ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ சம்ப்ரதாய பரிசுத்தி /அஞ்சலி வைபவம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதர்யா கவிதார்கிக கேசரீ
வேதாந்தா சார்ய மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்பில் திரு வேங்கடமுடையான்
பாரொன்றச்சொன்ன பழ மொழியுள் –ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு —

———————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீமத்  சம்ப்ரதாய பரிசுத்தி-

தம்பர  மென்றிரங்கித் தளரா மனந்தந்தருளால்
உம்பர் தோலும் திரு மாலுகந்தேற்குமுபாய மென்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாய மோந்ற்றிச் சதிர்க்குந்நிலை சார்ந்தனமே —

சதாசார்ய சம்பிரதாயத்தாலே அத்யாத்ம சாஸ்த்ரார்த்தவிசேஷ நிர்ணயம் பண்ண வேணும் –
என்னுமிடம் உப நிஷத்துக்களிலும் உப ப்ரும்ஹண்ங்களிலும் பிரசித்தம் —

சாஸ்த்ரார்த்த நிரூபணம் பண்ணும் இடத்தில் சக்தி இல்லாதவர்களுக்கு -உபதேசாத் ஹரீம் புத்த்வா –என்கிறபடியே சாஸ்த்ரஜ்ஞ சம்ப்ரதார்ய மாத்ரமும் அபேஷிதார்த்த நிர்ணயகமாம் —

சத்சம்ப்ரதாய ரஹிதமான சாஸ்த்ரத்தால்அர்த்த நிர்ணயம் துஷ்கரம் –ஸூ கரம் தானாகிலும் உபயுக்தமாகாது –

அத்யந்தாதீந்த்ரிய விஷயத்தில் சாஸ்திர மூலம் அல்லாத சம்ப்ரதாயமும் சம்ப்ரதிபன்ன சாஸ்திர விருத்தமான
சம்ப்ரதாயமும் பரம விப்ரலம்ப சம்பாவனை யுண்டாகையால் பாஹ்ய துல்யமாகையால் அவிஸ்வச நீயம்-

பரஸ்பர விருத்தமாக சதஸ்யமும் ரஹஸ்யமும் என்று சொல்லுமாவை இரண்டும் ஸ்வ வாக்யத்தாலே பாதிதங்கள் ஆம் –

திரளிலே சொல்லுமவை சதஸ்யம்-சில அர்த்தங்களை ஏகாந்தத்தில் சொல்ல விதிக்கையாலே அவற்றை ரஹஸ்யங்கள் என்கிறது –

பிரஜாபதி வாக்யம் முற்பட அஸூரேந்த்ரனான விரோசணனை மோஹிப்பைக்கைக்காகச் சொல்லப்பட்டு –
பிற்பட தேவந்த்ரனை பர்வக்ரமத்தாலே பரிசுத்தாத்ம விஷயத்திலே பிரதிஷ்ட்டித புத்தி யாக்குகிறது-

உபகோசல -வைச்வா நராதி வித்யைகளிலே முற்பட வேத்யோபா தேயங்களைப் பற்ற ஏகதேச உபதேசம் க்ரமேண சேஷ பூரணார்த்தம் —

சர்வேஸ்வரன் தானும் தான் உபதேசித்த ஜ்ஞானத்தைப் பின்னையும் –
வித்த்தி பிராணிபாதேன பரிப்ரச்நேன சேவயா –ஸ்ரீ  கீதை -4-34-என்று பல ஜ்ஞானிகள் பக்கலிலே கேட்க விதித்தான் இ றே-

இப்படிகளாலே சம்ப்ரதிபன்ன சாஸ்திர விரோதம் இன்றிக்கே சாஸ்திர மூல சம்ப்ரதிபத்தி யுண்டான சம்ப்ரதாயம் உப ஜீவ்யம் —

இப்படிப் பட்ட சத்சம்ப்ரதாயத்தில் தோற்றும் விரோதம் –தத்துவ விஷயமாகில் -தாத்பர்ய பேதத்தால் விரோத சாந்தி யுண்டாம்
அனுஷ்டான விஷயமாகில் அவ்வோ அதிகாரிக்கு அனுகுணமாக வ்யவச்த்திதாவ்ய வஸ்த்தித்த பிரக்ரியையாலே விகல்பமாம் —

நியாச உபாசனங்களிலே அதிகாரி பேதத்தையிட்டு வ்யவஸ்த்தித விகல்பம் என்பார்க்கும் -என்று பார்க்கிலும் —
பல சாம்யத்தையிட்டு துல்ய விகல்பம் என்பார்க்கும் விரோதம் இல்லை -என்று பார்க்கிலும் —

சர்வலோக ஹிதமான இந்த அத்யாத்ம சாஸ்திர சம்ப்ரதாயத்திற்கு பிரதம ப்ரவர்த்தகன் சர்வேஸ்வரன் –
மற்றுள்ளார் எல்லாரும் அவன் தானே யாதல் –சேதனாந்தர முகத்தாலே யாதல் -மயர்வற மதி நலம் அருள -ப்ரவர்த்திப்பிக்கிறவர்கள்-

இப்படி அநஸூயாதி குண யுக்தராய் -பரணீ பத்ய அபிவாதய ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்யாதிகளின் படியே
சம்யகுப சந்னரான அதிகாரிகளைப் பற்ற யதார்த்த தர்சிகளாய்-யதாத்ருஷ்டார்த்த வாதிகளான -வியாச போதாய நாதிகளாலே
யதாதிகாரம் ப்ரவ்ருத்த -ப்ரவர்த்தித –மான வேதாந்த சம்பிரதாயத்திற்கு இந்த யுகாரம்பத்திலே
ப்ரஹ்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகரானார் –

ப்ராப்யம் ஜ்ஞானம் ப்ராம்ஹணாத் ஷத்ரியாத் வா வைச்யாத் சூத்ராத் வாசபி நீசாத பீஷணம் –சாந்தி பர்வம் -332-88-இத்யாதி
பரமான பலத்தாலே -மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என்நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறது உபபன்னம் —

வேதாந்தார்த்த வைசத்ய  ஹேதுவாகையாலே பாஷாந்தரமும் உபஜீவ்யம் -தர்ம வாத துலா தாராதி வ்ருத்தாந்தங்களையும் இங்கே அனுசந்திப்பது —

சூத்ரயோ நௌ அஹம் ஜாதோ நாதோ அந்யத் வக்தும் உத்சஹி –உத்யோக பர்வத -40-5-என்கிறது விஷய பேதத்தாலே பரிஹ்ருதம்

மதுரகவி முதலான சம்பிரதாய பரம்பரையாலும் ப்ராதுர்ப்பாவ விசேஷத்தாலும் நாத முனி களுக்கு ஆழ்வார் ஆசார்யரானார் —

இவரைப் ப்ரபன்ன சந்தான கூடஸ்த்ததையாலே ஆளவந்தார் -ஆத்யஸ்ய ந குலபதே –5- என்று அருளிச் செய்தார் –

நாத முனிகள் தம்முடைய திருப் பேரனாரான ஆளவந்தாருக்கு  தாம் உபதேசியாதே தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை –
ஆகாங்ஷை பிறந்த போது உபதேசியுங்கள் -என்ற ஆஜ்ஞாபித்தது குரு புத்ர  பௌத்ராதிகளும் வித்யா பிரதானத்திற்கு
ப்ரசஸ்த பாத்ரங்கள் என்றும் -ஜ்ஞான சந்ததியாலே முற்பட்டவர்களும் குருக்களாக ஆதரணீயர் என்றும்
ஆகாங்ஷை இன்றிக்கே இருக்கச் செய்தே சொன்னால் சிஷ்ய புத்தியில் அர்த்தம் ப்ரதிஷ்டிதம் ஆகாது என்றும் தெளிவித்த படி –

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே ஆகாங்ஷை உண்டாக்கி உபதேசித்தது
ஆசார்ய குலத்திற்குத் தாமொரு கிஞ்சித்காரம் பண்ணுகையாலும் பரமாச்சார்ய நியோகத்தை கடுகத் தலைக் கட்டுகையில் உண்டான த்வரை யாலும்
சிரகால பரீஷாதிகள் வேண்டாதபடி -போதனம் ச முஹூ க்ரமாத் –என்கிற யுக தர்மாநு சாரத்தாலும் உபபன்னம் —

ஆளவந்தார் தாம் நாத முனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணிற்றும் -சரணம் பக்கதுவும் -தம்முடைய ஆசார்யருக்கு இது
பிரியதமம் என்றும் -தமக்கு ஆசார்யவத்தை முதலான சம்பத்துக்களுக்கும் அடி நாத முனி வம்சத்தில் பிறவி என்றும் தோற்றுகைக்காகவும்
ஆசார்யர் விஷயத்தில் போலே ப்ராசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணும் என்கைக்காகவும் என்று அறியப்படும் –

ஆசார்ய பங்க்தியில் சிலரை கிரந்தன்களிலே வ்யபதேசித்து அவர்களையும்  மற்று உள்ளவர்களையும் அனுசந்திப்பார்கள் –

ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீ பாஷ்யகாரரை அங்கீ கரித்த பூரணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு
ஸ ப்ரஹ்ம சாரிகளான திருக் கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த சிஷை பண்ணவும்
திருமலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழி கேட்கவும்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும் நியோகித்ததும்
பஹூப்ய ச்ரோதவ்யம் பஹூதாச்ரோதவ்யம் ஜ்ஞான வ்ருத்தா மயா ராஜன் பஹவ பர்யுபாசிதா –சபா பர்வம் -37-12-இத்யாதிகளையும்
சுகாதி வ்ருத்தாந்தங்களையும் பார்த்து சிஷ்ய பூதரை பஹூ முகமாகத் திருத்த வேண்டும் என்கிற அபிசந்தியாலே உபபன்ன தமம் —

இப்படி ஆசார்ய அபிமத விஷயத்தில் ஆசார்ய அனுஜ்ஞையாலே அபேஷித ஜ்ஞாநோப ஜீவனம் பண்ணுமது
சாஸ்த்ரார்த்தம் என்னும் இடம் அந்திம தசாவதியாக அத்யந்தாவஹிதராய்க் கொண்டு
சதாசார அனுபாலனம் பண்ணின ஸ்ரீ பாஷ்ய காரருடைய அனுஷ்டானத்தாலே சித்தம் –

அத்யாத்ம விஷயத்தில் பிரதான அப்ரதான அம்சங்களை ஒருவருக்குப் பலராக உபதேசிக்க -வேதாந்தந்களிலே பல இடங்களிலே கண்டோம் –

ஒராசர்யர் பக்கலிலே க்ருத்சன உபதேசம் மைத்ரே யாதிகளுக்குப் போலே சிலருக்கு யுண்டாம் –
பிரதான ஸ்ருதத்தினுடைய பிரதிஷ்டார்த்தமாக பலருபதேசித்தால்
அல்பம் வா பஹூ வா யஸ்ய ஸ்ருதஸ்யோபகரோதி ய தம  குரும் வித்யாத் ஸ்ருத உபக்ரியயா தயா –என்கையாலே
அவர்கள் பக்கலிலும் ஆசார்ய பிரதிபத்தி பண்ண ப்ராப்தம் –

அவ்யவஹித மோஷ உபாய வ்யவசாயம் பிறப்பிக்கை பிரதானாசார்ய க்ருத்யம் —

இது கலங்காதபடி பண்ணுகையும் பரிகர பூர்த்தி யுண்டாக்குகையும் ஆசார்ய அபிமத சிஷகாந்தர க்ருத்யம்-
ஆசார்ய சம்பந்தத்தை யுண்டாக்கினவர்களும் பிரபன்ன முகங்களாலே பரம்பரையாக உபகரித்தவர்களும் ஆதரணீ யர்
இவர்களில் பிரதானதமன் சர்வ பிரேரக்னான ஸ்ரீ யபதி இவன் ஒருவனுமே தனக்கோர் ஆசார்யன் இல்லாத பரமாசார்யன் –
ஸ்ரீ பாஷ்யகாரருடைய சிஷ்ய சம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதம் இல்லை -வாக்ய யோஜனா பேதமே யுள்ளது —
தேச கால அவஸ்தா விசேஷங்களாலே வரும் அனுஷ்டான வைஷம்யம் சாஸ்திர அனுமதம் –
சோரர் அபராதத்தை மாண்டவ்யன் பக்கல் ஆரோபித்தால் போலே -ஆதி பர்வம் -109-
ச்வேச்சைக்கு அனுகுணமாக அ நிபுணர் சொல்லுமது வக்தாக்களுக்கே தோஷமாம் —

திருமந்த்ரத்தில் பதார்த்த வாக்யார்த்தங்கள் எல்லாம் மூல பூத நிருக்தாதி வாக்ய விசேஷங்களாலே வந்தவை —
இதில் பதத்ரயத்திலுமாக வாதல் -பிரதம பதத்திலே யாதல் –பிரதம அஷரத்திலே யாதல் –
சங்ஷேப விஸ்தர க்ரமத்தாலே  சப்தார்த்த ஸ்வ பாவங்களைக் கொண்டும்  அர்த்த பஞ்சக அனுசந்தானம் பண்ணுமதுவும் அந்யோந்ய  விருத்தம் அன்று  –
இப்படி பிரதம த்விதீயஅஷரங்களாலே-ஆர்த்தமாகவாதல் சாப்தமாக வாதல் சரண்ய சஹதர்ம சாரிணீ பிரதிபாதனம் பண்ணுமதுவும் அவ்வோ வாக்ய விசேஷ மூலம் –
மத்யமாஷரம் பத்நீ பரம் -என்னும் நிர்வாஹத்தில் விசேஷ ஆபாதான பலத்தாலே அவதாரணம் அர்த்த சித்தம் –
இந்த அவதாரணத்தாலே-சரீர ஆத்ம பாவம் சித்திக்கிறது -என்பார்க்கு சேஷத்வ அவயோக வ்யவச்சேதத்திலே தாத்பர்யம் கொள்ளலாம் –

மகார்த்தோ ஜீவா -அஷ்டச்லோகீ-1-இத்யாதிகளில் படியே த்ருதீய அஷரம் ஜீவா சஜாதீய சர்வபரம் -என்பார்க்கும் இதில் ஸ்வ அனுசந்தானம் ஆர்த்தம் என்ன வேணும் –
அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹம் -அஷ்டச்லோகீ-3-என்று விசேஷித்து வியாக்யானம் பண்ணினவர்களுக்கு இவ்வனுசந்தானம் சர்வ ஜீவ சாதாரண ஆகார   விஷயம்-
பகவச் சேஷத்வம் தோற்றும் இடம் எல்லாம் பாகவத சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்க பிராப்தமாய் இருக்க
ஔசித்யாதி சயத்தாலே -மத்யம பதத்திலே இத்தை அனுசந்துக்குமது உபபன்னம் –
பிரதம த்விதீய சதுர்த்திகளுக்கு ஏகார்த்தத்வ பின்நார்த் தத்வங்களும் பரமான அணுகுண வாக்யார்த்த விவஷா பேதத்தாலே சொன்னவை-

த்வயத்தில் பூர்வாபர ஸ்ரீ மத் சப்தங்களிலும் -பூர்வாபர நாராயண சப்தங்களிலும் -சில ஆகார விசேஷங்களைப் பிரித்து
அனுசந்திக்குமது உபாய பல தசைகளுக்கு உபயுக்த தமாம்ச நிஷ்கர்ஷம் பண்ணின படி –
சரணங்களை உபாயம் என்கிறதுக்கு சரண சிசிஷ்ட வசீகார்யன் பக்கலிலே தாத்பர்யம் –
ஆகையால் சித்தோபாய பேதமும் சாத்தோபாய பாதமும் வாராது –

நமஸ்ஸூ நாநார்த்தமாகஅஹிர்புத்த்ய சம்ஹிதாதிகளில் நிருத்தம் ஆகையாலே பிரதம
த்விதீய ரஹச்யங்களில்
ம்த்யம சரம பதங்களுக்கு வாக்யார்த்த அனுகுணமாக அர்த்த பேதம் கொள்ளலாம் –
த்வதீயத்ரிதிய ரஹச்யங்க ளிலே  கிடக்கிற சரண சப்தம் உபாயபரமானதடியாக வசீகரணோ பாயத்துக்கு சிலர் பண்ணும்
திரஸ்கார -அதுவாதம் -எல்லாம் சித்தோபாய ப்ரதான்ய பரம்  –
ஸ்வ அனுசந்தான பரமாயும் விதி பரமாயும் நிற்கிற ஆக்க்யாதங்களில் ஆவ்ருத்திக்கு ஜ்ஞாபகம் இல்லாமையாலும்
அதாவ்ருத்திக்கு கண்டோக்தி யுன்டாகையாலும் வர்த்தமான வ்யபதேசம் அனுஷ்டான காலாபிப்ராயம் —

ப்ரபத்திக்கு யாவஜ் ஜீவா நுவ்ருத்தி சொல்லுவார்க்கும் -த்வயம் அர்த்தாநு சந்தாநேன சஹச தைவம் வக்தா –
சரணாகதி கத்யம் -இத்யாதிகளில் சொன்ன ஸூகாசிகையிலே தாத்பர்யம் கொள்ளலாம் —
நியாச பஞ்சாங்க சம்யுத -ஸ்ரீ லஷ்மி தந்த்ரம் –17-74-என்று சொன்ன பிரபத்த்யங்கங்களிலே
சிலர் கதிபா நாதரம் பண்ணுமது அங்கியினுடைய வைபவார்த்தம் –
விசேஷித்து கதிபயாங்க உபாதானம் பண்ணுமதுவும் அங்காந்த ரங்களில் காட்டில் இவ் வங்கங்க ளுடைய பிரசம்சார்த்தம் –

சரம ஸ்லோகத்தில் விதிக்கிற பிரபத்தி சகல பல சாதனம் ஆகையாலே அங்கமாகவும் ஸ்வதந்த்ரமாகவும்
வியாக்யானம் பண்ணின பாஷ்ய கத்யங்களுக்கு விரோதம் இல்லை –
சர்வ தர்ம சப்தத்தில் சங்குசீதா அசங்குசீதா வ்ருத்திகளைக் கொள்ளுமவர்களுக்கு பர பஷத்தில் போலே
சர்வ தர்ம ஸ்வரூப த்யாக விதி விவஷை இல்லாமையாலே ஸ்வ தந்திர அஜ்ஞான  அனுபாலனவிரோதம் இல்லை –
பரித்யஜ்ய -சப்தத்திலும் -ஏக -சப்தத்திலும் -மூல பிரமாண அனுகுணமாகச் சொல்லும் பல வர்த்தங்களிலும் பரஸ்பர விரோதம் இல்லை –
அவற்றில் புனருக்தி   வாராதபடி அனுசந்திக்குமதே வேண்டுவது-

சரண்யனுக்கு பிரபத்தி கர்மத் வத்தையும் மோஷ கர்த்ருத் வத்தையும் பிரதிபாதிக்கிற -மாம் -அஹம் –
என்கிற பதங்களிலே சர்வ ச்வீகார  உபய உக்தமான சௌலப்யமும் சர்வ கார்ய கரத்வ உபய யுகத பரத்வமும்
அனுசந்திக்கும் இடத்தில் அபேஷித விசேஷங்களைப் பிரித்து அனுசந்திக்குமது சேஷ வ்யவச்சேதார்த்தம்   அன்று –
வ்ரஜ -என்றும் தவா என்றும் அர்ஜூனனைக் குறித்திச்  சொன்னாலும் தாத்பர்ய விசேஷத்தாலே இது பிரபத்த்யதிகாரிகள் எல்லார்க்கும் வரும் –
சர்வ பாப மோஷ வசனத்தில் புத்தி பூர்வ உத்த ராகத்தையும் கூட்டுவாருக்கு
சரண்ய அபிப்ராய மூல பிரபத்த நாதி முகத்தாலே அவைகளுக்கு விநாசம் விவஷிதம் -ஆகையால் சாஸ்திர விரோதம் இல்லை –
மோஷயிஷ்யாமி என்கிற  சங்கல்ப்பத்தின் பலத்தை பிராரப்த கர்மாவசானத்திலே என்றவர்களுக்கும்
பிரபத்தி பண்ணினவன் கோலின காலத்திலே என்றவர்களுக்கும் ஆரத்தியில் தாரதம்யத்திற்கு ஈடாக
பல அனுபவத்தாலே யாதல் பிரபத்தி வைபாவத்தாலே யாதல் பிராரப்த கர்ம அவசானத்திலே மோஷம் துல்யம் –
அர்ஜுனனுக்கு சோக நிமித்தம் வேறே யாகிலும் -மா சுச -சம்பதம் தைவீம் -ஸ்ரீ கீதை -16-5-என்கிற இடத்தில் போலே
மோஷயிஷ்யாமி மா சுச -என்ற இடத்திலும் பிரகார அணுகுண நிமித்த   விசேஷ அனுசந்தானம் உசிதம் –

மற்றும் இப்படி வேதாந்த சித்தங்களான-தத்தவ ஹித புருஷார்த்தங்களில் பரஸ்பர விரோதமும்
பூர்வாபர விரோதமும் இல்லாத சுத்த சம்ப்ரதாய க்ரமத்தையும் சங்க்ரஹித்தனம் –
ஸூ வ்யாஹ்ருதானி மஹதாம் -உத்யோக  பர்வம் -33-34-இத்யாதிகளையும் இங்கே சங்க்ரஹித்துக் கொள்வது –

——————————————————————————————————————————————————————————————————————————————-

அஞ்சலி வைபவம் —

ஹிதாய சர்வ ஜகதாம் வ்யக்தம் யோ அஞ்ஜலி வைபவம்
ப்ராசீக சத்தம் தம் வந்தே அஹம் வேதாந்த யுக தேசிகம் —

1–ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் -27-ஸ்லோகத்தில்
பகவச் சரணாரவிந்தத்தில் போக்யதாதிசயத்தை அத்யவசித்தவனுக்கு
அதனுடைய துஸ்த்யஜதையாலே-

2–கண்டு கேட்டுற்று மோந்து உண்டு இலலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -திருவாய்மொழி -4-9-10-
என்றபடி ஐஸ்வர்ய கைவல்ய பிராப்யாந்தரங்களிலே இளைப்பாறுகை கூடாது என்று அருளிச் செய்தார் –
அடுத்த ஸ்லோகத்தில் அப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு திருவடிகள உத்தேசித்து உண்டான அல்ப அனுகூலங்களான வ்யாபாரங்களாலே
சர்வ அபேஷித சித்தி உண்டாம்படியான ஆஸ்ரயண சௌகர்யத்தாலும்
திருவடிகளுடைய துஸ்த்ய ஜாதியை அருளிச் செய்கிறார் –
த்வதங்க்ரி முக்திச்ய கதாபி கே நசித் -யதா ததா வா அபி சக்ருத் க்ருதோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாதி அசூபான்ய சேஷத–ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே –ஸ்தோத்ர ரத்னம் —28-

3- இங்கு த்வதங்க்ரி முக்திச்ய -என்கிறது -சர்வ லோக சரண்யமாய் சர்வ போகய அதிசாயிகளான
தேவரீருடைய சரணார விந்தங்களை உபாயமாகவும் ப்ராப்யமாகவும் அபிசந்தி பண்ணி என்கிறபடி –

4-ப்ரஹ்மாணம் ஸிதி கண்ட்ட்டம் ச யா சான்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வ-357-36-

5-ஏ தௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்ட்டௌ பிரசாத க்ரோதஜௌ சம்ருதௌ
ததா தர்சித்த பந்த்தாநௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-சாந்தி பர்வ -557-19-இத்யாதிகளில்
பரதந்திர சேதனராகச் சொல்லுகையாலே சாஷான் மோஷ பிரதானத்திற்கு சமர்த்தர் அல்லாத –

6-எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்த்ரனும் -பெரியாழ்வார் -5-3-9-முதலான
7-திருவில்லாத் தேவரைக் -கை விட்ட படியும் -நானுன் முகன் திருவந்தாதி -53-
8-அல்ப அஸ்திரத் வாதி தோஷ தூஷிதங்களான பிரயோஜனாந்தரங்களில் பற்று அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
9-கதா அபி பஹூத்வாரஸ்ய தர்மஸ்ய -மோஷ தர்ம பர்வம் -359-2-என்கிறபடியே நாநா விதங்களான தர்மங்கள் எல்லாம் கால விசேஷங்களைப் பற்றி இருக்கும் –

10-எங்கனே என்னில் -அன்யேக்ருதயுகே தர்மா -மனு ஸ்ம்ருதி -1-85-இத்யாதிகளில் படியே
யுக பேதம் -அயன பேதம் -மாச பேதம் -பஷ பேதம் -திதி வார நஷாத்ரா பேதம் -ராத்திரி திவசாதி பேதம் -யாம பேதம் -ராசி பேதம் -முஹூர்த்த பேதம்
என்று இப்படிப்பட்ட கால பேதங்க ளிலே வ்யவச்திதங்களாய் இ ரே கர்ம விசேஷங்கள் இருப்பது
இந்த அஞ்சலி பந்த ரூபமான ஸூ கர்மத்திற்கு ருசி பிறந்த போதே காலம் – மற்றொரு கால விசேஷம் பார்த்து இருக்க வேண்டாம் -என்னும் இடத்தை -கதாபி -என்று  அருளிச் செய்கிறார் –

11-கேநசித் -வர்ண ஆஸ்ரம குண நிமித்த -அதிகாரி விசேஷங்களை பற்றி மாறும் தர்மங்கள் போலே அன்றிக்கே
சத்ய வசநாதிகளைப் போலே சாமான்ய தர்மம் இந்த அஞ்சலி -சர்வருக்கும் சாஸ்த்ரீய முகமாய் ஸூ கரமுமாய் இருக்கும் –

12–யதா ததா வா அபி –பிரகார விசேஷ நியமங்கள்  இல்லை -பராவர தத்தவ ஹித புருஷார்த்தங்களில் தெளிவு யுண்டாகவுமாம் இல்லை யாகவுமாம் –
மஸ்திஷ்க சம்புடாதிகளில் வேண்டினபடி யாககவுமாம் -மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -பெரியாழ்வார் -4-5-2–தலைக்கு மேல் தூக்கி கூப்புவது
மஸ்திஷ்க ப்ரணாமம் –மார்பினிடையில் இரு கைகளையும் கூப்புவது சம்புட ப்ரணாமம் –
ஆதி சப்தம் -ப்ரஹ்வாங்க–முட்டி தரையில் பட கைகளை ஊன்றி குனிந்து வணங்குவது
பஞ்சாங்க –கால் விரல்கள் -முழங்கால்கள் -தலை இவை புவியில் பட தலை வணங்கி கை கூப்புவது –
ஷடங்க
-அஷ்டாங்க -மனம் அறிவு எண்ணம் இவைகளுடன் ஆமையைப் போலே இரு கை கால்களை தரையிலே பதிய வைத்து தலையால் வணங்குவது –
மார்பு -தலை -சொல் மனம் -கன்னங்கள் -கால்கள் -கைகள் -ஆகிய எட்டு அங்கங்கள் –
-ஸூ க்ருத -நெற்றி வயிறு முழந்தாள் கால்கள் மேல் தூக்கிய கைகள் இவற்றை தரையில் படிய வைத்து
வாஸூ தேவனை எண்ணிக் கொண்டு வணங்குவது
தண்டாங்க–கொம்பு கீழே விழுவது போலே உடலை படுக்க வைத்து கால்களையும் கைகளையும் புவியில் விரித்து வணங்குவது — போல்வன   –
வசம் செய்யும் கை இல்லாத போது வாக்காலும் மனசாலும் ஆகவுமாம் –எல்லாப் படிக்கும் இது சபலமாம் -என்பதை யதா ததா வா அபி என்று அருளிச் செய்கிறார் –

13- சக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த-பூர்வ மீமாம்ஸா -11-1-22-என்கிற சாமான்யத்திற்கு அபவாதம் இல்லாமையாலே ஆவ்ருத்த்ய அபேஷை இல்லை என்னும் இடத்தை சக்ருத் க்ருத -என்று அருளிச் செய்கிறார் –
14-சர்வேஷா மேவ தர்மானாம் உத்தமோ வைஷ்ணவோ விதி
ரஷதே பகவான் விஷ்ணு பக்தான் ஆத்ம ஸ்ரீரவத் -ஆ நுசாச நிக பர்வ -36-24-இத்யாதிகளில்
தர்மாந்தரங்களில் காட்டில் அதிக பிரபாவங்களாக பிரசித்தங்களான-
15-சம்மார்ஜன உபலேபன மாலாகரண தீபாரோபண பிரதஷிண ப்ரணாம ஸ்துதி சங்கீர்த்தன ஜபாதிகளில் காட்டிலும் அதிகதமமாக
16-அஞ்சலி பரமா முத்ரா -விஷ்ணு தர்மோத்தரம் -3- 33-115-என்று சொல்லப்பட்ட இதன் ஸ்வரூபம் கை கூப்பும் அளவே என்று தோற்றுகைக்காக அஞ்சலி -என்கிறார் –
காலாந்தரத்திலே பலிக்கும் கர்மங்களைப் போல் அன்றிக்கே இங்கு -ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -விஷ்ணு தர்மோத்தரம் -3- 33-115-என்ற பிரபாவத்தை- ததைவ -என்று அருளிச் செய்கிறார் –

அஸூபங்களை நசிக்கும் என்கிற அர்த்தத்தை -முஷ்ணாதி அஸூபாநி-என்று அருளிச் செய்ய வேண்டிற்று என் -என்னில்
ஆஸ்ரிதன் ஆனவன் அநாதி வாசனைகள் மேலிட்டு சாம்சாரிக புண்ய பாப ரூபங்களான விலங்குகளை விடுவிக்க இசையாது ஒழியிலும்-
17-தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி -திருவாய் மொழி -8-10-3-என்கிறபடியே
பாலனை உபச் சந்தானம் பண்ணி அபத்த்யத்தை பரிஹரிக்குமா போலே
ஒரு விரகாலே இவனுக்கு அனுகூலங்களாய்த் தோற்றும் –
18-பந்தகங்களைக் கழிக்கும் என்றபடி -இங்கு சொல்லுகிற அசுபங்கள் ஆவன -ப்ராப்தி விரோதங்களான கர்மங்கள் ஆதல் –
19-உபாயாதிகளை விரோதிக்கும் கர்மங்கள் ஆதல் என்று யதாதிகாரம் கண்டு கொள்வது –
20-க்ருச்ச்ர சாந்த்ராயணாதி கர்மங்கள் சில அஸூபங்களைக் கழிக்க வற்றாய் இருக்கும் –
இது அப்படி அன்றிக்கே சர்வ அநிஷ்டங்களைக் கழிக்க வற்று என்னும் இடத்தை -அசேஷத -என்று அருளிச் செய்கிறார்-

21–அநிஷ்டங்களைக் கழிக்கும் அளவே அன்று -அது முதலாகத் தோன்றி -தொல் மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து
நின் மா தாள் சேர்ந்து -திருவாய்மொழி -3-2-2-இத்யாதிகளில் படியே இஷ்ட ப்ராப்தி பர்யந்தமாகும் -என்னும் இடத்தை -ஸூ பாநி புஷ்ணாதி-என்று அருளிச் செய்கிறார் –
இங்கு ஸூ பங்களாவன-பரிபூர்ண பகவத் அனுபவமும் -அதன் உபாயமும் -அதன் பரிகரமும்-அதன் பிரகாரமும் –
அதன் அதிகாரமும் -க்ருத உபாயனுடைய ஸ்வயம் பிரயோஜன கைங்கர்யமும் –
இவற்றை புஷ்டமாக்குகை யாவது விலக்கறுத்துத்  தலைக் கட்டுகை-
இவ்வஞ்சலி தான் தன்னுடைய கர்த்தா ஒருவனுக்குமே பலம் கொடுத்து அவ்வளவிலே பர்யவசிக்கிறதன்று-
22- தொழுது எழு என் மனனே என்று தொடங்கி
எமர் ஏழ் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -திருவாய் -2-7-1-என்றபடி
அஞ்சலி பண்ணினவனுடைய அனுபந்திகளுக்கும் அப்படியே உபகாரகமாம் என்னும் இடத்தை ந ஜாது ஹீயதே -என்று அருளிச் செய்தார் –
23- ஸ்வர்காதி பலன்களைப் போலே இதன் பலமான மீளா வடிமைப் பணி-திருவாய் -6-6-10-ஒரு காலும் அழியாது -என்று கருத்து ஆகவுமாம்
24- அங்கன் அன்றிக்கே -ஒரு கால் தொடங்கின அஞ்சலி பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நாம இத்யேவ வாதி ந -என்கிறபடியே –
25-பரம பதத்திலும் பல ரூபமான அஞ்சலியாய்ப் பரிணமித்து ஒரு காலும்
26-அழியாதது என்னவுமாம் –
27- இவ்வஞ்சலி -நோற்ற நோன்பிலேன் –திருவாய் -5-7-1-
28-புகல் ஒன்றில்லா அடியேன் -திருவாய் -6-10-10-
இத்யாதிகளில் படியே ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வாதி யோகத்தாலே பிரபத்தி யதிகாரியாய்
பரந்யாசம் பண்ணுகிறவனுடைய ஸ்வ ரஷணார்த்த ஸ்வ வியாபாரத்தில் கை முடங்குகிறபடியைக் காட்டுகிற முத்ரையாய் நின்ற போது
29-தாவதார்தி ததா வாஞ்ச்ச்சா தாவத் மோஹ ததா அஸூகம் யாவன் ந யாதி சரணம் த்வாம் அசேஷாக நாச நம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-
இத்யாதிகளில் படியே இவ்வஞ்சலிக்கு உள்ளீடாய்க் கொண்டு சகல பல சாதனமாய் நிற்கிற
ப்ரபத்தியின் பிரபாவத்தைச் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே
30-இங்கு ஒரு பிரமாண விரோதமும் வாராது -இப்படி பிரபன்னன் வாங்கின கைக்குப் பெருமாள் வைத்த கை உத்தரமாம் -எங்கனே என்னில்
பிரார்தநா பூர்வக பரந்யாசம் பண்ணின அகிஞ்சனனுடைய ஸ்வ ரஷணார்த்த ஸ்வ வியாபார நிவ்ருத்தி ரூப பல விசேஷ வ்யஞ்சக முத்ரை அஞ்சலி
பர ச்வீகாரம் பண்ணின ஸ்வ தந்திர காருணிகனுடைய நிரபேஷ ரஷண அபிப்ராய வ்யஞ்சக முத்ரை அபயஹஸ்தம்-
இவ்விடத்திலே -அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -பரத்வாஜ சம்ஹிதை -என்றும்
31-அந்தரேண் அஞ்சலும் பத்த்வா லஷ்மணச்ய  பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17- என்றும்
சொல்லுகிற படியே பிரசாதனமான அஞ்சலிக்கு பிரபத்தி பர்ப்பத்வம் சொன்னால் –
32-பிரசாத யஸ்வ தவம் சை நம் சரணாகத்வசலம்-ஸூந்தர -21-22-
33-ப்ரசாதயே த்வாம் அஹமீசமீட்யம் -ஸ்ரீ கீதை -11-44-
34-சரண முபகம்ய தத் பிரசாதோ பப்ரும்ஹித -மநோ வ்ருத்தி -ஸ்ரீ பாஷ்ய காரர் நித்யம் -இத்யாதிகளில் படியே
பிரபத்திக்கும் பிரசாதனத்வம் யுண்டாகையாலும்
பிரபத்தியால் நிக்ரஹ நிவ்ருத்தி ரூபமான பிரசாதம் பிறவாதாகில் இது நிஷ்ப்பலமாக பிரசங்கிக்கை யாலும்
பிரசாதனமாகச் சொன்ன அஞ்சலிக்கு பரந்யாச வ்யஞ்சக முத்ரா ரூபத்வம் சொன்னது விருத்தம் அன்று –
சஹஜ க்ருபா விசிஷ்டனான பகவான் யதாதிகாரம் பக்தியாலே யாதல் பிரபத்தியாலே யாதல் -பிரசாத நீயானாய் அவற்றாலே பிரசன்னனான பகவான் நிக்ரஹ பலபூத
35-பிரகிருதி சம்பந்தாதி விரோதி நிவர்த்தன  சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு பக்தி நிஷ்டனுக்கும் பிரபத்தி நிஷ்டனுக்கும் மோஷ பிரதனாம்
இப் பிரபத்தியால் பிரசன்னனாம் அளவில் அல்ப வ்யாபாரத்தாலே அவிளம்பிதமாக ஆரப்த கார்யங்களும் அநாரப்த கார்யங்களுமான சாம்சாரீக புண்ய பாபங்கள்
இரண்டும் கழியும்படி இதில் உசிதாதிசயித பிரசாதம் பிறக்கும் -இதற்கு மூல காரணம் ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க நிராகரண இச்சா ரூபியான சஹஜ கிருபை –
36-ஆகையாலே -நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் -5-4-1- இத்யாதிகளில் படியே
இக்க்ருபையிலேயே ஊன்றினது தோன்றி இருக்கைக்காக
37-க்ருபா விசிஷ்டன் மோஷ ப்ரதன் -என்றும்
பக்தி நிஷ்டனுக்கு பிரசாத விசிஷ்டன் மோஷ ப்ரதன் -என்றும்
இது ஒரு பிரிவு போலே பேசுகிறார்கள் அத்தனை -அல்லது இவர்கள் பக்கல் கிருபா பிரசாதங்கள் பிரதி நியதன்கள் அல்ல –
ப்ரபன்னன் அளவில் பிரசாதாதிசயமே உள்ளது -அங்கன் அன்றிக்கே மாலா கரணாதி களான அல்லாத பகவத்
கர்மங்கள் போலே இவ்வஞ்சலியும் ஒரு சத்கர்ம விசேஷமாய் நின்றால் –
38-நேஹாபிக்ரம நா  சோஸ்தி-ஸ்ரீ கீதை -2-40-
39-சக்ருதுச் சரிதம் யேந ஹரிரித்யஷர த்வயம்
பத்த பரிகரச்தேந மொஷாய கமநம் பிரதி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -70-84-இத்யாதிகளில் படியே
இட்டபடை கற்படையாய் பாப ஷயம் சத்வோன்மேஷம்  சம்யக்ஜ்ஞானம் பக்தி பிரபத்திகள் என்று
இப்பரம்பரையாலே மோஷ சாதா நத்வம் யுண்டாகையாலே கீழ்ச் சொன்ன
சர்வ அநிஷ்ட நிவ்ருத்திக்கும் சர்வ அபீஷ்ட சித்திக்கும் விரோதம் இல்லை –
இப்படி வழி யுண்டாய் இருக்க இது அதிவாதம் எங்கை உசிதம் அன்று –
ஒரு அதிகாரி விசேஷத்திலே இவ்வஞ்சலி ரூப க்ரியா மாத்ரம்  தானே சாஷான் மோஷ சாதனம் என்றால்
ப்ரதஷிண பிராணாமாதி க்ரியா மாத்ரங்களும் இப்படியே அவ்யவஹித மோஷ சாதனங்களாக பிரசங்கிக்கும்
40-அப்போது -பக்த்யா பரமயா வா அபி -இத்யாதி பிரமாணங்களோடு விரோதம் யுண்டாகும் –
41- பிரயோஜநாந்தர பரனுக்கு இவ்வஞ்சலி அவ்வோ பிரயோஜனாந்தரங்களை கொடுக்கும் –
42- அநந்ய பிரயோஜனனாய் -மற்றொரு தெய்வம்  தொழா-திருவாய் -4-6-10-என்று உள்ளவனுக்கு உகத பிரகாரத்தாலே
அவாவற்று வீடு பெரும் -திருவாய் -10-10-11-அவஸ்தை யோடு தலைக் கட்டும் –
இப்படி இவ்வஞ்சலியின் பிரபாவத்தை நினைத்து –
ஹஸ்தீச துக்க விஷ திக்க பலாநுபந்திநி
ஆ ப்ரஹ்ம கீடம் அபராஹத சம்ப்ரயோகே
துஷ்கர்ம சஞ்சயவசாத் துரதிக்ரமே ந
பிரத்யஸ்த்ரம் அஞ்சலி ரசௌ தவ நிக்ர ஹாஸ்த்ரே–ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் -30- என்று சொன்னோம் —

இப்படி -த்வதங்க்ரி முத்திச்ய -என்கிற ஸ்லோகத்திலே
முமுஷூவான அதிகாரியினுடைய அநந்ய தேவதா கத்வமும்-அநந்ய பிரயோஜனத்வம்-இவற்றையும் –
இவன் சர்வ ஸ்வாமிதிருவடிகளை உத்தேசித்து பண்ணுகிற அஞ்சலிக்கு
கால நியமமும் -இத்தால் உப லஷிதமான தேச நியமமும் -வர்ணாஸ்ரமாதி அதிகாரி நியமமும்
பிரகார நியமமும் -ஆவ்ருத்தி நியமமும் என்ற இவை இல்லாத படியையும்
இதனுடைய ஆசுனாரித்வமும்
அசேஷ தோஷ நிவர்த்த கத்வமும் -அசேஷ கல்யாண காரணத்வமும் அனுபந்தி ரஷகத்வமும் அஷய பல பிரதத்வமும் பலரூப சஜாதீய பரிணதிமத்த்வமும் என்கிற பிரபாவங்களையும்
இது அநந்ய பிரயோஜனான பிரபத்தி நிஷ்டனுக்கும் பிரயோஜனாந்தர பரனுக்கும் நிற்கிற நிலைகளையும்
அனுசந்தித்தால் கைகளைக் கூட்டின இவ்வஞ்சலி ஒருவருக்கும் கை விட ஒண்ணாத படி நிற்கும் –
44- இங்கு சொன்ன அதிகாரியினுடைய பகவத் அனந்யார்ஹ சேஷத்வாத்யவசாயம் பாகவதர் அல்லாத
மாதா பித்ரு ப்ரப்ருதிகளை இட்டுத் தன்னை ஒருத்தன் வ்யபதேசிக்கும் அளவில்
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய தஸ்ய சர்வம் ச -ஏவ -ஹி-ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹதை -என்று  தெளிந்து –
46-கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியனோ –பெரிய திரு மொழி -8-9-3-என்று சொல்லும் மறுமாற்றத்தாலே அறியலாம் –
46—1-பகவதே காந்தியான இவனுடைய அநந்ய தேவதா கதவம் அருகு இருந்தார் அபிப்ராயம் சொல்ல வேண்டும்படி
தான் அத்யந்த அவசன்னனான தசையிலும் தனக்காகத் தன உற்றாரும் மற்றொரு தெய்வம் தொழா -திருவாய் -4-6-10- என்றபடி இசையாத பிரகாரத்தாலே காணலாம் –
2-அநந்ய பிரயோஜனான இவன் அளவாகும் சிற்றின்பம் -திருவாய் -4-9-10-என்றபடி –
ஒழிந்தமை வைஷயிக ஸூ கார்த்த வியாபார அத்யந்த நிவ்ருத்தியாலே அறியலாம் –
3-சாரீரம் கேவலம் கர்ம குர்வன் நாப் நோதி கில்பிஷம் -ஸ்ரீ கீதை -4-21-என்கிறபடியே
துக்க நிவ்ருத்தி மாத்ரார்த்தமாய் சாஸ்திர அனுமதமான அசநாதி திருஷ்ட வியாபாரம் இவனுக்கு தோஷம்  ஆகாது –
4-அநந்ய உபாயனான இவனுடைய நிர்ப்பரத்வ அத்யவசாயம் பரந்யாசம் பண்ணின விஷயத்தில் ஸ்வ வியாபார ஆத்யந்திக நிவ்ருத்தியாலே அறியலாம் –
இந்நாலு ஆகாரம் உடையவர்க்கு நிதர்சனம் நாத முனிகள் முதலான ஆசார்யர்கள் –

48- கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தன்னை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம்  தொழில் பற்றினமே –

49-நாளு நின்றடு நம் பழைமை யங்கொண்டு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாக்கு நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர்  இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–திருவாய்மொழி -1-3-8-அஞ்ஜலியின்  பெருமை நம்மாழ்வாரும்
50-வாயினால் நமோ நாரணா வென்று மத்தகத்திடை கைகளைக் கூப்பிப் போயினர் பின்னை
இத்திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே –பெரியாழ்வாரும் அஞ்ஜலியின்  பெருமை வெளிட்டு அருளினார்கள் –

ஸ்ரீ மத் வேங்கட நாத ஸ்ரீ தர பத பத்ம சக்த சித்தா நாம் அஞ்ஜலி வைபவமகதயத் அநு ஸ்ம்ருதம் யாமுனாசார்யை —

ஸ்ரீ -அஞ்ஜலி வைபவம் முற்றிற்று —

———————————————————————————————————————————————————————

கடல் அமுதைக் கடைந்து சேர்த்த திருமாலடி காட்டிய நம் தேசிகர் தன்னிலை பற்றிச் சேர்ந்தோமே –

கவிதார்கிக சிம்ஹச்ய கல்யாண குணா சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம–

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் –
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருனானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: