண்டத்தின் பொருளைச் சொல்கிறார்
ச்லோகம் 47—-பலனில் ஆசையுடன் தகுந்த உபாயம் செய்யாததற்காக வருத்தம்
ச்லோகம் 48—51 =ப்ரபத்தி அளிக்கும்படி வேண்டுகிறார்
ச்லோகம் 52ம் 53ம் —ஸரணாகதி —ஸமர்ப்பணத்தைச் சொல்கிறார்
ச்லோகம் 54—57 =தேஹம் விடும்வரை இருக்க வேண்டுகிறார்
ச்லோகம் 58—63 =பகவானின் காருண்யம் பரத்வம், வாத்ஸல்யம்
ச்லோகம் 64—–வ்ரதம்
ச்லோகம் 65—ஆசார்ய அநுக்ரஹத்தின் பெருமை
இப்படியாக ”ஸ்தோத்ர ரத்ன”த்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டது.)

இவ் விடத்தில் தண்ட தரத்வமும் புருஷகாரத் வாதிகளும் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் கூறாக விபஜித்த வியாபாரங்கள் –
உபதிஸ்யமான தர்மாதாரத்தில் காட்டிலும் அதி திஸ்யமான தர்மாதாரத்துக்கு விசேஷம்
ஸ்வத ப்ராப்தம் என்று உவர் மீமாம்சகர் அருளிச் செய்ததுக்கும் இப்படி விபாகத்தால் வந்த வைஷம்யத்திலே தாத்பர்யம் –
இது யுவத்வாதௌ துலே அபி -ஸ்ரீ குண ரத்ன கோசம் -16-என்கிற ஸ்லோகத்திலே நிர்ணிதம்-
(யுவாத் வா தெள துல்யேப்ய பரவஸதா–ஸத்ரு –ஸமன–
ஸ்த்த்ரவாதீன் க்ருத்வா பகவதி குணான் பும்ஸ்த்வஸுலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பாரார்த்தய கருணா
க்ஷமாதீன் வா போக்தும் பவதி யுவயோராத்மனிபிதா–ஸ்ரீ குணரத்னகோசம் –34

ஹே பெரியபிராட்டியாரான ரங்கநாயகி—-
இளமை முதலானவை ஒத்து இருந்தாலும் தனித்துச் செயல்படும் திறமை,எதிரிகளை அடக்குவது , எடுத்த காரியத்தில்
உறுதியோடு இருப்பது, முதலான நல்ல குணங்கள் ஆண்மைக்கு அநாதிகாலமாக இருக்க,
ஜகன்மாதாவான உம்மிடம் பெண்மைக்கே தகுந்தவை என்று ஏற்பட்ட மனஸ்ஸின் தன்மை , நாயகனான பகவானின்
திருவுள்ளத்துக்கு மீறாமல் இருப்பது பிறர் கஷ்டங்களைத் துடைப்பது, பொறுமை , இவை முதலானவை அநாதிகாலமாக
அமையப்பெற்று ஜீவன்கள் அநுபவிக்க ஏற்றவாறு
உங்கள் இருவரின் ஆத்ம ஸ்வரூபத்தில் பிரித்து அறியும் நிலை ஏற்பட்டுவருகிறது.)

இறை நிலை உணர்வு அரிது -என்று ஆழ்வார் அருளிச் செய்த நிலத்திலே ஏதேனும் ஒரு வ்ருதா நிர்பந்தம் ஆகாது –
உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள் !
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்றும் இவரை
உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே–1-3-6-

க்ருசா நர்தாம்ஸ் தத கேசித் க்ருசாம்ஸ் தத்ர குர்வதே -என்கிறபடியே
(சிலர் சிறிய விஷயங்களையும் பெரிதாக்குகின்றனர் . நாம் நமது வாதங்களை நமக்குள்ள தர்க்கவாத அறிவைக் கொண்டே
நிரூபித்து விடலாம்.ஆனாலும் சிறிய விஷயங்களாக இருந்தாலும் சாஸ்த்ர பிரமாணம் தேவைப்படுகிறது.
ஆதலால்,இந்த ஈச்வர தத்வத்தையும் சாஸ்த்ரரூபமாக அறியவேணும்)
தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்து எல்லாம் சாதிக்கலாய் இருக்கச் செய்தே இறே நாம் பிரமாண சரணராய்ப் போருகிறது
ஆகையால் இவ் வீஸ்வரத்தையும் ஈசிதவ்ய தத்வங்களையும் யதா பிரமாணம் தெளியப் பிராப்தம் –

இவ்விடத்தில் சர்வஜ்ஞன் ஆகவும் வேண்டா –
அத்யந்த அனுப யுக்தங்களில் போலே ஸ்வல் போப யுக்தங்கள் ஆனவற்றில் அபிசந்தி பண்ணவும் வேண்டா –
அபரிச்சேத்யமான கடலிலே படகோடுவார் வழி முதலாக வேண்டுவன தெளியுமா போலே
இவ்வளவு விவேகிக்கை அவஸ்யாபேஷிதம்-இது பிரதிஷ்டமாகைக்காக இவற்றின் விரிவுகள் எண்ணுகிறது

இப்படி மூன்று தத்வங்களாக வகுத்துச் சிந்தித்தால் போலே சர்வ விசிஷ்ட வேஷத்தாலே ஈஸ்வரன் ஏக தத்வமாக அனுசந்திப்பார்க்கும்
ஈச ஈசி தவ்யங்கள் ஆத்மா அநாத்மாக்கள் -உபாய உபேயங்கள்-என்றால் போலே இரண்டு அர்த்தம் ஞாதவ்யமாக வகுப்பார்க்கும்
ரஷ்யம் ரஷகம் -ஹேயம் உபாதேயம் -என்று இப் புடைகளிலே அர்த்த சதுஷ்டயம் ஞாதவ்யமாக சங்க்ரஹிப்பார்க்கும்
முன்பு சொன்னபடி அர்த்த பஞ்சகம் -ஷட் அர்த்தங்கள் என்று விவேகிப்பார்க்கும்
ரகஸ்ய சாஸ்த்ரங்களில் படியே சப்த பதார்த்த சிந்தாதிகள் –
ஈஸ்வரன் -அவித்யை- கர்மம் -காலம் கடமை இயற்ற வேண்டிய முறை சமமாக இருத்தல் போன்ற
ஏழு சிந்தனைகளையும் -பண்ணுவார்க்கும்
அவ்வோ ஞான அனுஷ்டான பிரயோஜன விசேஷங்கள் கண்டு கொள்வது –

ரஹஸ்யார்த்தங்களில் — ஸப்த —-பதார்த்த —சிந்தாதிகள் —
1.ஈச்வரன்
2. அவித்யை ( அஞ்ஞானம் )
3. கர்மம் ( ஊழ்வினை )
4.காலம்
5. கடமை ( கர்த்தவ்யதை )
6.செய்யவேண்டிய முறை ( இதி கர்த்தவ்யதை )
7. புலனடக்கம் (ஸம்யமம் )

——————————————————————–

சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புத்தேஸ்வலந காரணம்
உபதேசாத்தரிம் புத்தவா விரமேத் சர்வ கர்ம ஸூ -என்கிறது
உபயுக்தமான சாராம்சத்தைக் கடுக சரவணம் பண்ணி கிருஷி பண்ணாதே உண்ண விரகு உடையவன் கிருஷி சிந்தையை பண்ணுமா போலே
விரிவு கற்கைக்கு ஈடான சாஸ்திர அப்யாசாதி கர்மங்களில் உபதரனாய்க் கடுக மோஷ உபாயத்திலே மூள ப்ராப்தம் என்றபடி —
உபயுக்தேஷூ த்ரிவர்க்க நிரபேஷதா-கராணா த்ரய சாரூப்யம் இதி சௌக்ய ரசாயனம் –
(எது ஸெளக்ய ரஸாயனம் ( நலத்தைத் தரும் மருந்து ) என்றால், தேவையானவற்றில் ஜ்ஞானம், தர்ம ,அர்த்த ,காமப் பற்றை
அறுத்தல், எண்ணம்,சொல் செயல் –மூன்றும் ஒருப்பட்டு இருப்பது.)

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் வினை உடம்பில்
கூறுபடும் கொடு மோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாற நினைந்து அருளால் மறை நூல் தந்த வாதியரே–

ஆவாப உத்வா பதஸ்ஸ் யு கதி கவிதீ சித்ரவத்தத் ததர்தேஷூ
ஆனந்த்யா தஸ்தி நாஸ்த்யோர நவதி குஹ நா யுக்தி காந்தா க்ருதாந்தா
தத்த்வா லோ கஸ்து லோப்தும் பிரபவதி சஹஸா நிஸ் சமஸ்தான் சமஸ்தான்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு பிராணிதா ஸ்தாணு தாதி —

பலபலத் தத்வங்கள் சொல்லப்படுகின்றன . ஒன்றில் இல்லை ; மற்றொன்றில் உளது. இன்னொன்றில் நீக்கல்; வேறொன்றில் சேர்க்கை.
இப்படியாக, அவரவர் வாதங்களால் கேட்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது .புலவர்களின் எல்லையில்லச் சிந்தனையைப்
போல, தத்வங்கள் எல்லையற்று உள்ளன. ,உண்மையைக் காணும் அறிவு, இவை அனைத்தையும் இருக்குமிடம் தெரியாமல் போக்கிவிடும் .
ஒரு மனிதன் தனக்கு முன்பு உள்ள பொருளை ”மணிதன் எனத் தெளிந்தால் , பின்பு ,அது மிருகமா, கட்டையா என்கிற ஐயம் வராது.
அப்படியே எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எனத் தெளிந்தபிறகு ,ருத்ரனா ,ப்ரம்மனா என்கிற ஐயம் அடியோடு நீங்கும்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

June 21, 2015

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம்

ஆதௌ ப்ராப்யம் பரமம் அனதம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதௌ
இஷ்ட உபாயம் து அயனனமசோ ரீர்ப்சிதார்த்தம் சதுர்த்யாம்
தத் வ்யாதாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மனும் தம்
தத் ப்ராப்யம் ச த்வம் அபி விதன் சம்மத சர்வேதீ –

(1.ப்ரணவத்திலும் ”அ ” உள்ளது; அஷ்டாக்ஷரத்தில் , நாராயண என்பதிலும் ”அ ” உள்ளது. இவற்றின் மூலமாக,
குற்றமே இல்லாததும், மிக மிக உயர்ந்ததும், அடையப்படவேண்டிய பொருளாக உள்ளதும் , இருப்பது ”பகவான் ” என்று கூறப்பட்டது.
நாராயணாய என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை அடைய ஆசைப்படும் பகவானைச் சொல்லிற்று.
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே —-” என்று மஹா நாராயண உபநிஷத்
கம்பநாட்டாழ்வார், தனது ”இராம காதை ” யை”உ” லகம் யாவையும் தாமுளவாக்கலும் என்று தொடங்கி,பெரிய பிராட்டியை முன்னிறுத்துகிறார்
2. நம என்கிற பதத்தில் உள்ள ”ம ” என்கிற அக்ஷரத்தின் மூலமாக ,பகவானை அடையவேண்டிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம் கூறப்பட்டது.
3.நாராயணாய என்பதில் உள்ள, ”அயநம் ” என்பதன் மூலமாக,பகவானை அடையும், ஸித்தோபாயம் கூறப்பட்டது.
4. நம என்பதன் மூலமாக, இப்படிப்பட்ட உபாயத்துக்கு வேண்டிய முக்கிய அங்கமான சரணாகதி (ஸாத்யோபாயம் )கூறப்பட்டது.
5.”நம ” என்பதில் உள்ள ”ம ” என்கிற எழுத்து, பகவானை அடையத் தடையாக உள்ள ”மமகாரத்தைச் சொல்லிற்று .
மமகாரம் என்றால், நான், என்னுடையது என்கிற எண்ணம்–சிந்தனை–
இங்ஙனம் 5 உன்னத விஷயங்களை விளக்குகின்ற அஷ்டாக்ஷரத்தையும் இதைப்போல , த்வயம் , சரம ச்லோகம்
இவற்றையும் தெளிவாக அறிபவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்.)

ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும் ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை –
நாராயணாதி சப்தங்களிலே விவஷிதமான சம்பந்த விசேஷத்தை சித்தாந்தத்துக்கு தளமாக்கி —
இத்தை அனுபந்தித்து இருக்கும் அர்த்த பஞ்சகத்தை சிலர் விசாரித்தார்கள் –
இச் சம்பந்தத்தோடு கூட ஷட் அர்த்தங்கள் என்று சிலர் அனுசந்தித்தார்கள் –
(அர்த்த பஞ்சக ஞானமும் -சரீராத்மா பாவ ஞானத்துடன் சேர்ந்து ஆறு அர்த்தங்கள்-என்றவாறு – )

இச் சம்பந்தம் போலே முமுஷூவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாக சேர்த்த அர்த்த பஞ்சகம் ஏது என்னில்
ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச பிரத்யகாத்மந
ப்ராப்த்யுபாய பலம் சஏவ ததா ப்ராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராணக–ஹாரீத ஸம்ஹிதை-

( ஸ்வரூபம் குணம் விக்ரஹம் விபூதிகளோடே விசிஷ்டா பர ப்ரஹ்மத்தை அறிய வேண்டுமே –
அதில் பிரதமத்தில் ஸ்வரூபம் பற்றி பிராமண பூர்வகமாக அருளிச் செய்கிறார் -)

இவற்றில் பிராப்யமான ப்ரஹ்மத்தின் உடைய ஸ்வரூபம்
திரு மந்த்ரத்தில் பிரதம அஷரத்திலும்
நாராயண சப்தத்திலும்
த்வயத்தில் ச விசேஷணங்களான நாராயண சப்தங்களிலும்
சரம ஸ்லோகத்தில் மாம் அஹம் என்கிற பதங்களிலும்
அனுசந்தேயம் –

அவ்விடங்களில் அனுசந்திக்கும் போது –
1-ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி -லைங்க புராணம்-
(உலகங்களுக்குப் பதியான நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வைகுண்டத்தில் இருக்கிறான்)
2-ஏஷ நாராயண -ஸ்ரீ மான் – -ஹரிவம்ஸம் (113–62 )
(இந்த ஸ்ரீமந் நாராயணன் எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதமாகவே இருக்கிறான்)
3-பவான் நாராயணோ தேவதா ஸ்ரீ மான் சக்ரதரோ விபு –யுத்த காண்டம் (6– 120–13 )
(நீயே மஹாலக்ஷ்மியின் நாயகனும் சக்ரதாரியும் எல்லா உலகங்களுக்கும் எஜமானனுமான நாராயணன் ஆவாய்)
4-ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –யுத்த காண்டம் (6– 114–15 )
(ஸ்ரீ வத்ஸம் என்கிற மறுவை தன்னுடைய திருமார்பில் தரித்தவரும், எப்போதும் பெரிய பிராட்டியாருடன் கூடியிருப்பவரும் )
5-விஷ்ணோ ஸ்ரீர அநபாயினி –விஷ்ணு புராணம் ( 1–18–17 )
(மஹாலக்ஷ்மி எம்பெருமானை விட்டுஎப்போதும் பிரியாதவள்)

6-சீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத் -ஸ்ரீமத் ராமாயணம் ( 3–15–6 )
(லக்ஷ்மணன், ஸீதையின் முன்பாக, ராமனிடம் இந்த வார்த்தையைச் சொன்னான்.)
7-சீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம் -ஸ்ரீமத் ராமாயணம் ( 2–31–2 )
(தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பேன் என்கிற ஸங்கல்பத்தை உடைய
ராமனிடமும், ஸீதையிடமும் ,லக்ஷ்மணன் சொன்னான்)
8-அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம் ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–87 )
(-ராக்ஷஸிகளின்கூட்டத்தை, ராமனிடமிருந்து காப்பாற்றும் சக்தி ,ஸீதையிடம் உள்ளது.)
9-பவேயம் சரணம் ஹி வ -ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–90-)
(ஹே ராக்ஷஸிகளே —உங்களுக்கு நான் சரணம் புகுகின்றவள் ஆவேன் –( சரணம் என்றுஅடைந்த ராக்ஷஸிகளைக் காப்பேன் ))
10-பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா- ஸ்ரீமத் ராமாயணம் (2–31–27 )
(ஹே ராமா, இந்த மலை அடிவாரத்தில் ஸீதையுடன் சுகமாக இருப்பீராக —நீர் விழித்து இருந்தாலும், தூங்கினாலும்
உங்களுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் ,நான் செய்வேன்)

11-தயா சஹாசீனம் அநந்த போகினி —
(தயா ஸஹாஸீநமநந்தபோகிநி ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி |
பணாமணி வ்ராதமயூகமண்டல ப்ரகாசமாநோதர திவ்ய தாமநி ||–ஸ்தோத்ர ரத்னம் (39 )–ஸ்ரீ ஆளவந்தார்
தயாஸஹ –பெரிய பிராட்டியுடன் — வீற்றிருக்கிறான் பகவான் எங்கு வீற்றிருக்கிறான்–சிறந்த ஜ்ஞானம் பலம்
என்பனவற்றுக்கு முக்கிய இடமாய்,தன்னுடைய படங்களிலிருக்கும் ரத்னக்கூட்டங்களின் ஒளிவட்டத்தாலே
உள்பிரதேசமெல்லாம், பிரகாசமாக இருப்பதான அப்ராக்ருதமான மணிமண்டபத்தை உடையவனுமான
திருவனந்தாழ்வான் என்கிற நாகணைமேல் வீற்றிருக்கிறான்
பெரிய பிராட்டி ,திவ்யமஹிஷி என்று ஸேவிப்போர் அறியும்வண்ணம் வீற்றிருக்கிறான்.)

12-காந்தஸ்தே புருஷோத்தம -(சதுச்லோகீ –ஸ்ரீ ஆளவந்தார் ( 1 )
(காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதி : ஸய்யாஸனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா , மாயா ஜகன்மோஹிநீ |
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜ :ஸதயித : த்வத்தாஸதாஸீகண :
ச்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம : கதம் த்வாம் வயம் ||

ஹே –பகவதீ —புருஷர்களில் உத்தமனாகிய புருஷோத்தமனாகிய பகவான் , உனக்குக் காந்தன்; ப்ரியன் .
கைங்கர்யபதியான ஆதிசேஷன் சயனமும் ,ஆஸனமும் ஆகிறான்.
வேதஸ்வரூபியானகருடனும் , உனக்கு வாஹனம் ;ஆஸனம் .
ஹே –ஜகன்மோஹினீ –உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு, விபரீத ஜ்ஞானத்தைக் கொடுக்கும் மூலப்ரக்ருதி என்கிற தத்வம்
உனக்கு சேஷம்—-அதாவது அடிமை. இது திரைபோல் இருக்கிறது. ஜீவர்கள் உன்னைத் தரிசிக்கவிட்டாமல் தடுக்கிறது.
ப்ரஹ்மா, ருத்ரன் முதலான தேவர்கள் ,அவர்கள் மனைவியரும் உனக்கு ”தாஸத்வம் ” செய்யும் ஸ்த்ரீகளுடன் சேர்ந்து ,
அடிமைக்கூட்டமாக இருக்கிறார்கள்.
இதில், நீ ”ச்ரீ ” என்று சொல்லப்படுகிறாய்.நாங்கள் யாராக இருந்தாலும்,உன் பெருமைகளைத் தெளிவாகச் சொல்ல இயலாது.
பெரியபிராட்டியார், தானே விரும்பி, எம்பெருமானுக்கு சேஷமானதையும், நித்ய விபூதி, லீலா விபூதி என்கிற மற்ற எல்லாவற்றிலும்
அவள், எம்பெருமானுடன் சேர்ந்து சேஷியாகிறாள்)

13-ஸ்வ பரிசரண போகை-ஸ்ரீ மதி பிரியமாணே -ஆத்ம ஸித்தி ( மங்கள ச்லோகம் ) ஸ்ரீ ஆளவந்தார்
(எம்பெருமானுடைய கைங்கர்யங்களைப் போகமாக எண்ணுகிற நித்யஸூரிகளால் சந்தோஷப்படுத்தப்பட்ட
பெரிய பிராட்டியுடன் கூடிய பகவானிடத்தில் பக்தி உண்டாக வேணும்)

14-ஸ்ரீ மதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம-வேதாந்த ஸாரம் –மங்கள ச்லோகம் (ஸ்ரீ உடையவர் )
(அசேஷ சிதசித் விஷ்ணு சேஷிநே சேஷஸாயிநே
நிர்மலாநந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம :
மஹாலக்ஷ்மியுடன் கூடியவனும் கெட்ட குணங்களே இல்லாமல் ஆனந்தக் கடல் போலிருப்பவனும் ஆகிய ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம் .
( இது 32 அக்ஷரங்களைக் கொண்டது என்றும் , 32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிக்கிறது என்றும்,
எல்ல வேதங்களும் இந்த 32 அக்ஷரங்களில்அடக்கம் என்றும் சொல்வர் ))

15-ஸ்ரீய காந்த அனந்தோ வரகுண கணை காஸ்பத வபு -வேதாந்த தீபம் –மங்கள ச்லோகம்–( ஸ்ரீ உடையவர் )
(மஹாலக்ஷ்மிக்குப் ப்ரியமானவனும் ,எங்கும் நிறைந்தவனும், எல்லையில்லாக் கல்யாண குணங்களுக்கு ஒரே இடமான
திருமேனியை உடையவனுமான எம்பெருமான்—)

16-ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸோ-ஸ்ரீபாஷ்யம் –மங்கள ச்லோகம்—ஸ்ரீ உடையவர்
(மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமான பரப்ரஹ்மத்தினிடத்தில்)

17-ஸ்ரீ யபதிர் நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநானந்த ஞானானந்த ஸ்வரூப -ஸ்ரீ கீதா பாஷ்யம் —ஸ்ரீ உடையவர் —
(ஸ்ரீ லக்ஷ்மிபதியான எம்பெருமான், எல்லாக் கெட்ட குணங்களுக்கும்விரோதியாய், எல்ல நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய்,
தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன்.)

18-நீயும் திருமகளும் நின்றாயால் -( 86 ) பொய்கை ஆழ்வார்
(நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்து
பாயும் பனி மறைத்த பண்பாளா —வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி .
குன்றெடுத்து மழையைத் தடுத்து, ஆயர்களையும் கோக்களையும் காத்தவனே—நீ திருமகளுடன் இடைகழியில் நின்றாய்– —
என்னிடம் உள்ள அன்பால் அங்கேயே நின்றாய்— இடைகழியை விட்டு வெளியேயும் வரவில்லை; உள்ளேயும் புகவில்லை.
எங்களுடன் கலந்த மகிழ்ச்சியால் இடைகழியிலேயே நின்றாய்.)

19-ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய்மொழி ( 4–9–10 )
(கண்டு கேட்டுற்று மோந்து உண்டுழலு மைங்கருவி
கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தே னுன் திருவடியே
அழகிய முன்கைவளைகளை உடைய பெரியபிராட்டியும் , நாராயணனான நீயும் ,
நிலாநிற்ப—கைங்கர்யம் பெறுவதற்குச் சேஷியாய் நிலைத்திருக்க)

20-கோலத் திரு மா மகளோடு உன்னை –திருவாய்மொழி ( 6–9–3 )
(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ)

21-நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -திருவாய்மொழி ( 9–2–1 )
(பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தென்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே
தேவரீருடைய கருணையையும் தாமரையில் வஸிக்கும் பிராட்டியின் கருணையையும் கொண்டு,
தேவரீருடைய கோயிலைச் சுத்தப்படுத்தி- கைங்கர்யங்கள் செய்து )

22-உன் தாமரை மங்கையும் நீயும் -திருவாய்மொழி ( 9–2–3 )
(கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி ? உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கருளி
தடங்கொள் தாமரை கண்விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே
உனக்குத் தகுந்த திவ்ய மஹிஷியாய் தாமரைப் பூவிலிருக்கும்பிராட்டியும் , நீயும் (மூன்று உலகங்களும் கைங்கர்யம் செய்யுமாறு
இருந்து அருள வேண்டும்)

23-அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -திருவாய்மொழி ( 6–10–10 )
(அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஒரு க்ஷண நேரம்கூட உன்னைவிட்டுப் பிரியச் சக்தியில்லையென்று தாமரையில் இருக்கும் பிராட்டி
வஸிக்கின்ற திருமார்பை உடையவனே)

24-உணர் முழு நலம் -திருவாய்மொழி (1–1–2 )
(மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே
எம்பெருமான், முழுவதும் ஞான ஸ்வரூபன் மற்றும் ஆனந்த ஸ்வரூபன்)

25-நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –பெரிய திருமொழி ( 3–8–1 )-
(நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாயென நின்று
இமையோர் பரவும் இடம் , எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே
களிவண்டுமிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே
நாசமல்லாததாயும் , ஸ்வயம்ப்ரகாசமாயும் , தேசம், காலம், வஸ்து இவைகளின் அளவுகளில் இல்லாததாயும்
ஸ்வரூபத்தை உடையவனே)

என்றும் பிரமாணங்கள் சொல்லுகிறபடியே

சர்வ பிரகாரத்தாலும்
சர்வ அவஸ்தைகளிலும்
சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான
அநந்த ஞானானந்த ஸ்வரூபமாக அனுசந்திக்க வேணும் –

(இத்தால் அவன் ஸ்வரூபம் போலே பிராட்டி ஸ்வரூபமும் ஞானாநந்தம் என்றதாயிற்று -)

இப்படி
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம்-ஸ்ரீ விஷ்ணு புராண-( 1–22– 53 ) -என்றும் –
(விஷ்ணு என்கிற திருநாமம் கொண்ட எம்பெருமானின் ஸ்வரூபம் தோஷங்களே இல்லாதது.)
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேச -ஸ்ரீ விஷ்ணு புராண ( 6–5–85 )-என்கிறபடியே
(பகவான் , உயர்ந்தவைகளை விட மிகவும் உயர்ந்தவன்;அவனிடம்,க்லேசங்கள் முதலான தோஷங்களும் கிடையாது.)
ஹேய ப்ரத்ய நீகமாக அனுசந்தேயம் –

—-

ஈச்வரன்,அநந்த கல்யாண குணங்களை உடையவன்-

1-தைர்யுக்த ஸ்ரூயதாம் நர –ஸ்ரீமத் ராமாயணம் ( 1–1–7 )
(இப்படிப்பட்ட குணங்கள் அனைத்தையும் கொண்டவரைச் சொல்கிறேன்—கேட்பீராக)
2-தமேவம் குண சம்பன்னம் –ஸ்ரீமத் ராமாயணம் ( 2–2–48 )
(இப்படி குணங்கள் நிறைந்த அந்த ராமனை–)
3-ஜ்யேஷ்டம் ஸ்ரேஷ்ட குணைர்யுக்தம் -ஸ்ரீமத் ராமாயணம் (1–1–20 )
(மூத்தவனும், இப்படி மிக உயர்ந்த குணங்களை உடைய ராமனை)
4-ஏவம் ஸ்ரேஷ்ட குணைர்யுக்த–ஸ்ரீமத் ராமாயணம்– 2–1–31
(இப்படி , மிகவும் உன்னதமான
குணங்கள் கொண்ட ராமனை)
5-குணைர் விருருசே ராம —
(கல்யாண குணங்கள் மூலமாக ராமன் விளங்கினான்)
6-தமேவம் குண சம்பன்னம் அப்ரத த்ருஷ்டி பராக்கிரம –
(இப்படி, எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், யாராலும் வெல்லப்படாதவனுமான உள்ள ராமன்)
7-பஹவோ ந்ருப கல்யாண குணா –புத்ரஸ்ய சந்தி தே —
(தசரதா , உன் புத்திரனான ராமனுக்குப் பல உயர்ந்த குணங்கள் உள்ளன.)
8-ஆன்ரு சம்சய மனுக்ரோச -ஸ்ருதம் சீலம் தமச்சம-ராகவம் ஸோபயந்த்யேதே ஷட் குணா -புருஷோத்தமம்
(தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பாற்றும் தன்மை (குணம் ) அளப்பரிய கருணை,
வேதங்களின் –சாஸ்த்ரங்களின் பொருளை உணர்ந்திருக்கும் தன்மை, தாழ்ந்தவர்களிடமும் சமமாகப் பழகும் தன்மை,
மனத்தை அடக்கும் திறன், இந்த்ரிய நிக்ரஹம்– அதாவது,புலனடக்கம் –ஆகிய ஆறு குணங்களும்
புருஷ ச்ரேஷ்டனான ராமனை அலங்கரிக்கின்றன)
9-விதித – ச ஹி தர்மஜ்ஞ-சரணாகத வத்சல
(எல்லாத் தர்மங்களையும் அறிந்த ராமன், தன்னிடம் சரணம்அடைந்தவர்களிடம் மிகுந்த அன்பு உடையவன்
என்று எல்லோராலும் அறியப்பட்டவன் அல்லவா)
10-சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹூர்திவ்யா மஹர்ஷய–
(ராமா —-நீயே சரணாகத ரக்ஷகன் என்றும், சரணம் என்று அடைபவர்களுக்கு ஏற்றவன் என்றும்,
சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பவன் என்றும், ஸநகாதி மஹரிஷிகள் கூறுகின்றனர்_)
11-நிவாஸ வ்ருஷ–சாதூனாம் ஆபன்னாம் பரா கதி —
(ஸாதுக்களுக்கு , நிழல் கொடுக்கும் கற்பக மரம் ; ஆபத்தில் உள்ளவர்கள் அடையவேண்டிய உயர்ந்த கதி)
12-தேஜோ பலை ஐஸ்வர்ய மஹாவபோதஸ் வீர்ய சக்த்யாதி குணைகராசி-விஷ்ணு புராணம்
(மிக உயர்ந்த தேஜஸ், பலம், ஐச்வர்யம் , ஜ்ஞானம், வீர்யம், சக்தி,இவை முதலான குணங்கள் யாவும்
ஒன்று சேர்ந்து இருக்கும் இடம்—ஷாட்குண்ய பரிபூர்ணன்)

13-சர்வ பூதாத்மா பூதச்ய விஷ்ணோ –கோ வேதிதும் குணான் -ப்ரஹ்ம புராணம்
(எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற விஷ்ணுவின் குணங்களை( ருத்ரனையும் ,பார்வதியையும் காட்டில் ), எவன் அறியவல்லவன் !)

14-யதா ரத்னா நி ஜலதே புத்தராக ததா குணாச்ச தேவஸ்ய த்வசங்க்யேயோ ஹி சக்ரிணா-வாமன புராணம்–
(ஸமுத்ரத்தில் உள்ள ரத்னக் கற்களைக் கணக்கிட இயலாது;அதைப்போல , சக்ரத்தை ஏந்திய எம்பெருமானின் குணங்களைக் கணக்கிட இயலாது.)

15-வர்ணாயு தைர்யச்ய குணா ந சக்யா வக்தும் சமேதைரபி சர்வ தேவை –மஹாபாரதம் —
( எல்லாத் தேவர்களும் ஒன்றுகூடி, இருந்து பலப் பதினாயிரம் வருடங்கள் சொன்னாலும்,அவனது குணங்களை முழுமையாகக் கூறிவிட முடியாது)

16-சதுர்முக யுர்யதி கோடி வக்த்ரோ பவேன் நர -க்வாபி விசுத்த சேதா-ச தே குணா நாமயுதைதை கமம்சம் வதேன்ன வா தேவவர ப்ரசீத -வராஹ புராணம் —
(ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸும் – பல ஆயிரக்கணக்கான வாய்களும், மிகவும் சுத்தமான மனமும் உள்ள ஒருவன் எங்கேயாவது இருந்து, அவன்,
உன்னுடைய குணங்களின் பதினாறாயிரத்தின் ஒரு பாகத்தையாவது கூற முடியுமோ ? முடியாதோ ?( முடியாது என்பது தேற்றம் ))

17-தவானந்த குணஸ் யாபி ஷடேவ பரதமே குணா -யைஸ்த்வயேவ ஜகத் குஷௌ அன்யே அப்யந்தர் நிவேசிதா
(நீ ,கணக்கற்ற குணங்களை உடையவன்;ஆனாலும், ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற
ஆறு குணங்கள் முக்யமானவை .இவ்வுலகை , நீ, வயிற்றில் வைத்திருப்பதைப்போல , இந்த ஆறு குணங்களும் மற்ற
குணங்களைத் தங்களுக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றன.)

18-இஷூஷயான் நிவர்த்தந்தே நாந்தரிஷ ஷிதி ஷயாத் மதி ஷயான் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷ்யாத்-
(ஆகாசம் முழுவதும் பாணங்களால் நிரப்பவேண்டும் என்று அம்புகளைப் போடும் சிலர், தங்களிடம் பாணங்கள்
தீர்ந்து விடுவதால், ஓய்ந்து போகிறார்களேயன்றி ஆகாசம் , நிரம்புவதால் அல்ல. இதைப்போல,முழுவதும்
சொல்ல புத்தியின் ஆற்றல் இல்லாதவர்கள் கோவிந்தனுடைய குணங்களை சொல்லி ஓய்ந்து போகிறார்களேயன்றி ,
குணங்கள் யாவையும் சொல்லி முடிந்துவிட்டதால் அல்ல)

19-வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் –
(மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் வல்வினையேனையீர்கின்ற
குணங்களையுடையாய் ! அசுரர் வன்கையர் கூற்றமே 1கொடியபுள்ளுயர்த்தாய் !
பணங்களாயிரமு (மு )டைய பைந்நாகப் பள்ளியாய் !பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே)

20-உயர்வற உயர் நலம் உடையவன் என்கிறபடியே —
(உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே)

ப்ராப்யத்வ ப்ராபகத்வ உபய உக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அனுசந்தேயம் —
(ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் —எல்லாவற்றிற்கும் சேஷியாக இருப்பது , எல்லை இல்லாத ஆனந்த ஸ்வரூபனாக இருப்பது
ப்ராபகத்வோபயுக்த குணங்கள்—- தயை, வாத்ஸல்யம் , ஒளதார்யம்,–முதலிய குணங்களோடு இருப்பது
உபயோபயயுக்த குணங்கள் —ஷாட்குண்யம் — ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்
இப்படியாக, எம்பெருமான் ,அளவில்லாக் கல்யாண குணங்களை உடையவனாக இருக்கிறான்.)

திவ்ய மங்கள விக்ரஹம் –
1-சதைகரூப ரூபாய—விஷ்ணு புராணம் —
(எப்போதும் ஒரேவிதமான மாறுதல் இல்லாத திருமேனியை உடையவன்)
2-நித்ய சித்தே ததாகாரே தத் பரத்வே ச பௌஷ்கர யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யா சௌ சந்நிதம் பிரஜேத்–பௌஷ்கர ஸம்ஹிதை
(ஹே , பௌஷ்கரனே —எப்போதும் இருப்பதுமான திருமேனியை உடையவன் ;அவன் எல்லோருக்கும் மேம்பட்டவன் என்றும் ,
எவனுடைய மனத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறதோ,அவன் அருகில் எம்பெருமான் எப்போதும் உள்ளான் .)
3-சமஸ்தாச் சக்த்யச் சைதா ந ரூப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அன்யத்தரேர் மஹத்-விஷ்ணு புராணம்-
(எல்லா சரீரங்களைக் காட்டிலும், வேறான திருமேனியை உடையவன்,எம்பெருமான்.அந்தத் திருமேனியில், எல்லா சக்திகளும் நிலையாக உள்ளன.)
4-இச்சா க்ருஹீதா அபிமதோரு தேக-
(பக்தர்களுக்கு இஷ்டமான , அனைவர்க்கும் இன்பம் தருகிற திருமேனியைத் தன் ஸங்கல்பத்தாலே பகவான் எடுத்துக்கொள்கிறான் .)
5-ந பூத சங்க சமஸ்தாநோ தேக அஸ்ய தேஹோ அஸ்ய பரமாத்மன –மஹா பாரதம்—சாந்தி பர்வம்—
(இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டானதல்ல)
6-ந தஸ்ய பிரக்ருதா மூர்த்தி –மாம்சமேதோ அஸ்தி சம்பவா -வராஹ புராணம்—
(எம்பெருமானின் திருமேனி, மாம்ஸம், மேதஸ் (மஜ்ஜை ) எலும்பு ஆகியவற்றால் ஆனதல்ல)
7-பூஜைச் சதுர்பி -சமுபேத மேதத்ரூபம் விசிஷ்டம் திவி சம்ஸ்திதம்ச –மஹாபாரதம்—
(பகவானது திருமேனி, நான்கு திருக்கரங்களுடன் உள்ளது;சிறப்பானது; பரமபதத்தில் நிலையாக உள்ளது.)
8-ருக்மாபம் ஸ்வ பன் தீ கம்யம் –மநு ஸ்ம்ருதி—
(தங்கம் போன்று ப்ரகாசிப்பவன்;அவனைக் கனவில் காண்பதைப் போல மனத்தால் மட்டுமே நினைக்க முடியும்)
9-தத்ரைகச்தம் -ஜகத் க்ருத்ச்னம் –ஸ்ரீமத் பகவத் கீதை—
(தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம் ப்ரவிபக்த மநேகதா |
அபஸ்யத் தேவ தேவஸ்ய சரீரே பாண்டவஸ்துதா ||
உலகங்கள் பலவிதமாகப் பிரிந்து இருக்கின்றன.ஆனால், அவையாவும் தேவதேவனான பகவானின்–
ஸ்ரீ க்ருஷ்ணனின் திருமேனியில் ,ஒரு சிறிய பகுதியாக இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.)
10-பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேக-ஸ்ரீமத் பகவத் கீதை—
(பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விசேஷ ஸங்காத் |
ப்ரஹ்மாண மீஸம் கமலாசநஸ்தம்ம்ருஷீம்ஸ்ச ஸர்வானுரகாம்ஸ்ச திவ்யாந் ||
ஆச்சர்யப்பட்டு, மெய்சிலிர்க்க அர்ஜுனன் வணங்கிக் கூறுகிறான்.—–ஹே தேவாதி தேவனே, க்ருஷ்ணா —உன்னுடைய திருமேனியில்
அனைத்துத் தேவதைகளையும் நான் காண்கிறேன்.பிராணிகளின் கூட்டங்களைப்பார்க்கிறேன்.கமலாஸனத்தில் வீற்றிருக்கும்
ப்ரஹ்மாவைப் பார்க்கிறேன்.ஸகல ரிஷிகளையும் பார்க்கிறேன்.தெய்வத் தன்மை உள்ள ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன்.)
11-அஸ்த்ர பூஷண சமஸ்தான ஸ்வரூபம் -விஷ்ணு புராணம்
(ஆயுதங்களும் ஆபரணங்களும் உன் திருமேனியை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றன.)
12-பூஷண அஸ்த்ர ஸ்வரூபச்தம் யதேதம் அகிலம் ஜகத் -விஷ்ணு புராணம்
(உலகங்கள் யாவும் அவனது திருமேனியில் ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் உள்ளன.)
13-தமஸா பரமோ தாதா சங்கம் சக்ர கதா தரா -ஸ்ரீமத் ராமாயணம்—
(ப்ரக்ருதிக்கும் மேலிடத்தில் இருப்பவனாய், சங்க,சக்ர ,கதாதாரியாய் போஷகனாக இருக்கிறான், ஸ்ரீ ராமன்.)
என்கிறபடியே
சர்வ ஜகத் ஆஸ்ரயமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டமாக அனுசந்தேயம் –

இவ் விக்ரஹம்
பர வியூஹ விபவ ஹர்த்த அர்ச்ச்சாவதார ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும்படியும் –
இவற்றில் உள்ள விசேஷங்களும் பகவச் சாஸ்திர சம்ப்ரதாயத்தாலே அறியப்படும் –

(பரவாஸுதேவனின் குணங்கள் சாந்தமாக இருக்கும். வ்யூஹ வாஸுதேவனின் குணங்கள் ப்ரகாஸிக்கும்
வ்யூஹ வாஸுதேவன் —பத்நி லக்ஷ்மி
ஸங்கர்ஷணன் –பத்நி –கீர்த்தி ( ஜீவன் ) —ஜகத் ஸம்ஹார கர்த்தா.சாஸ்த்ர
ப்ரவர்த்தகன் . ஜ்ஞானம் , பலம் –இரண்டு குணங்களை உடையவன்
ப்ரத்யும்னன் —பத்நி –ஜயா ( புத்தி ) —ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தா –தர்ம ப்ரவர்த்தகன் –ஐச்வர்யம் ,
வீர்யம்–இரண்டு குணங்களை உடையவன்
அநிருத்தன் –பத்நி –மாயா –(அஹங்காரம் )—ஸ்திதி கர்த்தா–தர்ம பலப்ரதன்–
சக்தி,தேஜஸ் –இரண்டு குணங்களை உடையவன்)

—–

எல்லையற்ற விபூதிகளை உடையவன்
1-விஷ்ணோ ரேதா விபூதய –விஷ்ணு புராணம்-
(இவை எல்லாமும் –அதாவது, மநு முதலானோர்,காலம் , எல்லா ஜந்துக்கள்
இவையாவும், உலகின் ஸ்திதிக்குக் காரணமான மஹாவிஷ்ணுவின் விபூதிகள் –ஐச்வர்யங்கள்)
2-மஹா விபூதி சமஸ்தான –விஷ்ணு புராணம்-
(மஹா விபூதி எனப்படுகிற நித்ய விபூதியைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவனே)
3-நாந்த அஸ்தி மம திவ்யானாம் விபூதினாம் பரந்தப –ஸ்ரீமத் பகவத் கீதை–
(நாந்த : அஸ்தி மமதிவ்யானாம் விபூதினாம் பரந்தப |
ஏஷ தூத்தேஸத : ப்ராக்தோவிபூதேர் விஸ்தரோமயா ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறான்—– ஹே—அர்ஜுனா—பகைவரை வாட்டுபவனே ! என்னுடைய திவ்ய விபூதிகளுக்கு
முடிவே கிடையாது. இதுவரை நான் சொன்னவை என்னுடைய விபூதியின் ஓரளவுதான்–சிலவற்றையே சொன்னேன்.)
இத்யாதிகள் உடைய சங்க்ரஹமான
யதண்ட மண்டாந்தர கோசரம் ச யத் -என்கிற ஸ்லோகத்தின் படியே அநந்த விபூதி விசிஷ்டமாக அனுசந்தேயம் —

(யதண்டம் அண்டாந்தர கோசரஞ்ச யத்
தசோத்தராண்யா வரணாநி யாநி ச |
குணா : ப்ரதானம் புருஷ : பரம்பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய : ||

தே –விபூதய :–உனது ஐச்வர்யங்கள் எவை என்றால்
யத் அண்டம்—எந்த எந்த அண்டங்களோ ,
அண்டாந்தர கோசரஞ்ச–அவற்றின் உட்புறங்கள் எவையோ,
யத் தசோத்தராண்யா வரணாநி யாநி ச -அந்த அண்டங்களுக்கு மேன்மேல் ,பத்து மடங்கு அதிக விஸ்தீரணங்கள் உள்ள ,
மேலும் மேலும் சூழ்ந்து இருக்கிற பஞ்ச பூதங்கள்–நீர், நெருப்பு, இவை எவையோ,
குணா : —- ஸத்வ ,ரஜோ ,தாமஸ குணங்களும்
ப்ரதானம் —-அவற்றுக்கு ஆதாரமான மூல ப்ரக்ருதியும்
புருஷ :=பக்த ஜீவர்களும்
பரம்பதம் = ஸுத்த ஸத்வ த்ரவ்யமான ஸ்ரீ வைகுண்டமும்,
பராத்பரம் =இவற்றில் பரம் ஆனதற்கும் மேலாக பூர்ண சைதன்ய விகாஸம் உடைய முக்தர்களும், நித்யர்களும், இப்படி எல்லாமும்
தே விபூதய : =உனது ஐச்வர்யங்கள்–என்று , ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் ( 17 )

இவ் விபூதிகளில் சேதனங்களாயும் அசேதனங்களாயும் உள்ள இரண்டு வகையும்
லீலார்த்தங்களாயும்-போகார்த்தங்களாயும்-விபக்தங்களாய் இருக்கும் அனுசந்தேயம் பொதுவாய் இருக்க
ரச வைஷம்யத்தாலே லீலா போக விபாகம் யதா லோகம் கண்டு கொள்வது –

அப்படியே
1-ஜன்மாத் யஸ்ய யத–
(கண்ணால் பார்க்கப்படும்-இவ்வுலகின் பிறப்பு முதலானவைகளை, யாரிடமிருந்து உண்டாகிறதோ ,அவனே ”ப்ரஹ்மம் ”)
2-க்ரீடா ஹரேரிதம் சர்வம் –மஹாபாரதம்—சாந்தி பர்வம்–
( இவை யாவும் பகவானுக்கு விளையாட்டு)
3-க்ரீடதோ பாலகச்யேவ பால –விஷ்ணு புராணம்
(விளையாடும் குழந்தையின் சேஷ்டைகள் போலிருக்கிற ,எம்பெருமானின் லீலைகளைப் பார்.)
4-கிரீட நகைரிவ–மஹா பாரதம்–ஸபா பர்வம்
(குழந்தை, விளையாட்டுக் கருவிகளான பொம்மைகளை வைத்து விளையாடுவதைப் போல, பகவான், நம்மை வைத்து விளையாடுகிறான்)
5-ஹரே விகரசி க்ரீடா கந்து கைரிவ ஜந்துபி -விஷ்ணு தர்மம்
(பந்துகளை வைத்து விளையாடுவதைப் போல,ஸ்ரீ ஹரியே—உனது விளையாட்டு இருக்கிறது.)
6-லோகவத்து லீலா கைவல்யம் -ப்ரஹ்ம ஸூத்ரம் –
(இவை எல்லாமே அவனது விளையாட்டுக்காகவே)

என்கிறபடியே
லீலாரூப ஜகத் வியாபார லஷணமாக அனுசந்தேயம் –

—————————————————————-

இப்படி லஷ்மீ சஹாயமாய்-அபரிமித ஞானானந்தமாய் -ஹேய ப்ரத்ய நீகமாய் –
ஞான சக்த்யாதி அநந்த மங்கள குண விசிஷ்டமாய்
திவ்ய மங்கள விக்ரஹ உபேதமாய்-சரீர பூத விபூதி த்வய யுக்தமாய்- ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபார லீலமாய்க் கொண்டு
பிராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் பிரத்யகாத்மாவினுடைய –
பக்த முக்த நித்ய சாதாரண ரூபமும்
உபாய அதிகாரியான தனக்கு இப்போது அசாதாரணமான ரூபமும் அறிய வேணும் –

இவர்களில் பக்தரானவர் –
அநாதி கர்ம பிரவாஹத்தாலே அனுவ்ருத்த சம்சாரராய் –
ப்ரஹ்மாதி ஸ்தம்ப பரிந்த விபாக பாகிகளான ஷேத்ரஜ்ஞர்
முக்தராவார் —
சாஸ்திர சோதிதங்களான உபாய விசேஷங்களால் உண்டான பகவத் பிரசாதத்தாலே
அத்யந்த நிவ்ருத்த சம்சாரராய் சங்கோச ரஹித பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்தராய் இருக்குமவர்கள் —
நித்யராவார் –
ஈஸ்வரனைப் போலே அனாதியாக ஞான சங்கோசம் இல்லாமையாலே –
சவயச இவ யே நித்ய நிர்த்தோஷ கந்தா -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சாரராய்க் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணுகிற அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் –
(ஸ்ரீ பராசர பட்டர் குணரத்ன கோசத்தில் சொல்கிறார் (27 )
தே ஸாத்யா : ஸந்திதேவா : ஜனனி ! குண–வபுர் –வேஷ–வ்ருத்த –ஸ்வரூபை :
போகைர்வா நிர்விசேஷா : ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : |
ஹே—ஸ்ரீ : ! ஸ்ரீரங்கபர்த்து : தவச பத பரீசார வ்ருத்த்யை ஸதா பி
ப்ரேம ப்ரத்ராண பாவவில ஹ்ருதய ஹடாத்கார கைங்கர்யபோகா : ||

ஹே–ஜனனீ —தாயே— ஹே–ஸ்ரீ —பெரிய பிராட்டியே–எவர்கள்நல்லகுணங்கள் ,வயசுக்கு ஏற்ற நடத்தைகளுடன் , ஆத்ம ஸ்வரூபத்தாலும்
பகவத் அநுபவங்களாலும் ,வேறுபாடு இல்லாமல், ஒரே வயதுள்ளவர்களாய் எப்போதும் எந்தக் குற்றமும் அற்றவர்களாய்,பகவானிடம் ப்ரீதியுடன்
நல்ல மனஸ்ஸுடன் கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்களோ அந்த ஸாத்ய தேவர்கள் எனப்படும் நித்ய ஸூரிகள் ,
உனக்கும், பகவானுக்கும் திருவடிகளில் கைங்கர்யம் செய்துகொண்டு எப்போதும் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள், ஆதிசேஷன், கருடன், விஷ்வக்ஸேனர் முதலானவர்கள்.)

இவர்கள் எல்லார்க்கும் சாதாரணமான ரூபம் –
அணுத்வ ஞானானந்த அமலத்வாதிகளும் -பகவத் சேஷத்வ பாரதந்த்ர்யாதிகளும் –
முமுஷுவான தனக்கு அசாதாரணமாக அறிய வேண்டும் ஆகாரங்கள் உபோதாத்திலே சொன்னோம் –
( அதிகாரம் 2 )மேலும் கண்டு கொள்வது —

இப் ப்ராப்தாவினுடைய ஸ்வரூபம்
பிரணவ நமஸ் ஸூக்களில் மகாரங்களிலும் -நார சப்தங்களிலும் –
ப்ரபத்யே என்கிற உத்தமனிலும்
வ்ரஜ என்கிற மத்யமனிலும்
த்வா என்கிற பதத்திலும்
மாஸூச என்கிற வாக்யத்திலும் அனுசந்தேயம்

—————————————————

உபாய ஸ்வரூபம் -பல ஸ்வரூபம்

பிரத்யுபாயமும் இதின் பரிகரங்களும் பல ஸ்வரூபம் இருக்கும் படியும்
மேலே பிராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம்
இவற்றில் உபாயம்
திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும் -அயன சப்தத்திலும்
த்வயத்தில் பூர்வ கண்டத்திலும்
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் -அனுசந்தேயம்

பல ஸ்வரூபம்
சதுர்த்யந்த பதங்களிலும்
த்வயத்தில் நமஸ்ஸிலும்
சரம ஸ்லோகத்தில் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற இடத்திலும் அனுசந்தேயம் —

——————————————————————

விரோதி ஸ்வரூபம் –
ப்ராப்தி விரோதியாவது –
அவித்யா
கர்ம
வாசனாதி ரூபமான மோஷ பிரதிபந்தக வர்க்கம் –
இதில் பிரதானம் அநாதியாக சந்தன்யமானமான ஆஜ்ஞாதி லங்கணம் அடியாக பிறந்த பகவன் நிக்ரஹம் —

(1. அவித்யை—சரீரத்தை ஆத்மாவாக நினைத்தல்மற்றும் ஆத்மாவை ஸ்வதந்த்ரன் என்று நினைத்து
இறுமாந்து, அஹங்காரம் ,மமகாரம் கொள்ளுதல்
2.கர்மா அல்லது கர்மம் —ஜீவன் செய்யும் புண்ய ,பாபச் செயல்கள்
3.வாசனை —முன்னாலே சொன்ன அவித்யை,கர்மா இவைகளாலே உண்டாகும் ஸம்ஸ்காரம் அதாவது தன்மை
4. ருசி—மேற்சொன்ன வாசனைக்கு ஏற்ப உண்டாகிற விருப்பம் /ஆசை
5. ப்ரக்ருதி ஸம்பந்தம் —சரீர சம்பந்தத்தாலே ,ஜீவன் மேற்சொன்ன ருசிக்கு ஏற்ப ,உலக விஷயங்களில் ஈடுபடல்
இந்த ஐந்தும் , சேதனனுக்கு சக்கரச்சூழற்சியைப் போலத் தொடர்ந்து வருகின்றன.)
இதில் முக்கியமான தடை, பகவானின் கட்டளைகளை, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து மீறியபடி இருப்பது. அதனால்,
பகவானின் தண்டனைக்கு ஆளாதல்.
ப்ரதிபந்தக வர்க்கம் –அடிக்கடி செய்யப்பட்ட பாபமானது, அறிவை அழிக்கிறது. அறிவை இழந்த ஜீவன்,
மறுபடியும் பாபத்தையே செய்கிறான்.)

இது ஷேத்ரஜ்ஞர்க்கு
ஞான சங்கோச கரமான த்ரிகுணாத்மக பிரகிருதி சம்சர்க்க விசேஷத்தை உண்டாக்கியும்
இப் பிரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீர இந்த்ரியாதிகளோடு துவக்கி
திண்ணம் அழுந்தக் கட்டி
(கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வல் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே -(திருவாய்மொழியில் (5–1–5 ) )
பல செய்வினை வன் கயிற்றால் புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் என்றும்
சொல்லுகிறபடியே தேக இந்த்ரியாதி பரதந்த்ரன் ஆக்கியும்
அவ் வஸ்தையிலும் சாஸ்த்ர வஸ்யத்தை கூடாத திர்யக்காதி தசைகளிலே நிறுத்தியும்
சாஸ்திர யோக்யங்களான-மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும்

அவற்றில் இழியாதவர்களையும் உள்பட
பகவஸ் ஸ்வரூப திரோதானகரீம் விபரீத ஞான ஜனனீம் ஸ்வ விஷயா யாச்ச கோயபுத்தேர் ஜனனீம் என்கிறபடி
இம் மூலப் பிரகிருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வ ஞான விபரீத ஞான விஷய ப்ராவண்யங்களை பண்ணியும்

இவை யடியாக ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிறபடியே
ஸூக லவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதி லங்கனத்தைப் பண்ணுவித்தும் –
பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புன புன நஷ்ட பிரஜ்ஞ பாபமேவ புனராரபதே நர –என்கிறபடியே
மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக ஷிபாம் ஜயஸ்ரம்-இத்யாதிகளில் படியே
கர்ப்ப ஜன்ம ஜரா மரண நரகாதி சக்ர பிரவ்ருதியிலே பரிப்ரமிப்பித்தும்

ஷூத்ர ஸூகாதிகளுக்கு சாதனமான ராஜச தாமச சாஸ்த்ரங்களை கொண்டு
யஷ ரஷாம்ஸி ராஷசா ப்றேதான் பூத கணாம்ச்சான்யே யஜந்தே தாமஸா ஜனா -என்கிறபடியே
தன்னோடு ஒக்க ஒழுகு சங்கிலி யிலே கட்டுண்டு உழலுகிற ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப் பண்ணியும்
அவர்கள் கொடுத்த ஜூகுப்சாவஹ ஷூத்ர புருஷார்த்தங்களிலே கிருமிகளைப் போலே க்ருதார்த்தராக மயக்கியும்
யோக பிரவ்ருத்தரானவர்களையும் ஷூத்ர தேவதா யோகங்களில் யாதல் – நாமாத்ய சேதனா உபாசனங்களிலே ஆதல்
மூளப் பண்ணி சில் வாகனங்களான பலன்களாலே யோகத்தை தலை சாய்ப்பித்தும்

ஆத்ம பிரவணரையும் பிரகிருதி சம்ஸ்ருஷ்டம் பிரகிருதி வியுக்தம் என்கிற இவ்விரண்டு படியிலும்
ப்ரஹ்மாத் யஷ்டயாலே யாதல் -ஸ்வரூப மாத்ரத்தாலே யாதல் உபாசிக்க மூட்டி
அவை நாலு வகைக்கும் பலமாக அல்பாஸ் வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும்

ப்ரஹ்மாத்மாக ஸ்வ ஆத்ம சிந்தனை பிரவ்ருத்தர் ஆனவர்களையும்
ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்ம சிந்தனை பரரையும் அந்தராயமான
ஆத்ம அனுபவத்தாலே யாதல் -அஷ்டௌஸ்வர்ய சித்திகளாலே யாதல்-
வச்வாதி பதப்ராப்தி ப்ரஹ்ம காய நிஷேவணாதிகளாலே யாதல்
அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜ குமாரனுக்கு சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டம்
உண்டாமாப் போலே பிராரப்த கர்ம பலமான தேக இந்த்ரியங்களிலும் தத் அனுபந்திகளான பரிக்ரஹங்களிலும்
தன் மூல பலங்களிலும் கால் தாழப் பண்ணி யாதல் அந்ய பரராக்கியும்
இப்படி பல முகங்களிலே பகவத் பிராப்திக்கு விலக்காய் இருக்கும் –

முப்பத்து இரண்டு அடியான துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாம் அடியிலே அந்தராயம் உண்டானாலும்
இவன் சம்சாரத்தைக் கடந்தான் ஆகான் –
கர்ம யோகாதிகளில் பிரவர்த்தன் ஆனவனுக்கு -நேஹாபிக்ரம நாசோ அஸ்தி -இத்யாதிகளில் படியே
இட்ட படை கற்படையாய் என்றேனும் ஒரு நாள் பல சித்தி உண்டாம் என்கிற இதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர
ஜன்மாந்த்ராதிகளிலே எதிலே என்று தெரியாது

அனுகூல்யம் மிகவும் உண்டாய் இருக்க வசிஷ்டாதிகளுக்கு விலம்பம் காணா நின்றோம் –
பிரதிகூல்யம் மிகவும் உண்டாய் இருக்க வ்ருத்ர ஷத்ர பந்து ப்ரப்ருதிகளுக்கு கடுக மோஷம் உண்டாகக் காணா நின்றோம் –
ஆகையால் விலம்ப ரஹித மோஷ ஹேதுக்களான ஸூக்ருத விசேஷங்கள் ஆர் பக்கலிலே கிடக்கும் என்று தெரியாது –
விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்கு காரணங்களான துஷ் கர்ம விசேஷங்களும் ஆர் பக்கலிலே கிடக்கும் என்றும் தெரியாது –

இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதி லங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷம் ஆகிற
பிரதான விரோதிக்குச் செய்யும் பரிஹாரத்தை
தஸ்ய ச வசீகரணம் தச் சரணா கதிரேவ-என்று கட வல்லியிலே வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் –

இவ் விரோதி வர்க்கத்தை எல்லாம் ரகஸ்ய த்ரயத்திலே விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும்
நமஸ்ஸூக்களில் மகாரங்களில் சஷ்டிகளாலும்
சர்வ பாப சப்தத்தாலும்
அனுசந்தித்து சம்சாரத்திலே அடிச் சூட்டாலே பேற்றுக்கு உறுப்பான வழிகளிலே த்வரிக்க பிராப்தம் —

பொருள் ஓன்று என நின்ற பூ மகள் நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை என் மனம் தேற இயம்பினரே —

ப்ராப்யம் ப்ரஹ்ம சமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித
ப்ராப்தி தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ச்வத ஸூ ரிவத்
ஹந்த ஏநாம் அதிவ்ருத்தவான் அஹம் அஹமத்யா விபத்யாஸ்ரய
சேது சம்ப்ரதி சேஷி தம்பதி பரந்யாசஸ்து மே சிஷ்யதே —

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்