ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-9/10/11/12/13/14–

தமது வேண்டுகோளின் படியே சிறந்த கவிதா சக்தியைப் பெற்ற ஆசிரியர் ஸ்ரீ ரங்க நாதனை நோக்கி
நின்னிலும் சிறப்புடையவளாக பிராட்டியைக் கூறுகின்றோம் -நன்கு கேட்டு மகிழ்ந்து அருள்க -என்கிறார் —

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச தவச ஹ்ருதயம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோப்யுச் ஐஸ்வர்யமிஹ பணாமச் ஸ்ருணுதராம்
த்ருசௌ தேபூயாஸ்தாம் ஸூக தரளதாரே ஸ்ரவணத
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ கஞ்சுகசுதம் –9-

ஸ்ரீயச் ஸ்ரீச் -திருவுக்கும் திருவே -அவளுக்கும் சிறப்பு தருபவன் நீயே என்று சமாதானம் அருள்கிறார் இத்தால்
பார்த்தா நாம பரம் நார்யா பூஷணம் பூஷணா தபி –
ஸ்ரீ யச் ஸ்ரீ ச்ச பவே தகர்யா -ஸ்ரீ ராமாயணம்
திருவுக்கும் திருவாகிய செல்வா –
கச் ஸ்ரீச் ஸ்ரீரிய –த்வாஞ்ச ஸ்ரீ யச் ஸ்ரீ ரிய முதாஹூ ருதாரவாச -ஆளவந்தார் –
ஸ்ரீ ரங்கேச-ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டு அருள்பவனே –
திருவுக்கும் திரு என்று பரத்வம் சொல்லி இங்கே சௌலப்யம் ஸ்ரீ ரங்கேச என்கிறார்
அரவணைத் துயிலுமா கண்டு உடலுருகலாம்படியான போக்ய பூதன் நீ -உனக்கும் போகய பூதை அவள் –
தவச ஹ்ருதயம் பகவதீம் -ஸ்ரீரியம்-நினக்கும் கூட திரு உள்ளத்துக்கு பிடித்த நற் குணங்கள் வாய்ந்த
பிராட்டியை -அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை  மார்பன் அன்றோ –
த்வத்தோப்யுச் ஐஸ்வர்யமிஹ பணாம-நின்னிலும் மேலாக யாம் இங்கு கூறுகின்றோம் –
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-

இஹ -இந்த பிரபந்தத்தில் -இவ்விடத்தில் -நினது முன்னிலையிலே –
ஸ்ருணுதராம்-நன்கு கேட்டருளுக-இத்தைக் கேட்டதும் மெய் மறந்து இருக்க கேளாய் -என்கிறார் –
த்ருசௌ தேபூயாஸ்தாம் ஸூக தரளதாரே ஸ்ரவணத-கேட்பதா நினது திருக்கண்கள் ஸூகத்தாலே பிறழ்கிற
கரு விழிகளை யுடையனவாய் ஆயிடுக –
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ  கஞ்சுகசதம் -மேலும் ஹர்ஷத்தின் மிகுதியாலே பூரித்த திருத் தோள்களிலே
பல அங்கிகள் வெடித்திடுக-புனர் -மேலும்
அடிக்கடி என்னவுமாம் -கர்ம சம்பந்தத்தால் -மலராத  குவியாத திருமேனி
ஹர்ஷத்தாலே விகாரம் தவிர்க்க ஒண்ணாது இறே-

இருவருமான சேர்த்தியிலே இந்த ஸ்தோத்ரம் விண்ணப்பம் செய்யப் படுவதாக தெரிகிறது –
ஸ்ரீ ரங்கேசய-விளி-புஜயோ-ஹ்ருதயம் -என்பதால் பிராட்டியைப் பற்றிய ஸ்லோகம் என்றதாயிற்று –
தனது ஸ்திதியை விட அவளது ஸ்துதியை விரும்பிக் கேட்பான் அன்றோ –
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ-ஈச்வரீம் சர்வ பூதாநாம் –அச்யேசாநா ஜகதோ விஷ்ணு பதநீ –
திருவாய்மொழி -5-9-3- ஸ்ரீ  ஸூக்திகளும் இங்கே அனுசந்தேயம்-

திருவுக்கும் திருவே ஸ்ரீ அரங்கில் பள்ளி சேர்வோனே நினக்கு மனக்கு இனியளான
திரு மகளைப் பகவதியை நினக்கும் மேலாச் செப்புகின்றோம் யாமிங்கு நன்கு கேளாய்
கரு விழிகள் பிறழ்ந்திடுக நினது கண்ணில் காது கொடுக்கும் சுகத்தால் கஞ்சுகங்கள்
இரு புயமும் பொருமி மிக வுவகை கூர எண்ணில் அடங்காது வெடிபடுக மேலும் –9

————————————————————————————

கீழ்ப் பிரதிஜ்ஞை செய்த படி பிராட்டியத் ஸ்துதிக்க கருதி அவளது ஸ்வரூபாதிகள் உடைய சித்திக்கு
இதிஹாசாதிகளுடன் கூடிய ஸ்ருதியே பிரமாணம் -என்கிறார்-

தேவி ச்ருதிம் பகவதீம் பிரதமே புமாம்ச
த்வத் சத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி
தத்த்வார பாடந படூ நிச சேதிஹாச
சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி –10-

பிரதமே புமாம்ச   –முன்னோர்களான புருடர்கள் -வால்மீகி பராசராதிகள் –
ப்ரபன்ன குல  முன்னோர் -நம்மாழ்வார் பூர்வாச்சார்யர்கள்
பராங்குசாத்யா vரதமே புமாம்ச -என்கிறார் -ஸ்ரீ ரெங்கராஜ  ஸ்த்வத்திலும்-
மணி கோச க்ருஹம் -ரத்னக் குவியலின் இல்லங்கள் /
சுருதி -ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் வேதங்கள் –மாநாதிநாமேய சித்தி /
தத்த்வார பாடந படூ நிச -அதன் வாயிலைத் திறப்பதில் திறமை உள்ளவைகளாகவும்
க்ருணந்தி-கூறுகிறார்கள் –
த்வத் வத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-பிராட்டியின் சம்பந்தத்தாலே குணங்கள் நன்மை பெறுகின்றன –

குணங்களை என் கூறுவது கொம்பினைச் சேர்ந்தவை உய்யப் பிணங்குவன -கம்பர் –
குனௌக-கல்யாண குணக் கூட்டங்கள் திரள் -அநந்தம்
போக்யமாதாலானும் ஜ்வலிப்பதனாலும் மங்கள கரமாதலானும் -இவற்றை ரத்னமாகவும்
ஸ்ருதியை பொக்கிஷமாகவும்-இவற்றை கூடமாய் வைக்கப் பட்டமையால் -உருவகப் படுத்தி அருள்கிறார் –
மேதாவிகளே கண்டு எடுத்து அனுபவிக்க முடியும் –
கோச க்ருஹம்-ஸ்ரீ குண ரத்ன கோசம் -ஒருவாறு தோன்றுமே இப்பிரபந்த திரு நாமமும் –
ஸ்ருதியின் தேர்ந்த பொருளே இப் பிரபந்தமாக அமைந்தது –
கர்ம ஞான பாகம் இரண்டுமே பிராட்டியைப் பற்றியதே –
மேன்மை பாரதந்த்ர்யம் இவளுக்கே உண்டான தனிப் பெரும் கல்யாண குணங்கள்
ஏகைவ வர்த்ததே பினனா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே -நிலாவையும் ஒளியையும் போலே பிரிக்க முடியாத மிதுனம் இறே-

பொக்கிஷத்தின் உள்ள புக கதவைத் திறக்க வேண்டுமே -அதற்கு திறவு கோல்கள் இதிகாசாதிகள் என்கிறார் மேல் –
தத்த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி –
சம் தர்க்கணம்-நேர்மையான தர்க்கம் -மீமாம்சை போல்வன
ஸ்ம்ருதி -மனு முதலியன
புராணம் ஸ்ரீ விஷ்ணு புராணாம் போல்வன
இவைகளை முன்னிட்டவை என்றது திவ்ய பிரபந்தங்களை –
இதிஹாச புராணாப்யாம்  வேதாந்தார்த்த பிரகாச்யதே –
ப்ராயேண பூர்வபாகார்த்த பூரணம் தர்ம சாஸ்த்ரத –
யஸ் தர்க்கேன அநு சந்தத்தே சதர்மம் வேத நே-தா –
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெரியவோதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –

இறைவனை வெளிப்படையாக சொல்லி யாராலே அவன் பர ப்ரஹ்மமாக ஆயினானோ அவள் பெருமையையே இவை சொல்லும் –
அபாங்க பூயாம்ச ஸ்லோகம் இத்தை விவரிக்கும்-
வேதோப ப்ருஹ்மணார்த்தாய தவாக்ராஹயத பிரபு என்ற ஸ்ரீ ராமாயணம் சீதாயாச்சரிதம் மஹத் என்று
சிறை இருந்தவள் ஏற்றம் கூறுகிறது
இறைவனைக் கூறின பொழுதே பிராட்டியையும் கூறினதாகும் –
விட்டுப் பிரியாத குணங்கள் போலே விசேஷணமாக இருப்பதால் –

புருடர்கள் புகல்வர் தொல்லோர் புன்மைகள் சிறிதும் புல்லாச்
ஸ்ருதியைத் தேவி நின்ன சுப குண மணி  வீடு என்றே
செறி புதா திறக்கும் சீர்மை கெழுமிய திறவு கோலே
தருக்க நல் லிதிகாசங்கள் தரும நூல் புராணமாதி -10

——————————————————————————

இப்படி பிரமாணங்கள் இருந்தும் உண்மையை அறியாதாராய் சம்சாரத்தில் உழன்று இழந்து
இருக்க காரணம் பிராட்டியின் கடாஷத்துக்கு   சிறிதும் இலக்காமையே -என்கிறார் –

ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன கதிச அராஜகம் விச்வமேதத்
ராஜன்வத் கேசிதீசம் குணி நமபி குணைஸ் தம் தரித்ராண மன்யே
பிஷா வந்யே ஸூ ராஜம்பவ மிதிச ஜடாஸ் தே தலாதல் யகார்ஷூ
யே தே ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே ந ஷணம் லஷ்யமாசன் –11  –

ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே-ஸ்ரீ ரங்க விமானத்தினுடைய முற்றத்தின் கண் உள்ள தங்கக் கொடியே-
யே தே -லஷ்யம் -எவர்கள் உன்னுடைய -கடாஷத்துக்கு இலக்காக
ந  ஆசன்-ஆக வில்லையோ
தே ஜடா கதி சன -அந்த அறிவிலிகளான சிலர்
ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் –
கத்திச -மற்றும் சிலர்
ஏதத் விச்வம் அராஜகம் -இந்த உலகத்தை இறைவன் அற்றதாக சொல்லினர் –
கேசித் ராஜன்வத் -வேறு சிலர் நல்ல இறைவனை யுடையதாகச் சொல்லினார்
அன்யே -மற்றையோர்
தம் ஈசம் குணி நம் அபி -குனி தரித்ராணாம் -அந்த நல்ல இறைவனை நியமிப்பவனாயும் குணம் உள்ளவனாயும் இருந்தாலும்
குணங்களாலே சூன்யனாக சொல்லினார்
அன்யே பிஷௌ ஸூ ராஜம்பவம் -வேறு திறத்தோர் பிச்சை எடுப்பவனிடம் நல்ல இறைமையை சொல்லினர்
இத்திச தலாதலி அகார்சா -இவ் வண்ணமாகவும் கையினால் அடித்துக் கொள்ளும் சண்டையை செய்தனர் –

சிலர் -என்று அநாதாரம் தோற்ற பாஹ்ய குத்ருஷ்டிகளை அருளிச் செய்கிறார்
அனுமானத்தால் அறியலாம் -பரமாணுவே காரணம் என்பர் காணாத மதத்தார்
நிர்குணன் என்பர் அத்வைதிகள் –
அனைவரையும் சேர்த்து ஜடர் என்கிறார் -தங்களுக்குத் தாங்கள் அடித்துக் கொள்கிறார்கள் -நிரசிக்க வேண்டியது நமது பணி அல்ல –
பொற் கொடியாக  கூறி -ஒளி  யுடைமை -எழில் உடைமை -சிறிது கடாஷம் பெற்றாலும் ச பண்டிதர் ஆவார்களே –
உண்மை அறிவு பெற்று இருப்பார்கள் –

வேதங்கள் பிரமாணம் அல்ல என்பார் வியனுலகுக்கு இறையவனே இல்லை என்பார்
நாதன் உண்டு இவ்  யுலகிற்கு நல்லன் என்பார் நலனுடைய   வவன் தனை நிர்க் குணனே என்பார்
ஏதம் கொள் இரப்பாளன் இறைவன் என்பார்  இப்படியே மதி கேடர் அடித்துக் கொள்வர்
போது இறையும் அரங்கத்து விமான முற்றப் பொலங்கொடியே இலக்கு நினக்கு ஆகாதாரே -11

பொலங்கொடி-தங்கக் கொடி-

————————————————————————

பிராட்டியின் கடாஷத்திற்கு இலக்கான பாக்யவான்களே வேதாந்தத்தின் புதை பொருளாகிய பிராட்டி யுடைய
மஹிமையைக் கண்டு அனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் -என்கிறார் –

மனஸி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்ஜநேந
சுருதி சிரஸி நிகூடம் லஷ்மி தே வீஷமாணா
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யேபி தன்யா
ந நு பகவதி தைவீம் சம்பதந்தே பிஜாதா –12-

உட்கண்ணில் பக்தி என்னும் சித்தாஞ்சம் இட்டுக் கொண்டே மலை-மறை  உச்சி போன்ற இடங்களில்
ஒளித்து வைக்கப் பட்டுள்ள பிராட்டி மகிமை என்னும் புதையலை கண்டு அனுபவிக்கப் பெறுகின்றனர் –

அஷ்ணா -ஞானக் கண்ணாலே
வீஷமாணா -பார்க்கப் பெற்றவர்களாய்
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்கள்
நி கூடம் -நன்றாக மறைக்கப் பட்டுள்ள –
தே தைவீம் சம்பத ம்பி ஜாதா ந நு – -அவர்கள் தேவ சம்பந்தம் பெற்ற சம்பத்தைக் குறித்து பிறந்தவர்கள் அல்லவா
யேபி தன்யா -தனம் -பாக்யத்தை ப்ராப்தா எய்தினவர் தன்யா பாக்யவான்கள் –
கடாஷத்துக்கு இலக்காகியே பாக்கியம் அபி -அளவிடமுடியாத அவர்கள் சிறப்பைக் காட்டும் –
தைவீம் சம்பதம் தேபி ஜாத-தைவ சம்பத் ஆசூர சம்பத் -சாஸ்திரம் பின் செல்வாரும் மீறுவாரும்-
மோஷ நரக ஹேதுக்கள்-சம்பதம் தைவீம் அபிஜாத -ஸ்ரீ கீதை
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -பக்தியாலே அறிந்து அடைகின்றான் –
த்ரஷ்டும் ப்ரவேஷ்டும் அபி பக்தித ஏவ சக்ய-கூரத் ஆழ்வான்-
ஆளவந்தார் –நைவாஸூர ப்ரக்ருத்ய பிரபவந்தி போத்தும்-என்றும் –
பச்யந்தி கேசி தநிசம்  த்வத நன்ய பாவா -என்றும் -அருளிச் செய்தாது போலே
கூரத் ஆழ்வானும்-ஸ்ருத்யர்த்த மர்த்தமிவ பாநு கரைர் விபேஜ த்வத்  பக்தி  பாவித்த விகல்மஷ சேமுஷீகா-என்றும்
யேது த்வதங்க்ரி சரசீருஹ பக்தி ஹீநா தேஷா மமீபிரபி நைவ யதார்த்த போத -என்றும் -அருளிச் செய்தாது போலே –
நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்ஜனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில் -என்று அருளிச் செய்கிறார் ஆசார்ய ஹ்ருதயகாரர்–

பத்தி சித்தாஞ்சனத்தால் பகவதி மறையில் முடி
வைத்த நின் மகிமை கண்டு மனக் கணின்   நிதியே போலத்
துய்த்திடுவோர்கள் செல்வி துகளறு பாக்கியத்தால்
மெய்த் திருவான தெய்வப் பிறவியே மேயார் அன்றே –12

மெய்த் திரு -உண்மைச் சம்பத்து
தெய்வப் பிறவி -தைவீ சம்பத் -உள்ளவர்கள்
மேயார் -மேவியார் -மேயான் வேங்கடம் -எனபது போலே –

——————————————————————————–

உப ப்ருஹ்மணங்களோடு கூடிய வேதம் பிராட்டியைப் பற்றியது என்று கீழ் -தேவிக்ருதம் -என்ற
ஸ்லோகத்தில் கூறியதை விளக்குகிறார் மேல் இரண்டு ஸ்லோகங்களால்-

அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்
ஸ்ரீ ச் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முகயதே தாஞ்ச சாகா நுசாகம்
ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த
தஞ்ச த்வத்கம் பாதிமதி ஜகா யுத்தரச் சாநுவாக –13-

சம்ருத்திம் -ஐஸ்வர் யத்தை
அதீமஹே-ஒதுகின்றோமோ –
அஸ்யேசா நா ஜகத-பூர்வ காண்டத்தில் உள்ள சுருதி வாக்யத்தை அப்படியே கையாளுகிறார்
சாகா நுசாகம் -இதம் ஹி பௌருஷம்ஸூ க்தம் சர்வ வேதேஷூ பட்யதே-போலே ஸ்ரீ ஸூக்தமும் சாகைகள் தோறும் உள்ளது
பஹூ முக்யதே சாகா நுசாகம் -மேலும் மேலும் பல்கிப் பரி பூரணமாக -என்றபடி –
ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-இவ் வனைத்தும் புருஷனே என்றது புருஷ ஸூக்தம் –
அம்ருதத்வத்திற்கு -மோஷத்திற்கு -ஈச்வரனே என்று ஸ்பஷ்டமாகவும் கூறுகிறது என்பதை ஈஷ்டே கச்சிஜ் ஜகத -என்கிறார்
தாம்ச -புருஷ ஸூ க்தத்தில் சொல்லப் பட்டவனையும் நாராயண அனுவாகாதிகளிலே சொல்லப் பட்டவனையும் -என்றபடி
யுத்தரச் சாநுவாகச்ச -அத்ப்யஸ் ஸ்ம் பூத -என்று தொடங்கும் அடுத்த அனுவாகம்
உம்மை -லஷ்மி ஸ்ரத்தையால் தேவன் தேவத் தன்மையை அடைகிறான் எனபது போன்ற வாக்யங்கள் –
அந்தப் புருஷனை யான் அறிகின்றேன் -புருஷ ஸூக்தம் நாராயண அனுவாகம் மனுவாகத்திலும் வாக்யங்கள் ஒற்றுமை உற்றுக் காணப்படும்
பிராட்டிக்கு பிரதானம் கொடுத்து பேசுகிறார் –
சேஷித்வே பரம  புமான் பரிகராஹ் யேதே தவ ஸ்பாரணே-என்று மேலேயும் அருளிச் செய்வார் –

இறைவி இவ் உலகத்திற்கு என்று ஒதுகின்றமை தன்னை
நெறி பல விரித்து மேன் மேல் நிகழ்த்துமே திரு நின் ஸூக்தம்
இறை எனப் புருட ஸூக்தத் தியம்பிய ஒருவனைப் பின்
மறை யநுவாக முன் தன் மகிழ்நன் என்று ஓதும் அன்றே   –13-

——————————————————————

மறை முடிகளுக்கு மாத்திரமன்றி ஸ்ரீ இராமாயணம் முதலிய உபப் ருஹ்மணங்களும்
நினது மகிமையிலே நோக்கம் -என்கிறார் —

உத்பாஹூஸ்த்வா முபநிஷதஸா வாஹநைகா நியந்தரீம்
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே
ஸ்மர்த்தாரோஸ் மஜ் ஜநநி யதமே சேதிஹாசை புராணை
நிந்யூர் வேதா நபிஸ ததமே தவன் மஹிம்நி பிரமாணம் –14-

அஸ்மத் ஜநநி -எமது அன்னையே –
உத்பாஹூஸ்த்வா முபநிஷதஸா வாஹநைகா நியந்தரீம்-
ஸ்ரீ ஸூக்தாதி உபநிஷத் மட்டும் கையை உயர்த்திக் கொண்டு உன்னை இறைவியாக கூறவில்லை –
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜ முச்யதே -முக்காலும் உண்மை -பிராட்டியே உலகிற்கு இறைவி என்று
உபநிஷத் சத்யம் செய்கின்றனவாம்
அசௌ-என்று முன் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட ஸ்ரீ ஸூக்தத்தைச் சுட்டியது
பின்னையோ எனின் –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே-ஸ்ரீ மத் ராமாயணமும் கூட நினது வரிதர விஷயமாக மிகவும் பேசி ஜீவித்து இருக்கின்றது –
சாஹி ஸ்ரீ என்று செல்வமாகக் கூறப்படும் வேதங்களில் சொன்ன பயன் இராமாயணத்திலும் உண்டாதலின் அதனை ஸ்ரீமத் என்று விசேஷிக்கிறார்
பரம் -விசேஷணம்-இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணம் -த்வத் சரித்ரே பரம் என்று கூட்டி உரைக்கலுமாம்-
பிராட்டி சரித்ரத்தாலேயே ஸ்ரீமத் இராமாயணம் ஜீவித்து இருக்கிறது –
ஜீவிதம் வயங்க்ய வைபவம் உள்ளுறை பொருள் சீதாயாச் சரிதம் மஹத் -புருஷகார வைபவமே பிராட்டியின் சரித்ரம்
கிருபை பாரதந்த்ர்யம் அனன்யார்ஹத்வம்-மூன்றையும் மூன்று பிரிவுகளால் வெளியிட்டு  அருளினாள்
ஸ்மர்த்தாரோஸ் மஜ் ஜநநி யதமே சேதிஹாசை புராணை-எவர்கள் ஸ்ம்ருதி காரர்களோ
அவர்களும் வேதங்களை இதிஹாசங்களோடு கூடிய புராணங்களைக் கொண்டு –
நிந்யூர் வேதா நபிஸ ததமே தவன் மஹிம்நி பிரமாணம் -நினது மஹிமையில் மேற்கோளாக நயப்பித்தனர் -நிரூபித்தனர் –

உயர்த்தி புயமீசுவரியாக வுன்னை உபநிடத மாத்திரமே யுரைக்க லில்லை
உயர்த்தி யுடைச் சீ ராமாயணமும் கூட உயிர் உறுவது உனது நனி சரித்ரத்தால்
உயிர்த் திரளுக்கு ஒரு தாயே மேற் கோளாக உன்னுடைய மகிமையினுக்கு உபபாதித்தார்
செயிர்த் தினையுமில் மறையை மிருதிகாரர் சீர் இதிகாசத்துடனே புராணம் கொண்டே –14–

உயர்த்தி புயம் -புயம் உயர்த்தி என்று மாற்றி
செயிர்- குற்றம்
உப பாதித்தார் -நிரூபித்தார்-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: