ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -தனியன் -அவதாரிகை -முதல் ஸ்லோகம் –

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பராசர பட்டார்யா -ஸ்ரீ பராசர பட்டர் என்ற பெரியார்
ஸ்ரீ ரங்கேச புரோஹித – ஸ்ரீ ரெங்க நாதனுக்கு  புரோஹிதரும் –
எம்பெருமானார் திருவரங்கத்தமுதனார் இடம் கூரத் ஆழ்வானுக்கு வாங்கித் தந்த புரோஹிதம் –
ஸ்ரீ மான் -திருவாளருமான-ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி -தனமாய தானே கைகூடும் -கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தமே சிறந்த செல்வம் –
ஜாதோ லஷ்மண மிச்ர சம்ஸ்ரய தாநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே -எம்பெருமானை ஆஸ்ரயித்ததல் ஆகிய செல்வம் படைத்த
ஆழ்வான் ருஷியின் குமாரர் என்று தாமே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் அருளியது போலே –
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் -ஸ்ரீ கூரத் தாழ்வான் யுடைய திரு மைந்தரும் -ராஜகுமாரன் என்றால் போலே –
ஸ்ரேயசே- மேஸ்து பூயஸே –மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -எனக்கு அதிகமான -நன்மையின் பொருட்டு -ஆயிடுக-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றபடி ஆசார்யர் அபிமானத்தில் ஒதுங்கி
ஆசார்யன் தரக் கொள்ளும் ஸ்ரேயசே சிறந்தது என்பதால் பூயஸ அடைமொழி-

ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளத்தின் படி இடப்பட்ட திரு நாமம் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் –
அதத்த்வேப்ய தூராத் யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா -ஸ்ரீ வேதாந்த தேசிகர் –
அண்ணிக்கும் அமுதூரும் -சொலப்புகில் வாயமுதம் பரக்கும்-ஆசார்யன் திரு நாமம் –
ஸ்ரீ ரெங்க நாதன் -இயற்பெயர் –

சீரார் பராசர பட்டர் திருவரங்கத்
தூரானுக்குக் குற்ற புரோகிதனாம் -கூரத்தின்
ஆழ்வான் புதல்வன் அருஞ்செல்வன் எற்குயர்ந்த
வாழ்வாக வாய்க்க மகிழ்ந்து –
எற்கு -எனக்கு என்றபடி-

——————————————————————–

முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால்  ஸ்துதிக்க    தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள்   ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார்   –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின்  பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார்  –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில்  அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ஸ்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப்  பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார்  –

ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு  ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து  சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –

————————————————————————–

ஸ்ரீயை சமஸ்த சிதசித் விதாந வ்யசனம் ஹரே
அங்கீகாரிபி ராலோகை ஸார்த்தயந்த்யை க்ருதோஞ்சலி–1-

ஹரே -இறைவனது
சமஸ்த சிதசித்-எல்லா சேதனர்களையும் அசேதனர்களையும்
விதாந வ்யசனம் -படைத்ததால் யுண்டான பிரயாசத்தை
அங்கீகாரிபி ராலோகை-ஏற்கின்ற பார்வைகளால்
ஸார்த்தயந்த்யை-பயன் பெறச் செய்யும்
ஸ்ரீயை -பெரிய பிராட்டியாருக்கு
க்ருதோஞ்சலி-அஞ்சலி க்ருத-தொழுகை செய்யப்பட்டது-

ஹரியின் விதாநத்தை – படைத்தலை- தனது  கடாஷத்தால் பயனுறச் செய்து அருளியது போலே
எனது கவிதையையும் பயனுறச் செய்த்து அருள வேணும் -என்கிறார்

ஸ்ரீ -திரு நாமமே தலை சிறந்தது என்பதால் அத்தையே கைக் கொள்ளுகிறார்
ஸ்ரீ ரெங்கநாயகி குண ரத்ன கோசம் என்னாமல்
ஸ்ரீ குணரத்ன கோசம் என்பதால் இத் திருநாமத்தில் இவரது ஈடுபாடு விளங்குமே

ஸ்ரீஆளவந்தாரும் -ஸ்ரீ ரீரித்யேவச நாமதே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் –
ஸ்ரீ ரிதி ப்ரதமம்  நாம லஷ்ம்யாஸ் தன்நிர்வச க்ரமை
தத் ஸ்வ பாவ விசேஷாணாம் யாதாத்ம்ய மவகம்யதே –

எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுபவள் -தான் அவனை ஆஸ்ரயிப்பவள்
ஆஸ்ரித்தவர் குறைபாடுகளை கேட்பவள் -ஆஸ்ரிதர் தோஷங்களைப் போக்குமவள்-
அவர்களை ஏற்குமாறு அவனிடம் கூறுபவள் -அங்கன் கூறுபவைகளை அவனைக் கேட்ப்பிக்குமவள்-
இப்படி ஆறு வகை யுண்டே –

புருஷகாரம் -என்பதே அவனையும் ஜீவர்களையும் இணைத்து வைப்பதே
அஞ்சலி செய்து ஆசரிக்கும் பிரகரணம் ஆதலால் –
இங்கே எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுபவள் என்பதிலே நோக்கு –

சமஸ்த சித் விதானம் –
சிருஷ்டி -உயிர்களை உடலோடும் கருவியோடும் புணர்க்கை –
சமஸ்த -பத்தர் முத்தர் நித்யர்

அசித் விதானம் –
பிரக்ருதியை மகான் அஹங்காரம் முதலிய தத்வங்களாக பரிணமிக்கை-
சமஸ்த சுத்த சத்வம் -மிச்ர சத்வம் -சத்வ ஸூந்யம்-

கடாஷம் இல்லையாகில் வீண் -விசனமாயே முடியுமே -வ்யசனம் என்கிறார்

ஹரி -பிரமனும் இல்லை ஈசனும் இல்லை நாராயணன் இவனே இருந்தான் -ஸ்ருதி-பூதானாம் ப்ரபவோ ஹரி
ப்ருஹ்மாணம் இந்த்ரம்  ருத்ரஞ்ச யமம் வருணமேவச
ப்ரஹச்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் தரிரி தீர்யதே –

ஹரிர் ஹரதி பாபானி -ஆற்றல் தயை பொறை -யுடைமை
உபஹரதீதி ஹரி -சிருஷ்டிக்கும் ஜகத்தை இவளுக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பவன்-
பார்வையினாலே ஏற்றுக் கொள்கிறாள் —

கடாஷ லாபாய கரோதி லோகன் பராக்ரமந்தே பரிரம்பணாய
முதே ச முக்திம் முரபித் ரமே தத் கதம் பலாபாவ கதாஸ்ய கர்த்து-என்றபடி –
பார்த்தாலே பயன் பெற்றது –
படுகின்ற பாடு எல்லாம் இவள் பார்வைக்காகவே –

அஞ்சலி க்ருத -கை தொழுது-காயிக கார்யம் –
செய்யப் பட்டது என்று சொல்வதால் வாசிக நமஸ்காரம் –
நினைத்தே தான் சொல்வதால் மானஸ நமஸ்காரம்
அஞ்சலி செய்யப் பட்டது-அனைவருக்கும் அதிகாரம் என்பதால் செயப்பாட்டு வினை

அஞ்சலி -ஒருமை –
ஒரு காலே செய்தாலே அமையும் –
நிகமத்திலும் அஞ்சலி பரம் வஹதே என்பர்

செய்யப்பட்டது -இறந்த கால பிரயோகம் -பண்டே செய்தது போலே தோற்ற –
இயல்பான சேஷத்வத்தை உணர்ந்த –
அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே-நம் ஆழ்வார் –

பிராட்டியை இறைவனது படைப்பை ஏற்கும் சேதனையாக சொல்லி –  –
அசேதனங்களான சத்தை அஹந்தை மூல பிரக்ருதியே  லஷ்மி என்பாரை நிரசிக்கிறார்

படைக்கும் தொழிலை ஏற்பதால் இறைவனே இலக்குமி என்பாரையும் நிரசிக்கிறார் –

இறைவனே காரணம் இவள் ஊக்குவிப்பவள்-என்றதாயிற்று
அவன் செயலை பயனுறச் செய்வதால் பரத்வமும்
யாமும் ஆஸ்ரயிக்கும்படி சௌலப்யமும் கொண்டவள்

ஹரிர் ஹரதி பாபானி -நமது பாபத்தைப் போக்கும்
அவனது விசனத்தைப் போக்குமவள் -பெரிய பிராட்டியாரே –
நமக்கு என்றும் சார்வு –

அரியின தனைத் துயிர் அல்லவைகளும்
தருமரும் தொழிலினைத் தனது நோக்கினால்
பெரும் பயன் எய்திட ஏற்கும் பெற்றியாள்
திருவினுக்கு அஞ்சலி செய்குவாமரோ–

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: