ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் –701-750——-மும்மத விளக்கம் —

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வஸூப்ரதோ வாஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி –74
சத்கதிஸ் சத்க்ருதிஸ் சத்தா சத்பூதிஸ் சத்பராயண
ஸூரசேனோ யது ஸ்ரேஷ்டஸ் சந்நி வாஸஸ் ஸூ யா முன –75
பூதா வாஸா வாஸூதேவஸ் சர்வா ஸூ  நிலயோ அநல
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ துர்த்தரோ தாபாராஜித –76
விஸ்வமூர்த்திர் மஹா மூர்த்திர் தீபத மூர்த்திர்  அமூர்த்தி மான்
அநேக மூர்த்திர்  அவ்யக்தஸ் சதமூர்த்திஸ் சதாநன–77
ஏகோ நைகஸ் சவ க கிம் யத்தத்த் பதம நுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்தவத்சல
ஸூ வர்ண வர்ணோ ஹே மாங்கோ வராங்கஸ் சந்த நாங்கதீ
வீரஹா விஷமஸ் ஸூ ந்யோ க்ருதாஸீ ரசலஸ் சல –79-

———————————————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786—-90 திரு நாமங்கள்

—————————————————–

701-வஸூ –
திரு வவதாரத்திற்குக் காரணமாகிய திருப் பாற் கடலில் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாம் தம்மிடம் வசிக்கப் பெற்றவர் -தாம் எல்லாவற்றிலும் வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

702-வஸூ மநா –
ஸ்ரீ லஷ்மி பிறந்தவிடமான பாற் கடலில் வாசம் செய்தும் வ ஸூ தேவரிடம் மனம் வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிலும் வசிக்கும் மனம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ச்யமந்தக மணியில் அல்லது பக்தர்கள் அளிக்கும் தீர்த்தத்தில் மனம் உள்ளவர் -வஸூ என்ற பெயருள்ள
அரசனுடைய அல்லது அஷ்ட  வஸூக்களின் மனத்தைத் தம்மிடம் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

703-ஹவி –
தேவகி வஸூதேவர்களிடம் வசிக்க விருப்பம் உள்ளவரானபோதும் -அவர்கள் கம்சனால் தீங்கு வரும் என்று அஞ்சியதால்
நந்த கோப யசோ தைகள் இடம் வளர்ப்பதற்குக் கொடுக்கப்பட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மமே ஹவிஸ் -என்று ஸ்ரீ கீதை-4-24–சொல்லியபடி ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்  –

ஹோமம் செய்யப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

704-சத்கதி-
திரு வவதரிக்கும் போதே அசுரர்களால் விளையும் ஆபத்துக்களை அழித்து சாதுக்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்ம ஞானிகளான சத்திக்களால் அடையப் பெறுபவர் -உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்தையை -இருப்பை அளிப்பவர் -நஷத்ரங்களுக்கு வழியாக இருப்பவர் -நல்லோர்களுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

705-சத்க்ருதி –
தயிர் வெண்ணெய் களவு செய்தது -உரலில் கட்டுண்டு தவழ்ந்தது -ராசக்ரீடை செய்தது முதலிய செய்கைகளும்
சம்சார விலங்குகள் எல்லாவற்றையும் போக்குபவைகளாகச்    சிறந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ருஷ்டி முதலிய சிறந்த செயல்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த முயற்சி உள்ளவர் -க்ருதி என்னும் தேவியைப் பிரத்யும்னன் முதலிய ரூபத்தில் அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

706-சத்தா –
தாமே சாதுக்களுக்கு இருப்பாக உள்ளவர் -அவரின்றி எதுவும் இல்லை யன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

எவ்வித பேதமும் இல்லாத ஞானமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தின் இருப்பிடம் -ஆனந்தத்தை யுண்டாக்குபவர்-எப்போதும் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

707-சத்பூதி –
சாதுக்களுக்கு மகன் -நண்பன் -உறவினன் -தூதன் தேரோட்டி முதலிய எல்லா வகைகளாகவும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்தாக இருந்தே பல பல பொருள்களாகத் தொற்றுகிறவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்க்குச் செல்வம் அளிப்பவர் -சிறந்த செல்வம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

708-சத் பராயண-
சத் பராயணம் -சாதுக்கள் முடிவாகச் சேரும் இடமாக இருப்பவர் –
சத் பாராயண -சாதுக்களைத் தமக்கு ஆதாரமாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத்துவ ஞானிகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -சத்பராயணம் -எனபது பாடம் -ஸ்ரீ சங்கரர் –

சத் பராயண -நல்லோர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் -வாயு தேவனிடம் பற்றுள்ளவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

709-ஸூரசேன-
பூ பாரம் தீர்ப்பதற்காக திருவவதரித்த செயலில் யாதவர் பாண்டவர் முதலிய சூரர்களை துணையான
சேனையாகக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹனுமான் முதலிய சூரர்களை  சேனையாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரர்களான ஜராசந்தன் முதளியவருடைய சேனைகளைத் தோற்ப்பித்தவர்-
சூர்யனாகிய தலைவனுடன் கூடியவர்கள் எனப்படுகின்ற சூரர்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

710-யது ஸ்ரேஷ்ட –
முழுகிப் போன யது வம்சத்தை உயர வைத்ததனால் யதுக்களில் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யதுக்களில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்

எல்லோரைக் காட்டிலும் மேம்பட்ட ரமாதேவியைக் காட்டிலும் மேம்பட்டவர் –யது குலத்தவர்களில் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

711-சந்நிவாச –
மானிட தர்மத்தை உடையவராக இருந்த போதும் சனகர் முதலியோர் வந்து இளைப்பாறும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்வான்களுக்கு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நற்குணங்கள் நிறைந்தவர் -நல்லோர்க்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

712-ஸூயாமுன –
இனிமையானதும் பாவங்களைப் போக்குவதுமாய் யமுனையில் செய்த ஜலக்ரீடை ராசக்ரீடை முதலிய செய்கைகளை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுபமானவர்களும் யமுனைக் கரையில் வசிப்பவர்களுமான நந்த கோபர் யசோதை பலராமன் சுபத்ரை முதலியோரால் சூழப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

காளியனை வெளியேற்றி யமுனையைச் சுத்தமாக்கி மங்களம் உள்ளதாகச் செய்தவர் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமுனைக் கரையில்
வந்திருந்த மங்களத்தைத் தருபவரான பிரம்மா முதலியவர்களால் சூழப் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

713-பூதா வாஸ-
ஸ்ரீ கிருஷ்ணனாகத் தம் பரத்வத்தை மறைத்து எல்லாப் பிராணிகளுக்கும் தங்கும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகள் தம் அருட்பார்வையில் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பூதங்களைக் காத்து எங்கும் சஞ்சரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

714-வாஸூதேவ –
வசுதேவர் பிள்ளையாக பன்னிரண்டு எழுத்துக்களை உடைய வாஸூ தேவ மந்திரத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையினால் உலகத்தை மறைக்கும் தேவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு தேவன் –அறிவிற்க்காகப் பிறக்கும் பிராண தேவனை யுண்டாக்கியவர்-
அவாஸூதேவ  -என்று ஸ்ருகால வாஸூ தேவனை அழித்தவர் –  ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

715-சர்வா ஸூ நிலய-
எல்லோருடைய பிராணங்களுக்கும் இருப்பிடமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பிராணன்களும் லயமடையும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாப் பிராணிகளுக்கும் தஞ்சமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

716-அநல –
அடியவர்களுக்கு எல்லாம் செய்தாலும் திருப்தி அடையாமல் ஒன்றும் செய்ய வில்லையே என்று இருப்பவர் –
அடியவரிடம் பிறர் செய்யும் பிழையைப் பொறுக்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்முடைய சக்திக்கு அளவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைத் தருவதில் போதும் என்ற எண்ணமே இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

717-தர்ப்பஹா –
கோவர்த்தன மலை எடுத்தது -பாரி ஜாதத்தை கவர்ந்தது -பாணாசூரன் தோள்களைத் துணித்தது முதலியன செய்த போதும்
தேவர்களின் உயிர்களைக் கவராமல் கர்வத்தை மட்டும் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்திற்கு விரோதமான வழியில் செல்பவர்களுடைய கர்வத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் அஹங்காரத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————

718-தர்ப்பத-
யாதவர்களுக்கு மதுபானம் முதலியவற்றால் மதத்தைக் கொடுத்தவர் -விரோதிகளை அழித்தும் வெல்ல முடியாத த்வாரகையை யுண்டாக்கியும்
சங்க பத்ம நிதிகள் பாரிஜாதமரம் -தேவர்களின் மண்டபமான ஸூ தர்மா ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான்
யாதவர்களுக்கு கொடுத்தவர் –   ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம மார்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய கர்வத்தை அளிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களுக்கு அஹங்காரத்தை உண்டு பண்ணுபவர் -கர்வமுள்ளவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

719-அத்ருப்த –
அத்ருப்த -தாம் சிறிதும் கர்வம் அடையாதவர் -த்ருப்த-யசோதை நந்த கோபரால் சீராட்டப் பெற்று மகிழ்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மானந்த அனுபவத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் -த்ருப்த -என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

செருக்குள்ளவர்   -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

720-துர்த்தர-
குழந்தை விளையாட்டுக்களிலும் குறும்பு செய்யும் பிள்ளையாக மதயானை போலேப் பெற்றோர்களால் அடக்க முடியாதவர் –
தீயவர்களால் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிர்க்குணர் ஆகையால் த்யானம் முதலியவற்றால் மனத்தில் நிறுத்த முடியாதவர் ஆயினும் -பல பிறவிகளில் விடாமல் பாவனை செய்து
அவர் அருள் பெற்ற சிலராக் மட்டும் மிக்க சிரமத்தினால் மனத்தில் நிறுத்தக் கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

சுமக்க முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

721-அபராஜித –
பாரதப் போரில் பாண்டவர் வேறு சகாயம் இல்லாமல் இருந்தபோதும் தம் சகாயத்தால் துர்யோதனாதியர் நூற்றுவராலும்
வெல்லப் படாதபடி செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காம க்ரோதங்கள் முதலிய உட் பகைகளாலும் அசுரர்கள் முதலிய வெளிப் பகைவர்களாலும் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தோற்கடிக்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

722-விஸ்வ மூர்த்தி –
எல்லாம் தமது உடலாக இருத்தலின் தம் உடல் தமக்கு அநிஷ்டம் செய்யாமையால்
பலவான்களும் துர்பலர்களை வெல்ல முடியாமல் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகமே தமக்கு உடலாக உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுதேவனைச் சரீரமாக யுடையவர் -அனைத்துமே தம் வடிவானவர் -எண்ணற்ற வடிவங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

723-மஹா மூர்த்தி –
உலகங்கள் அனைத்தையும் தம் திரு மேனியில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆதிசேஷன் மேல் சயனித்த பெரிய உருவமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரிய ரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

724-தீப்த மூர்த்தி –
சிறந்த குணங்களால் விளங்கும் பொருள் அனைத்தும் தம் உடலாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான மயமாக ஒளிரும் ரூபமுள்ளவர் -தம் விருப்பத்தால் ஒளியுருக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளிரும் ரூபம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

725-அமூர்த்தி மான் –
உருவமற்ற மூல பிரகிருதி ஜீவாத்மா முதலியவற்றையும் தம் சொத்தாக இருப்பவர் –
இதற்கு முன்னும் பின்னும் பகவானுக்கு உருவம் யுண்டு என்பதாலும்
அமூர்த்தி மான் -மதுப் பொருள் அற்றதாகி விடக் கூடாதே என்பதாலும்
உருவமற்றவர் என்ற பொருள் கொள்ள முடியாது -ஸ்ரீ பராசர பட்டர் –

கர்மத்தினால் ஏற்பட்ட உருவம் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
பிராக்ருதமான உருவம் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

726-அநேக மூர்த்தி –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் வாஸூ தேவ சங்கர்ஷண பலராம பிரத்யும்ன அநிருத்தர்களாகப் பல வடிவுகள் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களில் தம் விருப்பத்தினால் உலகுக்கு உபகாரமாகப் பல திரு மேனிகளைக் கொள்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பல அவதாரங்களில் அநேகம் ரூபங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

727-அவ்யக்த –
மனுஷ்யவதாரத்தால் தம் பெருமை மறைக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இப்படிப் பட்டவர் என்று எவராலும் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் அருள் இன்றி அறிய முடியாதவர் -விசேஷமாகப் புலப்படாதவர் -தோஷங்களால் தெளிவாகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

728-சத மூர்த்தி –
தன்னைக் காண விரும்பிய  அர்ஜூனனுக்கு தம் விஸ்வரூபம் காட்டியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞான ரூபியாய் இருந்தும் மாயையினால் பல உருவங்களாகத் தொடருபவர் -ஸ்ரீ சங்கரர் –

நூற்றுக் கணக்கான வடிவங்களை  யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

729-சதா நந –
அர்ஜூனன் கூறியபடி அநேக முகங்களும் கண்களும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பல உருவங்கள் உள்ள படியால் பல முகங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நூற்றுக் கணக்கான முகங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

730-ஏக –
இப்படிப்பட்ட மஹிமையினால் தமக்கு  ஒப்பாக ஒருவரும் இல்லாத ஒருவர் -அத்விதீயர் -என்றபடி -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையில் எந்தவித பேதமும் இல்லாமையினால் ஒருவரே சத்தியமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒரே கர்த்தாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

731-நைக-
தமது விபூதிகளில் எல்லையற்றும் இருப்பவர் -இங்கு ஏகம் என்றது ப்ரஹ்மத்தைத் தவிர ஒன்றும் இல்லை என்றோ
அல்லது எல்லாம் அவனுடைய விகாரமே என்றோ சொல்வது அல்ல -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையினால் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பல ரூபங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

732-ஸ-
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவர் முதல் யாவருக்கும் தம்மைப் பற்றிய ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோமயாக ரூபியாக இருப்பவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

தமக்காக எல்லாம் யுன்டாக்கப் பெற்றவர் -ஜ்ஞானம் யுடையவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

733-வ –
எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

———————————————————————

734-க-
அழுக்கான வற்றில் வசித்தாலும் பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுகம் எனப் பொருள்படும் க என்ற சொல்லால் துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரகாசம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

735-கிம் –
தத்தம் விருப்பங்களை அடைவதற்கு யாவரும் தெரிந்து கொள்ள விரும்பும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த பயனாதலின் எது என்று விசாரிக்கப் படும் பிரமமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புராணச் சொற்களைப் படைத்தவர் -அனைத்து வேதங்களின் விசாரத்துக்கும் விஷயமாக யுள்ளவர் -ஸ்ரீசத்ய சந்தர் –

——————————————————————————

736-யத் –
அடியவர்களைக் காப்பதற்கு முயல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யத் என்ற சொல்லால் கூறப்படும் ப்ரஹ்மமாக உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

737-தத் –
அடியவர்களுக்குத் தம்மைப் பற்றிய ஞானமும் பக்தியும் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் படைக்கும் ப்ரஹ்மம் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களில் உள்ளவர் -குணங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

738-பத மநுத்தமம் –
அடியவர்களால் அடையப்படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முமுஷூக்களால் அடையப்படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

அடியவர்களால் அடையப் படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

739-லோக பந்து –
வேறுபாடின்றி எல்லோருக்கும் அருள்வதால் உலகத்தவர் யாவருக்கும் விட முடியாத உறவாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் எல்லாம் தம்மிடம் கட்டப் பட்டு இருக்கும்படி ஆதாரமாக இருப்பவர் –சிருஷ்டித்து தந்தை போன்றவர் –
நன்மை தீமைகளை உபதேசிக்க வேதங்கள் தர்ம சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கொடுத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து உலகிற்கும் பந்துவானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

740-லோக நாத –
இந்த ஸ்வா பாவிக உறவால் உலகோர் அனைவருக்கும் ஸ்வாமியாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களால் யாசிக்கப் படுபவர் – உலகங்களை பிரகாசிக்கச் செய்பவர் -ஆசீர்வதிப்பவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து உலகிற்கும் நாதரானவர் -அறிவின் வடிவமாக வேண்டப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

741-மாதவ –
உலகங்களுக்கு லஷ்மி தாயும் தாம் தந்தையுமான உறவாக இருப்பவர் -மது குலத்தில் பிறந்தவர் –
மௌனம் த்யானம் யோகம் ஆகியவற்றை உடையவர் மாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாதவ -மது -குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்-

மதுவின் புத்திரர் -சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

742-பக்த வத்சல –
அடியவர்களைப் பெற்ற பரபரப்பில் மற்ற எல்லா வற்றையும் மறந்தவர் -தம்மை ஸ்வாமி – பந்துவாகவும் உணர்ந்து
பக்தி பண்ணுபவர்களின் சிறப்பு கூறப்படுகிறது – ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களிடம் அன்பு யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களாகிய கன்றுகளைக் காப்பவர் -அன்பு யுடையவர் —
அன்னத்தை உடையவர்களான அந்தணர்கள் இடம் செல்பவர் ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

743-ஸூவர்ண வர்ண –
மாற்று ஏறின தங்கம்  போல் குற்றம் இன்றி விளங்கும் திவ்ய வர்ணம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தங்கத்தின் நிறம் போன்ற நிறம் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பொன் போன்ற நிறம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

744-ஹே மாங்க-
பொன் நிறமான சுத்த சத்வ மயமான அங்கத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பொன் போன்ற திருமேனி யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான அங்கங்கள் உடையவர் -ஸ்ரீசத்ய சந்தர் –

——————————————————————-

745-வராங்க –
தேவகியின் பிரீதிக்காக மறைக்காமல் அவதரித்த உப நிஷத்தில் கூறப்பட்ட திவ்ய மங்கள  விக்ரஹத்தை  உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த அழகிய அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

வராங்க -உத்தமமான அங்கங்களை யுடையவர் -அவராங்க -ஸ்ரீ ரெங்கத்தை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

746-சாந்த நாங்கதீ –
மகிழ்ச்சி அளிக்கும் தோள் வளை முதலிய திவ்ய ஆபரணங்களை மிகுதியாக அணிந்து இருப்பவர் –
திருமேனியே திரு ஆபரணம் -அழகிய வஸ்துக்கள் திவ்ய ஆபரணமாக இவரால் ஆகும் –
கேயூரம் முதலிய திவ்ய ஆபரணங்களைக் கொண்டவர் என்றுமாம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மகிழ்ச்சி தரும்  தோள்வளைகளை அணிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சந்தனத்துடன் கூடிய தோள் ஆபரங்களை யுடையவர் -சந்தனம் போன்ற பூஜைக்கு உரிய பொருள்கள் யுடையவர் –
வாலியின் மைந்தன் அங்கதனை பக்தனாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

747-வீரஹா –
முலைப் பால் உண்ணும் சிறு பருவத்திலும் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் போன்ற அசுரர்களை
வேரோடு களைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு வீரர்களான அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

வீரர்களை அழிப்பவர் -முக்ய பிராணன் அற்றவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

748-விஷம –
நல்லவர்க்கு நன்மையையும் தீயவருக்கு பயத்தையும் தருவதனால் வேற்றுமை உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அனைவரையும் காட்டிலும் வேறுபட்டவர் ஆதலின் தமக்கு ஒப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சிவனால் அருந்தப்  பட்ட விஷத்தின் துன்பத்தையும் நாம ஸ்மரணத்தாலே போக்கியவர் -ஒப்பற்றவர் –
அவிஷம -என்ற பாடத்தில் பாரபஷம் இல்லாதவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

749-ஸூ ந்ய-
மனிதராக திரு வவதரித்த போதிலும் குற்றங்கள் ஏதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எவ்வித விசேஷணமும் அற்றவர் ஆதலின் சூன்யம் போல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் எல்லாப் பொருள்களையும் இல்லாமல் செய்பவர் -தீயவர்களின் சுகத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————-

750-க்ருதாஸீ-
ஆயர் இல்லங்களில் உள்ள வெண்ணெய் நெய் இவற்றில் ஆசை உள்ளவர் –
தமது திருக் கல்யாண குணங்களாலே உலகை வாழ்விப்பவர் என்றுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசைகள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹவிஸ்ஸின் ரூபத்தில் உள்ள நெய்யில் ஆசை உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: