ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-15/16/17/18/19/20–

மேல் நான்கு ஸ்லோகங்களால் உலகில் உள்ள நல்லன யாவும் பிராட்டி கடாஷம் பெற்றவை –
அல்லன பெறாதவை என்கிறார் –
இங்கனம் ஸ்ருதி பிரமாணத்தால் அறியப்படும் பிராட்டியினுடைய கடாஷத்தின் யுடைய
லவ லேசத்திற்கு  வசப்பட்டவை சிறந்த பொருள்கள் யாவும் -என்கிறார் –

ஆகு க்ராம நியாமகா தபி விபோரா சர்வ நிர்வாஹகாத்
ஐஸ்வர்யம் யதிஹ உத்த ரோத்தர குணம் ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே
துங்கம் மங்கள முஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புன பாவனம்
தன்யம் யத் தததச்ச விஷண  புவஸ் தே பஞ்சஷா விப்ருஷ –15-

ஆகு க்ராம நியாமகா தபிவிபோரா சர்வ நிர்வாஹகாத் –
சிறிய ஊரை ஆளுகின்றவன் தொடங்கி எல்லாவற்றையும் நிர்வஹிக்கின்ற விபுவான
பிரமன் வரையிலும் இவ் உலகத்திலே –

ஐஸ்வர்யம் யதி ஹோத்த ரோத்தர குணம் ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
உத்தர உத்தர குணம் -மேன்மேலும் சிறப்பு வாய்ந்த -யாதொரு ஐஸ்வர்யம் உண்டோ –

துங்கம் மங்கள முஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புன பாவனம் –
துங்கம் -மேரு முதலிய உயரமான பொருளும்
மங்களம் -புஷ்பம் முதலிய மங்களப் பொருளும்
கரிமவத் -இமயம் முதலிய கனத்த பொருளும்
புண்யம் -வேள்வி முதலிய அறமும்
புனர் -மேலும்
பாவனம் -காவிரி முதலிய தூய்மைப் படுத்தும் பொருளும் –

தன்யம்யத் தததச்ச விஷண  புவஸ் தே பஞ்சஷா விப்ருஷ —
தான்யம் பாக்யத்தைப் பெற்ற பொருளும் என்கிற
யத் ஐஸ்வர்யம் -யாதொரு ஐஸ்வர்யம் உண்டோ –
தத் -அந்த ஆளுகின்ற ஐஸ்வர்யமும்
அதச்ச -இந்த துங்கம் முதலிய ஐஸ்வர்யமும்
தே -நினது
வீஷண  புவ -பார்வையில் யுண்டான
பஞ்ச ஷா விப்ருஷ -ஐந்தாறு திவலைகள் –

சிற்றூர் மன் முதலாகச் செக மனைத்தும் திறம்பாமல் நடாத்துகின்ற இறைவன் காறும்
பெற்றுள்ள செல்வமும் ஈங்கு அரங்க நாதன்  பேரன்பே மேன் மேலும் பெருக்கமாக
மற்றோங்கி வளர்ந்தனவும் கனத்தனவும் மங்களமும் இலங்குனவும் பாக்கியத்தைப்
பெற்றனவும் பாவனமும் அறமும் நின்ன பெரும் கருணை நோக்கின் துளி ஐந்தாறாமே–15-

————————————————————————

பிராட்டியின் கடாஷம் ஐஸ்வர்யத்துக்கு காரணமாதல் போலே
வறுமைக்கு அவள் கடாஷம் இன்மையே ஹேது -என்கிறார் –

ஏகோ முக்த ஆதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளிர் மநுஷ்ய
த்ருப்யத் தந்தாவளஸ்தோ ந கணயதி ந தான்யத் ஷணம் ஷோணி பாலான்
யத் தஸ்மை திஷ்டதேன்ய க்ருபணம சரணோ தர்சயன் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி நயன உதஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –16-

ஏகோ-ஒரு மனுஷ்யர்
முக்தாத பத்ர ப்ரசல மணி-முத்துக் குடையில் அசைகின்ற ரத்னங்களாலே
கணாத்காரி மௌளிர்-உராய்தலினால் கண கண என்று ஒலிக்கின்ற கிரீடம்  ஏந்தினவனாய்க் கொண்டும்

மநுஷ்ய -த்ருப்யத் தந்தாவளஸ்த-மனிதன் களிப்புக் கொண்ட யானை மீது இருந்து கொண்டும்

தோ ந கணயதி ந தான் யத் ஷணம் ஷோணி பாலான் –
வணங்கின  அரசர்களை சிறிது நேரம் கூட மதிப்பது இல்லை என்பது யாது ஓன்று உண்டோ –

யத் தஸ்மை திஷ்டதேன்ய க்ருபணமசரணோ தர்சயன் தந்த பங்க்தீ-அதுவும் மற்றொரு மனிதன் வேறு புகல் அற்றவனாய்
தன் ஏழைமை தோற்ற பல் வரிசைகளை காண்பித்துக் கொண்டு அந்த யானை மீது இருப்பவனுக்கு

திஷ்டதேயத் -தன் கருத்தைப் புலப்படுத்தி நிற்கிறான் எனபது யாதொன்று உண்டோ

தத் தே ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி நயன உதஞ்சித ந்யஞ்சிதாப்யாம் —
அதுவும் உனது கண்களினுடைய உதஞ்சித -திறத்தலாலும்-நயஞ்சிதாப்யாம் -மூடுதலாலும்-உண்டாகின்றன –

அந்வய வ்யதிரேகங்கள் இரண்டையும் காட்டினார் ஆயிற்று –
ஐஸ்வர்ய எல்லையை முதல் இரண்டு அடிகளாலும்
வறுமையின் எல்லை நிலையை மூன்றாம் அடியில் காட்டி
நான்காவது அடியில் அவற்றுக்கு காரணம் காட்டி அருள்கிறார் –

திஷ்டதே -பிரகாசன  ஸ்தேயாக்யயோச்ச -என்ற இலக்கணப் படி
தன் கருத்தை வெளிப்படுத்தி நிற்றல் எனபது பொருள் –

ஒரு முத்துக் குடை மணிகளுரச மௌலி ஒலிப்ப கண கண வென்றே ஒரு மானிடனார்
கருமத்தக் கரிமிசை வீற்று இருந்தே சற்றும் காவலரே வணங்கிடுனும் கணிசியாமை
இருபத்திப் பல் வரிசை யிளித்து முன்னே இன்னோருவன் புகலின்றி ஏங்கும் தன்மை
புரிவித்ததற் கிவை முறையே திறக்குமூடும் பொன்னரங்கர் காதலி நின் கண்கள் தாமே –16

———————————————————————–

பிராட்டியின் கடாஷத்தினால் தாமே பெருகி  வரும் நன்மைகளை யடுக்குகிறார் –

ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி ஸ்த்தி ஸ்ரிய
ஸூதா சகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முக மதேந்திரே பஹூமுகீ மஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா பரிவஹந்தி கூலங்கஷா –17-

ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி ஸத்திச்ரிய-
ப்ரீதியும் அறிவும் கல்வியும் தைரியமும் செழிப்பும் கார்ய சித்தியும் செல்வமும் –

ஸூதா சகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா-
அமிழ்தின் துணைவியான இலக்குமியே நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-

ததோ முக மதேந்திரே பஹூமுகீ மஹம் பூர்விகாம் –
அவரை நோக்கி -பலவாறு நான் முன்பு நான் முன்பு என்ற எண்ணத்தை-

விகாஹ்ய ச வசம்வதா பரிவஹந்தி கூலங்கஷா —
அடைந்து அடங்குவனவும் கரை புரள்வனவுமாய் முழுதும்  வெள்ளம் இடுகின்றன –

பொருந்திய தேசமும்  பொறையும் திறலும்–சேரும் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே –

யஸ்யாம் யஸ்யாம் திசி விஹாதே தேவி திருஷ்டிஸ் த்வதீயா தஸ்யாம் தஸ்யாம் அஹமஹமிகாம்
தன்வதே சம்பதோகா-ஸ்ரீ வேதாந்த தேசிகர்

ஸூதா சகி–உலகை உய்விப்பதாலும் இனிமையாலும் -அமுதினில் வரும் பெண் அமுதன்றோ –

கடாஷம் பெற இன்னார் இனியார் வரையறை இல்லாமை பற்றி யதா முகம் -என்கிறார்

ப்ரூலதா -விரும்பும் பொழுதே இங்கனம் வெள்ளம் இடுமாயின் நேரே நோக்கின் பேசும் திறமோ –

அஹம் பூர்விகாம் விகாஹ்ய -நான் நன்மையாக வேணும் என்று போட்டியிட்டுக் கொண்டு வந்து பெருகுகின்றன

பெருகும் முறை பல -என்பதால் பஹூ முகீம் -என்கிறார்

பரிவஹந்தி கூலங்கஷா-நாற்புறங்களிலும் வெள்ளம் இடுகின்றன
சம்பந்த  சம்பந்திகளுக்கும் நன்மைகள் வந்து சேரும்

ரதி மதி –பிராட்டியின் புருவ நெறிப்புக்கு ஏற்ப பணி புரியும் பணிப் பெண்கள்
எனத் தோற்றும் சமத்காரம் பெண் பாலாக அருளி –

ரதி பக்தி
மதி ஞானம்
சரஸ்வதீ இவ் விரண்டையும் பற்றிய வாக்கு
த்ருதி  ஆனந்தம்
சம்ருத்தி அடிமை வளம்
சித்தி ஸ்வரூப லாபம்
ஸ்ரீ அதற்கு அனுகூலமான ஐஸ்வர்யம் -என்னவுமாம் –

நின் புருவங்களார் மேல் நெளிந்திட விரும்பும் ஆங்கே
அன்பறி வாக்கம் தீரம் அருங்கலை செழிப்பு சித்தி
என்பன பலவாறு எங்கும் இரு கரை மோதும் செல்வி
இன்ப அமுதனையாய் முந்தி முந்தி  என்று ஏற்குமாறே-17-

—————————————————————–

உலகின் கண் உள்ள எல்லாப் பொருள்களின் உடைய ஏற்றத் தாழ்வுகள் யாவும்
பிராட்டியின் கடாஷத்தைப் பெறுதலையும் பெறாததையும் பொறுத்தன -என்கிறார் –

சஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை
அநோகஹ ப்ருஹஸ்பதி பிரபல விக்ல பப்ரக்ரியம்
இதம் சதசதாத்மநா நிகிலமேவ நிம் நோந்தனம்
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத் தாண்டவம் –18-

சஹ ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை –
ஸ்தாவர ஜங்கமங்களின் சமூஹம் என்ன
பிரமன் என்ன
பிரமனுக்கு எதிர்தட்டாக அகிஞ்சனன்-

அநோகஹ ப்ருஹஸ்பதி பிரபல விக்ல பப்ரக்ரியம் –
மரம் என்ன -லோகே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம் -கூரத் ஆழ்வான்
குரு என்ன -அறிவின் உயர்வு எல்லை ப்ருஹஸ்பதி சப்தம்
பலிஷ்டன் என்ன
துர்பலன் என்ன -இவர்களின் பிரகாரத்தை யுடையதான –

இதம் சதசதாத்மநா நிகிலமேவ நிம் நோந்தனம்
இவ்வுலகம் முழுதுமே
நல்லது கெட்டது என்ற வடிவத்தாலே
மேடு பள்ளமாய் இருப்பதொரு யாதொன்று உண்டோ –
நிகிலமேவ -இதில் அடங்காதது ஒன்றுமே இல்லை என்றவாறு

கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத் தாண்டவம் —
அது உன்னுடைய நோக்கினுடைய அதின்மையினுடையவும் நாட்டியமும் அன்றோ –
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் லீலா கார்யம் -தாண்டவம்-

சஹ -சகித்துக் கொள்ளும் பொருள்
ஸ்திர -நிலை நிற்கும் பொருள்
பரித்ரச -பயப்படும் பொருள் -சஹ பொருளுக்கு எதிர்மறை
வ்ரஜ -அழியும் பொருள்  -ஸ்திர பொருளுக்கு எதிர்மறை என்றுமாம் –

பெயர்வன பெயர்கிலாத பிரமனே செல்வ மில்லான்
உயர் குரு மரனே மற்றும் உறு பல முற்றோர் அற்றோர்
உயர்வான தாழ்வான யாவும் நல்ல தீயனவா யுன் கண்
அயர்வினின் அருளின் நோக்கத் தாடு தாண்டவம் அணங்கே –18-

—————————————————————-

இங்கனம் ஜகத் சமஸ்தம் யத பாங்க சம்ச்ரயம்-என்றபடி உலகம் பிராட்டியின் கடாஷத்தைப் பற்றி
நிற்பதாகக் கூறுவது பொருந்துமோ –
இறைவன் இட்ட வழக்கன்றோ உலகம் எனின்
உலகம் இவளது விளையாட்டிற்காகவே இறைவனால் படைக்கப் பட்டது ஆதலின்
இவள் கடாஷத்தைப் பற்றியே யது நிற்கும் என்னும் கருத்தினராய்
பிராட்டியின் விளையாட்டிற்காகவே இறைவன் இவ்வுலகைப் படைத்தான் என்கிறார் –

காலே சம்சதி யோக்யதாம் சிதசிதோ ரன்யோன்ய மாலிங்கதோ
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை
அண்டா நாவரணைஸ் சஹஸ்ர மகரோத் தான் பூர் புவஸ் ஸ்வர வத
ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி தே விஹ்ருதயே சங்கல்பமாந ப்ரிய —-19-

காலே -படைத்ததற்கு முந்திய காலம்
சம்சதி யோக்யதாம் -தகுதியை அறிவிக்கும் சமயத்தில் -பருவ காலம்  வந்தவாறே –
சிதசிதோ ரன்யோன்ய மாலிங்கதோ-ஜீவ பிரகிருதி தத்வங்கள் ஒன்றுக்கு ஓன்று கலந்து இருக்கும் பொழுது

சங்கல்பமாந ப்ரிய-நின் அன்பன் படைப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு-
பஹூச்யாம்-மனசைவ  – ஜகத் ஸ்ருஷ்டிம் -நினைத்த
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை -என்னக் கடவது இறே

ஸ்ரீ ரங்கேஸ வர  தேவி-தே விஹ்ருதயே -பெரிய பிராட்டியாரே – உனது விளையாட்டிற்காக
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை-
ஐம் பூதங்கள் என்ன
அஹங்கார தத்வம் என்ன
புத்தி -மஹத் தத்வம் என்ன-புத்தி –துணிபு -உறுதி -மஹான்வை புத்தி லஷண –
பஞ்சீ கரணீ-ஐந்து ஞான இந்த்ரியங்கள் என்ன
ஸ்வாந்த -மனம் என்ன
ப்ரவ்ருத் தீந்த்ரியை–கர்ம இந்த்ரியங்கள் என்ன

ஐம் புலன்களை இங்கு கூறாது விட்டது அடுத்த ஸ்லோகத்தில் விசேஷித்துக் கூறுதற்கு என்க-

அண்டா நாவரணைஸ் சஹஸ்ர மகரோத் தான் பூர் புவஸ் ஸ்வரவத
ஏழு ஆவரணங்களுடன்-தான் -பிரசித்தங்களான-பூ புவர் ஸ்வர்க்க லோகங்கள் இவற்றை யுடைய –
சஹஸ்ரம் அண்டான் -பக அண்டங்களை
அகரோத் -படைத்தான் –
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் சஹாஸ்ராண் யயுதா நிச ஈத்ருசா நான் தத்ர கோடி கோடி சதா நிச –

கலந்த வுயிர் சடப் பொருளை யாக்கக் காலம் கருதும் கால் ஐம் பூத  மாநாங்காரம்
புலன் உள்ளம் கன்மேந்த்ரியங்களாலே பூர்ப் புவச் சுவர் லோகமுடைய வண்டம்
பல வாயிரங்கள் மதிள்  ஏழி னோடும் படைத்தனனாற் சங்கல்ப்பித்து உனது கேள்வன்
இலங்ரு திருவரங்க நகர்க்கு இறைவன் தேவி இன்புற்று நீ விளையாட்டயர்வதற்கே–19-

———————————————————————

இந்த பிரக்ருதியினாலேயே சேதனர்களை கலக்கி இறைவன் பிராட்டிக்குப்
பரிஹாச ரசம் விளைவிக்கிறார் என்கிறார்-

சப்தாதீன் விஷயான் பிரதர்சய விபவம் விஸ்மார்யா தாஸ்யாத்மகம்
வைஷணவ்யா குண மாய யாத்ம நிவ ஹான் விப்லாவ்ய பூர்வ புமான்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூரத்தா நிவா யாசயன்
ஸ்ரீரங்கேஸ்வரி கலப்பதே தவ பரீஹாசாத் மநே  கேளயே–20-

சப்தாதீன் விஷயான் பிரதர்சய விபவம் விஸ்மார்யா தாஸ்யாத்மகம்
ஒலி முதலிய நுகரும் பொருள்களை காட்டி -அடிமை வடிவான-கைங்கர்ய தநம் –
அடிமைச் செல்வத்தை மறக்கச் செய்து -செவி முதலிய புலன்களால் நுகரப் படும்

ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் இவற்றை
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் -போன்றவை சப்தாதி விஷயங்கள் –
பல நீ காட்டிப் படுப்பயோ –

நுகர்வித்து என்னாமல்
காட்டி -பிரதர்சய என்று கொடுமையைக் காட்டியபடி –

இழக்கும்படி செய்து என்னாமல்
மறக்கும்படி செய்து -விச்மார்ய-என்றது
ஆத்மாவுக்கு உரிய செல்வம் தாஸ்யம்

ஆவிஸ்ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய -என்று அஷ்ட ஸ்லோகியில் அருளிச் செய்கிறார் –
மறந்தேன் உன்னை முன்னம் -என்பர் –

பூர்வ புமான் -ஆதி புருஷனான ஸ்ரீ ரங்க நாதன் –

வைஷணவ்யா குண மாய யாத்ம நிவ ஹான் விப்லாவ்ய –
விஷ்ணுவான தன்னைச் சேர்ந்த முக் குணங்கள் வாய்ந்த பிரக்ருதியினாலே ஆத்மா வர்க்கங்களை கலக்கி –
குணமாயா சமாவ்ருத -ஜிதந்தே -குணமாய் மம மாயா -ஸ்ரீ கீதை –
ஆத்மா நிவஹான் –புமான் –த்ரிபிர் குண மயைர் பாவை ரேபிஸ் சர்வமிதம்  ஜகத் மோஹிதம்-யாவரும் மயங்குவார் –
ப்ருஹ்மாத்யாஸ்  சகலா தேவா மனுஷ்யா பசவஸ்  ததா விஷ்ணு மயா மஹாவர்த்த மோஹாந்த தமஸா வ்ருதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி யுன் னடிப் போது நான் அணுகா வகை செய்து போதி  கண்டாய்-

பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூரத்தா நிவா யாசயன்
பண்யவதூ -விலை மாதரை
விடம்பி -ஒத்த
வபுஷா -வேஷம் அணிந்த
பும்ஸா -புருஷனாலே
தூர்த்தான் இவ -காமுக புருஷரைப் போலே
ஆயாசயன் -வருத்தமுறச் செய்து கொண்டு –

பெரிய திருமொழி -1-6-1-வ்யாக்யானத்தில்
ஆண் பிள்ளைச் சோறாள்வியை-ஸ்திரீ வேஷம் கொண்ட புருஷனை -ஸ்திரீ என்று பின் தொடருமா போலே
இருப்பதொன்று இறே
சப்தாதி விஷயங்களில் போக்யதா புத்தி பண்ணி
பின் தொடருகை யாகிற இது -பெரியவாச்சான் பிள்ளை –

கொடுத்த சைதன்யம் தான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலகிப் போய்
அனர்த்தத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற படியைக் கண்டு –
நாம் ஒன்றை நினைத்துச் செய்ய இவை ஒன்றைச் சூழ்த்துக் கொண்டபடி கண்டாயே –
என்று பிராட்டி திரு முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ண
அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாய்த் தலைக்கட்டும் -என்ற ஈட்டின் ஸ்ரீ ஸூ க்திகள்-

ஸ்ரீரங்கேஸ்வரி கலப்பதே தவ பரீஹாசாத் மநே  கேளயே–
நினது பரிஹாச ரூபமான விளையாட்டிற்கு வல்லவன் ஆகிறான் –

பொல்லாத புலன் ஐந்தும் நன்கு காட்டிப் பொன்னடிமைத் திறத்தினையே மறக்கச் செய்து
தொல்லாதி புருடனுயிர்களை மயக்கி விண்டு குண மாயையினால் பொது வென் சொல்லார்
நல்லார் போல் நய வடிவம் பூண்ட ஆணால் நயக்கின்ற காமுகரைப் போல் வருத்தி
வல்லானாய் நினது நகைச் சுவை யாட்டத்தில் வளர ரங்க நாயகியே விளங்குகின்றான் -20-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: