ஆழ்வார்கள் அருளிய தமிழ் அமுதம் –

முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே -திருவாய்மொழி -8-9-5-
ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -திருவாய்மொழி -2-6-8-
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
என்அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லேன் பெரிது -இரண்டாம் திருவந்தாதி -74

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -இரண்டாம் திருவந்தாதி -25
திருமலையின் மண் வாசனையால் கைங்கர்யத்துக்கு கை நீட்டுமே-காதல் பண்பும் அத்தாலே
மூங்கில் குருத்தும் தேனும் போலே மேகமு அவன் திரு நிறமும் கலந்த படி
மேகம் எனக் களிறு அவன் திருமலையில் நிற்பதால் -சஜாதீய யானையும் வருமே
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தன்னைப் பாடுவியாது -இன்று
நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை
வன்கவி பாடும் வைகுந்த நாதனே -திருவாய் மொழி -7-9-6-
த்வயம் மந்த்ரம் உபதேசிக்கும் ஆசார்யன் களிறு
பிடி சிஷ்யன்
பேத அபேத கடக சுருதி -கலந்து ஒருங்க விட்டார்
குணத்தை இட்டாயிற்று ஆழ்வாரை வணக்கு வித்தது -உயர் நலம் -தொழுது எழு

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ- திருவாய்மொழி -7-9-1-

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்

பிடாத்தை விழ விட்டு தன வடிவு அழகைக் காட்டினான்
திருத்திரை எடுத்தால் கூப்பிடுமா போலே கூப்பிட்டார்
அது கவியாய் தலைக் கட்டிற்று –
ஆழ்வாருக்கு முன்னே மூடி முக்காடிட்டு வந்து நின்றான்
ஆழ்வார் கை எடுத்தும் முக்காட்டை முன் விளக்கி தன எழிலார் சோதியை வெளிப் படுத்தினான்
அந்த எழில் வெள்ளத்தில் அகப்பட்ட ஆழ்வார் மகிழ்ச்சி பெருக்காலே கோஷம் இட்டார்
தம்மை கருவியாக கொண்டு இன் தமிழ் அவனே பாடினான் என்கிறார் ஆழ்வார்
ஆ முதல்வன் இவன் என்று தன தேற்றி என்
நாமுதல் வந்து புகுந்து நல்லின்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -திருவாய்மொழி -7-9-3-
என் வாய் முதல் அப்பன் -எனக்கு வாய்த்த –கவி பாட முதல் காரணன் -அவனே பின்னானார் வணங்கும் சோதி -அர்ச்சாவதாரம்
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தன்கள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னை தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமால் இரும் சோலையானே-திருவாய்மொழி -10-7-5-

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி
திசை நான்குமாய் திங்கள் –திரு நெடும் தாண்டகம் -4
தமிழ் ஓசை -திருவாய்மொழி வடசொல் -ஸ்ரீ ராமாயணம்
அளப்பரிய ஆரமுது -அரங்கமேய அந்தணன் –
குலசேகரர் -அவனே என் கண்ணனை -குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏறு -அமரர்கள் தலைவன் அம தமிழ் இன்ப பா –அவ்வட மொழி -அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோ –
இன்ப மாரியில் ஆராய்ச்சி வீட்டின்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் -நாயனார்
நமல்ல்வார் -இன்ப மாரி
திருவாய்மொழி -இன்பப் பா
அர்ச்சா திருமேனி -வீட்டின்பம் –
எங்கள் கண் முகப்பில் –தமது சொல் வலத்தால் ஒவ் ஒருவராக பூசிக்கும் படி –
ஒருநாள் எழுந்து இருந்து வீற்று இருக்க வேண்டும் –
சொல் வளம் -பாமர மக்கள் இடையர்கள் வார்த்தை -பால் உண்பீர் பழம் உண்பீர் –
உனக்கு பணி செய்து இருக்கும் —புனத்தினை கிள்ளி புது அவி காட்டி
உன் பொன்னடி வாழ்க என்று இனக் குறவர் புதியது உண்ணும் –திரு மால் இரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3-
ஆழ்வார் உன் சேவடி செவ்வி திருக்காப்பு -அருளுவது போலே இனக்குறவர்

வைரம் பெட்டியில் பொருத்திக் காட்டுவது போலே திவ்ய தேசத்துடன் தன்னை காட்டி அருளுகிறான்
கோயில் கொண்டான் தன திருக் கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் -திருவாய் மொழி -8-6-5-
திருவருள் கமுகு -திருப் புலியூர் கமுகு மிதுனம் கடாஷம் அருளாலே வளர்ந்த திரு அருள் கமுகு
புள்ளுப் பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி -பெரிய திருமொழி -5-1-2-
மென்மலர் மேல் களியா வண்டு கள்ளுண்ண காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே -பெரிய திருமொழி -6-7-4-
வண்டு கள்ளு குடிக்க -தென்றல் அலர் தூற்ற -முல்லை முறுவலிக்கும் –இது என்ன உலகு இயற்க்கை
பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே -பெரிய திருமொழி -6-7-6-
பெண் அரசு நாடாயிற்றே -பட்டர்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -திருவாய்மொழி –
பண் உள்ளாய் கவி தன உள்ளாய் பக்தியின் உள்ளாய் பரம் ஈசனே வந்து
என் கண் உள்ளாய் நெஞ்சு உள்ளாய் சொல் உள்ளாய் என்று சொல்லாயே – திருவாய்மொழி -7-1-6-
ஆழ்வார்கள் அருளிச் செயல் தமிழ் பெருக்காறு
இலக்கிய கலைஞர்
இன்னிசை கலைஞர்
பக்தி பெரும் செல்வர் -அனைவருக்கும் பொதுவான அமுத ஆறு –

——————————————————————————————————————————————————————-

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: