ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ ஸ்ரீ யபதிப்படி —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————-

1-திருமந்திர பிரகரணம் –

உபோத்காதம்-

ஸ்ரீ யபதியாய் சர்வ ஸ்வாமியாய் இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய ஸ்வ ரூபத்தையும்
அவனுக்கு அநந்ய சேஷமான தந்தாமுடைய ஸ்வ ரூபத்தையும்
யதா வஸ்திதமாக பிரதிபத்தி பண்ணி –
நித்ய முக்தரைப் போலே ஸ்வ ரூப அநு ரூபமான பரிமாற்றத்திலே அந்வயித்து வாழப் பெறாதே
இவருடைய ஸ்வ ரூபத்தையும் விபரீதமாக பிரதிபத்தி பண்ணி
விபரீத வ்ருத்த பிரவ்ருத்தராய் -ஸ்வ ரூப விரோதியான ப்ராக்ருத போகத்திலே மண்டி
தாபத்ரய தப்தராய்ப் போருகிற பத்தாத்மாக்களில் ஆரேனும் ஒருவனுக்கு நிர்ஹேதுக பகவத் கடாஷம் அடியாக
அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜநகமான ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை சாய்ந்து
யதா ஜ்ஞான ஜநகமான சத்த்வம் தலை எடுத்து -சத்த்வ கார்யமான  வெளிச் சிறப்புப் பிறந்து
த்யாஜ்ய உபாதேய ஜ்ஞானத்திலே கௌதுகம் யுண்டாய் –
அதடியாக சதாசார்ய உபசத்தி பிறந்து -அவனுடைய பிரசாதத்தாலே
மூல மந்திர லாபம் யுண்டானால்-
த்யாஜ்ய உபாதேய விபாகத்தை பரி பூரணமாக அறிவிக்கக் கடவதான
பிரதம ரஹஸ்யம் -பிரதமத்திலே அநு சந்தேயமாய் இருக்கும் –

உபாய அனுஷ்டானத்துக்கும் உபேய ப்ரார்த்த நைக்கும் முன்பே -அவற்றுக்கு ஆஸ்ரயமாய்
ஜ்ஞாதவ்யமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பூரணமாக அறிவிக்கையாலே இத்தை பிரதம ரஹஸ்யம் என்று சொல்லுகிறது –

இது தான் -த்ரி வர்க்கத்துக்கும் -கைவல்ய கைங்கர்ய ரூபமான அபவர்க்கத்வயத்துக்கும் –
ஸ்வ ரூப யாதாம்ய ஜ்ஞானத்துக்கும் -தெளி விசும்பில் போலே -9-7-5- இங்கே இருந்து பரிபூர்ண பகவத் அனுபவம் பண்ணுகைக்கும் அமோக சாதனமாய்
வ்யாபக வ்யதிரிக்தங்களிலும் வ்யாப காந்தரங்களிலும் வ்யாவ்ருத்தமாய் -வேத வைதிக ருசி பரிக்ருஹீதமாய் இருக்கும் –

இதுக்கு  அந்தர்யாமியான நாராயணன் -ரிஷி
தேவீ-காயத்ரீ –சந்தஸ் ஸூ —
பரமாத்வான நாராயணன் -தேவதை
பிரணவம் –பீஜம்
ஆய -சக்தி -ஸூ க்ல வர்ணம்
மோஷத்திலே– வி நியோகம் –

இது தான் -எட்டுத் திரு அஷரமாய்-மூன்று பதமாய் -இருக்கும் –
இதில் முதல்   பதமான பிரணவம் -மூன்று பதமாய் இருக்கும்
முதல் பதமான அகாரம் பகவத் வாசகம்
இரண்டாம் பதமான உகாரம் அவதாரண வாசகம்
மூன்றாம் பதமான மகாரம் ஆத்ம வாசகம் –

அகாரார்த்தம் —

அகாரம் -அவ ரஷணே -என்கிற தாதுவிலே பதமாய் முடிகையாலே ரஷகனான எம்பெருமானைச் சொல்லுகிறது –
ரஷணம்  தனக்கு சங்கோசம் இல்லாமையாலே -சர்வ தேச -சர்வ கால -சர்வ அவஸ்தை களிலும்
சர்வாத்மாக்களுக்கு சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் ரஷணத்தைச் சொல்லுகிறது –

ஜ்ஞான ஆனந்தங்களிலும் காட்டில் ஈஸ்வர ஸ்வ ரூபத்துக்கு அந்தரங்க நிரூபகம் ஆகையாலும்
மேல்  சொல்லுகிற சேஷத்வத்துக்கு விஷயம் மிதுனம் ஆகையாலும்
இதில் சொல்லுகிற ரஷணத்துக்குப் பிராட்டி சந்நிதி வேண்டுகையாலும்
இதிலே லஷ்மீ சம்பந்தம் அநு சந்தேயம் –

லுப்த சதுர்த்த்யர்த்தம் –
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -தாத்ர்த்யத்தைச் சொல்லுகிறது –
விவரணம் சதுர்த்த் யந்தமாகையாலே இதுவும்  சதுர்த்த் யந்தமாகக் கடவது –
ப்ரஹ்மணே த்வா மஹச ஒமித்யாத்மாநம் யுஞ்ஜீத -தை நா -51-பரப் ப்ரஹ்மம் ஆகிய உன்னை
அடையும் பொருட்டு ஓம் என்ற மந்திரத்தை அநு சந்தித்து ஆத்ம சமர்ப்பணம் செய்யவும் -என்றபடி –

உகாரார்த்தம் –
அவதாரண வாசகமான உகாரம் -கீழ்ச் சொன்ன பகவச் சேஷத்வத்துக்கு விரோதியான அந்ய சேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஒரு வஸ்து அநேகர்க்கு சேஷமாக லோகத்திலே காண்கையாலே
லோக திருஷ்டாந்த பிரக்ரியையாலே சந்கிதமான அந்ய சேஷத்வத்தினுடைய  நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
தேவ போக்யமான அன்னத்துக்கு சவ ஸ்பர்சம் போலே ஈஸ்வர போக்யமான
ஆத்மவஸ்துவுக்கு தேவதாந்தா ஸ்பர்சம் -வானிடை வாழும் இத்யாதி — நாச்சியார் -1-5-

மகாரார்த்தம் –
த்ருதீய பதமான மகாரம் -மன ஜ்ஞாநே -என்கிற தாதுவிலே யாதல் –
மனு அவபோதநே -என்கிற தாதுவிலே யாதல் பதமாய் நிஷ்பன்னமாகையாலே ஜ்ஞாதாவாய் –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5-என்கிறபடியே -தேக இந்த்ரியங்களில் காட்டில் விலஷணமான ஆத்மாவைச் சொல்லுகிறது-

அன்றிக்கே
-ககாராதி பகாராந்தமான இருபத்து நாலு அஷரமும் இருபத்து நாலு தத்வத்துக்கு வாசகமாய்
இருபத்து அஞ்சாம் அஷரமான மகாரம் இருபத்து அஞ்சாம் தத்வமான ஆத்மாவுக்கு வாசகம் ஆகையாலே மகாரம் ஆத்ம வாசகம் என்னவுமாம் –

சர்வாத்மாக்களும் ஈஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷ பூதராகையாலே ஆத்ம சமஷ்டியைச் சொல்லுகிறது –
சேதன பிரகாரமான அசித் தத்வமும் பகவச் சேஷமாக இப்பதத்திலே அநு சந்தேயம் -உகாரத்திலே என்றும் சொல்லுவார்கள்-

பிரணவம் தன்னில் ஆத்ம ஸ்வ ரூபத்தைச் சொல்லி பின்பு பகவச் சேஷத்வத்தைச் சொல்லாதே
முற்பட பகவச் சேஷத்வத்தைச் சொல்லி -பின்பு ஆத்ம ஸ்வ ரூபத்தைச் சொல்லுகையாலே
ந சாத்மா நம் -ஸ்தோத்ர ரத்னம் -57-என்கிறபடியே  சேஷத்வம் யுண்டான போது ஆத்மா உபாதேயனாய் அல்லாத போது
அநு பாதேயன் என்னும் இடத்தை பிரகாசிப்பித்தது நிற்கிறது –

ஆக
பிரணவம்
பகவச் சேஷத்வத்தையும்-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியையும் –
சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து ஸ்வரூபத்தையும்
சொல்லிற்று-

நம-பதார்த்தம் -கீழ்ச் சொன்ன ஸ்வா பாவிகமான பகவச் சேஷத்வத்தை அநாதி காலம் அபி பூதமாம் படி பண்ணின விரோதியினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -நமஸ் ஸூ —
இது தான் -ந -என்றும் -ம- என்றும் இரண்டு பதமாய் இருக்கும் -ந-என்றது அன்று என்றபடி –ம-என்றது எனக்கு என்றபடி –
இரண்டும் கூட எனக்கு அன்று என்று -அநு ஷங்கத்தாலே அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
அஹங்காரம் கழி யுண்டவாறே அதடியாக வருகிற மமகாரமும் கழி யுண்ணும் –
அன்றிக்கே -இது தான் அத்யாஹாரத்தாலே மமகார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது என்னவுமாம் –
இப்படி அஹங்கார மமகார நிவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பகவச் சேஷத்வமும் அதினுடைய காஷ்டா பூமியான பாகவத சேஷத்வமும் இப்பதத்திலே அநு சந்தேயம் –
இதில் கீழில் அஹங்காரம் சேஷத்வ விரோதியான அஹங்காரம் அன்றிக்கே
ஈச்வரனே உபாயம் என்கிற பிரதிபத்திக்கு விரோதியான அஹங்காரமாய்-அது கழி யுண்டால் ஈச்வரனே உபாய உபேயம் என்கிற
பிரதிபத்தி பிறக்க கடவதாகையாலே -ஆர்த்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவத்தை சொல்லுகிறது என்ன வுமாம் –
அன்றிக்கே ஏவ முகதாஸ் த்ரய பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-த்ரௌபத்யா சஹிதாஸ்  சர்வே  -நமஸ் சக்ருர் ஜநார்த்தனம் -பார -ஆர -192-56- என்கிறபடியே
ஸ்தான பிரமாணத்தாலே நமஸ் சப்தம் சரண சப்த பர்யாயமாய் -சாப்தமாக ஈஸ்வரனுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறது என்ன வுமாம் –
மேல் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு விரோதியான அஹங்கார மமகார நிவ்ருத்தியும்
கைங்கர்ய ப்ரார்த்தநையும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
இது தான் அகார  நாராயண பதங்கள் போலே சதுர்த்யந்தம் அன்றிக்கே ஷஷ்ட்யந்தமாய் இருக்கையாலே
ஒரு பிரகாரத்தாலும் தன்னோடு தனக்கு அன்வயம் இல்லை என்கிறது –
அன்றிக்கே -இஸ் ஷஷ்டி  தனக்கு தாதர்த்தம் ஆக வுமாம் –

நாராயண -சப்தார்த்தம் –
சதுர்த் யந்தமான நாராயண பதம் -கீழ்ச் சொன்ன பகவத் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கும்-தத் ஏக உபாயத்வத்துக்கும்
-அநு குணமான கைங்கர்ய ப்ரார்த்த நத்தைச் சொல்லுகிறது –
அதில் பிரக்ருத்யம்சம் -கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிறது –
ப்ரத்யயம் கைங்கர்ய ப்ரார்த்தநையைச் சொல்லுகிறது-
இது தான் ஷஷ்டீ சமாசமாகவுமாம்  -பஹூவ்ரீஹி சமாசம் ஆக வுமாம் –
ஷஷ்டீ சமாசத்தில் நாரங்களுக்கு ஈஸ்வரன் அயநம் என்று அர்த்தம் –
பஹூவ்ரீஹி சமாசத்தில் நாரங்கள் தான் ஈஸ்வரனுக்கு அயநம் என்று அர்த்தம் –
நாரமாவது-நசியாத வஸ்துக்களினுடைய திரள் –
நர சப்தம் -நசியாத வஸ்துவைச்சொல்லுகிறது –
ர -என்றது ரிங்-ஷயே-என்கிற தாதுவிலே பதமாகையாலே -நர சப்தம் நசியாத வஸ்துக்களினுடைய திரளைச் சொல்லுகிறது
சமூஹ அர்த்தத்திலே அண் ப்ரத்யயம் ஆகையாலே நார சப்தம் நசியாத வஸ்துக்களினுடைய திரளைச் சொல்லுகிறது –
அதாகிறது –
ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும்
ஜ்ஞானசக்த்யாதி கல்யாண குணங்களும்
திவ்ய மங்கள விக்ரஹமும்
திவ்ய பூஷண-திவ்ய ஆயுத -திவ்ய மகிஷிகளும் –
சத்ர சாமராதி பரிச் சதங்களும்
நித்தியரும் முக்தரும் பரமபதமும்
பிரகிருதி புருஷ காலங்களும் —
அன்றிக்கே – நார சப்தம் -நித்யத்வத்தாலே யாதல் -நியந்த்ருத்வத்தாலே யாதல்
நைமித்திகத்வத்தாலே யாதல் –
நர சப்த வாச்யனான ஈஸ்வரன் பக்கலிலே நின்றும் பிறந்த வஸ்துக்களைச் சொல்லுகிறது என்ன வுமாம் –
அயநம் -என்றது -இருப்பிடம் என்றபடி -பிராப்யம் என்னவுமாம் -ப்ராபகம் என்ன வுமாம் –

வ்யக்த சதுர்த்த் யர்த்தம் –
இதில் சதுர்த்தி சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் கைங்கர்யத்தையும் அதினுடைய ப்ரார்த்தநத்தையும் சொல்லுகிறது –

அகாரத்திலும் நார சப்தத்திலும் -பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று
அகாரத்தில் ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநீ -என்றது -நார சப்தத்தில் ஈஸ்வரனுக்கு சேஷ பூதை என்றது –
அகாரத்திலும் அயன சப்தத்திலும் ஈச்வரனைச் சொல்லிற்று –
அகாரத்தில் ரஷகன் என்றது -அயன சப்தத்தில் தாரகன் என்றது
பத த்ரயத்தாலும் ஆத்மாவைச்  சொல்லிற்று –
பிரணவத்தில் அனந்யார்ஹ சேஷத்வத்தையும் -ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லிற்று
நமஸ் ஸில் ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியைச் சொல்லிற்று –
மேல் பதத்தில் -நித்யத்வ பஹூத் வங்களைச் சொல்லிற்று-

நிகமனம் –
ஆக -திருமந்தரம் –
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் யுண்டான சம்பந்தத்தையும்
சம்பந்த அனுரூபமான உபாய ஸ்வரூபத்தையும்
இரண்டுக்கும் அநுகுணமான உபேய ப்ரார்த்தநத்தையும் –
சொல்லித் தலைக் கட்டுகிறது –

அகாரத்தாலே-சர்வ ரஷகத்வம் சொல்லிற்று -அதிலே ஏறிக் கழிந்த சதுர்த்தியாலே -அவனுக்கு சேஷம் என்னும் இடம் சொல்லிற்று –
உகாரத்தாலே -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்றது –
மகாரத்தாலே இப்படி அனந்யார்ஹ சேஷமான வஸ்து ஜ்ஞான ஆஸ்ரயமான ஆத்மா வென்னும் இடம் சொல்லிற்று –
நமஸ் ஸாலே -சேஷத்வ விரோதியான அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் –
பகவத் சேஷத்வ பர்யந்தமான பாகவத சேஷத்வத்தையும்
ஈஸ்வரனுடைய உபாய பாவத்தையும் சொல்லிற்று
நார சப்தம் -வ்யாப்யங்களான சேதன அசேதனங்களை சொல்லிற்று
அயன சப்தம் -வியாபகமான பகவச் ஸ்வ ரூபத்தைச் சொல்லிற்று
சதுர்த்தி கைங்கர்ய ப்ரார்த்த நத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிறபாட்டு பிரணவ அர்த்தமாக அனுசந்தேயம் –
யானே -2-9-9-என்கிற பாட்டு நம பதார்த்தமாக அனுசந்தேயம்
எம்பிரான் எந்தை -பெரிய திரு -1-1-6-என்கிறபாட்டு நாராயண சப்தார்த்தமாக அனுசந்தேயம்
ஒழிவில் காலம் எல்லாம் -3-3-1- என்கிற பாட்டு சதுர்த்யர்த்தமாக அனுசந்தேயம்-

ஸ்வ ஸ்வ ரூபத்தை யதாவாக அனுசந்தியாமையாலே தாந்தி பிறக்கிறது இல்லை
புருஷார்த்தத்தை யதாவாக அனுசந்தியாமையாலே ருசி பிறக்கிறது இல்லை –
சாதனத்தை யதாவாக அனுசந்தியாமையாலே விஸ்வாசம் பிறக்கிறது இல்லை –
விரோதியை யதாவாக அனுசந்தியாமையாலே பயம் பிறக்கிறது இல்லை –

———————————————————————————————————–

2-சரம ஸ்லோக பிரகரணம் –

உபோத்காதம் –
சகல சாஸ்திர தாத்பர்ய  பூமியான திரு மந்த்ரத்தில் சொன்ன புருஷார்த்த ஸ்வ ரூபத்துக்கு அநு ரூபமான
சாதன விசேஷத்தை ஸபிரகாரமாக  பிரதிபாதிக்கிறது -சரம ஸ்லோகம் –
தேஹாத்மா அபிமானியான அர்ஜுனனைக்  குறித்து -அமலங்களாக விழிக்கும்-1-9-9-என்கிறபடியே
சகல பாப ஷபண நிபுணங்களான   திவ்ய கடாஷங்களாலும் –
அம்ருத நிஷ் யந்திகளான வசன விசேஷங்களாலும்
மோஷ ருசிக்கு விரோதியான சகல பிரதி பந்தகங்களையும் நசிப்பித்து
மோஷ ருசியை யுண்டாக்கி
மோஷ சாதனமான கர்ம ஜ்ஞான பக்திகளைப் பரக்க கிருஷ்ணன் அருளிச் செய்ய
அத்தைக் கேட்ட அர்ஜுனன் சர்ப்பாச்யகதமான ஜந்துவைப் போலே இருக்கிற தன்னுடைய துர்க்கதியையும்
விரோதி தன்னால் கழித்துக் கொள்ள ஒண்ணாதே இருக்கிற இருப்பையும்
விஹித உபாயம் துஸ்சகமாய் இருக்கிற இருப்பையும் அநு சந்தித்து
நாம் இவனை இழந்து போவோம் இத்தனை யாகாதே -என்று சோகிக்க
நான் முன்பு உபதேசித்த சாதனா விசேஷங்களை ஸ வாசனமாக விட்டு என்னையே நிரபேஷ சாதனமாகப் பற்று -நானே எல்லா  விரோதிகளையும் போக்குகிறேன் -நீ சோகியாதே கொள் -என்று அர்ஜுனனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –

1-கீழ்ச் சொன்ன உபாயாந்தரங்கள் சோக ஜனகங்கள் அல்லாமையாலும் –
2-அவற்றை விடச் சொன்னால் சாஸ்த்ரங்களுக்கும் இஸ் சாஸ்த்ரத்தில் முன்புத்தை வசனங்களுக்கும் வையர்த்தம் வருகையாலும்
3-பிரபத்தி ஸ்வ தந்திர சாதனம் அல்லாமையாலும்
4-எளிய வழி யுண்டாய் இருக்க அரிய வழியை வத்சல  தரமான சாஸ்திரம் உபதேசிக்கக் கூடாமையாலும்
கீழ்ச் சொன்ன உபாயத்தை ஒழிய உபாயாந்தரத்தை விதிக்கிறான் என்கிற பஷம் சேராது என்று சிலர் சொன்னார்கள் –

1-உபாய அனுஷ்டானத்துக்கு அயோக்யமாம்படி ஆத்ம ஸ்வ ரூபத்தை அத்யந்தம் பரதந்த்ரமாக உபதேசிக்க கேட்கையாலும்
உபாயாந்தரங்களுக்கும் நானே ப்ரவர்த்தகன் என்று அருளிச் செய்யக் கேட்கையாலும்
இந்த்ரிய பிராபல்யத்தை அநு சந்தித்து அஞ்சிகையாலும்
எல்லா அவஸ்தை களிலும் ப்ரபத்தியை ஒழிய உபாயம் இல்லை என்னும் இடம் நிழல் எழும்படி அருளிச் செய்யக் கேட்கையாலும்
உபாயாந்தரங்கள் அநேக தோஷங்களோடே கூடி இருக்கையாலும் விரோதி தன்னால் கழித்துக் கொள்ள ஒண்ணாமை யாலும்
ஜ்ஞானவானாய் இருக்கிற இவனுக்கு சோகம் பிறக்கை சம்பாவிதம் ஆகையாலே உபாயாந்தரங்கள் சோக ஜனகங்கள் அன்று என்கிறது அர்த்தம் அன்று –
2-சாஸ்த்ராந்தரங்கள்-தன்னிலே உபாயாந்தரங்களை விட்டு பிரபத்தியைப் பண்ணுவான் என்று சொல்லுகையாலும்
இது தான் பின்நாதிகாரி விஷயம் ஆகையாலும் சாஸ்த்ராந்த ரங்களுக்கும் பூர்வ வசனங்களுக்கும் வையர்த்தம் இல்லை –
3-அநந்ய சாத்யே-அஹம் அஸ்ம்ய அபராதாநாமாலயா -இத்யாதி பிரமாணங்கள் மோஷ சாதனமாகச் சொல்லுகையாலே
பிரபத்தி ஸ்வ தந்திர சாதனம் அன்று என்கிற இதுவும் அர்த்தம் அன்று –
4-இவ் வுபாயம் தான் துஸ் சகமாய் இருக்கையாலும் சாஸ்திரம் இவன் நின்ற நின்ற அளவுகளுக்கு ஈடாக வல்லது உபதேசியாமையாலும்
அரிய வழியை உபதேசிக்கக் கூடாது என்று அர்த்தம் அன்று –

அர்ஜுனன் பிரதமத்திலே சரணம் புகுருகையாலும் -பக்தி யோகம் கேட்ட அநந்தரம் கண்ணும் கண்ண நீருமாய்
கையில் வில்லோடு கூடச் சோர்ந்து விழுகையாலே-அவனை யுளனாக்க வேண்டுமாகையாலும்
த்ரௌபதி குழலை முடித்துத் தன ஸ்வ ரூபம் நிறம் பெற வேண்டுகையாலும்
பரம ரஹஸ்யத்தை மறையாமல் வெளியிட்டான் –

பிரதமத்திலே இத்தை உபதேசியாதே உபாயாந்தரத்திலே பரந்தது இவன் நெஞ்சை சோதிக்கைக்காக –
இதுக்கு அதிகாரி -கேட்பதற்கு முன்பு அஞ்சுமவனும் பின்பு அஞ்சாதவனும்
இதில் பூர்வார்த்தம் -அதிகாரி க்ருத்யத்தைச் சொல்லுகிறது –
உத்தரார்த்தம் ஈஸ்வர க்ருத்யர்த்தைச் சொல்லுகிறது –

1-சர்வ தர்ம -சப்தார்த்தம் –
சர்வ தரமான் –எல்லா தர்மங்களையும் -தர்மங்களாவது-
சாஸ்திர விஹிதமுமாய் -பல சாதனமுமாய் இருப்பது ஓன்று –
இங்கு மோஷ பல சாதனமான சர்மா ஜ்ஞான பக்திகளைச் சொல்லுகிறது –
சர்வ சப்தம் -அவற்றுக்கு போக்யதா பாத கங்களான தர்மங்களைச் சொல்லுகிறது –
சாதன த்யாகத்திலே போக்யதா பாதக தர்ம த்யாகம் அந்தர் பூதமாய் இருக்கச் செய்தே தனித்துச் சொல்லுகிறது -பிரபத்திக்கு அவை வேண்டா என்று தோற்றுகைக்காக-
அல்லாத போது ஸ்திரீ ஸூ த்ராதிகளுக்கு அதிகாரம் இல்லையாம் இ றே-
பஹூ வசனத்தாலே அவதார ரஹஸ்யம்   -புருஷோத்தம வித்யை-தேச வாஸம்-திரு நாம சங்கீர்த்தனம் -தொடக்கமான வற்றைச் சொல்லுகிறது –

2-பரித்யஜ்ய -சப்தார்த்தம் –
பரித்யஜ்ய -விட்டு -பரி சப்தம் -வாசநா ருசிகளோடே கூட விட வேணும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
அவை கிடக்குமாகில் மேல் சொல்லுகிற சாதன விசேஷத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியக் கடவது –
அநாதி காலம் அனுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்று லஜ்ஜா புரஸ்  ஸரமான த்யாகத்தைச் சொல்லுகிறது என்று ஆழ்வான் பணிக்கும் –
த்யஜித்தோம் என்கிற புத்தியும் த்யாகத்தோடு ஒக்கும் –
ல்யப்பு -உபாயாந்தர த்யாகம் மேல் பற்றப் புகுகிற உபாயத்துக்கு அங்கம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
பிரபத்தி யாவது -ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை -என்று அனந்தாழ்வான் வார்த்தை –

3–மாம் -பதார்த்தம் –
மாம் -என்னை -த்வயத்தில் பிரதம பதத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்கள் எல்லாம் இப்பதத்திலே அனுசந்தேயங்கள் –
அதாவது –
ஸ்ரீ யபதித்வமும்
வாத்சல்யாதி குண சதுஷ்ட்யமும்
திவ்ய மங்கள விக்ரஹமும் —
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்கையாலே -ஸ்ரீ யபதித்வம் அனுசந்தேயம் –
அதர்ம புத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனன் குற்றம் பாராதே அபேஷித அர்த்தங்களை தானே அருளிச் செய்கையாலே வாத்சல்யம் அனுசந்தேயம் –
தன்னுடைய பரத்வத்தை பல காலும் அருளிச் செய்த அளவன்றிக்கே அர்ஜுனன் பிரத்யஷிக்கும் படி பண்ணுகையாலே ஸ்வாமித்வம் அனுசந்தேயம் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி அவனோடு கலந்து பரிமாறுகையாலே சௌசீல்யம் அனுசந்தேயம் –
அப்ராக்ருதமான திரு மேனியைக் கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகையாலே சௌலப்யம் அனுசந்தேயம்
மாம்–என்று காட்டுகிறது சாரத்திய வேஷத்தோடு நிற்கிற நிலை யாகையாலே திவ்ய மங்கள விக்ரஹம் அனுசந்தேயம் –

4–ஏக -பதார்த்தம் –
ஏகம் -இவ்வுபாயத்தை சொல்லும் இடம் எல்லாம் அவதாரண பிரயோகம் உண்டாகையாலே ஸ்தான பிரமாணத்தாலே
உகாரம் போலே இதுவும் அவதாரண வாசகமாய் -வ்ரஜ -என்கிற பதத்தில் சொல்லப் புகுகிற ஸ்வீ காரத்தில் உபாய புத்தி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
உபாயாந்தர உபகார ஸ்ம்ருதியும் உபாய பரிக்ரஹமும் உபாயாந்தரத்தோடே ஒக்கும் –
ஏக சப்தம் -உபாய உபேயங்களினுடைய  ஐக்யத்தையும் உபாய பிரதான்யத்தையும் சொல்லுகிறது என்றும் சொல்லுவர்கள் –

5–சரண சப்தார்த்தம் –
சரணம் -உபாயமாக –உபாயம் ஆகிறது -அநிஷ்ட நிவாரகமும் இஷ்ட ப்ராபகமுமாய் இருக்குமது —

6-வ்ரஜ -சப்தார்த்தம் –
வ்ரஜ -புத்தி பண்ணு -இந்த புத்தி யாவது -த்யாஜ்ய கோடியிலும் அந்வயியாதே-
ப்ராபகாந்தர பரித்யாக பூர்வகமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் இருப்பதொரு அத்யவசா யாத்மாக ஜ்ஞான விசேஷம் –
இது தான் உபாயாந்தரங்கள் போலே அசக்ருத் கரணீயம் அன்று
கன்யகா ப்ரதாநாதிகள் போலே சக்ருத் கரணீயம் -அல்லாத போது முன்புத்தையது கார்யகரம் இன்றிக்கே ஒழியும்-

7-அஹம் -பதார்த்தம் –
அஹம் -சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டனான நான் –
மாம் -என்கிற விடத்தில் வாத்சல்யாதி குணங்களைச் சொல்லிற்று –
இதில் ஜ்ஞான சக்த்யாதி குணங்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதி குணங்கள் இல்லாத போது உபாய பரிக்ரஹம் இன்றிக்கே ஒழிவது  போலே
ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாத போது விரோதி நிவ்ருத்தி இன்றிக்கே ஒழியும் –
இங்குச் சொல்லுகிற சக்தியாவது -சேதனனுடைய அவிவாத ஜனனத்துக்கும் விரோதி நிவ்ருத்திக்கும் அடியான சாமர்த்தியம் –

8-த்வா பதார்த்தம் –
த்வா -உபாயாந்தரங்களை  விட்டு என்னையே உபாயமாகப் பற்றி இருக்கிற உன்னை –
கீழில் பதத்தில் ஜ்ஞான சக்திகளும் பிராப்தியும் நைர பேஷ்யமும் சொல்லிற்று –
இங்கு அஜ்ஞான அசக்திகளும் அப்ராப்தியும் ஆகிஞ்சன்யமும் சொல்லுகிறது –

9- சர்வ பாப சப்தார்த்தம் –
சர்வ பாபேப்ய -எல்லா பாபங்களில் நின்றும் -இங்கு பாபங்களாகச் சொல்லுகிறது -பகவல் லாப விரோதிகளை –
சார்ந்த விரு வல் வினைகளும் -1-5-10-என்று முமுஷூவுக்கு பாபத்தோ பாதி புண்யமும் த்யாஜ்யமாகச் சொல்லுகையாலே
புண்ய பாபங்கள் இரண்டையும் பாப சப்தத்தாலே சொல்லுகிறது –
பஹூ வசனத்தாலே -அவற்றினுடைய பன்மையைச் சொல்லுகிறது -அதாகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
சர்வ சப்தத்தாலே -கீழே த்யாஜ்யமாக விஹிதங்களாய்-போக்யதா புத்தியாலே அனுஷ்டேயமான
ஸ்வார்த்ததா பிரதிபத்தியையும் -உபாய புத்தியையும் -ஆவ்ருத்த பிரவ்ருத்தியையும் ப்ராரப்தத்தையும்
லோக சங்க்ரஹ அர்த்தமாக அனுஷ்டேயமான கர்மங்களில் ஸ்வா ர்த்ததா பிரதிபத்தியையும் -பகவத் பாகவத விஷயங்களிலே உபசார புத்த்யா பண்ணுகிற அபசாரங்களையும்
பரி என்கிற உப சர்க்கத்தாலும் ஏக சப்தத்தாலும் த்யாஜ்யமாகச் சொன்னவற்றினுடைய அநு வ்ருத்தியையும் –அவசிஷ்டமான உத்தராகத்தையும் சொல்லுகிறது –
இப்படி கொள்ளாத போது -மா ஸூ ச -என்கிற இது சேராது –
பாபங்களிலே சிறிது கிடப்பது அதிகாரி குறையாலே யாதல் ஈஸ்வரன் குறையாலே யாதல் இ றே-
த்யாக ஸ்வீ காரங்கள் பூர்ணம் ஆகையாலே அதிகாரி பக்கல் குறை இல்லை -ஜ்ஞான சக்திகள் பூர்ணம் ஆகையாலே ஈஸ்வரன் பக்கல் குறை இல்லை –

10–மோஷயிஷ்யாமியின் அர்த்தம் –
மோஷயிஷ்யாமி-முக்தனாம் படி பண்ணக் கடவேன் -சும்மெனாதே கை விட்டோடி -பெரியாழ்வார் -5-4-3- என்றும்
கானோ  –ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு -54-என்கிறபடியே -அநாதி கால ஆர்ஜிதமான கர்மங்கள் உன்னைக் கண்டு அஞ்சி
போன இடம் தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
விரோதி நிவ்ருத்தியும் அபிமத பிராப்தியும் இரண்டும் பலமாய் இருக்க ஒன்றைச் சொல்லுவான் என் என்னில்
ஒன்றைச் சொன்னால் மற்றையது தன்னடையே வருகையாலே சொல்லிற்று இல்லை –
மாமே வைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய இவ்வுபாயத்துக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –
ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தம் ஆகையாலே தனித்துச் சொல்ல வேண்டா வி றே —

11- மா ஸூச -சப்தார்த்தம் –
மா ஸூ ச -சோகியாதே கொள் -உபாயாந்தரங்களை விடுகையாலும் -என்னையே உபாயமாகப் பற்றுகையாலும்
விரோதியை நேராகப் போக்குகிறேன் என்கையாலும் உனக்கு சோகிக்க பிராப்தி இல்லை –
உனக்கு கர்த்தவ்யம் இல்லாமையாலே உன்னைப் பார்த்து சோகிக்க வேண்டா –
எனக்கு ஜ்ஞான சக்தி கருணாதிகளில் வைகல்யம் இல்லாமையாலே என்னைப் பார்த்து சோகிக்க வேண்டா –
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹம் ஆகையாலும் -அதில் கிடப்பது ஓன்று இல்லாமையாலும் -அத்தைப் பார்த்து சோகிக்க வேண்டா –
அநாதி  காலம் சோகியாது இருந்தால் போலே இருப்பது ஓன்று -இப்போது நீ சோகிக்கை யாவது –
நீ சோகித்தாய் ஆகில் உன் கார்யத்திலே நீ அதிகரித்தாயாவுதி -சேஷ பூதனுடைய பேறு சேஷியது-
பேறுடையவனது இழவு-இழவு உடையவனுக்கு சோகம் உள்ளது –
ஆனபின்பு நீ சோகிகக் கடவையோ -தனத்தை இழந்தால் தனவான் அன்றோ சோகிப்பான்-தனம் தான் சோகிக்குமோ-
சர்வ பிரகாரத்தாலும் நான் உன்னைக் கை விடேன் -அச்சம் கெட்டிரு-என்று
வாரேற்று இள முலையாய் வருந்தேல் உன் வளைத் திறமே-திரு விருத்தம் -69-என்கிறபடியே அர்ஜுனன் கண்ணீரைத்   துடைக்கிறான் –

வார்த்தை அறிபவர் -7-5-10–என்கிற பாட்டும்
அத்தனாகி -திருச் சந்தவிருத்தம் -115-என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அனுசந்தேயம் –

——————————————————————————————–

3–த்வ்யப்ரகரணம் –

உபோத்காதம்-
அபௌருஷேயமாய்-நித்ய -நிர்தோஷமாய்-இருந்துள்ள வேதத்திலும் வேதார்த்தத்தை உப ப்ரும்ஹிக்கக் கடவதான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவகீதமாக பிரசித்தமாய் -எம்பெருமானுடைய சர்வஸ்வம்மாய் -ஆழ்வார்களுடையவும் ஆச்சார்யர்களுடையவும் தனமாய்
பகவத் அனந்யார்ஹ சேஷபூதமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அத்யந்தம் அநுரூபமாய் இருந்துள்ள
சாதன விசேஷத்தையும்  சாத்ய விசேஷத்தையும் அடைவே வாக்யத்வயமும் பிரதிபாதிக்கிறது –

பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய  த்ரயத்தையும் தங்களுக்கு தனமாக நினைத்துப் போருவர்கள் –
அதில் பிரதம ரஹஸ்ய  மான திரு மந்த்ரம் ஸ்வரூபத்தைப் பிரதிபாதிக்கிறது –
சரம ஸ்லோஹம் பிராபக ஸ்வ ரூபத்தைப் பிரதிபாதிக்கிறது –
அவை இரண்டிலும் ருசி யுடையனான அதிகாரி அவற்றை விசதமாக அநு சந்திக்கிற படியைச் சொல்லுகிறது த்வயம் –
இம்மூன்றையும் தஞ்சமாக நினைத்துப் போரா நிற்கச் செய்தேயும் -சர்வாதிகாரம் ஆகையாலும் -ஆசார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும்
இத்தையே மிகவும் தஞ்சமாக நினைத்துப் போருவர்கள் –
புத்தி பூர்வகமான அபசாரகங்களுக்கும் கர்மாவசாநத்தில் அன்றிக்கே சரீராவசா நத்திலே மோஷம் ஆகையாலும் இதுவே தஞ்சம் –

ரகு ராஷச சம்வாதம் –வயாக்ரா வாநர சம்வாதம் -நஹூஷப்ருஹச்பதி சம்வாதம் -கபோதோபாகயாநம் –
மறவன் முசல் குட்டியை விட்டுப் போந்தேன்-என்ன அது கேட்டு பட்டர் அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ பாஷ்யகாரர் சரம சமயத்திலே -எப்போதும் த்வயத்தை அநு சந்திக்கை எனக்குப் பிரியம் -என்று அருளிச் செய்த வார்த்தையும்
பெரிய கோயில் நாராயணரைக் குறித்து சபத புரஸ் சரமாக -த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை -என்று அருளிச் செய்த வார்த்தையும் –
ஸசேல ஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபசன்னனான சிறியாத்தானுக்கு ஆஜ்ஞையிட்டு-த்வயம் ஒழியத் தஞ்சமில்லை -என்று எம்பார் அருளிச் செய்த வார்த்தையும் –
திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டர் ஆவீர் -என்று நஞ்சீயரைக் குறித்து அனந்தாழ்வான் பிரசாதித்த வார்த்தையும்
தொடக்கமான பூர்வாசார்ய வசனங்கள் ருசி விச்வாசங்களுக்கு உறுப்பாக இவ்விடத்திலே அநு சந்தேயங்கள் –

இது தான் பூர்வ வாக்யம் மூன்று பதமும் -உத்தர வாக்யம் மூன்று பதமும் ஆக ஆறு பதமாய் இருக்கும் –
அதில் முதல் பதம் -புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்ய யோகத்தையும்
ஆஸ்ரயணீயனான எம்பெருமானுடைய குண விக்ரஹங்களையும் சொல்லுகிறது –
இரண்டாம் பதம் -அத்திருவடிகள் உபாயம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
மூன்றாம் பதம் அத்திருவடிகளை உபாயமாக பரிக்ரஹிக்கும் படியைச் சொல்லுகிறது –
நாலாம் பதம் -உபாய பரிக்ரஹ பலமான கைங்கர்யத்துக்கு விஷயம் மிதுனம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
அஞ்சாம் பதம் அவ்வஸ்து சர்வ ஸ்வாமி என்னும் இடத்தையும் கைங்கர்ய ப்ரார்த்த நையையும் சொல்லுகிறது –
ஆறாம் பதம் -கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –

1-ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பிரதம பதத்தில் -ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் –
பிராட்டி சேதனனுக்கு ஆஸ்ரயணீயையாய் இருக்கும் இருப்பையும்
ஈஸ்வரனை எப்போதும் ஒக்க ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கும் இருப்பையும் சொல்லுகிறது –
ஸ்ரீ யதே -என்றது ஆஸ்ரயிக்கப் படா நின்றாள் -என்றபடி –
ஸ்ரயதே -என்றது -ஆஸ்ரயியா நின்றாள் -என்றபடி
புருஷகாரமாம் போதைக்கு இருவரோடும் சம்பந்தம் யுண்டாக வேணும் –
சேதனரோடு மாத்ருத்வ சம்பந்தம் யுண்டாய் இருக்கும் –
ஈச்வரனோடே மஹிஷீத்வ சம்பந்தம் யுண்டாயிருக்கும்-

ஸ்ருணோதி –ஸ்ராவயதி-என்கிற நிருக்தி விசேஷங்களாலே -ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பளிதமான அர்த்தத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோதி -என்றது கேளா நிற்கும் -என்றபடி
ஸ்ராவயதி -என்றது கேட்பியா நிற்கும் என்றபடி –
ஆஸ்ரயிக்க இழிந்த சேதனன் -தன அபராதத்தையும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் நினைத்து அஞ்சி
இரண்டுக்கும் பரிகாரமாக பிராட்டியுடைய காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்கு யுண்டான சம்பந்த விசேஷத்தையும் முன்னிட்டுக் கொண்டு
ஈஸ்வரன் பக்கல் புகல் அறுத்துக் கொண்ட எனக்கு அசரண்ய சரண்யையான தேவரீர்  திருவடிகளை ஒழிய புகல் இல்லை என்று
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேளா நிற்கும் –
சர்வஜ்ஞனான ஈஸ்வரனையும் கூட நிருத்தனாம்படி பன்னவற்றான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும் -தன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தாலும்
மற்றும் யுண்டான உசித உபாயங்களாலும் இவள் இவன் அபராதங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணி இவன் விண்ணப்பம் செய்யும்
கேட்கும்படி பண்ணா நிற்கும் –
சேதனனுக்கு இருவரோடு சம்பந்தம் யுண்டாய் இருக்கச் செய்தேயும் மாத்ருத்வ நிபந்தனமான வாத்சல்யாதி ரேகத்தாலும்
ஈச்வரனோபாதி காடின்ய மார்த்த்வங்கள் கலந்து இருக்ககை அன்றிக்கே -இவள் பக்கல் உள்ளது மார்த்தவமேயாய்
இத்தலையில் கண் குழிவு காண மாட்டாத படி இருக்கையாலும் –
தன பக்கலிலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ணின ராவணனுக்கும் அகப்பட ஹிதோபதேசம் பண்ணும்படி குற்றங்கள் திரு உள்ளத்திலே படாத படி இருக்கையாலும்
ராஷசிகள் அபராதத்தில் நின்றும் மீளாது இருக்கச் செய்தே அவர்கள் அஞ்சின அவஸ்தையிலே -பவேயம் சரணம் ஹி வ -என்று
அபாய பிரதானம் பண்ணும்படி இருக்கையாலும்
திருவடியோடே மன்றாடி அவர்களை ரஷித்து தலைக் கட்டுகையாலும் –
நில்லென்ன பெருமாள் தாமே பிராட்டி முன்னிலையாக பற்றுகையாலே இளைய பெருமாளைக் கூடக் கொண்டு போருகையாலும்
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் குடும்பத்வாரா பிராட்டிக்கு ஆனுகூல்யத்தைப் பண்ணி பெருமாளை சரணம் புகுருகையாலும்
காகம் அபராதத்தைப் பண்ணி வைத்து பிராட்டி சந்நிதியாலே தலை பெற்றுப் போகையாலும்
அத்தனை அபராதம் இன்றிக்கே  இருக்க இவள் சந்நிதி இல்லாமையாலே ராவணன் தலை யறுப் புண்ணக் காண்கையாலும் மற்றும் இவை தொடக்கமான
ஸ்வ பாவ விசேஷங்கள் எல்லா வற்றாலும் ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் போது பிராட்டி புருஷகார பூதை யாகக் கடவள் –

2-மதுப்பின் அர்த்தம் –
மதுப்பு -புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்ய யோகத்தைச் சொல்லுகிறது –
அகலகில்லேன் இறையும்-6-10-10-என்கிறபடியே -இவள் என்றும் ஒக்க ஈஸ்வரனைப் பிரியாது இருக்கையாலே
ஆஸ்ரயிக்க இழிந்த சேதனனுக்கு இவள் சந்நிதி இல்லை என்று பிற்காலிக்க வேண்டாதே ருசி பிறந்த போதே ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கும் –

3-நாராயண பதார்த்தம் –
நாராயண பதம் -சேர்க்கக் கடவ பிராட்டி தானே சிதகுரைத்தாலும் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் -4-9-2-என்று
அவளோடு மறுதலித்து நோக்கும் எம்பெருமானுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ சௌசீல்ய  சௌலப்யங்கள் ஆகிற குணங்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யம் ஆவது -வத்சத்தின் பக்கல் தேநு இருக்கும் இருப்பு -அதாகிறது -அதினுடைய தோஷத்தைப் போக்யமாகக் கொள்ளுகையும்
ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும் -எதிரிட்டவர்களை கொம்பிலும் குளம்பிலும் கொண்டு நோக்குகையும் இ றே-
அப்படியே ஈஸ்வரனும் இவனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு -பாலே போல் சீர் -பெரிய திரு -58-என்கிறபடியே
குணங்களாலே தரிப்பித்து -அபயம் சர்வ பூதேப்ய -என்கிறபடியே அனுகூல நிமித்தமாகவும் பிரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும் –
ஸ்வாமித்வம் ஆவது -இவன் விமுகனான தசையிலும் விடாதே நின்று சத்தையை நோக்கிக் கொண்டு போருகைக்கு ஹேதுவாய்
இருப்பதொரு பந்த விசேஷம் -அதாகிறது -உடையவனாய் இருக்கும் இருப்பு -அத்வேஷம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தமாக யுண்டான ஸ்வ பாவ விசேஷங்களை எல்லாம் உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம் அடியாக வி றே –
சௌசீல்யமாவது-உபய விபூதி யோகத்தாலும் பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தியாலும் நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்
இருக்கிற ஈஸ்வரனுடைய மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து -அவன் எவ்விடத்தான் யானார் –5-1-7-என்று பிற்காலியாமே
எல்லாரோடும் ஒக்க மேல் விழுந்து புரையறக் கலக்கையும்-அது தன் பேறாக இருக்கையும் -எதிர்த் தலையிலே அபேஷை இன்றிக்கே இருக்கக் கலக்கையும் –
சௌலப்யம் ஆவது -கண்ணுக்கு  விஷயம் இன்றிக்கே இருக்கிற தான் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாகை-
அதினுடைய பூர்த்தி உள்ளது அர்ச்சாவதாரத்திலே இ றே –
மாம் -என்று காட்டின சௌலப்யம் பரத்வம் என்னும்படி இ றே அர்ச்சாவதார சௌலப்யம் இருக்கும் படி –
அர்ஜுனன் ஒருவனுக்குமே யாய்த்து அந்த சௌலப்யம் –
நீ எனக்கு வேண்டா என்கிறவர்களையும் விட மாட்டாத சௌலப்யம் இ றே
அது காதா சித்தம் -இது எப்போதும் உண்டு –

4- சரண -சப்தார்த்தம்
சரனௌ-திருவடிகளை -ருசி ஜனகமுமாய் ப்ராப்யமுமாய் இருக்கிறாப் போலே ப்ராபகமுமாய் இருப்பது திரு மேனி இ றே –
திரு மேனியைச் சொல்லுகிறதாகில் திருவடிகளுக்கு வாசகமான சப்தத்தாலே சொல்லுவான் என்-என்னில்
மேல் பிரபத்தி பண்ணப் புகுகிற அதிகாரி அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடையவன் ஆகையாலே ஸ்வாமி சந்நிதியில் இவன்
பாசுரம் இப்படி அல்லாது இராமையாலே சொல்லுகிறது -திரு நாரணன் தாள் -4-1-1- என்றும்
திருவுடையடிகள் தம் நலம் கழல் -1-3-8-என்றும் -கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -5-8-11- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -5-10-11- என்றும் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10- என்று சொல்லுகிறபடியே திருவடிகள் இ றே உபாயமாய் இருப்பது –

5- சரண -சப்தார்த்தம் –
சரணம் -உபாயமாக -உபாயமாகிறது -அநிஷ்டத்தைப் போக்கி இஷ்டத்தைப் பண்ணித் தருமது –
அநிஷ்டம் ஆகிறது -அவித்யையும் -அவித்யா கார்யமான ராக த்வேஷங்களும் புண்ய பாப ரூபமான கர்மங்களும்
தேவாதி சதுர்வித சரீரங்களும் -ஆத்யாத்மிகாதி துக்க பரம்பரைகளும்
இஷ்டம் ஆகிறது -புண்ய பாப நிவ்ருத்தியும் -சரீர விச்லேஷமும் -அர்ச்சிராதி மார்க்க கமனமும் பரமபத பிராப்தியும் பரமாத்ம தர்சனமும் குணானுபவ கைங்கர்யங்களும்
அதில் பிரதானமாக இஷ்டமாய் இருப்பது கைங்கர்யம் -அதுக்கு உறுப்பாகையாலே இஷ்டங்களாய் இருக்கும் மற்றுள்ளவை-

6-ப்ரபத்யே -பதார்த்தம்
ப்ரபத்யே -பற்றுகிறேன் –பத கதௌ-என்கிற தாதுவுக்கு அர்த்தம் கதி -இங்கு கதியாக நினைக்கிறது புத்தி விசேஷத்தை –
இந்த புத்தி விசேஷம் ஆகிறது அனந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞான காரமாய் இதர உபாய வ்யாவ்ருத்தமாய் பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய்
சக்ருத அனுஷ்டேயமாய் வ்யபிசார விளம்ப விதுரமாய் -சர்வாதிகாரமாய் -நியம ஸூநயமாய்-அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-ஸூ சகமாய் –
யாச்ஞாகர்ப்பமாய் -த்ருடாத்யவசாய ரூபமாய் இருப்பதொரு ஜ்ஞான  விசேஷம் –
இந்த ஜ்ஞானத்தில் பிரயோஜனாம்சமாய் இருப்பது ஒரு விஸ்வாசம்-
உக்த்ய ஆபாச வசன ஆபாச பக்த்ய ஆபாசங்களாலும் ஈஸ்வர பரீஷை தொடக்கமான வற்றாலும்
இவ்வத்யாவசாய விசேஷம் குலையாது இருந்த போதாய்த்து பல சித்தி உள்ளது –
இங்குச் சொல்லுகிற பிரபத்தி கரண த்ரயத்தாலே யுண்டாகவுமாம்-ஏக கரணத்திலே யுண்டாக வுமாம் -பல சித்தியிலே குறை இல்லை –
இப்பதத்தில் வர்த்தமான நிர்தேசத்தாலே கால ஷேப ஹேதுவாகவும் போக ஹேதுவாகவும் ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும்
யாவச் சரீர பாதம் இந்த புத்தி விசேஷம் அனுவர்த்திக்கும் என்னுமிடம் ஸூ ஸிதம் ஆகிறது –
சக்ருதேவ -என்கையாலே பலத்துக்கு ஒரு கால் அமையும் –

உத்தர வாக்யம் –
உத்தர வாக்யம் -பிரபத்தி கார்யமாய் -ஸ்ரீ யபதி விஷயமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிற படியைச் சொல்லுகிறது –
கீழ்ச் சொன்ன சாதனம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே இவனுக்கு அபேஷிதமான பல விசேஷத்தை நியமிக்கிறது –

7-ஸ்ரீ மதே பதார்த்தம் –
இதில் பிரதம பதம் கைங்கர்ய பிரதி சம்பந்தி மிதுனம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –
சேஷத்வ பிரதி சம்பந்தி மிதுனமானால் கைங்கர்ய பிரதி சம்பந்தியும் மிதுனமாய் இருப்பது –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட -6-9-3-
ஒண்டொடியாள் திரு மகளும் நீயும் –4-9-10-
திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி -53–என்கிறபடியே -தனித்து இவர்களுக்கு ப்ராப்யத்வம் இல்லை
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு -பெரிய திரு -4-3-6-என்கிறபடியே
இச் சேர்த்தியிலே பற்றினால் இ றே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே உஜ்ஜீவித்து போகலாவது –
அல்லாத போது ராவண சூர்பணாதிகளைப் போலே விநாசமே பலமாய் இருக்கும் –
பூர்வ வாக்யத்தில் மதுப்பு ஆஸ்ரயிக்குமவர்களை ஈச்வரனோடே சேர்க்கைக்காக பிரியாது இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இந்த மதுப்பு இவன் பண்ணும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி
கைங்கர்யம் கொள்ளுகைக்காக  பிரியாது இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

8- நாராயண பதார்த்தம் –
இரண்டாம் பதம் -கைங்கர்யம் வர்த்தமாக அநுபாவ்யமாய் இருந்துள்ள குண விக்ரஹ விபூதி யோகத்தைச் சொல்லுகிறது –
கீழ் உபாய பரிக்ரஹத்துக்கு ஏகாந்தமாகச் சொன்ன குணங்களும் -இங்கே ப்ராப்யத்வேன அநு சந்தேயங்கள் –
கீழில் மற்றை குணங்களிலும் காட்டில் சௌலப்யம் பிரதானமாய் இருக்கும் -இங்கு ஸ்வாமித்வம் பிரதானமாய் இருக்கும் –

9- சதுர்த்தியின் அர்த்தம் –
இதில் சதுர்த்தி கைங்கர்ய ப்ரார்த்த நத்தைச் சொல்லுகிறது –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்கிறபடியே
இச் சேதனன் அபி நிவேசாதிசயத்தாலே
தேச கால அவஸ்தா பிரகார நியம விதுரமாக பிரார்த்திக்கக் கடவனாய் இருக்கையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும் சர்வ பிரகாரத்தாலும் பண்ணும் விருத்தி விசேஷத்தைச் சொல்லுகிறது –
சேஷத்வ ஜ்ஞான கார்யமான உபாய பரிக்ரஹத்துக்கு அநந்தரம் ப்ராப்தமாய் இருக்கையாலே இந்த சதுர்த்திக்கு தாதர்யம் அர்த்தமாக மாட்டாது –
உத்துங்க தத்வத்தைக் குறித்துப் பரதந்த்ரனான சேதனன் பண்ணுகிற விருத்தி விசேஷமாகையாலே
விஷய ஸ்வ பாவத்தாலும் ஆஸ்ரய ஸ்வ பாவத்தாலும் ப்ராத்தனையே அர்த்தமாகக் கடவது –

10- நமஸ்-சப்தார்த்தம் –
நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தை விஷயீ கரித்திருக்கையாலும் -நிரஸ்த சமஸ்த பிரதி பந்தகமான ஸ்வ ரூபத்தை
ஆஸ்ரயமாக யுடைத்தாயிருக்கையாலும் -அத்யர்த்த ப்ரியரூபமான கைங்கர்யத்தில் பார தந்த்ர்ய விரோதியான ஸ்வ பிரயோஜனத்வ
புத்தியை நிவர்த்திப்பிக்கிறது -நமஸ் ஸூ—
பகவத் திரு முக விகாஸ  ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி ஒழிய
இதிலே போக்த்ருத்வ பிரதிபத்தியும் –மதீயத்வ பிரதிபத்தியும் நடக்குமாகில் அபுருஷார்த்தமாய் இ றே இருப்பது –
ஸ்வரூப விரோதி என்றும் சாதன விரோதி என்றும் ப்ராப்த விரோதி என்றும் ப்ராப்ய விரோதி என்றும் சதுர் விதமாயிருக்கும் விரோதி –
அதில் திரு மந்த்ரத்தில் உகாரத்தாலும் நமஸ் ஸாலும் ஸ்வ ரூப விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
சரம ஸ்லோகத்தில் அர்த்த த்வயத்தாலும் சாதன விரோதி நிவ்ருத்தி யையும் ப்ராப்தி விரோதி  நிவ்ருத்தியையும் பிரதிபாதிக்கிறது –
ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது இந்த நமஸ் ஸூ -அதாவது
ஏறாளும் இறையோனிற்படியே-4-8- அவனுக்கு உறுப்பல்லாத ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கை-
போக விரோதியான சேஷத்வ அநு சந்தானமும் ஆத்ம சமப்பணம் போலே ஸ்வரூப விருத்தம் –

ஆக –
புருஷார்த்த ஸ்வரூபத்தையும் –
உபாய ஸ்வரூபத்தையும் –
உபாய பரிக்ரஹத்தையும்-
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் –
கைங்கர்யத்தையும் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்களினிடைய நிவ்ருத்தியையும் –
சொல்லித் தலைக் கட்டுகிறது –

பூர்வ வாக்யத்துக்கு அர்த்தமாக -அகலகில்லேன் இறையும்-6-10-10- என்கிற பாட்டை அநு சந்திப்பது –
உத்தர வாக்யத்துக்கு அர்த்தமாக -சிற்றஞ்சிறுகாலே -திருப்பாவை -29-என்கிற பாட்டை அநு சந்திப்பது —

ஸ்ரீ ஸ்ரீ ரியபதிப்படி -முற்றிற்று –

———————————————————————————————-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: