ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தனிப்ப்ரணவம் —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————————————————————————–

சகல வேத தாத்பர்யமாய் –
சகல சாஸ்திர சங்க்ரஹமாய்-
சகல பல ப்ரதமாய்-
சகல மந்த்ரங்களிலும் அதிகமான திரு அஷ்டாஷரமான திரு மந்த்ரத்துக்கு நம் பூர்வாச்சார்யர்கள்
ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும் –
ப்ராப்யம் சொல்லுகிறது என்றும் –
இரண்டுபடி வாக்யார்த்தம் -என்று அருளிச் செய்வார்கள் –

இம்மந்த்ரம் தான்
ஓம் -என்றும்
நம- என்றும்
நாராயணாய -என்றும் –மூன்று பதமாய் இருக்கும் –

இதில் முதல்பதம் –
பிரணவம் என்று திருநாமமாய் –
அகாரம் – என்றும் –
உகாரம் -என்றும் –
மகாரம் -என்றும் -மூன்று பதமாய் இருக்கும்-

இம்மந்த்ரத்துக்கு நம்பிள்ளை அருளிச் செய்த தாத்பர்யம் –
1- ஆஸ்ரயியையும்-
2- ஆஸ்ரயியினுடைய வைசத்யையையும் –
3-ஆஸ்ரயத்தையும்-
4- ஆஸ்ரயத்தினுடைய வைசத்யையையும் –
5-ஆஸ்ரயணீய வைபவத்தையும் –
6- ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது என்று –

இதில் ஆஸ்ரயி-என்கிறது -சேஷத்வத்தை -இது பிரதம அஷரமான அகாரத்திலே சொல்லுகிறது –
ப்ரஹ்ம வாசியான அகாரத்தை சேஷத்வ வாசியாக்கின படி என் என்னில் -இப்பதம் ப்ரஹ்ம பிரதானம் அன்றியிலே ஸ்வரூப பிரதானம் ஆகையாலே —
இங்கு ப்ரஹ்ம வாசகம் வந்தது -அந்த ஸ்வரூபத்துக்கு அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் பிரதி சம்பந்தி -சாபேஷமாகையாலே-
இதில் விபக்தியில் சேஷத்வம் சொல்லுகிறது -பதம் தன்னாலே பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது –
பிரதி சம்பந்தி இருக்கும்படி என் என்னில் –
சகல ஜகத் காரணமுமாய்-
சகல ஜகத் ரஷகமுமாய் –
அகில ஹேய ப்ரத்ய நீகமுமாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகமுமாய்-
நிருபாதிக சர்வ சேஷியுமாய்-
ஸ லஷ்மீ கமுமாய் -இருக்கும் வஸ்து என்று –

இவ்வஷர  ஸ்வ பாவத்தாலும் –
தாது ஸ்வ பாவத்தாலும் –
இந்த தாத்வர்த்த ஸ்வ பாவத்தாலும் –
விபக்தி ஸ்வ பாவத்தாலும் –
இவ்வஸ்து ஸ்வ பாவத்தாலும் -சொல்லிற்று –

சகல ஜகத் காரணத்வம் இவ்வஷர ஸ்வ பாவத்தாலே சொல்லுகிறது -எங்கனே என்னில்
இந்த ப்ரஹ்ம வாசகமான அகாரம் சகல வாசகங்களுக்கும் காரணமாகையாலே -ப்ரஹ்மம் சகல வாசகங்களுக்கும்
காரணமாகக் கடவது என்று -வாக்ய வாசக சம்பந்தத்தாலே சொல்லிற்று –

இன்னமும் இவ்விடத்திலே காரணத்வம் அநுசந்திப்பதொரு வழியுண்டு -எங்கனே என்னில் –
வாசகங்களோடு வாச்யங்களோடு வாசியற -ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தத்துக்கும் இவ்வாகரம் ஆகிற வாசகமே காரணமாகக் கடவது என்றார்கள் –
ஆனபடி  என் என்னில்,-இவ்வாகாரமாகிறேன் நான் -என்று அவன் தானே அருளிச் செய்கையாலும்
இவ்வாசகம் காரணம் என்கிறவிடத்தில் வாசகங்களுக்கு காரணம் அன்று என்கிற நிஷேத விதி இல்லாமையாலும் –
இவ்வாசகமே காரணமாகவற்று என்னலாம் -இத்தால் வாசக பிரவானம் சொல்லிற்று ஆய்த்து-

இன்னமும் இவ்விடத்திலே காரணத்வம் அநுசந்திப்பதொரு வழியுண்டு -எங்கனே என்னில் –
இது ஈஸ்வர வாசகம் ஆகையாலும் –
ஈஸ்வரத்வம் ஆகிறது -ஆபத் ரஷணம் பண்ணுகையாலும்-
ஆபத் ரஷணத்தில் பிரதானம் –
அகரணரான சேதனரை ஸகரணர் ஆக்குகையும்  –
அசம்ஸ்தான ரூபமான அசித்தை சமஸ்தான ரூபமாக்குகையும் –
இத்தால் காரணத்வம் சொல்லிற்று ஆய்த்து –

ஈஸ்வரன் -என்ற போதே ஜகத் காரண வஸ்து என்றதாய்த்து -என்றார்கள் –
இத்தால்  வாச்ய லஷணம் சொல்லிற்று ஆய்த்து -எங்கனே என்னில் –
இவ்வாச்யமான ஈஸ்வரத்வம் மோஷப்ரத வஸ்துவுக்கு ஒழிய இல்லாமையாலும்
மோஷ ப்ரதத்வம் உள்ளது -ஜகத் காரண வஸ்துவுக்கே யாகையாலும் -ஈஸ்வரன் என்ற போதே சகல ஜகத் காரணம் -என்றார்கள்   –

இப்படி பிரமாண உபபத்திகளாலே இவ்வாகாரத்தில் சொன்ன காரணதவத்தை நம் ஆசார்யர்கள்
ஸ்தூல -ஸூஷ்ம-ரூபேண பல வகையாலும் அநு சந்தித்து உபதேசித்துப் போருவர்கள் –
அவைகள் எனை என்னில் –இக் காரணத்வம்   தான் –
1- ஔபாதிக காரணத்வம் -என்றும் –
2- நிருபாதிக காரணத்வம் -என்றும் –
3-சத்வாரக ஔபாதிக காரணத்வம் -என்றும் –
4-அத்வாரக  ஔபாதிக காரணத்வம் -என்றும் —
5- சத்வாரக நிருபாதிக காரணத்வம் -என்றும் –
6- அத்வாரக நிருபாதிக காரணத்வம் -என்றும் -ஆறுபடியாய் இருக்கும் –

1-இதில் ஔபாதிக காரணத்வம் ஆவது -பூர்வ பூர்வ யுகங்களிலே சேதனர் சரீரங்களாலே பண்ணின புண்ய பாபங்கள் ஹேதுவாக ஸ்ருஷ்டிக்கை –
2-நிருபாதிக காரணத்வம் ஆவது -அநாதியாக அசித் அந்தர்கதராய் அசரீரிகளாய்த் திரிகிற சேதனர்க்கு நிரவதிக கிருபையாலே சரீராதிகளைக் கொடுக்கை –
3- சத்வாரக ஔபாதிக காரணத்வம் ஆவது -புண்ய பாபங்களை நிறுத்து -அவற்றின் வழியே தேவாதி சதுர்வித சரீரங்களையும் ஸ்ருஷ்டிக்கை –
4- அத்வாரக ஔபாதிக காரணத்வம் ஆவது -புண்ய லேசமுடையவர்களுக்கும் சஹஜ காருண்யத்தாலே விலஷண ஸ்ருஷ்டியைப் பண்ணுகையும்
பாபமே யானவர்களையும் சத்தா ஹாநி பிறக்கும் அளவில் சம்பந்தமே பற்றாசாக அங்கீ கரித்து ஆபிமுக்ய ஜநகமான ஸ்ருஷ்டியைப் பண்ணுகையும் –
5- சத்வாரக நிருபாதிக காரணத்வம் ஆவது -இப்படி ஸ்ருஷ்டிப்பதாகப் புரிந்த ஈஸ்வரன் ப்ரஹ்மாதிகளைக் கொண்டு ஸ்ருஷ்டிக்கை –
6- அத்வாரக நிருபாதிக காரணத்வம் ஆவது -காருண்யாதிகளே காரணமாகத் தானே ஸ்ருஷ்டிக்கை –

இவ்வாகாரத்தால் -அப்படி ஜகத் காரணத்வம் சொன்ன போதே -இவனுடைய
சர்வ ஸ்மாத் பரமும் –
அத ஏவ -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் -அநு சந்தேயம் –

உடையவர்க்குத் திருக் கோட்டியூர் நம்பி காரணத்வம் அருளிச் செய்யச் செய்தே –
பெற்ற தாயை அறியாமல் பிறந்து வளருவாரைப் போலே இ றே -காரணத்வம் காணாமல் கண்டு அநு சந்திக்கும் தர்சன அர்த்தங்கள் எல்லாம் –
என்று அருளிச் செய்தாராம் –

பட்டர் நஞ்சீயர்க்கு இவ்வர்த்தம் அருளிச் செய்யச் செய்தே –
பகவத் காரணத்வ நிரூபணம் பண்ணுமவனுக்கு மோஷத்திலே ஒழிய  அந்வயம் இல்லை -என்று அருளிச் செய்தார் –

நம்பிள்ளை -பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே –
ஈஸ்வர பரத்வத்தை அநு சந்திக்கை யாவது -ஜகத் காரணத்வத்தை அநு சந்திக்கை -என்று அருளிச் செய்தாராம் –

ஆச்சான் பிள்ளை -நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரை -பகவத் குணங்கள் எல்லாம் சேர அநு சந்திக்கலாம் துறையேது-என்று கேட்க –
ஜகத் காரணத்வத்தை அநு சந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநு சந்தித்ததாம் –
என்று அருளிச் செய்தாராம் –

பிள்ளை எங்கள் ஆழ்வான்-நடதூர் அம்மாளுக்கு இவ்வர்த்தம் அருளிச் செய்யச் செய்தே –
ஜகத் காரண நிரூபணம் பண்ணினவனுக்கு நிஷித்த அநு ஸ்தானத்தில் அந்வயம் இல்லை –
என்று அருளிச் செய்தார்  –

ஆகையால் நம் பூர்வாச்சார்யர்கள் ஜகத் காரண நிரூபணமே நிரந்தரம் பண்ணா நிற்பர்கள்-

அநந்தரம்-ஜகத் காரண வஸ்துவினுடைய ரஷகத்வம் சொல்லுகிறபடி என் என்னில்
இது -அவ ரஷணே -என்கிற தாதுவை உடைத்தாகையால் சாப்தமாகச் சொல்லிற்று –
இன்னமும் இப்பதத்திலே ரஷகத்வம் அநு சந்திப்பதொரு பிரகாரம் யுண்டு -எங்கனே என்னில்
ஜகத் காரணத்வம் சொன்ன போதே ரஷகத்வம் சொன்னதாகலாம் -ஆகிறபடி என் என்னில் –
குடல் துடக்குடையவர்களை ரஷிக்கை குண பிரயுக்தம் -என்கிற ந்யாயத்தாலே –
ஜகத்தில்  குடல் துடக்குடையவர்கள் எல்லாம் ரஷிக்கிறார்களோ-என்னில்
ஜகத்தில் உள்ளார் அந்யோந்யம் அஸ்நேஹிகளுமாய்
-அஸ்வதந்த்ரருமாய் -அப்ராப்தருமாகையாலே ரஷிக்க மாட்டார்கள் -இங்கு ஜகத் காரண பூதன் –
ஸ்நேஹியுமாய் -ஸ்வ தந்த்ரனுமாய் -காருணிகனுமாய் -ப்ராப்தனுமாகையாலே
இவனை ஒழிய ரஷகர் இல்லை -என்கிற நியாயத்துக்கு குறையில்லை –
நம்பிள்ளை இவ்வர்த்தம் அருளிச் செய்யச் செய்தேஅயீற்றுப் பரவிக்குப் பொகடப் போம்  -என்று அருளிச் செய்தார் இ றே –
எங்கும் பரவியிருக்கும் பெருமானுக்கு உள்ள நெறி காட்டு நீக்கும் தன்மை -சேதனன் தான் ஏறிட்டுக் கொண்டு இருந்த ஸ்வ ரஷணத்தை
எம்பெருமானிடம் சமர்ப்பித்தால் போய் விடும் என்ற பொருளில் அருளிச் செய்தார் –

இன்னமும் இவ்விடத்தில் ரஷகத்வம் அநு சந்திப்பதொரு வழி யுண்டு -எங்கனே என்னில்
இப்பதம் விஷ்ணு வாசகமாகையாலும் -விஷ்ணு வாகிறான் வ்யாபன சீலனாகையாலும் -வ்யாப்தியாவது
ஸ்வ வ்யதிரிக்த சகலத்தினுடையவும் சத்தா சம்ரஷணம் ஆகையாலும் –
ரஷண பிரகாரத்தில் பிரதான ரஷணம் இதுவேயாகையாலும் இவ்வழியாலே வரும் ரஷகத்வத்துக்கும் குறையில்லை என்றார்கள் –

இன்னமும் இவ்விடத்தில் ரஷகத்வம் அநு சந்திப்பதொரு வழி யுண்டு -எங்கனே என்னில் –
இப்பதம் ஈஸ்வர வாசகமாகையாலும் -சமஸ்த ஜகத்துக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் இருக்கையாலும்
ஈஸ்வரன் என்ற போதே ரஷகத்வத்துக்குக் குறையில்லை என்பர்கள் நம் பூர்வாச்சார்யர்கள் –

இந்த ரஷகத்வம் தான்
-ஔபாதிக ரஷகத்வம் -என்றும்
– நிருபாதிக ரஷகத்வம் -என்றும்  த்விவிதம் –

இதில் ஔபாதிக ரஷகத்வம் தான் –
1- சத்வாரக ஔபாதிக ரஷகத்வம் -என்றும் –
2-சத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம் -என்றும் –
3-அத்வாரக ஔபாதிக ரஷகத்வம்   என்றும் –
4-அத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம் என்றும் –

நிருபாதிக ரஷகத்வம் தான் –
1- சத்வாரக நிருபாதிகரஷகத்வம் -என்றும் –
2-சத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் -என்றும் –
3-அத்வாரக நிருபாதிக ரஷகத்வம்   என்றும் –
4-அத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் என்றும் –
பலவகையாக இருக்கும் –

இதில் ஔபாதிக ரஷகத்வமாவது -எத்ர்த்தலையில் அபேஷை கண்டு ரஷிக்கை –
நிருபாதிக ரஷகத்வமாவது -அபேஷா நிரபேஷமாக ரஷிக்கை –

1- சத்வாரக ஔபாதிக ரஷகத்வம் -ஆவது –
ஏதேனும் அபேஷிக்க ஏதேனும் பலம் கொடுக்கை அன்றிக்கே அபேஷா பிரகாரங்களுக்குத் தகுதியாகப் பலம் கொடுக்கை –
2-சத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம் -ஆவது –
தன்னை அபேஷித்தவர்களுக்கே அன்றிக்கே -தன் சரீரங்களான ப்ரஹ்ம ருத்ராதிகளை அபேஷித்தவர்களுக்கும்-அவர்களுக்குள்ளீடாய் நின்று அவ்வோ அபேஷித பலங்களைக் கொடுக்கை –
3-அத்வாரக ஔபாதிக ரஷகத்வம்   -ஆவது –
எதிர் தலையில் ஆபிமுக்யம் பற்றாசாக அபூர்ண உபாயர்க்கும் பூர்ண பலங்களைக் கொடுக்கை –
4-அத்வாரக ஔபாதிக ரஷகத்வ பிரகாரம்-ஆவது –
தன்னளவில் ஆபிமுக்யம் இன்றிக்கே கீழ்ச் சொன்ன தேவதைகள் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கிலும்
அவர்களுக்குள்ளீடாய் மின்று அவர்கள் அபேஷிதங்களைக் கொடுக்கை –

1-சத்வாரக நிருபாதிகரஷகத்வம் -ஆவது
பல சாபேஷை யுடையராய் -பலப்ரத விஷயம் அறியாதவர்களுக்கும் அத்வேஷமே பற்றாசாக தானே அறிந்து பல பிரதானம் பண்ணுகை-
2-சத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் -ஆவது –
துஷ்கரங்களுமாய்-ஸ்வரூப விருத்தங்களுமான உபாயாந்தரங்களிலே
மண்டினவர்களுக்கும் உபாய பூர்த்தியைப் பிறப்பித்து மோஷ பிரதானம் பண்ணுகை –
3-அத்வாரக நிருபாதிக ரஷகத்வம்   -ஆவது –
பல அபேஷை இல்லாதவர்களுக்கும் சம்பந்தமே பற்றாசாக ருசியை விளைத்துப் பலத்தைக் கொடுக்கை –
4-அத்வாரக நிருபாதிக ரஷகத்வ பிரகாரம் ஆவது –
தனக்கு நிலை நின்ற வடிவான மோஷ பிரதானம் பண்ணும் இடத்தில் -சேதனகத வியாபார சாபேஷனாய் இருக்கை அன்றிக்கே  -சேதன விஷய சாபேஷனாய்க் கொண்டு மோஷம் கொடுக்கை –
இத்தால் சேதனகத மான உபாய ச்வீகார ஸ்ம்ருதியும் சைதன்யக்ருத்யம் என்றதாய்த்து –
இத்தால் நிருபாதிக ரஷகத்வத்துக்கு லஷணம் சொல்லிற்றாய்த்து –
இந்த லஷணம் ஆகிறது -இப்படி ரஷியாத போது தன் சத்தை இல்லையாம் படியாய் இருக்கை இ றே –
ஆக
இவ்வாகாரம் விஷ்ணு வாசகமாகையாலே ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தத்துக்கும் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகாரத்தாலும் சர்வ ரஷகன் என்று நிர்ணயித்தாய்த்து –
இவ்விடத்தில் இந்த ரஷகத்வ பிரயுக்தங்களான-
1- சர்வஜ்ஞத்வ –
2- சர்வ சக்தித்வ –
3-பரம காருணிகத்வ-
4- பரம உதாரத்வ –
5-ஆஸ்ரித வத்ஸலத்வ –
6-அசரண்ய சரண்யத்வ-
7- அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வ –
8-நிருபாதிக சர்வ ஸ்வாமி த்வ-
9- ஸ்ரீ யபதித்வ –
10-நாராயணத்வங்கள் –
ஆகிற சமஸ்த கல்யாண குணங்களும் அநு சந்தேயம் –
என் செய்ய என்னில்
1- ரஷிக்கும் போது சர்வத்தையும் அறிய வேண்டுகையாலே சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –
2-அசக்தனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே சர்வ சக்தித்வம் சொல்லிற்று –
3-அகாருணிகனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே பரம காருணிகத்வம் சொல்லிற்று –
4-லுப்தனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே பர உதாரத்வம் சொல்லிற்று –
5-தோஷாஸஹனுக்கு ரஷகத்வம் இல்லாமையாலே ஆ ஸ்ரீ தா வாத்ஸல்யம் சொல்லிற்று –
6- தன்னை ஒழிய ரஷிப்பார் இல்லாமையாலே அசரண்ய சரண்யத்வம் சொல்லிற்று –
7-சிலரை ரஷிக்கிறோம் சிலரை ரஷியோம் -என்ன ஒண்ணாமை யாலே அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வம் சொல்லிற்று –
8- ரஷிக்கை தன் பேறாகையாலே நிருபாதிக சர்வ ஸ்வாமி த்வம் சொல்லிற்று –
9- ரஷிக்கும் போது சேர விடுவார் வேண்டுகையாலே ஸ்ரீ யபதித்வம் சொல்லிற்று –
10- ரஷியாத போது தானில்லாமையாலே நாராயணத்வம் சொல்லிற்று –

இப்படி சர்வ ரஷகன் சமஸ்த கல்யாண குணாத்மகன் என்ற போதே -காரணத்வ யுபயுக்தமான அகில ஹேய  ப்ரத்ய நீகத்வம் சொல்லிற்று –
அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் ஆவது -தன்னை ஒழிய சகல சேதன அசேதனங்களோடு தான் இருக்கச் செய்தே –
சிறைக் கூடத்திலே சிறையனோடே கூடப் படையிலானும் வர்த்திக்கச் செய்தேயும் சிறையிலே துக்கம் படையிலானுக்கு வாராதாப் போலே
சரீரத்தில் ஆத்மாவோடு ஈஸ்வரனும் வர்த்தியா நிற்கச் செய்தேயும் ஆத்மாவினுடைய துக்கங்கள் ஈஸ்வரனுக்கு வாராது இருக்கை –
ஆக
காரணத்வ
ரஷகத்வ
ஆகிற உபய லிங்கதவமும் சொல்லிற்று

அநந்தரம் -இப்பதம் சதுர்த்யந்தம் ஆகையாலே நிருபாதிக சர்வ சேஷித்வமும் சொல்லிற்று –
இப்பதத்திலே லஷ்மீ சம்பந்தமும் அநு சந்தேயம் -எங்கனே -என்னில் –
1-சகல பிரமாணங்களும் லஷ்மீ -தர்மம் -ஈஸ்வரன் தரமி -என்று சொல்லுகையாலும் –
2-கீழ்ச் சொன்ன காரணத்வ ரஷகத்வங்களும் லஷ்மீ ப்ரேரிதங்கள் ஆகையாலும் –
3-இவனுடைய ஸ்வரூப நிரூபகங்களான சமஸ்த கல்யாண குணங்களிலும் பிரதானம் -லஷ்மீ ஸ்வரூபம் ஆகையாலும் –
4- இப்பத விவரணமான நாராயண பதத்தில் -நார பதத்திலே லஷ்மீ ஸ்வரூபம் வ்யக்தமாகச் சொல்லுகையாலும் –
5-மேற்சொல்லுகிற சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தி ஒரு மிதுனமாக வேண்டுகையாலும் –
6- இவனுக்கு தேவதாந்திர வ்யாவ்ருத்தி லஷணங்களிலே பிரதானம்  லஷ்மீ பர்த்ருத்வம் ஆகையாலே
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் இவளோட்டை சம்பந்தத்தாலே நிறம் பெறுகையாலும்-

ஆக -இப்படி இவளுடைய ஸ்வரூபம் ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேச அனர்ஹமாய் யல்லாது இராமையால் இவ்விடத்திலே
பெரிய பிராட்டியாருடைய ஸ்வரூபம் ஆர்த்தமாக அநுசந்திக்க ப்ராப்தமாய் இருக்கக் கடவது என்று பிள்ளை அருளிச் செய்வர் –
இன்னமும் சில ஆசார்யர்கள் இங்கனே அருளிச் செய்வார்கள் -எங்கனே என்னில் –
அபத்நீகனுக்கு யாகத்திலே அந்வயம் இல்லாதாப் போலேயும் –
பிரதான மஹிஷீ வியதிரேகேண ராஜாவுக்கு  அபிஷேகம் இல்லாதாப் போலேயும்
இவனுடைய ரஷகத்வ சேஷித்வங்கள் லஷ்மீ வ்யதிரேகேண இல்லை -என்று –
நஞ்சீயர்  இவ்வர்த்தம் அருளிச் செய்தே
பிராட்டிக்கு சத்தா ஸ்திதி எம்பெருமானாலே -எம்பெருமானுக்கு நிரூபக சித்தி பிராட்டியாலே -என்று இ றே அருளிச் செய்தது –
ஆக –
இப்பதத்தில் –
சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷி –
சகல ஜகத் காரண பூதனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய்-
அத ஏவ அகில ஹேய ப்ரத்ய நீகனாய்
சர்வ விஷய சர்வ பிரகார ரஷகனாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-
நிருபாதிக சர்வ பிரகார சர்வ சேஷியாய்
ஸ்ரீ யபதியாய் –
இருக்கும் என்றது ஆய்த்து –

இவ்வாகாரத்தில் மிதுன சேஷத்வம் சொல்லுகிற சதுர்த்தீ விபக்தியை நிரூபித்த விடத்தில் லுப்தமாய்க் கிடந்தது –
லுப்தம் என்றது ஏறிக் கழிந்தது -என்றபடி –
ஆனால் கழிந்து போன விபக்தியை சதுர்த்தீ விபக்தி என்று அறிந்தபடி என் என்னில் –
இதனுடைய விவரணமான நாராயண பதத்திலே சதுர்த்தி ஏறிக் கிடைக்கையாலே அதினுடைய சங்க்ரஹமான இதிலும் சதுர்த்தியாகக் கடவது –
இச் சதுர்யர்த்தமான சேஷத்வம் தான் இருக்கும் படி என் என்னில் –
சிலர் க்ருஹ ஷேத்ர கர்ப்ப தாஸ புத்ராதிவத் சேஷம் என்றார்கள் –
சிலர் பார்யாவத் சேஷம் என்றார்கள்  –
சிலர் சரீரவத் சேஷம் என்றார்கள்  –
இவை இத்தனையும் பார்த்த இடத்தில் இது தாதர்த்த்ய சதுர்த்தி யாகையாலும் –
தாதர்த்யத்துக்கு அர்த்தம் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தத்துக்கும் ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேசத்துக்கு யோக்யதை இல்லை என்கையாலும்-
இங்கு சொன்ன க்ருஹ ஷேத்ர கர்ப்ப தாஸ புத்ர பாரா சரீரங்களுக்கு ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேசத்துக்கு யோக்யதை யுண்டாகையாலும்
இவ்வோ சாமான்ய சேஷத்வம் தாதர்யத்துக்கு அர்த்தமாக மாட்டாது –
இனி இந்தத் தாதர்த்ய சதுர்த்திக்கு அர்த்தம் -தரமி விஷய தர்மவத் சேஷத்வமேயாகக் கடவது –
இத்தால்
அகார வாச்யனான பர ப்ரஹ்மம்
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்டமான போது-காரணமாயும் –
ஸ்தூல சித் அசித் விசிஷ்டமான போது -கார்யமாயும்
இருக்கும் என்றதாய்த்து –
இவ்வர்த்தம் இவ்விடத்தில் சொல்லுகிறபடி என் என்னில் –
ஸ்வ வ்யதிரிக்த சகலத்தினுடைய தர்மத்வமும் இங்கு சொல்லுகையாலே –
ஆக –
சதுர்த்தீ விபக்தியால் சேஷத்வ சித்தியும் சேஷத்வ லாபமும் -சொல்லிற்று ஆய்த்து-
இங்கு – சேஷத்வ சித்தி யாகிறது -பர அனர்ஹதையும்-ஸ்வ அனர்ஹதையும் –
சேஷத்வ லாபம் ஆகிறது -பகவத் வ்யதிரிக்த சகலத்துக்கும் சேஷத்வம் ஒழிய சத்தை இல்லையே இருக்கை-
ஆக -அகார்த்தம் தீர்ந்தது –

———————————————————————————————————

அநந்தரம்-
அவ்யயமாய் அவதாரணார்த்த மான -உகாரமும் –
கீழ் தாதர்த்ய சித்தமான சேஷத்வ லாபம் ஸ்வ லாபமோ பர லாபமோ என்கிற சங்கையிலே
ஸ்வ லாபம் அன்று -பர லாபம் -என்கிறது –
இவ் வதாரணார்த்தத்துக்குச் சொல்லும் பிரமாணங்கள் எல்லாம் அவனுக்கே என்று இ றே கிடப்பது –
இவ்விடத்திலே ததீய சேஷத்வமும் அனுசந்தித்துப் போருவாரும் யுண்டு -என்று அருளிச் செய்வார்கள் -எங்கனே என்னில் –
இப்பதம்
-1-சேஷத்வ வைசத்ய பிரதிபாதகம் ஆகையாலும் –
2-இஸ் சேஷத்வத்துக்கு வைசத்யம் ததீய பர்யந்தமேயாய் இருக்கையாலும் –
3-ததீய சேஷத்வ விதானம் பண்ணும் இடத்தில் இவ்வவதாரணார்த்த நிஷ்டன் பக்கல் கொள்ளும் சேஷத்வமே ஸ்வரூப பிரயுக்தமாய் இருக்கையாலும் –
4- மேல் பிரதிபாதிக்கப் படுகிற வஸ்து ஸூ த்த சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமாக வேண்டுகையாலும்
5- இப்பதம் தான் ததீய சேஷத்வ பிரதிபாதகமான மத்யமபத  சங்க்ரஹம் ஆகையாலும்
இவ்விடத்தில் ததீய சேஷத்வ ஸூ சகத்வம் சொல்லுகையில் சோத்யம் இல்லை

இப்பதம் சம்பந்த யாதாம்ய ஜ்ஞான பிரதிபாதகம் -என்று அருளிச் செய்வர்கள்-
இப்பதத்தில் பிரதம சரமங்களினாலே ஜீவ பரர்களைச் சொல்லி
நடுவே அவதாரணம் கிடைக்கையாலே இது சம்பந்த வாசியாகக் கடவது –
ஆக –
அவதாரணார்த்தமான உகாரத்தாலே –
ஸூ த்த சேஷத்வ லஷணமும்-
சேஷத்வ பூர்த்தியும் –
சேஷத்வ ஜ்ஞான யாதாத்யமும்
சொல்லிற்று ஆய்த்து –
அன்றியிலே –
சில ஆச்சார்யர்கள் இவ்வர்த்தம் இத்தனையும் –
தாதர்த்ய சித்தமேயாய்-
அவதாரணத்தை ஆர்த்தமாக்கி -இவ்வுகாரம் லஷ்மீ வாசகம் என்றார்கள் –
ஆக உகார்த்தம் தீர்ந்தது –

—————————————————————————————————————-

அநந்தரம் –
மகாரம் தாதர்த்ய சித்தமுமாய் –
அவதாரண சித்தமுமான சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமாய்
ப்ரதக்ருதே பரனாய் ஜ்ஞானானந்த ஸ்வரூபமான ஆத்மாவைச் சொல்லுகிறது –
இம்மகாரத்தில் ப்ரக்ருதே பரத்வமும்
ஜ்ஞானந்த ஸ்வரூபத்வமும் சொல்லுகிறபடி என் என்னில்
இம்மகாரத்தில் சொல்லுகிற பிரமாணங்களில் ப்ரக்ருதே பரத்வம் சொல்லிற்று –
இதில் தாதுவாலே -ஜ்ஞானானந்த   சொல்லிற்று –
இந்த தாது -மன-ஜ்ஞானே -என்று ஜ்ஞான மாத்ர பிரதி பாதகமாய் இருக்க ஜ்ஞாதாவைச் சொல்லுகிற படி என் என்னில்
குணத்தைச் சொன்ன போதே குணியையும் சொல்லிற்றாம்-என்று வேதாந்த ஸூ த்ரத்திலே நிர்ணயிக்கையாலே –
கீழ்ச் சொன்ன சேஷத்வம் -சேதன அசேதன சாதாரணமாய் இருக்க இங்கு சேதன ஏகாந்தமான மகாரத்தை பிரயோகிப்பான் என் என்னில் –
1- சேஷத்வ ஜ்ஞானம் பிறப்பது சேதனுக்கே யாகையாலும் –
2-சேஷத்வ ஜ்ஞான பிரதிபந்தகமான ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தி யுள்ளதும் சேதனுக்கே யாகையாலும் –
3- சேஷத்வ ஜ்ஞானகார்ய அந்வயம் உள்ளதும் சேதனுக்கே யாகையாலும் –
4-தத் சாதன ஸ்வரூப சமர்ப்பண கர்த்ருத்வம்  உள்ளது சேதனுக்கே யாகையாலும்
5-தத் அனந்தரத்தில் ஸ்வரூப அநு சந்தானத்தாலே லஜ்ஜா பயங்கள் உண்டாவதும் சேதனுக்கே யாகையாலும் –
6-அகாரத்தில் சொன்ன ஸ்வாமித்வத்துக்கு பிரதி சம்பந்தியான தாஸத்வம் உள்ளதும் சேதனுக்கே யாகையாலும்
7- தத் அனந்தரத்திலே இப்பதம் தான் பிரணவத்துக்கு த்ருதீய அஷரமாக வேண்டுகையாலும் –
ஆக இப்படி சேஷத்வாஸ்ரய பிரதிபாதாக பதம் சேதன ஏகாந்தமான மகாரமாக வேணும் –

ஆனால் இங்கு அசித் சேஷத்வம் சொல்லுகிறபடி எங்கனே என்னில்
இவ்வாத்மாவைச் சொல்லுகிற போது ப்ரக்ருதே பரன் என்று அசித்தைச் சொல்லி அநந்தரம் சொல்லுகையால்
இப்பதங்கள் போலே சொன்னவிடத்திலே அசித்தையும் சொல்லிற்றாக கடவது –
ஆஸ்ரயியாய் ஆநநதத்தை முந்துறச் சொல்லுகிற நியாயத்தாலும் அசித் சேஷத்வமும் இவ்விடத்திலே சொல்லிற்றாகக் கடவது –
இத்தால் -அனந்யார்ஹதாஸ்ரயம்-ஜ்ஞான ஸ்வரூப ஜ்ஞான குணகனான ஆத்மா என்றதாய்த்து –
ஆஸ்ரயியான சேஷத்வத்தை முதல் சொல்லி ஆஸ்ரயமான ஜ்ஞானா நந்தத்தை பின்பு சொல்லுவான் என் என்னில் –
1- ஆஸ்ரயியான சேஷத்வத்தை ஒழிய ஜ்ஞானா நந்தம் அசந்நேவவாய்க் கிடைக்கையாலும்
2- புஷ்பத்துக்குப் பரிமளத்தாலே ஸ்லாக்யதை யானாப் போலே இவ்வாத்மாவுக்கும் ஔஜ்வல்யம் சேஷத்வத்தாலே யாகையாலும்
3-நெருப்புப் பட்ட அகத்திலே அகப்பட்டு நின்றவனை நீரைச் சொரிந்து கொண்டு புறப்பட படுத்துமா போலே
அஹங்காரம் ஆகிற அழலிலே அகப்பட்டு உருவழிந்து கிடக்கிற ஆத்மாவை அடியான் என்றே உணர்த்திக் கொண்டு இழிய-அறிய -வேண்டுகையாலும் –
4- தன்னுண்ணிப் பகைப் போல அந்தராயமான ஆத்ம அநுபவ மாத்ரமான படு குழியிலே விழாமைக்காகவும்-
ஆக –
இப்படி ஆஸ்ரயியான சேஷத்வத்தை ஒழிய –
ஆஸ்ரயமான ஜ்ஞான ஸ்வரூபனாய் –
ஜ்ஞான குணகனான ஆத்மாவுக்கு சத்தை இல்லாமையாலே
இவ்வந்தரங்கமான சேஷத்வத்தையே முற்படச் சொல்லிற்று –

இஸ் சேஷத்வ ஆஸ்ரயமான ஆத்மாவினுடைய ஸ்வரூபம் –
1- ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் –
2- ஆனந்தாத் மகமுமாய் –
3-சங்கோச விகாச அயோக்யமுமாய் –
4-அணுவாய் –
இருக்கும் என்னும் இடமும்
ஸ்வ பாவம் –
1- பரஸ்மை ஸ்வயம்  பிரகாசமுமாய் –
2-ஆனந்த ஜனகமுமாய் –
3-சங்கோச விகாச யோக்யமுமாய் –
4-விபுவாய் –
இருக்கும் என்னும் இடமும் இதனுடைய உப ப்ரும்ஹணங்களிலே கண்டு கொள்வது –
இக் குணங்கள் மற்றும் இவ்வாத்மாவுக்குச் சொல்லும் குணங்கள் எல்லாவற்றுக்கும் உப லஷணம்-
இதில் ஏக வசனம் -ஜாத்ய ஏக வசனமாய் -த்ரிவித ஆத்மா வர்க்கத்தையும் சொல்லுகிறது –
ஆக –
இம்மகாரத்தால் ப்ரக்ருதே பரனாய்
சேஷத்வ ஆஸ்ரயமாய்
ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய்
ஜ்ஞான குணகனான -ஆத்மாவைச் சொல்லுகிறது –

மூன்று எழுத்ததனை-பெரியாழ்வார் -4-7-10-இத்யாதிப் படியே அஷர த்ரயாத்மகமான பிரணவத்தில்,
பிரதம சரமங்களினாலே ஜீவ பரர்களைச் சொல்லி நடுவே அவதாரணத்தைச் சொல்லுகையாலே
ஜீவ பரர்கள் இருவரையும் ஏக தத்வம் என்னலாய் இருக்க  பிரியச் சொன்னபடி என் என்னில்
ஏக அஷரமான பிரணவத்தை அஷர த்ரயாத்மகமாக பிரமாணங்களில் பிரித்தால் போலே ஏக தத்வம் போலே இருக்கிற இவர்களையும் பிரமாணங்களாலே பிரிக்கக் கடவது  அத்தனை –

இப்படி ஸ்வ ஸ்வரூபத்தை பகவத் ப்ருதக் ஸித்த விசேஷணம் என்று இருக்கையே ஸ்வரூப ப்ராப்தம் –
இந்த ஜ்ஞானமே மோஷ விஷய யோக்யம்-

இத்தால் -ஸ்வரூப விஷய அந்யதா பிரதிபத்தி நிவ்ருத்தியைச்  சொன்னபடி –

இத்தால் -ஆத்ம சமர்ப்பணம் சொல்லிற்று ஆய்த்து -ராஜ பண்டாரத்து உள்ளறையிலே களவு கொண்டு உபகரிப்பாரைப் போலே இ றே –

இத்தால் -பழைய சௌர்யம் அழகியது  என்னும்படி இ றே ஆத்ம சமர்ப்பண பிரகாரம் இருக்கும் அடி –

ஆனால் சமர்ப்பணம் கூடும்படி என் என்னில் –
இருக்கிற சம்சாரத்தில் கொடுமையாலும்
பேற்றில் த்வரையாலும்
சமர்ப்பணம் பண்ணி அல்லது நில்லாது இ றே சைதன்ய ஸ்வ பாவம் –
ஆனால்  ஸ்வரூப விரோதமான சமர்ப்பணம் பண்ணினவன் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் பிராயச்சித்தம் பண்ண வேண்டாவோ என்னில்
வேண்டா -எங்கனே என்னில் –
அந்யதா பிரதிபத்தியான ஆத்ம அபஹாரம் பண்ணினவன் சர்வ பாபமும் பண்ணி தன்னையும் அழித்துக் கொண்டால் போலே யதாவத் பிரதிபத்தியான ஆத்ம சமர்ப்பணம் பண்ணினவனுக்கு சர்வ பிராயச் சித்தமும் கூடி சர்வ பிராயச் சித்தமும் பண்ணினானாகக் கடவன் –
அன்றியே
ஸ்வர்ணாபஹாரம் பண்ணினவன் அபஹரித்த தனத்தைக் கொடுக்கத் தான் யுண்டாகையாலே பிராயச் சித்தம் பண்ணலாம் –
இங்கு கொடுத்தது தன்னை யாகையாலே பிராயச் சித்தம் பண்ணுகைக்கு தான் இல்லாமையாலே –
சர்வ பிராயச் சித்தமும் ஸ்வரூப லாபமும் ஆத்ம சமர்ப்பணம் என்னும் இடமும் பிரமாணாந்தரங்களிலே கண்டு கொள்வது –
ஸ்வரூப லாபமே புருஷார்த்தம் ஆகையாலே இவ்விடத்திலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று ஆய்த்து-

ஆக –
பிரணவத்தால் ஆத்ம யாகம் சொல்லித் தலைக் கட்டிற்று-ஆத்ம யாகம் வந்தபடி என் என்னில் –
நிருபாதிக தேவதா பரமாத்மா
நிருபாதிகம் ஹவி -ஆத்மா
நிருபாதி கோ யாக -ஆத்ம சமர்ப்பணம்
நிருபாதி கபலம் -மோஷ -என்று  பிரமாணாந்தரங்கள் சொல்லுகையாலே –

ஆக –
பத த்ரயாத்மகமான பிரணவத்தால்-
அகார வாச்யமான பர ப்ரஹ்மத்துக்கு
மகார வாச்யமான ஜீவ ஸ்வரூபம்
அனந்யார்ஹ சேஷம்  என்றது ஆய்த்து-

இனி மந்திர சேஷமும் இப்பதத்திலே விவ்ருதம் –

ஸ்ரீ தனிப் பிரணவம் முற்றிற்று –

——————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: