ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ யாத்ருச்சிகபடி —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

———————————————————————————————————–

திரு மந்திர பிரகரணம் —

யாத்ருச்சிக பகவத் கடாஷத்தாலே
பகவத் ஆபிமுக்யம் பிறந்து –
சதாசார்யா சமாஸ்ரயணம் பண்ணின முமுஷூவுக்கு ரஹஸ்ய த்ரயமும் அநு சந்தேயம் –
அதில் ஸ்வரூப சோதநார்த்தமாக ப்ரவ்ருத்தம் ஆகையாலே பிரதமத்திலே அநு சந்தேயமான திருமந்தரம் –
ஸ்வரூபத்தையும் –
ஸ்வரூபமான –
புருஷார்த்தத்தையும் பிரதிபாதிக்கிறது –

அப்பரம புருஷார்த்தத்துக்கு அநு ரூபமான சரம சாதனா ஸ்வீ காரத்தை விதிக்கிறது சரம ஸ்லோகம் –

விஹித உபாய பரிக்ரஹத்தையும் ஸ பிரகார புருஷார்த்த   பிரகாரத்தையும் பிரதிபாதிக்கிறது -த்வயம் –

அதில் திருமந்தரம் –
எட்டுத் திரு அஷரமாய்
மூன்று பதமாய் இருக்கும்-
அதில் முதல் பதமான பிரணவம் -மூன்று பதமாய் இருக்கும் –
அதில் பிரதம பதமான அகாரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
-சர்வ பிரகாரத்தாலும்  -சர்வாத்மாக்களையும் ரஷித்துக் கொண்டு போருகிற சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்கிறது –

இரண்டாம் பதமாய்  அவதாராணார்த்தமான உகாரம் -நேரே சிலர்க்கு சேஷம் அன்று என்கிறது –

மூன்றாம் பதமாய் -இருபத்தஞ்சாம்  அஷரமாய் -ஜ்ஞான வாசியாய் இருந்துள்ள மகாரம் –
கீழ்ச் சொன்ன அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் தேஹாதி விலஷணமான ஆத்மவஸ்து என்கிறது –

இரண்டாம் பதமான நமஸ் ஸூ- ந -என்றும் ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் –
ந -என்றது அன்று -என்றபடி –
ம் -என்றது -எனக்கு என்றபடி –
இரண்டும் கூடி எனக்கன்று என்றபடி –
எனக்கன்று என்கையாவது எனக்கு நான் கடவன் அல்லன் என்று இருக்கை-

மூன்றாம் பதமான -நாராயண பதம் –
சர்வே சேஷியான நாராயணனுக்கு நித்ய கைங்கர்யம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்கும் படியைச் சொல்லுகிறது –
நாராயணன் -என்றது நாரங்களுக்கு அயநம் -என்றபடி –
நாரங்கள் ஆவன -நசியாத வஸ்துக்களினுடைய திரள் –
அவையாவன -திவ்யாத்ம ஸ்வ ரூபத்தை ஒழிந்த சர்வ வஸ்துக்களும் –
அயநம் -என்றது-இவற்றுக்கு ஆஸ்ரயம் என்றபடி –
அங்கன் அன்றிக்கே –
இவை தன்னை ஆஸ்ரயமாக யுடையன் என்னவுமாம் –
இத்தால்
மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று ஆய்த்து-
இதில் சதுர்த்தி -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகார கைங்கர்யங்களையும் கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்திக்கும் படியைச் சொல்லுகிறது —

ஆக
சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுக்கு அனந்யார்ஹ சேஷ பூதனாய்-
எனக்கு உரியன் அன்றிக்கே இருந்துள்ள நான் –
சர்வ சேஷியான நாராயணனுக்கே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவேனாக வேணும் -என்று ப்ரார்த்ததாயிற்று –

—————————————————————————————————————-

சரம ஸ்லோக பிரகரணம் –

சர்வ தர்மான்
கர்ம ஜ்ஞான பக்திகளை ஸபிரகாரமாக உபதேசிக்கக் கேட்ட அர்ஜுனன்
அவற்றின் அருமையாலும் –
தன் ஸ்வரூபத்துக்குச் சேராமையாலும்-
சாத்ய லாப நிமித்தமாக சோகிக்க
நான் முன்பு உபதேசித்தவற்றை ஸவாஸநமாக  விட்டு –
என்னை ஒருவனையுமே உபாயமாகப் பரிக்ரஹி –
நான் உன்னுடைய சர்வ விரோதிகளையும் போக்குகிறேன்-
நீ சோகியாதே கொள்  -என்று
இவனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –

சர்வ தர்மான் -எல்லா தர்மங்களையும் -கீழ்ச் சொன்ன ஸபரிகரங்களான எல்லா உபாயங்களையும் –
பரித்யஜ்ய -ருசி வாசனைகளோடு விட்டு
மாம் -உன் கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு நிற்கிற என்னை –
ஏகம்-ஒருவனையுமே –
சரணம் -உபாயமாக
வ்ரஜ -அத்யவசி
அஹம் -சர்வ சக்தியான நான்
த்வா -என்னை ஒழிந்த உபாய உபேயங்களை விட்டு இருக்கிற உன்னை
சர்வ பாபேப்ய -என்னைக் கிட்டுகைக்கு விரோதியாய் இருந்துள்ளவை எல்லா வற்றிலும் நின்றும்
மோஷயிஷ்யாமி-விடுவிக்கக் கடவேன் –
மா ஸூ ஸ -நீ சோகியாதே கொள் –

ஆக
சாங்கமான சர்வ உபாயங்களையும் ஸவாஸநமாக  விட்டு –
வாத்சல்யாதி கல்யாண குண விசிஷ்டனான என்னை ஒருவனுமே –
நிரபேஷ சாதனமாக ஸ்வீகரி –
சர்வ சக்தித்வாதி கல்யாண குண விசிஷ்டனான நான் –
என்னையே உபாயமாகப் பற்றி இருக்கிற உன்னை –
சமஸ்த பிரதி பந்தகங்களில் நின்றும் முக்தனாக்குகிறேன் –
நீ சோகியாதே கொள் –
என்று அர்ஜுனனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –

———————————————————————————————————————-

த்வயப் பிரகரணம் –

த்வயம் –
உபாய பரிக்ரஹத்தையும் –
உபேய ப்ரார்த்த நத்தையும் –
பிரதிபாதிக்கிறது –
இரண்டு அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே -இரண்டு வாக்யம் ஆயிற்று –
இரண்டு வாக்யம் ஆகையாலே த்வயம் என்று திரு நாமம் ஆயிற்று –
இதில் பூர்வ வாக்யம் மூன்று பதமாய்
உத்தர வாக்யம் மூன்று பதமாய்
ஆக ஆறு பதமாய் இருக்கும் –

இதில் முதல் பதம் –
பெரிய பிராட்டியாருடைய புருஷகார பாவத்தையும்
ஈஸ்வரனுடைய வாத்சல்யாதி குண சதுஷ்ட்யத்தையும்
திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் சொல்லுகிறது –

இதில் –
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் –
பெரிய பிராட்டியாருடைய மாத்ருத்வ பிரயிக்தமான பந்த விசேஷத்தாலே-இவர்கள் குற்றம் பாராதே எல்லார்க்கும் ஒக்க ஆஸ்ரயணீயையாய் இருக்கும் இருப்பையும் –
பத்நீத்வம் ஆகிற பந்த விசேஷத்தாலே ஸ்வரூப சித்த்யர்த்தமாகவும்
சேதன ரஷணார்த்தமாகவும் ஈஸ்வரனை ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கும் இருப்பையும் சொல்லுகிறது –

மதுப்பாலே –
ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் உண்டான நித்ய சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

நாராயண -சப்தம் –
பிராட்டி தானே அபராதங்களை இட்டு அகற்றப் பார்த்தாலும்
என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்று நோக்கக் கடவனான
ஈஸ்வரனுடைய வாத்சல்ய ஸவாமித்வ சௌசீல்ய சௌலப்யங்களைச் சொல்லுகிறது –

சரண சப்தம் –
ஸ்வரூப குணங்களிலும் காட்டில் தானே கார்யம் செய்யக் கடவதான விக்ரஹ வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –

சரணம் –
உபாயமாக -உபாயம் ஆகிறது –
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட பிராப்தியையும் பண்ணித் தருமது –

ப்ரபத்யே –
பற்றுகிறேன் -பற்றுகை யாவது -மாநசாத்யவசாயம் –

ஸ்ரீ மதே –
பெரிய பிராட்டியாரோடு சம்ச்லிஷ்டனானவனுக்கு-
இத்தால் -கைங்கர்ய பிரதி சம்பந்தி மிதுனம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது —

நாராயணாய –
சர்வ சேஷியாய் இருந்துள்ள வனுக்கு -இத்தால் கைங்கர்யம் பண்ணுகைக்கு வகுத்த விஷயம் என்கிறது –
இதில் சதுர்த்தி -தேச கால அவஸ்தா பிரகார நியம விதுரமான நித்ய கைங்கர்ய ப்ரார்த்த  நத்தை பிரதிபாதிக்கிறது –

நமஸ் -சப்தம் –
கீழ்ச் சொன்ன கைங்கர்யத்தில் விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
கைங்கர்யத்துக்கு விரோதி யாகிறது -போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் –

ஆக –
ஸ்ரீ யபதியாய் –
சர்வ ஸூலபனான நாராயணன் திருவடிகளையே
அபிமத சித்திக்கும் -தத் விரோதி நிவ்ருத்திக்கும் உபாயமாக அத்யவசிக்கிறேன் –
ஸ்ரீ யபதியாய்-
சர்வ ஸ்வாமியான நாராயணனுக்கு
நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவேனாக வேணும் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்களும் நிவ்ருத்தமாக வேணும் என்று
ஸபிரகார சாதன ஸ்விகார பூர்வகமாக
ஸ்வ ரூப அநு ரூபமான நித்ய கைங்கர்ய ப்ரார்த்தநத்தை பிரதிபாதிக்கிறது –

ஸ்ரீ யாத்ருச்சிகப் படி முற்றிற்று –

————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: