பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-5-தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-

தும்பிகள் தங்கள் ஜீவனம் தேடித் போக -அவனும் வந்திலன் -ஹிம்சிக்கும் பொருள்கள் மிகைத்தன
கண்ட இடம் எங்கும் இருள் மூடிப் போக -திருவாய்ப்பாடியிலே  கிருஷ்ணனைப் பிரிந்த பெண்கள் எல்லாரும்
சேர்ந்து பட்ட  பாட்டை -ஒரு சந்த்யையில்-இவள் ஒருவளே பட்டு கூப்பிடுகிறாள் இதில் –
இதில் நிகமப் பாசுரத்தில் –
வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த-என்றபடி
அவர்கள் புலம்பிய புலம்பலை அனுவாதம் பண்ணியதாக அருளிச் செய்யப் பட்டு இருந்தாலும்
அவ்வளவே அன்று விஷயம் –
அவ்வாய்ச்சிகளின் அவஸ்தை தமக்குப் பிறந்து அவர்களைப் போலே ஆற்றாமை கரை புரண்டு பேசுகிறார்
அவ்வஸ்தை பிறந்து கூப்பிட்ட -என்பர் பெரிய வாச்சான் பிள்ளையும்-

———————————————-

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு  இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1-

தனிக்கிடை கிடந்தது வருந்துகின்ற நெஞ்சு கண்ணபிரானைப் பின்பற்றி சென்று ஒழிந்தது
அருள் கிடையாதது மட்டும் அன்றிக்கே நிலா தென்றல் என் திறத்தில் விபரீதங்களாக இருக்க வேண்டுமோ அந்தோ –
மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய்
தந்தை தாய் விலங்கை பரிஹரித்தவன் காதலியின் விலங்கை பரிஹரிக்க வில்லையே
அவன் தான் பரிஹரிக்க வில்லை யாகிலும் அவன் விபூதியில் உள்ளாரையும் நித்யமித்து நலிய வைக்க வேண்டுமோ  –
தமியேன் -தனியேன் இரண்டும் ஒக்கும்
இருந்தேனை -இருக்கின்ற என்னை என்றபடி -நிகழ் காலப் பொருளில் வந்த இறந்த காலம்
அந்தி காவலன் -இலக்கணையால் அந்தி இரவைச் சொல்கிறது-

————————————–

மாரி மாக்கடல்  வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய்
தாரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வாரிருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி
யுன் புறமுயங்கி என்னையும் மறந்து யுன்னையும் மறந்ததே –
உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தோர் உடன்  கூடன்
உசாத் துணை இல்லையே -காலமும் துயர் நெடுகும் படியான இராக்காலம் –

மாரி மாக்கடல் -மாரி போலேயும் மாக்கடல் போலேயும் -யுள்ளவன்
அன்றிக்கே
மாரி -முகங்கள் படிகின்ற –மாக்கடல் -பெரிய கடலில் யுண்டான -வளை-சங்கு போன்ற -வண்ணற்கு -நிறத்தை யுடைய பலராமனுக்கு
ஆதிசேஷன் வம்சம் ஆகையால் வளை வண்ணன் எனப்பட்டான் நம்பி மூத்த பிரான்
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடி -பெரியாழ்வார் -1-7-5-
பலராமன் ஆயர் பெண்கள் இடம் இன் சொற்களை சொல்லி கிருஷ்ணன் செய்த தீங்கை மறப்பித்து
அவர்கள் சீற்றத்தை ஆற விட்ட உபகார ச்ம்ருதியால் – -வளை வண்ணற்கு இளையவன் –

ஊரும் துஞ்சிற்று உலகமும்  துயின்றது –
ஆசார்ய ஹிருதயம் ஸ்வாபதேசம் -ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்யகாம ஸ்வ தந்த்ரர்
பொன்னாச்சி நாச்சியார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருள –
பிரிவாற்றாமை பாசுரங்கள் அனுசந்தித்து இப்பாசுரம்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே -என்னவே
பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கிப் போயிற்று – ஐதிஹ்யம்-

——————————————–

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா
பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு  இரங்குமோ
தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை  யிணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்  அஞ்சல் என்பார்  இல்லையே–8-5-3-

பெண்ணான பூதனை உயிரை உண்டு முடித்தவன் -பெண்ணாய் பிறந்த நம்முடைய உயிருக்கு இரங்க மாட்டான் –
பூர்ண சந்திரனையும் தஹிக்கச் செய்பவன் –
வேய்ங்குழல் ஓசையும் நெஞ்சை வலியக் கவர்ந்து கொண்டு போகின்றது –
இங்கே அஞ்சேல் என்று சொல்லவும் யாரும் இல்லை
ஆபத்தை நீக்கி அபயம் அளிக்க வல்ல அவன் தானே ஆபத்தை விளைவித்து அச்சத்தை யுண்டாக்கும் பொழுது
அஞ்சேல் என்று சொல்ல வல்லார் யார் உளர் -அஞ்சல் என்பார் இல்லையே -ஓசைக்கு மிகச் சேர்ந்த பாட பேதம்-

—————————————–

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய திருப் பவளத்திலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைத்து ஊதி பஷ பாதத்தை காட்டி அருளினவன்
என் விஷயத்தில்  அருளவில்லையே -திரௌபதிக்கு ஆகிய ஒரு பெண்ணுக்கு எல்லாம் செய்த அவனை எனக்கு
அவ்வளவும் செய்ய வேண்டாவே -ஒரு கால் இங்கே வந்தாலே போதுமே
அவனுக்கு அஞ்சி நடக்கும் காற்றும் -எல்லாரையும் குளிர வைக்கும் மந்த மாருதமும் -கூட -என் ஆவியைக் கொள்ளை கொள்கின்றதே
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் -என்றது யானைகள் மாவட்டியால் குத்தப்பட்டு விரணம் கொண்டு
சீயும் ரத்தமும் அறாக் காயம் -அறாக் கயம் வற்றாத குளம் -என்னவுமாம் —
கயம் கொள் புண் தலை  -யானைக்கு விசேஷணம்
அப்படிப்பட்ட யானைகளை சேனைத் தொகையாக நடத்திக் கொண்டு வந்த மன்னர்கள் என்றும்
அப்படிப் பட்ட யானைகளையும் கையாலே நெரித்து தள்ள வல்ல பெரு மிடுக்கர் -என்னவுமாம் –

———————————————–

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே -8-5-5-

சுக்ரீவ மகாராஜரை விஸ்வசிப்பிக்க அரும் பெரும் கார்யம் செய்து அருளினவன்
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை ஆப்புண்டு தாமுற்ற பொது எல்லாம் -செய்து அருளினவன் –
ஆழியான் -கைகேயி யுடைய வாரத்தில் அகப்படாதது அறுகாழி  ஒன்றுமே போலும் –
அப்படி எனக்காக ஏதாவது பாடு பட வேணும் என்று இருக்கிறேனோ
அருளொடும் பகல் எல்லை கழிகின்றது -அருளும் கழிந்தது -பகல் பொழுதும் கழிந்தது -என்றபடி
தோழி நாம் இதற்கு என் செய்தும் -தன்மை பன்மை வினை முற்று-

————————————————–

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா
கரிய நாழிகை  ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே -8-5-6-

முது கயம் -சமுத்ரமானது -சமுத்ரம்  சோஷ்யாமி என்று பெருமாள் ஆக்நேய அஸ்தரம் தொடுத்த வரலாறு
சர்வ லோக சரண்யன் தன்னிடம் சரணம்   புகுந்தான் என்ற செருக்கால்
கீழ் மண் கொண்டு மேல் மண் வீசி அலை எறிந்த -முரியும் வெண்டிரை முதுகயம் –
சீதாப் பிராட்டி யுடன் கலக்க அப்படி சீறி சிவந்தாய் -என்னுடன் கலக்க அப்படி இடையூறு இல்லையாகவும் இருக்க உதாசீனராக இருக்கிறாரே –
நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால் -திருவாய் -5-7-8-
கரிய நாழிகை -இரவின் கறுமை நாழிகையிலும் ஏற்றி -கொடிதான நாழிகை என்றபடி –

——————————————-

கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன்
விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே-8-5-7-

விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே -பெரிய திரு -6-1-2–கடலை கடைந்து
சீதாப் பிராட்டிக்காக அக்கடலை அடைத்து அம்பு மலை எதிரிகள் மேல் பொழிந்தான் –
எல்லாம் ஸ்திரீ வ்யதிரேகத்தில் ஸ்திரீயைப் பெறுவதற்காக  –
நான் எளிதாக கிடைப்பதால் உதாசீனனாய் உள்ளான் போலும்
அதற்கு மேலே சந்திர கிரணங்களை நலிய ஏவி விடுகின்றான்
மாட்டுக் கழுத்து மணி யோசை  யுண்டாக்கி நலிய வைக்கிறான்
தானே வேய்ங்குழல் ஓசை மூலம் நலிகிறான்
மாலை வாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் இன்னிசை யோசையும் வந்து என் செவி தனக்கே
கொன்னவிலும் எக்கில் கொடிதாய் நெடிதாகும் -பெரிய திருமடல் –
விலங்கள் வேய் -மலையில் விளையும்  மூங்கிலால் செய்யப் பட்ட குழல் -ஆகு பெயர் –

————————————————

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனிவெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே -8-5-8-

முறை கெட மறைதலும் -மரியாதை குலைந்து போனதனால்
பரசு -கோடாலிப் படை
அநீதி பண்ணுவர்களை முடிக்க திருவவதாரம் செய்த தானே அநீதி செய்கிறானே
பிரதி பஷரான ஷத்ரியர் உயிரை வாங்கிய பிரான் அன்புடைய அனுகூல்யையான என்னுடைய உயிரையும் வாங்குகின்றானே
பறவை இனங்களும் இரவில் குளிருக்கு  அஞ்சி பேடைகள் உடன் இருக்க நாயகனைப் பிரிந்து பரிதவிக்கும் பாவி ஆனேன்-

——————————–

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலினிரி குரல்  பாவியேன் ஆவியை யடுகின்றதே–8-5-9-

ஒருவகையாக தேற்ற மானஸ அனுபவம் தந்து அருளினான்
தரித்திரன் கனவில் பெரும் செல்வனாக கண்டு கண் விழிக்க மிக்க துயரம் அடைவது போலே தளர்ந்து இருக்க
விடை மணி ஓசையும் அன்றில் பறவை -க்ரௌஞ்சம் -கூக்குரலும் செவிப்பட்டு நலிகின்றன-

—————————

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  -8-5-10-

திரு ஆய்ப்பாடி ஆய்ச்சிமார் யுடைய அவஸ்தை பிறந்து புலம்பிய புலம்பலே இத் திருமொழி
இதை ஓத வல்லவர்கள் இவரைப் போலே பிரிந்து வருந்த வேண்டாதே
ஒழிவில் காலம் எல்லாம் உடனே இருந்து வழு விலா அடிமை செய்யப் பெறுவார் –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: