ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-27/28/20/30/31/32/33/34–

இங்கனம் ச பத்நிகளைக் கூறி பணிவிடை செய்வோரைக் கூறுகிறார் —

தே சாத்யாஸ் ஸந்தி தேவா ஜனனி குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை
போகைர்வா நிர்விசேஷாஸ்  சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா
ஹே ஸ்ரீ ஸ்ரீ ரங்க பர்த்து ஸ்தவ ச பதபரீ சாரவ்ருத்யை சதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –27-

தே சாத்யாஸ் ஸந்தி தேவா -வேத வாக்யத்தை அப்படியே கையாண்டபடி -சாத்யா-எனபது நித்ய ஸூரிகளின் பெயர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -முமுஷுக்கள் இவர்கள் சாத்யர் என்பதால் இப் பெயராயிற்று –
ஜனனி குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை போகைர்வா –
ஜனனி -தாயே என்று விளித்து-
அபஹதபாப்மத்வம் முதலிய குணங்களில் சாம்யம் -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவத்தில் சாம்யம் –
கோலம் -சங்காழி ஏந்தி-தொண்டுக்கே கோலம் பூண்டு – -நடத்தை கன்மங்களுக்கு வசப்படாமை
ஸ்வரூபம் ஞானானந்த அமலத்வாதி ஆத்ம ஸ்வரூபம்-சேஷித்வம் சேஷத்வம் ஒன்றே வாசி அவனுக்கும் இவர்களுக்கும் –
போகம் -விபூதியுடன் கூடிய பரமாத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தல்-
சவயச -ஒத்த பருவம் சமானமான வயசு பஞ்ச விம்சதி வ்ருஷர்கள்-நிரஞ்சன பரமம் சாம்யம் -சத்ய சங்கல்பத்தால் பெற்றது –
எனக்கு தன்னைத் தானே தந்த கற்பகம் –

நிர்விசேஷாஸ்  சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா -கீழ் சொன்னவை முக்தர்களுக்கும் ஒக்கும்
இங்கு நித்யர்களுக்கே உண்டான சிறப்பு -என்றுமே குற்றம் அற்றவர்கள் அன்றோ
தூ மணி மாடம் நித்யர்கள் -துவளில் மா மணி மாடம் -தோஷம் இருந்து நீக்கப் பட்டது போலே முக்தர்கள் –
தோஷம் க்லேச கர்ம விபாகாசயங்கள் -ஹதாகில க்லேச மலை ஸ்வபாவாத -ஆளவந்தார் –
1-அவித்யா ஸ்மிதா ராகத்வேஷாபிநிவேசா க்லேசா -கிலேசம்
அஞ்ஞானம் –தேஹாத்ம அபிமானம் -யானே என் தனதே என்று இருந்தேன் -/
அது அடியாக அஹங்காரம் –ராகம் -த்வேஷம் –அபி நிவேசம் -கிலேசங்கள்
2-கர்மம் இவற்றுக்கு காரணமான புண்ய பாபங்கள்
3-விபாகம் -ஜாதி ஆயுள்–இவற்றால் வரும் விபாகங்கள்-
4-ஆசயம் -முன்னைய அனுபவத்தால் உண்டான மனத்தின் கணுள்ள சம்ஸ்காரம்-
ஸூபம் -அன்று -ஸ்ரீ கூரத் தாழ்வான்-ஆழ்வானை இழந்தோம் -என்ற கிலேசம் -வேண்டாம் –
நம்மையே நினைத்து இரும் என்றான் நம் பெருமாள்
பூர்ண -ஆயுசு கேட்டாராம் ஸ்ரீ பட்டருக்கு எம்பெருமானார் -பதில் அருளால் தீர்த்தம் பிரசாதித்து அனுப்பினாராம் -ஐதீகம்

ஹே ஸ்ரீ ஸ்ரீ ரங்க பர்த்து ஸ்தவ ச பதபரீ சாரவ்ருத்யை சதாபி -ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா —
இவை இறைவனுக்கும் இல்லாத கைங்கர்ய பரர்களுக்கே கைங்கர்ய மஹா ரசம் உள்ளது என்கிறது –
அனுபவ ஜநிதி ப்ரீதி காரித கைங்கர்யம் –
அன்பினால் உருகிச் சித்த வருத்தி கலங்கிச் செய்தல்லது நிற்க ஒண்ணாது நெஞ்சாரச் செய்யும் கைங்கர்யம் –
பலாத்க்ருத்ய –தூண்டப்பட்டு -இன்பம் பயக்கும் திருமாலுக்கு என்றே யாட்செய்ய –
அடிமை செய்வர் திருமாலுக்கே -என்பதால் ஸ்ரீ ரங்க நாதனுக்கும் உனக்கும் -என்கிறார்-
திருவடிகளில் கைங்கர்ய வ்ருத்தி-வாழ்ச்சி தாளிணைக் கீழ் அன்றோ-

உற்றார் போனட்புரிமை யுடலம் கோலம் உயிரினிலை செயல் போகம் பண்பொடு ஆண்டில்
சற்றேனும் மாறின்றிக் குற்றம் என்றும் சாராது சாத்திய தேவர்கள் என்னப்
பெற்றார்கள் உள்ளுருகிக் குழம்பி எண்ணம் பிரேமையினால் பெறுவித்த பணியின் புற்றோர்
குற்றேவற்கு ளரன்றோய் திருவே என்றும் குளிரரங்கக்  கோனொடுந்தன் குரை கழற்கே –27

அன்பு செய்வித்தது -பிரேமையினால் செய்வித்த பணி -ப்ரீதி காரித கைங்கர்யம்
குற்றேவற்கு என்றும் உளர் என்று அந்வயம்-

—————————————————————————-

பிராட்டி இன்றி இறைவனை நிரூபிக்க முடியாது -என்கிறார்-

ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் பகவத இதம் சந்தர வதநே
த்வதாச் லேஷாத் கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வமா சீர் மாதச் ஸ்ரீ கமிது ரிதமித் தந்தவ விபவ
ததந்தர் பாவாத் த்வாம் நப்ருத கபிதத்தே ஸ்ருதிரபி -28-

இன்னார் இனையார் என்னும் தன்மை உன்னை வைத்தே –
பேணிக் கருமாலைப் பொன்மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நாங்கள் திரு —
அவனது ஸ்வரூப நிரூபிகை இவளே -இன்னார் என்று காட்ட
நிரூபித்த ஸ்வரூப விசேஷணம்-இனையார் -என்று விவரிக்கும்
நிலாவும் மதியும் போலே -பிராட்டியைப் பிரிந்த தனி நிலை இல்லையே –

ப்ரபேவ திவசே சஸ்ய ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே
அஹன்தையா வி நாஹம் ஹி நிருபாக்க்யோ நசித்யதி
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய சாஹ மஸ்மி
அஹமர்த்தம்  விநாஹந்தா நிராதாரா நசித்யதி –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –
நானே அப் பரம் பொருளுக்கு அஹந்தையாய் உள்ளேன் என்கிறாளே –
ஒன்றுக்கு ஓன்று ஆதார ஆதேய பாவம் -அஹம் அவன் -அகந்தை இவள் -பிரித்து சொல்ல இடம் இல்லை
பிரபை பிரபவான் /ரத்னம் ஓளி / புஷபம் மணம் / போலே அன்றோ -விஷ்ணு பத்னீ –

ஸ்வரூபம் -இது -இதம் அம்சத்தைக் காட்டும்
ஸ்வா தந்த்ர்யம் -இத்தம் இனையது அம்சத்தைக் காட்டும்-மற்றவற்றுக்கும் உப லக்ஷணம்
ஸ்வா தந்த்ர்ய ரூபா சா விஷ்ணோ -அஹிர்புத்ன்ய சம்ஹிதா பிரமாணம் –

பகவத இதம் சந்தரவதநே -மதி முகம் வாய்ந்த தாயே –
த்வதாச் லேஷாத் கர்ஷாத் -ஆச்லேஷத்திற்கு உத்கர்ஷமாவது பிரிக்க முடியாத தத்வமாய் இருத்தல் –

பவதிகலு நிஷ்கர்ஷ ஸமயே-நிஷ்கர்ஷமாவது ஒன்றாயுள்ள திவ்ய தம்பதிகளின் தன்மையை அறுதி இட்டுப் பார்த்தல் –

த்வமா சீர் மாதச் ஸ்ரீ கமிது ரிதமித் தந்தவ விபவ ததந்தர் பாவாத் த்வாம் நப்ருத கபிதத்தே ஸ்ருதிரபி –
தர்மியைச் சொன்ன போதே தர்மமும் அதனுள் அடங்கும் அன்றோ–
த்வாம் அபி –ஸ்ருதிர் அபி -என்று கூட்டி –
நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ சசா வியாபிகா பதி சம்ச்லேஷாத்
ஏக தத்வமிவ ச்த்திதௌ-அஹிர்பித்ன்யா சம்ஹிதை இதையே காட்டும் –

ப்ருதக் நாபிதத்தே -சுருதி விஷ்ணு பத்னீ -அவனை இட்டே இவளைக் கூறும்
விசேஷணமாக இவள் இருத்தலால்  -அவனையும் லஷ்மி பதியே என்று கூறும் –

இந்த விறைமை யுரிமை எம்பிராற்கே யிறுக்கமா நீ தழுவும் ஏற்றத்தாலே
வந்தனவாம் இவை தம்மை மனத்தில் எண்ணி வரையறுக்கப் புகின் மலரின் மகளே தாயே
இந்துமுகி  யேந்தலுடை யிதுவாம் தன்மை இனையதாம் தன்மையவாம் ஏற்றமாவாய்
அந்த முறை யடங்குதலால் அவனுக்குள்ளே அருமறையும் உன்னை வேறாய் அறைந்ததில்லை–28–

——————————————————————————–

மங்களம் மங்களா நாஞ்ச-என்றபடி பகவானை மங்களம் எனபது பிராட்டி சம்பந்தத்தாலே –
பிராட்டிக்கு மங்கள ஸ்வரூபமாய் இருத்தலே இயல்பு -காரணத்தால் வந்தது அன்று -என்கிறார் –

தவஸ்பர்சா தீசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவேதம் நோபாதே உப நிபதிதம் ஸ்ரீரசி யத
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ
நசைவந் த்வா தேவம் ஸ்வ தத இதி கச்சித் கவயதே –29-

ஸ்ரீ சொல் மங்களம் என்னும் பொருள் –
மங்களம் கிமபியல் லோகே சதித்யுச்யதே தத் சர்வம் த்வததீ நமேவஹி
யதச்  ஸ்ரீ ரிதய பேதே நவா யத்வா ஸ்ரீ மதிதீ த்ருசேந வச்சா தேவி ப்ரதாமச் நுதே -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ ஸ்தவம்
உன்னுடைய அதீனத்தாலே-ஸ்ரீ -சம்பந்தத்தால் இந்த -ஸ்ரீ சப்தம் கொண்டே -ஸ்ரீ ரெங்கம் இத்யாதி போலே –
புஷ்பத்திற்கு சிறப்பு மணத்தாலே -திருஷ்டாந்தம் -மணத்துக்கோ சிறப்பு இயல்பு -வேறு ஒரு காரணத்தால் வந்தது   அல்ல –
பரிமளர்த்திமபி-ஆகப் பிரிந்து நிலை இல்லை -பிரபையையும் ப்ரபாவனையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே -முமுஷூப்படி-
ஜிகதிஷூ– சொல்ல ஆசைப்படுபவன் -நறு மணம் உடன் சேர்ந்தே புஷ்பம் சொல்லுவது போலே –
நாற்றத் துழாய் –ஐந்து ஆறு குளிக்கு இருக்கும் கோயில் சாந்து போலே -நறு மணம் உடன் கூடிய திருத் துழாய் என்பது போலே –
ஸ்ரீயஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வன் ஆகையால் தெய்வத்துக்கு அரசு —
ஆஸ்ரயிக்கும் அர்த்தம் -மங்களம் இவளுக்கு ஒரு காரணம் பற்றி இல்லை –
திரு முளை மருத் சங்கரணம் பிராட்டி சந்நிதியில் இருந்தே இன்றும் –
எழில் வேதம் -சுடர் மிகு சுருதி –மிதுனத்தை பற்றி பேசுவதால் –

மங்களப் பெயரீசற்கு வந்ததுன் தொடர்பா னிற்கோ
அங்கன் அன்று அஃது இயற்க்கை யல்லையோ திரு நீ அல்லி
நங்கையே சிறப்பு அலர்க்கு நறு மணத்தால் அதற்கும்
எங்கனம் சிறப்புக் கேது வியம்புவன் கவிஞன் மாதோ –29-

————————————————————————-

பிராட்டியினாலே மங்களம் ஆவது மாத்திரம் அன்று –
இறைமையே யவளது பூர்ண கடாஷத்தால் தான் ஏற்பட்டது என்றும்
அற்பமான கடாஷத்தைப் பெற்றவர் இந்த்ராதியர் ஆயினர் என்றும்
ஆதலில் இறைவனையும் இந்த்ராதியரையும் பற்றின வேதம் முடிவில் இலக்குமியையே கூறியது என்றும் அருளிச் செய்கிறார் –

அபாங்கா பூயாம்சோ யதுபதி பரம்ப்ரஹ்ம ததபூத்
அமீயாத்ரா த்வித்ராஸ் சச சத மகாதிஸ் தததராத்
அதச் ஸ்ரீ ராம் நாயஸ் ததுபய முசமஸ்த்வாம் ப்ரணி ஜகௌ
பிரசஸ்திஸ் சாராஜ்ஞோ  யதபிசபுரீ கோச கதநம் –30-

த்வித்ரா -இரண்டு மூன்று துளிகள்
கோச -பொக்கிஷத்தினுடையவும்-
புரீ கோசம் -நகர பொக்கிஷம் -பர ப்ரஹ்மம் இந்திரன் –ஆதாரம் -நகரமும் பர ப்ரஹ்மமும்

தைக்கின்றதாழி -திரு விருத்த பாசுர வியாக்யானத்தில் -இவள் கால் பட்ட மணல் பரதத்வம் ஆகாதோ -பட்டர் அருளிச் செய்வாராம் –
பூர்வர்கள் இவள் கால் மணலில் பட்டால் அதில் அவன் இருப்பானே என்பர் -பட்டர் மணல் அவனாகும் என்றாரே –
பதி ஸம்மானம் -தோள் மாலை சாத்தினார் பெருமாள் -பூர்வர் -தட்டு மாறி -காலில் விழுந்து நில் என்றார் பெருமாள் -பட்டர்
மலராள் மணம் நோக்கம் உண்டானே -திரு மங்கை ஆழ்வார்
ந ஜீவேயம் ஷணமபி வி நாதம் அஸி தேஷணாம்-பெருமாள் அருளிச் செய்தார் இறே
ஸ்ரத்தை யினாலேயே தேவன் ஆகிறான் -ஸ்ருதி-தது -அது ஆனது -என்கிறார் வஸ்து போலே –
திரு நின்ற பக்கம் திறவிது -திரு மழிசைப்பிரான் –

ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் சர்வே முனயச்ச தபோத நா
ஏதந்தே த்வத் பதச்சாயா மாஸ்ரித்ய கமலேஸ்வரி –
அரசனைப் போல் இலக்குமி -நகரினைப்  போல் பர ப்ரஹ்மம் -பொக்கிஷம் போல் இந்த்ராதி –
சர்வத்துக்கும் ஆதாரம் அவன் -அவன் இடம் இருந்து தோன்றியதால் இவர்கள் பொக்கிஷம் –
ஒரு அரசனுடைய நகரத்தையும் பொக்கிஷத்தையும் ஒருவன் வருணித்தால் அது அரசனையே சாரும்
அது போலே வேதம் அனைத்தும் பிராட்டியையையே சாரும் –ஆம்நாய -வேதம் –

கடைக் கண்ணால் திரு நீ மிக்குக் கண்டது பரப் பிரம்மம்
படைத்தன விந்திராதி பார்வைகள் இரண்டு மூன்றே
எடுத்திரு  பொருளுமோதி இயம்பிய துனையே வேதம்
படித்திடி  னகர் செல்வங்கள் பார்த்திவன் புகழ்வாகாதோ–30–

——————————————————————————————–

இறைவனது இறைமை பிராட்டி அடியாக ஏற்படுமாயின் இயல்பினில் அவனுக்கு ஏற்றம் இல்லை என்றாகாதோ
என்பாருக்கு திருஷ்டாந்தத்துடன் விடை யிறுக்கிறார் –

ஸ்வதஸ் ஸ்ரீ ஸ் தவம் விஷ்ணோஸ் ஸ்வமஸி தத  ஏவைஷ பகவான்
த்வதா யத்தர்த் தித்வேப் யபவ தபராதீன விபவ
ஸ்வயா தீப்தாயா ரத்னம் பவதபி மஹார்கம் நவிகுணம்
நகுண்ட ஸ்வா தந்த்ர்யம் பவதி சன சான்யா ஹித குணம் -31–

திருவே நீ இறைவனுக்கு இயல்பாகவே சொத்தாக இருக்கின்றாய் -அதனாலேயே இந்த அரங்கநாதன்
உன் அதீனமான ருத்தித்வேபி -சிறப்பை உடையவனாய் இருப்பினும்
அபராதீன -மற்று ஒருவரால் ஏற்படாத -விபவ -பெருமை உடையவனாக அபவத்-ஆயினான்
ரத்னம் தன்னதான ஒளியினாலே விலை மதிப்புள்ளதாக ஆனாலும் -விகுணம்- குணம் அற்றதாக ஆகவில்லை –
குண்ட ஸ்வா தந்த்ர்யம் -முக்கியத் தன்மை குன்றியனதாகவும் ஆவதில்லை –
அந்ய-மற்று ஒன்றால் ஆஹித -ஏற்பட்ட குணம் ச -சிறப்பை உடையதாகவும் நச பவதி -ஆவதும் இல்லை-

ஸ்வத்வ மாத்மநி சஞ்ஜாதாம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -ஸ்வாமி சொத்து சம்பந்தம் –
குணம் உள்ளாவான் என்பதால் பகவான் –
ரத்னம் ஒளியினால் விலை பெற்றால் அந்யாயத்தம் ஆகாது இறே -நம்பிள்ளை
ஸ்வத-பிராட்டிக்கு சேஷத்வம் இச்சையாலே வந்தது என்பாரும் உண்டு மகிஷி யாதலால்-

இயல்பினால் சொத்தாம் உன்னால் இறை சிறப்பு எய்தினாலும்
அயல் பொருளாலே யாகும் அதிசயம் உடையனாகான்
சுய வொளி துலக்கு மேனும் தூ மணி குண மற்றொன்றால்
உயர்ந்தது திரு முதன்மை ஒழிந்தது என்று உரைக்கப் போமோ -31-

ஒளி போலே விட்டுப் பிரியாதவள் -ஆதலின் பிராட்டி வேறு ஒரு பொருள் அல்லள் –

——————————————————————————————

இங்கனம் இலக்குமியின் ஸ்வரூபத்தை இதுகாறும் அனுசந்தித்து
இனி ஸ்வரூபத்தையும் திரு மேனியையும் பற்றின திருக் குணங்களைக் கூறுவாராய்ப்
பெருமாளுடையவும் பிராட்டியினுடையவும்   பொதுக் குணங்களை அனுசந்திக்கிறார்-

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா
ப்ரணதவரண ப்ரேம ஷேமங்க ரத்வ புரஸ்ஸரா
அபி பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரி தீந்திரே
தவ பகவதச் சைதே சாதாரணா குண ராசே –32-

பிரசகன-சக்தி என்ன –
பல -பலம் என்ன –
ஜ்யோதிர் -தேஜஸ் என்ன –
ஞானைச்வரீ விஜய ப்ரதா -அறிவு  ஐஸ்வர்யம் வீர்யம் பிரசித்தி என்ன
ப்ரணத வரண -வணங்கினோரை வரித்தல் என்ன
ப்ரேம -ப்ரீதி என்ன
ஷேமங்க ரத்வ -ஷேமத்தைச் செய்தல் என்ன
புரஸ்ஸரா -இவைகளை முன்னிட்டவைகளும்
திவ்ய தம்பதிகளின் பொதுவான ஆத்ம குணங்களை  அருளி திரு மேனிக் குணங்களை அனுசந்திக்கிறார் –

அபி -மேலும்
பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரி தீந்திரே -நறுமணமும் சௌந்தர்யமும் லாவண்யமும் பளபளப்பும் என்கிற இந்த –

தவ பகவதச் சைதே சாதாரணா குண ராசே –குணக் குவியல்களும் உனக்கும் பெருமாளுக்கும் பொதுவானவை-

ஞானாதி ஷட்குணமயீ-இவை மற்ற குணங்களுக்கு ஊற்றுவாய்
பிரசகனம் -பிரவர்த்திக்கும் சேதனருக்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திபிக்கும் தன்மை –
பலம் -தனது சங்கல்பத்தாலே அனைத்தையும் தாங்கும் சக்தி
ஜ்யோதிஸ் பிறரை அபிபவிக்கும் திறம்கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றம் –
ஞானம் யாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி கண்டு அறிய வற்றை இருக்கை
ஐஸ்வர்யம் தம் இஷ்டப்படி நியமிக்கும் திறம் –
விஜயம் -வீர்யம் -விசேஷ ஜெயம் -விஜயம் -ஆயாசம் இன்றி அதனை -வீர்யம் -சர்வத்தையும் அனாயாசமாக தரிக்கை
ப்ரதை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -விஜயப்ரதா -வெற்றியால் வந்த புகழ் என்றுமாம்
பிரணதவரணம்-யாத்ருச்சிக ஸூ கருத லேசத்தை பிறப்பித்து அடியார் என்று ஏற்றுக் கொள்ளுதல்
குணக் குவியல்கள் -ஒவ் ஒன்றே பல்கித் திரள் திரளாய்க் குவிந்து   இருக்குமே
இவை இறைவனிடம் ஸ்வா தீனமாகவும் இலக்குமியினுடம் பராதீனமாகவும் -அவனால் – ஏற்பட்டவைகள்-

மிகும் ஆற்றல் பலம் தேசு மெய்யுணர்தல் விசயம் சேர் புகழுடனே ஐஸ்வர்யம்
அகவையில் அன்புடைமை யண்டினாரை ஆதரித்து வயமாக்கல் காத்தலாதி
மகில்வேற்றும் உயிர்க் குணனும் உறுப்பில் மேவும் வனப்பு மணம் ஒளி யழகு என்று இன்ன
பகவானும் நீயுமே இப் பண்பினங்கள் பரமேசுவரி பொதுவாய்ப் படைத்துளீரே–32-

————————————————————————————

இன்னமும் யௌவனம் முதலிய குணங்கள் பொதுவானவையே எனக் கூறித்
தம்பதிகளுக்கு பரஸ்பரம் குணங்கள் போக்யங்களாய் இருத்தலையும் அருளிச் செய்கிறார்-

அன்யேபி யௌவன முகா யுவயோஸ் சமாநா
ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண
சம்ச்தீர்யா தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வ தந்தே –33-

விஜ்ரும்பண -பரப்புகிற
சம்ச்தீர்யா தர்ப்பண இவ -கண்ணாடியில் போலே பரவி
பரஸ்பரேண ப்ரசுரம் ஸ்வ தந்தே -ஒருவருக்கு ஒருவர் மிகவும் இனிக்கின்றன –

ஓன்று என்னலாம்படி அவ்வளவு ஒத்திருத்தல் பற்றி மற்றவர் குணங்களை தம் குணங்களே எனக் கருதிக் களிக்கின்றனர்
யௌவனம் முகா -முதலியவை என்றது ஆர்ஜவம் முதலிய ஆத்ம குணங்களும் -மென்மை முதலிய திரு மேனிக் குணங்களும்
ஸ்ரீ ரங்க மங்கள -என்று ஸ்ரீ ரங்க நாதனையே சொல்லிற்று என்றும் அவனைச் செழிப்புறச் செய்யும் கொடி போல்வாளே-என்றுமாம் –

இன்னமும் இருவர் தங்கள் இளமை முன்னிட்ட பண்பு
மன்னியே பொதுவாய் மாறி மாறி மற்றிவரிற்று ஒன்றி
நன்னிலைக் கண்ணாடி போல நனி திகழ்ந்து அளிக்கும் இன்பம்
மன்னு தென்னரங்கத் தோங்கு மங்களக் கொடி போல்வாளே–33

—————————————————-

இங்கனம் குணங்கள் பொதுவாய் இருப்பினும் விலஷணமான ரச அனுபவத்திற்காக
பெண்ணிற்கே உரிய குணங்களும் ஆணிற்கே உரிய குணங்களும் உடையீராய்த் தம்பதிகளாக
நீங்கள் பிரிந்து உள்ளீர் என்று வேறுபடுத்தும்  குணங்களை அனுசந்திக்கிறார் –

யுவத்வாதௌ துல்யேப் யபரவசதா சத்ருசமன
ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸூலபான்
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா
ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா -34-

விலஷண குண பேதங்கள் கலந்து அனுபவக்க சுவை மூட்டும் –
தாங்கள் அனுபவிக்க என்றும் -அடியார்கள் அனுபவிக்கவும் என்றுமாம்-

யுவத்வாதௌ துல்யேப் யபரவசதா சத்ருசமன –
கீழ்ச் சொன்ன யௌவன முகா -என்பதை வேறு சிறப்புக் குணங்களைக் கூற அனுவதித்த படி
அபரவசதா -பிறருக்கு வசப்படாமை -ஸ்வாதந்த்ர்யம் –

ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குனான் பும்ஸ்த்வ ஸூலபான் –
ஸ்திரத்வம் -என்ன இடைஞ்சல் வரினும் அடியாரைக் கை விடாமை
பிராட்டிக்கு ம்ரதிம-மென்மை-குணத்திற்கு எதிர்தட்டு
சத்ருசமனம் -தண்டதரத்வம் -மனக் கடிந்யம் வேண்டுமே
மர்ஷயாமி ஹதுர்பலா -பிராட்டிக்கு தண்டதரத்வ பராசக்தியே இல்லையே
ஆதி சப்தத்தால் சௌர்யாதிகளை கொள்வது –

த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய -ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா-

ஆத்ம குணங்களை பேசும் இடம் என்பதால் மன நெகிழ்வு -ம்ரதிம -மென்மை
ஷமாதீன் -ஆதி சப்தத்தால் வாத்சல்யாதிகள்
பிராட்டி சத்ருசமனம் செயதாவது இறைவன் செய்யும் பொழுது மறுக்காமல் இருப்பதே -தானாக செய்வதற்கு இல்லை –
அசந்தேசாத்து ராமஸ்ய தபசாச்சா நுபலா நாத் நத்வா குர்மி தசக்ரீவ -பச்ம பச்மார்ஹ தேஜஸா -என்றாள் இறே
பாரதந்த்ர்யம் கலசாத சத்ருசமனம் அவனிடம் -பாரதந்த்ர்யம் சத்ருசமனத்துக்கு இடைஞ்சல்
ஸ்வா தந்த்ர்யம் கலசாத கருணை இவளுக்கு -ஸ்வா தந்த்ர்யம் கருணைக்கு இடைஞ்சல் –
இலக்குமி இன்றி கருணை முதலிய குணங்கள் அவனிடம் வெளிப்படாதே –

பகர்ந்தன பொது  வென்றாலும் பகைதெறல் திரம் பிறர்க்காட்
புகுந்திடலின்மை இன்ன புருடர் பண்பிறையில் வைத்தும்
மகிழ்நருக்காதல் மென்மை பொறை  யருள் மகட்பண் புன்தன்
அகமுற வைத்தும் துய்க்க அடைந்துளீர் ஆன்ம பேதம் -34-

மகிழ்நருக்காதல்-கணவனுக்கு வசப்பட்டு இருத்தல் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: