அருளிச் செயல்களில் அமுதம் சப்தங்கள் தொகுப்பு-

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்–

லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேந
அஸ்மத் குரோர் பகவதோஸ் யதயை கசிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே –

பூதம் சரசா மகாதாஹ்வைய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குலசேகர யோகிவாஹான்
பக்தாங்க க்ரிரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத பராங்குச முநிம் பிரணதோஸ்மி நித்யம்

—————————————————————————————————————————————————–

பெரியாழ்வார் திரு மொழி –

சீதக் கடல் உள்ளமதன்ன தேவகி கோதிக் குழலாள் அசோதைக்கு-1-2-1-

எந்தொண்டை வாய்ச் சிங்கம் வா வென்று எடுத்துக் கொண்டு அந்தொண்டை வாயமுதாதரித்து -ஆய்ச்சியர்–1-2-14-

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் –1-4-4-

வானவர் தாம் மகிழ்வன் சகடமுருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுதுண்டவனே–1-5-4-

தன்னைப் பெற்றேர்க்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் –1-7-4-

வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுது உண்ண வேண்டி கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7-

அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம -விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே–2-2-9-

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே –2-3-11-

பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் –3-1-1-

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் –3-1-2-

காரார் மேனி நிறத்து எம்பிரானைக் கடிகமழ் பூம் குழலாய்ச்சி ஆராவின்னமுது உண்ணத் தருவன் நான் – 3-1-11-

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால் என்னிளம் கொங்கை அமுதூட்டி எடுத்து யான் –3-2-8-

ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் –3-3-3-

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு நம்பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே –3-6-6-

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற –3-9-10-

மாலிரும் சோலை என்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடல் அமுதை -4-3-11-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே எஞ்சலில் என்னுடை இன்னமுதே எழுலகுடையாய் என்னப்பா –4-10-7-

முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே -5-2-2

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் –5-4-4-

ஆயர் ஏற்றை அமரர் கோவை அம்தனர் தம் அமுதத்தினை சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –5-4-11

———————————————————————————————————————————————————————-

நாச்சியார் திருமொழி —

சீதை வாய் அமுதம் யுண்டாய் -எங்கள் சிற்றில் நீ சிதைஎல் என்று வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் -2-10-

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே -5-5-

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –7-8-

பதினாராமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே –7-9-

மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்று உய்தும் கொலோ -9-1-

இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப் பேரில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் –9-7-

எழிலுடைய அம்மனைமீர் என்னரங்கத்தின்னமுதர் குழல் அழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
ஏழு கமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே -11-2-

ஆராவமுதமனையான் தன அமுத வாயிலூறிய நீர் தான் கொடர்ந்து புலராமே பருக்கியிளைப்பை நீக்கீரே –13-4-

——————————————————————————————————————————————————————-

பெருமாள் திருமொழி –

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே எங்கள் குலத்தின்னமுதே இராகவனே தாலேலோ –8-2-

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதமருளிச் செய்தவனே –8-8-

தில்லை நகரத் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே –10-8-

——————————————————————————————————————————————————————–

திருச் சந்த விருத்தம் –

கள்ளதாய பேய் மகள் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்து ஆடகக்கை மாதர் வாயமுதம் உண்டதென் கொலோ –36-

—————————————————————————————————————————————————————–

திருமாலை –

தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே –5-

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என் தனாருயிரனைய வெந்தாய் பாவியேன் உன்னை யல்லால் பாவியேன் பாவிஎனே –35-

——————————————————————————————————————————————————————–

அமலனாதி பிரான்-

கொண்டால் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை \
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –10

———————————————————————————————————————————————————————-

கண்ணி நுண் சிறுத் தாம்பு –

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே –1-

——————————————————————————————————————————————————————

பெரிய திரு மொழி –

ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர் பனை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் -1-1-

பண்டு காமரானவாரும் பாவையர் வாயமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க யுரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5-

வெந்திறல் களிறும் வேலை யமுதம் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் –1-4-7-

எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திரு மார்பில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9-

சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் –1-10-4-

ஆதியை யமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிகேணிக் கண்டேனே –2-3-2-

வியந்து துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவை யமுதம் அன்று அளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே –2-3-3-

பவளத் தூணைப் படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட சீரானை -2-5-1-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் –2-6-1-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் -ஆசை விடாளால் 2-7-1-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆரமுதானான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே –2-10-4-

தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை-3-9-1-

அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்டமது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும் முதல்வன் –3-9-3-

வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை –3-9-7-

அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில் –3-10-2

வஞ்சனையால் வந்தவள் தன உயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க கஞ்சனது உயிரது உண்டு -3-10-9-

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமனிடம் -4-1-6-

சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8-

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை யதன் மேய அஞ்சனம் புரையும் திருவுருவனை ஆதியை அமுதத்தை –5-3-10-

அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த எந்தை திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென்திருப்பேர் எங்கள் மால் –5-9-2-

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி யோச்சி கண்ணியார் குறுங்கயிற்றால் கட்டவெட்டென்று இருந்தான் –5-9-7-

உலகேழும் ஒழியாமை முன நாள் தம் பொன் வயிறார அளவுமுண்டு அவையுமிழ்ந்த தட மார்வர் –5-10-3-

விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே –6-1-2

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர் –6-1-5-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே–6-10-6-

இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

தோயாவின் தயிர் நெய்யமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா –7-7-6-

திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே உனது அடியே சரணாமே –7-9-9-

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1-

வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவாருச்சி மேல் நிற்கும் நம்பியை –7-10-8-

திருமாலை அம்மானை அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே–8-9-2-

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதத்தினைப் பைந்துழாய் மாலை
ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞானமுன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3-

துள்ளமில் சுடரை அவுணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே –10-1-4-

நந்தன் பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உண்ணாய் என்னம்மம் சேமம் உண்ணாயே–10-1-4-

நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை –
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையை காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டோமே -11-7-1 –

தூயானைத் தூய மறையானை தென்னாலி மேயானை மேவாள் உயிருண்டு அமுதுண்ட
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டோமே –11-7-3–

———————————————————————————————————————————————————————

திருக் குறுந்தாண்டகம்-

இன்ப வாற்றினை அமுதம் தன்னை அவுணன் ஆருயிரை யுண்ட கூற்றினை -2-

வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை –3-

——————————————————————————————————————————————————-

திரு நெடும் தாண்டகம் –

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –14-

——————————————————————————————————————————————————–

மூன்றாம் திருவந்தாதி —

மருந்தும் பொருளும் அமுதமும் தானே -திருந்திய செங்கண் மால் ஆங்கே –4

மாலவனே மந்தரத்தால் மா நீர்க்கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று –33-

———————————————————————————————————————————————————–

நான்முகன் திருவந்தாதி –

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீயாவாய் –
பொன் பாவை கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள்–59-

———————————————————————————————————————————————————-

திருவாசிரியம் –

நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் -அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -2

————————————————————————————————————————————————————-

சிறிய திரு மடல் –

தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆரா வமுதம் அங்கு எய்தி -அதினின்றும் வாராது ஒழிவது ஒன்றுண்டே –7

————————————————————————————————————————————————————–

பெரிய திருமடல் –

அன்னவர் தம்மானோக்கமுண்டு ஆங்கணி முறுவல் இன்னமுதம் மாந்தியிருப்பர் -இதுவன்றே அன்ன வரத்தின் பயனாவது –36-

மலை திரித்து ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி –106-

அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையை -116-

திரு மேய்த்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை –126-

—————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி –

அமுதம் அமரர்கட்கீந்த நிமிர் சுடராழி நெடுமால் அமுதிலும் ஆற்றவினியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வருத்தேனே –1-7-3-

அமரர் முழுமுதல் ஆகியவாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

தனிமுதல் எம்மான் கண்ண பிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே தனியேன் வாழ் முதலே –2-3-5-

முன் நல யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே பன்னலார் பயிலும் பரனே பவித் திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7-

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-

கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே தனியேன் வாழ் முதலே –2-3-5-

முன் நல யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே பன்னலார் பயிலும் பரனே பவித் திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7-

மிக விரும்பும் பிரான் என்னும் எனது அக வுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் உக வுருகி நின்று உள்ளுளே –2-4-6-

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

அராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2-5-5-

என் கருமாணிக்கச் சுடரை நல்லவமுதம் பெறற்கரிய வீடுமாய் அல்லி மலர் விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே-2-5-9-

என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும அமுதாய வானேற –2-6-1-

கொந்தார் தண் அம துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த வெம்மைந்தா–2-6-9-

என்னுள் புகுந்து இருந்து தீ தவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம் –2-7-3-

என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –2-7-11-

வேதியர் முழு வேதத் தமுதத்தை தீதில் சீர்த் திரு வேங்கடத்தானையே –3-3-5-

நச்சு மருந்து என்கோ நலம் கடல் அமுதம் என்கோ -அச்சுவைக் கட்டி என்கோ அறு சுவை அடிசில் என்கோ –3-4-4-

கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை-3-4-9-

அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய வப்பனை பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர் –3-7-5-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவியம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் -3-8-7-

மூவுலகுக்கு உரிய கட்டியை தேனை யமுதை நன்பாலைக் கனியைக் கரும்பு தன்னை –3-10-3-

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே–4-9-6-

தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல தானே வெம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான் –5-1-2-

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை நண்ணியும் நண்ண கில்லேன் நடுவே யொருடம்பிலிட்டு–5-1-5-

சென்னி நீள் முடியாதியாய உலப்பில் அணிகலத்தன் கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே –5-5-9 –

ஆராவமுதே அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே –5-8-1-

வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய் ஆராவமுதாய் அடிஎனாவி அகமே தித்திப்பாய் –5-8-10-

தண் திரு வல்ல வாழ கன்னலங்கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை எந்நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் –5-10-10-

நல்குரவும் செலவும் நரகும் ச்வர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் –6-3-1-

குமுறுமோசை விழ வொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீருமக்கு ஆசையின்றி யகற்றினீர்-6-5-2-

மாய வம்மானே எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே -6-10-3-

அடியேன் மேவி யமர்கின்ற வமுதே இமையோர் அதிபதியே –6-10-7-

செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே -6-10-9-

இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே அமுதே அப்பனே என்னை யால்வானே –7-1-1-

கன்னலே அமுதே கார்முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே-7-1-2-

இன்னமுதம் எனத் தோன்றி ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் முழு வேர் அறிந்து –7-1-8-

அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே அலைகடல் கடைந்த வாரமுதே சந்தித்து சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –7-2-5-

ஆறு மலைக்கு எதிர்ந்தோடுமொலி அர ஊறு சுலாய் மலை அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே –7-4-2-

பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே ஆவியே அமுதே அலைகடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-

தொண்டனேன் கற்பகக் கனியே பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா –8-1-2-

அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை யாருயிரேயோ –8-1-4-

கறந்த பால் நெய்யே நெய்யினின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பெறாயா –8-1-7-

எங்கள் செல் சார்வுயாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன் –8-4-2-

தேனை நன்பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை –8-4-11-

தனி முதலை தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

அசுரர்கட்கு இடர் செய் கடு வினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்-9-2-10-

கடைவதும் கடலுளமுதம் என் மனம் உடைவதும் அவற்கே ஒருங்காகவே –9-3-6 –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -9-4-9-

எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திரு மாலிரும் சோலை கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –10-7-2-

———————————————————————————————————————————————————————

இராமானுச நூற்றந்தாதி —

செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன் எனக்காரமுதே –19

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் –20-

பாரதப் போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுதுணர்ந்த அடியார்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்து –51

————————————————————————————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி —

நோற்ற நோன்பாதியிலே நிந்தனை விட்டாற்ற கில்லேன் பேற்றுக்கு உபாயம் உந்தன் பேர் அருளே சாற்றுகின்றேன்
இங்கு எந்நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது –46-

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே தளர்ந்து மிக தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான் மாசறு சீர் மாறன் எம்மான் –48-

——————————————————————————————————————————————————————

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: