ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -751–800—–மும்மத விளக்கம் —

ஸூ வர்ண வர்ணோ ஹே மாங்கோ வராங்கஸ் சந்த நாங்கதீ
வீரஹா விஷமஸ் ஸூ ந்யோ க்ருதாஸீ ரசலஸ் சல –79
அமாநீ மாநதோ மான்யோ லோக ஸ்வாமீ த்ரிலோகத்ருத்
ஸூ மேதா மேதஜோ தன்யஸ் சத்யமேதா தராதர –80-
தேஜோ வ்ருஷோ த்யுதி தரஸ் சர்வ சஸ்திர ப்ருதாம்வர
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ–81
சதுர்மூர்த்தி சதுர்பாஹூஸ் சதுர்யூஹஸ் சதுர்கதி
சதுராத்மா சதுர்பாவஸ் சதுர்வேத  விதேகபாத் –82-
சமா வரத்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாசோ துராரிஹா
ஸூ பாங்கோ லோக சாரங்கஸ் ஸூ தந்துஸ் தந்து வர்த்தன –84
இந்த்ரகர்மா மஹா கர்மா க்ருதகர்மா க்ருதாகம
உத்பவஸ் ஸூ ந்தரஸ் ஸூ ந்தோ ரத்ன நாபஸ் ஸூ லோசன
அரக்கோ வாஜஸ நிஸ்  ஸருங்கீ  ஜயந்தஸ் சர்வ விஜ்ஜயீ–85-

—————————————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786—-90 திரு நாமங்கள்

ஸ்ரீ புத்தாவதாரம் -787-810——–24 திரு நாமங்கள்

———————————————————

751-அசல –
துர்யோதனன்  முதலிய துஷ்டர்களால் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வரூபம் சக்தி ஞானம் முதலிய குணங்கள் எப்போதும் மாறாதவர் -ஸ்ரீ சங்கரர் –

அசையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

752-சல –
அடியவர்களான பாண்டவர் முதலியோருக்காக தம் உறுதியையும் விட்டு விலகுபவர் -ஆயுதம் எடுப்பது இல்லை
என்ற பிரதிஜ்ஞை செய்து இருந்தும் சக்ராயுதத்தால் பீஷ்மரை தாக்கச் சென்றவர் அன்றோ – -ஸ்ரீ பராசர பட்டர் –

வாயு ரூபத்தினால் சஞ்சரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

அசைபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

753-அமாநீ-
பக்தர்கள் விஷயத்தில் தம் உயர்வை நினையாதவர் -அதனால் அன்றோ தயக்கமின்றித் தூது சென்றது -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக நினையாதவர் -ஸ்ரீ சங்கரர் –

விஷயங்களில் பற்று  இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

754-மா நத-
அர்ஜூனன் உக்ரசேனன் யுதிஷ்ட்ரன் முதலியோர்க்கு தாம் கீழ்ப் பட்டு இருந்து கௌரவத்தை அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் மாயையினால் எல்லோருக்கும் ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக நினைக்கும்படி செய்பவர் -பக்தர்களுக்கு கௌரவம் தருபவர் –
அதர்மம் செய்தவர்களின் கர்வத்தை  அழிப்பவர்-தத்தம் அறிந்தவர்களுக்கு ஆத்மா அல்லாதவற்றை
ஆத்மாவாக நினைக்கும் மயக்கத்தைப் போக்குபவர் – ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மிக்கு வாயுவைப் பிள்ளையாகத் தந்தவர் -கட்டுப் பாட்டை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

755-மாந்ய-
அடியவர்களுக்கு  கீழ்ப் பட்டு இருப்பதையே தம் பெருமையாக கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வேஸ்வரர் ஆதலின் எல்லோராலும் பூஜிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மி மற்றும் ஜீவ ராசிகள் இடமிருந்து வேறுபட்டவர் -அசைக்க முடியாதவர் -ஸ்ரீ லஷ்மி தேவியைத் தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

756-லோக ஸ்வாமீ-
இப்படிச் செய்பவர் யார் என்னில் உலகுக்கு எல்லாம் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பதினான்கு உலகங்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் –

ஸ்ரீ வைகுண்டம்  முதலிய உலகங்களில் உள்ளவர்க்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

757-த்ரிலோகத்ருத் –
அனைவரையும் தரித்து வளர்த்துக் காப்பவர் -மிகவும் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களுடன் இதனாலே சேர்ந்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூ வுலகங்களையும் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களையும் சுமப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

758-ஸூ மேதா –
தம்மை ஆராதிப்பவர்களுக்கு நன்மை தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

759-மேதஜ-
தேவகியின் யாகத்தின் பயனாகத் திரு வவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகத்தில் யுண்டாகுபவர் -ஸ்ரீ சங்கரர் –

யாகத்தில் யுண்டாகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

760-தன்ய-
இப்படி திருவவதரிப்பதை தன் லாபமாக நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பெற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாலிகள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————-

761-சத்ய மேதா-
ஆயர்கள் வஸூதேவர் முதகியோரைச் சேர்ந்தவர் தாம் எனபது வெறும் நடிப்பாக அல்லாமல் உண்மையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையான ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகின் விஷயத்தில் ஞானம் உள்ளவர் -உண்மையான ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

762-தராதர –
ஸ்ரீ கோவர்த்தன மலையை தரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ஆதிசேஷன் முதலிய தன் அம்சங்களால் பூமி முழுவதும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் –மேரு மந்த்ரம் முதலிய மலைகளை நன்கு தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

763-தேஜோ வ்ருஷ –
இப்படி அடியவரைக் காப்பதில் தம் சக்தியைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூர்ய ரூபியாக ஜலத்தை ஒளியைப் பொழிபவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளி மயமான சூரியன் முதளியவர்களில் சிறந்தவர் —
தேஜஸ்சை யுடைய ஸூர்யனைக் கொண்டு மழை பொழியச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————————

764-த்யுதிதர –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இளமையிலும் இந்திரனைத் தோற்கச் செய்யும் அதி  மானுஷ சக்தியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தேக ஒளியை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

ஒளியைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

765-சர்வ சஸ்த்ரப் ருதாம் வர –
நரகன் ஜராசந்தன் ஆகியோருடனான போரில் அஸ்தரம் பிடித்த எல்லோரிலும் சிறந்து விளங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயுதம் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து ஆயுதங்களைப் போலுல்லவர் -ஆகாயத்தைத் தாங்குபவர் -சர்வ சஸ்திர ப்ருதம்பர  -என்று பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

766-ப்ரக்ரஹ –
தாம் சாரதியாக இருந்து கொண்டு அர்ஜூனனைக் கடிவாளம் போல் இழுத்துப் பிடித்துத் தம் சொற்படி அவனை நடத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களால் சமர்ப்பிக்கப்படும் இலை பூ முதலியவற்றை ஏற்றுக் கொள்பவர் –விஷயங்கள் என்னும் காடுகளில் ஓடும்
இந்த்ரியங்கள் ஆகிற குதிரைகளைக் கடிவாளம் பிடித்து இழுப்பது போல் அடக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த நவ க்ரஹங்களை உடையவர் -சிறந்த சோம பாத்ரங்கள் உள்ளவர் -சிறந்தவர்களை ஏற்றுக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

767-நிக்ரஹ –
அர்ஜூனனது வீரத்தை எதிர்பாராமல் தாம் செய்த சாரத்யத்தினாலேயே எதிரிகளை அடக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தம் வசத்தில் அடக்கி வைத்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

768-வ்யக்ர-
அர்ஜூனன் விரோதிகளை அடக்குவதில் அவன் யுத்தம் செய்யும் வரை  பொறுத்திராதவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் வேண்டுவனவற்றைக் கொடுப்பதில் துடிப்பு உள்ளவர் –அழிவில்லாதவர்-ஸ்ரீ சங்கரர் –

அவ்யக்ர-கலக்கம் இல்லாதவர் -வ்யக்ர -தம் முன்னே கருடனை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

769-நைக ஸ்ருங்க –
புத்தியினால் வழி சொல்வது -சாரதியாக இருப்பது -ஆயுதம் எடுப்பது இல்லை என்று சொல்லி எடுப்பது -முதலிய பல
வழிகளால் பகைவர்களுக்குப் பல துன்பங்களை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வ்ருஷ ரூபத்தில் அநேக கொம்புகள் உள்ளவர் –
ஸ்ரீ வராஹ திருவவதாரத்தில் ஒரே கொம்புள்ள பரம புருஷனாக இருந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————

770-கதாக்ரஜ-
கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -கண்ணன் -ஸ்ரீ பராசர பட்டர் –

மந்த்ரத்தினால் முன்னே ஆவிர்ப்பவிப்பவர் —
நிகதம் -மந்த்ரங்களை விளக்கமாக ஓதுவது -நி கேட்டு கத அக்ரஜர்-மந்த்ரத்தினால் முன்னே ஆவிர்ப்பவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் —
அகதாக்ராஜா -என்று அந்தணர்களுக்கு ரோகம் இல்லாமல் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

771-சதுர்மூர்த்தி –
பலராமன் -வஸூ தேவன் பிரத்யும்னன் அநிருத்தன் என்று யதுகுலத்திலும் நான்கு மூர்த்திகளை உடையவர்
-ஸ்ரீ கண்ணனாகிய விபவத்திலும் அதற்கு மூலமான வ்யூஹத்தை நினைவு ஊட்டுகிறார்- ஸ்ரீ பராசர பட்டர் –

வெண்மை செம்மை பசுமை கருமை ஆகிய நான்கு நிறங்களோடு கூடிய மூர்த்திகள் உள்ளவர் -விராட்
ஸ்வரூபம் ஸூ த்ராத்மா -அவ்யாக்ருதம் துரீயம் என்கிற நான்கு உருவங்களுடன் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விஸ்வ தைச்ச ப்ராஜ்ஞ திரிய என்னும் நான்கு ரூபங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

772-சதுர்ப்பாஹூ-
வ்யூஹத்திற்கு மூலமான பர ஸ்வரூபம் ஆகிய நான்கு திருக் கைகளோடு தேவகியிடம் பிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு கைகள் உள்ளவர் -என்ற திரு நாமம் வாஸூ தேவருக்கே உரியது-ஸ்ரீ சங்கரர் –

நான்கு தோள்கள் உள்ளவர் -முக்தி அடைந்தவர்களை நான்கு தோள்கள் உள்ளவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————–

773-சதுர் வ்யூஹ-
விபவத்திலும் வ்யூஹத்தில் போலே ஆறு குணங்களும் நிரம்பியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு பிரிவுகளை உடைய வ்யூஹத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்கு வித வ்யூஹங்கள் உள்ளவர் -கேசவன் முதலிய இருபத்து நான்கு ரூபங்களுள் கேசவன் முதலிய ஆறு –
த்ரிவிக்ரமன் முதலிய ஆறு -சங்கர்ஷணன் முதலிய ஆறு -நரசிம்ஹன் முதலிய ஆறு ஆக நான்கு வகை வ்யூஹங்கள் கொண்டவர் –
சதுர் பாஹூச் சதுர் வ்யூஹ -என்ற ஒரே திருநாமம் என்றும் சொல்லுவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

774-சதுர் கதி –
உபாசிப்பவர்கள் செய்யும் பக்தியின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப நான்கு வகை பயன்களைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வர்ணங்களுக்கும் நான்கு ஆச்ரமங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆர்த்தன் -ஜிஜ்ஞாஸூ -அர்த்தார்த்தி -ஞானி -என்ற நான்கு வகை அதிகாரிகளால் பற்றப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

775-சதுராத்மா –
உபாசகர்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி துரீயம் என்னும் நான்கு நிலைகளிலும்
நான்கு உருவங்களாக ஸ்தூலமாகவும் ஸூஷ்மமாகவும் விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசை வெறுப்பு முதலியவை இல்லாமையினால் சிறந்த மனம் உள்ளவர் –
மனம் புத்தி அஹங்காரம் சித்தம் ஆகிய நான்கு உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்கள் அவரவர் யோக்யதைக்கு ஏற்றபடி தர்ம அர்த்த காம மோஷங்களில் மனம் செல்லும்படி தூண்டுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

776-சதுர் பாவ –
இந் நான்கு வ்யூஹங்களிலும் உலகத்திற்கு பிரயோஜனமான நான்கு செய்கைகள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மம் அர்த்தம் காமம் மோஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களுக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிராமணர் ஷத்ரியர் வைஸ்யர் சூத்ரர் ஆகிய நான்கு வர்ணங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

————————————————————

777-சதுர் வேதவித் –
நான்கு வேதங்களை அறிந்தவர்களுக்கும் தம் மகிமை என்னும் பெரும் கடலில் ஒரு துளி அளவே தெரியும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு வேதங்களின் பொருள்களை உள்ளபடி அறிந்தவர்-ஸ்ரீ சங்கரர் –

நான்கு வேதங்களை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

778-ஏகபாத்-
இந்த யதுகுலத்தில் பிறந்த கண்ணன் பகவானின் ஓர் அம்சத்தின் அவதாரம் -என்றபடி
ஒரு பாகத்தினால் திருவவதரித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகனைத்தும் தம் ஒரு பாகத்தில் அடங்கி இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரதான ரஷகனாய் எப்போதும் அசைவுள்ளவர்-
அனைத்து பூதங்களையும் தம்மில் ஒரு அம்சமாகக் கொண்டவர் என்றும் கூறுவார் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

779-சமாவர்த்த –
வ்யூஹ அவதாரங்களாகவும் விபவ அவதாரங்களாகவும் பலமுறை திரும்பி வந்து கொண்டு இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்கரத்தை நன்கு சுழற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லா இடத்திலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

780-நிவ்ருத்தாத்மா –
கிருபையினால் இப்படி உலகோடு சேர்ந்து இருந்தாலும் இயற்கையில் எதிலும் சேராத தனித்த மனமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநிவ்ருத்தாத்மா -எங்கும் நிறைந்து இருப்பவர் ஆதலின் ஒர் இடத்திலும் இல்லாமல் போகாதவர் –
நிவ்ருத்தாத்மா -விஷயங்களில் இருந்து திருப்பட்ட மனமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அநிவ்ருத்தாத்மா -அழியாத தேஹம் உள்ளவர் -அயோக்யர் செய்யும் யஜ்ஞங்களில் இருந்து விலகிய மனமுடையவர் —
நிவ்ருத்தாத்மா -அனைத்து விஷயங்களிலும் மனத்தைச் செலுத்துபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

781-துர்ஜய –
தேவரும் மனிதரும் தம் சாமர்த்தியத்தினால் வசப்படுத்த முடியாதவர் –துர்லபமாய் இருத்தல் -ஸ்ரீ பராசர பட்டர்-

வெல்லப்பட முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வெல்ல முடியாதவர் -துக்கத்தை வெல்ல அருள் புரிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

782-துரதிக்ரம-
அவருடைய திருவடிகள் அன்றி வேறு கதி இல்லாமையினால் யாருக்கும் தாண்டிப் போக முடியாதவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பயம் காரணமாக சூரியன் முதலியோர் தம் கட்டளையை மீற முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துக்கத்தைத் தாண்ட உதவுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

783-துர்லப –
வேறு ஒன்றில் மனம் வைத்தவனுக்கு ஜனார்த்தனர் கிடைப்பது அரிது -என்றபடி கிடைப்பதற்கு அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கிடைக்க வரிதான பக்தியால் அடையப் பெறுவர்-ஸ்ரீ சங்கரர் –

கிராமப்பட்டு அடைய வேண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

784-துர்கம-
கண்ணில் குறை உள்ளவர்கள் மத்யான்ன சூர்யனைக் கண் கொண்டு பார்க்க முடியாதது போல் அடைவதற்கு அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிரமப்பட்டு அறியப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

துர்கம -அடைவதற்கு அரியவர் -அதுர்கம -தமோ குணம் அற்றவர்களால் அறியப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

785-துர்க-
அவித்யை முதலிய மறைவுகள் கோட்டை போலே மூடிக் கொண்டு இருப்பதனால் பிரவேசிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பல இடையூறுகள் இருப்பதால் அடைவதற்குக் கடினமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுக்குத் துன்பத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

786-துராவாச –
அவித்யை முதலியவற்றின் மறைவினால் தம் இருப்பிடம் யாருக்கும் எட்டாதாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோகிகளால் யோகத்தில் மிகவும் சிரமத்தோடு மனத்தில் தரிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

தீய ஒலி உள்ளவர்களை இருட்டில் தள்ளுபவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————–

787-துராரிஹா –
புத்தாவதாரம் -கெட்ட வழியில் செல்பவர்களை வேத மார்க்கத்தில் செல்லாமல் தடுப்பது முதலிய வழிகளால் கெடுத்தவர் –
இவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத பாவிகள் விஷயத்தில் என்பதை தெரிவிக்க புத்தாவதாரம் -ஸ்ரீ பராசர பட்டர் –

கெட்ட வழியில் செல்லும் அசுரர் முதலியவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

தீய பகைவர்களை நன்கு அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

788-ஸூ பாங்க –
இவர் நம்பத் தகுந்தவர் என்று அசுரர்கள் ஏமாறுவதற்காக மயக்கும் அழகிய இருவம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய அங்கங்கள் உடையவராக தியானிக்கப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான அங்கங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

789-லோக சாரங்க –
உலகோர் கொண்டாடும் வகையில் போகம் மோஷம் ஆகிய இரண்டு வழிகளையும் அறிந்து உபதேசம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களிலுள்ள சாராம்சங்களை க்ரஹிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வைகுண்டம் முதலிய உலகங்களை அளிப்பவர் -அறிவாளிகள் விளையாடும் இடமாக இருப்பவர் –
லோக சாரமான தன்னைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

790-ஸூ தந்து-
சாந்த வேஷத்தை ஏறிட்டுக் காண்பிப்பதாகிய அசுரர்களைக் கவரும்  வலையை யாரும் தாண்ட முடியாத
உறுதி யுள்ளதாக வைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்தாரமான உலகத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்முகன் முதலான மங்கள கரமான சந்ததி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

791-தந்து வர்த்தன-
இப்படிப் பாவப் பற்றுகள் என்னும் சிறு நூல் இழைகளினால் சம்சாரம் என்னும் கயிற்றைப் பெருகச் செய்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர் -அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

த்ரௌபதிக்காக நூல் இழைகளாலான வஸ்த்ரத்தைப் பெருகச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

792-இந்த்ர கர்மா –
சரண் அடைந்த இந்திரன் முதலியோருக்காக இச் செயல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

இந்திரனைப் போன்ற செய்கையை உடையவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

விருத்திரனை அழித்தது-முதலிய இந்திரனுடைய செயல்களுக்குக் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

793-மஹா கர்மா –
சரண் அடைந்தவர்களைக் காப்பதற்கும் துஷ்டர்களைத் தண்டிப்பதற்கும் பரம காருணிகரான தாம் இப்படிச்
செய்ததனால் இம் மோசச் செயல்களும் சிறந்தவைகளாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆகாயம் முதலிய மஹா பூதங்களைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய பெரிய செயல்களை உடையவர் -ஜீவனாக இல்லாதவர் -விதிக்கு வசம் ஆகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

794-க்ருதகர்மா –
அசுரர்கள் ஏமாறுவதற்காக அவர்களுடைய நாஸ்திக ஆசாரங்களைத் தாமும் அனுஷ்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவராதலின் ஆக வேண்டுவது ஒன்றும் இல்லாதவர் –
தர்மம் என்னும் கர்மத்தைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பூரணமான செயல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

795-க்ருதாகம –
அந்தச் செயல்களை ஸ்திரப் படுத்துவதற்க்காக புத்தாகமம் ஜைனாகமம் நுதலிய சமய நூல்களைச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதத்தை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைப் படைத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

796-உத்பவ –
மோஷத்தை உபதேசம் செய்பவர் போல் காட்டிக் கொண்டதால் உலகைக் கடந்தது போல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்ததான அவதாரங்களைத் தமது விருப்பத்தினால் செய்பவர் –எல்லாவற்றுக்கும் காரணம் ஆதலால் பிறப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தை அல்லது படைப்பைத் தாண்டியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

797-ஸூந்தர –
அதற்காக கண்ணைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரைக் காட்டிலும் பேர் அழகு உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகு உள்ளவர் -அழகிய சங்கு உள்ளவர் -ஸூந்தன் என்னும் அசுரனை உபஸூந்தன் என்பனைக் கொண்டு அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

798-ஸூ ந்த –
அவ்வடிவு அழகினால் அசுரர்களுடைய மனங்களை நன்கு மெதுப்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஈரம் தயை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

————————————————————-

799- ரத்ன நாப –
புலமையை நடிப்பதற்காக திரண்ட வயிறும் ரத்தினம் போலே அழகிய நாபியும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ரத்னம் போல் அழகிய நாபி உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ரத்ன நாப -புருஷ ரத்னமான பிரமனை நாபியிலே உடையவர் –
அரத்ன நாப -பகைவரான அசுரர்களை துன்புறுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————

800- ஸூ லோசன –
இதயத்தை மயக்கும் அழகிய திருக் கண்கள் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய கண் அல்லது ஞானம் உள்ளவர்-ஸ்ரீ சங்கரர் –

அழகிய இரு கண்கள் உடையவர் –மேன்மையான பார்வை யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: