தென்னாச்சார்ய சம்ப்ரதாயம் –ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள்

ஸ்ரீ வரவர முனியடி வணங்கும் வேதியர்
திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

நஹி நிந்த்யா நியாயம்
தென்கலை -தமிழ் வேதம் -ஊற்றம் உள்ள ஆசார்யர்கள் -தென்னாசார்யர்கள் –
அநு வ்ருத்தி பிரசன்னா சார்யர்கள் –
க்ருபாமாத்ரா பிரசனாச்சார்யர்கள் -பயன் நன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வார்கள்
தமது பேறாக அனுக்ரஹித்து அருளுவார்கள் –
விசதவாக் சிகா மணி–பாஞ்சராத்ர சாஸ்திரம் –
நாஸிகா மூல மாரப்ய –ஹரே பாதத்வ்ய யாக்ருதிம்
உத்புல்ல கமலஸ்தாயி ஹரிபாத த்யாக்ருதிம் –நாஸிகா மூலத்தில் தாமரை மலர் இருப்பதாக
அஷ்டமீந்து கலாதார ஹரி பாதத்வயாக்ருதிம் –
நெற்றியுள் நின்று என்னையாளும் நிரை மலர்ப் பாதங்கள் -திருவாய் -1-9-10-
தர்மஜ்ஞ சமய பிரமாணம் வேதாச்ச -அவிகீத சிஷ்டாசாரமே பிரமாணம் முன்னோர் வழி செல்வதே -சால சிறந்தது –

சரீராத்மா பாவம் -திறவு கோல்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் இன்னுமிது மிகையாதலின் –
தொழக் கருதுவது துணிவது சூதே –
தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேம-உப நிஷத் –நம என்று வாயினால் சொல்வதும் மிகையே
அஞ்ஜலி பரம் வஹதே -பெரிய பழுவாகக் கருதுவான்-

நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே
திரு உள்ளத்தில் இரக்கமே கார்யகரம் –
நெறி காட்டி நீக்குதியோ
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே
நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாகப் பற்றா நிற்க அல்லாதார் அசேதன க்ரியா கலாபங்களைப் பற்றுவது போலே துரி யோதனன் நிலை -நம்பிள்ளை –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் பிரதஷண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -நம்பிள்ளை
என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு -1-4-7- தூது விடும் பிரகரணம் –

செங்குறிஞ்சித் தாரார் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும் நேராதன வொன்று நேர்ந்தாள்-சிறிய திரு மடல்
தான் -வகுத்த விஷயத்தில் ஓர் அஞ்சலி பண்ணினால் அது சாதனத்தில் அந்வயிக்கில் செய்வது என் என்று இருக்கக் கடவ –தான் -பெரியவாச்சான் பிள்ளை –

———————————————————————————————————————————-

எம்பெருமானுடைய அருள் நிர்ஹேதுகம் –
எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே-
என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
வெறிதே அருள் செய்வர்
ஸூ க்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு தானே அவற்றை ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும்
தேசிகரும் பரமபத சோபானத்தில்-
அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநு ஷங்கிக ப்ரா சங்கிக சாமான்ய புத்தி மூல ஸூ க்ருத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாஷம் பண்ணி அருளுவான் –
சம்சார தந்திர வாஹித்வாத் ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே –
காசௌ புருஷகாரேண நசாப்ய அநயேன ஹேது நா கேவலம் ச்வேச்சயைவாஹம் பரேஷ கஞ்சித் கதாசன —
மருவித் தொழும் மனமே தந்தாய்
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
இத்தால் நிர்ஹேதுகத்வ பகவத் கிருபை நிரூபணம் ஆயிற்று –

—————————————————————————————————————————————–

2- பிரபத்தியும் அநுபாயத்வம்
த்வமேய உபாய பூதோ மே பவேதி ப்ரார்த்த நாமதி சரணா கதி
தேசிகரும் நியாய சிந்தாஞ்சனத்தில்
இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா
ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தே கிம்பு நஸ் சஹ காரிணாம்-
நியாச திலகத்தில் ஸ்ரீ தேசிகர் –ஹேதுர் வைத்தே விமர்சே -என்கிற ஸ்லோகத்தில் இதரா ந பேஷ உபாயத்வம் –
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –
ச்வீகாரம் தானும் அவனாலே வந்தது -சிருஷ்டி அவதார முகத்தாலே பண்ணின கிருஷி பலம்
ரத்னம் -அதிகாரி பேதத்தால் உபாயம் -வணிகனுக்கு  -போக்கியம் -ராஜாவுக்கு –
பகவத் பிரவ்ருத்தி விரோதி ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியே பிரபத்தி
சசால சாபஞ்ச முமோச வீர
வனத்திடை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று –
உபபத்தேச்ச -3-2-4- ப்ரஹ்ம ஸூ தரம் /பலமத உபபத்தே -3-2-37
பிரபத்தி உபாயத்துக்கு இக்குற்றங்கள் இல்லை- மா முனிகள் வ்யாக்யானத்தில்-அருளிச் செய்வதால் வேறே -மற்றொரு குற்றம் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது
அதாவது ஆபாத ப்ரதீதியிலே உபாயத்வ பிரதிபத்திக்கு அர்ஹமாம் படி இருக்கை
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –என்கிறபடியே பிரபத்திக்கு உபாயம் அவன் நினைவு
புழு குறித்தது எழுத்தாமாப் போலே
குணாஷர நியாயம் –அவனையே உபாயமாகச் சொன்னதே பிரபத்தி உபாயம் என்றது –

—————————————————————————————————————————————–

3- சேதன லாபம் ஈஸ்வரனுக்கே பேறு-
மன்மனா பவ -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
பிராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அடுத்தபடியாக அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-அவன் பசியைத் தீர்த்த பின் இவன் பசி தீரும்
அஹம் அன்னம் அன்ன மதந்த மத்மி–அவன் ஆனந்தம் கண்ட பின்பு தான் ஆனந்திக்கை
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-
பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெரும் செய் -ஆசார்ய ஹிருதயம் -2-10-
அபிஷிச்ய ச லங்கா யாம் ராஷ சேந்தரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோதஹ –
படியாய்க் கிடந்தது உன் பவளவாய்க் காண்பேனே
கதா ஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஆளவந்தார் –
தன்னுடைய அநு வ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷமே இ றே சேதனனுக்கு பிராப்யம் –
பரம புருஷன் –ஜ்ஞாநினம் லப்த்வா -ச மஹாத்மா ஸூ துர்லப
ஜீவாத்மாவான சொத்து சைதன்யம் ஆகிற கல்மஷத்தோடே கூடி இருக்கையாலே
சிறிது தலை யாட்டவும் வாலாட்டவும் பெறுகிறது –
தன்னை நன்றாக உணர்ந்த போது தலை மடிந்து நிற்கிறது –

—————————————————————————————————————————————–

4-ஸ்வ கத ச்வீகாரமும் -பர கத சவீ காரமும் –
மர்க்கடகிசோர நியாயம் -மார்ஜாரகி சோர நியாயம் –
அநந்ய சேதாஸ் சத்தம் யோ மாம் ஸ்மரதி நித்யச–தச்யாஹம் ஸூ லப பார்த்த நித்யயுக்தச்ய யோகின -ஸ்ரீ கீதை -8-14-
ஜ்ஞா நீது ஆத்மைவ மே மதம் –
அதிகமான ப்ரீதியையும் தானே அளிப்பதாக –நாயமாதமா ஸ்ருதியும் -8-10/11 ஸ்லோகங்களும் சொல்லும்
இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று
மா முனிகள் -உடையவன் உடைமையைச் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமி யான அவன் தானே வந்து
அங்கீ கரிக்கக் கண்டு இருக்கக் கடவ -பரதந்த்ரனான இச் சேதனன்
தன ச்வீகாரத்தாலே ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் அவன் நினைவு கூடாதாகில்
இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாத்தியம் ஆகாது என்றபடி
ஸ்வாமியாய் ஸ்வதந்த்ரனான அவன் ஸ்வமாய் பர தந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையாலே பெற நினைக்கும் அளவில் பாதகமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது -என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அநு பாயத்வமும்
பரகத ச்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது
ஸ்ரீ கீதா பாஷ்யத்திலும் தத்வியோகம் அசஹமாந அஹமேவ தம் வ்ருணே -தான் வரிப்பதையும்
மத ப்ராப்த்ய அநு குண உபாசன விபாகம் அஹமேவ ததீமீத்யர்த்த —ஸ்வ கத ச்வீகார பற்றாசைக் கழிக்கிறது
த்வத் பாதமூலம் சரணம் பிரபத்யே -புகல் ஓன்று இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –என்றாலும்
நாம் பற்றுகிற பற்று இல்லை -அவனுடைய கிருஷி பலித்தது
நிவேதயத மாம் ஷிப்ரம் -என்றும் காட்டப் பட்டதே –

—————————————————————————————————————————————–

5-பிரபத்தியின் அபராத கோடி பிரவேசம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே
தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன்
அஹம் அத்யைவ மா சமர்ப்பித-மம நாத யதஸ்தி யோச்ம்யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ
நியத்ச்வமிதி ப்ரபுத்ததீ அதவா கிம் நு சமர்ப்பயாமி தே –
ஆத்மா சமர்ப்பணம் செய்த உடனே அநு தபித்து அருளிச் செய்தார் ஆளவந்தார்
சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாமணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது இறே –
நெடு நாள் அந்ய பரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றுக்கே பர்த்ரு சகாசத்திலே நின்று
என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இ றே இவன் பண்ணும் பிரபத்தி
சம்சார பீதியாலே சமர்ப்பிக்கையும்
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையுமாக
இரண்டும் யாவான் மோஷம் அநு வர்திக்கக் கடவது –
கைங்கர்ய பிரார்த்தனையும் செய்து –
கைங்கர்ய பிரார்த்தனைக்கு பூர்வ பாவியாக ருசியையும் அபராத கோடியிலே பேசி அருளுவார் தேசிகரும்
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -திருவாய் -3-1-2-
கொண்டல் வண்ணா -கடல் வண்ணா -காயா வண்ணா -என்பார்கள்
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
அவிவிவேகியாய் ஆத்மசமர்ப்பணம் செய்வதும் -விவேகம் பெற்று அனுதபித்து ஸ்லோகம் செய்வதும்
நிரவதிக ப்ரீதியாலே அறிவு அழிந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய்
தம்மோடு கலந்த பெரு நல உதவிக்கு கைம்மாறாகத் தன்னுடைய
தம்முடைய ஆத்மாவை மீளாவடிமையாகக் கொடுத்து
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து –
த்வய உச்சாரண அநு உச்சாரணத்தாலே ப்ரபத்ய அனுஷ்டானம் பிறந்த பின்பு
த்வயத்தின் பொருள் நெஞ்சில் ஊற ஊற த்வ்யார்த்த பிரகாசகமான திருவாய்மொழி –ஆச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் நெஞ்சில் தேங்க
ஆத்ம சமர்ப்பணமாகத் தலைக் கட்டும் –

—————————————————————————————————————————————–

6-உபாயாந்தரங்களின் ஸ்வரூப விருத்த்வம் –
ஸ்வ ரஷணத்தில் ஸ்வ பிரயத்ன நாற்றத்தையும் சஹியாத ஸ்வரூப ஞானம் இல்லாதவர்களுக்கு உபாயம் –
யாதாம்ய ஞானம் உள்ளவர்களுக்கு அபாயமாகவே இருக்கும் –
நெறி காட்டி நீக்குதியோ -நெறி காட்டுகையும் நீக்குகையும் பர்யாய சந்தங்கள்
பரதந்த்ரமான வஸ்துவை ஸ்வ தந்திர க்ருத்யமான உபாய அனுஷ்டானத்திலே மூட்டி அசலாக்குகை
பொற் குடத்தில் தீர்த்தம் மத்ய பிந்துவின் கலப்பினாலே நிஷித்தம் ஆகிறாப் போலே
தானே கர்த்தா போக்கியம் என்கிற அஹங்கார கலப்பு –
ஸ்வ யத்ன  நிவ்ருத்தி பாரதந்த்ர்ய பலம் –
தேசிகர் நியாச திலகம் -உபாயான்தரம் ஸ்வரூப விருத்தம் என்று அருளுகிறார்-

—————————————————————————————————————————————–

7- எம்பெருமானுடைய வ்யாப்தி விஷயம் –
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் –1-1-10-
அத்புத சக்தி
அணோராணீயாம்சம்-
நூலில் ரத்னத் திரள் போலே -எம்பெருமானுக்கு அணு பதார்த்தங்களிலும் அந்தர் வ்யாப்தி அநபாயம் என்பதும்
ஒவ்வொரு பதார்த்தத்திலும் பரிசமாப்ய வர்த்தமா நத்வமும் அவ்யாஹதம் என்பதும் சித்தாந்திகளின் கொள்கையாக சித்தம்-

—————————————————————————————————————————————–

8- வாத்சல்ய குண விசாரம் –
எற்றே தன கன்றின் உடம்பின் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்றுகந்த ஆ –
அவிஜ்ஞாதா சஹாஸ்ராம்சு -அடியார்களின் தோஷங்களைக் காணாதவன் -பிரேம வசத்தினால் –
நிகரில் புகழாய் -என்றே நம்மாழ்வார்
தோஷ போக்யத்வத்தையே மங்க வொட்டு உன் மா மாயை-

—————————————————————————————————————————————-

9-பரதுக்க துக்கித்வ நிரூபணம் –
தயை பிறர் துக்கம் கண்டு தானும் துக்கிப்பதே தயை
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க
பர துக்கங்களில் முறுவலிப்பது ஹேயம்-கரைந்து ஏங்குவது உற்றது
குண பரிவாஹா த்மா நாம் ஜன்ம நாம் -கல்யாண குணங்களைக் காட்டவே திருவவதாரங்கள்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்தி தே-
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
சோகம் பரார்த்த சோகம் -சம்ஜாத பாஷ்ப -வாலிக்காக பெருமாள் கண்ணீர் விட
விமான பபூவ -மனமும் விகாரம் அடைய
ராம கிருஷ்ணாதி அவதார குண சேஷ்டிதங்களில் நீர்ப்பண்டமாய் உருகும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் –சத்ய மேதா -சத்யமான மேதையை யுடையவன் –
கழகம் ஏறேல் நம்பீ-பட்டர் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ நியந்தாவாய் இருக்கிற சர்வேஸ்வரன்
நாலிடைப் பெண்கள் இருந்த விடத்தே புக்க அல்லது நிற்க மாட்டாதே செல்லாமை விளைய
அவர்கள் நீ இங்கே புகுராதே கொள் என்ன
விலங்கிட்டாப் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நிற்கிறான் என்கிற சௌசீல்யம்
தங்களையும் இவர்களையும் ஒழிய ஆரறிந்து கொண்டாட
வ்யாசாதிகள் எழுதி இட்டு வைத்துப் போனார்களோ -என்று அருளிச் செய்வர்
நம்பிள்ளை –சர்வ நியந்தாவானவன் சிலருக்கு நியமிக்கலாம் படி எளியன் ஆனான் என்றால் இது மெய் என்று கைக் கொள்ளுவாரைக் கிடையாது இ றே
சாஸ்திரங்கள் எல்லாம் ஈசேசிதவ்ய விபாகம் பண்ணி ஒருங்க விடா நிற்க அத்தலை இத்தலையாக செல்லுகிறது இ றே இது
விகர்த்தா-திரு நாமம் இத்தையே சொல்லும்

—————————————————————————————————————————————–

10-பிராட்டி விஷயம் -அவதாரிகை –
உபாய பூதை/விபூத்வம் /ஜகத் காரணத்வம் /
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு -சேம நிதி மிதுனத்தின் கடாஷங்கள்-தைவதம் தம்பதீ ந –
பட்டர் –ச்ரியம் த்வத்தோபி உச்சைர் வயமிஹ பணாம–என்றும்
தவ ஸ்பர்சா தீசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம் –
தேசிகன் ஸ்ரீ – கோதா ஸ்துதியில் –வாசாலயந்தி வ ஸூ தே ரசிகாஸ் த்ரி லோகீம் ந்யூ நாதி கத்வசமதா விஷயைர் விவாதை
மூ வகையான வாதங்கள் மாலை மாற்றும் பொழுது எம்பெருமானை உயர்த்தியும் பிராட்டியை உயர்த்தியும் இருவரையும் சமானமாகவும் பேசி –சபத்நீ தஸ்ய சாம்ராஜ்யம் சர்வதா ஸூ ப்ரதிஷ்டிதம் –திரு உடைய தேவரே தேவராவார்
யாதவாப்யுதயம் –ஸ்ருங்கார லீலோபம விச்வக்ருத்யம் -மிதுனம் இட்டு ஸ்லோகம் -ஜன்ம ச்தேன பிரளய ரசனை பரம புருஷனுக்கே
வினித விவித  பூத வ்ராத ரஷைக தீஷை –
ரகஸ்ய த்ரய சாரம்-ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –
சத்ர சமாராதிகள் போலே -ஜகத் காரணத்வ மோஷ ப்ரத்வ லஷ்மி சமேத -முடிவில் வைத்து அருளினார்
ஆதி முனி வாகன போகத்தில் –இக்காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சர்வ லோக சரண்யனுக்கே விசேஷ சிஹ்னங்கள்

—————————————————————————————————————————————–

11-உபாயத்வம் –

இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க மாட்டாது போலே புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஒரே வ்யக்தியிலே சேர்ந்து இருக்க மாட்டாதே
கொடுப்பித்தல் -புருஷகாரத்வம் -தானே கொடுத்தல் உபாயத்வம்
தேசிகன் ரகஸ்ய ரத்னா வளியில் -ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனுமே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
சர்வ ஸ்வாமிநியாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹதர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதிசயத்தாலும் அத்தலையில் வாலப்ப்யாதிசயத்தாலும் புருஷகாரமாகக் கொண்டு இஜ் ஜீவர்களுக்குத் தஞ்சம் ஆகிறாள்
நிருபாதிக ஸ்வாமி தனது உடைமையை அடியவர்களுக்கு அளிப்பது போலே –பொன்னுலகு ஆளீரோ-புவனி முழுது ஆளீரோ –
திருநாட்டை அடியார் இட்ட வழக்காக்கி வைக்கிறான்
ஆச்சார்யர்கள் கட்டளையை எதிர்பார்த்தே அளிக்கின்றான் –தேசிகா தேச காங்ஷி சந்தத்தே –
அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -இராமானுசர் மூலம் பெறுவதே சிறக்கும்
ஆயிரத்துள் இப்பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே –
ஆயிரத்துள் இப்பத்தும் அரு வினை நீறு செய்யுமே
இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
இப்பத்தும் வானின் மீது ஏற்றி அருள் செய்து
இப்பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும்
எம்பெருமான் திரு உள்ளத்தில் சீற்றத்தை மாற்றி பிரசாதத்தை உண்டு பண்ணும் முகத்தாலே சாதனங்கள் என்றவாறு
பலன் அளிப்பவன் எம்பெருமான் ஒருவனே –
நிக்ரஹ உன்முகனாய் இருக்கும் காலத்தில் நிக்ரஹ இச்சையைத் தவிரப் பார்ப்பதும்
அனுக்ரஹ உன்முகனாய் இருக்கும் காலத்தில் அவன் அனுக்ரஹத்தை பெருகச் செய்வதும்
பிராட்டியின் புருஷகாரத்வ செயல்கள் என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

12-ஜகத் காரணத்வம்
நிமித்த /உபாதான /சஹ காரி காரணத்வம்
சதேவ இதம் அக்ரே ஏகமேவ ஆஸீத் -உபாதானத்வத்தைச் சொல்லி
அத்விதீயம் -நிமித்தத்வமும் ப்ரஹ்மத்துக்கே சொல்லிற்று ஸ்ருதியும் –
தனது சங்கல்பம் மாதரத்தையே சஹகாரியாகக் கொண்டவன்
ஆண் மயில் ஸ்தானத்தில் எம்பெருமானையும் பெண் மயிலின் ஸ்தானத்தில் பிராட்டியையும் வைத்து
பெண் மயிலின் முகப்பே ஆண் மயில் சிறகை விரித்துக் கூத்தாடுமா போலே சிருஷ்டி கிரீடை செய்து அருளுகிறான் –
இத்தால் சிருஷ்டி பகவானுக்கே உள்ளது என்று நிரூபித்த தாயிற்று

—————————————————————————————————————————————–

13–விபுத்வம் –
போக்தா -போக்யம் -ப்ரேரிதா
பிரகிருதி மகான் போன்றவை போக்ய கோஷ்டி
பக்தர் முக்தர் நித்யர் போக்த்ரு கோஷ்டி
நியாமகன் ஒருவனே -உள்ளே புகுந்து நியமிக்கிறான்
வ்யாக்தி குணத்தாலே அன்று ஸ்வரூபத்தாலே
ஹிருதய பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்து போவது வருவது -ஆத்மா அணுவாக இருந்தும் சரீரம் எங்கும் ஒக்க சுக துக்கங்களை புஜிக்கும்
ஜ்ஞானம் எங்கும் ஒக்க வியாபித்து இருக்கும் படி
ஜீவ கோடியில் சேர்ந்த ஸ்ரீ மகா லஷ்மி அணு ஸ்வரூபத்வம்
லஷ்ம்யா ஜீவ அந்தர்பாவ பஷே து ந தோஷ –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -ப்ருகு பத்னி க்யாதி -தாதா விதாதா -என்னும் இரண்டு தேவதைகளையும்
நாராயண பத்னியான ஸ்ரீ மகா லஷ்மியையும் பெற்றதாக மைத்ரேயருக்கு ஸ்ரீ பராசரர் அருளி –
நித்ய அநபாயி நீம்
விக்ரஹ வ்யாப்தியே உண்டு ஸ்வரூப வ்யாப்தி இல்லை என்றதாயிற்று –

—————————————————————————————————————————————–

14- ஜாதியின விநாச நிரூபணம் –
வர்ணாஸ்ரமங்கள் சரக்கறுத்து பகவத் சம்பந்தமே உத்கர்ஷ ஹேது
இழி குலத்தவர்கள் ஏலும் எம்மடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னொடும் ஒக்க வழி பட அருளினாய்
குங்குமம் சுமந்த கழுதை போலே நான்கு வேதங்களை ஓதி எம்பெருமானை அறியாதவர்கள்
வெறும் தர்க்க பாண்டித்தியம் செருப்புக்குத்த கற்ற கல்வி போலே
ஷத்ரியனான விச்வாமித்ரனும் ப்ரஹ்ம ரிஷி யானான் இ றே
தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக வசிஷ்ட வாக்யத்தாலே ஷத்ரித்யத்வம் பின்னாட்டாத படி ப்ரஹ்ம ரிஷி யாய்விட்டான் இ றே
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத சம்ஸ்காரம் பண்ணி யருளினார்
மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சரமக்ருத்யம் அனுஷ்டித்தவாறும்
தர்ம புத்ரர் அசரீரி வாக்யத்தையும் ஞானாதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ச்கரித்தார்
தூஷ்ணீம் தஹனம் பண்ணவா என்ற சங்கை -யதியைப் போலே என்ற அசரீரி வசனத்தால் சங்கை தெளிந்தார்
வரம்பு அறுத்தார் ராமானுஜர் முலை கடுப்பாலே பீச்சும் தாய் பசு போலே
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்கும்
ச்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக விஷ்ணு பக்தி விஹீ நஸ்து யதிச்ச ச்வபசா தம –
ஆசி நோதி ஹி சாஸ்தரார்த்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி ஸ்வய மாசரதே யஸ்மாத் தச்மாதாசார்யா உச்யதே
நாபிதனுக்கும் வண்ணானுக்கும் மரியாதைகள் ஏற்படுத்தி -வாகனத்தின் மீது ஏறி -ராமானுஜர்
வர்ணாஸ்ரம தர்ம நியதிகள் அழியக் கூடாது என்பதில் உறுதி உண்டே
மிலேச்சனும் பக்தன் ஆனால் –பாவனா தீர்த்த பிரசாதனாம்
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தஸ்ய உச்சிஷ்டம் ஸூ பாவனம் –

—————————————————————————————————————————————–

15-விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் –
பூத பாவோத் பவகரோ விசர்க்க கர்ம சம்ஜ்ஞித
ஸ்திரீ புருஷ சம்யோகம் என்பதே இங்கே கர்மம் -விடத்தக்கது
விஹித விஷய போகம் பிராப்தமே யானாலும் விசிஷ்ட அதிகாரிக்கு ஜூ குப்ஸ நீயமே

—————————————————————————————————————————————–

16- கைவல்ய விஷயம் –
போக அபவர்க்க தத் உபாயகதீ –ஸ்தோத்ர ரத்னம் -4-
கைவல்யம் -அபவர்க்கம் -பெரியவாச்சான்பிள்ளை
போகம் -தேசிகர்
கீதா பாஷ்யத்தில் -பஞ்சாக்னி வித்யா நிஷ்டனான கைவல்யனுக்கு ப்ரஹ்மாத்மக பிரகிருதி வியுக்த ஆத்ம ஸ்வ ரூப உபாசன த்தையும்
பிரகிருதி வியுக்த ஆத்ம ஸ்வரூபாவாப்தி ரூப பலத்தையும் அர்ச்சிராதி கதியினால் பரமபத பிராப்தியையும் புநரா வ்ருத்தி இல்லாமையையும் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ பாஷ்யத்தில் கேவலனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி யாகிற பலன் சொல்லி
இந்த பரஸ்பர விரோதம் போக்க ஆத்ம அனுபவத்தை அவாந்தர பலனாகவும் ப்ரஹ்ம அனுபவத்தை பிரதம பலனாகவும் கல்பித்து தேசிகர் அருளுகிறார்
முக்தா நாம் பரமா கதி -சஹச்ர நாமம் –
ஆத்ம அனுபவமே பிரதான பலன்
மகா பாரத மோஷ தர்மத்தில் ஆத்ம ப்ராப்தி காமனையும் ஸ்வய நதர்மா -ப்ரஹ்ம அனுபவத்தை இழந்தவன் என்கிறது

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: