Archive for May, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ அர்ச்சிராதி —

May 14, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————————————————————————————————

போர் மண்டலம் சங்கு தண்டு வில் வாள் புகராழி  வெய்யோன்
கார் மண்டலம் சென்று காண்பார் தமக்குக் கதிர் ஒளியோன்
ஏர் மண்டலம் தன்னை எய்தும் வழியை யினிதுரைத்தான்
பேர் மண்டல  வென்னு முடும்பை பிறந்தவனே –

————————————————————————————————————————————————–

பிரதம பிரகரணம் –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு விபூதி த்வயமும் சேஷமாய் இருக்கும் –
அதில் போக விபூதியில் உள்ளார் -ஒண்டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -4-9-10-என்கிறபடியே
அவனுடைய செங்கோலே ஏகாத பத்ரமாக நடக்கும் படி அவனுடைய அபிமானத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள் –
லீலா விபூதியில் உள்ளார் அவர்களைப் போல சந்தா அநு வர்த்திகள் அன்றிக்கே சங்கல்ப அநு விதாயிகளாய்-
முக்தானாம் லஷணம் ஹ்யேதத் ஸ்வேதத்வீப நிவாஸி நாம்  நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா  நம இத்யேவ  வாதி ந-மகா பாரதம் -சாந்தி -என்கிறதுக்கு எதிராக
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித் ஏஷ மே சஹஜோ தோஷ ஸ்வபாவோ துரதிக்கிரம –யுத்த -36-11-என்றும் –
ஈச்வரோஹம் அஹம் போகீ சித்தோஹம் பலவான் ஸூகி-ஸ்ரீ கீதை -16-14-என்றும் சொல்லுகிறபடியே — மனையடைவே –
யானே என்தனதே -திருவாய் -2-9-9- என்று -அவர்கள் பனியா அமரராய் -8-3-6- இருக்கும் இருப்புக்கு எதிராக
மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து -4-10-7-என்றும் –
மிக்கார் வேத விமலர் -2-9-8-என்கிறபடியே
அவர்களைப் போலே -பெரு மக்களாய் -3-7-4- இராதே –
சிறியார் சிவப்பட்டார் -நான் முனன் -6-என்கிறபடியே சிறியராய்
அயர்வறும் அமரர்கள் -1-1-1- என்கிறபடியே அவர்களைப் போலே திவ்ய ஜ்ஞா நோபபன்னராய் இராதே
அறிவிலா மனிசராய்-திருமாலை -13-
ஒளிக் கொண்ட சோதிக்கு -2-3-10- எதிராக அழுக்கு உடம்பைப்-திருவிருத்தம் -1- பரிஹரித்துக் கொண்டு –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய –திவீவ சஷூராததம் தத் விப்ராசோ விபந்யவோ-
ஜாக்ருவாம்சாஸ் சமிந்த தே விஷ்ணோர் யத் பரமம் பதம் -ருக் வேதம் அஷ்டகம் -1-2-7-என்றும்
விண்ணோர் பரவும் தலைமகன் –2-6-3- என்கிறதுக்கு எதிராக –
உலகில் கண்டவா தொண்டரைப் பாடி -பெரிய திரு -1-1-7-என்றும்
உனக்கு நாம் ஆட்செய்வோம் -திருப்பாவை -29- என்கிறபடியே அவனுக்கு ஆட்செய்யாதே
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்து – பெருமாள் திரு -3-3-
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாதே -திருமாலை -5-பாவை வாய் அமுதம் உண்டு  -பெரிய திருமொழி -1-3-5-
ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா சப்தத்தா நவதா சைவ புநஸ் சைகாதஸ் ஸ்ம்ருத சதஞ்ச தச சைகஞ்ச சஹஸ்ராணி ஸ விம்சதி -சாந்தோக்யம்   -7-26-2-
என்கிறதுக்கு எதிராக குலம் தான் எத்தனையும் பிறந்து -பெரிய திருமொழி -1-9-4-
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு அவனோடு ஒரு பாடு உழலாதே -8-9-7-
ஆகையின் வழி உழன்று -3-2-1-
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-33-என்கிறவனுடைய வ்ரதத்துக்கு எதிராக
ஆதானும் பற்றி நீங்கும் விரதத்தை -திரு விருத்தம் -95- ஏறிட்டுக் கொண்டு
அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன் -பெரிய திரு -1-1-1- என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் எட்டாதபடி -திரு நெடும் தாண்டகம் -6-கை கழிய ஓடி
அற்ப சாரங்களவை சுவைத்து -3-2-6- அகன்று போரக் கடவராய் இருப்பார்கள் –

இவர்கள் தண்மையைப் பார்த்துக் கை விடாதே ஸ்வாபாவிக சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே
எதிர் சூழல் புக்குத் திரிகிற -2-7-6-சர்வ பூத ஸூ ஹ்ருத்தான சர்வேஸ்வரனுடைய யதன விசேஷம் ஒரு நாள் வரையில் ஓர் அவகாசத்திலே பலித்து
அத்வேஷ அபிசந்தியை யுடையனாய் –
மோஷ சமீஷா யுக்தனாய்
பிரவ்ருத்தமான வைராக்யனாய் –
விவேக அபி நிவேசியாய்
சதாசார்யா சமாஸ்ரயணம் பண்ணி -செய்த வேள்வியனாய் -5-7-5-
சம்சாரத்தினுடைய கொடுமையை அனுசந்தித்து – கதமான மண்டூகம் போலேயும்
காட்டுத் தீ கதுவின மான் படை போலேயும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பு போலேயும் -பெரிய திரு -11-8-4-
ஆவாரார் துணை என்று அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போலேயும் -5-1-9-
ஆற்றத் துளங்கி -பெரிய திரு -11-8-2-
பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9- என்றும்
இன்னம் கேடுப்பாயோ –6-9-8- என்றும் -ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர்-7-1-10- என்றும்
கூறை சோறு இவை தா வென்று குமைத்து  போகார் -பெரிய திரு -7-7-9-என்று இந்த்ரியங்களினுடைய கொடுமையை நினைத்துக் கூப்பிட்டு –
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை -4-9-1- என்றும்
உயிர் மாய்தல் கண்டாற்றேன் -4-9-3- என்றும்
ஒ ஒ உலகினதியல்வே-திருவாசி -6- என்று சம்சாரிகள் இழவுக்கு நொந்து ஆற்ற மாட்டாதே
பேயரே எனக்கு யாவரும் -பெருமாள் -3-8-
நாட்டு  மானிடத்தோடு எனக்கரிது -பெரியாழ்வார்-5-1-5-என்றும்
நாட்டாரோடு இயல் ஒழிந்து-10-6-2- என்றும் சொல்லுகிறபடியே
பிராட்டிக்கு ராஷசிகளோட்டை சஹவாசம் அசஹ்யம் ஆனாற்போல
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொண்டு -பெருமாள் -3-1-
உண்டியே யுடையே உகந்தொடுகிற -பெருமாள் -3-4-சௌரி சிந்தா விமுகரான சம்சாரிகளோட்டை சஹவாசம் துஸ்சஹமாய் –
இந்நின்ற நீர்மை இனி யாம் யுறாமை-திரு விருத்தம் -1-
எங்கினித் தலைப் பெய்வன் -3-2-9-
நாளேல் அறியேன் -9-8-4-
வானுலம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திரு -6-3-8-
தரியேன் இனி -5-8-7-
கூவிக் கொள்ளும் காலம் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9-
என்று பகவதனுபவம் பெறாமையாலே பெரு விடாய்ப்பட்டு
தீயோடுடன் சேர் மெழுகாய் -6-9-6-
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து காணப் பெறாமையாலே -8-5-2-
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -10-3-1-
பிராயச பாபகாரித்வாத் ம்ருதயோருத்விஜதே ஜன
க்ருதக்ருத்யா ப்ரதீஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம் -இதிஹாச சமுச்சயம் -என்கிறபடியே
ஆக்கை விடும் பொழுதை மநோ ரதித்து-மகிஷியினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜ புத்ரனைப் போலே தான் த்யஜித்த
தேஹத்தை விரும்புகிற ஈஸ்வரனை -மங்க வொட்டு-10-7-10-என்று அபேஷித்து
உண்டிட்டாய் யினி யுண்டு ஒழியாய்-10-10-6-
முற்றக் கரந்து ஒளித்தாய் -10-10-8-
திருவாணை நின்னாணை கண்டாய் -10-10-2-
இனி நான் போகல ஒட்டேன் -10-10-1-என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரமபக்தி தலை எடுத்தல் –
அவ்வளவு அன்றிக்கே உக்தி மாத்ரத்திலே அன்வயித்தல் –
நானும் பிறந்தமை பொய்யன்றே -நாச் -10-4-
தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச் -10-10-என்று சொல்லுகிறபடியே
பழுதாகாத வழியை அறிந்து -நான் முகன் -89-
வேறாக வேத்தி இருக்குமவனைப் பற்றுதல் செய்து -நான் -18-
தெளிவுற்று வீவின்றி நிற்குமவனுக்கு -7-5-11-சரீர அவஸான காலத்திலே ஈஸ்வரன் தன திருவடிகளிலே இவன் தலை சாய்த்த வன்று தொடங்கி-
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருத யாந்நாப சர்ப்பதி
கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர வாஸி நம் –மகா -உத்தியோக -17-22-என்றும்
உன்னடியார்க்கு   என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திரு -53- என்கிறபடியே பெரும் தனிசாளனாய்-பிரத்யுபகாரம் தேடித் தடுமாறி –
திருத்திப் பணி கொள்ள நினைத்து -3-5-11-பல் வாங்கின பாம்பு போலே சம்சாரம் மறுவலிடாதபடி அடி யறுக்கச் செய்தேயும்
பிணம் எழுந்து கடிக்கிறதோ என்று அதி சங்கை பண்ணி அமர்ந்த நிலத்திலே கொண்டு போகையிலே விரைந்து
-என்னும்படி கடல் போலே
முற்றப் பருக வேண்டும்படி -9-6-10-பேரு விடையை யுடையனாய் –
ஒரு மா நொடி யும் பிரியாதே -10-7-8-
சக்ரவர்த்தி பெருமாள் திரு அபிஷேகத்துக்கு வசிஷ்ட வாம தேவாதிகளை அழைத்துப் பாரித்தால் போலே
நித்ய ஸூரிகளை யழைப்பித்து வழியைக் கோடிப்பதாய்க் கொண்டு
ஏகயாமாவசிஷ்டாயாம் ராத்ர்யாம் ப்ரதி விபுத்யச
அலங்கார விதிம் க்ருத்ஸ்னம் காரயாமாச வேஸ்மதி-அயோத்யா -6-5-என்கிறபடியே –
வீடு திருத்தி -1-5-10–அநாதி கால ஆர்ஜிதங்களாய் இவன் ஆசார்ய சமாஸ்ரயணம் பண்ணின அன்றே தொடங்கி
அருள் என்னும் தண்டால் -பெரிய திரு -26-அடியுண்டு
மூக்கும் முகமும் சிதைந்து –பெரிய திரு -69-
பண்டு போலே வீற்று இருக்கை தவிர்ந்து -பெரிய திரு -20-மடி யடக்கி நில்லாதே சரக்கு வாங்கி
மருங்கும் கண்டிலமால் -பெரிய திரு-54-என்னும்படி ஒளித்து வர்த்திக்கிற பூர்வாகங்களையும் உத்தராகங்களையும் அநு கூலர் விஷயமாகவும்
ப்ரதிகூலர் விஷயமாகவும்
வருணனைக் குறித்துத் தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டால் போலே அசல் பிளந்து ஏறிட்டு
இவனோடு சம்பந்தம் உடையராய் நரகா நுபவம் பண்ணுகிறவர்களை -ஏதத்சம்பந்தி நஸ் சான்யே-முகத் அடைபவனுக்கு அநு கூலமாய் இருந்தவர் அனைவரும்
எங்கு இருந்தாலும் புண்ய லோகங்களை அடைகின்றனர் -என்கிறபடியே ச்வர்கச்தராம்படி நினைப்பிட்டு –
ஊட பஞ்சாத்மநா தேந தார்ஷ்ய ரூபேண-பிராணன் முதலிய ஐந்து காற்றுக்கும் தேவதையாய் -சத்ய ஸூ பர்ண கருட தார்ஷ்ய விஹகேஸ்வரர்-என்கிற
ஐந்து மூர்த்தியான வைநதேயனின் தார்ஷ்ய ரூபத்தால் சுமக்கப் பட்டவர் -என்றும்
செழும் பறவை தானேறித் திரிவான் -10-6-5- என்று சொல்லுகிறபடியே –
அருளாழிப் புட்கடவீர் -1-4-6-என்று இவன் ஆசைப் பட்ட படியே
கொற்றப் புள் ஓன்று ஏறி வந்து தோன்றி -பெரிய திரு -8-1-8-
மஞ்சுயர் பொன்மலை மேல் எழுந்த மா முகில் போன்ற -பெரிய திரு -9-2-8-வடிவை அநு  பவிப்பித்து ஆதி வாஹிகரை அழைத்து அருளி இவனை சத்கரிக்கும் க்ரமத்திலே  சத்கரிக்க அருளிச் செய்ய -பின்பு –
தஸ்மாத் உபசாந்த தேஜா புனர்பவம் இந்த்ரியைர் மனஸி சம்பத்யமாநை யச்சித்தஸ் தே நைவ பிராண மாயாதி –4-2-2- ஸ்ரீ பாஷ்யத்தில்
எடுக்கப் பட்ட சுருதி வாக்யம்-உஷ்ணம் அடங்கப் பெற்றவனாய் மனத்தில் ஒடுங்கிய இந்த்ரியங்களோடே ஜீவன் எந்தப்  பயனை மனத்தில்
விரும்பினானோ அப்பயன் காரணமாகவே மறு பிறப்பிற்காக பிராண வாயுவை அடைகிறான் -என்கிறபடியே –
பாஹ்ய கரணங்கள் அந்த கரணத்தில் சேர்ந்து -அந்த கரணம் பிராணனோடு சேர்ந்து -பிராணன் இச் சேதனனோடே சம்பந்தித்து
இவன் பூத ஸூ ஷ்ம விசிஷ்டனாய்க் கொண்டு பரமாத்மாவின் பக்கலிலே சேரும் –
பின்பு கர்ம காலத்திலே ஆதித்ய கிரணத்தாலே தப்தனானவன் நிழல் மரத்தைப் பற்ற இளைப்பாறுமா போலே
சம்சார  துக்கார்க்க தாப தப்தனான இவன் வா ஸூ தேவ தருச்சாயைக் கிட்டி விஸ்ரமித்து
திருக் கோவலூருக்குப் போம் போது திரு மங்கை ஆழ்வாருக்கு -தானுகந்த ஊர் எல்லாம் தன தாள் பாடி -திரு நெடும் தாண்ட -6-என்கிறபடியே
திரு உலகு அளந்து அருளின திருவடிகளே பாதேயமா போலே
பிராண பிரயாண பாதேயம் -த்வய அநு சந்தானமே கட்டுச் சோறு –
கச்சதாம் தூரமத்வா நம் த்ருஷ்ணாமூர்ச்சித சேதசாம் பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்த நாம்ருதம் -கருட புராணம் –
ஏதேந பிரதிபத்யமா நா இமாம் மாநவமா வர்த்தம் நாவர்த்தந்தே –சாந்தோக்யம் -4-1-அர்ச்சிராதி
மார்க்கத்தால் பரமபதம் செல்பவர்கள் இந்த மானுடர் வாழும் உலகத்தில் வந்து உழல்வது இல்லை –
அர்ச்சிராதி மார்க்கமே பெரு வழியாகவும் -பெரிய திரு -10-9-5-
அண்டத்தப்புறத் துய்த்திடுமையனாய் -பெரிய திரு -7-10-5–ஆப்த தமனாய்-
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொண்ட -10-1-4–சுரி குழல் கமலக் கட்கனிவாய்க் காளமேகமான-10-1-1- அரங்கத் துறையும் இன் துணைவனே -பெரிய திரு -3-7-6-வழித் துணையாகவும்
விரஜா தீரமும் தில்ய வ்ருஷமும் ஜரம்மத ஹரத தடமுமே விஸ்ரம ஸ்தலமாகவும்
திரு மா மணி மண்டபமே -10-9-11-புகலிடமாகவும்
அர்ச்சிராதி புருஷர்களே உசாத் துணையாகவும்
சூழ் விசும்பணி முகிலினுடைய-10-9-1-முழக்கமே பிரயாண படஹ த்வநி யாகவும் அமைந்து
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனான -3-9-3–ஹார்த்தன் –
வழி பட்டோட அருள -8-10-4-வானேற வழி பெற்று -10-6-5-
போக்கிலே ஒருப்பட்டு -ப்ரீத்யதிசயத்தாலே அநாதி காலம் தன்னைக் குடிமை கொண்டு போந்த சம்சாரத்தை
நரகத்தை நகு நெஞ்சே -10-6-5- என்கிறபடியே -புரிந்து பார்த்து சிரித்து
மாக வைகுந்தம் காண்பதற்கு -9-3-7- பண்டே யுண்டான ஆசை கொந்தளித்து மேலே மேலே பெருக
பிராட்டியும் ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் இலங்கையினின்றும் புறப்பட்டால் போலே ஹ்ருதய கமலத்தின் நின்றும் புறப்பட்டு –
சதம் சைகா ச ஹ்ருத யஸ்ய நாட்ய தாஸாம் மூர்த்தா நம்பி நிஸ் ஸ்ருதைகா
தயோர்த்வமாயன் நம்ருதத்வ மேதி விஸ்வன் நுன்யா உத்க்ரமணே பவந்து -கட -2-6-16/சாதொக்யம் -8-6-6-என்கிறபடியே
ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற நூற்றொரு நாடியிலும் ஸூ ஷூம் நை என்ற பேரை யுதைத்தான மூர்த்தன்ய நாடியாலே
வித்யா மஹாத்ம்யத்தாலும் தேவயாநாநு ஸ்ம்ருதி யாலும் பிரசன்னனான   ஹார்த்தன் கை விளக்குப் பிடித்துக் கொண்டு போகப் போய் சிற கபாலத்தைப் பேதித்து
தா ஆஸூ நாடீ ஷூ ஸ்ருப்தா ஆப்யோ நாடீப்ய பிரதாயந்தே தே ஆமுஷ்மின் ஆதித்யே ஸ்ருப்தா
அத ஏதைரேவ ரஸ்மிபி ரூர்த்வ மாக்ரமதே –சாந்தோக் -8-6-2/5– என்கிறபடியே
அந்நாடி யோடு சம்பந்தித்து ஆதித்ய ரச்மியை அநு சரித்துக் கொண்டு
ஓங்கார ரத மாருஹ்ய -என்கிறபடியே பிரணவம் ஆகிற தேரிலே ஏறி மனஸ் ஸூ சாரத்தியம் பண்ணப் போம் போது –
கையார் சக்கரத்தின் நின்று -5-1-1- எல்லா வடிவும் புதுக் கணிக்குமா போலே உபய விபூதியும் புதுக் கணித்து
கடல் தன காம்பீர்யம் எல்லாம் குலைந்து கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து சசம்பிரம ந்ருத்தம் பண்ணி யார்க்க
உபரிதன லோகங்களில் உள்ளார்கள் அடைய உபஹார பாணிகளாய்-நெடுவரைத் தோரணம் நிரைத்து -10-9-2-
ஆகாசம் எங்கும் பூர்ண கும்பங்களாலே பூரணமாக்கி
தூப நன்மலர் மழை பொழிந்து-10-9-3- -இவன் ஒரு கால் தங்கிப் போமோ என்கிற நோயாசையாலே
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுக்க -10-9-4- லோகங்கள் எல்லாம் அதிரும்படி கடல் இறைத்தால் போலே வாத்யங்கள் எங்கும் முழங்க  வழியில் உள்ளார்கள் அடைய
போதுமின் எமதிடம் புகுதுக-10-9-5-என்கிறபடியே தந்தாம் ஸ்தானங்களையும் ஐஸ்வர் யங்களையும் சமர்ப்பிக்க -சிலர்
கீதங்கள் பாட -10-9-5- சிலர் யாகாதி ஸூ கருத பலங்களை சமர்ப்பிக்க -வேறே சிலர் தூபாதீ பாதிகளாலே அர்ச்சிக்க
சிலர் காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் ஆரவாரிப்ப -10-9-6-
வாள் ஒண் கண் மடந்தையரான-10-9-6- ஆதிவாஹிக மஹிஷிகள்-இது அராஜகமாய்க் கிடக்க கடவதோ இத்தை யாளவேணும் -என்று மங்களா சாசனம் பண்ண
மருதரும் வசுக்களும் -10-9-7- இவன்விரைந்து போனால் ஈஸ்வரன் நமக்குக் கையடைப் பாக்கின நிலம் கழிந்தது என்று இராதே
லோகாந்தரங்களிலும் தொடர்ந்து சென்று இவன் செவிப்ப்படும்படி ஸ்தோத்ரம் பண்ண
மற்று எல்லாம் கை தொழப் போய் -பெரிய திரு -3-7-8-என்கிறபடியே
பெரிய சத்காரத்தோடே போம் போது அர்ச்சிஷ மேவாபி சம்பவந்தி அர்ச்சிஷோ சஹ அஹ்ன ஆபூர்யமாண  பஷம்-சாந்தோக் -4-15-5-
முத்தர்கள் அர்ச்சிர அபிமானி -அஹரபிமானி -சுக்ல பஷ அபிமானி புருஷனையும் அடைகிறார்கள் -என்றும் –
அக்நிர் ஜ்யோதிரஹஸ் ஸூ க்ல ஷண்மாசா உத்தராயணம் தாத்ரா பிராதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜ நா –ஸ்ரீ கீதை -8-24-என்று
சாந்தோக்ய வாஜச நேய  கௌஷீதகீ ப்ரப்ருதிகளில் சொல்லுகிறபடியே அர்ச்சிராதி புருஷர்கள் வழி நடத்தப் போம் —

ஸ்ரீ அர்ச்சிராதி  பிரதம பிரகரணம்  முற்றிற்று

——————————————————————————————————————————————————————————————————————————————-

த்விதீய பிரகரணம் –

அதில் முற்பட –
அர்ச்சிஸ்சைக்கிட்டி-அவன் சிரிதிடம் வழி நடத்த -பின்பு அஹஸ் சையும் -ஸூ க்ல பஷ அபிமாநியையும்
உத்தராயண அபிமாநியையும் -சம்வத்சர அபிமாநியையும் வாயுவையும் கிட்டி -அவர்கள் வழி நடத்த
ப்ரவிச்ய ச சஹஸ்ராம் ஸூ ம் –
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் -பெரிய திருமடல் -16- என்கிறபடியே –
ஹிரண்மயமாய்   கால சக்ர ப்ரவர்த்தகமான தேரார் நிறை கதிரோன் மண்டலத்திலே -சிறிய திருமடல் -7-
எதிர் விழிக்க ஒண்ணாத படி நிரவதிக தேஜஸ் சோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமா போலே சென்று
அவன் மண்டலத்தைக் கீண்டு புக்கு அவ்வருகு போய்
க்ராமாச் சந்த்ரம சம் ப்ராப்ய -என்கிறபடியே க்ரஹ நஷத்ர தாரகா நிர்வாஹகனாய் -அம்ருதாத்மகனாய் இருந்துள்ள சந்த்ரனைக் கிட்டி
அவன் சத்கரிக்க அவ்வருகே போய்-அமாநவனைக் கிட்டி -அவன் வழி நடத்த -சர்வாப்யகனான வருணனும் -த்ரை லோக்ய பாலகனான இந்த்ரனும் -முக்தராய்ப் போகுமவர்களை சர்வ பிரகாரத்தாலும்  மிகவும் ஸ்லாக்கிகக் கடவர்களாய் -ஸூரா ஸூ ர கந்தர்வ யஷ ராஷச நிர்வாஹகனான பிரஜாபதியையும்  சென்று
கிட்டி -அவர்கள் லோகங்களையும் கடந்து -அண்டத்தையும் தசோத்தரமான ஆவரண சப்தகத்தையும்
முடிவில் பெரும் பாழான-10-10-10-மூலப் பிரக்ருதியையும்
கடந்து -முன்பு சம்சாரியான நாளில் அந்தகாராவ்ருதமாய் நீரும் நிழலும் இன்றிக்கே –
பீதோச்ம்யஹம் மகாதேவா ஸ்ருத்வா மார்க்கச்ய விஸ்தரம் -கே நோ பாயேனதம் மார்க்கம் தரந்தி புருஷா ஸூ கம்-பார -அச் -100-61-என்கிறபடியே
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான கொடிய வழியிலே -யமபடர்பாசங்களாலும் புத்ர தார மயபாசங்களாலும் கட்டுண்டு
யம தூதராலே இழுப்புண்டு -தொடை வழி நாய்கள் கவர -பெரியாழ்வார் -4-5-5-சக்தி சங்கு தோமர சாயக ஸூலாதிகளாலே நோவு பட்டு வ்யாக்ர கிங்கரரான ராஷசர் முகங்களுக்கு இரையாய்-உடம்பு எங்கும் சீயும் ரத்தமும் வடிய பசியும் தாகமும் மேலிட்டு
தூதரைச் சோறும் தண்ணீரும் வேண்டி மூக்கும் முகமும் உதடும் பல்லும் தகர்ந்து கையும் காலும் ஒடிந்து கூப்பிட்டுப் போன இழவு தீர
ஸூ கோத்தரமான மார்க்கத்தாலே இவ்வெல்லை கடந்த போதே தொடங்கிக் கண்டார் அடைய சத்கரிக்க
தனக்கு உபாயமான பாரளந்த பாத போது போலேயும் -திருச்சந்த -66–அந்தரம் ஏழினூடு செல யுய்த்த-பெரிய திரு -11-4-5- பாதம் போலேயும் கடுநடையிட்டுப் போய்
சப்த ஸ்பர்சாதிகள் ஆகிற சிம்ஹ வ்யாக்ராதிகளைத் தப்பி
சம்சாரம் ஆகிற பெரும் தூற்றினின்றும்-10-10-8-புறப்பட்டு
தாப த்ரயமாகிற காட்டித் தீயிலே அகப்பட்டுப் பட்ட க்லேசம் எல்லாம் தீர
ததஸ்து விரஜா தீரப்ரதேசம் -என்றும் -ச ஆகச்சதி விரஜாம் நதீம் -கௌஷீ -1-35-என்கிறபடியே
அம்ருத வாஹி நியாய -வைதரணிக்கு எதிர்தட்டான விரஜையைச் சென்று கிட்டி
வன் சேற்று அள்ளலையும்-திரு விருத்தம் -100-வாசனா ரேணுவையும் கழுவி மேகாவ்ருதமான ஆதித்ய மண்டலம் போலேயும் ரா ஹூ க்ரச்தமான சந்திர மண்டலம் போலேயும் சேற்றில் அழுந்தின மாணிக்கம் போலேயும்
அழுக்கு உடம்பிலே அகப்பட்டு -திரு விருத்தம் -1-திரோஹித  ஸ்வரூபனான இவன் அதுவும்  நிவ்ருத்தமாய் -தத்தோயஸ்பர்ஸ மாத்ரேன-என்கிறபடியே விரஜா ஜல ஸ்பர்சத்தாலே திரோதாயகமான ஸூ ஷ்ம சரீரம் கழியப் பெறுகையாலே
ஸூ ர்ய கோடி ப்ரதீகாச -என்கிறபடியே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே கண் கொண்டு காண ஒண்ணாத படி நிரவதிக தேஜசை யுடையனாய்
அமா நவம் சமாசாத்ய -என்கிறபடியே சதுர் புஜனாய் -சங்க சக்ர கதாதரனாய் விரஜைக் கரையிலே எழுந்து அருளி இருக்கிற அமா நவனைச் சென்று கிட்டி
அவன் திருக் கைகளாலே ஸ்பர்சிக்க –
பின்பு லாவண்ய சௌந்தர்யாதி கல்யாண குணாகரமாய்-ஸூ த்த சத்வமயமாய்
பகவத் அனுபவவைக பரிகரமான விக்ரஹத்தைப் பெற்று -இந்த்ராதி பதங்கள் போலே கர்ம சாத்யமாய்-நஸ்வரமாய் குணத்ரயமாய் இருக் அன்றிக்கே
பகவத் ப்ரீதி சாத்யமாய் -நித்யமாய் -ஸூ த்த சத்வாத்மகமாய் -இல்லை கண்டீர் இன்பம் -9-1-5-என்கிறதுக்கு எதிர்தட்டாக -நலமந்தமில்லதோர் நாடே -2-8-4-
இருள் தரும் மா ஞாலத்துக்கு -10-6-1- எதிர்தட்டாக தெளிவிசும்பு திரு நாடு -9-7-5-என்கிறபடியே தெளிதாகிய சேண் விசும்பாய்-10-8-5-
சநகாதிகள் நெஞ்சுக்கும் நிலம் அன்றிக்கே பாகவதா நுகூல்யைக பொகரான நித்ய சித்தாலே நெருங்கி அவர்களாலும் அளவிட ஒண்ணாத அளவையும் ஐஸ்வர் யத்தையும் ஸ்வபாவமாக யுடைத்தான திவ்ய தேசத்தைக்  கண்களார ளவும் நின்று கண்டு -பெரிய திரு -7-10-9- விண்ணைத் தொழுது -4-4-1- என்கிறபடியே தொழுது
அமா நவ பரிசரத்திலே சங்க காஹள பேரிகளினுடைய முழக்கத்தைக் கேட்டு
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார் -பெரியாழ்வார் -1-1-2-என்றும்
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -10-6-1- என்பராய்க் கொண்டு
பெரிய ஆர்ப்பரவத்தைப் பண்ணி திரள் திரளாகப் புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய ஆனந்த கள களகத்தைக் கண்டு பெரிய ப்ரீதியோடு போகிற அளவிலே
தம் பஞ்ச சதாந்யப்ரசரசாம் பிரதிதா வந்தி சதம் மாலாஹஸ்தா-சதம் அஞ்சனஹஸ்தா சதம் சூர்ணஹஸ்தா சதம் வாசோஹஸ்தா-கௌ ஷீ -1-34-என்கிறபடியே
தத்ராகத்ய ச தே தேவா  சாத்யாஸ்ஸ விமலாசயா-என்கிறபடியும்-திவ்ய மால்யம் திவ்ய அஞ்சனம் திவ்ய சூர்ணம் திவ்ய வஸ்த்ரம் திவ்ய ஆபரணம்
தொடக்கமானவற்றைத் தரித்துக் கொண்டு ஐந்நூறு திவ்ய அப்சரஸ் ஸூ க்களும் நித்ய ஸூ ரிகளும் எதிரே வந்து
ப்ரஹ்ம அலங்காரேண-என்றும் -ப்ரஹ்ம அலங்க்ரியா-என்றும் சொல்லுகிறபடியே அலங்கரித்து
உடுத்துக்  நின் பீதகவாடை –திருப்பல்லாண்டு -9-சூடிக் களைந்த திவ்ய மால்யம் திவ்ய ஆபரணங்கள் திவ்ய அங்க ராகங்கள் தொடக்க மானவற்றாலே
அலங்க்ருதனாய் இருக்கிறபடியைக் கண்டு -புனையிழை கள் அணிவும் ஆடையுடையும் புதுக் கணிப்பும் -நினையும் நீர்மையதன்று -8-9-5-என்று விச்மிதராய்க் கொண்டாட
பின்பு அநேகம் ஆயிரம் கொடிகளாலும் முத்துத் தாமங்களாலும்  மேற்கட்டிகளாலும் அலங்க்ருதமாய்
திவ்ய ஸ்திரீ பரிவ்ருதமாய் -பகவத் சங்கல்ப கல்பிதமாய் இருப்பதொரு
திவ்ய விமானத்தை பெரிய திருவடி கொண்டு வர -அதிலே இவனை ஏற்றி ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு திவ்ய காந்தாரத் தளவிலே சென்றவாறே
நாநாவிதமான உபஹாரங்களை ஏந்திக் கொண்டு வேறே சில அப்சரஸ் ஸூ க்கள் எதிரேத்தி சத்கரிக்க –
பின்பு திவ்ய கந்தம் ப்ரஹ்ம கந்தம் தொடக்கமான அப்ராக்ருத கந்தங்களை ஆக்ராணம் பண்ணி சர்வ கந்தனே
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் -10-9-8-என்கிறபடியே த்வஜ பதாகாதி களாலே அலங்க்ருதமான திவ்ய கோபுரத்தைக் கிட்டி
திரு வாசல் காக்கும் முதலிகள் -வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புக்கு -10-9-9-என்கிறபடியே பெரிய ஆதாரத்தோடு சத்கரிக்க –
ச ததந்த புரத்வாரம் சமதீத்ய ஜ நாகுலம் பரவி விக்தாம் தத கஷ்யாம் ஆசசாத புராணவித்-அயோத்யா -16-1-
கவாடம் கடந்து புக்கு -பெரிய திரு மடல் -73-என்கிறபடியே
நெஞ்சையும் கண்ணையும் வருந்தி மீட்டுக் கொண்டு அயோத்யை என்றும் அபராஜிதை என்றும் சொல்லப் படுகிற
ஏர் கொள் வைகுந்த மா நகரத்திலே -பெரிய திரு -4-8-10-ஒரு வண்ணம் சென்று புக்கு -6-1-7-
ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம-நித்யக்ரந்தம் -1-என்று கண்ணன் விண்ணூரைத்  தொழுது -திருவிருத்தம் -2-
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -10-9-9-
கடலில் நீர் சஹ்யத்திலே ஏறக் கொழித்தால் போலே சம்சாரஸ்தனான இவன் இத்தேசத்திலே வரப் பெறுவதே என்று விச்மிதராய்க் கொண்டாட
பின்பு கோயில் கொள் தெய்வங்களான -8-6-5- பெரிய திருவடி ஸ்ரீ சேநாபதி யாழ்வான் தொடக்கமானவர்கள் தந்தாம் திரு மாளிகைகளிலே கொண்டு புக்கு
இவனை ஆசனத்திலே உயர வைத்து தாங்கள் தரையிலேயிருந்து தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க ஸ்ரீ பாதம் விளக்கி தங்கள் மகிஷிகளுக்கு
தேவர் வைகல் தீர்த்தங்களே-7-10-11- என்று இவன் பிரபாவத்தைச் சொல்லி சத்கரிக்கும் க்ரமத்திலே சத்கரிக்க
பின்பு ஸ்ரீ சடகோபனும் திவ்ய சூர்ணங்களும் பூர்ண கும்பங்களும் மங்கள தீபங்களும் ஏந்திக் கொண்டு
தேசாந்தர கதனாய் வந்த புத்ரனைக் கண்ட தாய்மாரைப் போலே குளிர்ந்த முகத்தை யுடைய
மதிமுக மடந்தையர் வந்து எதிர் கொள்ள -10-9-10-பெரும் தெருவாலே உள்ளே புக்கு திவ்ய ஆவரண சத சஹச்ராவ்ருத்தமான
செம் பொன் செய் கோயிலைக் கிட்டி –பெரிய திருமொழி -4-3-1-ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமாநாய நம -நித்யக்ரந்தம்  -13-என்று தண்டனிட்டு
ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே தன்னுடைய வரவாலே தளிர்த்துச் செருந்தி இலையும் மரமும் தெரியாதபடி
பஹூ விதமான நிறத்தையும் கந்தத்தையும் யுடைய அப்ராக்ருத புஷ்பங்களாலே நெருங்கித் தேன் வெள்ளம் இடுகிற கற்பகச் சோலைகளாலும்
நாநா விதமான  பூக்களாலும் ரத்னங்களாலும் சமைந்த லீலா மண்டபங்களாலும்
அபூர்வவத் விஸ்மய ஜனகங்களான க்ரீடா சைலங்களாலும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் லீலா பரிகரங்களாய்
செவிகள் அடைய மயிர்க் கூச்சிடும்படி இனிய பேச்சுக்களுடைய ஸூ க சாரிகா மயூர கோகிலா திகளாலும் ஆகுலங்களாய்
மாணிக்கம் முத்து பவளம் தொடக்கமான வற்றாலே சமைந்த படிகளை யுடைத்தாய்
நித்ய முக்தர்களுடைய திரு உள்ளங்கள் போலே குளிர்ந்து தெளிந்து அம்ருத  ரசங்களான திவ்ய ஜலங்களாலே நிறைந்து
நாநாவித பஷி சங்க சமாகீர்ணமாயத் துளும்பி எங்கும் சொரிகிற தேன் வெள்ளத்தை யுடைத்தாய் -மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்கிறபடியே
மதிமுக மடந்தையருடைய -10-9-10-திரு முகங்களுக்கும் திருக் கண்களுக்கும் போலியான தாமரை செங்கழுநீர் தொடக்கமான அப்ராக்ருத புஷ்பங்களை யுடைய ஓத நெடும் தடங்களாலும்
நாநா விதமான பூம் படுக்கைகளாலும் பரிமளம் போலே பூக்களிலே படிந்து மது வெள்ளத்திலே முழுகிப் பாட்டுக்களாலே அநு மேயங்கலான தெய்வ வண்டுகளினுடைய
திவ்ய காநத்தாலும் கிட்டினாரை பிச்சேற்றுகிற த்வய உத்யான சத சஹஸ்ரங்களாலும் சூழப் பட்டு –
நாநா ரத்னங்களாலே சமைந்த ஸ்தலங்களையும் யுடைத்தாய் -அநேகம் ஆயிரம் ரத்ன ஸ்தம்பங்களாலே அலங்க்ருதமாய்-உபய விபூதியில் உள்ளாரும் ஒரு மூலையிலே அடங்கும்படி இடமுடைத்தாய்
தாமரை செங்கழு நீர் சந்தனம் அகில்  கர்ப்பூரம் தொடக்கமான வற்றை அளைந்து வருகிற  மந்த மாருதனாலே சேவ்யமாநமாய்-நிரதிசய ஆனந்தமயமான
திரு மா மணி மண்டபத்தைச் சென்று கிட்டி -10-9-11-ஆனந்த மயாய திவ்ய மண்டப ரத்நாயா நம-நித்யக்ரந்தம் -13-என்று தண்டனிட்டு
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை -திரு நெடும் தாண்டகம் -14–எப்போதும் ஒக்கப் பருகுகையாலே இளகிப் பதித்து
வைகுண்ட குட்டனோடு -பெரியாழ்வார் -3-6-3-சாம்யா பன்னராய்-அனுபவ ஜனிதமான ஹர்ஷ பிரகர்ஷத்துக்கு   போக்கு விட்டு சாம கானம் பண்ணுவார் –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் -10-7-1-என்று இன்ப வாற்றிலே  குணமாகிற ஆழம் காலிலே கொண்டைக் கோல் நாட்டுவார் -ஸ்வாசார்யனைக் குறித்து –
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கட்பிறான் இருந்தமை காட்டினீர் -6-5-5- என்பார்
உற்றேன் உகந்து பணி செய்துன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது   எந்தாய் – 10-8-10- என்பார்
என்முடிவு காணாதே என்னுள் கலந்தானைச் –சொன்முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் –2-5-8-என்பார் –
நமோ நாராயணாய -நாச் திரு -5-11- என்பார் -என்கிறபடியே
ஒவாதுரைக்கும் உரையான -முதல் திரு -95-பெரிய திருமந்த்ரத்தைச் சொல்லி
தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதி -8-1-10-என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவார் –
உருகுமாலிலே -9-6-ஆழ்வார் பட்டது பட்டு
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -8-1-8-என்று அம்பு பாடரைப் போலே உழைப்பார் –
மேலைத் தொண்டு களித்து-10-8-7- என்கிறபடியே தாஸ்ய ரசம் தலை மண்டியிட்டு
முக்தானாம் லஷணம் ஹ்யேதத் ஸ்வேதத்வீப நிவாஸி நாம்  நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா  நம இத்யேவ  வாதி ந-மகா பாரதம் -சாந்தி -என்றும் –
நமஸ்சப்தம் பிரயுஞ்ஜதே -என்கிறபடியே
அந்தி தொழும் சொல்லைச் சொல்லுவாராய்க் கொண்டு -10-8-7-
இப்படி பிரளய ஜலதியிலே அலைவாரைப் போலே ஆனந்த சாகரத்திலே அலைந்து நித்ய முக்தர் சொல்லுகிற செவிக்கினிய செஞ்சொல் களாலே -10-6-1-
வெஞ்சொலாளர் களுடைய கடும் சொல்லைக் கேட்ட இழவு தீரச்-பெரிய திருமொழி -5-8-4– செவிக்கிரையிட்டுக் கொண்டு போய்-திவ்ய ஸ்தானத்தைக் கிட்டி
அப்பேர் ஒலக்கத்தின் நடுவே  தந்தாம் திருமுடிகளிலே திவ்ய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு கூப்பின கைகளும் தாங்களுமாய்   இருக்கிற அஸ்த்ர சஸ்திராக்யரான  திவ்ய புருஷர்களும்
தம்முடைய சங்கல்ப்பத்தாலே சகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களைப் பண்ணக் கடவ சேனை முதலியார்
தொடக்கமான திவ்ய புருஷர்களும் வரிசை யடைவே சேவித்து இருக்க –

த்வதீய  பிரகரணம் முற்றிற்று-

——————————————————————————————————————————————————————————————————————————————————————–

த்ருதீய பிரகரணம் –

உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -சர்வாச்சர்ய மயமான கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே -திருப்பாவை -23-
பன்னிரண்டு இதழாய் -நாநா சக்திமயமான திவ்ய கமலமாய் அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்ய யோக பர்யங்கமாய்
அதின் மேலே அநேகம்  ஆயிரம் சந்த்ரர்களை உருக்கி வார்த்தால் போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியை யுடையனாய் கல்யாண குணங்களுக்கு அந்தம் இல்லாமையாலும்
சர்வவித கைங்கர்யத்திலும் அதிக்ருதனாய் கைங்கர்ய பரர்க்கு எல்லாம்  படிமாவாய் இருக்கையாலும் அனந்தன் என்றும் சேஷன் என்றும் திரு நாமத்தை யுடையனாய்
பகவத் அனுபவத்துக்கு போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையும் யுடையனாய்
விஜ்ஞான பலங்களுக்கும் சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே
ராஜதகிரி சிகரத்திலே அநேகம் ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருக்கிற பணா மண்டலங்களில் -ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே
பதிம் விஸ்வச்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம் நாராயணம் மகாஜ்ஞேயம் விச்வாத்மாநம் பராயணம் -தை நா -1-11-என்கிறவனுக்கும்
தன் பூர்த்தியாலே பொறி புறம் தடவ வேண்டும்படியான பூர்த்தியையும் –
வாசம் செய் பூங்குழலாள்-10-10-2-என்கிறபடியே நாற்றத்துக்கும் நாற்றம் கட்டலாம்படியான பூங்குழலையும்
புண்டரீகாஷனையும் கூட குடிநீர் வார்ப்பித்துக் கொண்டு ஒரு மூலையிலே குமுழி நீரூட்டும்படியான வடிக்கோல வாள் நெடும் கண்களையும் -இரண்டாம் திரு –82-
போகத்துக்கு ஏகாந்தமான ஒப்பனை போலே பால்ய மத்யத்திலே மெய்க்காட்டுகிற யௌ வனத்தையும்
பேசில் பிசுகும் படியான சௌ குமார்யத்தையும் -பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண் -18-என்கிறபடியே
அல்லாதவர்கள் பக்கல் போலே நூல் பிடித்துப் பரிமாற்ற ஒட்டாத போக்யதா பிரகர்ஷத்தையும்
போகோபோத்காத கேளியிலே பகவத் வைச்வரூயத்தைச்
சிறாங்கிக்கும் படியான பெருமையும் உடையளாய்-திவ்ய பரிஜனங்களை தத்தத் அவஸ்த அநுரூபமாக திவ்ய பரிசர்யையிலே நியோகியா   நிற்பாளாய்
சர்வாத்மாகளுக்கும் என்றும் ஒக்கச் சார்வாய் -மூன்றாம் திரு -100-சீல ரூப குண விலாசாதிகளாலே
உனக்கு ஏற்கும் -10-10-6-என்னும்படி இருக்கிற -ஒசிந்த ஒண் மலராளான -6-7-8-பெரிய பிராட்டியார்  வல வட்டத்திலே எழுந்து அருளி இருக்க
அவளிலும் காட்டில் விஞ்சின ஷமா தயாதி குணங்களையும் நாவால் தொகைக்க ஒண்ணாத அழகையும் யுடையராய் அவளுக்கு
நிழல் போல்வனரான -திரு விருத்தம் -3- மற்றை இரண்டு நாய்ச்சிமாரும் இட வட்டத்திலே சேவித்து இருக்க
இவர்களுக்கு நடுவே மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளி மலையைக் கினியப் படிந்து இருக்குமா போலே
முடிச் சோதியா யுனது முகச் சோதி மலர்ந்ததுவோ -3-1-1-என்கிறபடியே திரு முக மண்டலத்திலே ஒளி வெள்ளமானது
மேல் நோக்கிக் கொழித்தால் போலேயாய் -உபய விபூதிக்கும் நிர்நாஹகன் என்னும் இடத்தைக் கோட் சொல்லித் தரக் கடவதாய்
தன் புகராலே அல்லாத புகரை யடைய முட்டாக்கி விடுகிற
-விண் முதல் நாயகன்  நீண் முடி -திருவிருத்தம் -50-என்கிற திரு அபிஷேகத்தையும்
கண்டார் கண்ணும் நெஞ்சும் இருளும்படி இருண்டு சுழன்று அஷ்டமீ சந்த்ரனிலே அம்ருததாரை விழுந்தால் போலே திரு நெற்றியிலே சாத்தின திரு நாமத்தை
மறைப்பது காட்டுவதாய்க் கொண்டு அசைந்து விழுகின்ற பூம் தண் துழாய் விரை நாறுகிற -2-6-10-நீலப் பனி இரும் குழல்களையும் -9-9-3-
சௌ குமார்யாதி சயத்தாலே குறு வேர் பரம்பினால் போலே யாய் -நயந்தார்கட்கு நச்சிலையான திரு நெற்றியையும்   -7-7-7-
அலர்ந்து குளிர்ந்து இருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கி யாடுகிற இரண்டு வண்டு ஒழுங்கு போலே இருக்கிற
தன்கைச் சார்ங்கம் அதுவே போல் அழகிய திருப் புருவங்களையும் –நாச் திரு -14-6-
கலந்து பிரிந்தவர்களுக்கு -இணைக் கூற்றங்களாய்-7-7-1-அல்லாதவர்களைத் தாயாய் அளிக்கக் கடவதாய் -பெரிய திரு -7-1-9-
சேதனர் பக்கல் வாத்சல்யாதிசயத்தாலும் -செய்யாளான-9-4-1- பிராட்டியை எப்போதும் ஒக்கக் கடாஷிக்கையாலும்
உபய விபூதி ஐஸ்வர் எத்தாலும் சிவந்து -பதிம் விச்வச்ய-என்கிற பிரமாணம் வேண்டாத படி
அனைத்துலகமுடைய அரவிந்த லோசனனை-6-7-10-என்கிறபடியே
சர்வேஸ்வரத்வ சிஹ்னமாய்-வேறு ஒரு அழகில் செல்ல ஒட்டாதே தனக்கே அற்றுத் தீரும்படி பண்ணி –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை–2-6-3-என்கிறபடியே -த்ரிபாத் விபூதியும் எழுத்து வாங்கிக் கூப்பிடும்படி பண்ணக் கடவதாய்-குளிர்ந்து செவ்வி பெற்று பெரிய பெருமாள் திருக் கண்கள் போலே
கரியாவகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி -அமலனாதி -8-இலங்கொளி சோரவிந்தம்-பெரிய திரு -2-5-8-போன்று நீண்டு
மிதோபத்த ஸ்பர்த ஸ்புரித ஸபரத்வந்த்வ லளிதங்களாய்-அழகு ஓலக்கம் கிளம்பினால் அடையாளங்களான தூது செய் கண்களையும் -9-9-9-
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -7-7-2-என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கோடி மூக்கையும் –5-5-6-
அதினுடைய பல்லவோல்லாஸம் போலே இருக்கிற திவ்ய கபோலங்களையும்
அதினுடைய நவகு ஸூமம் போலே யாய் -பண்ணிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து -9-2-5-என்கிறபடியே பூர்ணசந்த்ரன் முழு  நிலாவைச் சொரிந்தால் போலே திரு முத்தின் ஒளியை ப்ரவஹிக்கிற ஸ்மிதத்தையும்
கோலத் திரள் பவளக் கொழும் துண்டம் போலே யாய் -7-7-3-பேச்சில் செல்ல ஒட்டாதே வாய்கரையிலே நீச்சாம்படி பண்ணி நட்டாற்றிலே தெப்பத்தைப் பதிப்பாரைப் போலே
அது பவபரிகரமான சிந்தையைக் கவர்ந்து கூப்பிடும்படி பண்ணக் கடவதாய் -கள்வப் பணி மொழிகளுக்கு -10-3-4-ஆகாரமான திருவதரத்தையும்
இலகு விலகு மகர குண்டலத்தன் –8-8-1-என்கிறபடியே ப்ரீத்யதிசயத்தாலே சிரசம்பநம் பண்ணுகையாலே அசைந்து
திகந்தங்களிலே  மூட்டி -தேஜஸ் ஸூ அலை எறிந்து லாவண்யா சாகரத்திலே ஏறித் தள்ளுகிற மின்னு மா மணி மகர குண்டலங்களையும் -பெரிய திரு -8-1-3-
காந்தி சைத்ய மார்த்தவ சௌரப்யாதி குணங்களாலே சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து -பெரியாழ்வார்  -1-4-3-என்கிறபடியே
சகல கலா பூரணமாய் சர்வ ஆஹ்லாத கரமாய் மறுக் கழற்றின சந்திர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் தோற்பிக்கக் கடவதாய்
கிட்டினாரைபிச்சேற்றி -மையலேற்றி மயக்கும் மாய மந்த்ரமான -நாச் -2-4-கோளிழை வாண் முகத்தையும் -7-7-8-நாய்ச்சிமாருடைய ஹஸ்த ஆபணங்களாலே முத்ரிதமாய்  க்ரமுக தருண க்ரீவா கம்பு பிரதிமமான திருக் கழுத்தையும்
நாய்ச்சிமாருடைய திருச் செவிப் பூக்களாலும் கர்ண பூஷணங்களாலும் விகசிதமான திருக் குழல் கற்றையாலும் உண்டான விமர்த்தத்தாலே
பாஹூம் பூஜக போகாபம் உபதாயாரி ஸூ தன-சயனே சோத்த மாங்கே ந சீதயா சோபிதம் புறா -யுத்த -21-6-என்கிறபடியே -அலங்க்ருதங்களாய்
இரண்டு அட்டத்திலும் மரகத கிரியைக் கடைந்து மடுத்தால் போலே திண்ணியவாய் உபய விபூதியையும் தன நிழலிலே நோக்கக் கடவனாய்
கணையத்துக்கு உள்ளே இருப்பாரைப் போலே தன்னை அண்டை கொள்ளுகையாலே சம்சாரத்திலே இருக்கச் செய்தேயும் நிர்ப்பரனாம் படி பண்ணி
அலம் புரிந்த -திரு நெடும் தாண்ட -6-என்கிறபடியே தனக்கு உபய விபூதியையும் வழங்கி திவ்ய அஸ்த்ர புஷ்பிதங்களாய் இருக்கிற கற்பகக் காவான நரபல தோள்களையும் -6-6-6-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் -நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்  -6-10-10-என்னும்படி பிச்சேற்றக் கடவதாய்
அவள் திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுக் குழம்பாலும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாருடைய கொங்கை மேல் கும்குமத்தின் -நாச் -8-7-குழம்பாலும் அலங்க்ருதமாய்-வனமாலா விராஜிதமாய்
பெரிய பிராட்டியாருக்கு ஹிரண்ய பிரகாரமான கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் -அமலனாதி-9-ஸ்ரீ கௌஸ்துபம் தொடக்கமான குருமா மணிப் பூண் குழாவித் திகழுகிற -பெரியாழ்வார் -1-2-10-அழகிய திரு மார்பையும்
காளமேகத்தில் மின்கொடி படர்ந்தாள் போலே திரு மேனிக்குப் பரப்பாக ரசாவஹமாய் அழகு வெள்ளத்துக்கு அணை கட்டினால் போலே இருக்கிற வெண் புரி நூலையும் -திருவிருத்தம் -79-
உள்ளத்துள் நின்று உலாகின்றதே -அமலனாதி -4-என்கிறபடியே நித்ய முக்தருடைய திரு உள்ளங்களிலே அழகு செண்டேறுகிற-திரு வுதர பந்தத்தையும் –
சௌந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால்   போலே நெஞ்சையும் கண்ணையும் சுழி யாறு படுத்துகிற திரு வுந்தியையும்
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும் திரு வாழியையும் சந்திர ஆதித்யர்களாகக் கருதி  -ஆங்கு மலரும் குவியும் -மூன்றாம் திரு -67-என்கிறபடியே அலருவது குவிவதாய்-விதி சிவ நிதானமான  நாபீ பத்மத்தையும் –
துடி சேர் இடையையும் -8-5-3-
சந்த்யாராக ரஞ்சிதமான ஆகாசம் போலே இருக்கிற திருவரைக்குப் பரப்பாக ரசாவஹமாய் திருவரை பூத்தால் போலே இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும் -அமலனாதி -3-
ரம்பாஸ் தம்பாதி கம்பீரமான திருத் தொடைகளையும்
தாமரை நாளம் போலே கண்ட கிதங்களான திருக் கணைக் கால்களையும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ரா லாஞ்சனமாய் -நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி அத்யந்தம் ம்ருதுக்களாய்
தேனே மலரும் -1-5-5-என்கிறபடியே நிரதிசய போக்யங்களான துயரறு சுடரடிகளையும் -1-1-1-
லாவண்ய சாகரத்தினுடைய திரை ஒழுங்கு போலே இருக்கிற திரு விரல்களையும்
அதிலே அநேக சந்த்ரர்கள் தோற்றினால் போலே இருக்கிற திவ்ய நகங்களையும்
வயிர வுருக்காய் ஆண்களையும் பெண்ணுடை யுடுத்தி பந்துக்களோடு உறவு அறுத்து நாட்டைப் பகை விளைத்து
சேணுயர் வானத்து இருக்கும் தேவபிரான் தன்னை -5-3-9-குதிரியாய் மடலூர்தும் -5-3-9-என்கிறபடியே கண்ட போதே கையும் மடலுமாய்க் கொண்டு புறப்படும்படி பண்ணக் கடவதாய்
கண்டபோதே எல்லா விடாயும் கெட்டு-கண்ட கண்கள் மயிர் எறியும்படி இருண்டு குளிர்ந்து சாம்யா பன்னரான ஸூ ரிகளுடைய நெஞ்சையும் கண்ணையும்
இன்னார் என்று அறியேன் -பெரிய திரு -10-10-9-பண்டு இவரைக்கண்டது எவ் ஊரில் -பெரிய திரு-8-1-9-என்று மதி மயங்கும்படி பண்ணக் கடவதாய்
சகல ஜன ஜீவாதுவாய் -வைதக்த்ய வித்யாக்ருஹமாய் மநோரதாநாம் அபூமியாய் சருத்யந்த வாக்ய சர்வஸ்வமாய் –
மாணிக்கச் செப்பிலே  பொன்னையிட்டுபோலே இருக்கிற பொன்னுருவான திவ்யாத்மா -திரு நெடும் தாண்டகம் -1-ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
ஒன்றுக்கு ஓன்று தள்ளி இட்டளத்தில் வெள்ளம் போலே சுழித்து நின்று முழாவுகிற திவ்ய ஆயுத ஆபரணங்க ளுடைய-சோதி வெள்ளத்தினுள்ளே -5-5-10-உன்நேயமான கரிய கோலத் திரு உருவையும் -கண்ணி நுண் -3-
நித்ய ஸூரிகள் அடுத்து அடித்துப் பார்க்கிற பார்வையும் கூட பொறாது எண்ணும்படியான சௌகுமாரத்தையும்
பெரிய பிராட்டியாருடைய வடிக்கோல வாள் நெடும் கண்களுக்கு -இரண்டாம் திரு -82-நித்ய லஷ்யம் ஆகையாலே -அரும்பு என்றும் அலர் என்றும் -பெரிய திரு -7-10-1-சொள்ளலாம்படியான செவ்வியையும் –
கிண்ணகத்துக்கு படலிட்டால் போலே இருக்கிற மெய்யமர் பல் கலன்கலையும்-6-6-7-
நித்ய ஸூ ரிகளைக் கொள்ளையூட்டிக் கொண்டு -விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தைத் திறந்து விட்டால் போலே சகல ஸ்ரமங்களும் ஆறும்படி குளிர்ந்து தெளிந்து
கநக கிரிரை உருக்கிக் கடலிலே விளாசினால் போலே செம்பொனே திகழுகிற -1-10-9-ச்யாமமான திரு மேனி ஒளியாலே
விஸ்வ மாப்யாயயன் காந்த்யா பூர்ணந்த்வ யுத துல்யயா -சாத்வாத சம்ஹிதை -2-70-என்கிறபடியே
சகல ஜகத்தையும் ஆப்யாயனம் பண்ணி தெரு வெல்லாம் காவி கமழ் -9-6-1-என்கிறபடியே கண்டவிடம் எங்கும் புறப்பட்டு ப்ரவஹிக்கிற திரு மேனியில் பரிமளத்தாலே
ஸ்ரீ வைகுண்டத்தை எங்கும் ஒக்கப் பரிமளிதமாக்கி ஆலம் கட்டியை விட்டு எறிந்தால் போலே உடம்பு எங்கும் வவ்வலிடும்படி குளிர்ந்து அரை ஷணம் ஆறில் நித்ய முக்தரை ஒரு நீர்ச் சாவி யாக்குகிற கடாஷ அம்ருத வ்ருஷ்டிகளாலே திவ்ய கோஷ்டியைத் தளிரும் முளிருமாக்கி
காம்பீர்ய மாதுர்யாத் அநவதிக குண காண பூஷிதங்களாய்
அதி மநோ ஹர திவ்ய பாபா கர்ப்பங்களாய் பூ அலர்ந்தால் போலே இருக்கிற திரு முகத்தை எங்கும் ஒக்கச் செவ்வி பெறுத்துவனவான
லீலா லாபங்களாலே ஸூ ரிகளுடைய ஹ்ருதயங்களை உகப்பியா நின்று கொண்டு உபய விபூதியையும் ஆசந பலத்தாலே ஜெயித்து —

த்ருதிய பிரகரணம் முற்றிற்று

————————————————————————————————————————————————————————————————————————————————————-

சதுரத்த பிரகரணம் –

ஏழுலகும் தனிக்கோல் செல்ல -குழுமித் தேவர் குழாங்கள் கை தொழ-5-5-10- எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனை –
காண்பது எஜ்ஞான்று கொலோ -5-9-6–காட்டீரானீர்-பெரிய திரு மொழி -6-3-4- என்கிற இலவு தீர
த்ருஷ்ட ஏவ ஹி நஸ் சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்யா -83-9-என்று இவன் மநோ ரதித்துக் கொண்டு சென்றபடியே -கண்ணாரக் கண்டு –
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மாதே நாராயணாய நம-ஸ்ரீ வைகுண்ட கத்யம் -என்று ஹர்ஷ பரவசனாய் விழுந்து எழுந்திருந்து
பெரிய ப்ரீதியோடு சென்று பாத பீடத்திலே அடியிட்டு திவ்ய சிம்ஹாசனத்திலே ஏற -அவனும் இவனைக் கண்டு அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-14-என்கிற ஆகாரம் குலைந்து
சந்த்ரனைக் கண்ட கடல் போலே விக்ருதனாய் தன்னைப் பிரிந்து நெடு நாள் தரைக்கிடை கிடந்த இழவு தீர –
ஆக்ராய ராமச்தம் மூர்த்நி பரிஷ்வஜ்ய ச ராகவ அங்கே பரதமாரோப்ய பர்யப்ருச்சத் சமாஹித -அயோத்யா -100-3-என்கிறபடியே
மடியிலே வைத்து ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரனையும் அணைத்தால் போலே அனைத்து
பக்த்யதிசயத்தாலே -தம் ப்ரஹ்மாஹ கோ அசீதி -கௌஷீ -1-52-என்கிறபடியே நீ யார் என்று கேட்க –
அஹம் பிரஹ்மாஸ்மி-தை நா -1-40-என்று நான் ராஜகுமாரன் என்ன –
நீ இத்தனை காலம் செய்தது ஏன் என்று கேட்க –
சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் -பெரிய திரு -6-3-4-என்ன
நீ அத்தால் பெற்ற பலம் ஏது என்று கேட்க –
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் –பெரிய திரு -6-3-4-என்ன –
பின்பு நீ செய்தது என் -என்று கேட்க -போந்தேன் -என்ன -நீ போந்த விரகென் -என்ன -புண்ணியனே -என்ன
நீ அதினின்றும் போந்து செய்தது என்-என்ன –
உன்னை  எய்தினேன் – என்ன -நம்மைக் கிட்டின விடத்தில் நீ பெற்ற பிரயோஜனம் என் என்ன –
என் தீ வினைகள் தீர்ந்தேன் என்ன -செய்தது வாய்த்துச் செல்வனாய்-நலமந்த மில்லதோர் நாட்டில் வர்த்திக்கப் பெறாதே -2-8-4-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6- என்கிற கொடு உலகத்திலே நெடும் காலம் அலமர்ந்தாயே-
பலமுந்து சீரில் படியாதே பன்மா மாயப் பிறவியிலே -3-2-2-படிந்து கோவு பட்டாயே –
ஈறிலின்பத் திரு வெள்ளத்தை இழந்து -2-6-8-தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்திலே ஆழ்ந்து நித்ய துக்கிதனானாயே-
அதனைப் பிழை எனக் கருதி -பெரிய திரு -1-6-1-நம்மைப் பற்றி நம்மைக் காண வேணும் என்று ஆசைப் பட்ட போதே வந்து முகம் காட்டப் பெற்றிலோமே –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் –5-8-4-என்கிறபடியே நாம் இருந்த தேசத்தை நோக்கி அழுவது தொழுவதாய் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9-என்றும் -எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவன் -3-2-1-என்பதாய்க் கொண்டு நோவு படும்படி தாழ்ந்தோமே-
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் -5-4-என்று கிலேசித்த நீ
அதினின்றும் கரை ஏறி
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ -3-2-2-என்கிற இழவு தீர நம்மைக் கிட்டப் பெற்றாயே –
உள்ளுளாவிஉலர்ந்து உலர்ந்து –2-4-7-என்கிற தாபமாறகூடியிருந்து குளிரப் பெற்றாயே –
நம்முடைய ஸ்ருஷ்ட்யாதி திவ்யாபரங்கள் சபலம் ஆயிற்றே –
ப்ரணஷ்டச்ய யதாலாப யதா ஹர்ஷோ மஹோதயே-ததை வாக மனம் மன்யே ஸ்வாகதம் தே மஹாமுநே -பால -18-53-என்கிறபடியே நமக்குக் கிடையாதது கிடைத்ததே –
உன்னுடைய வரவாலே இத்தேசம் சநாதம் ஆயிற்றே -இக்கோஷ்டிக்கு நாயக ரத்னம் போலே இருக்க நீ கிட்டி ஔஜ்வல்யத்தை உண்டாக்கினாயே-
நடந்த கால்கள் நொந்தவோ -திருச்சந்த -61-என்றும் -மநோ ஹரிஸ் சாடுபிரார் த்ரயன் முதா-என்கிறபடி  ஏத்தாளிகளைப் போலே ஏத்தி
ஒக மேக ஸ்வ நத்தாலே மயில் போலே ஆலிக்கும்படி பண்ணி -நோயெல்லாம் பெய்தோர்  ஆக்கையிலே அகப்பட்டு -பெரிய திரு -9-7-7-
-நெடும் காலம் நோவு பட்டு -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனைக் கிட்டி -பெரியாழ்வார் -5-3-6-
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து-2-6-4–திருவருள் மூழ்கின இவனை –8-9-5-
நோய் விட்டுக் குளித்த புத்ரனைப் பிதா பார்த்துக் கொண்டே இருக்குமா போலேயும் –
மாயக் கூத்தனுக்கு பிழைத்த ஆழ்வாரைப் பார்த்துக் கொண்டே இருக்குமா போலேயும் –
தஸ்ய தத்வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத் வச்சா சாந்த்வயிதவை நம் லோக நாப்யாம் பிபந்நிவ-யுத்த -19-7-என்று
ஸ்ரீ விபீஷணப் பெருமாளைப் பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலேயும்
என்னை நோக்காது ஒழிவதே -திருமாலை -36-என்கிற இழவி தீர தாமரைக் கண்களால் நோக்கி நெடுநாள் பட்ட விடாய் எல்லாம் மாற
ஒருங்கே மருந்து கிடந்தது அலர்ந்த மென் கால் கமலத் தடம் போலே இருக்கிற -திருவிருத்தம் -42-
பெரும் கண் மலர்ப் புண்டரீகங்களை-திருவிருத்தம் -45-இவன் பக்கலிலே ஒருமடைப் பட வைத்து
எங்கும் பக்க நோக்கு அறியாதே -2-6-2-தாயே தந்தையிலே-பெரிய திரு -1-9-திருமாங்கல் ஆழ்வார் மநோ ரதித்தது போலேயும்
இவன் மநோ ரதித்த மநோ ரதங்களை எல்லாம் சபலமாக்கி
உருக்காட்டாதே ஒளிப்பாயோ-6-9-5-என்கிற இழவு தீர
நாயமாத்மா ப்ரவசநேன லப்ய நமேதயா ந பஹூ நா ஸ்ருதே ந –யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்  ஸ்வாம்-கட -1-2-23-என்கிறபடியே –
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டி -பெரிய திரு -4-9-4-நல்கி என்னை விடான் -1-10-8-என்கிறபடியே விடாதே –
ஏஷசர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத – மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ்  தஸ்ய மஹாதமன-யுத்த -1-14-என்கிறபடியே விட்டு விட்டு அணைத்து-
கிந்நு ச்யாச்சித்தாமோ ஹோ அயம் பவேத் வாதகதிஸ் த்வியம் –உன்மாதஜோ விகாரோ வா ச்யாதி யம் மிருக த்ருஷ்ணிகா–சுந்தர -34-24-என்றும்
மருள் தானீதோ-8-7-3- என்கிறபடியே நிரதிசய வ்யாமோஹத்தைப் பண்ணி பெரிய பிராட்டியார் திருக் கையிலே காட்டிக் கொடுக்க
கம்ச வத அநந்தரம் கிருஷ்ணனைக் கண்ட தேவகியாரைப் போலே விம்மிப்  பாய்கிற ஸ்தன்யத்தாலே உடம்பு எங்கும் நனையும் படி யணைத்து
உபய விபூதி ஐஸ்வர் யத்தையும் கொடுக்க -பூ வளரும் உந்தி திரு மா மகள் அருள் பெற்று -பெரிய திரு -11-6-10-மடியில் நின்றும் இழிந்து போந்து
செய்யவுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -பெருமாள் -6-7-என்கிறபடியே முன்பே போந்து முன்புத்தை அழகை அனுபவித்து
கிண்ணகத்தை எதிர் செறிக்க ஒண்ணாதா போலே நேர் நின்று அனுபவிக்க ஒண்ணாமை யாலே அட்டத்திலே போந்து
அங்குத்தை அழகை அனுபவித்து அது விட்டுப் பூட்டா விடில் தரிக்க ஒண்ணாமை யாலே பின்னே போந்து பின்புத்தை அழகை அனுபவித்து
பூர்வாங்காத் அதிகம் பராங்க கலஹம் -என்று அதில் முன்பு தானே நன்றாய் இருக்கையாலே திரியவும் முன்னே போந்து
சௌந்தர்ய தரங்க தாடன தரள சித்தவ்ருத்தியாய்-உத்தம் சிதாஞ்சலியாய் வளைய வளைய வந்து
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனியஞ்சாந்து–இழுசிய கோலமிருந்த வாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்   அழகியதாம் இவரார் கொல் என்ன – பெரிய திரு -2-8-7-என்றும்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திரு -9-2-1- என்று விஸ்மித ஹ்ருதயனாய் -அந்தாமத் தன்பு -2-5-முடிச் சோதி -2-5- தொடக்கமான வற்றில்
நம்மாழ்வார் அனுபவித்தால் போலே தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா -சாந்தோக்ய -7-23-என்கிறபடியே புறம்பு ஒன்றில் நெஞ்சு செல்லாதே –
ஹாவு ஹாவு ஹாவு அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம் -தை ப்ருகு -என்றும்
அல்லி மலரால் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே -பெரிய திரு -4-3-6-என்றும் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே -4-9-10-என்றும்
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-என்றும்
பிறந்தும் செத்தும் நின்றிடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-7-7-என்றும்
ப்ரீதிக்குப் போக்கு விட்டு வாயாரப் புகல -ஸ்ரீ வைகுண்ட நாதனும்
வானாட மரும் குளிர் விழிகளாலே கடாஷித்து -திருவிருத்தம் -63-ஸஸ்மிதமாக ஸ்நிகத கம்பீர மதுரமான பேச்சாலே –
முகப்பே கூவி -8-5-7-
நின் செம்மா பாதமபற்புத் தலை  சேர்த்து -2-9-1-என்று இவன் அபேஷித்த படியே
மலர் மகள் பிடிக்கும் -9-2-10-கமலம் அன்ன குறை கழல்களாலே-4-3-6- உத்தம அங்கத்தை அலங்கரித்து
தன் தாளின் கீழ் சேர்த்து -7-5-10-நித்ய கைங்கர்யத்திலே நியோகிக்க -தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகப் பெற்று -10-4-9- என்றும்
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்கிற அபிநிவேச அதிசயத்தாலே நாநா தேஹன்களைப் பரிக்ரஹித்து
அசேஷ சேஷ வ்ருத்திகளிலும் அந்வயித்து அஸ்தான ரஷா வ்யச நிகளான நித்ய சூரிகளோடே கூட
சூழ்ந்து இருந்து மங்களா சாசனம் பண்ணி -திருப்பல்லாண்டு -12-
சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்து -8-10-5-என்கிறபடியே
அம்ருத சாகராந்தர் நிமக்ன சர்வா வயவனாய்க் கொண்டு யாவத் காலம் இருக்கும் –

ஸ்ரீ அர்ச்சிராதி  முற்றிற்று–

—————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ ஸார சங்க்ரஹம் —

May 12, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————————————————————————————————

அகில ஜகத்தி தாநுசாசநபரபான  வேதத்திலும்
வேத உபப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருத்தங்களானச்ம்ருதீதிஹாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய்
சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்வ ம்மாய்
நம் ஆச்சார்யர்களுக்கு ஆபத் தனமாய் இருந்துள்ள அர்த்த தவத்தையும் பிரதிபாதிக்கையாலே
த்வயம் என்று திரு நாமத்தை யுடைத்தாய் இருந்துள்ள வாக்த்வயம் -பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

அதாகிறது –
1–ஸ்ரீ யபதித்வமும் –
2–நாராயணத்வமும்-
3–நாராயணனுடைய சர்வ லோக சரண்யமான சரணாரவிந்த யுகளமும்-
4–அதினுடைய ப்ராபகத்வமும் –
5–தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள ப்ரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகிலாத்ம நித்ய கைங்கர்ய பிரதாநார்த்தமான நித்ய சம்பந்தமும்
7- கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும் –
8- சர்வ ஸ்வாமித்வத்வமும்
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமும் ஆகிற
அர்த்த விசேஷங்கள் –

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷத்தின் யுடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய்
உபநிஷத்தாய்
இருந்துள்ள -திருவாய்மொழியில் பத்துப் பாத்தாலும் இப்பத்து அர்த்தத்தையும்
பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்துக் கொண்டு போருவர்கள் –

அதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்-1-3-1- என்றும்
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திரு மகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும்
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்றும்
பூ மகளார் தனிக் கேள்வன்-1-9-3- -என்றும்
மைந்தனை மலராள்  மணவாளனை –1-10-4- என்றும்
ஸ்ரீ யபதித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து–

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7- என்றும்
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-2-7-1- என்றும்
நாரணன் முழு வேழுலகுக்கும் நாதன் –2-7-2- என்றும்
நாராயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மூன்றாம் பத்தால் –
நாண் மலரடித் தாமரை -3-3-9- என்றும்
அங்கதிரடியன் -3-4-3- என்றும்
அவன் பாத பங்கயம் -3-6-4- என்றும்
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10- என்றும்
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணனுடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம்  பிரதிபாதிதமாய்த்து –

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி யுய்த்தவர்   -4-2-8- என்றும்
வல்வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11- என்றும்
தொல் வினை தீர -4-5-2- என்றும்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய -4-5-4- என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-7-7- என்றும்
பிறந்தும் செத்தும் நின்று இடறும்  பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9- என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிகள் கூட்டினை -4-9-9- என்றும்
அக்தே யுய்யப் புகுமாறு -4-2-11- என்றும்
உய்வுபாயம் மற்றின்மை தேறி -4-3-11- என்றும்
அநிஷ்ட நிவ்ருத்தி
இஷ்டபிராப்தி  கரத்வ
லஷணமான ப்ராபகத்வம்   பிரதிபாதிதமாய்த்து-

அஞ்சாம் பத்தால் —
தமியேனுக்கு அருளாய் -5-7-2- என்றும் –
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10- என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3-என்றும் –
அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக் கொண்ட -5-8-11-என்றும் –
நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமானடி மேல் சேமம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் -5-9-11- என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11- என்றும்
நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11- என்றும் –
தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள ப்ரார்த்த நாகர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதமாய்த்து –

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்திருந்து –6-5-8- என்றும்
அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11- என்றும் –
ஒசிந்த வொண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும் –
என் திருமார்வற்கு 6–8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே -6-9-3- என்றும்
கைங்கர்ய ப்ரதா நார்த்தமான லஷ்மீ தத் வல்லபர்களுடைய நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து-

ஏழாம் பத்தால் –
கன்னலே யமுதே -7-1-2-என்றும் –
கொடியேன் பருகின்னமுதே -7-1-7- என்றும் –
அலைகடல் கடைந்த ஆரமுதே -7-2-5- என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ–7-9-9- என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும் –
கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யத்வம் பிரதிபாதித்த மாய்த்து –

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் -8-1-3- என்றும் –
விண்ணவர் கோன் நாங்கள் கோனை -8-2-2- என்றும் –
அமர்ந்த நாதனை -8-4-10- என்றும் –
மூவுலகாளி –8-9-5- என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11- என்றும்
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதமாய்த்து –

ஒன்பதாம் பத்தால் –
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து-9-2-1- என்றும் –
நின் தீர்த்தவடிமைக் குற்றேவல் செய்து -9-2-2- என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3- என்றும் –
கொடு வினையெனும் பிடிக்க -9-2-10- என்றும்
உறுவதிது வென்று  உனக்காட்பட்டு -9-4-4- என்றும் –
ஆட்கொள்வான் ஒத்து -9-6-7- என்றும் –
நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4- என்றும் –
நித்ய கைங்கர்யம் ப்ரதி பாதிதமாய்த்து —

பத்தாம் பத்தால் –
துயர் கெடும் கடிது-10-1-7- என்றும் –
கெடுமிடராய  எல்லாம் -10-2-1- என்றும் –
எழுமையும் ஏதஞ்சாரா-10-2-2-என்றும் –
தீரும் நோய் வினைகள் எல்லாம் -10-2-3- என்றும் –
இப்பிறப்பு அறுக்கும் -10-2-5- என்றும் –
உன்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9- என்றும் –
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7- என்றும் –
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3- என்றும் –
விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம் -10-4-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9- என்றும் –
கடு நரகம் புகல் ஒழித்த -10-6-11-
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் 10-8-5– என்றும் –
பிறவி கெடுத்தேன் -10-8-3- என்றும் –
அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -10-8-7- என்றும் –
அவா வற்று வீடு பெற்ற -10-10-11-என்றும்
கைங்கர்ய ப்ரதி பந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதமாய்த்து –

இப்படி
ஸ்ரீ யபதித்வ பிரமுகங்களாய்-
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள உபாதேய அர்த்தங்களை
பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள –
வாக்யத்வமும் –
திருவாய் மொழியும் –
பகவத் சரணார்த்தி களாய்-அநந்ய உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
போக ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் —

ஸார சங்க்ரஹம் முற்றிற்று  –

————————————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் —-

May 11, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————————————————————————————————

பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி

ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய
அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள் –
அவை எவை என்னில் –
1- விசேஷண விசேஷ்ய சம்பந்தம் –
2- ரஷ்ய ரஷக சம்பந்தம் –
3-சேஷ சேஷி சம்பந்தம் –
4-பர்த்ரு பார்யா சம்பந்தம் –
5-ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் –
6-ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் –
7-சரீர சரீரி சம்பந்தம் –
8-தார்யா தாரக சம்பந்தம் –
9- போக்த்ரு போகய சம்பந்தம் –

1–இதில் -விசேஷண விசேஷ்ய சம்பந்தம் ஆவது –
a -பிரக்ருத்யர்த்த  சங்கா நிவர்த்தகமாய்-
b –ஆஸ்ரய ஆஸ்ரயியாய்-
c –வ்யாவர்த்தக வ்யாவர்த்தமாய் இருப்பது ஓன்று —
a -பிரக்ருத்யர்த்த  சங்கா நிவர்த்தகமாகையாவது-
சமஸ்த சப்த காரணமான அகார ஸ்வ பாவத்தாலே -தத் வாச்யனும்  சமஸ்த சப்த வாச்யமான சிதசித்துக்களுக்குக் காரணமாம் இடத்தில்
நித்யங்கள் ஆனவை கார்யமாம் இடத்தில் அநித்யங்கள்ஆமே -என்கிற சங்கை உதிக்க –
அவை நித்ய ப்ரஹ்ம விசேஷணம் ஆகையாலே அநித்யத்வம் சங்க நீயம் என்று பரிஹரிக்குமதாகை —
b –ஆஸ்ரய ஆஸ்ரயியாவது–சௌக்ல்யம் படத்தைப் பற்றி யல்லது நில்லாதாப் போலே சிதசித்துக்கள் பகவத் ஸ்வ ரூபத்தைப் பற்றி யல்லது சத்தையற்று இருக்காய் –
c –வ்யாவர்த்தக வ்யாவர்த்தமாகையாவது -இவை பகவத் ஸ்வ ரூபத்துக்கு உண்டான இதர வ்யாவ்ருத்திக்கு பிரகாசகமாய்
வ்யாவர்த்யமான பகவத் ஸ்வ ரூபம் வ்யாவர்த்தகமான இவற்றை ஒழிய பிரகாசியாத படியுமாய் இருக்கை-ஆக -நித்ய கார்யா நாதித்வ ஸூசகம் இந்த சம்பந்தம் –

2- ரஷ்ய ரஷக சம்பந்தமாகை யாவது –
a –தாது சித்தமாய்
b -பிரக்ருத்யர்த்தா நந்தர பாவியாய்
c -உபய ஸ்வரூப உசிதமாய் இருப்பதொன்று —
a –தாது சித்தமாகையாவது –
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்தமான ரஷணம்-நிர்விஷயமாயும் நிராஸ்ரயமாயும் நில்லாமையாலே –
யேந ஜாதாநி ஜீவநதி -இத்யாதி பிரசித்தமான ரஷ்ய ரஷக ஸ்வ ரூபா பிரதர்சனமாகை –
b -பிரக்ருத்யர்த்தா நந்தர பாவித்வமாகை யாவது –
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் –திருவாய் -2-8-5–என்கிறபடியே -பிரக்ருத்யர்த்தமான காரணத்வத்துக்கு அநந்தரம் வேண்டுவது ஒன்றாகி –
c -உபய ஸ்வரூப உசிதமாகையாவது –
ரஷ்ய ரஷக ஸ்வ ரூபமான பாரதந்த்ர்யா ஸ்வா தந்த்ர்யங்களுக்குச் சேருகை-
பர தந்த்ரனுக்கு ஸ்வ ரஷண  அந்வயம் கூடாமையைக் காட்டும் இந்த சம்பந்தம் –

3-சேஷ சேஷி சம்பந்தமாவது –
a-விபக்தி சித்தமாய்
b -தாத்வர்த்த பரார்த்ததா பிரகாசகமாய்
c -போகாநுரூப தாத தர்சகமாய் இருப்பதொன்று –
a-விபக்தி சித்தமாகையாவது -அகாரத்தில் ஏறிக் கழிந்த சதுர்த்தியில் உதித்த சேஷத்வம்
யஸ் யாஸ்மி நதமந்தரேமி-இத்யாதி பிரசித்தமான சேஷ சேஷிகளைக் காட்டுகை —
b -தாத்வர்த்த பரார்த்ததா பிரகாசகமாகையாவது –
தாத்வர்த்தமான ரஷணம் சரீரியான சேஷி பிரயோஜனம் அத்தனை என்று காட்டுகை —
c -போகாநுரூப தாத தர்சகமாகையாவது –
சேஷ வஸ்து ஸ்வ ரூபம் சேஷி விநியோக அநுகுணமாய் இருக்கையாயிற்று நிலை நின்ற வேஷம் என்று காட்டுகை –
அதாவது -சேஷி சேஷத்வத்தை அழிய மாறி விநியோகிக்கும் இடத்தில் பிற்காலியாத முறை யுணர்த்தி
ஸ்வகத ஸ்வ ரூபா குணத்தையும் சாஹியாததொரு சம்பந்தம் –

4-பர்த்ரு பார்யா சம்பந்தமாவது –
a -உகார சித்தமாய் –
b -விபக்த்யர்த்த சோதகமாய்-
c  -ஸ்வரூப ப்ராரப்தமாய் இருப்பதொன்று –
a -உகார சித்தமாகையாவது –
உகார்த்தம் அவதாரண அர்த்தமாய் இருக்கை –
அதாவது ரஷகனான புருஷோத்தமனுக்கே ரஷ்யமான ஆத்ம ஸ்வ ரூபம் அற்றுத் தீர்ந்து இருக்கும் என்று தோற்றுகை-
b -விபக்த்யர்த்த சோதகமாகையாவது –
பதிவ்ரதையினுடைய சேஷத்வம் அனந்யார்ஹமாய் இருக்குமா போலே
லுப்த சதுர்த்யர்த்தமான பகவச் சேஷத்வம் அனந்யார்ஹம் என்று மறுக்களைந்து இருக்கை –
c  -ஸ்வரூப ப்ராரப்தமாகையாவது –
பர்த்ருத்வ  பார்யாத்வங்கள் பும்ஸ்த்ரீத்வத்துக்கு ஈடாமா போலே
பர்த்ரு பார்யா சம்பந்தம் ஸ்வாதந்த்ர்ய பாரதந்த்ர்யங்களுக்கு ஈடாகை –
அனந்யார்ஹ ப்ரசங்காஸஹம் இந்த சம்பந்தம் –

5—ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தமாகை யாவது –
a  -மகாரத்ஸ்யமாய்
b  -உகாரார்த்த அனுசந்தான அபேஷிதமாய்
c  -அசித் வ்யாவருத்தி வேஷமாய் இருப்பதொன்று –
a  -மகாரத்ஸ்யமாகையாவது –
மன ஜ்ஞானே -என்கிற ஜ்ஞான வாசியான மகாரம் காட்டுக்கிற ஜ்ஞாத்ரு த்வத்துக்கு ஜ்ஞேயம் பகவத் ஸ்வரூபாதி களாய்த் தோன்றுகை-
b  -உகாரார்த்த அனுசந்தான அபேஷிதமாகையாவது –
உகாரார்த்தமான பர்த்ரு பார்யா சம்பந்த அனுசந்தானத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் அபேஷிதமாகை-
c  -அசித் வ்யாவருத்தி வேஷமாகையாவது –
இந்த சம்பந்தங்களை அறிகையும்-ஜ்ஞேயமும் ஜ்ஞாதாவாகையும் –
ஜ்ஞேய அதீநமுமாய் தத் பிரயோஜநமுமாய் இருக்கும் இந்த ஜ்ஞாத்ருத்வம் என்று காட்டும் இந்த சம்பந்தம் –

6-ஸ்வ ஸ்வாமி சம்பந்தமாவது –
a  -நமஸ் சப்த தாத்பர்யமாய் –
b  -மகாரார்த்த நிபந்தன ப்ரம நாசகமாய் –
c  -ஸ்வா பாவிகமாய் –இருப்பதொன்று –
a  -நமஸ் சப்த தாத்பர்யமாகையாவது –
நமஸ் சப்தார்த்தமான அஹம் மமதா நிவ்ருத்தி -பலித்வ அபிமாநித்வங்களையும்
ஸ்வ கதம் அன்று -பரகதம் -என்று காட்டு -பலியுமாய் அபிமா நியுமான எம்பெருமானுடைமையுமாய்த் தோன்றுகை –
b  -மகாரார்த்த நிபந்தன ப்ரம நாசகமாகையாவது –
மகாரார்த்தமான ஜ்ஞாத்ருத்வ நிபந்தனமாய் வந்த கர்த்ருத்வ ப்ரமத்தை அறுக்குமதாகை  –
அதாவது -பராதீனமான ஸ்வ ரூபத்தின் குண விசேஷங்களும் பராதீனம்  என்று ஸ்வாதீநதா பிரதிபத்தியைக் கெடுக்கை
c  -ஸ்வா பாவிகமாகையாவது  —
அஹங்காராதிகளைப் போலே வந்தேறி யன்றிக்கே -ஸ்வ தவ மாத்மநி சஞ்சாதாம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
ஜீவ பரர்களுடைய ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் ஸ்வதஸ்  சித்தமாய்ப் பொருகை –
ஸ்வ த்துக்கு ஸ்வ ரஷண கர்த்ருத்வம் இல்லை என்றும் ஸ்வாமிக்கே அது தொழில் என்றும் காட்டுக்கிறது இந்த சம்பந்தம் –

7-சரீர சரீரி சம்பந்தமாவது –
a -நாராயண பதத்தில் சமாச விசேஷ சித்தமாய் –
b – நமஸ் சப்தார்த்த ஸ்வ ரூப பிரகாசகமாய்  –
c   -சாமாநாதி கரண்ய யோக்யமாய் இருப்பதொன்று —
a -நாராயண பதத்தில் சமாச விசேஷ சித்தமாகையாவது –
நாராயண பதத்தில் பஹூவ்ரீஹி சமாசத்திலே வ்யாப்யமான நாரங்கள் சரீரமாய் –
அந்தர் வ்யாப்தியாலே வ்யாபக ஸ்வ ரூபம் சரீரியாய்த்தோன்றுகை –
b – நமஸ் சப்தார்த்த ஸ்வ ரூப பிரகாசகமாகையாவது –
நமஸ் சப்தார்த்தமான ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் க்ருஹ ஷேத்ராதி சம்பந்தங்கள் போல் அன்றிக்கே அப்ருதக் சித்தமாய் இருக்கும் என்று காட்டுகை –
c   -சாமாநாதி கரண்ய யோக்யமாகையாவது –
ஸ்வ ரூப பேதத்தால் பின்ன பிரவ்ருத்தி நிமித்தமான ஜீவ பர ஸ்வரூபம் சரீர சரீரியான எயக்யத்தாலே ஓன்று என்னலாகை –
விசிஷ்டாத்வைத பிரகாசகம் இந்த சம்பந்தம் –

8-தார்யா தாரக சம்பந்தமாவது –
a – சமாசாந்தர சித்தமாய் –
b  -சரீர சரீரி சம்பந்தைக லஷணமாய்-
c  –  அசித விசேஷ ஸ்திதி ஹேதுவாய் இருப்பதொன்று-
a – சமாசாந்தர சித்தமாகையாவது –
நாராயண பதத்தில்,தத் புருஷ சமாச சித்தையான பஹிர்வ்யாப்தியாலே நார பத வாச்யங்கள் தார்யமாய் –
அயன பத வாச்யன் தாரகனாய்த் தோன்றுகை –
b  -சரீர சரீரி சம்பந்தைக லஷணமாகையாவது –
ஆதேயத்வ விதேயத்வ சேஷத்வ ரூபமான சரீர லஷணங்களிலும்
ஆதாரத்வ விதாயகத்வ சேஷித்வ ரூபமான சரீரி லஷணங்களிலும்
பிரதாமான ஆதேயத்வ ஆதாரத்வ ரூப லஷணம் ஒன்றாய்த் தோன்றுகை –
c  –  அசித விசேஷ ஸ்திதி ஹேதுவாகையாவது –
அநேந ஜீவே நாத்மநா நுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி-என்று அந்தர் வ்யாப்தி போலே
சேதன ஸ்திதி ப்ரதானமாகை அன்றிக்கே  -பாகிர் வியாப்தியாலே சேதன அசேதனங்கள்
இரண்டினுடையவும் வ்யவஸ்தி தஸ்வரூப ஸ்திதி வ்யாபாரங்களுக்குக் காரணமாய்த் தோன்றுகை –
சித அசித்தின் நித்ய ஸ்திதி காரணம் இந்த சம்பந்தம் –

9- போக்த்ரு போகய சம்பந்தமாவது –
a – சரம விபக்தி சித்தமாய் –
b  -பூர்வ சம்பந்த பிரயோஜன பிரதர்சகமாய் –
c  – பிரதி சம்பந்தி போக அநு ரூபமாய் இருப்பதொன்று –
a – சரம விபக்தி சித்தமாகையாவது –
ஆய -என்கிற சதுர்த்தி விபக்தியிலே அனந்யார்ஹ சேஷ பூதனான மகார வாச்யனுடைய சஹஜ சேஷவ்ருத்தி தோன்ற  –
அதில் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சரீரியான பரம சேஷிக்கேயாய்-சரீரமான சேஷபூதனுக்கு அன்று என்று இருக்கை-
b  -பூர்வ சம்பந்த பிரயோஜன பிரதர்சகமாகையாவது
சர்ப்ப விஷவத் தார்யா தாரகத்வங்கள் நிஷ் பிரயோஜனமாய் விடாதே
ரச நாரச வஸ்துவத் தார்ய தாரகங்களுக்கு அநு கூல க்ராஹ்ய க்ராஹக ரூப பிரயோசனத்தைக் காட்டுமதாகை –
c  – பிரதி சம்பந்தி போக அநு ரூபமாகையாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியான செஷியினுடைய கைங்கர்ய ரச அனுபவத்துக்கும்
கைங்கர்ய ஆஸ்ரயமான சேஷ பூதனுடைய சேஷி போக விருத்த  ரச த்வராஹித்யத்துக்கும் இடமாய் இருக்கை –
சேஷித்வத்திலும்  சேஷத்வத்திலும் மறுக் களைந்தது இந்த சம்பந்தம் –

இதில்
1- விசேஷண விசேஷ்ய சம்பந்த ஞானம் பிறக்கவே -காரணாந்தர சங்கை அறும்
2- ரஷ்ய ரஷக சம்பந்த ஞானம் பிறக்கவே -ரஷகாந்தர சங்கை அறும் –
3-சேஷ சேஷி சம்பந்த ஞானம் பிறக்கவே -சேஷ்யாந்தர சங்கை அறும் –
4-பர்த்ரு பார்யா சம்பந்த ஞானம் பிறக்கவே -அனந்யார்ஹ சங்கைஅறும் –
5-ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்த ஞானம் பிறக்கவே  ஜ்ஞேயாந்த்ர சங்கை அறும்
6-ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஞானம் பிறக்கவே ஸ்வா தந்த்ர்ய சங்கை அறும்
7-சரீர சரீரி சம்பந்த ஞானம் பிறக்கவே ஸ்வரூப ஐக்ய சங்கை அறும்
8-தார்யா தாரக சம்பந்த ஞானம் பிறக்கவே தாரகாந்தர சங்கை அறும் –
9- போக்த்ரு போகய சம்பந்த ஞானம் பிறக்கவே போத்ருத்வ சங்கை அறும் –

ஆக -நவவித சம்பந்தமும் அறிந்து ஆனந்தித்து இருக்கவும் –

ஸ்ரீ நவ வித சம்பந்தம் முற்றிற்று –

—————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவரத்ன மாலை —

May 10, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————————————————————————————————————

சரணாகதன் ஆனவன் –
1-தன்னையும் –
2-தனக்கு விரோதியான தேஹத்தையும் –
3- தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களையும் –
4-சம்சாரிகளையும் –
5- தேவதாந்தரங்களையும் –
6-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
7- ஆச்சார்களையும் –
8- பிராட்டியையும் –
9-ஈஸ்வரனையும் –
நினைத்து இருக்கும் படி எங்கனே என்னில் –

1- உடம்பில் வேறுபட்டு நித்யனாய் –
ஒருபடிப் பட்டு அணுவாய் –
ஞானத்தையும் ஆனந்தத்தையும் வடிவாக  யுடையனாய் –
ஜ்ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் –
எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று நினைத்தால் சொல்லுதல் செய்ய மாட்டாதே -எம்பெருமானுக்கே உரியனாய் –
தன் கார்யத்துக்கு தான் கடவன் அன்றிக்கே -அவனையே பலமாக யுடையனாய் இருக்கும் என்று
தன்னை நினைப்பான் –

2- தன்னை உள்ளபடி அறிய ஒட்டாதே விபரீத ஜ்ஞானத்தை ஜனிப்பித்து
இருபத்து நாலு தத்துவங்களினுடைய திரளாய்
அநித்யமாய்-
எப்போதும் ஒக்க பரிணமிக்கக்   கடவதாய்-
ஒரு நாளும் ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே அநந்த துக்கங்களை   விளைப்பிக்கக் கடவதாய் –
சப்தாதி விஷயங்களிலே மூட்டி நசிப்பிக்கும் என்று
தன் தேஹத்தை நினைப்பான் –

3-ஆத்ம ஜ்ஞானத்தையும்
பகவத் ஜ்ஞானத்தையும்
பகவத் விஷயத்தில் ருசியையும் த்வரையையும் குலைத்து
தேஹாத்மா அபிமானத்தையும்
அஹங்கார மமகாரங்களையும்
காம க்ரோதாதிகளையும் விளைப்பித்து
பலபடியாலும் -அனர்த்தத்தை பண்ணுவார்கள் என்று
தேஹத்தைப்   பற்றி வரும் பந்துக்களை நினைப்பான் —

4-பகவத் அனுபவத்துக்கும்
பகவத் கைங்கர்யத்துக்கும் விரோதிகளாய்
சம்சார வர்த்தகராய் இருப்பார்கள் என்று சம்சாரிகளை நினைப்பான் –

5-அஜ்ஞராய் அசக்தராய்
எம்பெருமான் பக்கலிலே பிறந்து
அவன் கொடுத்த பதங்களை யுடையராய்
எதிரிட்டு துர்மாநிகளாய் தங்களைப் போர பொலிய நினைத்து
நாட்டாரை பிரமிப்பித்து
அனர்த்தத்தைப் பண்ணுவார் சிலர் என்று தேவதாந்தரங்களை நினைப்பான் —

6-பகவத் ஜ்ஞானத்துக்கும்
இடற விஷய வைராக்யத்துக்கும்
பகவத் பக்திக்கும் வர்த்தகராய் –
-உசாத் துணையாய் –
பிராப்யத்துக்குஎல்லை நிலமாய் -இருப்பார்கள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைப்பான் –

7- தன் கடாஷத்தாலே என்னைத் திருத்தி
சர்வேஸ்வரன் கைக் கொள்ளுகைக்கு யோக்யனாம் படி பண்ணி
அவன் திருவடிகளிலே சேர்த்து –
அறியாதன அறிவித்து-திருவாய் -2-3-2-
ஸ்வாமியாய்  –
என்றும் ஒக்க அடிமை கொள்ளும் ம ஹோபகாரகன் -என்று ஆசார்யனை நினைப்பான்-

8- நம்முடைய சர்வ அபராதத்தையும் போருப்பித்து
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் குலைத்து
அவனுடைய காருண்ய வாத்சல்யாதி குணங்களைக் கிளப்பி –
நமக்கு புருஷகார பூதையாய்
மாதாவாய்
ஸ்வாமி நியாய்
ப்ராப்யையாய்—இருக்கும என்று பிராட்டியை நினைப்பான் –

9- சிருஷ்டி காலத்திலேயே சரீரத்தையும் இந்த்ரீயங்களையும் தந்து
அந்தர்யாமியாய் நின்று
சத்தையை நோக்கி –
அத்வேஷத்தையும்
ஆபிமுக்யதையும்
சத் சங்கதி தொடக்கமான ஆத்ம குணங்களையும் பிறப்பித்து
சதாசார்யனோடே சேர்த்து
நம்முடைய சர்வ அபராதங்களையும் பொறுத்து –
சம்சார சம்பந்தத்தையும்  கழித்து
அர்ச்சிராதி மார்க்கத்தையும் -பரமபதத்தையும் -குண அனுபவத்தையும் தந்து –
யாவதாத்மா பாவி நித்ய கைங்கர்யம் கொள்ளும் ஸ்வாமி என்று சர்வேஸ்வரனை நினைப்பான் –

நவார்த்த ரத்ன மாலேயம் சத் பிர்தார்யா சதா ஹ்ருதி
பாத்தா யோ நா அதியசசா  தம் ஜகத் குரும் ஆஸ்ரயே —

ஸ்ரீ நவ ரத்ன மாலை  முற்றிற்று-

—————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த -ஸ்ரீ சம்சார சாம்ராஜ்யம் —

May 10, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————————————————————————————————————–

துன்பக் கடலாய் -நாச் திருமொழி -12-10-
இருள் தரும் மா ஞாலமான-திருவாய் -10-6-1- சம்சாரத்துக்கு உள்வாயிலே பஞ்ச பூதங்களாலே சமைந்து
நவத்வாரே புரே -ஸ்ரீ கீதை -5-13-என்கிறபடியே -ஒன்பது வாசலான -பெரிய திரு -1-6-9-படை வீட்டுக்கு உள்வாயிலே
கொடுவினைத் தூறு –திருவாய் -3-2-9–யென்பதொரு தூறாய்
புக வழி தெரியும் அத்தனை ஒழியப் புறப்பட வழி தெரியாது இருப்பதொரு காட்டினுள்ளே
அநந்த க்லேச பாஜனமான மரத்தையிட்டு
அவித்யை என்கிற தேரைச் சமைத்து
அவஸ்தா சப்தகங்கள் என்கிற உருளைகளைச் சேர்த்து
ராகத் வேஷாதிகளாகிற குதிரைகளை அணைத்து
குண த்ரயங்கள் என்கிற திருக் குரும்பை ஊஞ்சலின் மேல்
கர்மம் என்கிற சிம்ஹாசனத்தையிட்டு
ருசி என்கிற மேல் விரிரை விரித்து
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூப அஸூபம்
நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -ப்ரஹ்ம விவர்த்தம் -பிரகிருதி கண்டம் -26-70-என்கிறபடியே
அனுபவித்து அன்றி மீள ஒட்டாது இருக்கிற உறு பிணிகள் -பெரியாழ்வார் -5-2-6-ஆகிற பார்யாவர்க்கம் பக்கத்தில் இருக்க
அந்தகாரம் ஆகிற விளக்கை ஏற்றி
அவசதுக்கள்ஆகிற தாஸ வர்க்கம் பரதோஷம் பர ஹிம்சை பர அனுவர்த்தனம் தொடக்கமான போகங்களை புஜிப்பிக்க புசித்து
அப்ரகாசித ஸ்வரூப ஸ்வ பாவனான தன்னை வாசனை என்கிற வீரத்தை இட்டுப் பார்த்து
தாபத் த்ரயங்கள் என்கிற விடாய்க் குடையின் கீழே பஞ்சவ்ருத்தி பிராணன்கள் ஆகிற புரோஹிதர்
சம்சாரத்துக்கு மூர்த்த அபிஷிக்தனாக்கி
க்யாதி லாப பூஜைகள் கொண்டாட
புண்ய பாபங்கள் ஆகிற சாமரமிரட்ட
அநேக வித துக்க பரம்பரைகள் அடுக்கொலியல் பணிமாற்ற
அஹங்கார மமகாரங்கள் ஆகிற ஆலவட்டம் பணிமாற
சதா துக்க வர்ஷிணி சுழற்றிப் பணிமாற
அச்ம்ருதி-ஒட்டிவட்டில் எடுக்க
அபி நிவேசம் காளாஞ்சி எடுக்க
விஷயாந்தர ருசி அடைப்பை எடுக்க
பூர்வ உத்தர ராகங்கள் ஆகிற ஆனை குதிரையோடே
வாத பித்த ச்லேஷ்மங்கள் ஆகிற மந்த்ரிகள் சேவிக்க
காம குரோத லோப மோஹ மத  மாத்சர்யம் தொடக்கமான பிரபுக்கள் சேவிக்க
பகவத் அபசார பாகவத் அபசார அசஹ்யா அபசார நாநா வித  அபசாரம் ஆகிற காலாள்கள் சேவிக்க
நித்ரா தேவி ஜ்யேஷ்டை தொடக்கமான பெண் பிள்ளைகள் சேவிக்க
ஆசை யாகிற பாசக் கயிற்றால் பிணைத்து
இந்த்ரியங்கள் ஆகிற மத களிறுகள் வலிக்க
காலம் ஆகிற சாரதி நடத்த
தேஹாத்மா அபிமானி வந்தான் –ஸ்வதந்த்ரன் வந்தான் -அந்ய சேஷ பூதன் வந்தான் -என்று காளங்கள் சிஹ்னங்கள் கலந்து பணிமாற-
மெல்லியல் யாக்கை கிருமி குருவில் மிளிர்ந்தந்தாங்கே செல்லிய செல்கை துலகை என் காணும் -திருவிருத்தம் -48-என்கிறபடி
தானும்தன் பரிகார பூதருமாய் ஸூகா னுபவம் பண்ணி –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -திரு விருத்தம் -95-என்கிறபடியே
புக்க புக்க சரீரங்கள் தோறும் அஹங்கார மமகாரங்களைப் பண்ணி -சத்தா தாரகனான சர்வேஸ்வரனை மறந்து
மொய்த்த வல் வினையுள் நின்று -திருமாலை -4-
த்ரிவித காரணங்களாலும் -பாதகம் மஹா பாதகம் தொடக்க மானவற்றாலே பொது போக்கிக் கொண்டு போருகிற காலத்திலே-
ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே -இவனுக்கு அத்வேஷம் பிறக்க —
அத்தாலே ரஷணத்துக்கு வழி கண்டு -களை எடுக்கக் கொடுத்த கோலைக் கொண்டு கண்ணைக் கலக்கிக் கொள்ளுவாரைப் போலே
நம் பக்கல் சேரக் கொடுத்த உடம்பைக் கொண்டு அகலுகைக்கு உறுப்பாக்கினான்-
பல் பிறவி நோற்றேன் -பெரிய திரு -1-9-8-என்று ஒரு ஜன்மத்திலே அநேக ஜென்மத்துக்கு வேண்டும் பாபங்களை ஆர்ஜித்துக் கொள்ளுகிற
இவனை நம் பக்கலிலே சேர்த்துக் கொள்ளும் விரகேதோ -என்று திரு உள்ளம் பற்றி -வல வட்டத்திலே –
தூது செய் கண்கள் -திருவாய் -9-9-9- கொண்டு ஓன்று பேசி
ஆழ்வானும்-கருதுமிடம் பொருதுமவன் -திருவாய் -10-6-8-ஆகையாலே -தன பரிகார பூதரை ஏவிவிட
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்து -திருவாய் -5-2-6-என்றும்
அருள் என்னும் ஒள் வாளுருவி -இராமானுச-93-என்றும் –
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59- என்கிறபடியே
விரோதி வர்க்கத்தை அடைய அழிவு செய்து ஜ்ஞானத்தைக் கொடுக்க
இவனும் சைதன்யம் குடி புகுந்து –
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா விருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கரந்து உருவில் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை யம்மானை ஏத்தாது அயர்த்து -பெரிய திருவந்தாதி -82-என்கிறபடியே
இழந்த நாளைக்கு அனுதபித்து
பிராப்யத்தை உள்ளபடி அறிவித்த ஆச்சார்யன் பக்கலில் கிருதஜ்ஞனாய் –
விரோதி வர்க்கத்தில் உபேஷை பிறந்து -ஸ்ரீ யப்பதியை கிட்டி அல்லது தரிக்க ஒண்ணாது இருக்கிற ப்ரேமம் விளைந்து
இவ்வளவும் குலையும் காட்டில் கைக் கொண்டு அருள வேணும் –என்று பிராட்டி புருஷகாரம் செய்ய
அவ்வளவும் பொறுக்க மாட்டாத படியான வாத்சல்யாதி   குண விசிஷ்ட வஸ்து வாகையாலே
கீழ்ச் செய்த அம்சத்தைத் திரு உள்ளம் பற்றி
மேற்செய்ய வேண்டும் அம்சத்தை ப்ராப்ய பர்யந்தமாக தலைக் கட்டிக் கொடுத்து அருளும் —

ஸ்ரீ சம்சார சாம்ராஜ்யம் முற்றிற்று –

———————————————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த -ஸ்ரீ ப்ரபன்ன பரித்ராணம்–

May 9, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

————————————————————————————————————————————————————————————————————————

முமுஷூவாய் -மோஷார்த்தமாக-சர்வேஸ்வரனைப் -பற்றி இருக்குமவனுக்கு
அநந்ய கதித்வமும் -ஆகிஞ்சன்யமும் வேணும் –
அநந்ய கதித்வம் ஆவது –களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்கிறபடியே
சர்வேஸ்வரனை ஒழிய வேறு ஒரு ரஷகர் இல்லை என்று இருக்கை-
ப்ராதாக்கள் புத்ரர்கள் மாதா பிதாக்கள் ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரஷகராகக் குறை என் என்னில்
ப்ராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி பக்கலிலும் -ராவணன் பக்கலிலும் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் பக்கலிலும் கம்சன் பக்கலிலும் காணலாம் —
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி பக்கலிலும் ஹிரண்யன் பக்கலிலும் காணலாம் –
மாதா பிதாக்கள் யௌவன விரோதி என்று உபேஷித்தல்-ஷாம காலம் வந்தவாறே ஆள்பார்த்து தூற்றிலே பொகடுதல்-
விலை கூறி விற்றல் -ஆபத்து வந்தவாறே நெகிழ நினைத்தல்
அர்த்த ஷேத்ராதி களுக்காக எதிரிட்டுக் கொல்லுதல்-முடியும் அவஸ்தையிலே
சோர்வினால் பொருள் வைத்தது யுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
ஈஸ்வரனை ஸ்மரித்துக் கரை மரம் சேர ஒட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யா நிற்பர்கள்-
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் –
இவர்கள் ரஷகர் அல்லரோ யாகிலும் நாட்டாருக்குக் கண் காட்டியாய்ப் போருகிறசந்திர ஆதித்யர்கள் ரஷகராகக் குறை என் -என்னில்
அவர்களும் ஈஸ்வர ஆஜ்ஞைக்கு அஞ்சி தாங்கள் நினைத்த படி சஞ்சரிக்கப் பெறாதே
நாழிகை கூறிட்டு -பெரியாழ்வார் -4-1-8-உதிப்பது அச்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும்
ஹிரண்ய ராவணாதிகள் கையிலே அகப்பட்டு அவர்களுக்கு இழி தொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரஷகராக மாட்டார்கள்
த்ரை லோக்யத்துக்கும் பாலகனான இந்த்ரனும் எப்போதோ நம்பதம் நழுவப் புகுகிறது என்று அஞ்சி சபோபஹதனாய்
இந்த்ரஜித்தின் கையிலே அகப்பட்டுக் கட்டுண்டு
மகாபலி போல்வார் கையிலே ஐஸ்வர் யத்தைப்  பறி கொடுத்து
கண்ணும் கண்ணீருமாய் கழுத்தும் கப்படமுமாய்க் -எளிவரவைக் காட்டும் வஸ்த்ரம் -கொண்டு திரிவான் ஒருவன் ஆகையாலே அவனும் ரஷகனாக மாட்டான் –
ப்ரஹ்மாவும் -மது கைடபர்கள் கையிலே அகப்பட்டு வேதங்களைப் பறி கொடுத்து -கண் இழந்தேன் -தனம் இழந்தேன் -என்று நிலம் துழாவு கையாலும்
ருத்ரன் கையிலே தலை அறுப்பு உண்கையாலும் ரஷகன் ஆகமாட்டான் –
ருத்ரனும் -சகல பிராணிகளையும் சம்ஹரிக்கையே தொழிலாக யுடையனாய்
விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தால் போலே இருக்கத்   தழல் நிற வண்ணனாய்-பெரிய திரு -6-1-3- தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அறுத்துத் தா பொரித்துத் தா –என்று கொடும் தொழிலைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்
தன்னை  ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் -என்று பிரதிஜ்ஞை பண்ணி
தன்னைத் தொழுத கைகளை கள்ளிக் காடு சீய்த்தால் போல்சீய்க்கக் கண்டு
உயிர் யுண்டாகில் உப்பு மாறி யுண்ணலாம் என்று நெற்றியிலே கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினன்   ஆகையாலும்
லோக குருவாய் தனக்குப் பிதாவான ப்ரஹ்மாவின் தலையைத் திருகிப் பாதகியாய் கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து கைத்தளையுமாய் கொண்டு
திரிவாரைப் போலே கையும் கபாலமுமாய் திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்கு தன்னை வெளியிட்டுக் கொண்டு திருவான் ஒருவன் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
இனி அர்த்தம் ஆமோ என்று நிரூபித்தால் -கள்ளர் கொள்ளுதல் -காமம் கொள்ளுதல் -கோமுற்றார் கொள்ளுதல் –
ஜ்ஞாதி கொள்ளுதல் -வியாதி கொள்ளுதல் -பிறரோடு எதிரிட்டு விஷ பஷணம் பண்ணி தன்னைத் தானே முடித்துக் கொள்ளும்படி
பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரஷகம் ஆக மாட்டாது –

ஈஸ்வரன் -மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் -பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் -பெரிய திருமொழி -8-9-7-என்றபடி
தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகம் காட்டியும்
இன் சொல்லுச் சொல்லியும் ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ நின்ற வன்று தான் ஏறிட்டுக் கொண்டு
கழுத்திலே ஓலை கட்டித் தூது போயும் புருவம் நெரித்த உடத்திலே தேரை நடத்தியும் மார்விலே அம்பேற்றும்
சாவாமல் நோக்கியும் செத்தாரை மீட்டும்  நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தரிப்பாலே அகவையிலே நின்று
சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரஷகன் –

இனி -ஆகிஞ்சன்யம் ஆவது -கர்ம ஜ்ஞான பக்திகளிலும்
அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் -அந்வயம் இன்றிக்கே
அவற்றுக்கு விபரீதங்களான வற்றாலே தான் பரிபூர்ணனாய் இருக்கிற இருப்பையும்
தன்னுடைய ஸ்வரூபம் சர்வ பிரகாரத்தாலும் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
நம்  கார்யத்துக்கு நாம் கடவோம் அல்லோம் -என்று இருக்கை-
இவை இரண்டையும்   யுடையனாய் ஈஸ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப்பரனாய் இருக்குமவனுக்கு
சரீர அவசான காலத்திலேயே ப்ராப்தி அணித்த வாறே -ந யாமி -என்று அருளிச் செய்த படியே –
ஈஸ்வரன் தானே சரக்காளாய் வந்து -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தேறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடே ஒரு கோவையாக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்து அருளும் —

ஸ்ரீ ப்ரபன்ன பரித்ராணம் முற்றிற்று –

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த -ஸ்ரீ பிரமேய சேகரம் —

May 8, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

————————————————————————————————————————————————————————————————————-

பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —

பிரமேய சேகரம் முற்றிற்று –

—————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை -75/76/77/78/79/80–

May 8, 2015

சூர்ணிகை –75

வீட்டு இன்பப் பாக்களில்
த்ரவ்ய  பாஷா ந்ரூபண சமம்
இன்ப மாரியில் ஆராய்ச்சி —

ஆழ்வாருடைய ஜாதி நிரூபணம் பண்ணலாகாது என்றல் –

பிரமாணத்தின் யுடையவும் ப்ரமேயத்தின் யுடையவும் வைபவம் அருளிய அநந்தரம்-
பிரமாதாவான ஆழ்வாருடைய வைபவம் அருளிச் செய்யப் படுகிறது –
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று தாமே அருளிச் செய்தபடி –
கனிவார் வீட்டின்பமே –கனிந்த நெஞ்சை யுடையாருடைய க்ருஹம் தோறும்
தமருகந்த த்ரவ்யத்தை திரு மேனியாகக் கொண்டு இன்பம் விளைக்கின்றான் அர்ச்சா மூர்த்தி
அந்தமிழ் இன்பப் பா –திவ்ய பிரபந்தங்களில்
வீட்டின்பம் –பிரமேயம் -அர்ச்சாவதார திருமேனி
இன்பப்பா -பிரமாணம் –அருளிச் செயல்கள் -திருவாய்மொழி
இன்ப மாரி  -பிரமாதா-நம் ஆழ்வார்
மூன்றையும் இன்பம் -தமிழ் சொல்லாலே அருளிய அழகு -எல்லாம் திவ்யமாயும் இன்பமாயும் இருக்குமே –
அப்படிப்பட்ட பாபம் ஆழ்வார் பக்கல் ஜாதியைப் பற்றின இகழ்ச்சி –

———————————————————————————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை –76-

பேச்சுப் பார்க்கில்
கள்ளப் பொய் நூல்களும்
க்ராஹ்யங்கள்-
பிறவி பார்க்கில்
அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும்
கழிப்பனவாம்–

பாஷையையும் ஜாதியையும் கணிசிக்கலாகாது என்றதையே திடப் படுத்தி அருளிச் செய்கிறார்

விஷய வை லஷண்யத்தைப் பாராமல் பாஷா மாத்ரத்தையும் பார்க்கும் அளவில்
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஒது கின்ற கள்ள நூல் —
பொய்ந்நூலை   மெய்ந்நூல என்று என்று ஓதி மாண்டு –
பாஹ்யங்கள் ஆகச் சொல்லப் பட்ட சமஸ்க்ருத நூல்களும் க்ராஹ்யங்கள் ஆக வேண்டி வரும் –
மத்ஸ்ய கந்தை -வியாச பகவான் -அருளிச் செய்த அஞ்சாம் ஒத்து -பாரத பஞ்சமோ வேதா -என்னப் படும் மகா பாரதமும்
கற்றினம் மேய்க்க்கலும மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான் –
ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த ஷட்கத் ரயம்-கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யங்கள் ஆக வேண்டி வரும்

—————————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை –77-

கிருஷ்ண
கிருஷ்ண த்வைபாய
உத்பத்திகள் போல் அன்றே
கிருஷ்ண த்ருஷ்ணா
தத்வ ஜன்மம் —

ருஷிம்ம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம் -பட்டர்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -திருவிருத்தம் –
பகவத் விஷய ஆசையே வடிவு கொண்டு திரு வவதரித்து அருளிய ஆழ்வார் –
இவர் திருவவதாரம்
ஸ்ரீ கிருஷ்ணனுடையவும் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனானவன்
கிருஷ்ண த்வைபாயானர் என்கிற வ்யாசருடையவும்-கன்னிகை -வலைச்சி மகனாய்ப் பிறந்தவர் அன்றோ –
அவதாரங்கள் போல் அன்றிக்கே
பரம விலஷணம் என்றபடி –

——————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை –78-

பெற்றும் பேர் இழந்தும்
கன்னிகை  யானவளும்
எல்லாம் பெற்றாளாயும்
தத்துக் கொண்டாள் என்பர் நின்றார் என்னுமவளும்
நெடும் காலமும் நங்கைமீர் என்னும் அவளுக்கு நேரன்றே —

பெற்றும்–
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் —
என்றபடியே கண்ணனைப் பிள்ளையாகப் பெற்றிருந்தும்
பேர் இழந்தும் -ஆனவளும் –
திருவிலேன் என்றும் பெற்றிலேன் -என்கிறபடியே
பேர் இழந்தவளாகக் கதறி அழுத தேவகியும்-

பெற்றும் கன்னிகை  யானவளும் –
த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயண மச்யுதம் பராசராத் சத்யவதி புத்ரம் லேபே பரந்தபம் –என்கிறபடியே
வியாசனைப் பிள்ளையாகப் பெற்று வைத்தும் அவனால் உண்டாகும் ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி
புன கன்யா பவிஷ்யதி –என்ற பராசர வசனத்தாலே
மீண்டும் கன்னிகைப் பருவம் அடைந்தவளான மத்ஸ்ய கந்தையும்-

தத்துக் கொண்டாள் என்பர் நின்றார் என்னுமவளும்
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -என்றும்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்றும்
சொல்லுகிறபடியே
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள்அடியாக தானும் பிறரும்
சங்கிக்க வேண்டும்படியான மாத்ருத்வத்தை யுடைய யசோதையும் –

ஆக கிருஷ்ண மாதாக்களும் வியாச மாதாவான இம் மூவரும்-

நெடும் காலமும் நங்கைமீர் என்னும் அவளுக்கு நேரன்றே —
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -என்றும்
நங்கைமீர் நீருமோர் பெண் பெற்று நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை-என்றும்
பெருமை சொல்லிக் கொண்ட ஆழ்வார் திருத் தாயாருக்கு ஒப்பாக மாட்டார்களே –
தேவகிக்கு -பேர் இழந்த குற்றம்
யசோதைக்கு -உள்ளபடி மாதாவாக பெறாமை யாகிற குற்றம்
வியாச மாதாவுக்கு -உடனே கன்னிகையாகப் பெற்றமை யாகிற குற்றம்
ஆழ்வார் திருத் தாயாருக்கு கொத்தை ஒன்றும் இல்லையே –என்றவாறு-

——————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை –79-

மீன
நவ நீதங்கள்
கந்திக்கும் இடமும்
வெறி கொள் துழாய் கமழும் இடமும்
தன்னில் ஒக்குமோ –

வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டினேன் பெற்ற -என்றும்
அன்றி மற்று ஒரு உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கித் தென் திசை திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே -என்றும்
பகவத் சம்பந்தம் ப்ரகாசகமான திருத் துழாய் பரிமளம் கமலப் பெற்ற ஆழ்வார் திருவவதார ஸ்தலத்திற்கு
மீன் வெறி நாறுகிற வியாசர் பிறப்பிடமும்
வெண்ணெய் முடை நாறுகிற ஸ்ரீ கண்ணபிரான் திருவவதார ஸ்தலமும்
ஈடாக மாட்டாது என்றபடி –

——————————————————————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை -80

ஆற்றில் துறையில்
ஊரில் உள்ள
வைஷம்யம்
வாசா மகோசரம்-

ஆற்றில் உள்ள வைஷம்யம் –
வியாசர் பிறப்பிடம் -ஆறு – -அசிஷ்ட பரிக்ரஹம் உடைய கங்கை –
கண்ணன் பிறப்பிடம் –ஆறு ஜன்ம சத்ருவான கம்சனுடைய மாளிகையின் கீழே பெருகிச் செல்லும்
தமோ மயமான யமுனை –
ஆழ்வார் திருவவதார ஸ்தல நதி -பவள நன் படர்க் கீழ்ச் சங்குறை  பொருநல்-என்றபடி
விலஷணபதார்த்தங்களுக்கு ஜன்ப பூமியாகி மிகச் சிறந்ததான தாமிரபரணி –

துறையில் உள்ள வைஷம்யம் –
வியாசர் பிறந்த துறையோ -ஓடத் துறை
கண்ணன் திருவவதரித்த துறையோ காளிய விஷ தூஷிதமான துறை –
ஆழ்வார் திருவவதார துறையோ பொருநல் சங்கணித் துறை –

ஊரில் உள்ள வைஷம்யம் –
வியாசர் பிறந்த வலைச் சேரி
கண்ணன் திருவவதரித்த ஊரோ அறிவு ஒன்றும் இல்லாத இடைச் சேரி
ஆழ்வார் திருவவதரித்த ஊரோ -நல்லார் நவில் குருகூர் என்று கொண்டாடப் பட்ட திரு நகரி —

ஆக -ஆழ்வார் திருவவதார ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உள்ள வைஷம்யம் – மூன்றும் பேச்சுக்கு நிலம் இல்லை-என்றபடி –

———————————————————————————————————————————————————————————————————————————–

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

புராதான ஸ்லோகங்கள் —

May 7, 2015

ஸ்ரீ மத் ராமாயணம் –

பூர்வம் ராமோ தபோவனானு கமனம் கத்வாம்ரு காஞ்சனம்
வைதேகி கரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷணம்
வாலி நிக்ரஹணம் சமுத்திர சரணம் லங்காபுரி தகனம்
பட்சாத் ராவண கும்பகர்ண நிதானம் ஏதத் ராமாயணம் —

——————————————————————————————

ஸ்ரீ மத் பாகவதம் –

ஆதவ் தேவக தேவ கர்ப்ப ஜனனம் கோபி  ஹ்ருதே மர்த்தனம்
மாயா பூதன தேவ தாப கரணம் கோவர்த்தனோ தாரணம்
கம்ச சேதன கௌரவாதி கரணம் குந்தி ஸூதா பாலனம்
பட்சாத் பீஷ்ம சுயோதனாதி கரணம் ஏவம் மஹா பாகவதம் –

——————————————————————————————

ஸ்ரீ பட்சிராஜ ஸ்தோத்ரம் –

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சஹல விபூத வந்த்யம் வேத சாஸ்திர வந்த்யம்
ருஷிர விபூத பக்த்யம் வேத்யமான் ஆண்ட கோலம்
சகல விஷ்வ   நாசம் சிந்தையே பட்சி ராஜம்-

——————————————————————————————-

எம்பெருமான் திவ்ய வடிவு அழகு சேவை –

திருத் துழாயும் மகிழம் பூவும்
கவசமும் முத்தா கிரீடமும்
நெற்றியில் தீஷண கஸ்தூரி திலகமும்
மதனவில் போல் வளைந்த புருவமும்
கடை சூழ்ந்து செவ்வரி தாழ்ந்து கருமுகில் மிகுந்து அகன்று  நிமிர்ந்த செந்தாமரைக் கண்களும்
கூர்மையான கொடி மூக்கும்
செங்கனி வாயும்
மல்லிகை மலர்ந்தால் போல் பொன் சிரிப்பும்
தாமரை மலர்ந்தால் போ திரு முக மண்டலமும்
கரி வண்டு கவித்தால் போல் கரும் குழல் காற்றையும்
இரு சூரியன் உதித்தால் போல் மணி மகரக் குண்டலமும்
கபோலம் என்றும் கவை என்றும் கஞ்ச மலர்க் கையான் அஞ்சாதே என்று அடியார்களுக்கு அளித்த அபயச்த கரமும்
சந்திர சூரிய மண்டலமும் சேர்ந்து அமைந்தால் போல் பாஞ்ச சந்யமும்
திருத் தோள் அம்புறாத் துணியும்
திரு வரையிலே தங்கப் பிடி வைத்த நாந்தகக் கத்தியும்
கிளிவசை மாலையும் -மகிழம்பூ மாலையும் –தாழம்பூ மாலையும் திருத் துழாய் மாலையும் –
குங்குமம் கஸ்தூரி குமுகுமு என்ன பளபள என்ன குளிர்ந்த திருமேனி தேஜஸ் ஸாய் இருக்கிற
ஏன் அப்பனே
ஸ்ரீ ரங்க நாதனே
கண்ணனே
தாமரைக் கண்ணனே
தூ மணி வண்ணனே
தோளுக்கு இனியானே
பத்ம நாபனே
பவள வாயனே
சிறு புலி மார்பனே
செங்கோல் உடையானே
கத்தியும் கேடையமும் கதையும் தரித்தோனே
ஆநிரை மேய்த்தோனே
அவன் உடம்பு பிழந்தோனே
கோனேரி காத்தோனே
கோவர்த்தன குடையானே
சிங்கம் போல் நடையானே
பீதக வாடை யுடையானே
பேய்முலை  யுண்டானே
பதினாறு லோகமும் ஆண்டானே
பச்சைத் திருத் துழாய் மாலை அணிந்தோனே
அரி அச்சுதனே
ஆராவமுதனே
சிந்திக்கத் தித்திக்கும் செவ்வேங்கடத்தானே
திருவேங்கடத்தானே
எம்மானே
எம்பெருமானே
இங்கே கண்டேனே –
ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

—————————————————————————————————————-

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டகம் -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தது –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –தனியன் –

ஸ்ரீ மத கலங்க பரிபூர்ண சசிகோடி ஸ்ரீ தர மநோ ஹர  சடா படல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி  மக்நம் தைத்ய வர கால நரசிம்ஹ நரசிம்ஹ

பாத கமலா வநத பாதகி ஜநாநாம்  பாதகதவாநல பதத்திரி வர கேதோ
பாவந பாராயண பவார்த்தி ஹரயாமாம் பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ

துங்க நக பங்க்தி தலதா ஸூர வராஸ்ருக் பங்க நவ குங்கும விபங்கில மநோ ஹர
பண்டித நிதாந கமலாலய நமஸ்தே பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ

மௌலிஷூ விபூஷணமிவ அமரவராணம் யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ்ஸூ நிகமா நாம்
ராஜதர விந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்தி நரசிம்ஹ நரசிம்ஹ

வாரிஜ விலோசன மதந்திம தசாயாம் க்லேச விவசீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்யா விஹகா நாம் நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ

ஹாடக கிரீடவர ரசனா மகர குண்டல மணீந்த்ரை
பூஷி தமசெஷா நிலையம் தவ வபுர்  சேதசி சகாச்து நரசிம்ஹ நரசிம்ஹ

இந்து ரவி பாவக விலோசன ரமாயா மந்திர மஹா புஜ லேசாத் வர ரதாங்க
ஸூ ந்திர சிராய ரமதாம் த்வயி மநோ மே நந்தித ஸூ ரேச நரசிம்ஹ நரசிம்ஹ

மாதவ முகுந்த மது ஸூ தன முராரே வாமன நருசிம்ஹா சரணம் பவ நதானாம்
காமத க்ருணின் நிகில காரண நயேயம் கால மாமாரேச நரசிம்ஹ நரசிம்ஹ

அஷ்ட கமிதம் சகல பாதக பயக்நம் காமதம் அசேஷ துரிதாமய சரிபுக்னம்
யா படதி ஸந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ —

———————————————————————————————–

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
நருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும்  நமாம்யஹம்

ஓம் வஜ்ரா நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்

————————————————————————————————–

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சேனாபதி முனிவர் -ஸ்ரீ சேனை முதலியார் ஜீயர் -அருளிச் செய்த மணவாள மா முனிகள் நூற்றந்தாதி —

May 7, 2015

மா வளரும் கோயில் மணவாள மா முனிவன்
பூ வளரும் பொன்னடி மேல் பாமாலை –நா வலவன்
சேனாபதி முனிவன் சீருடை அந்தாதி தந்தான்
மேனாடரும் கற்க ஏய்ந்து-

குணவாளன் இந்திரை கோன் குணம் கூறும் மாறன் தாள்
தணவாத எதிராசன் தாள் வணங்கும் தன்மையனாய்ப்
பணவாதி சேடனருள் பரனேவ அவதரித்த
மணவாள மா முனிவன் மலரடியே அடை நெஞ்சே –1–

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நெடுமாலை நமன்று எழும்
தஞ்சமருள் மாரி புகழ் தாம் பரவும் எதிகட்கொரு
வான் சரணே வணங்கிய நம் மணவாள மா முனிவன்
இன்சரிதையின் சீரை இயம்பு எழாய் என் வாயே –2–

வாயாலும் மெய்யாலும் மனத்தாலும் பெரும்பூதூர்
மேயானை அடி பரவும் மெய்யடியார் தாள் நினைந்து
மாயாத மணவாள மா முனிவன் குணங்களையே
கூசாமல் வணங்கி எழாய் குறியுடைய என் தலையே –3—குறியுடைய -நல்நோக்கம் யுடைய —

தலையான எதிராசன் தன்வடிவை நினைக்க மனம்
விலையாதும் இல்லவன் சீர் விழுங்கியிட வாயடிமை
நிலையான முறை செய் நிச்சலும் கை வேண்டும் திரு
மலை யாழ்வார் அருள் பெற்ற மணவாள மா முனியே –4–

முனியேறாம் எதிராசன் முழுத் தகவால் முப்பதத்தின்
இனிய பொருள் நிலை வேண்டி இன்பமுடன் அவன் அடியில்
குனியும் எவரும் மதியடையக் கருது மணவாள முனி
தனியருளே நினைந்து அடியேன் தாரணியில் மகிழ்வேனே –5-

மகிழ் மாறன் அடி சூடும் எதிராசன் மலரடியின்
நிகழ காத்தற்கு இடைச் சுவரை நீக்கி  யருள் என்று இரந்து
மகிழு  மன மணவாள மா முனிவன் குணங்களையே
புகழாத புலவர்கள் இப்பூமிக்கோர்   பெரும் சுமையே –6-

மைந்தன் எதிராசர் அருள் மன்ன நைச்சியத்தை
ஐந்தாறு  கவிகளினால் ஆர்த்த மணவாள மாமுனி
பைந்தாமரை அடியைப் பரவுமவர் தாளிணைக்கே
நைந்துருகும் என் நெஞ்சம் நையாது பிறருக்கே –7—பல கவிகளால் -எதிராஜ விம்சதியில் –

அருக்கன் குல தெய்வ வணி அரங்கன் வரம் கொண்டு
செருக்கடித்த எதிராசன் திருவருளே அரணாக
இருக்கு மண வாள முனி இணையடியை இறைஞ்சுமவர்
திருக் கமலத் தாளிணையே தித்திக்கும் அடியேற்கே –8—-அருக்கன் குலம் -சூர்ய குலம்–

ஏற்கும் எதிராசனுடைய எழில் பதத்தின் சேவை தனைச்
சீர்த் திருவாய் மொழிப் பிள்ளை செழும் தகவால் தந்ததனை
மேற்கிளர அருள் என்று மேவும் மணவாள முனி
ஆர்க்கருளும் அடியேனுக்கு அல்லது நீர் சொல்லீரே –9–ஆர்த்திப் பிரபந்தத்தில் பிரார்த்திக்கும் மா முனிகள் என்றவாறு –

ஈரேழு புவனத்தார் இறைஞ்சு புகழ் எதிராசன்
சீரேற்ற நன்று இயலும் செம்மையினால் அருள் சூடி
நேரேற்றம் இல்லாமல் நுகளும் மணவாள முனி
பாரேத்து பெரும் புகழைப் பாடி மனம் களித்தேனே –10-

தேனமரு பூம் பொழில் சூழ் திருக் கச்சி நகர்ப் பொய்கைப்
பூ நடுவில் உதித்த முனி புகழ் பாடு எதிராசன்
மா நிலவில் வாய் மடுக்கும் மணவாள மா முனிவன்
ஞான வொளிக் கலையல்லால் நாம் என்றும் ஒதோமே–11–பொய்கை ஆழ்வார் புகழைப் பாடும் –எதிராசர் உடைய நிலவு போன்ற
திரு முக மண்டலத்தை போற்றும் மா முனிகள் உடைய திருவாக்கையே ஓதுவோம்  -என்றவாறு-

ஓதக் கடல் மலை ஒளி சூழ வந்துதித்த
பூதத்தார் இயலாதும் பூதூரின் மா முனிவன்
பாதத்தைப் பலகாலும் பரவு மணவாள முனி
கோதற்ற தென் மொழியைக் கொண்டாடிக் கூறுதுமே –12-

கூறிய சீர் மயிலையர் கோன் குணம் கொள்ளும் எதிராசன்
மாறிலடி வணங்கி மகிழ் மா முனிவன்
வீறுடைய மெய்ம்மொளியை விரும்பி யாரும் பொருள் அனைத்தும்
தேறுமவர் எஞ்ஞான்றும் தேசிகராய்த் திகழ்வாரே –13–மாறிலடி -நிகரற்ற / தேறுமவர் -உணர்பவர்-

வார் புனல் சூழ் மா மழிசை வாழ்வெய்த வரும் சோதி
சீர் புகழும் எதிராசன் சீலம் எல்லாம் குடைந்தாடும்
ஓர் புனிதன் மணவாள யோகி செயும் உலகாரியன்
ஏர் பனுவல் வியாக்கியையை என்னுமவர்க்கு ஏது அரிது –14-

அரிதேவன் அல்லாதார் அவனுரு வென்று உரைக் குருகா
புரிதேசிகன் பாதம் புகழும் எதிசெகரன் தன்
சரிதை நினைந்து உள்ளுருகும் சால மணவாள முனி
சொரி தேறல் கலை நுகரும் சோமபருக்குப் பசி ஏதே –15–தேன் பெருகும் திரு வாக்குகளைப் பருகும் சோம பானம் பருகுபவருக்குப் பசி எப்படி உண்டாகும் —

ஏதேனும் ஆவேன் நான் எம்பெருமான் பொன்மலை மேல்
ஈதே நங்காதல் எனும் எழில் வஞ்சிக் களத்து இறைவன்
பா தேங்கும் எதிராசன் பதம் கருது மணவாள
மா தேசிகன் கலையே மற்றதுமோர் அமுதுண்டே –16-

துண்டித்துப் பரமபதம் தூ நெறியைத் தாபித்துக்
கொண்டுய்த்த வில்லி புத்தூர்க் கோன் குணம் தேர் எதியரசைப்
பண்டுற்ற மணவாள மா முனுவன் பனுவல்களின்
ஒண் தத்துவப் பொருளை ஒர்ந்திடுவார் உறங்காரே –17–

காரேறு கருமுகில் போல் கண் வளரும் அரங்கேசன்
பாரேறு புகழ் பாடித் திருப்பள்ளி யுணர்த்தும் ஒரு
போரேற்றைத் திரு மண்டங்குடியில் உறும் எதிராசன்
சீரேறு மணவாளச் சீயருரை ஒதுமினே –18-

ஒதுமொரு மா முனியை ஓர்ந்து புகுந்து அரங்கனடிப்
போது முடியளவாம் போற்றி எனும் உறையூரான்
மீது முயல் எதிராசன் மணவாள மா முனியாய்த்
தீது முகந்து அறியாத தென்மறையை வளர்த்தானே–19-

தானேதன் வழிப்பட்ட தாமோதரன் பணியைக்
கானேறிப் பறித்து மனு கற்றுய்ந்த நம்
கோன் ஏத்தும் எதிராசன் கோமளவான் குணம் பாடி
வானேற்றும் மணவாள மா முனிவன் மன்னுரையே –20-

மன்னு திருவாய்ப்பாடி மங்கைகளில் தான் ஒன்றாய்
தன் உருக்குமணிக் கணவன் தகவடைந்த புதுவை  மயில்
என் அண்ணன் என வுகந்த எதிராசன் தாளிணையை
முன் நண்ணும் மணவாள முனி மொழியை முரலுமினே–21

முரலுமிவர் பதினொருவர் மொழிகளுக்கோர் இலக்காகும்
பரண் பெரிய பெருமாளைப் பணியும் எதிராசன் தாள்
விரல் தொடங்கி முடியளவும் விரும்பும் மணவாள  முனி
தரமறியும் பெரியோர் தம் தாளினை என் தலைக்கு அணியே –22-

அணியரங்கன் அடி வணங்கும் அருள் பெரிய பிராட்டி தனைப்
பணியும் எதிராசனடி பரவு மணவாள முனி
பிணி யகல அருள் செய்த பிரபந்தங்கள் பெரும் பொருளைத்
துணியுமவருக்கு ஒரு காலும் துயருதிக்க கில்லாவே –23-

இல்லாத குணம் காட்டி இன்னுயிரை இறை சேர்க்கும்
வல்லாளை அருள் பெரிய பிராட்டிதனை வணங்காமல்
செல்லாத சேனையர் கோன் செயல்பாடும் எதிராசன்
சொல்லாழும் மணவாள மணி சொற்கள் நன்னூலே–24–

கண்ணனை மா வுடன் மருவக் கற்பித்த வன்கிரிசை
திண்ணனவே  சுமக்கும் சேனையர் கோன் தாள் வணங்கும்
அண்ணல் அருள் மாறன் தாளடையும் எதிராசனையே
மணவாள முனி நற்கழலே நம் துணையே –25-

நந்தாதை மதுரகவி நற்கலையைத் தான் சவித்து
சிந்தாமல் சடகோபன் சீரருள்சேர் நாத முனி
முன் தாழும் எதிராச மூர்த்தி மணவாள முனி
அந்தாதி நூறையும் நாம் அனுசந்தித்து இருப்போமே   –26—–எதிராசருடைய மற்றொரு திரு உருவமான மணவாள மா முனி –

திருப்பொலி அருள் நாதன் சேவடி சேர் உயக் கொண்டார்
பருப்போடு போரும் தாள்கள் பணியும் எதிராசனிடை
விருப்போங்கு மணவாள முனி விரித்த கலையோதி
இருப்போமுக்கு இனியொருத்தர் இயல்கேட்க வழி என்ன –27—நாதன் -நாதமுனி –சேர்ந்த உயக்கொண்டார் திருவடிகளை —

வழக்கு என உயக் கொண்டார் வன் சரணாம் பதுமத்தின்
நிழல் கொண்டு நிகழ் மணக்கால் நம்பியை நண் எதிராசன்
கழல் கண்ட மணவாள முனி கலையை விரும்பாதார்
விழக் கண்ட நாமவற்றை விரும்பாத நாளுண்டே –28-

நாளவரி தாள் தொடருமவர் நற்பதத்தை அடைந்துய்ந்த
ஆளவந்தார் திருவடியில் அன்புறும் எம்பெருமானார்
தாளுவந்த மணவாள முனி தரு நூற்றந்தாதிக்கு
ஆளவன் தாள் பரவாமல் ஆராகக் கடவாரே–29—–அப்பொழுதைக்கு அப்பொழுது புதிதாக உள்ள திருமாலின் திருவடிகளை –

கடமாக ஆளவந்தார் கழல் பணிந்த பெரிய நம்பி
உடன் வர அடிபரவும் எதிராசன் உரை தேறும்
மட நெஞ்சு மணவாள மா முனிவன் மறையோதும்
திட நெஞ்சர் அடியேனைத் திருத்தி அருள் செய்தாரே –30–

ஆரே சீர் அமுதனாரை அந்தாதித் தேவதை சீர்
கூரேசன் குருகேசன் குரு முதலியாண்டான் போல்
காரே சீர்ப் பெரும் திரளைக் கருதும் மணவாள முனி
சீரே சிந்தனை செய்வார் சேவடி சேர்ந்து அகலோமே –31–

தகவுடைய எதிராசன் தாளடையும் எம்பார் தாள்
மிகவடையும் மணவாள மா முனிவன் மிழற்றிய சொற்கு
அகமுடையும் அதிகாரி யாரேனும் ஒருவரே தான்
செகமடையப் பரமார்த்தம் சிந்திக்கத் திருவுடைத்தே –32——-அகமுடையும் -அகம் குழைந்து உருகுபவர்-

உடையவராம் எதிராசர் உயர் தகவால் எம்பார் தாள்
அடையும் பராசர பட்டர்க்கு அற்ற மணவாள முனி
தடையறவே தமிழ்  தகவு செய் நூற்றந்தாதித்
தொடையதனைப் புலவர்கள் தாம் துதித்து நலம் பருகுவரே –33—–திருவாய் மொழிக்கு அருளிய திருவாய் மொழி நூற்றந்தாதி ஆகிய மாலை-

பெரும்பூதூர் முனிவன் அடி பேணிய நஞ்சீயரையே
விரும்பும் மணவாள முனி விரி நூற்றந்தாதி தனிக்
கரும்பூறு சாறமுதயாக் கருதாமல் திரிவார்கள்
அரும் பாவிகள் கண்டீர் அவருறவை அகற்றுமினே –34—

அகத்தில் எதிராசன் தாள் அகலாத நம்பிள்ளை
வகுத்த மலரடி வணங்கு மணவாள மா முனிவன்
செகத்துக்கா உபதேசம் செய்த மணி மாலைதனை
அகத்துக்கொர் அணியாக அணிவார் என் முடிக்கு  அணியே  –35–

முடிக்குரிய எதிராசன் முழு நலனும் முகந்துருகும்
படி வடக்குத் திரு வீதிப் பிள்ளையைக் சேர் மணவாளன்
அடிக்கமலத்து அன்புறுவார் அவன் மொழியை ஆராய்ந்து
படிப்பல்லால் பற்பல் கால் பால் பொழுது போக்குவரே   –36-

உவரோடு தமர் ஏத்தும் உத்தமர் எம்பருனார்
அவரே தம் சரணாக அடையும் உலகாரியனை
இவரே நம் குல தெய்வம் எனத் துணிந்த மணவாளர்க்கு
எவரேனும் ஆளானார் எழு பிறப்பும் எமக்கு அரசே –37—

கரை சேர்க்கும் எதிராசன்  கண் திருவாய் மொழிப் பிள்ளை
உரை செய்த பழை வழியே ஓதும் மணவாள முனி
விரை ஏற்று மலரடியே விரும்புமவர் எம் குருக்கள்
நிரை சேர்ந்து நிச்சலுமே நினைந்து என்றும் இகழாரே –38–

கழலாத முக்கோலான் கருணை நிதி எதிராசன்
கழல் அடித் திருக் குருகைப் பிரான் பிள்ளான் வியாக்கியையின்
நிழலாதும் இகழாதே நிற்கும் மணவாள முனி
கழலாத தொல்வழியைச் சூரிகளுக்கு அருள்வானே –39–

அருளாழி எதிராசன் அடி தாழும் நஞ்சீயர்
மருளாமல் செய்த வியாக்கியையை வாய்ந்து அருளும்
பொருளாதும் சோராமல் புகழும் மணவாள முனி
தெருளாழித் தீக்கதியைத் தேய்ந்து அழியத் தீர்த்தானே –40–

தீர்த்தன் எதிராசன் அடி சேர் ஆச்சான் பிள்ளை முன்னாள்
சீர்த்த தமிழ் வியாக்கியையைச் செப்பும்  மணவாள முனி
வார்த்தைகளில் ஒரொன்றே வானேற்றி உய்த்திடுமால்
பார்த்தவனைச் சேவித்தார் பாக்கியத்தைப் பணித்தோமோ–41—–பெரியவாச்சான் பிள்ளை முன் அருளிச் செய்த —

தாம் முன் இரும்பூதூர்க்   கோன் தான் வணங்கும் பரமபதம்
தீ முனிந்து சொரி வடக்குத் திருவீதிப் பிள்ளை சொல்லால்
தூ மனத்தனனாயத் தமிழ் மறையைத் தொகுத்துரைத்த  மணவாள
மா முனிவன் மலரடியை மருவாதார் வாலாரே –42–இவ்வுலக வாழ்க்கை தீயை வெறுத்து -சொரி -வழங்கும் -அருளிச் செய்த திரு வாக்குகளால் —

தாம் முன் இரும்பூதூர்க்   கோன் தான் வணங்கும் பரமபதம்
தீ முனிந்து சொரி வடக்குத் திருவீதிப் பிள்ளை சொல்லால்
தூ மனத்தனனாயத் தமிழ் மறையைத் தொகுத்துரைத்த  மணவாள
மா முனிவன் மலரடியை மருவாதார் வாலாரே –42–இவ்வுலக வாழ்க்கை தீயை வெறுத்து -சொரி -வழங்கும் -அருளிச் செய்த திரு வாக்குகளால் —

ஆழ்வார்கள் அருமறையை ஆர்த்த எதிராசனையே
சூழ் வாதி கேசரி சொல் சூரிகளுக்கு அருள் செய்யும்
தால்வாதும் இல்லாத தகவன் மணவாள முனி
வாழ்வாக மன்னவர்க்கு மந்திரத்தை விரித்தானே –43–

விரி புகழ் எம்பெருமானார் விசயத்தால் அவர்க்காளாய்ப்
பெரிய புகழ் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
உரிய மொழிகளை அருளால் உரைக்கு மணவாள முனி
தெரிவரிய திருப் புகழைத் தேருமவர் தேவர்களே –44—

ஏறு புகழ் உலகாரியன் இயல் தத்துவத் திரயத்தின்
ஆறு விரித்து எதிராசர்க்கு ஆட்செய் மணவாள முனி
கூறு கலை அதிகரிக்கும் கூர்மதியோர் அல்லாமல்
வேறு சிலர் வேதாந்த விழுப் பொருளைக் காணாரே –45–

காணாதர் கபிலர் குரு கபாலி குதர்க்க மதங்கள்
காணாத படி யழியக் கலை செய் உலகாரியன் சொல்
பூணாக எதிபதியைப் போற்று மணவாளன் தாள்
பேணாத சேதனரைப் பேய் என்பர் பெரியோரே –46–

என் பரம காருணிகன் எதிராசன் என்று இறைஞ்சி
அன்பருய உலகாரியன் அருள் வசன பூடணத்தை
முன்பருளி நமக்குரைத்த மூர்த்தி மணவாள முனி
பொன் பற்பாம் திருவடியைப் போற்றுமவர் புகல் எமக்கே –47–

மக்கள் இறை பிறவி குரு மாதா பிதா மாதர் தனம்
தக்க கதி சரண் எல்லாம் தமக்கு  எதிராசன் என்று
மிக்கடைந்த வைய குரு மெய்க் கலையை விவரிக்கும்
முக்கிய சீர் மணவாள முனி மொழியில் மூழ்கினமே –48–

இனமேதும் இல்லாமல் இலகும் இராமானுசனை
தினமேத்தி வைய குரு திருத் தம்பி செய் கலையை
மனமேத்தி விரித்து அருளும் மணவாள மா முனியைத்
தினமேவும் அடியார்க்குத் தரம் அறிந்து மேவுமினே –49—அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செயல்களை மனத்தில் கொண்டு விரித்து உரைக்கும் —

மேவி எதிராசனையே மெய்ப் பொருளைச் சுருக்காகத்
தாவித்த விழாஞ்சோலைப் பிள்ளை தரத் தனி மொழியைப்
பாவித்த மணவாள மா முனிவன் பதங்களையே
சேவித்த திருவாளர் செகத்துக்கொர் செழும் பூணே  –50—-சப்தகாதை அருளிச் செயலின் கருத்துகளை விளக்கி —

பூணூலும் முக்கோலும் புனை சிகையும் துவருடையும்
சேணூர்த்துவ புண்டரமும் சேர்ந்த எதிசெகரன் முன்
நாள் நூற்றதி னிருபதாண்டு நான்மறையை நோக்கிப் பின்
காணூ லறி வரவரனாய்க் காத்தளித்தான் தமிழ்களையே–51–

களைகள் எழாக் கருணையினால் காத்தருளும் எதிபதியே
களைகண் எமக்கெனக் கருதிக் களித்த மணவாள முனி
விலை கழனி அருள் பயிர்க்கு விரும்புமவர்க்கு அரும் பிறப்பால்
தளை கழல அருள் அல்லால் தளர்ந்தவர்க்கு  ஆர் தாவளமே –52-

வளமிக்க எதிராசன் வண்மையினால் உய்ந்தமையால்
உளமகிழும்  மணவாள யோகி உபதேசத்தால்
இளமதி போல் மதிகிளைக்கும்  இலகு அட்ட திக்கயங்கள்
உளர்  அவன் தன் திருவடியை உலகர் அடைந்து உய்வதற்கே –53–

தர்க்கத்தால் வேண்டிற்றைத் தாபிக்கச் செருக்கிருக்க
முற்குருக்கள் உபதேசம் முக்கியம் எனத் தெளிந்து
கற்கு மணவாள முனி காண்மின் எதிராசனவன்
நிற்க மற்றோர் கற்பித்த நிலை நமக்கு வேண்டாமே –54-

வேண்டாமல் வெறும் புலவர் வீழ பொருளை மேலையர் சொல்
தாண்டாத எதிராசன் தாள் வணங்கும் வரயோகி
சேண் தாமரைத் தாள்கள் சென்னிக்கோர் மணி  முடியாய்
பூண்டார்க்குப் பூ முடியும் பொன் முடியும் பரமாமோ –55–

மாமேகம் என வண்மை இளை யாழ்வாரைத் துதித்தே
தாம் ஏக சிந்தையனாய்த் தரித்த வர வர முனியை
நாமேது நண்ணுவது என்று அகலாதே நற்படியே
யாமேவி வணங்குதும் வா நற்றினத்தால் நன்னெஞ்சே –56–

நன்னகராம் பூதூர்க் கோன் நலமுரைக்கும் மணவாளன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளைக் கனவிலும் நாம்
சென்னியினில் சூட்ட வரும் சேமம் எல்லாம் ஆகிலும் நாம்
மன்னியிட வரை சுமந்து மறுமையிலும் மாயோமே –57–ஆகிலும் நாம் மலை மலையாக பாவங்களைச் சுமந்து
இம்மையில் மட்டும் அல்லாமல் மறுமையிலும் வாழ்ச்சி அடையாமல் போகிறோமே —

மெய்யன் எதிராசனையே மேவு மணவாள மணி
செய்ய திருவடிப்  போதைச் சென்னியினால் தரித்தனின்
மொய்ய செழும் துகளாடி மோந்து இதயத்து அழுத்தி  இட்டால்
உய்ய வகை தேடி நமக்கு உளம் துளங்க வேண்டாவே –58—

துளங்காமல் எதிபதியை துதிக்கும் மணவாள முனி
உளங்காலும் செங்கமல உள்ளிதழ் போல் திரு விரலும்
விளங்கவை மேல் வெண் முளை போல் இலகுகிரும் புறம் தளிர் போல்
வளங்காட்டும் புறங்காலும் வந்தடியேன் மனத்துளவே –59-

துளவமுடன் மணி வடமும் தோன்று திருப் பவித்ரமும்
வளபுரி நூலுடன் தரித்து வாழ் எதிராசனை வணங்கு
களபம் எனத் திகழும் வரயோகி திருக் கணைக் காலின்
வளமதணி  புறவடி போல் வாழ்ந்திடும் என் மழை மதியே –60—களபம் என -யானை போன்ற –வாழ்ந்திடும் என் மழை மதியே–என்னுடைய  ஞானமும் வாழ்ந்திடும்-

மழுங்காத எதிராசன் வாய் மடுத்த சேடமல்லால்
விழுங்காத மணவாள மா முனியின் விழுப்பமுடை
முழங்காலைச் சிந்தித்து முப்பொழுதும் வினைப் பிறவிக்கு
இழுங்காது மில்லாமல் எழக் கிள்ளிப் பொகட்டேனே–61—–இடம் ஏதும் இல்லாமல் கிள்ளி எறிந்து விட்டேன் –

கட்டேது எமக்கு இனி மேல் காமுறு சீர் எதிராசன்
மட்டேதுமில் சீரின் மன்னு வர யோகி   துவர்பா
பட்டே சூழ் திருத் துடையைப் பலகாலும் நினைந்தல்லால்
விட்டேசும் பிறர் சிரிப்பா வாய் வெருவப் பெற்றனனே –62—–நினைப்பது அல்லாமல் பிறர் என்னைச் சிரித்து ஏசி வாய் வெருவப் பெறுவேனோ-

பெற்றிமையோன்  எதிபதியைப் பேணும் மணவாள முனிக்கு
அற்று இமையாது   இருந்து அடியேன் அவன் உதர பந்தனத்தைப்
பற்றியல் மிக நோக்கம் பற்றி தலைக் கொண்ட பின்னால்
மற்றிமையோர் ஆட்சி தனில் மனம் மன்னி –63–

மாந்தர் இராமானுசர்க்கே மனமுருகி மற்று அறியா
காந்த மணவாள முனி கமல மணித் துளவ வடம்
சேர்ந்த திருப் பவித்ரமும் செபமயமே புரி நூலும்
செர்ந்தகன்ற திரு மார்பும் எங்கனம் நான் மறப்பதுவே –64-

மறமறியா எதிபதியை மறவாத வரயோகி
அறமுறையும் முக்கோலும் அஞ்சலியும் திகழ் திருக்கைத்
திறமறிந்து தினம் தினமும் சிந்தித்துத் தேறின பின்
அறமறுகும் இப்புவியில் அடிக்கொதிப்பை அடைந்தோமே–65–

அடையாளமாய் அமுதம் அக்கிணற்றில் சுமந்து ஆழும்
படையானை எதிபதியை உள்ளு மணவாள முனி
கிடையாத வலம்புரி போல் கிளர் ஒளி சேர் திருக் கழுத்தை
நடையாக நினைந்துருகி நல்லவர்க்காட் பட்டோமே –66–

ஆட்பட்ட இலக்குமண்ர்க்கு அற்ற மணவாள முனி
தோட்படை எழுச்சிகளும் தூய மணக்கும் திரு வாயும்
சேடபட்ட திரு மூக்கும் திருக் காதும் நினைந்து அடியேன்
கோட்பட்ட சிந்தையனாய்க் கொடும் தசையைத் தூர்த்தேனே –67—இலக்குமணன் திருவவதாரம் –துவயம் கமழும் திரு வாயும் —

தூராத காதலுடன் துவருடைய எதிராசன்
சீராதும் சோராமே சிந்திக்கும் வரயோகி
ஆராதரத் தடம் கண்ண அழகுக்கே தோற்று அவன் தன்
ஆராதனைக்கு இசைந்து அடியேன் எண்ணி மேல் பரந்து இருக்கே –68—இனி வேறு என்ன வேண்டும் —

இனியத்தில் இளையாழ்வார் திருப் புகழாம்
கனியதினில் சுவடு அறிந்து கவர்ந்து உய்ந்த மணவாள
முனியதிபன் திருப் புருவ முழுக் கருப்புச் சிலை நினைந்து
தனியதொரு பேரின்பம் தளைத்து அடியேன் தலைத்தேனே –69-

தழைத்த பெரும் பூதூர் தனி நாதன் திருவருளால்
பிழைத்த மணவாள முனி பிறை ஒளியைத் திரு நுதலும்
குழைத்து அணிந்த திருமணும் என் கூர் மதியில் தரித்த பின்னர்
அழைத்து அடியேன் தனையவனே யடிமை திருத் திண்ணனவே –70-

திண்ணனவே எதிராசன் சேவடி சேர் ஆயியிடம்
நண்ணி நமன்று ஆசாரிய விதயவுரை தான்  கேட்கும்
அண்ணல் மணவாள முனிக்கு அனுதினமும் அன்புடனே
வண்ண மலர் சாத்துமவர் வானவராய்த் திகழ்வாரே –71—

வார் புனல் சூழ் பூதூர் மன் வளமுரைக்கும் உலககுரு
சீர் வசன பூடனத்தின் செழும் பொருளைச் செகமறிய
நீர்மையுடன் வியாக்கியையை நிருமித்த வரயோகி
கார்முகிலைத் தினம் தோறும் கழல் பணிவார்க்கு ஈடிலையே –72–

இலை எதிராசற்கு நிகர் இவ்வுலகில் குரவர் என்று
நிலை நிறுத்தும் அருளாளப் பெருமாள் எம்பருமானார்
கலையறிந்து கருத்துரைக்கும் கருணை மணவாள முனி
மலரடிக்கு ஆள் அல்லாதார் வையகத்து வழங்காரே –73—-

காரேயும் கருணை இராமானுசனைக் காசினியில்
நேரே கண்டு அடி பணிய நியமித்த சடகோபன்
சீரேயும் தமிழ் மறைக்குச் சிறந்த குரு இவர் என்று
பேரேயும் மணவாள முனி கழலைப் பிரியோமே –74–திருவாய் மொழி ஈட்டு விளக்கம் அருள இவரே சிறந்தவர் என்று பெயர் பெற்ற —

மேதினியில் சித்திரையில் ஆதிரை நாள் விளங்க வென்று
பூதூரில் வந்துதித்த புனிதன் எதிராசன் தன்
பாத மலர்க்கு ஆளான பாகவதர் திலதம் எனப்
போதமுளோர் புகலும் மணவாள முனி புவிக்கு அரசே –75–போதமுளோர் –சிறந்த ஞானம் உள்ளவர்கள்-

அரசாகும் எதிரிகளுக்கு என்று அகில வுலகும் பணியும்
பரமன் இராமானுசர்க்குப் பாங்கான பத்தன் என்னும்
வர வர மா முனிவன் இந்த வையகத்தில் வந்திலனேல்
உரை  பெறு நற்றமிழ் வேதம் உலகறிவார் எவருண்டே –76-

உண்டோ ஒ எதிராசற்கு ஒருவர் நிகர் என்றுரைக்கும்
வண்டாரும் தொடை மௌலி மணவாள மா முனிவன்
விண்டலர்ந்த மலர்பபதத்தை விரும்பி யனுதினம் வணங்கும்
தொண்டர் தமக்கொரு காலும் துயருதிக்க கில்லாவே –77–

வேதாந்த விழுப் பொருளின் மேலிருக்கும் அரங்கேசர்
நாதன் நமக்கு என்று உரைக்கும் நற்குணனாம் எதிராசன்
மாதகவால் எவ்வுயிர்க்கும் வாழ்வு அளிக்கும் வரயோகி
பாதமடை பத்தர் பதம் பணிந்து ஏத்திப் பற்றுமினே –78–

மின்னு புகழ் எதிராசன் வீறுரைக்கும் வரயோகி
துன்னு புகழ் நாடோறும் துதிக்கும் அடியாரவர்கள்
பன்னு மொழியே சுருதி பார்வை செடிக்குத் தீயே
என்னுமது முன்னொருகால் இயம்புவர் எம் பெரியோரே –79–அடியவர்கள் கூறும் வார்த்தையே வேதம் -அவர்கள் கடாஷமே உலக வாழ்க்கை செடியை அழிக்கும் நெருப்பு —

பெரியோரும் சிறியோரும் பித்தரும் நற்பத்தருமே
பிரியாது வந்திறைஞ்சும் பிறங்கு புகழ் எதிராசன்
மருவாரும் மலரடிக் கீழ் வணங்கும் எழில் வர யோகி
அருளே நம் அனைவர்க்கும் அதிசயத்தைத் தரவற்றே –80-

வற்றாத புனல் பூதூர் மன்னடியைச் சேர்ந்து நங்கள்
வற்றாத பவக்கடலை வற்ற நினைவுற்ற பரன்
செற்றாரைச் செற்ற வர யோகி திருத் தாளிணையாம்
பொற்றாமரைப் போதைப் பூணாகத் தரிப்போமே –81—

தரிப்போமே தாரணியில் சகலகலை கற்றுணர்ந்து
கரிப்போமே சமுசாரக் கடலை மிகவும் கலைகள்
விரிப்போமே எதிபதி தாள் மேவு வரவர முனியருள் கொண்டு
இருப்போமே ஏற்றரும் சீர் இமையவர்கள் இனம் சென்றே –82-

சென்று கலியிருள் தன்னைச் செழு மறையின் ஒளியதனால்
கன்றும் எதிராசன் எழில் கண்ணனடி காட்டிலனேல்
இன்று உயிர்கள் அறிந்துய்ய எளிதோதான் என்று உரைக்கும்
துன்று புகழ் வர முனிவன் தூய தமிழ் மறைக்கு அரசே –83-

சேமம் குருகையர் கோன் திருவடி என்று என்று பணிந்து
தாமம் அடியார்க்கு அருளும் தகவன் எதிராசன் அடித்
தாமம் முடிக்கு அணியும் மணவாள முனி பூம் திருத் தாள்
பூ மது வுண் வண்டினமாம் பூசுரர்கள் என் துணையே –84-

துணர் பொழில் சூழ் அரங்கேசன் தொல் சீரின் மன்னும் எதி
கணமதுக்குத் தலைவன் இராமானுச நற் கழல் கமல
மணமிக வண் மணவாள மா முனிவன் கலை பொருள்கள்
குணமுடனே அடியவர்க்குக் கூறுகின்றது அதிசயமே –85– மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள் அடியவர்க்கு மேன்மையை அளிக்கும் –

சயமேவும் எதிராசன் அடிக்கடியன் நான் என்று
துயமுடனே சகல மறைத் துய்ய பொருள் உரைத்து எமக்குப்
பயன் அளிக்கும் வர யோகி பாருலகில் வந்திலனேல்
நயம் அறிவார் இல்லை என்று நா வலர்கள் ஒதுவரே –86–த்வய மந்த்ரத்துடன் அனைத்து மறைகளுக்கும் தூய பொருள் உரைத்து அருளும் —

ஒது மறையோர்க்கு இனிதாய் உரைத்தருளும் ஒள்ளிய  நூல்
தீதில் சிரீ பாச்சியத் தோன் சீர் மன்னு வரயோகி
மேதினியில் உதித்த பின்னர் விளங்கிய செந்தமிழ் மறைகள்
பேதமறக் கற்றுணர்ந்து பெருமை பெறுமின்கள் இன்றே –87–

இன்தமிழின் பொருள் எல்லாம் இவ்வுலகில் அறிந்துரைக்கும்
துன்று புகழ் ஆரியர்கள் துதிக்கும் எதிராசர் புகழ்
நின்றுரை செய் வரயோகி நீணிலத்தில் ஒரு மரத்தை
சென்றடையப் பரமபதம் செய்தருளும் நீர்மை என்னே –88—ஒரு மரத்தையும் பரமபதம் சென்று அடையும் படியாகச் செய்த கருணை தான் என்னே —

என் போலும் பிழை செய்வார் இவ்வுலகில் இல்லை என்றும்
உன் போலும் பொறுத்து அருள்வார் ஒருவர் இலையே என்றும்
அன்போடன்று எதிராசர்க்கு அதிசயம் சொல் வர முனிவன்
பொன் போலும் அடி முதலாப் போற்றுமின் நீர் முடியளவே –89–ஆர்த்திப் பிரபந்தத்தில் அன்போடு அருளிச் செய்த —

முடி யழகும் விழி யழகும் முகத் தழகும்திரு மேனிப்
படி யழகும் தூய முறுவல் பவள நீர் வாயழகும்
கடி யழகும் கரத் தழகும் கண்டு மகிழ்ந்து எதிராசர்
அடி பரவும் வர முனிவன் அடி யழகும் விடவற்றே –90-

வற்றாத பவக்கடலை வற்றுவித்து அந்தாமத்தில்
நற்றாதை பதமளிக்கு நம்மெதிராசன் பதத்தை
பற்றாகப் பற்று மணவாள முனி இவ்வுலகின்
முற்றாது எம் தீ வினையை முடித்த வகை அறியோமே –91–

மேவாத சமயிகளும் மேவியடி பணிகின்ற
மூவாத கதிகள் தரு மொய்ம்பு எதிராசற்கினிய
பாவாரும் தமிழ் மறைக்குப் பாங்கான குரு வென்று
தேவாதி தேவனுமே செப்பு மணவாளனையே –92–

மணவாள மா முனிவன் வண்மை திகழ் எதிராசன்
குணமேவு நற்பரமன் கூர் மதியோர் குருக்கள் எல்லாம்
துணையாகத் தொழுது தினம் துதிக்கும் அரவரசாகும்
இனியாரும் இல்லா திங்கு எழில் அரங்கம் இலங்குவனே –93—-இவரே அரவரசான ஆதிசேடன் ஆவார் —-

இலங்கு திகிரியின் ஒளியால் எழில் அத்தி கிரிமாலும்
கலங்கி எதி பதி யளித்த காரணமும் மா முனிவன்
துலங்கிய நற்குணங்களையும் தொல்லுலகோர்க்கு அளித்து அருளும்
வளம் கொள் மணவாள முனி மன்னிய சீர் வாழ்த்துமினே –94–

வாழ்த்துமின்கள் நாடோறும் மாறனடி பணி முனி தாள்
தாழ்த்து முடி மணவாள மா முனிவன் தன்னருளால்
சூழ்த்த வினைத் தூற்றை முற்றுரத்திப் பின் நல் வனந்தழைக்கும்
மூழ்த்த பெரு நீருலகீர் முத்தி தரும் முறை முறையே –95—-

முறை யுணரத் தமிழ் மறையை மூதுலகோர்க்கு அளித்து அருளும்
நறை வகுள மாறனடி நண்ணும் எதிராசர் புகழ்
திறலுறு நற் சிந்தை மணவாள முனி செய் கலையும்
நிறை புகழும் நெஞ்சில் வைத்து நீடுலகில் நில்லுமினே –96—

நிற்கின்ற திரு மலையும் நீள் விசும்பும் பாற் கடலும்
ஒக்க வளர் எதிராசர் ஓங்கு புகழ் இவ்வுலகில்
மிக்க வருள் மணவாளன் மேய்க்கலையில் மன மகிழும்
தக்க மறையோர் எனக்குத் தாரணியில் வான் துணையே –97–

துணையாளன் வயலரங்கன் தொல் சீரை ஏத்துமவர்க்கு
இணையில்லை என்றுரைக்கும் எதிராசன் எங்கதி என்றுணர்
மணவாள முனியோது கலைகளை உள் நினைந்தார்கள்
இணை மலர்த்தாள் இறைஞ்சுமவர் எழில் விசும்புக்கு இறையவரே –98–

இறையும் அறிவில்லாத ஈனரையும் தன்னருளால்
நிறை மதியார் ஆக்கியருள் நின்மலனாம் எதிராசன்
நறை மலர் தாள் முடிக்கணியாய் நற்றரிக்கும் மணவாளன்
விறல் மருவு தொன்னூலின் வியாக்கியைகள் விரும்பீரே –99–

விருப்பமுடன் திருமாலை மேவியுள்ளே நைந்துருகி
இருக்கு மகிழ் மாறனடி ஏத்தி யருள் மாரியடிக்கு
உருக்கமுரும் எதிராசர் குண மகிழும் தமிழ் மறையைப்
பெருக்கமுற ஒது மணவாளனடி பேணு நெஞ்சே –100—அருள் மாறி –திரு மங்கை ஆழ்வார் —

நெஞ்சே திருமாலை நித்தியமும் அடிபணியும்
மஞ்சேறு  குருகை மகிழ் மாறனடி பணிந்து உய்ந்து இங்கு
அஞ்சேல் என்று எமக்கு அருளும் எதிராசன் அடி மருவு
நஞ்சேமே வர முனிவன் நண்னுதி நீ நற் குணமே –101—-நஞ்சேமம்  -நமக்கு காப்பாக —

———————————————————————————————————————————————————————————————————————–
மத்பக்தா யத்ர காயந்தி அத்ர வசிக்கிறேன் -பக்தர்களின் இசைகளிலே வசிக்கிறேன் -எம்பெருமான் –
கொண்டாட்டம் -நம் பெருமாளுக்கு -முதலில் மணவாள மா முனிவரைப் பற்றியே -இன்றும் சேவிப்பார்கள் –
பாவின் இன்னிசைப் பாடித்திரிவனே –
நறையூர் நின்ற நம்பி -நான்கு வேதம் ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை எழும் அறிந்த அந்தணர்கள் –
காழிச் சீராம விண்ணகரம் –பதிகத்திலும் இப்படி உண்டே –
திரு நெடும் தாண்டகம் -நெடு வீணை முலை மேல் தாங்கி –திரு மங்கை ஆழ்வார் வீணை வித்வான் –
வர வர முனி சதகம் -எறும்பி அப்பா -பிரதிவாதி பயங்கர அண்ணாவும் அருளி -மா முநிகலையே பர தெய்வம் ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -காட்டி அருளினவர்கள் –
40 ஸ்லோகம் -எறும்பி அப்பா அருளிச் செய்த சதகம் -தேவரீர் திரு நாமத்தையே சந்கீர்த்தனமாக படும் படி அனுக்ரஹம் செய்ய மா முநிகலையே பிரார்த்திக்கிறார் -பிரகிருதி தடைகளை நீக்கி அருள வேணும் –
44- ஸ்லோகம் -நித்யம் -திருப்பள்ளி எழுச்சி -அடியவர்கள் சங்கீர்த்தனம் -சுருதி உடன் சேர்த்து பாடும் அடியவர் திருவடி களிலோ திளைத்து இருக்க வேண்டும் –
ஸ்லோகம் -47-கமல நயனம் ஆலோக்யம் -நம்பெருமாளை மங்கள சாசனம் செய்ய எழுந்து அருளும் பொழுது தேவரீர் திரு நாம சங்கீர்த்தனம் செய்து நாட்டியம் ஆட வேண்டும் –
81 ஸ்லோகம் -சக்ரவர்த்தி திருமகன் வார்த்தை -மா முனிகளை பற்றி -தனது கோயில் ஆழ்வாரை திறக்க முடியாமல் இருக்க –
இளைய பெருமாள் -போலேவே நினைத்து இருப்பதாக -அருளிச் செய்து உள்ளார் -மா முனிகள் திரு நாம சங்கீர்த்தனம் எவ்வளவு ஏற்றம் என்பதை காட்ட –
பிரதிவாத பயங்கர அண்ணா அருளிச் செய்கிறார் திரு மூல வைபவம்
மூலம் –அவதார மூலம் சேதனர் முக்திக்கு மூலம் -நம் ஆழ்வார் திருவாய் மொழிக்கு சாம்ராஜ்ய மூலம் –கலி தோஷம் களையும் மூலம் -தாப தரைய சம்சாரிகளுக்கு சகல புருஷார்த்தங்களுக்கும் மூலம் –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் நாத முனிகளை பற்றி தேசிகன் –
50 சூரணை ஆசார்ய ஹிருதயம் பண்ணார் பாடல் -புண்புரை இசை கொள் வேதம் போலே -சாம வேதம் என்று சொல்லாமல்
வேதம் சாம்யம் திருவாய்மொழிக்கு சாதித்து -மேம்பட்டது -நம் ஆழ்வார் நாயனார் மா முனிகள் ஹிருதயத்தில் உள்ளவற்றை காட்டும் கிரந்தம் –
இசை கொள் வேதம் -இசை பற்றி அறிய செய்து மா முனிகள் காட்டி அருளுகிறார் –
ருக் யஜூர் அதர்வணம் –
பண்புரை புண்புடை வேதம் –அருளிச் செயல் -ஸ்ரீ சூ கதிகள்
நீர்மையை உடைய வேதம் -இசையுடன் சேர்ந்த வேதம்
நாயனார் மட்டும் பண்புரை வேதம் காட்டி அருளுகிறார் –
மா முனிகள் வியாக்யானம் கொண்டே இத்தை அறிய முடியும் –
பண்ணை புரைந்து உள்ள வேதம் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் பண் -ராகம் –
பண்ணியும் இசையும் கொண்டதே திருவாய் மொழி -சாம வேதத்துக்கு இசை ராகம் சுரம் உண்டே –
சாந்தோக்யம் -ராகமும் காட்டி அருளுகிறார்
செம் சொல் கவிகாள் –பண்ணார் பாடல் கவிகள் -பண்ணுடன் சேர்ந்து புஷ்பம் பரிமளம் சேர்ந்து இருக்குமா போலே திருவாய் மொழியும் இசையையும் பிரிக்க முடியாது
பண் என்பதும் இசை என்பதும் தனி தனி -காட்டி அருளுகிறார் –
நாயனார் 6-6-5- பண்புடை வேதம் -என்பதை பண்புரை வேதம் -பொய்யில்லாத மா முனி -ஐந்து வியாக்யானங்களும் பண்புடை சொல்ல நாயனார் மட்டுமே பண்புரை வேதம் –வேதத்திலே ராகம் உண்டு -காட்டி –
இசை கொள் வேதம் -நாதம் -என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்ய -தாள பேதம் -நாயனார்
பண் -இசை ஏழு ஸ்வரங்கள் நரம்பு -குதிரை கால் -பல அர்த்தங்கள் -மின்னிடை மடவார் -பண் -அலங்காரம் பொருளில் –
பெயர்க்காரணம் -சிலப்பதிகாரம் -அடியார்க்கு நல்லார் -பண் -ஒலிகள் கிளம்பி -நெஞ்சு நாக்கு உதடு பல் -8 இடங்களில் ஒலி கிளம்பி -பாடி -பண்ணப்படுவதால் –
673 இதிகாரம் -தாமரைக் கண்ணன் -உடம்பு ஒலிகள் தொண்டை ஒலிகள் 8 பண்ணப் பட்டு
இசை -இசைந்த பாடல் -பொருந்தி சேர்ந்து -லஷணம்
வைகுந்தா -இசையோடும் பண்ணோடும் பாட வல்லார் பண் -கானம் -நம்பிள்ளை இசை குருத்வ லகுத்வாதிகள் -தாளம் 6 அங்கங்கள் -லகு குறு தாளத்தின் அங்கங்கள்
கானம் -பாட்டு -ராகம் -அர்த்தம் – வாய் கானம் புல்லாம் குழல் கானம் இசை -வார்த்தை இல்லை சுரங்கள் –
நாயனார் -69 சூரணை –வியாக்யானம் -பண் இசை தாளம் இதுக்கும் உண்டு
பண் ஆவது -முதிர்த குறிஞ்சி -நட்டபாரை நாட்டை நட்ட ராகம் -பந்துவராளி இந்தளம் -6 ராகம் முதலானவை –
இசை யாவது -காந்தார பங்கஜம் -ஏழு இசைகள்
தாளம் -கஜ கர்ண -பல தாளங்கள் –
யோஜனை வாசி பெண்ணுக்கும் பேதைக்கும் தெரியும்படி -கற்றோர்கள் தாம் உகப்பார் -ஆசை உள்ளோர் –பின் உகப்பார் மற்றோர் ஆசார்யத்தால் இகழந்து வந்தால் என்ன —
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -கல்வி மேல் ஆசை தெரியும் –
கானம் என்பதற்கு ராகம் காட்டி -அருளுகிறார்
இசை -சப்த ஸ்வரங்கள் காட்டி அருளுகிறார்
தாளம் அங்கங்கள் பிரித்து காட்டி அருளுகிறார் –
சப்தம் குரல் ரிஷபம் சுத்தம் -மாறி உள்ளது என்பர் தப்பாக –
ஸ்லோகம் -அமர கோசம் -கொண்டு அருளிச் செய்கிறார் மா முனிகள் -சுவரத்துக்கு -குரல் போன்றவற்றையும் எடுத்துக் காட்டி -ச ரி க -போன்ற ஏழு ஸ்வரங்களும் –
விசத வாக் சிகாமணி மா முனிகள் –
தாளம் பற்றியும் ஸ்லோகம் காட்டி அருளுகிறார் -இது எங்கே என்றே இன்றும் அறியவில்லை -பிரசீதம் -10 தாளங்கள் காட்டி
52-சூரணை -சந்தோக்யம் -வேத கீத -உத்கீத –மாற்றி -சாந்தோக்ய சமம் –
காண ச்வரூபியாகி விசேஷிக்கையாலே
-வேதமும் கீதமும் –
யாழ் கருவி -அதோ அந்த பறைவை போலே -முதிர் சுவை –
முதிர் சுவை -அவனே ப்ரஹ்மம்-காண சாமான்யம் இல்லை யாழ் நரம்பின் பாலை என்ற ராகம்
தொல்காப்பியம் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை -பஞ்ச மரபு -அரிவனார் -சங்க காலத்து புலவர் -யாழ் விஷய சாஸ்திரம் இது -முதல் ஆழ்வார் பாசுரங்கள் இதில் காட்டி உள்ளார் –
பாலை -பஞ்ச மரபு நூலை மா முனிகள் அறிந்து வியாக்யானம் –
அஞ்சு யாழ் -காட்டி பாலை யாழ் ஒரு வகை -சாம வேத கீதனே -சாந்தோக்யம் -முக்கியம் போலே -பாலை யாழ் அனுசரித்து -இதில் அமைக்கப் பட்டு ஹரி காம்போதி -இப்பொழுது பெயர் –
வேதங்களில் ராகம் இருக்கு என்றும் சொல்லி சாந்தோக்யம் ஹரி காம்போதியில் உள்ளது என்றும் இதுவே முக்கியம்
புல்லாம் குழல் இதில் முக்கியம் இயற்க்கை -ஹரி காம்பு ஓதி -அத்தனை பண்களும் இதை அடிப்படையாக கொண்டே –
மங்களகரமான பண் -மா முனிகள் அபிமானிக்கப் பட்ட இயற்கையான மங்களகரமான பண் உருவாக்கப் பட்ட ராகம் இல்லை
கௌசிக புராணம் –பைரவி ராகம் –
இன்னும் பல ராகங்கள் மா முனிகள் காட்டி அருளுகிறார்
ஹரி காம்போதி திருப்பால்லாண்டு –
நாட்டிய குறிப்பு இசைக் கருவிகள் குறிப்பு பல உண்டு மா முனிகள் வியாக்யானங்களில் -இசை ஞானம் நம் போல்வாரால் அறிய முடியாதே -சாஷாத் ஆதிசேஷன் அம்சம் அன்றோ –
அந்தர காந்தாரம் படை போர் முக்கு முழங்கும் -சேராமல் பலர் பாடுவார்கள்
மா முனிகள் -ஏற்படுத்தி உள்ளவை -ஆற்றில் கரைத்த புளி அல்லவோ செந்தமிழ் ஆரணமே
த்யாகராஜர் -ஹரி காம்போதி -கீர்த்தனைகள்
புரந்தர தாசர் மாயா மௌலி மாற்றி -பாடுவதற்கு எளிமை என்று
சங்கீதமும் பகவானே –

——————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ சேனாபதி முனிவர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –