திருவாய்மொழியும் த்வயமும்-
உயர்வற உயர்நலம் -ப்ரஹ்ம சப்த விவரணம்
வண் புகழ் நாரணன் -என்று அந்த அந்த ப்ரஹ்மம் நாரணன் என்கிறது இரண்டாம் பத்தால்
அவனே ஸ்ரீ மான் என்கிறது மூன்றாம் பத்தாலே
இதை அடி ஒட்டி ஸ்ரீ பாஷ்ய காரர் ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
இதையே பத்துடை அடியவர்களுக்கு எளியவன் -சௌலப்யம்
பிறர்களுக்கு அரிய வித்தகன் -பரத்வம்
இவை இரண்டுக்கும் அடி –
மலர்மகள் விரும்பும் நமரும் பெற லடிகள் -ஸ்ரீ ய பதித்வமே அடி
என் அமுதம் சுவையன் திருவின் மணாளன் -ரஸ்ய ராசிக்யங்கள் ஏற்பட அடியும் ஸ்ரீ ய பதித்வமே.
மேலும்
மலராள் மைந்தன் -1-5-9-
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-
பூமகளார் தனிக் கேள்வன் -1-9-3-
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-
மலராள் மணவாளனை -1-10-4-
இப்படி ஸ்ரீ ய பதித்வமே அடி என்று காட்டி அருளுகிறார் எங்கும்
——————————————————————————————————————————————————————–
ஆழ்வார்கள் அருளிய தமிழ் அமுதம் -ஸ்ரீ அரெங்கராஜன் சுவாமிகள்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே -8-9-5-
ஈறில் இன்பத்து இருவெள்ளம் நான் மூழ்கினன் -2-6-8-
ஆழ்வார்கள் எழில் நலத்திலும் அருள் பெருக்கிலும் மூழ்கினவர்கள்
நுகர்ச்சி உள் அடங்காது பொசிந்து வந்த சொல் மாலைகள்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் -யானே
இரும்தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லேன் பெரிது -இரண்டாம் திருவந்தாதி -74
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்தூட்டும் திருவேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -75
மூங்கில் குருத்தும் தேனும் கலந்தது போலே ஆயிற்று
மேகமும் அவன் திருநிறமும் கலந்து இருக்கிற படி –
மேகம் என களிறு சேரும் திருமால் –
இன்கவி பாடும் பரமகவிகளால்
தன்கவி தன்னை பாடு வியாது -இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே -7-9-6-
இறை அருள் நுகர்ச்சியை எழுப்பியது அவன் இறைவன் பண்புகளே
உயர் நலம் -கொண்டே மதி நலம் அருளினான்
குணத்தை இட்டே இவரை எழுவித்துக் கொண்டது -இவர் இழிந்த துறை
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு என்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நான் நிற்பானோ -7-9-1-
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
பிடாத்தை விழவிட்டு தனது வடிவு அழகை காட்டினான்
திருத்திரை எடுத்தால் கூப்பிடுமா போலே கூப்பிட்டேன்
அது கவியாய் தலைக் கட்டிற்று
வடிவு அழகை காட்டி யாயிற்று கவிக்கு உள்ளுறை கொடுத்தது
ஆமுதல்வன் இவன் என்று தன் தேற்றி
என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -7-9-3-
பின்னானார் வணங்கும் சோதியே பாடுவித்தான் என்கிறார் அடுத்து
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் கவிகள் யானாய் தன்னை தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமால் இரும் சோலை யானே -10-7-5-
இந்த்ரர்க்கும் பிரமற்கும் முதல்வன் -தன்னை -வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4-
செந்நிறத்த தமிழ் ஓசை பண் சுமந்த பாடல் -திருவாய்மொழி
வடசொல் ஸ்ரீ ராமா யணம்
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாக அந்தணன் -அளப்பரிய ஆரமுது அரங்க மேய அந்தணன்
-அவனே அந்தமிழ் இன்பப்பா -குலசேகர பெருமாள் -அரங்கத்து அரவிணையில்
பள்ளி கொள்ளும் கோவே இந்த இன்பப்பா என்று காட்டி அருளுகிறார்
இன்ப மாரியில் ஆராய்ச்சி வீட்டின்ப இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம்
இன்ப மாரி -நம் ஆழ்வார்
இன்பப்பா -திருவாய்மொழி
– வீட்டின்பம் -அர்ச்சா திருமேனி
எங்கள் கண் முகப்பே –இங்கு அம் கண் மா ஞாலத்து இதனுள்ளும் ஒரு நாள் இருந்திடாய்
வீற்றிடம் கொண்டே –
அரையர் வாயில் சாளக்ராமம் கொண்ட விருத்தாந்தம்
வங்கி புரத்து நம்பி இடையர் கோஷ்டியில் இருந்து ஜய விஷயீ பவ
அவர்களோ பால் உண்பீர் பழம் உண்பீர்
புது அவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இனக் குறவர் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3-
கோயில் கொண்டான் திருக் கடித்தானத்தை –அதனோடும் என்னெஞ்சகம் கோயில் கொள் –
திருவாய்மொழி -8-6-5-
திருவருள் கமுகு -நீராலே வளருகை அன்றி மிதுன கடாஷத்தாலே வளரும் கமுகு
புள்ளுப் பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே -பெரிய திருமொழி -5-1-2-
ஆலவாய் உடையான் தமிழன் -பட்டர் அருளி ய தை -நினைவு படுத்துக
பாலேய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரம்
பண்ணுள்ளாய் கவி தன்னுள்ளாய் பக்தியின் உள்ளாய் பரம் ஈசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லு உளாய் என்று சொல்லாயே -7-1-6-
—————————————————————————————————————————————————————–
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply