ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னுலகம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்திருக்கும் இருப்பு —
————————————————————————————-
அவதாரிகை —
சர்வேஸ்வரன் ஜகத் ஸ்ருஷ்டி பண்ணி -வேத உபதேசத்தைப் பண்ணி யருளி -தத் த்வாரா
சேதனருடைய ருச்யநுகூலமாகப் புருஷார்த்தங்களையும் -தத் சாதனங்களையும் காட்டி -அவ் வழியாலே-
தானே சாத்யமும் சாதனமும் என்கிற சாஸ்திரத்தையும் உபதேசித்து விடுகை அன்றிக்கே
பர வியூஹ விபவ அர்ச்சாவதாரங்களினாலும் -அதி மாநுஷ சேஷ்டிதங்களாலும்
தானே ரஷகன் என்னும் இடத்தைக் காட்டி –
இத்தனையும் செய்த விடத்திலும்-
ஆஸூரிம் யோநிமாபந்நா மூடா ஜன்மநி ஜன்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் -ஸ்ரீ கீதை -16-20-என்று
ஆஸூர பிரக்ருதிகளாய்-இவ்வாத்மாக்கள் பிரகிருதி ப்ராக்ருதங்களையே புருஷார்த்தங்களாகவும்-
அவை சம்பாதிக்கும் இடத்திலும் தாங்களே சம்பாதித்துக் கொள்ளுவதாகவும் கோலி-
அவை பெற்ற போது ப்ரியப்பட்டும் -பெறாத போது வெறுத்தும்
இங்கனே அநு தாபப் படுகிற படியைக் கண்டு
க்ருபயா ப்ரயாச சவிஷ்டனாய்க் -அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் என்று தன் குணங்கள் தன்னை இருக்க
ஒட்டாமையாலே-நாம் செய்த குறை இறே சேதனர் நல் வழி வாராது ஒழிகிறது என்று பார்த்து
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்றும் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே
புண்யா நாமபி புண்யோ அசௌ மங்களா நாஞ்ச மங்களம்-பார -வன -88-27-என்று
இங்கனே தானே சாதனமும் சாத்யமும் என்கிற சாஸ்திரத்தைக் காட்டிக் கொடுப்போம் என்று பார்த்தருளி –
தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி -என்றும்
ததோ அகில ஜகத் பத்ம போதாயாச்யுதபாநுநா-தேவகி பூர்வ சந்த்யாயாமா விர்ப்பூதம்
மஹாத்மாநா -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -5-3-2–என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ மதுரையிலே திருவவதாரம் பண்ணி யருளி –
பூதநா சகட யமளார்ஜூ நாதிகள் ஆகிற பிரதிகூல வர்க்கம் மண் உண்ணும் படியாகவும் –
அக்ரூர மாலாகாராத்ய நுகூல ஜனங்கள் வாழும்படியாகவும்
இப்படி சர்வாத்மாக்களினுடைய பாஹ்யாப் யந்தர தமோ நிரசனம் பண்ணி வளர்ந்து அருளுகிற காலத்திலே
பாண்டவர்களுக்கும் துர்யோத நாதிகளுக்கும் பரஸ்பரம் பிறந்த வைரஸ்யத்தை யுத்த வ்யாஜத்தாலே
சமிப்பிப்பதாகப் பார்த்தருளி
யுத்தார்த்தமாக சர்வ லோகத்தையும் குரு ஷேத்ரத்திலே கூட்டி -அர்ஜூன சாரதியாய் நிற்க –
ஸே நயோ ருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத -ஸ்ரீ கீதை -1-21-என்று
உபய சேனையிலும் உள்ள தன் பந்து வர்க்கத்தைப் பார்த்து
இவர்களை ஹிம்சித்து நாம் ஜீவிக்கை யாவது என் என்று தளும்பின அர்ஜூனனுக்கு –
அவனுடைய தளும்பு நிமித்தமாக
பிரக்ருத்யாத்மா விவேகத்தையும் –
ஆத்மாவினுடைய நித்யத்வாதிகளையும் –
தத் பிராப்தியினுடைய போக்யதையும்
தத் பிராப்தி சாதனம் கர்ம ஜ்ஞானங்கள் என்னும் இடத்தையும் அருளிச் செய்ய –
அவனும் அவ்வளவிலே அசந்துஷ்டனாக –
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வத்தி -சாந்தோக்யம் -7-16-1-என்கிற ஸ்ருதி போலே –
தானே தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் –
தத் பிராப்தி வைலஷண்யத்தையும் –
தத் உபாயமான கர்ம ஜ்ஞான சாத்திய பக்தி யோக வைபவத்தையும் அருளிச் செய்ய –
கீழ் உக்தமான புருஷார்த்தத்தில் விளம்ப அசஹையான ருசியாலும்
தத் உபாயத்தினுடைய துஷ்கரதையாலும்
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலும் –
துஷ்கரமுமாய் -விளம்ப பல ப்ரதமுமாய் -ஸ்வரூப விருத்தமாய் -இருக்கிற உபாயத்தாலே எம்பெருமானைப் பெற
என்பது ஒன்றில்லை – இனி இழந்து போமித்தனை யாகாதே -என்று சோகித்த அர்ஜுனனைக் குறித்து
பரம காருணிகனான கீத உபநிஷதாசார்யன் வேதாந்த சித்தமாய் –
பரம ரஹஸ்யமுமாய் –
சர்வாதிகாரமுமாய் –
ஸூ சகமுமாய் –
அவிளம்ப்ய பலப்ரதமுமாய்
இருந்துள்ள பரம ரஹஸ்யமான சரம உபாயத்தை அர்ஜுன வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும்
அருளிச் செய்து அருளினது சரம ஸ்லோகம் ஆகிறது –
பிரதம ஸ்லோகம் என்று கீழ் ஓன்று யுண்டாய் அத்தைப் பற்றச் சரம ஸ்லோகம் என்கிறதோ என்னில் -அதன்று –
சரமார்த்தத்தைச் சொல்லுகையாலே சரமம் என்னில் –
சக்ருதேவ -இத்யாதி களிலும் சரம ஸ்லோகத்வ பிரசங்கம் யுண்டாம் –
இங்கு கர்மாத் யுபாயங்களைச் சொல்லி அநந்தரம் இத்தைச் சொல்லுகையாலே இதுக்கு அவ்வருகு ஒரு உபாயம் இல்லாதபடியான
உபாய விசேஷத்தைச் சொல்லுகையாலே இத்தைச் சரம ஸ்லோகம் என்று ஆசார்யர்கள் சொல்லுவர்கள் –
மாஸூச -என்று சோக நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே
சோக ஹேது உண்டாக வேணும் -அதாவது என் என்னில் -கீழே –
ஏவ முக்த்வார்ஜுன சங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம்
சோக சம்விக் நமா நச -ஸ்ரீ கீதை -1-47-என்றதற்கு
மாஸூஸ -என்கிறதாய் -ஏக வாக்யம் ஆகிறது அல்ல –
அசோச்யா நன்வ சோச ஸ்தவம் பிரஜ்ஞாவாதாம் ஸ் ஸ பாஷசே
கதா ஸூநக தாஸூம்ஸ்ஸ நாநு சோ சாந்தி பண்டிதா -ஸ்ரீ கீதை -2-11-என்று தொடங்கி-
ப்ரக்ருத்யாத்ம விவேகம் பண்ணுவித்து அருளின போதே அந்த தத்தவ விஷய சோகம் போயிற்று –
இனி கர்மாத் யுபாயங்களைப் பற்றி சோகிக்க-அந்த ஹித விஷய சோகத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு –
அதாகிறது –
புருஷார்த்த லாபத்தாலும் உபாய கௌரவாதிசயத்தாலும் நாம் அதிகாரிகளாய் இவ்வுபாயத்தை அனுஷ்டித்து
இப் புருஷார்த்தம் பெருகை என்பது ஓன்று இல்லை என்றும்
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத நமக்கு ஸ்வா தந்த்ர்ய கர்ப்பமான உபாயங்களை அனுஷ்டிக்க
ப்ராப்தி இல்லை என்றும் சோகிக்க-
உபாயாந்தர விதானம் பண்ணுகிறது என்றபடி –
ஆகையாலே ப்ரபத்திக்கு இவ்வளவு பிறந்து சோகித்தவன் அதிகாரி -என்கை-
இவ்வளவு பிறவாதவனுக்கு இவ்வர்த்தம் சொல்லுகையாகிறது பறிப்பான் கையிலே சிற்றரிவாள் கொடுக்குமோ பாதி –
என்று திருக் கோஷ்டியூர் நம்பி அருளிச் செய்வர் –
சர்வ தர்மான் -இத்யாதி –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசாதி சோதிதமான நித்ய நைமித்திக காம்ய ரூபமான தர்மங்களையும்
மோஷ உபயோகி தர்மங்களையும் ச வாசனமாக விட்டு -என்னையே சஹாயாந்தர நிரபேஷமான உபாயமாகப் பற்று –
நான் உன்னை சோக விஷயமான சர்வ ஆபத்தில் நின்றும் விடுவிப்பேன் –
நீ சோகியாதே கொள் -என்றபடி-
வேதங்கள் தர்மங்களைச் சொல்லா நிற்க விடச் சொல்லுகிற இது வேதங்கள் எல்லாத்தோடும் விருத்தம் –
ஆதலால் இதுக்கு வேறொரு படி அர்த்தம் கொள்ள வேணும் என்று பார்த்து –
விஹித தர்மங்களை விட்டவனுக்கு பிராயச் சித்தமாக சரணா கதியை விதிக்கிறது என்றார்கள் –
அது கூடாது -எங்கனே என்னில் —
சாஸ்திர விரோதம் இல்லாமையாலே -அதாவது
யாகம் பண்ணும் போது மற்றை ஸ்நாநஹோமாதி கர்மங்களை விலக்கினால் போலே
சரணா கதிக்கு அங்கமாக மற்றை தர்மங்களை விலக்குகைக்கு விரோதம் இல்லை –
இவ்விதி மோஷார்த்த மாதலால் ஸ்வர்க்கார்த்தமான விதிகளோடு விரோதம் இல்லை –
அவற்றை இங்கு விலக்காமையால் மோஷார்த்தமான கர்ம ஜ்ஞான பக்திகளோடே விரோதம் இல்லை –
அவையாதல் -இதுவாதல் -என்கையாலும்-அர்ஜுனன் முன்பு தர்மங்களை விட்டு நின்றான் ஒருவன் அல்லாமையாலும்
அவனை நோக்கி பிராயச் சித்த விதியாகவும் கூடாது –
வேறே சிலர் தர்ம சப்தத்தாலே பலத்தைச் சொல்லுகிறதாக்கி-தர்மத்தை அனுஷ்டியா –
பலத்தில் இச்சை விடவே -அது மோஷத்துக்கு சாதனமாம் -என்றார்கள் -அதுவும் கூடாது –
தர்ம சப்தம் பலத்தைக் காட்டாமையாலும் -சரணா கதியோடு அதுக்கு சங்கதி இல்லாமையாலும் –
சோகியாதே கொள் என்கிற இது கூடாமையாலும் -அதுவும் பொருள் அன்று –
வேறே சிலர் தர்மத்தில் அதிகாரம் இல்லாத ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு மோஷ உபாயமாக சரணா கதியை
விதிக்கிறது என்றார்கள் -அதுவும் கூடாது –
அவர்களுக்கு தர்ம பிராப்தி இல்லாமையாலே த்யாகம் விதிக்கக் கூடாமையாலும் –
அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்கையாலும் அதுவும் அர்த்தமன்று –
வேறே சிலர் தேவதாந்த்ரங்களைச் சொல்லுகிறதாக்கி -அவற்றை விட்டு எம்பெருமானையே ஆஸ்ரயிக்கை
மோஷ உபாயம் என்று ஐ காந்த்யம் விதிக்கிறது என்று சொன்னார்கள் -அதுவும் கூடாது –
தர்ம சப்தம் அப்படி பிரசித்தம் இல்லாமையாலும்
சரணா கதியாவது சமாஸ்ரயண மாத்ரம் அல்லாமையாலும் அதுவும் பொருள் அன்று –
வேறே சிலர் சரணா கதியோடு விரோதித்த தர்மங்களை விட்டு சரணா கதியைப் பண்ண அடுக்கும் என்று சொல்லுவர்கள் –
அப்படியாகில் சர்வ தர்மங்களையும் -என்னக் கூடாது -விரோதித்தவையை விடுகைக்கு ஒரு விதி வேண்டுவது இல்லை –
விரோதித்த தர்மம் என்கைக்கு ஒரு சப்தமும் இல்லை -ஆதலால் அதுவும் பொருள் அன்று –
இப்படி இவ்வாக்யத்தில் ஆகிலும் என்கிற சப்தம் இல்லாமையாலும் –
சோகியாதே கொள் என்கிற சப்தம் கூடாமையாலும் -இதுவும் பொருளாக மாட்டாது –
வேறே சிலர் ஜ்ஞானமே மோஷ சாதனமாவது -அதுக்கு விரோதி கர்மம் -ஆதலால் கர்மத்தை எல்லாம் விட்டு
ஆத்ம ஜ்ஞானத்தில் யத்னம் பண்ண அடுக்கும் என்று சொல்லுகிறது என்றார்கள் -அதுவும் கூடாது –
கர்மமும் மோஷ சாதனம் என்று பல சாஸ்திரங்களிலும் சொல்லுகையாலும் –
சரணம் வ்ரஜ -என்கிற சப்தம் ஆத்ம ஜ்ஞானத்தைக் காட்டாமையாலும்
மற்று இங்கு ஆத்ம ஜ்ஞானத்தை விதிக்கிற தொரு சப்தமும் காணாமையாலும்
ஆத்ம ஜ்ஞானத்தாலே மோஷம் பெருகிறவனை நோக்கி -நானுன்னை எல்லா பாபங்களினின்றும் முக்தன் ஆக்குகிறேன் –
என்று எம்பெருமான் தானே மோஷம் கொடுக்கிறானாகச் சொல் கூடாமையாலும் -அதுவும் பொருள் அன்று –
ஆகையால் இஸ் ஸ்லோகத்தால் தோற்றுகிற பொருள் ஒழிய மற்றச் சொல்லுகிற பொருள்கள் பொருள் அல்ல
என்னும் இடம் ப்ரஹ்ம புராணத்திலே தெளியச் சொல்லிற்று –
சரணம் த்வாம் பிரபன்னா யே த்யாந யோக விவர்ஜிதா -தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத் வைஷ்ணவம் பதம் -என்று –
சரணா கதி மோஷ சாதனம் என்னும் இடம் ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலும் சொல்லிற்று –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை —
தம் ஹ தேவமாத்மா புத்தி பிரசாதம் முமு ஷூ ர்வை சரணமஹம் ப்ரபத்யே –
யாவன் ஒருத்தன் பண்டு ப்ரஹ்மாவைப் படைத்தான் -யாவன் ஒருத்தன் அந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைக் கொடுத்தான் –
அந்த தேவனை என் புத்திக்குத் தேற்றத்தைப் பண்ணினவனை மோஷார்த்தியான நான் சரணம் புகுகிறேன் என்றவாறு –
தைத்ரீய உப நிஷத்திலே திரு நாராயணத்திலே இவ்வர்த்தம் சொல்லப் பட்டது –
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் தர்ம பிரஜன நமக் நயோ அக்னி ஹோத்ரம் யஜ்ஞோ மானசம் நியாச-என்று
ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டமாகச் சொல்லி மானச சப்தத்தாலே ஆத்ம ஜ்ஞான வைபவத்தைச் சொல்லி
எல்லாத்துக்கும் மேலாக நியாச சப்தத்தாலே சரணா கதியைச் சொல்லிற்று –
இவ்வர்த்தம் இதிஹாச புராணங்களிலே ஸூ ஸ்பஷ்டம் –
ஆகையாலே வேத விருத்தம் என்று சங்கிக்கைக்கு உபாயம் இல்லை –
இங்கே சிலர் இங்கனே சோத்யம் பண்ணினார்கள் – ஏதென்னில் –
தர்மங்களை எல்லாம் த்யஜித்து சரணா கதியைப் பண்ணவே மோஷம் பெறலாமாகில்
அநேக ஜன்மங்கள் கூடிப் பண்ண வேண்டி ஒருகால் செய்து முடிக்க ஒண்ணாத வருத்தங்களை யுடைத்தாய் இருந்துள்ள
மகா தபஸ்ஸூக்களாலும் வைராக்யத்தாலும் இந்த்ரிய ஜெயத்தாலும் யோகாப்யாசத்தாலும்
பிறந்த ஜ்ஞானத்தால் பெற வேண்டுவதாக சொல்லுகிற மோஷ சாஸ்திரம் வேண்டாது ஒழியும்-
அற வெளியதாக சாதிக்கலாம் அர்த்தத்தை வருந்தி சாதிப்பாரும் இல்லை -ஆதலால் மோஷ உபாயமாகச் சொல்லுகிறது
பஹ்வாயாச சாஸ்திர சந்நிதா னத்திலே அல்ப யத்னமாய் இருக்கிற சரணா கதி சாஸ்திரம் ஜீவியாது என்றார்கள்
இதுக்கு உத்தரம் –
லோகத்தில் அர்த்தார்ஜனத்துக்கு சாதனமாக அல்ப யத்னமான ரத்ன வாணி ஜ்யாதிகளும்-
மஹா யத்னமான க்ருஷ்யாதிகளும் உளவாகக் கண்டோம் –
மஹா யத்னங்களுக்கு அல்ப பலமாகவும் கண்டோம் -அல்ப யத்னங்களுக்கு மஹா பலமாகவும் கண்டோம் –
இவ்விடத்தில் தந்தாம் பூர்வ புருஷர்கள் செய்து வரும்படிக்கு தக்கபடியும்
தந்தாம் பாக்யத்துக்குத் தக்க ருசிகளாலும் அல்ப யத்னத்தாலே மஹா யத்ன பலம் பெறுவர்கள் சிலர் –
இப்படியே -வேதத்திலும் மஹா யத்னமான சத்ர யாகாதி களாலும் -தபஸ் சாந்த்ராயணாதி களாலும் –
பஸூ புத்ராதி களான அல்ப பலங்களைச் சிலர் கொள்ள –
சிலர் அவற்றினாலே யாதல் அத்யல்பயத்னமான கர்மாதிகளாலே மஹா பலமான மோஷத்தைப் பெறுவர்கள்-
அப்படியே தந்தாம் பாக்யத்துக்குத் தக்க ருசி பேதங்களாலே சிலருக்கு சரணா கதியே உபாயம் ஆகலாம் –
சிலர்க்கு யோகாப்யாசாதிகளே உபாயம் ஆகலாம் –
அந்த பிரகிருதி பேதங்களுக்குத் தக்க ருசி பேதங்கள் லோகத்திலே காண்பதும் செய்யா நின்றோம் –
சரணா கதி தானும் எல்லாரும் செய்யலாம் அத்தனை எளிதாமோ என்ன –
ஜன்மாந்தர சஞ்சித மஹா புண்யங்களை யுடையார் அல்லாதாருக்கு
இந்த ருசியும் மஹா விஸ்வாசமும் பிறக்க மாட்டாமையாலே எல்லார்க்கும் எளிதன்று –
சரணாகதி ஸ்வரூபம் -ஆநுகூல் யஸ்ய சங்கல்ப -ப்ராதிகூல் யஸ்ய வர்ஜனம் –ரஷிஷ்யதீதி விஸ்வாசோ-
கோப்த்ருத்வ வரணம் ததா -ஆத்ம நிஷேப கார்ப்பண்யே-ஷட்விதா சரணாகதி –
1-ஆநுகூல் யஸ்ய சங்கல்ப –
ஆநுகூல்யம் என்றது ப்ரியத்வம் -அதாவது —
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ ஸ மம ப்ரிய-என்கிறபடியே அநந்ய பிரயோஜனன் ஆகை –
2-ப்ராதிகூல் யஸ்ய வர்ஜனம் —
என்றது அதி ப்ரவ்ருத்தி வ்யவசாய நிவ்ருத்தி
3-ரஷிஷ்யதீதி விஸ்வாசோ-
என்றது -த்ரிவித சங்கா ரஹிதமான பகவத் குண வத்தாத்யவசாயம்
4-கோப்த்ருத்வ வரணம் –
ஆவது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்திக்கு அவ்யவஹித உபாயமாக ஸ்வீகரிக்கை –
5–ஆத்ம நிஷேபம் -என்றது
ரஷ்யத் வேன சமர்ப்பிக்கை-அதாகிறது ஆத்ம ஆத்மீயமானநகில பர சமர்ப்பணம் –
6-கார்ப்பண்யம்-ஆவது க்ருபா ஜனன க்ருபண வ்ருத்தி நிரதத்வம்-
ஏவம் விதமான சரணா கதி தன்னையே ஸ்ருதி ஆத்ம யாகமாக வர்ணித்தது –
தச்யைவம் விதுஷோ யஜ்ஞஸ் யாத்மா யஜமானஸ் ஸ்ரத்தா பத்னீ சரீரமித் மமுரோ வேதிர்லோமானி
பர்ஹிர் வேதஸ் ஸிகா ஹ்ருதயம் யூப
காம ஆஜ்யம் மந்யு பஸூஸ்த போக்நிஸ் சமயிதா தஷிணா வாக்கோதா பிராண உத்காதா
சஷூரத் வர்யுர் மநோ ப்ரஹ்மா ஸ்ரோத்ரமக் நீத்
யாவத் த்ரியதே ஸா தீஷா யதஸ்நாதி யத்பிபதி ததச்ய சோம பாநம் யாத்ரா மாதே ததுபசதோ
யத் சஞ்சரத்யு பாவி சத் யுத்திஷ்டதே ச ச ப்ரவர்க்யோ
யந்முகம் ததாஹவ நீயோ யதச்ய விஜ்ஞானம் தஜ்ஜூ ஹோதி யத்சாயம் ப்ராதர்த்தி தத் ஸ்மிதோ
யத் சாயம் ப்ரா தர்மத்யந்தி நஞ்ச நாதி சவநாதி
அஹோராத்ரே தே தார்ச பூர்ண மாசௌ யே அர்த்த மாசாஸ் ச மாசாஸ் ச தே சாதூர் மாச்யானி யா ருதவச்தே
ப ஸூ பந்தா யே சம்வத்சராஸ் ச பரிவத்சராஸ் ச தே
அஹர்கணாஸ் சர்வ வேத சாம் வா ஏதத் சத்ரம் யன்மரணம் ததவப்ருத ஏதத் வை ஜராமர்யமக் நிஹோத்ரம் சத்ரம் ய ஏவம்
வித்வானு தக யனே பிரமீயதே தேவா நாமேவ மஹிமா நங்க த்வாதி த்யச்ய சாயுஜ்யங்க ச்சத்யத
யோ தஷிணே பிரமீயதே பித்ருணாமேவ மஹிமா நங்கத்வா
சந்த்ரமாச சாயுஜ்யங்க ச்ச த்யெதௌ வை ஸூ ரா சந்த்ரமசோர்மஹி மானௌ ப்ராஹ்மணோ விதவா நபி ஜயதி
தஸ்மாத் ப்ரஹ்மணோ மஹிமா நமாப் நோதி தஸ்மாத் ப்ரஹ்மணோ மஹிமா நமித்யுபநிஷத் -என்று கொண்டு
ஸ்ருதி சரணாகதியை ஒரு யஜ்ஞமாக சங்கல்பித்து
இதுக்கு வேண்டும் உறுப்புகளும் யஜமாணனும் பத்னியும் முதலாக உள்ளவற்றை சரணாகதன் பக்கலிலே உளவாகக் காட்டுகிறது –
யே அஹோராத்ரே -என்றவிடமே -தொடங்கி-யன்மரணம் என்கிற இதுக்கு கீழ் எல்லாம் சரணாகதி தன்னையே
எல்லா யாகங்களுமாகச் சொல்லுகிறது –
யன்மரணந்தத வப்ருத -என்று சரணாகதி யாகிறது யாகத்துக்கு அவப்ருதமாக ஸ்மரணத்தைச் சொல்லுகிறது –
யா ஏவம் வித்வான் -என்கிற விடம் தொடங்கி இவன் போம் வழியே போனால் எம்பெருமானுடைய
பெருமை எல்லாத்தையும் அனுபவிக்கும் என்கிறது –
தச்யைவம் விதுஷோ யஜ்ஞச்ய -என்கிற இதுக்குக் கீழில் ஓரிடத்தில் ந்யாசம் என்கிற பேரால் சொன்ன சரணாகதியை
அறியும் வித்வானுடைய ஏற்றம் என்றபடி
ஆக சரணாகதி யாகிற யஜ்ஞத்துக்கு உறுப்புகள் இத்தனை என்றதாய்த்து –
ஏதம் ஹ வாவ ன் தபதி கிமஹம் சாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி -தை -ஆன -5-9-என்று
சரணாகதி ஜ்ஞானம் யுடைய புருஷனையே எந்தப் புண்யம் பண்ணாது ஒழிகிறோமோ
எப்பாபம் பண்ணுகிறோமோ -என்கிற புத்தி பிடியாது –
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்தா மா ஹூ -என்று தான பர்யந்தமான எல்லாத்
தபஸ்ஸூ க்களிலும் ந்யாசம் அதிரிக்தம் -என்றபடி –
ந்யாசமாவது ஸ்ரீ மானான நாராயணன் திருவடிகளிலே பண்ணப்பட்ட ஆத்மாத்மீய அகில பர சமர்ப்பணம் –
ஆகையாலே ஸ்ரீ மானான நாராயணனையே சர்வ யோக ஷேமாவஹனாக அனுசந்தித்து
நிர்பரத்வ அனுசந்தானம் சர்வதா பண்ண வேணும் –
ஸ்வ நிர்பரத்வ அனுசந்தான ப்ரீத்யுத்ததியாலே பண்ணப்பட்ட சன்மார்யாதாதி வர்த்தனம் உண்டாய்த்தாகிலும்
முன்பு பகவதி பண்ணின விச்வாசாதிசயத்தாலே திருட சித்தனாவான் என்று கொண்டு
ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான ரஹஸ்யம் –
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன நசா ஸூஸ்ரூஷவே வாச்யம் நாசமாம் யோ அப்யஸூயதி –ஸ்ரீ கீதை -18-67-என்று
இவ்வர்த்தம் சொன்னபடியே ரஷித்து அனுஷ்டித்து முடிக்கைக்கு ஈடான பாக்யம் இல்லாதார்க்கும்
குருவானவன் பக்கலிலே பக்தராய் இராதார்க்கும்
உனக்கு ஸூ ஸ் ரூஷை பண்ணாதார்க்கும் சொல்ல வேண்டா –
என் பக்கலிலே அசூயையை பண்ணு வார்க்கும் சொல்ல வேண்டா -என்கிறது
ய இதம் பரமம் குஹ்யம் மத பக்தேஷ்வபி தாஸ்யதி-பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய சம்சய -என்று
இப்பரம குஹ்யமான அர்த்தத்தை என் பக்தர் பக்கலிலே யாவனொருத்தன் சொல்லுகிறான் –
அவன் அதுவே காரணமாக தானும் என் பக்கலிலே
பரம பக்தியை யுடையனாய் ஒரு சம்சயம் இன்றியே என்னையே வந்தடையும் என்று இவ்வர்த்தம் சொல்லுகைக்கு
ஆகாத விஷயத்தையும் -யோக்யாபாத்ரத்திலே சொன்னால் யுண்டான நன்மையையும் சொல்லிற்று –
திருமந்திர முகத்தாலே ஸ்வரூப ஜ்ஞானத்தை யுடையராய் –
ஸ்வரூப அநுரூப புருஷார்த்தமான பகவத் கைங்கர்யத்திலே ருசி யுடையராய் –
விடப்பட்ட கர்ம ஜ்ஞான பக்தி யோகத்தையும் யுடையராய்
ஆநு கூல்யம் மாத்ரம் யுடையரான ஜந்துக்களைப் பார்த்து
பரம காருணிகனான சர்வேஸ்வரன் தானே
பாண்டு புத்ர வ்யாஜத்தாலே சதுர்த்த உபாயத்தை வெளியிட்டு அருளியது -சரம ஸ்லோகம் ஆகிறது
—————————————————————————————
பிரதிபத வியாக்யான ஆரம்பம் –
1-சர்வ தர்மான் -இத்யாதி –
இஸ் ஸ்லோகத்துக்கு க்ரியாபதம் – மாஸூச என்கிறதாகையாலே
சோக நிவ்ருத்தி சொல்லுகையிலே தாத்பர்யம் –
இந்த ஸ்லோகம் தான் பிரபத்தி விதாயக வாக்யமாகையாலே இந்த சோகமும் ப்ரபத்திக்கு உபயுக்தமாகிறது –
எங்கனே என்னில் –
இப்பிரபத்திக்கு அதிகாரமும் பலமும் சொல்ல வேண்டுகையாலே –
சோகம் அதிகாரம் என்றும் –
சோக நிவ்ருத்தி பலம் என்றும் சொல்லுகிறது –
இதில் பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யம் சொல்லுகிறது –
உத்தரார்த்தத்தாலே ஈஸ்வர க்ருத்யத்தையும்
அதிகாரி க்ருத்ய சேஷத்தையும் சொல்லுகிறது –
அதிகாரி க்ருத்யமாவது -இதர உபாய பூர்வகமான சித்த உபாய ஸ்வீகாரம் –
ஈஸ்வர க்ருத்யம் ஆவது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கை –
அதிகாரி க்ருத்ய சேஷமாவது-ஸ்வீக்ருத உபாயனான பின்பு யாவத் -பிராப்தி -அளவும்
நிஸ் சம்சயனுமாய் நிர்ப் பரனுமாய் அத ஏவ ஹ்ருஷ்ட மானசனாய் இருக்கை-
வ்ரஜ -என்கிற விதியோபாதி -மாஸூச -என்கிறதும் விதியாகையாலே
ஸ்வீகரியாதவனுக்கு உபாய சித்தி இல்லாதவோ பாதி ஸ்வீகரித்த பின்பும் நிர்ப்பரனாய் இராதவனுக்கும்
பல சித்தி இல்லை -என்கை-
இத்தைப் பற்ற விறே-
த்யாகம் மேலிட்டு நரகம் வஸ்தவ்ய பூமியாதல் -ஸ்வீகரித்த உபாயம் மேலிட்டுப் பரம பதம் என் சிறு முறியாதல்
ஆம்படி காண் என் அதிகாரம் இருப்பது – என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தது –
சித்த உபாய ஸ்வீகாரத்துக்கு இதர உபாய த்யாகம் அங்கமாகையாலே த்யாக விஷயமான
தர்மங்களைச் சொல்லுகிறது -சர்வ தர்மான் -என்கிற இத்தாலே –
தர்மமாவது -சோத நா லஷணா அர்த்தோ தர்ம -என்கிறபடியே
சாஸ்த்ரங்களிலே-நித்ய நைமித்திக காம்ய ரூபமாய் அனுஷ்டேய தயா விஹிதமானது –
அது தான் –
1-வர்ணாஸ்ரம விஹித தர்மம் என்றும் –
2-பிரவ்ருத்தி தர்மம் என்றும் –
3-நிவ்ருத்தி தர்மம் என்றும் –
4-சித்த தர்மம் என்றும் -நாலு வகைப்பட்டு இருக்கும் –
வர்ணாஸ்ரம விஹித தர்மமாவது –
க்ரியமாணம் ந கஸ்மை சித்யதர்த்தாய பிரகல்பதே -அக்ரியாவத நர்த்தாய தத்து கர்ம சமாசரேத்-
ஏஷா சா வைதிகீ நிஷ்டா ஹ்யுபாயாபாய மத்யமா -ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -17-90/ 91-
என்கிறபடியே பண்ணினால் பிரயோஜனம் இன்றிக்கே பண்ணாத போது அனர்த்தத்தின் பொருட்டாய் இருக்குமது –
ஸ்ருணுத்வம் பரமம் கர்ம த்விவிதம் ததி ஹோச்யதே -ஏகம் ப்ரவர்த்தகம் ப்ரோக்தம் நிவர்த்தகமத பரம் ப்ரவர்த்த கஞ்ச
ஸ்வர்க்காதி பல சாதனமுச்யதே -நிவர்த்த காக்யம் தே வர்ஷே -விஜ்ஞேயம் மோஷ சாதனம் -என்கிறபடியே
ப்ரவ்ருத்தி தர்மமாவது -ஸ்வர்க்காதி பல சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகள் –
நிவ்ருத்தி தர்மமாவது -மோஷ சாதனமான கர்ம யோகாதிகள் –
சித்த தர்மமாவது –
யே ச வேத விதோ விப்ராயே சாத் யாத்மவிதோ ஜனா – தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் –
என்கிறபடியே பரம தர்ம ஸ்வீகாரம் –
நியாச இதி ப்ரஹ்ம-என்றும் –
நியாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம் -என்றும்
ஸ்வீகாரத்தில் உபாயத்வ பிரசங்கம் இல்லாமையாலே ஸ்வீ காரத்தையும் ஸ்வீ கார்யனாகச் சொல்லக் கடவது –
இவ்விடத்தில் மோஷ உபாய பிரகரணம் ஆகையாலே
ஸ்வர்க்காதி பல சாதனமான ஜ்யோதிஷ்டோமம் அல்ல என்னும் இடம் சித்தம் -மேலே
சித்த தர்மம் ஸ்வீகார்யமாகச் சொல்லுகையாலே அதுவும் அன்று –
இனி இவ்விடத்தில் மோஷ உபாயமாய் வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யமாக உடைத்தாய் –
சாத்யமாய் இருந்துள்ள நிவ்ருத்தி தர்மங்களைச் சொல்லுகிறது –
இது தான் –
தர்மமும் –
பஹூ வசனமும் –
சர்வ சப்தமுமாய் த்ரிவிதமாய் இருக்கும் —
தர்ம சப்தத்தாலே மோஷத்துக்கு அவ்யவஹித சாதனத்தைச் சொல்லுகிறது -அதாகிறது –
பக்த்யா த்வ அந்யயா சகா அஹமேவம் விதோ அர்ஜுன -என்றும்
மத் பக்திம் லபதே பராம் -என்றும் சொல்லுகிற பர -பரம பக்தி –
பஹூ வசனத்தாலே அங்க சாதனங்களைச் சொல்லுகிறது -அதாகிறது –
ஜ்ஞானே பரி சமாப்யதே -என்றும்
கர்மணைவ ஹி சம்சித்தி மாச்திதா ஜனகாதய -என்றும் சொல்லுகிற கர்ம ஜ்ஞானங்களும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத -த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நிதி மாமேதி சோ அர்ஜுன -என்றும்
சொல்லுகிற அவதார ரஹஸ்ய ஜ்ஞானமும் –
ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் க்ருதக்ருத்யச்ச பாரத -என்று சொல்லுகிற புருஷோத்தம வித்தையும் –
தேசோ அயம் சர்வ காமதுக் -என்று சொல்லுகிற ஷேத்திர வாசமும் –
யாதி ப்ரஹ்ம சநாதனம் -என்று சொல்லுகிற திரு நாம சங்கீர்த் தனமும் –
இவை தன்னை பகவத் ப்ரபாவத்தாலே ஸ்வதந்திர உபாயம் என்றும் சொல்லுவார்கள் –
இவை தான் அங்க சாதனமாய் இருக்கச் செய்தே தர்ம சப்தத்தாலே சொல்லுகிறது –
இவை தானும் தனித்தனியே பல சாதனங்களாய் இருக்கையாலே சேதன பேதத்தோ பாதியும் போரும் இறே-
ருசி பேதத்தாலே உபாய பேதமும் -நெறி எல்லாம் எடுத்துரைத்த -4-8-6-என்னக் கடவது இறே-
சர்வ சப்தத்தாலே –
ஆஸ்ரமங்கள் பேதித்தாலும் பேதியாத சந்த்யா வந்தன பஞ்ச மகா யஜ்ஞம் உள்ளிட்ட தர்மங்களும் –
லோக சங்க்ரஹ தயா கர்த்தவ்யமான ஸ்ரேஷ்ட சமாசாரமும் –
பரார்த்தமாகப் புத்ராதிகளைக் குறித்து அனுஷ்டிக்கும் பும்ஸ்வ நாதி கர்மங்களையும் சொல்லுகிறது –
ஆக –
சர்வ சப்தத்தாலே
பிரத்யவாய பரிஹாரமுமாய் யோக்யதா பாதகங்களுமாய் இருந்துள்ள தர்ம விசேஷங்களைச் சொல்லுகிறது –
தர்ம த்யாகத்தைச் சொன்ன போதே யோக்யதா பாதகங்களுமாய் இருந்துள்ள தர்ம விசேஷங்களைச் சொல்லுகிறது –
சர்வ சப்தத்துக்கு –
சாகல்யம் பொருள் ஆனாலோ -என்னில் –
பஹூ வசனத்திலே உபாயங்களை அடையச் சொல்லுகையாலும்
சர்வ சப்தத்துக்கு வேறே விஷயம் யுண்டாகையாலும்-சாகல்யா வாசி அன்று -ஆனால்
சாத்யாபாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -என்று
யோக்யதாபாதக தர்மங்களை ஒழிய பல சாதனங்களுக்கு உதயம் இன்றியிலே இருக்கையாலே
தர்ம த்யாகத்தைச் சொன்ன போதே யோக்யதா பாதக தர்மம் தூரதோ நிரச்தம் அன்றோ –
இதனுடைய த்யாகம் இப்போது சொல்ல வேணுமோ என்னில் –
சந்த்யா ஹீ நோ அஸூசார் நித்யம நர்ஹஸ் சர்வ கர்ம ஸூ -என்று
சந்த்யாஹீநானான அஸூசிக்கு ஒரு கர்மத்திலும் அதிகாரம் இல்லை என்கையாலே
இவ் வுபாயத்துக்கு இப்படி இருப்பதொரு நிர்பந்தம் யுண்டோ -என்னில்
இவ் வுபாயத்துக்கு இப்படி இருப்பதொரு யோக்யதா சாபேஷதை இல்லாமையாலே விசேஷித்து உபாதானம் பண்ணுகிறது –
உபாயத்துக்கு உபயுக்தம் அன்றாகிலும் –
விஹிதத்வாச்சாஸ் ராமகர்மாபி -என்கிறபடியே விஹிதத்வே நானுஷ்டேய மானாலோ வென்னில் –
யஜ்ஞத்தில் தீஷித்தவனுக்கு விஹிதாம்சமும் த்யாஜ்யமான வோபாதி இங்கு –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே விஹிதாம்சமும் த்யாஜ்யம் –
இனி இவ் வுபாயத்துக்கு அதிகாரம்
அசக்தியும் –
அப்ராப்தியும்
விலம்ப அசஹத்வமும் –
இதம் சரணம் அஜ்ஞானம் இதமேவ விஜா நதாம்-இதம் திதீர்ஷதாம் பாரமிதமா நந்த்யமிச்சதாம்-என்றும் –
அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தர் பூ நா வா ஜகதி கதி மன்யாம விதுஷாம்
கதிர் கம்யஸ் சாலௌ ஹரிரிதி ஜுதந்தாஹ்வயமநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முனி -என்றும்
சொல்லுகிறபடி -இப்படி அன்றாகில் இதுவும் அதிக்ருதாதிகாரமாம் இறே-
ஆக இத்தால் த்யாஜ்ய ஸ்வரூபம் சொல்லிற்று –
த்யாஜ்யமான தர்மம் தான் —
இதம் குரு இதம் மாகார்ஷீ -என்று விதி நிஷேதாத்மகமாய் இருக்கும் –
விஹித அனுஷ்டானத்தோ பாதி நிஷித்த பரிகாரமும் த்யாஜ்யமான போது அடைத்த கதவைத் திறந்தால்
நிஹீன பதார்த்தங்கள் புகுமா போலே நிஷித்த ப்ரவ்ருத்தி யுண்டாகாதோ என்னில் –
ஸ்வீகார்யமான உபாயம் ஒன்றையும் சஹியாது–
சாஸ்திர சித்தமான தர்மம் த்யாஜ்யம் ஆவது ஸ்வீகார்யமான உபாயம் ஒன்றையும் பொறாமையாலே இறே –
பொறுப்பது நிவ்ருத்தியை இறே –
இதுவும் நிவ்ருத்த அந்தர்கதம் ஆகிலும் ப்ரவ்ருத்தி ரூபமாய் இருக்கையாலே
உபாயம் சகா யாந்தரசஹம் அல்லாமையாலும் -நிஷித்த அனுஷ்டானம் இவனுக்கு கர்த்தவ்யம் அன்று –
நிஷித்த அனுஷ்டானம் ஈஸ்வர ஹ்ருதயத்துக்கு நிக்ரஹம் ஆகையாலும் –
இவனுக்கு ஈஸ்வரனை அதிசயிப்பிக்கை ஸ்வரூபம் ஆகையாலும் இவனுக்கு அவை அனுஷ்டேயம் அன்று –
ப்ராப்யம் இவனுக்கு அவனுடைய ப்ரீதியேயாய் இருக்கையாலே
இவ்வாகாரத்தாலும் அவை அனுஷ்டேயம் அன்று –
ஆகையால் உபாயத்தைப் பார்த்தாலும் ஆகாது –
ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் ஆகாது –
புருஷார்த்தத்தைப் பார்த்தாலும் ஆகாது –
ஆனால் சர்வ பிரகாரத்தாலும் இவனுக்கு த்யாஜ்யமாய் இருக்குமாகில் நிஷித்த பரிஹாரத்தை
தர்ம சப்தத்தில் பிரசங்கிக்கிறதுக்கு பிரயோஜனம் என் என்னில் –
இவனுக்கு விஹிதமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே -அவீசமாய்ப் புகுந்தாலும் இவனுக்கு அவை பந்தகமாக மாட்டாது
என்னும் ஆகாரம் தோற்றுகைக்காகச் சொல்லுகிறது –
அதவா –
மோஷ உபாயத்வேன விதி நிஷேதாத்மகமான சகல தர்மத்தையும் சொல்லுகிறது என்றும் சொல்லுவார்கள் –
ஆகையால் நரகபதன ஹேதுவாய்-சகல ஜந்துக்களுக்கும் த்யாஜ்யமுமாய் புத்தி பூர்வகமுமாய்
இருந்துள்ள பகவத் அபசாராதிகளும் பிராமஹத்த்யாதிகளும் பரிஹரணீயம் என்றது ஆய்த்து
சரணாகதி ப்ரபாவத்தாலே அவை பந்தகம் இன்றியிலே ஒழிந்தாலும்-
சரணா கதனுக்கு இவை கர்த்தவ்யம் அன்று என்னும் இடம் சொல்லிற்று ஆய்த்து –
—————————————————————–
2-பரித்யஜ்ய –
த்யாக பிரகாரத்தைச் சொல்லுகிறது -இதுவும் –
த்யாகமும்-
ல்யப்பும் –
உப சர்க்கமுமாய் -மூன்று பிரகாரத்தோடே இருக்கும் –
இங்குச் சொல்லுகிற த்யாகம் ஸ்வரூபேண த்யாகத்தைச் சொல்லுகிறதோ –
உபாய புத்த்யா த்யாகத்தைச் சொல்லுகிறதோ –
பல த்யாகத்தைச் சொல்லுகிறதோ -என்னில் –
மா பலேஷூ கதாசன -என்று கீழ் பல த்யாகத்தைச் சொல்லுகையாலே கேவலம் அதுவும் ஆகமாட்டாது –
இனி உபாய புத்தித்யாகம் ஆதல் ஸ்வரூபத்யாகம் ஆதலாகக் கடவது –
உபாய புத்தி த்யாகம் என்ற போது நிஜ கர்மாதி பக்த்யந்தம் அவசியம் அனுஷ்டேயமாய் விடும் –
இப்படி அனுஷ்டேயமாம் பஷத்தில் பிரபத்தி ஸ்வ தந்திர உபாயமாக மாட்டாது –
ஆகையால் இவை ஸ்வரூபேண த்யாஜ்யமாகக் கடவது –
இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிறவை-சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாக
ஆன்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் இத்தனை –
இப்படி அனுஷ்டியாத போது பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாஸ ஹேதுவாகையாலே ஈஸ்வரனுக்கு அநபிமதராவர்-
ஆகையாலே யாதோரளவிலே லோக சங்க்ரஹம் பிறக்கும் –
யாதோரளவிலே சிஷ்ய புத்ரர்களுக்கு உஜ்ஜீவனம் யுண்டாம் -அவ்வளவும் அனுஷ்டேயம் என்றதாய்த்து –
ப்ரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்தி தர்மமானவோ பாதி –
நிவ்ருத்தி தர்மமும் ப்ராப்ய தர்மமாகக் கடவது –
இவ்விடத்திலே வர்ணாஸ்ர தர்மம் லோக சங்க்ரஹதயா அனுஷ்டேயமாய் இருக்கும் –
வைஷ்ணவ தர்மம் ப்ராப்யதையா அனுஷடேய தமமாய் இருக்கும் –
இவ்விடத்தில் அகரணே பிரத்யவாயமும் -எம்பெருமானுடைய அநபிமதத்வமும்-தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாகக் கடவது –
ஆகையாலே விஹிதத்வாச்சாஸ்ரம கர்மாபி -சஹாகாரித்வேன ஸ -என்கிற உபய பிரகாரத்தாலும் அனுஷ்டிக்கிறார்கள் அல்லர் –
பரி -சப்தத்தாலே –
த்யாகத்தின் மிகுதியைச் சொல்லுகிறது –
இப் பரி சப்தம் -பரி சாகல்யே-என்று சகலத்தையும் விடச் சொல்லுகிற தானாலோ-என்னில் –
அது சர்வ சப்தத்தில் உக்தமாகையாலே இவ்விடத்தில் வேறே அர்த்தமாக வேணும் —
அதாவது -சவாசந த்யாகத்தைச் சொல்லுகிறது –
சவாசநமாக விடுகை யாவது-
ஸூக்தி கையிலே ராஜதப்ரமம் போலே அனுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் ஆகாதே -என்று
கொண்டு லஜ்ஜா புரஸ் சரமாக விடுகை –
இப்படி விடுகைக்கு ஹேது –
ஸ்வரூபத்தின் யுடைய பகவத் பாரதந்த்ர்ய அனுசந்தானத்தாலே -ஸ்வ ரஷணத்திலே தனக்குப் பிறந்த அனந்வயம்-
ஸ்வரூபத்தில் தன்னோடும் பிறரோடும் ப்ராப்தி யுண்டாம் அன்று ஆய்த்து -தானும் பற்றும் ரஷகராகைக்கு ப்ராப்தி உள்ளது –
இனி ஸ்வ ரஷணத்தில் இழிகை யாவது-
தாய் முலைப் பாலுக்கு கூலி கேட்குமா போலே –
தன்னுடைய சேஷத்வத்தையும் அழித்து-
அவனுடைய சேஷித்வத்தையும் அழிக்கை-
உபாயங்களை விடுகை யாகிறது –
இவை நமக்கு உபாயம் அன்று என்கிற நைராச்யம் –
நைராச்யத்துக்கு ஹேது
அசக்தியும்
அப்ராப்தியும் –
த்யஜ்ய -என்கிற ல்யப்பாலே –
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்கிறபடியே உபாய ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகத்தினுடைய அங்கத்வம் சொல்லுகிறது –
யாகத்தில் இழியுமவனுக்கு தத் வ்யதிரிக்த சர்வ தர்ம த்யாகம் அங்கம் ஆகிறாப் போலே -இதுவும் ஆத்மயாகமாகையாலே
தத் வ்யதிரிக்த சர்வ தர்ம த்யாகம் அங்கமாகக் கடவது என்று முன்பே சொல்லிற்று –
இத்தால் சாஸ்திர வையர்த்தமும் பரிஹரிக்கப் பட்டது –
விட்டே பற்ற வேணுமாகில்-சர்வாதிகாரத்வ பங்கம் வாராதோ -என்னில் –
அசக்தனுமாய் அயோக்யனுமானவன் ஸ்வரூப ஜ்ஞான வைசத்யத்தாலே விட்டுப் பற்றக் கடவன் –
அல்லாதவர்களும் உக்த லஷணத்தாலே அசக்தராய் இருக்கும் அத்தனை போக்கி சர்வத்திலும் அசக்தராய் இருப்பார் ஒருத்தரும் இல்லையே –
அவர்களும் விக்ன விலம்பாதி பயமுடையராகில் யதாயோக்யம் விட்டுப் பற்றக் கடவர்கள் –
ஆகையாலே சர்வாதிகார பங்கம் வாராது
இப்படிக் கொள்ளாதே சர்வ உபாய ஸூந்யனுக்கு இது உபாயம் என்னும் பஷத்தில் –
சர்வ உபாய ஸூந்யராய் இருப்பார் ஒருத்தரும் இல்லை யாகையாலே அந்த பஷத்துக்கு இந்த தூஷணம் வரும் –
ஆகையாலே த்யாகம் அங்கம் என்கிற இது உபபன்னம் –
ஆக
இத்தால் த்யாக பிரகாரம் சொல்லிற்று –
இவ்விடத்திலே பிள்ளை யருளிச் செய்து போருவதொரு வார்த்தை யுண்டு -அதாவது –
பதர்க் கூட்டை விட்டுப் பர்வதத்தை அண்டை கொள்வாரைப் போலே பற்று -என்கிறான் -என்று –
அது எங்கனே என்னில் –
அவை சாத்யங்கள் ஆகையாலும் –
பலவாகையாலும் –
அசேதனங்கள் ஆகையாலும் -பதர்க் கூட்டு இறே –
இவன் ஸித்த ஸ்வரூபன் ஆகையாலும் –
ஒருவனாகையாலும் –
பரம சேதனன் ஆகையாலும் பர்வதம் –
—————————————————————————————-
3-அநந்தரம்
பற்றும் விஷயத்தையும் -பற்றும் பிரகாரத்தையும் சொல்லுகிறது -மாம் -என்று –
ஸ்வீகார்யமான உபாயத்தைச் சொல்லுகிறது –
உபாயமாவது –
இஷ்ட ப்ராப்த்ய அநிஷ்ட நிவ்ருத்தி சாதனமாய் இருக்கையாலே -இஷ்ட ப்ராப்த்ய அநிஷ்ட நிவ்ருத்த் யுப யோகியான –
பரத்வ சௌலப்யங்கள் -மாம் -என்கிற பதத்திலே விவஷிதம் -எங்கனே என்னில் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
மாம் -என்கிறவன் -ஸ்ரீ மானுமாய் -நாராயணனுமாய் இருக்கையாலே –
ஸ்ரீ யபதித்வ நாராயணத்வங்கள்-பரத்வ சௌலப்ய ஹேது வாகிறபடி எங்கனே என்னில் –
ஸ்ரீ -யாகிறாள்
சர்வருடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி சித்த்யர்த்தமாக ஆஸ்ரயணீயையாய் இருக்கையாலே –
இவளுக்குப் பதி என்கையாலே பரத்வம் சொல்லிற்று –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா –
திருவுடையடிகள் –1-3-8-
திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரான் -1-6-9-என்னக் கடவது இறே –
ஸ்ரீ யாகிறாள் ஜகன் மாதாவாய் இருக்கையாலே -இவளுக்குப் பதி என்கையாலே சௌலப்யம் சொல்லிற்று –
மாதவோ பக்த வத்சலா –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ -10-10-7- என்றும்
நாராயண சப்தத்துக்கு அர்த்தம் ஜகத் காரணத்வமும்-ஜகத் அந்தராத்மத்வமும் ஆகையாலே
ஜகத் காரணத்வ பிரயுக்தமான பரத்வமும் ஜகத் அந்தராத்மத்வ பிரயுக்தமான சௌலப்யமும் சொல்லப் பட்டது –
ஆக -மாம் என்று -ஸ்ரீ மானுமாய் நாராயணனுமாய் இருந்த என்னை -என்றபடி -இத்தால்
அனுஷ்டான வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தத்தையும் நாராயண சப்தத்தையும் ஸ்மரிப்பிக்கிறது-
இதுக்கு ஹேது வித்யனுஷ்டானங்கள் இரண்டும் ஏகார்த்தமாக வேண்டுகையாலே –
ஆக இத்தால் -ஸ்ரீ மன் நாராயணனே சரண்யன் என்றதாய்த்து –
நாராயண சப்தம் தானே அவனைப் பரி பூர்ணனாக காட்டச் செய்தே
ஸ்ரீ மச் சப்தத்தாலே விசேஷித்தது-
இவர்கள் அஞ்சாதே சென்று ஆஸ்ரயிக்க வல்லராகைக்கும் –
அவன் இவர்களைத் தன் பேறாக ரஷிக்கைக்கும் உறுப்பாகச் சொல்லுகிறது –
ஆனால் ஸ்ரீ மச் சப்தம் தானே அவனைப் பரி பூர்ணனாக காட்டச் செய்தே -நாராயண சப்தத்தாலே விசேஷிக்கிறது-
பிராட்டி கை விடிலும் நிலமங்கை கை விடிலும் கைவிடாத ஸ்வ பாவன் என்னும் இடமும்
அந்ய நிரபேஷமாக சரணாகத பரிபாலனம் பண்ண வல்லன் என்னும் இடமும் சொல்லுகிறது –
ஆகையால்
இவ் விசிஷ்ட வேஷத்தில் ஆஸ்ரயித்தால் ஆய்த்து பல சித்தி யுள்ளது –
பிரிவில் ஆஸ்ரயிக்கை யாவது தேவதாந்தர சமாஸ்ரயண துல்யமாம் –
அன்று -உன் முகம் காணில் முடிவேன் -என்கையாலே முகம் தோன்றாமல் நடத்தினேன் –
இன்று -உன் முகம் காணா விடில் முடிவேன் -என்கையாலே
முகம் தோற்ற நின்று நடத்தினேன் என்று தன் வ்யாபாராதிகளைக் காட்டுகிறான் –
அதாகிறது –
என் கையில் மடல் உன் கையிலே வரும்படியாகவும் –
என் தலையில் முடி உன் தலையிலே வரும்படியாகவும் வேணும் என்று ஆசைப்பட்டு
உன் கால் என் தலையிலே படும்படி-தாழ நின்றேன் -என்று தன் சௌலப்யத்தைக் காட்டுகிறான் -மாம் -என்று –
நீ சப்தாதி விஷயங்களிலே மண்டித் திரிகையாலே உன்னுடம்பில் புகரைப் பாராய்
உன்னை விநியோகம் கொள்ளப் பெறாமையாலே உடம்பு வெளுத்து இருக்கிற என்னைப் பாராய் –
என்று தன் வ்யாமோஹ குணத்தை சட்டையை அவிழித்து விட்டுக் காட்டுகிறான் -என்றதாய்த்து –
இவ்விடத்தில் சரண்ய சரண்யதைக்கு உபயுக்தமாகப் பத்து குணங்கள் அனுசந்தேயங்கள்
மாம் -என்கிற வஸ்து சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்ததே யாகிலும் –
உபாசிக்கும் இடத்து வித்யைகள் தோறும் சில குண விசேஷங்களுள் உபாஸ்யமாக குண யோகத்தில் நிஷ்கரிஷித்தால் போலே
பிரபத்தி வித்துக்களான நம்மாச்சார்யர்கள் சரண்யத்துக்கு உப யுக்தமாக பத்து குணங்களை அனுசந்தித்துப் போருவர்கள் –
அவையாவன –
1-சர்வஜ்ஞத்வ
2-சர்வசக்தித்வ –
3-பரம காருணிகத்வ –
4-பரம உதாரத்வ –
5-ஆஸ்ரீத வத்சல்த்வ –
6-அசரண்ய சரண்யத்வ –
7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வ –
8-சர்வ ஸ்வாமித்வ-
9-ஸ்ரீ யபதித்வ –
10-நாராயண த்வங்கள்-
இத்தால் –
1-சர்வஜ்ஞத்வ -உன்னிலும் உன் கார்யம் அறிய வேணுமாய்
2-சர்வசக்தித்வ -உன்னிலும் உன் கார்யம் செய்ய ஷமனுமாய்
3-பரம காருணிகத்வ -உன்னிலும் உன் கார்யத்துக்கு உகப்பேனுமாய்-
4-பரம உதாரத்வ -உன் கார்யம் செய்யும் இடத்தில் என் காரியமாகச் செய்வேனுமாய் –
5-ஆஸ்ரீத வத்சல்த்வ -உன் குற்றம் காணாது இருப்பேனுமாய்-உன் குற்றம் போக்யமாய் இருப்பேனுமாய் –
6-அசரண்ய சரண்யத்வ -உனக்குப் பற்று இல்லாத போதும் பற்றாய் இருப்பேனுமாய் –
7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யத்வ -உன் பேறு என் பேறாய் இருப்பேனுமாய் –
8-சர்வ ஸ்வாமித்வ-உன்னிலும் உன் கார்யம் செய்கைக்கு ப்ராப்தனுமாய் –
9-ஸ்ரீ யபதித்வ -உனக்கும் எனக்கும் தாரகையாய் இருந்துள்ள சர்வேஸ்வரிக்காக உன் கார்யம் செய்வேனுமாய்
10-நாராயண த்வங்கள்-நீரிலே நெருப்பு எழுந்தால் போலே இவளே குற்றம் காட்டிலும் விட ஒண்ணாத
பந்தத்தை யுடையேனுமாய் இருக்கிற என்னை -என்றபடி –
அதவா –
மாம்- என்கிற விடத்திலே ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான சில குணங்களையும் –
அஹம் -என்கிற விடத்தில் பல பிரதானத்துக்கு ஏகாந்தமான சில குணங்களையும்
அனுசந்தித்துப் போருவாரும் யுண்டு –
ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான குணங்கள் ஆவன –
வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும் -சௌலப்யமும் –
1-வாத்சல்யம் ஆவது -அத்ய ஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவுக்கு யுண்டான காமம் -அதாவது –
சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு
அன்றீன்ற கன்றின் தோஷத்தை தோஷம் என்று கருதாதே தனக்கு போக்யமாகக் கொள்ளுமாப் போலே
ஆஸ்ரிதருடைய தோஷத்தைத் தன் பேறாகப் போக்கி தன் கல்யாண குணங்களாலே தரிப்பிக்கை –
2-ஸ்வாமித்வமாவது-இழவு பேறு தன்னதாம் படியான குடல் துடக்கு –
3-சௌசீல்யமாவது -அவாக்ய அநாதர-என்கிறபடியே நிரவதிக வைபவத்தை யுடைய தன்னைத்
தாழ விட்டு ஒரு நீராகக் கலக்கை-
4-சௌலப்யம் ஆவது -அதீந்த்ரியமான வடிவை இந்த்ரிய கோசரமாக்கிக் கொண்டு பவ்யனாகை-
இவை ஆஸ்ரயணத்துக்கு உபயுக்தம் ஆகிறபடி எங்கனே என்னில்
தன் தோஷம் கண்டு இறாயாமைக்கு வத்சலனாக வேணும் –
நம்மை ரஷிக்குமோ ரஷியானோ என்கிற அச்சம் கெடுகைக்கு ஸ்வாமியாக வேணும் –
தன் சிறுமை கண்டு பிற்காலியாமைக்கு ஸூசீலனாக வேணும் –
தூரஸ்தனாய் இருக்கும் என்று அஞ்சாமைக்கு ஸூலபனாக வேணும் –
இந்நாலு குணமும் ஆஸ்ரயண உப யோகி என்னும் இடத்தை -நம்மாழ்வார் சரணம் புகுகிற விடத்தில்
நிகரில் புகழாய் -உலகம் மூன்றுடையாய் -என்னை யாள்வானே-
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்று அருளிச் செய்து அருளினார் –
மாம் -என்கிற நிலை தன்னிலே இவை எல்லாம் உண்டு –
எல்லாருடையவும் -கண்ணுக்கு இலக்காய்ப் பாண்டவர்களுக்கு பவ்யனாய் நிற்கிற சௌலப்யமும்
இவர்கள் அந்ய தமன் என்னலாம் படி சஜாதீயனாகக் கொண்டு நிற்கிற சௌசீல்யமும்
விஸ்ருஜ்ய சசரம் சாபம் -என்று கையில் வில்லைப் பொகட்டு யுத்தாது பரனாய் குதிரைக் குட்டியான
அர்ஜுனனை யுத்தத்திலே மூட்டின பின்பு -அவனுடைய இழவு பேறு தன்னதாம் படியான ஸ்வாமித்வமும்-
மம ப்ராணா ஹி பாண்டவா -என்று அவர்களை ஒழியத் தனக்குச் செல்லாத படியான வாத்சல்யமும் தோற்ற நின்று வ்யாபரிக்கையாலே –
பல பிரதானத்துக்கு உபயுக்தமான குணங்கள் ஆவன –
சர்வஜ்ஞத்வ -சர்வ சக்தித்வ -அவாப்த சமஸ்த காமத்வ -நிருபாதிக சேஷித்வ -பரம தயாளுத்வங்கள் –
இவை பல பிரதானத்துக்கு உபயுக்தம் ஆகிறபடி எங்கனே என்னில் –
சர்வஜ்ஞத்வம் ஆகிறது -சரணாகதனுடைய இஷ்ட அநிஷ்டங்களை அறிய வல்லனாகை –
சர்வ சக்தித்வம் ஆவது -நித்ய சம்சாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க வல்லனாகை –
இது செய்யும் இடத்தில் பிரயோஜன நிரபேஷமாகச் செய்யும் போது அவாப்த சமஸ்த காமனாக வேணும் –
தன் பேறாகச் செய்யும் போதைக்கு நிருபாதிக சேஷியாக வேணும் –
இக் குணங்கள் எல்லாம் சுவர்த் தலையில் பூனை போலே சம்சரிப்பிக்கைக்கும் உறுப்பாய் இருக்கையாலே
இக்குணங்கள் இவனுடைய உஜ்ஜீவனத்துக்கு உறுப்பாம் போது பரம தயாளுவாக வேணும் –
ஆகையாலே க்ருபா சஹ்ருதமான ஜ்ஞான சக்த்யாதிகள் இவனுக்கு உஜ்ஜீவனம் என்றதாய்த்து –
விதி வாய்க்கின்று காப்பாரார்-5-1-1-என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27- என்றும்
ஆழியான் அருளே -பெரிய திரு மொழி -1-1-4- என்றும் –
துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும்
க்ருபயா கேவலமாத்ம சாத்குரு-என்றும் –
கேவலம் மதீயயைவ தயயா-என்றும்
ஆழ்வார்களோடு ஆசார்யர்களோடு வாசியற க்ருபா குணத்தினுடைய ப்ரதான்யம் அருளிச் செய்யப் பட்டது இறே-
க்ருபா சஹக்ருத ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் சரண்யதைக்கு உபயுக்தம் என்னும் இடத்தை –
சக்தேஸ் ஸூபசதத் வாச்ச க்ருபா யோகாச்ச -ஈசேசி தவ்ய சம்பந்தாத நிதம் பிரதமாதபி
ரஷிஷ் யத்ய நு கூலான்ன இதி யா ஸூ த்ருடாமதி ஸ விச்வாசோ பவேச்சஆக்ரா சர்வ துஷ் க்ருத நாசன –
என்று பகவஸ் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று –
ஏவ மவஸ்தித ஸ்யாப் யர்த்தித்வ மாத்ரேண பரம காருணிகோ பகவான் -ஸ்வ அனுபவ ப்ரீத்ய உப நீதைகாந்திகாத் யந்திக
நித்ய கைங்கர்யைகரதிரூப நித்ய தாஸ்யம் தாஸ்ய தீதி விஸ்வாச பூர்வகம் பகவந்தம் நித்ய கிங்கரதாம் ப்ரார்த்தயே -என்று
ஸ்ரீஎம்பெருமானார் அருளிச் செய்து அருளினார் –
பாபீ யஸோபிசரணாகதி சப்த பாஜோ நோபேஷணம் மம தவோசித மீஸ்வரஸ்ய-
த்வஜ்ஞான சக்தி கருணா ஸூ சதீஷு நேஹ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீனம் -என்று ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்து அருளினான் –
கீழ் உக்தமான குணங்கள் எல்லாம் சரண்யத்வ உபயுக்தங்களாய் இருக்கும் –
மாம் -அஹம் -என்கிற பதங்களில் பிரித்து அனுசந்திக்கைக்கு ஹேது –
மாம் -என்கிற பதத்திலே சொல்லுகிற குணங்கள்
வ்ரஜ -என்கிற இடத்திலே அதிகாரி க்ருத்யமான விஸ்வாச ஜனக மாத்ரமாய் இருக்கையாலும்
அஹம் -என்கிற இடத்தில் சொல்லுகிற குணங்கள் விஸ்வாச ஜனகங்களாய் இருக்கச் செய்தேயும்
உபாய க்ருத்யமான பாப விமோசனத்துக்கு பரிகரமாய் இருக்கையாலே
பாப விமோசனைச் சொல்லுகிற அஹம் சப்தத்திலே அனுசந்திக்க வேண்டுகையாலும்
கீழ் உக்தமான குணங்கள் எல்லாத்தாலும் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற வென்னை வொழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்கிறபடியே
ஒரு சேதனனைப் பெற்றானாகில் ஜீவித்தல் இல்லையாகில் நாவிலும் பல்லிலும் நீரற்றுக் கிடக்கும்படியான
அவனுடைய வ்யாமோஹ குணமே இவனுக்குத் தாரகம் –
உய்வுபாயம் மற்றின்மை தேறி -4-3-11-என்று அருளிச் செய்து அருளினார் இறே ஆழ்வார்-
நாட்டில் சரண்யரைக் காட்டில் இவனுக்கு விசேஷம் –
நிருபாதிக சம்பந்தமும் —
நிருபாதிக ரஷகத்வமும் –
இந்த குண விசேஷம் இவ்விடத்திலே த்வயத்திலே சரண சப்தத்தால் சொல்லப்பட்ட
விக்ரஹத்தையும் சொல்லுகிறது -அதாவது –
சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும் –
கையும் உழவு கோலும் –
பிடித்த சிறு வாய்க் கயிறும் –
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் –
திருச் சதங்கையுமாயக் கொண்டு இருக்கும் இருப்பு –
இத்தால் சரண்ய வஸ்து–
சர்வ ரஷகமுமாய்-
சமஸ்த கல்யாண குணாத் மகமுமாய்
ஸ விக்ரஹமுமாய்-இருக்கும் என்றது ஆய்த்து-
ஸ்ரீ மன் நாராயண சரனௌ-என்று இ றே-சரணாகதி மந்த்ரம் –
அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-11- என்று தொடங்கி-
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று இறே அபியுக்தர் வார்த்தையும் –
இத்தால் சத்வாரமாக அவனை பஜிக்கும் உபாயாந்தரங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
உபாயாந்தரங்களில் காட்டில் இவ்வுபாயத்துக்கு ஐகாந்த்யம் யுண்டு என்னும் இடத்தை த்யோதிப்பிக்கிறது –
இத்தால் இவ்வுபாயம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாகக் கடவது –
————————————————————————
4- ஏகம்-
இந்த ஏக சப்தத்தை சரண சப்தத்துக்கு விசேஷணம் ஆக்கி -அத்விதீயமான உபாயம் என்றபடியாய்-
அதாகிறது சமாப்யதிக தரித்ரம் என்று நம்மாசார்யர்களில் சிலர் நிர்வஹிப்பர்கள் –
நஞ்சீயர் இதுக்கு -அவதாரணத்தைச் சொல்லுகிறது -என்று அருளிச் செய்வர் –
எங்கனே என்னில் –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்றும் –
மாமேவ யே ப்ரபத் யந்தே -என்றும்
தமேவ சாத்தியம் புருஷம் ப்ரபத்யே -என்றும் ஸ்தான பிரமாண சித்தம் ஆகையாலே –
ஆனால் இவ்வதாரணத்துக்கு வ்யாவர்த்யம் ஆவது எது என்றால் –
கீழே உபாயாந்தரங்களைச் சொல்லுகையாலே அவற்றை வ்யாவர்த்திக்கிறது என்ன ஒண்ணாது –
மாம் -என்று அசாதாரண ஆகாரத்தைக் கீழே சொல்லுகையாலே தேவதாந்த்ரம் வ்யாவர்த்யம் என்ன ஒண்ணாது –
பின்னை ஏதாவது என்றால் –
இனி இங்கு உள்ளது -ஸ்வீகார்யமும் -ஸ்வீகாரமும் – ஸ்வீ கர்த்தாவுமாக வேணும் இறே –
அதில் ஸ்வீகார்யன் -உபாயமாய் நின்றால் -இனி உள்ளது ஸ்வீகாரமும் ஸ்வீகர்த்தாயும் இறே –
அந்த ஸ்வீகர்த்தாவோபாதி ஸ்வீகாரமும் உபாயத்தில் புகாது என்கிறது -ஆவது என்-
உபாய உபேயத்வே ததி ஹ தவ தத்தவம் ந து குனௌ-என்கிறபடியே உபாயத்வம் நித்தியமே யாகிலும்
இவனுடைய ஸ்வீகார அநந்தரம்-ஆகவன்றோ உபாயம் ஆகிறது –
யத் அநந்தரம் யத் பவதி தத் தஸ்ய காரணம் -என்கிறபடியே –
இந்த ஸ்வீகார அநந்தரம் ஆகவல்லது ஈஸ்வரனுடைய உபாய பாவம் சித்தியாமையாலே
இது உபாயமாதல் சஹ காரியதலாக வேண்டாவோ என்னில் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய ஸ்வீகாரமாகச் சொல்லுகையாலே சாஷாத் உபாயத்வம் இதுக்கு இல்லை –
இனி சஹகரிக்கை யாவது -உத்பத்தியில் சஹகரித்தல் -பல பிரதானத்தில் சஹ கரித்தல் ஆய்த்து –
பக்த்யுபாயம் கர்ம ஜ்ஞான சாத்தியம் ஆகையாலே உத்பத்தியிலே சேதன சாபேஷம் –
அசேதனம் ஆகையாலே பல பிரதானத்திலே ஈஸ்வர சாபேஷம் –
இவ்வுபாயம் சித்த வஸ்துவுமாய் நிருபாதிக சர்வ ஸூஹ்ருத்துமாய் இருக்கையாலே உத்பத்தி நிரபேஷம் –
சர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டம் ஆகையாலே பல பிரதானத்தில் நிரபேஷம் –
ஆனால் -யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிறபடியே உபாயம் சாங்கமாய் அன்றோ இருக்க வேணும் –
இவ்வுபாயம் சித்தமாய் இருக்கிற படி என் என்னில் –
உபாயமாகில் சாங்கமாய் இருக்க வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை –
அவை சாத்யமுமாய் அந்ய சாபேஷைமுமாய் இருக்கையாலே சாங்கமாக வேண்டிற்று இத்தனை
இவ்வுபாயம் சித்தமுமாய் அந்ய நிரபேஷமுமாய் இருக்கையாலே நிரங்கமாய் இருக்கும் -ஆனால்
உபாயாந்தரங்களுக்கும் உபாயத்வ வ்யபதேசம் பண்ணுகிறது –பல ப்ரதைகளான தேவதைகளுக்கு
ப்ரசாதகங்களான முகத்தாலே யன்றோ –
அவ்வோபாதி இவ்வுபாயமும் ஈஸ்வர பிரசாதகம் ஆனாலோ வென்னில் –
தேவதைகளில் சேதனற்கு பூர்வமே பலத்தைக் கொடுப்பதாக நினவின்றிக்கே இருக்கச் செய்தே
இச் சேதனருடைய க்ரியை யாய்த்து -அவர்கள் பிரசாதத்தை ஜநிப்பிக்கிறது
ஈஸ்வர விஷயத்தில் வந்தால் –
சர்வாத்மாக்களுக்கும் ஸ்வரூப ஆவிர்பாவத்தை உண்டாக்குவதாக பூர்வமேவ சிந்தித்து அவசர ப்ரதீஷனாய்ப் போருகையாலே
அவனுக்கு பிரசாத ஜனகமாகச் செய்ய வேண்டுவது ஓன்று இல்லை –
யுண்டு என்று இருக்கை யாகிறது தன் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தையும் அழித்து
அவனுடைய ரஷகத்வத்தையும் சோபாதிகம் ஆக்குகிறான் இத்தனை –
ஆனால் மோஷத்துக்குத் தன்னை ஒழிய உபாயாந்தரங்களை விதிப்பான் என் என்னில் –
இதை இவர்களுக்கு ஹிதமாய் விதிக்கிறான் அல்லன் –
அறத்தி வர்க்கத்தின் பெருமையாலே கோயிலங்காடியிலே எல்லாச் சரக்கும் பாரித்து வைக்கிறாப் போலே
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுன -என்றும் –
முத்திறத்து வாணியத் திரண்டில் ஓன்று நீசர்கள் மத்தராய் மயங்குகின்ற திட்டத்தில்
இறந்து போந்து -திருச் சந்த விருத்தம் -68-என்கிறபடியே –
சேதனருடைய ருச்யனு குணமாகத் தன் செல்லாமையாலே விதிக்கிறான் இத்தனை –
புருஷோத்தம வித்யையில் புருஷோத்தமத்வ வேதநத்தால் அல்லது வழி இல்லை என்கிற இதுவும் அவனிட்ட வழக்கு –
சரணம் என்கிற இதுவும் அந்த முக்ய அதிகாரிகளுக்கு – ருச்யனு குணமான சாதனங்களில் இதல்லது போக்கி
அவ்யவஹித சாதனம் ஓன்று இல்லை என்று அல்லாத உபாயங்களில் காட்டில் இவ்வுபாயத்தினுடைய ஏற்றமும்
அல்லாத அதிகாரிகளில் காட்டில் இவ்வதிகாரியினுடைய ஏற்றமும் சொல்லுகிறது இத்தனை –
மாம் நயேத் யதி காகுத்ச்தஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்றும் –
முன் நின்றாய் என்று தோழி மார்களும் அன்னையரும் -5-5-9- என்றும்
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் -5-5-7- என்றும் –
இரு நிலத்தோர் பழி படித்தேன் -திரு நெடும் தாண்டகம் -12- என்றும் –
சோம்பரை யுகத்தி -திரு மாலை -38- என்றும் சொல்லுகிறபடியே பதி வ்ரதைக்கு பதியை ஒழிய
தன் பாரதந்த்ர்ய ஸ்வரூபத்துக்கு பாதகமாக ஸ்வ யத்னத்தாலே அர்த்தம் ஆர்ஜித்து ஸ்வ தேக போஷணம்
பண்ணுமாகில் அது தன் ஸ்வரூபத்துக்கு சேராதே –
தன்னளவிலும் பர்யவசியாதே -தன் பர்த்தாவுக்கும் அவத்ய அவஹமாய் இருக்கும் –
தான் ஒன்றும் செய்யாதே -அவன் ரஷிக்க கண்டு இருக்குமாகில் -அது இருவர் ஸ்வரூபத்துக்கும்
நன்னிறம் யுண்டாக்க கடவது –
அப்படியே தன் ஸ்வரூபத்தை யுணர்ந்து தன் ஸ்வரூப அனுகுணமாக அவனையே ப்ராப்யமும் ப்ராபகமுமாய்
நினைத்து இருக்கும் அதிகாரிகளோடு அவர்களை சமராய்ச் சொல்லுகிறது அல்ல –
சத் கர்ம நிரதாஸ் ஸூ த்தாஸ் சாங்க்யயோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி-என்றும் –
விஷ்ணு உபாயோ யோ அந்ய பலஸ் ஸோ அதம பரிகீர்த்தித -அன்யோ பாயோ விஷ்ணு பலோ மத்யம பரிகீர்த்தித –
மாத வாங்க்ரித்வயோபாயோ மாத வாங்க்ரி ரயோஜன -யஸ்ஸ ஏவோத்தம ப்ரோக்தோ
மாதவே நைவ தே நவை -என்னக் கடவது இறே-
ஆனால் -அவஸ்ய கர்த்தவ்யமான உபாய ஸ்வீகாரத்துக்கு வேஷம் ஏது என்னில் –
அசித் வ்யாவ்ருத்தி லஷணமுமாய்-
பிரதி பந்தக நிவர்த்தகமுமாய் –
ஸ்வ சித்த சமாதானமுமாய்க் கிடக்கிறது –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -பிரபத்தி -என்று சோமாசி யாண்டான் அருளிச் செய்வர் –
இவ்வுபாயம் தான் ஒராகாரத்தாலே சாபேஷமுமாய்-
ஒராகாரத்தாலே நிரபேஷமுமாய் இருக்கும் -எங்கனே என்னில்
ஆஸ்ரயண காலத்தில் அதிகாரி சாபேஷமுமாய் -பல பிரதானத்தில் இதர நிரபேஷமுமாய் இருக்கும் –
ஆக –
எம்பெருமான் நிருபாதிக ரஷகன் ஆகையாலும்
ரஷண பலம் தன்னது ஆகையாலும்
ஆள் பார்த்து உழி தருவாய் -நான் முகன் -60-என்கிறபடியே பூர்வமேவ ஸ்ருஷ்ட்யவதாரங்களைப் பண்ணி
சேதனருடைய இச்சைக்கு அவசர ப்ரதீஷனாய் போருகிறவன் ஆகையாலும்
அவனுடைய நிர்ஹேதுகமான க்ருபா பிரசாதங்களே உபாயம் என்றதாய்த்து –
க்ருபயா கேவலமாத்மசாத் குரு-என்றும்
கேவலம் மதீயயைவ தயா நிச்சேஷவி நஷ்டச ஹேதுக -என்றும் –
கேவலம் மதீயயைவ தயா அதிப்ரபுத்த -என்றும்
ஆளவந்தாரும் எம்பெருமானாரும் ஸ்தோத்ர கத்யங்களிலே இவ்வர்த்தத்தை அருளிச் செய்து அருளினார்கள் –
வ்ருத்த சேவைக்குப் பலம் அவதாரணார்த்தம் அறிகை என்று பிள்ளை அருளிச் செய்து அருளுவர் –
இத்தாலும் இவ்வுபாயம் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருக்கும் என்றதாய்த்து –
—————————————————————————————-
5- சரணம் -என்றது –
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம்-வர்த்ததே சாம் ப்ரதஞ்சைஷ உபாயார்த்தை க வாசக -என்கிறபடியே
சரண சப்தம் -உபாய வாசகமாய் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்திக்கு அவ்யவஹித உபாயம் -என்றபடி –
சரண சப்தம் அவ்யவஹித உபாயம் என்னும் இடத்தைக் காட்டுகிற படி தான் எங்கனே என்னில்
கீழே பகவத் வ்யதிரிக்த சாங்க சகல தர்மத்தையும் விடச் சொல்லுகையாலே –
—————————————————————————————-
6- வ்ரஜ -வ்ரஜ -க தௌ-என்கிற தாதுவிலே
கத்யர்த்தமாய் -கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிறபடியே -அத்யவசி-என்கிறபடி –
அத்யவசாயமும் விஸ்வாசமும் பர்யாயம் ஆகையாலே விச்வாசத்தைச் சொல்லுகிறது
பிரதிபத்தி லஷண வாக்யத்திலே மஹா விஸ்வாச பூர்வகம் -என்று சொல்லுகையாலும்
அனுஷ்டான வாக்யத்திலும் உப சர்க்கத்தாலே மஹா விச்வாசத்தைச் சொல்லுகையாலும்
இங்கும் அந்த விச்வாசத்தையே விதித்ததாகக் கடவது –
மஹா விஸ்வாசம் ஆவது -சங்கா த்ரய ரஹிதமான விஸ்வாசம் –
சங்கா த்ரயமாவது-உபாய பல்குத்வமும் -உத்தேச்ய துர்பலத்வமும்-ஸ்வ க்ருத தோஷ தர்சனமும் –
இவை பரிஹ்ருதமாகிறது எத்தாலே என்னில் –
மாம் -என்கிற பதத்தில் சொல்லுகிற குண சம்பந்தங்களாலே-
சர்வஜ்ஞனுமாய் -சர்வ சக்தனுமாய் -பரம காருணிகனுமாய்-பரம உதாரனுமாய் -இருக்கும் என்கையாலே
பல கௌரவத்தால் வந்த சங்கை பரிஹ்ருதம் –
ஆஸ்ரித வத்சலன் என்கையாலே ஸ்வ க்ருத தோஷ தர்சனம் ஆகிற சங்கை பரிஹ்ருதம் –
அசரண்ய சரண்யனுமாய் அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யனுமாய் இருக்கும் என்கையாலே
உபாய லாகவம் ஆகிற சங்கை பரிஹ்ருதம் –
ஆக இத்தனையாலும் குணவத்தாத்யவஸாயம் சொல்லிற்று –
இனி மேல் ஸ்வரூபாத்யவஸாயம் சொல்லுகிறது –
சர்வ ஸ்வாமி என்கையாலே உபாய லாகவம் ஆகிற சங்கை பரிஹ்ருதம் –
ஸ்ரீ மான் என்கையாலே ஸ்வ க்ருத தோஷ தர்சனம் ஆகிற சங்கை பரிஹ்ருதம்
நாராயணன் என்கையாலே பல கௌரவம் ஆகிற சங்கை பரிஹ்ருதம்
ஆக இத்தால்
தன்னுடைய ஸ்வரூப குண சித்த்யர்த்தமாகவே சரணாகத ரஷணம் பண்ணும்
என்கிற மகா விஸ்வாசம் பிரபத்தி என்றதாயிற்று –
இது தான் -பிரார்த்தனா கர்ப்பமாய் இருக்கும் –
மஹா விஸ்வாச தத் ஏக உபாயதா யாச்ஞா பிரபத்திஸ் சரணாகதி -என்றும் –
த்வமேவ உபாயபூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி சரணாகதி -என்றும் –
லஷண வாக்யங்களில் சொல்லுகையாலே விசேஷேண சரணாகதியில் ப்ரார்த்தனம் ஆவது
அவனை உபாயத்வேந ஸ்வீகரிக்கை –
அதாகிறது -நமக்கு உபாயம் இவனே என்று இருக்கை-
ஆக –
கர்மமும் இன்றியிலே
கர்ம சாத்யமான ஜ்ஞானமும் இன்றியிலே –
ஜ்ஞான – பக்தியும் இன்றியிலே
இவற்றினுடைய த்யாக பூர்வகமுமாய் –
தான் உபாயமும் அன்றிக்கே உபேயமும் அன்றிக்கே அதிகாரிக்கு விசேஷணமாய் இருப்பதோர்
அத்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷம் என்றதாய்த்து –
இனி வாசிக காயிகங்கள் யுண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் என்கை-
இந்த விதி அனுஷ்டானத்துக்கு அவதி ஏது என்னில் –
சக்ருதேவ பிரபன்னச்ய நைவ அந்யதிஷ்யதே-என்றும்
பிரபத்திர் விஸ்வாச -என்றும் –
சக்ருத் பிரார்த்தனா மாத்ரேண அபேஷிதம் தாஸ்யதீதி விஸ்வாச பூர்வக ப்ரார்த்தனாம் இதி யாவத் -என்றும் சொல்லுகையாலே
இந்த விதி அனுஷ்டானம் ஆகிற உபாய ஸ்வீகாரம் சக்ருத் என்னும் இடம்
பிரபத்தி சாஸ்த்ரங்களாலும் பிரபத்தி வித்துக்களாலும் நிஷ்கர்ஷிக்கப் பட்டது-
இந்த விதி சேஷமான மாஸூச -என்கிற விதி யாவத் பிராப்தி அளவும் அனுஷ்டேயம்-அதாகிறது –
இனி நமக்குக் கர்த்தவ்யாம்சங்கள் ஒன்றும் இல்லை –
பல சித்தியில் ஒரு குறையில்லை என்று விமர்ச தசையில் பிறக்கும் விஸ்வாசம் ஆகையாலே
உபாய அனுஷ்டானமும் அனுஷ்டித்த உபாய பரிபாலனமும் கர்த்தவ்யம் என்றதாய்த்து –
பூயஸ்த்வம் ச்ருணு சங்ஷேபம் மநஸா தே அநஸூயா –ஸ்ருத்வா ச குரு யத்நேந ரஸா
சாப்யப்ரமாதி நீ -என்றும் சொல்லிற்று இறே-
ஆகையால் உபாய ஸ்வீகாரம் சக்ருத் என்னும் இடமும்
ஸ்வீகார விசேஷணமுமான விஸ்வாசம் யாவத் பிராப்தி யளவும்
விமர்ச தசையிலும் அனுவர்த்திக்க வேணும் என்னும் இடம் சொல்லிற்று ஆய்த்து-
ஸ்வர்க்க சாதனமான ஜ்யோதிஷ்டோமம் சப்தா ஹச்சிலே விஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அந்த யாகாந்தர் பூதமான அக்னி ஹோத்ரம் ஆப்ரயாணம் அஹரஹர அனுஷ்டேயமாம் போலே –
இந்த அக்னி ஹோத்ரம் அனுஷ்டியாது ஒழிந்தால் பலத்துக்கு விலம்பமுண்டாய்-
அனுஷ்டித்தால் ப்ரதிபந்தகம் இன்றிக்கே விசேஷ பலம் யுண்டாய் இருக்குமா போலே
ஆவ்ருத்தி ரூபமான விசுவாசமும் நிஷ்டா வான்களுக்கு நிஷ்டா பிரகாசகமுமாய்
கால ஷேபம் ஆகிற பலத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
விச்வாசத்தினுடைய ஆவ்ருத்திகள் கிணற்றுக்கு உள்ளே இருந்து உஜ்ஜீவிப்பாரைப் போலே -என்று
பிள்ளை அருளிச் செய்து அருளுவர் –
ஆக –
ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகம் அங்கம் என்னும் இடத்தையும்
த்யாக பூர்வகமான ஸ்வீகாரம் அதிகாரிக்கு விசேஷணம் என்னும் இடத்தையும் –
ஸ்வீக்ருதனான அதிகாரிக்கு குண விசிஷ்டனான ஈஸ்வரன் உபாயம் என்னும் இடத்தையும் சொல்லிற்று ஆய்த்து –
ஆகையாலே
த்யாக விசிஷ்டம் ஸ்வீகாரம்
ஸ்வீகார விசிஷ்டம் அதிகாரம்
குண விசிஷ்டம் உபாயம் -என்றது ஆய்த்து –
—————————————————————————
7-8-ஆக இதுக்குக் கீழே அதிகாரிக்கு கர்த்தவ்யம் சொல்லிற்று –
இனி ஈச்வரனுக்குக் கர்த்தவ்யம் சொல்லுகிறது -அஹம் த்வேத்யாதி –
மோஷயிஷ்யாமி-என்கிற உத்தமனுக்கும்
மாஸூச -என்கிற மத்யமனுக்கும் பிரதி சம்பந்தி தயா அஹம் த்வா -என்கிற சப்தங்கள் தன்னடையே வருவதாய் இருக்க
வாசிகமாகச் சொல்லுகிற இதுக்கு பிரயோஜனம் என் என்னில் –
சில அபிப்ராயத்தைப் பற்றச் சொல்லுகிறது –
இது தான் மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிற சரண்ய அனுவாதமும்
சரணாகதனுடைய அனுவாதமுமாய் இருக்கிறது -அதாகிறது –
உனக்கு உபாய பூதனான நான் – என்னையே உபாயமாகப் பற்றியிருக்கிற உன்னை -என்றபடி –
7-அஹம் –
தேஹாத்மா அபிமானி அஹம் என்றால் தேகத்தைக் காட்டும் –
பிரகிருதி புருஷ விவேகம் பண்ணினவன் அஹம் என்றால்
ப்ரக்ருதே பரனாய் பரம சேஷ பூதனான ஆத்மாவைக் காட்டும் –
ஈஸ்வரன் அஹம் என்றால் உள்ளது எல்லாத்தையும் காட்டும் இறே –
இந்த அஹம் சப்தம் -மாம் -என்கிறத்தோடே சேர்ந்து அஹமாய்த்து –
மாம் என்கிற விடம் அதிகாரி க்ருத்யமான மஹா விச்வாசத்துக்கு உறுப்பாக சொல்லிற்று –
அஹம் என்கிறவிடம் ஈஸ்வர க்ருத்யமான பாப விமோசனத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறது –
அதாகிறது
பந்தகனான நானே விமோசகனானால் நிவாரகர் யுண்டோ என்கை-
அதாகிறது –
சமாப்யதிக தரித்திரன் என்றபடி –
இவ்விடத்திலே விசேஷித்து பல பிரதானத்துக்கு உபயுக்தமான குணங்கள் அனுசந்தேயங்கள் –
———————————–
8-த்வா-
கீழ்ச் சொன்னபடியே சகல தர்மங்களையும் விட்டு
என்னையே நிரபேஷ சாதனமாகப் பற்றின உன்னை -என்றபடி –
இத்தால் மேல் சொல்லப் புகுகிற சோக விமோசன ஹேதுவைச் சொல்லிற்று –
————————————————–
அஹம் த்வா -என்கிற இரண்டு பதத்தாலும் ஸ்வீகார்யமான உபாய வேஷத்தையும் –
ஸ்வீகர்த்தாவான அதிகாரி வேஷத்தையும் சொல்லி நின்றது –
இனி மேல் ஸ்வீகார்யமான ஈஸ்வர க்ருத்யத்தையும்
ஸ்வீக்ருத உபாயனான அதிகாரி க்ருத்யத்தையும் சொல்லுகிறது –
9-சர்வ பாபேப்ய –
பாபமும் –
பஹூ வசனமும் –
சர்வ சப்தமுமாய் –
இதுவும் த்ரிவிதமாய் இருக்கும் –
பாபமாவது –
அநிஷ்டமான பலத்தைத் தருவதுமாய்-இஷ்ட பலத்துக்கு விரோதியுமாய் இருப்பதொன்று –
இங்குத்தை பாபம் ஆகிறது
அநிஷ்டமான சாம்சாரிக துக்கத்தை யுண்டாக்கக் கடவதாய் -இஷ்டமான மோஷத்துக்கு விரோதியுமாய் இருப்பதொன்று –
பஹூ வசனத்தாலே –
அவற்றினுடைய பாஹூள்யத்தை சொல்லுகிறது -அதாகிறது –
அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
அவித்யை யாவது -அந்யதா ஜ்ஞானமும் -விபரீத ஜ்ஞானமும் -ஜ்ஞான அநுதயமும் –
கர்மமாவது -புண்ய பாபம் -மோஷத்தைப் பற்ற பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யம் –
புண்ய பாப்பா விதூய -என்னக் கடவது இறே-
வாசனை யாவது- அஜ்ஞான வாசனையும் -கர்ம வாசனையும் -பிரகிருதி வாசனையும் –
ருசியும் விஷய பேதத்தாலே பஹூ விதையாய் இருக்கும் –
பிரகிருதி சம்பந்தம் -ஆவது ஸ்தூல ஸூஷ்ம ரூபமாய் இருந்துள்ள அசித் சம்பந்தம் –
இவ்வளவால் உபாசகனுக்கும் சாதாரணமாக ஈஸ்வரன் கழித்துக் கொடுக்கும் ஆகாரத்தைச் சொல்லிற்று –
இனி -சர்வ சப்தத்தாலே
பிரபன்னனுக்கு அசாதாரணமாகக் கழித்துக் கொடுக்குமவற்றைச் சொல்லுகிறது -அதாகிறது –
ததி திகம உத்தர பூர்வாக யோரஸ் லேஷ விநாசௌ-தத் வ்யபதேசாத் -என்றும் –
இதரஸ் யாப்யேவமவமஸ்ம் ஸ்லேஷ பாதே து -என்றும்
பூர்வ உத்தராகங்கள் ஆகிற புண்ய பாபங்களுக்கு அச்லேஷ விநாசம் சொல்லி –
போகேந த்விதரே ஷபயித்வாத சம்பத்யதே -என்று
பிராரப்தம் அனுபவ விநாஸ்யம் என்னும் இடம் சொல்லிற்று இறே
இங்கு அப்படி இருப்பதொரு சங்கோசம் இல்லாமையாலே -அதுவும் சோக ஹேது வாமாகில்
சர்வ சப்தத்திலே அந்தர்பூதமாகக் கடவது –
எங்கனே என்னில் -இதுக்கு சங்கோசமாய் இருப்பதொரு சப்தம் இங்கு இல்லாமையாலே –
பிரபத்தி பிராரப்த கர்மத்துக்கு விநாசிநி-என்னும் இடத்துக்கு பிரமாணம் என் என்று எம்பெருமானாரை ஆண்டான் கேட்க
மாஸூச -என்றது இறே என்று அருளிச் செய்து அருளினார்-
இது தான் ப்ராரப்ததையும் போக்கும் என்னும் இடத்துக்கு கண்டோக்தமான பிரமாணங்களும் உண்டு –
சாதனம் பகவத் ப்ராப்தௌ ச ஏவேதி ஸ்திராமதி-சாத்ய பக்திஸ் ஸ்ம்ருதா சைவ பிரபத்திரிதி கீயதே
உபாயோ பக்திரேவதி தத் ப்ராப்தௌ யா து சா மதி -உபாய பக்தி ரே தஸ்யா பூர்வோக்தைவ கரீயசீ
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ -சாத்ய பக்திஸ் து சா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயசீ -என்று பிரபன்னனுக்கு
சரீராந்த ஹேதுவான பிராரப்த சேஷம் அனுபவிக்க வேண்டுகிறது –
பிராரப்த சரீரத்தில் சோகம் இல்லாமையாலே
ஆரப்த கார்யான்-என்று ப்ராரப்தமும் பிரபத்தியாலே ஷந்தவ்யம் என்று உடையவர் கத்யத்தில் அருளிச் செய்தார் –
உபாசகனுக்கு உத்தராகத்துச் சொல்லுகிற அஸ்லேஷமும் பிரமாதிக விஷயம் என்று உடையவர்
பாஷ்யத்தில் அருளிச் செய்து அருளினார் –
இப்படி அருளிச் செய்கைக்கு ஹேது –
நாவிரதோ துஸ் சரிதான் நாசாந்தோ நாசமாஹித -நாசாந்த மா நசோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப் நுயாத்-என்கிற
வாக்யங்களோடு விரோதியாமைக்கும் –
அபி சேத பாதகம் கிஞ்சித் யோகி குர்யாத் ப்ரமாதத–யோகமேவ நிஷேவேத நான்யம் யத்னம் சமாசரேத்-
என்று யோகிகளுக்கு பிராயச்சித்தத்தை விதிக்கையாலும் –
பிரபன்னனுக்கு உத்தராகத்தில் புத்தி பூர்வமும் சோக ஹேது வாமாகில் அந்த புத்தி பூர்வத்துக்கும் பரி ஹாரமாகக் கடவது –
அதாவது
சரீர சம்பந்தத்தோடு இருக்கையாலே -வாசனையாலும் -பிரபல கர்மத்தாலும் -காதாசித்கமாக புத்தி பூர்வகம் சம்பாவிதம் –
இவற்றையும் பொறுத்து அருள வேணும் என்று பூர்வமேவ பிரார்த்தித்தான் ஆகில் அவையும்
பூர்வ பிரபத்தி தன்னாலே ஷந்தவ்யமாகக் கடவது என்கை-
ஆகை இறே-வர்த்தமானம் வர்த்திஷ்ய மாணாஞ்ச-என்று உடையவர் கத்யத்தில் அருளிச் செய்தது –
புத்தி பூர்வகமாக உத்தராகத்தில் சோகித்து சரணம் புக்கான் என்னும் இடம் அறியும் படி எங்கனே என்னில் –
உத்தர பிரவ்ருத்தியில் அனுதாபம் நடக்கையும் பூர்வ ப்ரபத்தியை ஸ்மரித்து திருட சித்தனாகையும் –
இன்னமும் ஸ்ரேஷ்டராய் இருப்பார்க்கு சிஷ்ய புத்ரர்களைப் பற்ற வித்யதிக்ரமம் பண்ணி
அனுஷ்டிக்க வேண்டி வருவன சில பாபமுண்டு -அந்தப் பாபங்களையும் சொல்லுகிறது –
ஆன்ரு சம்சய பிரதானராய் அனுஷ்டித்தாலும் ஏறிட்ட சட்டி ஆகாசத்திலே நில்லாதாப் போலே அவையும் ஒரு பலத்தோடு
சம்பந்திக்கக் கடவது -ஆகையாலே அவையும் பாப சப்த வாச்யமாகக் கடவது –
—————————————————————————————–
10-ஆக கீழ் விரோதி வேஷம் சொல்லி நின்றது –
மோஷயிஷ்யாமி-என்று விரோதி நிவ்ருத்தி பிரகாரம் சொல்லுகிறது –
மோஷயிஷ்யாமி -இவற்றில் நின்றும் விடுவிப்பன்-
யிஷ்யாமி -என்கிற ணி ச்சாலே யாவையாவை
சில பாபங்களைக் குறித்து நீ பயப்படுகிறாய் -அவை தானே உன்னைக் கண்டு பயப்பட்டுப் போம்படி பண்ணுகிறேன் –
அவை தானே விட்டுப் போம்படி பண்ணுகையாவது-
இவை நமக்கு முன்புண்டாய் கழிந்தது என்று தோற்றாத படி போக்குகை-இதாகிறது –
இவை ஸ்ம்ருதி விஷயமானாலும் தன்னுடைய ஸ்வா பாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே
இவை நமக்கு வந்தேறியாய்க் கழிந்தது என்று இருக்கையும் –
ஸ்ம்ருதியால் துக்கம் அனுவர்த்தியாது இருக்கையும் –
கீழ் இவனை உபாயமாகப் பற்றிற்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்த்திக்காய் இருக்க –
அநிஷ்ட நிவ்ருத்தி மாதரத்தைப் பலமாகச் சொல்லுவான் என் என்னில் –
யதோதவா நகரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் -சதேவ நீயதே வ்யக்தி மசதஸ் சம்பவ குத-ததா ஹேய குணத் வம்சாதவ
போதா தயோ குணா -பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மா நோ ஹி தே-என்றும்
ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்றும் –
மம சஹஜ கைங்கர்யவிதய -என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்தி உண்டானால் இஷ்ட ப்ராப்தி தன்னடையே உண்டாம் இறே-
ஆனால் -அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரத்துக்கு ஈஸ்வரன் உபாயமாக இருக்கிறானோ -என்னில்
இஷ்ட பிராப்தியாகிற அநவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவத்துக்கு அர்ஹதையே உள்ளது –
இனி ஈஸ்வரன் அனுபவிப்பிக்கும் போது ஆய்த்து-இவனுக்கு அனுபவிக்கலாவது –
ஆகை இறே கைவல்யம் ஆகிற மோஷத்துக்கு அநிஷ்ட நிவ்ருத்தி ஒத்து இருக்கச் செய்தேயும்
அனுபவ மாத்ரமாய் இருக்கிறது
இவ் வைஷம்யத்துக்கு ஹேது உபாசன தாரதம்யத்தாலே ஈஸ்வரனுக்கு உண்டான பிரசாத தாரதம்யத்தாலே
சேதனன் புருஷார்த்தத்தை பிரார்த்திக்கும் போது இஷ்ட பிராப்தி ரூபமான கைங்கர்யத்தை
ப்ரதான்யேந பிரார்த்திக்கக் கடவன் –
இவனுக்கு கைங்கர்யம் ஆகிற புருஷார்த்தம் சஹஜமாய் இருக்கையாலே –
தத் விரோதி நிவ்ருத்தி மாத்ரத்தையே உபாயமான ஈஸ்வர க்ருத்யமாகச் சொல்லக் கடவது –
ஆகையாலே அந்த ப்ராதான்யத்தைப் பற்ற இங்கு அருளிச் செய்கிறான் –
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் ஈஸ்வரனுடைய க்ருபா பிரசாத க்ருத்யமாக கத்யத்திலே
உடையவர் அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் -இப்படி சரண்யன் சொல்லுகைக்கு அடி
இஷ்ட ப்ராப்தி ரூபமான கைங்கர்யம் இவனுக்கு ஸ்வா பாவிகம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும்-
அநிஷ்ட நிவ்ருத்தி யுண்டான போதே சஹஜமான இஷ்ட ப்ராப்தியும் உண்டாம் என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்தியினுடைய ப்ராதான்யத்தைப் பற்ற அருளிச் செய்கிறான்-
—————————————————————————————-
11–கீழே -அஹம் என்று-உபாய க்ருத்யம் சொல்லி நின்றது –
மேல் -த்வா-என்று நிஷிப்த பரஞான அதிகாரி க்ருத்ய சேஷம் சொல்லுகிறது –
மாஸூச -சோகியாதே கொள் -என்றபடி –
வ்ரஜ -என்கிற விதியோபாதி–மா ஸூ ச -என்கிற இதுவும் விதியாகையாலே –
ஸ்வீகாரத்தோ பாதி சோக நிவ்ருத்தியும் கர்த்தவ்யம் -என்கை-
ஆகையாலே -பிரபன்னனுக்கு யாவத் பல பிராப்தி நிர் பரத்வ அனுசந்தானம் கர்த்தவ்யம் என்றதாய்த்து –
ஸ்வீக்ருத உபாயனான பின்பு சோகித்தானாகில்-பிரபத்தி நிஷ்டைக்கு ஹாநி யுண்டாய் –
அத்தாலே பல விலம்பம் யுண்டாகக் கடவது –
பலியாய்த்து பல அலாபத்தில் சோகிப்பான்-
உபாய கர்த்தாவாய்த்து -உபாயம் இல்லை என்று சோகிப்பான் –
இவ்வுபாயத்தில் பலித்வ கர்த்ருத்வங்கள் இரண்டும் உனக்கு இல்லை –
இனி நானே பலியுமாய் நானே கர்த்தாவாயுமாய் இருக்கையாலே நீ சோகிக்க வேண்டா -என்கை –
சக்ருதேவ பரபன்னச்ய க்ருத்யம் நைவான்யதிஷ்யதே -என்கையாலே கர்த்தவ்யாம்சம் உண்டு என்று சோகிக்க வேண்டா –
மாம் -அஹம் -என்கையாலே உன் விலக்காமை பார்த்து இருக்கிறோம் சிலராகையாலும் –
விரோதி நிரசன சமர்த்தனாகையாலும் சோகிக்க வேண்டா –
ஆகையாலே –
உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா -நிர்ப்பரனாய் இரு -என்கை –
உடையவனாய்த்து கிருஷி பண்ணுவான் –
கர்ஷகனாயாய்த்து பலம் புஜிப்பான்-
பலியாய்த்து பல அலாபத்தில் சோகிப்பான் –
இவை இத்தனையும் உனக்கு இல்லாமையாலே சோகியாதே -என்றதாய்த்து –
இனி சோகித்தாயாகில்-உன் ஸ்வரூபத்தையும் அழித்து-என் ப்ரபாவத்தையும் அழித்தாயாம் இத்தனை –
முன்பு சோகித்ததில்லை யாகில் அதிகார சித்தி இல்லை -பின்பு சோகித்தாயாகில் பல சித்தியில்லை –
இத்தால் -அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ
நிஸ் சம்சயஸ் ஸூகமாஸ்ஸ்வ-என்றபடி –
துஷ்கரமுமாய் -ஸ்வரூப விரோதியுமான சாதனங்களை த்யஜிக்கையாலே சோகிக்க வேண்டா –
ஸ்வீ கரிக்கப் புகுகிற உபாயம் ஸூலபமாகையாலே சோகிக்க வேண்டா –
அது தான் நிரபேஷமாகையாலே சோகிக்க வேண்டா –
மானஸ வியாபார மாத்ரமாகையாலே வாய் நோவ உடம்பு நோவ க்லேசிக்க வேணும் என்று சோகிக்க வேண்டா –
உபாயம் பல பிரதான சமர்த்தம் ஆகையாலே சோகிக்க வேண்டா –
இனி கர்த்தவ்யாம்சம் உண்டு என்று சோகிக்க வேண்டா –
விரோத்யம்சத்தில் சேஷிப்பது ஓன்று உண்டு என்று சோகிக்க வேண்டா –
விரோதி போமோ போகாதோ என்று சோகிக்க வேண்டா -என்கிறது –
————————————————————————
1–த்யாஜய ஸ்வரூபம் சொல்லி –
2–த்யாக பிரகாரம் சொல்லி –
3–உபாய ஸ்வீகாரத்துக்கு த்யாகம் அங்கம் என்னும் இடம் சொல்லி –
4–ஸ்வீகரிக்கப் புகுகிற உபாயத்தின் யுடைய சீர்மை சொல்லி –
5–அச் சீரிய உபாயம் நிரபேஷம் என்னும் இடம் சொல்லி –
6–உபேயத்வம் நித்யம் -உபாயத்வம் ஔபாதிகம் என்னும் இடம் சொல்லி –
7–பற்றும் இடத்தில் மானஸ வியாபாரமே அமையும் என்னும் இடம் சொல்லி –
8–உபாயத்தினுடைய சீர்மையைச் சொல்லி –
9–அதிகாரியினுடைய அபூர்த்தி சொல்லி –
10–அவ்வதிகாரியினுடைய விரோதி பாப சமூஹத்தைச் சொல்லி –
11–விரோதிகளில் கிடப்பது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்லி –
12–அவையடையத் தானே போம் என்னும் இடம் சொல்லி –
13–நிர்ப்பரனாய் இரு -என்கிறான் –
———————————————————————–
ஆக -இத்தால் –
1–ஸ்வீகாரங்களையும் –
2–த்யாஜ்ய தர்ம விசேஷங்களையும் –
3–அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் –
4–அந்த தர்ம த்யாக பூர்வகமாகப் பற்றும் விஷயத்தினுடைய சௌலப்யாதி குண யோகத்தையும் –
5–தத் விசிஷ்ட வஸ்து வினுடைய சஹாய அசஹத்வ லஷணமான நைரபேஷ்யத்தையும்-
6–அந்த நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் –
7–அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் –
8–ஸ்வீக்ருத உபாயத்தினுடைய ஜ்ஞான சக்த்யாதி குண யோகத்தையும் –
9–தத் விசிஷ்ட வஸ்துவில் ந்யஸ்த பரனான அதிகாரியையும் –
10–தத் விரோதி பாப சமூஹத்தையும் –
11–தத் விமோசன பிரகாரத்தையும் –
12–தத் விமோசனனைப் பற்றின அதிகாரியினுடைய நைர்ப்பர்யத்தையும் –
சொல்லிற்று ஆய்த்து-
பிரபத்தி நிர்ப் பரத்வ அனுசந்தான சிரஸ்கமாகையாலே
நிர்ப் பரத்வ அனுசந்தானம் -சர்வதா கர்த்தவ்யம் -என்றதாய்த்து -வ்ரஜ -என்கிற ஸ்வீ காரத்துக்கு –
ஸ்ரீ தனி சரமம் முற்றிற்று –
—————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –